பாரதிதாசனும், தமிழ்ப் புத்தாண்டு தினமும் (தமிழ்த் தேசியத் தாக்கம்?)

122 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 23, 2024, 6:52:23 AM4/23/24
to Santhavasantham
பாரதிதாசனும், தமிழ்ப் புத்தாண்டு தினமும் (தமிழ்த் தேசியத் தாக்கம்?)
--------------------------------------------------

பாரதிதாசன் பாடிய “பாடல்” என ஆண்டுதோறும் தை 1 (திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு), தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை 1) இரண்டு நாளிலும் சுழற்சி முறையில் பரப்புதலைப் பார்க்கிறோம். ஆயிரக் கணக்கான ஓவியப் படங்கள் (.jpg) கிடைக்கின்றன.  ஆராய்ந்து பார்த்தால், இந்த உரைநடை வரிகள்  பாரதிதாசன் பாட்டு அல்ல எனத் தெரிகிறது. மேலும், 1954-ல் இருந்து 1958-ல் ”இளைஞர் இலக்கியம்” என்னும் நூலைப் பதிப்பிக்கும் போது தமிழ்த் தேசியவாதிகள் தாக்கத்தால் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு என முடிவுக்கு வந்துவிட்டார் போலத் தெரிகிறது. காரணம்: நாவலர் சோமசுந்தர பாரதி, சி. பா. ஆதித்தனார், ம.பொ.சி., கி.ஆ.பெ. விசுவநாதம், ... போன்றோராக இருக்கக்கூடும். தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்போரின் பட்டியலைத் தொடக்கத்தில் மறைமலை அடிகள் 1921-ல் 500 தமிழ்ப் புலவர்களுடன், தை 1 தமிழ்ப் புத்தாண்டு என இருப்பதாக வரும். இந்த லிஸ்ட்டிலே, பெரியவர்கள் மறைமலை அடிகளும், பாரதிதாசனும் தான். அவர்கள் பற்றிக் கூறும் கூற்றுகள் ஆராய்ந்து பார்க்கின் மாறாக உள்ளன. மறைமலை அடிகள் இருந்தவரை, தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றோ, வள்ளுவர் திருநாள் என்றோ அறிவிக்கவில்லை.  

நா. கணேசன்
https://nganesan.blogspot.com

Dr. Saradha Nambiarooran sent:

பாவேந்தம் போற்றுவோம்...
✨✨✨✨✨✨✨✨

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்,
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்

தமிழுக்கு மணமென்று பேர்,
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்

தமிழுக்கு மதுவென்று பேர்,
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால், இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள், இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வைரத்தின் வாள்

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய், இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

நண்பர்களே, தமிழ் மொழியின் அருமையை, இனிமையை இவ்வளவு எளிமையாக, அதே சமயம் வலிமையாக பாவேந்தரைத் தவிர, வேறு யாரால் சொல்ல முடியும்.

பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இனம் மறந்துவிட முடியாத, என்றென்றும் மறக்கக் கூடாதவர். தமிழ் இனத்தின் தன்மானத்தைத் தட்டி எழுப்பியவர்.

மூட நம்பிக்கைகளை அடியோடு வேரறுக்கப் போராடியவர். சாதியப் பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடியவர். பெண் கல்விக்கு, பெண் விடுதலைக்கு உரக்கக் குரல் கொடுத்தவர்.

வல்லமை பேசி வீட்டில் – பெண்
வாங்கவே வந்திடு வார்கள்சில பேர்கள் நல்ல விலை பேசுவர் – உன்னை நாளும் நலிந்து சுமந்து பெற்றோர்கள் கல்லென உன்னை மதிப்பர் – கண்ணில் கல்யாண மாப்பிள்ளை தன்னையுங் கண்டார்
வல்லி உனக்கொரு நீதி – இந்த
வஞ்சகத் தரகர்க்கு நீ அஞ்ச வேண்டாம்.

ஒரு முறை சென்னை, பாரி புத்தக நிலையத்திற்குச் சென்று, அதன் உரிமையாளர் திரு செல்லப்பன் அவர்களைப், பாவேந்தர் சந்தித்தார். கவிஞர் ஈரோடு தமிழ்ன்பன் அவர்களும் பாவேந்தருடன் சென்றிருந்தார்.

உங்களுக்கு ஒரு இலட்ச ரூபா கிடைக்கப் போகிறது தெரியுமா
என செல்லப்பன் கேட்டார்.

ஒரு இலட்சம் ரூபாயா?
எங்கே இருந்து கிடைக்குதாம்?
இது பாவேந்தர்.

வடக்கே ஞான பீடம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அது தென்னாட்டில் இருந்து ஒரு சிறந்தக் கவிஞரைத் தேர்ந்து, பரிசு தர முடிவு செய்திருக்கிறது. அப்பரிசுக்குத் தாங்கள் தேர்வு செய்யப்ப பட்டிருக்கிறீர்கள்.

பாரி நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஈரோடு தமிழன்பன் அவர்களுடன், வாடகை வண்டியில், பயணித்த போது, பாவேந்தர் கேட்டார்.

அந்தச் செல்லப்பன் என்ன சொன்னான்?

உங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசாக வருவதாகச் சொன்னார்.

வரட்டும், வரட்டும். வீட்டுக்கு அரைப்படி பருப்பு வாங்கிப் போடுவேன்னு நினைக்கிறாயா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது.
ஒரு பெரிய அச்சு இயந்திரம் வாங்கிப் போட்டு, உன் கவிதை, உன்னைப் போல் எழுதுகிற அவன் கவிதை, இவன் கவிதை எல்லாம் புத்தகங்களாகச் சுடச்சுட அச்சிட்டுப் போட்டால், தமிழ்ப் பகை தன்னாலே ஒழிஞ்சு போகும். ஆமா, அதைத்தான் செய்யப் போகிறேன்.

பாவேந்தர் பிறகு அந்தப் பரிசு பற்றி மறந்தே போனார். நண்பர்களே, இதில் கொடுமை என்ன தெரியுமா? ஞான பீட அறிவிப்பு வருவதற்குள், பாவேந்தர் 1964 இல் இறந்து விடவே, உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் ஞான பீட பரிசு என்ற விதி இருக்கிறது, என்று கூறி, மலையாளக் கவிஞர் சங்கர குரூப்பிற்குத் தான் அந்தப் பரிசை வழங்கினார்கள்.

சலுகை போனால் போகட்டும் என்
அலுவல் போனால்  போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்,

பிள்ளை பிறந்தேன் யாருக்காக?
பெற்ற தமிழ் மொழிப் பேருக்காக
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும் உயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக...

போனால் என்னுயிர் போகட்டும் என்
புகழ் உடல் நிலை ஆகட்டும்
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டுமே

நண்பர்களே, யானை மேல் அரசர்கள் வலம் வந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் கவிக்கு அரசராம், பா வேந்தர், யானை மீது அமர்ந்து,
ஓர் நாள், நகரை வலம் வந்தாரே தெரியுமா?

தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்,  ஓர் நாள், தமிழகப் புலவர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக, புலவர் பெருமக்களின் ஊர்வலம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது.

தஞ்சையின் அரசர் கால, அகலத் தெருக்களான, மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி நான்கும் அழகு படுத்தப் பட்டிருந்தன. வழியெங்கும் வரவேற்பு வளைவுகள், தென்னங் குருத்தோலைத் தோரணங்கள், வண்ணக் கொடிகள், வாழையும் கமுழும் கட்டப் பெற்ற அழகுப் பந்தல்கள்.

முரசு முழங்க, சங்கு ஊத, துந்துபி இன்னிசை எழுப்ப, எக்காளம் பேரோசை எழுப்ப, புலவர் பெருமக்களின் ஊர்வலம் புறப்பட்டது. நாற்பத்தெட்டுப் புலவர்கள், ஊர்திகளில் ஏறி பின்னால் வர, முன்னால், யானையின் மீது அமர்ந்து, கம்பீரமாய் வலம் வந்தார் புரட்சிக் கவி பாவேந்தர் பாரதிதாசன்.

அறிவை விரிவுசெய், அகண்ட மாக்கு
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்துகொள்,
உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு

அறிவை விரிவு செய்யச் சொன்ன பாவேந்தர், கொடுமை கண்டு பொங்கி எழுந்ததும் உண்டு.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனதுதாய் மிக
உயிர்வதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா
..................................
கொலை வாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா

1946 ஆம் ஆண்டு சூலைத் திங்கள், 28 ஆம் நாள், சென்னையில்,
அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில், பாவேந்தருக்கு நிதியளிப்பு விழா.

நண்பர்களே, நிதியினைப் பெற்றுக் கொண்ட பாவேந்தர் பேசுவதைக் கேளுங்கள்.

இளைய நண்பர்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான். தமிழைப் படி. தமிழை எழுது. கொடுமை கண்ட இடத்து எதிர்த்துப் போராடு. எவரேனும் தமிழைப் பழித்தால், அவரை எளிதில் விடாதே. அடிமைத் தனம் கொள்ளாதே. அநீதிகளுக்குத் தலை வணங்காதே. அச்சமின்மையை வளர். அறிவைப் பெருக்கு. ஆற்றலைப் பெறு. உண்மையை பேசு. ஊருக்காகவே உழை.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின்
60ஆம் நினைவுநாள் இன்று !

பாவேந்தரைப் போற்றுவோம்...!
பாவேந்தர் வழி நடப்போம்...!

- சுகுமார் (எ) நற்குமரன்

N. Ganesan

unread,
Apr 23, 2024, 8:33:22 AM4/23/24
to Dr. Y. Manikandan, Santhavasantham, sirpi balasubramaniam, kanal...@gmail.com
பாரதிதாசனும், தமிழ்ப் புத்தாண்டு தினமும் (தமிழ்த் தேசியத் தாக்கம்?)
--------------------------------------------------

பாரதிதாசன் பாடிய “பாடல்” என ஆண்டுதோறும் தை 1 (திருவள்ளுவர் ஆண்டுப் பிறப்பு), தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை 1) இரண்டு நாளிலும் சுழற்சி முறையில் பரப்புதலைப் பார்க்கிறோம். ஆயிரக் கணக்கான ஓவியப் படங்கள் (.jpg) கிடைக்கின்றன.  ஆராய்ந்து பார்த்தால், இந்த உரைநடை வரிகள்  பாரதிதாசன் பாட்டு அல்ல எனத் தெரிகிறது. மேலும், 1954-ல் இருந்து 1958-ல் ”இளைஞர் இலக்கியம்” என்னும் நூலைப் பதிப்பிக்கும் போது தமிழ்த் தேசியவாதிகள் தாக்கத்தால் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு என முடிவுக்கு வந்துவிட்டார் போலத் தெரிகிறது. காரணம்: நாவலர் சோமசுந்தர பாரதி, சி. பா. ஆதித்தனார், ம.பொ.சி., கி.ஆ.பெ. விசுவநாதம், ... போன்றோராக இருக்கக்கூடும். தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்போரின் பட்டியலைத் தொடக்கத்தில் மறைமலை அடிகள் 1921-ல் 500 தமிழ்ப் புலவர்களுடன், தை 1 தமிழ்ப் புத்தாண்டு என இருப்பதாக வரும். இந்த லிஸ்ட்டிலே, பெரியவர்கள் மறைமலை அடிகளும், பாரதிதாசனும் தான். அவர்கள் பற்றிக் கூறும் கூற்றுகள் ஆராய்ந்து பார்க்கின் மாறாக உள்ளன. மறைமலை அடிகள் இருந்தவரை, தை 1 தமிழ்ப் புத்தாண்டு என்றோ, வள்ளுவர் திருநாள் என்றோ அறிவிக்கவில்லை.  

நா. கணேசன்
https://nganesan.blogspot.com

ஒவ்வோர் ஆண்டும் தை 1, சித்திரை 1 இரு நாளிலும் சுற்றுக்கு விடப்படும் செய்தி:

பெருமாள்சாமி முற்செலுத்தினார்:
<<<
நம் "தமிழ்ப் புத்தாண்டு" வரலாற்றை
அறிந்து கொள்ள... சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் உறவுகளே!

சுறவம்
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?

01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)

மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.

இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அன்று என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.

1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய

இந்த அறுபதில் எது தமிழ்ச் சொல்?...

யாராவது சொல்ல முடியுமா?

தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் வியப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள்.

வைகறை
காலை
நண்பகல்
எற்பாடு
மாலை
யாமம்

என்று அவற்றை அழைத்தார்கள்.

அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.

தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவக் கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.

ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.

சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.

காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.

இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!

பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.

தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  

கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

எழுதியது
- யாரோ ஒரு தமிழன்

அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆக வேண்டுமெனில் சித்திரைத் திருநாளாகக் கொண்டாடுங்கள்

அனைத்து உறவுகளுக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!
💐💐💐🙏🙏🙏
நன்றி🙏
>>>

புலவர் ஆ. காளியப்பனார், பேரூர்,
<<<
இதை எழுதியவர்கள் பாரதிதாசன் எந்த நூலில் என்று குறிப்பிடவும். அதேபோல் ஈரோட்டுப் பெரியார் பெயரிலும் அபத்த உரைகளை வெளியிடுவதும் தவிர்த்தல் நலம்.

இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரியத் திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள். 500  அறிஞர்கள் எந்தத்தேதியில் எங்கு ஒருங்குகூடி தீர்மானித்தார்கள் என்பதனைக்கூறவும் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தது சரி ஆனால் மிகைப்படுத்திக் கூறுவது தவறு.    சின்னப்பத்தமிழர் இடைச்செருகல்.  புலவர் குழுவினர் (1971) எந்தப்புலவர் குழு
*பின்னாளில் வந்த ஆங்கிலத்தில் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்  *.சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். எந்த இலக்கண நூலில் உள்ளது அப்படி என்றால் தொல்காப்பியம் பொய்யாகிறதே
>>>

கோதைமோகன்:
<<<
பெரும் புலவரும் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவருமான மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியம் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில்,
“திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும், அதுமுதல் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாக பின்பற்றுவது என்றும், வழக்கத்திலுள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டுவரும் என்றும், அதனையே தமிழாண்டு என கொண்டாடுவது என்றும்” முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதற்குப் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், சுரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா
மகேசுவரனார்,
கா.சுப்பிரமணியம்,
பேராசிரியர்
தெ.போ.மீனாட்சி
சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் அகில இந்திய தமிழர் மாநாட்டில்,
“தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்,
பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும்”அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் எடுத்த முடிவுகளை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்கட்டமாக 1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசு அரசிதழிலும் வெளியிட்டு
நடைமுறைப்படுத்தினார்கள்.

அடுத்த கட்டமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள், "தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் “ என்பதற்கான மசோதா ஒன்றினை 1-2- 2008 அன்று சட்டசபையில் தாக்கல் செய்து அனைத்து கட்சியினரும் ஏற்கும் வண்ணம் சட்டமாக்கி சரித்திர சாதனை ஒன்றை நிகழ்த்தினார். இதனை அனைத்து தமிழ் அறிஞர்களும், தமிழக
மக்களும் வரவேற்று மகிழ்ந்தனர்.
>>>

இப்படியெல்லாம் 500 தமிழறிஞர்கள் யாரும் தை 1 புத்தாண்டின் தொடக்கம், அது திருவள்ளுவர் ஆண்டு என அறிவிக்கவே இல்லை. மறைமலை அடிகள் மறையும் வரை தை 1 திருவள்ளுவர் ஆண்டு எனக் குறிப்பிடவும் இல்லை.

பாரதிதாசனின் எந்தக் கட்டுரை, நூல்கள், இதழிகைகள் எதிலும் இந்த வரிகளைக் காண முடியாது. ஏனெனில் இவை புரட்சிக்கவி மறைந்து ~அரை நூற்றாண்டின் பின் பிறந்த வரிகள் ஆகும்.

நா. கணேசன்

-----


N. Ganesan

unread,
Apr 23, 2024, 10:19:30 PM4/23/24
to Dr. Y. Manikandan, Santhavasantham, sirpi balasubramaniam, kanal...@gmail.com
https://groups.google.com/g/santhavasantham/c/NKAg5PzHmuU/m/_7qlAbtiAAAJ

மதுரன் தமிழவேள்:
<<<
சித் | திரை X நித் | திரை
அசை முழுதும் ஒன்றும் எதுகைச் சொற்கள்...

சொல்லாக உள்ளபோது குறுகி ஒலிக்கும் ஐகாரத்தை ( நித்தி-ரையில் - வகையுளியாகச் சிதைத்து) இரண்டாம் சீரின் முதல் அசை (ரை-யில்)ஆக்கும் அளவுக்குச் சொல் வறுமை கொண்டவராக வலிந்து பாவேந்தரைக் காட்டுவது சரியாகப் படவில்லை...  

பாவேந்தர் எழுதியிருந்தால் சித்திரை, நித்திரை இரண்டையும் முழு எதுகைச் சொற்களாகவே கையாண்டிருப்பார்...

ஆசிரியப் பாவின் அடியாக முதல் அடியைச் சொல்லிப் பார்க்கும்போதே ஒசைச் சிதைவு புலப்படுகிறது..

இதைப் பாவேந்தர் தான் எழுதினார் என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை என்றால்,  இக்காலத்துச் சமூக வலைத்தளங்களில் புகழ் பெற்றவர் பெயரில் fake id உருவாக்கி, அவர் பெயரில் பலர் எழுதுவதைத் போல, பாவேந்தர் பெயரில் இன்னொருவர் எழுதிய இடைச் செருகலாக இதைக் கொள்வதே சிறந்தது.

அதுவே அவர் புகழைக் காப்பதாக அமையும்.
>>>

NG> இந்த வசனவரிகட்கும் பாவேந்தருக்கும் ஒரு தொடர்புமில்லை. அவர் மறைந்து ~45 ஆண்டு சென்றபின் எழுதப்பட்டவை. பாரதிதாசன் இப்படி ஒரு செய்யுள் இயற்றுவாரா? உண்மையான தமிழ்ப் புலவர், தமிழ் ஆசிரியர் அவர்.

மதுரன் தமிழவேள்> ஆம் அத்தொடர்பில் எனக்கு ஐயமில்லை... ஆனால் மீள மீள அவர் பெயரில் இது சுழற்சிக்கு விடப்படுவதால், விளக்க வேண்டியுள்ளது..

NG> Yes. These are NOT Bharatidasan's prose at all. But that is not the important issue here. Tamil Desiyars can do more research what caused the change in Bharatidasan's thoughts? In 1954, he publishes beautiful verses saying Thai is New Year, but in 1958, he reverses his position: He lists Tamil months list starting with Chithirai, Vaikaasi, ... Like Sun TV this year, celebrating Chithirai 1 as Tamil New Year. For the last few years, Tamil Nadu Govt. does NOT declare Thai 1 as Tamil New Year at all.

புலவர் செந்தலை ந. கவுதமன் வலைப்பக்கத்தில் தெளிவாக ஓர் ஓவியத்தில் இச்செய்தியைக் கூறியுள்ளார்.
https://www.facebook.com/photo/?fbid=647525600720114&set=pb.100063880383953.-2207520000&locale=ja_JP

https://youtu.be/TxU00KBB8H0  - இந்த வருடம் Sun TV tamil புத்தாண்டு நிகழ்ச்சிகள் என்று மீண்டும் அறிவித்துள்ளது...

Ravi Annaswamy, Ohio>
The 60 year Jovian (Jupiterian) cycle and Chaitra-paksha Suryamasa is a great scientific design of multi-year calendar that is precise and useful. Using position of Jupiter and Saturn and (Sun-Moon) one can on ANY DAY, figure out which of the 60 years in the cycle one is on. So 'Arivukku ovvaadha' is not correct. One can politically disrespect the chitrai and the 12 month ,60 year calendaric system, but that is nothing to do with its scientific value for time-marking in a repeatable way. The Luni-Solar time marking is a brilliant invention of Indian mind. Calling the system unscientific is like calling metric system is unscientific because it uses English words and was not used by ancients. It is a system that is all.
Ugadi.jpeg
>> உகாதிப் புத்தாண்டு பகுத்தறிவுக்கு இசைவானதா ஐயா? 
> அரசியல் கருதி அன்று, அறியும் ஆர்வத்தாலேயே கேட்கிறேன்
(கவிஞர் மதுரன் தமிழவேள் கேட்டதுபோல, தெலுங்கு யுகாதி அறிவுக்கு ஒப்புமா? தெலுங்கு யுகாதி வருஷப்பிறப்பு திங்களை அடிமானமாகக் கொண்டது. தமிழ்-மலையாளம் வருடப்பிறப்பு கதிரவனை அடிமானமாகக் கொண்டது.

ஆண்டுதோறும்  உகாதி (தெலுங்கு வருஷப் பிறப்பு) முதல்வர் வாழ்த்து! ஒவ்வொரு யுகாதிப் பிறப்புக்கும் தேடித் தொகுக்கலாம்.
2022:
https://youtu.be/yx1SMehP-WA?t=23
2023:  தெலுங்கு வருஷப் பிறப்பை அரசாங்க விடுமுறை ஆக்கியவர் கருணாநிதி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
https://youtu.be/hYHQ9nolJ1E?t=36
2024:
https://youtu.be/Wm_o49_l6iU ...)

ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோவை நகரத் தமிழ்ப் புலவர், பெரியார் இயக்கத்தவர்களில் உலகம் அறிந்தவர் புலவர் செந்தலை ந. கௌதமன் அவர்கள் கூற்றினை வாசிக்கவும். நேற்றுப் பழைய மடல்களைப் படித்துக்கொண்டிருக்கையில் கண்டேன்.
https://groups.google.com/g/santhavasantham/c/TjmO2xBxH70/m/rBR0HhqLCgAJ

எனவே, இவ்வரிகள், புரட்சிக்கவிஞர் வாக்கன்று. சுமார் 15 ஆண்டு முன் தோன்றியதே. புலவர் செந்தலை ந. கௌதமன் ஆராய்ந்து கூறியுள்ளார்.
”பாவேந்தர் பாடலின் சிதைந்த வடிவம் கீழே உள்ளது. கீழேஉள்ள சிதைவுப்பாடல் பாவேந்தர் பெயரில் வருவதைத் தவிர்ப்பதே சரியானது.”

புலவர் செந்தலை ந. கவுதமன் வலைப்பக்கத்தில் தெளிவாக ஓர் ஓவியத்தில் இச்செய்தியைக் கூறியுள்ளார்.
https://www.facebook.com/photo/?fbid=647525600720114&set=pb.100063880383953.-2207520000&locale=ja_JP
BD.jpeg

புரட்சிக்கவிஞர் அன்பர்கள் சுமார் 15 வருடம் முன் தோன்றிய சிதைவு வரிகளைப் பாவேந்தர் பாடல் என்பது பாவேந்தரின் தமிழ்ப் புலமைக்கு இழுக்கு ஆகும்.

நா. கணேசன்
Tamil_New_Year.jpeg



N. Ganesan

unread,
Apr 24, 2024, 7:32:32 PM4/24/24
to Dr. Y. Manikandan, Santhavasantham, sirpi balasubramaniam, kanal...@gmail.com, Erode Tamilanban Erode Tamilanban, david shulman, George Hart, arave...@gmail.com, Kamalakannan. P, kalaik...@yahoo.com, A. R. Venkatachalapathy
”நித்திரையில் இருக்கும் தமிழா” என்று தொடங்கும் உரைநடை வரிகள் சுமார் 15 ஆண்டு முன் உருவானவை. அதனைப் பாடல் என்பது சரியன்று. யாப்பிலக்கணத்துக்குள் வராத உரைவீச்சு. இதனைப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பாடல் என ஆண்டுதோறும் இருமுறை சுழற்சிக்குச் சுற்றிவரச் செய்வது பாவேந்தர் தமிழ்ப் புலமைக்கு இழுக்கு. மறைமலை அடிகள் 1921-லிலோ, தாம் மறையும் வரையிலோ தை-1 (பொங்கல்) தமிழர் ஆண்டுப் பிறப்பு எனக் கூறியதும் இல்லை. பாவேந்தர் எழுதியதாய்ச் சொல்லப்பெறும் வரிகளை ஆராய்வோம்.


பாரதிதாசனும், தமிழ்ப் புத்தாண்டு தினமும் (தமிழ்த் தேசியத் தாக்கம்?)

N. Ganesan

unread,
Apr 30, 2024, 7:06:57 PM4/30/24
to Santhavasantham
தமிழ்க் கவிஞர் நாள் - பாரதிதாசன் பிறந்த நாள்:
2016-ம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை:
https://tamilvalarchithurai.tn.gov.in/?page_id=4131

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamil-poets-day-celebration-madurai-tamil-nadu-government-information
மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்! (29-4-2024).

பாவேந்தர் பாரதிதாசனின் அரிய படங்கள்:
https://twitter.com/naa_ganesan/status/1785108953535308219
பாரதிதாசன் ஈ. வெ. கி. சம்பத், அவர் நண்பர் கண்ணதாசன், ப. ஜீவானந்தம் (கம்யூனிஸ்ட் கட்சி), கிஆபெ விசுவநாதன் (தமிழ் தேசியர்), .... எந்தக் கட்சியில் இருந்தாலும் நட்பு பாராட்டியுள்ளார். கிஆபெ இதழில் பொங்கல் வாழ்த்து. திருப்புகழ் போல எழுதியுள்ளார். 1951-ல், இதில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு எனப் பாடவில்லை.
https://s-pasupathy.blogspot.com/2017/01/5_16.html

சங்க இலக்கியத்தில் ஆடு (மேஷ ராசி) பற்றி வரும் 3 செய்திகள்:
https://groups.google.com/g/vallamai/c/CuUx6qwpvJs/m/uYBjr9NvAQAJ
 தமிழ் வருடத்தின் 12 திங்கள் கொண்ட கனலிவட்டம் (Zodiac), சிந்தாமணி தருவது:
https://groups.google.com/g/santhavasantham/c/cje7QX8TMWU/m/olyhlQqcDgAJ


பாரதிதாசனும், தமிழ்ப் புத்தாண்டு தினமும் (தமிழ்த் தேசியத் தாக்கம்?)
1954-ல் வெளியானது பொங்கல் வாழ்த்துக் குவியல். இதில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு எனப் பாடிய பாவேந்தர் கருத்தில் 1958-ல் மாற்றம். 1958-ல் ”இளைஞர் இலக்கியம்” என்னும் நூலைப் பதிப்பிக்கும் போது தமிழ்த் தேசியவாதிகள் தாக்கத்தால் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு என முடிவுக்கு வந்துவிட்டார் எனத் தெரிகிறது.  சித்திரையில் தொடங்கிப் 12 மாதப் பெயர்களைப் பட்டியலிட்டுத் தமிழ் மாதங்கள் என்று பாடுகிறார்.
https://groups.google.com/g/vallamai/c/RqdyXU5wgKM/m/6YiMwM3bAAAJ

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 15, 2024, 7:41:58 AM10/15/24
to Santhavasantham
தமிழ்நாட்டு நீராதாரமாய் விளங்குவது வடகிழக்குப் பருவமழை. தொடங்கிவிட்டது. தொல்காப்பியர் முதலாக, நிகண்டுகள் எல்லாம் பருவங்களின் தொடக்கமாக இப் பருவ மழைக்காலத்தையே வைத்துள்ளனர்.

