
முரவுவாய் என்பது கற்களை விளிம்பில் அடுக்குவதால் ஏற்படுவது. விறகு கீழே எரிய, முரிகளில் (skewers) ஊன்துண்டங்களைக் கோர்த்து வாட்டிச்
சமைப்பது வாடூன். இதற்கு எந்த நீர்ப்பதமும் தேவையில்லை. எனவேதான், “வாராது அட்ட வாடூன்” என்கிறார் சங்கச் சான்றோர் ஆகிய புலவர்.
முரியடுப்பு அமைக்கும் எளிய முறை: 
குழிசி: இது குழிஇ (= குழித்து) என்னும் வினைச்சொல்லில் இருந்து தோன்றும். அளைஇ, சொரீஇ, குழீஇ (குழுமி), இரீஇ, கடைஇ, சினைஇ, கடைஇ, குலைஇ, குவைஇ, கொளீஇ, செரீஇ, தடைஇ, தரீஇ, தலைஇ, தழீஇ, துழைஇ, தொலைஇ, நிலைஇ, நிறீஇ, நினைஇ .... போல, குழிஇ என்னும் பள்ளம் குழித்தல் என்னும் வினை குழிசி என்றாகியுள்ளது. குழிசில்/குழிசி என்பன பெயர்ச் சொற்கள்: வண்டில்/வண்டி, அழிஞ்சில்/அழிஞ்சி, நெருஞ்சில்/நெருஞ்சி, புட்டில்/புட்டி ..., போல. மாகறல் கார்த்திகேயனார், மொழிநூல்). குழிஇ ஒப்பிட தைஇ/தைஇய “=தைத்து/தய்ச்சு” என்ற வினைச்சொல்லுடன் ஒப்பிடலாம். இது தச்சு என்ற பெயர் ஆகிறது. தச்சன் என்று பல இடங்களில் சங்க இலக்கியம் கூறும். தய்க்க (தைக்க) > தக்ஷ என சிந்து சமவெளியில் திராவிடச் சொல் உருமாறிற்று.) அதுபோல், குழிஇ- என்னும் வினை தருவது குழிசி.
வண்டியின் ஆரக் கால்களை இணைக்கும் கும்பம் அச்சில் இருக்கிறது. இதனையும் குழிசி என்பர், ஆரக்காலைக் குழித்த குழியில் பொருத்துவர்.
“
பிரம்மன், "வாழ்வுச்சக்கரம் {காலச்சக்கரம்} சுழன்று கொண்டே இருக்கிறது.
அது {அந்தச் சக்கரம்} புத்தியைத் தன் பலமாகவும், மனத்தை (அது
சார்ந்திருக்கும்) அச்சாகவும் {ஸ்தம்பமாகவும்}, புலன்கூட்டங்களைக்
கட்டுகளாகவும், (ஐந்து) பெரும்பூதங்களைக் குழிசியாகவும் {ஆர்களுக்குக்
குடமாகவும்}, இல்லத்தைச் சுற்றளவாகவும் கொண்டிருக்கிறது”
முரியடுப்பில் முரிகளைக் குழிசி விளிம்பில் பொருத்துமாப்போல.
மேலும் கீழுமாக விளிம்புள்ள கற்பதுக்கைகள் குழிசியில் வைத்துச் செய்யும் முரியடுப்பு என்பதை “முரவுவாய்க் குழிசி முரியடுப்பு” என்கிறது பத்துப்பாட்டில் ஒரு பாட்டு. இதில் எந்த நீர்மமும் வாராது அடுகிற வாடூன் தயார் செய்கின்றனர் எயிற்றியர். கூடவே, புல்லரிசியைப் புழுக்கிய புழுக்கலுடன் விருந்து படைத்தனர். ஔவை தனிப்பாடற்போல, மோரும் இருந்திருக்கும்.
நா. கணேசன்