மொகுமொகு- (மொக்குதல் - வினை) > மொகளெ/மொகரெ > மகர-
------------------------------------------------
mokku-tal is a Tamil/Dravidian verb formed from the ideophone, mokumoku-. Ideophones are called "anukaraNa Ocaiccol" by
medieval grammarians in Tamil books.
மொகுமொகு- (மொக்குதல் - வினை) > மொகளெ/மொகரெ > மகர-
Cf, பொலிபொலி- பொலி > பலி > bali. பொலிசை/பலிசை (வட்டி) ....
கப்புதல் - கொள்ளுமளவு வாயிலிட்டு மொக்குதல்
மொக்குதல் - பெருமளவு சாப்பிடுதல் (நாஞ்சில் நாட்டு வழக்குச்சொல் அகராதி).
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp3luQy/page/133/mode/2up?view=theaterதிருவாசகத்தில் மாணிக்கவாசகர்,
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=8&Song_idField=8102மொக்கணி - குதிரை வாயில் கொள்ளுக் கட்டும் பை. அருணகிரிநாதரும், ``சர்க்கரை மொக்கிய (கந்தர் அலங்காரம் - காப்புச் செய்யுள்). என, வாய் நிறைய இட்டுக் குதட்டுதலை, `மொக்குதல்` என்றார்.
மொகளெ > மொகலெ > மொசலெ (பல த்ராவிட மொழிகளில்) > முதலை.
http://www.tamilvu.org/library/ldttam/html/ldttamps.htm (பக். 918)
மொங்கன் காண்க : மொக்கன் .
மொங்கான் இடிகட்டை ; பெருத்துக் கனத்த பொருள் .
மொக்கன் தடித்தவர் ; தடித்தது .
மொக்கட்டை முகம் ; மழுக்கமானது .
மொக்குதல் ஒருசேர விழுங்கியுண்ணுதல் ; அடித்தல் .
MTL:
மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ- , v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
மொக்கு¹-தல் mokku- , 5 v. tr. [T. mekku, K. mukku.] 1. See மொக்கித்தின்-. முக் கனி சர்க்கரை மொக்கிய (திருப்பு. 263). 2. To beat soundly; அடித்தல். (பிங்.)
மொகளெ > மொகலெ > மொசலெ (பல த்ராவிட மொழிகளில்) > முதலை.
மொகலெ > மொகரெ > மகர-
வட இந்திய மொழிகளில் சொன்முதல் ஒகரம் அகரமாதல்:
(1) மொகளெ/மொகரெ/மொகர > மகர-
(2) பொலி > பலி. bali என இத் தமிழ்ச்சொல் ஸம்ஸ்கிருதத்தில். பொலிசை > பலிசை ‘வட்டி’ - இரு சொல்லும் பல கல்வெட்டில்.
(3) கொங்கு (வளைதல்) > கங்கு- > சங்கு (கொல் > சொல், வேங்கடராஜுலு ரெட்டியார்)
(4) கொக்கு/கொங்கு > கங்கம் (வடமொழியில் ஒ இல்லை ஆதலான்) {{ Cf. கொக்கு/கொங்கு, அணக்கு/அணங்கு, .... இடக்கர்/இடங்கர் < விடங்கர்/விடக்கர். கங்கைமுதலை }}
(5) கொங்கு ராஜாக்கள் > கங்க ராஜாக்கள். வட கொங்கில், கர்நாடகம் ஆகிவிட்ட பகுதிகள்: கங்க ராஜ்யம். கொங்கூரில் (ஸ்கந்தபுரம்) பட்டாபிஷேகம்.
(6) மொத்து- > மத்து. தயிர் கடையும் மத்து. மொத்து- என்ற வினைச்சொல்லின்
இன்னொரு வடிவம் மத்து- மத்திகை “சாட்டை வார், whip, கசை”
என்ற பொருளில் பல இடங்களில் சங்க இலக்கியத்தில் உண்டு.
(7) மொத்தளம் > மத்தளம்
(8) கொறி > கறி
(9) இரும்பொறை > இரும்பறை (ஓதிமலை அருகே ஊர்)
(10) பூப்பொலி > பூப்பலி (சிலம்பு, .... இன்றும் கேரளத்தில் பூப்பொலி உண்டு)
(11) அஞ்சொலாள் > அஞ்சலாள் (> அவயாம்பாள், மாயூரத்தில்)
(12) தண்பொருநை > தம்பொன்ன > தம்பன்னி/தம்பபன்னி
(13) கொல்- > கல்- கொல்லெனச் சிரித்தாள். கொல்-/கல்- ”கல்லென் ஒசை” (சொல் என்ற வார்த்தை < கொல் என்னும் ஒலிக்குறிப்பால்).
(14) பொத்தல் > பத்தல். யாழின் பத்தர். ‘குளப்பு வழி யன்ன கவடுபடு பத்தல்’ (பொருந. 4).
பத்தல் pattal, n. 1. A wooden bucket; மரத்தாலான நீரிறைக்குங் கருவி. தீம்பிழி யெந்திரம் பத்தல் வருந்த (பதிற்றுப். 19, 23).
(15) பொத்து- (பொருத்து) > பத்து : ’விளக்குத் திரியைத் தீக்குச்சியால் பத்தி வை’.
(16) கொம்பு > கம்பு
இவை போல் இன்னும் பல இருக்கும். சுவர்/மரம் தழுவுதலால், புல்லி/பொல்லி > பல்லி. இது -உ > -அ காட்டு.
மொகர-/மகர- : இந்திய வானியல், சமயங்களில் (4700 ஆண்டுகளாய்):
(a) Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html(b) N. Ganesan, Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.
https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up(c) N. Ganesan, A Dravidian Etymology for Makara – Crocodile, Prof. V. I. Subramanian Commemoration Volume, Int. School of Dravidian Linguistics, 2011.
https://archive.org/details/MakaraADravidianEtymology2011On Pongal Day, 2016 I wrote
https://groups.google.com/g/santhavasantham/c/uy5DfwpFNI0/m/40MJ1oSaEAAJ
This is a brief note on the difference between Tamil word, pok- vs. mok-. DEDR 4458, as noted in the first mail starting this thread, mokkaṇi = feed-bag, nose-bag lists it along with pokkaṇam but these two words are used by Tamil Nadu agriculturists in different ways and their origins are quite different. DEDR 4452 and DEDR 4458 are related and tied together, whereas mokkaNi has to do with the verb, mokku-.
பொக்கை, பொக்கணம், பொக்கசம் போன்ற சொற்கள் துளை, ஓட்டை என்பதைக் குறிக்கும் சொற்கள். பொக்கசம் பொக்கணத்தில் போட்டு வைக்கப்படும் காசு, மணிகள், இத் தூய தமிழ்சொல்லை டில்லி ஆகாசவாணி “ஷென்னை” என்பதுபோல, பொக்கசம் > பொக்கிஷம் என்றாக்கி எழுதுகிறார்கள்! பழைய இலக்கியங்களிலும், ஆவணங்களிலும் பொக்கசம் என்றுதான் உள்ளது. பல்லி தெலுங்கில் balli என உச்சரிப்பர், பொலி/பலி bali ஆகும். அதுபோல், பொக்கசம் கன்னடம்-தெலுங்கில் bokkasa(mu). Voicing of word-initial p- as b- is seen in Dravidian words such as palli, pali, pokkacam in Andhra, Sanskrit, and Carnatic.
மொகுமொகு- , மொக்குதல், மொக்கணி:
வாய் நிறைய இட்டு, அவசர அவசரமாய் விழுங்குதலை மொகுமொகு எனத் தின்னுதல் என்கிறோம். இந்த மொகுமொகு என்னும் ஒலிக்குறிப்புச் சொல்லில் (ideograph) உருவாகும் வினைச்சொல்: மொக்குதல்.
கப்புகப்பு எனத் தின்னல் = மொக்மொக் எனத் தின்னல். கப்புதல் = மொக்குதல்.
இரண்டு வினைச்சொற்களையும் ஒரே பொருளில் தமிழ்க்கடவுள் முருகனின் திருப்புகழில் காணலாம்.
கப்புதல் - மொக்கி விரைந்துஉட்கொள்ளுதல்
மொக்குதல் - வாய் நிறையக்கொண்டு மெல்லுதல்.
"கைத்தல நிறைகனி யப்பமொடவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணி." (திருப்பு.விநாயக.1)
மொக்கு¹-தல் mokku-
, 5 v. tr. [T. mekku, K. mukku.] 1. See மொக்கித்தின்-. முக்கனி சர்க்கரை மொக்கிய (திருப்பு. 263).
மொக்கித்தின்(னு)-தல் mokki-t-tiṉ- , v. tr. < மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழுங்கி யுண்ணுதல். (W.)
மொக்கணி mokkaṇi
, n. prob. மொக்கு- + அணி. [K. bakkaṇa.] 1. Feed-bag, nose-bag; குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை. மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 2. A kind of bridle for mules, etc.; கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.)
இலக்கியங்கள்:
(1)
கூந்தல விழ்த்துமு டித்துமி னுக்கிகள்
பாய்ந்தவி ழிக்குமை யிட்டுமி ரட்டிகள்
[...]
காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே!
உரை:
(உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்
வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர்
வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம்
போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான
விநாயகருக்குத் தம்பியே,
(2) வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே (திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள் ... திருப்புகழ் (திருத்தணிகை)).
மொக்கு- = (விரைவாக) உண்ணு-
(3) கந்தரலங்காரம் (காப்பு)
அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு
வடவருகில் சென்று கண்டு கொண்டேன்: வருவார் தலையில்
தட பட எனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கைக்
கட தட கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே!
(4) கும்பேசர் குறவஞ்சி:
அக்கர வம்புனை முக்கணர் குடந்தை
ஆதி கும்பநாத ரன்ன வயலிலே
சிக்கிய பக்கியை மொக்கிடத் தாரேன்
(5) திருமாலிருஞ் சோலைமலை
அழகர் பிள்ளைத் தமிழ்
ஆசிரியர்: கவி காளருத்திரர் (?)
செக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்
செற்றிய தழலெனவே
திக்குள சுறவகை நெற்குலை சடைபடு
செய்த்தலை விழவருசேல்
மொக்கிய குருகெழ வுட்பொதி சினைசிறை
முத்திட வளைதவழா
முக்கெறி குரல்தனை விட்டுயிர் நிகர்பெடை
முற்பயில் வெளியெனவால்
அறிஞர் அண்ணா அடிக்கடி சொன்ன கதை இது:
”ஒரு ஊரில் கந்தசாமி என்பவர் முந்தைய இரவு ஒரு பார்ட்டியில் வர்ஜா வர்ஜமில்லாமல் மொக்கிய மொக்கினால் அடுத்த நாள் காலை”
மொகுமொகு என்று உண்ணுதல் = மொங்குதல் - இதனால் மொகர-/மொங்கர் என தொல்திராவிட மொழியிலே
முதலைக்குப் பெயர் அளித்தனர். ஸம்ஸ்கிருதம் போன்ற வடமொழிகளில் குறில் ஒகரம் இல்லையாதலால்,
மொகர- > மகரம் என்றானது. உகிருதல் > உசிரு > உயிர் போல, மொகர > மொசலெ (கன்னடம், தெலுங்கில் முதலை).
மொசலெ மொதலெ முதலை என இன்றைய தமிழ். The Proto-Dravidian term for crocodiles
is Mokara. And, it mutates to mocale in Kannada and Telugu, and appears as mutalai in Tamil.
Indus civilization religion: மகர விடங்கர் - கொற்றி தம்பதி.
மகரம் என்ற த்ராவிடச் சொல்லாய்வு, தமிழ்ப் பல்கலை (தஞ்சை), திராவிடப் பல்கலை (ஆந்திரா) நிறுவிய துணைவேந்தர்
வ. ஐ. சுப்பிரமணியனார் நினைவில் ஆய்வுக்கட்டுரைகள் மலர், Int. School of Dravidian Linguistics, Trivandrum, Kerala.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் அறிஞர்கள் நடத்திய மாநாட்டின்கண் வெளியிடப்பெற்றது.
A Dravidian Etymology for Makara - Crocodile
மொகுமொகு என்னும் ஒலிக்குறிப்புச் சொல், அதனால் பிறக்கும் மொக்குதல் என்னும் வினை.
மொகரம்/மொங்கர் = முதலை. இன்றும் பாகிஸ்தானில் மொங்கர் என்று முதலையை அழைத்து வழிபடுகின்றனர்.
கொங்குநாட்டில் மொக்கணீச்சுரம் சிறப்பான கோவில். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இங்கே வந்து வழிபட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.
கீர்த்தித் திருவகவல்:
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
கொங்குமண்டல சதகத்தின் பாடல்:
மொக்கணீசுரர்
24. ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சி கற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப் புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே.
இது ஆறை நாட்டுள்ள ஓர் ஊர். அவிநாசியினின்று சத்திய மங்கலம்
போகும் பாதையில் ஐந்தாவது மயிலிலுள்ள சேவூரினின்று வடமேற்கே
செல்லும் கொடி வழியில் சுமார் மூன்று மயில் தூரத்தே அழிந்த
ஆலயமாக இருக்கிறது ஊர் அழிந்து போயிற்று. கோட்டூர்ப்பள்ளம்
என்ற பெயர் மாத்திரம் சொல்ல இருக்கிறது. செட்டியார் நீராடிய
ஓடை தாழை யூற்று என்கிறார்கள். இவ்வாலயத்தின் உத்ஸவ மூர்த்திகள் சேவூர்
வாலீசப் பெருமான் கோயிலில் சுமார் முந்நூறு வருஷங்களின் முன்
சேர்க்கப்பட்டதாம். இச்சரிதத்தைச் சுற்றுமுள்ள குடியானவர்களெல்லாரும்
கூறுகிறார்கள். (திருச்செங்கோடு அட்டாவதானி முத்துசாமிக்கோனார், 1923,
கார்மேகக் கவிஞர் பாடிய கொங்குமண்டலசதகம்).
(மேற்)
மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்
(திருவாசகம் - கீர்த்தித் திருவகவல்)
பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி
எழிறரு மட்டித் திட்டே மிதவிய புல்லு மிட்டேங்
கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு
முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கணி முட்டக் கட்டி
(வேம்பத்தூர் திருவிளையாடல்)
Summary: There is difference between Tamil word, pok- vs. mok-. DEDR 4458, as noted in the first mail starting this thread, mokkaṇi = feed-bag, nose-bag lists it along with pokkaṇam but these two words are used by Tamil Nadu agriculturists in different ways and their origins are quite different. DEDR 4452 and DEDR 4458 are related and tied together, whereas mokkaNi has to do with the verb, mokku- and is not to be confused with other words starting with pok- in DEDR 4452 & DEDR 4458.
Happy Pongal! Tiruvalluvar New Year Greetings!
நா. கணேசன்