கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்)

57 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 21, 2020, 8:14:59 AM4/21/20
to Santhavasantham
வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை  மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று
சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.
வருடத்தில் 12 மாதங்கள். 1 X 12 = 2 X 6 = 3 X 4 என 12-ஐப் பகுக்கலாம். 12 ராசிகளை Solar Mansions என்றும், 27 நட்சத்திரங்களை Lunar Mansions என்றும் அழைப்பர். தொல்காப்பியர்
இந்த ஸோலார் + லூனார் மேன்ஸன்ஸின் பேர்களில் உள்ள இலக்கணத்தைக் குறிப்பிட்டுச் சூத்திரித்துள்ளார். முன்பெல்லாம். 27 நட்சத்திரங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை என ஆசியாவின்
பழைய இலக்கிய ஆய்வர்கள் (indology, sinology) கூறுவர். இப்பொழுது 27 நட்சத்திரங்கள் பற்றிய அறிவு இந்தியாவில் ஏற்பட்டது (சிந்துக் காலம், அதன் பின் வேதாங்க ஜ்யோதிஷத்தில் மொழிபெயர்ப்பு) என
வரலாற்றில் பதிவாக ஆரம்பித்துள்ளது. நட்சத்திரங்களுக்குப் பழம்பெயர்கள் தமிழில் உள்ளதும் இதற்கோர் அடிப்படை. வேனில், மழை, கூதிர் காலங்களை ஆண்டின் மாதங்களை
வரிசைக்கிரமமாக சிந்தாமணி பாடுகிறது. திருத்தக்கதேவர்தாம் Zodiac-கு இப்பாடல்களில் தமிழில் முதன்முதலாகக் கலைச்சொல் தந்தவர். ஃசோடியாக்கை “கனலி வட்டம்” என்றும்
ஆடு (Aries) தலையாக உள்ள ராசி சக்கரத்தை அழைக்கிறார். கனலிவட்டம் = ஞாயிற்றுமண்டிலம் = https://en.wikipedia.org/wiki/Zodiac
சிந்தாமணியின் அப்பாடல்கள் சித்திரையில் தொடங்கும் வருஷத்தைக் காட்டுவன. தண்டாரணிய முனி அகஸ்தியனிடம் ஆசீர்வாதம்
பெற்று, பஞ்சாங்கத்தை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்த தமிழ்வேள், சேரமன்னன்  ”ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” என்றும், வானியல் விஞ்ஞானத்தை அறிமுகம் செய்வதால்
வானவரம்பன் என்று புகழப்பெறுவதும் பதிற்றுப்பத்து பதிகம் காட்டுகிறது.

முந்நான்கு என்று வருடத்தின் பன்னிரண்டு மாதங்களைப் பகுப்பதை முதலில் தமிழ்நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்பப் பயன்படுத்தியவர் தொல்காப்பியர் ஆவார்.
வட இந்தியாவில் வசந்தம் என்னும் பருவகாலத்தில் (இளவேனில்) தொடங்கி 6 பருவங்கள் பிரிக்கப்படும். ஆறை மூன்றாக்கினால் கிரீஷ்மம் (வேனில்), வர்ஷம் (மழை),  ரத் (குளிர்) என்று
குறுக்கிப் பயன்படுத்தலும் உண்டு: இக்‌ஷ்வாகு மன்னர் கல்வெட்டுகள், சீவக சிந்தாமணி. இவை ஆண்டின் தொடக்க மாதமாகிய சித்திரையில் தொடங்குவன.
தமிழ்நாட்டுக்கு சங்க காலத்தில் வேளாண்மை அடிப்படை. வேனில் (இள + முது வேனில்) பருவம், பூமத்தியரேகைக்கு அருகே இருப்பதால் கடுமையான வெயில்.
எனவே, இதை வைத்து தொல்காப்பியர் 6 பருவங்களைத் தொடங்கவில்லை. முந்நான்கு - வர்ஷம், ரத், க்ரீஷ்மம் என்று உழவர்க்கு இன்றியமையாத
மழைக்காலப் பருவத்தை பருவச் சுழற்சியில் முதன்மையாக வைக்கிறார். மழை, பனி (குளிர்), கோடை (வேனில்) என்று அமைக்கிறார் தொல்காப்பியர்:
இதனை மலையாளிகள் பிற்காலத்தில் தமக்கென ஒரு தொடராண்டு - கொல்லம் ஆண்டு என அமைக்கும்போது பயன்படுக்த்துகின்றனர். இதுபோல,
தமிழர்கள் தமக்கென ஒரு தொடராண்டு - திருவள்ளுவர் ஆண்டு என தை மாதத்தில் 20-ஆம் நூற்றாண்டில் அமைத்தனர்.

வர்ஷம், ரத், க்ரீஷ்மம் - தொல்காப்பியர் இவ்வரிசையில் 6 பருவங்களைத் தருதல்:
  • கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசி யை உள்ளடக்கியது.
  • கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகை யை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும். (கூடு-தல் > கூது-தல், கடவு > கதவு, ...)
  • முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தை யை உள்ளடக்கியது.
  • பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனி யை உள்ளடக்கியது.
  • இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசி யை உள்ளடக்கியது.
  • முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

On Mon, Apr 20, 2020 at 6:03 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,
மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,
அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்
சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்
பார்த்தோம். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும்
எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. சேரலாதன்
வாழ்ந்த வஞ்சி மாநகர் அருகே இருந்தவர் திருத்தக்கதேவர்.
அவர் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தில் அப்போதிருந்த கலைகள் பற்றிய
பல செய்திகள் கிடைக்கின்றன. ஆடல், பாடல், கூத்து பற்றிய அரிய செய்திகள் உள்ளன.
பருந்தும் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இருக்கவேண்டும் என்று கூறியவர் அவர்தான்.
பின்னாளில் தமிழ் இசை பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் தந்த அடியார்க்குநல்லார் உரையை,
சிலப்பதிகார நூலும், அடியார்க்குநல்லார் உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கிறது என்று
இந்த உவமையைப் பயன்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ் இசை வளர்த்த மங்கலப்
பண்டிதர்கள் சங்க காலப்  பாணர்கள் வகுப்பாரில் பெரும்பிரிவினர் என்பது சீவக சிந்தாமணியால்
அறிகிறோம். சோதிட சாத்திரச் செய்திகள் பலவும் சிந்தாமணியில் கிடைக்கிறது.
வருடத்திற்குப் 12 திங்கள்கள் என்றும், அயனம் என்னும் கதிரவனின் வட, தென்
திசைச் செலவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.

வருடத்தில் 12 மாதங்கள். 12 X 1 = 6 X 2 = 4 X 3 என 12-ஐப் பகுக்கலாம்.
6X2 - இரண்டிரண்டு மாதங்களாய் 6 பருவங்கள் வகுக்கப்பெற்றன.
வசந்த ருது - இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி)
கிரீஷ்ம ருது - முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி)
வருஷ ருது -மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி)
சரத் ருது - கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை )
ஹேமந்த ருது - முன்பனிக்காலம் (மார்கழி, தை)
சிசிர ருது - பின்பனிக்காலம் (மாசி, பங்குனி)
(வசந்தம் மார்ச் 20-ல் தொடங்க வேண்டும். இதுபற்றிப் பாரதியார் நல்ல கட்டுரை எழுதினார்.)

வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.
”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை  மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.
கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்று
சித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.

சித்திரையில் வருட தொடக்கம் எனக் காட்டும் சீவகசிந்தாமணி பாடல்கள்:
3070 நளிசிலம் பதனி னுச்சி


  நாட்டிய பொன்செய் கந்தி


னொளியொடு சுடர வெம்பி


  யுருத்தெழு கனலி வட்டந்


தெளிகடல் சுடுவ தொத்துத்


  தீயுமிழ் திங்க ணான்கும்


விளிவரு குரைய ஞான


  வேழமேற் கொண்டு நின்றான்.

   (இ - ள்.) நளி சிலம்பதனின் உச்சி - (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு - கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் - நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் - சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து - தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி - ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் - நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் - நின்றான்.

   (வி - ம்.) குரைய : அசை,

   நளி - செறிவு, சிலம்பு - மலை, கந்தின் - தூணைப்போன்று , கனலி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி

யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.

( 472 )
3071 பார்க்கடல் பருகி மேகம்


  பாம்பினம் பதைப்ப மின்னி


வார்ப்பிணி முரசி னார்த்து


  மண்பக விடித்து வான


நீர்த்திரள் பளிக்குத் தூணி


  சொரிந்திட நின்று வென்றான்.


மூர்த்தியாய் முனிவ ரேத்து


  முனிக்களி றனைய கோமான்.

   (இ - ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.

   (வி - ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம்.

( 473 )
3072 திங்கணான் கவையு நீங்கத்


  திசைச்செல்வார் மடிந்து தேங்கொள்


பங்கயப் பகைவந் தென்னப்


  பனிவரை யுருவி வீசு


மங்குல்சூழ் வாடைக் கொல்கான்


  வெள்ளிடை வதிந்து மாதோ


விங்குநான் காய திங்க


  ளின்னுயி ரோம்பி னானே.

   (இ - ள்.) 

நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார். மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.

விளக்கம் : முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல். (474)

சித்திரை திங்கள் வருஷத்தின் முதல் மாதம் எனக் காட்டும் முக்கியமான இலக்கியமாக
சீவக சிந்தாமணி திகழ்கிறது.
நா. கணேசன்

On Sat, Apr 18, 2020 at 8:51 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சித்திரையில் வருஷப் பிறப்பைத் தமிழர் கொண்டாடினர் என்பதற்கு
அரிய கல்வெட்டுச் சான்று உள்ளது. சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின்
ஆட்சியில் திருவலஞ்சுழி தலத்தில் க்ஷேத்திர பாலகர் திருக்கோயில்
கல்வெட்டு, கி.பி. 998-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ராஜராஜன், ராஜேந்திரன் என்னும் பெருமன்னர்கள்
கல்வெட்டுக்கள் தாம் உள்ளன. ராஜராஜ சோழன் சிவபாதசேகரன் என்றழைக்கப்பட்டது போல,
ராஜேந்திரசோழன் சிவசரணசேகரன் என ழைக்கப்பட்டது தெரிவது இத்தலக்
கல்வெட்டுக்களால் தான். அவர்கள் காலத்தில் எந்தத்
தனிநபர் கல்வெட்டும் இங்கே எழுதப்படவில்லை.

(1) சித்திரை விஷு (2) தட்சிண அயனம் (3) ஐப்பசி விஷு (4) உத்தர அயனம்
என்ற வரிசைக் கிரமத்தில் வருஷத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் எழுதப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் ஆட்சிக் கல்வெட்டு தமிழ்வருஷப் பிறப்பு சித்திரை விஷு என்று காட்டுகிறது.
அதுவே முதல் சங்கிராந்தியாக உள்ளது, திருக்கோவில்களில் பஞ்சாங்கம் படித்தல் என்னும்
நிகழ்ச்சி நடக்கும். இந்த வருஷப் பிறப்பைத் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும்
பல்லவர் காலத்தில் பரப்பியுள்ளனர், சித்திரை விஷு, ஐப்பசி விஷு இரண்டும்
“அரைநாள்” எனச் சங்க இலக்கியம் கூறும் Equinox.
வடசெலவு = உத்தராயணம், தென்செலவு = தட்சிணாயனம்.
இவை இரண்டும் ஞாயிறு திசை திரும்புநாள்கள் (Solstcies).
    சித்திரை விஷு = Vernal Equinox
    தட்சிணாயனம் = Summer Solstice
    ஐப்பசி விஷு = Autumnal Equinox
    உத்தராயணம் = Winter Solstice
https://www.weather.gov/cle/Seasons
https://www.youtube.com/watch?v=SCm5ws87uyY

