--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/9a52bcca-524a-40f0-879b-aa7de0e61626%40googlegroups.com.
தொல்காப்பியத்தில் மாதப் பெயர்கள், நட்சத்திரப் பெயர்கள்தொல்காப்பியர்விருது பெற்றவரும், தொல்காப்பியத்தைப் பல பதிற்றாண்டுகளாகஆராய்ந்துவரும் முதுபேரறிஞர் செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலை)2 நிமிஷம் மு அனுப்பின மடல்:<<<திங்கள் பெயர்எங்கேயும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு உயிர் மயங்கியல் இரண்டு சூத்திரங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.உயிர் மயங்கியலில் (46)இகர ஈற்று ச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது திங்கள்முன்னே இக்கே சாரியை என்பதால் வைகாசிஆனி,ஆடி,ஆவணி, புரட்டாசி,ஐப்பசி மாசி மார்கழி பங்கு/னி .. என்பதும் (9)நீங்கள் குறிப்பிட்ட சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை (3) ஆகிய மூன்றும் அடங்கும்நாள் பெயர் இகர ஈற்று வரிரையிலும் ( 45) ஐகார வரிசையிலும் (84) புள்ளி மயங்கியிலில் மகர ஈற்று வரிசையிலும்(36) குறிப்பிடப்பட்டுள்ளன.அவையும் இன்று 27 நட்சத்திர பெயர்களின் ஈற்றெழுத்தொடு ஒத்துப் போகின்றன. அன்று அஸ்தம் அத்தம் என்றும் அனுஷம் அனுடம் என்று வழங்கியிருக்கலாம். பரிபாடலை பார்க்கவும் அது பற்றி பின்னர் எழுதுகிறேன்சண்முகம்>>>On Wed, Apr 22, 2020 at 6:25 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:Zodiac என்னும் சொல்லுக்கு அருமையான கலைச்சொல்லாக,
கனலிவட்டம் என்ற பெயரைத் தமிழில் முதன்முறையாகப் படைத்தளித்தவர்
சீவகசிந்தாமணி உடையார். இசையின் நுட்பமான செய்திகள் பலவும்,
இசைவாணர்கள் ஆக இருந்த மங்கலர்கள் பற்றியனவும், வானியலில்
பல செய்திகளும், சக ஆண்டு க்ரீஷ்மம், வர்ஷம், ஶரத் என முந்நான்கு
மாதங்கள் எனப் பகுக்கும் பழைய முறையில் சித்திரை மாதம்
முதல் நாளை சித்திரைத் திருநாள் சித்திரை விஷு என அறியவைக்கும்
பாடல்களைத் தந்தவர்.
முந்நான்கு என்று வருடத்தின் 12 மாதங்களைப் பகுக்கும் முறை
சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
நா. கணேசன்
///தம் சமயத்தார் தமிழுக்குக் கொணர்ந்த 12 மாதங்களை - ஆடு தலைஆக இருக்கும் ஆடு கோட்பாடு -இலக்கணம் வகுத்தளித்தவர் தொல்காப்பியர். பலருக்கும் தெரியாது என்பது வெள்ளிடைமலை////// தண்டாரணிய முனி அகஸ்தியனிடம் ஆசீர்வாதம்
பெற்று, பஞ்சாங்கத்தை தமிழ்நாட்டுக்குக் கொணர்ந்த தமிழ்வேள், சேரமன்னன் ”ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்” என்றும், வானியல் விஞ்ஞானத்தை அறிமுகம் செய்வதால்
வானவரம்பன் என்று புகழப்பெறுவதும் பதிற்றுப்பத்து பதிகம் காட்டுகிறது.//////சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,
மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்
பார்த்தோம். ///
<<<ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது>>>
இதன் மூலம் ....பதிற்றுப்பத்து சொல்லும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் காலம் எதுவென்று சொல்கிறீர்கள் முனைவர் கணேசன்?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/84801b83-5548-44aa-ac94-67cdb118a255%40googlegroups.com.
02.09.2011 நாளிட்ட தினமணியில்...
இன்றைய தமிழக அரசும் - இன்றைய சூழலுக்கேற்பச் சித்திரை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுவதை எங்ஙனம் மறுக்கவோ தடுக்கவோ இல்லையோ, அது போலத் தை முதல் நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டையும் அவரவர் விருப்பப்படி கொண்டாட இடம் தந்து, அரசு இரண்டையும் ஆதரிப்பதே முறையாகும்.
- தமிழண்ணல்