Re: வாருமய்யா எழுத்தாளரே!

307 lượt xem
Chuyển tới thư đầu tiên chưa đọc

Dr Subramanian

chưa đọc,
22:51:49 18 thg 12, 201018/12/10
đến santhav...@googlegroups.com
சேதிவரும். 
அதற்குள்ளே 
சோதிடங்கள் ஏனய்யா?

பலே பலே. நல்ல வரிகள் .எதிர்பார்ப்பில் இழக்கப்படுவது நிகழ்காலம்தானே!.
வவேசு


2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை. எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம். ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம் சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும் வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்
உங்கள் படிப்பைத் தேடிவருகிற கவிதை இது. 
*

வாருமய்யா எழுத்தாளரே! 
வரகரிசிச் சோற்றிற்கு 
வெங்காந்த காலம் போய் 
வண்ண அடுக்கு அஞ்சு விண்மீன் 
திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா! 
செண்டு போட்டுப் புடைக்காமல் 
நண்டு பிடிப்பவர் போல் 
ஏதோ நோட்டம் விடுகின்றீர்! 

வாரும். என்ன தயக்கம்? 
சேருகின்ற துட்டைக் 
காப்பாக வைக்கும் 
வழிபற்றிக் கவலைதானோ? 
கவியரசு, புவியரசுக் 
கால் போட்டுப் பேசுகின்ற 
எக்காளப் பாவரசு 
என்ற பீடுக்கும் 
பீடை பிடித்ததுவோ? 
எதுவானால் என்ன? 
கொட்டியழும். 

கொள்கை புதைத்துவைத்த 
சமாதி தான் திறந்து 
சம்மதியா ஆவியாகி 
விரட்டிவந்த வேர்ப்பைத் 
துடைத்துவிட்ட முகம்போலே 
உம்மென்றிருக்கும் 
உள் புயலை அவிழ்த்துவிடும். 
ஊடகத்தே சதிராடி 
உலகப்பொதுச் சொத்தாடி 
உன்மத்தமாகி நின்றீர்! 
உருட்டிவிட்டே ஊடகக் கண் 
முன்னாடி நிற்பதற்கு 
முளைத்தனரோ இளவரசு?  

அன்றி என்றோ மறந்து போன 
தாய்த்தமிழின் சேலைகளாய் 
செல்லு பிடித்தயரும் 
சீரிளமை இலக்கியங்கள் 
வாரி முகர்ந்து 
வாஞ்சையுடன் பார்த்திடவே 
இன்னும் கருகாத 
இலக்கிய மொட்டும் உம்முள் 
பூத்திடுமோ? 
பணத்திற்கே விற்றுத் 
தொலைத்திட்ட பண்பாடும், 
பாவலனின் கர்வங்களும் 
மண்ணோடு மண்ணாகிப் 
பின்னருமே ஒருகால் 
புறப்பட்டுத் தாம் வருமோ 
என்ற பயத்தினிலே 
எனைக்காண வந்தீரோ? 

இல்லை, 
புறமெரித்துப் புறமெரித்து 
நெற்றிக்கண் வற்றியதால் 
ஊற்றுக்கண் பொங்கும் வரை 
உறக்கம் புரிகின்ற உருத்திரனார் 
ஒரு வேளை எழுந்தாரோ 
என்ற குலை நடுக்கம் 
பிடரி தள்ளப் பேயறைந்து 
வந்தீரோ சொல்லுமய்யா! 

ஒற்றிவைத்த ஊர் சொத்தில் 
ஒப்பனையாய் உப்பரிகை 
ஊதிவாழ்ந்த பலூன்வாழ்வும் 
ஒருநாள் வெடித்துத்தான் போகும். 
சாகாத வரம் வேண்டி 
சந்து பொந்து கோயில்களில் 
சிந்தும் ஊர்ப்பணங்கள் 
பந்தக்கால் பக்குவங்கள் 
ப்ரோநோட்டு ஜாலங்கள் 
எல்லாம் ஒருநாளில் 
நாறித்தான் போகும். 
கல்லாத பேர்களே 
நல்லவர்கள் நல்லவர்கள் 
என்றுரைத்த பெருமகனை 
வென்றுவிட்ட வரிசைகளாய்ப் 
பூசிய திருநீறும் 
போம்வழிக்கு வாராது. 
புதைகுழியில் போய்ப்படுத்துப் 
பயின்றாலும் பாவிஎமன் 
துயின்றுமுடித்த
பின்னர்தான் தான்வருவான். 
நெருநல் உளனொருவன் 
இன்றுமட்டும் ஆடுகின்ற 
ஆட்டத்தின் பாதி முடித்துவிட்டீர்! 
மீதியையும் முடித்துவிடும். 
நாதியத்துப் போகுமுன்னே 
நாட்டாமை பார்த்துவிடும். 
சேதிவரும். 
அதற்குள்ளே 
சோதிடங்கள் ஏனய்யா? 

நீதி துயின்றாலும் 
நியாயங்கள் அயர்ந்தாலும் 
நீறுபூத்த நெருப்பாகி 
நீலகண்டர் பயின்றாலும் 
சோற்றுப் பருக்கைக்கும் 
சோகாக்கும் காலம் வரும். 
அதுவரையில் சத்தியமாய் 
கவிதையென்றோ 
இலக்கிய ரசனையென்றோ 
தத்துவாதீதமென்றோ 
அத்துவா மார்க்கமென்றோ 
மானிட மகத்துவமென்றோ 
பொய்க்கால் குதிரைகள் நீர் 
ஆடவேண்டாம் ! 
அதையெல்லாம் 
பிழைக்கத் தெரியாமல் 
போக்கற்று கதியற்று 
திக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம் 
யாங்கள் பார்த்துக் கொள்வோம். 
போங்கால் கதவடைத்துப் 
போம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director-Exec
Phycospectrum Consultants Pvt.Ltd;
48th St; 9th Avenue, Ashok Nagar
Chennai, 600083
044-24748674

naa.g...@gmail.com

chưa đọc,
12:12:01 19 thg 12, 201019/12/10
đến சந்தவசந்தம்

On Dec 18, 9:13 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை.
> எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு
> இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம்.
> ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம்
> சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும்
> வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து
> படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப்
> பற்றி எழுதியும் இருக்கிறேன்

> <http://thiruvarangan.blogspot.com/2009/12/1_13.html>http://thiruvarangan.blogspot.com/2009/12/1_13.html

நல்ல கவிதை.

’புரமெரித்து’? புறமெரித்து?

நா. கணேசன்

selva kumaran

chưa đọc,
09:22:29 20 thg 12, 201020/12/10
đến santhav...@googlegroups.com
நிச்சயமாக இது ஒதுக்கப்படக் கூடிய (ignore) நிலையில் இருக்கும் கவிதையில்லை. ஆனால் இந்த கவிதையில் எதிர்மறையான விமர்சனம் ஒன்றிரண்டு விஷயங்களில் ஏற்படுகிறது.

அதை சொல்லுமுன், நான் கவிதையை புரிந்துக் கொண்ட விதம் சரியா என்றொரு குழப்பம்.

திரு. மோகனரங்கன் கவிதையை சற்று விளக்கினால், என் விமர்சனத்தை சற்று தைரியமாகச் சொல்ல முடியும்.

2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை. எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம். ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம் சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும் வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்

Kaviyogi Vedham

chưa đọc,
09:56:28 20 thg 12, 201020/12/10
đến santhav...@googlegroups.com
நல்ல உணர்ச்சி மிக்க கவிதை. கருத்தாழம் உடைத்து.
 இவன் கொணர்ந்து இட்டதற்கு நன்றி. ரசித்..தேன்
 யோகியார்

2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/12/19 Dr Subramanian <vav...@gmail.com>

சேதிவரும். 
அதற்குள்ளே 
சோதிடங்கள் ஏனய்யா?

பலே பலே. நல்ல வரிகள் .எதிர்பார்ப்பில் இழக்கப்படுவது நிகழ்காலம்தானே!.
வவேசு

நன்றி வ வே சு சார் 



--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Kaviyogi Vedham

chưa đọc,
10:48:21 27 thg 12, 201027/12/10
đến santhav...@googlegroups.com
பலே பலே சப்பாஷ்.. படிக்கத் தெம்பு தருகின்றன சொற்கள்+கருத்து.வாழ்க..
 யோகியார்

2010/12/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும் 
தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம். 
புழுதி கிளம்பி, நுரை தள்ளி 
ஆறுக்கு ஆறு 
பள்ளம் தோண்டியதுதான் மிச்சம். 
கழுதைப் பொதியாய்க் கருத்துகளும் 
கழுத்துப் பொதியாய் பேச்சுகளும் 
கிடைத்த காதுகளிலும் 
கிட்டிய கண்களிலும் 
கலப்பை இல்லாமல் 
உழுததுதான் மிச்சம். 
விளைச்சல் பேய்த்தேர்களில் 
மூட்டை மூட்டையாய் 
ஏற்றுமதியாகிறது 
எங்கென்று தெரியாமல் 
எப்படி என்று புரியாமல் 
ஏதோ கொள்முதல்; 
இவ்வுலகை விண்ணாக்க 
முடிகிறதோ இல்லையோ 
விண்ணை மண்ணாக்கி 
விளைநிலமும் ஆக்கிவிட்டோம். 
வானில் விளைந்து 
கடிதில் இழிந்து 
தரையில் கிளைபரப்பிக் 
கனிகுலுங்கப் பூத்துவிட்டால் 
அப்புறம் அஸ்வத்தம்; 
எங்கோ சாவித் துளை இருக்கிறது; 
முதலில் சாவியைத்தான் தேட வேண்டும். 
*** 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 



2010/12/20 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

நல்ல உணர்ச்சி மிக்க கவிதை. கருத்தாழம் உடைத்து.
 இவன் கொணர்ந்து இட்டதற்கு நன்றி. ரசித்..தேன்
 யோகியார்

2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/12/19 Dr Subramanian <vav...@gmail.com>
சேதிவரும். 
அதற்குள்ளே 
சோதிடங்கள் ஏனய்யா?

பலே பலே. நல்ல வரிகள் .எதிர்பார்ப்பில் இழக்கப்படுவது நிகழ்காலம்தானே!.
வவேசு

நன்றி வ வே சு சார் 
 

2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஏதேதோ மனநிலைகளில் எப்பொழுதுதான் எழுத்தில் வெளிப்படுத்துகிறோம் தெரியவில்லை. எழுதி முடித்து நெருங்கிய நண்பர்களிடம் படித்துக் காட்டியபின் இண்டு இடுக்குகளில் சொருகி வைத்து மறந்தன எத்தனையோ! என் செய்ய? பொறுப்பற்ற ஜன்மம். ‘முன்பொரு பாடல் எழுதினேன்; அதன் மூலப்ரதி கைவசம் இல்லை’ என்று திருலோகம் சொன்னபடி இல்லாமல் இதற்கு மூலப்ரதி கிடைத்தது, யதேச்சையாக, துப்புரவு செய்யும் வேளையில். புதுமைப் பித்தன், சிதம்பர ரகுநாதன் இவர்கள் கவிதைகள் நான் தோய்ந்து படித்தவையில் அடக்கம் என்பது சொல்லாமலே போதரும். ஏற்கனவே சி ரகுநாதனின் பாடலைப் பற்றி எழுதியும் இருக்கிறேன்
உங்கள் படிப்பைத் தேடிவருகிற கவிதை இது. 
*


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).

selva kumaran

chưa đọc,
03:47:34 25 thg 2, 201125/2/11
đến santhav...@googlegroups.com
அன்பர் மோகனரங்கன்

இரண்டு நாட்களுக்கு முன்புதான் மீண்டும் இணையம் வர முடிந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் பதிலைப் படித்தேன்.

இன்று மாலை, உங்கள் கவிதை பற்றிய என் எண்ணவோட்டத்தை இடுகிறேன்.




2010/12/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/12/20 selva kumaran <selvakumaran.ma@gmail.com>

நிச்சயமாக இது ஒதுக்கப்படக் கூடிய (ignore) நிலையில் இருக்கும் கவிதையில்லை. ஆனால் இந்த கவிதையில் எதிர்மறையான விமர்சனம் ஒன்றிரண்டு விஷயங்களில் ஏற்படுகிறது.

அதை சொல்லுமுன், நான் கவிதையை புரிந்துக் கொண்ட விதம் சரியா என்றொரு குழப்பம்.

திரு. மோகனரங்கன் கவிதையை சற்று விளக்கினால், என் விமர்சனத்தை சற்று தைரியமாகச் சொல்ல முடியும்.


திரு செல்வகுமரன், 

ஒரு கவிதை எழுதி வெளியிட்டாயிற்று என்றால் அப்புறம் அதில் ஆசிரியனும் ஒரு வாசகனாகவும் ஆகிவிடுகிறான். எனவே ’தைரியமாக’ என்றெல்லாம் தயக்கம் காட்டாதீர்கள். 

இதில் கவிதை, இலக்கியம் என்று தன் வாழ்வின் உயிர்நாடியைச் சார்ந்த முக்கியமாகக் கொண்டுள்ளவன், அவனை எதற்கோ நாடி வருகின்ற மற்ற ஒருவன். இருவரும் சந்திக்கும் அல்லது சந்திக்காமல் பிரியும் கணத்தின் கனத்தையும் அவஸ்தையையும் தன் பாவமாகக் கொண்டுள்ளது இந்தக் கவிதை. 

அந்த மற்றவன் தன் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. கவிஞனின் எதிரியங்கும் குரலில் நிழலாட்டமாகத்தான் அவன் யாரென்று கூறப்படுகிறது. 

அந்த மற்றவன், கவிதை, இலக்கியம், ஆன்மிகம், மனிதாபிமானம் என அனைத்தையும் சமய சந்தர்ப வாதத்திற்கும், ராஜ சௌகர்யங்கள், விருதுகள் என்ற படாடோப ஆடம்பர வாழ்விற்கு அடமானம் வைக்க அஞ்சாதவன், அதிலேயே ஊறியவன் -- எதற்கோ அவன் வாழ்வின் ஒரு கணத்தில் தயங்கி, பிழைக்கத் தெரியாத இந்த இலட்சியக் கிறுக்கை வந்து சந்திக்க முனைகிறான். 

இரு வேறு வகைப்பட்ட வாழ்வுகள் ஏதோ ஒரு கணத்தில் கால ஓட்டத்தில் சந்திக்கும், இல்லை சந்திக்க முடியாது என்ற நிச்சயமற்ற அதிர்வைக் கொண்டது இந்தக் கவிதை. -- இது என் வாசிப்பு. 

selva kumaran

chưa đọc,
02:51:34 26 thg 2, 201126/2/11
đến santhav...@googlegroups.com
அன்பர் மோகனரங்கன்

கவிதையில் உள்ள நல்ல விஷயங்கள் நிறைய!

ஏற்கனவே மிக தாமதமாக இங்கே பதில் எழுதுவதால் நேரடியாக எனக்கு எதிர்மறை விமர்சனமாக தோன்றியவைகளை நேரடியாக இட்டு விடுகிறேன். (நல்ல விஷயங்களை எடுத்த எடுப்பில் விமர்சனத்தில் சொல்லலாமா? :))

எத்தனையோ ஜாம்பவான்கள் இருக்கும் இடத்தில், ஒரு விடலையின் ஆர்வகோளாறான, என் எண்ணங்களை வைக்கிறேன்.

விமர்சனத்தை வைக்க அனுமதித்த மோகனரங்கன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.


----

"அந்த மற்றவன், கவிதை, இலக்கியம், ஆன்மிகம், மனிதாபிமானம் என அனைத்தையும் சமய சந்தர்ப வாதத்திற்கும், ராஜ சௌகர்யங்கள், விருதுகள் என்ற படாடோப ஆடம்பர வாழ்விற்கு அடமானம் வைக்க அஞ்சாதவன், அதிலேயே ஊறியவன் -- எதற்கோ அவன் வாழ்வின் ஒரு கணத்தில் தயங்கி, பிழைக்கத் தெரியாத இந்த இலட்சியக் கிறுக்கை வந்து சந்திக்க முனைகிறான். "

நீங்கள் முந்தையை ஒரு மடலில் விளக்கி இருந்ததைப் போலத்தான், படிக்கும்போது எனக்கும் புரிந்தது. ஆனால் உணர்வு அலைகளில் வேறுபாடு உண்டு.



எந்த ஒரு கவிதையை படித்தாலும் அது முதலில் மனதில் ஒரு உணர்வை ஏற்படுத்தும். அது இலக்கணத்தினாலோ, மொழியாலோ, எழுதப்பட்டவர் இவர் என்பதாலோ இருக்காது.

அந்த விதத்தில் இந்த கவிதை முதலில் ஏற்படுத்திய பாதிப்பு முதலில் என்னவென்றால்,

கவிதையில் பேசுபவர்,  மற்றவனின் நிலையைக் கண்டு ஆற்றாமை கொண்டிருக்கிறாரோ என்ற ஐயப்பாடுதான். அந்த ஆற்றாமையிலும் மாச்சரியத்தி்ன் துளி தென்படுகிறது.

ஏன் அப்படி தோன்றியது என்பதற்கு காரணம் புரியாத ஒன்று.

எந்த ஒரு கவிதையும் அனுமதி கேளாமல் எடுத்த எடுப்பில் இதயக் குளத்தில் கல்லை விட்டெறிந்து ஒரு இரகமான அலைகளை எழுப்பிவிடும்.

அந்த உணர்வுதான் அந்த கவிதையின் இலட்சணமாக படிப்பவருக்கு பதிந்து விடும்.

இங்கோ அந்த உணர்வு மேற்கூறிய வண்ணம் இருந்ததினால்,  முதலில் அந்த உணர்வை எதிர்த்துக் கொண்டு கவிதையை இரண்டாம் முறை படிக்க வேண்டிய அவசியம் நேர்ந்தது.


ஏன் என்றால், இந்த கவிதையை அந்த இலட்சிய வெறி கொண்டவரின் மாச்சரிய சொற்கள் என்ற  உணர்வோடு படித்தால், கவிதை வரிகள் அனைத்தும் ஏதோ வயிற்றெரிச்சலில் சொல்லிய சொற்கள் என்பதாக ஆகிவிடும். அப்படி ஆகிவிட்டால் அந்த கவிதையை எப்படி படிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் இணையத்தில் யாராவது யாரையாவது திட்டி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். அது போல ஆகிவிடும்.


ஆகவே என் மனதில் எழுந்த முதல் உணர்வையே எதிர்த்துக் கொண்டு படிக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. எனக்குத் தோன்றிய உணர்வெல்லாம் சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லையே! இது கவிதை வாசிப்பதற்கு ஒரு குறுக்கு சாலாக இருக்கிறது.

-----



இங்கே மேலே சொல்லப்பட்டது எனக்கு தோன்றிய எண்ணங்கள்.

அவை ஓரளவு சரியாக வைக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால், அவை வைக்கப்பட்ட விதத்தில் புண்படுத்தும் தன்மை இல்லை என்று கருதினால், குறைந்த அளவு பேத்தலாக கருதினால்,  மேற்கொண்டு தொடர்ந்து இவ்விழையிலேயே இடுகிறேன்.


உங்கள் மடலுக்குப் பின் தொடர்கிறேன். 






selva kumaran

chưa đọc,
02:39:32 27 thg 2, 201127/2/11
đến santhav...@googlegroups.com
பதில் மடல் கண்டு மகிழ்ச்சி, திரு. மோகனரங்கன்.


உங்களது மடலைப் படிக்கும்போது , என் வார்த்தைகளை சகித்துக் கொள்ளும் அபார சகிப்புத்தன்மை  தெரிவதால், அது தரும் தைரியத்தில் அடுத்த பகுதி எண்ணங்களை இடுகிறேன்.


----


"
இல்லை, 
புறமெரித்துப் புறமெரித்து 
நெற்றிக்கண் வற்றியதால் 
ஊற்றுக்கண் பொங்கும் வரை 
உறக்கம் புரிகின்ற உருத்திரனார் 
ஒரு வேளை எழுந்தாரோ 
என்ற குலை நடுக்கம் 
பிடரி தள்ளப் பேயறைந்து 
வந்தீரோ சொல்லுமய்யா! "


'புறம்' என்ற சொல்லைத்தான் இங்கே பயன்படுத்த எண்ணினீரா என்ற சந்தேகம் அடுத்து எழுகிறது.

'உருத்திரனார்'  உடன் இந்த  'புற'ச் சொல்லை நீங்கள் கோத்ததினாலேயே இந்த குழப்பம்.

சிவந்தெழுந்த சிவனாகிய ருத்ரன் 'ஹூம்'காரத்தால் பொசுக்கியது முப்புரம். அப்புரத்தின் பொருளோடு இப்'புறம்'  கோக்கப்பட்டுவிட்டதோ என்று அவ்வரியை படித்ததற்கு அப்புறமாய் ஒரு ஐயம் எழுந்தது.

இது வெறும் தட்டச்சுப் பிழைதானா, இல்லை ஏதேனும் உட்பொருள் வைத்து தெரிந்தே  எழுதப்பட்ட சொல்லா?


பல முறை ' புறமெரித்த' செயலால், Resources குறைந்து உருத்திரனாரின் நெற்றிக்கண் வற்றியதாக பாடலில் வருகிறது.

ஆகவே ' புறம்' என்ற சொல்லின் மூலமாக் வேறு ஏதோ சொல்ல வருகிறீரோ என்று தோன்றுகிறது.

ஏனெனில் முப்புரத்தை ஒரு முறைதான்  சுட்டெரித்தார். அப்புறம் எரித்ததாய் கதை இல்லை!

ஆகவே பலமுறை எரித்த 'புறம்' வேறு ஏதோ ஒன்றாய் இருக்க வேண்டும். எனவே இதை சந்தேகமாய் வைத்து விட்டேன்.

-----

"வாருமய்யா எழுத்தாளரே! 
வரகரிசிச் சோற்றிற்கு 
வெங்காந்த காலம் போய் 
வண்ண அடுக்கு அஞ்சு விண்மீன் 
திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா! "


"அவன் ஒரு புலவன்! அவ்வளவுதானே? அவனுக்கெதற்கு இத்தனை சொகுசு?"

"மந்திரியாரே! வெறும் புலவனல்லன் அவன்! கவிச் சக்ரவர்த்தி! உண்மையில் அனைத்தையும் அனுபவிக்கும் தகுதி அவனுக்கே உண்டு! மன்னனாகிய எனக்கு கூட அவ்வளவு அருகதை இல்லை!"


மேலே எழுதப்பட்ட வரிகள் போஜராஜன், காளிதாஸன் பொருட்டு சொன்னதாக வரும்.  இவை கர்ண பரம்பரை கதைகளாக இருக்கலாம். ஆனால் போஜராஜன் அப்படித்தான் காளிதாஸனை வைத்துக் கொண்டான். இது ஊரறிந்த இரகசியம்.


வண்ண அடுக்கு மாடியில், ஐந்து நட்சத்திர ஹோட்டலில், திண்டு போட்டு ஆனந்தமாய் ஏன் ஒரு கவிஞன் எழுதக்கூடாது?!

வரகரிசி சோறும், வற்றிப்போன உடலும், கந்தையான ஆடையும் கவிஞனின் ஒரே அடையாளமாக ஏன் ஆக வேண்டும்?

இது வெகு காலமாக என்னுள் எழும் கேள்வி.

தரித்திரத்தில் இருக்கும் கவிஞர்களிடம் மட்டும் வருவதுதான் கவிதையா?

சீரக சம்பா சோற்றில் நெய்யூற்றி உண்டவன் வாயில் கவிதை வாராதா?

எளிமை என்பது வேறு, வறுமை என்பது வேறு. ஒருவர் எளிமையாய் இருப்பதோ, ஆடம்பரமாய் இருப்பதோ அவரவர் விருப்பமல்லவா? அதனால் கவிதைக்கு ஏன் கேடு வரப்போகிறது?

எழுதத் தெரியாதவன் வரகரிசி சோறு தின்பவனாய் இருந்தாலும் கவிதையை தரமாட்டான் இல்லையா?

இது உங்கள் கவிதையில் மட்டுமல்ல; நிறைய இடங்களில் இந்த மேற்கூறிய வரிகளை படித்து விட்டு சந்தேகப்பட்டிருக்கிறேன். இன்று உங்களிடம் இந்த கேள்வியை முன் வைக்கிறேன்.


-----


"
நீதி துயின்றாலும் 
நியாயங்கள் அயர்ந்தாலும் 
நீறுபூத்த நெருப்பாகி 
நீலகண்டர் பயின்றாலும் 
சோற்றுப் பருக்கைக்கும் 
சோகாக்கும் காலம் வரும். 
அதுவரையில் சத்தியமாய் 
கவிதையென்றோ 
இலக்கிய ரசனையென்றோ 
தத்துவாதீதமென்றோ 
அத்துவா மார்க்கமென்றோ 
மானிட மகத்துவமென்றோ 
பொய்க்கால் குதிரைகள் நீர் 
ஆடவேண்டாம் ! 
அதையெல்லாம் 
பிழைக்கத் தெரியாமல் 
போக்கற்று கதியற்று 
திக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம் 
யாங்கள் பார்த்துக் கொள்வோம். 
போங்கால் கதவடைத்துப் 
போம். "

என்னுடைய பதினேழாவது வயதில்  ஒருவர் என்னை ஒன்று சொல்லி விட்டார் என்று கோபமாக கவிதை(?) என்ற ஒன்றை எழுதினேன்.

இங்கே மேற்கூறிய கடைசி வரிகளில் அத்தகைய கோபத்தை உணருகிறேன்.

'சோற்று பருக்கைக்கும் சோகாக்கும் காலம் வரும்' என்ற சொல்தான் இங்கே அத்தகைய எண்ணத்தை என்னுள் விதைத்தது.


'மகனே! நீ சோற்று பருக்கைக்கும்  அலையும் காலம் வரும்' என்பதாக வந்த சொல்  உருத்தரினையே மிகுந்த சாந்த சொரூபி போல் தோன்ற செய்கிறது.


இங்கே வரிகளில் எனக்கு புரிந்தது என்னவென்றால்,

"ஒரு நாள் சோற்றுக்கும் அலைவாய்! அப்போது  இலக்கிய ரசனை, தத்துவாதீதம்,  அத்துவா எனும் வழிகள், மானுட பெருமை  போன்றவைகளை குறித்துப் பேசலாம்! அதுவரை வாயை மூடிக் கொண்டு இருப்பீர்களாக! அவைகளை பிழைக்கத்தெரியாத நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!"


மீண்டும் அதே ஐயம்!  ஆடம்பர வாழ்க்கை வாழும் உனக்கு எங்கே இலக்கிய இரசனை தெரியப்போகிறது எனும் தொனி தெரிகிறது.

ஏன் அப்படி எழுதினீர்கள்?

இந்த வரிகள் வெறும் கோபத்தில் எழுந்த சொற்களா, இல்லை வேறு ஏதோ ஒரு ஆழ்ந்த பொருளை உள்ளடக்கி சொல்லி இருக்கிறீர்களா?

விளக்கினால் மிகவும் மகிழ்வேன்.


------

இன்னும் இரண்டொரு கேள்விகள்தான் பாக்கி. :)









2011/2/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>





இதில் சரியா தவறா என்பதைவிட பலவேறு விதங்களில் கவிதைக்கான வாசிப்பு சாத்தியம் ஆகிறது என்பதுதான் ரசிக்கப்பட வேண்டியது. 

மிக நன்றி திரு செல்வக்குமரன். 


selva kumaran

chưa đọc,
04:29:18 28 thg 2, 201128/2/11
đến santhav...@googlegroups.com
"உருத்திரன் எரித்தது முப்புரம். ஆனால் இங்கு ‘புறம்’ என்று வெளிப்புற திருட்டியைக் குறிப்பிடுகிறேன். சற்றே வேதாந்தமான கருத்து. அதாவது த்ருக் த்ருச்ய விவேகம் என்ற பொருளது. த்ருச்யம் -- புறம் என்றபடி. ஒலிக்குறிப்பில் முப்புரம் எரித்தலை நினைவில் கொண்டு வரக் கூடியது. "


உருத்திரனார் அண்டமாகிய புறத்தை லயம் செய்தலையே நீங்கள் அவ்வாறு கூறியிருக்கிறீர்கள் என்பதை விளக்கியதற்கு நன்றி.

-----
"ஊதிவாழ்ந்த பலூன்வாழ்வும் 
ஒருநாள் வெடித்துத்தான் போகும். "

இதில் ஒரு வேடிக்கையான யோசனை எழுகிறது. உண்மையில் வீங்கியதும், வெடித்ததும் பலூனின் சுய விருப்பத்தினால் அல்லவே! எவனோ ஊதுகிறான்! ஊதியது போதாது என்று தோன்ற இன்னும் ஊதுகிறான். அவனது பேராசைக்கு ஆளான பலூன் வெடித்து விடுகிறது. :))

ஊதியவனோ அடுத்த பலூனை எடுத்துக் கொண்டிருப்பான். இப்படி பல யோசனைகள்!

எனவே நீங்கள் சொன்ன இந்த எடுத்துக்காட்டு சட்டென வேறு ஏதோ ஒரு திசைக்கு திருப்பி விட்டு விடுகிறது. கவிதையில் அழுத்தமாக சொல்ல வந்த நிலையாமையில் மனம் பதிய மறந்து விடுகிறது.

கவிதையின் மையக் கருத்தை விட்டு விலகச் செய்யும் எடுத்துக்காட்டுகள் படிப்போருக்கு ஒரு வேகத்தடையே அன்றோ?!


-----

"
பொய்க்கால் குதிரைகள் நீர் 
ஆடவேண்டாம் ! "

'பொய்க்கால் குதிரைகளில்' என்று வந்திருக்க வேண்டுமோ? இல்லை அவரையே பொய்க்கால் குதிரைகள் என்கிறீரா?


"
அதையெல்லாம் 
பிழைக்கத் தெரியாமல் 
போக்கற்று கதியற்று 
திக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம் 
யாங்கள் பார்த்துக் கொள்வோம். "


இங்கே லேசான பிழை தென்படுகிறது. 'நீர் பொய்க்கால் குதிரைகளில் ஆடவேண்டாம்; அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்' என்ற தொனி வந்து, நையாண்டிக்கு இடம் தந்து விடும். இது என் பணிவான எண்ணவோட்டம். அப்படியே மறைக்காமல் சொல்லி விட்டேன்.


முந்தைய வரிகளில் இத்தகைய உதாரணத்தைத் தரும்போது (பொய்க்கால் குதிரை) அடுத்த வரிகளில் அவைகளை தாண்டி மையப் பொருளை தொட்டு சொல்ல வேண்டிய நிலை கவிஞனுக்கு நேருகிறது.

அது இங்கே சற்று கவனிக்கப்படாமல் போய்விட்டதோ என எண்ணினேன்.


-----

"....திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா! 
செண்டு போட்டுப் புடைக்காமல் 
நண்டு பிடிப்பவர் போல் 
ஏதோ நோட்டம் விடுகின்றீர்! "

இது கடைசி வரையில் புரியவே புரியாத வரிகள்.

'செண்டு போட்டு புடைக்காமல்'

பூச்செண்டு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, சவுக்கு என்று எடுத்துக் கொண்டாலும் சரி. எதற்காக அடிக்கச் சொல்லுகிறீர்? எதை அடிக்கச் சொல்லுகிறீர்?

ஏன் அந்த 'மற்றவர்'  அப்படி அடிக்க வேண்டும்?

அதை செய்யாமல் நண்டு பிடிப்பவன் போல பார்ப்பதாய் சொல்லி இருக்கிறீர்.

திண்டு என்று வந்ததால், எதுகை காரணமாய் இயல்பாக செண்டு, நண்டு என்று சொற்கள் விழுந்தது போல் ஒரு செயற்கைத் தன்மை தெரிகிறது.

-----

அவ்வளவுதான் மோகனரங்கனாரே!

என் உள் தோன்றியவைகள் அனைத்தையும் சொல்லி விட்டேன்.

சொல்ல அனுமதித்ததற்கு நன்றி!


அடுத்து கவிதையில் நான் கண்ட நல்ல விஷயங்களை  சொல்லி விட்டு நிறைவு செய்கிறேன்.
















2011/2/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி திரு செல்வக்குமரன். உங்கள் அலசலை மிகவும் ரசித்தேன். 

நீங்கள் மட்டுமன்று. படிக்கும் ஒவ்வொருவருக்குமே வேறுபட்ட ஒவ்வொரு வாசிப்பு இருக்கும்தானே! அதுதானே கவிதையின் சிறப்பு. 

அதற்கு அடிப்படைக் காரணம் கவிதை நம்மிடம் வந்து சேரும் சந்தர்ப்பம்; கவிதையிடம் நாம் நம் வாழ்வில் எந்தச் சந்தர்ப்பத்தில் போய்ச் சேருகிறோம் என்பதும். 

ஒருவருக்கே ஒரு சமயம் ஒரு விதமாகப் பேசுகின்ற கவிதை மற்றொரு சமயம் வேறு ஒரு விதமாகப் பேசக்கூடும். 

எனவே உங்கள் அலசல் ரசனைக்குரியதாய் இருக்கிறது. 

உருத்திரன் எரித்தது முப்புரம். ஆனால் இங்கு ‘புறம்’ என்று வெளிப்புற திருட்டியைக் குறிப்பிடுகிறேன். சற்றே வேதாந்தமான கருத்து. அதாவது த்ருக் த்ருச்ய விவேகம் என்ற பொருளது. த்ருச்யம் -- புறம் என்றபடி. ஒலிக்குறிப்பில் முப்புரம் எரித்தலை நினைவில் கொண்டு வரக் கூடியது. 

இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு வாசிப்பு செய்தமைக்கு நன்றிகள். 



2011/2/27 selva kumaran <selvakumaran.ma@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

selva kumaran

chưa đọc,
04:21:56 2 thg 3, 20112/3/11
đến santhav...@googlegroups.com
மோகனரங்கனின் கவிதையில் முதலில் எனக்கு பெரிய விஷயமாகத் தென்பட்டது, அவருடைய சொல் ஞானம். தமிழ் சொற்கள் அவரது கஜானாவில் கொட்டிக் கிடக்கின்றன.

நன்கு பழுத்த மாதுளம் பழத்தைப் பிளந்ததும் மணிகள் பொல பொலவென உதிர்வதைப் போல வார்த்தைகள் வந்து விழுகின்றன. இறை அருள்!


அடுத்து, அவர் என்ன எண்ணுகிறார் என்பதை கவிதை சுலபமாக கக்கி விடுகிறது. இப்படி எண்ணுவதை கக்கும் கவிதை தரமான ஒன்றே!

எதுகை, மோனை சித்து விளையாட்டு நடக்கும் வேகத்தில் ப்ரோ நோட்டு போன்றவைகளும் தமிழ் சொற்களே என்பது போல் உள்ளே தோன்றி விடுகின்றன.


கொள்கையை புதைத்தாலும், அது சிரஞ்சீவி அன்றோ?! அது  எழுந்ததும், ஆவி போல் தோன்றுகிறது! புதைத்தவனுக்கு நடுக்கத்தை எழுப்புகிறது.  படிக்கும்போதே இனிமையாக இருக்கிறது.

கொல்ல நினைத்த சிசு, மரணமிலா பரந்தாமனாகி கம்ஸனுக்கு வேட்டு வைத்ததைப் போல, புதைத்த கொள்கைகள் எழுந்திடும் போது வேர்த்திரைப்பை உண்டு பண்ணும் என்று சொன்னது தானாக எண்ணத்தில் உட்கார்ந்துக் கொள்கிறது.

அன்றாட வாழ்வில் பெரும்பாலானோர்க்கு,  புதைக்கப்பட்ட மனச்சாட்சி எழுந்து அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருப்பதால், கவிதை வரிகள் நித்திய அனுபவத்தை நினைவூட்டுகின்றன.



'போங்கால் கதவடைத்துப் போம்' என்ற சொல்லில் பாவலனின் கர்வம் தென்படுவது இனிமையாகத்தான் இருக்கிறது. நான் கதவை சாத்த எழுந்தும் வரமாட்டேன்; நீயே மூடிக் கொண்டுப் போ என்னும் போது, நீ போவது மட்டுமல்ல, உன்னைப் போல வேறு ஒன்று வந்து விடப்போகிறது என்ற தொனியும் தெரிகிறது.

நன்றி!

Kaviyogi Vedham

chưa đọc,
00:53:46 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
Yes. even tho' idea is good, many poets would be wounded after reading yur poem which criticises all poems in kaviyarangam..
so it is not necy..likewise yu will naturally criticise pudhukkavithai, one page stories in  kumudham etc etc.. is it needed?
yogiyaar

2011/6/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கவியாற்றுப்படை 

(என்றோ பாடிப் பலரின் வயிற்றெரிச்சலைக் கொட்டியது இது. 2001 ஆ சரியாக நினைவில்லை)


கவிதைக்கு வழிசொல்லி 
ஆற்றுப் படுத்துகின்ற 
கவியாற்றுப் படையீதாம். ஆற்றுப்படையென்னும் 
இலக்கணத்திற் கொத்ததுதான்..
என்றாலும்... 
அள்ளித்தரும் கைநிறைவோ 
உள்ளிப் பெரும் பொருள்நிறைவோ 
கள்ளம் அவிழக் காலம் கனிவதற்கே 
மெள்ளக் குமுறும் மனக்குறையோ 
விள்ளற் கரிதாம் விடம்பனமோ 
தள்ளற்கரிதாம் என உரைப்பேன் 
தளர்விலராய்க் கேட்டல் கடன். 


---- ஐயா! கவிராயா! சந்தையொன்று நடக்கிறதாம் 
எங்கென்று அறிவீரா? 
எனக்கும்வழி சொல்வீரா? 

----ஆஹா அதற்கென்ன! ஊருக்கு நடுவே 
ஒதுங்கும் அக மையத்தில் 
உள்ளத்துள் சென்றக்கால் 
ஒரு சந்தை நடக்கிறது. 
அதுவா நீர் கேட்கின்றீர்? 

----அதுதான் நினைக்கின்றேன். 
கவிகூடும் சந்தையென்றார் 

---- ஆமாமாம் அங்குதான் நடக்கிறது. 
விற்பதற்கோ வாங்குதற்கோ 
எற்றுக்கு நீர் செல்வீர்? 
கற்றவித்தை காட்டிக் 
கரகாட்டம் ஆடுதற்கும் 
கூட்டத்தின் நடுவே 
கோணமேடை தானுமுண்டு. 

---- சரக்கெடுக்கச் செல்கின்றேன் 
அட்டிகையாய்ப் பணப்பட்டை 
அணாக்கயிறு சுற்றிவந்தேன் 
படிந்ததென்றால் பேரம்தான் 
என்ன சொல்வீர்? 

---- பணமெதற்கு? 
பா தொடுத்த பொருள் எல்லாம் 
பண்ட மாற்று முறைதானே 
புழக்கத்தில் ஆதிமுதல் 
கவிதையுள்ளம் கையிருப்பு 
கவிதை உங்கள் சரக்கெடுப்பு 
கையிருப்பு இல்லையெனில் 
சரக்கெதுவும் பேராது. 
கடன் சொல்லி வாங்கிவர 
கண்டு கொள்வார் யாருமில்லை. 

கவியுள்ளம் இருந்ததென்றால் 
சந்தைக்குப் போயிடுவீர் 
இல்லையெனில் வந்தவழி 
இங்கிருந்தே திரும்பிடுவீர் 
பண்டம் கவியுள்ளம் 
மாற்றிக்கொள் வியாபாரம் 

அக்கா அத்திம்பேர் 
அப்பன் மகன் சம்சாரம் 
ஆத்தாள் அத்தை தங்கை 
அருமைமகள் அடுத்தாத்துப் 
பழக்கம்தான் என்றகதை 
பம்மாத்து செல்லாது 

சந்தைக் கெடுபிடியில் 
சரக்கிருந்தால் சரக்கு 
சரக்கோ கவியுள்ளம் 
சரக்கின்றிச் சென்றீரேல் 

கவிதையிலே சிந்துகிற 
சக்கை சருகு குப்பை 
சுற்றிவந்த காகிதம் 
பொக்கைப் புழுதிப் 
பொதிந்து வைத்த மரத்தூளாய் 
சமுதாயச் சீர்திருத்தம் 
சன்மார்க்க உபதேசம் 
சமாதிநிலை சாகஸங்கள் 
சித்தாந்த சிலம்பங்கள் 
காமாதி உலாமடல் 
கண்டதுண்டமாக வெட்டி 
கூறுகெட்ட வேகத்தில் 
கொள்ளைவண்டி ஓட்டுநர்க்காய் 
நெடுஞ்சாலை ஓரத்தில் 
நாயொதுங்கும் வாசத்தில் 
கொத்துபரோட்டா 
குமட்டெண்ணை துணுக்குவரி 
ஏப்பம்போல் அப்போதைக்கு 
இரைச்சலிடும் சொல்ஜிகினா 
தாழ்ப்பாள் விவகாரம் 
தப்படிக்கு அச்சாரம் 
குத்தாலக் குழியெண்ணை 
பிடித்துவிடும் பேச்சாரம் 
ஹேர்கட்டிங் சலூன்சரக்காய் 
அள்ளாது குவிந்திட்ட 
அற்புத முடிச்சரக்கு 
செல்லும் வழியெல்லாம் 
சிந்திக்கிடக்குமங்கே 

செலவின்றி அவற்றினிலே 
ஏதேனும் அள்ளிவரலாம் 
அள்ளிவந்தே 
ஊரெங்கும் சுற்றி 
உள்ளத்தில் ஒதுக்குப் புறமாகக் 
கழிமனக் குளமேட்டில் 
கழிப்பறை அகம் எதிராய்க் 
குந்தி விரித்திட்டுக் கடைபரப்பிக் 
கோணியிலே கட்டிவந்த 
குப்பையெலாம் விற்றிடலாம் 
கோணல் பெருமக்கள் 
உளக் கூனல் புன்மதியார் 
ஓட்டை மனத்தோடும் 
உளுத்தச் சொல்லோடும் 
கேட்டுவந்த பேரத்தில் 
கிடைத்தவரை கொள்ளைதான் 

ஆகமொத்தம் கவிராயா! 
சரக்கிருந்தால் சந்தைக்குச் சென்றிடுக 
சரக்கோ கவியுள்ளம் 
பண்டமாற்று வியாபாரம். 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

selva kumaran

chưa đọc,
08:43:26 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
" உண்மையான கவிஞர்கள் உவப்பார்களே எனினும் பொதுவாக யாரையோ சாடுகின்ற தொனி இதில் அமைந்து விட்டது போல் தெரிகின்றது. "



திரு. மோகனரங்கன்

அதுதான் கவிதையின் பலமும், பலவீனமுமாம்.

கவிதை சில சமயம் மேகக்கூட்டங்களைப் போன்றது. நினைத்த உருவம் அதில் தெரியும். நினைக்காத உருவமும் தெரியும்.

எனவேதான் கவிஞர் சொல்லாமல் கவிதையின் மையக்கரு புரிவதில்லை.

இன்று திருக்குறள் பொழிப்புரைகளைத் திருவள்ளுவர் கேட்டால் அவரே மிரண்டு போவார். கம்ப இராமாயண விரிவுரைகளைக் கேட்டால் கம்பர் கலங்கி விடுவார். பாரதி தன் பாட்டுக்களுக்கான விளக்கங்களைக் கேட்டால் கொதித்துப் போகலாம்.

கவிதை என்றுமே விளக்கியது போக மிஞ்சி நிற்பதாகவே இருக்கிறது.



2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வேதம் சார்! 

இதனுடைய மையக் கருத்தே கவிதையைக் கவியுள்ளத்துடன் அணுகுவதுதான் ஒரே வழி. அதை விடுத்து நுண் அரசியல்கள், மனக்கோணல்கள் இவற்றையெல்லாம் கவிதைக்குள் போட்டுப் பார்ப்பது சருகு குப்பை பொறுக்குவது போன்றது. மேலும் கவிதை ரசிகர்கள் கவியின் ஆழத்தில் கருத்தாய் இருக்க வேண்டுமே அல்லாது அந்தஸ்து, செல்வாக்கு, பணபேரம் இவற்றில் முக்கிய நாட்டம் வைத்து வெளிப்பூச்சுக்குக் கவிதையைப் பயன்படுத்தல் மிக விரசமானது -- இந்தக் கருத்தை வலியுறுத்த அப்பொழுது எழுதினேன். உண்மையான கவிஞர்கள் உவப்பார்களே எனினும் பொதுவாக யாரையோ சாடுகின்ற தொனி இதில் அமைந்து விட்டது போல் தெரிகின்றது. அதனால்தான் 2002ல் என் கவிதைகளின் தொகுப்பில் இதைச் சேர்க்காமல் இருக்கட்டும் என்று வைத்தேன். 

இவ்வளவு நாள் ஆகியும் காரம் இன்னும் குறையவில்லைபோலும். 

தங்கள் கருத்துக்கு நன்றி. கவனத்தில் கொள்கிறேன். 



2011/6/21 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

chưa đọc,
08:51:07 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
நீங்கள் சொல்வது மெத்தசரியே மோஹன்!.. உண்மையில் இப்போதும் யான் பாரதி கலைக்கழக மாதக்கவியரங்குக்கு போகும்போது,அங்கே பாடப்படும் கவிதைகளைக்கேட்கும் போழ்து உமது பாட்டு  உணர்ச்சியே எனக்கும் வரும். ஹரி கூட இதனைச் சொல்வார். நீர்த்துப்போகச் செய்துவிடுவர் அரங்கை.நம்ம முறை வரும் போது நம்முடைய கவியைப்படிக்கும்போது
வீட்டில் ஒத்திகை பார்த்த.. பெப்..இருக்காது...எல்லாமே ?தொய்ந்துவிடும்.கடனே என்று படித்து விட்டு வருவேன்..ஙே.. என்று முகத்தை வைத்துக்கொண்டே வீடு வருவேன். இப்போ அதிகம் போவதில்லை.
சே.. ரசிக உள்ளமே அவண் இல்லையே..என் செய்ய?
சரி உங்களோட கவிப்புத்தகத்தை எனக்கு அனுப்பலாகாதா?
அனுபவித்துப்படிக்கும் ரசிகனாச்சே யான்..
யோகியார்

2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வேதம் சார்! 

இதனுடைய மையக் கருத்தே கவிதையைக் கவியுள்ளத்துடன் அணுகுவதுதான் ஒரே வழி. அதை விடுத்து நுண் அரசியல்கள், மனக்கோணல்கள் இவற்றையெல்லாம் கவிதைக்குள் போட்டுப் பார்ப்பது சருகு குப்பை பொறுக்குவது போன்றது. மேலும் கவிதை ரசிகர்கள் கவியின் ஆழத்தில் கருத்தாய் இருக்க வேண்டுமே அல்லாது அந்தஸ்து, செல்வாக்கு, பணபேரம் இவற்றில் முக்கிய நாட்டம் வைத்து வெளிப்பூச்சுக்குக் கவிதையைப் பயன்படுத்தல் மிக விரசமானது -- இந்தக் கருத்தை வலியுறுத்த அப்பொழுது எழுதினேன். உண்மையான கவிஞர்கள் உவப்பார்களே எனினும் பொதுவாக யாரையோ சாடுகின்ற தொனி இதில் அமைந்து விட்டது போல் தெரிகின்றது. அதனால்தான் 2002ல் என் கவிதைகளின் தொகுப்பில் இதைச் சேர்க்காமல் இருக்கட்டும் என்று வைத்தேன். 

இவ்வளவு நாள் ஆகியும் காரம் இன்னும் குறையவில்லைபோலும். 

தங்கள் கருத்துக்கு நன்றி. கவனத்தில் கொள்கிறேன். 



2011/6/21 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
Yes. even tho' idea is good, many poets would be wounded after reading yur poem which criticises all poems in kaviyarangam..

selva kumaran

chưa đọc,
08:54:14 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
"
ஒரு சின்ன டெஸ்ட். கோபிக்காதீர்கள் விளையாட்டுக்குத்தான். 

இதில் பேசிக்கொள்ளும் இந்த இருவர் யார்? "

ஒருவர் நீர்; இன்னொருவர் உமது  Alter Ego.



2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நன்றி செல்வக்குமரன். 

கவிதைக்கான உலகம் இன்றில்லை. எனவேதான் கோனார் நோட்ஸ் தேவைப் படுகிறது. 

ஒரு சின்ன டெஸ்ட். கோபிக்காதீர்கள் விளையாட்டுக்குத்தான். 

இதில் பேசிக்கொள்ளும் இந்த இருவர் யார்? 

ஒரு க்ளூ -- புற உலகில் யாரையும் குறிக்கவில்லை. இருவரும் அக உலகைச் சேர்ந்தவர்கள்தாம். 

***

Kaviyogi Vedham

chưa đọc,
09:05:47 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
sari..waiting..
yogiyaar

2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>>>>>>>>>சரி உங்களோட கவிப்புத்தகத்தை எனக்கு அனுப்பலாகாதா?
அனுபவித்துப்படிக்கும் ரசிகனாச்சே யான்..
யோகியார்<<<<<<<<<<  


உமக்கு இல்லாததா? 

ஆனால் 2002ல் போட்டது. தமிழினிதான் போட்டது. இன்னும் காப்பி இருக்குமா தெரியவில்லையே. 

எக்ஸ்ட்ரா காப்பிகளை வாங்கி வைத்துக்கொள்ளும் பொறுப்பில்லாதவன்.

கேட்டுப்பார்க்கிறேன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

chưa đọc,
22:39:29 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
சூரிய அஸ்தமனத்தில் அழகிய தற்குறிப்பேற்றம்!
வாழ்க.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பரிதியின் பரிவு 


ஆழ நெடுங்கடல் பழகிய மீன் 
அலை எத்தியடித்திட கரைமீது 
வாழத் துடித்திட்ட காட்சியினை 
வேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான் 

எத்தி - 'எற்றி'  என்று சொல்லவந்தீர்களோ?


மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன் 
வெள்ளி துடித்திட்ட மீனொளியில் 
மாலை அடைந்தனன் மனமயங்கி 
அயர்ந்து விழுந்தனன் மைவரையில் 

காலை தொடங்கி தான் செய்தசெயல் 
கடமைதான் என்றுதான் கொண்டாலும் 
ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர் 
வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய் 

வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய் 
வான்வயல் கான்கடல் வரப்பெங்கும் 
படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில் 
பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே. 

Kaviyogi Vedham

chưa đọc,
22:39:07 21 thg 6, 201121/6/11
đến santhav...@googlegroups.com
பலே..பலே நல்ல கற்பனை..சூரியனே கருணை கூர்ந்து தண்ணிலவாய் மாறியதாய் இதுவரை யாரும் கவி சொல்லவில்லை.வாழ்க..
yogiyaar

2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பரிதியின் பரிவு 


ஆழ நெடுங்கடல் பழகிய மீன் 
அலை எத்தியடித்திட கரைமீது 
வாழத் துடித்திட்ட காட்சியினை 
வேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான் 

மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன் 
வெள்ளி துடித்திட்ட மீனொளியில் 
மாலை அடைந்தனன் மனமயங்கி 
அயர்ந்து விழுந்தனன் மைவரையில் 

காலை தொடங்கி தான் செய்தசெயல் 
கடமைதான் என்றுதான் கொண்டாலும் 
ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர் 
வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய் 

வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய் 
வான்வயல் கான்கடல் வரப்பெங்கும் 
படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில் 
பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

selva kumaran

chưa đọc,
07:27:10 22 thg 6, 201122/6/11
đến santhav...@googlegroups.com
பாரதிதாசன் பாடியிருக்கிறார்.

2011/6/22 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Niranjan Bharathi

chưa đọc,
13:53:13 22 thg 6, 201122/6/11
đến santhav...@googlegroups.com

அருமை ஐயா. திரும்பத் திரும்ப கேள்வி கேட்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்காத்திட்ட என்ற சொல்லுக்கு என்ன பொருள் ?
2011/6/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எங்கே போகிறாய்? 



ஊர்ந்துசெலும் சிற்றெரும்பே! 
எங்கே போகிறாய்? 

ஊருகின்ற காலறியும் 
கால்விரையும் மண்ணறியும் 
மண்ணில்வரும் மணமறியும் 
நானறிவேனா? 
நரனே! 
நானறிவேனா? 

ஆழ்கடலில் திமிங்கிலமே! 
அவசரத்தில் அங்காத்திட்டவாய் 
மூடாமல் விரைவதென்ன? 
எங்கே போகிறாய்? 

ஆரய்யா கேட்கிறது? 
பக்கவாட்டில் திரும்புதற்கு 
பக்குவமில்லை இப்போது 
பரவாயில்லை வாருமிங்கே. 
வானமழை தான்பொழிந்து 
விரிஉலகம் தான் நனைந்து 
விரிந்து மண்ணில் 
புகுந்த தண்ணீர் 
எங்கே போகுது? 
மீதியெலாம் எங்களுக்குக் 
குடமுழுக்கு ஆனபின்னர் 
கூடியெல்லாம் ஒன்றாகி 
எங்கே போகுது? 

கதிரவனின் ஓரக்கண்ணில் 
காதலாகுது. 
புதிர் அவனின் பகலினிலே 
ஆவியானதும் 
கதிர்க்கரத்தைப் பற்றியெல்லாம் 
எங்கே போகுது? 

பறந்துசெலும் பறவையரே! 
எங்கே போகிறீர்? 

பருந்து போகும் 
பச்சைக்கிளி தான் போகும் 
பக்குவமாய்ப் புறா போகும் 
பரக்காவட்டி காக்கா போகும் 
பரபரத்த குருவி போகும் 
பார்மீதெங்கள் நிழல் போகும் 

உணவுக்கான நேரம் போகும் 
ஒரு நிமிஷம் தேடிவிட்டு 
திரும்பிவந்தால் பொழுதுபோகும். 

ஒற்றையடி ஓரத்தில் 
ஓரால நிழலமர்ந்து 
ஒரு நால்வர் நடுவமர்ந்து 
ஒன்றும் பேசாதீர் 
ஒரு நொடியில் திரும்பிடுவோம் 
உம்ம கேள்வி எங்க போகும்? 

என்றந்தப் புள்ளும் 
எதிர்வான் முட்டில் எங்கோ 
இரை தேடிச் சென்றதுவால். 

ஆல நிழலமர்ந்து 
ஆலின் இலை கிடந்து 
துயிலும் சுக மாலாகித் 
துஞ்சாத கண்ணிமையில் 
பயிலும் பகற்கனவில் 
பள்ளி கொண்டேன் 
பல்லூழிப் பாழின் 
பள்ளியறைக் கட்டிலிலே. 

selva kumaran

chưa đọc,
14:23:33 22 thg 6, 201122/6/11
đến santhav...@googlegroups.com
"பரக்காவட்டி காக்கா போகும் "

:)))))))) இந்த வார்த்தையைக் கேட்டு வெகு நாளாகி விட்டது. :))

பள்ளியறைக் கட்டிலிலே. 

Kaviyogi Vedham

chưa đọc,
08:36:21 23 thg 6, 201123/6/11
đến santhav...@googlegroups.com
பாரதியின் வம்சக்கீற்றா பாராது கேட்பது..!
அங்காந்திட்ட வாயில் ஆறேழு கட்டெறும்பைப் போடுவான் கண்ணன்..என்றவர்
செங்காந்தள் சொல்லாய்ச் செழிப்பாய்ப் பாய்ச்சலையா?
யோகியார்

2011/6/22 Niranjan Bharathi <niranjan...@gmail.com>

selva kumaran

chưa đọc,
11:58:40 23 thg 6, 201123/6/11
đến santhav...@googlegroups.com

"செங்காந்தள் சொல்லாய்ச் செழிப்பாய்ப் பாய்ச்சலையா?...."

செங்காந்தள் சொல்லா? செங்காந்தள் என்பது அழகிய விரல்களுக்கு உவமையாக சொல்லும் சொல்லல்லவா?!  இங்கே எப்படி சொல்லுக்குப் பொருந்துகிறது?

அழகான விரலை காதுக்குள் விடுவது போல இது போகவில்லையா என்றா கேட்கிறீர்கள்?!



2011/6/23 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Lalitha & Suryanarayanan

chưa đọc,
01:49:26 24 thg 6, 201124/6/11
đến santhav...@googlegroups.com
நண்பரே!

அருமையான மொழியாக்கம்!

சிவ.சூரி

2011/6/24 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தமிழாக்கம் 

அரவிந்தரின் “சாவித்திரி”- சிறு பகுதி --- 



ஆன்ற பெரும் இனமொன்றைச் சார்ந்தவளென்று 
அவளிடம் உள்ள ஒவொன்றும் உணர்த்தியது. 

All in her pointed to a nobler kind  என்பதன் அழகான மொழியாக்கம்!
புவியின் விரிவிற்குப் போட்டி, 
பொன்றா விண்ணுக்கு அணுக்கம், 
இளம்பெரு புலநலம் திகழும் அவள் ஆன்மா 
விசித்திர செல்வ உலகும் 
வடிவுடை அமைதி வதியும் உலகும் 
கடந்து, கருத்தின் வழி தாண்டிக் கிளர்ந்து 
கருக்கொளா பொருட்குவைபால் சென்று மருவும். 
தடைப்படா தன்னுரம் மிக்க 
அவளது இச்சை ஆர்வம் கெழுமியது. 
ஒள்ளிய சிரத்தையின் உருகெழு வேலை 
அவள் மனம், உணர்ச்சிப் போக்கென ஓடிப்பாயினும் 
ஒருசில் அலையும் காணக்கொடாது. 
Her mind, ... Passionate in flow   had not one turbid wave  என்பது தமிழில் சிறப்பாக வந்துள்ளது.
 
யோகு புரி நிலையில் கறங்காடும் புனிதவதி 
சமைந்துநின்ற இடையீடற்ற சமாதிநிலைகள் 
உண்மையின் உள்ளறை விகாசத்தினின்றும் இயக்குறுவனவே. 
கடவுளரின் பள்ளமடையாய், செறிந்த படைப்பின் 
சீர்கெழு துடிப்புகள் திகழும் 
மகிழ்ச்சியின் கைத்தலம் முகிழ்த்த மௌன இதயமாய் 
விடியலின் விளக்கக் காதையன்ன உடல் 

A body like a parable of dawn   - அழகோ அழகு!
வடிவு கரந்திட்ட தெய்வத்தின் 
வெளிப்படு நிழலாய்த் தோற்ற, 
புலன் கடந்த பொருள் காணப் 
பொற்கோயிற் கதவமாய்த் 
திகழும் எவனோ தத்துவக் கிழவன் ஒருவன் பெயர்தர, 
காலம் தாளமேந்து அவன் நடையில் 
அமர சொற்கட்டு ஆடிவர, 
அவள் கடைக்கண் நோக்கம், 
மண்பூசி நின்றதுவும் விண்ணேசித் தெழச்செய்யும் 
அவள்தன் நோக்க முறுவல் ஊக்கிய களிப்பு 
தேக்கிடும் திறனார் கவினே மாந்தர் வாழ்வினில். 
விரித்துத் தன்னைத் தருதலே 
வாகாய் அவட்கமைந்த செயல் 
கடலும் மற்று விண்ணைப் போன்று 
அமைந்த வண்மையில் 
பிறங்கிய பேருலகொன்றின் கந்தம் தருவள்; 
அவளின் அன்பான அக்கறை இனிய மித வெய்யில்;
அவள்பால் திமிர்ந்த வேட்கை நீலவானின் நிதாநம். 
புயலாடும் புவிதப்பி வேட்டையஞ்சி விதிர்த்திட்டு 
களைத்த புன்சிறை கனக்கத் 
திரிதரு புள்ளென ஆன்மா, 
நினைவில் நிழலாடும் முலைத்தடமன்ன 
ஓர் அமைதி கேந்திரம், சேமக் காப்பகம், 
சொகுசாய் அதிசயித்த சாயணை ஒன்று கிட்ட, 
ஓடிவரும் மதுரவாறு தழல் கொள 
மட்டிலா உயிர் திகழப் பருகலும் கூடும் 
கைதவறிப் போனதோர் 
உள்ளக் களிப்பெனும் பழக்கம் 
மீட்டும் கைக்கொளக் கூடவும் கூடும். 
ஒளிர்ந்திட்ட அவள் உள் இயல்பின் 
பீடுற்ற பெருநலம் உணர்ந்து உய்த்தலும் கூடும் 
அவள் கதகதப்பில் வண்ணக் கோலோச்சில் 
ஆனந்தம் தேக்கித் திறம் காணவும் கூடும்; 
கடலனைய கனிந்தவிரக்கம் 
கீசுகீசென்னும் புள்ளொடுங்கும் வனாலயம், 
உட்கிடையில் அன்னாள் புரிஉதவி உயர்விண்ணின் 
கதவடைத்த தாள் ஒன்றைத் திறந்தது; 

Her inward help unbarred a gate in heaven - நன்றாக உள்ளது! **
** இந்த வரிதான்  எனக்கு இந்த இடத்தைக் காட்டிக் கொடுத்தது !
அண்டம் கடந்து அப்பாலாய் 
விரிந்த அவளின் அன்போ, 
அகில உலகும் அவள் ஒரு தனி இதயத்தில் 
புகல் காணவும் கூடும். 

Love in her was wider than the universe ,
The whole world could take refuge in her single heart
 அருமை!
திருப்தியறியாப் பெரும் தெய்வம் 
இங்கே பொருந்தி வதியலும் கூடும்; 
குறளுருவாய்க் கூனிச் சிறைப்பட்ட ஆன்மா 
காற்றின்றி அவனது உள்ளத்தெழுந்த 
உயர்வில் புரிந்த உயிர்மூச்சு 
அவள் உள்ளக் கிடையில், 
தொட்டதனைத்தும் தெய்வமாய்ப் 
புரிகின்ற ஆன்மிகத்தில் 
துறைகண்டு மண்டவும் கூடும்; 
ஏனெனில் ஏந்திழையாள்பால் மருவிய 
பேழ்வாய் அனைத்தும் பிறங்கு ஒளியின் 
போக்கறக் கரந்திட்ட ரகசியங்கள்; 
மௌனமே அவள், அதே பொழுது 
வாக்கும் அவளே; 
தானாய்ப் பர்ந்து நிரவும் 
சாந்தம் தேக்கிய கண்டம்; 
கமபனமற்ற கன்னித் தீயே கொழுத்த கடல்; 
கடவுளர்பால் கைவந்த மௌனம் அவளின் வன்மை; 
தன்னொத்த விரிவினை 
அவன் அவள்பால் கண்டுகொண்டான்; 
மீக்கிளர்ந்து கதகதத்த 
தன் சூக்கும ப்ராணாகாசத்தை 
அவன் மீட்டும் அவளிடத்தில் காணப்பெற்றான்; 
அவள்பால் அண்ணல் தன் அகத்துள் 
உலவுதல் போல் போத்தந்தான்; 
தன் சுயத்தின் நித்திய நிலைப்பேற்றையே 
அவன் அவளூடே சந்திக்கலுற்றான். 
------------------ 
----------------------------- 

***  

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

(இளங்கன்று பயமறியாது என்பதுபோல் ஒரு காலத்தில் எதை வேண்டுமானாலும் செய்யும் செருக்கு....என்ன பண்ணுவது..) 

Siva Siva

chưa đọc,
21:37:47 29 thg 7, 201129/7/11
đến santhav...@googlegroups.com
இனிய பாடல்கள்.

/ விஞ்சுதரும் கன்மம் /
இதன் பொருள் புரியவில்லை.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

பதினாலு பாட்டுகள் ஒரு மாலை போல் அமைந்தது. 

ஒன்று இரண்டு மூன்று என்று ஆரம்பித்து ஏழு என்பதில் ஆரம்பிப்பதில் மடிந்து மீண்டும் ஆறு அஞ்சு நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இறங்கு வரிசையாக அமைந்தது. எழுக்கூற்றிருக்கை என்று சொல்ல முடியாது. ஆயினும்.. 

வரிசையாக அமைத்துப் பார்த்தால் --- 


5) 

அஞ்சுதரும் இப்பவநோய் அண்டாமல் காத்தருளே 
விஞ்சுதரும் கன்மம் விளையாமல் கார்வண்ணம் 
கொஞ்சும் குழலழகர் கெஞ்சுபுகழ் ஆய்ச்சியவள் 
தஞ்சமெனத் தானடையும் நெஞ்சு. 






--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Hari Krishnan

chưa đọc,
23:16:11 29 thg 7, 201129/7/11
đến santhav...@googlegroups.com


2011/7/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

2011/7/30 Siva Siva <naya...@gmail.com>

இனிய பாடல்கள்.

/ விஞ்சுதரும் கன்மம் /
இதன் பொருள் புரியவில்லை.



மிகுகின்ற கர்மங்கள் 

வருகை தருதல் என்பன போன்ற பிரயோகங்களுக்கும் என் ஆசிரியருக்கும் வெட்டுப்பழி குத்துப்பழி.  தருதல் என்ற ஒட்டுக்கு

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு

--இவர்தந்து (குறள்)

துவரிதழ் மங்கலை சுமனை யாதியோர்
கவரிகள் இரட்டினர் கவுரி பாங்கரில்
இவர்தரும் ஒதிமம் எண்ணி லாதஓர்
அவிர்சுடர் மஞ்ஞைபால் அடைவ தாமென
--இவர்தரும் (கந்தபுராணம்)
தந்த பொருட்களை கொண்டே - ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயார்வார்
--அஞ்சுதரு (பாரதி)

சாலவு மஞ்சுதரும் - கெட்ட
	சதிக்குணத் தார்பல மாயம்வல் லோர்
கோலநற் சபைதனிலே - வந்து
	கொக்கரித் தார்ப்பரித்(து) அமர்ந்திருந்தன ரால்.
மேலவர் தமைவணங்கி - அந்த
	வெந்திறற் பாண்டவ ரிளைஞர்த மை
ஆலமுற் றிடத் தழுவி - செம்பொன்
	னாதனத் தமர்ந்தவப் பொழுதினி லே 

--அஞ்சுதரு (பாரதி, பாஞ்சாலி சபதம்)

இந்தத் தருக்களும் தங்கள் தருவும் தரும் பொருள் ஒன்றேதானா? :)

தந்த பொருட்களை கொண்டே - ஜனம் தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம் அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயார்வார்



--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

chưa đọc,
10:20:15 30 thg 7, 201130/7/11
đến santhav...@googlegroups.com
பேஷ்பேஷ்..ரசித்தேன்,வாழ்க,
 யோகியார்
 

2011/7/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பதினாலு பாட்டுகள் ஒரு மாலை போல் அமைந்தது. 

ஒன்று இரண்டு மூன்று என்று ஆரம்பித்து ஏழு என்பதில் ஆரம்பிப்பதில் மடிந்து மீண்டும் ஆறு அஞ்சு நான்கு மூன்று இரண்டு ஒன்று என்று இறங்கு வரிசையாக அமைந்தது. எழுக்கூற்றிருக்கை என்று சொல்ல முடியாது. ஆயினும்.. 

வரிசையாக அமைத்துப் பார்த்தால் --- 

1) 

ஒன்றும் உதவா எனைவைத்தென் நாடகமோ 
மன்றில்நீ ஆடி அலுத்ததுவோ - என்றைக்கும் 
சிந்தைக்கே எட்டா சிவனார்தம் சில்மிஷத்தால் 
நொந்தவுயிர் பந்தெனவே ஆடு. 

2) 

இரண்டாற்றின் நன்நடுவே என்பிறப் பென்றால் 
புரண்டுவிழ வாழ்ந்தேன் கடலி -- லரண்டுபோ 
யென்னரங்கா கூவுவனே ஏற்றெடுக்கும் கைநீட்டி 
உன்னடிக்கீழ் வைத்திடுவாய் காப்பு

3) 

முக்காலும் என்னுள்ளே நீயிருக்க நான்மறந்தே 
இக்காலம் என்கதறி என்னபயன்? -- மொக்குள் 
எனமறையும் தோற்றரவுக் கேயென்னை விற்றால் 
அனவரதம் உன்னுறவென் னாம். 

4) 


நான்மறையும் காலம் நனிநல்ல காலமெனில் 
நான்மறையும் காணா நயத்தக்கோய் -- ஊன்மறைய 
உன்னி உணர்வெழுமோர் காலமதே உத்தமமாம் 
மன்னும் அருளால் உவந்து. 


5) 

அஞ்சுதரும் இப்பவநோய் அண்டாமல் காத்தருளே 
விஞ்சுதரும் கன்மம் விளையாமல் கார்வண்ணம் 
கொஞ்சும் குழலழகர் கெஞ்சுபுகழ் ஆய்ச்சியவள் 
தஞ்சமெனத் தானடையும் நெஞ்சு. 


6) 

ஆறே எனக்கு நினபாதம் ஆயர்கோன் 
வேறெதுவும் நானறியேன் வித்தகமாய் -- கூறியசொல் 
காப்பெனவே காலமெலாம் கண்ணுறங்கா கைகாட்டில் 
கோப்புண்டுக் கண்வளரும் யான் 


7) 

எழுந்த திருக்கோலம் எங்கினியான் காண்பன் 
விழுந்த அவக்கோலம் காண்பாய் -- அழுந்த 
உனபாதம் என்தலைமேல் ஊன்றுவையேல் தோன்றும் 
மனத்தகத் துள்ளுன் முகம். 

*****
***
*
***
*****

8) 

எழுந்தமுக மெண்ணித் திளைப்பன் அழுவன் 
தழுவத் துடித்தே அயர்வன் -- வழுவிலா 
ஆர்வத்து வந்தகுறை என்னெனவே ஆகாமல் 
மார்வத்துள் முட்டுவன் யான். 


9) 

ஆறியிரும் பிள்ளாய் எனநீயும் ஆற்றுவையேல் 
தேறாதென் னாவி தெளிந்திடுக -- மாறாத 
அன்புனபால் வேண்டும் அரங்கா அருளாயேல் 
என்வழியில் பொன்றவிடு நீ. 


10) 

அஞ்சுபொருள் தானறிந்தார் ஆறறிந்தார் ஏழ்பாரும் 
துஞ்சாமல் காக்கின்ற தன்மையினார் -- விஞ்சுபுகழ் 
நான்மறையின் முப்பொருளை ஈரரசு தான்குலைய 
ஆன்றகுணத் தொன்று மவர். 


11) 

நாற்றிசையும் போற்றும் திருமா லவன்நாமம் கூற்றைக் கடிந்தோச்சும் குன்றாமல் காத்துநிற்கும் 
சேற்றில் கயல்பாயும் ஆற்றின் இடைக்குறையில் 
தோற்றும் பிறவியே காப்பு. 


12) 

முந்நீர் உலகும் மகிழப் புலரியெழ 
நன்னீர்மை கொண்டவுயிர் தாம்பொலிய -- எந்நீர 
வானாலும் எப்பொருளும் என்றும் திருமாற்கே 
தானாகும் சேடமாய்த் தாம். 


13) 

இருநிலத்தே வந்துதித்து இன்புதுன்பு கற்பீர் 
கருவில் திருவற்றீர் காலக்கூ ழானீர் 
திருவில் லெனத்தோன்றித் தான்மறையும் தன்மை 
வெருவித் தொழீர்திரு மால். 


14) 

ஒன்ற நினைத்தக்கால் உள்மனத்தே வந்துதித்து 
கன்றுக் குகந்தவென் காளாய் எனும்குரலே 
மன்றில் நடமாடி மாலாக்கும் மாலவர்க்கே 
ஒன்றடிமை ஓர்திறமாய் ஓர்.  


அரங்கன் உகந்திடவே மகிழ்ந்து. 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

SUBBAIER RAMASAMI

chưa đọc,
20:41:00 31 thg 7, 201131/7/11
đến santhav...@googlegroups.com


2011/8/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
(கனி விளம் விளம் மா விளம் 
விளம் மா விளம் ) 

பூமாதினி துறைமலர் மார்பொளிர் உயிரே உவந்தளித் 
திடுதிரு மாலே என்பனோ 
ஆமாறினி அறிவதென் பாலென விடுத்தா யெனிலுயி 
ரழித்திட லாமே யென்பனோ 
நாமாரினி நமக்கென யாதுள தெனவே எனபரம் 
உனதெனத் தீர்ந்தே னென்னிடில் 
சாமாறினி எதுபயம் யாதுள திடுக்கண் நினதிரு 
அடியிணை சார்ந்தே னெம்மனே. 

***

இது நானாக வைத்துக்கொண்ட வாய்ப்பாடு. இவ்வாறு நாமாக மனோதர்மத்தின் படி செய்ய யாப்பு இடம் கொடுக்குமா? 

*

-- இடம் கொடுக்கும். இதைப்பற்றி எனது விருத்தம் எழுத வருத்தம் எதற்குத் தொடரில் விரிவாக எழுதியிருக்கிறேன்.ஆனால் ஒன்று. அளவொத்து இருக்கவேண்டும். அதே சமயம் ஓசை ஒழுங்கிற்கும் தாளகதிக்கும் ஒத்துப்போகவேண்டும். அப்படி இல்லையென்றால் இலக்கணப்படி சரியாக அமைந்தாலும் சிறக்காது. எனவே தான் சில இலக்கணப்புலவர்கள் அப்படி ஒத்துப் போகும் சிலவகைகளை மட்டும் கொடுத்து அதற்குள் நிறுத்திக்கொள்க என்கிறார்கள்.
இலந்தை          நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:

SUBBAIER RAMASAMI

chưa đọc,
20:41:26 31 thg 7, 201131/7/11
đến santhav...@googlegroups.com
வாய்ப்பாடு  அல்ல   வாய்பாடு

2011/8/1 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Dr Subramanian

chưa đọc,
21:40:34 31 thg 7, 201131/7/11
đến santhav...@googlegroups.com
Dear Mohanarangan
I read with indulgence all the ten poems you have blogged.  Its a pleasant surprise that you have been blogging from 2005 on wards; and your rooftop garden gave me enough to enjoy a full late evening.

Of the ten poems presented, the first place goes to Agnihotra for being more focused and entirely poetic. The last place goes to Market place where imagery like calmness in the bay, repeated with a "sort of" and jostles surround do not go well together - however the idea of calmness midst chaos is a pretty theme to dwell upon.

Your poems on Uparishravas and Yayati score better and show your skill for interpreting the classics without being didactic. There are many good poetic coverage and to cite a few " darkness is soluble in poetry"; Eternal gifts of ephemeral lives." Time universal metered in subjective stops;  

The poem on Aging and Yayati incidentally brought to my mind the wonderful lines of Tagore " Man is immortal; therefore he has to die endlessly"

You have turned me into a regular visitor of your "roof top"

My best wishes
anbudan
VaVeSu



2011/7/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எனது ஆங்கிலக் கவிதைகள் சிலவற்றை இங்கு வலையேற்றியிருக்கிறேன். விரும்புவோர் படிக்க இந்தச் சுட்டி --- 




***



2011/7/30 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470
Website: phycospectrum.in

Kaviyogi Vedham

chưa đọc,
02:33:08 1 thg 8, 20111/8/11
đến santhav...@googlegroups.com
யானும் ஒத்துக்கொள்கின்றேன் அன்பர் மோஹன்..!
 உம்முடைய கருத்தை இப்புதிய வாய்பாடு ஏற்று நடத்துகிறது எனினும்,சில சீர்கள் அளவொத்து இருப்பினும் ஓசையும், நடையும் அழகாய் இல்லை என்பதைக்கண்டேன்.(இலந்தையின் கருத்துப்படியும்).. சொல்லவந்த கருத்தை ஏற்க வேண்டி எழுத்து/சீர் வளைகிறது சிரமப்பட்டு. இஃது கவனிக்கவும். அதனால் பாட்டும் சிற்சில இடங்களில் கடினமாயிருக்கிறது... நீவிர் நேரில் வந்து அர்த்தம் சொல்லவேண்டியதாயிருக்கின்றதே?
 மற்றபடி உம் முயற்சி வெல்க!.. இன்னும் எளிமைப்படுத்துக! சுவாரஸ்யம் வரவேண்டும் படிக்கையில்.இல்லையா நண்பரே!
 யோகியார்
2011/8/1 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

chưa đọc,
02:52:48 1 thg 8, 20111/8/11
đến santhav...@googlegroups.com
அய்யாமாரே.. என்ன அழ்காய் சொல்லியிருக்கின்றார் வவேசு.நல்ல விமர்சனமாய்த்தான் தோன்றுகிறது,. இந்த அளவுக்கு ஆங்கிலத்தில் பொளந்துகட்ட நமக்கு வர்லீங்காணும்!வவேசு சொன்னபிறகு மோஹனைத்திரும்பப்படித்தால் ஏதோ கொஞ்சம் நன்றாய்ப்புரிகின்றமாதிரி இருக்குங்காணும்!
 யோகியார்

2011/8/1 Dr Subramanian <vav...@gmail.com>

Siva Siva

chưa đọc,
18:36:27 22 thg 8, 201122/8/11
đến santhav...@googlegroups.com
உணர்ச்சி வடியும் பாடல்.

/இன்றுமுற்றும் தொடருமெனில்  /
இங்கே முற்றும் என்பதன் பொருள் என்ன?
ஒருவேளை 'மட்டும்' என்று சொல்லவந்தீர்களோ?

/ஆகாத எல்லாம் ஆக்கும் பெருங்கடவுள் 
போகாத எல்லாம் போக்கும் பரங்கடவுள் 
சோகாக்க வைக்குமெந்தன் 
சொந்த அறியாமைதனை 
எந்த வழியாலும் நீக்கத்தான் அறியாதோ? 
மந்த புத்திக் காரனுங்க! 
மன்னிச்சிட வேணுமிங்க./

பாடலில் திடீரென்று நடை மாறி இவ்விடத்தில் இருவரிகளில் பேச்சுவழக்கு வருவது மற்ற அடிகளோடு ஒத்துப் போகாததுபோல் எனக்குப்படுகிறது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2011/8/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஊரெங்கும் ஊதுகுழல்

முனையின் கரையில் 
தெய்வ வெள்ளத்தில் 
திவ்ய ஆற்றினில் 
சிறிதும் இறங்கி நனையாத 
ஓர் கிழவன் நான்; 
இழந்தவன் ஆனேன். 
மயிற்பீலி கொண்டு 
ஒரு சிறு பிள்ளை 
மாடுகள் ஓட்டி வருவதும் உண்டு; 
குறும்பன் அவன் என்று 
எச்சரிக்கையாக நான் 
இருந்ததும் உண்டு; 
இழந்தேன் ஏ பாவம்! 
கிருஷ்ணன் என்றே சொல்லுவார்கள்; 
வண்ணம் வைத்து அழைப்பார் போலும் 
என்றே இருந்தனன், 
என்னே என் மடமை! 

‘ஊருக்கே நீ தெய்வமாடா? 
உன்னைப் பலர் சொல்லுவதேன்?’ 
என்றொரு நாள் கேட்கையிலே 
‘கன்று மேய்ப்பவன் என்னிடம் நீர் 
கிண்டல் செய்வதோ சொல்லும் ஐயா?’ 
என்று நகைத்தவன் சென்று விட்டான். 
இன்றும் நகைக்கும் என் பேதைமையே. 

தன் முன் இருந்தவன் 
தெய்வமென்றே பின்னால் 
தானுணரும் கொடுமை 
தனிப்பட்டதோர் அவலம். 
அவன் பேசிய பேச்சினுக்கே 
இன்று புதுப் பொருள் தெரிந்திடுதே. 
அன்று உணர்ந்தேனோ 
கன்று உணர்ந்ததைக் கூட நான்? 
சென்று மணலினில் குன்று குகையினில் 
கன்று காலிகளின் கால்கள் இடுக்கினில் 
நின்ற மரக்கிளை நிவந்த கவட்டினில் 
முந்தும் அலைகளின் ஆற்றின் நடுவினில் 
எந்தப் பக்கமும் தேடித் தேடி நான் 
வந்து வந்து நோக்கினும் பயனிலையே! 
மந்த புத்தி என்னை நொந்தும் பயனில்லையே! 
மாட்டிடையன் என்று அவன் 
தோற்றம் அளித்தான்; 
மாட்டின் குலம் என்று இன்று 
தோற்றம் அளிப்பேன். 
அன்றவனைக் கண்ட போது 
ஒன்றும் கண்டிலேன்; 
இன்று காணும் நேரத்திலே 
அவனைக் கண்டிலேன்; 
நன்று நன்று போகட்டும் நான் 
இழந்தவை கோடி; 
சென்று வந்து போன கதை 
எத்தனை கோடி! 
என்றும் அவன் எனை வெறுக்கக் 
காரணம் உண்டு; 
என்று அவன் அடியிணைக்கே 
சேர்வதும் உண்டு? 
கோடிக் கோடி உயிரினமும் 
கொள்ளைபெரும் கோடி. 
ஓர் உயிர் நான்; என்னை அவன் 
காண்பதுண்டோ நாடி? 

பக்தர்களும் முனிவர்களும் 
பன்னெடுங்கால் யோகிகளும் 
என்னெடுங்கால் இயற்றுதவம் 
இன்றுமுற்றும் தொடருமெனில் 
என்னிலைதான் என்னெனவே 
தன்னைப்போலத் தெரியாதோ? 
ஆனாலும் ஒரு வருத்தம் 
போனாலும் வந்தாலும் 
போக்குவரவொழிந்தாலும் 
நீக்கறியா கேள்வியொன்று 
நிலைகுத்தி நிற்கிறது. 

ஆகாத எல்லாம் ஆக்கும் பெருங்கடவுள் 
போகாத எல்லாம் போக்கும் பரங்கடவுள் 
சோகாக்க வைக்குமெந்தன் 
சொந்த அறியாமைதனை 
எந்த வழியாலும் நீக்கத்தான் அறியாதோ? 
மந்த புத்திக் காரனுங்க! 
மன்னிச்சிட வேணுமிங்க. 
உலகமெல்லாம் படைக்கின்ற உத்தமனார் 
கலகம் செய்யுமெந்தன் 
கள்ள இருள் அஞ்ஞானம் 
விள்ள அறியாமல் 
விடைபெற்றுப் போனாரோ? 
தள்ளிவிட்டுப் போனாலும் 
தலைமைக்குப் பணிந்திடுவேன்; 
எள்ளிவிட்டுப் போனாலும் 
என் ஆண்டை என்று மகிழ்ந்திடுவேன். 
அள்ளிக்கொண்டு போவதற்கே 
கொடுத்துத்தான் வைக்கவில்லை; 
உள்ளத்தில் தனை உணர்த்த 
உத்தமர்க்கு ஏன் முடியவில்லை? 

உறைந்த பனியாகி 
ஓங்குகின்ற மாயையெனில் 
மறைந்து நின்ற மாதவனார் 
சோதிக்கே சூடு பத்தாதோ? 
அறைந்து வைத்த கர்மம் என்றால் 
அதுதான் வலிது போலும் 
அச்சுதரைக் காட்டிலுமே! 
ஏதோ என்பங்காய் 
எனைவிட்டுப் பிரியாத 
பிரித்தாலும் பேராத 
பெருத்த மாயைக்கே 
தோழமையும் பூண்டு விட்டேன்; 
எக்காளம் ஊதி 
எதிர்சங்கம் தானூதி 
மிக்கபுகழ் அச்சுதனார் 
மாஞாலம் புரக்கட்டும்; 
ஓருயிரின் அஞ்ஞானம் ஊதத் தெரியாத 
கார்மேக வண்ணனார் 
ஊதிநிரப்பட்டும் 
ஊரெங்கும் ஊதுகுழல். 

Siva Siva

chưa đọc,
18:21:44 30 thg 8, 201130/8/11
đến santhav...@googlegroups.com
/ தெள்ளு கயமாகித் தீங்கதிரைத் தான்சுமக்கும் /
கயம் - இக்காலத்தில் அரிதாகக் காணும் சொல்.

2011/8/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
போதிமரம் சிரிக்கிறது 


பூங்காற்று வீசியெழில் பூந்தாது வீசியெங்கும் 
ஏங்குகின்ற உள்ளமென ஏற்றும் இயற்கையெலாம் 
தாங்குளிரத் தாபம் அகற்றித் தவமுனிவன் 
ஓமொளிர உள்ளடங்கி உட்கார்ந்த பெற்றியென 
ஓங்கிப் படர்ந்தே உருவான மௌனத்தில் 
தாங்கிக் கிளைபரப்பித் தான்நின்ற போதிமரம் 
ஏனோ சிரிக்கிறது ஏதேதோ சொல்கிறது 
வானும் கவிந்து வெறிச்சோடிப் பார்க்கிறது 
கானத்துப் புள்ளெல்லாம் கேளா ஒலிக்குறிப்பில் 
போதிமரப் புன்சிரிப்பின் பூடகத்தில் கூடடங்கிச் 
சோதித் திருவாய் மலரச் சுகங்காக்கும் 
சுந்தரப்பொன் வட்டில் சுவர்பொங்கிச் சோதியெழ 
அந்தரத்தில் ஆதவனார் ஆகாசப் பாய்விரித்தார் 
நள்ளிரவில் நீர்மையினால் மண்குளிர்ந்த வாடையெங்கும் 
வள்ளல் விரிகதிர்க்கு வேளாண்மை செய்துவக்கும் 
பள்ள மடையாகிப் பாய்கின்ற நீர்சுமக்கும் 
தெள்ளு கயமாகித் தீங்கதிரைத் தான்சுமக்கும் 
எள்ளி நகையாடி ஏய்க்கும் உலகுதனின் 
கள்ளம் வெளியான காரணமும் புன்சிரிக்கும் 
தானென்ற ஒன்று தனியாக இல்லையென 
நானற்ற நல்கணத்தில் நிர்வாணம் ஆகிநிற்கும் 
போதி மகத்துவத்தின் பொல்லாங்கு புன்னகைக்கும் 
போதி மரத்திற்கே போந்த பொருளதனை 
வாதித்துப் பெற்றிடவே வாக்கதுவும் நாணிநிற்கும் 
சேதி உரைத்திட்டுச் சையோகச் சைதன்யம் 
மீதி உரைப்பதற்குள் மௌனக் கருவாய்க்கும் 
ஆதியொடு அந்தம் அகத்தினிலே கண்டுவந்த 
போதிப் பெருமகனார் போந்தபொருள் கண்டதனால் 
ஓதும் பெருமரத்தின் ஓங்கு தருநீழல் 
விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்த 
அட்டஹாசத் தொன்றாமிப் பா. 

Kaviyogi Vedham

chưa đọc,
03:35:28 31 thg 8, 201131/8/11
đến santhav...@googlegroups.com
அன்பரே..நல்ல கவிதை. வித்யாசமானதும் கூட.கொஞ்சம் கடினமும் கூட.
 யோசித்து யோசித்து மூன்று முறை படித்துத்தான் பொருள் புரிந்துகொண்டேன்.
வாழ்க நீ!,
 யோகியார்

விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்த 
அட்டஹாசத் தொன்றாமிப் பா. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

chưa đọc,
03:20:21 14 thg 9, 201114/9/11
đến santhav...@googlegroups.com
ம்ம்ம்... அட்டகாசம்... சுவை இருக்கின்றது. ஆயினும் இன்னும் சற்று எளிமையாக எழுதப்பட்டிருக்கலாமோ(எல்லோர்க்கும் போய்ச்சேரும் விதமாய்!)-என்னும் என் ஆதங்கத்தையும் கூறத் தயக்கம்..
யோகியார்

2011/9/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீஅரவிந்தரின் The Infinitesimal Infinite என்ற கவிதையின் தமிழாக்கம். 


மீச்சிறு கோணில் அநந்தம் 


மாறாத மகத்தினின்றும் இவண் வந்தோம் 
கோடானுகோடி அண்டங்கள் அதற்கே 
புல்லிய ஆட்டத்தின் ஒளி நுரையாம் 
அநந்தத்தின் புன்சுடரவிரப் போந்ததுவாம் 

விரிந்துகிடந்த அதனூடு தன்னுயிரைக் காணாதாகி 
வடிவு சுருக்கிச் சிறுபுள்ளியதுவாய் ஆகி 
எல்லையற்றுப் பொடியாகி அலட்சியமாய் வீசிவிட 
மண்ணின்பால் சேற்றில் மக்கிப்போய்ப் புறம்வீழ்ந்த போதத்தின் வினோதம் -- 

எதேச்சையாம் கோளமொன்றின் மீதார்ந்த திசுப்பிஞ்சாய்க்
குட்டைக்கதிரொன்றின் குறுகிய மண்டலத்தே 
குற்றுயிராய்க் கொண்ட உடையே சதையுடலாய்ச் 
சிறுமனத்தின் சிறகடித்துச் சுற்றிவர விரிவானாய்  ! 

வாழ்ந்தது அறிந்தது கண்டதுதன் ஆத்ம கம்பீரம் தன்னையே 
இறப்பின்றி அளந்தப்பால் விண்கடந்தே 
காலமும் தான்கடக்கத் தானாய் நின்றே! 

***  

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


மூலம் இங்கே -- 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

chưa đọc,
02:04:04 16 thg 9, 201116/9/11
đến santhav...@googlegroups.com
நன்றி..சரி,
 யோகியார்

2011/9/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/9/14 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

ம்ம்ம்... அட்டகாசம்... சுவை இருக்கின்றது. ஆயினும் இன்னும் சற்று எளிமையாக எழுதப்பட்டிருக்கலாமோ(எல்லோர்க்கும் போய்ச்சேரும் விதமாய்!)-என்னும் என் ஆதங்கத்தையும் கூறத் தயக்கம்..
யோகியார் 

நன்றி ஐயா! ஆனால் கருத்துகளைக் கூற ஏனய்யா தயக்கம்? :-)

துரை.ந.உ

chưa đọc,
02:08:17 16 thg 9, 201116/9/11
đến santhav...@googlegroups.com


2011/9/8 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வேதாந்தியின் விண்ணப்பம் 

002.gif
மலர் கொடுக்கும் வரம் கிடைத்தமைக்கு நன்றி 
 


பேருயிரே !
உள்ளத்தின் ஆழத்தில் 
உலவும் நிலைச் சுடரே !

நீ மட்டுமே உண்டு 
அந்தோ ! இந்த இருளால் 
நானும் மறைபட்டுக் கிடப்பதென்ன? 
என் கதிர்பட்ட பகுதியுமே 

மேகங்களால் மங்கிவிட? 
ஆசையெனை 
அலங்கோலமாக்கிடவும் 
வழிதப்பி, அலைப்புண்டு 

விதிர்த்து எழும் உணர்ச்சித் தீ 
வாட்டிடவும் 
உன்னமைதி விட்டெறிய 
இருள்பொறியின் சுழல்தன்னில் 
சிக்குவதேன்? 

துயரத்திற்கெனைக் காட்டித் 
தொய்வே தலைதூக்கக் 
காமத்தால் பேதுறவே? 

குருதியுறை விவஸ்தையிலா 
என் கடந்த வாழ்நாள் 
உன் ராஜரீகத் தயவை ஏன் 
எதிர்க்க வேண்டும்? 
தாமத்திக்கத் தான் அது ஏன் 
வைக்க வேண்டும்? 

தன்னந்தனி உண்மையே! 
பன்னம்பல தெய்வங்கள் 
உன்னை அபிநயிப்பார் 
அவர் எந்தன் இளமைதனை 
இனும் ஏய்க்க விடுதியோ நீ 

ஆர்ப்பரிப்பு இவை அடங்குக 
நித்தியத்தின் குரல் கேட்பேன் 
நிலைத்ததுவின் விழைவறிவேன். 

நித்யத்தின் தலைவாசல்
மொய்த்துப் பளபளக்கச் 
சுடரும் இக்காட்சிகளை 
விலக்கிவிடு -- வரந்தருவாய் 

மயர்விலா மதிக்கண்ணை 
யௌவனமும், துல்லியமும் 
வளர்த்தெடுக்கட்டும் என் இதயத்தை

காதுகள் செவிடுபட 
கூக்குரலிடும் ஆவல்களைக் 
கடிந்திடுவாய், என் பிரபுவே! 

கறைபடிந்த என் நூற்றாண்டுகளை 
துலக்கிவிடு என் 
தூய்மைதனை மீட்டுக்கொடு 

ஞானத்தின் மறைக் கதவே ! 
தாள திறவாய். 
பலமே ! நின்னைப் பூர்த்தி செய்வாய் 
அன்பே ! அடங்காது புறம் பொழிவாய்  

*** 

ஸ்ரீஅரவிந்தர் எழுதிய Vedantin's Prayer என்ற கவிதையை மொழிபெயர்த்தேன். அதன் மூலம் ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.


***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
என்றும் அன்புடன்  
        துரை .ந.உ
       ..
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

002.gif

Kaviyogi Vedham

chưa đọc,
00:36:47 23 thg 10, 201123/10/11
đến santhav...@googlegroups.com
அதுசரி..மோஹனாரே!..ரசித்துத்தான் படித்தேன் உம் கவிதை..லாஹிரியாய்த்தான் உளது.
இந்த உமர்கயாம் என்று ஒருத்தர் எழுதினாராமே,..அவருடையதுபோல் இருந்தது.
ஆயின்..வெறும் புருடா இந்த ஓங்காரப்பெருவாழ்வு என்று எழுதிவிட்டு.லாஹிரி மயக்கத்தில் சோம்பேறி போல் வாழ்ந்துகழித்துவிடலாம் என்று சொல்கின்றீர்.அப்புறம் எதற்கு
பொற்காலக் கணக்கும், புற்காலக் கணக்கும்
விற்றுவந்த பற்றுக்குள்
வைத்துப் போனவளை
எற்றுக்கு நாம் கூவுவது?
..
 
என்று சொல்வது ஏன்?வைத்துப்போனவள் என்று பராசக்தியை உணர்வதுபோல் சொல்லி கவிவரியால் மயக்குவது ஏன்?
எல்லோரும் இதே சோம்பலால் வாழ்வைக்கழித்தால் பின்பு ஏன் யோகம், தியானம் என்று  தீவிரப் பயிற்சியால்கடவுள் அறிவோடு ஒன்றுதல்..என்பதெல்லாம் வீண் என்கின்றீரா?..புரியலையே.
என்ன? லாஹிரி மஹாஷய் மகானை குருவாக ஏற்று
 கிரியாயோகம் பயின்றுவருமிவன் சொல்வது சரிதானே?!
யோகியார்
2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓங்காரப் பெருவாழ்வு

ஆஷாடபூதியாகிக் கழிந்தது வாழ்வு. 
ஆரூடமும் பொய்த்தது. 
நிர்மூடமாகப் பல்லிளித்து 
நிற்கும்படியானது காலக் கூண்டில். 
வானத்தில் ஜாகை அமைக்க எண்ணிப் 
பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது ஜீவன். 
என் மூக்கறுத்த எக்காளத்தில் 
தெய்வங்கள் கள்ளுண்டு கிறங்கும். 
உன்மத்தமாகிப் போனாலும் 
ஓரிழவும் புரியாமல் போய்ச் சேரலாம். 
உயிர்க்கொலையாய்ப் பரிதவிக்கப் 
பாதி சொல்லிப் போனவளின் 
சேதி தெரியாமல் சுடுகின்ற நனவு 
சுருட்டி அடித்துப் போய் ஒண்டும் கனவுகள் 
தீய்ந்து பொட்டல் காடாய் 
ஆகிய நினைவுகளுக்கு 
ஆஹுதியாய் அவ்வப்பொழுது என் உள்ளம்; 
வானைத் திரித்து வண்ண மயிலாட்டம் 
ஆடுகின்ற என்னொத்தார் 
ஆங்காரத்தில் பலியாகிப் 
போங்காலம் பொங்கல் வைத்து 
உண்ணும் இவ்வுலகின் நாயகிக்குக் 
கண்ணும் உண்டு; காதும் உண்டு. 
எண்ணும் சிந்தனைதான் உண்டோ அறியேம். 
சிந்திப்பது அற்ப மனிதப் பழக்கம்; 
சித்தில் சிலம்பாடிச் 
சீவனுக்குள் சிதாகாசப் 
பந்தக்கால் நட்டுவைத்த 
பரத்திற்கேன் சிந்திக்கும் பாரம்? 
முந்தி எழுந்த மூலப் பொருளில் 
முக்கால வட்டாடிப் 
பொற்காலக் கணக்கும், புற்காலக் கணக்கும் 
விற்றுவந்த பற்றுக்குள் 
வைத்துப் போனவளை 
எற்றுக்கு நாம் கூவுவது? 
இற்றைப் பொழுது நிஜம்; 
மற்றவற்றைக் கழுவிவிட 
மதுவுண்டு; 
மாமோகலாகிரியாய் 
மறதியுண்டு; 
சுற்றிவரும் கணக்கினிலும் 
ஒரு சொகுசு உண்டு; 
சாமாறு வரும் வரையில் 
சங்கடங்கள் பழகிப்போய் 
நாமார்க்கும் குடியல்லோம்; 
நமனை அஞ்சி 
நயப்பதெலாம் நைந்துவிழ 
நாம் வீழும் நாள்வரையில் 
நாம் எதையும் அஞ்சகிலோம்; 
ஓங்காரப் பெருவாழ்வு 
என்றே ஒரு புருடா 
சோமரஸமாகிச் சொக்கத்தான் 
ஆடிடுங்காண்!. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

karuannam annam

chưa đọc,
03:16:09 23 thg 10, 201123/10/11
đến santhav...@googlegroups.com
2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓங்காரப் பெருவாழ்வு


பாதி சொல்லிப் போனவளின் 
சேதி தெரியாமல் சுடுகின்ற நனவு 
 
விற்றுவந்த பற்றுக்குள் 
வைத்துப் போனவளை 
எற்றுக்கு நாம் கூவுவது? 
இற்றைப் பொழுது நிஜம்; 
மற்றவற்றைக் கழுவிவிட 

தங்கள் பார்வையில் கவிதையின் சேதி அறிய ஆவல் திரு மோகனரங்கன். கள் மறதியன்றி வேறு வழியும் சொல்லுங்கள்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

karuannam annam

chưa đọc,
10:23:36 23 thg 10, 201123/10/11
đến santhav...@googlegroups.com
2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! அந்த மதுதான் என்ன என்று கடைசி வரிகள் சுட்டுகின்றனவே 

>>>>ஓங்காரப் பெருவாழ்வு 
என்றே ஒரு புருடா 
சோமரஸமாகிச் சொக்கத்தான் 
ஆடிடுங்காண் >>> 


புருடா என்ற சொல் இட்டது குறித்து எனக்குப் புரியவில்லை.
ஓங்காரப் பெருவாழ்வு பற்றி இயன்றபோது எழுதுங்கள்.
தொந்தரவுக்குப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
14:15:27 23 thg 10, 201123/10/11
đến santhav...@googlegroups.com
>இவ்வுலகின் நாயகிக்குக் 
>கண்ணும் உண்டு; காதும் உண்டு. 
>எண்ணும் சிந்தனைதான் உண்டோ அறியேம். 
>சிந்திப்பது அற்ப மனிதப் பழக்கம்;

 
>பந்தக்கால் நட்டுவைத்த 
>பரத்திற்கேன் சிந்திக்கும் பாரம்?


”கண்ணில்லையோ உனக்குக் காதென்ன செவிடோ?” என்று கே.ஆர். ராமசாமி பண்டு நாள் திரைப்படமான வேலைக்காரியில் உலகநாயகியைக் கேட்பார், நீங்கள் சிந்திக்கும் திறனையும் இல்லையென்றாக்கி விட்டீர்கள்! satire at its height!
அந்த ஓங்காரப் ’புருடா’வை விட்டுத் தொலைக்கவும் முடியாமல்.. ஒரே அவஸ்தைதான். ஏனோ அதுவும் திரும்பிப்பார்க்கையில் இனிக்கத்தான் செய்கிறது :-)

அனந்த்


2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஓங்காரப் பெருவாழ்வு

ஆஷாடபூதியாகிக் கழிந்தது வாழ்வு. 
ஆரூடமும் பொய்த்தது. 
நிர்மூடமாகப் பல்லிளித்து 
நிற்கும்படியானது காலக் கூண்டில். 
வானத்தில் ஜாகை அமைக்க எண்ணிப் 
பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது ஜீவன். 
என் மூக்கறுத்த எக்காளத்தில் 
தெய்வங்கள் கள்ளுண்டு கிறங்கும். 
உன்மத்தமாகிப் போனாலும் 
ஓரிழவும் புரியாமல் போய்ச் சேரலாம். 
உயிர்க்கொலையாய்ப் பரிதவிக்கப் 
பாதி சொல்லிப் போனவளின் 
சேதி தெரியாமல் சுடுகின்ற நனவு 
சுருட்டி அடித்துப் போய் ஒண்டும் கனவுகள் 
தீய்ந்து பொட்டல் காடாய் 
ஆகிய நினைவுகளுக்கு 
ஆஹுதியாய் அவ்வப்பொழுது என் உள்ளம்; 
வானைத் திரித்து வண்ண மயிலாட்டம் 
ஆடுகின்ற என்னொத்தார் 
ஆங்காரத்தில் பலியாகிப் 
போங்காலம் பொங்கல் வைத்து 
உண்ணும் இவ்வுலகின் நாயகிக்குக் 
கண்ணும் உண்டு; காதும் உண்டு. 
எண்ணும் சிந்தனைதான் உண்டோ அறியேம். 
சிந்திப்பது அற்ப மனிதப் பழக்கம்; 
சித்தில் சிலம்பாடிச் 
சீவனுக்குள் சிதாகாசப் 
பந்தக்கால் நட்டுவைத்த 
பரத்திற்கேன் சிந்திக்கும் பாரம்? 
முந்தி எழுந்த மூலப் பொருளில் 
முக்கால வட்டாடிப் 
பொற்காலக் கணக்கும், புற்காலக் கணக்கும் 
விற்றுவந்த பற்றுக்குள் 
வைத்துப் போனவளை 
எற்றுக்கு நாம் கூவுவது? 
இற்றைப் பொழுது நிஜம்; 
மற்றவற்றைக் கழுவிவிட 
மதுவுண்டு; 
மாமோகலாகிரியாய் 
மறதியுண்டு; 
சுற்றிவரும் கணக்கினிலும் 
ஒரு சொகுசு உண்டு; 
சாமாறு வரும் வரையில் 
சங்கடங்கள் பழகிப்போய் 
நாமார்க்கும் குடியல்லோம்; 
நமனை அஞ்சி 
நயப்பதெலாம் நைந்துவிழ 
நாம் வீழும் நாள்வரையில் 
நாம் எதையும் அஞ்சகிலோம்; 
ஓங்காரப் பெருவாழ்வு 
என்றே ஒரு புருடா 
சோமரஸமாகிச் சொக்கத்தான் 
ஆடிடுங்காண்!. 

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
14:49:01 23 thg 10, 201123/10/11
đến santhav...@googlegroups.com
’கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில்:
புருடா - பொய் (வழக்கு: இவர் கூறுவதெல்லாம் புருடா.)

அனந்த்

2011/10/23 karuannam annam <karu...@gmail.com>

karuannam annam

chưa đọc,
22:33:17 23 thg 10, 201123/10/11
đến santhav...@googlegroups.com
நன்றி

சொ.வி..

2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! நாத்திகத்தனம், விட்டேத்தி மனப்பான்மை, அனைத்தையும் ஐயுற்று மறுக்கும் போக்கு என்பதெல்லாம் ஆன்ம சாதகனுக்கு அவன் வழிப்பயணத்தில் நேரக் கூடிய அவஸ்தைகள். இது போன்ற வறட்சிகளைத் தாண்டித்தான் மெய்ஞ்ஞான நிலைக்கு ஒருவன் போய்ச் சேருவதாக ஞானிகள் உரைக்கின்றனர். அப்படி ஒரு வறட்சி நிலையில் விழுந்த ஆன்ம சாதகர் ஒருவரின் மனப்பான்மையை மையமிட்டுத்தான் கவிதை நகர்கிறது என்பதை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும். 

***
 

2011/10/23 karuannam annam <karu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

--

Kaviyogi Vedham

chưa đọc,
00:23:25 24 thg 10, 201124/10/11
đến santhav...@googlegroups.com
நன்றாகச சொன்னீர்கள்
 
னந்த்
சிலசமயம் நீங்கசொல்கிறநிலை வந்தாலும் சட்டென்று குருஜி என்னை மேல் தூக்கிவிடுவதும்  உண்டு.
யோகியார்
 
 
 
 
 
 
 
..
 
 


 
2011/10/23 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

chưa đọc,
00:27:32 24 thg 10, 201124/10/11
đến santhav...@googlegroups.com
then it is alright. wshat yu say is correct.but we shd go forward always with strong determination. and see positive side reading our saints' advice.and experiences.
yogiyar

2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! நாத்திகத்தனம், விட்டேத்தி மனப்பான்மை, அனைத்தையும் ஐயுற்று மறுக்கும் போக்கு என்பதெல்லாம் ஆன்ம சாதகனுக்கு அவன் வழிப்பயணத்தில் நேரக் கூடிய அவஸ்தைகள். இது போன்ற வறட்சிகளைத் தாண்டித்தான் மெய்ஞ்ஞான நிலைக்கு ஒருவன் போய்ச் சேருவதாக ஞானிகள் உரைக்கின்றனர். அப்படி ஒரு வறட்சி நிலையில் விழுந்த ஆன்ம சாதகர் ஒருவரின் மனப்பான்மையை மையமிட்டுத்தான் கவிதை நகர்கிறது என்பதை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும். 

***
 

2011/10/23 karuannam annam <karu...@gmail.com>


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Dr Subramanian

chưa đọc,
08:58:22 30 thg 10, 201130/10/11
đến santhav...@googlegroups.com
அடேய்! சபாஷ்

2011/10/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஜீவன் 

இந்த ஜீவனை 
என்னவோ என்று நினைத்தேன். 
கடைசியில் பார்த்தால் 
கெமிகல் எதிரியக்கங்களையும் 
குட்டிக் குட்டி ப்ரோக்ராம்களையும் 
தின்று கொண்டிருக்கிறது. 

புளியமரத்துப் பிள்ளை! 
சரியாகத்தான் சொன்னீர். 
‘செத்ததன் வயிற்றில் 
சிறியது பிறந்தால் 
அது அத்தைத் தின்று 
அங்கே கிடக்கும்’ 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Kaviyogi Vedham

chưa đọc,
03:19:23 31 thg 10, 201131/10/11
đến santhav...@googlegroups.com
அட்டகாசம்..வாழ்க.
 யோகியார்

2011/10/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தீபாவளி 26 ஐ முன்னிட்டு 26 வரிகளில் 


தீப ஆவளி 


ஆதி உலகிடை ஆர்ந்தெழுந்த தீ 
ஆதவர்க்கிடைக் காயந்தழன்ற தீ 
கூதிர்கம்பனம் போக்கவந்த தீ 
கோதிலாவகை ஆக்க வந்த தீ 
நாதியுற்றிட முன்னடந்த தீ 
நியதியுற்றிடப் பின்சுடர்ந்த தீ 
வேதியல்விதி விரிவடைந்த தீ 
ஓதுவாய்மையின் உள்ளமர்ந்த தீ 
தீதிலாவகைத் திறலெழுந்த தீ 
தாதுலாவகைத் தடையழித்த தீ 
காதுலாக்கயல் விழியுமிழ்ந்த தீ 
போதுலாக்கதிர் புலர்ந்துவந்த தீ 
மீதுலாம்அலை குழைந்துவந்த தீ 
வாதுலாம்நெறி விளங்கவந்த தீ 
மாதுலாம்சடை ஆடவந்த தீ 
மோதுமைம்புலன் சாம்பரான தீ 
மீதுறாவகை மனமடங்கு தீ 
பேதுறாவகைப் புலன்விளங்கு தீ 
சேதமைத்துசெல் சரம்துரந்த தீ 
சூதமைத்தபுன் கூட்டழித்த தீ 
ஊதுகின்றதோர் குழல்படர்ந்த தீ 
ஓதுகின்றதோர் மெய்யடர்ந்த தீ 
மாதமர்ந்ததோர் மலர்பழித்த தீ 
ஊதைக்காற்றினில் உள்குமைந்த தீ 
பேதைக்கோவியர் பிரிவடர்ந்த தீ 
தீதிலாநெறித் தீப ஆவளித் தீ தீ தீ 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

chưa đọc,
22:23:54 31 thg 10, 201131/10/11
đến santhav...@googlegroups.com
அருஞ்சொற்கள் அமைந்த அஞ்சுபாடல்கள்!

சில பாடல்களில் சில அடிகளில் மோனை அமையவில்லை. அங்கும் இருக்கின் இன்னும் சிறக்கும்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/10/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அரனைந்தாதி 


தில்லைத் திகழ்கூத்தா தாண்டவத்தி லாடுசடை 
தொல்லை வினைபாற்றத் தூக்கியகால் நல்லரணோ 
பொல்லா இருளடக்கிப் போதப் புகலளித்துக் 
கல்லா எனைக்காவாக் கால்  

கால்நொந்தக் கால்வருங் காலன் பயம்தீர 
சேல்நொந்த கண்ணாள் சிவையருள-- 
பாலாய்ச் 
சிவனார் அருட்கண்ணால் சிந்தனையில் நின்றே 
பவனானால் என்னாம் பவம். 

பவங்கடக்கும் உத்திப் பரிவாள் வலமாய்ச் 
சிவன்கிடக்கும் என்றே நினைவாய் -- அவமகற்றி 
ஆன்றதன் கண்ணால் அனைத்தும் தனையொப்பப் 
பூன்றமாய்க் காட்டுமே தான். 

தானாகி நின்றுலவும் சங்கமமாய்த் தாவரமாய்க் 
கோனாகி நின்றும் குருவாகி வந்தானும் 
மானா பிமானம் கடந்தான் மகேசன்தாள் 
தேனாய்த் துளிர்க்கும் தவம். 
*
தவம்செய்துத் தம்முலகம் பெற்றாரே யன்றிச் 
சிவம்பெற்றார் யாவரே எண்ணில் -அவச்சுட்டே 
தாமொழித்துக் காட்டுவான் காண்பான் அவனென்ற 
நேமத்தா ரிப்பவத் தில்லை. 

Kaviyogi Vedham

chưa đọc,
00:24:39 1 thg 11, 20111/11/11
đến santhav...@googlegroups.com
வெண்பாக்கள் நன்று. ரசித்தேன்.சிவா சொன்னபடி மோனை அமையின் இன்னும் நன்று.
யோகியார்

2011/11/1 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
16:29:45 3 thg 11, 20113/11/11
đến santhav...@googlegroups.com
>சோதனை ஆட்டத்தை
> நிறுத்தும் பொத்தான் மறந்துவிட்ட
> நிர்மலனார் யாரேயோ?

ஆட்டமெனக் காண்பதுவும் ஆள்ஒருவன் பொந்தில்நமைப்
பூட்டிவைத்தான் என்பதுவும் பொய்,அதனைப் பொடியாக்கி
வீட்டுவிக்கும் பொத்தான்நம் விரல்நுனியில் அதையழுத்தின்
மீட்டுமுள்ளே வீணையொலி மீளாது ஜீவவலி.

அனந்த்


2011/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> சோதனை எலி
> சோதனைச் சதுரத்தில்
> சுற்றிச் சுற்றிச் சுகம் நாடிப்
> பொத்தானே கதியாகிப்
> போய் நிற்கும் எலிக்கு
> எவ்விதத்தில் வேறானோம்
> சோராமல் சுற்றிவந்து
> சுகவில்லைக்குத் துடுப்பழுத்தும்
> அகவிலைதான் வாழ்வென்றால்
> புகவிட்டதுதான் யாரோ?
> சகமாயை என்ற சாத்திரமும்
> யார் கூற்றோ?
> அகலாத ஆட்டமென
> வளையவரும் சம்சாரச்
> சக்கரத்தின் நாபியிலே
> உட்கார்ந்தால் ஒருவேளை
> தப்பிக்க வழியுண்டோ?
> மெய்ப்பிக்க வழியின்றி
> எல்லார்கைச் சீட்டையும்
> போட்டாடிப் புலனழிக்கும்
> பொல்லாங்கோ மனமழிக்க
> வில்லாங்கே விட்ட சரம்
> விலாவில் வந்து தைப்பதுபோல்
> உய்வதற்கு முனைந்ததெல்லாம்
> உள்குத்தாய் ஆகிவிட்டால்
> எள்கத்தான் இவ்வுயிரோ?
> விள்ளமுடியாத வேதனைக்கே
> வாடிக்கையாய்ப்
> பழகிவிட்ட பதவிசுக்கே
> அழகிதென்று ஆக்கிவிட்டுச்
> சோதனை ஆட்டத்தை
> நிறுத்தும் பொத்தான் மறந்துவிட்ட
> நிர்மலனார் யாரேயோ?


> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

> *

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
23:02:03 3 thg 11, 20113/11/11
đến santhav...@googlegroups.com
நட்டாற்றில் விட்டவனும் நமைக்காக்க நிற்பவனும்
எட்டிநிற்கும் ஒருவனல்ல என்றும்நாம் ஆகநம்முள்
ஒட்டிநிற்கும் உண்மையைநாம் உணராமல் மாயைஅதன்
கட்டினிலே நிற்பதனால் காணுமொரு தோற்றமன்றோ

அனந்த்


2011/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> ஜீவவலி கொண்டு ஜனனத்தால் ஜங்கமமாய்
> ஏவலுக்கே ஏற்றிவிட்ட யந்திரமாய் நாவலோ
> நாவலென நட்டாற்றில் விட்டவரார் அக்கரைக்கே
> காவலென நின்றதும்யார் கூறு.
> ***
>
> 2011/11/4 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

chưa đọc,
01:25:31 4 thg 11, 20114/11/11
đến santhav...@googlegroups.com
அடேங்கப்பா..என்ன உயரிய தத்துவம். மோகன்!.நிதானமாய் யோசிக்க முடிந்ததில் அநந்த் சொன்னபோது புலப்பட்டது.
யோகியார்

2011/11/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சோதனை எலி

சோதனைச் சதுரத்தில் 
சுற்றிச் சுற்றிச் சுகம் நாடிப் 
பொத்தானே கதியாகிப் 
போய் நிற்கும் எலிக்கு 
எவ்விதத்தில் வேறானோம் 
சோராமல் சுற்றிவந்து 
சுகவில்லைக்குத் துடுப்பழுத்தும் 
அகவிலைதான் வாழ்வென்றால் 
புகவிட்டதுதான் யாரோ? 
சகமாயை என்ற சாத்திரமும் 
யார் கூற்றோ? 
அகலாத ஆட்டமென 
வளையவரும் சம்சாரச் 
சக்கரத்தின் நாபியிலே 
உட்கார்ந்தால் ஒருவேளை 
தப்பிக்க வழியுண்டோ? 
மெய்ப்பிக்க வழியின்றி 
எல்லார்கைச் சீட்டையும் 
போட்டாடிப் புலனழிக்கும் 
பொல்லாங்கோ மனமழிக்க 
வில்லாங்கே விட்ட சரம் 
விலாவில் வந்து தைப்பதுபோல் 
உய்வதற்கு முனைந்ததெல்லாம் 
உள்குத்தாய் ஆகிவிட்டால் 
எள்கத்தான் இவ்வுயிரோ? 
விள்ளமுடியாத வேதனைக்கே 
வாடிக்கையாய்ப் 
பழகிவிட்ட பதவிசுக்கே 
அழகிதென்று ஆக்கிவிட்டுச் 
சோதனை ஆட்டத்தை 
நிறுத்தும் பொத்தான் மறந்துவிட்ட 
நிர்மலனார் யாரேயோ? 
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Siva Siva

chưa đọc,
13:35:07 7 thg 11, 20117/11/11
đến santhav...@googlegroups.com
/யாரானும்/
'யாராயினும்' என்பதன் இடைக்குறை விகாரமா?
'யாரேனும்' ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/11/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கூறாமல் கூறும் திறம்


கூறாமல் கூறும் திறமறிவார் கூற்றுவர்க்கே 
மாறா விடையளித்தார் மன்னுசிவ னென்றிடுவார் 
யாரானும் கற்கயிவண் யோசித்தா லிவ்விடத்தில் 
பேராமல் நின்றதுதான் பீடிக்கும் சாவொன்றே 
போதாக் குறையினுக்கே பொல்லாங்கும் புன்மைக்கு 
வாதாடி நிற்கின்ற வஞ்சனையும் வாய்மை 
கரந்திட்ட வன்குணமும் காரிருளாய் நெஞ்சும் 
புரக்கின்ற பொன்னங் கழலறியா நாட்டில்
அரைக்கசைத்த கோமகனார் ஆடுபல்லக் காடிப் 
புரைமலிந்த வாழ்க்கையினில் பொன்றாப் பவிசினிலே 
உத்தமர்தாம் உள்ளம் கருகிடவே ஊர்கோடிப் 
பித்தர்தம் முன்னே பிரதோஷ வேளையிலே 
எத்தர்கள் நிற்கின்ற ஏற்றத்தைக் கண்டுகந்தே 
எத்திக்கும் எக்காளம் ஊதிப் புறப்பட்டார் 
முத்திக்கு மூல முழுமுதலாய் முன்வந்தார் 
பத்திக்கும் என்னோ பொருள். 

Dr Subramanian

chưa đọc,
02:46:18 13 thg 11, 201113/11/11
đến santhav...@googlegroups.com
நீ நீ நீ
நீ கவி
கவிதையில் நீ

நான் நான் நான்
நான் கவி
கவிதையுள் நான்;

மூன்றாவது யார்?
மூன்று ஆவது புதிர்!

இரண்டாவது யார்?
இரண்டும் ஆவது புதிர்!

முதலாவது யார்?
முதல் "ஆனதும்" புதிர்!

புதிரென்று புரிந்து கொள்வதே
புதிர் விலகும் புதிர்.

அன்புடன்
வவேசு


2011/11/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஜீவப் புதிர் ! 


ப்ரபஞ்சத்தின் பொட்டல் வெளியில் ஒரு ஜீவன். 

என் வாழ்க்கை 
என் உயிர் 
என் எண்ணம் 
என் மனம் 
என் உணர்ச்சிகள் 
என் சந்தோஷம் 
என் துக்கம் 
என் இன்பம் 
என் துன்பம் 
என் மதிப்பு 
என் வேதனை 
என் சொந்தம் 
என் குடும்பம் 
என் வீடு 
என் குழந்தைகள் 
என் மனைவி 
என் கணவன் 
என் அப்பா 
என் அம்மா 
என் சகோதரி 
என் சகோதரன் 
என் செல்வம் 
என் வண்டி 
என் ஆடு மாடு 
என் கோழி 
என் வயல் 
என் தோட்டம் 
என் காமம் 
என் என் என் 
நான் நான் நான் 
என் என் என் 
நான் நான் 
என்... 

பொட்டல் வெளியில் ஒரு புதிர் 
ஜீவனை எதிர்கொள்ள ----

***கடவுள் !!! ****

என் வாழ்க்கை 
என் குடும்பம் 
என் சந்தோஷம் 
என்,,,? 

***கடவுள் !!! *** 

என் வாழ்க்..... 
என் கடவுள் 
என் கடவுள் 
உன் கடவுள் 
என் கடவுள் 
உன் கடவுள்.... 

-->கடவுள் !!! 

என் வாழ்க்... 
என் குடும்பம்ம்ம்ம்ம்,,,,? 
என் கடவுள் 
என் கடவுள்...... 

கடவுள் !!! 

,,,,,,,,,,,,,,,,,, 
,,,,,,,,,,,,,,,,,,??????? 

ஜீவன் -- 

கடவுள்....? 
தெரியவில்லை. 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Pas Pasupathy

chưa đọc,
17:38:10 19 thg 12, 201119/12/11
đến santhav...@googlegroups.com
I Had a Dream

One night I had a dream
I was walking along the beach with my Lord.
Across the sky flashed scenes from my life.
For each scene I noticed two sets
of footprints in the sand,
one belonging to me
and the other to my Lord.
When the last scene of my life shot before me
I looked back at the footprints in the sand.
There was only on set of footprints.
I realized that this was at the lowest
and saddest times in my life.
This always bothered me
and I questioned the Lord
about my dilemma.
"Lord, you told me when I decided to follow You,
You would walk and talk with me all the way.
But I'm aware that during the most troublesome
times of my life there is only one set of footprints.
I don't understand why, when I needed You most,
you leave me."
He whispered, "My precious, precious child,
I love you and will never leave you
never, ever during your times of trial and testings.
When you saw only one set of footprints
It was then that I carried you."

Margaret Fishback Powers
============

Footprints in the Sand

One night I dreamed I was walking along the beach with the Lord.
Many scenes from my life flashed across the sky.
In each scene I noticed footprints in the sand.
Sometimes there were two sets of footprints,
other times there was one only.
This bothered me because I noticed that during the low periods of my life,
when I was suffering from anguish,
sorrow or defeat,
I could see only one set of footprints,
so I said to the Lord,
“You promised me Lord,
that if I followed you,
you would walk with me always.
But I have noticed that during the most trying periods of my life
there has only been one set of footprints in the sand.
Why, when I needed you most, have you not been there for me?”
The Lord replied,
“The years when you have seen only one set of footprints,
my child, is when I carried you.”


Copyright © 1984 Mary Stevenson

=======================

 
I think, there are other versions too.


 
2011/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
காலடித் தடங்கள் 


ஓரிரவு 
ஒரு கனவு 
ஒன்றோ இரண்டோ 
காலடித் தடங்களின் நினைவு 

சில சமயம் 
ஒன்று மட்டும் பதிந்து வரும் 
சில சமயம் 
மற்றொன்றும் கூட வரும் 
பதிந்து வந்த காலடிகள் 
தனிமைதனை பதிந்து வைக்கும் 
கூட வந்த காலடியின் 
பிரிவுதனை கனக்க வைக்கும் 

மகிழ்கின்ற போதுகளில் 
கூட வந்த துணைவன் அவன் 
துன்பத்தில் துவண்ட கணம்
ஏன் பிரிந்தான் என்பதற்கே 
அவன் அளித்த பதிலதனில் 
நாணி உள்ளம் வெள்கி நிற்கும் 
காணவும் திறனற்றுத் தலையோ 
கவிழ்ந்து நிற்கும் 

“துன்பத்தில் நீ துவண்ட கணம் 
தனித்து நீ தாங்காய் என்றே 
உனைச் சுமந்து நான் செல்ல 
உள் பதிந்தது ஒற்றைத் தடம் “ 

ஓரிரவு 
ஒரு கனவு 
ஒன்றோ இரண்டோ 
காலடித் தடங்களின் நினைவு. 

(ஓர் ஆங்கிலக் கவிதையின் ஊக்கம் இது. மூலம் எது என்று கண்டுபிடியுங்கள். ) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

kumaraswamy k

chưa đọc,
21:56:22 19 thg 12, 201119/12/11
đến santhav...@googlegroups.com
இந்த கவிதையை உதாரணமாகச் சொல்லாத மஹாத்மாக்களே இல்லை எனலாம்! சத்தியக் கீற்று மிளிரும் கவிதை!

Kaviyogi Vedham

chưa đọc,
22:41:58 19 thg 12, 201119/12/11
đến santhav...@googlegroups.com
ஆம்..வெகு அற்புதம்.
யோகியார்

2011/12/20 kumaraswamy k <kaykuma...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
16:48:38 7 thg 3, 20127/3/12
đến santhav...@googlegroups.com
அருமை!

நட்ட திருவடியும், நடமாடும் பேரடியும் 
துட்டம் ஒழித்துத் தூய்மைதனை நாட்டிவர, 
உள்ளப் பெருங்கோயில் ஊர்ப்பொதுவின் மேடையென, 
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்காகித் 
தெள்ளத் தெளிந்தாரின் சீவன் எனும் சிவலிங்கம் 
சிற்றம்பல புளகத்தில், சிந்தையடங்கிச் 
சைதன்யப் பெருவெளியில், அதிரும் பதம் வாங்கி 
ஆடிவரும் ஐயன், ......

அழகு!

.. அனந்த்

2012/3/7 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 175ஆவது ஜயந்தியை முன்னிட்டுச் சில கவிதைகள் எழுதியிருந்தேன். அவற்றை இவண் பகிர்ந்து கொள்கிறேன். 

*

 மனமே! 
இன்று உனக்கு விடுமுறை. 

தக்ஷிணேஸ்வரம், பஞ்சவடி, 
குருதேவர் அறை, 
அம்மா பவதாரிணியின் திருமுன்னர், 
ராதாகாந்தன் கோயில், 
பன்னிரு சிவனார்ச் சந்நிதி, 
என்று சுற்றித் திரி; 
சாண்ட்னித் துறையில் அமர்ந்து கொள்; 
நள்ளிரவில் கங்கா நதியில் 
அநாகத த்வனி கேட்கிறதா என்று பார்! 
இருட்டில் எங்கு பார்த்தாலும் 
பூசியிருக்கும் அந்தத் 
தெய்விக முறுவல்; 
பரநிலைப் பூவிதழ் 
கசிந்த தேன் சொல்; 
அஞ்சாதே! 
பரவச நிலைகள் வரும் போகும் 
வந்து கொண்டுமிருக்கும்; 
கடல் பொங்கும்; 

கரையாக இரு; 
அன்றேல் கடலாக இரு. 
கரை கிடந்த கிளிஞ்சல் பொறுக்கும் 
அகங்காரத்தின் வாலில் கட்டிய 
தகரமாய் அவதிப்படாதே! 
பொறு! பொறு! 
பொறுத்தார் பூமி ஆழ்வார்; 
சப்த பூமிகளிலும். 

வானுக்கும், பூமிக்குமாக 
இன்று போக்கும் வரத்தும் இருக்கும்; 
கமார் குளத்தின் கரையில் 
குழந்தை ஒன்று சிரிக்கும். 

*** 
(பூமி ஆழ்வார் - Vedic Mysticism சொல்லும் கருத்திற்கேற்ப இங்கு வேண்டுமென்றே ஆழ்தல் என்ற ப்ரயோகமாக மாற்றியிருக்கிறேன். பூமி ஆள்வார் என்பது தவறுதலாக விழுந்துவிட்டதாக நினைக்க வேண்டாம் ) 

*


ஒரு மஹா சிவராத்திரி

ஒரு மஹா சிவராத்திரி. 
பல்லாண்டுகள் முன்பு. 
கமார் குளத்தின் கரையில் 
கிராம நாட்டியக் குழுக்கள் 
கண்விழிப்பைத் தெய்விமாக ஆக்க 
எண்ணமிட்டபடிச் சுறுசுறுப்பில்; 

சிவனாராய் வேடம் கட்டும் ஆள் 
உடல் அசுகத்தில் படுத்துவிட்டார். 
கூத்து நடக்க வழியில்லை என்று 
மக்கள் கவலுங்கால் 
கதாயின் நினைவு வரச் 
சிறுவனைக் கெஞ்சிக் கேட்டுச் 
சம்மதிக்க வைத்தனர். 
மஹாபாவமும், ரஸராஜனும் 
கைவந்த சிறுவனுக்குக் கேட்கவா வேண்டும்? 

புலித்தோலை அரைக்கசைத்து, 
மின்னார் செஞ்சடை மேல் 
மிளிர் கொன்றை வைத்து, 
இளமதியும், முதுநதியும் 
தலையலங்காரமாக, 
உடல் முழுதும் பூசிய திருவெண்ணீறு 
கடலெனப் பொங்கும் பரவசத்தின் 
கசிவாய்த் திகழ்ந்திருக்க, 
கைகளில் எங்கும் அரவம் அணிசெய்ய, 
ராம என்னும் தாரகம் 
பூவிதழ் விரியும் சுரும்பார்க்க, 
பொன்னார் மேனியனின் 
மூன்றாம் விழி கண்வளர, 
பொங்கும் அலைக்கேசம் 
நம்முள்ளத்துள் ஊதியெழ, 
நட்ட திருவடியும், 
நடமாடும் பேரடியும் 
துட்டம் ஒழித்துத் தூய்மைதனை நாட்டிவர, 
உள்ளப் பெருங்கோயில் 
ஊர்ப்பொதுவின் மேடையென, 
கள்ளப் புலனைந்தும் 
காளாமணி விளக்காகித் 
தெள்ளத் தெளிந்தாரின் 
சீவன் எனும் சிவலிங்கம் 
சிற்றம்பல புளகத்தில், 
சிந்தையடங்கிச் 
சைதன்யப் பெருவெளியில், 
அதிரும் பதம் வாங்கி 
ஆடிவரும் ஐயன், 
மூவிலை வேல் தாங்கி, 
முக்காலத்தின் மேலோங்கிக் 
கூட்டத்தின் முன் நின்றவன் தான், 

வேட்ட மனிதகுலத் 
தேட்டத்தின் விடையேறும் வல்லவனோ 
விரியாப் புலர் முறுவல், 
விரிந்த கடைக்கண்ணில் புனலிழிய, 
தெரிந்த கதாய் 
தெரியாப் பெருநிலைக்கே 
அறிந்த புலன் தாண்டி 
ஆன்மிகத்தில் தான் நிலைத்தான் 
நடிக்கவந்த நாதன் 
நடிக்காத நடிப்பினிலே 
நடிக்கும் எந்தன் உள்ளம்தான் 
நடிக்கவே மறந்ததுவால் ! 

***


ஒன்று சொல்வாய்

ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய் 
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய் 

வாடிவரும் என்மனத்தின் மருந்தாகித் 
தேடிவரும் என் உயிர்க்கு விருந்தாகி 
நாடிவரும் நற்கணத்தின் உருவாகிப் 
பாடிவரும் பரமஹம்ஸத் திருவாகிப் 

பையநடை இட்டுச்செல்லும் பாவனத்தின் 
உய்வகையின் வார்த்தைகளில் 
ஒன்று சொல்வாய் 

மெய்விதந்த பரவசச் சோபனத்தில் 
தைவந்தத் தெய்விகத்தண் சொல்லமுதில் 

ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய் 
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய் 

ஓங்கிநிற்கும் உயர்தருவே ஒன்றுசொல்வாய் 
ஓங்காரப் பொருளாகி உலவிநின்ற 
ரீங்கார வண்டாகிக் குலவுகின்ற 
நீங்காத நன்மைதிகழ் நல்வாக்கருளி 
ஏங்கும் எமதுள்ளப் பாலைமாற 
தாங்குகின்ற அமுதமொழி ஒன்றைச்சொல்வாய் 

ஓடிவரும் கங்கையே நீ ஒன்று சொல்வாய் 
ஆடிவரும் பூங்காற்றே நன்று சொல்வாய் 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Kaviyogi Vedham

chưa đọc,
02:53:11 26 thg 3, 201226/3/12
đến santhav...@googlegroups.com
ரொம்ப நல்ல கருத்துள்ள பாட்டு.வாழ்க,
 யோகியார்

2012/3/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸோலோன் ஸோலோன் ! 

யவன உலகத்தின் முனிவரர் எழுவரில் 
புவனமெங்கும் பொற்புகழ் கொண்டோன் 
அவனி வேந்தர் அன்புடன் ஏத்தும் 
நீதியாத்த நல் முனிவரன் ஸோலோன் 
லிதிய மன்னனாம் குரோஸனைக் கண்டான். 

மன்னவன் முனிவன் தம்மிடை மகிழ்ந்து 
அன்னவன் விடைகொண்டு ஏகிடும் போழ்தில் 
மன்னவன் கேட்பான், 

‘ஐயனே! உலகில் 
என்னிலும் மகிழ்வோன் எவனேலும் உளனோ? 
என் நாடு எங்கணும் சுற்றி வந்துள்ளீர். 
நன்மை தீமை அறிந்தவர் நீரே.’ 

‘மன்னனே! சற்றுப் பொறுப்பது நன்று. 
மகிதலம் மீது 
இறுதிநாள் வந்து உற்றிடும் வரையில் 
எவரும் எதுவும் சொல்வதற்கில்லை.’ 

‘என்ன முனிவரே! எக்குறை கண்டீர்? 
தன்னிகரில்லாத் தனிப்பெரும் செல்வமும் 
முன்னிகர் நில்லா மகத்தான வீரமும், 
கன்னியர் போகமும், கருதுபல் சுகங்களும்,....’ 

‘இருப்பினும் பொறுப்பது இயல்புடைத்தாகும். 
தருக்குறும் கணம் அதும் கடைநாளாகும்.’ 

‘முனிவரே! முனிவரே ! 
நீதியின் நடையென்றும் தயக்குறும் தானோ ?’ 

புன்முறுவலித்து அகன்றனன் புனிதன். 
இன்பத்தின் மடியில் புரண்டனன் வேந்தன். 

காலம் கடந்தது. 
கங்குல் கவிந்தது. 
கோலம் மாறிப் பகை 
எங்கும் சூழ்ந்தது. 

பாரசிக சாம்ராட் 
சைரஸ் வென்றதும் 
நாராசமாகக் கைதும் வந்தது. 

நயக்கும் இன்பத் தொட்டிலில் கிடந்தவன் 
நடுவெய்யில் தழலெரி 
நடுவண் கட்டுண்டு நின்றான். 
குரோஸ மன்னன் யோசனை யாழ்ந்தான். 

திடுமென ஸோலோன் நினைவுக்கு வரவே 
கடும்நிலை மறந்து குலுங்கிச் சிரித்தான். 
’ஸோலோன் ஸோலோன் ஸோலோன் 
ஸோலோன் ஸோலோன்’ 
என்றவன் நகையொலி 
சைர சாம்ராட் காதினை அறுத்தது. 

‘பகை மன்னன் நகைக்கக் காரணம் என்ன? 
புகலும் பெயரது என்ன அது என்ன?’ 

கோபத்தில் துடித்தான் புதுவெற்றியாளன். 
தாபத்தில் சிரித்தான் பழம்நன்றியாளன். 
ஆபத்து என்று அமைச்சுகள் ஓடிச் 
சோபன முனிவரன் பெயரது என்றார். 

ஸோலோனை அறிந்த சைரஸ் வியந்தான். 
ஓலத்திற்குப் பதிலாய் உரைத்தவன் நினைவு 
காலனின் பிடியில் நிற்கும் கணத்தில் 
மேலோங்கக் காரணம் அறியத் துடித்தான். 

‘யாரங்கே! அவிழ்த்துவிடு. 
அழைத்துவா அந்தப் புதிர்வேந்தை.’ 

‘குரோஸ மன்னா! கூறு என்ன சிரித்தாய்? 
நீதி முனிவன் பெயரினை விளித்தாய்? 
காரணம் கூறு. கடுஞ்சினம் விடுத்தேன். 
மாரண விதியினை நீக்கினேன் கூறு.’ 

‘பார்வேந்தனே! பண்டொரு காலை 
யார் என்னிலும் மிக்கார் மகிழ்வினில் என்றேன். 
பொறுத்திரு இறுதி நாள் வரையில். 
பெருமிதம் பின்னர் நீ அடையலாம். 
என்று புகன்று அகன்றனன் ஸோலோன். 
மறந்திருந்தேன் இதுநாள் வரையில். 
வெய்யிலும் கனலும் வாட்டும் கணத்தில் 
உய்வகை அறியா ஊழ்நகை போழ்தில் 
தெய்வக் கருணை தெளிந்தேன் மதியில். 
விதி விளையாட்டு விளங்கிடச் சிரிப்பாய்க் 
கதியினுக்கு அச்சம் கழன்றிட நின்றேன். 
நின் ஆணை எனை இங்கு மீட்டது என்றார்.’ 

‘இன்று நீ நாளை நான் 
என் கண்ணைத் திறந்தாய் குரோஸா ! 
என்றும் உன் நண்பன நான் 
நன்று எனக்குப் புரிந்தாய் குரோஸா ! 
அன்று உனக்குச் சொல்லிய முனிவன் 
எனக்கும் சேர்த்தே உரைத்தனன் போலும். 
நன்று நன்று நாமினி ஆள்வோம் 
சரிநிகர் சமனாய்க் குவலயம் இதனை.’ 

‘இல்லை மன்னா ! இல்லை. 
ஆட்சியும் மமதையும் 
இன்பத்துப் போதையும் 
இவ்வாழ்வின் வாதையும் 
அனைத்தும் என்னை 
இனிக் கவிய ஒண்ணாது. 
செல்வேன் தனியனாய். 
காடோ மேடோ கிடைத்தது ஊணாய் 
ஏடோ உரியோ உடுத்தது உடையாய். 
உடைந்த ஊழ் இனி ஒட்டுவதில்லை. 
உண்மை உரைத்தான். 
ஒருகோடி நன்றி. 
ஸோலோன் ஸோலோன் 
ஸோலோன் ஸோலோன்...’ 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Pas Pasupathy

chưa đọc,
08:33:26 5 thg 5, 20125/5/12
đến santhav...@googlegroups.com
ஐயே! மெத்தக் கடினம்! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது! 

முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

2012/5/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வார்த்தாமாலை -- என்று ஒரு நூல், ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில். பின்பழகிய பெருமாள் ஜீயர் தொகுத்த ஆசாரியர்களின் அருள்மொழிகள் அடங்கியது. சுமார் 450 வார்த்தைகள் அடங்கிய மாலை. 

இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எண்ணத்துடன் ஆரம்பித்தேன். அறிமுகமும், முதல் வார்த்தையும் ஆகியிருக்கிறது. அறிஞர்கள் இதைப் பார்த்து, மொழி நடை, பொருள்படு திறன் ஆகியன குறித்தும், பொதுவாகவும் தங்கள் விமரிசனங்களைத் தந்தால் மிகவும் நன்றி. 


***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Dr Subramanian

chưa đọc,
21:24:11 9 thg 5, 20129/5/12
đến santhav...@googlegroups.com
பாரதி அன்பருக்கெல்லாம் இனிய செய்தி. வாழ்த்துகள்
வவேசு

2012/5/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நெடுநாளாகப் பாரதி ஆய்வாளர்கள் தேடி வருகின்ற ஒரு விஷயம் என்னவெனில், 

பாரதியார் ‘நாட்டுக் கல்வி’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்த தாகூரின் ஆங்கிலப் பாடல் என்ன? 

‘விளக்கிலே திரி நன்கு சமைந்தது 
மேவுவீர் இங்கு தீக்கொண்டு தோழரே !’ 

என்று ஆரம்பிக்கும் பாடல் http://www.mahakavibharathiyar.info/kavithaigal/poem217.htm 

இதன் ஆங்கில மூலம் கிடைக்காமல் இருந்தது. 

இந்த ஆங்கில மூலப் பாடலைக் கேட்டு 15-4-2012 அன்று கீழ்க்கண்டவாறு சில குழுமங்களில் நான் இந்தக் கேள்வியை இட்டிருந்தேன் 



இணையத்தில் எவ்வளவோ முறை கேட்டாயிற்று என்ற சலிப்புடன் தொடங்கிய இழை விவாதம் பின் பேரா திரு நாகராஜன் அவர்கள் ஓர் ஊக்கத்துடன் தேடும் பணியில் இறங்க, முதலில் நான்கு வரிகள் கிடைத்த தாகூரின் பாடல் இன்று முழுமையாக பேரா திரு நாகராஜனால் நூலகங்கள், இணையம் என்று பலபடத் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. 




இது பேரா திரு நாகராஜன் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமன்று, குழுமங்கள் இவ்வாறு நல்ல ஆர்வங்களின் வெற்றிக்கும் தளம் அமைக்க முடியும் என்பது குழுமம் என்ற இணைய கூட்டுறவுக்குக் கிடைத்த வெற்றியும் அல்லவா! 

இணையத்தைத் திறம்படக் கையாள்வது இப்பொழுது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததுவாய் ஆகிறது.

அனைத்து பாரதி ரசிகர்களும் மகிழக் கூடிய சேதியாக இருப்பதால் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். 

(திரு சீனி விசுவநாதனிடம் கூறிய பொழுது அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவில்லை.) 

***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
21:35:50 9 thg 5, 20129/5/12
đến santhav...@googlegroups.com
இன்பமூட்டும் செய்தி. பேரா. நாகராஜனின் விடாமுயற்சியும், உங்களுடைய தூண்டுதலும் பாராட்டுக்குரியவை. 
 
அனந்த்  

2012/5/9 Dr Subramanian <vav...@gmail.com>

Kaviyogi Vedham

chưa đọc,
00:33:47 10 thg 5, 201210/5/12
đến santhav...@googlegroups.com
நீவிர் எடுத்துக்கொடுத்த பாரதி பாடலில் வான் ஒளிக்கு மகா
அர்த் இயாம் என்றே... இடப்பட்டுள்ளது.
என்ன பொருள்? நம் அன்பர்கள் சார்பில் கேட்கின்றேன்.
இல்லை சொற்பிழை(அச்சு..?)-யா?
யோகியார்

Kaviyogi Vedham

chưa đọc,
00:54:32 10 thg 5, 201210/5/12
đến santhav...@googlegroups.com
அம்மட்டோ..நம்ம நாகராஜனின் அருமையான, அற்புதமான இலக்கியப்பணியைப்
பாராட்டும் முகத்தான், ஹரியின் ‘மூல’ (piles?)-விளக்கமும், அவர் அதற்கு
சிரமப்பட்டுக் கண்டுபிடித்த ஹெடன்ஸா மருந்தும் அன்றோ காணக்
கிடைத்தது.(வல்லமை இதழ் மூலம்) அதற்காக ஹரிக்கு என் பிரத்யேக நன்றி.. ஆகா
பாரதி பற்றி, அவர் பாடல் பற்றி நோண்டுகையில் எவ்வளவு அற்புதங்கள்
நிகழ்கின்றன.பலே..
யோகியார்

Kaviyogi Vedham

chưa đọc,
09:27:57 2 thg 6, 20122/6/12
đến santhav...@googlegroups.com
அட்டகாசம். மிக இன்பமான தெளிவான விளக்கம். அன்பர் மோஹன் வாழ்க!
 யோகியார்

2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்

கோ
டையின் வெப்பம் தாங்கவில்லை. 

சரி. ஆனது ஆகட்டும் என்று துணிந்து தெருவில் நடந்தால் ஓர நிழலில் ஒண்டும் நாய் ஒன்று பரிதாபமாகப் பார்க்கிறது. இந்த வெப்பத்தில் தர்ம புத்திரனின் கூட நடந்த நாய் கூட ‘நம்மால் ஆகாது’ என்று திரும்பிவிடும் போல் இருக்கிறது. 

அப்பொமரணவம் இல்லை என்று வெறுமையிலும் பல பிறவி. தெய்வமே இல்லை என்று நாத்திகத்திலும் சில பிறவி. 

கோடையில் தாகத்தில் வருந்தும் மான், ஒரு கானல் நீர் விட்டு இன்னொரு கானல் நீர் என்று குதித்துக் குதித்து ஓடிக் களைத்துத் தன்னை இழுத்துக்கொண்டு நடந்தேனும் அடுத்த கானல் நீர் நோக்கி நடக்குமாப்போல் பிறவி தோறும் பெரும் வெப்பில் புழுங்கி இந்தப் புன்னுயிர் சுமந்து அலைந்ததும், உலைந்ததும் 

ஐயோ....! என்ன என்று கேட்க ஒரு நாதி இல்லையோ...ஏன் என்று கேட்க ஒரு தெய்வம் இல்லையோ...... 

“கேட்டேன். ஆனால் நீ கவனிக்க மறுத்தாய்.” 

யார் நீ? யார் நீ? என் முன்னால் வர மறுத்து என்னூடு குரலாய்ச் சூழ்ந்து மறையும் நீ யார்...? நீ யாராய் இருந்தால் என்ன? முதலில் நான் யார் என்றே அறியாது அயர்க்கும் பேதை நான்.... 

அயர்ந்து பிறவிதோறும் அலையாநின்ற என்னை உணராது போயின எத்தனைப் பல்லூழி.....! 

வேதங்கள் காட்டும் பரம்பொருள் என்று ஒரு நினைவு உந்த வேதங்களில் தேடினால் அங்கும் அலைச்சலே மிச்சமாய்ப் போனது. 

வேதங்கள் காட்டும் விமலம் விண்ணாடு தர முந்தும் நாரணன் நற்கழல் என்பது துணிந்த போதுதான் எத்தனை எத்தனை மனப்பேதுறல்கள்! 

அதெப்படி? என்று மனத்தின் ஒரு பகுதியும், அப்படியும் உண்டு இப்படியும் உண்டு என்று மனத்தின் ஒரு பகுதியும் அலைக்கழித்த காலம்தான் எவ்வளவு! 

தன் மனசாட்சிக்கு உண்மை என்று உணர்ந்தும் கற்ற அறிவு விற்ற சந்தைப் பொருளாய் ஆகி ஆத்மா பட்ட துயர் அநந்தம். 

ஐயோ ! ஆத்மாவிற்கு உறுதிப்பொருள் இதுதான். பிடி என்று ஒரு கரம் நீட்டாதா? இந்தப் புன்னுயிர் படுதுயர்க்குப் பாவம் என்று இரங்கும் ப்ரபஞ்ச தத்துவம் எதுவுமே கிடையாதா? 

வேதம் கண் என்றார். ஆனால் கண் பஞ்சடைந்து போய்க் காணும் குருடு தட்டிப் போய், வெள்ளெழுத்தும், விகாரப் பார்வையும் விடம்பனம் ஆக்கி அன்றோ நகையாடச் செய்து நிற்பன. 

வேதம் கடல் என்றால் அருந்த, தாகம் தணிக்க அருகதையற்றுப் போய் நின்றால் என்ன செய்வது? 

வேதம் அவனுறையும் பாற்கடல் என்றால் அங்கு எப்படிப் போவது? இங்கெழுந்த தாகத்திற்கு நீர் அங்கிருக்கிறது. செத்துப்போய்க் குடித்துவிட்டு வா -- என்பதுபோல் அன்றோ இருக்கிறது! 

ஆம். குரல் சொன்னது உண்மை. உள்ளே எத்தகைய ஓர் வெப்பத்தைச் சுமந்தபடித் தொல்லை வினைப்பிறவி கழிக்கின்றேன் யான்! அதை நினைத்தால் இந்தப் புற வெப்பம் வெறுமொத்தடம் அன்றோ ! 

அப்படி என்றால் உண்மையான நிழல் எது? தாகத்தைத் தீர்க்கும் உண்மையான அமுதம் எது? பிறவி தோறும் அல்லல் உறும் பவ வெப்பத்தால் விளைந்த தாகத்தை இறவாமை என்னும் விளைபயன் ஊட்டித் தீர்க்கும் அந்த அற்புத அமுதம் எது? 

தேவர்கள் கடைந்த அமுதம் வெறுமனே நீள் வாணாளாக முடிந்துவிடும். என்றும் பவம் என்னும் வெப்பம் வருத்தாத மரணமற்ற பெருந்தன்மையாகிய அந்த நித்யத்வம் எந்த அமுதத்தால் கிட்டும்? அந்த அமுதம் எந்தக் கடலைக் கடைவதால் கிட்டும்? அதைக் கடையும் வழி என்ன? யார் கடைவது? 

“அத்தனையும் நடந்து முடிந்து அந்த அற்புத அமுதும் சித்தமாக உள்ளது.” 

எங்கே? எங்கே? ஏன் நீ இப்படி காணாக்கொடுமையில் என்னை வாட்டுகிறாய்? பேசு பேசு. 

திக்குத் திசை தெரியாத மனம் என்னும் வனாந்தரத்தில் ஓர் இனிய இசை மெல்ல எழுகிறது. 

மறைப் பாற்கடலை..... 

ஆஹா ! அழகு. மறை என்னும் வேதாந்தமாகிய பாற்கடலை. ஏன் பாற்கடல்? ஆமாம் வேதாந்தத்தில் உறைபவன் யார்? திருமால் அல்லவோ? திருமால் உறையும் இடம் திருப்பாற்கடல்தானே? 

திருநாவின் மந்தரத்தால் கடைந்து..... 

அற்புதம்! திருநா..ஆம்..மறையாகிய பாற்கடலைக் கடையும் நாவு திருநாவுதானே? திருநாவு என்பது மந்தர மலை.....மறையாகிய பாற்கடலைக் கடைய.... 

துறைப்பாற்படுத்தி.... 

என்ன கருணை! வெறுமனே கடைந்து அள்ளிவிட்டுப் போகாமல், என்றென்றைக்கும், எந்நாட்டவர்க்கும், பின் வருவோர்க்கும் பயன்படும் வண்ணம் அதன் பொருள், உள்கருத்து, உள்மறை என்று அனைத்தும் நன்கு பயன் கொள்ளும் வண்ணம் தமிழ் யாப்பின் துறைகளில் யாத்து....

ஆனால் எங்கே இந்த திவ்ய அமுதம் சேமிக்கப்பட்டு இருக்கிறது? இந்திர லோகத்து அமுதம் கொணர்வதற்கே கருடனே அவ்வளவு போர் செய்ய வேண்டியிருந்தது. இந்த அமுதமோ அதைப் போன்று வெறும் அமுதம் அன்று. திவ்ய அமுதம் ! என்ன கஷ்டமோ பெறுவதற்கு? எங்கு உள்ளது இந்த அமுதம்? 

தமிழ் ஆயிரத்து..... 

என்ன? தமிழ் என்றாலே இனிமை என்று பொருள். தமிழ் ஆயிரத்து என்றால் முடிவற்ற இனிமையின் உள்ளே....இனிய தமிழ்ப் பாடல் ஆயிரத்தின் உள்ளே....அதாவது....ஆமாம்....திருவாய்மொழி என்னும் ஆயிரம் இன் தமிழ்ப்பாவின் உள்ளே சேமித்துவைக்கப் பட்டிருப்பது 

--இன்சுவை அமிர்தம் -- 

நிச்சயம் கிடைக்காது. வேறு வேலை பார்ப்போம். இவ்வளவு சிறந்த அமிர்தத்தைத் தமிழாயிரத்தில் தேக்கி வைத்துப் போய் எடுத்துக்கொள் என்றால்.....யார் போய் எடுப்பது? போய்ப் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்ததுபோல் தேமா புளிமா என்று சுற்றிச் சுற்றி வந்துவிட்டு, அங்கு ஒன்றுமே இல்லையே.....போய்ப் பார்த்தேனே....வெறுமனே அசை, சீர், தளை,  பாவினம் இவ்வளவுதான் உள்ளன. அங்கு போய் அமுதத்தை எங்கு ஒளித்து வைக்க முடியும்? என்று வந்துவிடுவோம். 

“இல்லை. அங்குதான் இருக்கிறது. அந்த அமுதத்தை அருந்த ரசிகர்களாகிய புவிபாவுகர்கள், திருநாரணன் தன் தொல்லடியார் கூடுவார்கள். யாரால் என்ன வருகிறதோ என்று காரணமே இல்லாமல் தன் பிரேமையின் காரணமாக வெறுமனே சீறிக்கொண்டிருக்கும் பணாமுடி ஆயிரமும், தன் திருவுடலெங்கும் அழகிய புள்ளிகள் திருஷ்டிப் பொட்டுகளாய் விளங்க அந்தத் திருவநந்தன் திருவணையில் பள்ளிகொள்ளும் பிரான் களிக்க, அந்த அடியார் ஈட்டம் களித்து அருந்தும் படியாக ஒருவர் யாருடைய கோப்பையும் குறைவுபடாமல் இருக்கும்படியாக அந்தத் திவ்ய இன்சுவை அமிர்தத்தை ஊற்றி நிறைத்தவண்ணம் நிற்பார். அவரவர் தமதமது அறிவறி வகைவகை பொருள் சுரக்கும் அமுத்தீஞ்சொல் பாசுரங்களாய் அவர் ஊற்றும் அந்த திவய இன்சுவை அமிர்தமே நீ தவித்த விடாயாற்றி.” 

நிழல்? நிழல்? குரலே....நிழல்? 

“ஹ ஹ...இன்னுமா தெரியவில்லை? அப்படி நிறைப்பவர் யார் என்று பார். அந்த நம்மாழ்வாரின் கழல் அன்றி வேறு நிழலே இல்லை.” 

நீ யார்? நீ...நீ...யார் என்று சொல்..... 

குரல் மறைந்தது. 
ஆனால் சத்தியம் மலர்ந்தது. 
உண்மையின் ஒளிநிழல், 
உயர்வற உயர்நலத்து ஒண்ணிறை மதிநலம் 
யாதெனப் புரிந்தது. 

தாகத்தின் தவிப்பு, 
தான் இனி நித்தியமாக மறையப் போகிறோம் 
என உணர்ந்து இறுதி வேகத்தில் துடித்தது. 

அந்தக் குரல்...அந்தக் குரல்...
யார் எனத் தெரியவில்லை ஆயினும் ...
அந்தக் குரல்தான் என்ன தண்மை ! என்ன குளிர்ச்சி ! 
என்ன தயை ! என்ன ஓர் இரக்கம் ! 

இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது --- 

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து 
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் 
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த 
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. 

( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
yogiyaar(VEDHAM)-
 Camp--BANGALORE_43

Siva Siva

chưa đọc,
09:34:52 2 thg 6, 20122/6/12
đến santhav...@googlegroups.com
இனிய விளக்கம். உங்கள் 'நடை' வாழ்க!

2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்

கோ
டையின் வெப்பம் தாங்கவில்லை. 

என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது. 

வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை. 





--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
15:36:11 2 thg 6, 20122/6/12
đến santhav...@googlegroups.com

சன்ம விடாய்தீரச் சாரங்கன் நாமத்தை

உன்நா விடாதுரைத்து உய்”

 

என்னும் அறிவுரையை ஈர்க்கும் நடையில் அருமையாய் வடித்திருக்கிறீரக்ள்.

 

... அனந்த்

 

2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்

கோ
டையின் வெப்பம் தாங்கவில்லை. 

என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது. 

வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை. 

இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது --- 

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து 
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் 
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த 
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. 

( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ) 

Soundar

chưa đọc,
19:07:16 2 thg 6, 20122/6/12
đến santhav...@googlegroups.com
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோ ரறியப் பகர்கின்றேந்சீராரும்
வேதந் தமிழ்செய்த மெய்யன் எழில்குருகை
நாதன் அவதரித்த நாள்.

உண்டோ வைகாசி விசாகத்துக் கொப்பொருநாள்
உண்டோ சடகோபர்க் கொப்பொருவர் -உண்டோ
திருவாய்மொழிக்கொப்பு தென்குருகைக் குண்டோ
ஒருபார் தனிலொக்கு மூர்

என்பதற்கிணங்க ஆழ்வாரின் பெருமையை இன்றைய நன்னாள் எடுத்துக் கூறியமை நன்று.

மேலும் சம்சாரம் என்கிற வெய்யிலுக்கு ஏற்ற நிழலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பாசுரமாகிய வெள்ளத்தையே பிரவஹித்து அதில் நம்மைத் திளைக்கவும் செய்கிறான் என்னும் கம்பர் கூற்றும் இங்கே நோக்கத்தக்கது.

கற்றும் செவியுறக் கேட்டும் பெருகிக் களித்துமுள்ளே
முற்றும் உசுப்பெய்தும் மூழ்கிக் குடைதும் முகந்துகொடு
நிற்றும் நிலையுற நீந்துதும் யாம்நிதம் மாறனெம்மை
விற்றும் விலைகொள் ளவுமுரி யான்கவி வெள்ளத்தையே

சௌந்தர்


2012/6/2 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்

கோ
டையின் வெப்பம் தாங்கவில்லை. 

என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது. படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது. 

வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது. தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால் நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை. 

குளுமை இல்லை. மாறாக வஞ்சம் வைத்துக் கழுத்தறுப்பார் நுனிநா பேச்சு போன்று பேருக்கு நிழல் காட்டி உள் வெப்பமாய் வெதுப்புகிறது. 

தண்ணீர் தண்ணீர் என்று உள்ளத்தின் நாவு வெட்கத்தைவிட்டுப் புலம்புகிறது. குளிர் நீர் வாங்கி அருந்தலாம் என்று கடையில் கேட்டால், எடுத்துக் கொடுக்கும் நீர்ப்புட்டியில் வெது வெது என்னும் குளிர்ச்சி ஏளனம் போல் தொனிக்கிறது. ஏன் குளிர் இல்லை என்றால் நெடுநேரம் மின்சாரம் இல்லை, அப்பொழுதுதான் வந்தது என்று கையை விரிக்கிறார் ஆரா வேர்வைப் புனல் பாய் தேகத்தர். 

காற்றில் தண்மை இல்லை. கருத்தில் தண்மை இல்லை. காதில் விழும் சொல்லிலும் தண்மை இல்லை. கண்காணும் காட்சிகளில் தண்மை இல்லை. ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்னும் அன்னையின் வார்த்தையில் பொய்யில்லை. 

சரி. ஆனது ஆகட்டும் என்று துணிந்து தெருவில் நடந்தால் ஓர நிழலில் ஒண்டும் நாய் ஒன்று பரிதாபமாகப் பார்க்கிறது. இந்த வெப்பத்தில் தர்ம புத்திரனின் கூட நடந்த நாய் கூட ‘நம்மால் ஆகாது’ என்று திரும்பிவிடும் போல் இருக்கிறது. 

அப்பொழுது உள்ளுக்குள் இருந்து ஒரு குரல். 
குரல்தானா? அன்றேல் வெப்பில் வெந்த உள்ளத்தின் வெற்றுப் பிரமையா? எதுவாயினும் ஆகுக. 
என்ன இழக்கப் போகிறோம் இனிமேல், இனி இழவாததை? 

“ இந்த வெப்பத்திற்கே இப்படி வாழ்க்கையை வெறுத்துவிட்டாயே. இதைவிடக் கொடுமையான வெப்பத்தை உன் உள்ளே அனுபவித்துக்கொண்டிருக்கிறாயே, அது தேவையா உனக்கு? ” 

யார் நீ? குரல் நின்றுவிட்டது. 

சற்றே மயக்கம் வரும்போல் இருக்கிறது. ஆயினும் ஒரு வர்மம். இறப்பதாயினும் துணிந்து மேற்கொண்டு வெப்பத்தின் கொடுவாயிலேயே இறப்போம். நாம் இறந்தால் வருந்த எவரும் இல்லை. நம்மை நயந்து பின் தொடரும் ஒரே சொந்தம் மரணம். ‘நின் பிரிவினும் சுடுமோ இந்த வெக்காடு?’ என்று மரணத்தைப் பார்த்தே கேட்டால் போகிறது. என்ன குடிமுழுகிப் போய்விட்டது? 

“பல பிறவிகளில் பிறந்து இளைத்தாய். மாறி மாறி இறந்து மரணத்திற்கே அலுப்பு உண்டாக்கினாய். ஆனாலும் கொடிய வெப்பம் ஒன்றை உள்ளே சுமந்து திரியும் உனக்கு ஏன் இந்தக் கொடுமை, உன் மீதிலேயே?” 

யார் நீ? குரல் நின்றது. 

ஏன் என்ன வெப்பத்தை உள்ளே சுமந்து திரிகின்றேன் காலம் காலமாய்? அசரீரி ஏன் சொல்கிறது? அசரீரி என்றாலே ஏதாவது சொல்லும். 

அப்படி இல்லை. அது சொல்வது உண்மை என்று எனக்குள் ஏதோ உறைக்கிறதே. உள்ளே சென்றுதான் பார்ப்போம். ஐயோ ! இந்த வெப்பத்தில் அந்த உள் வெப்பத்திலுமா? என்ன குடிமுழுகிப் போச்சு? போனால் போகிறது விடு. பார்ப்போம். 

எவ்வளவோ பிறவி போயிற்று, என்னவாய், ஏதாய் என்று தெரியாமல். 

தெரிந்தபொழுது உணவே, புலன் நுகர்வே என்று பல போயின. 

போய் அலுத்தபோது பட்ட வேதனைகளில் கொஞ்சம் சிந்தை திறந்தது. தெய்வம் உண்டோ என்ற ஐயம் எழுந்தது. 

ஆனால் எது தெய்வம் எனத் தெரியாமல் பல பிறவி. இது தெய்வம் என்று நினைத்து எதன் எதன் பின்னரோ பல பிறவி. எதுவும் தெய்வம் இல்லை என்று வெறுமையிலும் பல பிறவி. தெய்வமே இல்லை என்று நாத்திகத்திலும் சில பிறவி. 
இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது --- 

மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து 
துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் 
கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த 
நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. 

( திருவரங்கக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Bài viết đã bị xóa

N. Ganesan

chưa đọc,
20:02:01 2 thg 6, 20122/6/12
đến Santhavasantham
On Jun 2, 2:19 pm, Srirangam V Mohanarangan <ranganvm...@gmail.com>
wrote:

> உயப்போம் உணர்வினார்க்குக் காட்டினான்ஸ்ரீ ரங்கம்
> தயக்கமில் தொண்டரடி நீழல் - நயக்குமோர்
> நன்னெஞ்சும் நாரணனார் பொன்னருளும் நாளும்நம்
> புன்மைக்குப் பொன்றா மருந்து.

> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

 உயப்போம் உணர்வினார்க்குக் காட்டினான்சீ ரங்கம்
 தயக்கமில் தொண்டரடி நீழல் - நயக்குமோர்
 நன்னெஞ்சும் நாரணனார் பொன்னருளும் நாளும்நம்
 புன்மைக்குப் பொன்றா மருந்து.

இப்படி அலகிடலாமா?

நா. கணேசன்

> ***

> On Jun 3, 12:36 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

> > ”சன்ம விடாய்தீரச் சாரங்கன் நாமத்தை

> > உன்நா விடாதுரைத்து உய்”

> > என்னும் அறிவுரையை ஈர்க்கும் நடையில் அருமையாய் வடித்திருக்கிறீரக்ள்.

> >  ... அனந்த்

> > 2012/6/2 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>

> > > *நம்மாழ்வார் கழல் என்னும் நிழல்*
> > > *

> > > கோ*டையின் வெப்பம் தாங்கவில்லை.

> > > என்ன கொடுமை என்றால் இரவையும் ஊடுருவி இந்த வெப்பம் கைவரிசையைக் காட்டுகிறது.
> > > படுக்கை கொதிக்கிறது. தண்ணென்ற தரை போதும் என்று தரையில் விழுந்தால், நன்கு
> > > காய்ந்த தோசைக் கல்லின் மேல் விழுந்தால் போன்று இருக்கிறது.

> > > வாய் உலர்ந்து, தொண்டை காய்ந்து வெப்பம் தன்னைக் கடுமையாக உணர்த்துகிறது.
> > > தெருவில் நடந்தால், எங்காவது நிழலில் ஒண்டுவோம் என்றால், வெறும் நிறத்தால்
> > > நிழல் போல் இருக்கிறதேவொழிய செயலால் நிழலாய் இல்லை.

> > > இசை துல்லியமாக மீண்டும் கேட்கிறது ---

> > > *மறைப்பாற்கடலைத் திருநாவின் மந்தரத்தால் கடைந்து *
> > > *துறைப்பாற் படுத்தித் தமிழாயிரத்தின் சுவையமிர்தம் *
> > > *கறைப்பாம்பணைப் பள்ளியான் அன்பர் ஈட்டம் களித்து அருந்த *
> > > *நிறைப்பான் கழலன்றிச் சன்மவிடாய்க்கு நிழல் இல்லையே. *

Ms. Tamil

chưa đọc,
13:02:37 4 thg 6, 20124/6/12
đến santhav...@googlegroups.com
2012/6/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
>
> அதுபோல் ஈயாடுவதோ கருடற்கெதிரில்? என்ற பாட்டில், திருவாய்மொழியின் ஒரு
> சொல்லுக்கு எதிர் பொறாது உலகத்தார் கவிகள் என்ற கருத்தைச் சொல்லவந்த புலவர் தம்
> காலத்துப் பழமொழி, தொன்மச் செய்திகளைப் பதிவுபடுத்திவிடுவது ஒரு சன்னல்
> திறந்தது போல் இருக்கிறது.

அருமை! சுட்டியமைக்கு நன்றிகள்.

அர்விந்த்

RAJAGOPALAN APPAN

chưa đọc,
14:36:29 4 thg 6, 20124/6/12
đến santhav...@googlegroups.com
// இந்தப் புலவர்தம் செய்யுள் சங்கத்தார் வாக்கு என்னில் அந்தச் சங்கம் யாது? நம்மாழ்வார் காலத்தே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது போலும்.//
 

கூடற்புராணத்தில்  நாதமுனிகளைப் போற்றிப் பாடப்பட்ட,

அண்டகோளத்தாரென்னும் ஆரியத்தமிழாலன்று

தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர் தாமேசிற்பங்

கண்டதோர் வடிவாற் பேசத் திரைப்புறத்திருந்திக்காலத்

துண்டெனப் பதின்மர் பாடல் உத்தரித்தவர் தாள் போற்றி.

 

 என்ற பாடலும், நம்மாழ்வார் காலத்தில் தமிழ்ச்சங்கமொன்றிருந்ததையும், சங்கப் புலவர்களை அவர் வாதிட்டு வென்றதையும் பற்றிக்  குறிப்பிடுகிறது.

இந்தக்குழுமத்தில் முன்பு பேசப்பட்ட, 'அண்டகோளத்தாரணுவாகி' என்று தொடங்குகிற பாடல், சங்கத்தாரை எதிர்த்து நம்மாழ்வார் பாடியதாக கருதப்படுகிறது.

 

அ.ரா

Visit www.arajagopalan.blogspot.com



2012/6/4 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
சுவாமி நம்மாழ்வாரைப் பற்றிய செய்திகள் பழங்காலம் தொட்டே தமிழ் நாட்டிலும், பண்டைய தனிப்பாடல் ஏடுகளிலும், பிற பண்டைய ஏட்டுப் பிரதிகளிலும் விரவியிருக்கின்றன என்று கூறுகிறார் ஸ்ரீ ராகவையங்கார், தமது அருமையான ‘பெருந்தொகை’ என்னும் பெருந்தொகுதி நூலில். 

அத்தகைய செய்திகளைத் தொகுக்கும் முயற்சியை ஓரொரு சமயம் புலவர்களும், பண்டிதர்களும் செய்தனரேனும் மிக விரிந்த செய்திக் களஞ்சியமாகத் திருகுருகூர்த்  தெய்வத் தண்ணொளியைப் பற்றி ஒரு முழுமையான முயற்சி நடந்ததாகத் தெரியவில்லை. ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்துப் பெரியோர்களும் அவரவர் காலத்தில் ஒவ்வொரு விதத்தில் சிறு பல தொகுப்புகள் கண்டனர் ஆயினும் பெருமுயற்சிக்கான காலம் கனியவில்லை போலும். 

சடகோபர் ஆகிய நம்மாழ்வாரைப் பற்றிய முழுமையான செய்தித் தொகுப்புகள் அடங்க நூல் வருங்காலத்து அதன் மூலம் நாம் தமிழகம் பற்றிய நுணுக்கமான பார்வைகளைப் பெறுதல் இயலும். 

உதாரணத்திற்குச் சங்கத்தார் வாக்கு என்பனவாகச் சில செய்யுட்கள் ஏட்டுப்பிரதியில் கண்டனவாகப் பெருந்தொகையில் காட்டியிருக்கிறார் ஸ்ரீராகவய்யங்கார். இவர் மட்டுமேயன்றி பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களும் தாம் பதிப்பித்த புறத்திரட்டு என்னும் நூலில் பல பண்டைய தனிப் பாடல்களைக் காட்டுகிறார். பெருந்தொகையில் காட்டப்படும் சங்கத்தார் வாக்கு என்னும் செய்யுட்களில் சில ----


சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம் 
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ 
உளவோ பெருமா னுனக்கு. 
 

ஈயா டுவதோ கருடற் கெதிரே 
இரவிக் கெதிர்மின் மினியா டுவதோ 
நாயா டுவதோ வுறுமிப் புலிமுன் 
நரிகே சரிமுன் னடையா டுவதோ 
பேயா டுவதோ வெழிலூர் வசிமுன் 
பெருமா னடிசேர் வகுளா பரணன் 
ஓரா யிரமா மறையின் றமிழி 
னொருசொற் பொருமோ வுலகிற் கவியே. 

நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை 
யாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத் 
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற 
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

சங்கத்தார் வாக்கு. 

(பெருந்தொகை, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப்பிரசுரம் -- 62, 1935 -1936)

இந்தச் செய்யுட்களின் பொருளும் மிக அருமையான பொருட்சாயைகளைத் தம்முள் கொண்டனவாய் அமைந்துள்ளன. 

சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ 
நாமம் பராங்குசனோ நாரணனோ - தாமம் 
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ 
உளவோ பெருமா னுனக்கு. 

இந்தப் பாடலில் நம்மாழ்வாரின் ப்ரபாவத்தைக் கண்டு அவருக்கும், ஸ்ரீமந் நாராயணனுக்கும் மயங்கச் செய்வதுபோல் அமைந்தது நம்மாழ்வாரின் பெருமை என்பது காட்டப்படுகிறது. 

நிலையம், வசிக்கும் இடம் எது? குருகையா? செய்ய திருப்பாற்கடலா? 

பெயர் என்ன? பராங்குசனா? நாராயணனா? 

அணிந்திருக்கும் மாலை என்ன? திருத்துழாய் ஆகிய துளவ மாலையா? அல்லது வகுள மாலையா? 

திருத்தோள்கள் எவ்வளவு? இரண்டா அல்லது நான்கா? 

பெருமானே ! இந்த மயக்கத்தை நீர்தாம் உள்ளபடித் தீர்க்க வேண்டும். 

இவ்வாறு பாடுகின்ற புலவர் நெஞ்சில் எத்தனை விஷயங்கள் கிடக்கின்றன.! ஸ்ரீமந் நாராயணன் என்னும் உயர்வற உயர்நலத்துத் தெய்வம் பற்றிய தெளிந்த கருத்து இருந்தால் அன்றி, அந்தத் தெய்வத்துக்கும், தம் முன்னர் காணுகின்ற பெருங்கீர்த்திச் சிறுகுழவிக்கும் மயக்கம் ஏற்படாது. இந்தப் புலவர்தம் செய்யுள் சங்கத்தார் வாக்கு என்னில் அந்தச் சங்கம் யாது? நம்மாழ்வார் காலத்தே தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்தது போலும். 

அதுபோல் ஈயாடுவதோ கருடற்கெதிரில்? என்ற பாட்டில், திருவாய்மொழியின் ஒரு சொல்லுக்கு எதிர் பொறாது உலகத்தார் கவிகள் என்ற கருத்தைச் சொல்லவந்த புலவர் தம் காலத்துப் பழமொழி, தொன்மச் செய்திகளைப் பதிவுபடுத்திவிடுவது ஒரு சன்னல் திறந்தது போல் இருக்கிறது. கருடனைப் பற்றிய புராணக் கதைகளும், இந்திர லோகத்து ஊர்வசி போன்ற அப்சரஸ் மாதர்களைப் பற்றிய செய்திகளும் மக்கள் மத்தியில் எவ்வளவு புழங்கியிருந்தன என்பதும் தெரிகிறது. 

இந்தப் பாடலில், 

நீயே யறிவை நினதகத் தேநிற்கு நேமியங்கை 
யாயே யறியுமற் றாரறி வாரடி யோங்களுக்குத் 
தாயே பொருநைத் திருக்குரு கூர்த்தமிழ்க் காரிபெற்ற 
சேயே நினது திருவாய் மொழியின் செழும்பொருளே 

மிக அற்புதமான கவிநயத்தையும், புலவரது ஈடுபாட்டையும் நாம் காண்கிறோம். 

திருவாய்மொழியின் செழும்பொருள் எத்தகையது என்பதை யார் அறிய முடியும்? நம்மாழ்வாரே! நீரே அறிய முடியும். அல்லது உமது இதயத்தில் நித்ய வாசம் செய்யும் சக்கரக்கையரும், திருமகளும் ஆக நிற்கும் ஆயன் அவன் தான் அறியமுடியும். கீதை உரைத்தது திருவாய்மொழியின் பொருளைக் கற்கத்தானோ? நீயோ அடியோங்களுக்குத் தாய். திருக்குருகூர்த் தமிழ்க் காரி பெற்ற சேய். தாயும் சேயுமாக நீ அருளினால் அல்லது திருவாய்மொழியின் பொருள் எம்போலியர்க்கு எப்படிப் புலப்படும்? 

தாய் சேய் என்ற இந்த நயம் பின்னர் 

ஈன்ற முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன் 

என்னும் தனியனிலும் விதந்து வருவதைக் காண்கிறோம். 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

VETTAI ANANTHANARAYANAN

chưa đọc,
19:54:15 4 thg 6, 20124/6/12
đến santhav...@googlegroups.com
நம்மாழ்வார் சுவாமியைப் பற்றிய அற்புதமான செய்யுள்களின் நயத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

.. அனந்த்

Mukunthan Devanathan

chưa đọc,
10:02:09 5 thg 6, 20125/6/12
đến santhav...@googlegroups.com
From what I have learnt,

Sangam was not prepared to accept "Thiruvaimozhi" as a Supreme poem and just 2 lines of "Thiruvaimozhi"

Kannan Kazhalinai Nannum Manamudaiyeer
Ennum Thirunamam Thinnam Naraname" -- Thiruvaimozhi  10.5.1

was kept in the Sanga Palagai and it turned down every one else and kept only "Thiruvaimozhi" and this was accepted by all as Supreme. At this time all the Sanga pulavargal went to their rooms and came out with a poem on Nammazhwar and it turned out all of them wrote the same poem quoted here as

"Semam Kurugaiyo"

which means that all the poets were wondering whether Nammazhwar himself is Narayanan.


Sorry for presenting this in English as I am yet to learn to type in Tamil.

Mukunthan
Singapore

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Best Regards
Mukunthan
Phone: (65) 67655512
Mobile: (65) 9863 4974

Kaviyogi Vedham

chưa đọc,
02:43:01 17 thg 6, 201217/6/12
đến santhav...@googlegroups.com
ஆகா ஹா! ரொம்ப அருமை. ஜீவ தியானப் போராட்டத்தை,அமிழும் தெய்வீக உணர்ச்சியில் கலக்கத் துடிக்கும்ஜீவனைக் கலைக்க யாரெல்லாம் வருகின்றார்கள் அவற்றை எப்படிஇ ந்த ஜீவன் வெற்றிகொள்கின்றது என்பதை தம் அற்புத நடையால் சொல்லி,நம்மைக்கவர்கின்றார் ஆசிரியர். .வாழ்க மோஹன்..புகழ்!,
 யோகியார்

2012/6/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஜீவனின் ஆன்மிகப் பயணத்தை ஒரு பெரும் காவியமாகவும், நாடகமாகவும், கதையாகவும் எழுதிப் பார்த்த மகனீயர்கள் உலகம் எங்கணும் உண்டு. நம் நாட்டில் இந்த வகை ஆன்மிக கற்பனைகள் நன்கு செழித்த வளர்ச்சி உடையன என்று சொல்ல வேண்டாம். ஸ்ரீகிருஷ்ண மிசரர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் தமிழாக்கம் சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வகை காவியங்கள், நாடகங்களில் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் சங்கல்ப சூர்யோதயம் என்பது மிகச் சிறந்த ஒன்று. காவியக் கட்டுக்கோப்பு, கற்பனையின் லாகவம், சொல் அலங்கார, அர்த்த அலங்கார நயங்கள், பல படிகளில் அர்த்தம் தரும் சொற்களின் அர்த்த சாமர்த்தியம் ஆகியவற்றில் தேசிகரின் கவித்துவம் அழகாக விளையாடியிருக்கிறது. வேதாந்த தாத்பர்யம் அல்லது உள்ளுறை பொருள் என்பது அள்ளக் குறையாமல் கிடைக்கும்படி அமைத்திருக்கின்றா

Siva Siva

chưa đọc,
09:40:47 17 thg 6, 201217/6/12
đến santhav...@googlegroups.com
Nicely done!

2012/6/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீகிருஷ்ண மிசரர் எழுதிய ப்ரபோத சந்த்ரோதயம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் தமிழாக்கம் சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

......அதில் ஒரு கட்டத்தை என் சொந்த மனோதர்மப்படிக் கையாண்டுள்ளேன். அதாவது தேசிகரின் உள்கருத்துக்கு விரோதம் இல்லாமல். காமாதி வ்யூஹ பேதம் என்னும் அங்கத்தினின்றும் ஒரு பகுதியை நான் adapt செய்துள்ளேன். -- விவேக உதயம் என்னும் தலைப்பில். நாடகத்தைப் படிக்க இந்தச் சுட்டியில் --  


ஜீவனின் ஆன்மிக க்ஷேமம் என்பதைவிட நித்தியமான காவிய இலட்சியம் என்ன இருக்கிறது? 

Balasubramanian N.

chưa đọc,
16:42:55 17 thg 8, 201217/8/12
đến santhav...@googlegroups.com

தொல் என்பது பழையதைக்குறிப்பிட்டது போல, தொள் என்பது

pre [= previous / prior] எனும் ப்ரீஃபிக்ஸாக இயங்குவதாகத் தோன்றுகிறது. தொன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் வரிசை போல் லக்ஷத்துக்கும் கோடிக்கும் தொள் சேரவில்லையென்றால், காரணம், லட்சமும் கோடியும் பிற்காலத்தே வடமொழியிலிருந்து வந்தவை.இப்படியொருவூகம்!

2012/8/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தொண்டின் சிறப்பு

தொண்டு என்பது தெய்வப் பணிவிடை, அடிமை என்னும் பொருள் சாதாரணமாக நாம் அறிந்தது. தொண்டுக்கே அடிமை பூண்ட குலம் தொண்டக்குலம்.

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து தொண்டக் குலத்தில் சேருமாறு அழைக்கிறார் பெரியாழ்வார்.

ஆனால் தொல்காப்பியர் காலத்தை ஒட்டியும், அவருக்கு முன்னும் ‘தொண்டு’ என்னும் சொல்லுக்கு 9 என்னும் எண்ணும் பொருளாக இருந்திருக்கிறது.

மலைபடு கடாம் 21ஆம் வரி கூறுகிறது -- தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் -- ஒன்பது வார்க்கட்டு என்பதை தொண்டு படு திவவு என்னும் சொல் குறிப்பதாக டாக்டர் உ வே சா அவர்கள் குறிப்பு காட்டுகிறார்.

தொல்காப்பியரும் 9 என்னும் எண் கடைசியில் வந்து முடிந்த ஒரு பேரெண்ணைக் குறிக்கும் போது

‘தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்றொன்பஃது’ என்று கூறுகிறார்.
(செய்யுளியல் 406 )

http://www.tamilvu.org/slet/l0100/l0100uri.jsp?song_no=1352&book_id=1&head_id=3


தலையிட்ட -- கூட்டிய

மூன்று தலையிட்ட முப்பது = 30+3
இரண்டு தலையிட்ட இருபஃது = 20+2

வடமொழியிலும்

த்வா விம்சதி = 22, சதுர் விமசதி என்று கூட்டும் கடையெண்ணை முதலில் சொல்லி முழு எண்ணைப் பின்பு கூறுதல் ஒப்பு நோக்கத்தக்கது.

ஆக, தொண்டு என்பது 9 என்ற எண்ணைக் குறித்த பழைய பயன்பாடு என்பது உரைக்காரர்களும், மூல நூல் ஆசிரியனாகிய தொல்காப்பியரும், மலைபடுகடாத்து பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாரும் காட்டும் பயன்பாடுகளில் தெரியவருகிறது.

இப்பொழுது 9, 90, 900, 9000 என்ற டெசிமல் பெருக்கத்துக்கு வருவோம்.

இதற்குப் பெயர்கள் முறையே ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஒன்பதினாயிரம் என்பன.

8, 80, 800, 8000 என்னும் எட்டின் டெசிமல் பெருக்கம் எட்டு, எட்டு பஃது = எண்பது, எட்டு நூறு = எண்ணூறு, எட்ட் ஆயிரம் எண்ணாயிரம் என்று வருகின்றன. அதைப் போலவே மற்ற எண்களுக்கும்.

ஆனால் ஒன்பதுக்கு மட்டும் பத்தாம் இடத்தைக் குறிக்கும் சொல்லான ஒன்பது ஒன்றாம் இடத்தில் நிற்கும் ஒற்றை எண்ணான 9 க்கு ஆகிவருகிறது. தொண்ணூறு என்று நூறாம் இடத்தின் பெயர் பத்தாம் இடத்தில் நிற்கும் 90 என்பதுக்கு ஆகிவருகிறது. தொள்ளாயிரம் என்று ஆயிரத்து இடப்பெயர் நூறாம் இடத்து 900 என்பதற்கு ஆகிவருகிறது.
ஏன் இந்த இடப்பெயர்வு?

அதாவது முதலாம் இடத்தில் முற்காலத்தில் இருந்த 9க்கு நேர் பெயரான தொண்டு என்பது வழக்கு ஒழிய அதன் மேல் அடுக்கிய பத்தாம் இடப்பெயர், நூறாம் இடப்பெயர், ஆயிரத்தாம் இடப்பெயர் ஆகியன எல்லாம் முதலாம் இடத்தை நோக்கி நகர்ந்து விட்டன போன்ற காட்சி தென்படுகிறது.

எப்படி இது நேர்ந்திருக்கலாம், அப்படி ஒரு வேளை இப்படி நேர்ந்திருக்குமானால்?

ஒரு யூகம் செய்வோம். யூகம் தான். சான்றாண்மை மிக்க முடிபு என்று கொள்ள முடியாது.

தொல்காப்பியரின் காலத்துக்கு முன் தொண்டு என்னும் 9ன் பெயரின் அடிப்படையிலேயே பத்தின் பெருக்கம் இருந்தது என்று கொள்வோம்.

அதாவது 9, 90, 900, 9000 என்பனவற்றிற்கு முறையே தொண்டு, தொண்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என்று.

இப்பொழுது 9க்கு தொண்டு என்னும் அரிய பயன்பாடு வழக்கு ஒழிந்ததும் தொண்பது என்று 90ஐக் குறித்த பெயர் முதலிடத்தை நோக்கி நகர்ந்து 9ஐக் குறிக்க புழக்கத்தில் அமைந்துவிட்டது. தொண்பது என்பது ஒன்பது என்று சொல்வழக்கில் வந்துவிட்டது.

அதேபோல் தொண்ணூறு என்று 900 என்பதைக் குறித்த பெயர் பத்தாம் இடத்தை நோக்கி நகர்ந்து 90ஐக் குறிக்க புழக்கத்தில் வந்துவிட்டது.

9000 என்பதைக் குறித்த தொள்ளாயிரம் என்பது 900 என்பதைக் குறிக்க நகர்ந்தது.

9000 என்பது எப்படிக் குறிக்கப்படும். அமைந்துவிட்ட வழக்கத்தின்படி?

ஒன்பது ஆயிரம் என்று குறிக்கப்படல் வேண்டும். நூற்பாவின்படி இன் ஒன்று சேர்ந்து ஒன்பதின் ஆயிரம் = ஒன்பதினாயிரம் என்று ஆனது.

இது பதிப்பாசிரியரான திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டுகின்ற யூகம். ஆனால் சிந்தனைக்குரிய யூகம்.

ஏன் சிந்தனைக்குரியது என்பது ஒன்பது என்னும் சொல்லுக்கான நூற்பாவையும், அதன் உரையையும் காணும் போது புலப்படும்.

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகாரம் ஆகும்.
(எழுத்து 445)

இந்த நூற்பா எண்ணுப் பெயரொடு பத்து சேருங்கால் எப்படி வரும் என்று விவரிக்கும் இடத்தில் ஒன்பதோடு பத்து சேரும் போது என்ன ஆகும் என்று நூற்பா விவரிக்கிறது.

ஒன்பது என்னும் சொல்லில் உள்ள ஒகரத்தின் முன் தகர ஒற்று தோன்றி நிற்கும். ஏற்கனவே இருக்கும் ன் என்னும் ஒற்று ணகாரமாய் இரட்டிக்கும். இப்பொழுது ஒன் என்பது தொண் என்று ஆயிற்றா? வருமொழியாகிய பஃது என்பதில் உள்ள பகரமும் ஆய்தமும் கெட்டுப் போக ஊகாரக் கிளவி நிற்றலை ஆசிரியன் விரும்பும். அப்பொழுது தொண்+ஊ ஆயிற்று.

பஃது என்பதில் ப, ஃ இரண்டும் போய்விட்டது. மிச்சம் து என்பதுதான். இந்த து என்பதில் த்+உ இதில் உள்ள உகரம் கெடாது நிற்கும். தகரம் றகரமாக ஆகிவிடும். தொண்+ஊ+ற்+உ = தொண்ணூறு என்ற சொல் கிடைக்கும்.

உள்ளபடியே பார்த்தால் தம் காலத்தில் புழக்கத்துக்கு வந்துவிட்ட தொண்ணூறு என்னும் சொல்லை நூற்பா விவரிக்க முயற்சி செய்கிறதேவொழிய சொல்லுக்கான நியாயமோ, விளக்கமோ, அமைதியோ இருப்பதாகத் தோன்றுகிறதா?

http://www.tamilvu.org/slet/l0100/l0100noo.jsp?song_no=445&head_id=1

இந்த நூற்பாவிற்கு அடிக்குறிப்பில் திரு ஞா தேவநேயப் பாவாணர் காட்டியிருக்கும் யூகக் கருத்தைத்தான் முதலில் விவரித்தேன். இந்த யூகத்திற்குத் தொண்டு என்பது 9ஐக் குறிக்கும் என்று தொல்காப்பியரும், மலைபடுகடாத்துப் புலவரும் காட்டும் சான்று பக்க பலம். தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற வழக்குகள் கெடாமல் வந்துள்ளமை ஒரு பலம். ஆனால் ஒரு கேள்வி இந்த யூகத்திலும் எழாமல் இல்லை. என்ன? யூகம் கூறும் பண்டைய முறையில் 90 என்பதைக் குறித்த தொண்பது வழக்கில் மாறி தொண்டு என்னும் சொல் பொருள் வழக்கு வீழ, ஒன்பது என்று ஆகிவிட்டது என்றால், ஏன் தொண்ணூறு என்பதும், தொள்ளாயிரம் என்பதும் தகரம் மறைந்துபடாமல் அப்படியே வந்தது என்னும் கேள்வியும் எழும். ஆனால் இந்த யூகம் கண்மூடித்தனமான யூகம் இல்லை என்பதும், சிந்தனைக்குரியது என்பதும் சரிதானே?

ஒன்பது என்பது பத்தில் ஒன்று குறைந்தது என்பதைச் சுட்டும் சொல் என்று ஒரு சாரார் சொல்வதுண்டு. எனில் தொண்ணூறு என்பது நூறில் எவ்வளவு குறைந்தது என்பதைக் காட்டுகிறது? தொள்ளாயிரம்?

ஆக மொத்தம் 9க்கு உரிய பழம் பெயரான தொண்டு என்பதன் சிறப்பு அரிய/அறிய சிறப்பன்றோ!


***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*

Chandar Subramanian

chưa đọc,
20:39:52 28 thg 12, 201228/12/12
đến santhav...@googlegroups.com
வாருமய்யா கவிஞரே! பார்த்து ரொம்ப நாளாச்சு!
 
 
வைர வரிகள்! இருட்டிலிருந்தும் ஒளியை இழுக்கின்றீர்கள்!


 
2012/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஊன்றியெழு உயிரிழையில் ஒன்று
கூனிரியக் குற்றுயிராய் நின்று
மேனிக்குள் மூட்டுகின்ற தீ என்று
பனிக்குள் ஒரு சூட்டைக்
கண்டு பதைக்கிறது
உள்ளம்.



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Hari Krishnan

chưa đọc,
20:56:36 28 thg 12, 201228/12/12
đến santhavasantham


2012/12/29 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

வைர வரிகள்! இருட்டிலிருந்தும் ஒளியை இழுக்கின்றீர்கள்!

ரங்கனுக்கு இந்த ட்ரேட்மார்க் காப்பிரைட் சொற்றொடரைப் பயன்படுத்தாதீர்கள்.:)

வைரவரிக்காரரை விட பல மடங்கு உயர்ந்தவர் ரங்கன். 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Chandar Subramanian

chưa đọc,
21:05:25 28 thg 12, 201228/12/12
đến santhav...@googlegroups.com
முத்தாகச் சொன்னீர்கள்! இருட்டிலிருந்து ஒளியை இழுப்பதால் 'வைர' வரிகள் என்றேன். எல்லாச் சொற்களையும் காப்பிரைட் செய்துவிட்டால் என்போன்ற சொல்லேழைகளுக்கு பேச்சேது?
 


 
2012/12/29 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Kaviyogi Vedham

chưa đọc,
00:48:03 22 thg 2, 201322/2/13
đến santhav...@googlegroups.com
படிக்க வெகு சுகம்..ஆயின் எது பற்றியது? தலைப்புசொன் னால்ஆறு  தல்!1
யோகியார்

2013/2/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ழகு!
என்ன அது?
கண்ணினிப்பா?
காதில் மதுவா?
முகர் மயலா?
நாவீன் தேனா?
தொட்டெறியும்
இன்பச் சூறையா?
மிருதுவா?
வளைவா?
நெளிவா?
சுழிப்பா?
செழிப்பா?
குழிப்பா?
விழிப்பா வையம்
பிரதியா?
ரதிப்பார் வைக்குள்
குனியும் வில்லா?
விரையும் சரமா?
சரக்

Dr Subramanian

chưa đọc,
01:47:48 22 thg 2, 201322/2/13
đến santhav...@googlegroups.com
மோகனரங்கன்
வெகுகாலம் முன்பு ( 30 ஆண்டுகள் ) நான் எழுதிய கவிதை வரிகளை உம் படைப்பு நினைவுக்குக் கொண்டுவந்து விட்டது. அழகை ஆராதிக்கும் நீண்ட கவிதை அது... 

“மரணம்தான் அழகென்று மனமுள்ளே சொல்கிறது;
காரணம்
அதன்-
வருகைக்குத்தானே நாம் வாழ்க்கை நடத்துகின்றோம்!”

2013/2/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ழகு!
என்ன அது?
கண்ணினிப்பா?
காதில் மதுவா?
முகர் மயலா?
நாவீன் தேனா?
தொட்டெறியும்
இன்பச் சூறையா?
மிருதுவா?
வளைவா?
நெளிவா?
சுழிப்பா?
செழிப்பா?
குழிப்பா?
விழிப்பா வையம்
பிரதியா?
ரதிப்பார் வைக்குள்
குனியும் வில்லா?
விரையும் சரமா?
சரக்கூடாகிச்
சுடரும் கதிரா?
கதிரும் குளிரும்
பனிவெப் பியலா?
இயலாய் அயலார்
மயலுண் பதுவா?
கயலாய்க் கடைவிழித்
தூண்டுஇல் புதுமையா?
மையாய் இட்டுளம்
நையும் கொடுமையா?
புலரும் கதிரும்
படியும் நிலவும்
அலரும் பூவின்
தலைநுண் முகையும்
விம்மிடும் மலையும்
விழுந்திடு சரிவும்
விரைந்திடு பள்ளத்
தாக்குறு புதரும்
தேக்குறு மேடும்
தழைத்திடு தடநீர்
பாய்வழித் தடமும்
இயற்கையின் கொசுவம்
அவிழ்ந்திடு கடலும்
அலைக்கரம் தழுவப்
படிந்திடு கரையும்
சிறகுசிலிர்க்கச்
சிவணிய விண்ணும்
சுயத்தில் கரைந்த
பயனாய்ச் சுகமும்
இயற்கை எங்கும்
பொங்கும் வளமும்
இயலும் உன்பால்
எனவே நினைத்தால்


நினைவாய் நிலைத்த
ஈரம்புலராக் கணத்தில்
இயற்கையின்
ரசாயன உயிர்ச்
சமன்பாட்டில்
கூட்டியும் கழித்தும்
பெருக்கியும் வகுத்தும்
மிச்சமும், ஈவும்
சொச்சமுமாக்கிச்
சொகுசாய் இயற்கை
சொக்குப் புன்னகை
பூக்கும் மணமா?
அழகு!
அழகா?
அளவா?
மயலில் கருத்து
துயிலக் களவா?
அணுக்கள் முயங்க
அவைமேல் படிந்த
உள்ளப் பாசி
உமிழும் குமிழோ?
அமிழும் உயிரின்
முடநம் பிக்கையோ?
எதுவானால் என்?
மெதுவாகவே வா!
இறப்பே!
நீயே அழகின்
தூய வடிவோ?
அழகென்ற ஒன்று
இலையென்ற மர்மம்
கலையவிழ வா!
அலையெறிய நாடி
அநவரதம் கூடி
தலைநாளில்
அருளோடு வா!


***

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Managing Editor,
Journal of Algal Biomass Utilization (JABU): ISSN: 2229 – 6905 
http://jalgalbiomass.com
President ,IBA-Indian Biomass Association (Regd)
President, KIA,Chennai (Regd)
Off: 044-26208896 Res: 044-24748674
Mobile: 9381044470
Skype ID vavesu1

Ramamoorthy Ramachandran

chưa đọc,
13:54:17 22 thg 2, 201322/2/13
đến santhav...@googlegroups.com
காடுடையான்  
சுடலைப்பொடி 
பூசும்போது 
நிகழ்வும் 
எதிர்வும் 
இறப்பில்
நெருங்கும்
நேரத்தின் 
நொடி 
அது. 
இராமமூர்த்தி.  

2013/2/22 Dr Subramanian <vav...@gmail.com>

Ramamoorthy Ramachandran

chưa đọc,
13:57:13 22 thg 2, 201322/2/13
đến santhav...@googlegroups.com
என் மனைவி 
சொல்கிறாள் 
ரொம்ப 
அழகுதான் 
போங்கோ 
-இராமமூர்த்தி 

2013/2/23 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

Swaminathan Sankaran

chưa đọc,
17:32:59 22 thg 2, 201322/2/13
đến santhav...@googlegroups.com
மனைவி சொன்னால் அதற்கு எதிர்ப்பு இருக்கக் கூடாதே!
:-)
 
சங்கரன் 
 
 


2013/2/22 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>



--
 Swaminathan Sankaran

Ramamoorthy Ramachandran

chưa đọc,
21:22:25 22 thg 2, 201322/2/13
đến santhav...@googlegroups.com
கவிதையின் தலைப்பு 'அழகு' அல்லவா?    தெரியாமல் மனைவி அழகுதான் போங்கோ என்றாள். நானும் அதை வழிமொழிந்து உங்களிடம் அழகுதான் போங்கோ என்றேன்.
இராமமூர்த்தி.

2013/2/23 Swaminathan Sankaran <swaminathansan@

Balasubramanian N.

chưa đọc,
13:17:42 3 thg 9, 20133/9/13
đến santhav...@googlegroups.com

மிக மிக அருமையாகத் துவக்கியிருக்கிரீர்! அழகிய எளிய நடை! வாழ்க!

ஒரு சின்னஞ்சிறு குறிப்பு: ’பகவந்நாம’எனவேண்டியதை - ’நாமா’ என்பது

தமிழ்ப்பேச்சு வழக்கில் வரும் மரூ



2013/9/3 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைப் பற்றிக் கொஞ்சம் எழுதத் தொடங்கியிருக்கிறேன். நண்பர்கள் படிக்க விருப்பப்பட்டால் 


***



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Vis Gop

chưa đọc,
20:20:57 3 thg 9, 20133/9/13
đến santhav...@googlegroups.com
உங்கள் எழுத்து படிக்கையில் உங்களிடம் பேசுவது போல் இருக்கிறது. உங்கள் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தை பத்திவிட்டுப் பத்தி தாவி ஒருமுறை படித்திருக்கிறேன். நிச்சயம் முழுதும் படிக்கும் தாகத்தை ஏற்படுத்தி விட்டது. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
கோபால்

Pas Pasupathy

chưa đọc,
16:54:29 6 thg 11, 20146/11/14
đến Santhavasantham
தமிழறிஞர் பக்ஷிராஜன் கம்பனைப் பற்றி பல நூல்கள் வெளியிட்டுள்ளார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 
‘புலிநகக் கொன்றை’ என்ற பிரபல நாவலின் ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணனின் தந்தை.  

2014-11-06 15:43 GMT-05:00 Srirangam V Mohanarangan <ranga...@gmail.com>:


நூல் - திருக்குருகூர்வரி 

பாடியவர் - கி பக்ஷிராஜன், வழக்குரைஞர், திருநெல்வேலிக் கூடல் 

நாணல் என்று முன்னம் நான் குறிப்பிட்ட பேராசிரியர் திரு ஏ சீநிவாசராகவன், இவர் எல்லாம் நண்பர்கள் என்று நினைக்கிறேன். சென்னையில் வாழும் ஆங்கிலப் பேராசிரியர் திரு அரங்கநாதன் அவர்கள் திரு பக்ஷிராஜனைப் பற்றிக் குறிப்பிடும் போது சொன்ன நினைவு - சம்பிரதாயத்தில் மிக ஆழ்ந்த ஞானம் கொண்டவர் என்று. 


--

Subbaier Ramasami

chưa đọc,
21:35:51 7 thg 11, 20147/11/14
đến சந்தவசந்தம்
அமரர் ப்க்ஷிராஜன் அவர்களை நானறிவேன். திருநெல்வேலி ஜங்ஷனில் சன்னதித்தெருவில் இருந்தார். அட்வொகேட்/ ஆனால் அவர் கவிஞரா என தெரியாது. ஆனால் இன்னொரு பக்ஷிராஜன்  எழுத்தாளர் கவிஞர் . அவர் டெல்லியில் இருந்தார். அவரையும் எனக்குத் தெரியும். அவர்தான் நான் 1987ல் டெல்லி சென்றிருந்த போது அவர்  தங்கியிருந்த வீட்டிலேயே வாடகைக்கு இடம் பிடித்துகொடுத்தார். இருவரே பேராசிரியருக்குப் பழக்கமானவர்கள். பெரியன் சீனிவாசய்யாங்காரையும் அறிவேன். நான் மாணவனாக தூத்துக்குடியில் இருந்த போது அவரது கம்பராமாயணப்பதிப்புகள் இரண்டாம் பதிப்புப் போடப்போவதாகவும் ப்ரூஃப் திருத்தித் தரவேண்டும் என்றும் சொன்னார். சரியென்றேன். ஆனால் அது நடைபெறவில்லை. அவருடைய மகன் அழகிய நம்பி ஆழ்வார் திருநகரிப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்றார்.

நம்மாவாழ்வார் காதல் மிக அழகு. அதில்
பொங்குமறைத் தமிழ்முனிவன், பொதியமலைக் காவலவன்   என்ற வரி இலக்கணப்பிழையோடு இருக்கிறது. மிகக் கட்டுக்கோப்போடு மர்ரவரிகளை எழுதியுள்ள புலவர் இத்தவற்றைச் செய்திருக்கமாட்டார். பாட பேதம் இருக்கவேண்டும்

கீழே கொடுத்துள்ள புகைப்படம் பேராசிரியர் மணிவிழாவில் நடந்த கவியரங்கின் போது எடுத்தது. அதில் நாமம் போட்டுக்கொண்டு ஓரமாக இருப்பவர்தான் வக்கீல் பக்ஷிராஜன்.

நானும் அந்தப்புகைப்படத்தில் வலது புறஹ்ட்திலிருந்து 3 வது ஆள்ளக இருக்கிறேன். கி வா. ஜ தலைமை



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ASR9.jpg

Subbaraman NV

chưa đọc,
21:51:21 7 thg 11, 20147/11/14
đến santhav...@googlegroups.com
அருமையான மலரும் நினைவுகள்!
--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/

Subbaraman NV

chưa đọc,
00:05:23 25 thg 11, 201425/11/14
đến santhav...@googlegroups.com
Great profile!  Great creations! All the best!
N V Subbaraman 

2014-11-25 10:19 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றி விம்சதி என்னும் கணக்கில் இருபது வெண்பாக்கள் எழுதினேன். அதற்கு ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பொருள் பொழிந்து நான்கு பகுதிகளாக வலையேற்றியுள்ளேன்.

1) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-1.html

2) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-2.html

3) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-3-11-to-15.html

4) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-4.html

***


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Kaviyogi Vedham

chưa đọc,
00:36:13 25 thg 11, 201425/11/14
đến santhavasantham
 சில வெண்பாக்களை நிதானமாக இப்போது படித்தேன் என் நண்பரே. மிக அருமையாக, தெளிவாக எழுதியுள்ளீர்கள். வைஷ்ணவ சம்ப்ரதாயம் அழகுறப்பின்பற்றப்பட்டுளது. வாழ்க மோகனரங்கம்!,
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.எம் ஆஸ்ரம  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள் அற்புத,அழகியபடைப்பும் 
அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


2014-11-25 10:19 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளைப் பற்றி விம்சதி என்னும் கணக்கில் இருபது வெண்பாக்கள் எழுதினேன். அதற்கு ஆங்கிலத்திலும், தமிழிலுமாக பொருள் பொழிந்து நான்கு பகுதிகளாக வலையேற்றியுள்ளேன்.

1) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-1.html

2) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-2.html

3) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-3-11-to-15.html

4) http://yathindrapravana.blogspot.in/2014/11/mamunivan-irupadhu-4.html

***


Pas Pasupathy

chưa đọc,
11:52:21 27 thg 11, 201427/11/14
đến Santhavasantham
வாழ்த்துகள்! வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு! 

2014-11-27 11:45 GMT-05:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியைப் பற்றியும், அவரது பாடல்களில் புதைந்திருக்கும் அரிய பெரிய கருத்துகளையும், தமிழ் நாட்டிற்கே அன்றைக்கும், என்றைக்குமாக ஒரே ஆசானாக அமைந்திருக்கும் அவரது பார்வையின் செழுமை, செறிவு ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ந்து எழுத எண்ணம் கொண்டுள்ளேன். அத்தகைய எழுத்துகள் தனி ப்ளாக்கில், ‘பாரதி என்னும் கல்வி’ என்னும் தலைப்பில் சேமிக்கப் படும். ப்ளாக்கிற்கான சுட்டி

பாரதி என்னும் கல்வி - http://seerrangan.blogspot.in/

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

*
--

Kaviyogi Vedham

chưa đọc,
10:18:18 28 thg 11, 201428/11/14
đến santhavasantham
படித்தேன் 2 கட்டுரை..நல்ல ஆழ்ந்த சிந்தனைகளைத்தூண்டிவிட்டீர் மோகன்..வாழ்க
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.எம் ஆஸ்ரம  ‘இலக்கியவேல்’
 (மாதத்)தமிழ் ஏட்டை ரூ100- அனுப்பி(சந்தா)
வாங்கிப்பின்பு உங்கள் அற்புத,அழகியபடைப்பும் 
அனுப்புங்கள். ஓராண்டாக இது குருஜி அருளால்
சக்கைப்போடு போடுகிறது.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 


2014-11-27 22:46 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
நன்றி ஐயா.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/DJcnXfLpKFs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

chưa đọc,
10:17:01 4 thg 12, 20144/12/14
đến santhavasantham

2014-12-04 20:27 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
பாரதியாரின் பாப்பா பாட்டு பதிப்புகள் பற்றிய என் விமரிசனம் இங்கு. நண்பர்கள் காணில் மகிழ்ச்சி -

ரா கனகலிங்கத்தின் மேற்கோள் ஒன்றை உங்கள் பதிவில் மறுமொழியாக இட்டிருக்கிறேன்.  முடிந்தால் அதை இங்கேயும் எடுத்து இடுங்கள்.  மறுமொழி மாடரேஷனில் இருப்பதால் என்னால் ஒத்தி ஒட்ட முடியவில்லை.
Bài viết đã bị xóa
Bài viết đã bị xóa
Bài viết đã bị xóa
Bài viết đã bị xóa
Trang đang tải tin nhắn khác.
0 tin nhắn mới