வாட்ஸப்பில் வந்தது:
தமிழக ஊடகங்கள் வடகிழக்கு பருவமழையினை ஏதோ சென்னைககு ஏதோ அணுகுண்டு மிரட்டல், இஸ்ரேலிய மக்களை போல பதுங்குகுழிக்குள் தங்கும் பயிற்சி எனும் அளவு பயமுறுத்துகின்றது, இது சரியல்ல‌நீரின்றி அமையாதது உலகு

தமிழகம் தென்மேற்கு பருவமழையால் அதிக மழை பெறும் மாகாணம் அல்ல, அதன் உயிர்நாடி வடகிழக்கு பருவமழை

இந்த மழைதான் அடுத்த ஒருவருடத்துக்கான நீர் தேவையினை ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் என நிரப்பி தரும், இந்த மழைதான் தமிழக அரிசி உற்பத்தி காய்கறி உற்பத்திக்கும் தொழிலுக்கும் அடித்தளம்

இந்த மழை கொடுக்கும் பலம் தான், இந்த நீர் ஆதாரம்தான் ஒருவருடம் நிலத்தடி நீராக நின்று தமிழகத்தை காக்கும்

தமிழகம் வற்றா நதிகள் கொன்ட பூமி அல்ல, செழுமை கொண்ட ஆறுகள் அமைந்ததும் அல்ல‌

இங்கு தாமிரபரணி தவிர எல்லாமும் கோடையில் வற்றிவிடும், ஒரு சொட்டு இல்லாமல் காய்ந்துவிடும், இந்த மாகாணம் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றது, அதற்கு ஆதாரம் ஏரிகள் குளங்கள்

அதற்கு பெரும் ஆதாரம் இந்த மழை

இதை அறிந்துதான் முன்னோர்கள் அவ்வளவு ஏரிகளை வெட்டினார்கள், வைகை எனும் நதி கடலுக்கே செல்லாத அளவு அது ஏரிகளுக்கும் கன்மாய்க்கும் திருப்பி விடப்பட்டது

திரும்பும் இடமெல்லாம் பிரமாண்ட ஏரிகளை அன்றே வெட்டிவைத்தார்கள்

அன்றைய காஞ்சிபுரம் செங்கல்பட்டு என தொண்டை நாடெங்கும் ஏகப்பட்ட ஏரிகள் இப்படி அமைந்திருந்தன, அந்த நீர்வளத்தை கண்டுதான் பிரிட்டிஷார் சென்னையில் அத்தனை ஆலைகளை கட்டினார்கள்

இந்த மழை இல்லையென்றால் தமிழகம் இல்லை, தமிழக பொருளாதாரமில்லை, நெல் காய்கறி கரும்பு என எதுவுமில்லை

தொழிற்சாலைகள், மாடு ஆடு கோழி என எதுவுமில்லை

தமிழகத்துக்கு இது தனிவரம், இந்த மழை மிக மிக முக்கியம்

அதனால் இந்த பத்திரிகை அலப்பறைகளை கடந்து, வெற்று அரசியல் குழப்பங்களை கடந்து மழை நன்றாக பெய்து மாகாணம் செழித்து நாட்டிற்கு பலமாய் நிற்கவும், எல்லா மக்களும் எல்லாம் பெற்று நிறைந்து வாழவும் பிரார்த்திப்போம்

இந்த மழைதான் வாழ்வு, அதை தரும் அம்மனை மாரியம்மன் என சொல்லி அவளுக்காய் தீமிதித்து , நெருப்பு சட்டி ஏந்தி கண்ணீர்விட்டு மன்றாடிய சமூகம் இது

அந்த மழையின் அவசியமும் அருமையும் அப்படி, அதனால் அந்த பெருமழை நன்றாக கொட்டி மாகாணம் செழுமையுற பிரார்த்திப்போம்

அற்ப அரசியலுக்கும் அதை கொண்டு சென்னை மக்களே தங்களுக்கு தாங்கள் தேடி கொண்ட ஆபத்துக்கும் அந்த புனிதமான சக்திவடிவான உயிரான மழையினை குறை சொல்ல முடியாது கூடாது

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்
மேல்நின்று தான்சுரத்த லான்"

என மலர்தூவி பாடி அதனை வரவேற்போம், எல்லா மக்களுக்கும் எல்லா உயிர்க்கும் தாயாய் அந்த வானம் தன் கடமையினை செய்து படியளக்கட்டும்💧💧💧
நீரின்றி அமையாதது உலகு
Attur news 14.10.24
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அணைகளின் நிலவரம் 15.10.2024
 சோலையார் அணை
நீர்மட்டம்:160.17/160 அடி
நீர்வரத்து:609.93க.அடி
வெளியேற்றம்:385.51க. அடி
மழை அளவு:13mm
பரம்பிக்குளம்:
நீர்மட்டம்:71.48/72 அடி
நீர்வரத்து:3573க.அடி.
வெளியேற்றம்:557க.அடி
மழை அளவு:7mm
 ஆழியார் அணை: 
நீர்மட்டம்:116.75/120அடி.
நீர்வரத்து:388க.அடி.
வெளியேற்றம்:264க.அடி.
மழையளவு:7mm

திருப்பூர் மாவட்டம்: 
உடுமலை அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:45.64/60அடி 
நீர்வரத்து:703கனஅடி
வெளியேற்றம்:79கன அடி
மழையளவு:5mm

அமராவதி அணை
நீர்மட்டம்: 82.68/90அடி.
நீர்வரத்து:1486கனஅடி
வெளியேற்றம்:5கன அடி.
மழையளவு:6mm
மழையளவு
வால்பாறை-23mm
அப்பர் நீராறு-47mm
லோயர் நீராறு-14mm
காடம்பாறை -13mm
சர்க்கார்பதி -22mm
வேட்டைக்காரன் புதூர்-1.60mm
மணக்கடவு-4mm
தூணக்கடவு-15mm
பெருவாரிபள்ளம்-24mm
அப்பர் ஆழியார்-8…
நூறு கோடி எப்படி மாற்றுவது?

https://www.facebook.com/share/p/u8vCcA5v8iQFQM8x/
உடுமலை அருகே கூட்டாற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம்-மரப்பாலம் அமைக்க கோரிக்கை!!

N. Ganesan

unread,
Oct 15, 2024, 7:48:20 AM10/15/24
to Santhavasantham
தமிழ்நாட்டு நீராதாரமாய் விளங்குவது வடகிழக்குப் பருவமழை. தொடங்கிவிட்டது. தொல்காப்பியர் முதலாக, நிகண்டுகள் எல்லாம் பருவங்களின் தொடக்கமாக இப் பருவ மழைக்காலத்தையே வைத்துள்ளனர்.

சித்திரை (மேழ இராசி) - நச்சினார்க்கினியர்- தமிழ் ஆண்டுப் பிறப்பு
--------------------------------

தமிழ் வருடப் பிறப்பு சித்திரையில் என்பதை இராசிச் சக்கரத்தை வர்ணிக்கும் போதெல்லாம் தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.  உ-ம்:  நெடுநல்வாடை. இதனை நச்சினார்க்கினியர் விளக்குகிறார்:
"160 - 61. [திண்ணிலை மருப்பி னாடுதலை யாக, விண்ணூர்பு திரி தரும் :]

விண் - ஆகாயத்திடத்தே,
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக ஊர்பு திரிதரும் - திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,"
https://www.tamilvu.org/slet/l1100/l1100pag.jsp?book_id=20&pno=462

12 தமிழ் மாதங்களையும், சித்திரை முதலாய் பங்குனி ஈறாகத் திருத்தக்க தேவர் வரிசைப்படுத்திப் பாடியுள்ளார். சித்திரையை முதலாக வைத்து நச்சினார்க்கினியர் உரை உள்ளது. முன்னர் எழுதிய பதிவு.

கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்)
https://groups.google.com/g/santhavasantham/c/-E6P993IAz8/m/vvABNysJBQAJ
மேலும், ஆராய்ச்சி:
https://groups.google.com/g/santhavasantham/search?q=கனலிவட்டம்

இராசிவட்டம் அல்லது கனலிவட்டம் (இராசிவட்டத்தின் தமிழ்ப்பெயர்) தொடங்குவது சித்திரையிலே தான். உலகம் முழுதும் உள்ள கனலிவட்டம் வரலாறு நெடியது.

--------------

ஆடு கோட்பாடு - 27 நக்ஷத்திரக் கணிப்பு வேத காலத்திலேயே, சிந்து நாகரீகத் தொடர்ச்சியாக வந்துவிட்டது.
முன்பெல்லாம், நக்ஷத்ரங்கள் கோட்பாடு சீனாவில் இருந்து வந்தது என எழுதிக்கொண்டிருந்தனர். இப்போது, இவை சிந்து நாகரிகத்தில் தமிழ்/த்ராவிட மொழி பேசினோர் கண்டது என்று நிறுவிவிட்டனர். இன்றும் தமிழ் வருஷத்தின் மாதப் பெயர்கள் நட்சத்திரத்தால் வழங்குவது இதனாலே தான். தொல்காப்பியர் தமிழ் மாதப் பெயர்களின் இலக்கணம் கூறியுள்ளார். பின்னர் 1000+ ஆண்டு கழிந்து, கனலிவட்டம் என்னும் 12 ராசிகள் வருகின்றன. மேஷ ராசியை முதலாகக் கொண்ட பஞ்சாங்கக் கணிதமுறை பரவலாகக் காரணமாகச் சேரமன்னர்கள் விளங்கினர். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பது இதனால் சேர மன்னன் அடைந்த புகழ்ப்பெயர்.  மேஷ ராசியும், சித்திரை நக்ஷத்திரம் பௌர்ணமியில் வருவதுமாக, அடிப்படையில் சூர்யமானம், ஓரளவு சந்திரமானத்தையும் உள்ளடக்கி தமிழ்ப் பஞ்சாங்க வானியல் ஜோதிஷம் உருவாகியுள்ளது. சேரர்கள் செய்ததால், அவர்களில் பிரசித்தி பெற்றவனுக்கு "ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்" என்ற விருதுப்பெயரைச் சங்க இலக்கியம் கூறுகிறது. சேர ராஜாக்கள், வடபுலம், தென்புலம் பண்பாட்டை இணைத்தவர்களில் முதன்மையானவர்கள். அவர்கள் நாட்டிலே தான் பிராமி எழுத்து ஏராளமான பானை ஓடுகளில் கிடைக்கின்றன (உ-ம்: கொடுமணல், பொருந்தல், ...). தமிழில் சந்தப் பாடல்களை முதலில் உருவாக்கியவர் இளங்கோ அடிகள் ஆவார். கந்துக வரி. தமிழ்ப் பஞ்சாங்கம் போலவே, சந்தப் பாடலின் தந்தை இளங்கோ அடிகள், தமிழ் யாப்பு (அசை, தளை, மா,விளம்,காய் வாய்பாடு) என்னும் அடுக்கின் மீது, வடமொழி யாப்பின் இலகு, குரு அலகீடும் சேர்த்து அமைத்துத் தந்துள்ளார். சந்த விருத்தங்கள் பின்னர் பக்திக்கால இலக்கியம், காப்பியங்களில் வளர்ந்து, திருப்புகழாகப் பரிமளித்தது.

 பருவங்கள் வேறு. வட இந்தியாவில் பருவங்கள் தொடக்கம் சம்ஸ்கிருத நூல்கள் வகுத்தன. அவை தென்னிந்தியாவுக்குப் பொருந்துவதில்லை. ஆதலால், வட இந்தியாவில் பருவங்கள் பட்டியலைத் தமிழகத்திற்கு தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றினர். இதனை நிகண்டுகள், தொல்காப்பியம் பறைசாற்றுகின்றன. ஆனால், இப் பருவப் பட்டியலுக்கும்  ஃசோடியாக் என்னும்  இராசிவட்டம், வருஷப் பிறப்புக்கு தொடர்பு இல்லை. பருவங்கள் பட்டியல் வழியாக,  புதுவருஷம் எனத் தமிழ் நூல்கள், கல்வெட்டுகள்  எங்கேயும் கூறுவதில்லை.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Feb 10, 2025, 7:24:05 AMFeb 10
to Santhavasantham
இளவேனில் காலத்தில் ஐரோப்பியாவில் புத்தாண்டு. பின்னர்  கிரிகோரியன் காலண்டர் ஜனவரி 1 புத்தாண்டு.
----------------------------------------------------------------

இளவேனில்/வசந்த காலத்தில் அரைநாளை (Spring Equinox ~March 20) ஒட்டியே  ஐரோப்பியர் தம் புத்தாண்டைக் கொண்டாடினர். பின்னர் போப் கிரிகோரி ஜனவரி 1-க்குப் புத்தாண்டை மாற்றினார். அவர் கத்தோலிக்கர் ஆனதால், புரட்டோஸ்டண்ட் சமய நாடுகள் புத்தாண்டை மாற்ற மறுத்தனர். எனவே, கால தாமதம் ஆனது. ஏப்ரல் 1 புத்தாண்டு ஆகக் கொண்டாடுவதை எதிர்த்தோர் "ஏப்ரல் முட்டாள்கள் தினம்" என்று ஆரம்பித்தனர்.

தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பது சித்திரை 1 தான் என விளக்கிய கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ் எம்பி), ஐரோப்பிய கண்டத்தில் புத்தாண்டு நாள் மாறிய சரித்திரம் குறிப்பிடுகிறார். தமிழர்கள் ஆண்ட நாடுகளில் சித்திரை 1 புத்தாண்டாக விளங்குகிறது: சிங்களத் தீவு, கம்போடியா, தாய்லாந்து, ...
https://www.quora.com/When-did-April-stop-being-the-first-month-of-the-year
https://brucestambaugh.com/2010/04/01/no-joke-april-1-was-once-new-years-day/
https://www.reddit.com/r/amiwrong/comments/18vb3mz/embracing_april_as_the_true_new_year/
https://libguides.ctstatelibrary.org/hg/colonialresearch/calendar

முதலில், திங்கள் என்பது பௌர்ணமியைக் கடைசி நாளாக வைத்துக் கணக்கிட்டுள்ளனர். இது நட்சத்திரக் கணிதம். மாதப் பெயர்கள் இன்றும் பௌர்ணமியில் வரும் நட்சத்திரங்களால் பெயர் பெற்றுள்ளது. பூர்ணிமாந்த மாதம். பழைய கணக்கில் கொற்றவை (பாவை) வழிபாட்டுக்குப் பாடியுள்ளாள் ஆண்டாள். மார்கழிக் கடைசி நாள் "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்" நீராடல் தொடங்கித் தை மாதம் நீராடல் தொடர்ந்துள்ளது (Lunar calendar, சந்திரமானம்). பின்னர் ஃசோடியாக் (Zodiac) கனலிவட்டம் என்னும் மேஷம், ரிஷபம், ... என்னும் சூரியமான பஞ்சாங்கத்துடன் (solar calendar) இயைக்கப்பட்டுள்ளது."ஆடு தலையாக" ... இப்படி காலண்டர்/பஞ்சாங்க மாற்றம் பெரிது. LuniSolar calendar
ஆக மாறியது. இதைச் செய்தவன் சேரமன்னன் "ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்" எனப் சங்க காலத்தில் புகழப்படுகிறான்.
https://groups.google.com/g/santhavasantham/c/6eaxH96FoiY/m/6ujqxCP2AAAJ
https://groups.google.com/g/vallamai/c/CPL9kbgSFmk/m/7N-wX99RDQAJ

 (1) ஐரோப்பாவில் காலண்டர் மாற்றம், (2) சமணர்கள் தமிழ் பிராமி, வட்டெழுத்து  விட்டு ஆந்திராவில்  இருந்து வந்த (பல்லவர்) கிரந்த எழுத்தைத் தமிழுக்குப் பொருத்திச் செயல்படுத்திய ராஜராஜ சோழன் போல, the original Lunar calendar changing to Luni-Solar calendar incorporating both systems (Nakshatra, Zodiac) was a major adaptation in the Tamil panchangam. சில நூற்றாண்டுகள் ஆயின. இளங்கோ அடிகள் தமிழ் யாப்பின் நேர், நிரை அலகுடன் சேர்த்து வடமொழி விருத்தத்தின் இலக்கணத்தை இயைத்துச் சந்தப் பாடல்களைத் தொடங்குகிறார், பின்னர் சம்பந்தர், அருணகிரி, ... அதுபோல, சந்திரன், சூரியன் இரு கணக்கும் இயைவது தமிழ்ப் பஞ்சாங்கத்தில்.

முதலில் தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு என இரு பாடல் இயற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், 1958-ம் ஆண்டு சங்க நூல்கள், கல்வெட்டு, சீவக சிந்தாமணி, ... போன்றவற்றை ஆராய்ந்தபின், சித்திரையைத்  தமிழ் வருடத்தின் முதல் திங்கள் என ஒப்புக்கொண்டுவிட்டார் எனத் தெரிகிறது. புரட்சிக் கவிஞரின் குறிப்பிடத்தக்க மாற்றம் இது.  பார்க்க:
https://x.com/naa_ganesan/status/1785631976700965016

கார்த்தி சிதம்பரம் விளக்கம்: https://x.com/naa_ganesan/status/1888923470970446253

NG

N. Ganesan

unread,
Mar 31, 2025, 9:50:19 AMMar 31
to Santhavasantham
பாரதிதாசன் தமிழ்ப் புத்தாண்டு என முன்னர் தைத் திங்களைச் சொல்லி, சில ஆண்டுகள் சென்றபின் 1958-ல் தம் கருத்தை மாற்றிக்கொண்டார். இதனை, பாரதிதாசன் கொள்கைகளை விளக்கும் ஓர் அன்பருக்கு தெரிவித்தேன்.
https://x.com/Jeeva_Jeevanss/status/1906459551815319600
"பல்லாயிரம் ஆண்டாய் தமிழர்கள் வாழ்வில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்று சொன்னவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தை முதல் நாளைத் தான் அவர் ஏற்றார். "

என் மறுமொழி:
https://x.com/naa_ganesan/status/1906702016434356590

ஆம். ஆனால், பின்னர் 1958-ல் புரட்சிக் கவிஞர் தம் கருத்தை மாற்றிக் கொண்டார் என அவர் வெளியிட்ட நூல்களால் அறிந்துகொள்ளலாம். அமாவாசையில் தெலுங்கு, கன்னட யுகாதி புது வருஷம் தொடங்குகிறது (அமாவாசை அந்தம்). முதல்வர் ஸ்டாலின் ஆண்டுதொறும் வாழ்த்து தெரிவிக்கிறார். ஆனால் மிகப் பழைய காலத்தில் பௌர்ணமியில் தமிழ் மாதங்கள் தொடங்கியுள்ளன (பூர்ணிமாந்தம்). பிறகு, சூரியனை அடிப்படையாகக் கொண்டு பௌர்ணமி மாத நடுவில் வருவதுபோல மாற்றிக்கொண்டனர். இதனைச் செய்தவன் சங்க காலத்தில் வஞ்சி மாநகர் (கரூர்) ஆண்ட "ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்". ஆடு = Aries, "ஆடு தலையாக"(சங்க நூல்களில்).

தமிழ்நாட்டு அரசாங்கம் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடுவது சித்திரை ஒன்றாம் நாளைத்தான். Linear year என்ற வகையில் தைப் பொங்கல் திருவள்ளுவர் ஆண்டு ஆக முகிழ்த்துவிட்டது. எல்லா அரசாணைகளிலும் திருவள்ளுவர் ஆண்டு இடம்பெறுகிறது. திருவள்ளுவர் ஆண்டு எனப் தைப் பொங்கல் தினத்தைச் யார் செய்தது என்பது பற்றி ஓர் கட்டுரை எழுதினேன். கலைஞர் மு. க. அவராகவே அக் கட்டுரையைப் படித்தபின் கலைஞர் டிவியிலும், முரசொலியிலும் கட்டுரை எழுதினார்.


முதலில் தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு என இரு பாடல் இயற்றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், 1958-ம் ஆண்டு சங்க நூல்கள், கல்வெட்டு, சீவக சிந்தாமணி, ... போன்றவற்றை ஆராய்ந்தபின், சித்திரையைத்  தமிழ் வருடத்தின் முதல் திங்கள் என ஒப்புக்கொண்டுவிட்டார் எனத் தெரிகிறது. புரட்சிக் கவிஞரின் குறிப்பிடத்தக்க மாற்றம் இது.  பார்க்க:
https://x.com/naa_ganesan/status/1785631976700965016

கார்த்தி சிதம்பரம், MP விளக்கம்: https://x.com/naa_ganesan/status/1888923470970446253

NG

N. Ganesan

unread,
Apr 2, 2025, 1:04:24 PMApr 2
to Santhavasantham
பேரா. கிருங்கை சேதுபதி, புதுவை எழுதினார்:
> உண்மையை ஏற்பதே கவிஞருக்கழகு!

ஆம், ஐயா. பாரதிதாசன் உண்மையை உணர்ந்து செய்த செயல். அவரும், எங்கள் உறவினர் கோவை அய்யாமுத்தும் நெருக்கமானவர்கள்."வாடா, போடா" என்று அழைத்துக்கொள்ளும் நெருக்கம்.  மறைமலை அடிகள் தொடர்புக்கு முன் பள்ளி ஆசிரியர் புரட்சிக் கவிஞரிடம் தனித்தமிழ் தாக்கம் இருக்கவில்லை. குழைந்தைகளுக்கு அவர் வைத்த பெயர்களைப் பாருங்கள். எல்லாம் வடமொழி. மகன் கோபதி திருமணத்தைக் கோவை அய்யாமுத்து தலைமையில் நடாத்தினார். பொள்ளாச்சியில் கலந்துகொண்ட கூட்டம் தான் பாரதிதாசனின் கடைசிக் கூட்டம். இந்தக் கூட்டம், ஏற்பாடு பற்றிச் கவிஞர் சிற்பி நேரில் விளக்கமாகச் சொல்லயுள்ளார். கட்டுரை அவரிடம் பெற்றுத் திருச்செங்கோடு முருகு சுந்தரம் வெளியிட்டுள்ளார். ஈரோடு தமிழன்பன் நெருக்கமாகக் கவிஞரிடம் பழகியவர். கோவை அய்யாமுத்து, சிற்பி, தமிழன்பன் , வேள்நம்பி, பட்டணம் பெரியசாமி, மு. இளங்கோவன், ய. மணிகண்டன், ... நேரில் கேட்டுப் புரட்சிக் கவிஞர் வாழ்க்கையில் சில ஏடுகளை அறிந்தேன். பாரதிக்கு வரிசையாக தமிழ்ப் புலவர்கள் பாடுபட்டு, காலவரிசையில் தொகுத்ததுபோல, பாரதி தாசனுக்கும் செய்யத் தமிழ்ப் புலவோர் முன்வரவேண்டும். பாரதிக்குப் பாடுபட்ட (பரமத்தி வேலூர்) சீனி. விசுவநாதனுக்கு இவ்வாண்டு பத்மஶ்ரீ. தமிழன்பன் கவிதை:
https://nganesan.blogspot.com/2021/02/anaikkava-enra-amerikka-1996-tamilanban.html
https://nganesan.blogspot.com/2022/06/purananuru-thaay-austin-library.html

பாரம்பரியமாக, இசை அறிவு பெற்ற முன்னோர்களைக் கொண்ட பாரதிதாசன், தொடக்க காலத்தில் பக்தி, பஜனைப் பாட்டுகள் செய்து வந்தார். எ-டு: திருப்புகழ், 1926.
https://nganesan.blogspot.com/2009/08/manakkula-ganapati.html
இக் காலகட்டத்தில் எல்லாம் சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பு எனக் கொண்டிருந்தார்.  பின்னர் 1954 வாக்கில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு என இரு பாடல்கள் செய்தார். பின்னர் தமிழ்ப் புலவர்கள் அறிவுறூஉவாலும், சங்க நூல்கள், சிந்தாமணி போன்றவற்றை ஆழ்ந்து கற்றார். குமரகுருபரர் வரலாற்றில் மூழ்கினார். அதனால், தமிழர்களின் வழமையான சித்திரை தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்ற கோட்பாட்டுக்குத் திரும்பினார். இது 1958-ல் அவர் பாடிய செய்யுளால் வெளிச்சம் ஆகிறது.

தமிழ் நாட்டு அரசாங்கம் நிதி ஒதுக்கி, பாரதிதாசன் எழுத்துக்களைத் தொகுக்கவேண்டும். பெருநிதி ஆண்டுதோறும் அளிக்க இதற்கு அரசாங்கம் தயங்காது. புரட்சிக் கவிஞர் எழுத்து காலவரிசையில் தொகுக்கப்படும்போது, கருத்து மாற்றங்களை ஆராயவியலும். மறைமலை அடிகள் மறையும் வரை திருவள்ளுவர் தினம் என வைகாசி அனுஷ நக்ஷத்திரத்தைக் கொண்டாடினார். நாவலர் சோமசுந்தர பாரதி தைப் பொங்கலுக்கு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் ஆக்கினார். மாற்றங்கள் இயற்கையே. பாரதியும் சில கொள்கைகளில் மாறினார் (உ-ம்: காந்தி வந்தபிறகு). புரட்சிக் கவிஞர் தமிழ் இலக்கிய வழமை ஆகிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் என மாறினார்.

தமிழ்நாட்டு அரசாங்கமும் தெலுங்கு யுகாதி, தமிழ் புத்தாண்டுப் பிறப்பு எனச் சித்திரை 1 எனக் கொண்டாடுகிறது. விடுமுறை நாளும் அளிக்கிறது. இம் மாற்றங்களுக்கு முதற்புள்ளியாய் புரட்சிக் கவிஞரின் 1958-ம் ஆண்டுப் பாடல் விளங்குகிறது. https://x.com/naa_ganesan/status/1906724745040515291

திங்கள் பனிரண்டு
------------------
சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு
    ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
    ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே
    கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
     வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.  
          - இளைஞர் இலக்கியம் (பாரதிதாசன், 1958-ல் பாடியது).

தமிழ் இலக்கண ஆர்வலர்களுக்கு: புரட்சிக்கவி தை தான் தமிழ்ப் புத்தாண்டு என அப்போது கோட்பாடு உடையர் ஆயின், "தைமாசி பங்குனி சித்திரை வைகாசி, ..."  எனப் பாடிச் செய்யுள் தந்திருப்பார். அதாவது, "மா" என்னும் எழுத்து, விருத்தத்திற்கு எதுகையாய் அமைந்திருக்கும். ஆனால், செய்யவில்லை. பேரா. சேதுபதி சொல்வது போல, உண்மையை அறிந்து தெளிந்துவிட்டார். சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தெளிவு பெற்ற நிலைப்பாடு.

குறிப்பு ஒன்று: நித்திரையில் இருக்கும் தமிழா என்னும் பாடல் யாப்பிலக்கணத்துக்குப் பொருந்துவதில்லை. இப்போது இணையத்தில் பரப்பப்பட்டாலும், புரட்சிக்கவி மறைந்து 45 ஆண்டுக்குப் பின்னர் உருவானது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages