அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க.....

87 views
Skip to first unread message

Tirumurti Vasudevan

unread,
Jan 13, 2010, 8:55:29 AM1/13/10
to mint...@googlegroups.com
ஆமாம். வெகு நாட்களாக இருக்கிற ஆதங்கம். அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க சட்ட வழி முறைகளே இல்லையா?
உங்கள் பதிவுகளில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். வேறு இழையாக இதை பிரித்து கொண்டு போகிறேன்.
திவாஜி

2010/1/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>
திவாஜி விடுவதாக இல்லை.



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Innamburan Innamburan

unread,
Jan 13, 2010, 9:45:38 AM1/13/10
to mint...@googlegroups.com
திவாஜி,
,'எள்' என்றால் எண்ணெய்! இழை பிரிக்கவேண்டும் என நினைத்தேன். செய்து விட்டீர்கள்! இங்கு இந்த வினாவே தொடக்கம்.
.
அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசியல் சாசனம் வழி வகுத்துள்ளது. அந்தந்த செயல்களுக்கு அந்தந்த சட்டம் உண்டு; தண்டனை உண்டு. சான்றாக, சிறார்களையும், சிறுமிகளையும் வேலை வாங்கக்கூடாது, சட்டப்படி.  மற்றொரு சட்டம் அவர்களுக்கு கட்டாய கல்வி என்கிறது. நடப்பது நாம் அறிந்ததே.
௧. மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.
 
௨. அரசு சட்டத்தின் சாட்டையை வீசுவதில்லை.
௩.நீதித்துறையை என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.
௪. நிர்வாகம் தடம் மாறும் போது பொதுநல
வழக்கு, தகவல் உரிமை சட்டம், ஆகியவை அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க விரட்டலாம். சட்டம் மற்றவகையில் உதவாது, அதனுடைய பயன் வேறு.
இவையெல்லாம் புதியவை. அறுபது வருடங்ககளுக்கு முன்னாள், திரு வசந்த பை என்ற வழக்கறிஞர் தவறுகளை தட்டிக்கேட்டு நீதிமன்றத்தையே, ஒரு ஆட்டு ஆட்டி வைத்தார்.
௫.  அரசை உருப்படியாக வேலை செய்ய, அரசியல் வாதிகள் தன்னலம் அற்றவர்களாகவும்,சர்தார் படேல் போல திறன் படைத்தவர்களாக இருக்கவேண்டும். அது மக்களாட்சியில் துர்லபம். சர்வாதிகாரமோ கொடியது.
௬. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கட்டுப்பாடான விதிமுறைகள் உள்ளன.    கண்டு கொள்பவர்கள் இல்லை.
௭. எனவே, விழுப்புணர்ச்சி, போராட்டம் என்றெல்லாம் ஆரம்பிக்க ஹேது உண்டு. வரலாறும் அதையே கூறுகிறது.
இன்னம்பூரான்
 ,
 
 .  
2010/1/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

Tirumurti Vasudevan

unread,
Jan 13, 2010, 10:32:43 AM1/13/10
to mint...@googlegroups.com
அரசு மதிச்சாத்தானே மக்கள் மதிக்க? அரசே சட்டத்தை மதிக்காது, கோர்ட் உத்திரவை அமல் படுத்தாது ன்னா என்ன் மக்கள் செய்வாங்க?
அதான் கேக்கிறேன், அரசு தன் கடமையை செய்ய வேண்டும்ன்னு கேஸ் போட முடியுமா முடியாதா? ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் லே அப்படி கனடிய (?ப்ரிட்டிஷ்?) சட்டத்தில் இடம் உண்டுன்னு படிச்ச நினைவு. நினைவென்ன, படிச்சேன் நிச்சயமா.

2010/1/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>

௧. மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.

Innamburan Innamburan

unread,
Jan 13, 2010, 12:02:25 PM1/13/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
திவாஜி,
 
ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் கற்பனை நூல் எனினும்,  அதன் பின்ணணியில் ஆய்வு இருந்தது. 1960ல் அது எழுதப்பட்டபோது, அப்படி சட்டம் ஒன்றும் இல்லை; பிறகும் இல்லை. ஆனால், அந்தந்த சட்டங்களை மக்கள் கையாண்டார்கள் வெற்றியோடு. 'டார்ட்' சட்டம் இங்கிலாந்தில் வேரூன்றியிருந்தது. ஒரு ப்ராம் வண்டியில் இருந்த கம்பியானால் அமைந்த வசதி, தவறாக இணைக்கப்பட்டிருந்த்ததால், குழந்தையின் கண்ணை குத்தி விட்டது. வழக்கில், அதை விற்றவரும், உருவாக்கிய கம்பெனியும், பளுவான நஷ்டஈடு கொடுக்க  தீர்ப்பு. இந்தியாவில் 'ஏன் 'டார்ட்' பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது மர்மம்.பட்டாசு கம்பேனி சட்டத்தை மீறினால்  ஏற்படும் சாவுக்கு வரிப்பணத்த ஏன் கொடுக்கவேண்டும்? அவனிடம் பிடுங்க வேண்டியது தானே?
 
As John Stuart Mill put it, "Vigilance is the price of Liberty."
 
இங்கிலாந்தில் விழிப்புணர்ச்சி அதிகம்; வெல்ஃபேர் ஸ்டேட் அல்லவா. நான் ஐந்து வருடங்கள் இங்கு மக்கள் ஆலோசனை மையத்தில் தன்னார்வ பணி புரிந்த போதும், அத்துறையில் பட்டப்படிப்பு ஆய்வுகளிலும் கற்றுக்கொண்டது மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்பது. நாள் தோறும், அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்னுடையான உறுதியான கருத்து, நாடாளும்
மன்றம், அரசியல் சாஸனம் என்பதையெல்லாம் விட ஆங்கிலேயர்கள் Citizen Advice [established 1939] அமைப்பை நமக்கு தந்திருந்தால், நாம் சுபிக்ஷமாக இருந்திருப்போம். 2002 ஆண்டிலிருந்து அந்த அமைப்பின் தொடக்கத்தையாவது இந்தியாவில் செய்ய முயன்றேன். கஜினி படையெடுப்பு செய்தேன். படு தோல்வி அடைந்தேன். இந்தியாவில் பொதுவாக நான் கண்ட குறை, 'எதிலும் ஆதாயம் தேடுவது'. எனினும், சான்றோர்கள் பல இருந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் டா. பார்த்தசாரதி என்ரு ஒருவர் பழங்குடிமக்களுக்கு சேவை செய்தார். அவர் காலவியோகம் ஆனபோது, மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவரை இறைவன் என்றும், இறைவனுக்கு மரணம் இல்லை என்றும் நம்பி இருந்தார்கள்.
 
இந்தியாவில் அரசு இயந்திரம் இந்தளவுக்கு பழுது அடையும் என்று நாற்பது வருடங்களிக்கு முன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.
அன்புடன்,

இன்னம்பூரான்

2010/1/13 Tirumurti Vasudevan <agni...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karthi

unread,
Jan 13, 2010, 8:24:26 PM1/13/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரான்,
 
அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக
இருக்க முடியாது என வரலாறும், பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன.
அதன் குறைகள் அரசு அமைப்புடன் சேர்ந்தே பிறப்பவை. "உடன் பிறந்து கொல்லும்
நோய்கள்."
 
இதற்கான தீர்வு அரசு சேவைகளை தனியார் மயப்படுத்தலில்தான் இருக்கிறது. அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு சேவைகள் மேம்பாடு
அடைந்துள்ளன. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான் முதலிய
நாடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். மலேசியாவில் வருமான வரி வசூலிப்பு கூடத்
தனியார் துறையினால்தான் செய்யப்படுகிறது. இந்நாடுகளில் அரசாங்கம் பல துறைகளில்
மேலாண்மை மட்டுமே செய்கிறது.
 
ஆனால் தனியார் துறை இலாப நோக்குடையது. இலாபம் பெற சேவைகளுக்குக் கட்டணம்
விதிக்கும். சேவை பெறும் பொதுமக்கள் அதிகக் கட்டணம் தர வேண்டி இருக்கும்.
இந்தியாவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு கட்டாயம் இருக்கும்.
 
இந்தியாவுக்கு இன்னமும் ஒரு சோஷியலிச மனப்பான்மை இருக்கிறது. சோஷியலிசம்
மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த போதும் அதனை விடாப்பிடியாகப் பிடித்துக்
கொண்டிருக்கும். நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும் விளைவுகள் மோசமாக இருக்கும்.
 
ஆகவே அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசு இவற்றிலிருந்து விலக வேண்டும்.
மேலாண்மை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா சீரடையும்.
 
ரெ.கா.
 

N. Kannan

unread,
Jan 13, 2010, 9:49:29 PM1/13/10
to mint...@googlegroups.com
இந்தியா போன்ற ஆன்மீக பாதிப்புள்ள நாட்டில் எவ்வகையான அரசு செயல்படும்
என்பதே கேள்வி.
ஒரு காலத்தில் தெய்வத்திற்கு பயப்பட்டு காரியங்கள் நடந்து வந்தன.
விரைவில் வெளியாகப் போகும் மின்னூல்களில் உ.வே.சா காலம்வரை (ஆங்கில அரசு)
அது ஆங்கிலேயர்களையும் உடன் சேர்த்து எப்படி நடந்து வந்திருக்கிறது
என்பது தெரிய வரும். இன்னும் அங்கு தர்மசாலைகள் உள்ளன. எல்லாம்
தர்மத்திற்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.
அதே நேரத்தில் கோரமான சுயநலமும், ஊழலும், ஒழுங்கின்மையும் செய்முறை
வாழ்வாகியும்விட்டது.
ஒருபுறம் சோஷலிசம், இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்கு
கட்டுப்படுத்துகிறது.
ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாக, அடிப்படை அலகாக மாறிவிட்டது.
எனவே ஊழலை எப்படி ஒழுங்குபடுத்துவது எனும் புதிய ஃஇர்வாக நுணுக்கங்கள்
அங்கு செயல்முறைக்கு வரவேண்டும்.
ஊழல் என்பதும் தனியார் துறை சமாச்சாரம்தான்!

க.>

2010/1/14 karthi <karth...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Jan 14, 2010, 3:54:26 AM1/14/10
to mint...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் விடமுடியுது! :((((((((

2010/1/14 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 14, 2010, 4:23:14 AM1/14/10
to mint...@googlegroups.com
நன்னா காதுலே விழறது.


 
2010/1/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 14, 2010, 4:28:50 AM1/14/10
to mint...@googlegroups.com


2010/1/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 14, 2010, 4:44:35 AM1/14/10
to mint...@googlegroups.com


2010/1/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>
517.gif
360.gif

Venkatachalam Subramanian

unread,
Jan 14, 2010, 5:20:11 AM1/14/10
to mint...@googlegroups.com
நடுவண் அரசின் பொறுப்பிலுள்ள ஒரு நிறுவனம். தளவாடச் சாமாங்கள் பதிவேட்டில் (Dead stock Register) ஆயில் எஞ்சின் (பெட்டர்) உருப்படி 1.
என்ற பதிவில் இருந்த எஞ்சினைக் கடத்திச் செல்ல திட்டமிட்ட சில ஊழியர்கள் ஒரு புதிய ஏற்பாடு செய்தனர்.

டெட் ஸ்டாக் பதிவேட்டில் இருந்த பதிவினை மாற்றி(Consumable Stock Register) ‘கன்ஸுயூமபல் ஸ்டாக் ரிகிஸ்டருக்கு எடுத்து எழுதினான் ஒருவன். 

ஏன் பிறித்து எடுத்து எழுதினாய் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. எழுதியவன் ஒரு இட வல மாற்றம் செய்து பெயர்த்து எழுதியிருந்தான்.

’ஆயில் எஞ்சின் ‘ என்பதை ’எஞ்சின் ஆயில்’ என்று எழுதி முறையாக மேலதிகாரியிடம் சுருக்கொப்பமும் பெற்றான்.

பிறகென்ன! 
தினமும் பல வண்டிகளின் பெயரால் செலவு எழுதி ஒரு நன்னாளில் இருப்பு பூஜ்யம் என்று காட்டி காவலரையும் கூட்டத்தில் சேர்த்து பெரிய எஞ்சின் நோகாமல் கடத்தப்பட்டது.
குறுக்கு வழியில் வாழநினைக்கும் திருட்டுக் கூட்டம்!  தணிக்கை குழு ஒன்று இதனைக் கண்டுபிடித்து வெட்ட வெளிக்குக் கொணர்ந்து அந்தக் குழு தண்டிக்கப்படது.

ஓம். வெ.சுப்பிரமணியன்

2010/1/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>
517.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Jan 14, 2010, 5:26:59 AM1/14/10
to mint...@googlegroups.com
இப்படியும் நடக்கும் என்பதே ஆச்சரியம் தான், கடத்தல் மட்டுமல்ல, தண்டனையும் கூட!

2010/1/14 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
517.gif
360.gif

karthi

unread,
Jan 14, 2010, 5:48:07 AM1/14/10
to mint...@googlegroups.com
ஐயா,
 
எங்கள் நாட்டிலும் எஞ்சின் திருடர்கள் உள்ளார்கள்.
இங்கே காணலாம்:
 
 
ரெ.கா.
517.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 14, 2010, 11:23:39 AM1/14/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

திரு. ரெ.கா

 

இங்கிலாந்தில்  மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்றும்,. நாள் தோறும், அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்றல்லவவா கூறினேன். அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக

இருக்க முடியாது என வரலாறும், பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன. என்பதற்கு, ஆதாரம் சுட்டினால் நல்லது. இந்த கருத்துடன் என் அனுபவத்திற்கு உடன்பாடு இல்லை. எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும், அவற்ரில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.

 

தற்கால சூழ்நிலையில் தனியார் வந்தால், இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள். தமிழ்நாட்டு இலவச மருத்துவ சிகிச்சை காப்பீடு ஒரு உதாரணம. அரசு பணிகளோ மோசம். என் செய்யலாம் என்பது தான் சர்ச்சை. இருந்தும், நீங்கள் சொல்வது போல அரசு என்ன செய்யவேண்டாம் என்பதை விளக்கினால், அதற்கு பொதுஜன வரவேற்பு இருந்தால் நல்லது. அரசு செய்யும் சில அநாவசிய வேலைகள் நீக்கப்படவேண்டும்; அவை எல்லாமே தனியாரிடம் போக தேவையில்லை. அத்துடன், மக்களிடமே, சில சேவைகளை ஒப்படைக்க  இயலும். சோஷலிசம், முதலாளித்துவம் தனியார் பெருமை எல்லாமே தோல்வியடைந்து விட்டன.

 

திரு.கண்ணன்:

 

வரும் மின்னூல்களுக்கு காத்திருந்து விரிவான பதில் போடுகிறேன். இந்திய அரசு முறைகளில், புராணங்களில் தவிர, ஆன்மீகத்தின் தாக்கம் கிடையாது. தார்மீகத்தின் தாக்கம் இருந்தது, நீதி நூல்களின் நல்வரவாக. அர்த்த ஸாஸ்திரம் ஆன்மீகத்தை அரசியலில் ஈடுபடுத்தவில்லை. தமிழ்நாட்டு அரசர்களும், அகம்,புறம் என்று திரிந்தார்கள். ஆன்மீகமில்லை. சமயத்தின் தாக்கம் கூட ஓரளவு தான் இருந்ததது. ஆட்சிமுறைகளை மாற்ற முயலவில்லை. கோரமான சுயநலமும், ஊழலும், ஒழுங்கின்மையும் செய்முறை

வாழ்வாகியும்விட்டது. ஒருபுறம் சோஷலிசம், இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்கு கட்டுப்படுத்துகிறது.

ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாக, அடிப்படை அலகாக மாறிவிட்டது. என்பது மறுக்கமுடியாத உண்மை. இது ஜனநாயகத்தின் பக்க விளைவு. அரசு நிர்வாகம், அரசியல் வாதிகள், அதிகாரமையங்கள், ஊழியர் சமுதாயம், மக்கள் ஆகியோர் எப்படி இயங்கவேண்டும் என்பதை ஆராய முடியும், இந்த இழையில். மக்காளாட்சி வேண்டாம் என்றும், யதேச்சிதிகாரம் வேண்டும் என்று சொல்வது சரியல்ல என்று வரலாறு கூவிய வண்ணம் உள்ளது.

 

திரு. ஓம். வெ.சுப்பிரமணியன்

 ஒரு சோவியட் ரஷ்யா ஜோக்: ஒரு தொழிற்சாலையில் மின் இயக்கும் தள்ளு வண்டிகள் தினம்தோறும் காணாமல் போயின, பலத்த சோதனைகள் இருந்தாலும். வேறு வழியில்லாமல், நிர்வாகம், திருட்டை ஒப்புக்கொள்பவர்களுக்கு, பரிசில் தருவதாக (முதலாளித்துவ ட்ரிக்) ஆசை காட்டியது. ஒருவர் சொன்னார்: 'தினந்தோறும் குப்பையை தள்ளுவண்டியில் இட்டுச்செல்வேன். குப்பையைக் கிளரிவிட்டு, வண்டியை விட்டுவிடுவார்கள் என்று! நீங்கள் கூறிய சம்பவம் அந்த வகை. தணிக்கையில், இந்த மாதிரி கொள்ளைகளை எடுத்துக்காட்டியிருக்கிறோம்.

கோலாலம்பூர் ஜெட் எஞ்சின் திருடு விந்தையாக இல்லை? ஆனால் பாருங்கள்; அங்கு தண்டனையின் கடுமையை. இந்தியாவில்  ஜாமீன் கொடுத்து விடுவார்கள்!

 

புதுவரவு

 

12 01 2010 Economist

Freedom is in decline in many places around the world

Political rights and civil liberties around the world suffered for the fourth year on the trot in 2009, according to the latest report published by Freedom House, an American think-tank. This represents the longest continuous period of deterioration in the history of the report. The number of electoral democracies dropped from 119 to 116, the lowest figure since 1995. Six countries were downgraded: Lesotho to partly free and Bahrain, Gabon, Jordan, Kyrgyzstan and Yemen dropped into the “not free” category. Around a third of the world’s population live in countries deemed not free, although over half of these live in China. In the Middle East and North Africa 70% of countries are not free. Still, freedom was on the march in 16 countries, notably in the Balkans, where Montenegro is now considered free, and Kosovo is partly free.

இன்னம்பூரான்


 
2010/1/14 karthi <karth...@gmail.com>
2010/1/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>


2010/1/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>


2010/1/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
இன்னம்பூரான்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
517.gif
360.gif

K R A Narasiah

unread,
Jan 14, 2010, 11:42:30 AM1/14/10
to mint...@googlegroups.com
கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்ப்டும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது. வீணாக்காப்படும் மக்கள் செல்வம் அதிகமாகியுள்ளது (சேது சமுத்திரத் திட்டம் ஒரு மாபெறும் உதாரணம்)
எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும்,
அவற்ரில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்.
மிக நன்றாகச் சொன்னீர்கள்!
நரசய்யா


2010/1/14 Innamburan Innamburan <innam...@googlemail.com>
517.gif
360.gif

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 14, 2010, 12:30:20 PM1/14/10
to mint...@googlegroups.com
K R A Narasiah wrote:
> கொடுமை என்னவெனில் சுதந்திர நாடுகளாகக் கருதப்ப்டும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு
> உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில்
> வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது.
A family centric society will always have this & there shall be general
acceptance among public seeing a Child growing under the shadow of his
father. May it be politics, business or anything. Only the working for
wage class stands apart.

There is nothing wrong in Rajiv following Indira, Stalin following
Karuna provided they earn it in the way their parents did.

My only concern is why people like our CM could not understand this when
it come to Temples priests :-)

--

Sri Ramadoss M

Tthamizth Tthenee

unread,
Jan 14, 2010, 1:30:24 PM1/14/10
to mint...@googlegroups.com
எப்போது  மக்கள்  தங்களின் அடிப்படைத் தேவைகளை தம்மை ஆளும் அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும்
தாம் கொடுக்கும் வரிப்பணம்  மக்களுக்கும்  நாட்டு முன்னேற்றத்துக்கும்  உபயோகப்படுத்தப்படல்வேண்டும்

தனியார் கொள்ளையடிப்பதை தட்டிக் கேட்கவேண்டும்  என்னும் விழிப்புணர்வைப் பெறுகிறார்களோ
அந்த நாடுதான் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்

அனியாயத்தை  தட்டிக் கேட்க துணிவில்லாத  மக்கள்  இருக்கும் வரை  நாடு
அராஜக  அக்ரமக்காரகளின் கையில்  சிக்கி சீரழியும்

மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்


அப்போதுதான்

அது ஜனநாயகமோ  ,சோஷலிசமோ  எதுவோ 
   
மக்களின் வாழ்க்கை  செழிப்பு பெறும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

14-1-10 அன்று, ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

karthi

unread,
Jan 14, 2010, 9:36:35 PM1/14/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
இன்னம்புரான்,
 
அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிப்பதில் உள்ள திறமைக் குறைவைச் சுட்டித்தானே உங்கள்
கட்டுரை அமைகிறது? அதை மேலும் உறுதிப்படுத்தவே நான் எழுதினேன்.
 
"பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு" என நான் கூறியது பிரிட்டிஷ் பீரோகிரசியை வரித்துக் கொண்ட
முன்னாள் காலனித்துவ அரசுகள்: இந்தியா, மலேசியா, பாக்கிஸ்தான் இன்ன பிற.
இந்த பீரோகிரசிதான் திறமையின்மையின் மூலம். அதுவே பணவிரயத்துக்கும் ஊழலுக்கும்
வழிவகுக்கிறது.
 
இதற்கு மாற்றாகத்தான் கேப்பிட்டலிசமும் தாராளமயப் பொருளாதாரமும் நமக்குத் தந்த
தனியார் துறை வருகிறது. தனியார் துறை ஊழலற்றதல்ல. அதற்குத்தான் அரசாங்க மேலாண்மை
அதனை எந்த நாளும் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஊழல் இருந்தாலும்
தனது சேவைகளை வெற்றிகரமாக வழங்குவது தனியார் துறைதான். அரசாங்கமே சேவையை
முன்வழங்க வரும்போது சேவையும் திறமையாக அமைவதில்லை; ஊழலும் பெருகுகிறது.
 
"எல்லா நிர்வாகங்களும் - சோஷலிஸம், முதலாளித்துவம், கலந்து கட்டி, தனியார் ஏகாதிபத்தியம், மக்களாட்சி, சர்வாதிகாரம், தவறுகள் இழைக்கின்றன என்பதும், அவற்றில் ஆங்காங்கே எல்லாமுறைகளிலும் (சர்வாதிகாரம் தவிர) நன்முத்துக்கள் அரிதாக இருக்கின்றன என்பது தான் வரலாறு. இது மனிதனின் பலவீனம்."
 
ஒப்புக் கொள்ள வேண்டிய கருத்து. ஆனால் "சர்வாதிகாரத்துக்கு" ஏன் விதிவிலக்கு அளித்தீர்களோ
தெரியவில்லை.  ரஷ்ய சர்வாதிகாரமாக இருந்தாலும், ஆப்பிரிக்க பூர்வகுடிச் சர்வாதிகாரமாக
இருந்தாலும் ஊழல்கள் இருக்கவே செய்கின்றன. மக்களாட்சிச் சர்வாதிகாரம் என்று கூறக்கூடிய
சிங்கப்பூர் மட்டுமே ஊழல்கள் இல்லாத முறையாக இருக்கிறது.
 
தனியார் மயத்தில் உள்ள இலாப நோக்கு திறமையின் உந்துசக்திகளில் மிகச் சிறந்தது. இதில்
போட்டியும் இருக்க வேண்டும். Monopoly கூடாது. ஆகவே தண்ணீர் வழங்குவதானாலும், சாலை
போடுவதானாலும் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு வாய்ப்புத் தரவேண்டும். நிச்சயமாக
தரமானது வெல்லும். இப்படிப்பட்ட போட்டி இல்லாததுதான் அரசாங்கச் சேவைத் துறைகள்
அசட்டையாகவும் அலட்சியமாகவும் இருந்து திறமையின்மையைப் பெருக்கிக் கொள்ளும் காரணம்.
 
 ஏன் இந்தியாவில் தனியார் துறை வந்தால் "விழுங்கிவிடும்" என்ற கருத்து இருக்கிறது?
சரியான கண்காணிப்பு, விதிமுறைகள் இருந்தால் தனியார் துறையின் சேவை சிறப்பாக
இருக்கும். அரசாங்கம் தருவது போன்ற மலிவான சேவையை அவை வழங்கா என்பது
தெளிவு. திறமான சேவைக்குரிய விலையைக் கொடுக்க மக்களும் தயாராக வேண்டும்.
 
நீங்கள் சொல்லும் மருத்துவ சிகிச்சை காப்பீடு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. எங்கள்
நாட்டில் தனியார் நிறுவனங்கள் வழங்கும் மருத்துவக் காப்பீடுகள் நன்றாகவே செயல்
படுகின்றன. சிங்கப்பூரில் கட்டாயக் காப்புறுதித் திட்டம் நன்றாகவே செயல் படுகிறது.
அமெரிக்காவில் ஒபாமா கொண்டுவரும் கட்டாயக் காப்புறுதித் திட்டத்திலும் நன்மைகளே
அதிகம் உள்ளன.
 
தனியார் மயத்துக்கு மக்களின் ஆரம்ப கட்ட எதிர்ப்பு எதிர்பார்க்கக் கூடியதே. சேவையின் விலை
உயரும் என்பதே முதல் ஆட்சேபமாக இருக்கும். அதற்கேற்ப சேவையின் தரமும் உயரும்
என்பதைப் புரிந்து கொள்ள கொஞ்ச நாளாகும்.
 
ஆனால் எல்லா முறைகளிலும் அடிமட்ட மக்களையே முதன்மையாக வைத்துச் சிந்தித்தால்
அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பின்னடைவுகளையும் முதன்மைப் படுத்தினால்,
எந்தத் துறையும் முன்னேற முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நலன்களை முதன்மைப் படுத்தும்
திட்டங்களை வகுத்துச் செயல் படுத்தினால், அதனால் ஏற்படும் முன்னேற்றம், ஏழைகளையும்
(கொஞ்சம் தாமதமானாலும்) வந்தடையும். அதோடு அரசு தனது வருமானத்தைப் பயன் படுத்தி
ஒரு பாதுகாப்பு வலையையும் அவர்களுக்கு ஏற்படுத்தித் தரவேண்டும் (இலவச அடிப்படை
மருத்துவச் சேவை, ரேஷன் கார்டு போன்றவை).
 
 
ரெ.கா.
 
 
----- Original Message -----
Sent: Friday, January 15, 2010 12:23 AM
Subject: Re: [MinTamil] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க.....

Tirumurti Vasudevan

unread,
Jan 14, 2010, 10:30:52 PM1/14/10
to mint...@googlegroups.com


2010/1/15 karthi <karth...@gmail.com>

இன்னம்புரான்,
 
அரசாங்கங்கள் ஒரு நாட்டை நிர்வகிப்பதில் உள்ள திறமைக் குறைவைச் சுட்டித்தானே உங்கள்
கட்டுரை அமைகிறது? அதை மேலும் உறுதிப்படுத்தவே நான் எழுதினேன்.

அரசு நிறுவனங்கள் சரியாக வேலை செய்யாமல் இருக்க தனியாரும் ஒரு காரணம்.
உதாரணமாக பிஎஸென்னல் G3 தொழில் நுட்ப உரிமம் பெற்று பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சேவை சில நகரங்களுக்கு மட்டுமே! இதற்கு அவர்கள் மெத்தனம் மட்டுமே காரணமல்ல.

Geetha Sambasivam

unread,
Jan 14, 2010, 10:37:51 PM1/14/10
to mint...@googlegroups.com
பிஎஸ் என் எல் தனியாரோடு போட்டி போட முடியாமல் திணறுகிறது என்று சொல்லலாம், அதற்கு மோசமான அமைச்சகமும் காரணம் என்பது வெளிப்படை. கடந்த மூன்றாண்டுகளில் தட்டுத்தடுமாறி நடை போடுகிறது பி எஸ் என் எல். என்றாலும் மத்திய அரசு இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நேற்று சபரிமலை நேரடி ஒளிபரப்பையே எடுத்துக் கொண்டால், பொதிகை சானல் நன்றாக நிகழ்ச்சியை ஒளிபரப்ப முயன்றாலும் முடியவில்லை. ஒரே கோடு கோடாக, புள்ளி புள்ளியாகத் திரை, அதே தனியார் சானல்களில் பளிச்சோ பளிச். அப்புறம் தூரதர்ஷன் பாரதி கொஞ்சம் பரவாயில்லாமல் வந்தது. பொதிகையின் நிகழ்ச்சிகள் நல்ல ஆக்கபூர்வமாய் வந்தாலும் தனியார் தொலைக்காட்சிகளின் நெடுந்தொடர்களுக்கு முன்னால் போட்டி போட முடியவில்லை. பிஎஸ் என் எல்லுக்கும் அதே பிரச்னை!

2010/1/15 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

karthi

unread,
Jan 15, 2010, 6:20:04 AM1/15/10
to mint...@googlegroups.com
நரசய்யா,
 
'வாரிசத்துவம்' நல்ல சொல். என்ன செய்யலாம், ஊழல் இல்லாத நாடு என்று பெயர் பெற்ற
சிங்கப்பூரிலும் வாரிசித்துவம்தான் ஆளுகிறது. ஆளும் குடும்பங்கள் பல இருக்கின்றன
உலகில். மலேசியப் பிரதமர் நஜீப்பின் தந்தை இரண்டு தவணைகளுக்கு முன் பிரதமராக
இருந்தவர்.
 
ஜியார்ஜ் புஷ்ஷின் அதிபராட்சியையும் வாரிசத்துவம் என்று சொல்லலாமா?
ஒரு வேளை முறையான தகுதிகள் இல்லாமல் பதவிக்கு வருபவரைத்தான்
அப்படிச் சொல்லமுடியும் போலும். ஒரு தவணை இன்னொருவர் இருந்தபின்
பதவிக்கு வருபவரை அப்படிச் சொல்ல முடியாது.
517.gif
360.gif

Tthamizth Tthenee

unread,
Jan 15, 2010, 6:27:24 AM1/15/10
to mint...@googlegroups.com
அரசியலில்  அன்றிலிருந்து  இன்று வரை  வாரிசுகளே  தொடர்கின்றன

அதில் தவறு இல்லை

அரசியலில் மட்டுமல்ல

அனைத்து துறைகளிலும்  வாரிசுகள்தான்  வரமுடிகிறது

ஆனால்  வாரிசுகள்  வந்தாலும்    வருவதற்கு வேண்டுமானால்   அது உதவுமே தவிற

திறமை  இல்லாவிடில்      நிலைக்க முடியாது

ஆனால் அரசியலில் மட்டும் தான்   திறமை  இல்லாத போதும் மற்ற  அராஜக்ங்கள் செய்து   நிலைக்க முடிகிறது


அன்புடன்
தமிழ்த்தேனீ
15-1-10 அன்று, karthi <karth...@gmail.com> எழுதினார்:



--
517.gif
360.gif

kra narasiah

unread,
Jan 15, 2010, 9:32:32 AM1/15/10
to mint...@googlegroups.com
ரெ. கா கவனத்திற்கு:
எனது கட்டுரை ஒன்று ஹிந்துவில் வெளியானது வாரிசத்துவத்தைப்பற்றி விள்க்கியது பார்க்கவும்
http://www.hindu.com/op/2009/05/31/stories/2009053150011400.htm

நரசய்யா

--- On Fri, 1/15/10, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
517.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 15, 2010, 12:15:54 PM1/15/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

இன்று குறிப்புகள் மட்டும். [16.01.2010]

 
ஸ்வர்ணா

ஒரு நல்லதல்லாத விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது [ignoring]மாபெரும் தவறு. ஹிட்லர் தலையெடுத்ததற்கு அதுவே காரணம். மறுபடியும், ‘Vigilance is the price of liberty’.

திரு. ரெ.கா

நன்றி. நமக்குள் கருத்து வேறுபடவில்லை. பிரிட்டீஷ் காலனித்துவ ஆட்சி முறை மோசமானது. கென்யாவில், ஜோமோ கென்யாட்டா அவர்களை தலையெடுக்காமல் செய்தார்கள்; ஸர் ராய் புஷர் மலேயாவில் கொடுங்கோல் ஆட்சி செலுத்தினார். இந்தியாவும் ஜாலியன்வாலா பாக் கொலைக்களத்தை மறக்குமோ? 17ம் நூற்றாண்டு, இந்தியா செல்வம் கொழித்த நாடு. அள்ளிக்கொண்டு போனார்கள். இருந்தபோதிலும், நிர்வாக வரலாறு என்றால், ஸர் வில்லியம் ஸ்லீமன் 'தக்ஸ்' கொள்ளையர்/கொலையாளிகளை அடக்கியதையும், அவர்களின் வம்சாவளியை புனருத்தாரணம் செய்ததையும் மறக்கமுடியாது.

 

சர்வாதிகாரத்துக்கு அளித்த விதி விலக்கை நான் விளக்கமாக கூறி இருக்கவேண்டும். அது நன்முத்து ஈன்றதே கிடையாது என்று சொல்லியிருக்கவேன்டும். சிங்கப்பூர் சற்று மாறுபட்டது, சிறிய பிரதேசம் என்பதால். இந்தியாவில், மத்திய/மாநில அரசுகளால்,பல வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட முனிசிபல்/பஞ்சாயத்து நிர்வாகங்களில் சில நல்ல பேர் வாங்கியுள்ளன. அவற்றில் ஒன்று சிங்கப்பூர் படிப்பினை என்று சொன்னதாக நினைவு.  

தனியார் செயல்பாடுகள், எந்த அரசு முறைகளிலும் செம்மையாக அமையாததிற்கு காரணம், அதுவே அரசு மேலாண்மையை குலைத்து விடுவதால், அமெரிக்கவில், இங்கிலாந்தில், ரஷ்யாவில், சீனாவில், இந்தியாவில். இந்தியாவில் தனியார் துறை வந்தால் "விழுங்கிவிடும்" என்ற கருத்தின் அடித்தளம், அரசின் மேலாண்மையின் கந்தரகூளம். இருந்தும், அவையல்லை எனின், அரசின் செயல்பாடுகள் மோசமாகத்தான் இருக்கும் என்று சொலவ்தும் முரண் அல்ல. இந்த சிக்கலான சமாச்சாரத்திற்கு த்னி இழை தொடங்கவேண்டியிருக்கலாம். தற்காலிகமாக, அமைதி காக்கிறேன். உங்கள் கருத்தைப்போற்றுகிறேன். மற்றபடி, நம்மிருவரின் சிந்தனை ஒரே வழியில்.

 

வாரிசுத்துவத்தைப்பற்றி திரு நரசய்யா ஹிந்துவில் எழுதியதையும், மற்ற கருத்துக்களையும் படித்தேன். இந்தியாவின் வாரிசுத்துவம் ம்கா மோசம். தொடக்க காலம்.: மோதிலால் நேரு [தனயன் தந்தையை கொணர்ந்தார் என்பதையும் மறக்கலாகாது.] அமெரிக்காவில் புஷ் வம்சாவளி ஒரு அகஸ்மாத்தான கேடு. அங்கு கென்னடி வம்சாவளியையும் இங்கிலாந்தில் பிட் வம்சாவளியையும் பார்த்தால், வேறுபாடுகள் தெரியும்.  அங்கு தகுதி இருந்தது.

 

ஓம் ஐயா அவர்களின் 'லாண்டரி மார்க்', ',ரி,,,,,நி' ரசித்தேன். தணிக்கை துறைக்கு  நோட்ஃபைல்  பார்க்க முழு உரிமை உண்டு. இந்திராகாந்தி, அரசியல் சாஸனத்துக்கு முரணாக, எமெர்ஜென்ஸி சமயத்தில் அந்த உரிமையை பறித்தார். பிற்கு ஜாம் ஜாம் என்று திரும்பி வந்தது.
தமிழ்த்தேனி சொலவது முற்றிலும் உண்மை. எக்ஸ்னோரா நிர்மல் சாதனை செய்யவில்லையா?


2010/1/15 kra narasiah <nara...@yahoo.com>
517.gif
360.gif

Venkatachalam Subramanian

unread,
Jan 16, 2010, 4:00:58 AM1/16/10
to mint...@googlegroups.com
தற்கால சூழ்நிலையில் தனியார் வந்தால், இந்தியாவை கபளீகரம் செய்து விடுவார்கள். தமிழ்நாட்டு இலவச மருத்துவ சிகிச்சை காப்பீடு ஒரு உதாரணம.
-=-=
ஓம்.
  • தொழு நோய் வந்தவர்களுக்கென இலவசமாக ஒரு இந்தியத் தயாரிப்பின்  மாத்திரைகள் நெடுங்காலமாக உட்கொள்ளவேண்டும் என்று அரசு மருத்துவ மனைகளில் வினியோகிக்கப்பட்டு வந்தன. தவறாமல் குறிப்பிட்ட நாட்களில் தன்னுடைய வெளி நோயாளிப் பதிவேட்டினைக் கொண்டு காட்டி தமக்கான கோட்டா மாத்திரையைப் பெற்று மேற்கொண்டு வலுவடையும் தொழு நோயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் அப்பாவி மக்கள்..
  • ஜெர்மன் நிறுவனம் ஒன்று இலவசமாக அந்த தொழுநோய் மாத்திரைகளைத் தருவதாக தந்துதவியது. இந்தியத்  தயாரிப்பு மாத்திரைக்கு வெளிச் சந்தை இல்லை என்பதால் தயாரிப்பு நின்றுவிட்டது. ஜெர்மன் நிறுவனம் தன்னுடைய கொடையை முன்னறிவிப்பு ஏதும் இன்றி நிறுத்திவிட்டது. கேட்ட அரசுக்கு ஒரு “சாரி” சொல்லிவிட்டு முடங்கி விட்டது. அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக சாவை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் மக்கள் தவித்தனர். எவரும் கண்டுகொள்ளவில்லை.
  • கன்னியா குமரியில் விவேகானந்தர் தீவுத் திடலில் , கட்டிடம் மற்றும் சிலா ரூபங்களைக் உப்புக் காற்றின் அரிப்பினிலிருந்து தடுத்துக் காக்கும் தனி வகையான வர்ணம் பூச எடுத்துக்கொண்ட முயற்சியில் வெளி நாட்டு நிறுவனம் முன்வந்து வினியோகம் மேற்கொண்டது. உச்சக் கட்டத்தில் அந்தவகை வர்ணம் தயாரிக்க செலவு மிகுந்துபோயிற்று என பலமடங்கு விலையை உயர்த்தி, விரும்பினால் வாருங்கள் என்று சொல்லி விட்டது.
  • அய்யன் வள்ளுவரும் இந்தப் பட்டியலில்  தற்போது அகப்பட்டுக் கொண்டு பெருஞ்செலவாளி ஆகிவருகிறார்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

Geetha Sambasivam

unread,
Jan 16, 2010, 4:23:48 AM1/16/10
to mint...@googlegroups.com
இப்படி எத்தனையோ!!!!!!!!!

2010/1/16 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>

karthi

unread,
Jan 17, 2010, 5:18:51 AM1/17/10
to mint...@googlegroups.com
அன்புள்ள ஓம் அவர்களுக்கு,
 
தாங்கள் எடுத்துக் கூறும் நிகழ்வுகள் சரிதான். இப்படி இன்னும் பல நிகழ்ந்துள்ளன,
உலகம் முழுவதிலும். மேலாண்மைக் குறைவும் நேர்மைக் குறைவும்
இவற்றின் காரணங்களில் சில. மேலும் "மனுஷனை மனுஷன்" ஏய்ப்பது
எக்காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு.
 
இப்படிப்பட்ட episodical நிருபணங்களை வைத்து தனியார் - அரசாங்க நிர்வாகத்தின்
நன்மை தீமைகளை முடிவு செய்ய முடியாது. Law and order சரியாக
உள்ள ஓர் அரசாங்கத்தில், பல துறைகளில் அரசாங்க நிர்வாகத்தை விட தனியார்
நிர்வாகமே சிறந்ததாக இருக்கிறது. தனியார் துறையை மேற்பார்க்கும் அரசு
நேர்மையானதாக இருக்க வேண்டும். (மீண்டும் சிங்கப்பூரே நினைவுக்கு வருகிறது.)
 
ரெ.கா.
----- Original Message -----
Sent: Saturday, January 16, 2010 5:00 PM
Subject: Re: [MinTamil] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க.....

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 17, 2010, 7:52:05 AM1/17/10
to mint...@googlegroups.com
karthi wrote:
> அன்புள்ள ஓம் அவர்களுக்கு,
>
> தாங்கள் எடுத்துக் கூறும் நிகழ்வுகள் சரிதான். இப்படி இன்னும் பல நிகழ்ந்துள்ளன,
> உலகம் முழுவதிலும். மேலாண்மைக் குறைவும் நேர்மைக் குறைவும்
> இவற்றின் காரணங்களில் சில. மேலும் "மனுஷனை மனுஷன்" ஏய்ப்பது
> எக்காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு.
>
> இப்படிப்பட்ட episodical நிருபணங்களை வைத்து தனியார் - அரசாங்க நிர்வாகத்தின்
> நன்மை தீமைகளை முடிவு செய்ய முடியாது. Law and order சரியாக
> உள்ள ஓர் அரசாங்கத்தில், பல துறைகளில் அரசாங்க நிர்வாகத்தை விட தனியார்
> நிர்வாகமே சிறந்ததாக இருக்கிறது. தனியார் துறையை மேற்பார்க்கும் அரசு
> நேர்மையானதாக இருக்க வேண்டும். (மீண்டும் சிங்கப்பூரே நினைவுக்கு வருகிறது.

One harm in an election based periodic democratic set up, is the
influence of wicked Capitalists over the government & its authorities.

ஜனநாயகம் என நாம் மேற்கொண்டுள்ள முறையில் அரசுக்கும் வணிகத்திற்கும் நாம் முறையான
பிரிவினை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அரசியலை ஒரு கண்ணியமான தொழிலாக முழு நேரமாக
மேற்கொள்ள வாய்ப்பிருப்பதில்லை. அந்நிலையை வாக்களிப்பு ஜனநாயக முறை தரும் என
எதிர்ப்பார்ப்பது கடினம். யதார்த்தமாக, தேர்தலில் ஒருவர் நிற்கிறார் என்பதைக் காட்ட
தேவைப்படும் விளம்பரம் முதலீடு எல்லாவற்றையும் பார்க்கும் போது முதலாளித்துவ சக்திகளை
சாராது அரசியல் நடத்தி வெற்றி பெற்றுவது எங்ஙனம்?

அரசியலை தொழிலாக மேற்கொள்வோர் இல்லாமையால், தத்தம் தொழிலை விருத்தி செய்ய
விரும்புவோரெல்லாம் அரசியலுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் யாவரும் முதலாளிகள் :-)
ஒருவிதத்தில் தனது நிறுவனத்தை நன்றாக நிர்வகித்து, அதன் பொருட்டு அரசாங்க நிர்வாத்தை
நிலை குலைய வைப்போரும் தனியார் முதலாளிகளே!

இதற்கு கார்பரேட்களும் விதிவிலக்கல்ல..

:-)

--

ஆமாச்சு

Innamburan Innamburan

unread,
Jan 18, 2010, 1:33:16 PM1/18/10
to mint...@googlegroups.com

January 19,, 2010

 

 ஓம் ஐயாவின் சான்றுகளை வைத்து தனியார்த்துறையை குறை காண இயலாது என்பது சரியே. அரசு துறைகள் இதை விட மட்டமாக் இயங்கியதை காட்டலாம்.

 

தாங்கள் எடுத்துக் கூறும் நிகழ்வுகள் சரிதான். இப்படி இன்னும் பல நிகழ்ந்துள்ளன, உலகம் முழுவதிலும். மேலாண்மைக் குறைவும் நேர்மைக் குறைவும், இவற்றின் காரணங்களில் சில. மேலும் "மனுஷனை மனுஷன்" ஏய்ப்பது எக்காலத்திலும் எவ்விடத்திலும் உண்டு. இப்படிப்பட்ட episodical நிருபணங்களை வைத்து தனியார் - அரசாங்க நிர்வாகத்தின் நன்மை தீமைகளை முடிவு செய்ய முடியாது.

என்று ரெ.கா. அவர்கள் கூறியதை தான் வரலாறும் கூறுகிறது. ஆனால்,

 

‘ Law and order சரியாக உள்ள ஓர் அரசாங்கத்தில், பல துறைகளில் அரசாங்க நிர்வாகத்தை விட தனியார் நிர்வாகமே சிறந்ததாக இருக்கிறது என்பது சர்ச்சைக்கு உரியது. சிங்கப்பூர் மாடல் எங்கும் உகந்தது அல்ல.   ம ஸ்ரீ ராமதாஸ் சொல்வது சிக்கலை முன்னிறுத்துகிறது; விடை தேடவில்லை.

 

அரசு, தனியார், இருவரும் கூட்டு, தன்னார்வம், கூட்டுறவு, பஞ்சாயத்து போன்ற சிறு, லோகல் அரசியல் என்று பல வகையான இயக்கங்கள் உள்ளன, பணி புரிய. இங்கிலாந்தில் தன்னார்வக்குழுக்ககளை பலபடுத்துவதில், ஓரளவு வெற்றி.

இந்த இழையின் தலைப்பு எளிதில் அவிழ்க்கமுடியாத முடிச்சு. எனினும், சர்வாதிகார அரசு தீமை பல பYaஅக்கும் என்பதில் ஐயமில்லை. ஜனநாயக அரசு செலவு மிகுந்தத்து; ஆளுமை குறைந்தது எனினும், அதை விட சாத்தியக்கூறு உலகில் எங்கும் இல்லை. இருந்ததும் இல்லை. வரப்போவதுமில்லை. அதன் அசுத்தங்களை களைவது எப்படி, அதை பரிசுத்தப்படுத்துவது எப்படி என்பது தான் கேள்வி.

சில சிந்தனைகள்:

1. வாரிசுத்துவம், சட்டப்படி களையப்படவேன்டும்.

2. அரசோ, தனியாரோ, மற்ற இயக்கங்களோ, மக்கள் பணி பொறுத்தவரை, மக்களுக்கு பதில் சொல்லவேன்டும்.

 3.தணிக்கை, புலனாய்வு, நீதித்துறை, |ண்காணிப்புத்துறை, இவை இணைந்து பணி ஆற்றவேன்டும். 

இன்னம்பூரான்



2010/1/17 ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Innamburan Innamburan

unread,
Jan 18, 2010, 2:10:48 PM1/18/10
to mintamil, Innamburan Innamburan
போதுமா இந்த அரசு/தனியார் கூடாநட்பு?
ஹிந்து [19 01  ௨௦௧௦]
 The Centre on Monday told the Supreme Court that 44 institutions including the Bharath Institute of Higher Education and Research, Chennai, founded by Union Minister S. Jagathrakshakan, would lose the deemed university status as they did not meet the standards.

(After becoming Minister, Mr. Jagathrakshakan has not been associated with the management of the Balaji Dental College and Hospital, the Balaji Medical College and Hospital, the Bharat Institute of Science and Technology, the Bharat College of Nursing, the Bharat College of Physiotherapy, and the Sri Lakshmi Narayana Institute of Medical Sciences, Puducherry.)

Students won’t suffer

The Centre, however, made it clear that an estimated 1,19,363 students enrolled in these 44 institutions at the undergraduate and postgraduate levels, in addition to 2,124 students doing research in M.Phil and Ph.D. programmes and 74,808 students pursuing distance education programmes, would continue their studies as the colleges would continue to be affiliated to the universities to which they were earlier affiliated.

This information was given before a Bench of Justices Dalveer Bhandari and A.K. Patnaik, hearing a petition filed by advocate Viplav Sharma seeking regulation of deemed universities.

The bulk of the 44 institutions are in Tamil Nadu: St. Peter’s Engineering College, Avadi; the Noorul Islam College of Engineering, Kumaracoil, Thuckalay; the Meenakshi Medical College and Research Institute, Kancheepuram, and other institutions run by this university; the Chettinad Hospital and Research Institute, Padur, the Chettinad College of Nursing; the Saveetha Dental College and Hospital; the Saveetha Medical College and Hospital and other institutions; the Arulmigu Kalasalingam College of Engineering, Virudhunagar; the Periyar Maniammai College of Technology, Thanjavur; the Academy of Maritime Education and Research, Chennai; Vel’s Institute of Science, Technology and Advanced Studies, Chennai; the Vel Tech Engineering College; the Karpagam Academy of Higher Education, Pollachi; Vinayaka Mission’s Research Foundation, Salem, and the Balaji Vidyapeeth, Puducherry.

Show-cause to MGR institute

In another case before a Bench of Chief Justice K.G. Balakrishnan and Justices R.V. Raveendran and Deepak Verma, Solicitor-General Gopal Subramaniam said the Dr. MGR Educational and Research Institute running the Thai Moogambigai Dental College and Hospital and the Dr. MGR Engineering College, Chennai, was among the 44 institutions to which notices would be issued asking them to show cause why the deemed university status should not be cancelled.

The ACS Medical College, which admitted students in 2008-2009 and 2009-2010, would not be affiliated to the deemed university as the Human Resource Development Ministry decided not to accept the recommendation of the University Grants Commission.

The Bench disposed of the matter asking the Centre to pass appropriate orders within four weeks in the light of the UGC recommendations and other considerations.

Several aberrations

The Centre’s affidavit said a review committee, headed by Prof. P.N. Tandon, came across several aberrations in the functioning of some of the deemed universities. It found an undesirable management architecture in which families rather than professional academics controlled the institutions.
இன்னம்பூரான்
2010/1/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>


---------- Forwarded message ----------
From: Innamburan Innamburan <innam...@googlemail.com>
Date: 2010/1/18
Subject: Re: [MinTamil] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க.....

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 18, 2010, 8:35:35 PM1/18/10
to mint...@googlegroups.com
Innamburan Innamburan wrote:
>
> சில சிந்தனைகள்:
>
> 1. வாரிசுத்துவம், சட்டப்படி களையப்படவேன்டும்.
>
ஒருவர் தன் தந்தை/ தாயின் பணிகளால் உண்மையாகவே உந்தப்பட்டு அதே வழியில் பணியாற்ற
விழைகிறார் என்றால் அவருக்கு வாய்ப்பினை சட்டபூர்வமாக மறுப்பது எப்படி?

>
> 2. அரசோ, தனியாரோ, மற்ற இயக்கங்களோ, மக்கள் பணி பொறுத்தவரை, மக்களுக்கு பதில்
> சொல்லவேன்டும்.
>
இப்போதும் கடமைபட்டிருக்கின்றன. வாழ்க்கையை வாழ வேண்டிய அவசரத்திலும் மற்ற வேலைகளுக்கும்
மத்தியில் கண்டுக்காதும் கண்டும் காணாதும் இருப்பதும் மக்களாகிய நாம் தான்.

> 3.தணிக்கை, புலனாய்வு, நீதித்துறை, க|ண்காணிப்புத்துறை, இவை இணைந்து பணி
> ஆற்றவேன்டும்.
>

நாம் மத்திய மாநில அரசு அனும் அதிகார & பணக் குவிப்பு முறையில் இருந்து மாற வேண்டும்.

மக்களாட்சியின் அடிப்படையே மக்களை நம்புவது. மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்
கொள்வார்கள் என்று நம்பும் ஒரு முறையில் ஒரு கிராமத்திற்கான வெள்ள நிவாரணம் மேற்கொள்ளவோ
பாலம் கட்டவோ மாநில மத்திய அரசு அளவில் முடிவு மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது மோசமான
சூழல்.

நிறைய இருக்கும் அப்பறமா..

--

ஆமாச்சு

Tthamizth Tthenee

unread,
Jan 20, 2010, 6:50:33 AM1/20/10
to mint...@googlegroups.com
அரசோ  அல்லது தனியாரோ  செய்யும் தவறுகளை  தைரியமாக 

தட்டிக் கேட்டு  பொதுநலத்தோடு  வழக்கு தொடர்ந்து   அதன் மூலமாகவே ப்ரபலமான

ட்ராபிக் ராமசாமி என்பவர்  தேர்தலில்  நின்றார்

தனித்து நின்றார்

எந்த ஒரு  அரசியல் கட்சியையும் சாராமல், எந்த முதலாளியையும் சாராமல்
தனித்து நின்றார்

அதே போல  கணினித்துறையிலிருந்து  சிலர் தனித்து நின்றார்கள்

அவர்களை  மக்கள் கண்டுகொள்ளவேயில்லை

மக்கள்  தாமாக உணர்ந்து  இலவசங்களை  மறுத்து

தமக்கு  நன்மை செய்பவரை  தைரியமாக  தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு  வராத வரையில்

எதுவுமே  உபயோகமில்லை

ஊழல்  மலிந்துவிட்ட இந்தக் காலத்தில்  அரசோ  தனியாரோ

யார் வந்தும்  ஒன்றும் பெரிதாக  மாற்றம் வர  வழியே இல்லை

மக்கள் உணரவேண்டும்

அதே போல  நாட்டைப் பற்றி  நாட்டு மக்களைப் பற்றி   கவலைப்படும் 
யாராவது  அரசியல் கட்சிகளையோ  பண முதலைகளையோ  சாராமல் தனித்து  இயங்க தைரியம் உள்ள
நாட்டுக்காக  நாட்டு மக்களுக்காக  சுயநலம் இல்லாமல்  செயல் படும்  தைரியசாலிகள் வரும் வரை

தனியாரோ  அரசியல்வாதிகளோ  யாரும் திருந்தப் போவதுமில்லை

மக்கள்  விழிப்புணர்வு பெற்றாலொழிய  விடிவுகாலமே இல்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ



19-1-10 அன்று, ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Innamburan Innamburan

unread,
Jan 21, 2010, 1:35:57 PM1/21/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

January 22, 2010

 

இது ராம்தாஸின், தமிழ்த்தேனீ, தனியாக தொடர்பு கொண்ட நண்பர் அவர்களின் கருத்துக்களின் பின்னணி.

 

1. வாரிசுத்துவம் களையப்படவேண்டும்; ஒழிக்க இயலாது;சாத்தியமும் அல்ல. களைவது எப்படிநமது அரசியல் சாஸனமோ, சட்டங்களோ, வாக்குரிமை கமிஷனின் கடமைகளோ. 'கட்சி' என்ற அமைப்பையும், அது ஏற்படுத்தும் நல்ல/தீய விளைவுகளையும் சரிவர புரிந்து கொள்ளவில்லை; அலசவில்லை; தீர்வுகள் நோக்கி பயணிக்கவில்லை. அத்தகைய ஆய்வு வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்பவேண்டும்.. அத்தருணம், வாரிசுத்துவத்தைப்பற்றி கவலை தெரிவிக்கவேண்டும். தெரிந்த அவலங்களை பொதுமேடையில் வைக்கவேண்டும். தேர்தல் சம்பந்தமாக, சில சீர்திருத்தங்கள் வந்துள்ளன, இவ்வாறு முறையீடுகள் முன் வைக்கப்பட்டதால் - வேட்பாளர் சொத்து விவரம், கிரிமினல் கேஸ் ஆகியவைப்பற்றி சொல்லவேண்டியிருக்கிறது அல்லவா. பொய் சொன்னால், பிறகு மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. மக்கள், அனுபவஸ்தர்கள், வல்லுனர்கள், ஆசிரியபெருமக்கள் ஆகியோர் இணைந்து குரல் எழுப்பவேண்டும்.

 

2. அரசோ, தனியாரோ, மற்ற இயக்கங்களோ, மக்கள் பணி பொறுத்தவரை, மக்களுக்கு பதில் சொல்லவேன்டும்.

 

திரு.ராமதாஸ் மக்களின் கடமையை, அவர்களின் இயலாமையை முன்னிறுத்துகிறார். நான் கோடிட்டது:

 

[1] அரசு:

தகவல் உரிமைச்சட்டத்திற்கு கட்டுப்பட்டுவிட்டது. விட்டகுறை, தொட்ட குறை பல இருந்தாலும், அது நல்வரவு. அது பற்றி, பாடம் எடுக்க தயார். நாம் ஒவ்வொருவரும் அதை பயன் படுத்தவேண்டும். புது சட்டம்; வந்ததே பெரிது. மேல் நடத்திச்செல்வது மக்கள் ஆர்வம்.

 

[2] கம்பெனி ஆக்ட் போல, தனியார் போக்கை அரசும், மக்களும் கண்காணிக்கவேண்டும். டாடா கம்பெனிகள் பலவருஷங்களுக்கு முன்பே Social Audit Report தந்தன. ஒரு பங்கு வைத்திருப்பவர் கூட பெரிய கம்பெனிகளில் வாலை நறுக்க இயலும். மற்ற இயக்கங்களுக்கும் இது பொருந்தும். இந்தியா தன்னார்வக்குழுக்களின் உலக தலைநகரம் என்ற இழுக்குக்கு இடம் கொடுத்துவிட்டது. இங்கிலாந்தில் உள்ள Charity Commission  இவற்றை தணிக்கை செய்ய நல்ல மாடல். அதன் குறைகளையும் அலசியிருக்கிறேன். அவற்றை களைவதும் முடியும்.

 

3. தணிக்கை, புலனாய்வு, நீதித்துறை, |ண்காணிப்புத்துறை, இவை இணைந்து பணி ஆற்றவேன்டும். 

 

திரு ராம்தாஸ் வேறு விஷயம் பேசியிருக்கிறார்.

 

தமிழ்த்தேனீ அவர்கள் திட்டவட்டமாக, மக்கள் தான் முனையவேண்டும், என்று நான் சொல்வதை ஆதரிக்கிறார். எக்ஸ்னோரா அனுபவம்; ஒரு நல்ல கம்பெனி ஊழிய அனுபவம். நன்றி.

 

தனிமடலில் ஒரு நண்பர் இந்த இழையும், இது போன்றவற்றையும் ஆழ்ந்து கவனித்து கூறும் கருத்து: பேசி பயனில்லை. அடித்தளம் குலைந்து விட்டதால், அரசு இயந்திரத்தையே ஒழித்து விடு... என்ற முறையில், மேற்கோள்கள் காட்டி. இது சுருக்கம். எனினும், திவாஜி கொடுத்த நமது தலைப்பு: "அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....." அதை முழுதுமாக, முதலில் ஆய்வு செய்யலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

இன்னம்பூரான்



2010/1/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 21, 2010, 10:47:14 PM1/21/10
to mint...@googlegroups.com
நாம் இப்போது கொண்டிருக்கும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் முறைகள் கட்டாயமானவை. தண்டச்
செலவுகள். உள்ளாட்சித் தேர்தல்கள் முறை அவசியமானால் ஏற்படுத்திக்கொள்ளப்படுகிறது.
சரிதானே? ஆக ஐந்து வருடத்திற்கு மூன்று தேர்தல் வருகிறது. இது மிகப்பெரிய தண்டச் செலவு.

அவசியமானது உள்ளாட்சி தேர்தல் மட்டும். அதுவும் ஒரு பிரதிநிதி நல்லவராக தொடர்கிற
பட்சத்தில், அவருக்கு மாற்று வேண்டுமா என்பதை தீரப் பரிசீலித்து, தேர்தல் வேண்டுமா என்பதை
ஆராய்ந்து விட்டு தேர்தல் நடத்தினால் போதும்.

மக்கள் பழகுதற்கு நடைமுறையில் சாத்திமானவர்கள் உள்ளாட்சி தலைவர்கள் மட்டுமே. மேல்
இருக்கும் சட்டமன்றப் பிரதிநிதிகள் உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளாலும் நாடாளுமன்ற
பிரதிநிதிகள் சட்டமன்ற பிரதிநிதிகளாலும் தேர்வு செய்யப்பட வேண்டும். நாம் கூடுமானவரை
பணம் எங்கிருந்து திரட்டப்படுகிறதோ அங்கேயே அதன் தேவைகளுக்கே முதற்கண் செலவழித்து
விட்டு பின்னர் பொதுவான செலவினங்களுக்கு மேல் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். தனி
மனிதனொருவன் எதற்காக மத்திய அரசுக்கு நேரடியாக வரிகட்ட வேண்டும் என்பதற்கு
திருப்திகரமான விடை எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

மாநிலங்கள் மட்டுமல்ல மாவட்ட அளவிலும் ஒற்றுமையை உணர்ந்து செயல்படும் தன்னாட்சி வேண்டும்.
அதுவே மக்களை நம்பும் உண்மையான ஆட்சி முறை. இன்று இருக்கும் முறையில் ஒவ்வொரு
மாநிலத்திலும் மத்திய அரசு தன்னை கண்டு கொள்ளவில்லை என்ற பேச்சு பெருமளவில் எழுகிறது.
இது பல மாநிலங்களில், இருக்கும் சட்ட திட்டங்களுக்கு செயல்படும் மாநிலக்கட்சிகளாக
உருவெடுத்துள்ளது. சில இடங்களில் பிரிவினைவாதமாக போய்விடுகிறது.

பல பிரதேசங்களில் ஒன்றுபட்ட கூட்டு பாரதம். ஒரு சர்க்காரின் அதிகாரத்திக்கு கீழ் வருவது
அல்ல.

--

ஆமாச்சு


devoo

unread,
Jan 22, 2010, 12:10:20 AM1/22/10
to மின்தமிழ்
Jan 20, 5:50 am, Tthamizth Tthenee
//மக்கள் தாமாக உணர்ந்து இலவசங்களை மறுத்து தமக்கு நன்மை செய்பவரை

தைரியமாக தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு வராத வரையில் எதுவுமே
உபயோகமில்லை; ஊழல் மலிந்துவிட்ட இந்தக் காலத்தில் அரசோ தனியாரோ யார்
வந்தும் ஒன்றும் பெரிதாக மாற்றம் வர வழியே இல்லை .
மக்கள் உணரவேண்டும் //

தேனியார் சொல்வதே சரி; பொறுப்பு வாய்ந்தவர்கள் பதவி பெற்றால் தேவையான
மற்ற மாற்றங்கள் தாமே வந்துவிடும்

தேவ்


N. Kannan

unread,
Jan 22, 2010, 1:50:37 AM1/22/10
to mint...@googlegroups.com
2010/1/22 devoo <rde...@gmail.com>:

> தேனியார் சொல்வதே சரி; பொறுப்பு வாய்ந்தவர்கள் பதவி பெற்றால் தேவையான
> மற்ற மாற்றங்கள் தாமே வந்துவிடும்
>
> தேவ்


நம்மிடையே பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
டாக்டர் அப்துல் கலாம் முன்பு இருந்த வேளைகள் 'காந்தி தரிசனமாகவே' எனக்குப் பட்டது.
அத்தகைய ஆதர்ஷ புருஷர்களை எப்படி உருவாக்குவது?
நம் பள்ளியும், கல்லூரிகளும் அதைச் செய்யவில்லையெனில், நம் இணையம் அதைச் செய்யுமா?
ஆம்! என்றால் எவ்வாறு?
இது குறித்து நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
நாம் வாழ்ந்த/வாழும் வெளிநாடுகளில் ஊழல் இல்லமல் இல்லை, ஆயின் ஒரு
குடிமகனை அவை துன்புறுத்துவதில்லை.
பஸ்/ரயில் வேளா வேளைக்கு வருகிறது.
நல்ல பாதைகள் இருக்கின்றன.
மின்சாரம் எப்போதும் கிடைக்கிறது.
விலைவாசி எகிறிக் குதிப்பதில்லை (20 வருடத்திற்குப் பின் ஜப்பான் போனால்
அதே விலை! எப்படி இவர்களால் இதை சாதிக்கமுடிகிறது? நாம் எங்கு பிழை
விடுகிறோம்?)
நம் தத்துவங்கள் இருக்கும் உயர் நிலைக்கு தமிழன் போவது எப்போது?
இடைவெளி மிக அதிகமாக உள்ளது!

க.>

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2010, 3:03:31 AM1/22/10
to mint...@googlegroups.com
நம்மிடையே பொறுப்புள்ள தலைவர்களை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
 
 
முதலில்  நம் பொறுப்புகளை  சரிவர  உணரவேண்டும்
 
உண்மையிலேயே  நாடு  இப்போது இருக்கும் நிலையை சரியாக
 
அலசி  நாம்  எந்த நிலையில் இருக்கிறோம்  என்பதை உணர்ந்து  அதை  அப்படியே
ஜாதி மத ,  கட்சி வேறுபாடுகள்,  தலைவர்களின் துதிபாடிகள் வேறுபாடுகள்
ஆகிய  மோசமான  விளைவுகலைத் தரும்  அனைத்தையும் களைந்து
 
நடுநிலைமையான  ஒரு பொது  மன நிலைக்கு  முதலில் நாம் வரவேண்டும்
 
இப்போது நாடு இருக்கும் இழி நிலையைக் கருத்தில் கொண்டு\
 
இந்த  இழி நிலையை  மொத்த மக்களும் புரிந்துகொள்ளுமாறு
எழுதியோ, பேசியோ  முதலில் மக்கள் மனதில்  ஒரு நல்ல மாற்றத்தை உணர்த்தவேண்டும்
 
அதற்கு அடுத்த படியாக  ஒரு முழுமையான  நல்ல முன்னேற்றமான நாடாக  மாற்ற  எடுக்க வேண்டிய  அத்துணை நற்காரியங்களையும் செய்ய   உடனடியாக நடவைக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்
 
குறிப்பாக  இளைஞர்கள் மனதில் ஒரு பெரிய   மாற்றத்தை  ஏற்படுத்தி 
 
இது நம் நாடு  இந்த நாட்டு மக்கள் நம் மக்கள்  என்னும் ஒருமித்த கருத்தை  ஏற்படுத்தி
 
அவர்களின் ஆக்க பூர்வமான  சக்தியை  வீணே  கழிப்பதை நிறுத்தி
அவர்களுடைய  ஆக்க பூர்வ சக்தியை  நாட்டுக்காகவும்  நாட்டு முன்னேற்றத்துக்காகவும்
செயல்படுமாறு  செய்யவேண்டும்
 
ஒவ்வொரு முறை  அரசாளும்  அரசியல்வாதிகளும்  தாங்கள்  பதவிக்கு வரும்போது தம் சொத்துக்கணக்கு காட்ட வேண்டும், அதே போல  பதவியை விட்டு  விலகும் போதும்   சொத்துக்கணக்கு காட்டவேண்டும்
 
இந்த  சொத்துக்கணக்கு விவகாரத்தில்  தணிக்கைத்துறை  நடு நிலைமையாக செயல் பட்டு
 
அதிகமாக நாட்டின் சொத்துக்களை  கபளீகரம்  செய்து  மக்கள்  யாருக்கும் பயன்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ள
சொத்துக்களை  மீண்டும் நாட்டின் கஜானாவுக்கு  மாற்ற  முழு முயற்சி எடுக்கவேண்டும்
 
இதெல்லாம் நடக்குமா  என்று நம்பிக்கையில்லாமல் இருப்பதை விடுத்து  நடத்தியே காட்ட வேண்டும் என்னும் முனைப்புடன்  நம் நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டோர் முன் வரவேண்டும்
 
ஒவ்வொரு முறை நாம் வேறு ஒரு கட்சியைத் தேர்ந்தெடுக்கும் போதும்  ஒத்த சொத்துக்களையும்    மிக  எடுத்துக்கொண்டு   பதவிகளை விட்டு  மகிழ்ச்சியாக  இறங்குகின்றனர் 
 
மாற்றுக் கட்சி  வந்து மீண்டும் மக்களை நாட்டைக் கொள்ளையடிக்கும் நிலையை மேற்கொள்கிறது
அது வரை  அந்த ஆட்சியாளர்கள் அநியாயமாக சேர்த்த அத்தனை  சொத்துக்களும்  மீண்டும் நாட்டின் கஜானாவை நிரப்பவேண்டும் 
 
 
 
  பதவியைத் துறக்கும் போது  மீண்டும் உண்மையாக  அவருக்கு என்ன சொத்து இருந்ததோ அந்த சொத்துக்களுக்கு மட்டுமே  அவர் உரிமைதாரர்  என்னும் நிலை  ஏற்படுத்தவேண்டும்
 
பதவிக்கு வர என்னென்ன  வாக்குறுதிகள் அளித்தனரோ  அந்த வாக்குறுதிகளை  குறிப்பிட்ட காலத்துக்குள்  நிரைவேற்றுகிறார்களா  என்று கண்காணித்துக்கொண்டே  இருக்க வேண்டும் மக்கள்
அப்படி  நிறைவேற்றாத  அரசியல்வாதியை  சரியான ஆதாரங்களுடன்  உடனடியா பதவி நீக்கம் செய்யவேண்டும்
 
பதவிக்கு வந்தால் உருப்படியான திட்டங்கள்  செய்ய வேண்டும்
இல்லையேல்  மக்கள் நம்மை  தண்டித்து விடுவார்கள்  என்னும் பயம் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் 
வரவேண்டும்
 
 
 
 
அந்த நிலை  ஏற்படுத்த நாம் எழுத்தின் மூலமாக, பேசுவதன் மூலமாக
மக்களுக்கு  அறிவுறுத்தவேண்டும்  இதுதான் உண்மையான    ஜனநாயகம் என்பதை மக்கள்  உணர  என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும்  செய்யவேண்டும்
 
இப்போதும் நாம் விழித்துக்கொள்ளாவிட்டால்  மொத்தமாக நம் நாட்டின் அனைத்து செல்வங்களும் கொள்ளையடிக்கப்பட்டு  பரிதாபமான நிலை ஏற்படும் அபாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அவசர கால புரிந்துகொள்ளலாக  ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்
 
 
நாட்டுக்கோ  மக்களுக்கோ  எதையுமே செய்யாமல்  தம்முடைய சொத்துக்களைப் பெருக்கிக் கொள்ள  அரசியலை ஒரு கருவியாக  உபயோகப்படுத்திக்கொள்ளும் அவல நிலை  மாறவேண்டும்,அப்படிப்பட்ட  எண்ணம் கொண்டவர்கள்  கடுமையாக தண்டிக்கப் படவேண்டும்
 
 
மொத்தத்தில்    இனி வருங்காலங்களில் நாட்டின்மேல் அக்கறை இல்லாதவர்கள் 
 
பதவிக்கு வரவே  பயப்படவேண்டும்
 
 
 நம் தத்துவங்கள் இருக்கும் உயர் நிலைக்கு தமிழன் போவது எப்போது?
 
மேற்கூறியவைகளை  தீர்கமாக ஆராய்ந்து   உடனடியாக  செயல்பட ஆரம்பித்தால்  குறுகிய காலத்திற்குள்
 
நம் தத்துவங்கள் இருக்கும் உயர் நிலைக்கு  தமிழன்  மட்டுமல்ல  நம் நாடே  விரைவில் எட்டிவிடும் என்பதில் ஐய்யமில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
22-1-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

V, Dhivakar

unread,
Jan 22, 2010, 3:58:06 AM1/22/10
to mint...@googlegroups.com
Jan 20, 5:50 am, Tthamizth Tthenee
//மக்கள்  தாமாக உணர்ந்து  இலவசங்களை  மறுத்து தமக்கு  நன்மை செய்பவரை
 
தைரியமாக  தேர்ந்தெடுக்கும் விழிப்புணர்வு  வராத வரையில் எதுவுமே
உபயோகமில்லை; ஊழல்  மலிந்துவிட்ட இந்தக் காலத்தில்  அரசோ  தனியாரோ யார்
வந்தும்  ஒன்றும் பெரிதாக  மாற்றம் வர  வழியே இல்லை .
மக்கள் உணரவேண்டும் //
 
இலவசம் என்றதும் என் நண்பர் ஒருவர் அனுப்பியதை இணைத்திருகிறேன். இலவசமாக வந்ததால் நானும் இலவசமாகவே திருப்பித் தருகிறேன். முடிந்தால் இலவசமாகப் படித்து, நீங்களும் இலவசமாக மற்றவர்களுக்குத் தரலாம்.
 
தி
 
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com
FOR YOUR KIND INFORMATION.pdf

N. Kannan

unread,
Jan 22, 2010, 4:12:32 AM1/22/10
to mint...@googlegroups.com
நல்ல இடுகை.

பிச்சை எடுப்பதற்கும் ஒரு மனோநிலை வேண்டும்!
கொரியாவில், ஜப்பானில் பிச்சைக்காரர்களைக் காண்பது அரிது. காரணம்
எப்படியோ இங்கு சுயமரியாதை விதை விதைக்கப்படுகிறது. ஒருவகையில் நமது
சமயக் கருத்தோட்டம் கூட பிச்சை வாழ்க்கைக்கு வித்திட்டு இருக்கலாம். ஆராய
வேண்டும்.
மிக அதிசயமாக, water monitor எனும் உடும்பு இந்தோனீசியாவில் பிச்சை
கொண்டே வாழ்கிறது. தமிழக குடிஜனம் போல அதற்கு தேவையான மீன் உறுப்புகள்
போன்றவை இலவசமாகக் கிடைக்கின்றன. அவை நாய் போல் மனிதனை அண்டி வாழ
ஆரம்பித்துவிட்டன (விட்டேகரின் சமீபத்திய வீடியோ)
அடுத்து டால்பின்! ஆஸ்திரேலிய டால்பின் கடற்கரையில் பிச்சை எடுக்க
வருகின்றன. இதைக் காணக் கூட்டம். கூட்டத்தினால் பிச்சை!
மனிதன் தன்னைக் கெடுத்து பிற விலங்குகளையும் கெடுக்கத் தொடங்கிவிட்டான்;-)
அது சரி, பராசக்தியில் வருவது போல் பிச்சைக்காரர்கள் சங்கம் தமிழகத்தில்
உருவாகிவிட்டதா?

க.>

2010/1/22 V, Dhivakar <venkdh...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2010, 5:27:35 AM1/22/10
to mint...@googlegroups.com
பணக்கார  நாடான  அமெரிக்காவிலும்  பிச்சைக்காரர்கள்  இருக்கிறார்கள்

அவர்கள்  Please  Help Me   என்று ஆங்கிலத்தில்  ஒரு அட்டையில் எழுதி  அதைப்  பிடித்துக்கொண்டு  நிற்கிறார்கள்

நம்மை வந்து  தொந்தரவு செய்வதில்லை  அவ்வளவே


இங்கே  சென்னையில் ஒரு பிச்சைக்காரர்  வெகு நாட்களாக  ஒரே இடத்தில்  உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்  திடீரென்று அவர்  இறந்து போனார்

அவரை மாநகராட்சி  வண்டி வந்து அள்ளிக்கொண்டு போனது

அவ்வளவு நாட்களாக  அவர் உட்கார்ந்திருந்த  இடத்தின் உள்ளே

பல  நகைகள், பணம்  எல்லாம்  புதைத்து வைக்கப்பட்டிருந்தன

அதன்  மதிப்பே  பல லக்ஷம் என்று சொன்னார்கள்

இவரைக் கூட  மன்னித்துவிடலாம்

ஆனால்  நாம் கட்டும் வரிப்பணத்திலே  செய்யவேண்டிய  கடமைகளைச் செய்யாமல் நம் பணத்தையே 
இலவசம்  என்று  ஏமாற்றி      அரசியல்வாதிகள்  தரும்  இலவசங்களை வாங்கிக்கொண்டு

நாட்டின் எதிர்காலத்தை   நிர்ணயிக்கப் போகும்  தங்களுடைய விலைமதிப்பில்லா வாக்குரிமையை
மனச்சாட்சிக்கு  விரோதமாக     இலவசத்துக்கு விற்கும் மக்கள்  தண்டனைக்குரியவர்கள்

Innamburan Innamburan

unread,
Jan 22, 2010, 11:50:53 AM1/22/10
to mint...@googlegroups.com
எதற்கும் ஒரு சிறு துளி. பெரும்வெள்ளமாககதாவது; இன்று விகடனில் படித்தது. 
இன்னம்பூரான்
---

- ஸ்வர்ணரேக்கா

"உங்களுக்கு நாட்டுபற்று இருக்கா..?"

"உங்களுக்கு இந்தியாவ பிடிக்குமா..?"

- இந்த இரண்டு கேள்விகளை இந்தியாவில இருக்கற யார்கிட்ட கேட்டாலும், கொஞ்சமும் யோசிக்காமல், "பிடிக்கும்", "நாட்டுபற்றுல்லாம் இருக்கு"ன்னு தான் சொல்லுவாங்க.

ஆனா, "இந்தியாவில இருக்கறதுக்கு உங்களுக்கு பிடிக்குமா?" ன்னு கேட்டா... அத்தனை பேருமே கொஞ்சம் யோசிச்சுதான் பதில் சொல்லுவாங்க.

ஏன்னு குறிப்பிட்ட காரணத்தை சொல்லவேண்டியதே இல்ல... எவ்வளவோ குளறுபடிகள், லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடு, டிராஃபிக்கில் ஒழுங்கின்மைன்னு ஆரம்பிச்சு நம்ம மக்கள் தொகைய விட நீளமா போகும் அந்த லிஸ்ட்...
இதையெல்லாம் சரி பண்ண நம்மள்ல்ல யாருக்கும் நேரமே இல்ல.

"நானே நாள் முழுக்க கஷ்டபட்டு வேலை பாக்கறேன். வாரத்துல ஒரே நாள் தான் லீவ். இதுல நாட்டுபற்று, சீர்திருத்தம் இதெல்லாம் நமக்கு சரியாவராது,"ன்னு நீங்க நெனச்சீங்கன்னா, அது நூத்துக்கு நூறு உண்மை.

கூட்டம் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, கோஷம் போடவோ, பிற சீர்திருத்த பணிகளில் ஈடுபடவோ நம்மில் பலருக்கு நேரமில்லை தான்.

ஆனால், பல சமயங்களில் நம் நாட்டுபற்றை வெளிப்படுத்தவும், ஒழுங்கீனங்களை சீர் செய்யவும் சில நொடிகளே போதும் என்பதே உண்மை.

ஓர் உதாரணத்துக்கு, டிராஃபிக்கில் ஒழுங்கின்மையை எடுத்துக்குவோம். அதுக்கு என்ன செய்யலாம்? ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்கன்னு பிட் நோட்டீஸ் அடிச்சு தரலாம், மீட்டிங் போட்டு பேசலாம், குறிப்பிட்ட நேரங்களில் டிராஃபிக் போலீஸ் இருக்கணும்ன்னு வலியுறுத்தலாம், இல்லனா கேமரா வெச்சு மானிட்டர் பண்ணலாம். ஆனா, இது எல்லாமே ரொம்ப டைம் எடுக்கும். அதுக்கு பதிலா அவ்வளவாய் டைம் எடுக்காத, ஆனால் பலன் தரக்கூடியதை செய்யலாம்.

அதாவது... டிராபிஃக் சிக்னல்ல பச்சை லைட்டு போட்டதும் வண்டி எடுத்தா போதும்!

ப்பூ... இவ்வளவுதானா!

இது ஒரு மேட்டரா...ன்னு நெனைக்காதீங்க. உண்மையில் அது அவ்வளவு ஈஸி இல்லை.

5, 4, 3-ன்னு வந்ததுமே எல்லாரும் வண்டி எடுத்துடுவாங்க. அப்போ, நாம மட்டும் எடுக்கலேன்னா கன்னாபின்னான்னு ஹார்ன் அடிப்பாங்க. உடனே நாமளும் அவசரப்பட்டு வண்டிய கெளப்பிடுவோம். ஆனா, அப்படி செய்யாம 3,2,1-ன்னு குறைஞ்சு பச்சை விளக்கு எரிஞ்சதும் தான் வண்டி எடுக்கணும்ன்னு உறுதியா இருங்க.

இத எப்பவுமே ஃபாலோ பண்ணுங்க. அவ்வளவுதான்.

இதற்கு ஆகும் செலவு; ரூ 0/-
இதற்கு ஆகும் நேரம்; 1 அல்லது 2 நொடிகள்.

அவ்வளவே தான்... இதை நம்மால் செய்ய முடியாதா என்ன?

வெளிநாடு போய்வந்த எல்லோரும், "அங்கல்லாம் டிராஃபிக் ரூல்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்றாங்க,"ன்னு பெருமையா சொல்லிப்பாங்க.

எங்கேயோ, யாரோ செய்வதில் நமக்கென்ன பெருமை. ஆனால், இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை நாம் செய்யாமல் இருந்தால் நமக்குத்தானே சிறுமை.

டிராஃபிக் சிக்னல்லை தவிர்த்து, ஓரிரு நொடிகளில் நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கு.

சரி.. இதுக்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கலாம்.

இந்த மாதிரி நீங்க செஞ்சு, உங்கள பாத்து நாலு பேரு ஃபாலோ செஞ்சு, அது அப்படியே டெவலப் ஆகி, டிராஃபிக் போலீஸ் இல்லாமயே, மற்ற சில நாடுகளைப் போல டிராஃபிக் ரூல்ஸ்ச நாம ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ற நிலை வந்தா நல்லது தானே...

சிறுதுளிகள் சேர்ந்து தானே பெரு வெள்ளமாகும். அப்படியான ஒரு பெருவெள்ளத்துக்கு உங்கள் சிறு துளியும் தான் காரணமாய் இருக்கட்டுமே!  

2010/1/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2010, 1:03:48 PM1/22/10
to mint...@googlegroups.com
சரி.. இதுக்கும் நாட்டுபற்றுக்கும் என்ன சம்பந்தம்ன்னு நீங்க கேட்கலாம்.
 
 
நிச்சயமாக கேட்கமாட்டார்கள்    சிறு துளி  பெரு வெள்ளம் என்பதை  உணர்ந்தவர்கள்
 
 
நமக்கென்ன  ......... நாம் மட்டும் என்ன செய்துவிடப்போகிறோம்
 
எல்லோரும் பார்த்துக்கொண்டு  சும்மாதானே  இருக்கிறார்கள்
 
நாமும்  அவ்வாறே இருப்போம்
 
என்று நினைப்பவர்கள் மட்டும், தான்  அப்படிக் கேட்பார்கள்
 
(ஆனால்  இப்போதெல்லாம் அப்படி நினைப்பவர்கள்தான்  அதிகம்
 
என்ன செய்வது)
 
 
வரப்புயர  நீர் உயரும்.........       வீடுயர  நாடுயரும்
 
ஒரு வீட்டை  சரியாக நிர்வாகம்  செய்ய முடியாதவனால்  நாட்டை  சீராக்க முடியாது
 
சாக்கடை  கழுவும் வேலையை  எவன் ஒருவனால்  சுத்தமாக பொறுப்பாக  செய்ய முடிகிறதோ
 
அவன்தான்  உண்மையான  தலைவன்
 
அவன்தான்  நாட்டை ஆள  தகுதி வாய்ந்தவன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
 
 


22-1-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

Innamburan Innamburan

unread,
Jan 22, 2010, 4:38:01 PM1/22/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

 

தணிக்கை, புலனாய்வு, நீதித்துறை, |ண்காணிப்புத்துறை, இவை இணைந்து பணி ஆற்றவேன்டும். என்ற என் கருத்தின் விளக்கம்: இந்த துறைகளின் அணுகுமுறை, ஆதார ஆவணங்கள், விசாரணை முறைகள், சட்டப்படி அவைகளின் ஆற்றல்கள் இயங்கும் விதம் ஆகியவை,வெவ்வேறு. எப்படி புலனாய்வுத்துறைகளின் தன்னிச்சைப்போக்கு மாபெரும்குறையாக அமைகிறதோ, அப்படியே இங்கும். ஆனால், நடைமுறை பிரச்னைகள் உள்ளன. தணிக்கைத்துறையும், நீதித்துறையும் அரசின் கீழ் பணி புரியவில்லை. அவற்றின் சுதந்திரம் பாழ் போகலாகாது. தனிமடலில் ஒரு நண்பரின் கருத்து:

தணிக்கைத் துறையுமே கூட அப்படித்தான்! என்ன தான் கரடியாகக் கத்தினாலும், அரசியல்வாதிகள்  ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். தமிழ்நாடு அரசு மீது தணிக்கைத் துறை வைத்த விமரிசனம் என்ன ஆயிற்று?

ஆடிட் ரிப்போர்ட் வந்து சிலநாட்களே ஆயின. அது Public Accounts Committee யில் விவாதிக்கப்படவேண்டும். அதன் தலைவர் எதிர்கட்சியிலிருந்து இருக்கவேண்டும் என்பது மரபு. அந்தக்குழு முறையாக விவாதிக்கட்டுமே. இதழ்களும், தொலைக்காட்சிகளும் அது வரை அரைகூவட்டுமே. மக்கள் மன்றங்கள் எதிர்க்கட்சிக்களை இயக்கட்டுமே. அதையெல்லாம் விட்டு, தணிக்கைத்துறை கத்தும் கரடி என்று கரடியாக கத்தினால் பயன் என்ன? அவர்கள் தன் கடமையாற்றிவிட்டார்கள். மறுபடியும்,, How can a policemean stop a rape?

 

மத்திய அரசுக்கு நேரடியாக ஏன் வரிகட்ட வேண்டும் என்பதற்கு [திரு ராம்தாஸ்] தி ருப்திகரமான விடை: சுருங்கச்சொல்லின், மத்திய அரசு நேராகவும், மான்யங்கள் மூலமாகவும், பல செலவினங்களை செய்து வருகிறது. பாதுகாப்புச்செலவு கணிசமானது. எந்த உள்ளாட்சியால் போர் விமானங்கள் இயக்க முடியும்? மேலும், அரசியல் சாஸனப்படி, இந்தியா ஒரு Federal State.. எனவே மத்திய அரசுக்கு வரி விதிக்கும் உரிமை/கடமை உண்டு, திரு ராம்தாஸும் மருவாதையாய் கட்டத்தான் வேண்டும். ஓரிடத்துக்கோபத்தை மற்றொரு இடத்தில் காட்டுவதில் பயன் இல்லை. உள்ளாட்சிக்கு வேட்டு வைத்தது, நாடாளுமன்ற உருப்பினர்கள், மாநில மன்ற உறுப்பினர்கள் என்று சொல்லுங்கள். சரி.

 

மற்ற விஷயங்கள், பிறகு பார்க்கலாமா?

இன்னம்பூரான்



2010/1/22 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Jan 22, 2010, 10:00:18 PM1/22/10
to mint...@googlegroups.com
2010/1/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>

> 5, 4, 3-ன்னு வந்ததுமே எல்லாரும் வண்டி எடுத்துடுவாங்க. அப்போ, நாம மட்டும் எடுக்கலேன்னா கன்னாபின்னான்னு ஹார்ன் அடிப்பாங்க. உடனே நாமளும் அவசரப்பட்டு வண்டிய கெளப்பிடுவோம். ஆனா, அப்படி செய்யாம 3,2,1-ன்னு குறைஞ்சு பச்சை விளக்கு எரிஞ்சதும் தான் வண்டி எடுக்கணும்ன்னு உறுதியா இருங்க.
>
> இத எப்பவுமே ஃபாலோ பண்ணுங்க. அவ்வளவுதான்.


நல்ல பாயிண்ட். இதை ஜெர்மனியில் கடுமையாக தொடர்கின்றனர். காரில்லாத
ரோட்டில், சிகப்பு விளக்கென்றால், பச்சை வரும்வரை காத்திருந்து தெருவைக்
கடக்கிறார்கள். இது அசட்டுத்தனமாகப் பட்டாலும், மனப்பயிற்சிக்கு உதவும்.

சில மாதங்கள் முன்பு, இங்கு கொரியாவில் இப்படி அவசரமாக கிளம்பிய ஒரு
ஸ்கூட்டர் அடிபட்டு விழுந்து இறந்தை நேரில் கண்ணுற்ற போது
ஆடிப்போய்விட்டென். உயிரின் விலை சில நொடிகளே! ஏன் அந்தப் பொறுமையும்,
ஒழுக்கமும் நம்மிடம் வருவதில்லை?

எவ்வளவோ விபத்துக்கள் தொடர்ந்து நடந்தாலும், `யாருக்கு வந்த இழவோ?` எனும்
மனோநிலை தமிழக ரோடுகளில் இருப்பதேன்? நாமென்ன மரத்துப்போனோமா?

க.>

ம ஸ்ரீ ராமதாஸ்

unread,
Jan 22, 2010, 10:52:11 PM1/22/10
to mint...@googlegroups.com
Innamburan Innamburan wrote:
மத்திய அரசுக்கு நேரடியாக ஏன் வரிகட்ட வேண்டும் என்பதற்கு [திரு ராம்தாஸ்] தி ருப்திகரமான விடை: சுருங்கச்சொல்லின், மத்திய அரசு நேராகவும், மான்யங்கள் மூலமாகவும், பல செலவினங்களை செய்து வருகிறது. பாதுகாப்புச்செலவு கணிசமானது. எந்த உள்ளாட்சியால் போர் விமானங்கள் இயக்க முடியும்? மேலும், அரசியல் சாஸனப்படி, இந்தியா ஒரு Federal State.. எனவே மத்திய அரசுக்கு வரி விதிக்கும் உரிமை/கடமை உண்டு, திரு ராம்தாஸும் மருவாதையாய் கட்டத்தான் வேண்டும். ஓரிடத்துக்கோபத்தை மற்றொரு இடத்தில் காட்டுவதில் பயன் இல்லை. உள்ளாட்சிக்கு வேட்டு வைத்தது, நாடாளுமன்ற உருப்பினர்கள், மாநில மன்ற உறுப்பினர்கள் என்று சொல்லுங்கள். சரி.

ம்ம்ம்.. நாலஞ்சு வருஷமா அதைத்தான் செஞ்சுகிட்டு வரேன் :-)

கூடுமானவரை காசை கொண்டு போய் ஓரிடத்தில் குவித்து விட்டு அதைக் கொண்டு பட்ஜெட் போட்டு எப்படா என் ஊருக்கு ரோடு டிரெயின் பாலம் வருமுன்னு காத்திக்கிட்டு, தோன்றும் இடம் தொட்டு  அடையும்  இடம் வரை  பட்ஜெட் போடுபவர் முதல் வழி நெடுகிலும் பலரும் சுருட்டி கடைசிக் காசு வருவதற்குள் விளையும் ஊழலை குறைக்க,

கூடுமானவரையில் அங்கங்கேயே செலவழிச்சுட்டு பொதுவான தேவைகளுக்கு மேல் நோக்கி கொண்டு செல்லணும்னு சொல்லியிருந்தேனே! அப்படி கொண்டு போகும் போது பாதுகாப்புக்கு காசு கிடைக்கும்.

இப்போ மேலே கொண்டு போயிட்டு பட்ஜெட்டில் பங்கு பிரிக்கிறோம். மாநிலமாகட்டும் மத்தியமாகட்டும். அந்த பெரும் பங்குக்கு அதிபதியாக இருக்கும் அமைச்சர் அதிகாரிகளின் விருப்பு வெறுப்பு சார்பு அல்பாசை முன்னுரிமை சுருட்டல் இப்படி எல்லாவற்றையும் கடந்து மறுபடியும் அது எங்கும் பரவுவது தற்போதைய முறையில் அல்லலோ அல்லல் படுகிறது.

மமதா இருந்தா டிரெயினெல்லாம் பெங்கால் போகுது.. லாலு இருந்தா பிகார் போகுது.. பாலு இருந்தா ரோடெல்லாம் தமிழகம் வருது.. இப்படியே எங்கும்.. மற்றோர் வாய்க்கு லாலி பப்தான் கிடைக்குது..

காசை கொண்டு ஓரிடத்தில் குவிக்காமல் இருந்தாலே பல ஊழல்கள் தானாக குறையும். கண்காணிப்பையும் அங்கங்கேயே நடத்திக் கொள்ளணும்.

--

ஆமாச்சு

Innamburan Innamburan

unread,
Jan 23, 2010, 5:28:39 AM1/23/10
to mint...@googlegroups.com
For Information from today's Junior Vikdan, with thanks,. Copyright vikadan.
i
------
நல்லதா... கெட்டதா? ஒரு நச் உதாரணம்
பொது செய்தியாகும் தனி நபர் வருமானம்...

பொது வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் கூட தனி நபர்களின் வருமான வரி கணக்கு விவரங்களை, யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியுமா?

''தெரிந்து கொள்ளலாம்!'' என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசின் 'மத்திய தகவல் ஆணையம்'!

தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் சிறந்த ஆயுதமாக மாறிவருகிறது, 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்.' இந்த சட்டத்தின் மூலம் டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் குப்தா என்பவர், எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் முன்னர் பணி புரிந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் வருமான வரி கணக்கு தாக்கலான விவரத்தைக் கேட்டிருந்தார். இந்த மனு, வருமான வரித் துறையின் பொது தகவல் அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது. குப்தா மீண்டும் மேல் முறையீடுகள் செய்ய... அவை ஆணைய அதிகாரிகளால் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கேட்கப்படும் வருமான வரி விவரத்தில் முக்கிய அந்தரங்க ஆவணங்கள் உள்ளன. வெளி நபர்களுக்குத் தெரிந்தால் தேவையில்லாத

பிரச்னைகள் வரும். இறையாண்மை, பாதுகாப்பு, வர்த்தக ரகசியம், தனி நபரின் அந்தரங்க விஷயம் போன்றவையும் பாதிக்கப்படும். குப்தா கேட்கும் விவரங்களை தரக் கூடாது' என்று மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது!

அப்படியும் குப்தா அசரவில்லை. இந்த விஷயத்தை மத்திய தகவல் கமிஷனர் சைலேஷ் காந்தியின் காதுக்குக் கொண்டு போனார்.

அவர், ''தகவல் பெறும் உரிமை என்பது ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் தனிப்பட்ட வர்கள் பற்றிய விவரத்தை ரகசியமாகப் பாதுகாக்க சட்டத்தில் இடமில்லை. அந்த வகையில் குப்தா கேட்ட விவரத்தை கொடுத்தாக வேண்டும்!'' என்று சொல்லி விட்டார்.

'ஒரு நபர் ஒரு விஷயத்தை அரசுக்குக் கொடுக்கும்போதே அது பொது விஷயமாகி விடுகிறது. ஆகவே, அந்த விஷயத்தைத் தனி நபர்களுக்குத் தரத் தடையேதும் இல்லை' என்பதுதான் சைலேஷ் காந்தியின் கருத்து!

'இப்படி, போராடி விவரம் பெற்ற குப்தா யார்?' என்ற கேள்வி இந்நேரம் உங்களுக்கு எழுந்திருக்கும்.

வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித் துறைக்குத் தகவல் கொடுக்கும் ஓர் இன்ஃபார்மர் இவர்! வரி ஏய்ப்பு தொடர்பாக, தான் கொடுத்த விவரத்தின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் கேட்டார். அதுதான், இன்றைக்கு ஒரு முன்மாதிரியான வரலாற்று நிகழ்வாகப் பதிவாகி விட்டது!

இனி, இந்திய குடிமகன் ஒருவர், அவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சரி, 'அவரின் வருமானம் எவ்வளவு... வரி எவ்வளவு கட்டுகிறார்?' போன்ற விவரங்களைக் கேட்டால், அந்தத் தகவல்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட் டிருக்கிறது வருமான வரித் துறை!

மத்திய தகவல் ஆணை யரகத்தின் அலு வலக வட்டாரத் தினர் இது பற்றி, ''எதிர்காலத்தில் குடிமக்கள் அனைவரின் வருமான வரி விவரங்கள் இணைய தளத்தில்கூட வெளியிடவேண்டிய சூழல் வரும்!'' என்று சொல்லியுள்ளனர்.

''இப்படி, யாரின் வருமான விவரங்களையும் யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்ற நிலை வந் தால், அதன் நன்மை - தீமைகள் என்னென்ன?'' என்ற கேள்வியை சென்னையின் முன்னணி வக்கீலும் வருமான வரி ஆலோசகருமான கே.வைத்தீஸ்வரனிடம் கேட் டோம்.

''அமெரிக்காவில் அனை வருக்கும் 'சோஷியல் செக்யூரிட்டி நம்பர்' என்ற பிரத்தியேக எண் வழங்கப்படுகிறது. இந்த எண் மூலம், ஒருவரது 'வருமானம், முதலீடு, சொத்து, மருத்துவச் செலவு என அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த எண், அரசுக்கும் அந்தத் தனிப்பட்ட நபருக்கும் மட்டுமே தெரியும் என்பதால், அங்கு பிரச்னை எதுவும் இல்லை. இந்தியாவில் இதற்கும் ஒரு படி மேலே, வருமான வரி விவரங்களை எவரும் அறியும் நிலை வந்திருக்கிறது...'' என்று நிறுத்தியவர், தொடர்ந்து அதன் நன்மைகளைப் பட்டியலிட்டார்.

''தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, எந்த வழியில் எல்லாம் வருமானம் வருகிறது என்பதை அறிந்து, அவர்களுக்கு ஓட்டுப் போடலாமா... வேண்டாமா என பொதுமக்கள் முடிவெடுக்க முடியும். அதிகாரத்தில் இருக்கும் எவரின் வருமான வழிகளையும் பெறலாம் என்பதால், புலனாய்வுப் பத்திரிகைகளுக்கு மிகவும் பயனுள்ள விஷயமாக இருக்கும். பெண் கொடுப்பவர்கள், மாப்பிள்ளை சொல்லும் சம்பளம் சரிதானா என்பதை நூறு சதவிகிதம் இம்முறையில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வரி ஏய்ப்பு சம்பவங்கள் குறைந்து, அரசுக்கு அதிக வரி வசூலாகும் வாய்ப்பும் ஏற்படும்!'' என்றவர், அதிலுள்ள தீமைகளையும் சொன்னார்.

அதே சமயம், ''இந்த சட்டத்தால், பணக்காரராக வெளியில் காட்டிக் கொள்ளாத ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை அறிந்து, அவர் வீட்டில் கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நிகழவும் வாய்ப்பு உண்டு. பழிவாங்கும் முயற்சிகள், காழ்ப்பு உணர்ச்சிகளுக்கு இந்த விவரங்களை பயன்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். அரசியல் அல்லது பிசினஸ் போட்டியாளர்கள், இந்த விவரங்களைப் பெற்று, தவறாக அதைப் பயன்படுத்தலாம். வருமான விவரங்கள் வெளியில் தெரிவது, கிரிமினல்களுக்கு அதிக வாய்ப்பாகிவிடும். எனவே, வருமான வரி கணக்கு விவரங்களை அனைவரும் பார்க்கும் விதமாக இணைய தளத்தில் வெளியிடும் சூழ்நிலை இந்தியாவில் அவ்வளவு சுலபமாக வராது!'' என்றார்.

- சேனா சரவணன்    
     
 

2010/1/23 ம ஸ்ரீ ராமதாஸ் <rama...@amachu.net>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 23, 2010, 1:03:30 PM1/23/10
to mint...@googlegroups.com
இன்று நான் இணைத்தது (லண்டன் டைம்ஸ்சில் ஒரு கடிதம்,& ஹிந்துவில் ஒரு கட்டுரை) இவை முதலாளித்துவத்தின் சில கேடுகளை அலசுகின்றன. மற்றபடி, இங்கு பொருத்தம் சொல்பம். ஒரு கார்ட்டூன் பார்த்தேன். க்பெச்புக்கில் ஆபரேஷனும், இ-பெயில் அப்பெண்டிக்ஸ் விற்பனையும் என்று.! அதை இணைக்கமுடியவில்லை. செய்தி என்ன என்றால், முதலாளித்துவத்தின் வைரிகள் விரும்பி படிக்கலாம். மற்றபடி, நாளை பார்க்கலாம்.
--
இன்னம்பூரான்
2010/1/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>
Sir.doc

Innamburan Innamburan

unread,
Jan 23, 2010, 4:54:20 PM1/23/10
to mint...@googlegroups.com
Comments,please.
Innamburan


Date:24/01/2010 URL: http://www.thehindu.com/thehindu/op/2010/01/24/stories/2010012452231200.htm



Public services: a positive experience

THOMAS THARU


Those working in the public sector deserve to know that their work is valuable and appreciated

We need to promote public services to counter any unfair criticism of their work


A friend travelling with me recently by the Coromandel Express from Calcutta developed chest pain and vomiting, which suggested a heart problem. The TTE sent a message to Vishakapatnam, the next junction where a Railway doctor examined him and advised us to go to the government hospital. There they took an ECG immediately and sent us to the casualty ward, where he was given immediate medication but cleared for resuming the journey. Lacking onward reservation, my friend was able to get a flight to Bangalore, his home town. Later tests showed that he did indeed have a mild heart attack, though not perceptible in the ECG.

Let me elaborate a bit on this episode. The railway officials were courteous and helpful. The well-equipped free public ambulance service "108" took us to King George Hospital, where the staff and doctors were also prompt in their services. There was no paperwork — the chit from the railway doctor being sufficient for all medical services. We were sleeper class passengers, in a strange town, with no local contacts or influence, and able to communicate only in English. Our train had reached at 03:30, we were in the hospital by five and back by eight, before going to the airport. Except for an altercation with a station porter regarding a wheelchair, the whole experience was essentially positive. Moreover, all this (ECG, injection, tablets) was absolutely free. Nobody even asked for a tip. The kind of service we received was easily worth a couple of thousand rupees or more!

The doctors at KGH rightly concluded that the symptoms and ECG results did not warrant our further detention in Vizag. More knowledgeable acquaintances say that had we preferred to seek private medical care, we would probably have been detained a few days, at enormous expense.

This incident has reinforced my faith in public services. Contrary to popular perception, I noted that officials and staff in the railways, the ambulance service, and hospital performed their duty with competence and application of mind.

I know this is not a ’representative’ example. It isn’t meant to be one. We routinely hear only the other side of the story. With the same experience, someone else may merely highlight the faults, perhaps complain about conditions in the hospital such as torn sheets and dirty toilets. For a free public hospital, considering the kind of crowds they deal with, I am amazed we got such quick and effective service. These facilities therefore need to be supported and their shortcomings addressed (and not merely condemned).

It is also my impression that the same people who are vocal in denigrating public services will readily pay bribes to ‘get things done’! But the same class of people do not complain when paying through their nose for shoddy services from private organisations. The larger private corporations do not care for customers other than those they perceive as important to their business. The small guy invariably has access only to a faceless call centre for making complaints. They make enough profits to run a slick PR system which can handle the few difficult customers without denting their public image maintained by huge advertising outlays.

Though public services routinely attract adverse comments, those working in the public sector deserve to know that their work is valuable and appreciated, though seldom expressed. Despite well-known short-comings like political or bureaucratic interference and organisational inefficiency, there are many who do a sincere job, sometimes with dedication under adverse conditions. It is they who have held this nation together for over 60 years, and their services are available to everyone equally, at least in principle. You will not find private phone or courier services reaching small villages, whereas the government is expected to make facilities like food, shelter, transport, health and education available to everyone, and it can only be done through adequate public funds by taxing "us" who can afford it.

If the well-off do not actively support public services, we will surely descend steadily into chaos. I would urge readers who agree with the viewpoint expressed here to patronise and promote public services as far as possible, and counter any unfair criticism of the work they do in a hostile environment.

© Copyright 2000 - 2009 The Hindu



2010/1/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Jan 24, 2010, 6:06:47 AM1/24/10
to mint...@googlegroups.com
//.தணிக்கைத் துறையுமே கூட அப்படித்தான்! என்ன தான் கரடியாகக் கத்தினாலும், அரசியல்வாதிகள்  ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். தமிழ்நாடு அரசு மீது தணிக்கைத் துறை வைத்த விமரிசனம் என்ன ஆயிற்று?//

சம்பந்தப்பட்ட அதிகாரியின் மீது தமிழ்நாடு அரசு, புகார் கொடுத்துள்ளது. அவங்களைக் கலந்து ஆலோசிக்காமல் செய்தியைக் கொடுத்துவிட்டதற்காக. பாவம் அந்த அதிகாரி! இனி அன்னை வந்து என்ன சொல்லப் போறாங்களோ??:((((((((((

2010/1/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Jan 24, 2010, 6:12:09 AM1/24/10
to mint...@googlegroups.com
ஊரிலிருந்து வந்தாச்சா?


 
2010/1/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

K R A Narasiah

unread,
Jan 24, 2010, 6:14:11 AM1/24/10
to mint...@googlegroups.com
People do react and thats what makes the world worth living!
Thanks Sri Innamburan
Narasiah

2010/1/23 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Jan 24, 2010, 9:40:57 AM1/24/10
to mint...@googlegroups.com
அட??? வந்தாச்சு, காலம்பரத் தான் வந்தோம். இன்னும் அசதி போகலை. இன்னாம்பூர் போயிட்டு வந்தது பத்தியும் எழுதணும்!

2010/1/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>
360.gif

Innamburan Innamburan

unread,
Jan 24, 2010, 9:44:03 AM1/24/10
to mint...@googlegroups.com
இலவு காத்த கிளியாக காத்திருக்கிறேன், இன்னம்புரைப் பற்றி கேட்க.
360.gif

Venkatachalam Subramanian

unread,
Jan 24, 2010, 11:19:50 AM1/24/10
to mint...@googlegroups.com
  Though public services routinely attract adverse comments, those working in the public sector deserve to know that their work is valuable and appreciated, though seldom expressed. .......................................................................................................................
ஓம்.
வாடிப்பட்டி வட்டம், மேலக்கால் கிராமம் ஒருவர் தான் வாங்கி, வீடுகட்டி குடிபுகுந்தவர் அந்த வீட்டிற்கு பட்டாமாறுதல் செய்து தருமாறு மனுச் செய்திருந்தார். 
(கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.)
பட்டாமாறுதல் செய்வதற்குறிய பதிவு ஆவணங்கள் வரைப் படம் முதலானவற்றையும் (ஜெராக்ஸ் நகல்) இணைத்திருந்தார். ஆவணங்களுடன் கிராம மற்றும் தாலுகா கணக்குகளுடன் சரிபார்த்ததில் அவர் வாங்கி யிருந்த மனை ஒரு பெரிய அளவிலான 9 ஏக்கர் பரப்பளவு கொண்ட புன்செய் நிலத்தில்( ஒரு புல எண்ணில் )ஒரு செண்ட் கிரையம் பெறிருக்கிறார். அந்தப் பெரிய புல எண் கொண்டநிலத்தில் அவருடைய கைப்பற்று எவ்வளவு என்பதை அளந்து , உட்பிரிவு ஆவணங்கள் புலப் படம் ஆகியவை தயாரித்து உட்பிரிவுக்கு அனுமதி பெற்ற பின்னர், புதிய உட்பிரிவு எண் தரப்படும்.புல எண் 12 என்பது 12ஏ- 12- பி. என எண்ணிடப் பட்டு அசல் கணக்குகளில் அளவுகள் குறித்தும், வழங்கப்பட்ட ஆணை எண் நாள் ஆகியவை கிராமக் கணக்குகளிலும் தாலுகா கணக்குகளிலும் பதிவு செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக கிரையம் பெற்றவர் பெயரில் மனைப் பட்டா வழங்கவேண்டும் என்பது நடைமுறை.

இந்த நிகழ்வில் அவர் கிரைய பெற்ற மனையிடம் ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள நான்கு மால்களுக்குள் கட்டுப்படவில்லை. அதில் சுட்டிக் காட்டப்பட்ட இடம் வேறு; வீட்டடி அனுபவம் வேறு இடம். 

இவ்வாறு நேர்ந்தால் ஒரு திருத்த ஆவணம் தயாரித்து முந்தைய ஆவணத்தில் கண்ட விவரங்களை எழுதி எத்தகைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று குறிபிட்டு துணை ஆவணமாகப் பதிவு செய்தல் வேண்டும்.

இந்த விவரங்களை எடுத்துச் சொல்லி விளக்கியும் அவர் புரிந்து கொள்ளவில்லை. தனக்கு சாதாகமாக தீர்வு செய்யவில்லை என்று வெகுண்டு ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்/தொண்டரை அழைத்துக் கொண்டு வந்தார். அவரிடமும் விவரம் கூறிவிட்டு அந்த வீட்டு மனையின் மீது ஹை-கிரிட் மின்சார கம்பியுடன் இணைந்த டவர் லைன் போவதால் மின் வாரியத்துறையின் தடையில்லாச் சான்று பெறவேண்டும் என்பதையும் விளக்க்கினேன்.

மறுநாள் சோழவந்தான் கிராம ஊழியரில் ஒருவன் வந்து அய்யா! உங்களைக் குறித்து அவதூராக ஒரு தட்டி எழுதி சோழ வந்தான் பேரூந்து நிலைய வாயிலில் கம்யூனிஸ்ட் கழகம் ,தொங்கவிட்டிருக்கிறது என்றான்.என்ன எழுதியிருக்கிறது ? படித்துப் பார்த்தாயா? என்றேன். “” சாயி பாபா துணை வட்டாட்சியர் பட்டா மாறுதல் செய்வதற்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்”  என்று எழுதியிருப்பதாகச் சொன்னான். நான் உடனே சொன்னேன். அந்த தட்டி எழுதி விளம்பரம் செய்தவர்களிடம் சொல்லி ஒரு 100 வாட்ஸ் பல்பு ஒன்றை மாட்டி வெளிச்சம் போட்டால்தான் இரவில் வருவோருக்கும் தெரியவரும் . அதைச் செய்யச் சொல்” என்று..

அன்புடன் வெ.சுப்பிரமணியன்.ஓம்

2010/1/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

mayakunar

unread,
Jan 24, 2010, 9:45:20 AM1/24/10
to மின்தமிழ்
Having served the medical dept of Tamilnadu government for more than
thirty years in various capacities from PHCs to big general
hospitals, it is really heartening that someone has brought to light
that services in government hospitals is not really poor as made out
frequently in the press and media.In fact services of all specialists
is available round the clock and patients are attended to immediately
unlike in private hospitals where one has to wait for arrival of
concerned specialist.
Present day Ministers and top bureaucrats of the govt seek
treatment in private institutions ignoring the govt hospitals whose
upkeep and maintenance is their responsibility.Did not the ex chief
ministers of Tamilnadu Mr C.Rajagopalachari and Mr. C.N Annadurai had
undergone surgery in Govt General Hospital. Five star hotel like
ambience may not be there but certainly people are available to render
good service and equipments are in place .Wwith a little bit of good
governance , and encouragement instead of interference from higher ups
I feel the government hospitals can recover the lost reputation.
Gopalan

On Jan 24, 2:54 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> Comments,please.
> Innamburan
>
> *Date:24/01/2010* *URL:http://www.thehindu.com/thehindu/op/2010/01/24/stories/20100124522312...
> ------------------------------
>
> *Public services: a positive experience *
>
> THOMAS THARU
>
>  ------------------------------
> *


>
> Those working in the public sector deserve to know that their work is
> valuable and appreciated
>
> We need to promote public services to counter any unfair criticism of their
> work

> *
> ------------------------------

>  **


>
> © Copyright 2000 - 2009 The Hindu
>

> 2010/1/23 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
>
>
> > இன்று நான் இணைத்தது (லண்டன் டைம்ஸ்சில் ஒரு கடிதம்,& ஹிந்துவில் ஒரு கட்டுரை)
> > இவை முதலாளித்துவத்தின் சில கேடுகளை அலசுகின்றன. மற்றபடி, இங்கு பொருத்தம்
> > சொல்பம். ஒரு கார்ட்டூன் பார்த்தேன். க்பெச்புக்கில் ஆபரேஷனும், இ-பெயில்
> > அப்பெண்டிக்ஸ் விற்பனையும் என்று.! அதை இணைக்கமுடியவில்லை. செய்தி என்ன
> > என்றால், முதலாளித்துவத்தின் வைரிகள் விரும்பி படிக்கலாம். மற்றபடி, நாளை
> > பார்க்கலாம்.
> >  --
> >  இன்னம்பூரான்

> > 2010/1/23 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
> >  For Information from today's Junior Vikdan, with thanks,. Copyright
> >> vikadan.
> >> i
> >> ------
> >>   நல்லதா... கெட்டதா? ஒரு நச் உதாரணம்    பொது செய்தியாகும் தனி நபர்
> >> வருமானம்...
>

> >> *பொ*து வாழ்க்கையில் இல்லாவிட்டாலும் கூட தனி நபர்களின் வருமான வரி கணக்கு


> >> விவரங்களை, யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியுமா?
>
> >> ''தெரிந்து கொள்ளலாம்!'' என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசின் 'மத்திய
> >> தகவல் ஆணையம்'!
>
> >> தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்கும் சிறந்த ஆயுதமாக மாறிவருகிறது, 'தகவல்
> >> அறியும் உரிமைச் சட்டம்.' இந்த சட்டத்தின் மூலம் டெல்லியைச் சேர்ந்த
> >> ராஜேஷ்குமார் குப்தா என்பவர், எஸ்கார்ட்ஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் முன்னர்
> >> பணி புரிந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின் வருமான வரி கணக்கு தாக்கலான
> >> விவரத்தைக் கேட்டிருந்தார். இந்த மனு, வருமான வரித் துறையின் பொது தகவல்
> >> அதிகாரியால் தள்ளுபடி செய்யப்பட்டது. குப்தா மீண்டும் மேல் முறையீடுகள்
> >> செய்ய... அவை ஆணைய அதிகாரிகளால் இரு முறை தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கு
> >> மருத்துவமனை நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கேட்கப்படும்
> >> வருமான வரி விவரத்தில் முக்கிய அந்தரங்க ஆவணங்கள் உள்ளன. வெளி நபர்களுக்குத்
> >> தெரிந்தால் தேவையில்லாத
>
> >> பிரச்னைகள் வரும். இறையாண்மை, பாதுகாப்பு, வர்த்தக ரகசியம், தனி நபரின்
> >> அந்தரங்க விஷயம் போன்றவையும் பாதிக்கப்படும். குப்தா கேட்கும் விவரங்களை தரக்
> >> கூடாது' என்று மருத்துவமனை நிர்வாகம் வாதிட்டது!
>
> >> அப்படியும் குப்தா அசரவில்லை. இந்த விஷயத்தை மத்திய தகவல் கமிஷனர் சைலேஷ்
> >> காந்தியின் காதுக்குக் கொண்டு போனார்.
>
> >> அவர், ''தகவல் பெறும் உரிமை என்பது ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில்
> >> தனிப்பட்ட வர்கள் பற்றிய விவரத்தை ரகசியமாகப் பாதுகாக்க சட்டத்தில்
>

> ...
>
> read more »

Innamburan Innamburan

unread,
Jan 24, 2010, 2:32:50 PM1/24/10
to mint...@googlegroups.com
I routinely go to Government Hospitals and have seen the innards of Royapettah Hospital, General Hospital and Kilpauk Hospitals. I found the sevice good, though infrastructure was awfully lacking and people queue there much better than elsewhere. They can improve in many ways; that is a different issue.bnMy observations cover ten years. I invariably ended up offering some donation or service, as it was manifest that we were taking advantantage of a system, meant for the poor.
innamburan
2010/1/24 mayakunar <gopal...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jan 25, 2010, 12:58:53 PM1/25/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

26 ஜனவரி 2010

 

 

இன்று குடியரசு தினம்; மணி விழா.

 

மகிழ்வுடன், மனநிறைவுடன், புத்துணர்ச்சியுடன், தனிமனிதர்களும், சமுதாயக்குழுக்களும், பெரிய இந்திய சமூகமும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பல கூறி, யாவரும் நலத்துடன் வாழவேண்டும் என்று விழைந்து பணி புரிவோம் என்று நாம் ஒவ்வொருவரும் வாக்குறுதி நமக்கே அளித்துக்கொள்வோமாக.

 

மின் தமிழில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் நான் தொடங்கிய 'தணிக்கைத்துறையின் தணியா வேகம்' என்ற இழை, ‘அத்துறையில் யான் கண்ட சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ள…’ அமைந்தாலும், அது 'அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க...என்ற கேள்விக்குறியை நோக்கி நகர்ந்தது இயல்பே. கிட்டத்தட்ட ஒரு மாதமாவது கருத்துக்களை (எனது உள்பட) சேகரம் செய்த பிறகே, நடுநிலையில் ஆய்வு செய்து, இந்த இழை தனது இலக்கை நோக்கிப் பயணிப்பது நலனே என்பது என்னுடைய கணிப்பு.

 

 

இன்றோ திருவிழா. சில விஷயங்களை கோடிட்டு காட் உகந்த தருணம். பிறகு அவற்றையும் இந்த interactive forum விமரிசிக்கட்டும்.

 

ü       இயற்கை அன்னையை வணங்கி, அவளது வளங்களைப்போற்றி, உயிரனங்கள் யாவற்றையும் சஹோதரபாவத்துடன் அன்பு பாராட்டி, உலக மக்கள் ஓரினம் என்று மனம் தெளிந்து, இந்திய ஒருமைப்பாட்டுக்கு விதையூன்றி, தமிழ்மொழிப்பற்றும், மற்ற மொழிகளில் ஆர்வமும் நம்மை வழி நடத்த;

ü       நாம் அடைந்த முன்னேற்றங்களுக்கு நன்றி நவின்றும்  பின்னடைவுகளுக்கு தீர்வு தேடியும், நலமடைவோமாக.

ü       முதற்க்கண்ணாக, எந்த நிலையிலும் லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்று அசையா உறுதி கொள்வோமாக.

ü       விழிப்புணர்ச்சிக்கு ஆதரவு பெருகியிருக்கிறது, இந்த இழையில். அந்த இலக்கை நோக்கி பணி புரிவோமாக.

ü       தனி மனிதனால் சாதனைகள் படைக்கமுடியும்; அதற்கு சான்றுகள் பல உள்ளன. சமூகத்தை மேன்படுத்த அன்றாடம் நாம் யாவரும், சிறிய/பெரிய பணிகள் செய்வோமாக. கீழ்த்தட்டில் உள்ளவர்களை மேன்படுத்துவதற்கு உழைப்போமாக. கல்வி தானம் எளிது. அதில் தொடங்குவோமே.

ü       இன்று இந்தியாவில் உள்ள பேச்சுரிமையும், எழுத்துரிமையும், மக்காளட்சியின் வரப்பிரஸாதம். திறம்பட, தார்மீக அணுகுமுறையில், கையாண்டால், அதுவே அரசை உருப்படியான ராஜப்பாட்டையில் மக்கள் நலம் நாடும் வகையில், திருப்ப முடியும்.

ü       இரண்டு கருத்துக்களை மனதில் ஆழமாக பதித்துக்கொள்ளவேண்டும். அவை: Vigilance is the price of Liberty.” [JS Mill]; “Power corrupts; Absolute Power corrupts absolutely.” [Lord Acton] " விழிப்புணர்ச்சி, விடுதலையின் கவசம்." & "அதிகாரம் தர்மத்தை குலைக்கும்; அளவு கடந்த அதிகாரம் தர்மத்தை குழி தோண்டி புதைத்து விடும்."

 

சில விளக்கங்கள்:

*      மனித சமுதாயம் கட்டுப்பாடுகளை விரும்புவதின் அடிப்படை, அதற்கு தன்னலத்தின் மேல் உள்ள அச்சம். ராஜா-ராணி, சர்வாதிகாரம், குடியாட்சி, கொடுங்கோலாட்சி, குடியாட்சி பெற்றெடுத்த கொடுங்கோலாட்சி, குடியாட்சி என்ற போர்வைக்குள் சர்வாதிகாரம் என்றெல்லாம் வரலாறு பார்த்திருக்கிறது. மக்காளாட்சியில் சிக்கனம் குறைவு, மெத்தனம் அதிகம்; மக்களின் உரிமை அதிக அளவு பறி போகாது. சர்வாதிகாரத்தில் சிக்கனம் இருக்கலாம்; மெத்தனம் குறைவாக இருக்கலாம்; மக்கள் அடிமைகளே. கொடுங்கோலாட்சியில் உயிருக்கே ஆபத்து. அரசை உருப்படியாக வேலை செய்விக்க, மக்களாட்சி என்ற சீரிய முறைக்குள் தீர்வு காண்பது தான் விவேகம், அதற்கு ஒரு மாபெரும் புரட்சி தேவையாக இருந்தால் கூட.

*      முதலாளித்துவம், பொதுவுடைமை, தன்னார்வம், பணி செய்வதே என் கடன், உள்ளாட்சி, மாநில சுயேச்சை, வலிமையுடைய மத்திய அரசு, தணிக்கை, நீதி, கண்காணிப்பு, தேர்தல் விதிகள், சட்டதிட்டங்கள், காவல் துறையின் கடமை ஆகியவற்ரைப்பற்றி பல கருத்துக்கள் வந்துள்ளன. மக்களாட்சியில், அவை யாவற்றிற்கும் பங்கு உண்டு. மேற்பார்வையில்லை எனின், அவை யாவுமே குப்பை. மனிதனின் அடிப்படை தன்னலம், அவை ஒவ்வொன்றையும் கடத்தி செல்வதை வரலாறும் சுட்டுகிறது; நாமும் கண்கூடாக பார்க்கிறோம். அரசு என்ற வேலியே பயிரை மேய்வதும் [hijacking] கண்கூடு.

*      இந்திய அரசு முறைகளில், புராணங்களில் தவிர, ஆன்மீகத்தின் தாக்கம் கிடையாது. தார்மீகத்தின் தாக்கம் இருந்தது, நீதி நூல்களின் நல்வரவாக. அர்த்த ஸாஸ்திரம் ஆன்மீகத்தை அரசியலில் ஈடுபடுத்தவில்லை. தமிழ்நாட்டு அரசர்களும், அகம்,புறம் என்று திரிந்தார்கள். ஆன்மீகமில்லை. சமயத்தின் தாக்கம் கூட ஓரளவு தான் இருந்ததது. ஆட்சிமுறைகளை மாற்ற முயலவில்லைஎன்று ஒரு முறை கூறியிருந்தேன்.

*      அதன் விளக்கம்: ஆன்மீகம் இந்தியாவின் தனியுடைமை அல்ல. ஸுஃபிக்களும், 'சென்' பெளத்தமும், சீன/கிரேக்க/ரோமானிய/ மெஸபடோமியன் தத்துவங்களும் (Winwood Reade: The Martyrdom of Man: available in Gutenberg) . எந்த விதத்திலும் குறைந்தவை இல்லை; கிருத்துவ ஆன்மீகமும் ஆழ்ந்து அறிந்து கொள்ளவேண்டியது. என் கருத்துக்கு ஒரு திருத்தம் என்னவென்றால், ஆன்மீகம், உலகளவில், அரசியலை என்றுமே வழி நடத்தியதில்லை, இதிகாசங்களைத்தவிர (அதுவும் உலகளவில்). ஆனால், ஆன்மீகப்போலிகள், சமயங்களின் பினாமியாக, போர்கள் நடத்தின; படுகொலைகள் செய்தன; கொடுங்கோல் ஆட்சியை விதைத்தன. கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் நாம் இருக்கவேண்டும்.

*      சுதந்திர நாடுகளாகக் கருதப்ப்டும் ஜனநாயக நாடுகளிலும் மக்க்ளுக்கு உண்மையான் சுத்ந்திரம் இல்லை! ஜனநாயகம் என்று பேச்சளவில் இருந்தாலும் உண்மையில் வாரிசத்துவம் தான் நிலையாக் உள்ளது.’ என்ற நிலை நிச்சயமாக கவலை அளிக்கிறது. தேர்தலில், மக்கள் தகுதியற்ற வாரிசுகளை ஒதுக்கவேண்டும்..

 

*      தனிமடலில், சில ஆழ்ந்த கருத்துக்கள் வந்தன, நன்றி. இப்போது இருக்கும் முறைகளை வைத்துக் கொண்டே ஏதோ சாதித்துவிட முடியும் என்று இந்த இழை செல்வதாகக்கூறும் நண்பர், 'ஏற்கெனெவே இருந்த துருப்பிடித்துப் போன அரசு இயந்திரம், அடிமைப் படுத்தி வைத்திருந்தவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்ட நெறிமுறைகள், அரசு நிர்வாகம் இப்படி அத்தனையுமே செகண்ட் ஹான்டாக இருப்பது பொருந்தவில்லை என்பது தெரிந்துமே கூட, அதையே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது வெள்ளைத் துரை போய்க் கறுப்புத் துரை வந்து உட்கார்ந்துகொண்டதைத் தவிர வேறென்ன வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற கேள்வியையோ, அதற்கான விடையைத் தேடும் முயற்சியிலோ மின் தமிழில் தற்சமயம் நடந்து வரும் விவாத இழை இல்லை' என்று வருந்தி, சில மேற்கோள்களை தந்து உதவியிருக்கிறார். அரசு இயந்திரத்தையே ஒழித்துவிடு என்ற கருத்து என் பதிவில் எந்த இடத்திலும் இல்லை. அது நடைமுறை சாத்தியமும் இல்லை..’ என்றும் தெளிவு படுத்தியிருக்கிறர்.

*       மேற்கோள்களை  பார்ப்போம். [1] ஃபிரான்ஸ் ஓபந்ஹீமரின் 1906 வருட நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு: இந்த மொழிப்பெயர்ப்பே சர்ச்சைக்கு உள்ளானது என்பது ஒரு புறம் இருக்க, 50 வருடங்களுக்கு முன்னே படித்து நான் ஒதுக்கிய நூல் என்பதும் ஒரு புறம் இருக்க, அதை மறுபடியும் படித்தேன் அவர் ஒரு nihilist. அரசு என்ற அமைப்பையே எதிர்த்து கருத்து சொன்னவர். தற்காலம், அவரது கூற்றுகள் ஏற்புடையது அல்ல எனபதற்கு, இரண்டாம் உலக யுத்தத்தில் மரண அடி வாங்கிய ஜெர்மன் பொருளாதர நிலை இன்று செழிப்புடன், வளமுடன் இருப்பதே சாக்ஷி. அங்கு மக்கள் போக்குவரத்து விதிகளை (அதே மாதிரி சட்டதிட்டங்களை) மதிக்கிறார்கள். [2] மதிப்புக்குரிய இதழாளர், தியாகி திரு.ஏ.ஏன்.சிவராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகளை முன்னிறுத்துகிறார். திரு.ஏ.ஏன்.சிவராமன் அவர்களை, நண்பர் ஏ.ஜீ. வெங்கடாச்சாரி அவர்களுடன் சென்று சந்தித்து இருக்கிறேன்; அவரை மிகவும் மதிக்கிறேன். அந்த கட்டுரைகள் தனிமடல் நண்பருக்கும், எனக்கும் கிடைக்கவில்லை. ஆங்கிலேய ஆட்சியிலும், எழுத்து உரிமை இருந்தது என்ற தோற்றம். வேறு ஒன்றும் சொல்ல அவராலும், என்னாலும் இயலவில்லை. [3] ஸோவியட் ரஷ்யாவின் தந்தை லெனின்: ட்ஸார் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை யாராலும் நியாயப்படுத்த முடியாது. அக்டோபர் புரட்சி மூலம் ஆட்சியைக்கைப்பற்றிய லெனின் மாவீரர். அரசு இயந்தரத்தை முறுக்கேற்றி, அவரும், ஸ்டாலினும் கொடுங்கோலாட்சி செய்ததும், கொலைகள் பல செய்ததும் வரலாறு. லார்ட் ஆக்டன் சொன்னது சரி தான் என்பதை நிiரூபித்த புண்யம் அவர்களைச்சாரும். இன்று ரஷ்யா முதலாளித்துவத்தின் முன்னணியில் நிற்கிறது. லெனின் ஒப்பந்ஹீமர் கூற்றுக்கு முரண்.4. நவீன் சாவ்லா/டி.என்.சேஷன்: சிலர் திரு. லின்க்டோ திறம்பட தேர்தல் கமிஷனை நடத்தினார்; டி.என்.சேஷன் வெறும் வெத்து வேட்டு என்பர். இருதரப்பும் ஆதாரம் தரும்.

*      எனது கவலை வேறு: [1] என்னால் [இன்னம்பூரானால்] 'வெளியில் சொல்ல முடியாத விஷயங்கள்' என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். அது புரியவில்லை. நான் என்ன கொக்கோகத்திற்கு, சான்றுகள் கூறி பொழிப்புரை பொழிகிறேனா என்ன? கவலை விட்டொழிக. [2] அடுத்த கருத்து: 'தணிக்கைத் துறையுமே கூட அப்படித்தான்! என்ன தான் கரடியாகக் கத்தினாலும், அரசியல்வாதிகள்  ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள். தமிழ்நாடு அரசு மீது தணிக்கைத் துறை வைத்த விமரிசனம் என்ன ஆயிற்று? விடை:

*      ஆடிட் ரிப்போர்ட் வந்து சிலநாட்களே ஆயின. அது Public Accounts Committee யில்   விவாதிக்கப்படவேண்டும். அதன் தலைவர் எதிர்கட்சியிலிருந்து இருக்கவேண்டும் என்பது மரபு. அந்தக்குழு முறையாக விவாதிக்கட்டுமே. இதழ்களும், தொலைக்காட்சிகளும் அது வரை அரைகூவட்டுமே. மக்கள் மன்றங்கள் எதிர்க்கட்சிக்களை இயக்கட்டுமே. அதையெல்லாம் விட்டு, தணிக்கைத்துறை கத்தும் கரடி என்று கரடியாக கத்தினால் பயன் என்ன? அவர்கள் தன் கடமையாற்றிவிட்டார்கள். மறுபடியும், How can a policeman stop a rape?

*      பல துறைகளில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. நமது அடிப்படைப் பிரச்சனைகள் பூதாகாரமாய் இருப்பதால் இவையெல்லாம் அதில் அடிபட்டுப் போகின்றன. என்ன செய்ய? இது திரு.நா.கண்ணன் ஆணித்தரமாக கேட்கும் வினா? - மற்றொரு இழையில். [1] 60 வருடங்களாக, கட்சிகளின் வளர்ச்சியை முன்னிட்டு, வரிப்பணத்தை அரசு செலவு செய்ததில் 10% கூட மக்களுக்குப்போகவில்லை என்ற கவலை, நமது பிரதமர்கள் கூறியது. 60 வருடங்களாக, தணிக்கைத்துறை கரடியாக கத்தியது. நாம் தட்டிக்கேட்க மறுக்கிறோம். இலவசங்களை பெற்றுக்கொள்கிறோம். அதை மாற்ற, மக்கள் தான் முன் நிற்கவேண்டும். [2] ஊழலுக்கு இரு பக்கங்கள். கொடுப்பவன் முதலில் நிறுத்தவேண்டும். இன்று மக்கள் ஊழலை வாழ்நெறியாக அமைத்துக்கொண்டனர். [3] மேல்நாடுகளில் இந்தியனுக்கு மிக்க மதிப்பு. நாம் ஏன் நன்முறைகளை இந்தியாவிலேயே கையாளக்கூடாது? முதலில் மக்கள் கலாச்சாரத்தை மாற்றினால், அரசு இயந்திரத்தை பழுது பார்க்க இயலும். கற்றவர்கள் முன்னின்று வழி காட்டவேன்டும். [5] சிறிய வெற்றிகளும், பெரிய வெற்றிகளுக்கு அடிகோல் நாட்டும்.

*      இறுதியில்: டாக்டர் அப்துல் கலாம் அவர்களைப்பற்றி மெச்சி எழுதியதைப்படித்தேன். அவர் சிறந்த விஞ்ஞானி; ஒழுக்கத்தின் சிகரம். இருந்தும், அவர் ஜனாதிபதியாக இருந்த போது இரு தவறுகள்; கீழே சுட்டியது ஒன்று; பீகார் அரசை, ரஷ்யாவில் இருந்தபடி டிஸ்மிஸ் செய்தது மற்றொன்று. நாம் எல்லோரும் முதல் சங்கக்காலம் சென்று நக்கீரனாரிடம்  பாடம் படிக்கவேணடும் எனத்தோன்றுகிறது.

 

இன்னம்பூரான்

 

Date:01/06/2006 URL: http://www.thehindu.com/2006/06/01/stories/2006060105481000.htm

 

 

 

Opinion - Letters to the Editor

 

The President has articulated ethical concerns and echoed public opinion. The Oxonian in Prime Minister Manmohan Singh will recognise the incongruity of applying a British constitutional device to the opposite end. It is not beyond the realm of possibility that the President may resign, rather than being pressured into giving assent in the second round.

S. Soundararajan,

Chennai

 

Note: He did not resign and gave assent in the second round.

 


--
இன்னம்பூரான்


2010/1/24 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tirumurti Vasudevan

unread,
Jan 26, 2010, 1:21:36 AM1/26/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
எல்லாம் படித்தபின் ஒரே விஷயம்தான் உறுதி ஆகிறது.
நாடு முன்னேற வேணுமானால் மக்கள் அரசை சாராது வேலை செய்து பிழைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
வீர் சாவர்கர்  கூறியது போல..... if you come, with you; if you dont come, without you; if you oppose us, in spite of you........
வேற வழியே தெரியலை.
இலவசத்துக்கு ஆசை பட்டுகிட்டு ஓட்டு போடற சனங்க இருக்கும் வரை;
தனக்கு காரியம் ஆனா போதும், மத்தவங்க எக்கேடு கெட்டா என்ன என்று தோன்றும் வரை  இந்த அரசு முறையை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.

2010/1/25 Innam buran Innamburan <innam...@googlemail.com>

26 ஜனவரி 2010

 

 

இன்று குடியரசு தினம்; மணி விழா.

 


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Innamburan Innamburan

unread,
Jan 26, 2010, 4:54:34 AM1/26/10
to Tirumurti Vasudevan, mint...@googlegroups.com
If interested, please read,
2010/1/26 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

karthi

unread,
Jan 26, 2010, 5:32:56 AM1/26/10
to mint...@googlegroups.com, Tirumurti Vasudevan, mint...@googlegroups.com
இன்னம்புரான்,
 
என்ன அருமையான செய்தி!
 
சின்ன செய்திதான்; ஆனால் உலகம் விழித்துக் கொண்டது
என்பதை நமக்கு உணர்த்துகிறது.
 
"5ஆம் தூண்" பற்றி வேறு யாருக்காவது தெரியுமா?
 
ரெ.கா.
--

Tthamizth Tthenee

unread,
Jan 26, 2010, 6:16:26 AM1/26/10
to mint...@googlegroups.com
FIFTH PILLAR

லஞ்சம்  வாங்குவதற்கு  எதிராக  ஏற்படுத்தபட்ட அமைப்பு

நானும் உறுப்பினனாக  இருக்கும்     EXNORA    அமைப்பில் அதுவும் ஒரு ப்ரதான  அங்கம்


அன்புடன்
தமிழ்த்தேனீ




26-1-10 அன்று, karthi <karth...@gmail.com> எழுதினார்:

karthi

unread,
Jan 26, 2010, 7:52:57 AM1/26/10
to mint...@googlegroups.com
ஆஹா! அப்ப அதன் சேவைகளைப் பற்றியும்,
குறிப்பா வெற்றிகளைப் பற்றியும் கொஞ்சம்
விரிவா எழுதுங்களேன், தேனீ!

Tthamizth Tthenee

unread,
Jan 26, 2010, 8:18:04 AM1/26/10
to mint...@googlegroups.com
http://india.5thpillar.org/
மேற்கண்ட   தளத்தில்  அனைத்தையும் பார்வையிடலாம்
நானும்   நேரம் கிடைக்கும்போது  விரிவாக எழுதுகிறேன்

Geetha Sambasivam

unread,
Jan 26, 2010, 9:19:24 AM1/26/10
to mint...@googlegroups.com
ஜெயா + தொலைக்காட்சியில் இதன் சேவைகள் பற்றிய ஒரு நேர்முகத் தொலைபேசி உரையாடல் ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட ஒரு நாள் வருகின்றது. சில சமயங்களில் திரு ரத்னவேல் பாண்டியன் அவர்களே கலந்து கொள்ளுவார்.

2010/1/26 karthi <karth...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jan 26, 2010, 1:22:21 PM1/26/10
to mint...@googlegroups.com
இன்று இந்தியாவில் உள்ள பேச்சுரிமையும், எழுத்துரிமையும், மக்காளட்சியின் வரப்பிரஸாதம். திறம்பட, தார்மீக அணுகுமுறையில், கையாண்டால், அதுவே அரசை உருப்படியான ராஜப்பாட்டையில் மக்கள் நலம் நாடும் வகையில்,
திருப்ப முடியும்.

திரு இன்னம்புராரே நீங்கள்   மேற்கூறிய   கருத்தை  படிப்பவர்கள்  சரியான விகிதத்தில்  உள்வாங்கிக் கொண்டால்  அடுத்ததாக  செய்ய வேண்டிய  வேலையே நாமும்  ஏதாவது  மக்களுக்கு  விழிப்புணர்வு   ஏற்படுத்தக் கூடிய  கட்டுரைகள், நாட்டின் நலனையும் மக்கள் நலனையும்  மனதில் கொண்டு  எழுத ஆரம்பிக்கவேண்டும்

அந்தக் கட்டுரைகள் உண்மையிலேயே  மக்களின் உணர்வுகளைத் தூண்டி உண்மையான தேசச்ப்பற்றை  ஏற்படுத்தும் விதமாக  இருக்கவேண்டும்

நாம் பேசும்போதெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்தான்  நம் பேச்சு இருக்கவேண்டும் இத நாம்தான் முடிவு செய்து உடனடியாக் நடவடிக்கையில் இறங்க வேண்டும்



ü       இரண்டு கருத்துக்களை மனதில் ஆழமாக பதித்துக்கொள்ளவேண்டும். அவை: Vigilance is the price of Liberty.” [JS Mill]; “Power corrupts; Absolute Power corrupts absolutely.” [Lord Acton] " விழிப்புணர்ச்சி, விடுதலையின் கவசம்." & "அதிகாரம் தர்மத்தை குலைக்கும்; அளவு கடந்த அதிகாரம் தர்மத்தை குழி தோண்டி புதைத்து விடும்."


உண்மை!     நாடு இப்போது இருக்கும் நிலையைக் கண்டாலே  மேற்கண்ட கருத்து 

எவ்வளவு  உண்மை என்று தெரிகிறது


அன்புடன்

தமிழ்த்தேனீ



26-1-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:



--

karthi

unread,
Jan 26, 2010, 9:14:02 PM1/26/10
to mint...@googlegroups.com
தேனீயாரே,
 
ஐந்தாம் தூண் வலைப்பக்கம் பார்த்தேன். மிக அருமை.
இதுதான் இந்தியாவை ஊழலிலிருந்து மீட்கும் ஆக்ககரமான பாதை.
 
அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் செய்யும் ஊழலைத் தடுப்பதில்
பலர் வெற்றி பெற்றுள்ளது தெரிகிறது.
 
அடுத்த கட்டமாக இவர்களை அலைக்கழிக்கும் அரசு ஊழியர்களைத்
தண்டிக்கவும் வேண்டும். ஊழல் மேலும் ஒழியும்.
 
பாராட்டுக்கள்.
 
ரெ.கா.
----- Original Message -----

Tthamizth Tthenee

unread,
Jan 27, 2010, 1:41:34 AM1/27/10
to mint...@googlegroups.com
நன்றி  ரெகா  அவர்களே

இது மட்டுமல்ல  எக்ஸ்னோரா அமைப்பின் மூலமாக

அரசியல்வாதிகளால் ,அல்லது தனியார்களாள்   ஆக்ரமிப்பட்ட  நிலங்களை .பல ஏரிகளை  வழக்கு தொடுத்து
மீட்டிருக்கிறோம்

பல ஏரிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடு பட்டிருக்கிறோம்


இன்னும் ப்லவிதமான ஆகப் பணிகளில்   ஈடு பட்டிருக்கிறோம்

http://exnorainternational.org/      இந்த  தளத்தில் சென்று பார்த்தால்  திரு எம் பீ நிர்மல்  அவர்களின் ஆக்கபூர்வ பாதை  தெரியும்

அவருடன் நானும்  சிறு அணில் போல  இருக்கிறேன்

தமிழ் எக்ஸ்னோரா  விற்கு பொறுப்பேற்றிருக்கிறேன்

அதுமட்டுமல்ல    மரம் நடுதல், ஆங்காங்கே  உள்ள மக்கள் படும்  கஷ்டங்களை  அரசு அதிகாரிகளின்  கவனத்துக்கு எடுத்துச் செல்வது
  உலகம் காப்போம்   என்னும் தலைப்பில்  கட்டுரைகள்  எழுதிக்கொண்டிருக்கிறேன்
  ,  உலகத்தில் ஏற்படும் அதிகமான  சூட்டின் விளைவால்   பனி மலைகள் உருகி   அதனால்  ஏற்பட இருக்கும் அபாயத்தை
மக்களுக்கு  எடுத்துச் சொல்லும் விதமாக
சுற்றுச் சூழலை  சுத்தமாக  வைத்துக்கொள்ள  அறுவுறுத்தும் விதமாக  பல பள்ளிகளில் மேடையில் பேசிக்கொண்டிருக்கிறேன்
 சென்னை ஆன் லைன்  போன்ற பத்திரிகைகளில்  உலக விழிப்புணர்வு பற்றியும் எழுதிவருகிறேன்


ஏதோ ,   என்னால் முடிந்த  அளவு  செய்து கொண்டிருக்கிறேன்,

 
அன்புடன்
தமிழ்த்தேனீ












27-1-10 அன்று, karthi <karth...@gmail.com> எழுதினார்:

Tthamizth Tthenee

unread,
Jan 27, 2010, 2:01:20 AM1/27/10
to mint...@googlegroups.com
http://www.peopleofindia.net/articles/articles-001/080901_independence.php

http://peopleofindia.net/articles/articles-001/081101_duties.php
http://www.peopleofindia.net/articles/articles-001/090112_phone.php


மேற்கண்ட சுட்டிகளில்   என்னுடைய      http://peopleofindia.net    ல்   படிக்கலாம்

மற்ற கட்டுரைகள்  கவிதைகள்  என்னுடைய வலைப்பூவான   http://thamizthenee.blogspot.com    ல்  படிக்கலாம்


அன்புடன்
தமிழ்த்தேனீ


27-1-10 அன்று, Tthamizth Tthenee <rkc...@gmail.com> எழுதினார்:

Innamburan Innamburan

unread,
Jan 27, 2010, 3:08:24 AM1/27/10
to mint...@googlegroups.com
'ஏதோ ,   என்னால் முடிந்த  அளவு  செய்து கொண்டிருக்கிறேன்'
அது தானே நான் எல்லாரிடமும் கேட்பதும். சொல்லவும் வேணும். சீதாம்மா சொல்றமாதிரி, இந்த ஸ்டேஜில், காசும் வேண்டாம், புகழும் வேண்டாம். நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
இன்னம்பூரான்
 
 

2010/1/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 28, 2010, 12:57:00 PM1/28/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
If interested, please read this article from The Economist, latest Issue. and be so kind as to input your comments.
 
Innamburan
-----
On the move
Jan 28th 2010 | PATNA
From The Economist print edition


Bihar has blossomed under Nitish Kumar. But his reforms need deeper roots

eyevine
eyevine


ON A rural road in Araria, a poor district in the Indian state of Bihar, a roadblock impedes traffic. Not so long ago, that might have heralded extortion, carjacking or kidnapping, of which there were over 400 recorded cases in the state as recently as 2004. But Bihar has turned a corner. This hold-up is the work of children, not bandits. They lower a bamboo pole over passing cars in the hope of collecting a few rupees for a festival celebrating Saraswati, the Hindu goddess of learning.

This fertile land where the Buddha found enlightenment under the Bodhi tree was latterly overgrown by a “Jungle Raj” of corruption, crime and caste vengeance. With over 90m people, the state held a morbid fascination for the rest of India, which lapped up blood-curdling tales of violence and larceny. “The perception was that once you landed at the airport you would be faced with gunfire,” says Vineet Vinayak, the senior policeman in Patna. Bihar was a place the rest of the country avoided visiting, and dreaded becoming.

Now it is a place they are celebrating. Nitish Kumar, who became chief minister in 2005, has uprooted the Jungle Raj, restoring law and order: there were only 66 kidnappings in 2008. Over the four fiscal years ending on March 31st 2009, the state’s output grew at an annualised pace of 10.5%, faster than the national average (see chart). Small and agricultural, Bihar’s economy is notoriously fickle. It grew spectacularly for a few years in the mid-1990s too. But this spurt looks more sustainable and it has to be. Even at this rate of expansion, Bihar would need 18 years to match the income per person enjoyed by Maharashtra today.


The economic pickup is visible in the state capital, Patna, where people no longer fear to drive nice cars on the new flyover, or further afield. In the village of Tetri, which hosts the thatched huts of refugees from floods in 2008, ten mobile-phone companies compete for custom, offering calls at one paisa ($0.0002) per second.

Thanks to increased funds from the central government, Bihar’s spending on planned development priorities was 160 billion rupees ($3.5 billion) in the most recent fiscal year, compared with just 12 billion in the year to March 31st 2002. The government set about road building on a “war footing”, says Anup Mukerji, the head of Bihar’s civil service. It used to take ten hours to drive from Araria to Patna, a distance of about 350km (220 miles). Now it takes seven. The route is still strewn with wrecks—in one spot a Tata lorry lies on its side, like a beached whale—but it used to be much worse. Along one 20km stretch, recalls Mr Mukerji, the road had disappeared, forcing him to drive through fields.

Mr Mukerji oversees this progress from his office in Patna’s spotless old collectorate building, which has outsourced its upkeep to a company called All Services Under 1 Roof. He holds monthly video conferences with programme officers in every district. But even teleconferencing cannot close the gap between Patna, where the administration has palpably improved, and the outlying districts, where the government’s social programmes and public services work fitfully, if at all.

Behind the collectorate building in one outlying district, men urinate beside five rusting four-by-fours. “I can show you so many papers on NREGA,” the district development officer says, referring to the National Rural Employment Guarantee Act, which entitles every rural household to 100 days of minimum-wage work on demand. He buzzes for a flunky, who spares his boss the indignity of picking up the pink ring binders piled on the floor.

But the paperwork is piling up in the district offices faster than jobs are being provided in the villages. In Jamua village in the district of Araria, an NGO called Jan Jagaran Abhiyan found that 1,710 job cards had been issued, which should entitle villagers to over 17m rupees in wages, if they had worked the full 100 days allowed. But the village had claimed less than 5% of the amount available. Of that, 43% was pilfered, by reporting ghost workers and forging bills for materials. The mystery is perhaps not the 43% that was embezzled, but the millions in central-government funds that were left on the table by a local administrative machinery too apathetic even to steal with much conviction.

According to Sushil Modi, Bihar’s deputy chief minister, the biggest problem for all the poorer states is “the crisis of implementation”. “Even if we have the money,” he asks, “how to spend that money?” Mr Kumar cannot solve this from Patna. He must instead breathe life into the panchayats, the elected village councils supposedly accountable for local schemes. But in Bihar, the councils have been through only one electoral cycle. The panchayats remain beholden to the old elites.

Bihar’s turnaround has won it national attention. But it has so far rested on vigorous programmes, such as road-building and immunisation, rather than new institutions. And the growth is driven by public investment, not private. At the Bihar Industries Association (BIA) in Patna, businessmen complain about the lack of credit and electricity, in a state that consumes just 12% of the per person national average.

Political uncertainty is also a constraint. Mr Kumar must fight for re-election this year. Despite a resounding endorsement for his party in the national election last May, his coalition fared less well in more recent by-elections. According to K.P. Jhunjhunwala, former president of the BIA, investors are waiting in the wings for the second innings of Nitish Kumar.



Copyright © 2010 The Economist Newspaper and The Economist Group. All rights reserved.


2010/1/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Feb 6, 2010, 2:02:50 AM2/6/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
From Junior Vikadata, today's Issue:
 
'...கருப்பண்ணசாமி கோயில் தெருவில் (பழைய பஸ் ஸ்டாண்ட் சாலை), 38 லட்சத்தில் சிமென்ட் ரோடு போடுவதற்கு வரும் பிப்ரவரி 15-ம் தேதி டெண்டர் விடப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த வேலையை தனது செலவில் முடித்துவிட்டு, 'பில்'லையும் கொடுத்துவிட்டிருக் கிறார் சுப்பாராஜ்! இப்படியரு 'நினைத் ததை முடிப்பவன்' பவர் அவருக்கு!.. '
 
ஆஹா! ஓஹோ! அரசு உருப்படியாக... தேறாவிட்டாலும், இங்கு கருப்பட்டியாக தேறுகிறது!
இன்னம்பூரான்
2010/1/28 Innamburan Innamburan <innam...@googlemail.com>

V, Dhivakar

unread,
Feb 6, 2010, 2:18:13 AM2/6/10
to mint...@googlegroups.com
அடடே! என்ன சார் இதைப் போய் ஆச்சரியமான செய்தியாக போட்டிருக்கிறீர்கள். இதெல்லாம் இந்தியாவில் சகஜம். (இது பல அரசாங்க இலாகா - குறிப்பாக பொதுப்பணித்துறை, மாநகராட்சி, - களில் பல  ஆண்டுகளாகவே  நடைமுறையில் உள்ளது) 
 
இங்கே வேலையாவது  முடித்திருக்கிறார்களே.. எங்கள் பகுதி, நட்ட நடு நகரத்தில் இருந்தாலு,ம் சரியான சாலை வசதி இல்லை.  ஒவ்வோரு வருடமும் புதிப்பிக்கிறோம் என்று வேலை செய்யாமல், வேலை செய்துவிட்டதாகவே M புக்கில் பதிவு செய்து, பணத்தையும் வாங்கி பங்கு போடுவார்கள். 
இதையெல்லாம் மந்திரி அளவில் (எங்காவது பிரஸ் மீட்டில்) நானே சொல்லியாயிற்று, சிரித்துக் கொண்டு போய் விடுகிறார்கள்.
 
அரசியல் ல இதெல்லாம் சகஜம் இ சார்!
 
தி
 
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Feb 6, 2010, 2:40:50 AM2/6/10
to mint...@googlegroups.com
கட்டாத  பாலம்
போடாத  சாலை
செய்திகளில் மட்டுமே
வாசிக்கக் கூடிய  நிகழ்வுகள்
செவியாரக் கேட்டாலே த்ருப்தி
அடையும் மக்கள்
வாக்குறுதி அளித்தே
நிறைவேற்றாமல்
வாக்கு சேகரிக்கும்
அரசியல்வாதிகள்
விசாரனைக் கமிஷன் அமைத்தே
வழக்குகளை மறக்க வைக்கும் உத்திகள்
இவையெல்லாம்  பழகிப் போனதால்
மக்கள்  மேடும் பள்ளமுமான
சாலைகளில்  திறமையாக
வித்தை காட்டி  வாழ்க்கை
நடத்தும் அவலம்
மீண்டும்   மந்திரிகள்  வாக்களிப்பார்கள்
நிறவேற்ற  அவசியம் இல்லாத வாக்குறுதிகள்
மக்களும்   வாக்களிப்பார்கள்
மறக்காமல்  அவர்களுக்கே

வாழ்க சுதந்திரம்
வாழ்க  ஜனநாயகம்
வாழ்க  குடியரசு


அன்புடன்
தமிழ்த்தேனீ





6-2-10 அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதினார்:

Geetha Sambasivam

unread,
Feb 6, 2010, 4:55:26 AM2/6/10
to mint...@googlegroups.com
அட???? அப்போ எங்க தெருவே தேவலை போலிருக்கே!!

2010/2/6 V, Dhivakar <venkdh...@gmail.com>
360.gif

Innamburan Innamburan

unread,
Feb 19, 2010, 3:40:57 PM2/19/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
வெகு நாட்களாக தூங்கிக்கிடக்கும் இந்த இழையை எழுப்பலாமா?
 
இன்னம்பூரான்



Date:20/02/2010 URL: http://www.thehindu.com/2010/02/20/stories/2010022055971100.htm
Back

National

Arrogance, vanity have no place in official duty: Supreme Court

J. Venkatesan

How could a polite plea for re-employment be handled presumptuously?


CRPF DIG’s order treating letter as appeal against compulsory retirement illegal

Special Director-General also seriously erred in upholding it


New Delhi: The Supreme Court has asked senior government officers not to be arrogant towards subordinates in the discharge of their official functions.

“People in power and authority should not easily lose equanimity, composure and appreciation of the problems of the lesser mortals. They are always expected to remember that power and authority must be judiciously exercised according to the laws and human compassion. Arrogance and vanity have no place in discharge of their official functions and duties,” said a Bench of Justices Dalveer Bhandari and A.K. Patnaik.

In the instant case, Angad Das was recruited as constable in Central Reserve Police Force in 1969 and promoted Lance Naik and then head constable. As head constable in Jammu and Kashmir, he was served a show-cause, dated April 11, 1995, by the CRPF Commandant, 51 BN alleging that the date of birth as given by Das at the time of his joining service was found to be false. After an enquiry, he was compulsorily retired from service in July 1996.

Thereafter Das sent a polite letter to the Additional District Inspector-General of Police seeking re-employment as he had to educate and marry off five daughters. The prayer was made with folded hands and by touching his feet. The DIG, CRPF, Avadi, however, treated this letter as an appeal and the punishment of compulsory retirement was enhanced to removal from service.

The Special Director-General upheld the DIG’s order. Since he did not get relief in the Delhi High Court, Das moved the Supreme Court.

‘Pinnacle of humility’

Writing the judgment, Justice Bhandari pointed out that the appellant’s letter was the pinnacle of humility. “No provision of law permits the DIG of Police to treat a letter of request for re-employment as an appeal. The DIG has no power or authority to enhance the sentence of the appellant. We fail to comprehend how such an innocuous and polite letter of request seeking re-employment on compassionate grounds can ever receive such an unwarranted and arrogant reaction. The order is wholly arbitrary and illegal.”

The Bench said the order was legally untenable and the Special Director-General also seriously erred in upholding it. The appellant and his family suffered tremendous mental agony and harassment caused by the arbitrary orders. It set aside the orders and restored the order of compulsory retirement.

“We hope and trust that senior officials in future would not be totally oblivious of the problems of the humble and modest employees and [would not] pass similar orders,” the Bench said.

The Bench directed that the appellant be paid all pension benefits which had become due and payable to him, with nine per cent interest per annum, within two months. It directed the Union of India to pay him Rs. 50,000 in costs within two months.

© Copyright 2000 - 2009 The Hindu

2010/2/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Tirumurti Vasudevan

unread,
Feb 20, 2010, 10:59:47 PM2/20/10
to mint...@googlegroups.com
எழுப்பலாம்தான். நேரம்தான் காணோம்!
திவாஜி

2010/2/20 Innamburan Innamburan <innam...@googlemail.com>

தூங்கிக்கிடக்கும் இந்த இழையை எழுப்பலாமா?
 

Innamburan Innamburan

unread,
Apr 26, 2010, 11:40:37 AM4/26/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
இரண்டு மாசத்துக்கு பிறகு, தூங்கிக்கிடக்கும் இந்த இழையை எழுப்பலாமா என்று, இந்த இடுகை. ஆங்கில செய்தியின் சுருக்கம்:
மத்திய அரசு 65 விழுக்காடு மட்டுமே வரி வசூலிக்க முடிந்தது, 2008-09 நிதியாண்டில். வரிபாக்கி 2 லக்ஷம் கோடி (அடேயப்பா! வரி பாக்கியில்லாமல், ரோஷத்துடன் அரசு உருப்படியாக பணி புரிந்திருந்தால், நிதி பற்றாக்குறையில் மூன்றில் ஒரு பங்கு தான் நிலுவையில் இருந்திருக்கும். 72 கோடி ரூபாய் பாக்கி ஒரு 'புரவி வணிகர்' என்ற முதலாளியிடமிருந்து. 

தகவல்: தணிக்கைத்துறையின் ரிப்போர்ட் (செவி சாய்ப்போர்: யாருமில்லையே!)

இன்னம்பூரான்
Printed from TImes of India Govt fails to collect tax of Rs 2L cr: CAG PTI, Apr 24, 2010, 12.12am IST NEW DELHI: Efficiency in tax collection went down in 2008-09 financial year resulting in a total uncollected demand of Rs 2 lakh crore, the apex auditor CAG has said. “Gross tax collection as a percentage of the total demands raised declined to 65% in 2008-09 (from 74% in 2007-08),” the CAG said in a report tabled in Parliament on Friday. The Rs 2 lakh crore that remained uncollected over the years till March 2009, despite I-T department raising demands for it, comprised demand of Rs 90,000 crore of earlier years and demand of 2008-09 of Rs 1.1 lakh crore, the CAG informed. Had the total demand been collected, it would have taken care of two-thirds of the country’s fiscal deficit that fiscal, CAG officials said. More than one-third of the uncollected demand is due from “relatively unknown” Pune-based businessman and stud farm owner Hasan Ali, the officials said. “The total uncollected demand is Rs 2 lakh crore with one group (Hasan Ali) alone accounting for Rs 71,874 crore,” CAG said.

2010/2/20 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

Subashini Tremmel

unread,
Apr 26, 2010, 1:34:07 PM4/26/10
to mint...@googlegroups.com
income  tax declaration  செய்ய மறந்த எனது அலுவலக நண்பர்,  ஒருவர் தனது வங்கிக்கணக்கை தொட முடியாத நிலையில் கணக்கை முடக்கி விட்டனர்.  என்ன காரணம் என்று புரியாமல் தவித்து வங்கியைத் தொடர்பு கொண்டால் கடந்த வருடத்திற்கான கணக்கை காட்டாதவரை ஏதும் செய்ய முடியாது என்று சொல்லி விட்டனர்.  இப்படி ஒரு கடும் நடவடிக்கை எடுத்தால் பலன் கிடைக்கலாம்.
-சுபா

2010/4/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
May 1, 2010, 1:40:00 AM5/1/10
to mint...@googlegroups.com
This is a Copyright article of Vikatan. Thanks goes to them for the opportunity to cite an example from the grass root level.
Innamburan

ல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் யூனிய னுக்கு உட்பட்ட வெள்ளங்குளி பஞ்சா யத்து தலைவியும் அவரது கணவரும் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த பஞ்சாயத்தில் நிதி மோசடி நடந்திருப்பதாக பொதுமக்களிடம் இருந்து


தொடர்ந்து புகார் வந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கணக்குகளை தணிக்கை செய்தார்கள். அதில், ஊரக வேலை உறுதித் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊரக உட்கட்டமைப்புத் திட்டம் உள்ளிட்ட அரசு திட்டங்களிலும் வரி வசூல், அடிப்படை திட்டங் களை நிறைவேற்றுதல் போன்ற பஞ்சாயத்து திட்டங் களிலுமாக சுமார் 8.5 லட்சத்துக்கு நிதி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கணவர் சொல்லிய இடத்தில் எல்லாம் கையெழுத்து மட்டுமே போட்ட பஞ்சாயத்துத் தலைவர் காந்திமதி, மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட அவருடைய கணவர் ஜானகிராமன், இவர்களுக்கு உடந்தையாக இருந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடாசல பதி, பஞ்சாயத்து கிளர்க் கமலக்கண்ணன் ஆகியோரை கடந்த 20-ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.

பரபரத்துப் போயிருக்கும் வெள்ளங்குளி கிராமத் துக்கு சென்றோம். அங்குள்ள மக்களிடம் பேசியபோது, ''பேருக்குத்தான் காந்திமதி தலைவரே தவிர, அவரோட வீட்டுக்காரர் ஜானகிராமன்தான் எல்லாமே. ஊருக்கு என்ன தேவைன்னாலும் அவருட்ட சொன்னாத் தான் நடக்கும். பஞ்சாயத்தில் நடக்கும் திட்டங்களில் கமிஷன் அடிப்பதிலேயே அவரு குறியா இருப்பாரு. நிறைய திட்டங்களை செயல்படுத்தாம லேயே பணத்தை மட்டும் சுருட்டிட்டார்னு ஊருக்குள்ள பேச்சு வந்துச்சு. அதனால், அவரோட நடவடிக்கை பற்றி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி னோம். அதுதொடர்பா விசாரிக்க வந்த அதிகாரிகளை சரிக்கட்டி அனுப்பிட்டு, 'என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது'னு சொல்லி ரொம்பவே துணிச்சலா மோசடிகளில் இறங்கிட்டார். அதனால், மறுபடியும் ஊர்மக்கள் சார்பாக பி.டி.ஓ-விடம் புகார் மனு குடுத்ததோடு, கலெக்டரிடமும் புகார் செஞ்சோம். அதிகாரிகள் வந்து பஞ்சாயத்து கணக்குகளைத் தோண்டியெடுத்து 18 மணி நேரம் ஆய்வு நடத்தி, மோசடிகளை கண்டு பிடிச்சாங்க. அந்த அறிக்கையை கலெக்டருக்கு அனுப் பியதும், புருஷனும் பொண்டாட்டியும் பயந்துக் கிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தைப் பூட்டிட்டு தலைமறைவாகிட்டாங்க. பத்து நாளுக்கு மேலா பஞ்சாயத்து அலுவலகம் பூட்டியே கிடந்ததால்... மறுபடி யும் அதிகாரிகளிடம் முறையிட்டோம். அதுக்குப் பிறகுதான் மோசடி செஞ்சவங்களை கைது செஞ்சு ருக்காங்க!'' என்று படபடத்தார்கள்.

மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முரு கனை சந்தித்தோம். ''வெள்ளங்குளி பஞ்சாயத்து விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அம்பா சமுத்திரம் பி.டி.ஓ-வான கோபாலகிருஷ்ணன், எங்க எஸ்.பி. கிட்ட புகார் செஞ்சார். அதையடுத்து நாங்க விசாரணை நடத்தினோம். இவங்க ரொம்பவும் நூதனமா மோசடி செஞ்சுருக்காங்க. அதாவது, வங்கியில் கிடக்கும் பஞ்சாயத்து கணக்கில் இருந்து ரெண்டாயிரம் எடுக்கறது மாதிரி 'செக் புக்'கின் கவுன்ட்டர் ஃபாயிலில் எழுதிட்டு 'செக்'கில் 20 ஆயிரம் எடுத்திருவாங்க. ஆனா, பஞ்சாயத்து கணக்கில் வெறும் ரெண்டாயிரத்தை மட்டுமே காட்டிட்டு மற்ற பணத்தை சுருட்டிருவாங்க. இது மாதிரி மட்டும் பஞ்சா யத்துத் தலைவர் காந்திமதி ரெண்டரை லட்சத்தை சுருட்டியிருக்கார். 'செக்'குகளில் துணைத் தலைவரும் கையெழுத்துப் போடணும் என்பதால், அவரையும் இந்த மோசடியில் சேர்த்திருக்காங்க. அதோடு, பஞ்சா யத்து கிளர்க் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வரும் வேலையைச் செய்வதால், அவருக்கும் ஒரு பங்கு குடுத்திருக்காங்க. இது தவிர, பஞ்சாயத்துக்கான சில்லறைச் செலவினம் என்ற வகையில் குடிநீர் பம்பு களை ரிப்பேர் செய்வது, மோட்டார் பழுது பார்ப்பது போன்றவற்றை கணக்கில் மட்டும் எழுதியிருக்காங்களே தவிர, அதுக்கான எந்தவித ரசீதுகளும் கிடையாது. விசாரணையின்போது, 'அதெல்லாம் சும்மா எழுதின கணக்குதான்'னு கிளர்க் ஒப்புக்கிட்டார். இப்படி ஐந்தரை லட்சம் ரூபாய் மோசடி செஞ்சுருக்காங்க. அதனால், அவர்களை கைது செய்திருக்கிறோம். வேறு ஏதாவது மோசடி நடந்திருக்கிறதா என்பது பற்றியும் விசாரிக்கிறோம்...'' என்றார்.

கலெக்டர் ஜெயராமனோ, ''பஞ்சாயத்து உதவி இயக்கு

நரையும் வட்டார வளர்ச்சி அதிகாரியையும் அங்கே அனுப்பி விசாரிக்கச் சொன்னேன். அவர்கள் தலைமையில் சென்ற குழு, கணக்குகளை தணிக்கை செய்ததில் மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மோச டியை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டதால் பதறிப்போன பஞ்சாயத்து தலைவர் காந்திமதி, வங்கியில் ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாயை திருப்பிச் செலுத்தினார். பஞ்சாயத்து கிளர்க் கமலக்கண்ணன் தன்னோட பங்காக, 3.43 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தினார். இப்படி இவங்க செஞ்சதில் இருந்தே மோசடியை ஒப்புக்கிட்டாங்க. உடனே, அவங்க மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தேன். இதுவரை சுமார் எட்டரை லட்சம் மோசடி நடந்திருப்பது உறுதியாகி இருக்கு. அரசு திட்டங்களுக்கான பணத்தை மோசடி செய்பவர்களை, மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்காது. அத்தகைய நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்போம்!'' என்றார் உறுதியாக.

மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரும் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் முக்கியத்துவம் அதிகரித்து வரும் இந்த நேரத்திலாவது, பதவியில் இருக்கும் பெண்கள் வெறும் கைப்பாவையாக செயல் படுவதைத் தடுக்கவும் ஒரு சட்ட முன்வடிவை கொண்டு வந்தால் பிரயோஜனமாக இருக்கும்!





2010/4/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 1, 2010, 2:04:20 AM5/1/10
to mint...@googlegroups.com
''பேருக்குத்தான் காந்திமதி தலைவரே தவிர, அவரோட வீட்டுக்காரர் ஜானகிராமன்தான் எல்லாமே. ஊருக்கு என்ன தேவைன்னாலும் அவருட்ட சொன்னாத் தான் நடக்கும். பஞ்சாயத்தில் நடக்கும் திட்டங்களில் கமிஷன் அடிப்பதிலேயே அவரு குறியா இருப்பாரு. நிறைய திட்டங்களை செயல்படுத்தாம லேயே பணத்தை மட்டும் சுருட்டிட்டார்னு ஊருக்குள்ள பேச்சு வந்துச்சு. அதனால், அவரோட நடவடிக்கை பற்றி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி னோம். அதுதொடர்பா விசாரிக்க வந்த அதிகாரிகளை சரிக்கட்டி அனுப்பிட்டு, 'என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது'னு சொல்லி ரொம்பவே துணிச்சலா மோசடிகளில் இறங்கிட்டார். //

இப்போவும் நிலைமை இப்படித் தான் இருக்கு, பல ஊராட்சிகள், நகராட்சிகள், கிராமப் பஞ்சாயத்துக்களில்.

2010/5/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>
320.gif

Tthamizth Tthenee

unread,
May 2, 2010, 12:32:55 AM5/2/10
to mint...@googlegroups.com
பெண்களுக்கு பதவிகள்  வேண்டுமானால் தர முடியும்
 
ஆனால் நேர்மையான தைரியத்தை யாரால் அளிக்க முடியும்
 
பதவியில் இருந்தாலும்   அநியாயத்துக்கு கட்டுப்பட்டு இருக்கும் இவர் போன்ற பெண்மணிகளைப் பார்க்கும் போது
 
மனைவியின் பதவியை உபயோகித்து கொள்ளையடிக்கும் இவரைப் போன்ற கணவர்களைப் பார்க்கும்போது
 
அவமானமாக இருக்கிறது
 
எப்படி வசதி வாய்ப்புகள், அடிப்படைத் தேவைகள்  மக்களுக்குப் போய்ச் சேரும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
1-5-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
320.gif

devoo

unread,
May 3, 2010, 9:37:15 AM5/3/10
to மின்தமிழ்
கையூட்டுக்கெதிரான 5ம் தூணின் சாதனைகளைத் தெரிந்து
கொள்ள –

http://www.5thpillar.org/~pillar/india/category/content-type/success-story


தேவ்

Innamburan Innamburan

unread,
Jun 21, 2010, 9:32:12 PM6/21/10
to mint...@googlegroups.com
அரசை உருப்படியாக இயக்கமுடியும். தகவல் ஒன்று:
Return to frontpage

News » Cities » Chennai

Published: June 22, 2010 02:24 IST | Updated: June 22, 2010 02:32 IST

Dalit families get their land, thanks to RTI Act

M. Dinesh Varma
PROUD POSSESSION: This woman in Alisoor in Kancheepuram has realised a dream.
PROUD POSSESSION: This woman in Alisoor in Kancheepuram has realised a dream.

Landless Dalit families in a Kancheepuram village have used the Right to Information (RTI) Act to prompt the district administration to hand over land that was originally allotted to them several years ago, thanks to the initiative of a grassroots NGO.

A total of 106 Dalit families in Alisoor village were allotted 100 sq m by the Tamil Nadu Adi Dravidar Housing and Development Board in 1998.

The local district administration even issued the original patta document with individual plot numbers. However, the allotment remained on paper and the villagers never got the land though they approached the local administration several times.

The families were residing in hutments on poramboke land, when in 2008, Kancheepuram-based NGO Hand in Hand started working in the village by forming self-help groups and began development projects.

A Citizen Centre Enterprise was established as an IT empowerment initiative that helped villagers enrol for computer courses, register for voting, apply for ration cards, pensions or prepare petitions, a spokesman for the NGO said.

A Good Governance Rights Protection Committee (GGRPC) was then set up to train villagers in citizen rights and duties. “With the help of this committee, the villagers learnt to use the RTI Act to unearth information on the allotment details of the land,” the spokesman said.

Armed with the RTI information, villagers prepared an application with the signatures of all the beneficiaries along with the land patta copies to be forwarded to the local administration with a copy sent to the District Collector.

Positive response

To the delight of the villagers, the application evoked a response from the administration. District Collector Santhosh K. Misra undertook a visit to the village. He personally supervised the handing over of land to the beneficiary families. The villagers plan to raise bank loans to build their own homes and take up agriculture.

Printable version | Jun 22, 2010 6:59:55 AM | http://beta.thehindu.com/news/cities/Chennai/article477860.ece

© The Hindu



2010/5/3 devoo <rde...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages