பேரா. கிருங்கை சேதுபதி, புதுவை எழுதினார்:
> உண்மையை ஏற்பதே கவிஞருக்கழகு!
ஆம், ஐயா. பாரதிதாசன் உண்மையை உணர்ந்து செய்த செயல். அவரும், எங்கள் உறவினர் கோவை அய்யாமுத்தும் நெருக்கமானவர்கள்."வாடா, போடா" என்று அழைத்துக்கொள்ளும் நெருக்கம். மறைமலை அடிகள் தொடர்புக்கு முன் பள்ளி ஆசிரியர் புரட்சிக் கவிஞரிடம் தனித்தமிழ் தாக்கம் இருக்கவில்லை. குழைந்தைகளுக்கு அவர் வைத்த பெயர்களைப் பாருங்கள். எல்லாம் வடமொழி. மகன் கோபதி திருமணத்தைக் கோவை அய்யாமுத்து தலைமையில் நடாத்தினார். பொள்ளாச்சியில் கலந்துகொண்ட கூட்டம் தான் பாரதிதாசனின் கடைசிக் கூட்டம். இந்தக் கூட்டம், ஏற்பாடு பற்றிச் கவிஞர் சிற்பி நேரில் விளக்கமாகச் சொல்லயுள்ளார். கட்டுரை அவரிடம் பெற்றுத் திருச்செங்கோடு முருகு சுந்தரம் வெளியிட்டுள்ளார். ஈரோடு தமிழன்பன் நெருக்கமாகக் கவிஞரிடம் பழகியவர். கோவை அய்யாமுத்து, சிற்பி, தமிழன்பன் , வேள்நம்பி, பட்டணம் பெரியசாமி, மு. இளங்கோவன், ய. மணிகண்டன், ... நேரில் கேட்டுப் புரட்சிக் கவிஞர் வாழ்க்கையில் சில ஏடுகளை அறிந்தேன். பாரதிக்கு வரிசையாக தமிழ்ப் புலவர்கள் பாடுபட்டு, காலவரிசையில் தொகுத்ததுபோல, பாரதி தாசனுக்கும் செய்யத் தமிழ்ப் புலவோர் முன்வரவேண்டும். பாரதிக்குப் பாடுபட்ட (பரமத்தி வேலூர்) சீனி. விசுவநாதனுக்கு இவ்வாண்டு பத்மஶ்ரீ. தமிழன்பன் கவிதை:
https://nganesan.blogspot.com/2021/02/anaikkava-enra-amerikka-1996-tamilanban.htmlhttps://nganesan.blogspot.com/2022/06/purananuru-thaay-austin-library.htmlபாரம்பரியமாக, இசை அறிவு பெற்ற முன்னோர்களைக் கொண்ட பாரதிதாசன், தொடக்க காலத்தில் பக்தி, பஜனைப் பாட்டுகள் செய்து வந்தார். எ-டு: திருப்புகழ், 1926.
https://nganesan.blogspot.com/2009/08/manakkula-ganapati.htmlஇக் காலகட்டத்தில் எல்லாம் சித்திரை 1 தமிழ் வருடப் பிறப்பு எனக் கொண்டிருந்தார். பின்னர் 1954 வாக்கில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு என இரு பாடல்கள் செய்தார். பின்னர் தமிழ்ப் புலவர்கள் அறிவுறூஉவாலும், சங்க நூல்கள், சிந்தாமணி போன்றவற்றை ஆழ்ந்து கற்றார். குமரகுருபரர் வரலாற்றில் மூழ்கினார். அதனால், தமிழர்களின் வழமையான சித்திரை தமிழ் வருடத்தின் முதல் மாதம் என்ற கோட்பாட்டுக்குத் திரும்பினார். இது 1958-ல் அவர் பாடிய செய்யுளால் வெளிச்சம் ஆகிறது.
தமிழ் நாட்டு அரசாங்கம் நிதி ஒதுக்கி, பாரதிதாசன் எழுத்துக்களைத் தொகுக்கவேண்டும். பெருநிதி ஆண்டுதோறும் அளிக்க இதற்கு அரசாங்கம் தயங்காது. புரட்சிக் கவிஞர் எழுத்து காலவரிசையில் தொகுக்கப்படும்போது, கருத்து மாற்றங்களை ஆராயவியலும். மறைமலை அடிகள் மறையும் வரை திருவள்ளுவர் தினம் என வைகாசி அனுஷ நக்ஷத்திரத்தைக் கொண்டாடினார். நாவலர் சோமசுந்தர பாரதி தைப் பொங்கலுக்கு திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் ஆக்கினார். மாற்றங்கள் இயற்கையே. பாரதியும் சில கொள்கைகளில் மாறினார் (உ-ம்: காந்தி வந்தபிறகு). புரட்சிக் கவிஞர் தமிழ் இலக்கிய வழமை ஆகிய தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தான் என மாறினார்.
தமிழ்நாட்டு அரசாங்கமும் தெலுங்கு யுகாதி, தமிழ் புத்தாண்டுப் பிறப்பு எனச் சித்திரை 1 எனக் கொண்டாடுகிறது. விடுமுறை நாளும் அளிக்கிறது. இம் மாற்றங்களுக்கு முதற்புள்ளியாய் புரட்சிக் கவிஞரின் 1958-ம் ஆண்டுப் பாடல் விளங்குகிறது.
https://x.com/naa_ganesan/status/1906724745040515291திங்கள் பனிரண்டு
------------------
சித்திரைவை காசிஆனி ஆடிஆவணி-பு
ரட்டாசி ஐப்பசிகார்த் திகைமார்கழி
ஒத்துவரும் தைமாசி பங்குனிஎல்லாம்-இவை
ஓராண்டின் பனிரண்டு திங்களின் பெயர்.
கொத்துக் கொத்தாய்ப் பூவிருக்கும் சித்திரையிலே
கூவும்குயில் மழை பெய்யும் கார்த்திகையிலே
மெத்தக்குளி ராயிருக்கும் மார்கழியிலே-மிக
வெப்பக்கதிர் காட்சிதரும் தைப்பிறப்பிலே.
- இளைஞர் இலக்கியம் (பாரதிதாசன், 1958-ல் பாடியது).
தமிழ் இலக்கண ஆர்வலர்களுக்கு: புரட்சிக்கவி தை தான் தமிழ்ப் புத்தாண்டு என அப்போது கோட்பாடு உடையர் ஆயின், "தைமாசி பங்குனி சித்திரை வைகாசி, ..." எனப் பாடிச் செய்யுள் தந்திருப்பார். அதாவது, "மா" என்னும் எழுத்து, விருத்தத்திற்கு எதுகையாய் அமைந்திருக்கும். ஆனால், செய்யவில்லை. பேரா. சேதுபதி சொல்வது போல, உண்மையை அறிந்து தெளிந்துவிட்டார். சித்திரை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தெளிவு பெற்ற நிலைப்பாடு.
குறிப்பு ஒன்று: நித்திரையில் இருக்கும் தமிழா என்னும் பாடல் யாப்பிலக்கணத்துக்குப் பொருந்துவதில்லை. இப்போது இணையத்தில் பரப்பப்பட்டாலும், புரட்சிக்கவி மறைந்து 45 ஆண்டுக்குப் பின்னர் உருவானது.
நா. கணேசன்