’கலஞ்சுட்ட நீள்புகை’ - தமிழர் எழுத்து வரலாற்றில் ஒரு பனையோலை.

36 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 14, 2021, 3:32:00 AM7/14/21
to Santhavasantham
This is for Tirumati. Chitra Ganapathy, grand daughter of Maraimalai AdikaL. 

”கலஞ்சுட்ட நீள்புகை”  - தமிழர் எழுத்து வரலாற்றில் ஒரு பனையோலை.
----------------------------------------------------------------

முன்பு ஒருமுறை, சித்ரா கணபதி (கடம்பவனம், மதுரை) ஒரு காணொளியில் ஆர். பாலகிருஷ்ணன் நூலின் படி வனைதல் > பானை என்ற சொல் ஆனது எனக் குறிப்பிட்டிருந்தார். ப- > வ- ஆகும். வ- > ப- எனத் தமிழில் ஆகாது எனக் குறிப்பிட்டிருந்தேன். திரு. பாலகிருஷ்ணன் நூல் என்னிடம் உண்டு.  பார்த்து எழுதணும். DEDR-உம் ”பானை” என்ற சொல்லைத் தொடங்கி உள்ள சொற்றொகுதியில், கடைசியில் வனை- என்னும் வினைச்சொல்லைக் காட்டுகிறது. பன்னுதல் என்றால், மிடைதல் (> பின்னல்), பன்னிப்பன்னிப் பேசுதல் என்கிறோம். மண்ணைப் பன்னிப் பன்னிப் பானை செய்வது குயவர் தொழில். பொன்னையும் இதுபோல் பன்னிப் பொற்கலங்கள் செய்கின்றனர். ”பொன்னே பன்னுகோலம்”(திருக்கோவையார் 122).

பனுவு-தல் paṉuvu- , 5 v. tr. < பன்னு-. To say, utter; சொல்லுதல். பனுவுமா பனுவி (தேவா. 818, 6).
பன்னு- என்னும் வினைச்சொல் வனைதல் என்றாகிறது. பன்னு- > பானை (தொழிற்பெயர்).
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பு - புறநானூறு (இங்கே, ஆடு ஒரு தொழிற்பெயர் < அடுதல் என்னும் வினையில் பிறப்பது.
அதேபோல, பன்னுதல் என்னும் வினையடிப் பிறந்த தொழிற்பெயர், பானை. ) பன்னு-/பனு- > வனை- .

  பகு வாய் பானை குவி முலை சுரந்த - அகம் 157/2
  திண் கால் உறியன் பானையன் அதளன் - அகம் 274/6
  செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் - நற் 153/3

(1) இன்று, மௌரியர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்பே பிராமி லிபி தோன்றிவிட்டது எனப் பல சான்றுகள் கிட்டிவருகின்றன.
உ-ம்: ஹரியானாவில் மகர விடங்கர். இதில் உள்ள தொடக்க கால பிராமி என்ன வாசகம் எனப் பின்னர் எழுதுகிறேன்.
https://1.bp.blogspot.com/-ra5XuOi4B-8/X29Shr-ZnCI/AAAAAAAALR8/grgyZ5REyvEKHffyuxiyzZrhFk5ovaRTQCLcBGAsYHQ/s798/makara_viTangar_Sonipat.jpg
http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html
இந்தியாவில் கிடைக்கும் மிகப்பழைய பிராமி எழுத்துச் சான்ற்களில் ஹரியானா சிற்பம் முக்கியமானது. கி. மு. 6-ம் நூற்றாண்டு எனலாம். பழைய சிற்பத்தில் வெட்டப்பட்டதா?? ஆய்வுகள் அவசியம். It appears both writing and the ViTangar sculpture are made at the same time.

https://subhashkak.medium.com/a-reading-of-the-br%C4%81hm%C4%AB-letters-on-an-anthropomorphic-figure-2a3c505a9acd
சுபாஷ் காக்: மகர விடங்கரில் எழுத்து என்ன என வாசிக்கிறார். அதில் உள்ள தமிழ்/த்ராவிடம் பற்றிச் சொல்லவேண்டும்,
We now read the letters as:

    śam ña ga
    kī ma jhi tha
    ta ḍa ya

that is

    शं ञ ग
    की म झि थ
    त ड य
-----------------
ñaga- : இதில் பெயர் இருக்கிறது. ஞெகிழ்- > ஞக எனப் பதிவாகியுள்ளது.
ஞெகிழ் > நகர். நக்கர் என்ற பெயர் விடங்கருக்கு உண்டு. ஏராளமாக தமிழ் கல்வெட்டுகளில் பதிவாகும் சொல் இது

---------

(2) இதற்கு அப்புறம்,  பிராமி கொங்குநாட்டுக்கு வருகிறது. அப்போதைய சேரநாட்டின் தலைநகர் வஞ்சி, இன்றைய கரூர். சேரர் குலபர்வதம் கொல்லிமலை அருகே. கொடுமணல், பொருந்தல், தாதப்பட்டி, ... கி.மு. 5-ம் நூற்றாண்டு.
அங்கிருந்து மதுரைப் பகுதி. ஆதிச்சநல்லூர், சிவகளை - தாமிரபரணிக் கரையில் மிக அரிதாகவே பிராமி
கிடைத்தல் வடக்கே இருந்து தெற்கே தமிழ் பிராமி செல்வதற்கு நல்ல சான்றாதாரம் ஆகும்.

பன்னு- > பானை (தொழிற்பெயர்)க்கு வருவோம். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கி ஏராளமான பானை
ஓடுகளில் தமிழ் பிராமி கிடைக்கின்றன. 90%க்கு மேலாக, கொங்குநாட்டில். முக்கியமாகக் கொடுமணலில்.
http://nganesan.blogspot.com/2020/09/journey-from-graffiti-to-brahmi-krajan.html

1500 ஓடுகளில் உள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் மிக முக்கியமானவை. இந்த நிலையில், வேளார்கள் (ஐயனார் கோயில் பூசகர்கள்) தமிழுக்கு பிராமியைப் பரவல் ஆக்கியவர்கள், கணக்கப்பிள்ளைகளாய் இருந்தவர்கள். சோழர், பாண்டியர் கல்வெட்டுக்கள் மிகப்பலவற்றில் ’மூவேந்த வேளான் எழுத்து’ என எழுத்தாளன் பெயருடன் முடிவு இருக்கும்.
தொல்காப்பிய உரைகாரர் சேனாவரையர் வேளார் - கணக்கர் பூசல் பற்றிய ஒரு மிகப் பழைய அகவலை மேற்கோள் காட்டுகிறார். இதற்கு ஒரு பழைய வெண்பாவும் உண்டு. ஸ்ரீ.கிருபானந்த வாரியார் சுவாமிகள் அழகாக இக்கதையைக் கூறி, வெண்பாவும் சொல்லுவார்கள். பள்ளிக் காலத்தில் இருந்து கேட்ட, படித்த வெண்பா:
2013-ல் என் மடல்:
https://groups.google.com/g/vallamai/c/5XyScMGlk5E/m/ZvYCw5RSY6gJ
       காட்டெருவை மூட்டிக் கலஞ்சுட்ட நீள்புகையால்
       வாட்டும் மழைபெய்ய வந்தபல மோட்டெருமை
       உன்னும் படிஆய்ந்தால் ஊரில் உறைகின்ற
       பன்னும் குயவன் பணி

பன்னும் குயவன் = பானை வனைதல் தொழிலன். வாரியார் உமியடுப்பில் பச்சோலையில் எழுதியதைப் புகைமூட்டிப் பழைய ஓலை போல ஆக்கிச் சிற்றரசனிடம் காட்டி எருமைப் பிணங்களைச் சுத்தம் செய்யும் பணியைக் குயவனிடம் சுமத்தினான் கணக்கன் என விளக்குவார். ஒரு தகரப்பெட்டியில் வைத்து தான் எழுதிய வெண்பாவை உமிஅடுப்பில் புகை மூட்டினான் என்பார். உமியடுப்பு என்னும் பழைய அடுப்பு இன்றுள்ள பலர் அறியாதது. அதுபற்றித் தெரிந்துகொள்ள, https://www.youtube.com/watch?v=kX0LaLw-KnE சேனாவரையர் உரைப் பதிப்பில் உள்ள அகவலைத் தாருங்களேன்.

நேற்று, முரியடுப்பு, கோட்டடுப்பு (சூட்டடுப்பு) [1] பற்றி விளக்கத் தேடுகையில் என். சுபஸ்ரீ என்பவர் இவ்வெண்பாவில் உள்ள கதையைத் தற்காலத்திற்குத் தக்கவாறு சொல்லக் கேட்டு மகிழ்ந்தேன். சுபஸ்ரீ போன் நம்பர் அல்லது இமெயில் கிடைக்குமா?
https://www.youtube.com/watch?v=Up_tZAv43OM
எந்த அச்சு நூலில் இந்த வெண்பாப் படித்தார் எனக் கேட்க ஆவல். நன்றி.

நா. கணேசன்
பி. கு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களின் நூலில் வன்னி மரம் பற்றிப் பேசுகிறார். வஹ்னி என்னும் வடசொல் அது. வன்னி மரத்திற்குத் தமிழ்ப் பெயர் உள்ளது. பரம்பை. பரம்பை மரத்தால் பரம்பக்குடி என்ற ஊர்ப்பெயர்கள் சிலவுண்டு. பரமக்குடி என வழங்கும்.

(1) முரியடுப்பு = skewer oven.
முரி is a technical word for skewer, wooden stick:
https://en.wikipedia.org/wiki/Skewer
முரி - தாவரத்தினின்றும் முரித்ததால்.
https://en.wikipedia.org/wiki/Skewer#/media/File:Wooden_skewers.jpg
முரியடுப்பில் வாடூன் அடுதலை (சமைத்தல்) வர்ணிப்பதுபோல, வேறெந்த அடுப்பையும் சங்கப் புலவர்கள் வர்ணிப்பதில்லை. கபாப் உணவு காட்டுவாசிகளில் இருந்து, மன்னர் வாழும் அரண்மனைகளின் அட்டில் வரை பிரபலமான உணவாக விருந்தோருக்கு அளித்து விருந்தோம்பி உபசரிக்கும் உணவாக இருந்ததே காரணம்.  வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்). இரண்டுக்கும் சங்கச் செய்யுள் இருக்கின்றன.
முரியடுப்பில் அடுகிற வாடூன் (= Kabab cooked in the skewer-oven) :: பெரும்பாணாற்றுப்படையில் வருணனை:
https://groups.google.com/g/vallamai/c/cACN4vhFXaY

(2) சூட்டடுப்பு = கொண்டையடுப்பு (கோடுயர் அடுப்பு - சங்கப் புலவர்)
https://groups.google.com/g/vallamai/c/O_s4Jn_lxOI/m/iN6BqZvhBgAJ

N. Ganesan

unread,
Jul 18, 2021, 12:26:58 PM7/18/21
to Santhavasantham
> Namaskaram sir...மிக்க நன்றி... நானும் வாரியார் சுவாமி புத்தகத்தில் தான் இக்கதையை படித்தேன்... அந்த கதையைத் தேடி அனுப்புகிறேன். சுபஸ்ரீ
Reply all
Reply to author
Forward
0 new messages