Re: படிப்புத் திண்ணை

108 views
Skip to first unread message

Tthamizth Tthenee

unread,
Dec 14, 2010, 11:52:52 AM12/14/10
to thamiz...@googlegroups.com
”அதுனால இப்பவும் புத்தகம் என்றால் போதும்
யமன் கொஞ்சம் அங்கன வரவே பயப்பட்றதா கேள்வி. ”
 
அதுனாலேதானே  சித்திரகுப்தன்கிட்ட புஸ்தகத்தை குடுத்துட்டு
சட்டாம்பிள்ளை உத்யோகம் மட்டும் பாக்குறாரு அவரு
 
முழி பெயர்ப்பு  உமக்கு கை வந்த கலை
 
நடத்துங்க
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அதுனால இப்பவும் புத்தகம் என்றால் போதும் 
யமன் கொஞ்சம் அங்கன வரவே பயப்பட்றதா கேள்வி. 


Innamburan Innamburan

unread,
Dec 14, 2010, 11:53:59 AM12/14/10
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
ஆச்சு போச்சுன்னு மடிலேயே கையை போட்டுட்டீங்க, ரங்கனார்! அதாவது, நான்
ரசித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று; வியாபார தந்திரமாக, கொஞ்சம் அரைத்த
மாவை, ஆர்மார் ஐயா வெழுமூணா அரைத்த 'It All Started With Freshman
English'ம் ஒன்று. 'ஆஹா .ஊஹூ ' என்று சந்திர சூரியர்கள் இருக்கும் வரை
போற்றப்படும் புத்தகங்களை ஒரு பிடி பிடித்திருக்கிறார். நம்ம மார்க்
ட்வைனைப்போன்ற அணுகுமுறை - 'எதுவும் தாட்பூட் தஞ்சாவூர் இல்லை'. படிச்சு
நாளாச்சு. மறுபடியும் படிக்கலாம். ஆலா பறக்க மனசை ரிலாக்ஸ் பண்ணலாம்.

ரொம்ப நாளா புத்தக விமர்சனம் செய்யவேண்டும் என்று நப்பாசை. பல் மொழிகளில்
அவ்வப்பொழுது படித்தது - உதாரணத்துக்கு ஒரு ஆங்கில கவிதை - 'Ye Know We
Stormed Ratisban' , ஒரு ஜெர்மன் நாவல், ஏன்? வ.ரா. வகையறா. ஆனால் உங்க
கிட்ட பயம்! அப்றம் உள்ளதே செல்லுபடி ஆக மாட்டேங்க்றது. ஜல் ஜல் நடை என்ன
வேண்டிக்கிடக்கு.

அடடா! சொன்னவந்ததை விட்டுட்டேனே. நிஜமாகவே புத்தகவிமர்ச்னம் தொடங்குங்கோ.
படிக்க காத்திண்டுருக்கோம்.

இன்னம்பூரான்

Jeevaa KS

unread,
Dec 14, 2010, 2:20:31 PM12/14/10
to thamiz...@googlegroups.com
மீத வெயிட்டிங்..

மடை திறந்து பாயும் நதியலை போல சுள்ளுன்னு பாயுது வெள்ளம்.  நீங்க முழி பெயர்த்து போடுங்க. நாங்க முழிக்காம படிக்கறோம்.
*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"

coral shree

unread,
Dec 15, 2010, 1:39:53 AM12/15/10
to thamiz...@googlegroups.com
காத்திருக்கிறோம்... நன்றி.

2010/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஒரு புஸ்தகம். கொஞ்சம் நொறுக்குத் தீனி. அப்படி சாயறதுக்கு வாட்டமா ஒரு ஒட்டுத்திண்ணை. அப்பப்ப டீ, காபி ஏதாவது. 

சொர்க்கம் எல்லாம் வேணாம் சார். அது சுத்த போரு. 

எப்பவாவது உங்களை மாதிரி ஏமாளிங்க அங்க எட்டிப்பாத்தீங்கன்னா 
போட்டு ஒரு ஸ்பெஷல் ரம்பம். போறாது? காலம் ஓடிடும். 

அப்படி இருந்தா யமன் கூட வரமாட்டான்னா! எங்க ஊருல ஒரு வயசான கிழவி சொன்னா. அவனுக்கும் கொஞ்சம் அலர்ஜி இருக்காதா? 

முதல் முதல் செத்த மனுஷன் -- அவன் தான் யமனாக ஆனானாம். சொல்வாய்ங்க. 

ஏன் செத்தான் தெரியுமா? 
அவங்க அப்பா போய்ப் படி ஏதாவது புஸ்தகத்தை என்று சொன்னாராம். 
பாவம் பையன் பயந்துபோயி செத்துப் போய்ட்டான். 
அப்ப எல்லாம் எதுவும் மேல் உலகத்துல 
டிபார்மெண்ட் எல்லாம் ஆரம்பிக்கலை போல இருக்கு. 
அதான் பார்த்தாங்க. 
இது எங்க வந்துது முந்திரிக்கொட்டை? என்று 
போ! போயி வரவங்க போறவ்ங்க கணக்கெல்லாம் பார்த்துக்க 
என்று சர்ட்டாம்பிள்ளை உத்யோகம் கொடுத்துட்டாங்க. 
படிக்காத பிள்ளைகளுக்குத் தானே வகுப்புல 
சட்டாம் பிள்ளை உத்யோகம் கொடுப்பாங்க, அந்தக் காலத்துல. 

அதுனால இப்பவும் புத்தகம் என்றால் போதும் 
யமன் கொஞ்சம் அங்கன வரவே பயப்பட்றதா கேள்வி. 

சந்தேகமா இருக்கா? நீங்களே யோசிச்சுப் பாருங்க. 
நூல்கள் எதுவும் எங்கனாச்சும் சாவுதா? 
மறைஞ்சுப் போச்சுன்னு சொல்றாங்களேவொழிய. 

சரி புத்தகம் எழுதின ஆளுங்க யாராவது உலகத்தைவிட்டு மறையராங்ளா? தாங்க எழுதின புஸ்தகத்துக்குள்ளயே குடில் கட்டிகிட்டு உட்கார்ந்துட்றாங்க. 

ஊருல இருக்கறவன்லாம் தேட்றான். 
வால்மீகி எப்ப இருந்தாரு/ 
எங்கன பொறந்தாரு/. 
வியாசர் எங்க இருந்தாரு? 
அவரு எந்த இடத்துல பொறந்தாரு? 
ஹோமரு, 
அவரு இவரு என்று 
அன்னிலேந்து இன்னி வரைக்கும் 
நூல் எழுதினவனை எல்லாம் தேட்றாங்க. 
எங்கயாவது அகப்பட்றாங்களா? ம் ம் 

ஒன்றும் இல்லை. காலேஜ் பசங்க 
எப்படித் தேட்றாங்க பரிட்சையின் போது. 
கிடைச்சா நாலு போடலாம்னு. 
எங்க இருக்காங்கன்னே யாருக்கும் தெரியல்லை. 
ஆனா அவங்க எழுதின புஸ்தகத்தைப் போய்ப் பாருங்க. 
பார்ட்டி பாதுகாப்பா உள்ளார குந்திகினு இருக்குது. 

அட இவ்வளவு ஏன்? எமகிங்கரனுகளே 
அவங்களோட கழட்டிப் போட்ட சட்டையை 
லவுட்டிக்கிட்டுப் போய் அங்க 
பொய்க்கணக்கு காட்டி எழுதிட்டாங்களாம். 
இவங்க எல்லாம் இறந்துடாங்க. 
நாங்க பிடிச்சுக் கொணாந்துட்டோம்னு. 
அங்க யமன் அவனுக வாயை எல்லாம் ஊதச்சொல்லிக் கேக்கறானாம். 
ஏதாவது படிப்பு வாசம் வருதான்னு. 
மவனே! எவனாவது படிப்பு வாசம் வந்துச்சு 
அவ்வளவுதான் முதல் ட்ராப் அவுட் இருக்காரே, 
அதாங்க நம்ம யமன்,.. கடுப்பாயிடுவாரு. 
அதுனாலேயே யமகிங்கரனுக 
போனவுடனே சத்தியம் அடிப்பானுகளாம். 

“சார்! நாங்க சித்ரகுப்தன் சாட்சியா 
அந்த என்னமோ எளுதி கிளுதி இருக்குமே 
கட்டி பைண்ட் பண்ணி சுத்தி வச்சுருப்பாங்களே! 
அந்தக் கருமாந்தரத்தை எல்லாம் மூந்து கூட பாக்கலை. 
அதும் பக்கமே நாங்க போகலை. 
உங்க சேவகத்துல இருக்கறதுனால 
என்னென்னிக்கும் பொக்கவும் மாட்டோம்” அப்படீன்னு. 

அதுனால நாம இந்த இழைல 
‘படிப்பு வாசம்’ பிடிக்கப் போறோம். 
யமனுக்கே டேக்கா கொடுத்துட்டு பலே கில்லாடிகளாக 
’காலம் வென்ற கனவுகளாய், கடவுளுக்கு ஓர் வெற்றியாய்’ 
இருக்கும் ஜீவன்களை, 
அவர்கள் ஒளிந்துகொண்டிருக்கும் 
புஸ்தகங்கள் என்ற மர்மத் தீவுக்குள் சென்று பார்க்கப் போறோம். 

மர்மக் கப்பல்ல சீக்கிரம் இடம் பிடியுங்க. 
எல்லாம் ஒட்டுத்திண்ணை -- நொறுக்குத்தீனி -- டீ காப்பி தான். 
அதான் CODE WORD . 

போய் கோட் வேர்ட் சொன்னிங்கன்னா மர்மக் கப்பல் திறக்கும். 

முதல் விசிட் எதுக்குத் தெரியுமா? 
ஒரு நூதனமான, வினோதமான புஸ்தகத்துக்கு. 

சின்ன புஸ்தகம்தான். 
ஆனா அது அடிக்குதுங்க பாரு லூட்டி! அடேயப்பா! 
ஒங்கூட்டு லூட்டி எங்கூட்டு லூட்டி இல்லை. 

THE CLASSICS RECLASSIFIED இதுதான் புஸ்தகம். 

எழுதினவரு -- RICHARD ARMOUR, 

BANTAM BOOKS   
6th printing 1968 

அதுல ஆர்மர் ஒரு டெடிகேஷன் வாசகம் எழுதியிருக்கிறார். பாருங்க 

DEDICATED 

to that amazing device, the Required Reading List, 
better even than artificial respiration 
for keeping dead authors alive. 

முழிபெயர்ப்பு --- 

சமர்ப்பணம் 

அந்த ஆச்சரியமான யந்திரத்திற்கு, 
‘அத்யாவசியமாகப் படிக்க வேண்டிய புஸ்தகங்களின் வரிசை’ 
என்று சொல்கிறார்களே, 
செத்துப் போன நூலாசிரியர்களை 
மூச்சு நிற்காமல் 
இன்னும் உயிரோடு வைத்திருப்பதற்கான யந்திரத்திற்கு. ----

சுத்த கிறுக்கன் இந்த ரிச்சர்டு ஆர்மர்.! 
எல்லாம் நம்ப ஃப்ரெண்டுதான். 

என்ன சிரிக்கிறீங்க? 
தோ பாருங்க எதா இருந்தாலும் 
சொல்லிட்டுச் சிரிங்க ஆமாம். 

(தொடரும்) 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

GEETHA SAMBASIVAM

unread,
Dec 15, 2010, 2:47:08 AM12/15/10
to thamiz...@googlegroups.com
தொடரவும்.

2010/12/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 15, 2010, 6:04:43 AM12/15/10
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
ஏன் இவனிடம் மாட்டிக்கொண்டோம் என்று, இனி மேலும் படிக்காமல் இருக்கும் உங்கள் உரிமையை உறுதி செய்கிறேன். அவ்வப்பொழுது உலகப்புகழ் வாய்ந்த தத்துவஞானிகளின், சிந்தனையாளர்களின் சிந்தனை அலை பாய்ந்த விதத்தை அலசினால், சில தெளிவுகள் கிடைக்கலாம்.

ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர் ஒரு ஆங்கிலேய ஞானி. ‘ அரசை மதிக்காமல் இருப்பது ஒரு உரிமை’ என்ற ஒரு சிறிய நூலை 1850ல் எழுதினார்; ஆனால், தன்னுடைய 1892  தொகுப்பில் அதை இணைக்கவில்லை. மனமாற்றம் தான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவர் தன்னுடைய வாதங்களை மறுக்கமுடியவில்லை. மற்றவர்களாலும் இயலவில்லை; அந்த சிந்தனைகள் நிலை பெற்றவை என்று சில சிந்தனையாளர்கள் இன்றும் சொல்கிறார்கள் என்று 1913ல் அதை மறுபதிப்பு செய்தவர்கள் கூறினர்.

இந்தியாவில் 2010 ஆண்டு முடிவில், ‘அரசை ஒழித்து விட்டால் என்ன?’ என்ற மூடில் (mood) மக்கள் நொந்து போய் உள்ளனர். இந்த ஒரு பென்னி (காலணா)விலை பெற்ற இந்த நூலை விமரிசிப்பதும், விரும்புவோர்களுக்கு அளிப்பதும் என் கடன் என்று, ரங்கனார் கொடுத்த மனோதர்மத்தின் அடிப்படையில், ஸ்பென்ஸர் அவர்களின் 14 கொள்கைகளில் முதலாவதை மட்டும் விமரிசிக்கிறேன்.

§ 1. எல்லா மன்றங்களும், இயக்கங்களும், அமைப்புகளும், ‘யாவருக்கும் சுதந்திரத்தில் சம உரிமை உண்டு’ என்ற விதிக்கு உட்பட்டவை. எனவே தனிமனிதனுக்கு, விலகி நிற்கும் உரிமை உண்டு. மற்றவர்கள் உரிமையை பறிக்காதவரை, தன் உரிமைகளை போற்றும் ஒருவனுக்கு, அரசுடன் தன் உறவை துண்டித்து, அதனுடைய போஷகத்தை உதறி, அதன் செலவுக்கும் வரி செலுத்த மறுக்க முழு உரிமை உண்டு. அப்படி செயல்படுவதால், அவன் மற்றவர்களின் உரிமையில் தலையிடவில்லை. அவன் தணிந்து போகிறான். போராளியாக அன்று.
சொல்லப்போனால், கவர்ன்மெண்ட் ஒரு ஏஜெண்ட் மட்டுமே. பலர் சேர்ந்து, அமைத்த அந்த அமைப்பு எப்படி எல்லோரையும் கட்டுப்படுத்தும் ஆளுமையை பெற முடியும், தார்மீக நோக்கில் பார்த்தால்? விலகுபவனுக்கு ஆதரவு அளிக்காது அரசு; வேண்டாம். விலகுபவனுக்கு இன்னல்கள் பல விளைவிக்கும் அரசு. அதற்கும் எதிர்நீச்சல் போட தயார் ஆகி விட்டால், அவனை என்ன செய்ய இயலும்? ( காந்திஜியை என்ன செய்ய முடிந்தது, ஆங்கிலேய அரசால்?). சுருங்கச்சொல்லின், அரசு ஆளுமையை புறக்கணிக்க தனிமனிதனுக்கு தார்மீக உரிமை உண்டு.

தமிழாக்கத்திற்கு பொறுப்பு எனது. மிச்சமிருக்கும் 13 கொள்கைகளை அலசுவது, உங்கள் விருப்பத்தையும், கருத்து கூறும் பின்னூட்டத்தையும் பொறுத்தது.

இன்னம்பூரான்
15 12 2010




Natrajan Kalpattu Narasimhan

unread,
Dec 15, 2010, 8:19:34 PM12/15/10
to thamiz...@googlegroups.com
ஒன்றுமில்லை. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகிறீர்கள். நடை சாத்தியிருக்கிறது. சரி என்று வெளியே வருகிறீர்கள். நண்பர் ஒருவர் ஒரு துடுக்கு. (எல்லாரும் என்னைப் போல் சமோத்தாக இருப்பார்கலா என்ன?) உங்களைப் பார்த்துக் கேட்கிறார் ஏன் திரும்பி வந்துவிட்டாய் என்று. நீங்கள் ஒரு அப்பாவி. போனேன் சாத்தியிருந்துது என்கிறீர்கள். 

அவர் உடனே ‘ஓ அவருக்கே பொறுக்க முடியலையா?’ என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தால் முதலில் தனனை மறந்து சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நீங்கள் கற்ற இலக்கியம், ஆன்மிகம், கவிதை எல்லாம் பலன் இருக்கிறது என்று அர்த்தம்

1965ல் பங்களூரு மல்லேஸ்வரத்தில் ஒரு கொவிலில் நடந்து கொண்டிருந்த ராம நவமி கச்சேரி கேட்க எனது சித்தியும், மனைவியும் சென்றிருந்தார்கள்.  வித்வான் (?) படு அபஸ்வரத்தில் பாடிக் கொண்டிருந்தார்.  எனது சித்தி சொன்னாள், "பாவம் ராமர் கேட்டுப்பார்.  வா சாந்தா நாம வீட்டுக்குப் போகலாம்" என்று.

2010/12/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இந்த ஆர்மருக்காக, இந்த அவருடைய ஒரு நூலுக்காக ஒரு ப்ளாகே ஓபன் செய்யலாம். அவ்வளவு தமாஷும், அர்த்தமும் நிறைந்த எழுத்து இந்தச் சின்ன புஸ்தகத்தில் இருக்கிறது. 

உலகக் காவியங்கள், இதிகாசங்கள், எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், கவிஞர்கள் என்று அனைவரையும் அப்படி அப்படிக் கொஞ்சம் கொத்து பரோட்டா போடுகிறார் நம்ம கிறுக்கர்! 

அதாவது இடத்தனமான பார்வை. congratulations என்றால் என்ன என்று ஒருவர் கேட்டார். ஒரு ஆங்கில எழுத்தாளர் சொன்னார் -- civilized form of envy. என்ன இடத்தனம்.! 

இப்படி இடத்தனம் மிக்க, கொண்ணாரவட்டைத் தனமான துடுக்கு மொழிகளுக்கே பல டிக்‌ஷனரிகள் உண்டு ஆங்கிலத்தில். அதாவது என்ன ரகசியம் என்றால் மனிதன் கிண்டல் என்பதை ஆத்மார்த்தமாக ரசிக்கத் தெரியவேண்டும். 

ஒன்றுமில்லை. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகிறீர்கள். நடை சாத்தியிருக்கிறது. சரி என்று வெளியே வருகிறீர்கள். நண்பர் ஒருவர் ஒரு துடுக்கு. (எல்லாரும் என்னைப் போல் சமோத்தாக இருப்பார்கலா என்ன?) உங்களைப் பார்த்துக் கேட்கிறார் ஏன் திரும்பி வந்துவிட்டாய் என்று. நீங்கள் ஒரு அப்பாவி. போனேன் சாத்தியிருந்துது என்கிறீர்கள். 

அவர் உடனே ‘ஓ அவருக்கே பொறுக்க முடியலையா?’ என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தால் முதலில் தனனை மறந்து சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நீங்கள் கற்ற இலக்கியம், ஆன்மிகம், கவிதை எல்லாம் பலன் இருக்கிறது என்று அர்த்தம். 

அதைவிட்டுவிட்டு அவன் எவ்வளவு துன்மார்க்கன், என்ன திமிர் இருந்தால் நம்மைக் குத்திக் காட்டுவான், அவனுக்குச் சரியான பாடம் புகட்டாமல் விடப்போவதில்லை என்றெல்லாம் கறுவ ஆரம்பித்தீர்கள் என்றால் பரிணாம ஸ்கேலில் நீங்கள் தடதட என்று கீழே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்பறம் கல்லாகிப் பூடாய் புழுவாய் பல்விருகமாகி என்ற மாணிக்கவாசகத்தை நீங்கள் ரிவர்ஸ் கியரில் பாடவேண்டியதுதான். 

தமிழில் இத்தகைய ஹாஸ்ய மன்னர்கள், ஏன் மாவட்ட அதிகாரிகளே மிகவும் கம்மி. எண்ணினால் ஒரு கையில் பல விரல்கள் மிஞ்சும். 

இந்தச் சூழ்நிலையில்தான் உண்மையான ஹாஸ்யத்தின் சிங்கநாதத்தைத் தமிழுக்குள் கொண்டுவந்த முக்கியமான எழுத்தாளன் சுஜாதா. 

(மற்றபல விதங்களில் எனக்கு விமரிசனம் உண்டு அவரைப் பற்றி.---> http://groups.google.com/group/mintamil/msg/0071a535fd4f01df  

ஆனால் இது மனப்பூர்வம்) 

அதற்கு முன்னாலும் சில உதாரணங்கள் உண்டு, எஸ் வி வி, தேவன் என்று. ஆனால் கோமாளித்தனமற்ற காத்ரமான நமுட்டுச் சிரிப்பு உடாலக்கடி அம்மக்கள்ளத்தனமான நகைச்சுவை எல்லாம் முதலில் தமிழில் ஆவேசம் கொண்டது எங்கூரு ரங்கராஜன் உபயம் என்றுதான் நினைக்கிறேன். 

அது இயல்பிலேயே இருக்க வேண்டும். பார்வையில் ஒரு நையாண்டி கலந்த பண்பான மதிப்பீடு. (நமது தலைவர் பென் சார் இந்த வகை என்று என் அபிப்ராயம்.) சரி போகட்டும். 

இந்த ஆர்மர் கடங்காரன், ஸாரி, கடங்காரர் இருக்கிறாரே, அவருடைய இந்த ஒரு புத்தகத்தை அப்படியே முருகல் கலையாமல் மொழிபெயர்க்க முடிந்தால் அந்த ஆளுக்கு நேராக ஒரு நோபல் பரிசு தந்து விடலாம். தொட்ட தொட்ட இடம் எல்லாம், இண்டு இடுக்கு எல்லாவற்றிலும் கிண்டலும் கேலியும், குபீர் என்று நகைச்சுவையும், அதே நேரத்தில் அந்த மகா இதிகாசங்களின் உள்ளர்த்தங்கள் கெடாமலும், இதிகாச கர்த்தாக்களின் வாழ்க்கை ஆய்வுகளில் பன்னெடுங்காலமாகத் தொழிற்பேட்டை வைத்து நடத்திவரும் அவலத்தையும் ஒருங்கே ஒரு ஆசிரியரால் ஒற்றைக் கிழியில் திறந்து போட முடிகிறது என்றால், அப்பறம் என்ன சார் சந்தேகம்? எழுத்துதான் தேவ லோகத்தின் சாவி என்பதற்கு? 

ஒன்றுமில்லை. ஹோமர் ஹோமர்னு ஒத்தரைச் சொல்வாங்க தெரியுமா உங்களுக்கு? ஹோம்வொர்க் பண்ணாதவர் ஹோமர் என்ற் நாங்கள் ஸ்கூலில் இருக்கும் பொழுது கிண்டலடிப்போம். ஏனெனில் வாய்க்கு வந்த படி பாடிக்கொண்டே திரிந்தவர். அவர் எங்கு பிறந்தார்? கிட்டத்தட்ட 7 நகரங்கள் உரிமை கொண்டாடுகின்றன, ஆங்யா இங்கனதான் பொறந்தாருன்னு. சரி இருக்கட்டுமே. யார் பொய் சொல்லுவா,? இந்த விஷயத்துல? என்ன தெரியறது இதுலேந்து. ஹோமர் அம்மா கனவேகத்துல நகர்ந்துகொண்டிருந்த பிரசவ ஆஸ்பத்திரி வண்டியலதான் ஹோமரைப் பெற்றிருக்கிறாள் -- இதுதானே முடிவாறது? 

என்னிக்குப் பிறந்தார்? இன்னிக்கு, இல்லை அன்னிக்கு, இல்லை அந்த நூர்றாண்டு, இல்லைனனா இந்த நூற்றாண்டுன்னா? இப்படியே ஆறு நூற்றாண்டு வாக்குவாதம். இப்படி பார்த்தா அவர் அம்மாவுக்கு லேபர் பெயின் ரொம்ப நாளா இருந்திருக்குன்னு தெரியறது. 

என்ன கிண்டலா? என்று என்னை முறைக்காதீர்கள். எல்லாம் ஆர்மர் என்ற கிறுக்கன் பண்ணும் அட்டகாசம். 

ஹோமரைப்பற்றி முதல் வாசகமே ஆரம்பிக்கிறான் பாருங்கள். Almost nothing is known about Homer, which explains why so much has been written about him. --' ஹோமரைப்பர்றி ஒரு எழவும் தெரியல்லை, அதுனாலத்தானோ என்னவோ அவரைப்பற்றி மலைமலையா எழுதிக்குவிக்கறானுக.’ 

ஹோமருக்குக் கண்ணு தெரியாதும்பாங்க. அதுக்கும் எழுதறாரு நம்ம கிறுக்கர் (எதுக்கும் மரியாதையா சொல்வோம். அப்பறம் நமபளைப்பற்றி எதையாவது எழுதிவச்சா?) 

---ஹெரோடோடஸு, இன்னும் சிலபேரு, ஹோமரைப்பற்றிம் கண் குருடு என்று எழுதிவச்சுருக்காங்க. ஆனா அவருடைய கவிதைகளின் உள்ள நமக்கு நிறையா நிரூபணம் கிடைச்சிருக்கு, அவருக்குப் பெண்கள்கிட்ட ஒரு கண் இருந்துருக்குன்னு --- 

Herodotus and others have described Homer as blind, although internal evidence in his poems suggests that he had an eye for the ladies. 

அவரு கலயாணம் கட்டினாரா இல்லையான்னு தெரியல்லை. ஆனா ஒரு கிரிட்டிக், அதாவது திறனாய்வாளர் (பரவாயில்லை கொஞ்சம் பொறுத்துக்குங்க) சொல்ராரு --- இல்லை ஹோமர் ஒரு கட்டை பிரம்மச்சாரிதான்’ அப்படீன்னு. ஏன் தெரியுமா? 
இலியட்டையும். ஒடிஸியையும் எழுதினது ’ஒற்றை ஆளு’தானாம். ஒத்தக்க்ட்டை. 

(தொ) 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

LK

unread,
Dec 18, 2010, 12:15:14 PM12/18/10
to thamiz...@googlegroups.com
//அந்தப் பையன்....?//

விவேகானந்தரா??

2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஹெர்பர்ட் ஸ்பென்ஸரை நினைவு படுத்தியிருக்கிறீர். 

அரசை மதிக்காத குடிமகன் கொஞ்சம் நினைத்துப் பார்க்கக் கடினம். காந்தி உதாரணம் பொருந்துமா? சத்யம், அஹிம்சைக்குப் போவதெங்கே? தோரோ தோராயமா சரி வருமா? அநார்க்கி இல்லை என்று சூடம் கொளுத்தி சபதம் செய்ய முடியுமோ? 

ஸ்பென்ஸர் மனித சமுதாயத்தை விஞ்ஞான பூர்வமாக ஆராயலாம் என்று சொன்னவர். மனித முன்னேற்றத்திற்கு மனித இச்சையே காரணம் என்றார், பரிணாமத்துக்கு உட்பட. 

சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் என்ற கருத்து இவருடைய மேனகா ஜாதம் என்பர். 

கல்கத்தாவில் அப்பொழுதுதான் காலேஜ் நுழைந்த பையன் இந்த ஹெர்பர்ட் ஸ்பென்ஸருக்கு அவருடைய கருத்துகளை விவாதித்து கடுதாசி எழுதினான். ‘ஆழ்ந்த தத்துவ சிந்தனை போக்கு உன்னிடம் இருக்கிறது. மிகச்சிறந்து விளங்குவாய்’ என்று எழுதினார் ஹெ ஸ். அந்தப் பையன்....? 

***

2010/12/15 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2010, 12:27:57 PM12/18/10
to thamiz...@googlegroups.com
ஆம்

Innamburan Innamburan

unread,
Dec 18, 2010, 12:48:13 PM12/18/10
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
எல்கேக்கு ஒரு ஷொட்டு. சொல்லப்போனால், என்னுடைய இடுகை தரிசித்தேன் ஸ்வாமி
விவேகானந்தரை என்ற இழையில் பொருந்தும். ஸ்வாமிஜி மானசீகமாக தரிசித்த
சான்றோன்.காந்தி உதாரணம் ஓரளவு பொருந்தும். ஆனால், ஹெர்பெர்ட்
ஸ்பென்ஸரின் சிந்தகைக்களம் தர்க்கத்துக்கும் மேற்பட்டதாக அமைந்தது
விட்டது.

இன்னம்பூரான்

பி.கு. இது சின்ன விஷயம். நான் மாணவனாக இருந்த போது பிரபல விஞ்ஞானி
ஜே.பீ.எஸ்.ஹால்டேனை வாதத்துக்கு இழுத்தேன். கிட்டத்தட்ட இங்குள்ள கருத்து
தொடற்பானது என்று சொல்லலாம். அவர் மதித்து அனுப்பிய பதிலை பொக்கிஷமாக
பாதுக்காக்கிறேன். அவர் கோஸ்போர்ட் என்ற நகரில் உள்ள ஹாஸ்லர்
ஆஸ்பத்திரியில் தான் தனது முக்கிய ஆய்வுகளை செய்தார். அந்த
ஆஸ்பத்திரிக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. அவர்களிடம் கொடுத்து
விடப்போகிறேன்.

GEETHA SAMBASIVAM

unread,
Dec 18, 2010, 8:47:37 PM12/18/10
to thamiz...@googlegroups.com
அவர் உடனே ‘ஓ அவருக்கே பொறுக்க முடியலையா?’ என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தால் முதலில் தனனை மறந்து சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நீங்கள் கற்ற இலக்கியம், ஆன்மிகம், கவிதை எல்லாம் பலன் இருக்கிறது என்று அர்த்தம்//

ஆஹா, இது நல்லா இருக்கு.

2010/12/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
இலியட்டையும். ஒடிஸியையும் எழுதினது ’ஒற்றை ஆளு’தானாம். ஒத்தக்க்ட்டை. 

(தொ) 

S. Krishna Moorthy

unread,
Dec 23, 2010, 5:52:44 AM12/23/10
to தமிழ் வாசல்
புதுமைப் பித்தன் சேமகலத்து ஐயனைப்பற்றி மட்டுமா நக்கலும் நையாண்டியுமாக
எழுதியிருக்கிறார்?

கல்கி, ரசிகமணி டிகேசி என்று புதுமைப்பித்தனுடைய "குத்தல்" மொழிகளுக்கு
ஆளானவர்கள் நிறையப் பேர்! அத்தனைபேரும் சேமகலத்து ஐயனுக்கு அபிமானிகள்
தான்! கல்கி காப்பியடித்து எழுதுகிறார் என்று புதுமைப் பித்தன் தொடர்ந்து
சொன்னார். கல்கி காப்பியடித்து எழுதியதென்னவோ வாஸ்தவம் தான்! இப்படி
அடுத்தவரைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது புதுமைப்பித்தனுடைய
சுபாவம் என்று ஜனங்கள், அந்த மனிதர் சொன்ன அந்த ஒரு உண்மையைக் கூடக்
கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது மிகப் பெரிய பரிதாபம்!

மற்றபடி ரங்கனார் சொல்றாப்போலே, புதுமைப்பித்தன் நாலுவரியில்
நடத்தியிருக்கும் கோர்ட் மார்ஷியல் நியாயமாகத் தான் இருக்கிறது!!

On Dec 22, 10:30 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

>
> முதல்  பகுதி ;;
>
> *"நாமக்கல்  ராமலிங்கம்   நல்லகவிதான்   என்று  *
> *சேமகலத்து   ஐயன்   செப்பிவிட்டான்..... "*
>
> தகவல்  தந்தாயிற்றா?   அதனூடேயே    சேமகலத்து  ஐயன்   என்ற   நையாண்டியும்
> வேறா?    சேமகலம்   என்றதும்     பொதுஜனச்  சொலவு   ஞாபகம்  வரும் --
> அம்மையார்  பாட்டி  இருக்கும்  இடத்தில்   சேமக்கலயம்   தட்டக்  கூடாது.
> செப்பிவிட்டான்    என்பதில்    அர்த்தமில்லாத    சாதாரணக்  கருத்து  ஒன்றை
> மகாவாக்கியம்   போல்   செப்பும்   பந்தா  உடைபடுகிறதா?   அடுத்து    பின்
> பகுதி  வெண்பாவுக்குப்  போவோம்.
>
> பின்  பகுதி::
>
>               * "  ---  ஆமக்கா!  *
> *பப்படத்துக்  காரி,   பார்வதியின்   அத்தைமகள் *
> *அப்படித்தான்   சொன்னாள்   அன்னைக்கி." *
> * *
> பப்படத்துக்காரியும்    அதையேதான்  சொன்னாளாம்!
>
> சேமகலத்தையனும்     அதையேதான்   செப்பிவிட்டானாம்!
>
> அக்கறையும்  இலக்கிய   ஊக்கமும்    உள்ளம்   திறந்த   கருத்தாடலும்  இல்லாத
> வெறும்  வார்த்தை மௌசும்,  வெள்ளந்திப்  பேச்சும்   ஒரு  தரம்   என்று
> வெண்பாவில்   காட்டுகிறார் புதுமைப்பித்தன்!

S. Krishna Moorthy

unread,
Dec 30, 2010, 11:38:41 AM12/30/10
to தமிழ் வாசல்
அரங்கனாரே! படிப்புத் திண்ணைக்கு மட்டம் போட்டு விட்டீர்களா என்ன?!

இன்னம்புரான் ஐயா ஹெர்பர்ட் ஸ்பென்சரைத் தமிழில் தருகிறேன் என்று
சொல்லிவைட்டு, அவரும் மறந்துவிட்டாரா?

படிப்புத் திண்ணை இழையைத் தொடருங்கள்.

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி
http://consenttobenothing.blogspot.com/

http://suvasikkapporenga.blogspot.com/

.

Innamburan Innamburan

unread,
Dec 30, 2010, 9:38:21 PM12/30/10
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
ஹெர்பர்ட் ஸ்பென்சரின் முதல் சூத்திரத்துக்கான கருத்துக்களுக்காக
காத்திருக்கிறேன். வர, வர, சாப்பிடக்கூட மறதி. ஆனால், ஞாபகம் கெட்டி.

இன்னம்பூரான்

2010/12/30 S. Krishna Moorthy <kris...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Dec 30, 2010, 9:46:08 PM12/30/10
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
சாப்பிடக்கூட மறதி. ஆனால், ஞாபகம் கெட்டி.
இன்னம்பூரான்<<<<<<<<<<<<<<< 


நாளைக்கு எதுனாச்சும் கேட்டா ‘வயசாயிடுத்து. மறந்து போச்சுன்னு சொல்லக் கூடாது’ 
:-))

2010/12/31 Innamburan Innamburan <innam...@googlemail.com>

S. Krishna Moorthy

unread,
Dec 31, 2010, 10:32:04 AM12/31/10
to தமிழ் வாசல்
//வர, வர, சாப்பிடக்கூட மறதி. ஆனால், ஞாபகம் கெட்டி.//

https://groups.google.com/group/mintamil/browse_thread/thread/93669a5ec8b0ce9b?hl=en

மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திரு இன்னம்புரான் ஐயா "அரசை
உருப்படியாக வேலை செய்ய வைக்க.." என்று கிட்டத்தட்ட இந்த இழையில்
பேசப்போகிறோமே அதைக் குறித்தானதுதான், ஒரு இழையைத் தொடங்கினார். ஒரு
எண்பத்துமூன்று பதில்கள், விளக்கங்கள் என்று வந்தது. அப்படியே நின்றும்
போனது. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நான் ஒவ்வொரு பாயிண்டாக
எடுத்து வைப்பேன், அதற்குப் பின்னூட்டங்கள் வந்தால் தான் அடுத்த எட்டை
எடுத்துவைப்பேன் என்று காத்திருந்தால், தூக்கிய காலுடன் அப்படியே நின்று
விட வேண்டியது தான்!

"*ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாக, அடிப்படை அலகாக
மாறிவிட்டது.**”* என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்தின் பக்க
விளைவு. அரசு நிர்வாகம், அரசியல் வாதிகள், அதிகாரமையங்கள், ஊழியர்
சமுதாயம், மக்கள் ஆகியோர் எப்படி இயங்கவேண்டும் என்பதை ஆராய முடியும்,
இந்த இழையில். மக்காளாட்சி வேண்டாம் என்றும், யதேச்சாதிகாரம் வேண்டும்
என்று சொல்வது சரியல்ல என்று வரலாறு கூவிய
வண்ணம் உள்ளது." இது திரு இன்னம்புரான் ஐயா தனது பின்னூட்டம் ஒன்றில்
தெரிவித்திருந்த ஒரு பகுதி..

ஹெர்பர்ட் ஸ்பென்சர் சொன்ன முதல் பாயிண்டுக்கு எதிர்க்கருத்து, ஆதரவுக்
கருத்து வருவதற்காகக் காத்திருக்காமல் திரு இன்னம்புரான் ஐயா, தான் சொல்ல
வருவதை தெளிவாகச் சொல்லவேண்டும் என்பதற்காகத் தான், "தூக்கிய பாதம்"
ஆகிவிடக் கூடாதே என்ற அக்கறையுடன் சொல்கிறேன்.

முதலில் அரசு என்றால் என்ன? ஒரு அரசு எப்படிக் கட்டமைக்கப்படுகிறது?அது
எந்தப்பக்கம் சாய்ந்து செயல்படக் கூடியது?

நமது அரசு என்று ஒவ்வொரு கட்சிக்காரனும் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது
மார்தட்டிக் கொண்டு, அரசையே தங்களுடைய பட்டா இடமாக மாற்றிக் கொண்டு
போவதைப் போலவா?அப்படியானால், அந்த அரசு, எல்லா மக்களுக்களுக்குமானது
இல்லையா? இந்தக் கேள்விகளை முன்வைத்து ஒரு பதிவை இந்த வருடம் ஜனவரி மாதம்
20 ஆம் தேதி எழுதினேன்.

http://consenttobenothing.blogspot.com/2010/01/blog-post_20.html
"
இங்கே அரசு என்று ஒன்று இருக்கிறதா? செயல் படுகிறதா?

யாருடைய நலன்களைப் பாதுகாக்கும் அரசாக அது இருக்கிறது? எங்க பாட்டன்
சொத்து என்றாகி விட்டதா?

பெரும்பாலான மக்களுக்கு எதிராக இருந்த போதிலுமே கூட, இப்படிப் பட்ட அரசு
நீடிப்பது எப்படி?

இதற்கு மாற்று எதுவுமே கிடையாதா?

இந்தக் கேள்விகளுக்கு முதலில் அரசு என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை
தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?

விளாடிமிர் லெனின், மார்க்சும், ஏங்கெல்சும் ஒரு தியரி லெவலில் மட்டுமே
சொல்லிவிட்டுப் போனதைக் கொஞ்சம், நடைமுறைப்படுத்தக் கூடியதாக மாற்றி
ரஷ்யப் புரட்சியை நடத்தியவர். அரசு என்றால் என்ன என்ற கேள்விக்கு இப்படி
ஒரு சுருக்கமான விளக்கம் சொல்கிறார்:

"வர்க்கங்களுக்கிடையே விரிசலும் பிளவும் அதிகமாகி இணக்கம் காண முடியாத
நிலையில் ஒரு சமரசமாக, தற்காலிகமான ஏற்பாடாகத் தோன்றுவதே அரசு! தானாகவே
உதிர்ந்து போய்விடக் கூடியது."

ஃபிரான்ஸ் ஓபன்ஹீமர்

என்பவர் இப்படிச் சொல்கிறார்: http://www.franz-oppenheimer.de/fo27a.htm

"அரசு என்பது அடிமைத்தனத்துக்கும் சுதந்திரத்துக்கும் முறைதவறிப் பிறந்த
ஒரு அமைப்பு."

ஹெர்பர்ட் ஸ்பென்சரோடு நின்றுவிட வேண்டாம்! கொஞ்சம் 360 டிகிரியிலும்
பார்த்துவிட்டு, இந்த விஷயத்தைத் தொடரலாமே!

S. Krishna Moorthy

unread,
Dec 31, 2010, 10:42:52 AM12/31/10
to தமிழ் வாசல்
http://www.gutenberg.org/ebooks/34649

ஹெர்பர்ட் ஸ்பென்சரின் அரசை புறக்கணிக்கும் உரிமை என்ற 25 பக்க நூலை
ஆங்கிலத்தில் மேலே கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! இது,
இன்னம்புரான் ஐயா தமிழில் மொழிபெயர்த்துத் தரும் வரை காத்திருப்போமே
என்ற சாக்கு சொல்லாமல், படித்துவிட்டுத் தங்களுடைய கருத்துக்களையும்
குழும உறுப்பினர்கள் மனம் விட்டுப் பேசுவதற்காக.

Innamburan Innamburan

unread,
Dec 31, 2010, 10:51:11 AM12/31/10
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி, நண்பர் கிருஷ்ணமூர்த்தி. எனது 'ஆடிய பாதத்திற்கு ' ஒரு விளக்கம் தருகிறேன். ஹெர்பெர்ட் ஸ்பென்ஸரின் முதல் கருத்து புரட்சிக்கரமானது. அதை 'கட்டுப்பாடற்ற நிலை (நிஹிலிஸம்) என்று விமரசிப்பது சரியல்ல என்றாலும், எந்த அரசும் அதை வரவேற்காது அந்த பின்னணியை விளக்கமாக நான் கூறியுள்ளேன். அடுத்த 13 கருத்துக்களும் மாடிப்படி போல. முதல் படியே ஏறமாட்டேன் என்பவர்களை நான் கட்டாயப்படுத்துவது நியாயமில்லை. மேலும், இவை தத்துவரீதியாக இருப்பதால், மொழியாக்கம், வெளிவுரை எல்லாம் கடின உழைப்பால் தான் முடியும்.  யாரும் படிக்காத இழையை இப்படி கட்டிடம் கட்டுவது தவறு என்பது என் எண்ணம். 'அரசி உருப்படியாக்...' என்ற இழையை திவாஜி தான் ஆர்வத்துடன் தொடங்கினார், என் தரப்பில். ஏன் பிசுபிசுத்து விட்டாது - 'ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்பதால்.
அன்பன் ,
இன்ன்ம்பூரான். 

2010/12/31 S. Krishna Moorthy <kris...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 31, 2010, 10:52:32 AM12/31/10
to thamiz...@googlegroups.com
நன்கு கூறினீர்கள், ஐயா.


2010/12/31 S. Krishna Moorthy <kris...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Jan 3, 2011, 8:50:31 AM1/3/11
to தமிழ் வாசல்
புது வருஷக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிஞ்சாச்சா?

படிப்புத் திண்ணைக்கு மட்டம் போடாமல் வாசகர்கள் நாங்கள்
காத்திருக்கிறோம். ஹெர்பர்ட் ஸ்பென்சர் எங்கே? ஆர்மர் கடங்காரன் மாதிரி
வேறு கடங்காரன் யாராச்சும் உண்டா?

S. Krishna Moorthy

unread,
Jan 4, 2011, 11:10:48 AM1/4/11
to தமிழ் வாசல்
வில் ட்யூரன்ட் பற்றி அரங்கனார் தொடர்வதற்குள் கொஞ்சம் கொறிப்பதற்காக,
இந்த வில் ட்யூரன்ட் ஒற்றை வரிகளில் சொல்லி விட்டுப் போனதில் ஒரு இருபதை
மட்டும் கொஞ்சம் சாம்பிளுக்கு......

குறிப்பாக அந்தப் பதினேழாவதை மட்டும் கொஞ்சம் அதிக உன்னிப்பாக....!

1.A statesman cannot afford to be a moralist.

2.As soon as liberty is complete it dies in anarchy.

3.Bankers know that history is inflationary and that money is the last
thing a wise man will hoard.

4.Civilization begins with order, grows with liberty and dies with
chaos.

5.Civilization exists by geological consent, subject to change without
notice.

6.Civilization is the order and freedom is promoting cultural
activity.


7.Education is a progressive discovery of our own ignorance.

8.Education is the transmission of civilization.

9.Every form of government tends to perish by excess of its basic
principle.

10.Every science begins as philosophy and ends as art.

11.Every vice was once a virtue, and may become respectable again,
just as hatred becomes respectable in wartime.

12.History is mostly guessing; the rest is prejudice.

13.I am not against hasty marriages, where a mutual flame is fanned by
an adequate income.

14.If man asks for many laws it is only because he is sure that his
neighbor needs them; privately he is an unphilosophical anarchist, and
thinks laws in his own case superfluous.

15.In my youth I stressed freedom, and in my old age I stress order. I
have made the great discovery that liberty is a product of order.

16.Inquiry is fatal to certainty.

17.It may be true that you can't fool all the people all the time, but
you can fool enough of them to rule a large country.

18.Knowledge is the eye of desire and can become the pilot of the
soul.

19.Man became free when he recognized that he was subject to law.


20.Moral codes adjust themselves to environmental conditions.

Mohanarangan V Srirangam

unread,
Jan 4, 2011, 11:45:58 AM1/4/11
to thamiz...@googlegroups.com
அடேயப்பா! 17 ஓடு சேர்த்து 19 ஐயும் பார்க்கணுமே :-))

2011/1/4 S. Krishna Moorthy <kris...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Jan 6, 2011, 12:25:11 PM1/6/11
to தமிழ் வாசல்
Is Democracy dying? An article by Will Durant

The cardinal principle in the philosophy of Hegel is that every
condition of soul or history begets an opposite condition, which then
combines with the original position to produce a synthesis higher than
either of the states that preceded it.

If we apply this principle of "thesis, antithesis, synthesis" to forms
of government we see aristocracy generating democracy, and democracy
changing before our eyes into a nameless novelty in which the
aristocratic principle of guidance by trained ability may be united
with the democratic principle that no man is good enough to govern
another without his consent.

The day of democracy as Rousseau conceived it and Jefferson practiced
it began to end when great cities and great industries arrived. In
America, political democracy was based on economic democracy, on an
approximate equality of economic goods and power. When land was free
for the taking, when almost every family lived in isolated
sovereignty, growing its own food, hunting its own meat, weaving its
own clothing, then men looked each other in the eye as literally "free
and equal," and dared to elect to the Presidency heretics and rebels
like Thomas Jefferson and Andrew Jackson.

For the economic bases of democracy -- free land, free competition,
skilled labor, simplicity of tools, the economic self-sufficiency of
the individual homestead -- have disappeared. In their place have come
abandoned farms, crowded factories, congested cities, monopolies and
mergers, centralized financial control, costly tools purchasable only
by rich corporations, and masses of population easily manipulated by
interesting misinformation.

The complexity of industry; the geographical expansion of America; the
development of intricate foreign relations; the possibility of war;
the replacement of political problems by economic problems, arising by
hundreds every day before officials, elected not for economic
knowledge but for political skill; the consequent diversion of power
from elected incompetents to appointed experts and boards -- all these
factors have cooperated to make the "free and equal" vote a delusion,
and democracy unreal, a pretty window dressing for the rule of
machines adept in herding votes, distributing favors, utilizing crime
and barring the road to office for all but the subservient and
corrupt.

Occasionally, by sheer force of personality overriding obstructive
mechanisms, a Roosevelt reaches the opportunity to serve his country;
but in the cities such accidents happen rarely now, and the rule of
mediocrity enthroned there (with honorable exceptions) threatens to
spread to the highest offices and leave us the worst-governed nation
in the Western world.

We cannot be satisfied with this kind of democracy any longer. We must
try to rescue democracy from these urban masses that lend themselves
so easily to its frustration. We must find a way of stealing the
(theoretical) virtue of aristocracy – the restriction of office to
individuals fitted for it by lifelong specific preparation – and
inserting it into the principle of democracy, that every man and woman
should have an equal chance to rise to the very top. Let us redefine
democracy, not as the equal right of all to hold office, but as the
equal right of all to make themselves fit to hold office.

Democracy must be made complete above all in the school: municipal and
state scholarships should see to it that every youth of ability is
sent on to higher training when his family can no longer finance him;
no talent must be lost. Then, having established the most fundamental
form of democracy -- equality of opportunity -- we may, without
infringing on democracy, add an educational requirement to the present
prerequisites for office.

Why should not our great universities include -- each of them -- a
school of administration, as rigorous and practical as our finest
schools of medicine or law? Access to these schools should be free to
all who can pass the entrance tests; and none but the graduates of
such schools should be eligible to public office. One pictures then a
pyramid of ability: office in second-class cities would be open only
to such graduates as had served two terms in kindred positions in a
third-class city; office in first-class cities would be open only to
such graduates as had served two terms in a second-class city; and the
governorship would be open only to those graduates who had twice been
mayor of a first-class city. At every step experience would be added
to training, and the cream would rise to the top.

Yes, it is a dream -- the dream of philosophers from Plato to Bacon to
Renan. But other things were dreams too; and this may be a reality
when you and I are dreams.

Note: This material was first presented in the article "Is
Democracy Dying?" Published in The Mentor and World Traveler, XVIII
(June, 1930), page 74.

.ஜனநாயகம் பிழைத்திருக்க, வில் ட்யூரன்ட் சொல்கிற வழியைக் கடைசிப்
பத்திக்கு முந்தையதில் கொஞ்சம் கவனமாகப் படித்துப் பாருங்கள்\! படிப்புத்
திண்ணையில், வெறும் தத்துவம், மனதை ஈர்த்த எழுத்து எல்லாம் ஒரு பக்கம்
இருக்கட்டும், நம்மைச் சுற்றி நடப்பவைகளுக்குப் பொருத்தமானதையும்
பார்த்து ஒரு சரியான நடைமுறைக்கு நாம் தயாராக வேண்டாமா?

அரங்கனார் அனுபவித்து வேறொன்றை சொல்வதற்குள், கொஞ்சம் கிடைக்கிற
இடைவேளையில் சிந்தனையில் கொறிப்பதற்காக!

Mohanarangan V Srirangam

unread,
Jan 6, 2011, 12:35:45 PM1/6/11
to thamiz...@googlegroups.com


2011/1/6 S. Krishna Moorthy <kris...@gmail.com>
நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி. இல்லை. இன்னும் கொஞ்சம் ஆலாபரனை இருக்கிறது வில் ட்யூரண்டில். அப்புறம்தான் மற்றது. 

படிப்புத் திண்ணையில் அரட்டை அதுபாட்டுக்குத் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும், யார் வந்தாலும், போனாலும், இருக்கின்றவர்கள் மத்தியில். எனவே தயக்கமே இன்றி உங்கள் கண்ணில் படும் வில் ட்யூரண்டாரின் பல அம்சங்களை கச்சேரியில் விடுங்கள் இதோ வந்துவிடுகிறேன். 

(இந்த வாரக் கடைசி ஸ்டாலுக்கு நூல்கள் வந்துவிடும் என்று சொன்னார்கள்) 

S. Krishna Moorthy

unread,
Jan 7, 2011, 11:17:02 AM1/7/11
to தமிழ் வாசல்
//The political machine works because it is a united minority acting
against a divided majority. //

வில் ட்யூரன்ட் சொன்ன இந்த ஒற்றை வாக்கியத்தைக் கொஞ்சம் யோசித்துப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்! . இந்த ஒரு வாக்கியத்தில் சரித்திரத்தை
எவ்வளவு எளிதாகச் சுருக்கிச் சொல்ல முடிகிறது? நடப்பு நிலவரம் கூட
என்றைக்கோ சொல்லிப் போன இந்த ஒரு வாக்கியத்தோடு எவ்வளவு பொருந்திப்
போகிறது?

அரங்கனார் சொல்றாப்போல, இது வெறும் ஆலாபனை மட்டுமல்ல, முழுசா ராகம் தானம்
பல்லவியாகப் பரிமளிக்க வேண்டிய சிந்தனையாலனைப் பற்றிய, அந்த சிந்தனைகள்
ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிப் பேச வேண்டிய விஷயம்!

வெறும் துக்கடா, துணுக்குத் தோரணமாக ஒதுக்கி வைத்து விட்டுப் பொய் விட
முடியாது! அரங்கனார் வந்தால் தான் படிப்புத் திண்ணை களை கட்டும்!

Innamburan Innamburan

unread,
Jan 7, 2011, 11:37:03 AM1/7/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
'The political machine works because it is a united minority acting
against a divided majority.' இந்த ஒரு வாக்கியத்தில், வில் டுராண்ட்
அவர்கள் மனிதனின் வரலாற்றை சுருக்கமாக, முள் தைத்தது போல்
சொல்லிவிட்டார். இது தான் உண்மை என்று இந்தியாவின் தற்கால அரசியல் நிலை
உணர்த்துகிறது. எனினும், நாம் சிதையாமல் வாழ, இதிலிருந்து விடுதலை
பெறவேண்டும்.

Chandar Subramanian

unread,
Jan 7, 2011, 9:02:31 PM1/7/11
to thamiz...@googlegroups.com
வில் டுராண்ட் எழுதிய History of Philosophy எனும் நூலில் அரிஸ்டாட்டில் சொல்வதாக எழுதப்பட்ட ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது.

"Mighty are in minority in the world and cowards are in majority. Mighty people can do themselves, whatever they want. Majority, frame rules to protect themselves from the mighty minority." 
 


2011/1/7 S. Krishna Moorthy <kris...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.




--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 7, 2011, 10:06:17 PM1/7/11
to thamiz...@googlegroups.com
ஒற்றை வரியில் எத்தனை விளக்கம்!

2011/1/7 S. Krishna Moorthy <kris...@gmail.com>
//The political machine works because it is a united minority acting
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

துரை.ந.உ

unread,
Jan 7, 2011, 11:03:05 PM1/7/11
to thamiz...@googlegroups.com
AddEmoticons04223.gifகிடைப்பவை அனைத்தும் எனக்கு புதிய செய்திகள் .......
கடைசி பெஞ்ச்ல கம்முன்னு உக்காந்து கேட்டுக்கிட்டு இருக்கேன் :)

2011/1/8 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
AddEmoticons04223.gif

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 7, 2011, 11:06:35 PM1/7/11
to thamiz...@googlegroups.com
அய்யா பக்கத்துலெ எனக்கும் ஒரு சீட்டு வெச்சிருங்க.

2011/1/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
AddEmoticons04223.gif

GEETHA SAMBASIVAM

unread,
Jan 7, 2011, 11:36:04 PM1/7/11
to thamiz...@googlegroups.com
நாங்க உள்ளேயே வராமல் காதிலே மட்டும் கேட்டுப்போம். அம்புடுதேன்!

2011/1/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
AddEmoticons04223.gifகிடைப்பவை அனைத்தும் எனக்கு புதிய செய்திகள் .......
கடைசி பெஞ்ச்ல கம்முன்னு உக்காந்து கேட்டுக்கிட்டு இருக்கேன் :)

2011/1/8 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

ஒற்றை வரியில் எத்தனை விளக்கம்!

2011/1/7 S. Krishna Moorthy <kris...@gmail.com>

//The political machine works because it is a united minority acting
against a divided majority. //


360.gif
AddEmoticons04223.gif

S. Krishna Moorthy

unread,
Jan 8, 2011, 10:13:47 AM1/8/11
to தமிழ் வாசல்
Anybody can make history. Only a great man can write it.

- Oscar Wilde

Fifty years of writing a book may seem like a long period of
authorship, but there is a lengthy work that took a full five decades
to write. The book is The Story of Civilization, and the man was Will
Durant.

He was once called William James Durant. His pious French-Canadian
mother had chosen the name in deference to one of Christ’s apostles,
however, rather than out of respect (or even knowledge) of the famed
American psychologist-philosopher. In time, the youth became a
compromise of sorts; becoming an apostle for philosophy.

First, however, Durant was destined for holy orders. Born in North
Adams, Massachusetts, in 1885, he studied in Catholic parochial
schools there and in Kearny, New Jersey. His teachers were nuns, and
he practiced his religion so fervently that no one doubted that he
would become a priest. In 1900 he entered St. Peter's Academy and
College in Jersey City, where his teachers were Jesuits, and, one of
these, Father McLaughlin, urged him to enter the Jesuit Order
following his graduation in 1907.

But in 1903 he discovered the works of some alluring infidels in the
Jersey City Public Library -- Darwin, Huxley, Spencer and Haeckel.
Biology, with its Nature "red in tooth and claw," did some harm to his
faith, and suddenly, in his 18th year, it dawned upon him that he
could not honestly dedicate himself to the priesthood – but how could
he break the news to his mother, who had pinned her hopes, both for
this world and the next, on offering her son in service to God?

மேலும் படிக்க, தெரிந்து கொள்ள

http://www.willdurant.com/bio.htm

படிப்புத் திண்ணை, படிக்கிற திண்ணையாகவே இருக்கட்டும்! வெறும் அரட்டைத்
திண்ணையாக மாற்றிவிடாமல் இருக்க , கொஞ்சம் படித்ததை அனுபவிப்பது,
படித்ததில் கிடைத்தது என்ன என்பதைப் பகிர்ந்துகொள்வது ஒரு நல்ல தொடக்கமாக
இருக்கும்.

Innamburan Innamburan

unread,
Jan 8, 2011, 11:05:46 AM1/8/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan

வரலாறு வாழ்வியலின் பெரும்பகுதி. 'நடந்தது என்ன?' என்ற கேள்விக்கு உலக அளவில் பதில் காண முயலும்போது பலவிதமான ஒப்பியல் ஆய்வுகள் நடக்கின்றன. அபிப்ராயங்கள் சொல்லப்படுகின்றன. புதிய, புதிய சாட்சியங்கள் கிடைக்கின்றன. வில் துராண்ட் தத்துவ ரீதியாக வரலாற்றை அலசும்போது, சற்றே தள்ளி நின்று தான் பேசுகிறார். அந்த தனித்தன்மை அவர் தொகுத்த நூல்களின் சிறப்பு எனினும், அவர் சம்பிரதாயமான வரலாற்று ஆசிரியர் அல்ல. சம்பிரதாயம் முதலில் நடந்ததை நடந்தபடி பதிவு செய்கிறது - கிப்பன் அவர்கள் ரோமாபுரியின் எழுச்சியும், வீழ்ச்சியும் என்பதை விவரித்தது போல. சமகால வரலாற்று பேராசிரியர் என்றால், லார்ட் (ஸர் அர்னால்ட்) டாயின்பீ அவர்களை சொல்லலாம். அவரும் தன் தொகுப்பின் சாராம்சத்தையும் வெளியிட்டவர். நம் சென்னையில் ஶ்ரீனிவாஸ சாஸ்திரி ஹாலில், அவர் பேச கேட்டிருக்கிறேன். அன்று அவர் சொன்ன சில வரிகள் என்னை வரலாறு படிக்கத் தூண்டியது. அவர் சொன்னது: " நீங்கள் எப்படியெல்லாம் வரலாற்றை திரித்து சொல்ல விழைந்தாலும், நடந்தது நடந்தது தானே. உங்கள் திரிபுகள் மறைந்து விடும். நடந்தது மாறாது," சான்றாக, 'ஒரு விளம்பரம்' என்ற இழையில் சைனா இந்தியா மீது படையெடுத்தது மறைக்கப்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சி கூறும் வரலாற்றில், என்று சொல்லப்பட்டது. அது சம்பந்தமாக, நான் தேடிய நூல் கிடைத்து விட்டது. அன்றைய பிரதமர் நேரு அவர்கள் சைனாவின் தாக்குதலை பற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானம் அது. மன்றத்தின் பதிவுகளில் நிரந்தரமாக இருக்கும். நாமும் அதை படிக்க இயலும். இப்படி வரலாற்று திருபுகளை நாம் கண்டிக்கவேண்டும் என்பதே, வில் துராண்ட்,கிப்பன், டாயின்பீ, ஸர் ஜாதுநாத் சர்க்கார் ஆகியோரின் ஆய்வுகளின் அறிவுரை.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
08 01 2011

S. Krishna Moorthy

unread,
Jan 8, 2011, 11:15:54 AM1/8/11
to தமிழ் வாசல்
//http://www.gutenberg.org/ebooks/34649


ஹெர்பர்ட் ஸ்பென்சரின் அரசை புறக்கணிக்கும் உரிமை என்ற 25 பக்க நூலை
ஆங்கிலத்தில் மேலே கண்ட சுட்டியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்! இது,
இன்னம்புரான் ஐயா தமிழில் மொழிபெயர்த்துத் தரும் வரை காத்திருப்போமே
என்ற சாக்கு சொல்லாமல், படித்துவிட்டுத் தங்களுடைய கருத்துக்களையும்

குழும உறுப்பினர்கள் மனம் விட்டுப் பேசுவதற்காக. //

இன்னம்புரான் ஐயா!

ஹெர்பர்ட் ஸ்பென்சர் இன்னமும் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கிறார்!!
அரங்கனார் வேறு ஆர்மர் கடன்காரனைப் பதியிலேயே தொலைத்து விட்டார்!

ஹெர்பர்ட் ஸ்பென்சர் சொன்ன பதினாலில் ஒன்று வந்தால் போதுமென்று நினைத்து
விட்டீர்களோ என்னவோ, எனக்கு இன்னமும் அது குறையாகத் தான் இருக்கிறது!

Innamburan Innamburan

unread,
Jan 8, 2011, 11:35:08 AM1/8/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
1. நான் கூறுவது கட்டாந்தரை வரலாறு அல்ல - i.e. not merely
chronological.  எனவே. டாயின்பீயின் கருதுகோள் சர்வ சம்மதம் தான். He
goes for logical analysis as well.
2. ஹெர்பர்ட் ஸ்பென்சர் அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பது எனக்கும்
வருத்தம் தான். நான் முன்பு கூறியபடி, அவரின் அரசை புறக்கணிக்கும்
உரிமையை தற்கால இந்திய அரசியல் நிலையில் சில கருத்துக்கள் வந்தால் தான்,
இரண்டாவது சூத்திரம் சிக்கும்.

3. ஒரு வழி. ஆர்மருக்கு மங்களம் பாடிவிட்டார், ரங்கனார், பொருத்தமாக.
வில் துராண்ட் அலசல்கள் முடியட்டும். எனக்கும் வேலை பளு உச்சகட்டத்தில்.
'ஸ்பென்ஸரின் சூத்திரங்கள்' (1892) என்ற அரிய நூலை, ஒரு நண்பரிடம்,
அன்பளிப்பாக, கொடுத்துவிட்டேன். சற்று தாமதித்து, இடையில் வந்த
கருத்துக்களை (முக்யமாக உங்களிடமிருந்து) கணக்கில் எடுத்துக்கொண்டு,
தொடங்குகிறேன். நாள் பிடிக்கும்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

08 01 2011

அஷ்வின்ஜி

unread,
Jan 8, 2011, 11:35:53 AM1/8/11
to தமிழ் வாசல்
ரங்கன்ஜி. திண்ணையில் நானும் இருக்கிறேன்.
ஒரு ஓரமாக, திண்டில் சாய்ந்து கொண்டு.
என்னைத் தூங்க விடாமல் ஏதாவது செய்திகளை கொடுத்துக் கொண்டே இருங்கள்.
வேறு எந்த தொந்தரவும் உங்களுக்கு என்னால் திண்ணையில் இருக்காது.
குறட்டைச் சத்தம் தவிர (அது கூட நான் அசந்து மறந்து
தூங்கிவிட்டால்...) :))))))

அஷ்வின்ஜி
பிரபஞ்சத் துகளில் ''நான்'' யார்?

On Jan 8, 9:23 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/1/8 S. Krishna Moorthy <krishn...@gmail.com>

> ஆர்மர் கடன்காரன் அவ்வளவுதான். ஒரு சாம்பிள் கொடுத்து விட்டுவிடலாம் என்றுதான்
> ப்ளான். எனவே அது அந்தரத்தில் இல்லை. தரை இறங்கிவிட்டது.
>
> வில்ட்யூரண்ட் கொஞ்சம் ஓடும். ஏனெனில் வரலாறு, தத்துவம், என்று கடலன்ன
> துறைகளைக் கண்ட மனிதர். கொஞ்சம் சொல்ல வேண்டும்.
>
> அதற்கப்புறம் சில வினோத ஆசிரியர்கள், நூல்கள் இவற்றின் பக்கம் போக வேண்டும்.
>
> திண்ணை நெடுநாள் களை கட்டும் என்றுதான் தோன்றுகிறது. உங்கள் தயவில்.
> மற்றவர்களின் தயவில்.


>
> --
>
>
>
>
>
>
>
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் வாசல்" group.
> > To post to this group, send email to thamiz...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsu...@googlegroups.com>

அஷ்வின்ஜி

unread,
Jan 9, 2011, 12:29:11 AM1/9/11
to தமிழ் வாசல்
பாடப் போறீங்களா? பாடுங்க.. பாடுங்க..
அதுவே தாலாட்டாக மாறிவிடக் கூடிய சாத்தியக் கூறும் இருக்கிறது மோகன்ஜி.
:))))))

On Jan 8, 10:09 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 2011/1/8 அஷ்வின்ஜி <ashvin...@gmail.com>


>
> > ரங்கன்ஜி. திண்ணையில் நானும் இருக்கிறேன்.
> > ஒரு ஓரமாக, திண்டில் சாய்ந்து கொண்டு.
> > என்னைத் தூங்க விடாமல் ஏதாவது செய்திகளை கொடுத்துக் கொண்டே இருங்கள்.
> > வேறு எந்த தொந்தரவும் உங்களுக்கு என்னால் திண்ணையில் இருக்காது.
> > குறட்டைச் சத்தம் தவிர (அது கூட நான் அசந்து மறந்து
> > தூங்கிவிட்டால்...) :))))))
>
> > அஷ்வின்ஜி
> > பிரபஞ்சத் துகளில் ''நான்'' யார்?
>

> இது என்ன வம்பாக இருக்கிறது? தொந்தரவு கொடுக்கத்தான் திண்ணை.
>
> என்ன கொஞ்சம் ஆக்கபூர்வமான தொந்தரவுகள்...அதான் விஷயம்.
>
> நீங்கள் தூங்கினால் அப்புறம் நான் கடுப்பாகிப் பாட ஆரம்பித்துவிடுவேன்.
> அந்த ஆபத்து உங்களுக்குத் தேவையா?
> :-)))

> > > > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsubscribe@goog legroups.com>
> > <thamizhvaasal%2Bunsu...@googlegroups.com<thamizhvaasal%252Bunsubscribe @googlegroups.com>


>
> > > > .
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
>

> > --
> > You received this message because you are subscribed to the Google Groups
> > "தமிழ் வாசல்" group.
> > To post to this group, send email to thamiz...@googlegroups.com.
> > To unsubscribe from this group, send email to

> > thamizhvaasa...@googlegroups.com<thamizhvaasal%2Bunsubscribe@goog legroups.com>

S. Krishna Moorthy

unread,
Jan 9, 2011, 11:40:52 AM1/9/11
to தமிழ் வாசல்

http://consenttobenothing.blogspot.com/2010/05/blog-post_9179.html

இந்த வலைப் பக்கங்களுக்கு வாசிக்க வருகிறவர்களிடம் பொருளாதாரம்,
வங்கிகள், அரசியலைத் தொட்டு எழுதிய சில பதிவுகளில், சார்லஸ் டிக்கென்ஸ்
எழுதிய ஆலிவர் ட்விஸ்ட் கதையைப் படிக்கும் படி சிபாரிசு செய்வது உண்டு.

முக்கியமான காரணம், அந்தக் கதையின் தொடக்கமே இங்கிலாந்தில் தொடங்கிய
தொழிற்புரட்சி எப்படி கிராமங்களில் இருந்து மக்களை நகர்ப்புறத்துக்கு,
சேரிகளில் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து தள்ளியது என்பதை
விவரிக்கும், காலத்தின் கண்ணாடியாக இருப்பதை அறிந்து கொள்வதற்காகத் தான்.

ஒரு நல்ல எழுத்தாளன், தான் வாழும் காலத்தின் பிரதிபலிப்பாகவே
இருக்கிறான். அவனைப் பாதித்த விஷயங்கள், சமூகத்தில் அவன் பார்த்த, அவனைப்
பாதித்த நிகழ்வுகள், அவனுடைய ஆதங்கத்தோடு சேர்ந்தோ, அல்லது அவன்
புரிந்து கொண்ட விதத்தை ஒட்டியோ தான் அவன் படைப்புக்கள் இருக்கும்.
மனிதனை நேசிக்கத் தெரிந்த எழுத்தாளர்கள் அனைவரிடத்திலும் காணக் கிடைக்கிற
பொதுவான பண்பு இது.

தமிழில் மட்டுமல்ல, பொதுவாகவே வலைப் பதிவுகளைப் படிக்க வருபவர்கள்,
மேலோட்டமாகவே பார்த்து விட்டுப்போய் விடுகிறார்கள்.அவர்களைக் குறை
சொல்லியும் பயனில்லை. இன்றைக்கு எழுத்து என்பது, அவசர அவசரமாக சாப்பிட்டு
விட்டு ஓட வைக்கிற ஃபாஸ்ட் ஃபுட் சமாச்சாரமாகவே ஆகிப்போன நிலையில்,
ஆழ்ந்த வாசிப்பு என்பது மிகவும் அரிதாகிப்போன விஷயமாகவே படுகிறது.

இப்படிக் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு, அவஸ்தையோடு பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருப்பதை ஆரம்பித்து வைத்த தொழிற்புரட்சியின் பக்க
விளைவுகளில் எழுந்த கதை ஆலிவர் ட்விஸ்ட்! சார்லஸ் டிக்கென்ஸ் எழுதிய
இரண்டாவது கதை இது. ஒரு சிறுவனை மையமாக வைத்து எழுதிய கதை என்று
பார்த்தால், அவருக்கு இது முதலாவது முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.
உலகமெங்கும் பரவியதாக இருக்கும் இரண்டு சுவாரசியமான வாக்கியங்கள்,
உங்களுக்கும் கூடத் தெரிந்தது தான், இந்தக் கதையில் தான் இருக்கிறது!

ஒன்று, "சட்டம் ஒரு கழுதை!"

கிட்டத் தட்ட நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் டிக்கென்ஸ் எழுதிய
இந்த வார்த்தை, இன்றைக்கும் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!

இன்னொன்று, "தயவு செய்து ஐயா, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும்!"

சாதாரண ஜனங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொடர்ந்து, இன்றைக்கும்
கேட்டுக் கொண்டிருக்கும் கெஞ்சல்!

தொழிற்புரட்சியின் முக்கியமான அம்சம், தேவை இருக்கிறதோ இல்லையோ, உற்பத்தி
செய்து அதை நுகர்வோர் தலையில் கட்டி விடுவது! கிராமப் பொருளாதாரத்தின்
வலிமை இருப்பதைப் பகிர்ந்து கொண்டு, வளர்ச்ச்சி இல்லை என்றாலும்
தேய்மானமாவது இல்லாமல் இருந்தது. தொழிற்புரட்சி அத்தனையையும் தலைகீழாகப்
புரட்டிப் போட்டு விட்டதையும், ஏழைகளையும் உற்பத்தி செய்ததையுமே, அதன்
ஆரம்ப காலத்தைத் தொட்டுச் செல்லும் கதை ஆலிவர் ட்விஸ்ட்.

Bentley's Miscellany என்ற பத்திரிகையில். 1837 பெப்ருவரியில் தொடங்கி,
1839 ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக வெளிவந்த தொடர்கதையாகத் தான்,
பிரிட்டிஷ் வாசகர்களுக்கு அறிமுகமானது.

சட்டம் ஒரு கழுதை, எனக்கு இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று சில
வாக்கியங்களை அறிமுகப் படுத்திப் பிரபலப் படுத்தியது மட்டுமல்ல, அந்த
நாளைய சரித்திரக் குறிப்பேடுகளில் கூடப் பதிவு செய்யப் படாமல் இருந்த ஏழை
மக்களின் துயரங்களை விரிவாகப் பதிவு செய்த, சமூகப் பிரக்ஞையோடு
வெளிவந்த முதல் ஆங்கிலப் புதினம் இது தான்.

மற்ற எழுத்தாளர்கள், பணம் படைத்தவர்களைப் பற்றியே எழுதி எழுதி
மாய்ந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிவந்த வித்தியாசமான எழுத்து இது.

கதை ஆலிவர் ட்விஸ்ட் என்ற சிறுவனைச் சுற்றியே ஆரம்பிக்கிறது. இவனைப்
பெற்றுப் போட்டதும் தாய் இறந்து விடுகிறாள். தந்தை யார் என்று
தெரியவில்லை. ஏழைகளுக்கான சட்டம் என்ற ஒன்றின் கீழ் நிர்வகிக்கப் படும்
ஒரு விடுதியில் முதல் ஒன்பது வருடங்கள்! இல்லாதவர்கள் அனுபவிக்கும்
கொடுமை, பசியுடன் அந்த ஒன்பது வருடங்கள் இருப்பதை,கானா காப்பீடு, சமூகக்
காப்பீடு என்று இப்போதுகூடச் சொல்லப் படுவதில் உள்ள ஓட்டைகளை, அந்தக்
காலத்திலேயே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் கதாசிரியர்!
காப்பீடுகள், சமூகப் பாதுகாப்பு என்ற வார்த்தை ஜாலங்கள், வாக்குறுதிகள்
எல்லாம் இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவே!

ஒன்பது வயது நிறைந்ததும், திருமதி மான் நிர்வகித்து வரும் அமைப்பில்
இருந்து, வேலை செய்வதற்கு வேறோர் இடத்திற்கு அனுப்பப் படுகிறான் ஆலிவர்
ட்விஸ்ட்! அங்கே தான், பசி தாங்க முடியாமல், "தயவு செய்து ஐயா! இன்னும்
கொஞ்சம்!" என்று உணவுக்குக் கெஞ்சுகிறான்.

போனால் போகிறதென்று கொஞ்சம் சோறு போட்டால் இன்னும் கொஞ்சம் என்று
கேட்பாயா என்று அங்கே இவன் மீது கோபம் வருகிறது ஐந்து பவுண்ட் கொடுக்கும்
எவர் வேண்டுமானாலும் இவனை அழைத்துச் செல்லலாம் என்று முடிவாகிறது.

அந்த நாளைய பிரிட்டிஷ் சமூக அமைப்பு, தங்களுடைய சொந்த ஜனங்களையே எப்படி
நடத்தியது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் எப்படி, வீட்டு
அடிமைகளாக விற்கப்பட்டார்கள் என்பதைக் கொஞ்சம் வெளிச்சம் போட்டுக்
காட்டுவதாக, ஆழ்ந்து யோசிக்க வைக்கிற பகுதி இது. பணம் படுத்தும் பாடு
எப்படிப் பட்டது என்பதைப் போகிற போக்கிலேயே சொல்கிற இடமாகவும் இந்தப்
பகுதி இருக்கிறது.

உள்ளூர் பாரிஷில் (ஒரு சர்ச் அமைப்பு) இருக்கும் சோவெர்பெரி என்பவர்,
வேறு ஒரு மோசமான நபரிடம் தள்ளிவிட இருந்த நிலையில் தலையிட்டுத் தன
வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த மனிதர் நல்லவர் தான்! ஆனால், அவர்
மனைவிக்கு, இந்தச் சிறுவனைப் பிடிக்கவில்லை. அங்கே இருந்த வேலையாட்களுமே
கூட இவனைக் கொடுமைப் படுத்துகிறார்கள். அதில் ஒருவனைத் திருப்பித்
தாக்கியதால், தண்டிக்கப் படுகிறான். ஆலிவர். கொடுமை தாங்காமல், அந்த
இடத்தை விட்டுத் தப்பி ஓடுகிறான்! பசியும், துயரமும் தொடர்ந்து
துரத்துகிறது.

லண்டனை நோக்கிப் பயணப்படும் நேரத்தில், ஜாக் டாகின்ஸ் என்ற சம வயதுள்ள
ஒருவனைச் சந்திக்கிறான்.

ஏய்ப்பதில் கலைஞன் (the artful dodger) என்றே அவனைத் தெரிந்து
வைத்திருந்த வட்டாரத்தில் அழைக்கப்படுவதில் காரணமில்லாமல் இல்லை. பிக்
பாக்கெட் அடிப்பதில் கலைஞன் மட்டுமில்லை, ஆலிவர் மாதிரி ஆதரவற்ற
சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய கூட்டத்தில் சேர்க்கும் வலைஞனும்
கூட! தன்னுடைய குரு ஃபாகின்சிடம் அழைத்துப் போகிறான். எளிதாகச்
சம்பாதிக்கலாம், சுகமாக வாழலாம் என்ற கனவுகளைத் தந்திரமாக இப்படிப்பட்ட
ஆதரவற்றவர்களிடம் விதைத்து, அவர்களை உபயோகிக்கும் ஒரு கொடூரமான கும்பல்
அது.

கைக்குட்டை விற்கிற சாக்கில் தங்களைப் பிக்பாக்கெட் அடிப்பதற்குத் தான்
பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தெரிந்து, ஆலிவர் இந்தக் கும்பலை
விட்டு விலக முனைகிறான். பிக்பாகெட் அடிக்கிற முயற்சியில் டாகின்ஸ்
அம்பலப்பட்டு, ஆலிவரும் இன்னொருவனுமாக டாகின்சுடன் தப்பித்து
ஓடுகிறார்கள். மற்ற இருவரும் தப்பித்து விட, ஆலிவர் மட்டும் போலீசிடம்
சிக்கிக் கொள்கிறான். நடந்ததைப் பார்த்த சாட்சிகளில் ஒருவர், ஆலிவர்
எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை எடுத்துச் சொல்லவும், விடுவிக்கப்
படுகிறான். பிரவுன்லோ என்ற முதியவர் இவன் மேல் இரக்கப் பட்டுத் தன்னுடன்
அழைத்துச் செல்கிறார்.

ஆனால், அதுவும் நிலைக்காமல் போகிறது. கும்பல் தலைவன் ஃபாகின்ஸ்,
தன்னுடைய கையாளான நான்சி என்ற பெண்ணை அனுப்பித் தந்திரமாக ஆலிவரை மறுபடி
கும்பலுக்குள் கொண்டு வந்து விடுகிறான். வீடுபுகுந்து கொள்ளையடிக்கும்
முயற்சி ஒன்றில் ஆலிவர் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப் படுகிறான்.
எதிர்பாராத விதமாக அந்த முயற்சி தோற்றுவிடுகிறது, ஆலிவர் சுடப்படுகிறான்.
அந்த வீட்டில் இருப்பவர்களால், ஆலிவர் காப்பாற்றப் பட்டு, அவர்களுடைய
அரவணைப்பும் கிடைக்கிறது.

இவனை மறுபடி கும்பலுக்குள் சிக்க வைத்த நான்சி, இவன் மீது இரக்கம்
கொள்கிறாள். ஆலிவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று
தவிக்கிறாள். அதே கும்பலில் இருக்கும் இவளது காதலன் சைக்ஸ் எதிராக
இருக்கிறான். திருட்டுக் கும்பலுக்குள் மோன்க்ஸ் என்ற புது நபர் வந்து
சேர்கிறான். ஆலிவரைத் தீர்த்துக் காட்டுவதில் அவன் அதிக அக்கறை
காட்டுகிறான். தொடர்ந்து நிகழும் மோதல்களில் சைக்ஸ் தன் காதலி நான்சியைக்
கொன்று விட்டு, தப்பியோட முயலும்போது தானும் கொல்லப் படுகிறான்.

மோன்க்ஸ் ஏன் ஆலிவரைத் தீர்த்துக் கட்டுவதில் குறியாக இருக்கிறான் என்ற
மர்மமும் உடைகிறது. அவன் ஆலிவருக்கு சகோதரன் முறையானவன். ஆலிவர் ஒரு
பணக்காரனின் வாரிசு என்றெல்லாம் தெரிய வருகிறது. ஃபாகின்ஸ் கைது செய்யப்
பட்டு மரண தண்டனை விதிக்கப் படுகிறது. அப்புறம், பிரிந்திருந்த உறவுகள்
எல்லாம் சேர சுபம் சுபமே என்று கதை முடிகிறது.

புத்தக விமரிசனம் என்று முழுக்கதையுமே சொன்னால் எப்படி என்று
கேட்கிறீர்களா?

இங்கே கதையில் பெரிதாக ஒன்றுமே இல்லை.தமிழில் அனாதை ஆனந்தன் என்ற
பெயரில் ஏவிஎம் தயாரிப்பில், ஏவிஎம் ராஜன், ஜெயலலிதா, மாஸ்டர் சேகர்
நடித்து, இதே கதை படமாகவும் வந்தது. இப்போது சொன்ன அவுட்லைனை வைத்து
படமாக வந்திருந்தாலும், முக்கியமான ஒன்று மிஸ்ஸிங்! அது தான்,
எழுத்தாளன், தான் வாழ்ந்த காலத்தை எழுத்தில் பிரதிபலித்துக்
காட்டியிருந்த விஷயங்கள்! அதை விட்டு விட்டு படமாக எடுத்தபோது, அங்கே
எதுவுமே இல்லை!

எழுத்தில் தெரியும் ஜீவனை, வாசிப்பின் வழியாக உணர முடிவது போல, மாற்று
ஊடகமாகப் பார்க்கும் போது அவ்வளவாக எடுபடுவதுமில்லை. முக்கியமான காரணமாக
எனக்குப் படுவது என்னவென்றால் மாற்று ஊடகத்தில் கொண்டு வரும்போது,
எழுத்தின் ஜீவனைப் புரிந்துகொண்டு சொல்ல இங்கே எவரும் முனைவதில்லை
என்பது தான்!

கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தீர்களானால், ஏழாவது உலகம் கதை,
(இன்னமும் படிக்கவில்லை) நான் கடவுள் படம் (பார்த்தாயிற்று) இவற்றில்
பேசப்படும் பிச்சை எடுப்பவர்களின் நதி மூலம் இங்கே ஆலிவர் ட்விஸ்ட்
கதையில் ஃபாகின்ஸ் கும்பலை வைத்து ஆரம்பிப்பதையுமே பார்க்க முடியும்.
இந்த அவலங்கள், பிரிட்டிஷ்காரர்கள் நாட்டை அடிமைப் படுத்தியவுடன் செய்த
முதல் காரியம், கிராமங்கள் அழிக்கப் பட்டு, மக்கள் நகர்ப்புரங்களுக்குக்
கூலிகளாக விரட்டப் பட்டதில் இருந்து ஆரம்பித்தது தான்! அதற்கு முன்னால்
இத்தகைய அவலங்கள் இந்திய சமூகத்தில் இருந்ததே இல்லை! இந்திய கிராமப்
பொருளாதாரம், சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரமாக, பகிர்ந்து கொள்கிற
தன்மையில் இருந்தது, அங்கும் இங்குமாக சில கொடூரமானவர்கள் இருந்தாலும்,
ஒட்டு மொத்த சமுதாயமும் ஒரு தர்மகர்த்தா இயல்பில், எளியவர்களையும்
அரவணைத்துச் சென்றதைக் கொஞ்சம் வரலாறு படித்தவர்களுமே தேடித் தெரிந்து
கொள்ள முடிகிற விஷயம். இன்றைக்குக் குறிவைத்துத் தாக்கப் படுகிற இந்தியக்
கலாசாரம், எளியவர்களுக்கு ஆதரவாகவே இருந்தது.

ஆலிவர் ட்விஸ்ட்! நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னால் எழுதிய கதை தான்!
இன்றைக்கும் கூட, சமூகம், பொருளாதாரம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு
ஊற்றுக் கண் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன படைப்பாகவும்
இருப்பது தான் இதன் சிறப்பு.

நாவலை முழுதாகப் படித்துப் பாருங்கள்! எழுத்தின் ஜீவனை அங்கே தான் கண்டு
கொள்ள முடியும்!

----------------

அரங்கனார் வந்து வில் ட்யூரண்ட் எழுதிய சரித்திரத்தின் படிப்பினைகளைப்
பற்றிக் கொஞ்சம் விரிவாக சொல்ல ஆரம்பிப்பதற்குள் இங்கே இன்னொரு
புத்தகத்தைப் பற்றி ஒரு தனி ஆவர்த்தனம்!

GEETHA SAMBASIVAM

unread,
Jan 9, 2011, 10:46:26 PM1/9/11
to thamiz...@googlegroups.com
கைதி கண்ணாயிரம்!  sorry, cannot resist!

2011/1/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அழகான நடையில் ஓலிவர் ட்விஸ்டை ட்விஸ்டிய தோழரே மிக்க நன்றி. 

நிச்சயம் இப்படி ரசம் சொட்டச் சொட்ட க்லாஸிக்ஸை சொன்னால் ஏன் ஆர்வம் வராது. 

ஆனால் சமுதாய விஷயங்கள் ஓர் எழுத்தாளனின் படைப்பில் தாக்கமாக இருக்கும் என்பது ஒரு பக்கம் என்றால் அவனுடைய எழுத்தின் பேனா நுனி அந்தத் தாக்கத்தின் கையில் இருப்பதா? இல்லையேல் எந்தத் தாக்கத்துக்கும் மசியாது யதேச்சையாக ஸ்வயம்பூவான அவன் ஆளுமையின் பாற்பட்டதா? இது ஒரு கேள்விதான். 

மௌனியின் பேரர்கள் வந்த் அன்று அசோகமித்திரன், வெங்கட் சாமினாதன், திரு சச்சிதாநந்தம், நான் ஆகியோர் கலந்துரையாடலில் இந்த விஷயமும் வந்தது. எழுதுவது யார்? எழுத்தாளனின் ஸ்வதந்திரமான ஆத்மாவா? இல்லை சமுதாயம், கல்வி, பண்பாடு, அரசு என்று பல்துறைகளும் தம் உள்கங்காணியை எழுத்தாளனின் பேனாவிற்குள் மறைத்து வைத்து, எழுத்தில் அந்தப் பேனா நுழைவது ட்ராய் நகரத்து மரக்குதிரை கணக்கா? 





--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
360.gif

S. Krishna Moorthy

unread,
Jan 10, 2011, 12:14:46 AM1/10/11
to தமிழ் வாசல்
வாருமய்யா எழுத்தாளரே!
வரகரிசிச் சோற்றிற்கு
வெங்காந்த காலம் போய்
வண்ண அடுக்கு அஞ்சு விண்மீன்
திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா!
செண்டு போட்டுப் புடைக்காமல்
நண்டு பிடிப்பவர் போல்
ஏதோ நோட்டம் விடுகின்றீர்!

வாரும். என்ன தயக்கம்?
சேருகின்ற துட்டைக்
காப்பாக வைக்கும்
வழிபற்றிக் கவலைதானோ?
கவியரசு, புவியரசுக்
கால் போட்டுப் பேசுகின்ற
எக்காளப் பாவரசு
என்ற பீடுக்கும்
பீடை பிடித்ததுவோ?
எதுவானால் என்ன?
கொட்டியழும்.

கொள்கை புதைத்துவைத்த
சமாதி தான் திறந்து
சம்மதியா ஆவியாகி
விரட்டிவந்த வேர்ப்பைத்
துடைத்துவிட்ட முகம்போலே
உம்மென்றிருக்கும்
உள் புயலை அவிழ்த்துவிடும்.
ஊடகத்தே சதிராடி
உலகப்பொதுச் சொத்தாடி
உன்மத்தமாகி நின்றீர்!
உருட்டிவிட்டே ஊடகக் கண்
முன்னாடி நிற்பதற்கு
முளைத்தனரோ இளவரசு?

அன்றி என்றோ மறந்து போன
தாய்த்தமிழின் சேலைகளாய்
செல்லு பிடித்தயரும்
சீரிளமை இலக்கியங்கள்
வாரி முகர்ந்து
வாஞ்சையுடன் பார்த்திடவே
இன்னும் கருகாத
இலக்கிய மொட்டும் உம்முள்
பூத்திடுமோ?
பணத்திற்கே விற்றுத்
தொலைத்திட்ட பண்பாடும்,
பாவலனின் கர்வங்களும்
மண்ணோடு மண்ணாகிப்
பின்னருமே ஒருகால்
புறப்பட்டுத் தாம் வருமோ
என்ற பயத்தினிலே
எனைக்காண வந்தீரோ?

இல்லை,
புறமெரித்துப் புறமெரித்து
நெற்றிக்கண் வற்றியதால்
ஊற்றுக்கண் பொங்கும் வரை
உறக்கம் புரிகின்ற உருத்திரனார்
ஒரு வேளை எழுந்தாரோ
என்ற குலை நடுக்கம்
பிடரி தள்ளப் பேயறைந்து
வந்தீரோ சொல்லுமய்யா!

ஒற்றிவைத்த ஊர் சொத்தில்
ஒப்பனையாய் உப்பரிகை
ஊதிவாழ்ந்த பலூன்வாழ்வும்
ஒருநாள் வெடித்துத்தான் போகும்.
சாகாத வரம் வேண்டி
சந்து பொந்து கோயில்களில்
சிந்தும் ஊர்ப்பணங்கள்
பந்தக்கால் பக்குவங்கள்
ப்ரோநோட்டு ஜாலங்கள்
எல்லாம் ஒருநாளில்
நாறித்தான் போகும்.
கல்லாத பேர்களே
நல்லவர்கள் நல்லவர்கள்
என்றுரைத்த பெருமகனை
வென்றுவிட்ட வரிசைகளாய்ப்
பூசிய திருநீறும்
போம்வழிக்கு வாராது.
புதைகுழியில் போய்ப்படுத்துப்
பயின்றாலும் பாவிஎமன்
துயின்றுமுடித்த
பின்னர்தான் தான்வருவான்.
நெருநல் உளனொருவன்
இன்றுமட்டும் ஆடுகின்ற
ஆட்டத்தின் பாதி முடித்துவிட்டீர்!
மீதியையும் முடித்துவிடும்.
நாதியத்துப் போகுமுன்னே
நாட்டாமை பார்த்துவிடும்.
சேதிவரும்.
அதற்குள்ளே
சோதிடங்கள் ஏனய்யா?

நீதி துயின்றாலும்
நியாயங்கள் அயர்ந்தாலும்
நீறுபூத்த நெருப்பாகி
நீலகண்டர் பயின்றாலும்
சோற்றுப் பருக்கைக்கும்
சோகாக்கும் காலம் வரும்.
அதுவரையில் சத்தியமாய்
கவிதையென்றோ
இலக்கிய ரசனையென்றோ
தத்துவாதீதமென்றோ
அத்துவா மார்க்கமென்றோ
மானிட மகத்துவமென்றோ
பொய்க்கால் குதிரைகள் நீர்
ஆடவேண்டாம் !
அதையெல்லாம்
பிழைக்கத் தெரியாமல்
போக்கற்று கதியற்று
திக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம்
யாங்கள் பார்த்துக் கொள்வோம்.
போங்கால் கதவடைத்துப்
போம்.

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

"வாருமையா எழுத்தாளரே" என்று கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்து வருகிற
மாதிரி என்றைக்கோ அரங்கனார் எழுதின கவிதை, சந்தவசந்தத்தில் எப்போதோ
படித்தது இப்போது நினைவுக்கு வருவது ஏன்??

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்!
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!

கைதி கண்ணாயிரம் என்ற உடன் நினைவுக்கு வந்தது இந்தப்பாடல் தான்! கட்டை,
கம்பு, தடி எதுவுமில்லை சாமி!

GEETHA SAMBASIVAM

unread,
Jan 10, 2011, 2:49:00 AM1/10/11
to thamiz...@googlegroups.com
இனி இந்த இழைக்கு  வரமாட்டேன்! :(

2011/1/10 S. Krishna Moorthy <kris...@gmail.com>


"வாருமையா எழுத்தாளரே" என்று கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்து வருகிற
மாதிரி என்றைக்கோ அரங்கனார் எழுதின கவிதை, சந்தவசந்தத்தில் எப்போதோ
படித்தது இப்போது நினைவுக்கு வருவது ஏன்??

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்!
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்!

கைதி கண்ணாயிரம் என்ற உடன் நினைவுக்கு வந்தது இந்தப்பாடல் தான்! கட்டை,
கம்பு, தடி எதுவுமில்லை சாமி!

S. Krishna Moorthy

unread,
Jan 10, 2011, 3:11:48 AM1/10/11
to தமிழ் வாசல்
எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு விலகாமல், வாசிப்பு அனுபவத்தைப்
பகிர்ந்து கொள்வதற்காகத் தானே இந்தப் படிப்புத் திண்ணை? மின்தமிழில்,
படித்தான் பரிந்துரை என்று அழகாகப் போய்க் கொண்டிருந்த ஒரு நல்ல விஷயம்
இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களைத் தொட்டுத் திசை திரும்பி,
அப்படியே நின்று போனதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்!

ஒரு வாசகனாக நின்று, இதுவரை வந்தபோதெல்லாம், என்ன பகிர்ந்து
கொள்ளப்பட்டது, இழைக்கு எந்த அளவு பொருத்தமானதாக இருந்தது என்று
பார்த்தால், இனிமேல் வரமாட்டேன் என்று சொன்னதற்கு ஒரு பாராட்டு அல்லவா
சொல்லத் தோன்றுகிறது!!

பாராட்டுக்கள்!

--

S. Krishna Moorthy

unread,
Jan 10, 2011, 5:24:34 AM1/10/11
to தமிழ் வாசல்
வில் ட்யூரண்டின் அற்புதமான தத்துவப் புதையலை இந்த இழையில் பேசிக்
கொண்டிருக்கிறோம்! வாசிப்பதன் சுகம் அறிந்தவர்கள், அனுபவித்துப்
படிக்கவேண்டும் என்பதற்காகவே பல இடங்களில் இருந்தும் தேடிஎடுத்து இந்த
இழை புதுப்பிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

மனிதகுலத்தின் வரலாறு (The Story of Civilisation) Our Oriental
Heritage என்ற புத்தகத்தின் அறிமுகமாக ஒரு ஆறு நிமிட ஒலிக் குறிப்பை
இங்கே கேட்கலாம்!

http://www.youtube.com/watch?v=xjX6xgAOfhI


அன்புடன்

Innamburan Innamburan

unread,
Jan 10, 2011, 5:36:55 AM1/10/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
Most interesting and informative. I was particularly happy to listen
to the reference to Ananda Koomaraswamy's inimitable aesthetic
contribution. Incidentally, I was just reading some notes that I had
kept for about thirty years on AJP.Taylor and the simuntaneous
exposure was refreshing.
Innamburan

2011/1/10 S. Krishna Moorthy <kris...@gmail.com>:

S. Krishna Moorthy

unread,
Jan 11, 2011, 12:00:49 PM1/11/11
to தமிழ் வாசல்
அரங்கனார் ஆரம்பத்தில் வில் ட்யூரன்ட், அவரைக் காதலித்துக் கைப்பிடித்த
ஏரியல் ட்யூரன்ட் இருவரைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு ஒன்றை
வரைந்திருந்தார். இந்த தம்பதியைப் பற்றி யூட்யூப் தளத்தில் இருந்து
மூன்று ஒளித் துண்டுகள்! படிப்புத் திண்ணை, படிப்புத் திண்ணையாக மட்டுமே
தொடர வேண்டும் என்கிற விருப்பத்தோடு!

முதல் பகுதி இங்கே

http://www.youtube.com/watch?v=OlaiUzlbNqQ

இரண்டாம் பகுதி இங்கே

http://www.youtube.com/watch?v=VG-Iq3bv5ZQ&feature=related

மூன்றாம் பகுதி இங்கே

http://www.youtube.com/watch?v=ypyMkUgF87Q&feature=related

வில் ட்யூரண்டை மிகச் சிறந்த சரித்திர ஆசிரியராக, தத்துவ மேதையாக
இன்றைக்கு மதிப்பிடுகிறார்கள். கருத்தொருமித்த இந்தத் தம்பதியரைப் பற்றிய
பழைய டாகுமெண்டரி இது. கொஞ்சம் தகவல் தெரிந்துகொள்ள
விரும்புகிரவர்களுக்குப் பயன்படும்.

-----------------

S. Krishna Moorthy

unread,
Jan 16, 2011, 10:14:11 AM1/16/11
to தமிழ் வாசல்

அப்பனுக்கு அஞ்சு முகம், சுப்பனுக்கு ஆறுமுகம், அப்புறம் ராவணனுக்குப்
பத்து முகம் இப்படிக் கேள்விப்பட்டே பழகிப் போன நமக்கு ஒரு ஹீரோவுக்கு
ஆயிரம் முகம்னு சொன்னாக்க எப்படி இருக்கும்?

நம்ம இ' ஐயா ஆர்னால்ட் டாயின்பீ பத்தி லேசாச் சொல்லிப்புட்டுப்
போனாருங்களா இல்லையா! அதே மாதிரிக் கொஞ்சம் வித்தியாசமா யோசிச்ச
ஒருத்தர், ஜோசப் காம்பெல் என்று பெயர், அவர் எழுதின புத்தகம்
The Hero with a Thousand Faces
இது தான் நினைவுக்கு வந்தது. எப்போதோ படிக்கக் கையில் எடுத்து,
அரைகுறையாகவே வாசித்து நின்று போனதும் கூட. இதில் சொல்கிறார்:

“ A hero ventures forth from the world of common day into a region of
supernatural wonder: fabulous forces are there encountered and a
decisive victory is won: the hero comes back from this mysterious
adventure with the power to bestow boons on his fellow man."

ஒரு ஹீரோ, சாகசங்கள் நிகழ்த்த உள்ளிருந்து எழும் அழைப்பை ஏற்று, ஒவ்வொரு
படியாகப் பல்வேறு சோதனைகளையும் கடந்து சாதனையாக மாற்றி,இப்படி நிகழ்வதை
காம்பெல் "மோனோமித்" (monomyth) என்ற வார்த்தையில் குறிப்பிடுகிறார்!

தத்துவத் துரிசுகளைஎல்லாம் இப்போது யூட்யூப் தளத்தில் விளக்கப் படங்களாக
எடுத்து, தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு உதவுகிறார்களே தெரியுமோ!
இந்த மோனோமித் பற்றி ஒரு சிறு ஒளித்துண்டு இங்கே........

http://www.youtube.com/watch?v=Mop6cgXchbw&feature=related

படிப்புத் திண்ணைக்காக!

Innamburan Innamburan

unread,
Jan 16, 2011, 10:48:20 AM1/16/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
ஆர்னால்ட் டாயின்பீ வரலாற்று ஆய்வாளர். ஆசிரியர். ஜோசஃப் காம்பெல் வரலாறு, தத்துவம், தர்க்கம் ஆகியவற்றை தாண்டி, உயர்நிலை ஆன்மீகத்தின் எல்லைகளை அவ்வ்ப்பொழுது தொட்டு விட்டு, தரணி முழுதையும் சார்ந்த mythsகளை பற்றி சிந்தித்து சிந்தித்து எழுதுபவர். ஒரு முறை டான் ராதெர்ஸ் என்ற புகழ்வாய்ந்த தொலைக்காட்சி நடத்துனர் அவரிடம், எல்லா ஆன்மீகத்தையும் ஒரு சொல்லில் கூற வேண்டினார். பதில்: 'தத்வமஸி'. அவருடைய சிஷ்யை ஜூடி எங்களுக்கு லாஸ் ஆஞ்செலிஸ்ஸில் அறிமுகமானர், இரண்டு வீடு தள்ளி. அவர் ஜோசப் காம்பெல் அவர்களை பற்றி பேசினால், திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்போம்.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2011/1/16 S. Krishna Moorthy <kris...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jan 16, 2011, 11:05:15 AM1/16/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி! ஹனி கோம்ப் தட்டுவது என்பது இதுதானோ?

2011/1/16 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆர்னால்ட் டாயின்பீ வரலாற்று ஆய்வாளர். ஆசிரியர். ஜோசஃப் காம்பெல் வரலாறு, தத்துவம், தர்க்கம் ஆகியவற்றை தாண்டி, உயர்நிலை ஆன்மீகத்தின் எல்லைகளை அவ்வ்ப்பொழுது தொட்டு விட்டு, தரணி முழுதையும் சார்ந்த mythsகளை பற்றி சிந்தித்து சிந்தித்து எழுதுபவர். ஒரு முறை டான் ராதெர்ஸ் என்ற புகழ்வாய்ந்த தொலைக்காட்சி நடத்துனர் அவரிடம், எல்லா ஆன்மீகத்தையும் ஒரு சொல்லில் கூற வேண்டினார். பதில்: 'தத்வமஸி'. அவருடைய சிஷ்யை ஜூடி எங்களுக்கு லாஸ் ஆஞ்செலிஸ்ஸில் அறிமுகமானர், இரண்டு வீடு தள்ளி. அவர் ஜோசப் காம்பெல் அவர்களை பற்றி பேசினால், திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்போம்.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான் 

ஐயா ‘இ’ சாரே! கொஞ்சம் ஜூடி விஷ்யத்தைச் சொன்னால்  உமக்கு 5ஸ்டார் சாக்லேட் வாங்கித் தருவேன். 
:-))

S. Krishna Moorthy

unread,
Jan 17, 2011, 3:39:11 AM1/17/11
to தமிழ் வாசல்
அரங்கனாரே!

இ' ஐயா, எத்தனை 5 Star சாக்லேட் என்று தெளிவாகச் சொல்லாததால், இன்னமும்
இந்த இழையைக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். அவர் வந்து
கவனிப்பதற்குள் இன்னொரு ரவுண்ட் அடித்துவிடலாம்!

On becoming Adult!

ஏழரைக் கழுதை வயசாயிப் போச்சி இன்னமும் அறிவு வளரலையா என்ற பாட்டை
நம்மில் நிறையப் பேர் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்போம்! வயதுக்குத்
தகுந்த பக்குவம், நடத்தை இல்லாமல் பொது இடங்களில் புழங்கும்போது இதை
விடவும் மோசமாகவும் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

அடல்ட் என்ற போதே ஒரு முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது அல்லவா, அதைப்
பற்றி டாக்டர் ஜோசப் காம்பெல் சொல்வதை இந்த ஆறுநிமிடம் ஓடும்
ஒளித்துண்டில் பார்த்துவிடலாம்.

http://www.youtube.com/watch?v=aGx4IlppSgU

-----------------------------
அன்புடன்

Innamburan Innamburan

unread,
Jan 17, 2011, 12:00:46 PM1/17/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
'அவர் வந்து
கவனிப்பதற்குள் இன்னொரு ரவுண்ட் அடித்துவிடலாம்!'
உண்மை நிலை. நான் அடிக்கடி அலையவேண்டி உள்ளது. தாமஸம் ஆகும்.


2011/1/17 S. Krishna Moorthy <kris...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Jan 17, 2011, 10:15:54 PM1/17/11
to தமிழ் வாசல்
தாமதமானால் பரவாயில்லை ஐயா! தாமசம் மட்டும் வேண்டவே வேண்டாம்!

தமஸோ மா ஜ்யோதிர் கமய!

S. Krishna Moorthy

unread,
Jan 21, 2011, 9:37:40 AM1/21/11
to தமிழ் வாசல்
அரங்கனாரும், இ' ஐயாவும் தங்கள் கைவேலையை முடித்துவிட்டு, இங்கே தங்கள்
கைவண்ணத்தைக் காட்டுவதற்கு முன்னால், படித்ததில் பிடித்த ஒன்றாக.....

http://suvasikkapporenga.blogspot.com/2010/04/blog-post.html

செய்தி சானல்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு தருணத்தில்
இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி
Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ்
சானலிலேயே மூன்று நான்கு தரம் பார்த்தது தான்!

இந்த வலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து
என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம்,
ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்!

அல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே
தங்கிவிட்டதாகக் கூட இருக்கலாம்! எப்படியிருந்தாலும், இங்கே தமிழ்
எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத்
திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை
எடுத்துக்காட்டுகிறது.

Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே
ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist, அதாவது கைவிரல்களை மடக்கிக்
காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு
செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இந்த
ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங்
என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம்
வாக்கரும் என்ற கதையை, தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக
சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும் என்ற தலைப்பில் 1937 வாக்கில் ஸ்டீபன்
வின்சென்ட் பெனெட் என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர் ஒ ஹென்றி
பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.

1941 இலும், அப்புறம் 2007 இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான்
சொல்கிறது? 2007 வடிவத்தைப் பார்ப்போம்! இதில் 1941 வடிவத்தைப் போல
அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல!
முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப
முடிந்தால்நம்புங்கள்!

ஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை
பதிப்பகங்களுக்கும், இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பி விட்டுக்
காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள்,
வெறுத்துப் போய், தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும்
லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க்
கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண்
உயிரிழக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது!
வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு, பேரம் ஆரம்பிக்கிறது.
நாம் இருவரும் கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும்
என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை
எனக்கு விற்றுவிடு என்கிறாள்.

கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு
இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி,
இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே
கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே,
வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை
உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால்
தேவலை என்று தவிக்கிறார்!


தான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு
உதவும்படி வேண்டுகிறார்.

வழக்கு ஆரம்பிக்கிறது! உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான்
களம் விரிகிறது.
ஒரு நீதி மன்ற விசாரணை போல நடக்கும் இந்தப் பகுதி மிக அருமையாக எடுக்கப்
பட்டிருக்கிறது.

கதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய
பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும் வழக்கு நடக்கிறது. ஜாபெஸ்
ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக
சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை
மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது!

அந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான டேனியல்
வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின் கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும்,
ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத்
திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப்
படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன்,
திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில்
தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை,
வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது! ஆனால்
திரையரங்குகளைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள்! நேரடியாகத் தொலைக்
காட்சியில் ரிலீஸ்!

ஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில், குறைந்தது
நான்கு முறையாவது போட்டிருப்பார்கள்! இன்னும் ஒரு பத்துத் தரமாவது
போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்! பார்க்க முடிந்தால் பாருங்கள்!

எது நல்ல எழுத்து, எதற்காக எழுதுவது, யாருக்காக என்ற மாதிரியான
அடிப்படைக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிற மாதிரி ஒரு நல்ல திரைப் பட
வடிவம் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை!

1.இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரவில்லை. டிவிடி,
விசிடிக்களாகக் கிடைக்கிறதா என்பதும் தெரியவில்லை. ஸ்டார் மூவீஸ் சானலில்
மட்டும் இந்தப் படத்தை இது வரை ஐந்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
இன்னும் குறைந்தது பத்துத் தரமாவது இந்த வருடத்திற்குள் ஒளிபரப்புவார்கள்
என்றும் எதிர் பார்க்கிறேன். எத்தனை தரம் ஒளிபரப்பினாலும், இந்தத்
திரைப்படத்தின் அடிப்படை ஸ்டீபன் வின்சென்ட் பென்னெட் ஒரு ஜெர்மானிய
நாடோடிக் கதையைத் திரும்பச் சொல்கிற வடிவமாக, ஆசை என்னும் சாத்தானுக்கு
இடம் கொடுத்தால் ஆத்மாவையே பறிகொடுக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

விக்கிபீடியாவில் தேடினால் கீழே கடைசியில் ரெபரென்ஸ் பகுதியில், இதன்
ஒரிஜினல் வடிவத்தை டெக்ஸ்ட் ஆகப் பார்க்க முடியும்.

2.இதை வெறும் திரைப்படமாக, திரை விமரிசனமாக மட்டும் எடுத்துக்
கொள்ளவில்லை. மனிதர்களின் ஏக்கம், தேடல் , எதிர்பார்ப்பு, கிடைத்ததில்
அதிருப்தி இப்படி ஏதோ ஒன்று அவர்களை இன்னும், இன்னும் என்று உந்திக்
கொண்டே இருக்கிறது. அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல்
குறுக்கு வழியையே தேடுகிற போக்கில் தன்னையே, தன்னுடைய சுயம்,
சுதந்திரத்தையே இழந்து விட வேண்டியிருக்கும் என்ற நல்ல பாடம், ஜெர்மானிய
நாடோடிக் கதைகளில், சாத்தானோடு செய்து கொள்கிற ஒரு ஒப்பந்தமாக ஒரு
கதையில் வருகிறது.

1937 இல் அதை பென்னெட், அமெரிக்கச் சூழலை வைத்துக் கொஞ்சம் மாற்றி
எழுதினார். இந்தக் கதை இரண்டு முறை படமாக்கப் பட்டிருக்கிறது.

மனித வளம் பற்றிப் பேசும்போது, நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து
இந்தக் கதையில் இருப்பதாகவே எனக்குப் படுகிறது

----------------

coral shree

unread,
Jan 26, 2011, 3:38:13 AM1/26/11
to thamiz...@googlegroups.com
மிக அழகான விமரிசனம் ஐயா. நன்றி.

2011/1/21 S. Krishna Moorthy <kris...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.




--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

S. Krishna Moorthy

unread,
Jan 28, 2011, 8:37:56 AM1/28/11
to தமிழ் வாசல்
அரங்கனாரும், இ' ஐயாவும் படிப்புத் திண்ணையை மறந்துவிட்டார்களோ?!

வாசிப்பில் ஆழங்கால் பட்டு நிற்கும் இந்த இரட்டையரில் எவரேனும் இங்கே
வந்து எட்டிப் பார்க்கிற இடைவேளைக்குள், ஒரு கதையைப் பார்த்துவிடலாம்!


"இர்விங் வாலஸ் எழுதிய The Man என்ற புதினம்!

http://suvasikkapporenga.blogspot.com/2010/08/man-irving-wallace.html

டக்ளஸ் டில்மன் என்ற கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க
ஜனாதிபதியாகி விடுகிறார்! புத்தகம் வெளிவந்த காலத்தில், இதைக் கற்பனையாக
மட்டுமே, அதுவுமே, தேர்தல் அல்லாத வழியில் என்று தான் சொல்ல
முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சமயங்களில், கற்பனை செய்து
எழுதுகிற விஷயங்கள், நடப்பு விஷயங்களோடு பொருந்திப் போக முடிகிற
விநோதத்தைப் பார்த்துப் பார்த்து, இப்போதெல்லாம் அது எனக்கு அது மிகவும்
பழகிப் போய்விட்டது!"

இப்படி இந்தப்பக்கங்களில் எழுதினேன்

http://consenttobenothing.blogspot.com/2010/01/blog-post_25.html

இந்தப் புத்தகத்தைத் தொட்டு, சென்ற வாதம் டிசம்பரில் ஒன்று, இந்த வருடம்
ஜனவரியில் ஒன்று என்று லேசாகத் தொட்டு எழுதியிருந்தாலும், முழுமையாக ஒரு
புத்தக விமரிசனமாக எழுத இப்போது தான் நேரமும், யோசனையும் பொருந்தி
வந்திருக்கிறது. என்னுடைய சேகரத்தில் மறுவாசிப்புக்காகத் தேடிய போது
உடனே கிடைக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.

இந்தப் புத்தகம் முதன் முதலாக என் கையில் கிடைத்தது அனேகமாக 1970 அல்லது
1971 ஆக இருக்கலாம். என் மனதில் இன்றைக்கும் நீங்காத ஒரு இடத்தில் இந்தப்
புத்தகம் இருக்கிறது! வெறும் கதைதானே, படித்தோமா பொழுது போனதா அப்புறம்
மறந்தும் போனோமா என்ற ரகத்தில் எல்லாப் படைப்பையும் எழுத்தாளர்களையும்,
சேர்த்துவிட முடியாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறந்த உதாரணம்.
தவிர, நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னால், எழுதப்பட்ட ஒரு கற்பனைப்
புதினத்தில் சொல்லப் படும் பல சம்பவங்கள், பாத்திரங்களை அப்படியே அச்சு
அசலாக இன்றைக்கும், இங்கே கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கும்
அரசியலோடு கூடத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிற விதமாக இருக்கிறது
என்றால் நம்புவீர்களா?

ஒரு நல்ல எழுத்தாளன் தான் வாழ்கிற சமுதாயத்தை ஊன்றிக் கவனிக்கத்
தெரிந்தவனாக இருக்கிறான்!.தன்னுடைய எழுத்தில் சமுதாயத்தின் மூலக் கூறுகளை
அப்படியே கொண்டு வந்து விடுகிறான். சிலநேரங்களில் ஜெயகாந்தன்
யதார்த்தத்தை அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டுகிற மாதிரி! சில
நேரங்களில், நா.பார்த்த சாரதி, அகிலன் மாதிரி யதார்த்த நிலையைக் கண்டு
கொதிக்கும் தன்னுடைய ஆவேசத்தையும் சேர்த்துக் கொட்டுகிற மாதிரி! ஆகக்
கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை என்றாலும், அதன் அடித்தளமாக இருக்கும்
சமுதாயத்தைப் பற்றிய கண்ணோட்டம் அல்லது மூலக் கூறுகள் உள்ளது உள்ளபடியே
இருப்பதால், படிக்கும்போது சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு தன்மை அல்லது
போக்கும் அப்படியே அச்சு அசலாக வெளிப் படுகிறது.

கற்பனை, பொய்க்குக் கூட, உண்மையின் கலப்பு அவசியமாக இருக்கிறது. அல்லது
பொய், கற்பனை என்று நாம் சொல்வதே யதார்த்த நிலைமையின் திரிக்கப்பட்ட
வடிவம் தான் என்பதைப் புரிந்து கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே
இல்லை.

எவரும் கற்பனை செய்தே பார்த்திருக்க முடியாத விதத்தில் கதை துவங்குகிறது.

TC, The Chief என்று மட்டுமே அழைக்கப் படும் அமெரிக்க ஜனாதிபதி பாரிஸ்
நகரத்தில் ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கும் தருணத்தில்,
கட்டடம் இடிந்து உயிரிழக்கிறார். அடுத்து இங்கே துணை ஜனாதிபதி ஏற்கெனெவே
உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற
நிலையில், பதவியேற்பதைத் தீர்மானிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவரும்
இறந்து விடும் செய்தி வருகிறது. அரசியல் சட்டப்படி, எஞ்சியுள்ள
காலத்திற்கு ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழ,
senate pro tempore என்று பதில் வருகிறது. அமெரிக்கத் துணை அதிபர்
அமெரிக்க செனேட் சபையின் தலைவராகவும் இருப்பவர். அவர் சபைக்குத்
தலைமைதாங்க முடியாத சமயங்களில் சபைக்குத் தலைமை தாங்குகிற பொறுப்பு இது.
பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத இந்தப் பொறுப்பில், கறுப்பரான டக்ளஸ்
டில்மானை TC யின் டீம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. இங்கே,
ஜாதிக்கொரு பிரதிநிதித்துவம், முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி, டம்மியாக
சில பேருக்குப் பதவி கொடுத்து அலங்கார பொம்மைகளாக, பப்ளிசிட்டி ஸ்டண்டாக
வைத்திருக்கிற மாதிரி!

சமத்துவம் கண்டுவிட்டோம் என்று சொல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்கிற
மாதிரி டம்மிப் பொறுப்பில் வைக்கப் பட்டிருந்தாலும் பதவி வரிசைப் படி
எவரும் ஊகிக்க முடியாத விதத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக, ஒரு கறுப்பர்!
என்று சுவாரசியமாக, ஒரு இக்கு வைத்து ஆரம்பிக்கும் இந்த நாவல், அமெரிக்க
ஜனநாயகம் இயங்கும் விதத்தை, மிக நுணுக்கமாக விவரித்துச் சொல்கிறது.

ஒரு கறுப்பரை அமெரிக்க அதிபராக, அவருடைய கட்சி, மக்கள் ஏற்றுக்
கொள்வார்களா? அரசியல் முதிர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை பிறந்து விட்டதா என்ற
கேள்விக்கெல்லாம் விடை தேட, முந்தைய அதிபரின் டீம் கவலைப் படவில்லை.
பெயரளவுக்கு டக்லஸ் டில்மன் அதிபர்! ஆனால் பின் சீட்டில் இருந்து முந்தைய
அதிபரின் அணுக்கக் குழு, ஆட்சியை வழிநடத்த நினைக்கிறது.


கொஞ்சம் நம்மூர் நிலவரத்தையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம். நேரு
மறைவுக்குப் பின்னால், சாஸ்திரி மறைவுக்குப் பின்னால் எழுந்த இடைவெளியை
நிரப்ப குல்ஜாரிலால் நந்தா என்ற காந்தீய வாதியைப் பயன் படுத்திக் கொண்ட
காங்கிரஸ், இந்திரா காண்டியை பிரதமராக்கி, பேக் சீட் டிரைவிங் செய்ய
முயன்ற போது, இந்திரா, நேரு குடும்பத்தில் துணிச்சல் கூட இருக்கும்
என்று எவருமே ஊகித்திருக்க முடியாத துணிச்சலுடன் கட்சியை உடைத்தார்.

ஆர்தர் ஈட்டன்! அதிபருக்கு அடுத்தபடியாக அமெரிக்க அரசியலில் அதிக
அதிகாரம் கொண்ட பதவியாகக் கருதப்படும் Secretary of State! டக்ளஸ்
டில்மன் தங்கள் வழியில், கன்றுக் குட்டி போல நடப்பார் என்று, முந்தைய
அதிபரின் அணுக்கக் குழுவுக்கு உறுதி அளிக்கிறார். அதிபரின் கட்சியும்,
ஈட்டனைத் தான் நம்புகிறது. எல்லோரையும் விட, இந்த டீம் பதவிக்கு
வருவதற்காகத் தேர்தல் செலவுகளில் பெரும் பங்கை ஏற்றுக் கொண்ட ஒரு பகாசுர
நிறுவனமும் ஈட்டனைத் தான் நம்புகிறது. ஜெயிக்கிற குதிரை மேல் பணம்
கட்டியவர்கள், லாபத்தை அள்ளிக் கொண்டு போகக் காத்திருப்பதைப் போல,
தங்களுக்குச் சாதகமான ஆட்கள் பதவிக்கு வருவதற்குப் பண உதவி செய்து
விட்டு, சாதகமான விஷயங்களுக்காகக் காத்திருக்கிறது.

மேலோட்டமாக, வம்புதும்புக்குப் போகாத அமைதியான மனிதராக அறிமுகமாகும்
டக்லஸ் டில்மன் மனைவியை இழந்தவர். இடதுசாரிகள் என்று சந்தேகிக்கப் படும்
உரிமைக்குரல் எழுப்பும் குழுக்களுடன் தொடர்புள்ளவர் என்று சந்தேகிக்கப்
படும் ஒரு பெண் வழக்கறிஞர், டில்மனுக்கு நெருங்கிய தோழியாக! விடலைத்
தனமான, உணர்ச்சி வசப்படுகிறவனாக ஒரு மகன், கறுப்பினத் தம்பதிகளுக்கு
எப்போதோ ஒரு முறை அதிசயமாகப் பிறக்கும் முழு வெள்ளைத் தோலுடன்! தன்னுடைய
நதிமூலம் கறுப்பரினம் என்பதை மறைத்து, போலியான ஒரு அடையாளத்தில் தகப்பன்,
சகோதரனை விட்டு விலகி வாழும் ஒரு மகள்.

செனேட்டர் ஒருவரின் மகள் சாலி வாட்சன்! நடுவில் கொஞ்சம் மன நிலை
பாதிக்கப் பட்டு குணமாகி வந்தவள், அதிபருக்கு சோஷல் செக்ரெடரியாக. ஆர்தர்
ஈட்டன் மீது ஈர்க்கப் படுகிறவளாக. ஈட்டன் தம்பதிகளுக்குள் கொஞ்சம்
கருத்து வேறுபாடு, அனேகமாக மணமுறிவு வரை போகலாம் என்று தெரிந்த நிலையில்,
அந்த இடத்தில் தன்னை வைத்துக் கற்பனை செய்து கொள்கிற பெண்ணாக.அமெரிக்க
அதிபருக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜன்டாகப்
பணிபுரியும் வெள்ளையர் ஒருவர் அடுத்த பதவி உயர்வுக்காகக்
காத்திருக்கிறார். கருப்பு இனத்தைச் சேர்ந்தவருக்குப் பாதுகாப்புக்
கொடுப்பதில் கருப்பரை ஒதுக்கி வைத்தால் அது நன்றாக இருக்காது
என்பதால்,ஒரு கறுப்பருக்கு அந்தப் பதவி உயர்வு போகிறது.

இப்படி, எதிர்பாராதவிதத்தில் அதிபராகப் பதவியேற்க வேண்டி வரும் டக்லஸ்
டில்மானை சுற்றி, பாத்திரங்கள் வரிசையாக அறிமுகமாகிறார்கள். பாத்திரங்கள்
அறிமுகம் செய்து வைக்கப்படும் நேரத்திலேயே, அதிபர் மாளிகையை பற்றிய
விவரங்கள், முந்தைய அமெரிக்க அரசியல் நிகழ்வுகளைத் தொட்டுக் கொண்டே கதை
நகர்கிறது. படித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், நமக்கும் அமெரிக்க
அரசியல், அரசு இயந்திரம் இயங்கும் விதம் அறிமுகமாகிக் கொண்டே வருகிறது.

முந்தைய அதிபர் தேர்தலில் ஜெயித்து வருவதற்கு, அமெரிக்க பகாசுர நிறுவனம்
ஒன்று எக்கச் சக்கமாக செலவு செய்திருக்கிறது. அவர்களுக்கு ஆதாயம் தரும்
வகையில், கறுப்பர்களுடைய நலன்களை மேம்படுத்துவது போல ஒரு திட்டம்
ஏராளமான செலவில் தயாராக இருந்து, சட்டவடிவம் கொண்டு வரும் நேரத்தில்,
பகாசுர நிறுவனம் ஆதரித்த அதிபர் காலமாகி விடுகிறார். அடுத்து வரும்
டில்மன் இதை ஒப்புக்குச் செயல்படுத்தப் படும் திட்டம், கறுப்பின
மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று நிராகரித்து விடுகிறார்!

அதிபருக்கும், அரசு இயந்திரத்தின் ஆதிக்கம் செலுத்திவரும் இதர
பகுதிகளுக்கும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது.அரசியலில் யுத்தம் என்று வந்து
விட்டால் சாக்கடைதான்! சேற்றை வாரி வாரி வீசுவது தான்! தங்களோடு ஒத்துப்
போக மறுக்கும் அதிபரை, அவருடைய சொந்த வாழ்க்கையைத் தொட்டு கேவலப்
படுவதுடன், எதிர்காலமே இல்லாமல் செய்துவிடமுடியும் என்று பலவிதத்திலும்
நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால், இந்த அதிபரோ, பணிந்து கொடுக்க
மறுக்கிறார். ஒரு அதிபராகத் தன்னுடைய கடமையில் இருந்து கொஞ்சம் கூடப்
பிறழ மாட்டேன் என்கிறார். போலித் தனமான நிவாரணங்களைக் கொடுத்து, ஒரு
சமுதாயம் முன்னேறிவிடும் என்ற மாயையை எதிர்க்கிறார். சலுகைகள்,
இலவசங்களினால், தன்னுடைய மக்களுக்கு உண்மையான விடுதலையும் சமத்துவமும்
கிடைக்காது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இலவசங்கள், மானியங்கள், நலத்திட்டங்கள் என்ற போர்வையில், தங்களுடைய
கல்லாவை நிரப்பிக் கொள்வதிலேயே குறியாக இருக்கும் கார்பரேட்டுகள்,
கார்பரேட்டுக்களின் தயவில் சொகுசாகத் தங்கள் பைகளையும் நிரப்பிக்
கொள்ளும் அரசியல்வாதிகள் விரோதத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு இவ்வளவு
போதாதா? இன்னமும் இருக்கிறது, மீன்களுக்குத் தூண்டிலில் வைத்துக்
கொடுக்கப்படும் புழுக்கள் எதற்காக என்பதை அறியாதவர்களாக, தங்களுக்கு
கொடுக்கப் படும் இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் எல்லாம் வெறும்
கண்துடைப்புத்தான் என்பதைப் புரிந்து கொள்ளாத ஜனங்களும் வெறுக்க
வேண்டுமே! அதுவும் நடக்கிறது.

உள்ளூர் கறுப்பின வெள்ளையர் பிரச்சினையோடு, அமெரிக்க ரஷ்ய பனிப்போர்
விவகாரமும் கதையின் கடைசியில் புகுந்து கொள்கிறது. உள்ளூர் மிட்டலுக்கு
அஞ்சாத மாதிரியே, வெளியே இருந்து வரும் மிரட்டலையும் டில்மன் எப்படி
எதிர்கொள்கிறார் என்பதும் கதையோடு சேர்ந்து வருகிறது..

அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. டக்லஸ்
டில்மனுக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன ஒன்று, நம்பிக்கையில்லாத்
தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னாலேயே பதவியை
ராஜினாமா செய்து விடுவது! அல்லது, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை,
எதிர்கொள்வது! இரண்டில் எதைத் தீர்மானிப்பது என்பதில், ஜட்ஜ் என்று
அழைக்கப்படும் ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் வழிகாட்டுகிறார். டில்மன்,
அதிபர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை சந்திப்பது என்று
முடிவெடுக்கிறார்.

இந்தப் பதவி நீக்கக் கோரும் தீர்மானம், இம்பீச்மென்ட் பற்றி மிக
விரிவாகத் தகவல்களைசொல்லிக் கொண்டே கதைக்களம், டக்லஸ் டில்மன், கறுப்பு
நிறம் ஒன்றினாலேயே இளப்பமாக, இரண்டாந்தரமாக நடத்தப் படுகிறநிலையை
எதிர்த்து எப்படி ஒரு மனிதனாக, ஆண்மையுடன் எதிர் கொள்கிறார் என்பது மிக
சுவாரசியமாகப் படைக்கப் பட்டிருக்கிறது. மேன் என்று சொல்லும் போது ஆண்
என்று மட்டுமல்ல ஆண்மையுள்ளவன் என்றும் ஒரு பொருள் இருக்கிறதல்லவா?

Tne Man! ஆண்மையுள்ளவன் மட்டுமே ஆணாக இருக்க முடியும்!அந்த ஆண்மை இங்கே
மிக அழகாக ஒரு கதையாக விரிகிறது.

அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் என்று ஒரு பட்டியல் எழுதினால்,
இந்தப்புத்தகத்துக்கு முதல் வரிசையில் இடமுண்டு!

---------------------

Innamburan Innamburan

unread,
Jan 28, 2011, 10:39:05 AM1/28/11
to thamiz...@googlegroups.com
'இ' படு பிஸி. ஶ்ரீமோர ஃப்ரீ.


2011/1/28 S. Krishna Moorthy <kris...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jan 28, 2011, 10:55:29 AM1/28/11
to thamiz...@googlegroups.com


2011/1/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>

'இ' படு பிஸி. ஶ்ரீமோர ஃப்ரீ.



ஸ்ரீரங்கம் மோகனரங்கன் என்று நூறு தடவை இம்பொஸிஷன் எழுதும். அது என்ன கெட்ட பழக்கம் பெயர் சுருக்குவது? 
:-) 

shylaja

unread,
Jan 28, 2011, 11:00:21 AM1/28/11
to thamiz...@googlegroups.com
இவ்ளோபெரிய பேரை வச்சிட்டா  சுருக்கத்தான் சுருக்குவோம்  !:)
ஷை

2011/1/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

coral shree

unread,
Jan 28, 2011, 11:03:09 AM1/28/11
to thamiz...@googlegroups.com
அதானே.........

2011/1/28 shylaja <shyl...@gmail.com>



--

shylaja

unread,
Jan 28, 2011, 11:06:11 AM1/28/11
to thamiz...@googlegroups.com
ஆமா பின்ன ,இவர் பேரை டைப் செய்தபிறகு பார்த்தா  நடுவிரல்  சுண்டுவிரலாயிடுதே!

2011/1/28 coral shree <cor...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Jan 28, 2011, 11:08:53 AM1/28/11
to thamiz...@googlegroups.com
எனக்குப் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது. கஷ்டமாய் இருக்கிறவர்கள் என் பெயரையோ என்னைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.

2011/1/28 shylaja <shyl...@gmail.com>
--

Astrologer Vighnesh சென்னை

unread,
Jan 28, 2011, 11:15:52 AM1/28/11
to thamiz...@googlegroups.com
ஊசி மிளகாயா காஞ்ச மிளகாயா இல்லை வரமிளகாயா-? குண்டூர்ஆ அ விருதுநகர்ரா
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrovighnesh.com


2011/1/28 shylaja <shyl...@gmail.com>
அட்டடே  சரியான பச்சைமிளகாயாக இருக்கிறீர்களே ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் அவர்களே! 

2011/1/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

shylaja

unread,
Jan 28, 2011, 11:10:55 AM1/28/11
to thamiz...@googlegroups.com
அட்டடே  சரியான பச்சைமிளகாயாக இருக்கிறீர்களே ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் அவர்களே! 

2011/1/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எனக்குப் பெயரைச் சுருக்கினால் பிடிக்காது. கஷ்டமாய் இருக்கிறவர்கள் என் பெயரையோ என்னைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.

coral shree

unread,
Jan 28, 2011, 11:18:42 AM1/28/11
to thamiz...@googlegroups.com
நல்லா கேளுங்க ஐயா, காரம் ரொம்ப அதிகம்.........

2011/1/28 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>



--

Innamburan Innamburan

unread,
Jan 28, 2011, 11:19:11 AM1/28/11
to thamiz...@googlegroups.com
ஸ்ரீரங்கம் மோகன ரங்கன்

2011/1/28 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
ஊசி மிளகாயா காஞ்ச மிளகாயா இல்லை வரமிளகாயா-? குண்டூர்ஆ அ விருதுநகர்ரா

Mohanarangan V Srirangam

unread,
Jan 28, 2011, 11:21:42 AM1/28/11
to thamiz...@googlegroups.com


2011/1/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>

 
ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் x 100 

very good :-) passed in distinction :-) 

coral shree

unread,
Jan 28, 2011, 11:27:30 AM1/28/11
to thamiz...@googlegroups.com
ஸ்ரீரங்கம் மோகன ரங்கம் x 10000

Mohanarangan V Srirangam

unread,
Jan 28, 2011, 11:29:47 AM1/28/11
to thamiz...@googlegroups.com


2011/1/28 coral shree <cor...@gmail.com>

ஸ்ரீரங்கம் மோகன ரங்கம் x 10000


 தப்பு ஃபெயில் மார்க். ரங்கம் இல்லை ரங்கன் 
:-) 
  
இன்னம்பூராரிடம் ட்யூஷன் எடுத்துக் கொள்ளவும் 

Innamburan Innamburan

unread,
Jan 28, 2011, 11:29:20 AM1/28/11
to thamiz...@googlegroups.com
யான் வினாயகனைப்போல் இம்பொஸிஷன் எழுதினேன்: ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் X 1 மிலியன்.

coral shree

unread,
Jan 28, 2011, 11:33:42 AM1/28/11
to thamiz...@googlegroups.com
நன்றி ஐயா.

S. Krishna Moorthy

unread,
Jan 28, 2011, 12:08:44 PM1/28/11
to தமிழ் வாசல்
படிப்புத் திண்ணையில் இம்போசிஷனா? ரொம்ப ரொம்ப அக்கிரமாயிருக்கே!

படிச்சதை, படிச்சதில் பிடிச்சதை யாருமே இம்போசிஷன் எழுதலையே!

:-((

coral shree

unread,
Jan 28, 2011, 12:47:20 PM1/28/11
to thamiz...@googlegroups.com
அருமை.........

2011/1/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
வாத்யார்கிட்ட குட்டு வாங்கறதுக்கு முன்னாடி வீட்டுப் பாடத்துக்கு வந்துட்றது உத்தமம் :-))) 

கொஞ்ச நாளா வில் ட்யூரண்ட் ’வில்நாட் ட்யூரண்டா’ இருந்தார். இப்ப தொடருவோம். 

சார்! சரித்திரத்துக்கும் புவி அமைப்பியலுக்கும் என்ன சம்பந்தம்? 

வானம் உண்டு பூமி உண்டு ஓடு ராஜா 
என் நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா 

என்று ஓடும் மனிதன் ஓடிவந்திருக்கும் மைல்கற்கள் புவி அமைப்பின் சிணுங்கல்களைத் தாண்டித்தான். இது ஆச்சரியமாயில்லையா? 

சார் அதுவரைக்கும் நிலம் இருந்துச்சு. எல்லாம் இப்ப கடலுக்குள்ளாற போயிடுத்து. 

எனக்கு முதல் அனுபவம் பெங்களூர் க்ளைமேட் பயங்கர சில்ல். என் நேரமும் ரெயின் கோட் ஸ்வெட்டர் போட்டுதான் சமாளிப்பு. ஆனால் சில வருஷங்கள் கழித்து அதே பருவத்தில் அதே பெங்களூர் புழுக்கம். ‘இப்ப எல்லாம் மாறிடுத்து’ என்றார் ஷைலஜா. 

மண்டிப் புதர்களாக வளர்ந்த பெரிய மேட்டில் ஆடுகள் மேய்ந்து புளுக்கையிடுகின்றன. ஆட்டிடையன் நிழலாகப் பார்த்து அமர்ந்து பொழுது போக்காக ஏதோ குழி பறிக்கிறான். ஒரு வேளை கழி ஒன்று நட்டு ஆடுகளைக் கட்டி வைத்துவிட்டுப் போகலாம் என்றோ? ஆனால் ஏதோ தட்டுப் படுகிறது. வினோதமான வஸ்துகள். விளைவு 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய நகரம் ஒன்று, நாகரிகப் பரப்பு ஒன்று கீழே ஆடுகள் மேயும் நேர் கீழே புதையுண்டு பல காலங்கள் ஆகிவிட்டன. 

கடலுக்கடியில் துவாரகை. கண்டுபிடித்த பின்னர்தான் மகாபாரதம் வெறும் கதையன்று என்று தெரிய வருகிறது. 

ஆனால் ஒற்றை வார்த்தையில் எழுதுகிறார் வில் ட்யூரண்ட் 

History is subject to geology. 

Generations of men establish a growing mastery over the earth, but they are destined to become fossils in its soil. 

Human history is a brief spot in space, and its first lesson is modesty. 

Geography is the matrix of history, its nourishing mother and disciplining home. 

***


2011/1/28 S. Krishna Moorthy <kris...@gmail.com>
படிப்புத் திண்ணையில் இம்போசிஷனா? ரொம்ப ரொம்ப  அக்கிரமாயிருக்கே!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

S. Krishna Moorthy

unread,
Jan 31, 2011, 9:44:57 PM1/31/11
to தமிழ் வாசல்
ஸ்ரீரங்கம் வி.மோகன ரங்கன் மின்தமிழ் வலைக் குழுமத்தில் சில நினைவுகள்
நன்றிக்கு வித்தாகி என்ற இழையில் எழுதிய ஒரு அனுபவம்.

பத்தி யதிராஜம்மாள்
-------------------------------------

இவர் கவர்னர் அன்று. அல்லது முதல் முதலில் பாராசூட்டிலிருந்து
கீழே குதித்த பெண்மணியுமன்று. இல்லையென்றால் ஆரம்ப கால தமிழ்
எழுத்துக்களில் நேரடியாக தன் பெயரில் போடாமல் எழுதிப் பின்னர்
பிரசித்தமான எழுத்தாளருமன்று. பின்னர் இவர் யார்?

சில வருஷங்களுக்கு முன் நீங்கள் ஸ்ரீபெரும்பூதூர் போயிருந்தால்
நிச்சயம் தெருவில் இவரை அடையாளம் கண்டிருக்க முடியாது. கையில்
தடியூன்றி உடல் செங்குத்துக் கோணத்தில் குனிந்து, குரல்
ஆற்றின் அலைவரிசையை அடைந்தது போல் வருகின்ற வயதான
மூதாட்டியை எப்படி பார்ப்போம்?

ஐயோ பாவம்! பாட்டி ஓரமாகப் போங்கோ!

ஆம் பெண்சமூகத்தையே வெகுகாலம் ஓரமாகப் போங்கோன்னுதான் சொல்லி
ஏதோ ஆங்கிலம் வந்த முகூர்த்தம் அஷ்ட லக்ஷ்மிகளும் திக்விஜயம்
வருகிறார்கள். வயதான மூதாட்டி ஓரமாகத்தானே போகவேண்டும்.
சரிதான். ஏதாவது வண்டி கிண்டி வந்து மோதிடுத்துன்னா! வண்டி
ஓரமா போனா என்னன்னு யோசிக்க இன்னும் பலகாலம் ஆகும்.
அதுவரையில், பெருசோ, பாட்டியோ ஓரமாகப் போகட்டும். இல்லை
சமுதாயத்தில் சில விஷயங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன்
என்கிறது. சமுதாயம் கிடக்கட்டும். நாமே மடத்தனத்தில் ஊறி
ஒருகாலத்தில் கொள்கலனாய் இருந்த தவறுகளை நினைத்தால் 'என்ன
பேச்சு வேண்டி கிடக்கிறது நம்ம பவுசுக்கு? என்றுதான் வெட்கம்
பிடுங்கித் தின்கிறது.

நல்ல வேளை சித்தர் ஒருவர் பாடிவைத்தார். 'வெட்கம் கெட்டு விதி
கெட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்
முக்காடு ஏதுக்கடி'

அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்கிறீர்களா? அதெல்லாம்
பெரியவா சொல்றதுக்கு பலவகையில் அர்த்தம் கொள்ளலாம். ஒரே
அர்த்தம்னு சோனிப்பிச்சான் மாதிரி வாக்கு சொல்வாளான்ன? சித்தர்
இல்லையா? சித்தம் போக்கு என்பதுபோல் நம் சித்தத்துக்கு
ஏற்றாற் போல் பொருள் கொள்ள முடியாமல் போனால் அப்புறம் அவர்கள்
என்ன சித்தர்கள்?

சரி நமது மூதாட்டி விஷயத்துக்கு வருவோம். ஓங்கோலோ நெல்லூரோ
அங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே
கதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான்
டெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அப்பொழுது போயிருக்கும் பொழுது தம்பியின் நண்பருக்குச் சொந்தம்
என்ற வகையில் விவரங்கள் கிடைத்தன. எனக்கு ஒரு கிளரும்
எண்ணம்.
அவர் இவ்வளவு நாள் என்ன கண்டிருப்பார்? போய்ப்
பார்த்தால் பழங்கதைகள் வண்டி வண்டியாய்ச் சொல்லுவார் என்று
தயாராகத்தான்
போயிருந்தேன். ஆனால் முற்றிலும் என்னை அசத்திவிட்டார் மூதாட்டி.

அங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி
திருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில்
பல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம்
கேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத
அர்த்தங்கள்,
நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக்
கொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார்
இந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise
catalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.
இத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான்.
தெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாடிக்கு
ஜீவாது.

அவருடைய அறை எது தெரியுமோ? வாசலில் நின்று பெல்லை
அழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி
கொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர்
வருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி
வந்து போய்க் கொண்டிருக்கப் போகிறது? ஓரமாகத்தான் மூத்த
தலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக்
கொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை.

முதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், சேஷத்வ
போக்யதைகள் அதற்கும் மேற்பட்டு பாரதந்த்ர்ய போக்யதைகள்
என்று அகண்ட
காவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. நான்தான் ஒரு வாயாடி
என்று உங்களுக்குத் தெரியுமே? திரும்பிப் பார்த்தால் அரைநாள்
ஆகிவிட்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள்,
அவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எல்லாம் படிக்காத
அந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத
நினைவோடு கூறுவது எப்படி முடிந்தது?

முதலில் மாதர்கல்வி என்பது என்ன ? இது என்ன? என்றோ
ஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி.
காலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக்
கொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப்
பிரபாவங்களுக்கு ஏது
கல்வெட்டு? கல்வெட்டா? உயிர்க்கட்டாக காலம் தோறும்
தொடர்கிறதே.

இந்த மாதிரி செட்டி குலத்துத் திருவிளக்குகளான பாகவத
அம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த
சுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15
புத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள் அடக்கம் அதில்
ப்ரூப் திருத்தம் 7 பாகவத மூதாட்டிகள். திருத்தத்தை மீறி
எஞ்சிய தவறுகளும் மொத்தம் 7தான்.
பல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால்
போனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை.
இன்று
போனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால்
அங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார்,
ஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு
ஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன்
யதிராஜன் உவப்புக்கு இலக்காகி.

எனக்கு ஒரு நப்பாசை! எப்பொழுதாவது என்னைப்பற்றி 'அதோ அந்த
வாயாடிப் பையன் வந்திருக்கிறான்' என்று சொல்லமாட்டாரா
யதிகட்கிறைவன் திருச்செவி கேட்க என்று.


https://groups.google.com/group/mintamil/msg/6d9e6893c51d090c?hl=en&&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+


-----------------------------------------
படிப்புத் திண்ணையில் காத்திருக்கும்

S. Krishna Moorthy

unread,
Feb 1, 2011, 9:43:21 AM2/1/11
to தமிழ் வாசல்
மின்தமிழ் குழுமத்தில் ஒரு பதினாறு மாதங்களுக்கு முன்னால் படித்ததுதான்,
புது ஹோம் ஒர்க் வருகிற வரை நினைத்துப் பார்க்கலாமே என்று "எது பக்தி"
என்ற இழையைப் படித்துக் கொண்டிருந்தேன். படிப்புத் திண்ணையில் கொஞ்சம்
பார்க்கலாமா?

மின்தமிழ் குழுமத்திற்கு நன்றியுடன் ...........

https://groups.google.com/group/mintamil/msg/0e5245688cd198a1?hl=en&&q=%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

"சில வருஷங்களுக்கு முன்னர் ஒரு தனி வீட்டில் குடியிருந்தேன்.

சுற்றிலும் மரங்கள். வாசலில் கிராதிக்கு உட்பக்கம் மேடைபோல்
குறடு. சைக்கிள் அங்குதான் நிறுத்துவோம். மேலே ஊஞ்சல்
கட்டித்
தொங்க விட கொக்கிகள். ஊஞ்சல் கட்டவில்லை பல வருஷங்களாக.
எனவே குருவிகள் தங்கள் குடும்ப வாழ்க்கையை அங்கே தொடங்கி
குஞ்சு பொறித்து பறக்குமட்டும் பயன் படுத்த கூட்டைக் கட்டின.
கூடு இருந்துகொண்டே இருக்கும். குருவிகள் பேறுகாலத்தில்
வரும் முட்டையிட்டு அடைகாக்கும். நாங்கள் எங்கள் வேலையுண்டு
நாங்களுண்டு என்று போகின்றவர்கள் என்று அதற்கு யார் சொன்னார்கள்?

குருவிக்கூட்டைக் கலைப்பது பாவம் என்று இளகிய மனத்தர் என்று
அதன் பாஷையில் யாராவது தெரிவித்தார்களா? அது தெரியாமல்
அந்தக்குருவிகள் குருட்டாம் போக்கில் கூடு கட்டிக் குடும்பம்
நடத்துகின்றன என்று கூறாதீர்கள். பிரத்யக்ஷம் எனக்கு அதைச்
சுத்தப் பொய் என்று நிரூபித்துவிட்டது. எனவே நான் ஒருபோதும்
அதற்கு மயங்க மாட்டேன். நிச்சயம் பறவை, விலங்கு, பூச்சி,
ஏன் எறும்பு எல்லாமே அறிவில்தான் இயங்குகின்றன என்ற நிச்சயம்
சிறிது இயற்கையில் வாழ்ந்தாலே தெரிந்துவிடும். ஆனால் வகுப்பறை
மேடைக்கு மட்டும் சில கொள்கைகள், சில வாசகங்கள், சில
கோட்பாடுகள். இந்த அபத்தத்திற்கு 'ஒப்புக் கொள்ளப்பட்ட
நெறிமுறைகளின் படி' என்று பெயர். இதிலும் ஒரு காரணம்
இருக்கலாம். இல்லையென்றால் பொய் மலிந்து எங்கும் பூனைக்குறும்பு
ஆகிவிடும் சரிதான்

ஆனாலும் ஓரறிவுயிரே ஈரறிவுயிரே என்று தொல்காப்பியர் ஒண்ணாம்
வாய்ப்பாடு சொல்லிப் பார்த்தாலும் உயிர் எங்கும் அறிவு
இருக்கத்தான் செய்கிறது. விவேகாநந்தர் சொல்வார், ' அதோ
வருகிறது கனவேகத்தில் புகைவண்டி. தண்டவாளத்தில் விரைவில்
சுழலும் அதன் சக்கரங்கள். இன்னும் சற்று இருந்தால் சக்கரம்
ஏறி அந்த எறும்பு நசுங்கியிருக்கும். ஆனால் லாகவமாக எறும்பு
பக்கவாட்டில் நகர்ந்து எங்கு இடைவெளி ஏற்படுமோ அங்கு ஒதுங்கி
தப்பித்து மீண்டும் தன் வழியைத் தொடர்கிறது. அதனிடம்
சுதந்திரம் இருக்கிறது' என்று கூறுவார். உயிர், விடுதலை,
அறிவு -- ஒரு வைரத்தையே திருப்பித் திருப்பிப் பல பட்டைகளில்
தெரியும் ஒளி மாலைகளைக் காண்கிறோம்.

நமது குருவிக்கு வருவோம். குஞ்சு பொறித்து நாட்கள் ஆகிப்
பறக்கப் போகிறது என்றால் எங்களுக்கு முதல்நாளே
தெரிந்துவிடும். கலகல
கல என்று கூட்டில் ஓயாத பயணக் கலகலப்பு இருக்கும்.
send off போலும் என்று பேசிக்கொள்வோம். அப்படி ஒரு சமயம்
ஏதோ அவசரம் காலை கிளம்பி சைக்கிளை எடுக்கச் சென்றேன்.
கூடத்திலிருந்து பக்கத்து சன்னலுக்கு வெளியே சைக்கிள் நிற்கும்.
கதவைத் திறந்தால் ஒரு குருவி வினோதமான முறையில் பாரபோலா,
டம்பல்ஸ் போன்ற பல வடிவங்களில் தன் இறக்கைகளை அதிர்வுற
வீசிய படியே கிழே தரையில் என் கால்கள் நகர வொட்டாமல்
சுற்றிச் சுற்றி வருகிறது. வினோதமாக இருக்கிறது. சத்தம்
கேட்டாலே ஓடிவிடும் பறவை என் எதிரில் கால்களுக்கு அருகில்
என்னைத் தடுப்பதுபோல் வியூகம் போடுகிறது. ஒரு கணம் பொறி
தட்டினாற் போல் உறைத்தது.

அடடா பிள்ளையைப் பள்ளிக் கூடம் சேர்க்கும் 'வித்யாரம்பம்'
சடங்கு நடக்கிறது போலும். இப்பொழுது வராதே என்கிறது என்று.
அப்படியே ரிவர்ஸ்ஸில் பின்னால் வந்து கதவைச் சாத்திவிட்டேன்.
பக்கத்து சன்னலில் நின்று என்ன நடக்கிறது என்று வேடிக்கை
பார்த்தேன். சைக்கிள் ஹாண்டில் பார் மேல், பறக்க முயன்று புது
அனுபவத்தில் நெட்டுக் குத்த விழுந்த குஞ்சு கெட்டியாகப்
பிடித்துக்
கொண்டு அழுந்த உட்கார்ந்திருக்கிறது. அப்பன் பறவை, ஆத்தாள்
பறவை இரண்டும், அவற்றின் குடும்பத்தில் எந்த உறவு முறை
இந்தச்
சடங்கிற்கு முன் நின்று நடத்த வேண்டும் தெரியாது. இரண்டும்
மாறி மாறி குரல் கொடுத்து ஊக்கம் தருகிறது. அல்லது செய்முறை
குறிப்புகள் தருகின்றன. நமக்கு எல்லாமே ஒரே
கிலுகிலுகிலுகிலுதான்.

ஒரு அரை மணி நேரம் நான் மனித உலகிற்கும் பறவை உலகிற்கும்
இடைப்பட்ட உலகில் இருந்தேன். நான் ஏற்கனவே
அறிந்து வைத்திருந்த co-ordinates எல்லாம் அந்த நேரத்தில்
தூரவே நின்றன. பிரத்யக்ஷம், படித்த அறிவைப் புறந்தள்ளி விட்டு
வேறு எங்கோ
கொள்முதல் அள்ளச் சென்றுவிட்டது. குருவியோடு நான் மனத்தொடர்பு
கொண்டதும், அந்தக் குஞ்சின் உபநயனச் சடங்கில் நான்
கலந்துகொண்டதும், ஏற்கனவே எனக்கு கணந்தோறும் பழக்கத்தில்
இருக்கும் படித்த, புரிந்துகொண்ட உலகும் ஒன்றையொன்று
முறைத்துக்கொண்டு பேச்சு இல்லாமல் நின்றன. பழைய உலகம்.
இந்தப் புதிய பார்வையை எந்தத் தட்டில் கொண்டு போய் சொருகி
வைப்பது.?

எல்லாமே அறிவுதான். இல்லை. எதுவுமே என் சொல் பேச்சைக் கேட்க
மாட்டேன் என்கிறது. இது இன்னதுதான் என்று நான் படித்துப்
படித்துச் சொல்லியிருந்தும் இது என்ன? இதை நான் திடுதிப்பென்று
எந்தக் கணக்கில் கொண்டுபோய் வைப்பது? நான் குருவியோடு
பேசினேன் என்றால் நம்பிக்கையாகிவிடும். அல்லது குழந்தைக்
கதையில் வரும் கற்பனையாகிவிடும். அதன் வீட்டுக் குஞ்சு
பெரிசான
நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன் என்றால் நீங்களே என்னைத்
தனியாக பார்த்து 'ரொம்ப படிக்காதீர்கள். அவ்வளவாக
உடம்புக்கு நல்லது இல்லை' என்று அக்கறையாக நல்லது சொல்வீர்கள்.

இல்லை நம் பழைய உலகில் கொள்ளாத ப்ரத்யக்ஷமானாலும் அது
நம்பக் கூடியது அன்று. என் புரையுள் சொருகிவைக்க இடம்
இல்லையென்றால் அது உண்மையில் இருந்தும் இல்லாதது போல்தான்.
மனித உயிர் மனித உடல் மனித வாழ்க்கை இந்த
ரீதியில்தான் தொடக்கமுதல் நான் மூளையில் தகவல் கவாண்களைச்
சட்டம் கட்டி வைத்திருக்கிறேன். அதில் கொள்ளாதது ஏதோ ஃப்ரீக்
என்று புறம் தள்ளப்படுகிறது. இங்குதான் எனக்கு ஒரு ஐயம்
வருகிறது. பக்தி என்பது பழைய உலகில் புதிய பார்வையோ?
ஏனெனில் இந்தச் சம்பவத்தைப் பாருங்கள். எனக்கு ஏற்பட்ட
ப்ரத்யக்ஷ அனுபவம் இல்லையேல் இதற்கு பெரிதும் மதிப்பு
அளித்திருக்க மாட்டேன். ஆனால் இப்பொழுது இந்த சம்பவத்தில் மனம்
தோய்ந்து சுழல்கிறது. ----

சேது ஸ்நாநம் செய்ய பராசர பட்டர் போனார். மீளும் போது
பாதிரிக்கொடி அருகில் பொழுது சாய்ந்துவிட்டது. அக்கம் பக்கம்
தங்கிச் செல்ல வீடுகள் இல்லை. ஒரு வேடன் குடிசையில் சென்று
சிறிது அமர இடம் பார்த்தார். வேடன் தான் அமர்ந்திருந்த
ஆஸநத்தையும் தந்து கட்டிலைத் தட்டிப் போட்டு அமரச் சொல்லி
உபசரித்தான். பட்டர் யோசித்தார். இவனுக்கு நம்மைப் பற்றித்
தெரியாது. நாம் ஏதோ இவனுக்குச் செய்தோம் என்று பதிலுக்கு இவன்
இதைச் செய்யவில்லை. தன்னை அண்டி வந்தான் ஒருவன் என்ற ஒரே
காரணத்திற்காக இதைச் செய்தான் ஆனான். அப்படியென்றால் பகவானுடைய
வீடு இந்த உலகம். இங்கு ஒண்ட நாம் வந்துவிட்டோம். நம்மை
முன்பின் தெரிந்தவன், உறவு, பிடித்ததைச் செய்தவன் என்ற எந்த
காரணத்தையும் முன்னிடாமல் தன் வீட்டை அண்டி வந்தான் என்ற ஒரே
காரணத்திற்காக அந்த பரமசேதனனும் நம் நன்மை செய்யத்தானே
வேண்டும். என்ன நினைத்திருக்கின்றானோ? என்று கூறிக்கொண்டார்.

சரி போதுபோக்காக இருக்கட்டும் என்று அவனிடம் இன்று
வேட்டையாடப் போனியாப்பா? ஏதாவது விசேஷம் உண்டா? என்று
வினவினார். வேடன் சொல்லுகிறான்: --

'சாமி! ஒரு முசல் குட்டியைப் பிடிச்சேனுங்க. பிடிச்சிக்கிட்டு
பொட்டைவெளியில வாரேன். பார்த்தா தாய்முசலு அந்த எரிக்கிற
பொட்டை வெளின்னு கூட பார்க்காம என் முன்னாடி நெடுஞ்சாண்கிடயா
விழுந்து அடம் பண்ணுது. எனக்கு என்னமோ பண்ணிடிச்சி சாமி!
பேசாம அந்தக் குட்டிய உட்டுட்டு வந்துட்டன்' என்றான்.
பட்டர் முகத்தில் ஈயாடவில்லை. அப்படியே உறைந்து போய்
அமர்ந்திருந்தவர் நெடுநேரம் கழித்துக் கூறுகிறார்:--

இந்தச் சம்பவத்தில் பொதிந்திருக்கும் குணாதிசயங்கள் ஒரு முசல்
தன் குட்டியைக் காப்பாற்ற சரணாகதியை அனுஷ்டிக்கிறது. கொடூரமே
வாழ்க்கையாக உடைய வேடன் சரணமடைந்த ஓருயிரைத் தன் உணவை
விட்டுக்கொடுத்தும் காப்பாற்றுகிறான். இந்த இரண்டு குணநலன்களுமே
பரம சேதனனாகிய பகவான் விஷயத்தில் சம்பந்தப் பட்ட குணங்கள்.
அவ்வாறுதான் பிரமாணங்கள் தெரிவிக்கின்றன. கீதையில் கண்ணன் 'மாம்
ஏகம் சரணம் வ்ரஜ' என் ஒருவனையே சரணமாகப் பற்று. என்று
பிரபத்தியாகிய சரணாகதியை உபதேசித்தான். அவ்வாறு சரணாகதி செய்
என்று இந்த முசலுக்கு யார் உபதேசித்தார்? ஸ்ரீராமாயணத்தில்
'அரி ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய: க்ருதாத்மநா' சரணமடைந்த
விரோதியைக்கூட ஒருவன் தன் பிராணனை விட்டும் காப்பாற்ற
வேண்டும் என்று சரணாகதி அடைந்தவனைக் காக்க வேண்டிய
பொறுப்பு பற்றிக் கூறியிருக்கிறது.

சர்வசக்திமானாகிய பகவான் அன்றோ அனைத்து உயிர்களையும்
காக்கவல்லவன். அவ்வாறு சரணாகதி அடைந்தவர்களைக் காப்பது கடமை
என்று இந்த வேடனுக்கு யார் உபதேசித்தார்கள்? எங்கோ ஒரு
காட்டில் யாரோ ஒரு வேடனுக்கும் முசலுக்கும் இடையில்
தன்னியல்பாக பிரபத்தி பலித்ததே இந்த விசேஷம்தான் என்ன?
இயற்கையே சரணாகதிக்குத் தன் போக்கில் பிரமாணம்
சொல்லுகிறதோ?----

என்று நெடு நேரம் சிந்தை வயத்தவர் ஆனார் என்று வார்த்தாமாலை
அந்தத் திருக்கணத்தை ஏடுபடுத்தியிருக்கிறது.

அறிவு, மனத்தொடர்பு, உள்ள அதிர்வு, உயிர், உயிருக்கு உயிர்
உண்டாகும் உள்ளப் பரிமாற்றம், பக்தி இவையெல்லாம் என்ன?
பழைய
உலகினில் புதிய பார்வைகளின் விடியல் என்று கவிதை போல் ஏதோ
எழுதிப் பார்க்கிறது என் அந்தரங்கம். "

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 2, 2011, 5:07:21 AM2/2/11
to thamiz...@googlegroups.com
இடையிடையே காலி இடங்களைக் குறித்திடும் கட்டங்கள் படிப்பதற்குக் சிறிது கஷ்டம் கொடுத்தாலும் சொல்லிடும் விஷயம் நன்றாக இருந்ததால் படித்து முடித்தேன்.  குருவிக் குஞ்சுகளையும் முயலையும் வைத்துக் கொண்டே என்ன ஒரு போதனை!

2011/2/1 S. Krishna Moorthy <kris...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.




--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

S. Krishna Moorthy

unread,
Feb 2, 2011, 5:23:08 AM2/2/11
to தமிழ் வாசல்
இத்தனைக்கும் டெக்ஸ்ட் எடிட்டரில் சரிசெய்து தான் அனுப்பினேன் சார்!
வலைக் குழுமங்களில் போஸ்ட் செய்வதில் இது ஒரு சிக்கல்!

சரணாகதி, பிரபத்தி என்பது மிக நுட்பமான விஷயம். மேம்போக்காகப்
பேசிவிட்டுப் போய்விடுகிற ஒன்றில்லை. மின்தமிழில் அரங்கனார் காலக்ஷேபம்
கொஞ்சம் அருமையாகவே நடந்த நேரத்தில் நிறையவே அனுபவித்திருக்கிறேன்.

இங்கேயும் அந்த மோகனத்தமிழ் பெருக்கேடித்து ஓடட்டுமே என்று தான் ஒரு
ஆவலாதியோடு காத்திருப்பது!

எழுத்துப் பிழைகளை,டெக்ஸ்ட் குளறுபடிகளைக் கொஞ்சம் மன்னித்துக்
கொள்ளுங்கள். இழையில் பேசப்படும் விஷயங்கள் தான் பெரிது.

-----------------------
அன்புடன்

S. Krishna Moorthy

unread,
Feb 2, 2011, 7:52:58 AM2/2/11
to தமிழ் வாசல்
பல நாளாகக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருந்த புத்தகம் திடீரென்று
கண்ணில் தென்பட்டது. என்னிடம் உல்ள புத்தகங்கள் பெரிய மந்திர மூலிகை
மாதிரி. அவற்றுக்கா மூட் இருந்தால்தான் கண்ணில் படும்.

அப்படி ஒரு புத்தகம் திரு டி ஆர் குருஸ்வாமி என்னும் ‘மஹி’ என்பவருடைய
‘தமிழ் வளர்த்த தெலுங்கர்கள்’ என்னும் புத்தகம். (ஸ்ரீராஜேஸ்வரி புத்தக
நிலையம்,டிசம்பர், 1998)

நினைவுகள் அலை மோதுகின்றன. பாரதி சுராஜ் வீட்டில் திருலோக சீதாராம் பற்றி
என்னைக் கொண்டு ஒரு நிகழ்த்துகலைப் பிரசங்கம் ஏற்பாடு
செய்திருந்தார்.குறிப்பாக ஒரு பத்து பேர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து.

அது எதற்கு என்றால், அடுத்த வாரம் டி நகர் பாண்டி பஜார் ஒரு டாக்டரின்
வீட்டில் நடக்கக் இருந்த கவியரங்கத்தின் போது திருலோகத்தைப் பற்றி நான்
ஒரு உபந்யாஸம்செய்ய வேண்டும். அதற்கு இது அப்பிடைஸர்.

அப்பொழுதுதான் இந்த ‘மஹியை’ப் பார்த்தேன். பல நாளாகத் தெரிந்த ஒருவர்
அப்பொழுதுதான் முக ரீதியாக அறிமுகம் என்னும்படியாக நேசம் வளர்ந்தது.

’அப்படியே திருலோகத்தைக் கேட்பதுபோல் இருக்கிறது. அதே பந்தா லாகவம். அதே
வேகம். எப்படி இது ? ஏதாவது உறவா? எப்படிப் பழக்கம்?’

இந்த வியப்பு ‘மஹி’க்கு என்னிடம் அவரது கடைசி காலம் வரை மறையவில்லை.

சேக்கிழார் அடிப்பொடி திரு டி என் ஆருக்கு திருலோகம் செய்த உபதேசம் ---

‘வயதானவர்களுடன் ஸ்நேகம் வைத்துக் கொள்ளாதே. கூடியமட்டும் சமவயதுக்
காரரகளுடன்பழகு. இல்லையேல் வாழ்க்கையில் துக்கம்தான் அதிகமாகும். இது
நான் கடைப்பிடிக்காது கஷ்டப்படுகிறேன்.’

இந்த உபதேசம் கடைப்பிடிக்க வேண்டிய உபதேசம் அன்று. இதுதான் வாழ்க்கை.
மஹியை நினைத்து இன்று பெருமூச்சு வருகிறது.

போய்ப்பார்க்கலாம் என்று எங்கும் உரிமையோடு போகமுடியவில்லை. பலபேர்
கிளம்பிச் சென்றாகிவிட்டது.

சமவயதுக் காரர்களுடன் பழகியிருக்க வேண்டும். என்ன செய்வது?

மஹியைப் பார்க்கும் போதெல்லாம் என் கவிதைகளைச் சொல்ல வேண்டும்.
திருலோகத்தின் கவிதைகளைச் சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறையும் ஏதாவது பழைய
ஞாபகம் வரும். முத்தான சம்பவம். மீண்டும் அந்தக் காலத்தில் வாழ்வார் மஹி.
எனக்குப் பெரும் லாபம். நானும் பெரும் சுக்கான் செட்டி. பெரும் லாபம்
இல்லாத இடத்தில் ஸ்நேகம் வைத்துக் கொள்வதில்லை. பாரதி குடும்பத்திடம்
திருலோகம் வைத்திருந்த பொய்யற்ற
பாசத்தைப் பற்றி அடிக்கடி சொல்வார்.

நல்ல வேளை. வாயால் சொன்னதை எழுத்திலும் வடித்துவிட்டுப்
போயிருக்கிறார்.மேற்படி ’தமிழ் வளர்த்த தெலுங்கர்கள்’ நூலில் பக்கம் 23,
24,25 முக்கியமான பகுதி. அதை மட்டும் இங்கேயே தட்டச்சிவிடுகிறேன்.

முழுநூலையும் மின்மேய்ந்து வான்பரணில் ஏற்றும் புண்ணியவான்கள் யாரோ?
அதற்கான பூர்வாங்கம் அந்த ஹரிக்கே வெளிச்சம்.

பக் 23,24,25

“அது சமயம் அமரர் கல்கி எட்டயபுரத்தில் பாரதிக்குக் கட்டிய பாரதி மண்டபத்
திறப்புக்கு சீதாராமுடனே பயணித்தேன். உடன் கௌசிகன், தி ஜானகிராமன்
வந்திருந்தார்கள். அங்கு எனக்குப் பல எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள்.
என்னிடம் காமிரா இருந்த காரணத்தால் அனைவரையும் போட்டோ பிடித்து வைத்துக்
கொண்டேன்.

மஹாகவி பாரதியின் ‘மானஸீக புத்ரன்’ என்று தம்மை அறிமுகம் செய்து கொள்ளும்
சீதாராம் அங்குதான் செல்லம்மாள் பாரதியைச் சந்தித்தார். பாரதி மண்டபத்
திறப்பு விழா லக்ஷ ரூபாய் செலவில் கோலாஹலமாகக் கொண்டாடப்பட்டது.
அனைவருக்கும் சாப்பாடு,அதற்கான டிக்கெட்டுகள் தபாலில் முதலிலேயே
வந்திருந்தன. சாப்பிட்டுவிட்டு ஹாய்யாக இரண்டு மணி சுமாருக்கு சீதாராம்,
ஜானகிராமன், மகரம், கௌசிகன், நான்,குஹப்பிரியை, ஜானம்மாள், வை மு
கோதைநாயகி அம்மாள் கோஷ்டியாகப் பாரதி பிறந்த புனித ஸ்தலத்தைத் தரிசிக்கச்
சென்றோம்.

பாரதி பிறந்த வீட்டில் பாரதி பிறந்த அறையின் பக்கத்தில் வரிசையாக,
செல்லம்மாள் பாரதியுடன், மகள் தங்கம்மாள் பாரதி, பேத்திகள் அனைவரும்
உட்கார்ந்திருந்தார்கள். “அம்மா, சாப்பிட்டீர்களா?” என்று கேட்க
“அனுப்புகிறேன் உட்கார்ந்திரு” என்றார்கள். “இன்னம் ஏதும் வரவில்லை.
தண்ணீர்கூட அக்கம்பக்கம் அறிமுகம் இல்லை. உட்கார்ந்திருக்கிறோம்”
என்றார்கள் செல்லம்மாள்.

உடனே வை மு கோதைநாயகி, குகப்பிரியை ஆகியோர் குடம் இரவல் வாங்கி, தண்ணீர்
சேந்திக் கொடுத்ததுடன் அரண்மனையில் தங்கியிருந்த அமரர் கல்கிக்குச்
சொல்லியனுப்பி சாப்பாடு வரவழைத்தார்கள். அப்போது சீதாராம் சொன்னார்.
“அம்மா அக்காளையும் அழைத்துக்கொண்டு திருச்சிக்கு வந்துவிடுங்கள்” என்று.
அப்போது செல்லம்மாள் கடையத்தில் இருந்தார்கள்.

சீதாராம், அ வே ரா கிருஷ்ணஸ்வாமி ரெட்டியாரின் வேண்டுகோளின்படி திருமதி
செல்லம்மாள் பாரதி, மகள் தங்கம்மாள் பாரதி, பேத்தி பானுமதி, லலிதா,
விஜயா ஆகியோர் திருச்சிக்கு குடிபெயர, சீதாராம் அப்போது அவர் வசித்து
வந்த குஜிலித் தெருவிலேயே பாரதி குடும்பத்துக்கு வீடு பார்த்துக்
கொடுத்தார்கள்.

லலிதா விஜயாவின் கல்வி தொடர்ந்தது. லலிதாவுக்கு சாவித்திரி
வித்யாசாலையில் ஆசிரியர் உத்யோகம் செய்துவைத்தார்.
லலிதாவின் திருமணமும் திருச்சியில் நடத்தினார் சீதாராம் நாங்கள்
தொண்டர்கள் ஆனோம். “

----------------

என்னத்தைச் சொல்வது? அது ஒரு யுகம்.
***

ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் மின்தமிழில் கதிர்-முரண்சுவை-செல்லம்மா என்ற
இழையில் ஐந்து மாதங்களுக்கு முன் பகிர்ந்து கொண்டது,

மின்தமிழ் குழுமத்துக்கு நன்றியுடன்
https://groups.google.com/group/mintamil/msg/8fe95db2457ebdfc?hl=id
---------------------------------------
படிப்புத் திண்ணைக்கு மட்டம் போடாமலும்
எதற்காக என்பதில் கோட்டை விடாமலும்
காத்துக் கொண்டிருக்கும்--

S. Krishna Moorthy

unread,
Feb 4, 2011, 4:37:41 AM2/4/11
to தமிழ் வாசல்
காலிக் கோப்பையைப் பற்றி இந்த இழையில் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோ
இல்லையா! சுவாமி விவேகானந்தர் கோப்பையைப் பற்றி எழுதிய ஒரு கவிதையைப்
பார்க்கலாமா? படிப்புத் திண்ணையில் படிப்பது நின்று போய்விடக் கூடாது!!

Here is a small poem by Swami Vivekananda which is very adorable

THE CUP
-------
This is your cup — the cup assigned
to you from the beginning.
Nay, My child, I know how much
of that dark drink is your own brew
Of fault and passion, ages long ago,
In the deep years of yesterday, I know.

This is your road — a painful road and drear.
I made the stones that never give you rest.
I set your friend in pleasant ways and clear,
And he shall come like you, unto My breast.
But you, My child, must travel here.

This is your task. It has no joy nor grace,
But it is not meant for any other hand,
And in My universe hath measured place,
Take it. I do not bid you understand.
I bid you close your eyes to see My face.

Swami Vivekananda

Complete-Works

( Volume 6 - Writings: Prose and Poems)

--------------------------------------------

Innamburan Innamburan

unread,
Feb 4, 2011, 5:00:00 AM2/4/11
to thamiz...@googlegroups.com
'...I know how much

of that dark drink is your own brew
Of fault and passion...'.

How true! The Eternal Truth.
I

2011/2/4 S. Krishna Moorthy <kris...@gmail.com>:

nagarajan aswatharao

unread,
Feb 4, 2011, 5:45:27 AM2/4/11
to thamiz...@googlegroups.com
2011/2/4 S. Krishna Moorthy <kris...@gmail.com>
காலிக் கோப்பையைப் பற்றி இந்த இழையில் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோ
 திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களே இதன் தமிழாக்கம் தரக்கூடாதா ?

பாப்பாரப்பட்டிநாகராஜன்

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 5, 2011, 8:19:35 AM2/5/11
to thamiz...@googlegroups.com
இதோ தமிழாக்கம் செய்திட என் முயற்சி.

இந்தா இதோ உன் கோப்பை

இந்தா இதோ உன் கோப்பை                                               உனக்கே என்றே அளித்த கோப்பை                                         இல்லை கண்ணே உள்ளே இருக்கும் குழம்பி                                    பல நாள் முன்னே நீயே செய்த                                              தவறும் தடுமாற்ற முந்தான்


இதுதான் உந்தன் பாதை                                                  கடந்திடல் வேண்டும் இதை நீ                                               வழியோ கடினம் தேவை கவனம்                                          வைத்தேன் அதனில் கற்களும் கஷ்டமும்                                 நண்பனுக் களித்தேன் நல்லதோர் பாதை                                     வந்தே அடைந்தா னவ னென்னை                                          கஷ்டம் எதுவும் கண்டிடாதே ஆயினும்                                    கண்ணே நீ தான் கடந்திடல் வேண்டும்                                      தனியே உந்தன் பாதை தனை


இப்பணி உன் பணி  இருக்கா திதில்                                    மகிழ்ச்சியும் மற்றவர் கருணையும்                                      இருப்பினும் கண்ணே இது உந்தன் பணி                                   எடுத்திடு உன் கையில் இதை நீ                                        இவ்வுலகில் அளந்தே வைத்துள்ளேன்                                  அவரவர்கென ஓர் இடம்                                                  


எடுத்திடு கையில் உன் பணி                                                கட்டாயம் செய்ய வில்லை நான்                                         கண்களை மூடிக்கொள் 

காண்பாய் என்னை நீ


(மூலம் சுவாமி விவேகான்ந்தர்)

  


2011/2/4 nagarajan aswatharao <pauparap...@gmail.com>

Natrajan Kalpattu Narasimhan

unread,
Feb 5, 2011, 8:20:49 AM2/5/11
to thamiz...@googlegroups.com
புரியவில்லை எனக்கு வரரிகள் ஏனிப்படி வந்துள்ளன என்று!

2011/2/5 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Feb 5, 2011, 9:49:40 AM2/5/11
to தமிழ் வாசல்
//புரியவில்லை எனக்கு வரரிகள் ஏனிப்படி வந்துள்ளன என்று! //
சுடோகு மாதிரி எதையாவது விளையாடிக் கொண்டே தமிழாக்கம் செய்தீர்களோ
என்னவோ!!

:))))
-------------------------
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி


On Feb 5, 6:20 pm, Natrajan Kalpattu Narasimhan <knn1...@gmail.com>
wrote:

S. Krishna Moorthy

unread,
Feb 5, 2011, 10:03:34 AM2/5/11
to தமிழ் வாசல்
Top writers join National Library Action Day
Phillip Pullman and Mark Haddon fight against closure of libraries.


By Martin Chilton, Digital Culture Editor 1:03PM GMT 04 Feb 2011

3 Comments

Best-selling authors Mark Haddon and Phillip Pullman will be among a
host of writers, musicians, poets and illustrators joining National
Library Action Day tomorrow to fight for the future of Britain's
libraries.

More than 450 libraries are facing closure because of public spending
cuts and Haddon, author of The Curious Incident Of The Dog In The
Night, said: "Libraries are being destroyed to save a banker’s bonus”.

Events and protests are being co-ordinated online and through
facebook. A "carnival of resistance" will feature more than 40 library
"read-ins" scheduled in a co-ordinated protest over the threatened
closures.

Among those joining the protests will be Pullman, Haddon, Julia
Donaldson, author of The Gruffalo, singer Billy Bragg, broadcaster
Anna Ford, actress Susan Penhaligon, actor Ralph Ineson, author and
illustrator Hannah Shaw, musicians Sly and Reggie, children's writer
Julia Golding, and authors Mary Hoffman, Malcolm Rose, along with
Glastonbury founder Michael Eavis.

Pullman, author of the triology of fantasy novels His Dark Materials,
gave an impassioned speech defending Oxfordshire libraries (20 of the
43 public libraries in that county face closure), in which he said:
"Leave the libraries alone, they are too precious to destroy. I love
the public library service for what it did for me as a child and as a
student and as an adult. I love it because its presence in a town or a
city reminds us that there are things above profit, things that profit
knows nothing about, things that have the power to baffle the greedy
ghost of market fundamentalism, things that stand for civic decency
and public respect for imagination and knowledge and the value of
simple delight."

இன்னும் படிக்க .......

http://www.telegraph.co.uk/culture/books/booknews/8303074/Top-writers-join-National-Library-Action-Day.html

சற்றுமுன் வந்த செய்தியாக சுடச் சுட கார்டியன் நாளிதழில் படிக்க.....

Writers speak up over plans to close 450 libraries

Mass shhh-in and flashmob book readings as coalition plans for the
'NHS of the mind' are challenged

* Vanessa Thorpe
* guardian.co.uk, Saturday 5 February 2011 14.03 GMT

Authors at the Scottish Parliament protesting against planned cuts to
library services included Julia Donaldson, pictured holding a petition
with protest organiser Theresa Breslin. Photograph: Scott Taylor/
www.universalnewsandsport.com

Arts and Media Correspondent

Protests against the planned closure of more than 450 library services
were staged today. Library users, authors, parents and children took
part in "read-ins" and demonstrations at libraries in South Yorkshire,
Lancashire, Gloucestershire, Dorset and in Oxfordshire, where 20 of
the 43 libraries still running are earmarked for withdrawal of funds.

TV presenter Kirsty Young, musician Billy Bragg and literary stars
such as Philip Pullman, Colin Dexter, Mark Haddon, Kate Mosse and
Julia Donaldson were involved in Save Our Libraries events.

விரிவாகப்படிக்க......

http://www.guardian.co.uk/books/2011/feb/05/library-closures-coalition-cuts-writers-protest

இங்கே உள்ளூர் நிலவரத்தோடு பார்த்தால், இந்த செய்திகள் கொஞ்சம் ஆறுதல்
தருவது போல இருக்கிறது.

புத்தகக் கண்காட்சிகள் அங்கங்கே நடக்கும்! பதிவர்கள் கண்காட்சிக்குப்பாய்
வந்த கதையை எத்தனை ஆயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கினேன் என்பதை
சொல்லிவிட்டு, கண்காட்சி கேன்டீனில் சுடச் சுட போண்டா வடை போலி
சாப்பிட்டதைப் படிக் கதைப்பார்கள். ஒப்புதல் வாக்குமூலமாக, போன வருடம்
வாங்கின புத்தகங்களையே படிக்கவில்லை என்றும் சொல்வார்கள்.

நூலகங்கள், நூலகங்களின் அருமை பற்றி யாருக்குக் கவலை?
நமக்குப் பக்கத்தில் நூலகங்கள் இருக்கிந்ட்ரநவாழ், முறையாக
இயங்குகின்றனவா என்பதே நிறையப்பேருக்குத் தெரியாது!

படிப்புத் திண்ணையிலாவது இந்த செய்தியைப் போட்டு வைக்கலாம்!
ஏதோ ஒரு நாள், நம்மூரிலும், இதுமாதிரி நடக்கும் என்ற நப்பாசையுடன்!!

----------------------------------

S. Krishna Moorthy

unread,
Feb 5, 2011, 10:55:13 AM2/5/11
to தமிழ் வாசல்
http://www.youtube.com/watch?v=2f9HLfxgyvg&feature=related

நூலகங்களைக் காப்பாற்ற ஒரு உள்ளூர்க் குழு இங்கிலாந்தில் எப்படிப்
போராடுகிறது என்பதை சொல்லும் ஒரு சிறிய வீடியோ மேலே சுட்டியில்!

Many users spoke of their upset at the possible loss of the local
libraries, Mary Carter, aged 59, from Astley Bridge said: “Five
generations of my family have used the library.

“I use it and when I was younger I used it do my homework. To take
away that pleasure and happiness from families is criminal.”

She added: “Libraries are a lifeline for the community.”

Others including Alwynne Cartmell of the Bolton branch of the National
Union of Teachers said the action would set a dangerous precedent for
the country’s heritage and warned museums could be next as well as
impacting on education standards in Bolton.

Seven-years-old Georjia Tighe from Heaton said: “I am here to help
save the libraries. Libraries are very important they have books and
information. I will be very upset if they close.”

http://www.theboltonnews.co.uk/news/8835713.Protesters_gather_in_town_square_to_save_Bolton_s_libraries/

நூலகங்களை, நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி இழுத்து மூட
பிரிட்டனில்அரசு உத்தேசித்திருப்பதற்கு எதிர்ப்பை, நூலகத்தைப்
பயன்படுத்தும், நேசிக்கும் ஏழுவயதுப் பெண் உள்ளிட்டு, இப்படி
வெளிப்படுத்தி வருகிற செய்தி, போல்டன் என்ற இந்த இடத்தில் மட்டுமில்லை,
பரவலாகப் பலபகுதிகளிலும் இருந்து வருவதை இணையச்செய்திகள் சொல்கின்றன!

நூலகங்களை மதிப்போம்! வாசிக்கும் வழக்கத்தை ஊக்குவிப்போம்!

S. Krishna Moorthy

unread,
Feb 7, 2011, 7:40:22 AM2/7/11
to தமிழ் வாசல்
தடுப்புச் சுவர்கள்! இது கவிதை நேரம்!

சில நேரங்களில், நல்ல எழுத்து, கவிதை மாதிரி ஒரு ஆறுதலான உற்ற துணை
எதுவுமே இருக்க முடியாது! சோர்ந்து போன மனதுக்கு ஆறுதலாகவும்,
வாழ்க்கையின் நிதர்சனங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் நல்ல
எழுத்து, கவிதைஅமைந்துவிடுவதுண்டு.

பரபரப்பான, அல்லது பதட்டமான மனநிலையில் இருந்து விடுபட்டுக் கொஞ்சம் ஆற
அமர யோசித்து, வாழ்க்கையை உள்ளது உள்ளபடிக்கே புரிந்து கொள்ளவும்,
அனுபவிக்கவுமான தருணம் இது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது,
ஒருதோழரின் காணாமல் போய், மரணமான செய்தி, அத்தனையையும் புரட்டிப்
போட்டு விட்டது. மறந்து விட்டதாக அல்லது விலகி வந்து விட்டதாக நினைத்துக்
கொண்டிருந்தவை எல்லாம் நெஞ்சின் அலைகளாய், கடந்த ஒரு வாரமாகவே என்னை
அலைக்கழித்துக் கொண்டிருந்தது உண்மை. அலைக்கழிப்பில் இருந்து விடுபட, ஒரு
நல்ல கவிதை, சில சிந்தனைகளையும் விதைத்துவிட்டுப் போனதாகவும் ஆனது.

ராபர்ட் ஃப்ராஸ்ட் ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய Mending Wall
என்றொரு கவிதை! ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம்
கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"சமீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல
வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன" என்று
சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து
கொள்ளவேண்டும் என்று தான் விரும்புகிறேன்."

கவிஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு
விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில் ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி
அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள்
சொல்கிறார்கள். நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும்
இதுவாகத் தான் இருக்கும். தப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும்
கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதை இன்னமும் தொடர்ந்து எழுப்பிக்
கொண்டு தான் இருக்கிறது!


Something there is that doesn't love a wall,
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

என்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப்
பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில்
கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி அனுபவத்தைச் சொல்பவனும்,
அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு,
என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று
கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல
அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'


கவிஞருடைய வாதம் எல்லாம் இது தான்! ஏதோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று
இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது!
கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே
இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good
neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.

கவிதையில் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அவரவர் தங்களுடைய
அனுபவங்களுக்குத் தகுந்த மாதிரி அர்த்தம் செய்து கொள்ளவேண்டியது தான்!

சுவர் எழுப்பினால் பக்கத்து வீட்டுக்காரன் நல்லவனாக அமைந்து விடுவானா?
சீனாவின் மிகப் பெரிய நெடுஞ்சுவர், அதற்கு பக்கத்து நாடுகளைத் தேடித்
தந்ததா? சுவரைத் தாண்டியும் ஆக்கிரமிக்கிற சீனர்களுடைய குணத்தை அது
மாற்றி விட்டதா?

"சுவரைக் கட்டுகிறபோது, எதை அதற்குள்ளாக, எதை அதற்கு வெளியே கட்டுகிறேன்
யாரை வெறுத்து செய்வதற்காக என்று கேட்டுக் கொள்வேன். அதற்குள், சுவர்
எழும்புவதை விரும்பாத ஏதோ ஒன்று இருக்கிறது. சுவர் விழுந்துவிடுவதையே அது
விரும்புகிறது."
என்று கவிஞர் சொல்லும்போதே, அண்டைவீட்டுக்காரர் சொல்கிறார், "நல்ல
வேலிகள் நல்ல அண்டைவீட்டுக் காரர்களை உருவாக்குகின்றன."

மேற்கு, கிழக்கு என்று இரண்டாக பெர்லின் துண்டிக்கப் பட்டிருந்த நிலையில்
அமெரிக்க அதிபர் கென்னெடி, மேற்கு பெர்லின் நகரில் இந்தக் கவிதை வரிகளைக்
குறிப்பிட்டுச் சொன்னபோது, மேற்கு ஜெர்மனி ஆரவாரித்தது. பெர்லின்
தடுப்புச் சுவர் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை, அது விழுந்துவிட
வேண்டும் என்று விரும்பியதைக் காட்டிய அதே நேரம், கிழக்குப் பகுதியிலும்
கூட இந்தக் கவிதை, Something there is that doesn't love a wall என்று
ஆரம்பிக்கும் முதல் வரியை மட்டும் நீக்கப்பட்டு பிரசுரமாகிப்
பிரபலமுமானது. அங்கே Good fences make good neighbors என்ற வரி அன்றைய
மனோநிலைக்குப் பொருத்தமாக இருப்பதாகக் கொண்டாடப்பட்டது.

இரண்டு எதிரெதிரான மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பார்க்கலாம்!
அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில்
தொக்கி நிற்கிறது.

என் மகன் சிறு பையனாக இருந்த நேரம், அனேகமாக யூகேஜி அல்லது முதல்
வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தருணம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

என்னுடைய மகனும், அவனுடைய பள்ளித் தோழனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
ட்ரெயினைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், என் மகன் கொஞ்சம் உரக்கவே
குரல் கொடுக்கிறான், "அது இல்லடா ட்ரெயினு..! எங்க மாமா ஜீவவாடா
போனாங்களே அதாண்டா ட்ரெயினு!"