இக் கல்வெட்டுச் சான்று போலச் சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 21, 2020, 9:14:46 PM4/21/20
to Santhavasantham
பாரதியார், சித்திரை முதல்நாள், ஐப்பசி முதல்நாள் தற்கால அரைநாள் என்னும் Equinox பொருந்தாமையை
ஒரு நூற்றாண்டு முன்னரே விளக்கிக் கட்டுரை எழுதியுள்ளார்:

பஞ்சாங்கம்

  - பாரதியார்
விவேக போதினி பத்திரிகையில் ஸ்ரீமான் ஆர். சாமிநாதய்யர் நமது பஞ்சாங்கத்தில் உள்ள பெரிய பிழையொன்றை எடுத்துக்காட்டியிருக்கிறார். இப்போது தைமாதப் பிறப்பை உத்தராயணத்தின் ஆரம்பமாக நாம் நினைப்பது தவறு; அதுகாட்சி அனுபவத்திற்கு விரோதம். மார்கழி மாதம் எட்டாந்தேதியே உத்தராயணம் தொடங்கிவிட்டது. அன்றைக்கே சூரியன் தனது தெற்கெல்லையிலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டு விட்டான். மேற்படி ஸ்ரீ சாமிநாதய்யர் எழுதுகிறார் -"ஒரு காலத்தில் வஸந்த விஷூவானது கார்த்திகை நக்ஷத்திரத்தில் இருந்ததாகவே வேதத்தினால் தெரிகிறது. அப்போது உத்தராயணம் மாக மாஸத்திற் பிறந்திருக்கும். அதற்கு இரண்டாயிரம் இரண்டாயிரத்தைந் நூறு வருஷங்களுக்கப்பால், அந்த விஷூ அசுவினி நக்ஷத்திரத்தில் மேஷ ராசியின் ஆரம்பத்திலிருந்தது." இங்ஙனம், வஸந்த விஷூவானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்த காலத்தில் உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கிற்று. அதற்கப்பால் கணக்குத் தவறிப்போய் விட்டது. அயன "விஷூக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ, ஸம்வத்ஸரத்தின் பரிமாணத்தை 20 1/2 நிமிஷம் ஜாஸ்தியாகக் கணித்து விட்ட படியால், அயன விஷூ காலங்கள் வருஷம் ஒன்றுக்கு 20 1/2 நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்தில் ஒரு முழு நாள் பிந்திவிடும். மேற்குறித்த நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேகநூற்றாண்டுகளாய் விட்டபடியால், புண்ய காலங்கள் 20,22 நாள் பிந்திப்போய் நியமங்களும் பிரத்தியக்ஷத்துக்கு விரோதமாயிருக்கின்றன.

பருவ நினைப்பு

சித்திரையும் வைகாசியும் இளவேனிற் காலமென்றும், ஆனியும் ஆடியும் முதிர் வேனிற்கால மென்றும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிற் படித்தோம். இது பல நூற்றாண்டுகளின் முன்பு சரியாகஇருந்தது. மேற்கூறப்பட்ட கணக்குத்தவறினால் பருவக் காலத்தையும் தவறாக்கிவிட்டோம். இப்போது, இளவேனிற் காலம் பங்குனி மாதம் எட்டாந் தேதியிற் பிறந்துவிடுகிறது. ஆதலால், நம்மவர் அயன விஷூ காலங்களிற் செய்யும் ஸ்நானம் தானம் முதலிய வைதீகக் கிரியைகளெல்லாம் புண்ணிய காலங்கள் கழிந்து மூன்று வாரங்களுக்கு அப்பால் தவறாக நடந்து வருகின்றன. அயன விஷுக்களை நேராகத்தெரிந்து பஞ்சாங்கத்தில் வருஷப் பிறப்பைச்சரியான நாளில் வைத்தால், பருவக்கணக்கும் நேராகும்.கால நிலையை ஹிந்துக்கள் பலவிதத்திலே மறந்திருக்கிறார்கள். உடனே செம்மைப்படுத்திக்கொள்ளும் திறமையை நமக்குத் தேவர்களும் ரிஷிகளும் அருள் செய்க.

N. Ganesan

unread,
Apr 23, 2020, 8:44:42 AM4/23/20
to Santhavasantham
விஞ்ஞானிகள் ஜெயபாரதன், ருத்ரா இருவரின் இடையே நடக்கும் பௌதிகம் பற்றிய கருத்தாடல்களை ஆவலுடன் படித்துவருகிறேன்.
ஞெள்ளு/நெள்ளு > எள்ளு (சுமேரியாவுக்கு சிந்துவெளி கொடுத்த பயிர். எனவே, சுமேரியனிலும் தமிழின் எள்ளு தான் இருக்கிறது!)
ஞெள்ளு > ஞள்ளி/நள்ளி (நண்டு, பெண் நண்டு. நளவன் - ஆண் நண்டு. வலைஞர்களில் நண்டு பிடிக்கும் ஒரு வகுப்பினருக்கு
நளவர் என்ற பெயர் உண்டு.) இருளில் திரிவதால் ஞெண்டு(நண்டு). இதனை மொழியியலர் Schwa phenomenon என்ப.
ஆரியர்கள் இந்தியா வந்ததும் எப்படி நாள் (=இரவு) மந்திரச்சடங்குகள் மாறின என்பதும். நாள் நட்சத்திரப் பெயர்களும் பற்றிக்
கூறினேன். மூன்று முக்கியமான மாற்றங்கள் பாரசீக ஆரியர் சடங்குகளுக்கும், சிந்துவெளி ஆரியர் சடங்குகளுக்கும் உண்டு.
இது சிந்து நாகரீகத் தாக்கத்தால் நிகழ்ந்தன என்பர் வேதவியல் நிபுணர்கள். கவி உருத்திரனார் எழுதினார்:

கனலிவட்டம் என்னும் அரிய முதற்கலைச்சொல்லை திருத்தக்கதேவர் தந்தது வியக்கவைக்கிறது, கஞலுதல் என்ற சொல்லை ஆராயத் தலைப்பட்டுள்ளேன்.
இப்போதுதான் பொன்னுக்கு சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒரு பெயர் -கநகம் - விளங்குகிறது. நிற்க.
ருத்ரா படித்தது தி (திருப்பூர்) சு. அவினாசிலிங்கம் ஐயா கல்லூரியில்- ராமகிருஷ்ணா வித்தியாலயம். அங்கே, கிணற்றுக்கடவில் இருந்து
சகமாணவர் இருந்தார் என்றார். இவ்வூர் மலையில் காக்கைப்பொன் இருந்ததால் சூரியவெளிச்சத்தில் மிளிரும்.
எனவே, பொன்மலை - கநகமலை எனப் பெயர். பாண்டியனோடு சென்று சிங்களப் படையை அடக்கிய
கோபண்ண மன்றாடிகளுக்குப் பாத்தியப்பட்டது. இக்கோயிலில் உள்ள முருகன் கனகமலையாண்டவர்.
இவன் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். கனகமலை எங்கே இருக்கிறது எனத் தெரியாது
வ. த. சுப்பிரமணியபிள்ளையவர்கள் தேவிகாபுரம் என்று சொல்லிவிட்டார். ஆனால், திருப்புகழ்ச் சுவடிகளில்
கொங்குநாட்டுத் தலங்களின் திருப்புகழ்கள் கோர்த்து வைத்துள்ள இடத்திலே தான் கநகமலைத் திருப்புகழ் உள்ளது,
எனவே, இத் திருப்புகழ் ஓலைச்சுவடிகளில் உள்ள தலவரிசைப்படி ருத்ரா தோழர் ஊர் - கிணற்றுக்கடவு
பொன்மலையாண்டவர் மீதானது என்பது உறுதி. கநகம், கநகமலை, கஞலிவட்டம், .. பற்றி எழுதுகையில்
இவைபற்றி விரிவாகச் சொல்லுவேன்.

இப்போது (கிணற்றுக்கடவு) கநகமலைத் திருப்புகழுக்கு அடுத்ததாக உள்ள ஆறுநாட்டார்மலை என்னும் புகழிமலைத் திருப்புகழ்.
சங்க காலச் சேரர்களின் தலைநகர், வஞ்சி மாநகர் அருகே உள்ள புகழிமலையில் உள்ள சமணர் படுக்கைகள்,
மற்றும் சேர மன்னர்களின் கல்வெட்டுக்கள். https://www.youtube.com/watch?v=JO4mvN6Kcik

புகழூர் அருகில் காவேரி ஆற்றங்கரையின் தென் பகுதியில் உள்ள வேட்டமங்கலம் , புகழியூர் ,தோட்டக்குச்சிறி , கடம்பன்குச்சிறி, வாங்கல் ,நெரூர் ஆகிய ஆறு கிராமங்களுக்கு புகழிமலை முருகன் அருள் புரிந்தைமையால் ஆறு நாட்டார் மலை என்ற சிறப்பினை பெற்றதாக கருதப்படுகிறது.
கரூர் மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குப் புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

திருப்புகழ் 619 மருவுமலர் வாசம்  (புகழிமலை)
தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான

......... பாடல் .........

மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
     வரிவிழியி னாலு ...... மதியாலும்

மலையினிக ரான இளமுலைக ளாலு
     மயல்கள்தரு மாதர் ...... வகையாலும்

கருதுபொரு ளாலு மனைவிமக வான
     கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ

கமலபத வாழ்வு தரமயிலின் மீது
     கருணையுட னேமுன் ...... வரவேணும்

அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
     அமரர்முநி ராசர் ...... தொழுவோனே

அகிலதல மோது நதிமருவு சோலை
     அழகுபெறு போக ...... வளநாடா

பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
     புனல்சுவற வேலை ...... யெறிவோனே

புகலரிய தான தமிழ்முநிவ ரோது
     புகழிமலை மேவு ...... பெருமாளே.

On Wed, Apr 22, 2020 at 7:51 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
விஞ்ஞானி ஜெயபாரதன் எழுதினார்:
<<<
2000 ஆண்டுகட்கு முன்னர் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக்க தமிழ் இலக்கணம் வகுத்த அந்தண மேதை தொல்காப்பியர் நாட்கிழமை, மாதம், வருடம் தெரிய சூரிய நகர்ச்சி, பூமி சுழற்சி, நிலவு சுழற்சியைக் கணக்கெடுத்து நிச்சயம் நாள், கிழமை, மாதம், வருடம் குறிப்பிட்ட நாட்காட்டிச் சுவடி, வீட்டுச் சுவரில் தொங்காமல் இருப்பாரா ?  

அவரது காலத்தில்  வான சாஸ்திரமும்,ஜோதிடமும் இந்தியாவில் பஞ்சாங்க வடிவில் பயன்பாட்டில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.  

அது யூகிக்கும் திருவள்ளுவர் ஆண்டோ, தை திங்கள் முதலன்றோ தமிழாண்டுப் பிறப்பாக கருத இடமில்லை.  தமிழாண்டு பிறப்பு சித்திரை முதல் தேதியாக தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்க இடமிருக்கிறது.

சி. ஜெயபாரதன்
>>>

நிச்சயமாக, சமணர்கள் தொல்காப்பியர், திருவள்ளுவர் (ஸ்ரீவல்லபதேவர்), திருத்தக்க தேவர் சூரியமான பஞ்சாங்கம்
சித்திரை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டது என அறிந்து பரப்பினவர்களில் முக்கியமானவர்கள்.
ப்ராகிருத வழி வரும் பெயர்கள் தமிழில் முந்தியவை. இவை இந்திரனைப் பூனை ஆக்கின சமணர்களின் கொடை.
பின்னாளில் தான் சம்ஸ்கிருதச் சொற்கள் அப்படியே தமிழுக்கு வரலாயின (பார்க்க: கமில் சுவெலெபில் ஆய்வுகள்).
தம் சமயத்தார் தமிழுக்குக் கொணர்ந்த 12 மாதங்களை - ஆடு தலைஆக இருக்கும் ஆடு கோட்பாடு -
இலக்கணம் வகுத்தளித்தவர் தொல்காப்பியர். பலருக்கும் தெரியாது என்பது வெள்ளிடைமலை.
தொல்காப்பியரின் எழுத்தத்திகார, பொருளதிகார சூத்திரங்களைப் பின்னாளில் ஒரு கட்டுரை எழுத எண்ணமிருக்கிறது.
இப்போது, உலக சம்ஸ்கிருத மாநாட்டுக்கு “அளி விடுதூது - Bees in Classical Tamil"  என்ற கட்டுரைக்கு
ஆயத்தமாகிறேன்.

தொல்காப்பிய அறிஞர் செ. வை. சண்முகம் மடலைப் பாருங்கள்.

நா. கணேசன்

On Wed, Apr 22, 2020 at 6:52 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தொல்காப்பியத்தில் மாதப் பெயர்கள், நட்சத்திரப் பெயர்கள்
தொல்காப்பியர்விருது பெற்றவரும், தொல்காப்பியத்தைப் பல பதிற்றாண்டுகளாக
ஆராய்ந்துவரும் முதுபேரறிஞர் செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலை)
2 நிமிஷம் மு அனுப்பின மடல்:
<<<
திங்கள் பெயர்
எங்கேயும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு  உயிர் மயங்கியல்  இரண்டு சூத்திரங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உயிர் மயங்கியலில்  (46)இகர ஈற்று ச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது  திங்கள்முன்னே  இக்கே சாரியை  என்பதால் வைகாசிஆனி,ஆடி,ஆவணி, புரட்டாசி,ஐப்பசி மாசி  மார்கழி பங்கு/னி .. என்பதும் (9)நீங்கள் குறிப்பிட்ட சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை (3) ஆகிய மூன்றும்  அடங்கும் 
நாள்  பெயர் இகர  ஈற்று வரிரையிலும் ( 45) ஐகார  வரிசையிலும் (84) புள்ளி மயங்கியிலில் மகர  ஈற்று வரிசையிலும்(36)  குறிப்பிடப்பட்டுள்ளன.அவையும் இன்று 27 நட்சத்திர பெயர்களின்  ஈற்றெழுத்தொடு ஒத்துப் போகின்றன.  அன்று  அஸ்தம்  அத்தம் என்றும் அனுஷம் அனுடம் என்று வழங்கியிருக்கலாம். பரிபாடலை பார்க்கவும்  அது பற்றி பின்னர் எழுதுகிறேன்
சண்முகம்
>>>

On Wed, Apr 22, 2020 at 6:25 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Zodiac என்னும் சொல்லுக்கு அருமையான கலைச்சொல்லாக,
கனலிவட்டம் என்ற பெயரைத் தமிழில் முதன்முறையாகப் படைத்தளித்தவர்
சீவகசிந்தாமணி உடையார். இசையின் நுட்பமான செய்திகள் பலவும்,
இசைவாணர்கள் ஆக இருந்த மங்கலர்கள் பற்றியனவும், வானியலில்
பல செய்திகளும், சக ஆண்டு க்ரீஷ்மம், வர்ஷம், ஶரத் என முந்நான்கு
மாதங்கள் எனப் பகுக்கும் பழைய முறையில் சித்திரை மாதம்
முதல் நாளை சித்திரைத் திருநாள் சித்திரை விஷு என அறியவைக்கும்
பாடல்களைத் தந்தவர்.

முந்நான்கு என்று வருடத்தின் 12 மாதங்களைப் பகுக்கும் முறை
சங்க இலக்கியத்தில் இருக்கிறது.

நா. கணேசன்


N. Ganesan

unread,
Apr 28, 2020, 7:08:09 AM4/28/20
to சந்தவசந்தம்
பேரா. செ.வை. சண்முகம் (அண்ணாமலை ப.) அவர்களிடம் கேட்டேன். திருவள்ளுவர் தினமாக, பொங்கல் அமைந்துவிட்டது. தொல்காப்பியர் திருநாள் என ஒன்று அரசு அங்கீகரிக்கவேண்டும் ஐயா, தினமணி போன்றவற்றில் கட்டுரை ஒன்று எழுதித்தாருங்கள் என வேண்டினேன். உறுதியாய்ச் செய்யலாம். அதென்ன நான் எழுதுவது? நீங்களும், நானும் சேர்ந்தே எழுதுவோம் என்றார். 3 ஆண்டுகள் முன், தொல்காப்பியர் திருநாள் அவசியத்தை பெரிய அதிகாரிகளுக்கு எழுதிய கட்டுரையை அனுப்பிவைத்தார். உங்கள் கருத்தையும் சேர்த்து அனுப்புங்கள் என்றுள்ளார். செய்ய வேண்டிய செயல். தமிழண்ணல் ஐயா வாழ்ந்த காலத்தில் செய்த பரிந்துரை தினமணியில் அச்சானது. செ. வை. சண்முகம் ஐயா கட்டுரையும் முக்கியமானதாய் வரலாற்றில் இருக்கும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்துதான் நாவலர் சோமசுந்தர பாரதி திருவள்ளுவர் திருநாள் என வைகாசி அனுஷத்தை தைப்பொங்கல் தினமாக மாற்றினார். தொல்காப்பியர் 12 மாதப் பெயர்களுக்கும் சந்தி இலக்கணம் கூறியவர். அதனால், சித்திரை வருஷப் பிறப்புதினம் அவரது திருநாள் ஆகவேண்டும். இதற்கு, பல ஆண்டு முன்னர் (வடக்குவாசல், டெல்லி) எழுதிய கட்டுரையை அனுப்புகிறேன்.

02.09.2011 நாளிட்ட தினமணியில்...

இன்றைய தமிழக அரசும் - இன்றைய சூழலுக்கேற்பச் சித்திரை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுவதை எங்ஙனம் மறுக்கவோ தடுக்கவோ இல்லையோ, அது போலத் தை முதல் நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டையும் அவரவர் விருப்பப்படி கொண்டாட இடம் தந்து, அரசு இரண்டையும் ஆதரிப்பதே முறையாகும்.

- தமிழண்ணல்


யாடு என்பது மேஷ ராஶியின் தமிழாக்கம். யாடு என்பதை அடிக்கோள் நாட்டி சித்திரை முதல்நாளில்
பிறக்கும் வருஷத்தை யாட்டு/யாண்டு என்று சங்ககாலத்தில் அழைக்க ஆரம்பித்தனர். யாட்டை என்னும்
ஆண்டு முக்கியமான ஒரு நாளுக்கு நகர்த்தியும் பயன்படுவது உண்டு. காட்டாக, பருவங்கள் (< பர்வ)
ஆறனையும் கூறுமிடத்தில் மழைக்காலத்தில் தொடங்கினார் தொல்காப்பியர். வேள்- (வேளிர்) என்னும்
வேர்ச்சொல்லால் தோன்றுவது வேளாண்மை எனும் தொழில். வேளாண்மை வேளிரால் ஒரு நிலத்தில்
இருந்து பயிரிடும் தொழில். அதற்குள் அடங்கியதே அக்காலத் தொழில்கள் யாவும். இதனை வேளாண்-
என்று மூவிடங்களில் குறிக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள் காட்டுகின்றன. இல்வாழ்வான்
ஊரில் சிறப்பாக வாழ இருத்தல் இன்றியமையாதது. எனவே, கண்மணி அவர்கள் கூறும்
முல்லைத் திணை இருப்பும் ஒரு காரணமே. பெண்கள் கற்பு இன்றேல், வேளாண் சமூகம்
பாழ்படும் என்பது உண்மை. வேளிர் கொணர்ந்த கொடை/உபகாரம் நெல் வேளாண்மை,
குதிரை, இரும்பு, வானியல் ... எனப் பல. யஜமானன் தன் துணைவியுடன் இருந்து யாகம்
வேட்டல் அவசியம். இதனைப் பாண்டியன் மனைவி விதானத்தில் உள்ள ஓவியத்தைப்
பார்க்கும் காட்சியில் நெடுநல்வாடை சித்திரிக்கிறது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்; சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல்
வானோர்க்கும் ஈண்டு என்றெல்லாம் குறள்கள் பேசுவதும் வேளாண் சிறப்பைக் காட்டும்.

அரசர்கள் பட்டாபிஷேகம் செய்த நாளில் இருந்து ஆண்டுக்கணக்கை இட்டு, கல்வெட்டுக்களில் காண்கிறோம். யாட்டை ஐந்தாவது,
யாண்டு 25-க்கு நாள், ... என்றெல்லாம் கல்வெட்டுக்களில் வரும். குழந்தை தாயின் வயிற்றில் 12 மாதம் இருந்து பிறக்கும்
என்று பழைய நூல்களில் காண்கிறோம். உ-ம்: குறுந்தொகை, பெரியபுராணம். கருத்தரித்த நாளில் தொடங்கும்
ஓர் யாண்டு கர்ப்பம். திருத்தக்கதேவர் சிந்தாமணியில் முந்நான்கு எனப் பிரிப்பதுபோலவே,
இந்தக் கருக்கால (கருப்பவாசம்) ஆண்டைப் பகுத்துள்ளனர் எனத் தெரிகிறது.

முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, -குறுந்தொகை 287

ஆக, ஆண்டு சித்திரை ஒன்றாம் நாள். அரசர் ஆட்சிக் காலம் கணக்கிட
பட்டமேற்ற தினத்திலும், பருவங்கள் தொடங்குதல் மழைக்காலத்
தொடக்கத்திலும், கருப்பவாசம், கருவுற்ற நாளிலிருந்தும் கணிப்பர்.

விட்டிசைத்தல் பற்றிக் கற்பிக்க நல்ல உதாரணமாக ஒரு வெண்பாத் தந்துள்ளார் கவி காளமேகம்.
இதில் 12 மாதங்களையும் முந்நான்கு என்று பகுக்கும் முறையை ஆண்டுள்ளார்.

முந்நான்கில் ஒன்றுடையான் முந்நான்கி லொன்றெடுத்து
முந்நான்கி லொன்றின்மேல் மோதினான்-முந்நான்கில்
ஒன்றரிந்தா லாகுமோ ஒஓ மடமயிலே
அன்றணைந்தான் வாராவிட் டால்!

முந்நான்கு = 12 ராசி.
(1) மகரம் - மகரகேதனன் - மன்மதன்
(2) தனுசு
(3) கன்னி
(4) மேஷம் (ஆடு).
On Thu, Apr 23, 2020 at 9:38 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
தொல்காப்பியர் தமிழ் வருஷத்தில் உள்ள மாதங்களுக்கும்,
திங்கள்வட்டத்தின் (27 Lunar Mansions. Cf. கனலிவட்டம் 12 Solar Mansions)
 நட்சத்திரங்களுக்கும் சந்திவிதி கூறினார். எல்லா மாதங்களும், நக்ஷத்ரங்களும்
முடியும்வகையை நன்கு ஆய்ந்து சூத்திரங்கள் செய்துள்ளார் என வியக்காமல் இருக்க இயலாது.


அவர் ஆட்டின் பழைய பெயர் யாடு என்றும் கூறினார்:
யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே
இளம்பூரணம் : (இ - ள்) : என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட
 ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு.

யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை, யாளி, யார், யாங்கு, யாக்கை ...
இப் பழம்பெயர்களில் சொன்முதல் யகர அட்சரம் நீங்கிவிட்டது.
திருவள்ளுவர் யாண்டு (< யாடு) தைப்பொங்கல். திருவள்ளுவர் திருநாள்!
அது போல், தொல்காப்பியர் திருநாள் சித்திரை வருஷப் பிறப்பு
வேண்டும் என்று கேட்டவர் நாடு நன்கறிந்த தமிழ்ப் பேரா. தமிழண்ணல்.

ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71)
யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின் - பிசிராந்தியார்

http://www.languageinindia.com/july2019/profrajendrantamilnounscontentscomplete.pdf
“உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது” – திருவாரூர்க் கல்வெட்டு.
“இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை” – உடையார்குடிக் கல்வெட்டு ...
“வருடையைப் படிமகன் வாய்ப்ப’ – பரிபாடல் 11:5 (வருடை – மேழம்; படிமகன் – செவ்வாய்)

2008-ல் தை 1 வருஷப் பிறப்பு என அந்நாள் முதல்வர் மு.க. மாற்றியபோது, பேரா. தமிழண்ணல் எழுதிய கட்டுரை.
யாடு - யாட்டுக் கோட்பாடு தந்த சேரலாதன் (பதிற்றுப்பத்து) - பிறப்பிப்பது யாட்டு, யாண்டு.
http://kilvaanam.blogspot.com/2008/01/blog-post_3433.html
http://viduthalaidaily.blogspot.com/2011/09/blog-post_8010.html
”இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்” யாடு என்பதில் இருந்து தான் யாட்டு, யாண்டு என்ற சங்க இலக்கியச் சொற்கள் பிறக்கின்றன
எனத் தெளிவாக விளக்கும் தமிழண்ணல், யாடு என்பது மேட இராசி என்கிறார் (2008).

    சித்திரை விஷுத் திருவிழா பல கோவில்களில் வருஷப் பிறப்பாகக்
    கொண்டாடப்பட்டிருப்பது, ஸ்ரீராஜராஜ தேவரின் கி.பி. 998-ம் ஆண்டின்
    திருவலஞ்சுழிக் கல்வெட்டால் வெளிச்சமாகிறது. சீவக சிந்தாமணியிலும்
    இந்தச் செய்தியைக் காணலாம். ஒவ்வொரு மாதமும், நாளும் ஏதாவது
    ஓர் பண்டிகை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், சித்திரையில் பார்த்தால்
    சித்திரை முதல்நாளுக்கான முக்கியத்துவம் பிற நாள்களுக்கு இல்லை.
    சித்திரைத் திருநாள் என்று எல்லா தொலைக்காட்சிகளிலும்,
    கச்சேரிகள், பட்டிமண்டபங்கள் தமிழ் வருடப் பிறப்பு நாளில் நடக்கின்றன.
    மத்யமர்கள் வற்கத்தில் தமிழ்க்கல்வி தாழ்ந்துவரும் வேளையில்
    “தமிழின் உயிர் தொல்காப்பியம்; தமிழனின் உயிர் திருக்குறள்” என்று உலகெங்கும்
    உணர்வு ஊட்டி, தமிழை ஆழமாகக் கற்க, ஆராய அடுத்த இளந்தமிழ்த்
    தலைமுறையை ஊக்குவிக்கும் கடமை நமக்கெல்லாம் நிறைய இருக்கிறது.
    இதற்கு, தொல்காப்பியர் இலக்கணம் தந்த மாதங்கள் கொண்ட
    வருடப் பிறப்பு நாளில், சித்திரை முதல் நாள், தொல்காப்பியர் திருநாள்
    என அரசாணை (G.O)  வெளியிட தமிழக முதல்வர்கள் முன்வரவேண்டும்.
    அவ்வாறு செய்தல், தமிழண்ணல் அவர்களின் நினைவைப் போற்றுவதாக
    அமையும். இலக்கியத்தில் முதன்மைபெற்ற திருக்குறள், திருவள்ளுவர் திருநாள்,
    திருவள்ளுவர் தொடர்ஆண்டு என தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் - அரசும்,
    மக்களும். வள்ளுவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் தொல்காப்பியர்.
    அவரது திருநாள் என, சித்திரை முதல்நாளை அமைக்க அரசு முன்வர வேண்டும்.
    வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் திருநாளை மறைமலை அடிகள்
    கொண்டாடினார். அமாவசை, பௌர்ணமி, நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது
    பெருவாரியான தமிழர்க்கு இன்று இல்லாமல் போனது. அவற்றை எல்லாம்
    விட்டு, தமிழர்களிடையே புகழ்பெற்று விளங்கும் சித்திரைத் திருவிழா
    - இதுதான் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவில் கொடுத்த ஆண்டுப் பிறப்பும் கூட -
    தொல்காப்பியர் திருநாள் என ஒரு ஜி.ஓ பெறுதற்கு, தமிழண்ணல் போன்ற,
    இன்றைய தமிழறிஞர்கள் முயன்றால் வெற்றி கிட்டும்.

    நா. கணேசன்






N. Ganesan

unread,
Oct 11, 2024, 9:38:56 AM10/11/24
to Santhavasantham
சித்திரை (மேழ இராசி) - நச்சினார்க்கினியர்- தமிழ் ஆண்டுப் பிறப்பு
--------------------------------

தமிழ் வருடப் பிறப்பு சித்திரையில் என்பதை இராசிச் சக்கரத்தை வர்ணிக்கும் போதெல்லாம் தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.  உ-ம்:  நெடுநல்வாடை. இதனை நச்சினார்க்கினியர் விளக்குகிறார்:
"160 - 61. [திண்ணிலை மருப்பி னாடுதலை யாக, விண்ணூர்பு திரி தரும் :]

விண் - ஆகாயத்திடத்தே,
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக ஊர்பு திரிதரும் - திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசி முதலாக ஏனை இராசிகளிற் சென்று திரியும்,"
https://www.tamilvu.org/slet/l1100/l1100pag.jsp?book_id=20&pno=462

12 தமிழ் மாதங்களையும், சித்திரை முதலாய் பங்குனி ஈறாகத் திருத்தக்க தேவர் வரிசைப்படுத்திப் பாடியுள்ளார். சித்திரையை முதலாக வைத்து நச்சினார்க்கினியர் உரை உள்ளது. முன்னர் எழுதிய பதிவு.

கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்)
https://groups.google.com/g/santhavasantham/c/-E6P993IAz8/m/vvABNysJBQAJ
மேலும், ஆராய்ச்சி:
https://groups.google.com/g/santhavasantham/search?q=கனலிவட்டம்

இராசிவட்டம் அல்லது கனலிவட்டம் (இராசிவட்டத்தின் தமிழ்ப்பெயர்) தொடங்குவது சித்திரையிலே தான். உலகம் முழுதும் உள்ள கனலிவட்டம் வரலாறு நெடியது.

--------------

ஆடு கோட்பாடு - 27 நக்ஷத்திரக் கணிப்பு வேத காலத்திலேயே, சிந்து நாகரீகத் தொடர்ச்சியாக வந்துவிட்டது.
முன்பெல்லாம், நக்ஷத்ரங்கள் கோட்பாடு சீனாவில் இருந்து வந்தது என எழுதிக்கொண்டிருந்தனர். இப்போது, இவை சிந்து நாகரிகத்தில் தமிழ்/த்ராவிட மொழி பேசினோர் கண்டது என்று நிறுவிவிட்டனர். இன்றும் தமிழ் வருஷத்தின் மாதப் பெயர்கள் நட்சத்திரத்தால் வழங்குவது இதனாலே தான். தொல்காப்பியர் தமிழ் மாதப் பெயர்களின் இலக்கணம் கூறியுள்ளார். பின்னர் 1000+ ஆண்டு கழிந்து, கனலிவட்டம் என்னும் 12 ராசிகள் வருகின்றன. மேஷ ராசியை முதலாகக் கொண்ட பஞ்சாங்கக் கணிதமுறை பரவலாகக் காரணமாகச் சேரமன்னர்கள் விளங்கினர். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என்பது இதனால் சேர மன்னன் அடைந்த புகழ்ப்பெயர்.  மேஷ ராசியும், சித்திரை நக்ஷத்திரம் பௌர்ணமியில் வருவதுமாக, அடிப்படையில் சூர்யமானம், ஓரளவு சந்திரமானத்தையும் உள்ளடக்கி தமிழ்ப் பஞ்சாங்க வானியல் ஜோதிஷம் உருவாகியுள்ளது. சேரர்கள் செய்ததால், அவர்களில் பிரசித்தி பெற்றவனுக்கு "ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்" என்ற விருதுப்பெயரைச் சங்க இலக்கியம் கூறுகிறது. சேர ராஜாக்கள், வடபுலம், தென்புலம் பண்பாட்டை இணைத்தவர்களில் முதன்மையானவர்கள். அவர்கள் நாட்டிலே தான் பிராமி எழுத்து ஏராளமான பானை ஓடுகளில் கிடைக்கின்றன (உ-ம்: கொடுமணல், பொருந்தல், ...). தமிழில் சந்தப் பாடல்களை முதலில் உருவாக்கியவர் இளங்கோ அடிகள் ஆவார். கந்துக வரி. தமிழ்ப் பஞ்சாங்கம் போலவே, சந்தப் பாடலின் தந்தை இளங்கோ அடிகள், தமிழ் யாப்பு (அசை, தளை, மா,விளம்,காய் வாய்பாடு) என்னும் அடுக்கின் மீது, வடமொழி யாப்பின் இலகு, குரு அலகீடும் சேர்த்து அமைத்துத் தந்துள்ளார். சந்த விருத்தங்கள் பின்னர் பக்திக்கால இலக்கியம், காப்பியங்களில் வளர்ந்து, திருப்புகழாகப் பரிமளித்தது.

 பருவங்கள் வேறு. வட இந்தியாவில் பருவங்கள் தொடக்கம் சம்ஸ்கிருத நூல்கள் வகுத்தன. அவை தென்னிந்தியாவுக்குப் பொருந்துவதில்லை. ஆதலால், வட இந்தியாவில் பருவங்கள் பட்டியலைத் தமிழகத்திற்கு தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றினர். இதனை நிகண்டுகள், தொல்காப்பியம் பறைசாற்றுகின்றன. ஆனால், இப் பருவப் பட்டியலுக்கும்  ஃசோடியாக் என்னும்  இராசிவட்டம், வருஷப் பிறப்புக்கு தொடர்பு இல்லை. பருவங்கள் பட்டியல் வழியாக,  புதுவருஷம் எனத் தமிழ் நூல்கள், கல்வெட்டுகள்  எங்கேயும் கூறுவதில்லை.


நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages