ஒரு சந்தேகம்

21 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Apr 15, 2012, 12:17:04 PM4/15/12
to vall...@googlegroups.com
ஒரு சந்தேகம் 


விளக்கிலே திரி நன்கு சமைந்தது 
மேவுவீர் இங்கு தீக்கொண்டு தோழரே -- 

என்பது பாரதியாரின் ‘நாட்டுக் கல்வி’ என்னும் மொழிபெயர்ப்புப் பாடலின் முதல் இரண்டு வரிகள். மூலக் கவிதை ஸ்ரீமான் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுடையது என்று குறித்திருக்கிறார்கள் பதிப்பாசிரியர்கள். 

ஸ்ரீமான் தாகூரின் ஆங்கில மூலப்பாடல் என்ன? 

***

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Apr 15, 2012, 12:25:55 PM4/15/12
to vall...@googlegroups.com
நான் அபீட்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/4/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

vallamai editor

unread,
Apr 15, 2012, 8:38:12 PM4/15/12
to vall...@googlegroups.com
ஆகா, ரங்கன் ஜி..... பாயிண்ட் மேட்....... 

கேள்வியும் தாங்களே..... பதிலும் தாங்களேதான் சொல்ல வேண்டும்...! காத்திருக்கிறோம்.

2012/4/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு சந்தேகம் 

tn elango

unread,
Apr 16, 2012, 12:42:37 AM4/16/12
to vall...@googlegroups.com
தாகூரின் மூலப் பாடல் ஆங்கிலமா? வங்காளமா?
--

Follow my blogs on  http://tnelango.blogspot.com/


amaithi cchaaral

unread,
Apr 16, 2012, 1:06:57 AM4/16/12
to vall...@googlegroups.com
இந்தத்திரியாவது விடையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறதா என்பதைக்காண காத்திருக்கிறேன் :-)

amaithi cchaaral

unread,
Apr 16, 2012, 1:07:49 AM4/16/12
to vall...@googlegroups.com
ஏற்றப்பட்டிருக்கும் இந்தத்திரியாவது விடையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறதா என்பதைக்காண காத்திருக்கிறேன் :-) 

On Mon, Apr 16, 2012 at 10:12 AM, tn elango <tnel...@gmail.com> wrote:

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 7:17:30 AM4/16/12
to vall...@googlegroups.com
http://books.google.co.in/books?id=zFy87zNb5QYC&pg=PA98&lpg=PA98&dq=tagore+poems+on+national+education&source=bl&ots=UVPrUJRbiv&sig=xYs7N_x6g3NGV0KcOV8m4ieRTj4&hl=en&sa=X&ei=t9SLT4GcEoPjrAe5-dC8Cw&ved=0CB4Q6AEwADgK#v=onepage&q=tagore%20poems%20on%20national%20education&f=false

பக்கம் 99-ல்
Inline image 1

விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
Nagarajan

2012/4/16 amaithi cchaaral <amaithi...@gmail.com>
bharathy 2.jpg

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 7:21:23 AM4/16/12
to vall...@googlegroups.com
என் பங்குக்கு ஒரு சந்தேகம்.  இது பாரதி 1920-ல் தன் கைப்பட எழுதிய கடிதம்
Inline image 1

அமிர்தம் என்ற பத்திரிக்கையைத் துவக்கத் திட்டமிட்டுப் பொருளும் திரட்டப்பட்டது.  அந்த முயற்சி என்ன ஆயிற்று?
தெரிந்தவர் சொல்க
நாகராசன்

2012/4/16 vallamai editor <vallama...@gmail.com>
bharathy 1.jpg

Annakannan

unread,
Apr 16, 2012, 7:23:16 AM4/16/12
to வல்லமை
யுரேகா யுரேகா.

இன்றிலிருந்து பேராசிரியர் நாகராஜன் வடிவேல் அவர்கள், 'தேடிக் கண்டடைந்த
திருமேனி' என்று அழைக்கப்படுவாராக.

coral shree

unread,
Apr 16, 2012, 7:27:29 AM4/16/12
to vall...@googlegroups.com
அன்பின் நாகராஜன் சார்,

அருமை... ஆகா பிடித்து விட்டீர்களே. 

அன்புடன்

பவள சங்கரி.


2012/4/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

bharathy 2.jpg

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 7:36:12 AM4/16/12
to vall...@googlegroups.com
ஐயா
இது என்ன கொடுமை.
யாராவது வைணவர் மனம் புண்படப்போகிறது
ஒரு காலத்தில் என் அன்பிற்குரிய சாருஹாசன் (கமல் அண்ணன்) சுதி ஏறியதும் ஏறி இறங்கும் திருமேனி (மரம் ஏறும் சானார்கள்)  பட்டை ஏற்றும் திருமேனி  (முடிதிருத்துவோரையும்) வைணவத்தில் இடம் பிடித்ததை நடித்துக்காட்டிப் பாடுவார்
நான் ஆறாம் திணையில் (இணையத் தளத்தில்) தேடலும் தேடல் நிமித்தம் என்றொழுகும் இண்டு இடுக்கில் நுழையும்பெரிய மீசை உள்ள
கரப்பான் பூச்சி
நாகராசன்

2012/4/16 Annakannan <annak...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 8:54:08 AM4/16/12
to vall...@googlegroups.com
சார்! வொண்டர்ஃபுல் !!! 

உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. 

முழு பாடல் கிடைக்கிறதோ இல்லையோ அதன் தொடக்கக் கண்ணிகள் தேடிக கண்டுவிட்டீர் என்று நினைக்கிறேன். 

உங்களுக்கு மிக்க சிரமம் கொடுத்துவிட்டேன் என நினைக்கிறேன். மிக்க நன்றி ஐயா. 

***

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 8:56:51 AM4/16/12
to vall...@googlegroups.com
அன்புடையீர்
நன்றி எதற்கு ஐயா
உங்களுக்குப் பணி செய்ய ஒரு வாய்ப்புக் கொடுத்து உங்கள் பாராட்டையும் பெற்றத்ற்குப் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
நாகராசன்

2012/4/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:05:10 AM4/16/12
to vall...@googlegroups.com
ஐயா! நேரே சந்திக்கும் போது உமக்கு என்னிடம் இருந்து ஐஸ் க்ரீம் ட்ரீட்.. 

தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும். 

***

vallamai editor

unread,
Apr 16, 2012, 9:06:52 AM4/16/12
to vall...@googlegroups.com
எப்போது ஜி.. சொல்லுங்க. எல்லாரும் தயாராத்தான் இருக்கோம்.....

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 9:07:28 AM4/16/12
to vall...@googlegroups.com
நன்றி ஐயா
நான் இனிமையானவன் உடலில் ஒரு சர்க்கரை ஆலைக்குச் சொந்தக்காரன்
அப்புறம் உங்கள் விருப்பம்

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:07:41 AM4/16/12
to vall...@googlegroups.com
இது நாகராஜன் சாருக்கு ஸ்பெஷல் ட்ரீட் 

:-))))

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:08:29 AM4/16/12
to vall...@googlegroups.com
அடடா! அப்படியென்றால் கார வகை? 
:-)

vallamai editor

unread,
Apr 16, 2012, 9:09:18 AM4/16/12
to vall...@googlegroups.com
நாகராஜன் சார் இப்பதானே சொன்னார்.. சர்க்கரை ஆலைக்காரர் என்று... அவர் எங்களையெல்லாம் உட்டுபோட்டு சாப்பிட மாட்டாக...

2012/4/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

vallamai editor

unread,
Apr 16, 2012, 9:10:05 AM4/16/12
to vall...@googlegroups.com
அதுகூட ஓகேதான்..  வறுத்த முந்திரி ஓகேதான்..

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:10:35 AM4/16/12
to vall...@googlegroups.com
சரி சரி வல்லமையின் ஆசிரியர் இலலாமலா? 

:-))
*

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Apr 16, 2012, 9:11:12 AM4/16/12
to vall...@googlegroups.com
என்ன நடக்குது இங்கே?  ஆளுக்கு ஆள் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




vallamai editor

unread,
Apr 16, 2012, 9:11:56 AM4/16/12
to vall...@googlegroups.com
வாங்க...வாங்க சார். ரங்கன் ஜி ட்ரீட் குடுக்குறாகளாம்

2012/4/16 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 9:12:17 AM4/16/12
to vall...@googlegroups.com
முந்திரி கொலஸ்ட்ரால்
நாகராசன்

2012/4/16 vallamai editor <vallama...@gmail.com>
அதுகூட ஓகேதான்..  வறுத்த முந்திரி ஓகேதான்..

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:13:40 AM4/16/12
to vall...@googlegroups.com
ஆமாம் பவளசங்கரியார் தயவுல :-))

vallamai editor

unread,
Apr 16, 2012, 9:14:02 AM4/16/12
to vall...@googlegroups.com
சார் ஒரு நாளைக்கு பரவாயில்லை சார்... உங்க ஷேர் வேனுமான எனக்கு கொடுத்துடுங்க...அட்ஜ்ஸ்ட் பன்னிக்கிறேன்...

2012/4/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
338.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:14:31 AM4/16/12
to vall...@googlegroups.com
அதெல்லாம் நாம் பேசிப்போம் ஏன் கவலைப் பட்றீங்க :-)))

vallamai editor

unread,
Apr 16, 2012, 9:15:12 AM4/16/12
to vall...@googlegroups.com
ஹலோ...ஹலோ... சிக்னல் இல்லியே.....

Nagarajan Vadivel

unread,
Apr 16, 2012, 9:15:52 AM4/16/12
to vall...@googlegroups.com
ஆசிரியரே
ஒங்கள நேர்ல பாத்தப்பவே நினச்சேன்
கூச்சப்போடாம சாப்பிடுவீங்களோனு
நாகராசன்

2012/4/16 vallamai editor <vallama...@gmail.com>
338.gif

vallamai editor

unread,
Apr 16, 2012, 9:16:57 AM4/16/12
to vall...@googlegroups.com
ஹ..ஹா...அட சார் கரீக்டா கண்டுபிடிச்சிட்டீகளே... அதுக்கு ஒரு ட்ரீட் கொடுப்பாக பென் சார்.

2012/4/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
ஆசிரியரே
338.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 9:18:51 AM4/16/12
to vall...@googlegroups.com
அவரு பாரதி மொழிபெயர்த்த தாகூரின் ஆங்கிலப்பாடலையே கண்டு பிடிச்சிட்டாரு.. 

இதல்லாம் என்ன ஜுஜுபி 

:-) 
338.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 16, 2012, 11:35:37 AM4/16/12
to vall...@googlegroups.com
ஐயா! உங்கள் தேடலால் கிடைத்த வரிகளைக்கொண்டு தேடினால் அந்தப் பாடல் ஆங்கிலத்தில் ஸ்ரீமான் ரவீந்த்ரநாத் தாகூர் எந்தச் சூழ்நிலையில் எழுதினார் என்ற கூடுதலும் தகவலும் இப்பொழுது கிடைக்கிறது பாருங்கள். 

நீலான்ஜன் பானர்ஜி என்பவரின் கட்டுரையில் தாகூரின் கடிதத்தில் அவர் குறிப்பிடுவதைப் போட்டிருக்கிறார் -- 

தாகூர் அந்தக் கவிதையை சென்னை அடையாரில் National Education Week கொண்டாடினார்களாம். அதற்கு அருண்டேல் மிகவும் வற்புறுத்திக் கேட்கவே தாம் இந்தக் கவிதையைப் புனைந்ததாகக் கூறுகிறார் தாகூர். 

Scholars have identified a poem (‘The lamp is trimmed./Comrades, bring your own fire to light it...’) as the first poem written directly in English by Rabindranath in 1918. This poem was written to support a fund-raising campaign for the Society for the Promotion of National Education in celebrating the National Education Week in Adyar, Madras. Discussing this poem, Rabindranath wrote to James H. Cousins in a letter that, ‘The message I sent for the National Education Week is not twice born. It was written for the occasion in English at the instigation of Mr. Arundale [George Arundale].’ 

அதாவது ஜேம்ஸ் கௌஸின்ஸ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில். இந்தக் கௌஸின்ஸ் பாரதியாரின் பாடல்களில் ஆர்வம் காட்டி அவற்றை ப்ரெஞ்சு மொழியில் பெயர்க்க வேண்டும் என்று சொல்லியதைப் பாரதியாரே நண்பர்களுடன் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். 

ஆகத் தகவல் கூடுகிறது -- 

1) இந்தக் கவிதை ஆங்கிலத்தில் எழுதியது தாகூர் 

2) அருண்டேல் கேட்டதற்காக எழுதியது. சென்னை அடையாரில் தேசிய கல்வி வாரம் கொண்டாடிய சந்தர்ப்பத்தை ஒட்டி எழுதியது. 

3) இந்த விவரங்கள் தாகூரே James Cousins  என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதை நீலான்ஜன் பானர்ஜி எழுதிய கட்டுரையில் தெரியவ்ருகிறது. 

நீலான்ஜன் பானர்ஜி கட்டுரைக்கான சுட்டி --  


முழுப் பாடலும் கிடைக்க மஹா சக்தி அருள் புரிக. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*
bharathy 2.jpg

Tthamizth Tthenee

unread,
Apr 17, 2012, 4:10:53 AM4/17/12
to vall...@googlegroups.com

எப்பிடியும் இன்னும் ஒரு வருடமாவது ஆகும் ட்ரீட் கொடுக்க
 
அதற்குள் என் பெயரும் நினைவுக்கு வராமலா போகும்  பார்த்துக்கொள்ளலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2012/4/16 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஐயா! உங்கள் தேடலால் கிடைத்த வரிகளைக்கொண்டு தேடினால் அந்தப் பாடல் ஆங்கிலத்தில் ஸ்ரீமான் ரவீந்த்ரநாத் தாகூர் எந்தச் சூழ்நிலையில் எழுதினார் என்ற கூடுதலும் தகவலும் இப்பொழுது கிடைக்கிறது பாருங்கள். 
bharathy 2.jpg

Nagarajan Vadivel

unread,
Apr 17, 2012, 12:12:58 PM4/17/12
to vall...@googlegroups.com
இன்று செய்து முடித்த பணிகள்
1. அடையார் லைப்ரரி
மாடர்ன் ரிவ்யூ இருப்பதை உறுதி செய்துகொண்டேன்
தாகூரின் செய்தி ஒரு நகல் இருப்பதாகவும் அதை நாளை பார்க்கலாம் என்று திட்டம்
2. அண்ணா நூற்றாண்டு நூலகம்
தாகூர் தொடர்பாக 80 புத்தகங்கள் இருப்பதாகவும் அவை பல இடங்களில் இருப்பதாகவும் நாளை பிற்பகல் வந்தால் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
3. சென்னைப் பலகலைக் கழக நூலகம்
1918-ல் பல்கலைக் கழகத்துக்கும் பெசண்ட் அம்மையாருக்கும் மோதல் நடந்து கல்லூரியைத் தொடர்ந்து நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறினர்
இப்போது ஆய்வின் நோக்கம் தெளிவு
தாகூரின் ஆங்கில மொழிபெயர்ப்பில் இருந்து பாரதியார் மொழி பெயர்த்தார் என்று குறிப்பிட்டவர்கள் எந்தக்கவிதை என்று கூறவில்லை
இப்போதுள்ள அனுமானத்தில் தாகூர் மூன்று கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும்போது சில மாற்றங்களைச் செய்திருக்கலாம்
தாகூரின் கவிதைத் தொகுப்பில் இந்த மூன்று கவிதைகளையும் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும்
இந்த வேலை நாளை பிற்பகலில் தொடரப்படும்
நாகராசன்

2012/4/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
bharathy 2.jpg

Mohanarangan V Srirangam

unread,
Apr 17, 2012, 2:29:55 PM4/17/12
to vall...@googlegroups.com
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஐயா.. 

அறிவுக்கான உழைப்பு என்பது தங்களிடமிருந்து நாங்கள் அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டியது. 

தங்கள் விடாத ஈடுபாட்டிற்கும், உழைப்புக்கும் கைகூப்புகிறேன். 

***
bharathy 2.jpg

Innamburan Innamburan

unread,
Apr 17, 2012, 2:28:45 PM4/17/12
to vall...@googlegroups.com
விடாக்கண்டன் நாகராஜனுக்கு ஜே!
இன்னம்பூரான்

Mohanarangan V Srirangam

unread,
Apr 17, 2012, 3:03:26 PM4/17/12
to vall...@googlegroups.com
நிச்சயம் சார். அவருடைய விடாக்கண்ட தனத்தால் விளையும் நன்மையைப் பாருங்கள். 

*** 

coral shree

unread,
Apr 17, 2012, 9:44:45 PM4/17/12
to vall...@googlegroups.com
ஒன்றைச்செய்யவும் வேண்டும்
ஒன்றும் நன்றே செய்ய வேண்டும்
நன்றும் இன்றேசெய்ய வேண்டும்
இன்றும் இன்னே செய்ய வேண்டும்
 

இதற்கு முழுமையான அர்த்தம் உணரச்செய்த பெருந்தகை பேரா. நாகராசன் ஐயா வாழ்க!

அன்புடன்

பவள சங்கரி.

2012/4/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--

                                                               
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

bharathy 2.jpg

Innamburan Innamburan

unread,
Apr 17, 2012, 9:56:50 PM4/17/12
to vall...@googlegroups.com
ஆஜ் கா காம் கல் கர் தோ!
~ பிச்லேவாலா கல்!!
இன்னம்பூரான்

2012/4/17 coral shree <cor...@gmail.com>
bharathy 2.jpg

Chandrasekaran

unread,
Apr 17, 2012, 10:07:14 PM4/17/12
to vall...@googlegroups.com
அண்ணனுக்கு  ஜே!
நாகராஜன் சார் பட்டைய கிளப்பிட்டீங்க
சந்திரா


Nagarajan Vadivel

unread,
Apr 18, 2012, 10:34:28 AM4/18/12
to vall...@googlegroups.com
பட்டையக் கிளப்பீட்டாய்ங்க
ஓடறதென்ன பெரிசா? எல்லாரும் ஓடலாம்.  உதவறதுதான் பெரிசு.
நாங்கள் ஆராய்ச்சி மாணவராக இருந்தபோது எங்கள் பேராசிரியருக்கு முழு நேரம் பணி செய்து அது போகக் கிடைத்த நேரத்தில் எங்கள் ஆராய்ச்சியைச் செய்வோம்
இப்பவெல்லால் மாணவர்கள் சுயம் வரம் வைத்து சரக்குள்ள ஆய்வறிக்கை எழுதிக்கொடுக்கக்கூடிய ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
குமுகத்தில் எழுப்பவேண்டிய கேள்வி ஓடிக்கொண்டிருக்கிறாயா.  திரும்பிப்பார்.  எத்துனைபேர் உன் பின்னே
நிற்க
இண்றைய நடப்பு பற்றிய அறிக்கை
அதற்குமுன் ஒரு கதை
ஒரு நாட்டில் ஒரு மன்னனுக்கு பார்க்கவே அசிங்கமாக இருக்கும் மகள்.  அவள் திருமணத்துக்கு அவன் போடாத திட்டமில்லை
ஒரு முறை மன்னனின் விளம்பரம் பார்த்து அந்த அழகில்லாத மகளை எந்த (அப்)பாவி கட்டிக்க முன் வருகிறான் என்று பார்க்கக் கூடியிருந்தனர்
கூட்டத்தைக் குறக்க என்ணிய மன்னன் என் மகளை மணக்க நினைப்பவன் இந்த நீச்சல் குளத்தில் குதித்து அதன் உள்ளே உள்ள முதலைகள் பாம்பு போன்ற கொடிய மிருகங்களைக் கடந்து மறுகரைக்கு வந்தால் மட்டுமே நாடும் மகளும் என்று அறிவித்தார்
ஆரிவிப்பைக் கேட்டதும் உடனே கூட்டம் ஜகா வங்க ஆரம்பித்தது
அந்தநேரம் ஒரு ஆள் சட்டென குளத்தில் குதித்துவிட்டார்
அவருக்கு என்ன ஆயிற்றோ என்று மக்கள் பரிதவித்தனர்
எப்படியோ குதித்த ஆள் உயிரை இழக்காமல் காயம் படாமல் குளத்தின் மறுகரையை அடைந்தார்
அவரைக் கட்டிப்பிடித்துப் பாராட்டிய மன்னர் இதுவரை ஆண்டுக்கணக்கில் அறிவித்தும் யாருமே முன் வராத நிலையில் நீ முன் வந்தது எனக்கு மகிழ்ச்சி. என் மகள் என்நாடு இதைத் தவிர என்ன வேண்டும் கேள் என்று கேட்க
போ மன்னா உன் நாடு மகள் கிடக்கட்டும்.  முதலில் என்னை குளத்துக்குள் தள்ளிவிட்டவன் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டும் அதற்கு உதவுங்க மன்னா என்று கேட்டானம்
கதை முடிந்தது.
அறிக்கைக்கு வருவோம்
நேற்றைய சந்திப்பில் அடையார் நூலக நூலகர்
ஒரு மஞ்சள் காகிதத்தைக் கொடுத்து
முதலில் உறுப்பினராக வேண்டும். அப்போதுதான் உள்ளே நுழைய முடியும்
படிவத்தைப் பூர்த்தி செய்து இரண்டுபேர் (ஒருவர் பதிவுபெற்ற ஸ்டாம்புடன் கையெழித்திடவேண்டும் எனு சொன்னார்
அதன்படி நேற்று இரண்டுபேரின் கையெழுத்தை வாங்கிக்கொண்டு இன்று அங்கே சென்றேன்
ஆண்டுச் சந்தா ரூ.250/- மரியாதையாக மேஜைமேல் வைக்கவும் என்று (மரியாதையுடன் கேட்டுக்கொண்டார்
காசை எண்ணிச் சரிபார்த்து உறுப்பினராகப் பதிவு செய்தார்
அதன்பின் ஆற்றுப்படை
1காலணியைக் கழட்டிவைக்க வேண்டும்.  அப்பொது ஒருவர் காலணியுடன் உள்ளே போய்க்கொண்டிருந்தார்.  அவர் உள் ஆள் என்றும் நான் வெளி ஆள் எனவே நான் மறக்காமல் காலணியைக் கழட்டிவிட்டு வரவேண்டும் என்றார். 

நான் சட்டையைக் கழட்டனுமா என்று கேட்டேன்.  இன்னொரு விதிப்படி ஒழுங்கான உடை (உள்ளாடை உட்பட) அணிந்துகொண்டு வரவேண்டும் என்றார். 

பயங்கரக் காடாக இருக்குதே.  ஒரு கொலை செய்துவிட்டு இங்கே வந்து ஒளிந்துகொள்ளலாம் என்று நினைத்த்வுடன் நூலகர் இந்த அட்டையைக்கொண்டு வேறு எங்காவது உள்ளே சென்றது தெரிந்தால் உறுப்பின பதவி கேன்ஸல் என்றார்.

வேறு என்ன விதி என்று கேட்டேன் நீங்கள் பார்க்கவேண்டிய புத்தகத்தின் பெயர் நூலக எண் குறிப்பிட்டுக் கேட்டால் உங்களுக்குக் கொடுப்போம்.  புத்தகம் பழமை வாய்ந்ததாக இருந்தால் பாதுகாப்புக்கு நூலக அலுவலர்கள் நின்று கொண்டிருப்பார்கள் என்று சொன்னார்

முதல்நாள் மாடர்ன் ரிவ்யூ 1918 இரண்டு பாகக்ம் என் மேஜை மீது
அதில் தாகூரின் கவிதைகள் 13 இருந்தது
அந்தப் பதின்மூன்று கவிதைகளில் பாரதியா மொழிபெயர்த்த கவிதை இல்லை
அங்கிருந்து நேராக அண்ணா நுற்றாண்டு நூலகம்
இன்று 15 புத்தகங்கள் எடுத்துவைத்திருந்தனர்
அவற்றில் இந்தக் கவிதை வரிகள் இல்லை
இன்று போய் நாளை வா என்று காதில் வுழுந்தது
மீண்டும் நாளை இரண்டு நூலகத்துக்கும் செல்ல வேண்டும்
நாகராசன்

2012/4/18 Chandrasekaran <plastic...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 10:39:52 AM4/18/12
to vall...@googlegroups.com
நன்றி ஐயா. 

***

amaithi cchaaral

unread,
Apr 18, 2012, 10:45:05 AM4/18/12
to vall...@googlegroups.com
வணக்கம் நாகராஜன் ஐயா,


இந்தச் சுட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றால், அது மொத்தம் 500 கவிதைகளை நம் முன் கொட்டுகிறது. அலசுவோம், முயன்றால் முடியாததும் உண்டோ. எளிதாகக் கிடைத்து விட்டால் பொக்கிஷத்துக்கு மதிப்பேது

அன்புடன்,
அமைதிச்சாரல்(சாந்தி மாரியப்பன்)
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 10:47:28 AM4/18/12
to vall...@googlegroups.com
On Wed, Apr 18, 2012 at 8:15 PM, amaithi cchaaral <amaithi...@gmail.com> wrote:
வணக்கம் நாகராஜன் ஐயா,


இந்தச் சுட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு சென்றால், அது மொத்தம் 500 கவிதைகளை நம் முன் கொட்டுகிறது. அலசுவோம், முயன்றால் முடியாததும் உண்டோ. எளிதாகக் கிடைத்து விட்டால் பொக்கிஷத்துக்கு மதிப்பேது

அன்புடன்,
அமைதிச்சாரல்(சாந்தி மாரியப்பன்)




நீங்கள் இந்த இழையிலாவது இந்த ப்ரச்சனைக்கு முடிவு ஏற்படுகிறதா என்று பொறுமையாகக் காத்திருக்கப் போவதாய்ச் சொன்ன ஞாபகம். 

விடுவுக்கான முதல் நாலு வரிகளும், அதன் சூழலும் ஐயா தயவால் கிடைத்துவிட்டன பார்த்தீர்களா? 
:-)
330.gif

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2012, 10:59:53 AM4/18/12
to vall...@googlegroups.com
இந்த இணையதள வளங்களைச் சோத்தித்துப்பார்த்ததில் இந்தக் கவிதை இங்கே காணவில்லை
தாகூர் தொடக்கத்தில் புனை பெயரிலும்  மிக இளமைக்காலத்திலும் (பாரதிபோல் தாகூரும் தன் பத்தாவது வயதில் கவிடை எழுத ஆரம்பித்தார்) எழுதிய கவிதைகள் பதிப்பில் இல்லை
முதல் இரண்டுவரிகள் மொழிபெயர்ப்புடன் ஒத்துப்போகிறது
அந்தக்கவிதையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்
நாகராசன்


2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

Annakannan

unread,
Apr 18, 2012, 11:01:00 AM4/18/12
to வல்லமை
பேரா.நாகராஜன் ஐயா, உங்கள் அனுபவத்தைப் படிக்கிற போது, ஏதோ கால
எந்திரத்தில் சற்றே பின்னோக்கிச் சென்றது போல் இருந்தது. அடையார் நூலகம்
என்று நீங்கள் குறிப்பிட்ட காரணம் புரிந்தது. இவ்வளவு கட்டுப்பாடுகள்
இருந்தால், அதை எவரும் எளிதில் அடையார்.

எனினும் சொன்ன கதையும் பெற்ற அனுபவமும் அருமை. ஆராய்ச்சிக்காக எவ்வளவு
அலைய வேண்டியிருக்கிறது, பாருங்கள். இதற்காக ரங்கன்ஜி, ஐஸ்கிரீம் கொடுக்க
ஆரம்பித்தால், ஒரு கடையையே கொடுத்தாலும் போதுமா?

உலகின் அனைத்து நூல்களையும் மின்னணு வடிவில் சேமித்து, அனைத்து
நூலகங்களையும் மின் நூலகங்களாக மாற்றிவிட்டால், இந்த அலைச்சல் வெகுவாகக்
குறைந்துவிடும். இது தொடர்பாக என்னிடம் ஒரு செயல் திட்டம் உள்ளது.
அரசுகளும் தனியார் நூலகத்தினரும் பதிப்பாளர்களும் பிறரும் ஒருங்கிணைந்து
ஒத்துழைத்தால், இந்தச் சிக்கல்களை எல்லாம் மூட்டை கட்டிப் பரணில்
ஏற்றிவிடலாம்.

amaithi cchaaral

unread,
Apr 18, 2012, 11:03:38 AM4/18/12
to vall...@googlegroups.com
மோகனரங்கன் சார்,

நாகராஜன் சார் கட்டும் பாலத்திற்கு இந்த அணில்பிள்ளையும் சுமந்த மணல் அது
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 11:05:09 AM4/18/12
to vall...@googlegroups.com
அணிலுக்கன்றோ அணித்தபுகழ் நிலைத்தது. 
 
330.gif
360.gif

amaithi cchaaral

unread,
Apr 18, 2012, 11:05:28 AM4/18/12
to vall...@googlegroups.com
மோகனரங்கன் சார்,

நாகராஜன் சார் கட்டும் பாலத்திற்கு இந்த அணில்பிள்ளையும் சுமந்த மணல் அந்தச் சுட்டி 
கண்டிப்பாக விடை கிடைக்குமென்று நம்புவோம்.

On Wed, Apr 18, 2012 at 8:31 PM, Annakannan <annak...@gmail.com> wrote:
330.gif

Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:28:30 AM4/18/12
to vall...@googlegroups.com
நாகராஜா!
யாமும் அன்றொரு நாள் அடையாரில் மூழ்கி எழுந்தவன் தான். அங்கு சராசரி வயது 103.
இன்னம்பூரான்

2012/4/18 amaithi cchaaral <amaithi...@gmail.com>
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 11:32:38 AM4/18/12
to vall...@googlegroups.com
On Wed, Apr 18, 2012 at 8:58 PM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
நாகராஜா!
யாமும் அன்றொரு நாள் அடையாரில் மூழ்கி எழுந்தவன் தான். அங்கு சராசரி வயது 103.
இன்னம்பூரான் 


இது என்ன விச்வரூப மேனியாவா? 

எதை எடுத்தாலும் அதுவும் நானே அங்கயும் நான் இருந்தேன், இதுவா இதுவும் நான் தான். 

கொஞ்சம் ஓவரா இல்ல :-))))
330.gif

Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:42:10 AM4/18/12
to vall...@googlegroups.com
கொஞ்சம் என்ன? ரொம்பவும் ஓவர், அடையார் நூலகத்தில். சாமி! நான் அக்காலம் அடையார் வாசி. உமது பற்படி நிலை ஹை கியர் சைக்கிளை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவில், உம்முடன் பிரும்மஞான சபை சம்பந்தம். ஆய்வில் ஆர்வம் அதனால் உ.வே.சா.நினைவு. திரிலோக சஞ்சாரி. வயசும் ஆச்சு, மூட்டை, முட்டையா! உம்ம மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! உண்மை பற்றாளன்.அதனால் தான், எவெரெஸ்ட் உச்சியில் டென்சிங்குடன் அளவளாவியதைச் சொல்ல வில்லை. ஆக்ச்சுவலி, அவருடன் அளவளாவினேன், செளத் ப்ளாக்கில்.
நாகராஜா! எஸ்.ஓ.எஸ்.!
இன்னம்பூரான்

2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 11:43:54 AM4/18/12
to vall...@googlegroups.com
On Wed, Apr 18, 2012 at 9:12 PM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
கொஞ்சம் என்ன? ரொம்பவும் ஓவர், அடையார் நூலகத்தில். சாமி! நான் அக்காலம் அடையார் வாசி. உமது பற்படி நிலை ஹை கியர் சைக்கிளை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவில், உம்முடன் பிரும்மஞான சபை சம்பந்தம். ஆய்வில் ஆர்வம் அதனால் உ.வே.சா.நினைவு. திரிலோக சஞ்சாரி. வயசும் ஆச்சு, மூட்டை, முட்டையா! உம்ம மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்! உண்மை பற்றாளன்.அதனால் தான், எவெரெஸ்ட் உச்சியில் டென்சிங்குடன் அளவளாவியதைச் சொல்ல வில்லை. ஆக்ச்சுவலி, அவருடன் அளவளாவினேன், செளத் ப்ளாக்கில்.
நாகராஜா! எஸ்.ஓ.எஸ்.!
இன்னம்பூரான் 

Don't worry. God is great 
:-)))
330.gif

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2012, 11:44:14 AM4/18/12
to vall...@googlegroups.com
’இ’சார்
அதென்னவோ அது கன்னிமாடம் போலவும் நான் எதோ சுவர் ஏறிக் குதித்தவன் போலும் ஒரு எண்ணம் முதல்நாளில் தோன்றியது
இப்பவும் இன்றிரவு தூங்கமுடியுமா என்று தெரியவில்லை
நூலகர் புத்தகம் படிக்கும்போது ஏதேனும் சேதாரமானால் அதற்கான ஈட்டுத்தொகையை அளிக்கவேண்டும் என்று சொன்னார் 
குறிப்பாக ஒரு தொகுதியில் ஒரு நூல் பழுதுபட்டால் அந்தத் தொகுதிக்கான முழுத்தொகையும் வசூலிக்கப்படும் என்று சொன்னார்
முதல்நாளே 1918-ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதி புரட்டியவுடன் புட்டுக்கொண்டது
நாளைக்கு நம்ம கதி என்னவென்று தெரியலே
காலயில் போறதுக்கு முன்னால் போலீசுக்குத் தகவல் சொல்லீட்டுப் போக வேண்டியதுதான்
நாகராசன்
2012/4/18 Innamburan Innamburan <innam...@gmail.com>
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 11:45:32 AM4/18/12
to vall...@googlegroups.com
On Wed, Apr 18, 2012 at 9:14 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
’இ’சார்
அதென்னவோ அது

 
கன்னிமாடம் போலவும்


ஓ அதான் இவ்வளவு அக்கறையாஆஅ ஆஆஅ :-))))
330.gif

Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:45:54 AM4/18/12
to vall...@googlegroups.com
வாயிருக்கற பிள்ளை புழச்சுக்கும்.


2012/4/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 11:47:01 AM4/18/12
to vall...@googlegroups.com
On Wed, Apr 18, 2012 at 9:15 PM, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote:
வாயிருக்கற பிள்ளை புழச்சுக்கும்.
இ 


இப்ப புரியுது 

:-)))
330.gif

Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:46:46 AM4/18/12
to vall...@googlegroups.com
அந்தோ! பரிதாபம்! மோஹனாங்க...


2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:47:38 AM4/18/12
to vall...@googlegroups.com
அடுத்தும் நோக்குக.


2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2012, 11:50:14 AM4/18/12
to vall...@googlegroups.com
ஆட்டத்தை ஆரம்பிச்சு வச்சவர் ரங்காட்டம் ஆடறார் தலை சுத்துது
பெரியார் குடியரசுப் பத்திரிக்கையில் பாரதியாரப்பற்றி கன்னப்பின்னான்னு எழுதியிருக்கார்
இப்ப பாரதியா மேல் எனக்கும் கோபம்
மொழிபெயர்த்தவர் மூலத்தைப் பற்றி ஒரு குறிப்பாவது கொடுக்க வேண்டாம என்ன கவிஞரு போங்க
இப்ப நானுல்லே சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே நில்லென்று கூறி நெடுந்தூரத்தில நிக்குறவங்களையாவது திட்டலாம்னு தோனுது
நாகராசன்

2012/4/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
330.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 18, 2012, 11:52:07 AM4/18/12
to vall...@googlegroups.com
சார்! யூ ஆர் Great. 

சும்மா சல்லிசா எவ்வளவு பெரிய கேள்விய உடைச்சிட்டீரு! 

முழுப் பாடலும் உம் கையால கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. 

***
330.gif

Innamburan Innamburan

unread,
Apr 18, 2012, 11:57:38 AM4/18/12
to vall...@googlegroups.com
நானும் மொழி வழிகிறேன்
330.gif
000.gif

Nagarajan Vadivel

unread,
Apr 18, 2012, 12:01:52 PM4/18/12
to vall...@googlegroups.com
நம்பினார் கெடுவதில்லை
நம்பாதவங்க சந்தேகிகள் நடத்தும் நாடகம் ஆய்வு
1.1918-ல் மாடர்ன் ரியூவில் தாகூர் பெயரில் வந்த கவிதைகளில் இந்தக்கவிதை இல்லை
Inline image 1

இந்த மூன்று கவிதைகளும்
Inline image 2
இந்தியாவின் ப்ரேயர் என்ற கவிதையை கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் அவரே பாடியிருக்கிறார்.  ஆனால் அது பாரதியாரின் மொழிபெயர்ப்பல்ல
நேஷ்னல் எடுகேஸன் செய்தி இவர்களுக்கு அனுப்பிய செய்தி அந்த ஆவணம் ஒரு காப்பி அவ்ர்களிடம் உள்ளது
நாளைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்.  பார்ப்போம்
bharathy 3.jpg
bharathy 2.jpg
330.gif

Nagarajan Vadivel

unread,
Apr 19, 2012, 8:22:39 AM4/19/12
to vall...@googlegroups.com
இன்றைய செயலறிக்கை.
காலை முழுதும் அடையார் நூலகத்தில். 
சும்மா சொல்லக்கூடாது.  சர்க்கரை அளவு கிடு கிடென்று கீழே இறங்கிவிட்டது
இன்றைய புதிய அறிவுறுத்தலின்படி புத்தக இணைப்புப் பட்டியைச் சோதித்து நூலின் எண் கண்டறிந்து அதை ஒரு சிறு தாளில் எழுதிக் கொடுத்தால் அதை நூலகக் கவுண்ட்டரில் இருப்பவர் எழுதி நம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பி புத்தகத்தைத் தேடிக் கொடுப்பார்
இன்று தாகூரின் கடிதங்கள் (300க்குமே) தொகுக்கப்பட நூல் கேட்டேன் அது இல்லை
1917, 1918, 1919 இண்டியன் சொசைட்டி ஃபொர் நேஷனல் எடுகேஷன் அறிக்கை கேட்டேன் இல்லை
1918-ல் அடையாரில் (அதான் நான் இருந்த அந்த இடத்தில்) நடந்த கூட்டத்தின் முழு அறிக்கை கேட்டேன்.  தலைவரின் பேச்சு மட்டும் உள்ள 50 பக்க அறிக்கை கொடுத்தார்கள்
என்னென்னவோ செய்தும் நான் தேடிய அந்த அறிக்கை கிடைக்கவில்லை.  எல்லாரும் அமைதியாக அமர்ந்து நான் தேடுவதைக் கவனித்துக்கொண்டிருந்தார்களே ஒழிய யாரும் உதவ முன் வரவில்லை
பொதுவாக இதுபோன்ற நூலகங்களில் ரெபரென்ஸ் லைப்ரரியன் இருப்பார் அவர் உதவுவார் எனவே எனக்கு உதவிசெய்ய ஒருவர் பெயரைச் சொல்லி சந்திக்கச் சொன்னார்கள். 
அவர் தெள்ளத்தெளிவாக நீங்கள் தேடுவது இங்கே கிடைக்காது.  யாரோ அடையார் நூலகத்தில் ஒரு நகல் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறீர்கள்.  இந்த நூலகத்தில் அதுபோன்ற நகலெல்லாம் வைப்பதில்லை.  ஒரு வேளை அது தியோசாபிகல் சொசைட்டி ஆவணக்காப்பகத்தில் இருக்கலாம் நாளைக்கு அங்குபோய் ஒரு மனுப்போடுங்கள் என்றார்
இன்று இரவுக்குள் ஏதாவது முன்னோரின் ஆவி உதவி செய்யலாம் என்ற நம்பிக்கையில் வெளியேறீனேன்.
நாளைக்குப் பிற்பகல் நூலகரைச் சந்தித்துப் பேசுங்கள் என்றும் சொன்னார்கள்
எனவே நாளைக்கு மீண்டும் வேதாள உலகம் நோக்கி
இப்போது எல்லை குறுகியுள்ளது
1918-ல் தாகூர் அடையாரில் உள்ள தேசியக் கல்வி வளர்ச்சிச் சங்கத்தின் தேசிய வாரக் கொண்டாட்டத்தை ஒட்டி திரு.அருண்டேல் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு செய்தி அனுப்ப்யதாக தாகூர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
தாகூர் தொடர்பான ஆய்வுக்குறிப்பில் 1919-ல் தாகூர் தென் இந்தியா வந்தபோது சென்னையில் இந்தச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்தியாவில் முதன் முறையாக ஆங்கிலத்தில் பேசினார் என்று குறிப்பிடுகிறார்கள்
பாரதி மொழிபெயர்த்த கவிதை தாகூரால் நேரடியாக ஆங்கிலத்தில் மொழி எழுதப்பட்ட கவிதை என்று குறிபிடப்பட்டுள்ளது
திரு வேங்கடாசலபதியின் குறிப்புபடி பாரதியார் 1917-ல் தாகூரின் உரைநடையையும் 1918-ல் இந்தக் கவிதையையும் மொழிபெயர்த்தார் என்று சுதேசமித்திரன் பத்திரிக்கையை ஆதாரம் காட்டுகிறார்
பிற்பகல் அண்ணா நினைவு நூலகம் பொறுப்பில் உள்ளவர்கள் என் மாணவர்கள். உல்ளே நுழைந்ததும் தாகூர் பற்றிய நூல்கள் ஏற்கனவே எடுத்து அடுக்கி வைத்திருந்தார்கள்.  தேடிப்பலன் ஒன்றும் இல்லை
நாலை மாலை தியோசாபிகல் சொசைட்டிக்குச் சென்று தாகூரின் செய்தியின் நகலை ஆவணக்காப்பகத்தில் பார்க்க விண்ணப்பமிடுதல்
கன்னிமாரா நூலகம் சென்று 1918 சுதேசமித்திரன் பத்திரிக்கையைப் படிக்க வேண்டும்
1918-ல் பாரதியார் மொழிபெயர்த்த இந்தக் கவிதை எங்கிருந்து பாரதியாருக்குக் கிடைத்து?  பத்திரிக்கையாளார் என்ற முறையில் அவருக்கு ஏதாவது அச்சு ஊடகத்தில் இருந்து கிடைத்திருக்கவேண்டும்.  1918-ல் வெளியானது என்ற வகையில் தாகூரின் வாழ்த்துச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.  வேறெதாவது நாளிதழ்ச் செய்தியாக வெளிவந்திருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும்

பார்ப்போம்
நாகராசன்
330.gif
000.gif

Mohanarangan V Srirangam

unread,
Apr 19, 2012, 8:35:53 AM4/19/12
to vall...@googlegroups.com
நன்றி ஐயா 

***
330.gif
000.gif

Geetha Sambasivam

unread,
Apr 19, 2012, 8:37:27 AM4/19/12
to vall...@googlegroups.com
அருமை. என் போன்றவர்களால் நினைச்சுக் கூடப் பார்க்க இயலாத ஒன்று.  வணங்கிக்கொள்கிறேன். 

On Thu, Apr 19, 2012 at 5:52 PM, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
இன்றைய செயலறிக்கை.

amaithi cchaaral

unread,
Apr 19, 2012, 8:45:12 AM4/19/12
to vall...@googlegroups.com
வியக்க வைக்கும் முயற்சி..

Tthamizth Tthenee

unread,
Apr 19, 2012, 8:46:31 AM4/19/12
to vall...@googlegroups.com
மழைக்கும் ஒதுங்க வழியில்லை

 

அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/4/19 amaithi cchaaral <amaithi...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Apr 19, 2012, 12:00:47 PM4/19/12
to vall...@googlegroups.com
Aamaam.

KP
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2012/4/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Apr 20, 2012, 12:52:39 PM4/20/12
to vall...@googlegroups.com
சந்தேகம் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது

இன்றைய செயலறிக்கை
சந்தேகத்தைக்  கிளப்பியவர் நங்கநல்லூரில் ஜம்னு இருக்க கம்னு இருக்கவேண்டியநான் அடைய வேண்டியதை அடையாமல் அடையாரில் அலைந்துகொண்டிருக்கிறேன்
இன்று சர்க்கரை அளவு கட்டுங்கடங்காமல் கிர் கிர்
காரணம் இன்று நூலக அலுவலர்கலுடன் மோதல் தொடங்கிவிட்டது
ரபீந்த்ரநாத் தாகூர் தியசாபிகல் சொசைடியின் அருண்டேல் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேசிய வாரக் கொண்டாட்டத்துக்காக ஒரு வாழ்த்துச் செய்தி படைத்ததாக தாகூர் தன்னுடைய நண்பர்களுக்கு எழுதியிருக்கிறார்
மதனபள்ளிக் கல்லூரிக்காக நன்கொடை திரட்டும் முயற்ச்சிக்கு உதவ இந்த வாழ்த்துச் செய்தியை உருவாக்கியதாகக் குறிப்பிடுகிறார்.  தாகூரின் இந்தக் கடிதம் (கையெழுத்தா என்பது தெரியவில்லை) ஏலத்துக்கு விடப்பட்டு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத ஒரு தொகை கிடைத்தது என்பது குறிப்பில் உள்ளது
ஏலம் எடுத்தவருக்கு அந்தக் கடிதத்தைக் கொடுப்பதற்குமுன் படி எடுத்து ஒரு படிவம் அடையார் நூலகத்தில் வைக்கப்பட்டுல்லட்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  அந்த வாழ்த்துச் செய்தியில் பாரதியார் மொழி பெயர்த்த பாடல் உள்ளது.  அப்பாடலை தாகூர் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதினார் என்றும் குறிப்புள்ளது
இதெல்லாம் ஐயுற இடங்கொடாத வரலாற்றுத் தகவல்
ஒரு வாரத்தேடலில் ஒன்று தெளிவாகத் தெரிந்தது.  மூல ஆவணத்தைப் பார்க்காமல் பலரும் தனிக்கருத்துக்களைப் பொது நியதியாக்கியிருக்கிறார்கள்
மூல ஆவணம் எங்கே?
அதை எப்படிப் பெறுவது?
அதில் பாரதியார் மொழி பெயர்த்தபாடல் இருக்குமா?
மூல ஆவணம் அடையார் நூலகத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நூலகத்தில் இப்பகுதியை மேற்பார்வையுடும் நூலகர் கருதுகிறார்.  நூலகத்தில் அச்சு வடிவிலும், எழுத்து வடிவிலும் ஓலைச்சுவடி வடிவிலும் உள்ள ஆவணங்களைப் படிக்க நூலகத்தில் உள்ள ஆவணத்தின் பகுப்பு என்ணைக் கொடுத்தால் மட்டுமே அதற்கு உரிய ஆவணத்தைத் தேடிக் கொடுக்க முடியும் என்கிறார்.  நூலகப் பட்டியில் எண் இருக்கும் ஆவணம் நூலகத்தில் இருக்கும் என்ற உறுதிமொழியும் இல்லை
முதலில் ஆவணத்தின் எண்ணைக் கொடுங்கள் அந்த ஆவணம் இருந்தால் கொடுப்போம். இல்லையெனில் இல்லை என்று சொல்லுவோம்.  அதற்குமேல் வேறொன்றும் இல்லை என்று சொல்லுகிறார்
ஒருவேளை இதன் காலம் அருமை கருதி அது தியாசபிகல் சொஸைட்டி ஆவணக் காப்பகத்தில் இருக்கலாம்.  அங்குபோய் தலைவரைச் சந்தித்துப் பேசுங்கள் என்று சொன்னார்கள்
கதை தொடர்கிறது
நாளை காலை மீண்டும் வேட்டைக்கு
நாகராசன்