(அப்போது, அவனுடைய தாய் மாமன் விஜயவாடாவில், அமெரிக்கன் ரெமடீஸ்
மருந்துக் கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்த தருணம், அவனை வழியனுப்ப
மருமகன் ரயில்வே ஸ்டேஷனுக்குப்போய்ப் பார்த்த ட்ரெயின் மட்டும் தான்
அய்யாவைப் பொறுத்தவரை ட்ரெய்ன்! மத்ததெல்லாம் இல்லை!) அறியாத வயசு,
சின்னப் பசங்க தான் இப்படி என்று இல்லை!

இதே மாதிரித் தான் புதிய ஏற்பாட்டில், பிலாத்து மன்னனிடம், உண்மையைப்
பற்றிப் பேசப் போக, அவன் பரிசேயர்களிடம் ஏளனமாகவே கேட்ட கேள்வி! "உண்மை!
யாருடைய உண்மை? என்னுடையதா அல்லது உன்னுடையதா?"

இப்படித் தான் ஒவ்வொரு விஷயத்திலுமே ஒரு குறுக்குச் சுவர் அல்லது
திரையைக் கட்டிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம்! இருள் மூடிக்
கிடக்கும் மனம் வெளுப்பதெப்போது ? குறுக்கும் சுவர்கள் விழுந்து பட்டு,
உலகம் உயர்வதும் எப்போது?

Mending Wall! இந்த லிங்கில் முழுக் கவிதையையும் படிக்கலாம்!

http://writing.upenn.edu/~afilreis/88/frost-mending.html


---------------------------
மனித மனங்களில் ஏதோ ஒருபகுதி தடுப்புச் சுவர் இருப்பதை விரும்புகிற அதே
நேரத்தில் இன்னொரு பகுதி அது இடிந்து விழுவதை விரும்புவதையும்
காண முடிகிற

Jeevaa KS

unread,
Feb 7, 2011, 8:34:46 AM2/7/11
to thamiz...@googlegroups.com
நல்ல கவிதை. ஆனால் ஆங்கில மொழி அல்லது பிற மொழிக் கவிதைகளை உள்வாங்கி அதை நம் மொழியில் வெளிப்படுத்துவது என்பது  சிக்கலான ஒன்று.  இது போல ஒன்று  எப்போதோ நண்பர் பகிர படித்த கவிதை இன்னும் விளங்கியும் விளங்காமலும் .. எப்படி  நம் மொழியில் எடுத்துச் சொல்வது ?


A Dream

In a deserted place in Iran
there is a not very tall stone tower
that has neither door nor window.

 In the only room
(with a dirt floor and shaped like a circle)
there is a wooden table and a bench.
In that circular cell, a man who looks like me is writing in letters
I cannot understand a long poem
about a man who in another circular cell is
writing a poem about a man who in another circular cell
 . . .
The process never ends
and no one will be able to read
what the prisoners write.

*ஜீவ்ஸ்*
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
**
"அஹம் ப்ரம்மாஸ்மி"


2011/2/7 S. Krishna Moorthy <kris...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Feb 7, 2011, 9:43:00 AM2/7/11
to தமிழ் வாசல்
இப்படி நீங்கள் உணரும் இடியாப்பச் சிக்கல்களை எல்லாம் நம் அரங்கனார்
வந்து ஊதித் தள்ளிவிடப் போகிறார் பாருங்கள்!

வாசிப்பு என்பது வெறும் அனுபவம் மட்டுமல்ல, அது ஒரு தவம்! நாம் செய்யக்
கூடியதெல்லாம், தவம் செய்கிறவர்களுக்கு இடைஞ்சல் செய்யாமல், அவர்களுடைய
தவம் நல்ல முறையில் நடக்க முடிந்தால் உபகாரம், அது முடியாவிட்டால்,
அமைதியாக அவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பது மட்டும் தான்! தமிழ்வாசலில்
இணைந்த இந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக, அரங்கனார் திடீரென்று ஒருநாள்
என்னிடம் செல் நம்பரைக் கேட்டுப் பேச ஆரம்பித்த தருணங்களில் இருந்து
வாசிப்பின் தீவீரத்தை, வாசிப்பதன் சுகத்தை இன்னொரு பரிமாணத்தில் இருந்து
பார்க்கும் அனுபவம் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே என்பது ஸ்ரீ நிஹமாந்த மஹா தேசிகனுடைய
வாக்கு. அந்த வார்த்தைகளின் தாத்பர்யத்தை இலக்கிய விசாரங்களில் இப்போது
நானும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு வாசகனாய் எல்லாமே தெரிந்தவனாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை!
அனுபவிக்கத் தெரிந்தால் போதும்!

------------------------
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Feb 7, 2011, 10:54:34 AM2/7/11
to thamiz...@googlegroups.com
ஒரு  வாசகனாய்  எல்லாமே தெரிந்தவனாய் இருக்க வேண்டிய அவசியமே இல்லை!
அனுபவிக்கத் தெரிந்தால் போதும்!

என்ன சத்தியமான வார்த்தை.

சில படைப்பாளிகள் முதல் வாசிப்பில் கையில் கிடைக்காமல் நழுவி நழுவி ஓடிக் கொண்டே இருப்பார்கள்.  கொஞ்சம் இழுத்துப் பிடித்து வெட்கமிழந்து அடுத்தவர்களைக் கேட்டுத் தெளிந்து வாசித்தல் தனி சுகம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2011/2/7 S. Krishna Moorthy <kris...@gmail.com>
இப்படி நீங்கள் உணரும் இடியாப்பச் சிக்கல்களை எல்லாம் நம் அரங்கனார்

S. Krishna Moorthy

unread,
Feb 11, 2011, 2:13:05 AM2/11/11
to தமிழ் வாசல்
ஒரு கை ஓசையும் வெறுப்பில் எரியும் மனங்களும்..!


வெறுப்போடு எரியும் மனங்கள்! எப்போதும் எதையாவது தீய்த்துக் கொண்டே
இருக்க வேண்டும், அதைத் தவிர வாழ்க்கையில் வேறு ஒன்றுமே வேண்டாம்!
இப்படிப் பட்ட குணாதிசயங்களை புரிந்து கொள்வதற்கு நாடறிந்த மன நல
மருத்துவராகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கே வலைப்
பதிவுகளில், விவாதங்களில் வருகிற பின்னூட்டங்களைக் கொஞ்சம் பார்த்தாலே
போதும். பதிவு அல்லது விவாதத்திற்குச் சம்பந்தமே இல்லாமல் தடம் புரண்டு
கடைசியில் சொத்தைக் கடலையைக் கடித்த அனுபவமாகிப் போவதை நிறையவே
பார்த்தாயிற்று.

"இல்லாத, நமக்குத் தெரியாத ஒன்றோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது.
ஆனால், நாம் எதை வெறுக்கிறோமோ, சண்டைக்குக் கூப்பிடுகிறோமோ, அதனுடன்
நமக்கு நெருங்கிய தொடர்பு நம்முடைய விரோதத்திலேயே, வெறுப்பதிலேயே உண்டாகி
விடுகிறது! இப்படிச் சொல்வதால், நான் வன்மத்தை, வெறுப்பை, நல்லதென்று
சொல்வதாக நினைக்க வேண்டாம்.வன்மம், வெறுப்பால் மந்தமாகிப் போனவனுடைய
பார்வையில் நேசத்தைக் காண்பது மிகவும் அரிது. கோபத்தினாலும், விரோதம்
பாராட்டுவதாலும் கனல் போலத் தகிக்கும் ஒருவன் பார்வையில் கூட, பலதரம்
அன்பைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.அங்கே அன்பு
பின்னப்பட்டுப் போயிருக்கிறது, விகாரப்பட்டுப்போயிருக்கிறது....."

இது ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடலின் ஒரு பகுதி. அதன் உண்மையைப் புரிய
வைப்பதற்காகத் தானோ என்னவோ இந்த அனுபவங்கள் ஏற்பட்ட மாதிரியே படுகிறது.
பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுகிற தன்மையைப் பற்றி இந்தப்
பக்கங்களில் முன்பே பார்த்திருக்கிறோம்.

அதை அற்புதமாக வெளிப்படுத்திய சிறுகதை ஒன்று, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு
முன்னால் படித்தது, இன்னமும் பசுமையாக நினைவில் இருப்பதும் கூட!
உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே!

(சு)வாசிக்கப் போறேங்க வலைப்பதிவில் சிறுகதைகளைப் பற்றிப் பேச எழுதிய
பதிவு இது!

..............

லண்டனில் கல்வி பயில்வதற்காக, விடுதியில் தங்கியிருக்கும் ஒரு இந்திய
மாணவன் சொல்வதாக இந்த சிறுகதை ஆரம்பிக்கிறது.

ஒரு விடுதி அறையில் இவனும், ஒரு ஆப்பிரிக்க மாணவனும் கூட்டாளிகள்! இந்த
ஆப்பிரிக்க மாணவனுக்கும், ஒரு ஆங்கிலேய யுவதிக்கும், எப்படியோ காதல்
மலர்கிறது. இவனைத் தேடி அந்தப் பெண் அறைக்கு வருவதும், சந்தோஷமாகப்
பேசிக் கழிப்பதும், வெளியே செல்வதுமாக, இந்த நிகழ்வுகளுக்குசாட்சியாக,
கதை சொல்லியாக வரும் இந்திய மாணவனுடைய பாத்திரம்இருக்கிறது.

ஆயிற்று, அந்த ஆப்பிரிக்க இளைஞன், சொந்த ஊருக்குக் கிளம்பும் நேரம்
நெருங்குகிறது. தன்னுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு
இருக்கும்போது ஒரு புகைப்படம் கீழே வந்து விழுகிறது. அதில் இவனும், ஒரு
இளம் பெண், குழந்தைகள், பெரியவர்கள் என்று குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட
புகைப்படம்! கதை சொல்லி கேட்கிறான், "இது யார் உன் தாய் தந்தை சகோதரி
இவர்களோடு எடுத்துக் கொண்டதா?"

"கதையையே மாற்றி விட்டாயே! இது என் மனைவி, மாமனார், மாமியார், என்
குழந்தைகளோடு எடுத்துக் கொண்டது! இன்னும் சில நாட்கள் தான்! என்
குடும்பத்தோடு ஒன்றாகக் கூடி சந்தோஷமாக இருப்பேன்!"

"அப்படியானால் நீ இந்தப் பெண்ணுடன் நெருக்கமாகப் பழகியது.....?"

"அதெல்லாம் சும்மா! பொழுது போவதற்காக! அவ்வளவுதான்! இந்த
ஆங்கிலேயர்களுக்கே ரொம்பவும்தான் கர்வம்! தங்களுடைய வெள்ளைத் தோல் மீது
அவ்வளவு பெருமிதம்! அந்தப் பெருமிதத்தோடு கொஞ்சம் விளையாடிப்பார்க்கலாமே
என்று தான்."

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவுக்கு வெளியே யாரோ
தடதடவென்று ஓடுவது போல, படியில் உருண்டு விழுவது போல சத்தம் கேட்கவே,
இந்த இந்திய மாணவன் பதறிப்போய், வெளியே பார்க்கிறான்.

அந்தப் பெண் தான், ஆப்பிரிக்க இளைஞனைக் காதலித்த அதே பெண் தான், காதலனைத்
தேடிவந்தவள், இந்த சம்பாஷணையைக் கேட்டு, அதிர்ச்சியில் பதறி, படியில்
உருண்டு அடிபட்டு மயங்கிக் கிடக்கிறாள்.

அந்த விடுதிக் காப்பாளர், இவனைக் கூப்பிட்டு, "இந்தப் பெண்ணுக்கு
மருத்துவ சிகிச்சை தேவைப் படுகிறது. ஒரு கை கொடுத்து உதவுவாயா?" என்று
கேட்பதோடு கதை, இந்த வாக்கியத்தோடு முடிகிறது.

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை
ஒதுக்குகிறது!"

இந்த கேள்வி, அறையில் நண்பர்களுக்குள் விவாதிக்கப் பட்ட அதே கேள்விதான்!
பதில் தான் முற்றுப் பெறாமல் கேள்வியாகவே நின்று விடுகிறது.

1965 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளிவந்த கல்கி ராணுவச் சிறப்பிதழில் திரு.
தி. சா. ராஜு எழுதிய சிறுகதை இது. மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள்
தான் இருக்கும்!

கதாபாத்திரங்களுடைய பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் எழுத்துக்கு எழுத்து
அப்படியே நினைவில் இல்லை! ஆனால், கதாசிரியர், மனித மனங்களின் பேதப்பட்டு
நிற்கும் குணத்தைச் சொல்வதாகவும் அதே நேரம் , வாசகருக்கு ஒரு
கேள்வியாகவும் , இந்த ஒரு வரியில் முடித்துவிடுகிறார்!

"எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை! தண்ணீரும் தான் எண்ணெயை
ஒதுக்குகிறது!"

தி.சா. ராஜு! ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சாகித்ய அகடமிக்காக, ஒரு
பஞ்சாபி நாவலை மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு காந்தீயவாதி! மனித மனங்களின்
நுட்பமான உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்தவர்.

அகிலன், தீபம் நா.பார்த்த சாரதி போன்ற எழுத்தாளர்கள், கொஞ்சம்
சுயகௌரவத்தோடு, லட்சியவாதிகளாகவும் இருந்தது போல, புகழ், பொருளுக்காக
எழுத்தை சமரசம் செய்து கொள்ளத் தெரியாத இன்னொரு லட்சியவாதி. தமிழ்
எழுத்தாளர்களில், லட்சியவாதிகளும் இருந்தார்கள் என்பதே இன்றைக்குக்
கொஞ்சம் ஆச்சரியத்தோடு அப்படியா என்று கேட்க வைக்கும் சங்கதி!

இந்தக் கதையைக் கொஞ்சம், அந்த தண்ணீர்-எண்ணெய் சமாசாரத்தை யோசித்துப்
பாருங்களேன்!

பேதம் எங்கிருந்து வருகிறது? நிறத்திலா, இனம், மொழி, தேசம், நகரம்,
கிராமம், தெரு, எதிர் வீடு, பக்கத்து வீடு இப்படிப் பிரித்துச் சொல்வதில்
இருந்தா? பேதம் என்பதே கற்பிதம் தானா?

பேதங்கள் தேவை தானா? தவிர்க்க முடியாதவை தானா?

வெறுப்பில் எரியும் மனங்கள் எப்போது அமைதியைத் தேடி வரும்? வெறுப்பது
மட்டுமே தீர்வாகி விடுமா?

நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை விதைத்தல் என்பது ஒரு பண்பாக இங்கே எப்போது
வளரும்?

--------------------------------
படிப்புத் திண்ணையில்

coral shree

unread,
Feb 11, 2011, 3:29:28 AM2/11/11
to thamiz...@googlegroups.com
ஆழ்ந்த சிந்தனை ஐயா. நல்ல கதை. நன்றி.


2011/2/11 S. Krishna Moorthy <kris...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Innamburan Innamburan

unread,
Mar 1, 2011, 12:07:45 PM3/1/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
'அமுதப் புன்னகை அருளுங் காலையில்,
தியானப் பறவை சிறகடித் தோங்கி
வானக் கனவில் வாழுங் காலையில்
கண்டனன் பாரத சக்திக் காட்சியே.’
-என்று யோகியார் தன் அனுபவத்தை நேர்த்தியாகக் கூறுகிறார். அவர் புகழ் ஓங்கும்.
-இன்ன்மபூரான்
01 02 2011

2011/3/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> பாரத சக்தி மகா காவியம்
> கவியோகி சுத்தாநந்த பாரதியார்
> சுத்தாநந்த நூலகம்
> யோக சமாஜம்
> இரண்டாம் பதிப்பு 1969
> பெருங்காவியம். 1015 பக்கங்களுக்குச் சற்று அதிகம். பாடல்வரிகள் 50000
> சொச்சம்.
> இதைப் பார்த்துப் பாராட்டியவர்கள் நிரலே ஒரு சரித்திரம் பேசும். பாரதியார்,
> மகாத்மா காந்தி, பகவான் ஸ்ரீரமணர், மஹாமஹோபாத்திய ஸ்ரீ சுவாமிநாதய்யர்,
> ரைட்ஹான்ரபிள் ஸ்ரீ வி எஸ் ஸ்ரீநிவாச சாஸ்திரியார், திரு வ உ சி, திரு வ வெ சு
> ஐயர், திரு ராஜாஜி, திரு வையாபுரிப்பிள்ளை, திரு வி க, திரு டி கே சி இப்படி
> இன்னும் பலர்.
> A true poet is born with a vision and mission. You are such a poet. Your
> words spark out of the inner flame. Bharata Shakti is indeed a grand epic.
> --- இவ்வாறு சொன்னவர் ஸ்ரீரவீந்திரநாத தாகூர்.
> ‘பாரத சக்தியைப் பார்த்தோம்; அற்புதமாயிருக்கிறது; கம்பீரமாயிருக்கிறது; ஐயர்
> மெச்சினார்; நாமும் மெச்சுகிறோம். மஹாகாவியம் என்றார் ஐயர். அது தமிழுக்கு அரிய
> கலைச் செல்வமாகும்; அத்யாத்ம நிதியாகும்’ -- இவ்வாறு சொன்னவர் மகாகவி பாரதி.
> அரவிந்த-- அன்னைக்கே தம் காவியத்தைச் சமர்ப்பிக்கிறார் இவ்விதமாக --
> You are my heart; you are my brain
> Hail Auro--Mere supreme divine
> This epic inspired by your grace
> Is the story of your super race
> Bharata Shakti is the voice
> Of the New world of your choice;
> உள்ளமும் அறிவும் உணர்வும் ஆகிய
> அரவிந்த சக்தியே அன்புத் தெய்வமே
> உன்னருளாலே செம்மையாய் முடிந்த
> பாரத சக்திப் பனுவலுன் புதிய
> தெய்வ மரபின் சீரிய கதையே
> புதுவுலகத்தின் பூரண வேதமே. ----
> I gave you a Milton that day;
> I find a Milton today,
> In your epic of Godmen - Bharata Shakti. என்கிறார் அன்னிபெசண்ட்.
> மகாத்மாவோ ‘I appreciate your grand epic of Godmen. It seems a new Maha
> Bharatam'  என்று கூறுகிறார்.
>
> கவியோகி 'பாரதசக்தி மகாகாவியம்' என்பதற்கு ஆங்கிலத்திலே 'The  Epic
>  of God-men"   என்று மொழிபெயர்க்கிறார்.   அதையும் விரிவு படுத்தி The  Epic
> of  one  god,  One  world,   and  one  humanity என்று
> அடைப்புக்குறியிடுகிறார். ஆனால் தமிழில் விளக்கம் தரும்போது இதையே சமயோக வேதம்
> என்று
> குறிப்பிடுகிறார். எதற்குச் சொல்கிறேன் என்றால் புதிய பதிப்பில்
> இந்த வித்தியாசங்களையெல்லாம் எடுத்துவிட்டு ஒரு நூல் என்று தந்துவிடுவார்கள்.
> ஆனால் கவியோகி   இருந்தபோது தாமே அதற்கு என்ன பொருள் கண்டார் என்பது
> இந்த தலைப்புகளிலிருந்தே தெரியவருகிறது அல்லவா?
> தெய்வ மனிதர்களைப் பற்றிய காவியம் என்றும்,    ஒரே  கடவுள்,  ஒரே உலகம், ஒரே
> மானிடம் என்பதைப் பற்றிய காவியம் என்றும் ஆங்கிலத்தில் பொருள்
> கூறுபவர்,  தமிழில் யோகங்களைச் சமப்படுத்திய வேதம் என்றும்,   சமத்துவ நிலையை
> யோகமாக்கிய வேதம் என்றும் பொருள் படும்படி விளக்குகிறார்.
> மொத்தம் ஐந்து காண்டங்கள் -- 1)சித்தி காண்டம் 2) கௌரி காண்டம் 3) சாதன காண்டம்
> 4) தானவ காண்டம் 5) சுத்த சத்தி காண்டம். ஐந்திலும் முறையே 25 + 37 + 32 + 31 +
> 21 படலங்கள்.
> ‘காலைப் பரிதி காவிரி யாற்றைக்
> கொஞ்சித் தழுவும் குளிர்ந்த வேளையில்,
> ஓமிசைத் தாடும் பூமணக் காற்றுடன்
> புதுயுகக் குழலிசை பொங்குங் காலையில்,
> விசும்பின் குடைக்கீழ் பசும்பொன் இயற்கை
> அமுதப் புன்னகை அருளுங் காலையில்,
> தியானப் பறவை சிறகடித் தோங்கி
> வானக் கனவில் வாழுங் காலையில்
> கண்டனன் பாரத சக்திக் காட்சியே.’
> என்று எழுந்த காட்சியை
> ‘ஆத்தும தத்துவம் ஆணிவே ராகி,
> உலகப் பெரியார் உள்ளமே கிளைத்து,
> யோகமாய் மலர்ந்து, போகமாய்க் கனிந்து
> பூரண வாழ்வைப் பொருளாய்க் கொண்ட
> மகாகாவி யத்தை மலைநதி வனங்கள்
> கோயில் குளங்கள் தூய்தவக் குடிலகளில்
> தியானத் தமர்ந்து மோனத் துணர்ந்து,
> படலம் படலமாய்ப் பாடி முடித்தேன்.
> நான்கு தடவை நயமுற வமைத்தேன்,
> ஆத்ம சோதனையில் அனைத்துங் காண்கவே.
> சித்தி, கௌரி, சாதன, தானவ
> சுத்த சக்தியாம் துலங்குகாண் டங்கள்
> ஐந்தும் வாழ்வின் ஐம்பெறு நிலையாம்’
> என்று வடிவமைத்ததாகக் கூறுகிறார் கவியோகி தாமே முகப்பில்.
> பாடல்கள் இனிய ஓசையும், பொருளமைதியும் கொண்டு இலங்குவன.
> உதாரணத்திற்கு, தொடக்கத்திலேயே
> ‘எல்ல யற்றநல் லின்னுயி ருள்ளமே
> தில்லை யாகத் திருநடஞ் செய்பவன்;
> இல்லை யென்பவ ருள்ளு மிருப்பவன்;
> சொல்லைத் தூண்டித் துலக்குக வெற்றியே!’
> மீட்டுவாய் உயிர் வீணையை பண்ணுடன்,
> ஊட்டுவாய் உயர் வோங்குங் கலையின்பம்,
> காட்டுவாய் வழி காசினி யெங்குமே
> நாட்ட வுன்னிசை நற்றமிழ் வாணியே!
> வள்ளல் வானில், மலைவனக் காட்சியில்,
> துள்ளு மாற்றினிற் சூழும் இயற்கையில்,
> அள்ளி யள்ளி யளித்திடும் பாட்டையென்
> உள்ளப் பொய்கையில் ஊற்றி யருளுவாய்!
> பாழில் படைப்பு எப்படி உண்டாயது? கவியோகியின் கவிதை --
> பாழி டத்தினிற் பரந்ததோர் பம்பர வியக்கம்;
> யாழி சைதரும் அகரத்தால் அம்பரம் விழிக்க,
> வாழி சைதரும் உகரத்தால் வளர்தரும் அணுக்கள்
> சூழி சைதரும் மகரத்தாற் சுழன்றன விரைந்தே.
> (தொடரும்)
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> ***

Chandrasekaran

unread,
Mar 2, 2011, 11:07:44 PM3/2/11
to thamiz...@googlegroups.com, Mohanarangan V Srirangam
Thanks a lot Mohana Rengan Anna. Idhai, idhaithan naan edhirpartheyn.
The new edition of the book is available with Suddhanandha Library, Thiruvanmiyur, Phone: Nagarajan : 9283199890

Chandra

Tirumurti Vasudevan

unread,
Mar 7, 2011, 3:35:11 AM3/7/11
to thamiz...@googlegroups.com
ஆஹா!

2011/3/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
பாழிடத்தில் பரந்த இயக்கத்தின் பின் என்ன நடந்தது?

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

Innamburan Innamburan

unread,
Mar 27, 2011, 11:45:25 AM3/27/11
to thamiz...@googlegroups.com
என் வழக்கத்துக்கு மாறாக, ஆர்வத்துடன் படித்து வந்த இந்த இழையில் நான்
எழுத வில்லை. கிருஷண்மூர்த்தி சொல்வது போல் படிப்பு ஒரு தவம். ஶ்ரீரங்கம்
மோஹனரங்கன் அதற்கு ஒரு சான்று. எனக்கு இருக்கும் ஒரு ஏக்கம்,
பெரும்பாலோர், டிகிரி வாங்கின பிறகு, படிப்பதை நிறுத்தி விடுவது,
கல்யாணம் ஆன பிறகு பிரம்மசர்யம் அனுஷ்டிப்பத்ஹைப் போல! என் சுற்றத்தில்,
இத கண்கூடாக பார்க்கிறேன். நூலகங்களை பற்றி இங்கிலாந்தில் எதிர்ப்பு
இருப்பது, இந்தியாவில் வியப்பை அளிக்கும். ஏனெனில், இங்கு அத்தனை
வசதிகள். தாத்தா பாட்டியெல்லாம், எல்லா பேட்டைகளில் உள்ள நூலகங்களுக்கு
தினம் வந்த வண்ணம். 16 நூல்களை ஒவ்வொரு தடவையும் எடுத்து செல்லலாம்
-audio books, CD, DVD உள்பட. சிறார்களுக்கு நிகழ்ச்சிகள்.
இப்படியெல்லாம். அது சரி. கோட்டூர் புரம் நூலகம் எப்படி உள்ளது?
இன்னம்பூரான்
27 03 2011
2011/3/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> கண்ணில் பட்ட சில நல்ல நூல்கள்
>
>
>
> பாரத வர்ஷே, பரத கண்டே இந்தியா என்றதும் ஆன்மிகம் தான் நினைவில் எழும்.
> விஞ்ஞானம் என்றவுடன் மேலை நாடுகள், கிரேக்கம், ரோம் இவைதான் தோன்றும்.
> ஆன்மிகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் தந்தது நமது பாரதம் என்பது சிறப்புதான்.
> அதில் நமக்குப் பெருமையே. ஆனால் விஞ்ஞானத்தில் எதுவும் சிந்தித்து இயற்றாமலா
> இருந்தார்கள் நமது முன்னோர்கள்.?
> அதாவது நாம் எதை ஊன்றிக் கவனிக்கிறோமோ அதுதான் கண்ணில் படும்; நினைவில்
> நிற்கும். அதனால் அதுமட்டும்தான் இருந்தது என்று சொல்ல முடியாது அன்றோ!
> விஞ்ஞானம் என்று பார்க்கப் போனால் நமது முன்னோர்கள் சாதித்திருப்பது மிகவும்
> பிரமிப்பாய் இருக்கிறது. ஒன்றுமில்லை பிரபஞ்சத்திற்கே ‘அண்டம்’ என்று பெயர்
> வைத்தார்களே! அதுவே என்ன தெளிவு!
> அண்டம் என்றால் elliptical spherical. பிரபஞ்சம் இவ்வாறு வடிவம் என்பதை
> எப்படிச் சொன்னார்கள்!
> வேறு ஒரு வார்த்தை கோளம். spherical. மேற்கில் பூமி உருண்டை என்று சொல்வதற்கே
> அவ்வளவு முக்கல் முனகல்.
> அதிகாரம் கலை, விவரணை, விஞ்ஞான ஆவணப் பதிவு எல்லாவற்றையும் பாதிக்கும் என்பது
> சரிதான்.
> ஆனால் சுதந்திர இந்தியாவில் 1950ல் Symposium on the History of Sciences in
> South-East Asia டெல்லியில் நடந்தது. UNESCO வும், The Indian National Science
> Academy யும் சேர்ந்து நடத்திய அதிலிருந்து தொடர்ந்த ஊக்கமாய் பல விதத்தில்
> வளர்ந்தது இப்பொழுது என் கண்ணில் பட்ட ஒரு நூலில் தெரிகிறது.
> மிக முக்கியமான நூல். அதுவும் த ம அ என்றாவது தனக்கென்று அத்யாவசியமான
> குறிப்புதவி நூல்களுக்கான நூலகம் ஒன்றைப் பேணுகின்ற நிலை வரும் போது இந்த நூல்
> கட்டாயம் அந்த நூல்கத்தில் இருக்க வேண்டும்.
> A Concise History of Science in India
> Second Edition
> (D M Bose, Chief Editor; S N Sen, editor; B V Subbarayappa, editor)
> Indian National Science Academy
> Universities Press (India) Private Limited
> www.universitiespress.com
> 3-6-747/1/A, & 3-6-754/1, Himayatnagar, Hyderabad 500029 A P
> Second Edition 2009
> ISBN 978 81 7371 619 5 (PB)
> ISBN 978 81 7371 618 8 (HB)
> விலை கண்ணில் படவில்லை. ஆனால் சுமார் 1500 ரூ இருக்கும் என்று நினைக்கிறேன்.
> பக்கங்கள் xxviii + 944
> செய்யித் அல் அந்தலூஷி (11 ஆம் நூற்றாண்டு AD) Sa'id al Andalusi என்ற அராபிய
> வான இயல் வல்லுநரும், விஞ்ஞான இயலின் வரலாறு எழுதியவரும் ஆனவர் தமது ’கிதாப்
> தபகாத் அல் உமாம்’ (பொருள் வகைப்பாடுகளும், தேசங்களும் பற்றிய நூல்) என்பதில்
> கூறுவது:
> 'The civilizations which were interested in the sciences include eight
> groups: the Indians, the Persians, the Chaldeans, the Hebrews, the Greeks,
> the Romans, the Egyptians and the Arabs....
> The first nation (which cultivated the sciences) is that of the Indians. The
> nation itself is extremely important, diverse, and is made of powerful
> kingdoms. It is known for its wisdom; and all people and all generations
> gone by testify that it was distinguished in the various branches of
> knowledge...
> The Indian Civilization, among all nations, through the centuries and since
> antiquity, was the source of wisdom, justice and moderation. They were
> people of stabilizing virtues, creators of sublime thought, universal
> fables, rare inventions and remarkable flashes of wit.'
> இந்த மேற்கோளைத் தாங்கித்தான் இந்தத் தொகுப்பு நூலே திறக்கிறது, பொருத்தமாக.
> விஞ்ஞானத்தின் எந்தத் துறையையும் இந்த நூலில் விட்டுவைக்கவில்லை என்று
> தெரிகிறது. விஞ்ஞானம் மட்டுமின்றித் தொழில் நுட்பம் என்பதும் கவனத்தில்
> கொள்ளப்பட்டிருக்கிறது.
> முதலில் தெரியும் பொருள்பட்டியைப் பார்ப்போமே --
> 1)A Survey of Source Materials -- S N Sen
> 2) Astronomy -- S N Sen
> Addendum -- B V Subbarayappa
> 3) Mathematics -- S N Sen
> Addendum -- B V Subbarayappa
> 4)Medicine -- R C Majumdar
> Addendum -- B V Subbarayappa
> 5) Chemical Practices and Alchemy -- B V Subbarayappa
> Addendum -- B V Subbarayappa
> 6)Agriculture -- S P Raychaudhuri
> Addendum -- B V Subbarayappa
> 7) Botany --
> Prehistoric Period -- K A Chowdhury
> The Vedic and Post-Vedic Period -- A K Ghosh
> Botany in the Medieval Period from Arabic and Persian Sources --
> K A Chowdhury
> European Interest in Botanical Studies in India from Medieval Times --
> A K Ghosh
> Addendum -- B V Subbarayappa
> 8)Zoology -- J L Bhaduri, K K Tiwari, Biswamoy Biswas
> Addendum -- B V Subbarayappa
> 9)The Physical World: Views and Concepts -- B V Subbarayappa
> Addendum -- B V Subbarayappa
> 10)Western Science in India up to Independence -- B V Subbarayappa
> Addendum -- B V Subbarayappa
> 11) Resume -- B V Subbarayappa
> இதனோடு Abbreviations, Glossary, Bibliography, Supplementary Bibliography,
> Index என்று நூல் முழுமை பெறுகிறது. நூற்றுக்கணக்கான கோட்டுப் படங்கள்,
> அட்டவணைகள், புகைப்படங்கள் என்று நிறைவான நூல்.
> 1971ல் வந்த முதல் எடிஷனில் தொகுப்பாசிரியர்கள் இவ்வாறு சொல்லி
> ஆரம்பிக்கின்றனர்.
> “There is a world-wide interest in the study of the history of science today
> as one important aspect in understanding man's cultural patterns. This book
> attempts to present a concise account of the development of science in one
> of the most ancient culture-areas of the world. Despite vicissitudes in
> cultural and scientific endeavours and periods of stagnation, e.g., about
> the time of the Renaissance in Europe, the Indian subcontinent is one of the
> few areas where a fairly continuous tradition in science and technology is
> clearly seen."
> 1971க்குப் பிறகு பாலத்தின் அடியில் ஏகபட்ட தண்ணீர் போயிருக்குமே! இரண்டாவது
> எடிஷனில் பின் வந்த அறிவுப் பெருக்கம், தகவல் சேகரம் ஆகியவைகளைப் பதிவு
> செய்கிறார் பி வி சுப்பராயப்பா ஆடெண்டம் என்ற பகுதியில், ஒவ்வொரு தலைப்பிலும்.
> நல்ல நூல்; நல்ல கண் திறப்பு.
> பாரதியின் பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால்
> இந்த நூல் --
> “நூறு கோடி நூல்கள் செய்து
> நூறு தேய வாணர்கள்
> தேறு நுண்மை கொள்ளவிங்கு
> தேடி வந்த நாளினும்
> மாறு கொண்டு கல்வி தேய
> வண்மை தீர்ந்த நாளினும்
> ஈறு நிற்கும் உண்மை ஒன்று
> இறைஞ்சி நிற்பள் வாழ்கவே!
> இதந்த ருந் தொழில்கள் செய்
> திரும்பு விக்கு நல்கினள்
> பதந்த ரற் குரியவாய
> பன்மதங்கள் காட்டினள்”

> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
> ***
>

coral shree

unread,
Mar 27, 2011, 11:59:58 AM3/27/11
to thamiz...@googlegroups.com
அன்பின் திரு ரங்கனாரே,,

முத்து முத்தான புத்தகங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இத்தனையும் படிப்பதற்கு வாய்ப்பும், நேரமும் கிடைத்தால் உண்மையிலேயே அது வரம்தான். எப்படியும் தங்களைப் போன்று புத்தகங்களின் சாரங்களை உள்ளேற்றிக் கொண்டவர்களின் கடைக்கண் பார்வையில் நாங்களும் இவ்வரத்தைப் பெற்றவர்களாகி விடுவோம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நன்றி திரு ரங்கன். 

விஞ்ஞானத்தின் எந்தத் துறையையும் இந்த நூலில் விட்டுவைக்கவில்லை என்று தெரிகிறது. விஞ்ஞானம் மட்டுமின்றித் தொழில் நுட்பம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது. 
இதனோடு Abbreviations, Glossary, Bibliography, Supplementary Bibliography, Index என்று நூல் முழுமை பெறுகிறது. நூற்றுக்கணக்கான கோட்டுப் படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் என்று நிறைவான நூல். 

1971ல் வந்த முதல் எடிஷனில் தொகுப்பாசிரியர்கள் இவ்வாறு சொல்லி ஆரம்பிக்கின்றனர். 

“There is a world-wide interest in the study of the history of science today as one important aspect in understanding man's cultural patterns. This book attempts to present a concise account of the development of science in one of the most ancient culture-areas of the world. Despite vicissitudes in cultural and scientific endeavours and periods of stagnation, e.g., about the time of the Renaissance in Europe, the Indian subcontinent is one of the few areas where a fairly continuous tradition in science and technology is clearly seen." 

1971க்குப் பிறகு பாலத்தின் அடியில் ஏகபட்ட தண்ணீர் போயிருக்குமே! இரண்டாவது எடிஷனில் பின் வந்த அறிவுப் பெருக்கம், தகவல் சேகரம் ஆகியவைகளைப் பதிவு செய்கிறார் பி வி சுப்பராயப்பா ஆடெண்டம் என்ற பகுதியில், ஒவ்வொரு தலைப்பிலும். 

நல்ல நூல்; நல்ல கண் திறப்பு. 

பாரதியின் பாடல் வரிகள் எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்கள் உணர வேண்டுமானால் இந்த நூல் -- 

“நூறு கோடி நூல்கள் செய்து 
நூறு தேய வாணர்கள் 
தேறு நுண்மை கொள்ளவிங்கு 
தேடி வந்த நாளினும் 
மாறு கொண்டு கல்வி தேய 
வண்மை தீர்ந்த நாளினும் 
ஈறு நிற்கும் உண்மை ஒன்று 
இறைஞ்சி நிற்பள் வாழ்கவே! 

இதந்த ருந் தொழில்கள் செய் 
திரும்பு விக்கு நல்கினள் 
பதந்த ரற் குரியவாய 
பன்மதங்கள் காட்டினள்” 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

coral shree

unread,
Apr 10, 2011, 12:17:36 AM4/10/11
to thamiz...@googlegroups.com
அன்பின் திரு ரங்கன்,

மிக்க நன்றி. அழகான விமர்சனம். புத்தகம் படித்த நிறைவையும் ஏற்படுத்துகிறது. புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்ற ஆவலும் ஏற்படுத்துகிறது. 

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பெரிய சேவை இது.வாழ்த்துக்கள். நன்றி.

//இதில் ஆசிரியர் முன் வைக்கும் கருதுகோள் ‘quantum mechanics and chaos theory provide a place for God to act in the world without violating his own natural laws. 

அதாவது கடவுள் என்று ஒருவர் மிராகிள்ஸ் செய்பவர்; இயற்கையால் அவர் கட்டுப்படுவதில்லை என்னும் பழைய பொதுமக்கள் கருத்து இல்லாமல், தான் உண்டாக்கிய இயற்கைக்கு முற்றிலும் உடன்பட்டு இயங்கும் கடவுள் -- அப்படி ஒரு கடவுள் இருப்பது யாராலும் எந்த விதத்திலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் இருக்கும். //.......சிந்திக்க வைக்கும் அருமையான தத்துவம். அல்லவா. ............

நன்றி. தொடருங்கள் தங்கள் சேவையை. 


2011/4/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
http://www.colorado.edu/philosophy/vstenger/VWeb/Home.html 

மேலும் ஆசிரியர் விக்டர் ஜெ ஸ்டெங்கர் பற்றி அறிய மேல்கண்ட சுட்டியைக் காணுங்கள். 

***


2011/4/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கண்ணில் பட்ட சில நல்ல நூல்கள் -- 

அடுத்து ஒரு நல்ல நூல். 

சமீப காலமாக நாம் ஒரு பேச்சைக் கேட்கிறோம். 

சார்! எய்ன்ஸ்டீன் சொன்னத்துக்கு அப்புறம் விஞ்ஞான உலகமே இப்ப கடவுள், மதம் என்பதையெல்லாம் அவ்வளவா எதிர்க்கிறதில்லை. 

குவாண்டம் தியரி என்ன சொல்றதுங்கறீங்க. 

எல்லாம் நம்ம பழைய காலத்துப் பெரியவா சொன்னதைத்தான் சார் இப்ப விஞ்ஞானம் சொல்றது. சங்கரர் என்ன சொன்னார்? எல்லாம் மாயான்னார். 

இதே பேச்சுதான் கொஞ்சம் மாறி மேலை நாட்டிலும். 

உண்மை என்ன? அப்படியா? குவாண்டம் தியரி, தற்கால விஞ்ஞானம் பழைய மதங்களுக்கு மறைமுகச் சான்று வழங்குகிறதா? 

இதை ஹிந்துமதத்தின் கோணத்தில் நடுநிலைமையோடு ஆராய்ந்து பார்க்கலாம். 

ஆனால் ஒருவர் செமித்திய மதங்கள் சொல்லும் கடவுள் என்பவருக்கு தற்கால குவாண்டம் விஞ்ஞானம் ஏதேனும் ஒப்புதலோ, சான்றோ அளிக்கிறதா என்று ஒருவர் அலசிப் பார்க்கிறார் ஒரு நூலில். 

Quantum Gods 

Victor J Stenger 

Prometheus Books 

13 12 11 10 09 5 4 3 2 1 

ஆசிரியர் ஸ்டெங்கர் அளிக்கும் உள்தலைப்பு சற்று விளக்கமானது. 

Creation, Chaos, and the Search for Cosmic Consciousness 

என்னும் உள் குறிப்பு பல விஷயங்களைச் சொல்வதாக வாசகனை ஈர்க்க வல்லது. 

தனது முந்தைய புத்தகமான God: The Failed Hypothesis (How Science Shows That God Does not Exist) என்பதில் சாதாரண கோடானுகோடி பொதுமக்கள் கருத்துப்படியான செமித்திய மதங்களின் கடவுள் என்று ஒருவர் இல்லை என்று அல்சினார். அதிலும் பொதுமக்கள் கருத்து ரீதியான கடவுளைத்தான். ஏனெனில் செமித்திய மதங்களிலும் இறையியல் கற்றோரின் கருத்துப்படி கடவுள் என்னும் கருத்து பெரும் ஆழமும், வாதங்களும் கொண்டது. 

இந்த நூலில் அடிப்படையான அளவுகோல் கருத்து க்வாண்டம் இயற்பியல் சிந்தனையாகும். 

ஆசிரியரின் சொற்படியே இந்த நூலில் இரண்டு கருதுகோள்களை ஆசிரியர் முன் வைக்கிறார். 

ஒன்று -- Quantum Spirituality 

இதில் ஆசிரியர் கூறுவது என்னவெனில் க்வாண்டம் மெக்கானிக்ஸ் என்பது மனித மனத்திற்கும், அண்டத்திற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று காட்டிவிட்டது என்பதை மையமிட்டுச் செய்யும் அலசல். 

இரண்டாவது -- Quantum Theology 

இதில் ஆசிரியர் முன் வைக்கும் கருதுகோள் ‘quantum mechanics and chaos theory provide a place for God to act in the world without violating his own natural laws. 

அதாவது கடவுள் என்று ஒருவர் மிராகிள்ஸ் செய்பவர்; இயற்கையால் அவர் கட்டுப்படுவதில்லை என்னும் பழைய பொதுமக்கள் கருத்து இல்லாமல், தான் உண்டாக்கிய இயற்கைக்கு முற்றிலும் உடன்பட்டு இயங்கும் கடவுள் -- அப்படி ஒரு கடவுள் இருப்பது யாராலும் எந்த விதத்திலும் கண்டுபிடிக்க முடியாது என்றும் இருக்கும். 

இந்த க்வாண்டம் ஸ்பிரிசுவாலிடி என்பதையும், க்வாண்டம் தியாலஜி என்பதையும் ஆசிரியர் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது தகுந்த ஆதாரம் இல்லை என்று நம்மையே கைகளை எடுத்துக் கொள்ள வைக்கிறாரா என்பது ஆசிரியரின் அலசலில் நமது படிப்பைச் சுவையுடையதாக ஆக்கும் அம்சம். 



அடுத்து ஒரு முக்கியமான கருத்தை இந்த நூலில் தொடுகிறார் ஆசிரியர். அதுவே Emergence என்ற கருத்து. 

தொடக்க நிலையிலிருந்து கடை நிலை வரையிலான காரணகாரிய வாதம் என்பது ஒன்று. 

கடை நிலையின் விளைவிலிருந்து தொடக்க நிலையில் விளையும் மாற்றம் என்னும் ஒரு வித உல்டா காரண காரிய வாதம். 

முன்னது bottom-up casuality 

பின்னது Top-down casuality 

அதாவது உள்ளதாம் நிலைக்கு இனிமேல் வரப்போகும் எதிர்கால நிலைகள் தாம் எழுவதற்கு ஏற்றாற்போல் ஆரம்பநிலைகளிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்னும் பின் நோக்கு காரணவாதம் என்பதைத் தன் அம்சமாகக் கொண்டு அமைந்த கருத்து Emergence என்பது. 

சாதாரணமாக நாம் பேசும் பொழுது கூறும் இயற்கையைப் பற்றிய கவனிப்பை எடுத்துக் கொள்வோம். 

விடியப் போறதுன்னா அதற்கு முன்னாடி நன்றாக கருக்கும். 

இது அதற்கு உதாரணம் அன்று. ஆயினும் எப்படி பிற்றைய நிலை தான் எழுவதற்கு வசதியாக முன்னமேயே ஆரம்ப முன் நிலைகளில் அதற்கான காரண சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது என்பது தான் எமர்ஜன்ஸ் கொள்கையின் சாராம்சம். 

மேலும் ஓர் அருமையான கருத்து ஆசிரியரின் எழுத்து வண்ணத்தில் முன் வைக்கப்படுவது -- இயற்பியல் விதிகள் புர உலகில் பொருட்களைக் கட்டுப் படுத்தும் விதிகளா அன்றேல் அந்தப் பொருட்களை நாம் கற்பதை எல்லை வகுக்கும் விதிகளா என்பதே ஆழ்ந்த ஆய்வில் யோசிக்க வேண்டிய விஷயம் என்று ஆசிரியர் கூறுவது படித்து சிந்திக்கத் தக்கது. 

என் தந்தையார் கூறும் ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது -- குடிகாரனை போலீஸ் பிடித்துக் ‘கட்றா வேஷ்டியை!’ என்று சத்தம் போட்டால், ‘தொரை! நீ சொன்னா செஞ்சுபிட வேண்டியதுதான்’ என்று உளறியவாறே வேஷ்டியை எடுத்து போலீஸ்காரருக்குக் கட்டிவிடுவானாம் குடிகாரன். 

அது போல் இயற்பியல் விதிகள் என்பன பொருள்களுக்கா அல்லது நம் பார்வைகளுக்கா? 

ஆரம்பத்தில் குழப்பமே இருந்தது; இன்மையாம் ஒன்றே இயன்றது. அதிலிருந்து விதிகள், அலைகள், நிகழ்வுகள் எழுந்தன. எல்லாம் இயல்பாகவே இருந்தன. எழுந்தன. எனவே ஆண்டவன் முடிவு என்று எந்தக் குறுக்கீடும் இந்தத் தொடர்ச்சியில் தேவையாய் இருக்கவில்லை. ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று இருப்பது இயல்பு என்பதால் எல்லாம் எழுந்தது என்று முடிக்கிறார் நூலை. 

மாறுபட்டு சிந்திக்கவும், உடன்பட்டு விவாதிக்கவும் நல்லதொரு நூல். 
*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
*

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

Geetha Sambasivam

unread,
Apr 10, 2011, 4:44:16 AM4/10/11
to thamiz...@googlegroups.com
குவாண்டம் தியரி என்ன சொல்றதுங்கறீங்க. //

ம்ஹும், இயற்பியலே கஷ்டமான சப்ஜெக்ட் எனக்கு.  அதனாலே சாய்ஸிலே விட்டுட்டேன்.  கீழே உள்ள பத்தி மட்டும் கொஞ்சம் புரிஞ்சாப்போல் ஒரு எண்ணம். 



2011/4/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
கண்ணில் பட்ட சில நல்ல நூல்கள் -- 



சாதாரணமாக நாம் பேசும் பொழுது கூறும் இயற்கையைப் பற்றிய கவனிப்பை எடுத்துக் கொள்வோம். 

விடியப் போறதுன்னா அதற்கு முன்னாடி நன்றாக கருக்கும். 

இது அதற்கு உதாரணம் அன்று. ஆயினும் எப்படி பிற்றைய நிலை தான் எழுவதற்கு வசதியாக முன்னமேயே ஆரம்ப முன் நிலைகளில் அதற்கான காரண சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது என்பது தான் எமர்ஜன்ஸ் கொள்கையின் சாராம்சம். 

மேலும் ஓர் அருமையான கருத்து ஆசிரியரின் எழுத்து வண்ணத்தில் முன் வைக்கப்படுவது -- இயற்பியல் விதிகள் புர உலகில் பொருட்களைக் கட்டுப் படுத்தும் விதிகளா அன்றேல் அந்தப் பொருட்களை நாம் கற்பதை எல்லை வகுக்கும் விதிகளா என்பதே ஆழ்ந்த ஆய்வில் யோசிக்க வேண்டிய விஷயம் என்று ஆசிரியர் கூறுவது படித்து சிந்திக்கத் தக்கது. 

என் தந்தையார் கூறும் ஒரு நகைச்சுவை ஞாபகத்திற்கு வருகிறது -- குடிகாரனை போலீஸ் பிடித்துக் ‘கட்றா வேஷ்டியை!’ என்று சத்தம் போட்டால், ‘தொரை! நீ சொன்னா செஞ்சுபிட வேண்டியதுதான்’ என்று உளறியவாறே வேஷ்டியை எடுத்து போலீஸ்காரருக்குக் கட்டிவிடுவானாம் குடிகாரன். 

அது போல் இயற்பியல் விதிகள் என்பன பொருள்களுக்கா அல்லது நம் பார்வைகளுக்கா? 

ஆரம்பத்தில் குழப்பமே இருந்தது; இன்மையாம் ஒன்றே இயன்றது. அதிலிருந்து விதிகள், அலைகள், நிகழ்வுகள் எழுந்தன. எல்லாம் இயல்பாகவே இருந்தன. எழுந்தன. எனவே ஆண்டவன் முடிவு என்று எந்தக் குறுக்கீடும் இந்தத் தொடர்ச்சியில் தேவையாய் இருக்கவில்லை. ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று இருப்பது இயல்பு என்பதால் எல்லாம் எழுந்தது என்று முடிக்கிறார் நூலை. 

மாறுபட்டு சிந்திக்கவும், உடன்பட்டு விவாதிக்கவும் நல்லதொரு நூல். 
*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 
*

coral shree

unread,
Apr 14, 2011, 9:59:24 PM4/14/11
to thamiz...@googlegroups.com
INTERESTING. NEED TO WATCH DEEPLY.......THANKS FOR SHARING!

2011/4/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மின் தமிழில் ‘கலையும் அதிகாரவெறியும்’ என்று தொடர்ப்படுத்திய கட்டுரையைச் சிறிது கூட்டி மாற்றி ‘கலை, இலக்கியம், கலாசார மேலதிகாரத்தனம்’ என்ற கட்டுரையாக தமிழினி இதழுக்குத் தந்தேன். வரும். அது போது குறிப்புகள் எடுக்கும் போது Antonio Gramsci அவர்களின் சில கருத்துகள் கண்ணில் பட்டன. 

வரலாறு என்பதைப் பற்றிய நூற்பாவொத்த அவருடைய கருத்து நெடும் சிந்தனையைத் தூண்டிவிட வல்லது, சிந்திக்க விரும்பினால். 

*

History has left us in an infinity of traces. 


The task is to compile an inventory of the traces that history has left in us. 
* 

Edward Said பற்றிய இந்த நான்கு பகுதி பேட்டித் தொடரும் அவருடைய ஓரியண்டாலிஸம் தியரியைப் பற்றிய ஓர் நல்ல அறிமுகமாய் இருக்கிறது. 



--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
May 18, 2011, 2:11:55 PM5/18/11
to thamiz...@googlegroups.com
ஒரு சிறு  பாதை விலகல்.  (Diversion)

சிகரெட் பற்றி ரங்கனார் சொன்னதால்.  (மற்ற விஷயங்கள் பற்றிப்பேச இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும்).

நான் ஒரு நாளைக்கு ஏறத்தாழ ஐம்பது சிகரெட்டுகள் புகைத்துக் கொண்டிருந்தேன்.  சாப்பிடும்  நேரம் தவிர, தூங்கும் நேரம் தவிர சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன்.  வெங்கட்சாமிநாதன் பீடி குடிக்கும் ஸ்டைல் பிடித்துப்போக அவரைப் போல அறிவை வளர்த்துக் கொள்ளாமல் பீடியும் நிறைய பிடித்துக் கொண்டிருந்தேன்.

சிகரெட் இல்லாமல் வாழ முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

ஒருநாள் மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சீக்கிரம் வந்து விட்டேன்.  பால்கனியில் உட்கார்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன்.  மனைவியின் வருகைக்குக் காத்திருந்தேன்.

ஏதோ தொடர்பே இல்லாமல் சிகரெட் பிடிப்பது பற்றி ஒரு சலிப்பு வந்தது.  இந்த சிகரெட்  இப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறதே,  விட்டுத் தொலைத்தால் என்ன என்று தோன்றியது.  கையில் இருந்த பாக்கெட்டில் சுமார் ஆறு சிகரெட்டுகள் இருந்தன.  தன்னிச்சையாக பால்கனியில் இருந்து பாக்கெட்டை கீழே வீசி எறிந்தேன்.

மனைவி வீட்டுக்கு வந்ததும் சிரித்துக் கொண்டே அவள் முன் நின்றேன்.  இன்னையில் இருந்து சிகரெட் விட்டுட்டேன் தெரியுமா என்றேன்.

அவளுக்கு என்னவோ அன்று கெட்ட மூட்.  என்னிடம் மிகவும் கடுமையாக நீயும் உன் முகரக்கட்டையும்.  போய் கண்ணாடியிலே முகத்தைப் பார்த்துக்கோ,  சிகரெட் விடற மூஞ்சியா இதுன்னு என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.

அடக்க முடியாத சினம் வந்தது எனக்கு.  இப்படிச் சொல்லிவிட்டாளே இந்த சிகரெட்டை தொடக்கூடாது என்று தீர்மானித்தேன்.

ஆனால் அன்று இரவில் இருந்து நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது.   நிறைய தண்ணீர் குடித்தேன்.  ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொண்டேன்.  வாய் எல்லாம் புண்ணானது.  பல இரவுகள் தூக்கம் கிடையாது.  ஆனால் சிகரெட்டைத் தொடவில்லை.  ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை.

படாத பாடு பட்டேன்.  மனைவியின் வார்த்தைகளே மீண்டும் மீண்டும்  ஒலித்துக் கொண்டு இருந்ததால் மிகவும் வீம்பாக இருந்தேன்.

இன்றுவரை சிகரெட்டை தொடவில்லை, 

இப்போது பக்கத்தில் யாராவது சிகரெட் பிடித்தால் கொல்ல வேண்டும் என்று வெறி வருகிறது.

நான் சிகரெட் விட்ட நாள் 30 மே 1999.

நம் குழுவில் யாராவது சிகரெட் பிடிக்கிறவர்கள் இருந்தால் அவர்களாலும்  புகைப்பதைக் கை விட முடியும் என்பதற்காக இந்தப் பதிவு. 


--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,

5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2011/5/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
புக் ~ புகௌ ~ புகா:  :-)

’சிகரெட்டை விடுவது மிகச்சுலபம். எவ்வளவோ முறை விட்டிருக்கிறேன்’ என்று Mark Twain நகைச்சுவைதான் நினைவிற்கு வருகிறது. 

எனென்றால் நானும் எத்தனையோ முறை இனிமேல் அவ்வளவுதான் நோ மோர் புக்ஸ். என்று முடிவெடுத்திருக்கிறேன். புத்தகங்கள் வாங்கும் பழக்கத்தை விட்டுவிடுதல் மிகச்சுலபம். 

நண்பர் மேல்கோட்டிற்குப் போய் அங்கிருந்து போன் செய்கிறார். ஸம்ஸ்க்ருதக் கழகத்தின் புத்தக விற்பனை அறையிலிருந்து பேசுகிறார். 

அப்புறம் என்ன? சங்கல்பம் தர்ப்பயாமி..... 

அதுவும் விசிஷ்டாத்வைத கோசம் -- பத்து வால்யூம்கள் போட்டிருக்கிறார்கள். 

கோசம் என்றால் ஓரளவிற்கு டிக்‌ஷனரி, ஓரளவிற்கு என்சைக்ளோபேடியா, ஓரளவிற்கு கன்கார்டன்ஸ் என எல்லா அம்சங்களும் கலந்திருக்கும். 

விசிஷ்டாத்வைதம் சம்பந்தமான ஏகப்பட்ட பதங்களுக்கு அகர வரிசையில் 10 நூல்களில் பொருள் விளக்கியிருக்கிறார்கள் ஸம்ஸ்க்ருதத்தில். நல்ல குறிப்புதவி நூல்கள். 

விசிஷ்டாத்வைத கோச: 

பத்து ஸம்புடங்கள் 

ஸம்ஸ்க்ருத ஸம்சோதன் ஸம்ஸத் 

மேலுகோட்டை --571431 

விலை ஒவ்வொன்றும் சுமார் 200 ரூபாய். 

பத்து வால்யூம்களும் 2000 ரூபாய்க்குள் அடக்கம். 

அத்வைதத்திற்கு ஒரு கோசம் பார்த்திருக்கிறேன். அருமை. 

அதே போல் த்வைதத்திற்கு ஒரு கோசம் இருக்கிறதா தெரியவில்லை. 
*** 


அடுத்து ஸ்ரீராமானுஜர் அருளிய பகவத்கீதா பாஷ்யம் திறனாய்வுப் பதிப்பு. மூன்று வால்யூம்களில். 

கூடவே மஹாமஹோபாத்யாய என் எஸ் ராமபத்ராசார்யா அவர்களின் பாஷ்ய விவ்ருதியும், ச்லோகார்த்தமான விளக்கங்களும். 

Dr K S Narayanacharya அவர்களின் அருமையான ஆங்கில அறிமுகம் அருமை. 

மூன்று வால்யூம்களும் சேர்ந்து 1890 ரூபாய். 

வாழ்க 

Academy of Sanskrit Research 
Melukote -- 571431 

********* 


ந கச்சிதா3ஸீத3ந்ருதோக்திநா விநா நிஷேத4தி ப்ரேயஸி கா க3திர் மம|

ஸமாக3மாஹே ஸ்ரவத3ம்பு3ஸம்ஸ்தி2த: ப3க: ப்ரஸந்நோSர்தி2த மத்ஸ்ய ஸம்ஹதி: || 


இந்த ச்லோகம் குறுந்தொகைப் பாட்டு ஒன்றின் ஸம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு. 


குறுந்தொகை 25 


யாரும் இல்லைத் தானே கள்வன் 
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ 
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால 
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும் 
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே. 
-கபிலர்.  

(பாடல் இணையத் தயவு -- ப்ராஜக்ட் மதுரை) 

இந்தப் பாடலை ஸம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்திருப்பது மின் தமிழுக்கு முன்னரே நாம் அறிமுகப் படுத்திய ஸ்ரீ ஏ வி சுப்ரமணியன் அவர்கள். 

இது ஒரு பாடல் மட்டும் இல்லை. குறுந்தொகையிலிருந்து சுமார் 200 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஸம்ஸ்க்ருத பத்யங்களாகச் செய்திருக்கிறார் திரு ஏ வி எஸ். 
வெளியீடு -- ஸாஹித்ய அகாடமி. 

திரு ஏ வி எஸ் ஓர் அருமையான இலக்கிய வாதி. வடமொழி சரளமாகப் பேசும் வல்லமை கொண்டவர். தமிழில் சங்கப் பாடல்களை மிகவும் நேசிக்கும் ரசிகர். வடமொழி காவிய சாத்திரக் கோட்பாடுகளையும், தமிழ் தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகளையும் இணைத்து சங்கப் பாடல்களை ரசித்து, நம்மையும் ரசிக்க செய்வதில் மிகத் திறமையானவர். அவரே காவிய சாத்திரக் கோட்பாடுகளில் புதிய தடங்கள் உருவாக்கியவர். 

தமிழில் அளபெடையை கவிஞர்கள் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்று அவருடைய விளக்கம் அருமை. 

இந்த நூலில் 200 குறுந்தொகைப் பாடல்களுக்கும் ஸம்ஸ்க்ருத ஆக்கம, கூடவே ஸம்ஸ்க்ருதத்தில் விளக்கம், துணைக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு பாடல்களுக்கு என்று தமிழ் தெரியாத பிற மொழி இந்தியர்க்கு நன்கு பயன்படும் வண்ணம் சங்க நூல் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கும் திரு ஏ வி எஸ் அவர்களின் அரும்பணி பாராட்டிற்குரியது. 

நூல் 

Srngarapadyavali 

By A V Subramanian 

Sahitya Academy 

Rs 150 

ஓர் அருமையான ஆங்கில முன்னுரை நூலை முகப்பில் அணி செய்கிறது. 

அதில் ஆசிரியர் கூறும் ஒரு கருத்து கவனத்திற்குரியது. த்வனி என்ற வடமொழி காவிய சாத்திரக் கருத்தின் மிக நுணுக்கமான உதாரணங்களாகச் சங்கப் பாடல்கள் திகழ்கின்றன என்று கூறுகிறார். 

Suggestion or dhvani has received a great deal of attention at the hands of Sanskrit rhetoricians. But the use of this device by creative poets is more extensively met with in Tamil Sangam love poetry than even in Sanskrit literature. (pp14) 

திரு ஏ வி எஸ் 200க்கும் மேற்பட்ட நூல்கள் இலக்கிய சம்பந்தமாக எழுதியுள்ளார். 


முன்னரே திரு ஏ வி எஸ் பற்றி எழுதியவற்றின் சுட்டிகள் 



***

Innamburan Innamburan

unread,
May 18, 2011, 4:09:18 PM5/18/11
to thamiz...@googlegroups.com
நற்றிணை படித்திருப்பாரோ!
It is loading more messages.
0 new messages