முரியடுப்பில் அடுகிற வாடூன் (= Kabab cooked in the skewer-oven) :: பெரும்பாணாற்றுப்படையில் வருனனை

45 views
Skip to first unread message
Message has been deleted

N. Ganesan

unread,
Jul 11, 2021, 9:56:39 PM7/11/21
to Santhavasantham

கவிஞர் சிவசூரி அவர்கள் சென்னையில் இருந்து எழுதினார்:
<<<
அன்புள்ள கணேசன் ஐயாவுக்கு வணக்கமும் நன்றியும். நான் இப்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ஶ்ரீ அரவிந்தரின்  The Viziers of Bassora என்னும் நாடகத்தில் அங்கம் 4, களம் 2 இப்படி தொடங்குகிறது.
NUREDDENE
These kabobs are indeed good, and the conserves look sweet and the fruit very glossy.

கபாபுகளை எப்படி மொழியாக்கம் செய்வது என்று அறியாமல் ஆங்கில வார்த்தையை அப்படியே பயன்படுத்துவது என்று முடிவு செய்திருந்தேன். அப்ப்டிப்பட்ட நிலையில் உங்களுடைய " வாடூன்" என்னை வந்தடைந்தது. மிக்க மகிழ்ச்சி. இப்பொழுது இந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொள்ள இருக்கிறேன். தங்களுடைய இலக்கியச் சான்றுகளுக்கு நன்றி.

தற்காலத்திய படைப்புகளில் யாரேனும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தி இருக்கின்றார்களா என்று அறிய ஆவல். தெரிந்தால் சொல்ல வேண்டுகிறேன்.
நன்றி.
சிவசூரி.
>>>

நனிநன்றி, கவிஞரே. தொல்லியலில் கிடைக்கும் செய்திகளோடு ஒப்பிட்டால், கபாப் என்னும் ஊன்வகையை “வாடூன்” என வினைத்தொகையாகச் சங்கப் புலவர்கள் பய்ன்படுத்துகின்றனர்.
(1) சற்று ஈரப்பதம் இருக்கும் வாடூன் = கபாப் https://en.wikipedia.org/wiki/Kebab ;  சாதமும், கபாபும் பக்கம் பக்கம் வைத்து உண்பர். (2) ஈரப்பதம் முற்றிலும் நீக்கிய வாடூன் = ஜெர்க்கிhttps://en.wikipedia.org/wiki/Jerky   ;  ஜெர்க்கியை, வட்டார மொழிகளில் உப்புக்கண்டம், கருவாடு, கொடிக்கறி, கொடியிறைச்சி (நாஞ்சில் நாடு) வழங்குகின்றனர். உப்புக்கண்டத்தை, சோறு ஆக்குகையில் சட்டிக்குள்ளே போட்டு ஒன்றாகச் சமைப்பது வழக்கம்.

தமிழிலே பல வகையான அடுப்புகள் உண்டு. உ-ம்: (1) கோட்டடுப்பு, (2) கொடியடுப்பு (3) அனலடுப்பு (baking oven) (4) கையடுப்பு (portable oven) ... போல அடுப்பு வகைகளுள் ஒன்று: (5) முரியடுப்பு (skewer oven).அவற்றில் வாடூன் (Kabab) செய்யும் அடுப்பு முரியடுப்பு. முரி = skewer https://en.wikipedia.org/wiki/Skewer; முரியடுப்பு = skewer oven.

முரியடுப்பில் வாடூன் அடுதலை (சமைத்தல்) வர்ணிப்பதுபோல, வேறெந்த அடுப்பையும் சங்கப் புலவர்கள் வர்ணிப்பதில்லை. கபாப் உணவு காட்டுவாசிகளில் இருந்து, மன்னர் வாழும் அரண்மனைகளின் அட்டில் வரை பிரபலமான உணவாக விருந்தோருக்கு அளித்து விருந்தோம்பி உபசரிக்கும் உணவாக இருந்ததே காரணம்.

அடுதல் = சுடுதல் என்ற பொருள் உண்டு.
------------------------------------

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்
இங்கே, அடுங்காலை என்பது கூற்றுவன் சுடுகாட்டில் சுடுங்காலத்தில் எனப் பொருள்.
”சொல்லமைதிக்கேற்ப,  கைவிடுவார் கேண்மை விட்ட ஞான்று சுடுவதைக் காட்டிலும் சாஞான்று எண்ணினும் மிகச் சுடும் என்ற உரை சிறந்தது” என்று திருக்குறள் உரைகள் அனைத்தும் ஆராய்ந்த மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர் கூறுகிறார். மகாவித்துவான் அவர்களே சங்க நூல்களுக்கும் சொல்லடைவு முதலில் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'தனக்கு ஒரு விதனம் வந்த இடத்திலே கைவிடுவான் நட்பு, தன் மரணாந்தமட்டும் நெஞ்சினைச் சுடும்' பரிதி; காலிங்கரும் பரிமேலழகரும் 'கூற்றுவன் வந்து அடுங்காலத்து நினைப்பினும் உள்ளம் சுடும்' என்றனர். அடுங்காலம் = சுடுங்காலம் (சுடுகாட்டில்). சுடுகாடு = அடுகாடு.
சாகுந்தறுவாயில் பொதுவாக ஒருவர் தனக்குப் பிறரால் நேர்ந்த கொடுமைகளையெல்லாம் மன்னித்து மறந்து விட்டிருப்பார்கள். ஆனால் கேடுற்றவேளைக் கைவிடுவார் தொடர்பை சாவில் நினைத்தாலும் நெஞ்சு பொறுக்கமுடியாமல் வேகும் என்கிறது இக்குறள்.
திருக்குறள், இனிய எளிய உரை. மயிலை சிவமுத்து (பக். 224),  அடுதல்-சுடுதல்;எமனால் கொல்லப்படுதல்.

வ சுப மாணிக்கம்: துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில் நினைப்பினும் நெஞ்சம் எரியும்.

    எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை
    வீயாது பின் சென்று அடும்.  (வினைப்பகை எப்பொழுதும் சுடும்/கொல்லும்.)

இன்பம் கடல் மற்றுக் காமம் ; அஃது அடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது

காமம் புணரும்போது அதன் இன்பம் கடல் போன்றது;
காமத் தீ (விரகம்) சுட்டு வருத்தும் போது அதன் துன்பமோ கடலை விடப் பெரியது;
இங்கே காமத்தீக்கு வடவாக்கினி உவமை. http://sviswesvaran.blogspot.com/2014/06/blog-post.html
அடுங்கால் = சுடுங்கால்; ’அடுங்காலை’ = சுடலையில் சுடுதல் எனப் பொருள்வரும் குறளுடன் ஒப்பிடுக.

-------------------

அடுதல் என்றால், சுடுதல், சமைத்தல் என்ற பொருளும் உண்டு. ஆதலின் இங்கு அடலுற என்பதனை, அகம்வளர் அருட்ஜோதியால் அசுத்த மல உடம்பை வேதித்துச் சுத்த அருள் ஒளித் தேகமாய்ப் பக்குவப்படுத்தல். http://vallalarspace.com/Saravanaananda/c/V000002274B

சிறுபாணாற்றுப்படை எயிற்றியர் தரும் கபாப் பற்றிப் பேசுகிறது: ” எயிற்றியர் சுட்ட இன்புளி வெண்சோறு தேமா மேனிச் சில் வளையாய மொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” சிறு. 175-77. எயிற்றியர் இந்த வாடூன் (கபாப்) முரியடுப்பில் அடுமுறையை (recipe) பெரும்பாண் வரிகள் 99-100-ல் பார்த்தோம்.

O.E. bacan "to bake," from P.Gmc. *bakanan (cf. O.N. baka, M.Du. backen, O.H.G. bahhan, Ger. backen), from P.Gmc. *bakan "to bake," from PIE *bheg- "to warm, roast, bake" (cf. Gk. phogein "to roast"), from root *bhe- "to warm" (see bath). Related: Baked (M.E. had baken); baking. The noun meaning "social gathering at which baked food is served" is attested by 1846, Amer.Eng. Baked beans attested by 1803.
இதனைத்தான், “அட்ட வாடூன்” (kabab) என முரியடுப்பில் சுடுதலைப் பெரும்பாண் பதிவுசெய்கிறது. அடுமனை = Bakery பரவலாகப் பயன்படும் சொல்.  அடுங்காலை =  (உடலைச்) சுடுங்காலம், இரண்டு குறள்களில் வள்ளுவர் பயன்படுத்தலைக் கொடுத்துள்ளேன்; அடுகாடு = சுடுகாடு.

அறமாய்வ ரேனும் அடுகாடு சேர
அறமானார் அங்கம் அணிவர் - அறமாய
வல்வினைகள் வாரா எனமருக லாரென்ன
வல்வினைகள் வாராத வாறு. 11-ம் திருமுறை (அடுகாடு = சுடுகாடு).

ஆச்சார்யர்களின் திவ்யப்ரபந்த பாசுர உரை:
https://thiruvonum.wordpress.com/2015/03/16/பெரிய-திருமொழி-திவ்யார்-16/
”பிணங்கள் இடு காடு -என்பதை விட -பிணங்கள் அடு காடு -பாடம் சிறக்கும் –
அடுதல் சுடுதல் -ஸ்மசான பூமி -அங்கெ நடமாடும் ருத்ரன் பிஞ்ஜகன்
அவனோடு இணங்குதல் ஆவது திரு மேனியில் இடம் கொடுத்து அருளி
திருச் சக்கரத்து எம்பெருமானார் -நித்ய சூரிகளுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்து அருளுவது போலே” (அடுகாடு = சுடுகாடு).

அடைய அரியன கடைஇரு புடையினும்
  அளவு கெடநிமிர் விழிவிடம் அடுதலின்
            அமரர் அனைவரும் முனிவரில் அதிகரும் - தக்கயாகப் பரணி
விழிவிஷம் அடுதல்  = சுடுதல்

மடுதல்/அடுதல் சமைக்கும் தீயிற்கும், சுடுதல் அழிக்கும் தீயிற்கும் பயன்படும்.
இதனைப் புறப்பாட்டு குறிப்பிடுகிறது:
|| “அடுதீ யல்லது சுடுதீ யறியாது
இருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன்” (புறம். 70)

என்பதனால் தங்கள் உணவு அடுதற்குரிய தீயைச் சுடுதீயென்னாது வேறோர் நன்பெயர்
கொடுத்து அடுதீயெனப் பாகுபடுத்திப் பாராட்டுதலும் அறிவின் பயனேயாம். சிலப்பதிகாரம்
வஞ்சின மலையில் “எரியங்கி வானவன்” (49) எனவும் வருதல் காண்க.  “ ||
பாஷா கவிசேகரர் மகாவித்துவான் ரா. இராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

இந்த நுட்பத்தை, எயிற்றியர் கபாப் (வாடூன்) அடுதீக் கொண்டு முரியடுப்பில் அட்டனர் என்கிறது பெரும்பாணாற்றுப்படை.
அடுதல் - சமைத்தல்; சுடுதல் - காளவாயில் சுடுதல். காளவாயில் சுட்ட சுண்ணாம்பு. முற்றிலும் ஈரப்பதம் இழந்துவிடும்.
புதிதாகக் கொணர்ந்த மான்கறியைப் பாணனுக்கு உபசரிக்க, அடுதீயால் முரியடுப்பில் சமைத்துத் தருகிறாள் எயிற்றி.

http://www.ulakaththamizh.in/uploads/book/pdf/Era_Elankumaranar_Tamilvalam_18.pdf
”  ‘அட்டாலும் பால் சுவையில் குன்றாது; சுட்டாலும் சங்கு ஒளியில் குன்றாது’ என்பவை ஔவையார் உரை. அடுதலும், சுடுதலும் ஒருவினை இருசொற்களே.” சுடச்சுடரும் பொன் போல - குறள். அட்ட காசு = சுடர்ப்பொன். அட்ட காசம் = ப்ரகாசம். (தமிழ்வளம் - சொல் 18. இரா. இளங்குமரன்)

எனவேதான்,
 முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்ணெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).

இப்படிச் செய்த கபாபை, Tajin pot-ல் = புழுக்கல் பானையில் சமைத்த புல்லரிசிச் சோற்றுடன்
வைத்துத் தருகின்றனர் எயிற்றியர். புழுக்கல் பானை (Tajin pot, and its conical lids
in Sivakalai, Adichanallur, Kodumanal, ... see my writing in this thread).

கபாப் (வாடூன்), பக்கத்தில் புழுக்கல்: எப்படி இருக்கும்? Note: வாடூன், புழுக்கல் இரண்டும்
தனித்தனியாய்ச் சமைத்தனர். வாடூன் முரியடுப்பில், புழுக்கல் அதற்கான பானையில்.
வாடூன் (Kabab) + புழுக்கல் விருந்து:
https://mahatmarice.com/recipes/garlic-lemon-chicken-kebabs-and-green-rice/
https://honestandtasty.com/stovetop-beef-kabob-and-persian-rice-chelow-kabob-deegi/
https://www.shanazrafiq.com/2017/08/kabab-koobeideh-with-saffron-rice-persian-seekh-kebab.html

NG

On Sun, Jul 11, 2021 at 1:09 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sun, Jul 11, 2021 at 8:34 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் இரண்டு வகைகள்:

(1) வாடூன் = கபாப்,   https://en.wikipedia.org/wiki/Kebab
கபாப் செய்முறை:
         முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100

விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.

பார்வை மானை வைத்து, மான் வருவதைக் கொன்று, கறி சமைக்கிறார்கள்.
அதாவது, venison (மான்கறி) kebab , புழுக்கிய சோறு, உப்புத் தண்ணீர்
- மூன்றும் பாணனுக்கு எயிற்றியர் அளிக்கின்றனர். நல்ல தண்ணீர் கூட இல்லாத உப்புக்கிணறு.
அந்தக் காட்டிலும், பாணனுக்கு மான்கறி கபாபும், அவித்த புழுக்கும் கிடைக்கிறது.
கை வாய் கழுவவும், தாகத்திற்கு அருந்தவும் உப்புநீர் தான் அங்கே உண்டு.
image.png

3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”
(குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”.
கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”)

வார்த்தல் = பழைய சொல். கூழ்வார்த்தல், கஞ்சிவார்த்தல், தாரைவார்த்தல் ....
முக்கியமாக, வாள், சிலைகள், கலயங்களை வார்க்கும் Tin bronze casting
தமிழர்கள் கண்டது. ஏராளமாக, சிந்துவெளி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை
எல்லாம் கிடைக்கிறது. செம்பால் வார்த்த வாள், கத்தி. பொன்னை அச்சில் வார்த்த காசு.
இப்படி, நீர்மம் எதுவும் வார்க்காமல்  மேலே காட்டப்படும் அடுப்பு போன்ற குழியுடைய வாய்கள் கொண்ட
அடுப்பில் காழ் ஏற்றி அட்ட வாடூன் (= Kabab) எனலாம். சங்கப் புலவர்
‘கபாப்’ செய்வதற்கு வருணனை கொடுத்துள்ளார்.

கபாப் (வாடூன்) செய்முறை விளக்கம் கொடுத்துள்ளது பெரும்பாணாற்றுப்படை.
கபாப் (வாடூன்) தீயினால் வாட்டப்பெறுவது. கபாபைப் பெரும்பாண் போலவே,
பொருநர் ஆற்றுப்படையில் சமைத்து உண்டமை வருகிறது. பலருக்கும் தெரியாத
பாடல் அகநானூற்றுப் பாடல்.
அகநானூறு:

169. பாலை

[தலைமகன்,இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.]


மரந்தலை கரிந்து நிலம்பயம் வாட
1அலங்குகதிர் வேய்ந்த அழல்திகழ் நனந்தலைப்
புலிதொலைத் துண்ட பெருங்களிற்று ஒழிஊன்
கலிகெழு மறவர் காழ்க்கோத் தொழிந்ததை
புலி யானையைக் கொன்று, தனக்கு விருப்பான பாகங்களைச் சிதைத்துத் தொலைத்து உண்டது. மிச்சமாகக் கிடக்கும் தடித் துண்டங்களைக்
கோல்களில் கோத்து ஆறலை கள்வர் எடுத்துச் சென்றனர். (பின்னர், காழில் கோத்த இறைச்சியைத் தீயில் வாட்டி வாடூன் ஆக்கினர் என்றும்
கொள்ளலாம். குழம்பு வைத்தனரா? இல்லை, வாடூன் (கபாப்) செய்தனரா? என இப் பாலைச் செய்யுளில் சொல்லப்படவில்லை. ஆனால்,
காழில் கோத்து எடுப்பதால், வாடூன் என்று கருத இடமுண்டு.)

பொருநர் ஆற்றுப்படையில் ‘கபாப்’ எனும் வாடூன்:

பாட்டு:
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,  
காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை        105
ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,
அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,   (பொரு. )

103 - 4. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு என தண்டி - அறுகம்புல்லாற்றிரித்த பழுதையைத்தின்ற செம்மறிக்கிடாயினது அழகினையுடைய புழுக்கினதிற் பரியமேற் குறங்கு நெகிழவெந்ததனை விழுங்கென்று பலகாலலைத்து,;

அதாவது, புழுக்கலுடன் சேர்த்து வெந்த செம்மறிக்கறி ‘வேவை’ எனப்படுகிறது. குழம்பு எனலாம். “பருகு” என்பதனால் இன்றைய Soup என்பதற்கு மிகப் பொருந்தும் என்கிறார் புலவர் செங்கை பொதுவனார்.

105 - 6. [ காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை, யூழி னூழின் வாய்வெய் தொற்றி :] காழின் கொழு ஊன் சுட்ட கொழு குறை வெய்து வாய் ஊழின் ஊழின் ஒற்றி - இருப்பு நாராசத்தே கொழுத்த இறைச்சிகளைக் கோத்துச் சுட்ட கொழுவிய பெரிய தசைகளின் வெம்மையை வாயிடத்தே இடத்தினும் வலத்தினும் சேர்த்தி ஆற்றித் தின்று,;

இது, பெரும்பாணில் வரும் வாடூன். தீயில் வாட்டினதால் பெயர். இன்றைய ‘கபாப்’. முரியடுப்பில் (நீர் (அ) நெய்) வாராது அடுகிற உணவு.முரியடுப்பு = skewer-oven. https://en.wikipedia.org/wiki/Skewer   (1) கோட்டடுப்பு, (2) கொடியடுப்பு (3) அனலடுப்பு (baking oven) (4) கையடுப்பு (portable oven) ... போல அடுப்பு வகைகளுள் ஒன்று: (5) முரியடுப்பு (skewer ocen). இது வாடூன் (கபாப்) செய்யப் பயன்படுவது. காழ் = மர வயிரம் (அ) இருப்புக் கம்பி. காழில் கோத்த ஊனை வாட்டும் அடுப்பு முரியடுப்பு. பொருநர் ஆற்றுப்படையிலே, அரண்மனை மடைப்பள்ளியிலே நல்ல முரியடுப்பு இருந்திருக்கும். உ-ம்: குழி ஒன்றில் தீ விறகுகள் எரிய, முரவுவாய் கொண்ட அடுப்பில் காழில் கோத்த இறைச்சி வாட்டலாம்.

107. அவை அவை முனிகுவம் எனினே - புழுக்கின இறைச்சியையும் சூட்டிறைச்சியையும் யாங்கள் இனிவேண்டேமென்கையினாலே,;

107 - 8. சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ - இனிமையுடையவாய் வெவ்வேறாகிய பலவடிவினையுடைய 1பண்ணியாரங் கொண்டுவந்து அவற்றைத் தின்னும்படி எங்களையிருத்தி,;

உபாயங்களாற் பண்ணுதலின், விரகென்றார்; ஆகுபெயர்.;

 

பால் சோறு, கபாப் போல அல்லாமல், நெய் மிக வார்த்துச் செய்வது.
ஆண்டாள் சொல்கிறாள்:

பாடகமே , என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் ;

ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி  வாரக்

கூடியிருந்து குளிர்ந்து – ஏலோர் எம்பாவாய்.


 

இந்த உணவு சிந்துவெளியிலும் பிரபலம். வட இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானி, ஈரான்
என எல்லா மாமிச உணவு விரும்பி அனைவரும் உண்ணும் நாடுகளில் உள்ள வகை.
இறைச்சி வகைகளை விரும்பி உண்ட சங்கத் தமிழர் உணவிலும் வாடூன் (= Kabab)
இருந்துள்ளது எனக் காட்டுகிறது பெரும்பாணாற்றுப்படை.

வாடூன் (Kabab) + புழுக்கல் விருந்து:
image.png
 
image.png

புழுக்கல் - ஆவியில் அவித்துச் செய்த சோறு. “Steamed rice"
சங்கச் சொல்வளம்
6. உணவு வகைகள் - 3 பேரா. ப. பாண்டியராஜா
"6.6.4 புழுக்கல்

புழுங்கலாக வேகவைத்த உணவு புழுக்கல் எனப்படுகிறது. ஆவியில் வேக்கவைத்தலை அவித்தல் என்கிறோம். அவ்வாறு அவித்துச் சமைக்கப்பட்ட உணவு புழுக்கல் எனப்படுகிறது. இதுவே புழுக்கு என்றும் சொல்லப்படுகிறது. இது இறைச்சி உணவாகவோ அல்லது வேறு தாவர உணவாகவோ இருக்கலாம்.

வாராது அட்ட வாடூன் புழுக்கல் - பெரும் 100
துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - பொரு 103
வயல் ஆமை புழுக்கு உண்டும் - பட் 64
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் - அகம் 159/10
        -    போன்ற அடிகள் மாமிசப் புழுக்கலைக் குறிக்கின்றன.

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் - பொரு 114
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வுற்று - பெரும் 195
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1
குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் - அகம் 393/16
          -  ஆகிய அடிகள் தாவரப் புழுக்கலைக் குறிக்கும்.”
------------------------------
-
-----------

வாடூன் எனச் சொல்லப்படுவனவற்றில் சில வகைகள் இருக்கலாம்.
(2) இரண்டாவது வகையான வாடூன் பற்றி வரும் பாடல்.

      'வாடூன் கொழும் குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு' - புறம் 328/9-11

இங்கே, புறப்பாட்டில், வாடூன் = கொடிக்கறி/உப்புக்கண்டம் (jerky) எனலாம்.

வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்).
இரண்டுக்கும் சங்கச் செய்யுள் இருக்கின்றன.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages