எழுத்தாளர் சுஜாதா

23 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 27, 2008, 12:54:08 PM2/27/08
to
எழுத்தாளர் சுஜாதா மறைவு!

எழுத்தாளர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரெங்கராஜன்) இன்று
27/02/2008 இரவு 9:22 க்கு ஆசாரியன் திருவடி அடைந்தார்.
http://www.desikan.com/blogcms/?item=200

நா கணேசன்

Kannan Natarajan

unread,
Feb 27, 2008, 5:55:46 PM2/27/08
to Kannan Natarajan
வணக்கம்,
 
அமரர் சுஜாதா அவர்கள் 70-80களில்,தமிழ் புதினத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர். விஞ்ஞானத்தையும்,மெய்ஞானத்தையும் ஆழமாக நாம் சிந்திக்க பல நூல்கள் வழியாக எடுத்துக்காட்டியவர். அவர் புகழ் வாழ்க.
 
கீழே தினமணியில் அவரின் பல வாசகர்களில் ஒருவரான வ.இரங்காச்சாரியின் அஞ்சலி.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
 
எழுத்தில் இளமை, புதுமை - இதுதான் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 1970-களில் தமிழ் பத்திரிகைகளில் எழுத்தாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோது, அவர்களில் இளம் தளகர்த்தராக சுஜாதா இருந்தார்.

சுஜாதா என்ற புனைபெயர், அவருடைய துணைவியாரின் பெயராகவே இருந்தபோதிலும் அதில் கவர்ச்சி மின்னியது. அவருடைய எழுத்தும் மின்னல், கதையும் மின்னல். மிகப்பெரிய தத்துவ விசாரங்களையும், கள வர்ணனைகளையும் எழுதாமலேயே நாவல்களையும் சிறுகதைகளையும் உள்ளத்தில் பதிய வைத்தவர்.

பெண்களை வர்ணிக்க அவர் செலவிட்ட நேரமும் எழுத்துகளும் குறைவுதான் என்றாலும் வாசகனின் நினைவில் அவை புகுந்துகொண்டு இம்சை செய்த நேரங்கள் அதிகம். இளைஞர்கள் மட்டும் அல்ல யுவதிகளாலும் போட்டி போட்டு வாசிக்கப்பட்டவர்.

அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தை மட்டும் அல்லாது பெங்களூருவையும் தில்லியையும் (அதன் அஜ்மல்கான் ரோடு, எம்.ஜி. ரோடு மகாத்மியங்கள் உள்பட) வர்ணித்து காசு செலவில்லாமல் "காதல் ஷேத்ராடனம்" போக வைத்தவர்.

விமானம் எப்படி ஓடுகிறது, கம்ப்யூட்டர் எப்படிச் செயல்படுகிறது, ஹைஜாக்குகள் எப்படி நடக்கின்றன, கணினியின் கட்டுப்பாட்டில் எதிர்கால நகரங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நடைச் சித்திரமும், கடைசி பாராவில் கதையின் போக்கையே படு கிண்டலாக மாற்றிய முத்திரைக் கதைகளும் இன்ன பிற உத்திகளும் சுஜாதாவின் முத்திரைகள்.

பத்திரிகைகளில் எழுத தொழில்முறை எழுத்தாளர்கள் ஆயிரம் பேர், நமக்குக் கிடைத்த நல்ல உத்தியோகத்தில் நாலு நாட்டைப் பார்ப்போம், நமது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்ப்போம் என்று ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் நினைத்திருந்தால், நமக்கு "சுஜாதா"வின் அறிமுகமே கிட்டியிருக்காது.

எதற்காக எழுத வந்தாரோ, தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு எழுத்து விருந்து படைத்தார். அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்ட "மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்".

வ.ரங்காச்சாரி

(வாசிக்கலாமோ கூடாதோ என்ற அச்சத்தோடு பள்ளிக்கூட நாட்களிலிருந்து சுஜாதாவின் கதைகளை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் படித்து மகிழ்ந்திட்ட வாசகனின் கண்ணீர்த்துளி அஞ்சலி இது.)

நன்றி: தினமணி

srirangammohanarangan v

unread,
Feb 27, 2008, 10:27:51 PM2/27/08
to minT...@googlegroups.com
எழுத்தாளர்  சுஜாதா  மறைவு  தமிழ் எழுத்துலகின்  ஒரு  வகைப்பாட்டின்  முடிவு.  நவீன  விஞ்ஞானத்  தொழில்நுட்பம் என்ற  பறவை  தமிழ்  ஆழங்களின்   மேலலைப்பரப்பில்  வந்து   போட்ட  ஒரு  காக்கைக்  குளியலாகத்தான்  அவருடைய எழுத்து  பொதுவாக எனக்கு  ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது.  அவருடைய எழுத்தில்   முதலில்  நமக்குப்  படுவது  மொழியை    ஒரு  ஹைடெக்  தேவைக்கேற்ப   சிறிதும்  தயக்கமின்றி   மாற்றிக்  கையாளும்  துணிச்சல்  அல்லது  தான்தோன்றித்தனம்.  நாம்  அதை  விரும்புகிறோமா  அன்றா என்பதைப்  பொறுத்து  எப்படிவேண்டுமானாலும்  கொள்ளலாம்.   அவருடைய   சிறுகதை  ஒன்று,  'காகிதச்  சங்கிலிகள்' என்று  நினைவு,  இன்னும்  நினைவை  விட்டு  நீங்காமல்  இருக்கிறது.   மத்திய  தர  வர்க்கத்து  குடும்ப  உறவுகளின்,  நகர்ப்புற  வாழ்க்கையின்  பலவந்தங்களில்  நீர்த்துப்போன  ஒட்டுறவுகளையும்,  சொந்த  பந்தங்களின்,  சுற்றம்  தழாலின்  சுகத்திற்குப்  பதில்  நவீன   சுக  சாதனங்களால்  ஆன  வாழ்வின்  தன்னிச்சைப்  போக்கின்  தன்மைகளையும்  அன்றாட   வாழ்வின்  இக்கட்டுகளில்  பிரதிபலித்துக்  காட்டும்  போக்கு   அவருடைய எழுத்துகளில்   இருக்கிறது.   பிரதிபலித்துக்  காட்டுவதோடு  சரி    அதைவிட  ஆழமாகச்  செல்வதில்லை.   அதனாலேயே   ஒரு  மேலோட்டத்தன்மையும்,  விட்டேத்திமனப்பான்மையான  ஓட்டமும்   அவர் எழுத்து  நடையில்  அமைந்துவிட்டன.   
 
ஆனால்   தமிழைப்பற்றியே  சிறிதும்  நினைத்துப்பார்க்காத   ஹைடெக்,   ஐடி,  தொழில்நுட்ப  இளம்  தலைமுறைகள்  பல  அவரால்  தமிழுக்குள்  தள்ளப்பட்டனர் என்பதும்  உண்மை.  ஆங்கிலப்  புதினங்களின்  பல  உத்திகளையும்,  கதைக்கருக்களையும்,   கதைமாந்தர்  சமன்பாடுகளையும்  அவர்  தமிழில்  கடத்திவந்தார் என்று  கூறுவது எத்துணை  உண்மையோ  அத்துணை  உண்மை   அவர்  அந்த  மறு  ஆக்கங்களைத்  திறம்படச்  செய்தார் என்பதும்.   உதாரணம்   பெரி மேஸன்  போன்ற  கதை  அமைப்புகளை   கணேஷ்  வசந்த்   கதையமைப்புகளில்  தந்தது.   விஞ்ஞான  நவீன  தொழில்நுட்பங்களை  கதைக்களமாக  ஆள்வது  அநேகமாக   தமிழுக்கு  அவருடைய  கொடை எனலாம்.   இதனாலும்,   அவருடைய எழுத்தில்   ஊடறக்  கலந்திருக்கும்  பொதுஜனத்  தன்மையினாலும்   அவர்   சினிமாவுள்  சென்றது  இயல்பே.  அவ்வாறு   அவர்  செல்லாமல்  இருந்திருந்தால்   வேறு எங்கும்  அவர்  சென்றிருக்கப்  போவதில்லை,  ஆழத்திலும்  சரி,  அகலத்திலும்  சரி, என்னும்போது   சினிமா  அவருக்கு  உரிய  தொடர்ச்சியாகத்தான்  படுகிறது.   அவருடைய  எழுத்து   நுழைய  மறுத்த   வாழ்க்கையின்  ஆழங்களுக்குத்தான்   பின்னாளில்  அவருடைய  செவ்வியல்  நூல்களுக்கான  உரையாக்க  முயற்சிகள் எட்டிப்பார்க்க  முயன்றன.   காலம்  கடந்த  முயற்சி என்று  அவரே  கருதியதாலோ என்னவோ    வாழ்க்கையின்  நிலைத்த  விழுமியங்களைப்  பற்றி   ரீங்கரிக்கும்   செவ்வியல்  செல்வங்களை   அவற்றிற்கு  இயல்பான   ஆழங்களை  விடுத்து   தனக்குப்  பழகிப்போன,  தான்  வெளியில்  வர  விரும்பாத   பிரதிபலிப்புகளால்  ஆன  எழுத்தின்  மேலோட்டத்தனத்திற்கு  அவற்றைக்  கொண்டு  வர  முயன்று  தோற்றார்.  அந்தத்  தோல்வியையே   வெற்றியாகக்  கருதும்  அவர்  ரசிகர்கள்  ஒருபுறம்  இருப்பினும்,  அந்தத்  தோல்வி  அவருடைய  முனைப்பிற்கு  சாட்சியாக  இருப்பது. 

Narayanan Kannan

unread,
Feb 27, 2008, 11:21:44 PM2/27/08
to minT...@googlegroups.com
2008/2/28 N. Ganesan <naa.g...@gmail.com>:
இச்சேதியை அறியத் தந்தமைக்கு நன்றி நா.கணேசன். அவருடைய பரமரசிகன் தேசிகனின் வலைப்பதிவு இதற்கு கூடுதல் கனத்தைச் சேர்க்கிறது. மனிதர் எழுதமுடியாமல் விக்கித்துப் போயிருக்கிறார்.
 
பிறப்பு எப்படி அதிசயமோ, அதுபோல் இறப்பும் அதிசயமே. எங்கிருந்து வருகிறோம் என்பதும் பூடகம், போவதும் பூடகம். எங்கேயாவது இருந்து கொண்டு, 'கண்ணன் சௌக்கியமா?' என்று சொல்லிக் கொண்டு இருக்கலாம். இம்முறை அவர் இருந்திருந்தால் பார்த்திருப்பேன்.
 
சுஜாதாவின் எழுத்து பள்ளிக்காலத்திலிருந்து பரிட்சயம். வசந்த்-கணேஷ் பயித்தியங்களில் நானுமொன்று. விடலைக் கனவுகளுக்கு உரம் போட்ட எழுத்து :-) கணினி என்பது எங்களுக்கு 70 களிலேயே பரிட்சயப்பட வைத்துவிட்டார் மனிதர். எனவே எனது பல இலக்கிய நண்பர்களுக்கு ஏற்பட்டது போல் ஒரு தொழில்நுட்ப தாக்கம் (technological shock) இல்லாமற் போனது. மேலும் மாறிவரும் புதிய உலகை எங்கள் தலைமுறைக்கு சிரமமின்றி அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. நவீன மயமாகிவரும் ஒரு தொழில்நுட்ப உலகு! அறிவியல் புதினம் எனும் கருதுகோளை அறிமுகப்படுத்தியவரும் இவரே. ஒரு புயல்வேக நடை. 'மத்திமர்' (மத்திய வர்க்கம் என்பதின் சுருக்கம்) அவசரகதி வாழ்வோடு இயைந்து போகும் ஒரு புது நடையை அறிமுகப்படுத்தியவர் சுஜாதா.
 
சுஜாதா, செவ்விலக்கியத்திற்குள் புகுந்த போது நிறைய அடிவாங்கினார். செவ்விலக்கியக் கூட்டம் காத்திருந்து 'கலாச்சி'விட்டது. ஆனாலும், எனக்கு அவரைப் பிடிக்கும். ஒரு மரியாதை. பிதாமகர் என்ற கௌரவம்.
 
சுந்தரராமசாமி, தமிழினி 2000ன் இணையமும், இலக்கியமும் எனும் அமர்வை என்னைத் தலைமை தாங்கி நடத்தச் சொன்னார். சென்னையில் சுஜாதாவை வைத்துக் கொண்டு என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அவர்கள் இலக்கிய எதிரிகள் என அறிந்தும் சுஜாதாவைத் தலமை ஏற்க வைத்து அந்த அமர்வை நடத்தினேன். அப்போது அறிவியல் இலக்கியம் பற்றிய அழகான உரையை அளித்தார். அவருடன் செல்லமாக மோதுவதுண்டு. ஒருமுறை மாலன் அவர்கள் நடத்திய சன்நியூஸ் நிகழ்ச்சிக்கான ஒரு தொடரில் நானும் சுஜாதாவும் ஒரு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் சில நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்தோம். அவர் மீது மக்கள் கொண்ட அபிப்பிராயம் தவறு என்பதைக் காட்ட அப்படிச் செய்தேன். அவரும் மிக அழகாக நடத்தித்தந்தார்.  அவரால் எதுவும் முடியும். ஆனால் வீம்பு. காவிரித் தண்ணீருக்கு உண்டாட ஒரு எள்ளல், பரிகாசம். என்ன செய்வது? பிறவிக்குணம்!
 
சென்னை இலக்கியச் சிந்தனைக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து "மின் உலகம் தமிழின் ஆறாம்தினை" என்பதை விளக்கச் சொன்னார். காந்தி சீனிவாசன் மட்டபத்தில் நடந்த அக்கூட்டத்தை என்னால் மறக்கமுடியாது.
 
சுஜாதா ஒரு மாற்றத்தின் வித்து. எப்படி இன்று மின்னுலகம் பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறதோ, அதுபோல் பல புதிய எழுத்தாளர்கள் உருவாக அவர் காரணமாயிருந்தார். அவரின் பெரிய கொடை, அவர் ஒரு நல்ல வாசகர். அவரது ரசிகர்களையும் நிறைய வாசிக்க வைத்தார். பல எழுத்தாளர்கள் இன்று தைர்யமாக சக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன் என்று சொல்லும் நல்ல பழக்கத்திற்கு வித்திட்டவர் அவர்.
 
சுஜாதா மறையவில்லை. இருக்கிறார்.

venkatram dhivakar

unread,
Feb 28, 2008, 12:01:51 AM2/28/08
to minT...@googlegroups.com
சுஜாதா:
 
இன்று காலை ஆறு மணிக்கே அந்தச் செய்தி வந்தது. அதிர்ந்துதான் போனேன். என்னதான் அவர் பத்தாண்டுகாலமாக இருதய நோயால் அவதிப்படுபவர் என்றாலும் இப்படி திடீரென்று அதிர்ச்சி தருவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்தான்.
 
எனக்கு தனிப்பட்ட முறையில் தவிப்புதான். என் எழுத்துக்களைப் பற்றி ஆனந்தவிகடன் மூலம் முதன்முதலில் எல்லோரும் அறிய அறிமுகப்படுத்தியவர். வம்சதாரா நூலைப் பற்றிய ஒரு சிறந்த அறிமுகத்தைத் தந்தவர். வம்சதாராவை தெலுங்கில் மொழி பெயர்க்கவேண்டுமென்றவர்.
 
ஒருபக்கம் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகம் மூலம் மூலை முடுக்கெல்லாம் அறியும் பேரும் புகழும் பெற்றாலும், அவரை நன்றாக நமக்குள்ளே அறியச் செய்வது அவரின் எழுத்துக்கள்தான். புதுமை மற்றும் புரட்சி இரண்டையும் தமிழ் எழுத்துலகில் புகுத்தியவர். இன்று நாம் பேசும், பழகும் அறிவியல் சாதனங்களை அது நடைமுறைக்கு வருமுன்பே அதைப் பற்றி எழுதி நம் வாயைப் பிளக்க வைத்தவர். நாடகத்திலிருந்து, நாட்டியக்கலை வரை மனிதன் எழுதாத விஷயம் இல்லை. ஆழ்வார் பாடல்களையும், சங்கப் பாடல்களையும் பற்றி மிக ஜனரஞ்சகமுறையில் எழுதியவர். கல்கிக்குப் பிறகு எல்லா வாழ்வியல் விஷயங்களையும் எழுதியவர் இவர் ஒருவர்தான் இருக்கமுடியும் என நினைக்கிறேன். ஆனாலும் நான் பார்த்தவரை மிக மிக எளிமையானவர்.
 
தமிழன்னையின் செல்ல மகன் ஆத்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்.
 
திவாகர்.
 
Subashini Kanagasundaram

unread,
Feb 28, 2008, 6:51:24 AM2/28/08
to minT...@googlegroups.com
இச்செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விஞ்ஞான தொழில் நுட்பம் கணினி தொழில்நுட்பங்களை தனது கதைகள் மற்றும் நாவல்களில் புகுத்தி தமிழ்  எழுத்து இலக்கிய உலகில் ஒரு சாதனைப் படைத்தவர்.  2004ல் தமிழகம் சென்றிருந்த போது அவரை தமிழ் இணைய மாநாட்டில் நேரடியாகச் சந்தித்து பேசும் வாய்ப்பு அமைந்தது.   அந்த நினைவுகள் இன்னமும் மறையவில்லை.
 
இவரது குடும்பத்தினருக்கு தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.
 
அன்புடன்
சுபா

kra narasiah

unread,
Feb 28, 2008, 2:02:08 AM2/28/08
to minT...@googlegroups.com

His crispness was the forte of his writing. No doubt he had the highest number of ypouth as his fans!

May his soul rest in peace.

narasiah

----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Thursday, February 28, 2008 9:51:44 AM
Subject: [MinTamil] Re: எழுத்தாளர் சுஜாதா

2008/2/28 N. Ganesan <naa.g...@gmail.com>:
எழுத்தாளர் சுஜாதா மறைவு!

எழுத்தாளர் சுஜாதா (ஸ்ரீரங்கம் ரெங்கராஜன்) இன்று
27/02/2008 இரவு 9:22 க்கு ஆசாரியன் திருவடி அடைந்தார்.
http://www.desikan.com/blogcms/?item=200
 
இச்சேதியை அறியத் தந்தமைக்கு நன்றி நா.கணேசன். அவருடைய பரமரசிகன் தேசிகனின் வலைப்பதிவு இதற்கு கூடுதல் கனத்தைச் சேர்க்கிறது. மனிதர் எழுதமுடியாமல் விக்கித்துப் போயிருக்கிறார்.
 
பிறப்பு எப்படி அதிசயமோ, அதுபோல் இறப்பும் அதிசயமே. எங்கிருந்து வருகிறோம் என்பதும் பூடகம், போவதும் பூடகம். எங்கேயாவது இருந்து கொண்டு, 'கண்ணன் சௌக்கியமா?' என்று சொல்லிக் கொண்டு இருக்கலாம். இம்முறை அவர் இருந்திருந்தால் பார்த்திருப்பேன்.
 
சுஜாதாவின் எழுத்து பள்ளிக்காலத்திலிருந்து பரிட்சயம். வசந்த்-கணேஷ் பயித்தியங்களில் நானுமொன்று. விடலைக் கனவுகளுக்கு உரம் போட்ட எழுத்து :-) கணினி என்பது எங்களுக்கு 70 களிலேயே பரிட்சயப்பட வைத்துவிட்டார் மனிதர். எனவே எனது பல இலக்கிய நண்பர்களுக்கு ஏற்பட்டது போல் ஒரு தொழில்நுட்ப தாக்கம் (technological shock) இல்லாமற் போனது. மேலும் மாறிவரும் புதிய உலகை எங்கள் தலைமுறைக்கு சிரமமின்றி அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. நவீன மயமாகிவரும் ஒரு தொழில்நுட்ப உலகு! அறிவியல் புதினம் எனும் கருதுகோளை அறிமுகப்படுத்தியவரும் இவரே. ஒரு புயல்வேக நடை. 'மத்திமர்' (மத்திய வர்க்கம் என்பதின் சுருக்கம்) அவசரகதி வாழ்வோடு இயைந்து போகும் ஒரு புது நடையை அறிமுகப்படுத்தியவர் சுஜாதா.
 
சுஜாதா, செவ்விலக்கியத்திற்குள் புகுந்த போது நிறைய அடிவாங்கினார். செவ்விலக்கியக் கூட்டம் காத்திருந்து 'கலாச்சி'விட்டது. ஆனாலும், எனக்கு அவரைப் பிடிக்கும். ஒரு மரியாதை. பிதாமகர் என்ற கௌரவம்.
 
சுந்தரராமசாமி, தமிழினி 2000ன் இணையமும், இலக்கியமும் எனும் அமர்வை என்னைத் தலைமை தாங்கி நடத்தச் சொன்னார். சென்னையில் சுஜாதாவை வைத்துக் கொண்டு என்னால் அதைச் செய்யமுடியவில்லை. அவர்கள் இலக்கிய எதிரிகள் என அறிந்தும் சுஜாதாவைத் தலமை ஏற்க வைத்து அந்த அமர்வை நடத்தினேன். அப்போது அறிவியல் இலக்கியம் பற்றிய அழகான உரையை அளித்தார். அவருடன் செல்லமாக மோதுவதுண்டு. ஒருமுறை மாலன் அவர்கள் நடத்திய சன்நியூஸ் நிகழ்ச்சிக்கான ஒரு தொடரில் நானும் சுஜாதாவும் ஒரு வார்த்தை ஆங்கிலம் கலக்காமல் சில நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்தோம். அவர் மீது மக்கள் கொண்ட அபிப்பிராயம் தவறு என்பதைக் காட்ட அப்படிச் செய்தேன். அவரும் மிக அழகாக நடத்தித்தந்தார்.  அவரால் எதுவும் முடியும். ஆனால் வீம்பு. காவிரித் தண்ணீருக்கு உண்டாட ஒரு எள்ளல், பரிகாசம். என்ன செய்வது? பிறவிக்குணம்!
 
சென்னை இலக்கியச் சிந்தனைக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து "மின் உலகம் தமிழின் ஆறாம்தினை" என்பதை விளக்கச் சொன்னார். காந்தி சீனிவாசன் மட்டபத்தில் நடந்த அக்கூட்டத்தை என்னால் மறக்கமுடியாது.
 
சுஜாதா ஒரு மாற்றத்தின் வித்து. எப்படி இன்று மின்னுலகம் பல புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறதோ, அதுபோல் பல புதிய எழுத்தாளர்கள் உருவாக அவர் காரணமாயிருந்தார். அவரின் பெரிய கொடை, அவர் ஒரு நல்ல வாசகர். அவரது ரசிகர்களையும் நிறைய வாசிக்க வைத்தார். பல எழுத்தாளர்கள் இன்று தைர்யமாக சக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்திருக்கிறேன் என்று சொல்லும் நல்ல பழக்கத்திற்கு வித்திட்டவர் அவர்.
 
சுஜாதா மறையவில்லை. இருக்கிறார்.

Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

Tthamizth Tthenee

unread,
Feb 28, 2008, 7:09:19 AM2/28/08
to minT...@googlegroups.com
எத்தனையோ எழுத்தாளருக்கு மத்தியில் தன்னை
எழுத்து நடையாலே வித்யாசப் படுத்திக் கொண்டு
வலமாக எழுதியவர் சுஜாதா அவர்கள்
அவர்களுடைய பாணி
மா
டி
ப்

டி

ளி
ல்
போன்றவை பலரை நாவல்கள் படிக்கத்தூண்டியது
அன்னாரது இழப்பு எழுத்துலகிற்கு ஈடு செய்ய முடியாதது

அன்புடன்
தமிழ்த்தேனீ

naa.g...@gmail.com

unread,
Feb 28, 2008, 9:33:23 AM2/28/08
to மின்தமிழ்

நன்றி கண்ணன். நல்லஞ்சலி.

நாசாவில் ஒரு மீட்டிங்க்குச் செல்லவேண்டும். எனவே, சுருக்கமாக.

(1) 2005-ல் டல்லஸ் நகரில் TNF-FeTNA மாநாடு நடந்தது. தில் செந்தமிழ்,
யுனித்தமிழ் பற்றி
சுஜாதா எழுதிய கட்டுரை என்னிடம் உள்ளது. அவர் நினைவாக இதை இணையத்தில்
வெளியிடுவேன். அம்மலரில் யுனித்தமிழ் ஜிகுழுமம் பற்றிய கவிஞர் இரவா
கட்டுரையும் இடம்பெற்றது.

(2) தேசிகன் எ-முகவரி என்ன? தரமுடியுமா?
ஆமாம், அவருக்கு எங்கள் ஊர்க்கதை எல்லாம் எப்படித் தெரியும்?
தாராபுரத்தில் இருந்தவரா?
http://www.desikan.com/blogcms/?item=152

(3) உங்கள் ஆறாம்திணைக் கட்டுரைக்கு இரசிகன் நான்.

பிற பின்.

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com

On Feb 27, 10:21 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/2/28 N. Ganesan <naa.gane...@gmail.com>:

Tirumurti Vasudevan

unread,
Feb 28, 2008, 10:34:58 AM2/28/08
to minT...@googlegroups.com
தேனீ, அப்படி எழுதவில்லை.

ங்
கி
னா
ன்
என்று எழுதினார்! கதை நைலான் கயிறு.
திவா

2008/2/28 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

--
My blogs:(all in Tamil)
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Feb 29, 2008, 12:02:51 AM2/29/08
to minT...@googlegroups.com
அன்புள்ள திவா நான் ஒரு உதாரணத்துக்குதான் சொன்னேன்

வார்த்தைகள் மாறி இருக்கலாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Narayanan Kannan

unread,
Mar 1, 2008, 2:06:33 AM3/1/08
to minT...@googlegroups.com
சுஜாதாவோடு வாழ்ந்தது பற்றி
- வ.ஐ.ச.ஜெயபாலன்
---------- ----------- -----------------

எதிர் பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச
நேரம் முடங்கிப்போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித்
துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப் படுத்தும் ஒரு
கணக்கு தீர்க்கப் பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை
தமிழாராட்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்திததில் இருந்து 1999ல்
எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்ப்பு எப்போதாவது நேரிலும்
எப்போதும் இணையத்திலும் செளித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு
பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே.

மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக்
கணனிக் காலம்வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுப்பத்தாலும் மனசாலும்
மீண்டும் மீண்டும் பிறந்து காலத்தை வென்றுகொண்டிருந்தார். என்னை கனனியில்
எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள்
அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே
சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் அவரரது
கைவிரலலைப் பற்றித்தான் கணனித் தமிழ் உலலகினுள் காலடி எடுத்து
வைத்தார்கள் என்று பின்னர் அறிந்தேன். மாறும் உலகோடு மீண்டும் மீண்டும்
பிறந்து தலைமுறைகளைக் கடந்து செல்கிற கலை கைவர அமரர் சுஜாதாவின் நட்பும்
எனக்கு உதவியிருக்கிறது. அவரைப்போலவே நானும் இளைய கலைஞர்களது படைப்புகளை
தேடி தேடி வாசிக்கவும் மனம் திறந்து பாராட்டவும் பழகிக் கொண்டேன்.

கால் நூற்றாண்டுகளின் முன்னம் 1981ம் ஆண்டு தைமாதம் மதுரைத்
தமிழாராட்ச்சி மாநாட்டு மண்டபதில்தான் நாங்கள் முதன் முதலாகச்
சந்தித்தோம். கோமல் சுவாமிநாதந்தாதான் சுஜாதாவை எனக்கு அறிமுகம் செய்து
வைத்தார். கோமல் சுவாம்நாதனை தலித் இலக்கிய முன்னொடியும் எனது ஆதர்சமுமான
கே.டானியல் அண்ணாதான் எனக்கு அறிமுகப் படுத்திவைத்தார். அந்த பயணம்
முழுவதிலும் எங்களோடு டானியல் அண்ணாவும் இருந்தார்.

ஆச்சரியப் படும்வகையில் பிரபல எழுத்தாளரான சுஜாத்தா என்னுடைய
கவிதைகளை அறிந்து வைத்திருந்தார். 1970பதுகளின் பிற்பகுதியில்
யாழ்ப்பாணம் வந்திருந்த எழுத்தாளர் அசோக மித்திரனூடாக என்னுடைய ஆரம்ப
காலக் கவிதைகள் சில ஏற்க்கனவே தமிழ் நாட்டை எட்டியிருந்தது

(Google chat-lirunthu. Seoul Airport)

Reply all
Reply to author
Forward
0 new messages