--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQM%3DB6-SDb2auMpZQurO9XHQcRY4Tg2rZ5jQfD7BWWzCg%40mail.gmail.com.
On Sat, 15 Oct 2022 at 09:42, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:கல் > கள் வெண்மை கருத்து வேர்கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் > தெளிவு அறிவை குறிக்கும்.கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு. கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது. இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைக்கால business school, economic school போன்றதே இது.
இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒளிக் கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல். பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPSHbQDBMuBWujf-rFszwWsrWv%2B7xcmT%2B6P76J3o4F%3D5kA%40mail.gmail.com.
இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒலிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல். பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.
On Saturday, October 15, 2022 at 7:45:29 AM UTC-5 Seshadri wrote:இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒலிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல். பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.ப- வ- என மாறுவதுண்டு. பகு- > வகு-, பால் > வால். வாலுக (வெள்ளை மணல்).வாலறிவன். வாலறிவு = கேவல ஞானம் என்னும் சமண சமயச் சொல்லாடலைவாலறிவன் *வெண்மை அறிவு, தூய்தான அறிவு, முற்றறிவு* என மொழிபெயர்த்தார் வள்ளுவர்.நா. கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/1cb52667-b5eb-4740-b9d0-8b8cc53c8483n%40googlegroups.com.
கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று-----------------------------------------------------கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள் இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.
On Sun, 16 Oct 2022 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று-----------------------------------------------------கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள் இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.
கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் காணோம்.கல்/கரிஒல்/ஒருஎல்/எரி
On Mon, 17 Oct 2022 at 15:40, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் காணோம்.கல்/கரிஒல்/ஒருஎல்/எரிசற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி என்றால் காலை. எல்லா தென்னக மொழிகளிலும் வெள்ளை நிறம் தான் காலையை குறிக்கப் பயன்கொள்ளப்படுகிறது. எனில் தமிழின் காலையும் வெண்மை நிறத்தில் அமைந்தது தானே? கால் +ஐ = காலை. கால் > கல் மூலத்தில் இருந்து தோன்றியது என்று கொள்ளலாமா? கல் > கள் வெள்ளையாக உள்ள போதை நீர் என்பது வலுவான சான்று. கால் + து = காந்து. வெண்மையே ஒளிக் கருத்திற்கு அடியாக உள்ளது என்பதற்கு நள் > நாள் (விண்மீன்) > நாளை (வெளிச்சமான வரும்நாட் பொழுது) என்பதை எடுத்துக் காட்டாக வைத்தேன். இந்த நாளை என்பது இந்தி போன்ற மொழிகளில் "கல்" (வெளிச்சமான வரும்நாட் பொழுது) எனப்படுகிறது. அதே நேரம் நேற்று என்பதும் இந்தியில் "கல்" எனப்படுகிறது. நேற்று என்ற "கல்" பொருள் கழிந்த, கடந்த என்ற இறந்த கால பொருளில் வந்தது.இதுவரை யாரும் கல் என்றால் வெளுமை என்று குறிக்கவில்லை. முதன்முதலாக நான் கூறுகிறேன்.//பல்-/பரு என்றாகும். பல்லுப்பல்லாக உள்ளது பருநல்/பருத்தி. பன்னல் < பருநல். கருநல் > கன்னல் போல. பல்+து = பற்று. பற்றுவது பல். Gear teeth - கோவை மேட்டுப்பாளையம் தொடங்கி ஊட்டிவரை செல்வது பல்லுச்சக்கர ரயில்//பல் > பால் என்பதற்கு வெண்மை என்ற பொருளை சுட்டுபவர் வேரியல் ஆய்வறிஞர் பி அருளி நான் அல்லன். இது அவரது மாமனார் தொடங்கிய தேன்மொழி திங்கள் இதழில் வந்தது. அவர் கசட்டு மேனிக்கு எழுதுபவரா? பல் பரு என்றாவது சேர்க்கை, கூடுகை வினையால். பற்று என்றால் பிடித்தல். அதுவும் சேர்க்கை கருத்தே.
கல்- என்றால் வெளுமை என எங்கும் காணோம். NG
//On Tue, 18 Oct 2022 at 17:47, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
காலை என்பதும் பொழுது என்ற வகையில் காலத்தின் ஒரு கட்டத்தை குறிப்பது தான். ஆனால் அது கால் என்ற நகரும் அசையும் கருத்தில் வந்ததல்ல என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். அதற்கு தான் பிற தமிழிய மொழிச் சொற்களை காலைக்கு ஈடாக எடுத்துக்காட்டினேன். மீண்டும் சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள். இதில் நகர்தல் கருத்தும் இல்லை, கருமைக் கருத்தும் இல்லை நேரடியாக வெண்மைக் கருத்தே உள்ளது. முன்னைய ஆய்வாளர்கள் கருமை கருத்தை கொண்டு மயங்கியதால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது. பிற தென்னக மொழிச் சொற்களை ஒப்பிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.
ப. அருளி கய் > கய்ல் > கல் என்று தான் குறிப்பார். இந்த கய் > காய் என்று விரிந்து அதில் இருந்து காய்தல் என்ற ஒளிமை கருத்து தான் காந்து காந்தி என்ற சொல்லின் நேர் விளக்கம் ஆகும். ஒளிமை இருந்தால் வெண்மையும் உண்டு.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPTjB2Vrey-XxzDQw0fz6cs43Xts82Kz%3D%3DsO2QTzjZJzkg%40mail.gmail.com.
(1) கல் என்பது மூலச்சொல். இதில் ய் எல்லாம் இல்லை. கை(கய்) வேறு, கல் வேறு.(2) தெள்ளத் தெளிவு. தெள்- என்னும் மூலம், தெலுங்கில் தெல்ல- என்றாகும். Loss of Retroflexion.கய்ல் - தேங்காய்த் தொட்டி - கயில். கையில் செய்யும் கயிறு (கயில்+து).காலை என்பது காலம் என்ற சொல். இதற்கும் கல்லுக்கும் என்ன தொடர்பு?On Tue, Oct 18, 2022 at 10:42 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote://On Tue, 18 Oct 2022 at 17:47, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>> காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?
காலை - காலம் என்ற சொல்லில் இருந்து வருவது. இடுக்கண் வருங்கால் நகுக. இங்கே கால் = காலை/காலம். இந்திய வானியலில் ஒரு தினம் என்பது, சூரியோதய காலம் ஆகும். கால்- என்ற சொல் அடிப்படையானது. அசைவது, நடப்பது என்ற வினை செய்யும் கருவி/உறுப்பு: கால். எனவே, காற்று < கால் + து (கால் = காற்று). விடிகாலை என்பதைக் காலம்பெற என்கிறோம், காலம் உருவாகும் வேளை அது. நல்லவேளை = நல்லகாலம். சூரியன் கால் ஊன்றும் நேரத்தைக் காலை என்கிறோம். காலம் என்ற சொல் பற்றி, http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html
காலை¹ kālai , < kāla. n. 1. Time; பொழுது (பிங்.) 2. Life-time; வாணாள். நோகோ யானே தேய் கமா காலை (புறநா. 234). 3. Season, opportunity; தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). 4. Occasion, turn; முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24). 5. cf. kālya. Early part of the morning; விடியற்காலம். காலைக்குச் செய்தநன் றென் கொல் (குறள், 1225) 6. Sun; சூரியன். காலை யன்ன சீர்சால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4). 7. Day-time; பகல். எல்லியிது காலையிது வென்ப தறிகல்லாள் (சீவக. 1877). 8. Waking-drum; பள்ளியெழுச்சி முர சம். மேல்வந்தான் காலைபோல் . . . துயிலோ வெடுப் புக (கலித். 70). — adv. 1. Early, betimes, early in life; காலம்பெற. (W.) 2. When, while; பொழு தில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).//காலை என்பதும் பொழுது என்ற வகையில் காலத்தின் ஒரு கட்டத்தை குறிப்பது தான். ஆனால் அது கால் என்ற நகரும் அசையும் கருத்தில் வந்ததல்ல என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். அதற்கு தான் பிற தமிழிய மொழிச் சொற்களை காலைக்கு ஈடாக எடுத்துக்காட்டினேன். மீண்டும் சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள். இதில் நகர்தல் கருத்தும் இல்லை, கருமைக் கருத்தும் இல்லை நேரடியாக வெண்மைக் கருத்தே உள்ளது. முன்னைய ஆய்வாளர்கள் கருமை கருத்தை கொண்டு மயங்கியதால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது. பிற தென்னக மொழிச் சொற்களை ஒப்பிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.
ப. அருளி கய் > கய்ல் > கல் என்று தான் குறிப்பார். இந்த கய் > காய் என்று விரிந்து அதில் இருந்து காய்தல் என்ற ஒளிமை கருத்து தான் காந்து காந்தி என்ற சொல்லின் நேர் விளக்கம் ஆகும். ஒளிமை இருந்தால் வெண்மையும் உண்டு.
கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் இல்லை.
கல்/கரி
ஒல்/ஒரு
எல்/எரி
பல்/பரு (பருநல் : https://groups.google.com/g/vallamai/c/htZQJAQZYFc/m/8cTqljNoAgAJ )



கற்பு - முல்லை (வெந்நிறத்தது)
கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை.
கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக.
கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற சாம்பல் / திருநீறு.
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தந்த வெண்மை கருத்து சொற்கள்கல் வேர் கொண்டவைகற்பூ - ஈயம்கற்காரம் - வெண்காரம், படிகாரம் (borax)கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகைகற்பூரம் - வெண்மையான சூடம்,கற்பு - முல்லை (வெந்நிறத்தது)
கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை.
கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக.
கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற சாம்பல் / திருநீறு.

//கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)//
பளிங்கு (Sphatikam - படிகம்) என்றால் வெண்மை கருத்தை குறிப்பதை காண்க. கல் கண்டு என்பதும் வெண்மை குறித்தே வழங்குகிறது.
கற்புரை (கல் + புரை) - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே
கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை. புரை என்றால் மேலெழும்பும் புகை. இதாவது மேலெழும்பும் வண புகை தான் கற்புரை.
கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை
கருத்து வேர் என்பதை நோக்குக. விள் என்றால் வெண்மை என்றவர் ப அருளி. இதற்கு விளாம்பழத்தை காட்டுகிறார்.
கற்பம் (கல் +வம்) -
(ஆவின்)
வெண்ணிற சாம்பல் / திருநீறு.
//கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)// பூரம் என்பது camphor அல்ல.
கற்பூர வாழை என்பது இனிமை, மணம் குறித்து வந்ததல்ல. பூரம் என்றால் நிரம்பிய, படிந்த எனப் பொருள். அப்பழம் உள்ளேயும் சாம்பல் படிந்த வெண் நிறத்தில் இருக்கும், வெளியேயும் வெண்மை படிந்திருக்கும்.
இலங்கு கதிரவன். இதில் கதிர் என்பதும் வெண்மை கருத்தில் தோன்றியதே. கல் + து = கது > கதி - கதிர் = வெண்மையான ஒளிக்கற்றை.
நான் சென்னைப் பல்கலைப் பேரகராதியில் கல்- எனத் தொடங்கும் எல்லாச் சொற்களையும் பார்த்தேன். ஒன்றுக்குக் கூட கல் என்றால் வெள்ளை என்ற பொருள் இல்லை.
கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற சாம்பல் / திருநீறு.