2012/4/19 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Apr 20, 2012, 1:20:50 PM4/20/12
to vall...@googlegroups.com
ஐயா ! அருமை. ஆனால் உடல் நிலையைப் பற்றித் தாங்கள் குறிப்பிடும் போது எதற்கு இந்த அலைச்சல்? விடுங்கள். எப்பொழுது வருகிறதோ வந்து கொள்ளட்டும். உடல் நலம் முக்கியம் சார். அது கெடும் வகையில் தயவு செய்து சிரமம் எடுக்காதீர்கள். 

:-)

Nagarajan Vadivel

unread,
Apr 20, 2012, 1:56:11 PM4/20/12
to vall...@googlegroups.com
எப்பொழுது வருகிறதோ வந்து கொள்ளட்டும்
நம் கதை நாயர் புடிச்ச புலிவால் போல்.  விடமுடியாது.
எப்படி சார் விடமுடியும்
சென்ற நூற்றாண்டில் நாடறிந்த இரண்டு அறிஞர்களின் படைப்பில் எழுந்துள்ள சிக்கல் இது
1905/1906-ல் பாரதி கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ளச் செல்கிறார்.  தலையை மட்டும் காட்டிவிட்டு தாகூர் தப்பி விடுகிறார்.
1919-ல் தாகூர் சென்னை வருகிறார்.  அவர் வருகையைப்பற்றி ஹிந்து பத்திரிக்கை பெரிய அளவில் கட்டியம் கூறியது.  ஒரு பத்திரிக்கை ஆசிரிய தாகூர் வருவது தெரிந்தும் சந்திக்காதது ஏண்?
இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லை
ஒரு தலைக்காதல்போல் பாரதி தொடர்ந்து தாகூரின்மேல் காதல்கொண்டு அவர் படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்கிறான். 
இந்த மாபெரும் கவிஞனின் அரிய பணிபற்றி தாகூரோ அல்லது தாகூரின் வட்டமோ ஒரு குறிப்புக் கொடுத்ததாகக்கூட இல்லை
பாரதியின் அடிப்பொடிகளும் ஆய்வாளர்களும் பாரதிச் சிந்தனையாளர்களும் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்ததும் பாரதியும் உலக மஹா கவியாக இருக்கத்தகுதியுள்ளவன்  என்று ஒரு சாராரும்
இல்லையில்லை அவன் ஒரு தேசியக் கவிஞன் விடுதலைபற்றிக் கவி எழுதி காங்கிரஸ் கூட்டங்களில் தலைவர்கள் வருவதற்குமுன் கூட்டம் சேர்க்கப் பயன்படுத்தப்பட்ட பாட்டுக்கொரு புலவன்  தீவிரவாதி என்று தமிழகத்தின் எல்லைக்குள் வைக்கவேண்டும் என்று மற்றொருசாராரும் சொற்போர் நடத்திக்கொண்டிருக்க
இலவச வேட்டி சேலைபோல் இலவசக்கவிதையாகப் பாரதியின் கவிதைகளைப்  பட்டி தொட்டிகளுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று சிலர் முன்வைத்த  முனைப்புப் போல உலக அளவில் பாரதியின் படைப்புகளைப் பரப்ப முயற்சி செய்யவில்லை.  தாகூருக்கு நண்பரான ஆங்கிலக் கவிஞர் பாரதியின் சில கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார்.
அதிருக்கட்டும் இப்ப ஒரு சந்தேகம்
நாட்டுக் கவிதை என்ற பாரதியின் மொழிபெயர்ப்பு தாகூரின் எந்தக் கவிதையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது?
வேங்கடாசலபதி சுதேசமித்திரன் 1918-ன் தொடக்கத்தை பாரதியின் மொழிபெயப்புக்கு ஆதாரமாகக் காட்டியுள்ளார்.  1918-ன் பின் பகுதியில் அவர் புதுவையில் இருந்து ஆங்கிலேயரின் இந்தியாவுக்குள் நுழைகிறார்.  தணிக்கை நடமாட்டத்தில் கட்டுப்பாடு என்று 1918-ன் பிற்பகுதி 1919-ன் முற்பகுதி கழிந்துவிடுகிறது. 
எனவே அவரின் மொழிபெயர்ப்பு எந்தப் பத்திரிக்கையில் எப்போது வெளியிடப்பட்டது
எந்த ஆதாரமும் இல்லாமல் பாரதியாரின் மொழிபெயர்ப்புக்கு மூலமாக இருந்த தாகூரின் கவிதை எங்கே என்று கேட்டால் அடையாரில் மட்டுமல்ல உலகின் எந்தப்பகுதியில் இருந்தாலும் தர்ம அடி விழும் சாமி
இன்றுபோய் நாளை வா என்கிறது அடையார்
விடுங்கள். எப்பொழுது வருகிறதோ வந்து கொள்ளட்டும் என்கிறார் சந்தேகனார்
இது எப்புடி?
நாகராசன்


2012/4/20 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages