Re: [MinTamil] சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....

241 views
Skip to first unread message

V, Dhivakar

unread,
Jul 21, 2009, 2:25:58 AM7/21/09
to minT...@googlegroups.com
ஊருண்  கேணியாக   வாழ்ந்தவர்களையும்   தனித்தனியாக   நினைவு  கொண்டு   வாழ்த்தினால்  என்ன?  வாழ்த்துவதில்  என்ன  சோம்பேறித்தனம்?
 
ரங்கனாரே!
நல்ல கேள்வி.. நல்லதோர் பதிவு..
 
நன்றியெல்லாம் எதிர்பார்த்தா அந்தப் பெரியோர்கள் செய்தார்கள் என்ற கேள்வி எழலாம். இருந்தாலும் நாம் சரியான முறையில் நினைவு கூர்வதில்லை. என்னிடமும் சில புத்தகங்கள் இப்படி உள்ளன. கொஞ்சம் தேடிப் பார்த்து நினைவு கூர்கிறேன்..
 
முதலில் உங்களுக்கு வாழ்த்து..
 
திவாகர்
 
 

 
On 7/20/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:

                               என்றோ   ஒருவர்  வெட்டிய  கேணி   வழிச்செல்வோர்   தாகம்  தணித்துக் கொண்டே   இருக்கும்.  யாரோ  ஒரு  மகராசன்  என்று  பொது  நன்றியாக  மாறி   தனிப்  பெயர்   மறைந்தாலும்  அந்த  நன்மை   மறைவதில்லை.  ஆனால்   தீமை  புரிபவரை   அந்தப்  படுபாவி என்று   கால  காலத்திற்கும்   தனிப் பெயராகவே    இகழ்தல்   நிலைபெறுகிறது.  ஊருண்  கேணியாக   வாழ்ந்தவர்களையும்   தனித்தனியாக   நினைவு  கொண்டு   வாழ்த்தினால்  என்ன?  வாழ்த்துவதில்  என்ன  சோம்பேறித்தனம்?

                                விசிஷ்டாத்வைத  தரிசனம்   ஸ்ரீராமானுஜர்  காலம்   தொடங்கி  எம்பெருமானார்  தரிசனம்  என்று  கொண்டாடப்பட்டது.  பின் வந்த  பெரியோர்கள்   ஸ்ரீவைஷ்ணவ  தரிசனத்தை  74  துறைகள்  கொண்ட  தொண்டனூர் ஏரி என்று  உருவகமாகச்  சொன்னார்கள்.   ஸ்ரீராமானுஜர்   தொண்டனூரில்   வெட்டிய  ஏரிக்கு   74   படித்துறைகளாம்.   அதேபோல்  74   சிம்ஹாஸனாதிபதிகள் என்னும்   ஆசாரியர்கள்   மூலம்   பரப்பப்பட்ட  ஸ்ரீவைஷ்ணவமும்  ஊருக்குப்  பொதுவில்   வைத்த ஏரியாக   உருவகித்தார்கள்.

                                திருவாய்மொழிக்கு   வ்யாக்கியானமாக  அமைந்த   பகவத் விஷயத்  தொகுதியும்   பின்  வரும்  சந்ததிக்காக  வைத்த   ஊருண்  கேணிதான்.  அதை   அச்சில் ஏற்றிய   ஆரம்பகாலத்து  அரையர்  பதிப்பு   முதலியவையும்  ஊர்ப்பொது  நீர்நிலைகளே.  1870ல்  வந்த   தெலுங்குலிபி   பதிப்பு  பகவத் விஷயம்,  15நூல்கள்   அடங்கியது  மிகப் பெரிய  ஊர்ப் பொதுக்  குளம். 1925ல்  ஸ்ரீ  சே.கிருஷ்ணமாச்சாரியாராலும்,   ஸ்ரீ வை மு  சடகோபராமானுஜாசாரியாராலும்  பதிப்பிக்கப்பட்ட   பகவத் விஷயம்   பிரஸித்தியானது.  ஊருண்  கேணியான  பதிப்பு.   இதைப்   பெற  நான்  முயன்ற  காலத்தில்,  எனது  நண்பர்   டி. ரமேஷ்   தமது   அத்தைவீட்டில்   அந்த   ஸெட்  இருப்பதாகவும்,  அத்தையிடம்  கேட்டு  பெற்றுத்   தருவதாகவும்  சொல்லி  அதன்படியே   பெற்றுத்  தந்தார்.   அந்த   ஸெட்   ஸ்ரீ  வி.  ஆர். எதிராஜுலு  செட்டியார்  அவர்களுடையது.   ஸ்ரீ  செட்டியார்  அவர்கள்   பேப்பர்  கம்பெனியில்  பெரிய  பதவியில்  இருந்தவர்.  உலகப் போர்  காலங்களில்   ஸ்ரீ அண்ணங்கராச்சாரியாருக்கு  பேப்பர்  தட்டுப்பாடு  இல்லாமல்  கவனித்துக் கொண்டவர்.    ஸ்ரீ  பகவத்  விஷயம்  காலக்ஷேப  கோஷ்டிகளை   1940,  1950  களில்   சைதாப்பேட்டை  வட்டாரங்களில்  நன்கு  நடத்தி   வைணவ  உணர்வை   வளர்த்தவர்.  என்றோ  இவர்  வாங்கிப்   பயன் படுத்திய   பகவத்  விஷயம்  நூல்  தொகுதி   இன்றும் என்  பயன் பாட்டில்   இருக்கிறதென்றால்,   அதற்குக்  காரணமான   ரமேஷின்  அத்தையை   நினைக்கவேண்டும்.   ஸ்ரீ  செட்டியார்  அவர்களது   மருமகள்  ரமேஷின்  அத்தை.  நன்மை என்னும்   ஜீவநதி  என்றும்   வற்றுவதில்லை.  ரமேஷுக்குத்தான்   பெரும்  நன்றி  உரித்தானது.  ஆனாலும்   அவருக்கு  நன்றி  சொல்லி   அந்நியப்படுத்திக்கொள்ள  என்  சுயநலம்  விடவில்லை.


N. Kannan

unread,
Jul 21, 2009, 2:59:46 AM7/21/09
to minT...@googlegroups.com
நல்ல இழை.

இங்கு புத்தக சேகரம் உள்ளோர் அனைவரும் இவ்விழையில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

புத்தக ஆக்கம் அதிகமில்லாத பண்டைய நாளிலும் கல்வியின் சிறப்பை சிலாகித்து
சங்கப்பாடல்களுண்டு.

கல்விதான் மனிதனை மேம்படுத்துகிறது. புத்தகங்கள்தான் சிந்தனைப் பூங்காக்கள்.

நல்ல புத்தகம், நல்ல நண்பன்.

புத்தகங்களோடே வாழ்வைக்கழிக்கும் அரங்கனாரைவிட இது பற்றிப் பேச தகுதி
உடையவர் யார்? வாழி!

க.>

2009/7/21 V, Dhivakar <venkdh...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

devoo

unread,
Jul 21, 2009, 5:21:27 AM7/21/09
to மின்தமிழ்
Jul 20, 7:27 pm, srirangammohanarangan v

*ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை 74 துறைகள் கொண்ட தொண்டனூர் ஏரி என்று
உருவகமாகச் சொன்னார்கள்.*

74 மதகுகள் கொண்ட வீர நாராயண ஏரியாகத்தான் சொன்னதாகப் படித்த நினைவு.

*ஸ்ரீ பகவத் விஷயம் *

இது வித்தாக இருந்து விடாமல் ஸ்ரீய:பதிப்படி என்னும் செடியாக அங்குரித்து
மேலும் படிப்படியாக
தேவரீர் மூலம் இங்கு வளரும் என்று எதிர்பார்த்தேன்; எதிர்பார்க்கிறேன் .


தேவ்

devoo

unread,
Jul 21, 2009, 1:26:38 PM7/21/09
to மின்தமிழ்

ஈடும் எடுப்புமில் ஈசனைப் பாடியவர்; அதை
ஏடு படுத்தியவர்; இசையமத்தவர்; ஈடருளியவர்;
கோட்டுருவில் பதிக்க அரும்பாடு பட்டவர்; பேணிக்காத்து
அதை இங்கு வழங்குபவர் – அத்தனை அடியவர்க்கும்
அநந்த தண்டவத் ப்ரணாமங்கள்.

விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தம் ஆச்ரயே !

தேவ்

srirangammohanarangan v

unread,
Jul 23, 2009, 12:02:08 PM7/23/09
to minT...@googlegroups.com
|| சில  நினைவுகள்  நன்றிக்கு  வித்தாகி -- திரு A V சுப்ரமணியன் அவர்களின் நூல்கள் ||.
----------------------------------****-------------------------------- 
 
மயிலாப்பூர்   போனால்  எனக்கு  வேண்டப்பட்டவர்கள்   சிலரைப்  பார்த்துவிட்டு  வருவது   வழக்கம்.   தாகுர்,   கபாலி   இந்த  மாதிரி  சிலர்.  மானிடர்களாகச்  சிலரைப்  பார்ப்பது என்றால்    திரு  AVS,   திரு K V வரதராஜன் என்று  சிலர்.  மானிடத்திற்கு  அப்பாற்பட்ட  அந்தச்  சிலர் என்னை  நொந்துகொள்வதில்லை.   ஆனால்   மானிடவராம்  இந்தச்  சிலர்  என்ன  நினைப்பார்கள்  என்று   நான்  கருதியதில்லை.  சொல்லாமல்  கொள்ளாமல்  போய்  நிற்பதுண்டு.  அப்படி  ஒரு  சுவாதீனம்  நானாக எடுத்துக்  கொள்வது.
 
இதில்   வயதால்   ஆண்டுகள்  பல  நிறைந்தவர்  திரு  AVS.   ஆனால்  ஒரு  கிழவனுக்கு  உண்டான  உபசரணை எனக்கு  நடக்கும்.   ஆரம்ப  கட்டத்தில்    நான்   தத்துவத்தின்   பக்கம்    மிக  அதிகமாக   ஊறிவிட்டேன்  என்று    ஒரு  சலிப்பே   தெரிந்தது    திரு  AVS  இடம்.   பிறகு  இலக்கியம்,  கவிதை   என்பதிலும்    மிக  ஊறியவன்   என்று    தெரிய வந்ததிலிருந்து  இந்த  உபசரணை   ஆரம்பித்து  விட்டது.
 
பேச்சில்   சலசலசல என்று   நகைச்சுவை  விரவி,   குற்றாலத்து  இளம்  சாரல்   போல்  யாராவது    உரையாடி  நீங்கள்  கேட்டதுண்டா?   மாட்டீர்கள்.   அதற்கு  நீங்கள்   திரு  AVS  இடம்   போகவேண்டும். ஏன்  சாரல் என்று  சொல்கிறேன்?    சாரல்  நம்மீது    விழத்தொடங்கி  கொஞ்ச  நேரத்திற்குப்  பின்னர்தான்   நமக்கே   கவனத்திற்கு  வரும்.  அது  வரையில்  அது  தானாய்  விளைந்த  சுகம் என்று  கருதுவோம்.
 
வடமொழியா,   தமிழா,  அதுவும்  சங்கத்  தமிழா,   திடுதிப்பென்று   ஏதாவது  முரட்டு   ஆங்கில  நூலா  எல்லாவற்றையும்    நீங்கள்   திரு  AVS  இடம் எதிர்பார்த்துத்தான்   செல்ல வேண்டும்.    இந்த  மூன்றிலும்   அவரிடம்  ஒரு  விசேஷம்  உண்டு. என்னவென்றால்,   வடமொழி  நன்கு  அறிந்தவர்,  அதுவும்   அதிலேயே   பேசவேண்டும் என்றாலும்  ஒன்றும்   சிரமப்படாதவர்   தத்துவப்   பிராதான்யமாக   இன்றி   இலக்கியம்  முக்கியம்  என்று  இருப்பார்.   நீங்கள்   பெரிய  தத்துவ  வாதி  என்று  காட்டிக்கொண்டால்    மலர்ந்த  அவர்  முகம்  சிறிதே  கடுகடுக்கும்.
 
சரி  தமிழிலோ என்றால்   காவியத்தமிழ்,  பாரதித்தமிழ்,   வள்ளுவத்தமிழ்  எல்லாவற்றையும்  மீறி   சங்கத்  தமிழின்    கவிச்சுவை  என்று  வாய்  ஓயாமல்  சொல்லுவார்.   அதிலேயே  குதித்துக்  கடப்பாரை  நீச்சல் எல்லாம்  போடுகிறவர்.    'சங்கப்  பாடலா,  கரடு  முரடு  ஆயிற்றே' என்றெல்லாம்    போய்  உட்கார்ந்ததும்   சொல்லி  விடாதீர்கள்.   வரும்   காபியைக்  குடித்துவிட்டுப்  பிறகு  வேண்டுமானால்   உங்கள்  வாயில்  சனி  இருந்தால்   சொல்லுங்கள்.   சரி  ஆங்கிலமோ என்றால்   இலக்கிய  ரசனைக்கான    உயிரியல்  அடிப்படைகளை,  மூளையியல்  அடிப்படைகளை   அலசுகிற  நூல்களை   விரும்பிப்  படிப்பவர்.  என்ன  சேரா   சேர்த்தி   இதுடா  சாமி?    சங்கப்  பாடல்களிலிருந்து  சில  பாடல்களை   சம்ஸ்க்ருதத்தில்   மொழிபெயர்த்திருக்கிறார்   மனிதன்  சாஹித்ய  அகாடமியில்.   சரி  உத்தேசமாக  எவ்வளவு  நூல்கள்  எழுதியிருப்பார்  மனிதன்?   ஆண்டுகள்   நிறைந்த   தம்  முதுமைப்  பருவத்தில்    அழகான    புன்னகையுடன்    கூறுகிறார், ' 140க்கும்  மேல்   இருக்கும்.  பல  நூல்கள்  என்னிடமே   காப்பி  இல்லை.  யாராவது    ரோட்  சைட்  கடையில்   பார்க்க  நேர்ந்தால்    தயவு  செய்து  வாங்கி  வந்துவிடுங்கள்.  பணம்  தந்துவிடுகிறேன் '  எப்படி  இருக்கிறது   கதை?   எழுத்தாளனிடம்  நாம்  பணம்   கொடுத்து   நூல்  வாங்க  வேண்டியிருக்க....   கலிகாலம்ணா!  
 
என்   பார்வையில்   பட்டவரை  சுமார்   முப்பது  நூல்களின்   காலவரிசை   நிரல்  தருகிறேன்.   இரு  நாட்களுக்கு  முன்னர்  அவரிடமிருந்து   ஒரு  போன்கால்.  'இதுவரையில் என்ன  நான்  சாதித்திருக்கிறேன்.  புது  கருத்துகள்   தமிழ்  இலக்கிய  உலகில்   தந்திருக்கிறேன்   என்று   ஒரு  நாள்  வந்தீரென்றால்    தொகுத்துச்  சொல்கிறேன்.  வரவே  மாட்டேன் என்கிறீரே!'  
அப்பொழுதுதான்    கண்ணன்  நடராசனின்  பி  ஸ்ரீ  பற்றிய  இடுகையைத்  திறந்தேன்.  
இந்த   AVS  என்பவரைப் பற்றி   பலபேரிடம்   சொல்லியிருக்கிறேன்.  எப்படி   மின்தமிழில்   சொல்லாமல்  விட்டேன்.  சொன்னால்  விடமாட்டீர்கள்  என்பது  தெரிந்தும்?  ஒண்ணும்  புரியலை  சாமி!   (தொடரும்)  

Subashini Tremmel

unread,
Jul 23, 2009, 3:52:12 PM7/23/09
to minT...@googlegroups.com
ரங்கனாரே,
உங்களை நேரிலேயே சந்தித்துப் பேசியிருப்பதால் உங்கள் எழுத்திலேயே உங்களோடு உரையாடுவது போலத்தான் இருக்கின்றது. என்ன இலகுவான நடை.. படித்தேன் என்பதை விட ரசித்துப் படித்தேன் என்று சொன்னால் தகும்.
 
-சுபா
2009/7/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Jul 23, 2009, 7:56:51 PM7/23/09
to minT...@googlegroups.com
Ayyo! pEsikEttal, adimaithAn (magnetic personality)

nA.ka

Chandra sekaran

unread,
Jul 24, 2009, 2:04:20 AM7/24/09
to minT...@googlegroups.com
'ரெங்கா' ந்தம், ஏகாந்தம்!
அண்ணா, AVS அவர்களை சந்திக்க நீங்கள் வரும்போது ஒரு வார்த்தை அடியேனுக்கும் சொல்லுங்கள். உடன் வருகிறேன். இருவரும் நல்ல விஷயங்களை பேசும்போது, அப்படியாவது மண்டையில் ஏதேனும் ஏறுகிறதா என்று பார்த்துவிடுகிறேன் !
சந்திரா.

--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

srirangammohanarangan v

unread,
Jul 24, 2009, 1:53:18 PM7/24/09
to minT...@googlegroups.com
||சில நினைவுகள் -- திரு  AVS  நூல்கள் (தொடர்ச்சி)||
-----------------------------------------------------------------*
 
1)  அன்பு  மிகுந்த  மதம் -- கலைஞன்  பதிப்பகம்  --ஜூலை 1975
 
முன்னுரையில்   திரு  ஜெயகாந்தன்  கூறுவது: "சமயத்துக்காக  இலக்கியம்  படைப்பதை  வழக்கமாகக்  கொண்டிருக்கிற  உலகத்தில்  மொழியினால்,  இலக்கிய  ரஸானுபவத்தால்  கவிதையை  ஒரு  மதமாக  மாற்றுகிற  மகத்தான  பணியை எமது  முன்னோர்  பலர்  தமிழ்மொழியில்  செய்திருக்கின்றனர் என்பதற்கு  இந்நூல்  ஒரு  சிறு  சான்று"
 
2)  சங்கப்  பாட்டில்  பொங்கும்  உணர்ச்சி  --- சேகர்  பதிப்பகம் --1983
 
KEATS  ஒரு  கடிதத்தில்  Poetry  should  surprise  by  a  fine  excess  என்று  கூறுகிறார்.   அதைப்படித்த   ஆசிரியர்  அந்தக்  கருத்தில்  உள்ளத்தை  இழந்து,  சங்க  இலக்கியத்துக்குப்  பொருத்திச்  சிந்தனை  செய்யத்  தொடங்கிய  விளைவு  இந்த  நூல்.
 
3)சங்கப்  பாட்டில்   புதிய  பார்வை (அகநானூறு) -- சேகர்  பதிப்பகம்-- 1984
 
குறியீடு,  பாத்திரங்கள்  வழியே  கவிஞன்  தன்  கருத்தைக்  கூறுவது,  கலையின்  வரம்புகளை  உகந்து  உணர்ச்சிகள்  மீதுறும்படியாக  கவிதை  அமைத்தல்,  அந்த  உணர்ச்சியை   படிப்பவர்க்கும்   குன்றாமல்  பெயர்த்தளித்தல்  ஆகிய  நான்கு  இலக்கியக்  கொள்கைகளை  வைத்து   அகநானூற்றிலிருந்து  சில  பாடல்களுக்கு  ஆசிரியர்  கண்ட  விளக்கம்  இந்த  நூல்.
 
4)பாரதி  கண்ட  கவிதைத்  தலைவி -- வானதி  பதிப்பகம் -- 1982
 
பாரதியின்    வாழ்க  மனைவியாம்  கவிதைத்  தலைவி என்று  தொடங்கும்  பாடலை  வைத்து  பாரதியின்  கவிதை  இலக்கணங்களைப்  பலபட  பேசுகிறார்  ஆசிரியர்.
 
5) தமிழ்க் கவிஞன்  தேர்  திறன் -- திருநெல்வேலி தென்னிந்திய  சைவ  சித்தாந்த  நூற்பதிப்புக்  கழகம் -- 1989
 
'கவிஞன்  புலன்கள்  வழியாக  அவன்  உள்ளத்தில்  வந்து  தாக்கும்  அத்தனை  ஆயிரம்  அலைகளையும்   அவன்  தன்  கவிதைக்குப்  பயன்படுத்துவதில்லை.  மிகமிகச்  சிலவற்றையே  தெரிந்தெடுத்துப்  பாடலாக  ஆக்கித்  தருகிறான்  கவிஞன்' என்று  கூறும்    ஆசிரியர்   கவிஞனின்  தேர்திறனை  ஆராயும்  நூல்  இது.
 
(ஓ  காட்!  மணி  பதினொன்றுக்கு மேல்  ஆகிவிட்டதா?   நாளை  தொடரும்)

Innamburan Innamburan

unread,
Jul 24, 2009, 11:49:05 PM7/24/09
to minT...@googlegroups.com
தொடருக. காத்திருக்கிறேன்.
இன்னம்ப்பூரான்

2009/7/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jul 25, 2009, 2:02:21 PM7/25/09
to minT...@googlegroups.com
||சில நினைவுகள் -- திரு AVS நூல்கள் (தொடர்ச்சி)||
-----------------------------------------------------------------------
 
6) அளபெடையும்  ஆழ்பொருளும் - திருக்குறள்  நுண்ணாய்வு -- திருக்குறள் பதிப்பகம் -- 1991
 
அளபெடை  ஓசை  நிரப்பத்தானே,  பொருள்  விளக்கத்தில்  அதன்  பங்கு என்ன  இருக்க  முடியும் என்று  நினைத்து   திருக்குறளுக்குப்  பொருள்  கண்ட   முன்னையோர்  விடுத்துச்  செல்ல,   'வள்ளுவர்  தமது   பாக்களில்  அளபெடையின்  வாயிலாகப்  பொருளுக்கு  வளம்  தேடியதைக்  கண்ட'   ஆசிரியர்  அந்த   இன்பத்தை   நம்மோடு  பகிர்ந்துகொள்ளும்  நூல்.  100  குறள்களால்  நிறுவுகிறார் எப்படி  அளபெடை   பொருள்   சிறக்கும்  உத்தியாகப்  பயன்படுகிறது என்று.   முக்கியமான  நூல்.
 
7)கம்பன்  காட்டும்  களன் -- நர்மதா  பதிப்பகம் -- 1987
 
தமது  பல  புதிய  கருத்துக்களைக்  கொண்டு  கம்பனை  புதுப்பார்வை  பார்க்கிறார்.
 
8) பேரெழில்  வாழ்க்கை -- சேகர்  பதிப்பகம் -- 1990
 
'பதிற்றுப்  பத்தினை  ஒரு  வரலாற்றுக்  கருவூலம் என்று  கருதும்  பொது  வழக்கத்திற்கு  மாறாக,  அதைப்பாடிய  கவிஞர்  நோக்கில்  அது  கவிதையாகத்தான்  அமைந்து  பாடப்பட்டது'  என்ற  நிச்சயத்துடன்   கவியின்பம்  காட்டுகிறார் ஏவிஎஸ். 
 
9) கம்பன்  காப்பியம்,  கதை  மாந்தர்  கூற்று -- தமிழரங்கம் -- 1995 
 
 முனைவர் ப மருதநாயகத்தின்  நல்ல   அணிந்துரை   வரவேற்க   அமைந்திருக்கிறது  நூல்.   கதை  மாந்தரின்  மூலம்  வெளிப்படும்  கூற்று   கவிச்சுவை  மிகும்  உத்தி என்பது  ஆசிரியரின்   கருத்து.   அவ்வழியில்  கம்பன்  நம்மோடு  உறவாட  நூல்  களமாகிறது. 
 
10) ரசிக்கச்  சொல்கிறான்  கம்பன்! -- நர்மதா பதிப்பகம் -- 1998 
 
ரசிக்க  வைக்கிறார்   ஆசிரியர். 
 
11) ஞானத்தை  அடையும்  வழி -- கலைஞன்  பதிப்பகம் -- 1999 
 
உபநிடதங்களில்  வெளிப்படும்  நகைச்சுவைக்  கட்டங்கள்  மூலம்   ஞானம்  பிறந்த  தடங்களைக்  காட்ட  முயல்கிறார்  ஆசிரியர். 
 
12) கம்பனில்  உவகை  ஊட்டும்  உணர்ச்சிகள் -- வானதி  பதிப்பகம் --1999 
 
கம்பனைப்  பற்றிய  நாலாவது  நூல்  புதிய  கருத்துக்களுடன்! 
 
13) இனிக்கும்  இலக்கியம் -- அருள்  பதிப்பகம் -- 1999 
 
'இலக்கியம் எனக்கு  60  ஆண்டுகளாகத்  தொடர்ந்து  இன்பம்  வழங்கி  வருகிறது.  யான்  பெற்ற  இன்பம்  பெறுக  இவ்வையகம்'  என்று எழுதியுள்ளார்  ஆசிரியர். 
 
14) சங்கப்  பாட்டில்  குறியீடு -- ராஜராஜன் பதிப்பகம் -- 2000  
 
என்றோ  ஒருநாள்  தமிழ்ச் சமுதாயம்  சங்க  நூல்களைப்  பாராட்டத்தான்  போகிறது  என்ற ஏக்கத்தில்   விளைந்த   வேள்வி  அவி  இந்த  நூல்.   
 
(தொடரும்.   நன்றி  இன்னாம்பூரரே) 
 
 

Innamburan Innamburan

unread,
Jul 26, 2009, 12:11:23 AM7/26/09
to minT...@googlegroups.com
ஊக்கத்துடன் படித்துவருகிறேன். நன்றி ஐயா. உமது நூல்களுக்கு இடம் காத்திருக்கிறது, எனது குடிசையில். முன்பே கூறியமாதிரி, கண்ணின் கருமணி போல பாதுகாப்பேன். எனது தொகுப்புகல் மலையேறி (லாஃப்ட்) விட்டன.

இன்னம்பூரான்

2009/7/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jul 26, 2009, 12:27:21 AM7/26/09
to minT...@googlegroups.com
எழுத  ஆரம்பித்த  வேளையோ  அல்லது    அந்த  வேளையில்   நாம் எழுத  ஆரம்பித்தோமோ  தெரியவில்லை,   மூன்று  பரிசுகள்   பெறும்   மகிழ்ச்சியில்   திளைக்கிறார்  திரு  AVS.   இலக்கியச்  சிந்தனை,  சாஹித்ய  அகாடமி,   நல்லி திசையெட்டும்  என்று  அவர்  போனில்  சொன்னதாக  ஞாபகம்.   திரு  AVSக்கு   நமது  பாராட்டுகள்.

2009/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

N. Kannan

unread,
Jul 26, 2009, 2:46:02 AM7/26/09
to minT...@googlegroups.com
2009/7/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> எழுத  ஆரம்பித்த  வேளையோ  அல்லது    அந்த  வேளையில்   நாம் எழுத  ஆரம்பித்தோமோ
> தெரியவில்லை,   மூன்று  பரிசுகள்   பெறும்   மகிழ்ச்சியில்   திளைக்கிறார்
> திரு  AVS.   இலக்கியச்  சிந்தனை,  சாஹித்ய  அகாடமி,
> நல்லி திசையெட்டும்  என்று  அவர்  போனில்  சொன்னதாக  ஞாபகம்.   திரு
> AVSக்கு   நமது  பாராட்டுகள்.
>

இப்போதுதான் நாம் வாழ்த்தி வணங்க வேண்டும்.
நமது சென்னைக்குழு இச்சமயத்தைப் பயன்படுத்தி அவரைப் பேட்டி காணலாமே!
அரங்கனார் நேர்காணல் செய்ய, சந்திரா கேமிரா பிடிக்க அற்புதமாக இருக்காது?

க.>

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2009, 2:53:01 AM7/26/09
to minT...@googlegroups.com
ஆஹா இந்த நேரத்தில் நான் செனையில் இல்லையே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2009, 2:53:31 AM7/26/09
to minT...@googlegroups.com
ஆஹா இந்த நேரத்தில் நான் சென்னையில் இல்லையே
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

N. Kannan

unread,
Jul 26, 2009, 2:57:02 AM7/26/09
to minT...@googlegroups.com
2009/7/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> ஆஹா இந்த நேரத்தில் நான் சென்னையில் இல்லையே
>


இந்த ஆர்வம்தான்.....
தேனீயார் ஒரு அபூர்வப்பிறவிதான்!

க.>

Innamburan Innamburan

unread,
Jul 26, 2009, 8:51:08 AM7/26/09
to minT...@googlegroups.com
அதான் டுபாய்லே குந்திக்கிணு ஃபிலிம் காட்றார். கேட்டா, நீ தானே அனுப்புனீற் என்பார். சற்று நேரம் முன்னால் சம்பாஷித்தார்.
இன்னம்பூரான்



2009/7/26 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Jul 26, 2009, 9:10:08 AM7/26/09
to minT...@googlegroups.com
2009/7/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

> அதான் டுபாய்லே குந்திக்கிணு ஃபிலிம் காட்றார். கேட்டா, நீ தானே அனுப்புனீற்
> என்பார். சற்று நேரம் முன்னால் சம்பாஷித்தார்.

அதானே! ஒட்டகத்தைக்கட்டிக்கோன்னு! வேகாத வெய்யில் காலத்தில் அங்கு போய்
என்ன செய்கிறார்? சாதாரண காலத்திலேயே, மாலை ஆறு மணிக்கு அனலடிக்கும்!
குளிக்கும் போது தண்ணீர் வென்னீராகி ஆவிபறக்கும். எண்ணெய் சக்தி
இல்லையெனில் பூஞ்சோலை மீண்டும் பாலையாகும்! சரி..சரி..ஏ.சி ரூம்ல கணினி
முன் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருப்பார்
;-)

க.>

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2009, 9:21:38 AM7/26/09
to minT...@googlegroups.com
சின்னப் பொண்ணு ஒரு பேரனைப் பெத்து தரேன்னு அழைத்தாள்
அவளுக்கு உதவியாக அடியேனும் என்  சக தர்மிணியும் இங்கே வந்து இருக்கிறோம்
 
அப்படியே  துபாய் தமிழ்ச்சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டிருக்கிறேன்
 
கூடிய விரைவில் அவர்களை சந்திப்பேன்
 
மின் தமிழ் தொடர்பாக ஒரு சந்திப்பு நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறேன்
மின் தமிழின் புகழ் பாட  இந்த மரபு அணிலுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
On 7/26/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

N. Kannan

unread,
Jul 26, 2009, 9:33:56 AM7/26/09
to minT...@googlegroups.com
அன்பரே:

அமீரக தமிழ் வட்டம் என்னை நன்கு அறிந்ததே! எனது பாசுரமடல் சிடி அங்கு
வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

நம் நண்பர்கள் ஆசீப் மீரான், சடையன் சாபு, அரசு போன்றோர் அங்குதான்
உள்ளார்கள். த.ம.அ பற்றி நான் முன்பு தொடர்ந்து அன்புடன் மடலாடற்குழுவில்
எழுதி வந்தேன்.

தமிழின் முதல் முஸ்லிம் நாவலாசிரியை சித்தி ஜுனேதா பேகம் அவர்களின்
எழுத்தை நான் முதலில் கண்டுபிடித்தது துபாயில்தான். அதுவே என்னை நாகூர்
அனுப்பியது. நாகூர் ஆண்டவரை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் சிறுவயதிலேயே
உண்டு. சாபுவின் வடிவில் ஆண்டவர் என்னை அழைத்திருக்கிறார் என்பது அங்கு
போன பின்தான் தெரிந்தது. அங்கு நடந்த சில சித்து விளையாடல்களை நான் ஒரு
முஸ்லிம் இதழில் கட்டுரையாக வடித்தேன்.

இ-சுவடி பழைய கடிதங்களை வாசித்தால் ஒன்று புரியும். ‘அன்புடன்’ புகாரி
த.ம.அ தமிழின் முதல் கூகுள் மடலாடற்குழுவை உருவாக்கவேண்டுமென்று
தொடர்ந்து பரிந்துரைத்திருப்பது புரியும். யாகூவில் இருக்கும் சில
மட்டறுத்தர் அனுகூலங்கள் இன்றும் கூட கூகுளில் இல்லை. எனவே அதீத தயக்கம்.
யாகூ எப்படியும் ஒருங்குறிக்கு மாறிவிடும் என்று எதிர்பார்த்தோம். அவர்
‘அன்புடன்’ ஆரம்பித்து நன்றாக நடத்திவருகிறார்.

இப்படி அமீரகத்தில் பல சகாக்களுண்டு.

உங்கள் முயற்சி வெல்க! இக்குழுவில் அமீரக நண்பர்கள் இருந்தால் உதவுக!

நா.கண்ணன்

2009/7/26 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 26, 2009, 10:04:03 AM7/26/09
to minT...@googlegroups.com
ஆசீப் மீரான், சடையன் சாபு,‘அன்புடன்’ புகாரி
ஆகியோர் எனக்கும் நண்பர்களே
சந்திக்க முயலுகிறேன்
திரு புஹாரி அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 


On 7/26/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

N. Kannan

unread,
Jul 30, 2009, 9:27:18 PM7/30/09
to minT...@googlegroups.com
சுவை..சுவை..

என்ன இது மின்தமிழ் திடீரென்று விழாக்கோலம் கொண்டுவிட்டது!

பெருமாள் உற்சவம் போல் உள்ளம் குஷியாக உள்ளது.

ஜமாயுங்கள்1

க.>

2009/7/31 srirangammohanarangan v <ranga...@gmail.com>:>
> போதாது.   படிக்கட்டில்   இறங்கியா  இருப்பேன்?   வடிவேலு  மாதிரி   23ஆம்
> புலிகேசி  ஸ்டைல்லன்னா   கீழவந்து   லாண்ட்  ஆயிருப்பேன்,  அவ்ர்கள்  இருவரும்
> போனபின்பு.  அது  ஒரு  விழாக்காலம்  <*

srirangammohanarangan v

unread,
Aug 1, 2009, 12:55:00 PM8/1/09
to minT...@googlegroups.com
||சில  நினைவுகள்  --  திரு  AVS  இன்  நூல்கள் (தொடர்கிறது)||
-----------------------------------*----------------------------------------
 
திரு ஏ வி எஸ்   ஆங்கிலத்தில்  எழுதிய  நூல்களில்  சில :
 
1) Stray  Flowers  -- World Poetry Society 1976
 
இதில்  Altar Flowers என்று  ஒரு   ஆங்கிலக்  கவிதை.  அதில்  ஒரு  கண்ணி
 
His  face  is  lit  with a beatific  smile
which  heals  my  bruised  soul.
 
"Your  love  has  won!  I  am  your  own
till  the  wick  of  Time  burns  out!"
 
"Can  this  be  true?  I  always  failed
I never  could  worship  you!"
 
"You  brought  to  my  altar  your  failure-flowers;
their  scent  has  vanquished me!"
 
தோல்விகளையே   அவன்  சந்நிதியில்  பூக்களாய்  சமர்ப்பிக்க   அவன்   வெற்றி,  தோல்விகளைப்  பார்க்காமல்  ஆர்வம்  ஒன்றையே  பார்க்கிறான்  என்கிறது  கண்ணி.
 
2)Convention  and  Creativity  in  Sangam Love  Lyrics --Tamil pathippagam -- 1980
 
3) Unity  of  Sentiment  in  Sanskrit  Plays -- University of  Madras  -- 1982
 
4) The  Unique  viewpoint  of  a  Poet -- Surabharathi Samithi -- 1981
 
5) The  innovative  genius  of  Bhavabhuti -- 1983 -  The  CPR  foundation
 
6) Waves  from  the  Chandogya -- 1985  -  S  Viswanathan Pvt Ltd
 
7) The  Focus  on  the  Speaker -- 1985 -- ....
 
8)Fine  Excess  of  Poetic  Sentiment  -- 1985 ....
 
9) Poetry  in  Sanskrit  Plays  - 1984  -- university of Madras
 
10)The  aesthetics  of  Wonder  -  Motilal  Banarsidass--1988
 
11) A Universal  Theory  of  aesthetics  -- S Rambharathi  Corp 1997
 
12) The  Indian  Theory  of  Aesthetics  -  a  reappraisal -- Rashtriya  Sanskrit  Sansthan 2005
 
இவைதான் என்  பார்வைக்கு  வந்தவை.   மிச்சம் எங்கு  என்று    கண்ணீல்  படும்  தெரியாது.   இந்த  வயதிலும்  ஆசிரியர்  உற்சாகமாக   எழுதிக்கொண்டு இருப்பது  பெரிய  விஷயம்.    ஆசிரியரின்  கருத்துகளைப்  பற்றிய   விமர்சனங்கள்  என்பது  வேறு.   ஆனால்   முதலில்  இத்தகைய    சுய  ஆர்வ  எழுத்தாளர்களை   இனம்  காட்டுவதே   பெரும்  வேலையாக  அன்றோ   போய்விட்டது!  இனி  அவராச்சு   மின்தமிழாச்சு.

N. Kannan

unread,
Aug 1, 2009, 8:40:08 PM8/1/09
to minT...@googlegroups.com
அன்பின் ரங்கன்:

மிக அரிய இழை. `கற்றோரை கற்றோரே காமுருவர்` என்பது போல, நல்ல ஆசிரியர்
ஒருவரை இனம் கண்டு அவர் வாழும் காலத்திலேயே அவரது நூல்களை இனம்
காட்டியமைக்கு நன்றி.

திரு AVSவுடன் ஒரு சந்திப்பு செய்து நாம் வெளியிடலாம். மின்தமிழ்
விழாவில் (ஆகஸ்ட் 27) அவரை கௌரவிக்கலாம்.

க.>

2009/8/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

V, Dhivakar

unread,
Aug 4, 2009, 7:46:23 AM8/4/09
to minT...@googlegroups.com
Rangan!
 
It was wonderful article on 'KaLLan', Even in our Village (Thiruvaali Thirunagari) we use to enjoy this 'raapaththu' festival.
 
Dhivakar

 
On 8/4/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
||சில  நினைவுகள்.. -- ஸ்ரீரங்கம்||
-----------------------------------------------------
 
'Srirangam  is  like  any  other  town  of  heritage  and  tradition'--if  you  are  able  to  say  this  I  can  only  envy   you,  for, it  is  an  impossibility  with  me.   The  whole  town  is  so  palpable  and   seems  to  speak  from  every  stone  and  sing  from  every  twig.    'I  will  rather  be  a  stone  inlaid  on  the  steps  towards   your  portals   and   enjoy  the  blissful  sight  of   your  sweet  lips'---so  sings  the  Kulasekara,  the  Alwar  from  the  hilly  regions  of  the  South India.  He  was  right  given  his  involvement,  drowned  in  the  love  of  the  Divine, reclining  in  between   the  two  rivers,  the  Cauvery  and  the  Kollidam.
 
 
See  the  original  fervour  of  the  Alwars  and  the   Teachers  like  Alavandar,  Ramanuja  running   thru  the   participants  in  the  foray  in  the  picture  capturing  a  scene  that  happens  every  year  in  November-December  on  the  7th  day  of    the  Nights  of  ten  - Iraap pattu. The  occasion  is  about  a  theft  that  happened,  involving   one  of  the  12  Alwar  saints  of  SriVaishnavism, viz.,  Thirumangai  Alwar  or  Kaliyan  or Parakaalan.   This  Kaliyan  seems  to  have  been  a  chieftain  of  the  place  Thirumangai  before  being  chosen  by  the  Divine  Recliner  in  Srirangam,  that  is  before  becoming  an  Alwar  and  he  was  a  terror  to  his  enemies  and  also  at  times  to  the  wealthy,  plundering  them  to  feed  Vishnu's  devotees,  so  it  is  told  in  the  chronicles  of  old.  Why  he  chose  to  become  a  militant  communist  for  the  cause  of  SriVaishnavism  at  those  times  is  elusive  and  awaits  careful  analysis.  But  this  anamoly  between  precepts  and  practice  was  perhaps  brought  home  to  him  and  he  was  put  in  proper  tracks,  it  seems ,  as  hinted  by  this  story  handed  down  thru  tradition  and  the  old  chronicles.
 
 
The  story  is :  Kaliyan, in  his  usual  plundering  spree,  seems  to  have  one  day  laid  upon  an  unusual  couple,  newely  wed  and  returning  back  with  their  retinue  of  relatives   and  matrimonially  ceded  wealth.  The  unique  couple   were  unresenting  in  parting  with  their  riches,  much  to  the  surprise  of  the  waylayer.  Ofcourse  he  had  a  lingering  doubt   that  behind  all  these   docility  there  may  be  afterall  a  play  of  magical  charms  or  binding  by   mantras.  But  everything  went  ok  and  it  could  have been  left  at  that.  But  it  was  not  to  be.  While  tying  the  final  knot  of  flyoff,  a  ring  at  the  finger,  somehow  seems  to  have  escaped  the  scrutiny,  was    glinting  as  if  mocking  the  expertise  of  decades.  It  was  too much  and   the  bridegroom  at least  could  have  volunteered.  So  smug  He  stands  thinking  he  can  make  off   with  this  jewel.  But  He  seems  to  hesitate  to  part  with  even  after  threatening   and   smilingly   suggests  that  he  can  take  the  ring  if  he  can  remove  it  from  the  finger.  All  this  audocity  and  keeping  cool,  something  is  wrong  from  the  start!  But  Kaliyan  bent  on  his  perfection  even  tried  with  his  teeth  to  get  a  purchase  on  the  slippery  ring. 
 
But  in a  moment,....  what  happened  to  him?,  something  is  wrong  from  the  start,  is  it  so ?  , after  all  he  may  be  wrong;  only  now  everything  is  becoming  ok,  what  am  I  doing  all  these  days?  why ?  for  what ?  What  is  this  change  of  mind  that  is  happening?  Is  this  person   real ?  or  is  he  adept  in  some  black magic  or  is  it  black magic  or  revealing  magic  of  wisdom  that  I  have  been  in  search  in  vain  all  these  days.  Is  he  the  one  blessing  me  by  the  chance  contact  I  ventured.  So  childlike  he  seems   but  this  calmness  and  the sure air  about  him  is  something  odd   but  I  have  to  give  it  to  him  that  he  is  bewitching.
 
 
Hey..  you..what   mantra  have  you  been  chanting?  come  on...   what  is  the  magic?  You  can't  move  away  without  telling  me.  Suddenly  I  am  loosing  all  the  interests  in  my  old  ways  and  a  change  is  coming  over  my  mind.  Comeon,  tell  me  that  mantra!   That  mantra,..  hey  you!
 
 
The  bridegroom  beckoned  him  to  come  near,  for,  he  can  spell  the  mantra  only  in  his  ears,  which  should  not  be  audible  to  others   if  at  all  it  has  to  be  effective.  Reluctantly  the  plunderer  went  near  his  prey  and  lent  his   ears   and  the  chronicle  says  that  he  never  came  away  from  that  delicate  vicinity  and  not  only  his  ears  but  his  all  soul, mind,  words  and  actions  he  dedicated  to  the  mantra  he  heard  at   the   decisive  moment. 
 
 
The  chronicle  says  that  it  was   the  plunderer  who  became   the  plundered  at  last, plundered  in  more  than  one  ways   and   pledged  to  new  realisations,  which  he  was  postponing  by  himself  all  these  days.  
 
 
The  overture  just  before  the  said  moment  is  the  kinesthetic  foray  that  is  captured  by  this  picture[shot  by  Surendar] 
 
                                
    
 

devoo

unread,
Aug 4, 2009, 11:13:05 AM8/4/09
to மின்தமிழ்
Aug 4, 7:38 pm, srirangammohanarangan v

anyhow it is not 'Kallan' but 'Kaliyan'.//


இருந்துட்டுப் போகட்டும்;
வாள்வலியால் மந்திரம் கொண்டவர், அதைக் கொடுத்தவர் இருவருமே
கள்வர்கள்தானே !

தேவ்

Tthamizth Tthenee

unread,
Aug 4, 2009, 3:34:54 PM8/4/09
to minT...@googlegroups.com
நான்  சந்தித்த பல
 
மனிதர்களுள்
 
இந்த  ரங்கன் 
 
ஒரு  பலா 
 
அந்தரங்கன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 

 
On 8/4/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
||சில  நினைவுகள்  நன்றிக்கு  வித்தாகி --  கண்ணன்||
---------------------------------------------------------------------
 
[முன்னமே  சொல்லியிருக்கிறேன் என்று  நினைக்கிறேன்.   கண்ணனை  நான்  பார்த்தது   திரு  சச்சிதாநந்தம்   அவர்கள்  வீட்டில்.   அதுவும்   சச்சி   மிகவும்  அக்கறை எடுத்து   போன்    பேசும்  போது  என்னை  வலுக்கட்டாயமாக   அழைத்திருக்கவில்லையேல்     சந்தித்திருக்க  மாட்டேன்.  சரி ஏதோ  வந்தார்   'ஜெர்மனி  கண்ணன்' என்றார்கள்.  அப்படிச்  சொன்னால்தான்   தெரியுமாம்.   முகமெல்லாம்  சிரிப்பாகப்   பேசுகிறார்.  நல்ல  மனிதன் என்று  விட்டுவிட்டேன்.  சில  வருடங்களுக்குப்  பின்னர்தான்  என்னுடைய   இணைய  உலகினுள்   நுழைவானது   நடந்தது. எதேச்சையாக.   அதற்குள்   சிபிச்செல்வன்   ஒருநாள்   'உங்களைப் பற்றிக்  கண்ணன்   இணையத்தில் எழுதியிருக்கிறாரே!' என்றார்.  அவர்  சொல்லும்  பொழுது    இணையம் எனக்கு ஏதோ  சம்பந்தமே  இல்லாத   ஒன்று என்றுதான்   என்  மன  நிலை.    இணையத்துள்  வந்தபின்   தேடிப்பார்த்தேன்.   என்னைப் பற்றி என்னன்னமோ  எழுதியிருந்தார்   மனிதன்.   அதிர்ச்சியாக  இருந்தது.  ஏனெனில்   ஏதோ  ஒரு  முறை  அறிமுகம்  ஆனவர்களைப் பற்றி    இத்துணை   மனம்  கலந்த  பாராட்டா?  பிறகு    அவருக்கு   நான்   ஓர்  இணையத்  தொந்தரவு    ஆனபின்  பலமுறை  அவர்  கோபத்தைக்  கிண்டியிருக்கிறேன்.    ஆனால்    பதிலுக்குப்  பாராட்டு  மேலும்  பாராட்டு.  இவர்களைக்  கண்டால் எனக்குப்  புரிவதில்லை.  அதேபோல்   தமிழ்த்தேனீ.    முதல் முறை  வீட்டிற்கு   போன்  செய்து  அடம்  பிடித்து  வந்தே  தீருவேன் என்று  வந்தார்.   வருவதில்  இருக்கும்    சிரமம்  குறித்தும்,  வந்தபின்   என்  வீட்டில்  அவர்பட  வேண்டிய  சிரமம்  குறித்தும்,  கிட்டத்தட்ட   வராதே  என்று  சொல்லவில்லை   அப்படி எச்சரித்தும்    மனிதர்  வந்து   மகிழ்ச்சியாக   சார் என்  சொந்த   வீட்டிற்கு   வந்த   மகிழ்ச்சியுடனும்  ஸ்வாதீனத்துடனும்  இருக்கிறேன் என்றார்.   இத்தனைக்கும்    சொந்தக்காரர்கள்  பலர்  வீட்டை  எவ்வளவு  கூப்பிட்டும் எட்டிப்பார்க்காத  மனிதர்.   போன  மாதம்  கூட   எங்கோ   உறவினர்  வீட்டு   நிகழ்ச்சிக்கு  வந்துவிட்டு  வாசல்  வரை  வந்து எட்டிப்பார்த்து விட்டுத்தான்  போனார்.  முதலில்  இவர்  வந்த  போது   காபியைக்  கொடுத்து விட்டு   இந்த  க்ஷணம்    முதலில்  குடித்து  விட்டுத்தான்   அடுத்த  வார்த்தை   பேச  வேண்டும் என்று  சொல்லி விட்டேன்.  பாவம்  சகித்துக்  கொண்டார். என்  வாழ்வில் என்னிடம்   அன்பு  காட்டுபவர்கள்   காட்டிக்  கொண்டே  இருக்கிறார்கள்.  நான்தான்   ஒரு  மாதிரி  கரடு  முரடானவன். 
 
தவம்  என்பதைப்  பற்றி   பல  நாட்களுக்கு  முன்   த ம  அ  பக்கத்தில்  போட்டிருந்தேன்.   பிறகு    நடை   படிப்பவர்களை  மிகவும்  சிரமப்  படுத்துமோ  என்று எடுத்து  விட்டேன்.  பல  தடவை   அதைப்  போடச்  சொல்லிக்  கண்ணன்  வலியுறுத்தியிருப்பார்.    இன்று எதேச்சையாக   அதைப்  படித்த  பொழுது   இந்த  நினைவுகள்.  எனவேதான்   நினைவுகளோடு    தவம்  இணைந்து  வருகிறது.] 
 
தவம் 
******** 
 'தபித்தல்' ' வேகுதல்' என்ற சொல்லடியாகப் பிறந்தது தவம். மிகுந்த முயற்சியையும், சிரமத்தையும், பொறுமையையும், அதற்கெல்லாம் வேராகத் தொடர்ந்த ஆர்வத்தையும் சுட்டி நிற்பது தவம் என்ற சொல். நோக்கமும், திசையும், நசையும் முன்னிடு பொருளாய்க் கொண்டு முனையும் மானத வியாபாரம் தவம். இலக்கை நோக்கி வளைத்த வில் விடுத்த கணையாய்த் தைப்பது தவம். இனிவருங்காலம், இயலுமிக்காலம், கரந்துசெல் காலம் எனப்படு மூன்றையும் கணத்தினில் நிறுத்தி, காரண காரிய உருளையின் அச்சில், கற்பனை ஆணி கொண்டடித்திடும் கொல்லன்மை தவம்.
 
 
கணம் ஒன்றில் கட்டுண்ட முப்புரிக் காலம், கணக்கெடுத்தால் காட்சி கடந்த கற்பனையே என்ற கொள்கை புரிவது தவத்தின் விளைவு. தன்மயமாய் நிற்கும் ஒன்று தானடையத் தகுந்தது எது என்று தேடித் தள்ளும் கோலங்கள் குவியும் களத்துமேடாகித் தோற்றுகிறது உலகம். தேடித்திரிந்த சிற்றுயிர், நாடி நயந்த நோக்கமும், அதற்கு ஆடிச் சுமந்த கோலமும், ஆதிப் புள்ளியில் தான் நின்றவாறே இயற்றும் கற்பனை என்று புரிந்து கொள்ளும் கணத்தின் அகநிலை ஞானமென்றால், புறநிலை சொல்கதுவிச்சூழா சுகமென்னும் இலக்கியத்தின் விதைப்பற்று.
 
 
அந்த சொல்லொணா மர்மம் அவிழ்ந்ததில் விளைந்த ஆதி நகையில் முகிழ்த்த ஹாஸ்யத்தின் விரிவாய்ப் பெருகுவன இலக்கியங்கள். ஞானம் செயல் மடிந்து சையோகித்த மௌனம் விளைநிலமாய் முப்போகம் காண்பது கலை. ' பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்' என்று கவி கூறுவதும் அப்பொழுதே.
 
 
படைப்பின் தத்துவத்தில் பட்டு, புறநிலையில் கொண்ட தாக்கம் மறைய, மனத்தடத்தில் மடங்கா கற்பனையில் ஒரு படைப்பே நிகழ, முத்தியும் வேண்டா முனைப்பில் ஒரு கணமே காலமாய்க் கோலம் கொள்ள, கலை விரித்த சொல்லரங்கில் வட்டாடிப் பொழுதயரும் கடைவாயின் அடைக்காயில் ஏறிய செம்மை விளக்கும் சிருஷ்டியின் மர்மம் தவத்தின் ஆணிவேர். போ போ போ வாயாட நேரமில்லை. வந்தவரை பற்றில் வை. அது போதும்.

N. Ganesan

unread,
Aug 4, 2009, 3:50:29 PM8/4/09
to மின்தமிழ்

Wasn't AVS working for Southern Railways? born in 1924.

I have:
Literary genres in Tamil : a supplement to a descriptive catalogue of
palm-leaf manuscripts in Tamil /
Cuppiramaniyan, A. Ve.,
Madras, India : Institute of Asian Studies, 1993

(2) The bangle and the javelin /
Madras : Sekar Pathippakam, 1984
(Muttolayiram translation)

------

(3) Narrinai : an anthology of Amour /
Dept. of Tamil Development-Culture, Govt. of Tamil Nadu, 1989

(4) Srngarapadyavali : verse translation in Sanskrit and English of
the Sangam Classic Kuruntokai /
New Delhi : Sahitya Akadami, 2003

(5) Navamuktasatakam : Pandya-Cola-Cera-rajanam prasastih = Pearls
thrice three hundred :
Euologies of the Pandeya, Cola, and Cera princes = Muttollayiram :
Pantiya-Cola-Cera mannar pukalppa /
Madras : Kuppuswami Sastri Research Institute, 1993

(6) Love lyrics of long ago
Dept. of Tamil Development-Culture, Govt. of Tamil Nadu, India, 1994

(7) Squirrel in the courtyard : transcompositions from Tamil Sangam
lyrics /
Madras : Tamilnadu Textbook Society, 1980

More later,
N. Ganesan

On Aug 1, 11:55 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> ||சில  நினைவுகள்  --  திரு  AVS  இன்  நூல்கள் (தொடர்கிறது)||

> -----------------------------------*---------------------------------------­-

srirangammohanarangan v

unread,
Aug 4, 2009, 4:07:56 PM8/4/09
to minT...@googlegroups.com
Exactly  Mr  Ganesan.  You  are  right.   It  is  for  the   fourth  book  in  your  listing, viz., Kuruntokai   that  he  is  chosen  for  an  award,  so  I  heard.  
 
Wow!   your  library  then  should  be  a  dreamland   for  people  like  me  I  suppose!!

2009/8/5 N. Ganesan <naa.g...@gmail.com>

V, Dhivakar

unread,
Aug 5, 2009, 1:01:29 AM8/5/09
to minT...@googlegroups.com
KaLLan thaan sir..  You know well that Kaliyan means Valiyan. But I mean it. He stole not only God's but everybody mind.
D

 
On 8/4/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
Thank u  sir   anyhow   it  is  not  'Kallan'  but  'Kaliyan'.

2009/8/4 V, Dhivakar <venkdh...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Aug 5, 2009, 1:15:21 AM8/5/09
to minT...@googlegroups.com
புழுவாய்ப்  பிறக்கினும்  புண்ணியா   உன்னடி என்மனத்தே   வழுவாதிருக்க   வரம்  தர  வேண்டும்  என்கிறார்  அடியார்.
 

சிறு குழந்தை ஒன்று எதிரில் வந்து நின்றது
இரு விரலை நீட்டி மழலை பேசி நின்றது
இரு விரலில் ஒன்றைத் தொடுகிறாயா என்றது
இரு விரலில் எந்த விரல் தொடுவது
எந்த விரல் விடுவது யோசித்து
முடிவு செய்து ஒரு விரலைப் பற்றினேன்
ஒரு பார்வையொன்று எனைத்துளைத்து சென்றது
ஒரு பாதையொன்று எனக்கமைந்து வந்தது


மொத்த உயிர்களுமே  விரல் பற்ற துடிக்குது
அந்த விரலில்  உள்ள மர்மத்தை படிக்குது
விதிப்படியே விரல் தொட்டு நடிக்குது
விரல் காட்டும் வழிப்படியே நடக்குது

அது குழந்தையல்ல தெய்வமென்று புரிந்தது
அது விரல்களல்ல வாழ்க்கையென்று தெரிந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ



 

அன்புள்ள

தமிழ்த்தேனீ

N. Kannan

unread,
Aug 5, 2009, 2:44:35 AM8/5/09
to minT...@googlegroups.com
ரங்கன்:

இந்த வியாக்கியானங்களும், ஆச்சார்யர்களும் (நல்லவேளை! ஆச்சர்யர்கள் இல்லை
;-) இல்லையெனில் எவ்வளவு வறுமைப்பட்டுப் போயிருக்கும் தமிழ் உலகம் ?
வேதத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டதே தமிழ் பனுவல்களுக்கு ஏற்றம் கொடுக்க
என்பது போல் அல்லவோ இருக்கிறது?
எம் முதல் தாய் சடகோபனை நினைக்க, நினைக்க கண்ணீர் பெருகிறது. என்ன
காருண்யமிருந்தால் திருவாய்மொழி அப்படி அருளியிருப்பார்!
இவ்விடுகை எப்படியோ என் கண்ணில் தப்பிப்போனது.
நம்மாழ்வார் பற்றிச் சொல்லுங்கள் ரங்கன்.
ஒரு யுகப்புரட்சியின் வித்து, சின்னப் புளிய மரப்பொந்தில் இருந்து என்று
எண்ண, எண்ண ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்த அரிய தமிழ்ச் சம்பிரதாயம் பற்றி நாம் இன்னும் அறிந்து கொள்ள நிரம்ப
உள்ளது என்பதைச் சுட்டுகிறது உங்கள் இடுகை!

வாழ்க.

கண்ணன்

2009/7/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> ஆன்ற   தமிழ்  மறைகள்   ஆயிரமும்
>
>
> அது  என்ன   ஆன்ற?    வடமறைகள்    சந்தேகத்திற்கு   இடம்  தரலாம்,  எது
> பரம்பொருள்  என்று   நிச்சயிப்பதற்கு   பெருமுயற்சி   தேவை.   ஆனால்
> தமிழ்மறை    முடிந்தமுடிபில்தானே   துவங்குகிறது.  படித்தால்   நேரே
> பக்திதான்.   மதிள் ஏறினால்   நேரே   விண்   போலே.
>

N. Kannan

unread,
Aug 5, 2009, 3:05:12 AM8/5/09
to minT...@googlegroups.com
நல்ல உயிரியல் சிந்தனைகள் ரங்கன்!

மீண்டும், மீண்டும் உயிரியல் ஆவணப்படங்கள் பார்க்கப்பார்க்க, அறிவு
எவ்வளவு விசாலமாக உயிர்களிடம் பரவி செயல்படுகிறது என்பது புரிகிறது. மூளை
கொள்ளளவிற்கும் அறிவுத்திறனுக்கும் சம்மந்தம் இருப்பதாகத்தெரியவில்லை.
இத்துணூண்டு குருவி கட்டிய கூட்டை சூப்பர் கம்யூட்டர் உருவாக்கும்
மனிதனால் முறையாக பிரிக்க முடிவதில்லை. நேற்று பார்த்த காட்சியில் காக்கா
நூதனமாக கொக்கி தயாரித்து புழுவை மரப்பொந்திலிருந்து எடுக்கிறது. அது
தூண்டில் (hook) தயாரிக்கும் அழகே அழகு. வாரக்கடைசியில் அருவிக்கரை போன
போது அந்தரத்தில் வலை பின்னியிருந்த சிலந்தியின் நூதன அறிவை 'ஆறாம்
அறிவு" பெற்ற எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அது என்ன
அப்படியொரு engineering skill?

பூர்வ ஜென்ம வாசனை என்பது பிராணன் ஒவ்வொரு ஜீவனிலும் வசித்து, அறிந்து
கொண்ட அனுபவப்பதிவு என்று தெரிகிறது. அதனால்தான் மனிதனுக்கு பறக்க
வேண்டுமென்ற ஆசை வருகிறது. நீர்க்குடத்தில் நீந்திப்பழகியதால் பூமியில்
விழுந்த பின்னும் நீர் விளையாட்டு மனிதனுக்கு. கலவி என்பதே மீள்கர்ப்பவாச
ஆசை என்று எழுதினேன் ஒருமுறை.

ஆன்மீகம் என்பது தொப்புள் கொடி விஜாரிப்புதான்.
ஆமாம், பத்மநாபனுக்கும் இருக்கு தொப்புள்கொடி!!

க.>

2009/8/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ||சில  நினைவுகள்...||
> 'போன  காலமோர்   கான்  விலங்கினிற்  பூத்த  மானிடர்    போலவே    வானவர்
> குலமொன்று   நம்மினும்  வந்துதிப்பதோர்   வாய்மையே'  என்று    திருலோகத்தின்
> அரவிந்தம்     திருவாய்  மலர்கிறது.
>
> 'இந்த   உடல்?'  வேண்டாம்   'இந்த  உடல்?'   வேண்டாம்   'இந்த  உடல்?'
> வேண்டாம்  என்று    ஒவ்வொரு    மிருக  பறவை  பல்  உயிரின   உடல் எல்லாம்
> வேண்டாம் என்ற    முக்கிய  பிராணன்    மனித  உடல்  வந்ததும்    'இது
> சம்மதம்' என்று   புகுந்து  கொண்டதாக     வேத   வாக்கு.
>

Kavalkazhani Venkatakrishnan

unread,
Aug 5, 2009, 3:12:32 AM8/5/09
to minT...@googlegroups.com
Kaapu marandhariyen kannanE yenniruppan
Appu angozhiyavum palluyirkum - Akkai
koduthalitha konE kunaparenE
unnai vidathuniyar meithelindhartham - (93) - Nanmugan thiruvandhadhi - Thirumazhisai Azhwar.


From: N. Kannan <navan...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Wednesday, August 5, 2009 12:35:12 PM
Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....

Kavalkazhani Venkatakrishnan

unread,
Aug 5, 2009, 4:58:09 AM8/5/09
to minT...@googlegroups.com
Azhwarin Eerathamizh....adiyen siria nyanathan....


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Wednesday, August 5, 2009 2:06:24 PM

Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....

காவல்  கழனியரே!   வாருமய்யா. எங்கிருந்து  பிடிக்கின்றீர்   பாசுரத்தை!  அருமை  அருமை.    ஆஹா    "பல்லுயிர்க்கும்   ஆக்கை   கொடுத்து  அளித்த   கோனே   குணபரனே"

2009/8/5 Kavalkazhani Venkatakrishnan <vinc...@yahoo.com>

N. Kannan

unread,
Aug 5, 2009, 8:02:14 AM8/5/09
to minT...@googlegroups.com
உங்க அலைவரிசையிலே போவதென்றால் இவ்வளவு தேவையாய் இருக்கு.

உம்ம கவிதை, அப்புறம் உங்கள் ஆசான் கவிதை, அப்புறம் ஆழ்வார் கவிதை,
அதற்குமேல் வியாக்கியானகர்த்தாக்களின் ஆழமனப்புரிதல்கள் இத்தனையும் ஓரிரு
வரிகளில் கோடி காட்டிவிட்டுப் போய்விடுகிறீர்கள். குளத்தில் விழுந்த
கல்லின் தொடர் அலைபோல் மனசு ஆடிக்கொண்டே இருக்கிறது, அதன் பின்!

நா.க

2009/8/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஐயா  நாவன்னா கனா   உம்முடைய  அலையும்  மன  ஸென்ஸாருக்கு   ஓர்  அளவே
> கிடையாதா?  எங்கிருந்தோ எங்குவரை  சொல்  பின்னும்  சிலந்தியா?
> அதற்குத்தான்    உம்மை  பிராணனை எடுத்து   சில  இடுகைகளைப்  பார்க்கச்
> சொல்வது.

N. Kannan

unread,
Aug 5, 2009, 8:06:04 AM8/5/09
to minT...@googlegroups.com
2009/8/5 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

   "பல்லுயிர்க்கும்   ஆக்கை   கொடுத்து  அளித்த   கோனே  குணபரனே"
>
முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்

ஆங்கிலத்தமிழ் புரிவதே இல்லை, என்ன செய்ய!

க.>

Kavalkazhani Venkatakrishnan

unread,
Aug 5, 2009, 8:12:30 AM8/5/09
to minT...@googlegroups.com
Sir,
 
Please see attachment.  i am not able to type in tamil in office due to some firewall.
Regards,
Venkatakrishnan

Sent: Wednesday, August 5, 2009 5:36:04 PM

Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....
Doc5.doc

N. Ganesan

unread,
Aug 5, 2009, 8:24:28 AM8/5/09
to மின்தமிழ்

On Aug 5, 7:12 am, Kavalkazhani Venkatakrishnan <vinchi...@yahoo.com>
wrote:


> Sir,
>
> Please see attachment.  i am not able to type in tamil in office due to some firewall.
> Regards,
> Venkatakrishnan
>

Can you read Tamil in office? Then,
you can type Tamil using online editor:
http://www.higopi.com/ucedit/Tamil.html

NG

> ________________________________
> From: N. Kannan <navannak...@gmail.com>


> To: minT...@googlegroups.com
> Sent: Wednesday, August 5, 2009 5:36:04 PM
> Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....
>

> 2009/8/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:


>    "பல்லுயிர்க்கும்   ஆக்கை   கொடுத்து  அளித்த   கோனே  குணபரனே"
>
> முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்
>
> ஆங்கிலத்தமிழ் புரிவதே இல்லை, என்ன செய்ய!
>
> க.>
>

>  Doc5.doc
> 161KViewDownload

N. Kannan

unread,
Aug 5, 2009, 8:36:22 AM8/5/09
to minT...@googlegroups.com
கணேசன்:

இதுவொரு நல்ல தளம். இது பற்றி முன்பு இங்கு முன் அறிமுகம்
செய்திருக்கிறேன். ஆயினும் நான் கொரியாவில் பயணிக்கும் போது
இத்தளத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது! கோபிக்குத்தெரியுமா என்று


தெரியவில்லை.

நா.க

> http://www.higopi.com/ucedit/Tamil.html
>
> NG

N. Ganesan

unread,
Aug 5, 2009, 8:43:11 AM8/5/09
to மின்தமிழ்

On Aug 5, 7:06 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:


>    "பல்லுயிர்க்கும்   ஆக்கை   கொடுத்து  அளித்த   கோனே  குணபரனே"
>
> முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்
>

குணபரன் - முக்கியமான சொல். மகேந்திரவர்மன் காலம்
என்று நாகசாமி திருமழிசைக் கணிக்கிறார்:
http://www.tamilartsacademy.com/journals/volume4/articles/article9.xml

முழுப் பாசுரமும் தந்துள்ளார்.

நா. கணேசன்

Kavalkazhani Venkatakrishnan

unread,
Aug 5, 2009, 8:56:22 AM8/5/09
to minT...@googlegroups.com
thanks..shall try going forward..


From: N. Ganesan <naa.g...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Wednesday, August 5, 2009 5:54:28 PM

Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....

கோபி(Gopi)

unread,
Aug 6, 2009, 3:35:07 AM8/6/09
to மின்தமிழ்
நா.க,

கொரியாவில் எனது தளத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
எனது
தள வழங்கியின் அளவில் அவ்வாறான தடை ஏதும் இல்லை. மேலதிக தகவல்
கிடைக்குமானால்
சரி செய்வது எப்படி என ஆராய முடியும்.

இது நிறுவன/அரசாங்க அளவிலான தடை எனில் http://proxify.com/ போன்ற
அனானிமஸ்
ப்ராக்ஸி மூலமாக (இந்த தளமும் தடை செய்யப்படாதிருப்பின்) (Remove all
scripts தெரிவு செய்யாமல்) எனது தளத்தைப்
பார்வையிட இயலும்.

ப்ரியமுடன்,

கோபி

devoo

unread,
Aug 6, 2009, 5:16:35 AM8/6/09
to மின்தமிழ்
குழுமத்தில் இணைந்துகொண்டதோடு, உடனே விடை தெரிவித்ததற்கும்
நன்றி, கோபி .


தேவ்

N. Kannan

unread,
Aug 6, 2009, 8:27:24 AM8/6/09
to minT...@googlegroups.com
அன்பின் கோபி:

உங்கள் வரவு எங்களை மகிழ்விக்கிறது. எப்போது வெளியூர் போனாலும் Gopi
unicode tamil என்று தட்டினால் உங்கள் தளம் வரும். தமிழில் எழுதி வெட்டி,
ஒட்டி போய்க்கொண்டே இருப்பேன். சமீப காலங்களில் கொரிய மோட்டல்களில்
இத்தளம் வருவதில்லை. காரணம் அவர்கள் proxy server பயன்படுத்துவதாய்
இருக்கலாம். இதோ சோதனைக்கு வீட்டிலிருந்து தட்டிப்பார்த்தேன்:

http://www.higopi.com/ucedit/Tamil.html

உங்கள் சேவை கிடைக்கிறது. மேலும் சோதனை செய்து சொல்கிறேன்.
வாரக்கடைசியில் ஜப்பான் போகிறேன். அங்கு வேலை செய்கிறதா? பார்ப்போம்.

உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் எங்களுக்கு
ஆபத்பாந்தவனாக இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய
வேண்டுமென்று சொல்லுங்கள்.

உங்கள் தன்னலமில்லாச் சேவையை தமிழ் மரபு அறக்கட்டளை வாழ்கவென வாழ்த்துகிறது.

அறிமுகம் செய்த தேவ் அவர்களுக்கு நன்றி.

நா.கண்ணன்

2009/8/6 கோபி <hig...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 6, 2009, 8:41:46 AM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 2:35 am, கோபி(Gopi) <hig...@gmail.com> wrote:
> நா.க,
>
> கொரியாவில் எனது தளத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
> எனது
> தள வழங்கியின் அளவில் அவ்வாறான தடை ஏதும் இல்லை. மேலதிக தகவல்
> கிடைக்குமானால்
> சரி செய்வது எப்படி என ஆராய முடியும்.
>

> இது நிறுவன/அரசாங்க அளவிலான தடை எனில்http://proxify.com/போன்ற


> அனானிமஸ்
> ப்ராக்ஸி மூலமாக (இந்த தளமும் தடை செய்யப்படாதிருப்பின்)  (Remove all
> scripts தெரிவு செய்யாமல்) எனது தளத்தைப்
> பார்வையிட இயலும்.
>
> ப்ரியமுடன்,
>
> கோபி
>

அன்பின் கோபி,

நானே ஐதராபாதுக்குத் தொலைபேசணும் என்றிருந்தேன்.
பங்குபெறுதலுக்கு நன்றி.

வினோத் ராஜன் என்னும் இந்திய எழுத்துமாற்றி தயாரித்துள்ளார்:
http://tamilcc.org/thoorihai/thoorihai.php

உங்கள் உமர் மாற்றியை அவரும் பார்க்கணும்.

---------------

சீர்மை எழுத்து:
http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php

இதனைப் பாவித்து எழுதிய பதிவு:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

லதா எழுத்துருவில், பிணைபட்ட உ, ஊ உயிர்மெய்யைப் பிரித்து
இந்த உ, ஊ குறிகளுடன் செய்துதரவும். தினமணி
போன்றவற்றில் ஒரு கட்டுரை எழுத ஆசை.
ஐராவதம், வாசெகு இருவருக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.
இதன் ப்ராக்டிக்காலிட்டி பற்றிச் சில வார்த்தைகள்
இண்பிட் மாநாட்டில் பேசவும் ஆவல்.

உகரக் குறியீடு சிறிதாகவும் அழகாவும் உள்ளது.
வரிநீளத்தை அதிகரிப்பதில்லை, எனவே தடிமனில் (thickness
ஒத்துவருவதாய் லதா ஃபாண்டில் இதனைச் செய்துதரணும்.
நான் உங்களுடன் பேசுகிறேன்.

நன்றி
நா. கணேசன்

> On Aug 5, 5:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
>
>
> > கணேசன்:
>
> > இதுவொரு நல்ல தளம். இது பற்றி முன்பு இங்கு முன் அறிமுகம்
> > செய்திருக்கிறேன். ஆயினும் நான் கொரியாவில் பயணிக்கும் போது
> > இத்தளத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது!  கோபிக்குத்தெரியுமா என்று
> > தெரியவில்லை.
>
> > நா.க
>
> > >http://www.higopi.com/ucedit/Tamil.html
>

> > > NG- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Aug 6, 2009, 8:45:44 AM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 7:41 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 6, 2:35 am, கோபி(Gopi) <hig...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > நா.க,
>
> > கொரியாவில் எனது தளத்துக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன் என தெரியவில்லை.
> > எனது
> > தள வழங்கியின் அளவில் அவ்வாறான தடை ஏதும் இல்லை. மேலதிக தகவல்
> > கிடைக்குமானால்
> > சரி செய்வது எப்படி என ஆராய முடியும்.
>
> > இது நிறுவன/அரசாங்க அளவிலான தடை எனில்http://proxify.com/போன்ற
> > அனானிமஸ்
> > ப்ராக்ஸி மூலமாக (இந்த தளமும் தடை செய்யப்படாதிருப்பின்)  (Remove all
> > scripts தெரிவு செய்யாமல்) எனது தளத்தைப்
> > பார்வையிட இயலும்.
>
> > ப்ரியமுடன்,
>
> > கோபி
>
> அன்பின் கோபி,
>
> நானே ஐதராபாதுக்குத் தொலைபேசணும் என்றிருந்தேன்.
> பங்குபெறுதலுக்கு நன்றி.
>
> வினோத் ராஜன் என்னும் இந்திய எழுத்துமாற்றி தயாரித்துள்ளார்:http://tamilcc.org/thoorihai/thoorihai.php
>
> உங்கள் உமர் மாற்றியை அவரும் பார்க்கணும்.
>

வினோத்,

கோபியின் உமர் எழுத்துமாற்றி உருவாக்கத்தில்
என் கருத்துக்களும் உண்டு :) கோபி முன்னர் எழுத்யுள்ளார்,
தேடின் அம்படும்.

கணேசன்

கே. எஸ். நாகராஜன் (கிழக்கு) இங்கே இருக்கிறாரா?


> ---------------
>
> சீர்மை எழுத்து:http://tamilcc.org/thoorihai/ganesan/seermai.php
>
> இதனைப் பாவித்து எழுதிய பதிவு:http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
>
> லதா எழுத்துருவில், பிணைபட்ட உ, ஊ உயிர்மெய்யைப் பிரித்து
> இந்த உ, ஊ குறிகளுடன் செய்துதரவும். தினமணி
> போன்றவற்றில் ஒரு கட்டுரை எழுத ஆசை.
> ஐராவதம், வாசெகு இருவருக்கும் அனுப்பி வைக்கவேண்டும்.
> இதன் ப்ராக்டிக்காலிட்டி பற்றிச் சில வார்த்தைகள்
> இண்பிட் மாநாட்டில் பேசவும் ஆவல்.
>
> உகரக் குறியீடு சிறிதாகவும் அழகாவும் உள்ளது.
> வரிநீளத்தை அதிகரிப்பதில்லை, எனவே தடிமனில் (thickness
> ஒத்துவருவதாய் லதா ஃபாண்டில் இதனைச் செய்துதரணும்.
> நான் உங்களுடன் பேசுகிறேன்.
>
> நன்றி
> நா. கணேசன்
>
>
>
> > On Aug 5, 5:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
> > > கணேசன்:
>
> > > இதுவொரு நல்ல தளம். இது பற்றி முன்பு இங்கு முன் அறிமுகம்
> > > செய்திருக்கிறேன். ஆயினும் நான் கொரியாவில் பயணிக்கும் போது
> > > இத்தளத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது!  கோபிக்குத்தெரியுமா என்று
> > > தெரியவில்லை.
>
> > > நா.க
>
> > > >http://www.higopi.com/ucedit/Tamil.html
>
> > > > NG- Hide quoted text -
>

> > - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -

Kavalkazhani Venkatakrishnan

unread,
Aug 6, 2009, 8:37:32 AM8/6/09
to minT...@googlegroups.com
விதையாக நல்தமிழைவித்தி என் உள்ளத்தை நீ விளத்தாய் - திருமழிசை ஆழ்வார்
 
தமிழில் எனது முதல் அஞ்சல்

Sent: Thursday, August 6, 2009 5:57:24 PM

Subject: [MinTamil] Re: சில நினைவுகள் நன்றிக்கு வித்தாகி.....

கோபி(Gopi)

unread,
Aug 6, 2009, 11:02:55 AM8/6/09
to மின்தமிழ்
அன்பின் நா.க,

வரவேற்புக்கு நன்றி. முன்பே மின்தமிழின் இழைகளை அவ்வப்போது
பார்வையிடுவேன் ஆயினும் இலக்கிய குழுமம் என்பதால் என் போன்ற நுட்பம்
மட்டுமே அறிந்தவர்களின் பங்கு இக்குழுமத்தில் தேவை இராது என்பதால் இதுவரை
இணையவில்லை. அழைத்து வந்து இணைத்த தேவ் அவர்களுக்கு நன்றி.

அன்பின் N.G சார்,

வினோத் ராஜனின் சீர்மை மாற்றியை தேவ் அவர்கள் சொல்லி முன்பே
பயன்படுத்திப் பார்த்தேன். அருமையான முயற்சி! பணிச்சுமையால் கடந்த சில
மாதங்களாய் தமிழிணைய கட்டற்ற மென்பொருள் பங்களிப்பு எதையும் செய்ய
இயலவில்லையே என்ற கவலையில் இருந்தேன். வினோத் ராஜன் போன்றோர் உள்ளவரை இனி
எந்தக் கவலையும் இல்லை. :-)

இந்த மென்பொருள் என்ற சொல்லை "கணித்தமிழ்" நிறுவனத்தினர் மெல்லியம் என்று
சொல்கின்றனர். இயற்றப்படுவதால் "மெல்லியம்" என்பது ஆங்கிலத்திலிருந்து
அப்படியே "மென்பொருள்" என்று மொழிமாற்றம் செய்வதை விட சரியான சொல் தானே?

கண்டிப்பாக லதா எழுத்துருவில் சீர்மை குறியீடுகளை இணைத்து தருகிறேன்.
எந்த எழுத்தின் இடத்தில் இக்குறியீடுகள் வர வேண்டும் என்பதை தனிமடல்
இடுங்கள்.

சீர்மை குறியீடுகள் அழகாய்த் தான் இருக்கின்றன. ஆனால் அனைவரும் ஏற்று
புழக்கத்தில் கொண்டு வர (பழைய ஐகார ஒற்றை ஒழித்தது போல) வெகுநாட்களாகும்.
காந்தளகம் திரு.சச்சிதானந்தம் அவர்கள் இதன் ஆதரவாளர் என்பது எனக்கு புதிய
செய்தி. 2007 சென்னை வலைப்பதிவர் பட்டறையில் அவரை சந்தித்திருக்கிறேன்.
சிஃபியின் அண்ணாக்கண்ணன் அவரை அறிமுகப் படுத்தி வைத்தார்.

//கோபியின் உமர் எழுத்துமாற்றி உருவாக்கத்தில்


என் கருத்துக்களும் உண்டு :) கோபி முன்னர் எழுத்யுள்ளார்,

தேடின் அம்படும். //

"உங்கள் கருத்துக்களும்" அல்ல.. நீங்கள் தானே உமர் மாற்றியின் தேவையை
அறிவித்து ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றங்களை சொல்லி சரியான வடிவம் பெற வழி
நடத்தினீர்கள். நுட்ப ரீதியாய் சுரதா யாழ்வாணன் வழி நடத்தினார்.
இன்னிக்கு பழங்களை நாங்கள் சாப்பிட்டாலும் விதை நீங்க விதைச்சது :-)

ப்ரியமுடன்,

கோபி

N. Ganesan

unread,
Aug 6, 2009, 12:06:48 PM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 7:37 am, Kavalkazhani Venkatakrishnan <vinchi...@yahoo.com>
wrote:


> விதையாக நல்தமிழைவித்தி என் உள்ளத்தை நீ விளத்தாய் - திருமழிசை ஆழ்வார்
>
> தமிழில் எனது முதல் அஞ்சல்

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!

கணேசன்

Tthamizth Tthenee

unread,
Aug 6, 2009, 12:34:28 PM8/6/09
to minT...@googlegroups.com
வருக நண்பர் கோபி அவர்களே  மிக்க மகிழ்ச்சி
இங்கே உங்கள் வருகை  இனிதாகுக
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

N. Ganesan

unread,
Aug 6, 2009, 12:40:28 PM8/6/09
to மின்தமிழ்

On Aug 5, 7:06 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/8/5 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:

>    "பல்லுயிர்க்கும்   ஆக்கை   கொடுத்து  அளித்த   கோனே  குணபரனே"
>
> முழுப்பாசுரமும், தமிழில்..ப்ளீஸ்
>
> ஆங்கிலத்தமிழ் புரிவதே இல்லை, என்ன செய்ய!
>

பாண்டித்துரைத் தேவர் அரசவையில் நாராயணையங்கார் எழுதிய பாண்டியம்
எழுத்தும் அவ்வாறே.

பாண்டித்துரை அரச‌ர் செய்த‌து நான்காம் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் என்பதுண்டு.
உண்மையில் அது ஐந்தாம் த‌மிழ்ச்ச‌ங்க‌ம். கொங்க‌ர்கோன்
வ‌ர‌ப‌தி ஆட்கொண்டான் தலைமையில் நான்காம் தமிழ்ச் சங்கம்.
வில்லிபுத்தூராழ்வார் அத‌ன் க‌விம‌ணிக‌ளில் ஒருவ‌ர்.

ஒருபக்கம் எழுதிப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அதனால்தான் மக்கள் பிரமி எழுத்துக்கோ, பாண்டியம் எழுத்துக்கோ
போகமட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நா. கணேசன்
http://groups.google.com/group/minTamil/msg/8b20c7abff23daf2

N. Kannan

unread,
Aug 6, 2009, 7:12:47 PM8/6/09
to minT...@googlegroups.com
சேஜோன் அரசன் செய்தது உயிர் + உயிர்மெய் இவைகளுக்கான எளிய குறியீடுகளை
உருவாக்கி, உயிர்மெய் எழுத்து என்று தனியாக உருவாக்காமல் (எவ்வளவு
எழுத்துச்சுமை குறையும் என்று எண்ணிப்பாருங்கள்) அடுக்குமுறையில்
உயிர்+உயிர்மெய் குறியீடுகளைப் போட்டுவிட்டான். அது சீன எழுத்துமுறைக்கு
எளிது. நமக்குக் கடினம். அவன் நெடுங்கணக்கு என்பதை உண்மையாக
எடுத்துக்கொண்டு `0` எனும் குறியீட்டையும் உள்ளே புகுத்தியிருக்கிறான்.
~எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்~ என்பது அங்கு நிரூபனமாகியுள்ளது.

நடைமுறைச்சாத்தியப்பாடு என்று ஒன்றுள்ளதே! எங்க அக்காவுக்கு பழைய `லை`
இருந்து புதிய `லை`க்கு வர ரொம்ப கஷ்டப்பட்டது (அவங்க பள்ளி ஆசிரியை
வேறு!).

க.>

பிகு: நா.க பழைய `லை` எப்படி இடுவது? பழைய கூட்டெடுத்தெல்லாம்
இடமுடியுமா? (அடியைப்புடிடா, பாரத பட்டா!)

2009/8/7 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 6, 2009, 7:22:25 PM8/6/09
to மின்தமிழ்
On Aug 6, 6:12 pm, \"N. Kannan\" <navannak...॰gmail.com> wrote:
> பழைய ’லை’ எப்படி இட‍ృவத‍ృ? பழைய க‌ூட்டெட‍ృத்தெல்லாம்
> இடம‍ృடிய‍ృமா? (அடியைப்ப‍ృடிடா, பாரத பட்டா!)
>

ஆராய்ச்சிக்காக இவை வேண்ட‍ృமல்லவா? ஃபாண்ட் மாற்ற வேண்ட‍ృம்,
அவ்வளவ‍ృதான்.

---------

ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்ட‍ృம்: எந்த எழ‍ృத்த‍ృர‍ృவ‍ృம்
மாற்றாமலே, உ/ஊ உடைத்த‍ృக் காட்டிய‍ృள்ளோம்.

http://groups.google.com/group/minTamil/msg/8b20c7abff23daf2

http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

இத‍ృ ய‌ூனிகோட் மகிமை. பழைய பல்லவி என்கிறீர்களா :)

நா, கணேசன்


> 2009/8/7 N. Ganesan <naa.gane...॰gmail.com>:

N. Ganesan

unread,
Aug 6, 2009, 9:11:31 PM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 11:34 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> வருக நண்பர் கோபி அவர்களே  மிக்க மகிழ்ச்சி
> இங்கே உங்கள் வருகை  இனிதாகுக
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ

தகடூர் கோபி பற்றிய அறிமுகம்,
முனைவர் மு. இளங்கோ:
http://muelangovan.blogspot.com/2009/01/blog-post_11.html

நா. கணேசன்

N. Kannan

unread,
Aug 6, 2009, 9:20:00 PM8/6/09
to minT...@googlegroups.com
2009/8/7 கோபி <hig...@gmail.com>:

> அன்பின் நா.க,
>
> வரவேற்புக்கு நன்றி. முன்பே மின்தமிழின் இழைகளை அவ்வப்போது
> பார்வையிடுவேன் ஆயினும் இலக்கிய குழுமம் என்பதால் என் போன்ற நுட்பம்
> மட்டுமே அறிந்தவர்களின் பங்கு இக்குழுமத்தில் தேவை இராது என்பதால் இதுவரை
> இணையவில்லை. அழைத்து வந்து இணைத்த தேவ் அவர்களுக்கு நன்றி.
>


உண்மையைச் சொல்லப்போனால் இது டெக்கினிக்கல் விஷயங்களைப் பேசத்தான்
உருவானது. தமிழில் தொழில்நுட்ப விஷயங்களை சிலாகித்துப் பேச முடியாத
சூழலில் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கொரு பாரம்பரியம் 2000
வருஷமாயுள்ளது.

கலைச்சொல் பிரச்சனையெனில் இங்கு ஆங்கிலத்திலும் உரையாடலாம்.

வாருங்கள்! வளம் தாருங்கள்.

நா.க

N. Ganesan

unread,
Aug 6, 2009, 10:14:02 PM8/6/09
to மின்தமிழ்

On Aug 6, 6:12 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சேஜோன் அரசன் செய்தது உயிர் + உயிர்மெய் இவைகளுக்கான எளிய குறியீடுகளை
> உருவாக்கி, உயிர்மெய் எழுத்து என்று தனியாக உருவாக்காமல் (எவ்வளவு
> எழுத்துச்சுமை குறையும் என்று எண்ணிப்பாருங்கள்) அடுக்குமுறையில்
> உயிர்+உயிர்மெய் குறியீடுகளைப் போட்டுவிட்டான். அது சீன எழுத்துமுறைக்கு
> எளிது. நமக்குக் கடினம். அவன் நெடுங்கணக்கு என்பதை உண்மையாக
> எடுத்துக்கொண்டு `0` எனும் குறியீட்டையும் உள்ளே புகுத்தியிருக்கிறான்.

நமக்கு அணிமையிலே உள்ள
மாலைத்தீவுகளில் (மாலைத்தீவு - ராஜராஜ சோழன்
கொடுத்த பெயர். சில கிரந்தக் கல்வெட்டுக்களும்
கிடைத்துள்ளன) எழுத்தைப் பார்க்கவும்:
http://www.unicode.org/charts/PDF/U0780.pdf

தமிழ் அடிப்படை, வெறும் அரபிச் சட்டை
போர்த்துள்ளது. தனி-மெய்களும்,
உயிர் மாத்திரைகளும் உள்ள எழுத்து.
0 உண்டு, அதன் மேல் உயிர்மாத்திரை
ஏற்ற உயிரெழுத்து உண்டாகும்.

திராவிடமக்களின் ஸப்ஸ்றேற்றம்
இலங்கை, மாலைத்தீவு எல்லாமும்
உண்டு. டிஎன்ஏ ஆராய்ச்சி செய்தாலும்
தெரியவரும்.
Where Did the Maldives People Come From?
http://www.iias.nl/iiasn/iiasn5/insouasi/maloney.html

மாலைத்தீவு எழுத்துப்போலும்
தமிழில் ஏற்றியிருக்கலாம்.
இப்போதுள்ளது ஓவெர்ஹெட்
சர்றுக் கூட. யாரோ டெல்லி
தமிழ் தெரியா ஐஏஎஸ் அதிகாரி
செய்துவிட்டார். தமிழ்நாட்டரசில்
தூங்கிக் கொண்டிருந்துவிட்டார்கள்.
அப்போது இண்பிட் போன்றன இல்லை
அல்லவா?

மேலும் அறிய என் பழைய மடல்:
http://nganesan.blogspot.com/2008/01/blog-post.html

நா. கணேசன்

> ~எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்~ என்பது அங்கு நிரூபனமாகியுள்ளது.
>
> நடைமுறைச்சாத்தியப்பாடு என்று ஒன்றுள்ளதே! எங்க அக்காவுக்கு பழைய `லை`
> இருந்து புதிய `லை`க்கு வர ரொம்ப கஷ்டப்பட்டது (அவங்க பள்ளி ஆசிரியை
> வேறு!).
>
> க.>
>
> பிகு: நா.க பழைய `லை` எப்படி இடுவது? பழைய கூட்டெடுத்தெல்லாம்
> இடமுடியுமா? (அடியைப்புடிடா, பாரத பட்டா!)
>

> 2009/8/7 N. Ganesan <naa.gane...@gmail.com>:

N. Ganesan

unread,
Aug 7, 2009, 8:15:20 AM8/7/09
to மின்தமிழ்

On Aug 6, 6:12 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> சேஜோன் அரசன் செய்தது உயிர் + உயிர்மெய் இவைகளுக்கான எளிய குறியீடுகளை
> உருவாக்கி, உயிர்மெய் எழுத்து என்று தனியாக உருவாக்காமல் (எவ்வளவு
> எழுத்துச்சுமை குறையும் என்று எண்ணிப்பாருங்கள்) அடுக்குமுறையில்
> உயிர்+உயிர்மெய் குறியீடுகளைப் போட்டுவிட்டான். அது சீன எழுத்துமுறைக்கு
> எளிது. நமக்குக் கடினம். அவன் நெடுங்கணக்கு என்பதை உண்மையாக
> எடுத்துக்கொண்டு `0` எனும் குறியீட்டையும் உள்ளே புகுத்தியிருக்கிறான்.
> ~எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்~ என்பது அங்கு நிரூபனமாகியுள்ளது.
>
> நடைமுறைச்சாத்தியப்பாடு என்று ஒன்றுள்ளதே! எங்க அக்காவுக்கு பழைய `லை`
> இருந்து புதிய `லை`க்கு வர ரொம்ப கஷ்டப்பட்டது (அவங்க பள்ளி ஆசிரியை
> வேறு!).
>

ஆம். அதனாற்றான், பாரிய மாற்றம் எதுவும் இல்லாத தேவையான
சீர்மையைத் தமிழ் எழுத்தில் செய்யவேண்டும். உயிர் எழுத்துக்கள்
ஒரு வலை (அ) அச்சுப் பக்கத்தில் அத்திகம் இருக்காது,
இருபுறமும் உயிர்மெய் மாத்திரைக்குறிகள் இருக்கும் கொ, கோ, கௌ,
- இவற்றை ஒரு புதுக்குறி கண்டுபிடித்து மாற்றலாம் (வரிநீளம் குறையும்).
ஆனால் அவை தேவையா என்று கருதியுணர்ந்து, வாசெகு, ஐராவதம்
போன்றோர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை.
சிறுவர்களுக்கு கல்வி புகட்டும்போது தெரிகிற ஒன்று:
உ/ஊ குறியீட்டின் பிணைப்புதான். இது நாராசத்தை (எழுத்தாணியில்)
தமிழைப் பழங்காலத்தில் ஓலையில் எழுதும்போது தேவையிருந்தது.
ஆணியை ஓலையில் இருந்து அகற்றாமல் கூட்டெழுத்தாய்
எழுதச் சூழ்நிலை. இன்று எல்லாம் தட்டச்சுதான்.

அதை மாற்றி சீர்மை முறையிலும் எழுதலாம்,
கற்பிக்கலாம் என்று வாசெகு போன்றோர் பெற்றுத் தந்தாலே
பெரிய சாதனை.

அவ்வகையில் மாற்றினால் எவ்வாறு தமிழ் நெடுங்கணக்கு
தர்க்க முறையில் அமையும் எனப் பார்ப்போம்.
அப்பொழுது எல்லா உயிர்மெய் எழுத்தையும்
துணைக்கால் (கா ..), கொக்கி (கி ...), சுழிக் கொக்கி (கீ ...),
துதிக்கை (க‍ృ ...), கொண்டை (க‌ூ ...),
ஒருசுழிக் கொம்பு (கெ ...), இரட்டைச்சுழிக் கொம்பு (கே ...)
மாத்திரம் கொண்டு எளிதாக எழுதிவிட முடிகிறது.

(அ) வரிநீளம் அதிகம் ஆவதில்லை
(ஆ) அண்டை மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு
போலவே உகரக் குறி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தும்பிக்கையில் நம்பிக்கை உண்டே நமக்கு!
(இ) யூனிகோட் பக்கங்கள் இப்பொழுதே தெரிகின்றன.
(ஈ) தமிழ் எழுத்துத் தெரியாதோருக்குக் கற்பிக்க,
அவர்கள் நினைவில் இருத்த மிக எளிமையான வடிவு.

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:

ஃ அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க் க கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் த தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் ல லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ

ஜ் ஜ ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷ ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸ ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹ ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ

நன்றி,
நா. கணேசன்


> 2009/8/7 N. Ganesan <naa.gane...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Aug 22, 2009, 1:38:55 PM8/22/09
to minT...@googlegroups.com
இன்று   திரு  AVS  அவர்களையும்    அவரது   மகனையும்    சந்திப்பதற்காகச்   சென்றிருந்தேன்.   முப்பரிசு  வாங்கிய   மகிழ்வில்  முதிர்ந்த  இளைஞரும்,   அதைக்  காட்டிலும்   தந்தையைப்  பற்றிய  குறிப்பும்  பலரது  ஆர்வமும்    மின்தமிழில்  பதிவாகியுள்ளதைக்  கண்ட   களிப்பில்   மூத்த  மைந்தரும்  என்னை  வரவேற்றனர்.
 
அவரது  மகன்   ஒரு  நல்ல  செய்தி  சொன்னார்.   அன்றே    மின்தமிழில்  சேர்ந்துவிட்டாராம்.   திரு  வெங்கட்   அமெரிக்காவில்   கம்யூனிகேஷன்ஸ்  லைனில்   இருப்பவர்.   இலக்கியத்தில்,  தத்துவத்தில்,   குறிப்பாகக்  கவிதையில்  ஆர்வம்.   1982 ல்  எல்லாம்  தான்   ஈடுபட்டுப்  படித்த   SEamus  Heaney   போன்ற   கவிஞர்களைப்  பின்னர்  தான்  சந்திக்க  நேர்ந்த   கதைகளையெல்லாம்   சுவைபடச்  சொன்னார்.  அதை  அவரே   இங்கு  மின்தமிழில்   நேரடியாக  விவரித்தால்   நன்றாக  இருக்கும் என்று  நான்  வளர்த்தாமல்  விடுகிறேன்.   மிகத்தரமான   குழுமம் என்று   மின்தமிழைப்  பெரிதும்   சிலாகித்தார்.    நமது  மின்தமிழ்   நண்பர்கள்   அனைவருக்கும்    இந்தச்  சாதனையின்  பெருமை  போய்  சேருவதாகுக!
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

2009/8/2 N. Kannan <navan...@gmail.com>
அன்பின் ரங்கன்:

மிக அரிய இழை. `கற்றோரை கற்றோரே காமுருவர்` என்பது போல, நல்ல ஆசிரியர்
ஒருவரை இனம் கண்டு அவர் வாழும் காலத்திலேயே அவரது நூல்களை இனம்
காட்டியமைக்கு நன்றி.

திரு AVSவுடன் ஒரு சந்திப்பு செய்து நாம் வெளியிடலாம். மின்தமிழ்
விழாவில் (ஆகஸ்ட் 27) அவரை கௌரவிக்கலாம்.

க.>

2009/8/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஆனால்   முதலில்  இத்தகைய    சுய  ஆர்வ  எழுத்தாளர்களை   இனம்
> காட்டுவதே   பெரும்  வேலையாக  அன்றோ   போய்விட்டது!  இனி  அவராச்சு
> மின்தமிழாச்சு.


 

N. Kannan

unread,
Aug 22, 2009, 7:33:01 PM8/22/09
to mint...@googlegroups.com
2009/8/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>  அதை  அவரே   இங்கு  மின்தமிழில்
> நேரடியாக  விவரித்தால்   நன்றாக  இருக்கும் என்று  நான்  வளர்த்தாமல்
> விடுகிறேன்.   மிகத்தரமான   குழுமம் என்று   மின்தமிழைப்  பெரிதும்
> சிலாகித்தார்.    நமது  மின்தமிழ்   நண்பர்கள்   அனைவருக்கும்    இந்தச்
> சாதனையின்  பெருமை  போய்  சேருவதாகுக!
>

கேட்க மிகவும் மகிழ்வாக உள்ளது. இருக்கின்ற `ஆலாய்பறக்கிற`
வேலைக்களுக்கிடையே, `கடன்வாங்கிய` நேரத்தில் இப்படியொரு தரமான மின்குழுவை
நம்மால் நடத்தமுடிவது 21ம் நூற்றாண்டின் அதிசயம்தான். தமிழனின் மரபு
மிகவும் நளினமான மரபாக உள்ளது. அதன் தத்துவங்கள், இலக்கியம், சிற்பம்,
இசை என்று பார்த்தோமெனில் அப்படியொரு நளினம், அப்படியொரு நாகரீகம்.
அனிச்சம் பூவை விட மென்மையான இதயம் கொண்டோர் நிரம்ப இருந்திருக்கின்றனர்.
வாடிய பயிர் உள்ளத்தை வாட்டியிருக்கிறது. மனித மேம்பாட்டின்
உச்சவெளிப்பாடு போல் சிலநேரம் தோன்றுகிறது. இல்லையெனில், இன்றில்லை 2000
வருஷத்திற்கு முன்பே, `யாதும் ஊரே யாவரும் கேளிர்` என்று எப்படிச்
சொல்லமுடிந்தது?

அந்த மரபின் வாரிசுகள் நாம் என்று உளப்பூர்வமாக உணர்வோமெனில் நாம் நடந்து
கொள்ளும்விதம், பண்பாடு மிகவும் நளினமாகவே இருக்கும்!

மடலாடற்குழுக்களை குப்பைத்தொட்டியாக மாற்ற ஒரு சில மடல்கள் போதும். பின்
அதுவொரு விஷச்சுழற்சியில் மாட்டிக்கொள்ளும். அப்படித்தான் பல குழுக்கள்
மாட்டிக்கொண்டு முழிக்கின்றன. பதிவு உலகமும் கூட. தனிமனித வெறுப்பு,
தமிழ் இனக்குழுச் சண்டைகள், மொழிவெறிக் கூச்சல்கள் இவையே தமிழ் மனத்தை
ஆட்டிக்கொண்டிருக்கும் பிசாசுகள் என்பது போல் காட்டும் மின்னரங்கங்கள்
உண்டு.

எனவேதான் நான் மீண்டும், மீண்டும் சொல்வது, மின்தமிழ் எனும்
உளக்கண்ணாடியில் அடிக்கடி நம் முகத்தைப் பார்த்து ஒப்பனை செய்து
கொள்வோமென்று. முகம் என்பது எதற்கு இருக்கிறது? நமக்காக இல்லை.
அடுத்தவருக்காகவே முகம் உள்ளது. என்வே நம் முகத்தை நமக்காக அல்ல,
அடுத்தவருக்காக அழகாக வைத்துக்கொள்ள வேண்டியது நாகரீகம். வெளியே போகும்
போது தலைவாரி, பவுடர் ஏன் போட்டுக்கொள்கிறோம். நாலு பேர் பார்க்கும் போது
நாகரீகமாகத்தெரியத்தானே? அதே உளவியல்தான் இங்கும் செயல்படுகிறது.

இப்போது பார்க்கும் இம்மின்னெழுத்து நம் உளத்தைக் காட்டும் கண்ணாடி
எனப்பார்த்துப்பழகிவிட்டோமெனில் பின் நம் எழுத்து எப்போதும்
மிருதுவாகவும், மதுரமாகவும், நளினமாகவும், நாகரீகமாகவும் அமைந்துவிடும்
இல்லையா?

எம் தந்தையர் நாடெனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே!
என்கிறான் பாரதி. அதுதான் catch! எம் தந்தையர் நாடு, எம் தந்தையர் மொழி,
எம் தந்தையர் சமயம், எம் தந்தையர் இலக்கியம். எம் தந்தையர் மரபு! அது
நம்மை நடத்திச் செல்லட்டும்!

திரு. வெங்கட் அவர்களை வரவேற்போம்.

வாழ்க வளமுடன்.

நா.கண்ணன்

Subashini Tremmel

unread,
Aug 23, 2009, 2:42:18 AM8/23/09
to mint...@googlegroups.com
இந்த செய்தி கேட்பதற்கு மகிழ்ச்சியளிக்கின்றது. நல்ல பல புதிய நண்பர்கள் இணைந்திருக்கின்றார்கள். அவ்ர்களையும் அவர்கள் எழுத்துக்களையும் அன்புடன் வரவேற்போம்.
-சுபா

2009/8/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>

devoo

unread,
Sep 15, 2009, 12:19:48 AM9/15/09
to மின்தமிழ்
*பத்தி யதிராஜம்மாள்*

தனியான தலைப்பில் எழுதத்தக்க பதிவு. பொன்னாச்சியாரும், கொங்குப்
பிராட்டியும் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். கல்வெட்டில் தேட
வேண்டாம்.ஒதுங்கி வர்த்தித்த அவர்கள்பால் உடையவர் சீடர்களைப் பாடம்
பெறுவதற்கு அனுப்பிய
நிகழ்ச்சியும் உண்மையில் நடந்திருக்கும்.

சேஷத்வ - பாரதந்த்ர்ய போக்யதைகளாகிய அகண்ட காவேரியிருந்து ஒரு சிறு
கால்வாய் மின்னரங்கிலும் சலசலத்துச் செல்லலாம்.

அந்த அம்மையின் அருஞ்சாதனை அகத்தில் கல்வெட்டாய்ப் பதிந்து
பண்படுத்தியது.


தேவ்

Tthamizth Tthenee

unread,
Sep 15, 2009, 3:00:33 AM9/15/09
to mint...@googlegroups.com
பல  சமயம்    சந்நிதிக்குக்  கூடப்  போகாமல்   வந்திருக்கிறேன்.   ஆனால்    போனவுடன்    இந்த  பாகவத   ஆன்மாவைச்  சந்திக்காமல்  வந்ததில்லை.    இன்று    போனால்    சந்நிதிக்கு  மட்டும்தான்   போகமுடியும்.    ஏனென்றால்    அங்குதானே   ஆசார்யன்   திருவடியில்    அந்த   மூதாட்டியும்    இருப்பார்,   ஓரமாக   அன்று;  ஓங்கி  உலகளந்த   உத்தமன்   பேர்பாடி   உரிமையோடு    நடு  ஓலக்கத்தில்,   உதிக்கும்  உத்தமர்தம்  சிந்தையுள்   ஒண்கழலோன்    யதிராஜன்    உவப்புக்கு  இலக்காகி.     எனக்கு   ஒரு  நப்பாசை!     எப்பொழுதாவது    என்னைப்பற்றி    'அதோ  அந்த  வாயாடிப்  பையன்  வந்திருக்கிறான்'    என்று  சொல்லமாட்டாரா    யதிகட்கிறைவன்   திருச்செவி   கேட்க   என்று.
 
சிலருக்கு  மட்டுமே இப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கிறது
 
நீங்கள் யதிராஜம்மாள் அவர்களைப் பற்றி சொன்னவுடன்
 
எனக்கு என்னைப் பெத்த தாயார் கமலம்மாள் நினைவு வந்தது
 
எனக்கு  யதிராஜம்மாளும் யதிராஜரும், என் தாயாரே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
 
 
 
On 9/15/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
பத்தி  யதிராஜம்மாள்
-------------------------------------
 
இவர்  கவர்னர்  அன்று.   அல்லது  முதல்  முதலில்   பாராசூட்டிலிருந்து  கீழே  குதித்த   பெண்மணியுமன்று.   இல்லையென்றால்    ஆரம்ப  கால   தமிழ்  எழுத்துக்களில்    நேரடியாக  தன்  பெயரில்   போடாமல்   எழுதிப்  பின்னர்   பிரசித்தமான   எழுத்தாளருமன்று.    பின்னர்  இவர்  யார்?     சில  வருஷங்களுக்கு   முன்   நீங்கள்  ஸ்ரீபெரும்பூதூர்   போயிருந்தால்   நிச்சயம்  தெருவில்   இவரை  அடையாளம்  கண்டிருக்க  முடியாது.   கையில்  தடியூன்றி   உடல்   செங்குத்துக்  கோணத்தில்   குனிந்து,   குரல்    ஆற்றின்   அலைவரிசையை  அடைந்தது  போல்   வருகின்ற    வயதான   மூதாட்டியை    எப்படி  பார்ப்போம்?    ஐயோ  பாவம்!    பாட்டி    ஓரமாகப்   போங்கோ!     ஆம்   பெண்சமூகத்தையே     வெகுகாலம்  ஓரமாகப்  போங்கோன்னுதான்    சொல்லி    ஏதோ   ஆங்கிலம்  வந்த   முகூர்த்தம்   அஷ்ட  லக்ஷ்மிகளும்    திக்விஜயம்  வருகிறார்கள்.    வயதான   மூதாட்டி    ஓரமாகத்தானே  போகவேண்டும்.    சரிதான்.   ஏதாவது  வண்டி  கிண்டி   வந்து    மோதிடுத்துன்னா!   வண்டி  ஓரமா   போனா  என்னன்னு   யோசிக்க   இன்னும்   பலகாலம்  ஆகும்.   அதுவரையில்,    பெருசோ,   பாட்டியோ   ஓரமாகப்   போகட்டும்.   இல்லை    சமுதாயத்தில்   சில  விஷயங்களை   நினைத்தால்    தூக்கமே  வரமாட்டேன்  என்கிறது.   சமுதாயம்   கிடக்கட்டும்.  நாமே   மடத்தனத்தில்   ஊறி   ஒருகாலத்தில்   கொள்கலனாய்  இருந்த   தவறுகளை  நினைத்தால்    'என்ன  பேச்சு  வேண்டி  கிடக்கிறது   நம்ம  பவுசுக்கு?   என்றுதான்    வெட்கம்  பிடுங்கித்  தின்கிறது.    நல்ல  வேளை   சித்தர்  ஒருவர்   பாடிவைத்தார்.   'வெட்கம்  கெட்டு   விதி  கெட்டு   வெளிப்பட்ட  மூளிக்கு   முக்காடு  ஏதுக்கடி   குதம்பாய்  முக்காடு  ஏதுக்கடி'    அவர்  அந்த  அர்த்தத்தில்    சொல்லவில்லை  என்கிறீர்களா?    அதெல்லாம்   பெரியவா  சொல்றதுக்கு    பலவகையில்   அர்த்தம்  கொள்ளலாம்.  ஒரே   அர்த்தம்னு    சோனிப்பிச்சான்  மாதிரி    வாக்கு  சொல்வாளான்ன?   சித்தர்  இல்லையா?   சித்தம்  போக்கு    என்பதுபோல்    நம்   சித்தத்துக்கு   ஏற்றாற்  போல்  பொருள்  கொள்ள  முடியாமல்  போனால்  அப்புறம்  அவர்கள்  என்ன  சித்தர்கள்?   
 
சரி  நமது   மூதாட்டி  விஷயத்துக்கு  வருவோம்.   ஓங்கோலோ  நெல்லூரோ   அங்கிருந்து  எந்தக்  காலத்திலிருந்தோ   வந்து   ஸ்ரீபெரும்பூதூரே    கதியெனத்  தங்கிப்  பல  தலைமுறைகளைக்   கண்ட   கண்கள்   இப்ப  இப்பதான்   டெலஸ்கோப்   வைத்துப்  பார்க்க  வேண்டியிருக்கிறது. 
 
அப்பொழுது   போயிருக்கும்  பொழுது   தம்பியின்  நண்பருக்குச்  சொந்தம்   என்ற  வகையில்   விவரங்கள்   கிடைத்தன.    எனக்கு   ஒரு    கிளரும்  எண்ணம்.    அவர்    இவ்வளவு  நாள்    என்ன    கண்டிருப்பார்?      போய்ப்  பார்த்தால்   பழங்கதைகள்     வண்டி  வண்டியாய்ச்  சொல்லுவார்   என்று   தயாராகத்தான்  போயிருந்தேன்.  ஆனால்   முற்றிலும்   என்னை   அசத்திவிட்டார்  மூதாட்டி.    அங்கு  இருக்கும்   ஸ்ரீராமானுஜரின்   வழிவந்தவர்களான       ஆசூரி  ஸ்வாமி    திருமாளிகையில்    பெரிய  ஆசூரி  ஸ்வாமியிடம்   அந்தக்  காலத்தில்    பல  ஸ்ரீவைஷ்ணவ   ரஹஸ்ய  கிரந்தங்களைக்  காலக்ஷேப    முறையில்    பாடம்  கேட்டு   அப்படியே    மூலபாடம்   வ்யாக்யானம்,   அதற்கு    பத  அர்த்தங்கள்,   நுட்பப்  பொருட்கள்   என்று    நினைவில்  வைத்தே    சொல்லிக் கொண்டிருந்தார்   மூதாட்டி.   அந்த  ஸ்வாமி   என்ன  அர்த்தம்  சொல்வார்   இந்த  ஸ்வாமி   என்ன  அர்த்தம்  சொல்வார்  என்று     authorwise  catalogueம்   போகிறவாக்கில்    சொல்லிக்கொண்டு  போகிறார்.   இத்தனைக்கும்    தமிழ்   எழுத  படிக்கத்  தெரியாது.   தெலுங்குதான்.   தெலுங்கு    லிபியில்   போட்ட   மணிப்ரவாள   வ்யாக்யானங்களே   மூதாடிக்கு  ஜீவாது.     அவருடைய   அறை  எது  தெரியுமோ?   வாசலில்   நின்று   பெல்லை  அழுத்தினால்    அதோ   அந்தக்  கடைசியில்     நேர்  ரேழி  ஓடி   கொல்லையில்  முடிகிறதே    அந்தக்  கதவிற்கு  முன்னால்   போவோர்  வருவோருக்கு   வழிவிட்டு   ஓரமாகக்  கிடக்கை.  வீட்டில்   என்ன  வண்டி  வந்து  போய்க்கொண்டிருக்கப்  போகிறது?    ஓரமாகத்தான்     மூத்த  தலைமுறைகளின்  வாசம்.   நடுவில்  அமர்ந்து  நாம்  என்ன  கிழித்துக்  கொண்டிருக்கிறோம்   என்று   எனக்குப்  புரிந்தபாடில்லை.    முதலில்தான்   தயக்கம்.  பிறகு   பேசத்  தொடங்கியதும்,   சேஷத்வ   போக்யதைகள்   அதற்கும்  மேற்பட்டு    பாரதந்த்ர்ய   போக்யதைகள்     என்று    அகண்ட  காவிரியாய்    அரட்டை  போய்க்கொண்டிருக்கிறது.    நான்தான்  ஒரு  வாயாடி   என்று  உங்களுக்குத்  தெரியுமே?    திரும்பிப்  பார்த்தால்   அரைநாள்  ஆகிவிட்டிருக்கிறது.    வடமொழிப்  பதங்கள்,   வ்யாகரண    கோட்பாடுகள்,  அவற்றைப்  பயன்கொண்டு    நிர்வாஹங்கள்    எல்லாம்    படிக்காத  அந்தக்  காலத்துப்  பெண்மணி    தள்ளாத   வயதில்   தடுமாட்டம்  இல்லாத  நினைவோடு    கூறுவது  எப்படி    முடிந்தது?    முதலில்    மாதர்கல்வி   என்பது     என்ன  ?   இது  என்ன?    என்றோ    ஆயிர  வருஷங்களுக்கு  முன்னால்    ஒருவர்    அகழ்ந்த   ஊருண்கேணி.     காலத்தின்  ஒற்றை  வழிப்பாதைகளில்    வந்து  வந்து   மொள்ள     கொடுத்துக்  கொண்டே   இருக்கும்   வற்றாத  ஏரி.     ஸ்ரீராமானுஜரின்   இந்தப்  பிரபாவங்களுக்கு   ஏது  கல்வெட்டு?    கல்வெட்டா?    உயிர்க்கட்டாக    காலம்  தோறும்  தொடர்கிறதே    இந்த    மாதிரி  செட்டி  குலத்துத்  திருவிளக்குகளான    பாகவத  அம்மாக்கள்தான்.     முன்னரே   சொன்னேனே    தெலுங்கு   எழுத்தில்   வந்த   சுமார்  ஐயாயிரத்துப்   பக்க    அட்லாஸ்  சைஸ்   நூற்தொகுதியில்    15  புத்தகங்கள்   அடுக்கடுக்காக   உரைகள்  அரும்பதங்கள்   அடக்கம்    அதில்    ப்ரூப்  திருத்தம்   7  பாகவத  மூதாட்டிகள்.    திருத்தத்தை  மீறி    எஞ்சிய   தவறுகளும்   மொத்தம்  7தான்.  
 
பல  சமயம்    சந்நிதிக்குக்  கூடப்  போகாமல்   வந்திருக்கிறேன்.   ஆனால்    போனவுடன்    இந்த  பாகவத   ஆன்மாவைச்  சந்திக்காமல்  வந்ததில்லை.    இன்று    போனால்    சந்நிதிக்கு  மட்டும்தான்   போகமுடியும்.    ஏனென்றால்    அங்குதானே   ஆசார்யன்   திருவடியில்    அந்த   மூதாட்டியும்    இருப்பார்,   ஓரமாக   அன்று;  ஓங்கி  உலகளந்த   உத்தமன்   பேர்பாடி   உரிமையோடு    நடு  ஓலக்கத்தில்,   உதிக்கும்  உத்தமர்தம்  சிந்தையுள்   ஒண்கழலோன்    யதிராஜன்    உவப்புக்கு  இலக்காகி.     எனக்கு   ஒரு  நப்பாசை!     எப்பொழுதாவது    என்னைப்பற்றி    'அதோ  அந்த  வாயாடிப்  பையன்  வந்திருக்கிறான்'    என்று  சொல்லமாட்டாரா    யதிகட்கிறைவன்   திருச்செவி   கேட்க   என்று.

rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

N. Kannan

unread,
Sep 15, 2009, 5:15:39 AM9/15/09
to mint...@googlegroups.com
என்ன அபாரமான இடுகை!
 
மரபுச் செல்வங்கள் யாருமறியா ரேழித்திண்னையில்...
ஒன்றுமறியா வெட்டி வேத்துக்கள் மேடை நிரம்ப நின்று கொண்டு...
பெண் கல்வி பற்றிய உங்கள் கூரிமையான அவதானம் அருமை.
 
"எனக்கு   ஒரு  நப்பாசை!     எப்பொழுதாவது    என்னைப்பற்றி    'அதோ  அந்த  வாயாடிப்  பையன்  வந்திருக்கிறான்'    என்று  சொல்லமாட்டாரா    யதிகட்கிறைவன்   திருச்செவி   கேட்க   என்று."
 
கண்கள் கலங்குகின்றன. 
 
க.>
2009/9/15 devoo <rde...@gmail.com>

Chandra sekaran

unread,
Sep 15, 2009, 7:42:47 AM9/15/09
to mint...@googlegroups.com
" சில  வருஷங்களுக்கு   முன்   நீங்கள்  ஸ்ரீபெரும்பூதூர்   போயிருந்தால்   நிச்சயம்  தெருவில்   இவரை  அடையாளம்  கண்டிருக்க  முடியாது."

ரெங்கன் அண்ணா 
மனம் பதைக்கிறது! சில வருடங்களுக்கு முன் என்றால் என்ன? அம்மாள் இன்னும் இருக்கிறார்கள் அல்லவா? இப்பொழுது போனால் அவர்களாஇ பாடக் கேட்டு முடிந்தவரையில் ஒலிப்பதிவு செய்யலாமே? மரமண்டை என் போன்றவர்களால் இது மாதிரியான சேவை செய்ய முடுயும். அழைத்துப் போவீர்களா?
சந்திரா


Chandra sekaran

unread,
Sep 15, 2009, 9:27:33 AM9/15/09
to mint...@googlegroups.com


2009/9/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
சந்திரா  சார்!
 
>இன்று    போனால்    சந்நிதிக்கு  மட்டும்தான்   போகமுடியும்.    ஏனென்றால்    அங்குதானே   ஆசார்யன்   திருவடியில்    அந்த   மூதாட்டியும்    இருப்பார், <

 திருவடியிலிருந்து வருமோ அமுதமழை? மூதாட்டியாரை நினைத்து அழுவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த ஞான பூமியிலே, அத்தனை பேருக்கும் வணக்கங்கள்...
 
கும்பகோணத்தில் அம்மாளு அம்மாள் என்பவர் இளவயது விதவை யாகி, மனம் நொந்து குளத்தில் விழப் போக, ஆண்டவன் அவர் கைத்தலம் பற்றி “என் சேவைக்கு உன்னைப் படைத்தேன், எனவே வாழ்ந்து பாடு,” என்று கட்டளையிட்டதாக, அவரது சீடர் என்னை மும்பையில் ஒரு இல்லத்தில் வைத்துச் சொன்னார். 2002 ஆம் ஆண்டு. கும்பகோணம் முழுதும் தேடி அப்படி யாரும் இல்லை என்றாகிப் போய், மீண்டும் 2005ல் ராமர் கோயிலருகே, கண்டேன், கண்டேன் அந்த பழுத்த மூதாட்டியை. தியாகராசர் எப்படி தெலுங்கில் அமுத கீதம் சொரிந்தாரோ அதேபோல், கடந்த 90 ஆண்டுகளாக கன்னடத்தில் கிருஷ்ணரைப் பற்றி தினம் பாடி வருகிறார். (?) முன்பு அருமை தெரியாமல் பாடல்கள் பதிக்கப் படவில்லை. இன்றூ அவரைச் சுற்றி பலர் சீடர்கள் அவற்றை அப்படியே பதிவு செய்கிறார்கள் என்று கேள்வி. ஆனாலும் இப்போது நடப்பது 2009. மீண்டும் போய் பார்க்கவேண்டும். கும்பகோணத்துக் காரர்கள் யாரேனும் இந்த மடலை பார்க்க நேரிட்டால், அம்மையார் இர்பூஅதி உறுதி செய்யுங்கள். நான் பார்த்தபோதே வயது 90 கடந்து விட்டது...

சந்திரா
 

devoo

unread,
Sep 15, 2009, 9:30:35 AM9/15/09
to மின்தமிழ்
சந்திரா சார்!

ஆசார்யன் திருவடி அடைதல் என்றால் வைஷ்ணவ பரிபாஷையில்
மரணமடைந்து வைகுந்தம் சேர்தல். அந்த அம்மையார் இப்போது
மண்ணுலகில் இல்லை.யதிராஜரின் மலரடிகளில் மாறுதல் இன்றி மகிழ்ந்தெழும்
போகத்தில் மன்னியவாறு வாழ்கிறார்.

இவர் போன்ற பாகவதைகளை மனத்தால் நினைப்பதும் நம்மைத் தூய்மை செய்யும்.

தேவ்

N. Kannan

unread,
Sep 15, 2009, 9:41:34 AM9/15/09
to mint...@googlegroups.com
சந்திரா:

நல்ல உற்சாகம். நல்ல சிந்தனை.
அரங்கானாருக்கு இது போன்ற பாகவதர்களை நிறையத்தெரியும். அடுத்தமுறை கூடவே
போய்விடுங்கள். யார் கண்டார்? ஏதாவது `முதுசொம்` அங்கு உட்கார்ந்து
இருக்கும்! ;-)

க.>

2009/9/15 Chandra sekaran <plastic...@gmail.com>:

Kamala Devi

unread,
Sep 15, 2009, 11:11:05 AM9/15/09
to mint...@googlegroups.com
சந்திரன்,
எத்தகு அனுபவம்.எனக்கும் அந்த அம்மாவை  காணவேண்டும் போலுள்ளது
கிருஷ்ணகானம் பாடும் பலருக்கும் கைலாயத்திலிருந்து விளி தாமதமே.
ஆனால் அகாலத்திலும் ஒளிர் விடும் வாழ்க்கை அவர்களது.
சுகுமாரனின் கட்டுரை தத்துவம் இங்கும் யோசிக்கிறேன்
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com



திருவடியிலிருந்து வருமோ அமுதமழை? மூதாட்டியாரை நினைத்து அழுவதைத் தவிர என்ன செய்ய இயலும்? இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த ஞான பூமியிலே, அத்தனை பேருக்கும் வணக்கங்கள்...
 
கும்பகோணத்தில் அம்மாளு அம்மாள் என்பவர் இளவயது விதவை யாகி, மனம் நொந்து குளத்தில் விழப் போக, ஆண்டவன் அவர் கைத்தலம் பற்றி “என் சேவைக்கு உன்னைப் படைத்தேன், எனவே வாழ்ந்து பாடு,” என்று கட்டளையிட்டதாக, அவரது சீடர் என்னை மும்பையில் ஒரு இல்லத்தில் வைத்துச் சொன்னார். 2002 ஆம் ஆண்டு. கும்பகோணம் முழுதும் தேடி அப்படி யாரும் இல்லை என்றாகிப் போய், மீண்டும் 2005ல் ராமர் கோயிலருகே, கண்டேன், கண்டேன் அந்த பழுத்த மூதாட்டியை. தியாகராசர் எப்படி தெலுங்கில் அமுத கீதம் சொரிந்தாரோ அதேபோல், கடந்த 90 ஆண்டுகளாக கன்னடத்தில் கிருஷ்ணரைப் பற்றி தினம் பாடி வருகிறார். (?) முன்பு அருமை தெரியாமல் பாடல்கள் பதிக்கப் படவில்லை. இன்றூ அவரைச் சுற்றி பலர் சீடர்கள் அவற்றை அப்படியே பதிவு செய்கிறார்கள் என்று கேள்வி. ஆனாலும் இப்போது நடப்பது 2009. மீண்டும் போய் பார்க்கவேண்டும். கும்பகோணத்துக் காரர்கள் யாரேனும் இந்த மடலை பார்க்க நேரிட்டால், அம்மையார் இர்பூஅதி உறுதி செய்யுங்கள். நான் பார்த்தபோதே வயது 90 கடந்து விட்டது...

சந்திரா
 


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Tthamizth Tthenee

unread,
Sep 15, 2009, 2:57:59 PM9/15/09
to mint...@googlegroups.com
அது   ஒரு  கூட்டமாய்க்  கிளர்ந்து   குடைந்து  தேடிய  பருவம்!
 
 
இப்போது புறிகிறது அரங்கன் எப்படி இப்படி என்று!!/
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
On 9/15/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
அது   ஒரு  கூட்டமாய்க்  கிளர்ந்து   குடைந்து  தேடிய  பருவம்!


On 9/15/09, N. Kannan <navan...@gmail.com> wrote:
சந்திரா:

நல்ல உற்சாகம். நல்ல சிந்தனை.
அரங்கானாருக்கு இது போன்ற பாகவதர்களை நிறையத்தெரியும். அடுத்தமுறை கூடவே
போய்விடுங்கள். யார் கண்டார்? ஏதாவது `முதுசொம்` அங்கு உட்கார்ந்து
இருக்கும்! ;-)

க.>


Subashini Tremmel

unread,
Sep 16, 2009, 5:10:44 PM9/16/09
to mint...@googlegroups.com
திரு.ரங்கன்,
உங்கள் தமிழ் அழகு. அதோடு இந்த கட்டுரையின் சாரமும் மிக அழகாக சேர்ந்து கொண்டு மனதை இலயிக்க வைத்துவிட்டது.

2009/9/15 srirangammohanarangan v <ranga...@gmail.com>
பத்தி  யதிராஜம்மாள்
-------------------------------------
 
இவர்  கவர்னர்  அன்று.   அல்லது  முதல்  முதலில்   பாராசூட்டிலிருந்து  கீழே  குதித்த   பெண்மணியுமன்று.   இல்லையென்றால்    ஆரம்ப  கால   தமிழ்  எழுத்துக்களில்    நேரடியாக  தன்  பெயரில்   போடாமல்   எழுதிப்  பின்னர்   பிரசித்தமான   எழுத்தாளருமன்று.    பின்னர்  இவர்  யார்? 
 
சரி - இப்படியெல்லாம் செய்தால் தான் புகழ் பெற முடியுமா என்ன?
 
 மூதாட்டியை    எப்படி  பார்ப்போம்?    ஐயோ  பாவம்!    பாட்டி    ஓரமாகப்   போங்கோ!     ஆம்   பெண்சமூகத்தையே     வெகுகாலம்  ஓரமாகப்  போங்கோன்னுதான்    சொல்லி    ஏதோ   ஆங்கிலம்  வந்த   முகூர்த்தம்   அஷ்ட  லக்ஷ்மிகளும்    திக்விஜயம்  வருகிறார்கள்.   
பெண்ணாக இதை வாசிக்கும் போது இந்த வரிகளுக்குப்  பின் இருக்கும் அர்த்தம் ..ம் ம் சிறப்பு!
 
 
இல்லை    சமுதாயத்தில்   சில  விஷயங்களை   நினைத்தால்    தூக்கமே  வரமாட்டேன்  என்கிறது.   சமுதாயம்   கிடக்கட்டும்.  நாமே   மடத்தனத்தில்   ஊறி   ஒருகாலத்தில்   கொள்கலனாய்  இருந்த   தவறுகளை  நினைத்தால்    'என்ன  பேச்சு  வேண்டி  கிடக்கிறது   நம்ம  பவுசுக்கு?   என்றுதான்    வெட்கம்  பிடுங்கித்  தின்கிறது.  
நல்ல சுய அலசல்..:-)
 
  நல்ல  வேளை   சித்தர்  ஒருவர்   பாடிவைத்தார்.   'வெட்கம்  கெட்டு   விதி  கெட்டு   வெளிப்பட்ட  மூளிக்கு   முக்காடு  ஏதுக்கடி   குதம்பாய்  முக்காடு  ஏதுக்கடி'    அவர்  அந்த  அர்த்தத்தில்    சொல்லவில்லை  என்கிறீர்களா?    அதெல்லாம்   பெரியவா  சொல்றதுக்கு    பலவகையில்   அர்த்தம்  கொள்ளலாம்.  ஒரே   அர்த்தம்னு    சோனிப்பிச்சான்  மாதிரி    வாக்கு  சொல்வாளான்ன?   சித்தர்  இல்லையா?   சித்தம்  போக்கு    என்பதுபோல்    நம்   சித்தத்துக்கு   ஏற்றாற்  போல்  பொருள்  கொள்ள  முடியாமல்  போனால்  அப்புறம்  அவர்கள்  என்ன  சித்தர்கள்?   
அதானே. :-)
 
   அப்படியே    மூலபாடம்   வ்யாக்யானம்,   அதற்கு    பத  அர்த்தங்கள்,   நுட்பப்  பொருட்கள்   என்று    நினைவில்  வைத்தே    சொல்லிக் கொண்டிருந்தார்   மூதாட்டி.   அந்த  ஸ்வாமி   என்ன  அர்த்தம்  சொல்வார்   இந்த  ஸ்வாமி   என்ன  அர்த்தம்  சொல்வார்  என்று     authorwise  catalogueம்   போகிறவாக்கில்    சொல்லிக்கொண்டு  போகிறார்.  
இந்த ஞாபக  திறனை என்ன சொல்வது.  வியாக்கியானங்களெல்லாம் மனதிற்குள் கரைந்து அதிலேயே லயித்து தானே அதுவாக இருப்பதால் தானோ எல்லாம் அருவியாகக் கொட்டுகின்றது..
 
 
அன்புடன்
சுபா

Venkatachalam Subramanian

unread,
Sep 16, 2009, 9:48:14 PM9/16/09
to mint...@googlegroups.com
ஓம்.
இங்கு நடக்கும் எழுத்து விழாக்கள் பெருமிதம் கொள்ளவைக்கின்றன.
அருவியெனப் பொழியும் அரங்கனாரின் தமிழ்ச் சொல்லாட்சியும்,
இலக்கிய ஈடுபாடும், பக்தி ரசமும், சுருங்கச் சொல்லி பெரிய விஷயத்தை எளிதில் புரியவைத்தலிலும்,  நினைவாற்றலிலும் உங்கள் படைப்புகள் மெய்சிலிர்க்கவைக்கின்றன. கரையிலிருந்து ஒரு செம்பு கடல் நீரை மொண்டு தலையில் ஊற்றிக்கொண்டு நான் சமுத்திர ஸ்நானம் செய்தேன் என்று பேசும் உலகில், ஆழமான உங்கள் படைப்புகள் வலம்வர நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்தாம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

 

Chandra sekaran

unread,
Sep 20, 2009, 12:52:56 PM9/20/09
to mint...@googlegroups.com
நானும் நெகிழ்ந்து போனது....எந்த  இடத்தில்  என்றால்,   
 
நாங்கள்  கூறினோம்,   'ஐயா!     உங்கள்  குடும்பங்களில்    நன்கு   படித்து    சொன்ன  பேச்சைக்  கேட்டு,  ஒழுங்காக   கோவிலுக்குப்  போய்,  நல்ல  பிள்ளையாய்    பேரெடுக்கும்    இளஞர்   யுவதிகளை   வேண்டாம்.    துடுக்குத்  தனமாக  கேள்வி  கேட்டு,   அராத்து,    உருப்படாதது,    திமிரு   என்று   பேர்  வாங்கித்  திரியும்    இளைய   சமுதாயம்   இருந்தால்  மட்டும்  சொல்லுங்கள்,  எங்களுக்கு  அவர்கள்  தாம்   வேண்டும்.   அவர்களிடம்  தான்  எங்களுக்கு  வேலை.'      அவர்களோ    மற்றவர்களோ     அனுஷ்டானம்    என்று  எதையும்    செய்ய  வேண்டியதில்லை.     ஆனால்    தீராத     கேள்வி,  விசாரம்   அவர்களிடம்   இருக்க  வேண்டும்.  இல்லையென்றாலும்    ஊக்கம்  இருந்தால்  போதும்,  விசாரத்தை  நாங்கள்     கொளுத்திவிடமுடியும்.    இது  எப்படிப்  பலன்   அளித்தது    என்பதைப்  புரிந்துகொள்ள    ஓர்  உதாரணம்.   
 
 மேலும் ....
 
பேரன்  மாறவில்லை    நடை உடை  பாவனையில்,   பாட்டி   கண்டிஷன்  ஏதும்  போடவில்லை,  அப்படியே   தன்  பேரனை   ஏற்று  ரசிக்கிறாள்.   புற  அடையாளங்கள்   அங்கு    எந்த   மாற்றத்தையும்  ஏற்படுத்தவில்லை.   மாற்றம்   எங்கு  நிகழ்ந்தது?    பண்பாட்டின்  விளைநிலம்   எங்கோ   அங்கு  நிகழ்ந்த     மாற்றம்   தலைமுறைகளை    இணைத்து    பண்பாட்டு  மின்சாரம்    பாய்ந்ததை    பலமுறை    கண்டிருக்கிறேன்.  (தொடரும்) 
 
பலமுறை வாசித்து, வாசித்து தூக்கம் இழந்துவிட்டேன். மாறிப் போகும் இளைய சமுதாயமும், மறுமுனையில் கொஞ்சமாய் மேற்கண்ட பாட்டி-பேரன் லிங் போல் போடும் இளையர்கள் பலருமாய் வாழ்வில் குறுக்கிடுகையில், இப்படியான கூட்டம் ஏன் கூடமாட்டேன் என்கிறது? என்ற கேள்வி மனைதில் எழும். பதில்தான் கிடைக்கமாட்டேன் என்கிறது. :(
சந்திரா



--

devoo

unread,
Sep 20, 2009, 2:40:26 PM9/20/09
to மின்தமிழ்
*அடியேன் ராமானுஜ தாசன்*

விழுப்புரம் அருகில் மாளிகைமேடு என்னும் ஒரு சிற்றூர்.
அங்கு பரனூர்ப் பெரியவரின் பாகவத ஸப்தாஹம்; அவர்தம்
திரு முன்னிலையில் சாதுக்கள் கூட்டம் உரையில் ஆழ்ந்திருந்தது.
பின்னால் ஒரு விடலைக் கும்பல்; கல்லூரி மாணவர்கள் போன்ற தோற்றம்.ஒரே
சத்தம்,ஊளை. பெரியவர் ஹரி நாமத்துக்கு மாறினார்; கொஞ்ச நேரத்தில் உரையின்
தலைப்பே உடையவருக்கு மாறியது.உடையவரின் காரேய் கருணை அவர் வாய்மொழி வழியே
அந்த இளைஞர்கள் மேல் விழுந்தது.

பெரியவரின் குரல் பாவத்தில் மேலோங்கியது; சற்று நேரத்தில் கும்பல் தலை
கவிழ்ந்தது. உரை நிறைவெய்தும்வரை குனிந்த தலை நிமிரவே இல்லை.மறுநாள் அதே
கும்பல் திருமண்
அணிந்துகொண்ட திருக்கூட்டமானது.அவர்கள் பரம்பரையாக ராமாநுஜ தாஸர்களான
பாகவத குடும்பத்தினர் என்று தம்மைப் பரனூர்ப் பெரியவரிடம் அறிமுகம்
செய்துகொண்டனர்.

பரனூர்ப் பெரியவர் ஒருமுறை தனிமையில் தெரிவித்த நிகழ்ச்சி இது; ஊர்
ஊராகச் சென்று ஸ்ரீ ராமாநுஜ வைபவம் சொல்வார் இல்லையே என்றுதான் அவர்
வருந்தினாரேயன்றித் தம் பெருமையாக இதைச் சொல்லிக் கொள்ளவில்லை.


தேவ்

meena muthu

unread,
Sep 20, 2009, 11:55:25 PM9/20/09
to mint...@googlegroups.com
  ஒன்னைக்  கரையேத்துவான்டா     என்  பேரன்!'      எங்கள்     கண்கள்    குளமாகி    விக்கித்துப்  போய்  நின்றோம்.     எந்தத்  தலைமுறை     எந்தத்  தலைமுறையோடு     சஹ்ருதயம்    கொண்டாடுகிறது?   

மனதில் எழும் உணச்சிகளை சொல்லத்தெரியவில்லை... ஏதோ ஒன்று தொண்டையை அடைக்கிறது...


2009/9/20 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அடியேன்  ராமானுஜ  தாசன்
------------------------------------------------- 
 
அது   ஒரு   கூட்டமாய்க்  கிளர்ந்து    குடைந்து  தேடிய  பருவம்    என்று  சொன்னேனா,    இந்தக்  கூட்ட  யத்தனம்   எல்லாவற்றிற்கும்     தூண்டுகோல்  ராயர்கள்   சிலபேர்   அமைவது   நியதி.   இருந்தாற்போல்   இருக்கும்.     திடீரென்று    ஒருவர்    சந்நதம்  வந்ததுபோல்    ஓர்  உற்சாகத்தை    வெளியிடுவார்.     ஒரு  பெரும்  பாட்டையே  திறந்து    நெடுக  போய்க்கொண்டே   இருக்கும்.    இப்படி   அமைந்த   சந்தர்ப்பம்  ஒன்றுதான்     யாங்கள்    கிளர்ந்த   கூட்டத்  தேட்டம்.    முன்  பந்தம்  கொளுத்தி     பாட்டையில்லா   காடுகளில்    பதிவுத்தடம்  போட்டு   வழி  காட்ட  வேண்டியது  என்பணி.     யான்  காட்டும்  அவற்றை    காணும்   முனைப்பும்,  உள்ளத்தின்  ஒத்திசைவும்    கொண்ட    நண்பர்   குழாம்   கும்மாளம்   அடிக்க  வேண்டியது   அவர்தம்  பணி.   இப்படியொரு   இயற்கையான  பணிப்பங்கீட்டு  முறை  எங்களது.
 
நண்பர்   திரு   மகேந்திரனும்,   திரு  ரமேஷும்    என்   தம்பி  திரு  ரகுராமன்    மூலம்   எனக்கு    அறிமுகம்  ஆகியது   1987,  1988   என்று  நினைக்கிறேன்.      மேலைநாட்டு   தத்துவ  விசாரம்    மும்முரமாக    போய்க்கொண்டிருந்த    நேரம்.     மாலை    6  மணிக்கு   ஆரம்பித்த    விவாதம்  விசாரம்   பல  டீ  கடைகளுக்குப்  போய்வரும்,  காலாற  நடக்கும்,     முக்கில்  நின்று    முக்கியமான  கட்டத்தை  முடிக்கும்.   அப்படி   12, 1   என்று  நள்ளிரவுப்  பொழுது   நின்று  வேடிக்கை  பார்த்துச்  செல்ல     ஸ்கூட்டர்கள்   ஒவ்வொன்றாய்க்  கிளம்பும்.   கீழ்  வீட்டுக்காரர்   வீட்டின்  சொந்தக்காரர்.    நாங்கள்  இருந்தவரை    கவலையே   இல்லாமல்    உறங்கினார்.    ஒரு  சின்ன  சத்தம்  என்றாலும்    அதான்  இவ்வளவு   பூத   பிசாசங்கள்    இருக்கின்றனவே!       
 
அப்பொழுது    அரிஸ்டாட்டிலின்     தத்துவ  மரபைப்  பற்றி    இயக்கவியலா   மூலமுதலியக்கி   என்ற  கொள்கையை    விவரித்துக்  கொண்டிருந்தேன்,  நண்பர்    மகேந்திரன்    திடீரென்று    இவ்வாறு     ஆணித்தரமாக    இயற்கையின்    சத்யத்துவத்தின்   மீது  எழுப்பப்பட்ட    தத்துவ  முறைகள்   நம்மிடம்  உண்டா?    என்ற  கேள்வியைப்  போட்டார்.    ஏனில்லை    என்று  ஆரம்பித்து      யதார்த்த  க்யாதியின்   அடிப்படையில்    எழுந்த   ஸ்ரீராமானுஜரின்    விசிஷ்டாத்வைதம்    பற்றிச்  சொல்ல  ஆரம்பித்தேன்.     அவரது  வாழ்க்கை,   ஆழ்வார்களின்    வாழ்வு  கருத்து,   அதற்கு  முந்தைய  நிலை,    அதற்குப்  பிந்திய  நிலை    என்று    எங்கள்    கூடியிருந்து  குளிர்தல்  (உண்மையிலேயே   குளிர்தல்    ஏனெனில்   அதுகால்   மார்கழி   நெருக்கம்)     போய்க்கொண்டிருந்தது.     'சரி   மோகன்.  இந்தக்  கருத்துக்களை   நாம்    ஸ்ரீரங்கத்திலேயே   அமர்ந்து  நீங்கள்  சொல்ல    நாங்கள்   கேட்க   ஏற்பாடு  பண்ணினால்  என்ன? '  என்று  கேட்டுவிட்டார்.   அங்கு  ஆரம்பித்தது   பாறையில்    ஒரு  சின்ன  சில்லின்    பெயர்ப்பு.    கசிந்தது,   பெருகியது,    வழிந்தது,    ஓடியது,  இப்பொழுது     ஆற்றின்  இடைகுறையைச்  சூழ்ந்து    நதி    அகண்ட  ஓட்டமாய்     நிச்சலனம் போன்று    கீழோட்டம்  மேலோட்டம்  என்று     ஜீவநதியாகி   சப்தித்த  வண்ணம்    சதா  ப்ரஸன்னம்.     
 
 
ஏன்  சொல்லுகிறேன்  என்றால்     இந்த  மாதிரி    மனிதர்கள்    சமுதாயத்தில்    முக்கிய    திருப்பணியாளர்கள்.  என்னைப்போல    சொல்ல  ஆளிருந்தும்,    கேட்க    ஆள்  வந்தும்,  இரண்டு  வித    ஆள்  சூழல்களை    லிங்க்    போடுவது   அது   தனி   உற்சாகம்   கைவந்த    மனிதர்களுக்குத்தான்   ஸ்வாபாவிகம்.   பிறகு   மனிதன்      எங்கிருந்தோ  போனார்     சொல்லி  வைத்தாற்போல்     சுமார்   ஏழெட்டு    நண்பர்களைக்    கொண்டுவந்தார்,   எல்லோரும்    அதே  உற்சாகம்,  கருத்துகளில்    அவ்வளவு  ஆர்வம்.    பணக்காரர்கள்  அன்று.   மத்தியதர  வகுப்பில்  தொடக்க  நிலைகள்   என்று  சொல்லலாம்.   ஏன்  இதைக்  குறிப்பிடுகிறேன்  என்றால்    பெரும்   பண்பாட்டு   மீட்பு    இயக்கமாக   வந்திருக்கக்கூடிய    எங்கள்    ஒருங்கிணைந்த   ஊக்கத்தை    நாங்களே     அடக்கி    ஒரு  மாடல்    ஸ்டடி  என்ற  அளவோடு  நிறுத்திக்  கொள்ள  வேண்டியிருந்தது.     யார்    பெரும்பணம்  போடுவது?       அப்பொழுது   வருத்தப்பட்டிருக்கிறோம்,   அடடா   நாம்    வெளிநாட்டில்    பிறவாமல்  போனோமே  என்று.    இங்கோ   ஊரை   உண்ணும்  கேணிகள்தான்  அதிகமே   ஒழிய   ஊருண்கேணிகள்   இல்லை.   
 
இல்லையெனில்    ஸ்ரீரங்கம்,    திருமலை,    காஞ்சி,    மைசூர்,   மேல்கோட்டை    என்று  நாங்கள்  ஆரம்பித்த   வேகத்தைப்  பார்த்தால்     பண்பாட்டை  மீட்டே எடுத்து  விடுவோம்   என்ற    திட  நம்பிக்கை  இருந்தது.    ஸ்ரீரங்கம்  போனபோது    வேதவியாஸ  பட்டர்    வயதானவர்    இரண்டு  மூன்று   ஆட்டோக்களில்   வந்து  இறங்குகின்றனர்    என்பதைப்  பார்த்து    என்னவோ  எதோ  என்று  வந்தார்.   பிறகு    வந்த  நோக்கம்,   பேச்சு   இவற்றில்   தம்மை  இழந்து     இரைந்து     கூவினார்,  'நீங்கள்தான்   இனி  எங்கள்  தலைவர்.     சொல்லுங்கள்   என்ன  செய்யவேண்டும்?    அதனை  ஏற்க  நாங்கள்  தயார்'    எத்தனை  வயது     எந்த  வயதிடம்  பேசுகிறது?   அவர்   நெகிழ்ந்து  போனது    எந்த  இடத்தில்  என்றால்,    நாங்கள்  கூறினோம்,   'ஐயா!     உங்கள்  குடும்பங்களில்    நன்கு   படித்து    சொன்ன  பேச்சைக்  கேட்டு,  ஒழுங்காக   கோவிலுக்குப்  போய்,  நல்ல  பிள்ளையாய்    பேரெடுக்கும்    இளஞர்   யுவதிகளை   வேண்டாம்.    துடுக்குத்  தனமாக  கேள்வி  கேட்டு,   அராத்து,    உருப்படாதது,    திமிரு   என்று   பேர்  வாங்கித்  திரியும்    இளைய   சமுதாயம்   இருந்தால்  மட்டும்  சொல்லுங்கள்,  எங்களுக்கு  அவர்கள்  தாம்   வேண்டும்.   அவர்களிடம்  தான்  எங்களுக்கு  வேலை.'      அவர்களோ    மற்றவர்களோ     அனுஷ்டானம்    என்று  எதையும்    செய்ய  வேண்டியதில்லை.     ஆனால்    தீராத     கேள்வி,  விசாரம்   அவர்களிடம்   இருக்க  வேண்டும்.  இல்லையென்றாலும்    ஊக்கம்  இருந்தால்  போதும்,  விசாரத்தை  நாங்கள்     கொளுத்திவிடமுடியும்.    இது  எப்படிப்  பலன்   அளித்தது    என்பதைப்  புரிந்துகொள்ள    ஓர்  உதாரணம்.   
 
 
நண்பர்    ஒருவர்      வீட்டில்    அவருடைய     தந்தையைப்  பெற்ற    பாட்டி   பாகவத  அம்மாளாம்.    அதாவது    பஞ்ச  சம்ஸ்காரம்    வாங்கிக்கொண்டு    வீட்டு  மனிதர்கள்    சமைத்துக்கூட  உண்ணாமல்   தானே    முடியுமட்டும்    சமைத்து,  படைத்து    உன்ணும்   ஒருவரை    அந்தணர்  அல்லாத     சமுதாயத்தினர்  வீட்டில்   பாகவதம்மா,  பாகவதர்   என்று  அழைப்பது  வழக்கம்.  சென்னையிலேயே   அப்படி    பல  பாகவத    வாழ்நெறியினர்   இருந்த    அடையாளம்தான்     இன்றும்    100 150   வருஷ   பழமை   வாய்ந்ததுவாய்    இருக்கும்   பல  பஜனைக்  கூடங்கள்.   சரி    கதைக்கு  வருவோம்.    நண்பரின்   பாட்டி    இவரோடு   முதலில்  எல்லாம்   பேசுவதேயில்லையாம்.    எல்லாம்   கெட்டுப்போய்ட்டதுங்க   என்ற  அலுப்பு   சர்வ  சாதாரணம்.     எங்களுடைய     கூட்ட   அரட்டையில்    நண்பர்    பல  சிகரெட்டுகள்,  டீ   எல்லாம்    முடிந்தும்    பேசாமலேயே     ஓர  வானைப்  பார்த்துக்கொண்டிருந்தார்.    என்ன     மதி?     பேச்சே  காணும்.  என்றதும்.     ஒரு  கெட்ட   வசவு  பின்னர்,    'எல்லாத்தையும்    நாசம்  பண்ணி   வச்சிருக்காங்களே   சார்!    எங்க   பாட்டி    பழகவே   பழகாது,    நான்  இங்க  தெரிஞ்சுகிட்டத     மெள்ள  போய்    அவங்ககிட்ட   உட்கார்ந்து   சொல்லி    நம்ம    பாரம்பரியம்  என்ன     தாத்தா   காலத்துல   நமது   பண்பாடு    எப்படி   நம்  குடும்பத்துலேயே  பேணப்பட்டது?   எல்லாத்தையும்  சொல்ல  ஆரம்பிச்சு   விசாரிச்சேன்.    கிழவி  அழுதுடுச்சு.    அப்ப  எங்க  அப்பா    அந்தப்  பக்கமா   க்ராஸ்  பண்ணாரு.    அவருக்கு  வைச்சுது  பாருங்க  ஒரு  திட்டு.    'மூதேவி   கெட்டுக்  குட்டிச்  சுவரா  போனீயேடா!      பார்ரா!    என்  பேரன்     வட்டியும்  முதலுமா  எங்கிட்ட   கிடைச்சிட்டான்டா!    அந்த   உடையவர்  கடாட்சம்   எங்கடா  போகும்?  போயி   அவனா     யாருகிட்டயோ   தெரிஞ்சுக்கிட்டு   வந்திருக்கான்   பாரு.  உங்க  அப்பன்  பேரை  கெடுத்தியேடா     பாவி    ஒன்னைக்  கரையேத்துவான்டா     என்  பேரன்!'      எங்கள்     கண்கள்    குளமாகி    விக்கித்துப்  போய்  நின்றோம்.     எந்தத்  தலைமுறை     எந்தத்  தலைமுறையோடு     சஹ்ருதயம்    கொண்டாடுகிறது?    இந்தத்  தலைமுறைகளின்    தொடர்ச்சியைத்  துண்டித்தது  யார்?    வெள்ளைக்காரன்    என்பதை  விட  அபத்தமான  பதில்  வேறு  இல்லை.    நாம்தான்    நமக்கு   ஒரு  முன் தலைமுறைதான்     அறியாமையை   அறிவுபோல்    சாயம்  பூசி  வைத்துக்கொண்டு   துண்டித்தது.   கண்டதே  காட்சி  கொண்டதே  கோலம்   என்று  புலனில்  மக்கிபோகும்  வாழ்க்கையை    புரட்சி  மனப்பான்மை  போல்   சித்திரித்து   ஏன்று  கொண்ட   மடமைகளாய்ப்    பஞ்ச  பூதங்களும்   நகும்படி    அலைய வைத்தது     நம்  அறைகுறை    தலைமுறை  ஒன்றுதான்.    அதில்  ஒன்றுதான்   அந்தப்  பக்கமாக   க்ராஸ்    ஆகி   வாங்கிக்  கட்டிக்  கொண்டிருக்கிறது.   இந்தக்  கார்பன்  ஆர்க்  என்பார்களே    அது  தோற்றது    போங்கள்.    பாட்டியும்  பேரனுமாய்    எம்பெருமானாரைப்  பற்றிப்  பேசிக்  கொண்டிருப்பது,   தந்தை  கட்சி  கலரில்   மேல்துண்டு    போட்டு     கூட்டத்திற்கு   நைஸாக    நழுவுவது.   பிள்ளைக்கு  முன்னால்   தகப்பன்   தப்பு  செய்தவன்  போல்    தயங்கியபடியே  உள்ளே  நுழைவது.    வீட்டின்   பண்பாடு   முதல்  தலைமுறையிடமிருந்து   மூன்றாம்   தலைமுறையிடம்  அன்றோ   பாய்கிறது.   தள்ளி  நிற்கும்    நடுத்  தலைமுறை   எரியா   பல்புதானே!   யார்  தொட்டாலும்    சாப்பிடாத    கிழவி    பேரன்   கொடுத்தா விசேஷமாம்!     எதற்கும்    ஓர்    உடைபடு  ரேகை   உண்டல்லவா?     'அடியேன்  ராமானுஜ  தாசன்'   என்று    சொல்ல    இந்த  ஜன்மத்துல    இந்த  மூதேவிக்குக்  கொடுத்துவச்சுருக்கா?  போவுது  பாரு   பங்களாப்   பொணம்  மாதிரி.     அவ்வளவுதான்    ஒருகணம்  நின்ற    தகப்பன்    முகத்தில்    கோபம்   வந்து  மறைந்து    சோகம்  அப்பி,   போட்ட   மேக்கப்   எல்லாம்  வேஸ்ட்   என்னும்படி,    கண்ணில்    கடைக்கோடி    ஈரம்  பூத்துக்  கவிழ்ந்த  தலை   நிமிராமல்    வெளியில்  சென்றதைப்   பார்த்த    நண்பர்   தம்   தந்தைக்கு   ஹிதம்    எண்ணுபவராய்ப்  பல   சிகரெட்டுகள்,  டீக்கள்   என்று    முடிந்து      மௌனம்    கனத்து    நடந்ததைக்   கூறினார். 

Venkatachalam Subramanian

unread,
Sep 21, 2009, 5:39:25 AM9/21/09
to mint...@googlegroups.com
ஓம்.
சீடனைத் தேடி சத்குருவே இறங்கி ஓடோடி வருகிறார். சுவாமி விவேகாநந்தரும் உண்மையறியத்தானே தேடுதல் வேட்டை நடத்தினார். நல்ல விதைகள் தக்க தருணத்தில் நல்ல பூமியில் முளைத்து துளிர்விடுகின்றன.
கஸ்தூரி ரங்கா! காவேரி ரங்கா, ஸ்ரீ ரங்க ரங்கா! ரங்கா ஸ்ரீ ரங்க ரங்கா ரங்கா!

கருட கமன ரங்கா, சேஷ சயன ரங்கா, ஸ்ரீ ரங்க ரங்கா ரங்கா.ஸ்ரீ ரங்க ரங்கா.!ஓம்.சுப்பிரமணியன் ஓம்.

2009/9/21 meena muthu <ranga...@gmail.com>

N. Kannan

unread,
Sep 21, 2009, 8:59:51 AM9/21/09
to mint...@googlegroups.com
2009/9/21 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
>எதிர்த்து   மறுத்துப்
> பேசினாலும்    போதும்   அந்தப்    பசங்கதான்  வேணும்.    நிச்சயமா
> இந்தமாதிரி   ஆழ்வார்  வேலை  பண்ணலைன்னா    அந்தக்   குழந்தைகள்    எங்க
> போகும்?    உங்களோட  முறையும்    எனக்கு   நன்னா   பிடிச்சிருக்கு.
> பார்க்கறதுக்கு      சாதாரண   ஜனங்களைவிட    எந்த  வித்யாசமும்   தெரியக்
> கூடாது.   மக்களோட  மக்களா   கலக்கறதுல    எதுவும்  தடையாகி  விடக்  கூடாது.
> என்ன   பாவம்  இது?    இதைப்   புரிஞ்சுக்கறது    கஷ்டம்.    ஆனா    நல்ல
> பலன்   கொடுக்கற   வழி.    மிக  நல்ல    கைங்கர்யம்   பண்ணிண்ட்ருக்கீங்க
> அத்தனை  பேரும்'   என்று   வாழ்த்தி    ஆசி  கூறினார்.

மரபு பற்றிய விழிப்புணர்வு வர வேண்டுமெனில் காந்தி கொண்ட வழிதான் சரி.
நாமே கிளம்பி நம் மரபைத் தேட வேண்டும் (discovery of India). உள்ளத்தில்
ஆர்வமிருந்தால் எல்லா சக்திகளும் கூடும். பல நேரங்களில் மரபு, மூலிகை
போல் தன்னை சட்டென இனம் காட்டாமல் மூடி மறைத்துக்கொள்ளும். ஆர்வமுடன்
போனால் தானே உவந்து காட்டும்.

முன்பு இருந்ததை விட இப்போது இது இன்னும் சுலபமாக இருக்க வேண்டும்.
முன்பிருந்த சாதீயக்கட்டுப்பாடு இப்போது இல்லை. எல்லோரும் ஒரே
கோயிலுக்குத்தான் போகிறார்கள். எல்லோரும் ஒரே அலுவலகத்தில்தான் வேலை
பார்க்கின்றனர். எல்லோரும் ஒரே ஓட்டலில்தான் சாப்பிடுகின்றனர். மொழி
என்பதும் பிரச்சனை தரக்கூடாது. பண்டிதர்கள் எப்போதும் ஏதாவது `தடா, புடா`
என்று பரிபாஷை போடுவார்கள். அதெற்கெல்லாம் மாற்று நம் ஆழ்வார்களும்,
ஆச்சார்யர்களுமே கண்டு வைத்துள்ளனர். எனவே அந்த ஃபார்முலா போதும்.

அறிவொளி இயக்கம் போல், `வேர்கள்` என்ற ஒரு இயக்கம் உருவாக வேண்டும். எந்த
பந்தாவுமில்லாமல், ஜாலியாக ஊர், ஊராகப் போய் வந்தாலே போதும். மண் நம்
வசமாகும். வேர்கள் பிடிபடும், வலுப்படும்.

ஓம் சுப்பிரமணியன் ஆத்மார்த்தமாக அந்தப் பரந்தாமனை அழைத்துவிட்டார். அவன்
மேல் பாரத்தைப் போட்டு, அப்பாவைக் காணப்போகும் பிள்ளையின் பாவத்தில்
போனால் ‘வானம் வசப்படும்’. ஓம்!

க.>

Chandra sekaran

unread,
Sep 21, 2009, 2:40:27 PM9/21/09
to mint...@googlegroups.com
அப்படித்தான் எங்கள் ரீச் மாதாந்திர டூர் நடக்கும். சில விஷயங்களை எதிரே பேசாமல், எதேனும் பெரியவரை வைத்து சொல்லச் சொல்லி பஸ் போகும் வரை பேசச் சொல்லுவோம். பார்க்குமிடம் வந்ததும், பார்க்கப் போகும் ஆர்வத்தில் எல்லாரும் பேச்சை மறந்து விடுவர். அசை போட்ட சிலர், மீண்டும் திரும்ப வருகையில், கேள்விகள் கேட்டு, தம்மைத் தாமே தெளிவு படுத்திக் கொள்வர்.

எம்பார் விஜயராகவாச்சாரியார் அவர்கள் கதை அடியேன் பள்ளிப் ப்ராயத்தில் கேட்டது. மக்களை வசியப்படுத்தும் விதமாக, பெரிய விஷயங்களை சுலபமான உதாரணங்களால் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே!
பால் கொண்டு வைத்து விட்டு அதை அவர் சாப்பிடவேயில்லை. கோவில் செயலர், கதை சொல்லவிடாமல், பால், பால் என்று சாடை காட்டிக்கொண்டிருந்தார். இவர் பொறுக்காமல், சரியாக கதையில் வருவது போல், “பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறார்,” என்று பால் டம்ப்ளரை சுட்டிக் காட்டினார்! எல்லாரும் சிரித்து விட்டனர். பாலில் எறும்பு விழுந்துவிட்டதை இப்படி சொன்னால்?

அதேபோல், ஆண்டாள் சரிதம் சொல்கையில், அப்போது ப்ரபலமான எம்.ஜி.ஆர் திரைப்பாடலான, “நீல நயனங்களில் ஒரு நீண்டக் கனவு வந்ததோ..? என்று பாடி, ஒரு சிறிய இடைவெளிவிட்டு, “ஆம், ஆனால் இந்த கனவு மெய்ப்பட ஆண்டாள் என்ன செய்தாள் தெரியுமா? அப்படி செய்யும் எல்லாரும் அவனை அடைவது திண்ணம்.. என்று கூறினார்!

அரைகுறை வயசில் கேட்டாலும், மனதில் பதிந்ததால் பகிர்ந்து கொள்கிறேன்.
சந்திரா

karth...@gmail.com

unread,
Sep 21, 2009, 8:18:57 PM9/21/09
to மின்தமிழ்

>அரிஸ்டாட்டிலின் தத்துவ மரபைப் பற்றி இயக்கவியலா
மூலமுதலியக்கி என்ற கொள்கையை விவரித்துக் கொண்டிருந்தேன்<

அரங்கனாரே,

இதன் ஆங்கில வடிவம் கொடுங்கள். வலையில் தேடிப்பார்த்து இது என்ன
என்று முதலில் தெரிந்து கொள்கிறேன்.

ரெ.கா.

On Sep 20, 2:10 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> அடியேன்  ராமானுஜ  தாசன்
> -------------------------------------------------
>
>

> அப்பொழுது    அரிஸ்டாட்டிலின்     தத்துவ  மரபைப்  பற்றி    இயக்கவியலா
> மூலமுதலியக்கி   என்ற  கொள்கையை    விவரித்துக்  கொண்டிருந்தேன்,  நண்பர்


> மகேந்திரன்    திடீரென்று    இவ்வாறு     ஆணித்தரமாக    இயற்கையின்
> சத்யத்துவத்தின்   மீது  எழுப்பப்பட்ட    தத்துவ  முறைகள்   நம்மிடம்

> உண்டா?    என்ற  கேள்வியைப்  போட்டார்.    ஏனில்லை    என்று  ஆரம்பித்து

Tirumurti Vasudevan

unread,
Oct 4, 2009, 9:13:32 AM10/4/09
to mint...@googlegroups.com


2009/10/4 srirangammohanarangan v <ranga...@gmail.com>
யார்  அந்த    மோஹினி?
=====================  
 
   அப்பொழுது  எதுதான்   புரிந்தது?   மூடத்திலிருந்து    தத்தித்  தடவி   நிர்மூடத்துக்குப்    போகும்  உற்சாக   மனநிலை.   விருப்பத்துக்கு  எதிராக  உபதேசம்   பண்ணினால்    கொடுங்கோலன்.     கிழட்டுத்  தனத்தின்    வாசலை   நான்   தட்டிக்  கொண்டிருக்கும்   இந்தச்  சமயத்தில்    நினைத்தால்    இதயம்   பெனாத்துகிறது
:-))))))))))
   அதெல்லாம்     மனுஷன்  மகா  புத்திசாலி.    என்  ஒருவனாலேயே    அவர்   பிரம்ம  ஞானம்   அடைந்து   ஸம்ஸாரச்  சுழலிலிருந்து   விடுபட்டுப்   போயிருப்பார்.   இஹ  ஸம்ஸாரே    பஹு  துஸ்தாரே     என்பதற்கு   நான்தான்   அவருக்கு   நடமாடும்    வியாக்கியானம்.   
ஹாஹாஹ்ஹா!
       இந்த  மாதிரி   மகனீயர்களுக்கு    மகனாகப்   பிறப்பதைவிட    அவர்   பக்கத்து  வீட்டு,  எதிர்  வீட்டுப்   பையனாகப்   பிறப்பது    எவ்வளவோ  மேல்.   இந்த  உறவு     என்ற    சவ்வு   கண்ணை    மறைக்காது   இல்லையா ?  

ரொம்ப வாஸ்தவம்!
    'கழிந்ததை  நோக்கி   கழிவிரக்கம்,   கடந்ததின்    மிச்சம்   மனவழுத்தம்'.  
 
 
கடக்கவிருப்பதை நோக்கில்?
     "அது  சார்.    பிரகலாதனை    அவன்  அப்பாதானே    சொல்றார்.    அவர்  என்ன  சொன்னா  என்ன?     கீழ்ப்படிய  வேண்டியதுதானே    மகனுக்கு   கடமை.    அப்படிக்  கீழ்படிந்தா     பெருமாளே    குட்  பாய்   அப்படின்னு  சந்தோஷப்  படுவரோல்லியோ!     நீங்க  தானே  சார்   ஒரு  க்லாஸ்ல   சொன்னீங்க    'தாயிற்  சிறந்த   கோயிலும்   இல்லை.  தந்தை  சொல்  மிக்க  மந்திரம்  இல்லை'  அப்படீன்னு.    அப்ப    அவனும்    அப்பாக்கு   கீழ்ப்  படிய  வேண்டியதுதானே?"   

அதானே! நல்ல கேள்வி! அப்புறமா விடை கண்டு பிடிச்சாரா இல்லையா பாவம்?

ஜம்ன்னு எழுதரீங்க.  இன்னும் இந்த மோகினி பத்தி .....!

திவாஜி


--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Tthamizth Tthenee

unread,
Oct 4, 2009, 9:25:53 AM10/4/09
to mint...@googlegroups.com
ஒ  அந்த வயசிலேயே அப்பிடியா
 
பெரியவாளை  எதுத்து கேள்வி கேக்கலாமோ
 
பெரியவா செஞ்சா பெருமாளே செஞ்சா மாதிரின்னு தெரியாதோ
 
ப்ரஹலாதனும் நாமும் ஒண்ணா
 
இப்பிடியெல்லாம் சொல்லத்தெரியாத வாத்யார்கிட்ட எதுத்துக் கேள்வி கேக்கலாமோ..
 
வாத்யார்களும் பதில் சொல்லக் கத்துக்கணும்
ரொம்ப நன்னாருக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

meena muthu

unread,
Oct 4, 2009, 9:33:36 AM10/4/09
to mint...@googlegroups.com
ச்ச்சே... என்ன சொல்றது!!
(இப்பல்லாம்) ச்சான்ஸே ல்லை ங்கறாங்களே அந்த மாதிரி :))))

2009/10/4 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

N. Kannan

unread,
Oct 4, 2009, 10:10:26 AM10/4/09
to mint...@googlegroups.com
மீனா:

தாயுமானவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
இவர் தந்தையுமானவராக அல்லவோ மாறிக்கொண்டு வருகிறார்.
எதுத்த வீட்டில் பிறந்திருக்கலாம் என்று சொல்லும் போது பாவமாய்
இருக்கிறது. ஆனால் யார் கண்டது. அப்படி இருந்தால் இந்த ரங்கன்
திருவரங்கத்து மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கலாம். இந்த
Butterfly Effect இவருக்குத்தெரியாது போல ;-)

க.>

2009/10/4 meena muthu <ranga...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Oct 4, 2009, 10:25:18 AM10/4/09
to mint...@googlegroups.com
எங்க அம்மாவோட அத்தான் கொடுத்து வைத்தவர்
 
ராகவன்னு பேரு, ரங்கனோட மடைப்பளியில்தான் வேலை செய்துகொண்டிருந்தார்
கை நிறைய  நெய்மணக்க ஒரு பொங்கல் அள்ளிக் குடுப்பார் பாருங்கோ
 
அந்தப் பொங்கலின்  மணமும்  ரங்கனின் தரிசனமும்  என்னிக்கும் அலுக்காது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
On 10/4/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
>>ஆனால் யார் கண்டது. அப்படி இருந்தால் இந்த ரங்கன்
திருவரங்கத்து மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கலாம்.<<
 
அடப்பாவி!    இந்தக்  குசும்பெல்லாம்    உமக்குத்தான்யா   வரும்.    மீனாக்கா   எவ்வளவு    அழகா   உணர்ச்சிகளைப்  புரிஞ்சுண்டு    சொல்றாங்க.    ஆசுவாசமா... 
 
ஆனால்   நீர்   சொல்றா  மாதிரி   ஆனாக்கூட    பரவாயில்லைந்னு  தோன்றது.     ரங்கன்  கிட்ட   மடப்பள்ளி  உத்யோகம்நா   லேசு  இல்லையா.    அதுக்கே    அந்தக்  காலத்துல  நாலாயிரம்  தெரிஞ்சிருந்தாத்தான்,   இன்னொருத்தரோட   உரிமை    கைமாறும்  போது    கஷ்டப்பட்டு  சொல்லி  வாங்கணும்.    வெளி  உலகத்துல    எவன்  எவன்கிட்டயோ    கைகட்டி   நிக்கறதுக்கு    ரங்கன்  கிட்ட    அடுப்படி  உத்யோகம்    ராஜரீகம்!!    

 
அன்புள்ள

தமிழ்த்தேனீ

V, Dhivakar

unread,
Oct 4, 2009, 10:34:47 AM10/4/09
to mint...@googlegroups.com
Hello Ranga RangarE!
 
Ungalukku unga oor rangan nna Enakku enga oor rangan
Ungalukku unga oor Madapalli nna Enakku enga oor madapalli Nadhamuni Puliyodharai
 
konjam enga ooraiyum parungaLEn..
 
D

 
On 10/4/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
>>ஆனால் யார் கண்டது. அப்படி இருந்தால் இந்த ரங்கன்
திருவரங்கத்து மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டு இருக்கலாம்.<<
 
அடப்பாவி!    இந்தக்  குசும்பெல்லாம்    உமக்குத்தான்யா   வரும்.    மீனாக்கா   எவ்வளவு    அழகா   உணர்ச்சிகளைப்  புரிஞ்சுண்டு    சொல்றாங்க.    ஆசுவாசமா... 
 
ஆனால்   நீர்   சொல்றா  மாதிரி   ஆனாக்கூட    பரவாயில்லைந்னு  தோன்றது.     ரங்கன்  கிட்ட   மடப்பள்ளி  உத்யோகம்நா   லேசு  இல்லையா.    அதுக்கே    அந்தக்  காலத்துல  நாலாயிரம்  தெரிஞ்சிருந்தாத்தான்,   இன்னொருத்தரோட   உரிமை    கைமாறும்  போது    கஷ்டப்பட்டு  சொல்லி  வாங்கணும்.    வெளி  உலகத்துல    எவன்  எவன்கிட்டயோ    கைகட்டி   நிக்கறதுக்கு    ரங்கன்  கிட்ட    அடுப்படி  உத்யோகம்    ராஜரீகம்!!    

 
On 10/4/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

Tthamizth Tthenee

unread,
Oct 18, 2009, 12:59:14 PM10/18/09
to mint...@googlegroups.com
மோஹினி  சிவனை மயக்கிய கதை கேள்விப்பட்டிருக்கிறேன்
 
அரங்கனையுமா  ...?
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
18-10-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
யார்  அந்த   மோஹினி? 2
---------------------------------------------
 
கதாஸரித்  ஸாகரத்தை  நோண்டிக்கொண்டிருந்தேன்.   பயம் வந்துவிட்டது.   அதில் ஏதோ  ஒரு  பூதம்    கதையைப்  பாதியில் நிறுத்தியதால்    பட்ட கஷ்டங்களைப் பற்றிப்  படித்தவுடன்,    ‘அட  தேவுடா!  நாம  வேறு   இந்த  ’யார்  அந்த மோஹினியை’     முடிக்கவே இல்லையே?    அதற்குள்ள  ஏதாவது    ஒண்ணு  கிடக்க  ஒண்ணு  ஆகித்தொலைச்சா    நமக்கும்  இந்த  பூதத்தின்  கதிதானேன்னு    பயந்து  போய்   சமத்தா    கதைக்கு  வந்து   சேர்ந்தேன்.    போதாதற்கு  தந்தைக்கு மிகுந்த  கஷ்டம்  கொடுத்த  புத்ர சிகாமணி என்று சொன்னேனா?    அது  வேறு  எனக்கு  உள்ளூற  உறுத்திக்கொண்டே   இருக்கிறது.     எப்படி இருந்த   மனுஷனை   எப்படி நினைக்க  வைத்துவிட்டேன்?    நண்பர் ஒருவரிடம்  கூறுகிறார்:    ‘பையன்    யாராவது   பெண்ணை  இழுத்துண்டு ஓடினான்.   அங்க  வம்பு இங்க தும்புன்னு இருந்தாலாவது    நிம்மதியா  இருப்பேன் சார்.  ஏன்னா திருந்தும்!      இதெல்லாம்  பிஞ்சுல பழுத்த வேலை.     சுத்திவர  இருக்கறவாளும்   ஆஹா  ஓஹோன்னு    பாராட்டி ,...   திருந்தாது.’    என்று  அழுதுகொண்டே    அவர் கூறிக்கொண்டிருந்தது  இப்பவும்    நினைவில் இடித்துக்கொண்டுதான்  இருக்கிறது.   அடடா   உங்களுக்கு  என்ன  விஷய்ம்னே   சொல்லலை இல்லையா!     
 
 
வேறு  ஒண்ணுமில்லை.    சின்ன வயசிலிருந்தே    ஸ்ரீராமகிருஷ்ணர்,     விவேகாநந்தர்னா     அபரிமிதமான    ஈடுபாடு.   பள்ளிக்கூடம் படிக்கும்  போதே    ஸ்ரீரங்கத்துல  ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த   சங்கம்  வைத்து  நடத்தியிருக்கிறேன்.     அந்த   ஈடுபாட்டிற்கும்  விதை    தந்தையிட்டதுதான்.    எங்க  வீட்டு   பூஜையறையில்    ஒரே படம்தான்   இருக்கும்.   வேற    பெருமாள்,   ஸ்வாமி   படம்  ஏதும்  கிடையாது.    அது  ஸ்ரீராமகிருஷ்ணர் படம் ஒண்ணுதான்.      சொந்தக் காராள், நண்பர்கள்  என்று  எத்தனையோ பேர்  கேட்டுப்பார்த்திருக்கா  அவர்கிட்ட.    ‘ஏன் வேணு?     ஏதாவது  பெருமாள் படம், அம்பாள்    படம்னு   வைக்கக்கூடாதோ?    இப்படி மனுஷாள் படத்தை    வைப்பாளோ?’     அவருடைய   ஒரே  பதில்,  ‘ஐயா!    நான் கடவுளைப்  பார்த்தது  கிடையாது.    அவர்  கடவுளைப் பார்த்திருக்கிறார்.   எனவே  எனக்கு    அவர்தான்  கடவுள்’.    பின்ன எனக்கு  ஈடுபாடு  வரக் கேட்பானேன்? 
கல்லூரி படிப்பு   வந்ததும்    பைத்தியம் முற்றத் தொடங்கிவிட்டது.     ஒரு  நாளைக்கு   தோன்றியது.    நாமோ     ஸ்ரீராமகிருஷ்ண மடத்துலதான்    சேரப்போகிறோம்.    எதற்கு  தந்தையோட  பணத்தை  விரயம்  பண்ணுவானேன்?    இந்தப்  படிப்பை  முடித்து   இவருக்கு   உதவியாகவா    இருக்கப் போகிறோம்?  இல்லையே.   
 
ஒரு  தீபாவளி  முடிந்து    மறுநாள்   பாட்டியம்மை.   அதையெல்லாம் கூட கவனிக்காமல்   கல்லூரி  போவதுபோல்   கிளம்பி   திருவானைக்காவலில்    சென்னைப் பேருந்தில்  ஏறிவிட்டேன்.    ஒரு  நண்பனிடம்  கடிதம்  எழுதி    மாலை  வீட்டில்   கொடுத்துவிடும்படி  ஏற்பாடு.     எல்லாம் ஒரே  ட்ரமாடிக்காக.    சின்ன பிள்ளைத் தனம் என்று இப்பொழுது புரிந்து யாருக்கு லாபம்?  சரி  போனதுதான்    போனோம் என்று  அங்கேயே     ஒட்டிக்கொண்டு   இருக்க  வேண்டியதுதானே?  அதுவும் இல்லை.     அங்கு போய் இறங்கினதும்தான்      பாசம்,    உலக  வாழ்க்கையில் பிடிப்பு என்பது   உள்ளிருந்து  பீறிட்டுக்கொண்டு    கிளம்புகிறது.    அப்பா   என்ன  கவலைப்படுவார்?   அம்மா அப்படிப்  பார்த்து பார்த்து  வளர்த்தாளே   அவள் என்ன    நிலையாவாள்?   ஐயோ   என்ன காரியம்  செய்தோம்?  சரி  இப்படிப்   பாச  மெழுகாய்     உருகுகிற   உள்ளம்  அப்பொழுதே  சொல்லித்  தொலைத்திருந்தால்     கிளம்பாமலாவது  இருந்திருக்கலாம்.   இப்படி   அங்கு இருக்கும் போது   வைராக்கியம்  இங்கு வந்தவுடன்      பாசப் பிரவாகம்    என்று  இருதலைக்  கொள்ளி    எறும்பானேனே!    என்று  வெட்கம்,    தோல்வி மனப்பான்மை.   அந்த    அழுகை இரவிலும்     மடத்தின்  மாடியறை  ஒன்றில்    இருட்டில்    இந்த  மோஹினிதான்  நினைவுக்கு வந்தாள்.    உலக  வாழ்க்கையின்    எல்லா பக்கமுமே    இந்த  மோஹினியின் ஆட்சியில்தான்   இருக்கி்றது   என்பது   புரிந்தது.  
 
சிறுவயது  நினைவு.      தந்தை    ஏதோ நாடகம் போடுகிறார்.   நாடகத்தில்   ஒரு  மாமி  நடிக்கிறாள்.   கொள்ளை அழகு.    ஆடியன்ஸில்   ஒரே  பேச்சு.    சினிமாவிலிருந்து    ஏதோ   நடிகையை   வரவழைத்திருக்கிறார்கள்.    பாருங்க  என்னமா  உடம்பைக்  கட்டுக்கொப்பா    பேணியிருக்கிறாள்?   இண்டர்வலில்     தந்தையைப்  பார்க்க   அடம்  பண்ணியிருப்பேன் போல.  தந்தையின்  நண்பர் ஒருவர் வந்து    என்னை   க்ரீன் ரூம்  பக்கம்  அழைத்துப்  போகிறார்.      அப்பொழுது   பெரும்  மீசை,   கிரீடம் வைத்து   ஒரு  ராட்சசன்    பெரிதாக  சிரித்தபடி    யாரையோ    கழுத்தில்  கதையைப் போட்டு    வளைத்து    வெளியே துரத்திக்கொண்டிருக்கிறான்.    நானோ  கால் பின்னிழுக்க,  தயங்குவதைப்   பார்த்த    அழைத்துச் செல்லும்   நபர்,    ‘பயப்படாதப்பா!   நம்ம    எஸ்  வி  வேணுகோபால்  நாயுடுதான்.’    என்று  கூறுகிறார்.   ஐயோ அவரா    இப்படி?    நல்ல  மாமா   ஆயிற்றே! 
 
கடைசியில்  பார்த்தால்   அது  பெரிய  கதையாம்!     வீட்டுக்கு  வந்து   அப்பா   கதைகதையாகச்  சொன்ன பிற்பாடுதான்     புரிந்தது.     யாரோ     ஆபீஸ் அதிகாரி   கொஞ்சம்  பச்சை  போல்   இருக்கிறது.      பார்த்தார்.    இந்த  அழகு    அமெச்சூர் மேடையில் ஆடலாமோ?    எத்தனை  பணம்  செலவானால்  என்ன?    அழகும்    தெய்வமும்  இருக்க  வேண்டிய  இடத்தில் அன்றோ  இருக்கவேண்டும்    என்று நினைத்திருப்பார் போலும்.    மெதுவாக   க்ரீன்   ரூம் பக்கம்  எட்டிப்பார்க்கப் போயிருக்கிறார்.    அப்பொழுதுதான் தன்னுடைய வசனத்தைப்  பேசி    நடித்துப் பார்த்துக்கொண்டிருந்த   எஸ்விவி  நாயுடு    கண்ணில் பட்டுவிட்டார்.   இவர்     மெதுவாக  பூனை போல்    உள்ளே  நுழைய   முனைவதைப்  பார்த்த  நாயுடு    ஒரு  அதட்டு  போட்டிருக்கிறார்.      வெலவெலத்துப் போன  ஆபீசர்    ’அந்த மோஹினி  அந்த  மோஹினி    தட் மோஹினி ’  என்று  உளறிக்கொட்டி,     திடீரென்று    தன்   அதிகாரம் நினைவுக்கு  வரவே    ‘நான்  யார்  தெரியுமா?     டிஏஓ  எப்  ஏ அன்  சிஏஓ    என்று  ஏதேதோ   ஆல்பபட்ஸ்  எல்லாம்    சொல்லியிருக்கிறார்.     நாயுடு இயல்பிலேயே   கொஞ்சம் தடாலடி.    இவர் மாறி  மாறி   வழிவதும்    எகிறுவதையும்  பார்த்துக்  கடுப்பாகிப் போய்   கழுத்தில்  கதையைப்  போட்டபடி  இழுத்து   வெளியே  தள்ளியிருக்கிறார்.    அப்பொழுதுதான்  நாங்கள் அந்தப்பக்கம் போயிருக்கிறோம். 
 
எனது  தந்தையின்  நண்பர்கள்     இன்று  சந்தித்துக் கொண்டாலும்     இந்த  நிகழ்ச்சியைச்  சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை.     காரணம்  அந்த    அழகு   சுந்தரி   சொரூப  ராணி     மயக்கும் மோஹினி     வேறு யாரும் இல்லை.     மீனாட்சிசுந்தரம்    என்றும்     நண்பர்கள் மத்தியில்     தரம் என்றும்    அழைக்கப்படும்      தந்தையின்  நண்பர்தான்.    பெண்வேடத்தில் அவ்வளவு  கச்சிதம்.    நடை   பார்வை ,    தளுக்கு    ஒடிப்பு  என்று  எல்லாவிதத்திலும்.    சிரிக்கும்  போது   அழகுப்  பெண்களுக்கு என்று  ஒரு நாணம்  அப்பிக்கொள்ளும்.    அந்த  அப்பலையும்  எப்படித்தான்    மனுஷன்    அனுகாரம்  பண்ணினானோ?  இன்றும்    சென்னையில் இருக்கிறார்.    இப்பொழுது  அவரைப்  பார்த்தாலும்     அந்த  அபீஸர்   மயங்கியது நியாயமே    என்று  தோன்றும்.  இந்த  மோஹினிதான்        என்னுடைய    பாசம்  அழுகை     உடைந்த  முயற்சிகள்    என்று  குமுறிக்கொண்டிருந்த   அன்று  நினைவுக்கு வந்தது.   அந்த   ஆபீஸர்    அவரைவிட    என்னிலை    என்ன  வேறாகப் போய்விட்டது?     அவருக்காவது  உருவு தெரியும்  மோஹினி     கண்ணை  மறைத்தாள்.    உருவுக்குள் இருந்த சத்யம்     புலப்படாமல் போனாலும்.    எனக்கு   சத்யம்  என்ன என்று  தெரிந்தும் உருவில்லாத  ஏதேதோ   மோஹினி  மயக்கம்  தானே.    அந்த  மோஹினி  மட்டும்  கண்ணில்  பட்டுவிட்டால்     பின்பு    அனைத்திற்கும்  ஒரு  முடிவு வந்துவிடுமல்லவா?  பிரச்சனையும்  தீருமல்லவா?     அந்த  மோஹினி யார்   என்று  தெரிந்து  கொள்ளும் நிலைக்குக்  கிட்டத்தட்ட   வந்துவிடுகிறேன்.    அப்பொழுதுபார்த்து    ஏதோ   கதாயுதம் கழுத்தில் வளைத்து     வெளியே   தள்ளிவிடுகிறது.     யார் யாரோ சிரிக்கிறார்கள்.   முகமற்ற  சிரிப்பு    காதுக்கு  மட்டும்  புலனாகும்.     என்றாவது   ஒரு  நாள்   கண்டுபிடித்து  விடுவேன்    யார் அந்த  மோஹினி?                    

Venkatachalam Subramanian

unread,
Oct 18, 2009, 1:06:25 PM10/18/09
to mint...@googlegroups.com
ஓம்
வாழ்க மயங்கவைத்து வாழ்த்திய மோஹினி!கதையன்றோ தொடர்ந்தது?
ஓம்.வெ.சுப்பிரமணியன்

2009/10/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>
எனது  தந்தையின்  நண்பர்கள்     இன்று  சந்தித்துக் கொண்டாலும்     இந்த  நிகழ்ச்சியைச்  சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை.     காரணம்  அந்த    அழகு   சுந்தரி   சொரூப  ராணி     மயக்கும் மோஹினி     வேறு யாரும் இல்லை.     மீனாட்சிசுந்தரம்    என்றும்     நண்பர்கள் மத்தியில்     தரம் என்றும்    அழைக்கப்படும்      தந்தையின்  நண்பர்தான்.    பெண்வேடத்தில் அவ்வளவு  கச்சிதம்.    நடை   பார்வை ,    தளுக்கு    ஒடிப்பு  என்று  எல்லாவிதத்திலும்.    சிரிக்கும்  போது   அழகுப்  பெண்களுக்கு என்று  ஒரு நாணம்  அப்பிக்கொள்ளும்.    அந்த  அப்பலையும்  எப்படித்தான்    மனுஷன்    அனுகாரம்  பண்ணினானோ?  இன்றும்    சென்னையில் இருக்கிறார்.    இப்பொழுது  அவரைப்  பார்த்தாலும்     அந்த  அபீஸர்   மயங்கியது நியாயமே    என்று  தோன்றும்.  இந்த  மோஹினிதான்        என்னுடைய    பாசம்  அழுகை     உடைந்த  முயற்சிகள்    என்று  குமுறிக்கொண்டிருந்த   அன்று  நினைவுக்கு வந்தது.   அந்த   ஆபீஸர்    அவரைவிட    என்னிலை    என்ன  வேறாகப் போய்விட்டது?     அவருக்காவது  உருவு தெரியும்  மோஹினி     கண்ணை  மறைத்தாள்.    உருவுக்குள் இருந்த சத்யம்     புலப்படாமல் போனாலும்.    எனக்கு   சத்யம்  என்ன என்று  தெரிந்தும் உருவில்லாத  ஏதேதோ   மோஹினி  மயக்கம்  தானே.    அந்த  மோஹினி  மட்டும்  கண்ணில்  பட்டுவிட்டால்     பின்பு    அனைத்திற்கும்  ஒரு  முடிவு வந்துவிடுமல்லவா?  பிரச்சனையும்  தீருமல்லவா?     அந்த  மோஹினி யார்   என்று  தெரிந்து  கொள்ளும் நிலைக்குக்  கிட்டத்தட்ட   வந்துவிடுகிறேன்.    அப்பொழுதுபார்த்து    ஏதோ   கதாயுதம் கழுத்தில் வளைத்து     வெளியே   தள்ளிவிடுகிறது.     யார் யாரோ சிரிக்கிறார்கள்.   முகமற்ற  சிரிப்பு    காதுக்கு  மட்டும்  புலனாகும்.     என்றாவது   ஒரு  நாள்   கண்டுபிடித்து  விடுவேன்    யார் அந்த  மோஹினி?                    



Kamala Devi

unread,
Oct 18, 2009, 9:48:58 PM10/18/09
to mint...@googlegroups.com
மோஹன்,
முதன்முறையாக  மிகவும் , மிகவும் கவர்கிறது.
நிங்ஙளின் தமிழை  ரசிக்கிறேன்
கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



....
எனது  தந்தையின்  நண்பர்கள்     இன்று  சந்தித்துக் கொண்டாலும்     இந்த  நிகழ்ச்சியைச்  சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை.     காரணம்  அந்த    அழகு   சுந்தரி   சொரூப  ராணி     மயக்கும் மோஹினி     வேறு யாரும் இல்லை.     மீனாட்சிசுந்தரம்    என்றும்     நண்பர்கள் மத்தியில்     தரம் என்றும்    அழைக்கப்படும்      தந்தையின்  நண்பர்தான்.    பெண்வேடத்தில் அவ்வளவு  கச்சிதம்.    நடை   பார்வை ,    தளுக்கு    ஒடிப்பு  என்று  எல்லாவிதத்திலும்.    சிரிக்கும்  போது   அழகுப்  பெண்களுக்கு என்று  ஒரு நாணம்  அப்பிக்கொள்ளும்.    அந்த  அப்பலையும்  எப்படித்தான்    மனுஷன்    அனுகாரம்  பண்ணினானோ?  இன்றும்    சென்னையில் இருக்கிறார்.    இப்பொழுது  அவரைப்  பார்த்தாலும்     அந்த  அபீஸர்   மயங்கியது நியாயமே    என்று  தோன்றும்.  இந்த  மோஹினிதான்        என்னுடைய    பாசம்  அழுகை     உடைந்த  முயற்சிகள்    என்று  குமுறிக்கொண்டிருந்த   அன்று  நினைவுக்கு வந்தது.   அந்த   ஆபீஸர்    அவரைவிட    என்னிலை    என்ன  வேறாகப் போய்விட்டது?     அவருக்காவது  உருவு தெரியும்  மோஹினி     கண்ணை  மறைத்தாள்.    உருவுக்குள் இருந்த சத்யம்     புலப்படாமல் போனாலும்.    எனக்கு   சத்யம்  என்ன என்று  தெரிந்தும் உருவில்லாத  ஏதேதோ   மோஹினி  மயக்கம்  தானே.    அந்த  மோஹினி  மட்டும்  கண்ணில்  பட்டுவிட்டால்     பின்பு    அனைத்திற்கும்  ஒரு  முடிவு வந்துவிடுமல்லவா?  பிரச்சனையும்  தீருமல்லவா?     அந்த  மோஹினி யார்   என்று  தெரிந்து  கொள்ளும் நிலைக்குக்  கிட்டத்தட்ட   வந்துவிடுகிறேன்.    அப்பொழுதுபார்த்து    ஏதோ   கதாயுதம் கழுத்தில் வளைத்து     வெளியே   தள்ளிவிடுகிறது.     யார் யாரோ சிரிக்கிறார்கள்.   முகமற்ற  சிரிப்பு    காதுக்கு  மட்டும்  புலனாகும்.     என்றாவது   ஒரு  நாள்   கண்டுபிடித்து  விடுவேன்    யார் அந்த  மோஹினி?                    


meena muthu

unread,
Oct 19, 2009, 10:21:12 AM10/19/09
to mint...@googlegroups.com
>> ஹஹ

கமலம் இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா...?

நன்றி..ன்னா.. அப்படியா.. ன்னா.. வேற ?  என்னவாம்..! :))



2009/10/19 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ஹஹ

meena muthu

unread,
Oct 19, 2009, 10:43:31 AM10/19/09
to mint...@googlegroups.com
 >> ‘ஐயா!    நான் கடவுளைப்  பார்த்தது  கிடையாது.    அவர்  கடவுளைப் பார்த்திருக்கிறார்! <<

வணங்குவதற்குரிய அபூர்வமானவர்!.  புண்ணியம் செய்திருக்கிறீர்கள்!


>> என்றாவது   ஒரு  நாள்   கண்டுபிடித்து  விடுவேன்

என்று?

(காத்திருப்பதும் சுவாரஸ்யம்தான் :)

2009/10/19 srirangammohanarangan v <ranga...@gmail.com>
எனது  தந்தையின்  நண்பர்கள்     இன்று  சந்தித்துக் கொண்டாலும்     இந்த  நிகழ்ச்சியைச்  சொல்லிச் சிரிக்காமல் இருப்பதில்லை.     காரணம்  அந்த    அழகு   சுந்தரி   சொரூப  ராணி     மயக்கும் மோஹினி     வேறு யாரும் இல்லை.     மீனாட்சிசுந்தரம்    என்றும்     நண்பர்கள் மத்தியில்     தரம் என்றும்    அழைக்கப்படும்      தந்தையின்  நண்பர்தான்.    பெண்வேடத்தில் அவ்வளவு  கச்சிதம்.    நடை   பார்வை ,    தளுக்கு    ஒடிப்பு  என்று  எல்லாவிதத்திலும்.    சிரிக்கும்  போது   அழகுப்  பெண்களுக்கு என்று  ஒரு நாணம்  அப்பிக்கொள்ளும்.    அந்த  அப்பலையும்  எப்படித்தான்    மனுஷன்    அனுகாரம்  பண்ணினானோ?  இன்றும்    சென்னையில் இருக்கிறார்.    இப்பொழுது  அவரைப்  பார்த்தாலும்     அந்த  அபீஸர்   மயங்கியது நியாயமே    என்று  தோன்றும்.  இந்த  மோஹினிதான்        என்னுடைய    பாசம்  அழுகை     உடைந்த  முயற்சிகள்    என்று  குமுறிக்கொண்டிருந்த   அன்று  நினைவுக்கு வந்தது.   அந்த   ஆபீஸர்    அவரைவிட    என்னிலை    என்ன  வேறாகப் போய்விட்டது?     அவருக்காவது  உருவு தெரியும்  மோஹினி     கண்ணை  மறைத்தாள்.    உருவுக்குள் இருந்த சத்யம்     புலப்படாமல் போனாலும்.    எனக்கு   சத்யம்  என்ன என்று  தெரிந்தும் உருவில்லாத  ஏதேதோ   மோஹினி  மயக்கம்  தானே.    அந்த  மோஹினி  மட்டும்  கண்ணில்  பட்டுவிட்டால்     பின்பு    அனைத்திற்கும்  ஒரு  முடிவு வந்துவிடுமல்லவா?  பிரச்சனையும்  தீருமல்லவா?     அந்த  மோஹினி யார்   என்று  தெரிந்து  கொள்ளும் நிலைக்குக்  கிட்டத்தட்ட   வந்துவிடுகிறேன்.    அப்பொழுதுபார்த்து    ஏதோ   கதாயுதம் கழுத்தில் வளைத்து     வெளியே   தள்ளிவிடுகிறது.     யார் யாரோ சிரிக்கிறார்கள்.   முகமற்ற  சிரிப்பு    காதுக்கு  மட்டும்  புலனாகும்.     என்றாவது   ஒரு  நாள்   கண்டுபிடித்து  விடுவேன்    யார் அந்த  மோஹினி?                    



Chandra sekaran

unread,
Oct 19, 2009, 1:53:18 PM10/19/09
to mint...@googlegroups.com
அபாரம். ரெங்கன் மோஹினி ரூபம் எடுத்த கதை நடந்தது தானே? அதேபோல் இந்த ரெங்கனும் மோகினி யார் என்பதை தன்னுள்ளிருந்தே வெளிக்கொணரப் போகிறார், பராக்!

N. Kannan

unread,
Jul 18, 2010, 3:14:24 AM7/18/10
to mint...@googlegroups.com
2010/7/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஸ்ரீரங்கா
> ஊரும் சதமன்று;
> உற்றார் சதமல்ல;
> உறவுகள் பொய்
> என்பது உண்மையப்பா.
>

ஐயோ! என்ன இது!
உறவில்தானே இறைவனே உள்ளான்!
இப்படி இவரே சொல்லிட்டார்ன்னா இப்ப என்ன செய்யறது?
கேட்பார் யாரும் இல்லையா? ;-)

க.>

Dhivakar

unread,
Jul 18, 2010, 3:56:33 AM7/18/10
to mint...@googlegroups.com
உற்றார்கள் எனக்கில்லை யாரும் என்னும்;
உற்றார்கள் எனக்கிங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்;
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
(5-6-7)

ஒருவேளை இதைச் சொல்கிறாரோ ரங்கனார்..


2010/7/18 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

N. Kannan

unread,
Jul 18, 2010, 4:00:42 AM7/18/10
to mint...@googlegroups.com
அப்பா பொழைச்சேன் :-))

க.

2010/7/18 Dhivakar <venkdh...@gmail.com>:

ananda rasa thiruma

unread,
Jul 18, 2010, 8:21:09 PM7/18/10
to mint...@googlegroups.com
வாழ்வெனும் பெயரிலே சாவினை நாடிடும்
        வாய்த்தவோர் முரண்இ தற்குள்
ஆழ்ந்திடும் போதுதான் அர்த்தங்கள் புலப்படும்.
        அலைகடல் ஓய்வ துண்டோ?
சூழ்ந்திடும் உறவுகள் சுட்டிடும் போதுதான்
         சுடர்மிகு தங்க மாவோம்.
பாழ்வெளி அமைதியைப் பாரினில் பெறுகையில்
         பக்குவம் வந்து சேரும்.

காண்பதும் வாய்ப்பதும் கடவுளின் அருளெனில்
         கவலைகள் மறைந்து போகும்.
வீணென ஓடினும் விதியெனச் சாடினும்
         விளைவது துன்ப மாகும்
ஆண்டியாய்ப் போவதால் ஆழ்மனம் ஓயுமோ?
         அனைத்துமே அவனி ருப்பே.
வேண்டியார் வந்தவர்? வேண்டியார் சென்றவர்?
          வேடிக்கை பார்த்தி ருப்போம்.

அன்புடன்
ஆராதி

2010/7/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>
இல்லை சார்!
பச்சை உண்மையைத்தான் சொல்றேன்.
உறவுகள் பொய் என்று
சாயம் வெளுத்த பின்னர்
ஒழிக்க ஒழியாத உயிர் உறவாக
உணர்ந்ததைப் பற்றி
நம்மாழ்வார் எதுனாச்சும் சொல்லிண்டு போட்டும்.
 
நமக்குப் புரிஞ்சதைத்தான்
நாம் சொல்ல முடியும். ........*|*

 

Tthamizth Tthenee

unread,
Jul 19, 2010, 8:42:24 AM7/19/10
to mint...@googlegroups.com
அரங்கனாரே  எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்
மறுநாள்  காலையில்  எனக்கு  அறுவை சிகிச்சை
 
முதல் நாள் நானும் என் மனைவியும் மட்டும் தனித்திருந்தோம்
அன்று அவளிடம்  சொன்னேன்
நாளை  அறுவை சிகிச்சையில் நான் நிச்சயமாக மீண்டு வருவேன்
அப்படி  ஒரு வேளை  நான் வராவிடினும்
 
கவலைப்படாதே    நா எல்லோரும் தனித்தனி
 
தனியாகத்தான் வந்தோம் தனியாகத்தான் போகப் போகிறோம்
ஆகவே மீதம்  இருக்கும் வாழ்க்கையை  கவலைப்படாமல்  நல்ல காரியங்களுக்கு  செலவழி என்று
 
யோசித்துப்பார்த்தால்
 
ஸ்ரீரங்கா
ஊரும் சதமன்று;
உற்றார் சதமல்ல;
உறவுகள் பொய்
என்பது உண்மையப்பா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
19-7-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
பக்குவம் வருவதற்குள்
பொட்டி படுக்கைக் கட்டுகிறோம்
பக்கத்தில் நமனிருக்கப்
பார்சுமக்க நாமிருக்க
அக்கப்போர் அத்தனையும்
ஆலவட்டம் இட்டிருக்க
வெக்கங் கெட்ட பிழைப்பினிலே
விளங்காத விரசம்தான்.
 
விளங்காத விரசத்தில்
வீறாப்பால் என்ன பயன்?
ஆண்டியாய்ப் போனாலும்
அரசமரப் பிள்ளைக்குப்
பேச்சுத்துணை யானாலும்
பூசிவைத்த ஜிகினா
பொடியாகிப் போகையிலே
ஏசிவரும் விரசத்தில்
எக்குரலும் எடுக்கலையே.
 
வேடிக்கை பார்த்திருப்போம்
பாழ்வெளியாம் கிணற்றினிலே
பக்கெட்டுக் கயிறுவிட்டு
பக்குவமாய் அமைதியினைப்
பெற்றுவப்போம் நன்று சொன்னீர்
பவப்பகலின் கடுவெப்பில்
கிணறுகாய்ந்து நாளாச்சு
பக்கெட்டும் ஓட்டை
பல்லிளிக்கும் கயிறோடு
போராடும் வேளையிலே
பேச்சுத் துணைக்குவந்தீர்!
பெரியவரே வாழிய நீர்.
 
***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


 



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்

தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

ananda rasa thiruma

unread,
Jul 19, 2010, 8:57:20 PM7/19/10
to mint...@googlegroups.com
திரு தமிழ்த் தேனீ
இன்னும் நீங்கள் செய்யவேண்டியது நிறைய உள்ளது. அதனால் பிழைத்திருக்கிறீர்கள்.
நான் படித்தவைகளில் எனக்குப் பிடித்த மூன்று கவிதைகளைச் சொல்கிறேன். நேரம் இருந்தால் நீங்கள் படிக்காதீர்கள். அனுபவியுங்கள். இதனை ஸ்ரீரங்கருடனும் ஏனைய மின்தமிழ் அன்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளல் என் விருப்பம்.

1. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனத் தொடங்கும் கணியன் பூங்குன்றன் பாடல். வாழ்க்கையின் சாரமும் வழிகாட்டுதலுமான கவிதை இது. இதன் முதல் இரண்டு அடிகளில் மட்டுமே பலர் நிற்கின்றனர். அனைத்து அடிகளுமே ஆழ்ந்த பொருள் செறிவு உடையவை.

2.வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா! நீ,
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

என்னும் குலசேகர ஆழ்வார் பாடல். இது வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை எளிய உவமையில் ஆழமாக உணர்த்துவதோடு பக்திப் பிரவாகமான கவிதை இது.

3. பாரதியின் காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்னும் பாடல். இதை விளக்க முடியாது. அதனுள் அவனாகிக் கரையும்போது அனுபவிக்கத்தான் முடியும்.

அன்புடன்

ஆராதி





2010/7/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 20, 2010, 7:54:44 AM7/20/10
to mint...@googlegroups.com
மிக்க நன்றி திரு ஆராதி அவர்களே
 
நீங்கள் கூறிய மூன்று  கவிதைகளையும் அனுபவிக்கிறேன்
 
வாழ்வின் பல  தருணங்களில்  நிழலைவிட  நிஜம் கசப்பானதாக இருந்தாலும்  அவைதான் நிதர்சனம்  என்று உணரும்போது  மனம் ஒருமைப்படுகிறது
 
 
   இது வரை எனக்கு  மூன்று முறை   உயிர் மீண்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது
 
1.முதல் முறை என் தாய் தந்தையர்  அளித்தது
 
 
2, இரண்டாம் முறை 
 
என்னுடைய மூத்த சகோதரி   குமாரி  ராஜாமணி  அவர்களால்  அளிக்கப்பட்டது
 
நான் என்னுடைய  எட்டு வயதில் டைபாய்ட் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு , மூன்று முறைகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு  ஜன்னி கண்டு எழுந்து ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்
 
மருத்துவர்கள் கைவிரித்தனர்
 
இனி பிழைக்க வாய்ப்பில்லை  என்று  அறுதியாக கூறிவிட்ட நிலை
 
அப்போது  என்னுடைய மூத்த தமையனாருக்கு  உபநயனம் செய்வதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன  அப்போது பார்த்து  எனக்கு  நோய் முற்றியது
அனைவரும் மனதை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு  உபநயனத்தை முடித்தனர்
 
அன்று எப்போதும்  எனமேல் பாசத்தைப் பொழியும் என் மூத்த சகோதரி  குமாரி ராஜாமணி அவர்கள்
தன் மடியில் எனைக் கிடத்திக்கொண்டு  (எனக்கு  அரைகுறை நினைவு)   இறைவா என்னை எடுத்துக்கொள், என் தம்பியைக் காப்பாற்று   என்று கண்ணில் நீர் வழிய  மீண்டும் மீண்டும் வேண்டிக்கொண்டே இருந்தாள்
இறைவன்  செவி சாய்த்தான்   அன்று  மோசமாக இருந்த என் உடல் நிலை மீள ஆரம்பித்தது
 
ஆனால்  எந்த ஒரு வியாதியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்த என் மூத்த சகோதரி  ராஜாமணி திடீரென்று  மூர்ச்சையாகி அப்படியே  சாய்ந்தாள், அனைவரும் பதறிப் போய் அவளை எடுத்துக்கொண்டு  சென்னை  அரசாங்க மருத்துவமனைக்கு ஓடினர் ,அங்கே  அவள் தன் உயிரை விட்டாள்
 
நான்  பிழைத்தேன்
 
ஆம் அவள் தன்னுயிரை  என்னுடலில்  மாற்றிவிட்டு 
 
எங்ககளையெல்லாம் ஏமாற்றிவிட்டு  சென்றுவிட்டாள்
இன்று  நான் வாழும் உயிர் அவளுடையதே  என்னும் என் எண்ணத்தை  இன்று வரை  என்னால் மாற்றிக்கொள்ள  முடியவில்லை, உண்மை அதுதான்
 
கூடு விட்டுக் கூடு பாயும் சித்தரகள் கூட உயிரில்லாத உடம்பிலேதான் கூடு பாய்வார்கள்
தங்கள் உயிரைப் பாய்ச்சுவார்கள்
 
ஆனால்  என் சகோதரி  என் உயிர் போவதற்கு முன்னரே  தன் உயிரை  தன் ப்ரார்த்தனயின் மூலமாக
என் உடலிலே செலுத்தி  என் உயிருக்கு  உயிர் கொடுத்தாள்
 
 
இந்த நிலையில்  இன்று வரை  என்னுடைய பூஜை அறையில் என் சகோதரி ராஜாமணி அவர்களின் புகைப்படத்தைதான்  வைத்து  வணங்கி வருகிறேன்
 
இப்போது சொல்லுங்கள்
 
என்னைப் பொறுத்தவரை  என் சகோதரிதான்  எனக்கு  சித்தர், இறைவன், எல்லாம்
 
 
மூன்றாம் முறையாக  டாக்டர் திரு  செரியனால்  மீட்க்கப்பட்டது என் உயிர்.......
 
அல்ல அல்ல   என் சகோதரி  ராஜாமணி அவர்களின் உயிர்
 
இதற்கு மேல் எழுத முடியவில்லை  மனம் தழு தழுக்கிறது
 
மன்னிக்கவும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 

 
20-7-10 அன்று, ananda rasa thiruma <aara...@gmail.com> எழுதினார்:

Tthamizth Tthenee

unread,
Jul 20, 2010, 8:16:59 AM7/20/10
to mint...@googlegroups.com
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
மீண்டும் உயிரைத் தருவானா
 
என்று திரு கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதினார்
 
தருவான்  என்று நிருப்பித்தவர் என் சகோதரி  ராஜாமணி அவர்கள்
 
அந்த எட்டு வயதிலிருந்து நான் இரண்டாகப் பிரிந்தேன்
 
ஒரு கிருஷ்ணமாச்சாரி  வாழக்கையில் நடப்பதை அனுபவிப்பான்
இன்னொரு  கிருஷ்ணமாச்சாரி  சற்றே  மேலே  சென்று அங்கிருந்து பறவைப் பார்வையில் பார்த்து
கீழே இருக்கும் கிருஷ்ணமாச்சாரிக்கு  அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறான்
 
மேலிருப்பது கிருஷ்ணமாச்சாரியா  அல்லது  ராஜாமணியா?
 
அல்லது கீழே இருந்து  அனுபவித்துக்கொண்டிருப்பது  கிருஷ்ணமாச்சாரியா ராஜாமணியா  என்று
தெரியாமல் குழப்பதில்  நான்....அல்ல  அல்ல  ராஜாமணி  ......... அல்ல அல்ல  கிருஷ்ணமாச்சாரி
 
மொத்தத்தில்  நான் கிருஷ்ணமாச்சாரி ரங்கஸ்வாமியிலிருந்து
கிருஷ்ணமாச்சாரி ராஜாமணியாகி  55 ஆண்டுகள் ஆயிற்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
20-7-10 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
வார்த்தைகள் இல்லை.
வடியும் கண்ணீர் பேசுவதில்லை.
*|*

 
It is loading more messages.
0 new messages