கல் > கள் வெண்மை பொருளின

502 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Oct 15, 2022, 12:09:24 AM10/15/22
to தமிழ் மன்றம்
கல் > கள் 

கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது  ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல  என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் >  தெளிவு அறிவை குறிக்கும்.

கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.  கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைகால  business school, economic school போன்றதே இது.     

Seshadri Sridharan

unread,
Oct 15, 2022, 8:47:51 AM10/15/22
to தமிழ் மன்றம்
இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒளிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

Seshadri Sridharan

unread,
Oct 15, 2022, 11:33:12 AM10/15/22
to தமிழ் மன்றம்

பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில் இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று தவறாக பொருள் கூறுகின்றனர்.

இந்த பல் என்ற வெண்மை கருத்து வேர் "புல்"  என்ற வெண்மைக்கான மூல வேரில் இருந்து கிளைத்தது. பொழுது புலர்ந்தது என்றால் இருள் விலகி வானம் வெளுத்த வைகறையை குறிக்கும். மலையாளிகள் வைகறையை "புலரி" என்றும் "புலர் வேளை" என்றும் குறிக்கின்றனர். புலப்படு என்றால் கண்ணிற்கு தெளிவாகத் தோன்று எனப்பொருள். புலன் என்பது இதில் இருந்து அறிவையும் குறிக்கும் புலன் என்றானது. வெண்மை - ஒளி - அறிவு ஆகியன உறவுள்ள கருத்துக்களாகும்.

தேமொழி

unread,
Oct 15, 2022, 6:17:40 PM10/15/22
to தமிழ் மன்றம்
On Saturday, October 15, 2022 at 8:33:12 AM UTC-7 sseshadri69 wrote:
On Sat, Oct 15, 2022 at 6:17 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Sat, Oct 15, 2022 at 9:39 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
கல் > கள் 

கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது  ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல  என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் >  தெளிவு அறிவை குறிக்கும்.

கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.  கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைகால  business school, economic school போன்றதே இது.   

இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒளிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில் இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று தவறாக பொருள் கூறுகின்றனர்.

அப்படியா ???
எதனிற் சிறந்தாய் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியே ?

முதுகுடுமிப் பெருவழுதியே!!!!
உன்னுடைய தூசிப்படையை எதிர்த்துப் போரிட வந்து தோல்வியுற்றுப் பழியுடன் வாழ்ந்தவர்கள் பலரா?
அல்லது .....
வேதமுறைப்படி வேள்வி நடத்தி நீ நிறுவிய வேள்விச்சாலைகளின் எண்ணிக்கை அதிகமா?
இவற்றில் எது அதிகம்?”
புறநானூறு - பாடல் 15 லில் 
12-22 வரிகளில்   நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியை நோக்கிக் கேட்கிறார்.

விளங்குபொன் எறிந்த நலங்கிளர் பலகையடு  12
நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக்கு ஒழிய   15
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி      20
யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
யாபல கொல்லோ? பெரும!    22

வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பலகொல்?
எதனிற் சிறந்தாய் நீ பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியே ? 

இந்த வரிகளைப் படித்த பிறகே 
பல் = பல என்று பொருள் கொள்ள வேண்டும் என்று கருதுகிறார்கள் 

rajam

unread,
Oct 15, 2022, 8:18:29 PM10/15/22
to tamil...@googlegroups.com
பதிற்றுப்பத்தில் ஒரு பத்துக்குப் பாட்டுடைத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சேசாத்திரியவர்களின் ‘யாக குண்டத்திலிருந்து’ வெளியே சிதறித்தெறித்த தீப்பொறியோ?!  

மொழியாய்வு, அதிலும் மீட்டுருவம் செய்யும் (reconstruction) முயற்சி என்பது, கற்பனைக்கும் அன்றாட விளையாட்டுக்கும் அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்வது நல்லது. 

வணக்கத்துடன்,
ராஜம்  

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/58132fcd-2852-4e24-b8fe-99bc6766f109n%40googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 15, 2022, 9:21:36 PM10/15/22
to தமிழ் மன்றம்
கல் என்றால் வெண்மை கருத்து என சொன்னேன். இனி அதன் வழி கண் என்ற சொல்லை காண்போம். பலரும் கருமை கருத்தையே கண்ணிற்கு காட்டுகின்றனர். இதை இன்னொரு வேர் விளர்சி சொற்கள் கொண்டு பார்த்தால் தவறு என விளங்கும். 

விள் - வெள் = வெண்மை கருத்து வேர். விளாங்காய் வெண்ணிற ஓட்டை கொண்ட காய். 

விள் என்ற பிளவுக் கருத்து வழி ஒளிக் கருத்தும் தோன்றும். விள்- விட்  > விடியல் என்றால் ஒளிபடரும் வைகறை. விடி > விழி. விழி கண்ணையும் குறிக்கும். விழித்து பார் (மூடிய இமையை பிளந்து பார்) என்ற ஏவலையும் குறிக்கும். விள் வெண்மையை குறிக்கும் என்றால் விழி என்ற உறுப்பும் வெண்மை கருத்து உடையது தானே? எனில் கள் > கண் வெண்மையான கண் படலத்தை குறிப்பதாகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் முறணாக கருப்பு என்று வேர் பொருள் சொல்கின்றனரே? ஏனென்றால் கல் என்பதற்கு வெண்மைக் கருத்தும் உண்டு என்று உய்துணராததே காரணம். 

இங்கே மீண்டும் விள் மூலம் வெண்மை - ஒளிர்வு ஆகியவற்றுக்குள்ள தொடர்பால் விழி என்ற சொல்லின் பொருள் கொண்டு கண்ணின் பொருளும் வெண்மை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. விள் வேர் விளக்கம் ஏற்கனவே ப. அருளி விளக்கியுள்ளார்.  

Seshadri Sridharan

unread,
Oct 15, 2022, 11:10:02 PM10/15/22
to tamil...@googlegroups.com
On Sun, Oct 16, 2022 at 5:48 AM rajam <ra...@earthlink.net> wrote:
பதிற்றுப்பத்தில் ஒரு பத்துக்குப் பாட்டுடைத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சேசாத்திரியவர்களின் ‘யாக குண்டத்திலிருந்து’ வெளியே சிதறித்தெறித்த தீப்பொறியோ?!  

மொழியாய்வு, அதிலும் மீட்டுருவம் செய்யும் (reconstruction) முயற்சி என்பது, கற்பனைக்கும் அன்றாட விளையாட்டுக்கும் அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்வது நல்லது. 

வணக்கத்துடன்,
ராஜம்  

ஒரு வேருக்கு பல பொருள் உண்டு. பல் என்ற வெண்மை கருத்தில் வெண்மையாக உள்ள பருத்தி, பஞ்சு, பன்னல் எனப்பட்டது. வெண்மையாக உள்ளதால் பனி எனப்பட்டது.

"பல்" சேர்க்கை, கூட்டக்  கருத்தும் கொண்டது எனவே பல்யானை போலவே பல் யாகசாலை என்பதும் இருக்க வேண்டும் என்பதல்ல.  தொடர்ந்து எப்போதும் வேள்வி இயற்றினால் அதன் தீ ஒளி வீசிக்கொண்டே இருக்கும் என்ற பொருளும் கொள்ளலாம்..

rajam

unread,
Oct 16, 2022, 12:05:17 AM10/16/22
to tamil...@googlegroups.com
இணையத்தில் ஒரு பதிவுக்கு மறு பதிவு இடுவது எனக்கு இயலாது. நும் வேர்ச்சொல் ஆராய்ச்சி அகராதியை விரைவில் காண விழைகிறேன். 

நன்றி,
ராஜம் 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

C.R. Selvakumar

unread,
Oct 16, 2022, 11:55:35 AM10/16/22
to tamil...@googlegroups.com
 கல் என்பதன் வேர்ப்பொருள் கறுப்பு என்பதை முழுநூலிலும் நூல்வரிசையிலும் (நான்கு தொகுதிகள்)
பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் ஆணித்தரமாக நிறுவியுள்ளார். 
அருள்கூர்ந்து படித்துப்பாருங்கள்!
image.png
செல்வா

--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

Seshadri Sridharan

unread,
Oct 17, 2022, 5:44:24 AM10/17/22
to tamil...@googlegroups.com
On Sun, Oct 16, 2022 at 9:25 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
 கல் என்பதன் வேர்ப்பொருள் கறுப்பு என்பதை முழுநூலிலும் நூல்வரிசையிலும் (நான்கு தொகுதிகள்)
பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்கள் ஆணித்தரமாக நிறுவியுள்ளார். 
அருள்கூர்ந்து படித்துப்பாருங்கள்!
image.png
செல்வா

நான் தமிழ் மண் வெளியிட்ட பாவாணர் வேர் சொல் நூல்களையும், ப. அருளி வேரியல் நூல்கள்,  அரசேந்திரன் கல் உள்ளிட்ட வெறியால் நூல்களையும் வாங்கி வைத்துள்ளேன்.

கல் கருமை வேர் மட்டுமே கொண்டதல்ல வெண்மை வேரும் கொண்டது. இதை யாரும் இதுவரை சொல்லவில்லை நான் தான் முதன்முதலாக சொல்லுகிறேன். நள் >  நாள் > நாளை ஒளிரும் விண்மீன் நாள் எனப்பட்டது. நாளை என்பது ஒளிரும் வரும்நாட் பொழுதை குறிப்பது. இரவில் மனித நடவடிக்கை குறைவு என்பதை நோக்குக. நல் > நள் போன்று தான் வடக்கே இந்தியில் "கல்" என்பது நாளைப் பொழுதை குறிக்கும்.  தமிழில் விடிந்த பொழுதை காலை என்கின்றனர். காலை என்பதற்கு வேரியல் பொருள் என்ன? இதுவரை இல்லை. எனவே கல் வேருக்கு ஒளிக் கருத்தும் உண்டு என்றால் வெண்மை கருத்தும் இயல்பாகவே இருக்க வேண்டும். ஆனால் வெண்மையை குறிக்க "கள்" உள்ளதே தவிர அதன் முந்து நிலை "கல்" என்பதை வைத்து நேர் வெண்மைக் கருத்து சொல் இப்போது இல்லை. இனி இது பற்றிய சிந்தனை ஓடும் என்று நம்புகிறேன்.

இனி இதற்கு வலு சேர்க்க அருளியார் விளக்கிய எல் பற்றி காண்போம். யெல் > எல் வெண்மைக் கருத்து உடைய ஒளிக்கருத்து. ஞாயிறு அதன் வெள்ளொளியால் தமிழில் எல்லி எனப்படுகிறது. எலுமிச்சைக்கு ஒளிரும் நிறம் கருதி அப்பெயர் வந்தது என்கிறார் அருளி.

எல் > எர். தெலுங்கில் நாளை என்பது ரேபு என்று சிதைந்து வழங்குகிறது. மூலம் எர்பு = ர்-எ+பு > ரேபு. இதாவது ஒளிரும் வரும்நாட் பொழுது. எருபு என்றால் தெலுங்கில் சிவப்பு நிறம். மீண்டும் நாளை மறுநாள் என்பதை தெலுங்கர் எல்லுண்டி (ఎల్లుండి) என்கின்றனர். எனில் நாளையை குறிக்கும் "எல்" என்ற சொல் இருந்துள்ளது.  எல் என்ற வெண்மை ஒளிமை கருத்து கல் என்பதற்கும் வெண்மை ஒளிமை கருத்து உண்டு என்பதை வலுப்படுத்துகிறது அன்றோ.        
 
On Sun, Oct 16, 2022 at 12:05 AM rajam <ra...@earthlink.net> wrote:
இணையத்தில் ஒரு பதிவுக்கு மறு பதிவு இடுவது எனக்கு இயலாது. நும் வேர்ச்சொல் ஆராய்ச்சி அகராதியை விரைவில் காண விழைகிறேன். 

நன்றி,
ராஜம் 

On Oct 15, 2022, at 8:09 PM, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:

On Sun, Oct 16, 2022 at 5:48 AM rajam <ra...@earthlink.net> wrote:
பதிற்றுப்பத்தில் ஒரு பத்துக்குப் பாட்டுடைத் தலைவனான பல்யானைச் செல்கெழுகுட்டுவன் சேசாத்திரியவர்களின் ‘யாக குண்டத்திலிருந்து’ வெளியே சிதறித்தெறித்த தீப்பொறியோ?!  

மொழியாய்வு, அதிலும் மீட்டுருவம் செய்யும் (reconstruction) முயற்சி என்பது, கற்பனைக்கும் அன்றாட விளையாட்டுக்கும் அப்பாற்பட்டது என்பதை நினைவில் கொள்வது நல்லது. 

வணக்கத்துடன்,
ராஜம்  

ஒரு வேருக்கு பல பொருள் உண்டு. பல் என்ற வெண்மை கருத்தில் வெண்மையாக உள்ள பருத்தி, பஞ்சு, பன்னல் எனப்பட்டது. வெண்மையாக உள்ளதால் பனி எனப்பட்டது.

"பல்" சேர்க்கை, கூட்டக்  கருத்தும் கொண்டது எனவே பல்யானை போலவே பல் யாகசாலை என்பதும் இருக்க வேண்டும் என்பதல்ல.  தொடர்ந்து எப்போதும் வேள்வி இயற்றினால் அதன் தீ ஒளி வீசிக்கொண்டே இருக்கும் என்ற பொருளும் கொள்ளலாம்..

On Oct 15, 2022, at 3:17 PM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Saturday, October 15, 2022 at 8:33:12 AM UTC-7 sseshadri69 wrote:
On Sat, Oct 15, 2022 at 6:17 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Sat, Oct 15, 2022 at 9:39 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
கல் > கள் 

கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது  ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல  என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் >  தெளிவு அறிவை குறிக்கும்.

கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.  கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைகால  business school, economic school போன்றதே இது.   

இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து ஒளிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில் இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று தவறாக பொருள் கூறுகின்றனர்.

C.R. Selvakumar

unread,
Oct 17, 2022, 10:29:37 AM10/17/22
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

உங்கள் முன்வைப்புகள் ஒருசிறிதும் பொருத்தம் இல்லாமல் இருக்கின்றன.
அவை செல்லாதன.

எல் என்பது ஒளி என்பது முற்றிலும் வேறானது. கிரேக்கச்சொல்லோடும் தொடர்புடையது (கிரேக்கத்தில் இருந்து வந்ததன்று என்கிறார்கள்). 

பல் என்றால் வெள்ளையன்று. பல்-பற்றுதல் வினையடி வந்தது.
பற்றுவதற்குப் பலவாக அமைந்த பல்லுக்கும், 

பலவாக அமைந்த வாழைப்பழ சீப்பில் ஒன்றுக்கும்,
தலைவாரும் சீப்பின் ஒரு பகுப்புக்கும், 

திரளாக இருக்கும் பூண்டின் ஒரு கூறுக்கும் என்று பெயர்
பல்-பற்றுதல், பல்-பல.

ஆனால் வெள் என்பது ஒளியையும் வெள்ளையையும் சுட்டும். இதற்கும் இந்திய ஐரோப்பிய மொழிகளில் இனமான சொற்கள் உண்டு. 

//கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.//

பாவாணர் சொன்னது தவறாக இருக்கலாம், ஆனால் அதனை முறையாக முன்வைத்தல் வேண்டும்.

நீங்கள் ஏற்கும்படி எதுவும் சொல்லவும் இல்லை. அவர் கூறியதைத் தவறு என்று சொல்ல உங்களுக்கு ஒரு தகுதியும் கிடையாது. உங்கள் தகுதியை
நிலைநாட்டவில்லை. அருளியாரும், அரசேந்திரனும்

பாவாணர் கூறிய சிலவற்றை மறுத்துரைத்துள்ளார்கள். ஆனால் தக்க காரணங்களை முன்வைத்துள்ளார்கள். 

நீங்கள் இந்தப் பதிவில் உங்கள் மனம் போன போக்கில் எந்தப் பொருத்தமும் முறைமையும் இல்லாமல் எழுதியுள்ளீர்கள். பொருத்தம் இல்லாதவை தொடர்பில்லாதவை எல்லாவற்றையும் இணைத்து

பிறழ பலவற்றையும் கூறியுள்ளீர்கள்.

பேரா. கு. அரசேந்திரனார், கல் என்பதற்கான பொருள்களை மிகப் பொருத்தமாக விரித்து நான்கு தொகுதிகள் எழுதியுள்ளார். முதற்பொருள் கறுமை (தொகுதி-1) இரண்டாவது பொருள்

கூட்டப்பொருள (தொகுதி-2), அடுத்து செலவு, கூர்மை, வெப்பப்பொருள்கள் பற்றி தொகுதி-3.

கடைசியாகத் துளைப்பொருள் (கல்லுதல் தோண்டுதல் முதலானவை) பற்றி தொகுதி-4. 

சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை. 

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 17, 2022, 12:34:25 PM10/17/22
to tamil...@googlegroups.com
On Mon, Oct 17, 2022 at 7:59 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

உங்கள் முன்வைப்புகள் ஒருசிறிதும் பொருத்தம் இல்லாமல் இருக்கின்றன.
அவை செல்லாதன.

எல் என்பது ஒளி என்பது முற்றிலும் வேறானது. கிரேக்கச்சொல்லோடும் தொடர்புடையது (கிரேக்கத்தில் இருந்து வந்ததன்று என்கிறார்கள்). 

பல் என்றால் வெள்ளையன்று. பல்-பற்றுதல் வினையடி வந்தது.
பற்றுவதற்குப் பலவாக அமைந்த பல்லுக்கும், 

பலவாக அமைந்த வாழைப்பழ சீப்பில் ஒன்றுக்கும்,
தலைவாரும் சீப்பின் ஒரு பகுப்புக்கும், 

திரளாக இருக்கும் பூண்டின் ஒரு கூறுக்கும் என்று பெயர்
பல்-பற்றுதல், பல்-பல.

ஆனால் வெள் என்பது ஒளியையும் வெள்ளையையும் சுட்டும். இதற்கும் இந்திய ஐரோப்பிய மொழிகளில் இனமான சொற்கள் உண்டு. 

சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி  என்றால் காலை. எல்லா தென்னக மொழிகளிலும் வெள்ளை நிறம் தான் காலையை குறிக்கப் பயன்கொள்ளப்படுகிறது. எனில் தமிழின் காலையும் வெண்மை நிறத்தில் அமைந்தது தானே? கால் +ஐ = காலை. கால் > கல் மூலத்தில் இருந்து தோன்றியது என்று கொள்ளலாமா? கல் > கள் வெள்ளையாக உள்ள ஒரு போதை நீர் என்பது வலுவான சான்று.  கால் + து = காந்து.   வெண்மையே ஒளிக் கருத்திற்கு அடியாக உள்ளது என்பதற்கு நள் > நாள் (விண்மீன்)  > நாளை (வெளிச்சமான வரும்நாட் பொழுது) என்பதை எடுத்துக் காட்டாக வைத்தேன். இந்த "நாளை" என்பது இந்தி போன்ற மொழிகளில் "கல்" (வெளிச்சமான வரும்நாட் பொழுது) எனப்படுகிறது. அதே நேரம் நேற்று என்பதும் இந்தியில் "கல்" எனப்படுகிறது. நேற்று என்ற "கல்" பொருள் கழிந்த, கடந்த என்ற இறந்த கால பொருளில் வந்தது. 

இதுவரை யாரும் கல் என்றால் வெளுமை என்று குறிக்கவில்லை.  முதன்முதலாக நான் கூறுகிறேன்.

//பல்-/பரு என்றாகும். பல்லுப்பல்லாக உள்ளது பருநல்/பருத்தி. பன்னல் < பருநல். கருநல் > கன்னல் போல. பல்+து = பற்று. பற்றுவது பல். Gear teeth - கோவை மேட்டுப்பாளையம் தொடங்கி ஊட்டிவரை செல்வது பல்லுச்சக்கர ரயில்//

பல் > பால் என்பதற்கு வெண்மை என்ற பொருளை சுட்டுபவர் வேரியல் ஆய்வறிஞர் ப. அருளி, நான் அல்லன். இது அவரது மாமனார் தொடங்கிய தேன்மொழி திங்கள் இதழில் வந்தது. அவர் கசட்டு மேனிக்கு எழுதுபவரா?  பல் > பரு என்றாவது சேர்க்கை, கூடுகை வினையால். பற்று என்றால் பிடித்தல். அதுவும் சேர்க்கை கருத்தே.  

//கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.//

பாவாணர் சொன்னது தவறாக இருக்கலாம், ஆனால் அதனை முறையாக முன்வைத்தல் வேண்டும்.

நீங்கள் ஏற்கும்படி எதுவும் சொல்லவும் இல்லை. அவர் கூறியதைத் தவறு என்று சொல்ல உங்களுக்கு ஒரு தகுதியும் கிடையாது. உங்கள் தகுதியை
நிலைநாட்டவில்லை. அருளியாரும், அரசேந்திரனும்

பாவாணர் கூறிய சிலவற்றை மறுத்துரைத்துள்ளார்கள். ஆனால் தக்க காரணங்களை முன்வைத்துள்ளார்கள். 

நீங்கள் இந்தப் பதிவில் உங்கள் மனம் போன போக்கில் எந்தப் பொருத்தமும் முறைமையும் இல்லாமல் எழுதியுள்ளீர்கள். பொருத்தம் இல்லாதவை தொடர்பில்லாதவை எல்லாவற்றையும் இணைத்து

பிறழ பலவற்றையும் கூறியுள்ளீர்கள்.

பேரா. கு. அரசேந்திரனார், கல் என்பதற்கான பொருள்களை மிகப் பொருத்தமாக விரித்து நான்கு தொகுதிகள் எழுதியுள்ளார். முதற்பொருள் கறுமை (தொகுதி-1) இரண்டாவது பொருள்

கூட்டப்பொருள (தொகுதி-2), அடுத்து செலவு, கூர்மை, வெப்பப்பொருள்கள் பற்றி தொகுதி-3.

கடைசியாகத் துளைப்பொருள் (கல்லுதல் தோண்டுதல் முதலானவை) பற்றி தொகுதி-4. 

சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை. 

முன்னைய ஆய்வாளர்கள் சொல்லாததால் அது தவறும் ஆகாது செல்லாததும் ஆகாது.  நான் புதிதாக இந்த கருத்தை வைக்கிறேன். எனக்குள்ள ஒரே தகுதி நான் தமிழன் என்பது மட்டுமே.  தமிழில் எனக்கு தேர்ச்சி இல்லாவிடினும் கருத்துரிமை அடிப்படையில் இந்த கல் வேரியல் கருத்தை சொல்கிறேன்.    

"புல்"  என்ற வெண்மைக்கான மூல வேரில் இருந்து புலர் என்ற வெளிச்சமான  காலைக் கருத்து வந்தது. புலன் என்பது இதில் இருந்து அறிவையும் குறிக்கும் புலன் என்றானது. வெண்மை - ஒளி - அறிவு ஆகியன உறவுள்ள கருத்துக்களாகும். எனவே "கல்வி" ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுதல் என்பதாக "கல்" என்ற வெண்மை, ஒளிமை கருத்தில் இருந்து வந்தது தோண்டுதல் என்ற கருத்தில் அல்ல.  பொன்னந்தி மாலை என்ற சொற்றொடரை போல வெள்ளந்திக் காலை என்ற சொற்றொடரை பாவாணர் குறிக்கிறார். காலைக்கு வெள்ளந்தி என்று குறிக்கும் போதே வெள்ளை நிறக்  கருத்து வருகிறதே பின் ஏன் தவறாக கருப்பு நிறத்தை இருளின் மூலத்தை காலைக்கும் அதன் வேர் 'கல்'லிற்கும் க்ருய்க்க வேண்டும்.  இப்போது ஐயம் தெளிந்ததா?

இராமகி ஐயா என்ன சொல்கிறார் என்று அறிய விரும்புகிறேன்.

C.R. Selvakumar

unread,
Oct 17, 2022, 2:20:18 PM10/17/22
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை. 

கால் என்பதற்கு 45 பொருள்களுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும்

அறிவார்ந்த பொருள் அடிப்படை கொண்டவை. ஒன்றோடொன்று நெருங்கிய

தொடர்புடையவை. எல்லாவற்றையும் விளக்கினால் ஒரு நூலே ஆகும் அளவு பெருகும்.

கால் என்றால் தொடக்கம், தொடங்குதல், முளைத்தல், மரக்கன்று என்ற பொருளே

காலை என்பதற்கு வேர் (வேர்ப்பொருள்). கால் என்றால் கறுப்பு என்றும் பொருள். இருள்

என்றும் பொருள். கால் என்றால் காற்று என்பது ‘வளைதல்’ என்பதில் இருந்து பெற்றது.

கால் என்றால் தேர்க்கால் என்பது போல சக்கரம் என்பதிலும் வளைதல் வட்டம் என்பதன்

வழி பெற்றது.

உங்கள் கருத்துகளான “வெள்ளை” என்பது பற்றியவை அறவே செல்லாதன! பொருந்தாதன. 

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 17, 2022, 4:14:41 PM10/17/22
to தமிழ் மன்றம்
/// கல் > கள் வெள்ளையாக உள்ள ஒரு போதை நீர் என்பது வலுவான சான்று////

இது தவறான கோணம் 

'களிப்பு' நிலையைக்  கொடுக்கும் பொருளின் பெயர் 'கள்', 
'களிப்பு' தருவதால் அதைக் 'கள்'  என்று சுட்டுகிறார்கள்  

கள்=புலனைக் களவு செய்வது, 
கள் - களி. களித்தல் = வெறித்தல்

தமிழ் இலக்கிய அகராதி
https://ta.wikisource.org/s/4i9d
களி = மகிழ்வு, இன்பம், கள், செருக்கு, தேன், மதம், மயக்கம், வண்டல், கஞ்சி, குழம்பு
களிகூர்தல் = மனம் களித்தல், களிப்பு மிகுதல்,களிமண்
களிகை = மொட்டு, கழுத்தணி, களிதூங்குதல், மகிழ்ச்சி மிகுதல்
களித்தல் = கள் உண்ணல், மகிழ்தல்
களிப்பு = மயக்கம், இன்பம், செருக்கு, மண்பசை
களியாட்டு = கட்குடி, மயக்க ஆட்டம்

Seshadri Sridharan

unread,
Oct 18, 2022, 5:11:52 AM10/18/22
to tamil...@googlegroups.com
On Mon, Oct 17, 2022 at 11:50 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை. 

கால் என்பதற்கு 45 பொருள்களுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும்

அறிவார்ந்த பொருள் அடிப்படை கொண்டவை. ஒன்றோடொன்று நெருங்கிய

தொடர்புடையவை. எல்லாவற்றையும் விளக்கினால் ஒரு நூலே ஆகும் அளவு பெருகும்.

கால் என்றால் தொடக்கம், தொடங்குதல், முளைத்தல், மரக்கன்று என்ற பொருளே

காலை என்பதற்கு வேர் (வேர்ப்பொருள்). கால் என்றால் கறுப்பு என்றும் பொருள். இருள்

என்றும் பொருள். கால் என்றால் காற்று என்பது ‘வளைதல்’ என்பதில் இருந்து பெற்றது.

கால் என்றால் தேர்க்கால் என்பது போல சக்கரம் என்பதிலும் வளைதல் வட்டம் என்பதன்

வழி பெற்றது.

உங்கள் கருத்துகளான “வெள்ளை” என்பது பற்றியவை அறவே செல்லாதன! பொருந்தாதன. 

செல்வா

காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா? அதை முதலில் கூறும்.  ஒன்று பலவாவது,  பலவற்றில் இருந்து அந்த ஒன்றை நோக்கி போவது என்பது தான் எனது வழிமுறை. ascending order, descending order போல. காலை என்பதற்கு வேர் "கல்" தான். வேரியல் ஆய்வாளர் ப அருளி கய் > கய்ல் > கல் என் முன்வைக்கிறார். பாவாணர், அரசேந்திரன்  "கல்" என்று முன்வைக்கின்றனர். ஏற்கனவே கல் வழிவந்த "கள்" குடி தமிழிய மொழிகளில் உண்டு. கள் ஏற்படுத்தும் களிப்பினால் தான் களிப்பு என்ற சொல் தோன்றியது. களிப்பு என்ற சொல் கல் என்றாகவில்லை. இதற்கு பாவாணர் விளக்கமே போதும். 

பாவாணர், அரசேந்திரன் தொடாத வேரியல் பக்கங்களை தொட்டவர் அருளி. கால் என்பதற்கு  நகர்தல் கருத்து உண்டு என்று காட்டியவர் அருளி. பாவாணர் column என்பதை கருத்தில் கொண்டு கால் என்றால் நீண்டு போவது என்று பொருள் உரைத்தார்.  அதை அருளி தவறு என்கிறார். நகர்வதால் உடலை தாங்கும் உறுப்பு கால் எனப்பட்டது. நகர்வதால் கால் > காற்று எனப்பட்டது தமிழில், தெலுங்கில் காலி எனப்பட்டது. நெடிதாக வெட்டிய பள்ளத்தின் ஊடே நீர் நகர்வது வாய்க்கால்,  கால்வாய் எனப்பட்டது. பொழுது நகர்வதால் காலம் எனப்பட்டது. வர்மக்கலையின் காலம் என்றால் அசைவு என்று பொருள். இங்கும் கால் என்பதற்கு "கல்" தான் வேர். எதன்படி என்றால் பின்னோக்கி போவது என்ற அடிப்படையில். இந்த பின்னோக்கி போதலின்படி  "காலை" க்கு, கல் தான் வேர்.

C.R. Selvakumar

unread,
Oct 18, 2022, 10:09:30 AM10/18/22
to tamil...@googlegroups.com
//காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?//

காலை என்னும் சொல்லில் "வெளுமை" என்னும் கருத்துப் பொருள் இல்லை. கரும்பு என்னும்
சொல்லில் நீளம் என்னும் பொருள் கருத்து இல்லை என்பது போல. கரும்பு நீளமாக இருக்கலாம்,
ஆனால் கரும்பு என்னும் சொல் நீளம் என்பதைக் கொண்டு அமையவில்லை.

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 18, 2022, 11:45:20 AM10/18/22
to tamil...@googlegroups.com
On Tue, Oct 18, 2022 at 7:39 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
//காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?//

காலை என்னும் சொல்லில் "வெளுமை" என்னும் கருத்துப் பொருள் இல்லை. கரும்பு என்னும்
சொல்லில் நீளம் என்னும் பொருள் கருத்து இல்லை என்பது போல. கரும்பு நீளமாக இருக்கலாம்,
ஆனால் கரும்பு என்னும் சொல் நீளம் என்பதைக் கொண்டு அமையவில்லை. - செல்வா

காலை என்பதும் பொழுது என்ற வகையில் காலத்தின் ஒரு கட்டத்தை குறிப்பது தான்ஆனால் அது கால் என்ற நகரும் அசையும் கருத்தில் வந்ததல்ல என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். அதற்கு தான் பிற தமிழிய மொழிச் சொற்களை காலைக்கு ஈடாக எடுத்துக்காட்டினேன். மீண்டும் சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி  என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள். இதில் நகர்தல் கருத்தும் இல்லை, கருமைக்  கருத்தும் இல்லை  நேரடியாக வெண்மைக் கருத்தே உள்ளது.   முன்னைய ஆய்வாளர்கள் கருமை கருத்தை  கொண்டு மயங்கியதால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது.   பிற தென்னக மொழிச் சொற்களை ஒப்பிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.

ப. அருளி  கய் > கய்ல் > கல் என்று தான் குறிப்பார்.  இந்த கய் > காய்  என்று விரிந்து அதில் இருந்து காய்தல் என்ற ஒளிமை கருத்து தான் காந்து காந்தி என்ற சொல்லின் நேர் விளக்கம் ஆகும்.  ஒளிமை இருந்தால் வெண்மையும் உண்டு.

On Tue, Oct 18, 2022 at 5:11 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Mon, Oct 17, 2022 at 11:50 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

சேசாத்திரி, உங்கள் கருத்துகள் செல்லாதவை. 

கால் என்பதற்கு 45 பொருள்களுக்கும் மேல் உள்ளன. அவை அனைத்தும்

அறிவார்ந்த பொருள் அடிப்படை கொண்டவை. ஒன்றோடொன்று நெருங்கிய

தொடர்புடையவை. எல்லாவற்றையும் விளக்கினால் ஒரு நூலே ஆகும் அளவு பெருகும்.

கால் என்றால் தொடக்கம், தொடங்குதல், முளைத்தல், மரக்கன்று என்ற பொருளே

காலை என்பதற்கு வேர் (வேர்ப்பொருள்). கால் என்றால் கறுப்பு என்றும் பொருள். இருள்

என்றும் பொருள். கால் என்றால் காற்று என்பது ‘வளைதல்’ என்பதில் இருந்து பெற்றது.

கால் என்றால் தேர்க்கால் என்பது போல சக்கரம் என்பதிலும் வளைதல் வட்டம் என்பதன்

வழி பெற்றது.

உங்கள் கருத்துகளான “வெள்ளை” என்பது பற்றியவை அறவே செல்லாதன! பொருந்தாதன. 

செல்வா

காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா? அதை முதலில் கூறும்.  ஒன்று பலவாவது,  பலவற்றில் இருந்து அந்த ஒன்றை நோக்கி போவது என்பது தான் எனது வழிமுறை. ascending order, descending order போல. காலை என்பதற்கு வேர் "கல்" தான். வேரியல் ஆய்வாளர் ப அருளி கய் > கய்ல் > கல் என் முன்வைக்கிறார். பாவாணர், அரசேந்திரன்  "கல்" என்று முன்வைக்கின்றனர். ஏற்கனவே கல் வழிவந்த "கள்" குடி தமிழிய மொழிகளில் உண்டு. கள் ஏற்படுத்தும் களிப்பினால் தான் களிப்பு என்ற சொல் தோன்றியது. களிப்பு என்ற சொல் கல் என்றாகவில்லை. இதற்கு பாவாணர் விளக்கமே போதும். 

பாவாணர், அரசேந்திரன் தொடாத வேரியல் பக்கங்களை தொட்டவர் அருளி. கால் என்பதற்கு  நகர்தல் கருத்து உண்டு என்று காட்டியவர் அருளி. பாவாணர் column என்பதை கருத்தில் கொண்டு கால் என்றால் நீண்டு போவது என்று பொருள் உரைத்தார்.  அதை அருளி தவறு என்கிறார். நகர்வதால் உடலை தாங்கும் உறுப்பு கால் எனப்பட்டது. நகர்வதால் கால் > காற்று எனப்பட்டது தமிழில், தெலுங்கில் காலி எனப்பட்டது. நெடிதாக வெட்டிய பள்ளத்தின் ஊடே நீர் நகர்வது வாய்க்கால்,  கால்வாய் எனப்பட்டது. பொழுது நகர்வதால் காலம் எனப்பட்டது. வர்மக்கலையின் காலம் என்றால் அசைவு என்று பொருள். இங்கும் கால் என்பதற்கு "கல்" தான் வேர். எதன்படி என்றால் பின்னோக்கி போவது என்ற அடிப்படையில். இந்த பின்னோக்கி போதலின்படி  "காலை" க்கு, கல் தான் வேர்..

C.R. Selvakumar

unread,
Oct 18, 2022, 4:50:26 PM10/18/22
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

தமிழில் வெள்ளென, வைகறை, விடியல், சிறுகாலை, சிறுகாட்டி,
வெள்ளிபூத்தல், நாண்முதல் இப்படிப் பல சொற்கள் விடியும்
காலையைக் குறிக்க உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கருத்துப்பொருளில் உருவானவை. இனமான பிறமொழிச்சொற்களோடு

ஒப்பிட வேண்டுமென்றால் தக்க ஒரு சொல்லோடு ஒப்பிடுங்கள்.

விடியும் முன் இருக்கும் இருளைக் கருக்கல் என்றும் சொல்வார்கள். 

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் வழங்கும்

சொற்களுக்கு ஈடான வெள்ளை என்னும் பொருள்தரும் தமிழ்ச்சொற்கள் உண்டு.

ஆனால் காலை என்பது வெள்ளை என்னும் பொருளில் உருவான சொல்லன்று. 

தெலுங்கில் తెలుపు (தெலுப்பு, Telupu) என்றால் வெள்ளை. தமிழில் தெள் என்னும்

வேர்வழி தெளிவு, தெள்:> தெண் > தெண்மை (clear, white, transparency) போன்ற 

பல சொற்கள் உண்டு. 

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 18, 2022, 10:38:44 PM10/18/22
to tamil...@googlegroups.com
On Wed, Oct 19, 2022 at 2:20 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

தமிழில் வெள்ளென, வைகறை, விடியல், சிறுகாலை, சிறுகாட்டி,
வெள்ளிபூத்தல், நாண்முதல் இப்படிப் பல சொற்கள் விடியும்
காலையைக் குறிக்க உள்ளன.

ஏற்கனவே வெண்மையை குறிக்கும் விள் >  வெள் என்பதை அடியாக கொண்டு காட்டியுள்ளேன்.  விள் = விளக்கு என்றால் தெளிவாக்கு இதாவது, ஒளி பரப்பி தெளிவாக்கு. இந்த விள் தான் விட் > விடி > விழி என்றும் காட்டினேன். இவையும் வெண்மை கருத்து உடையவை. 
 
ஒவ்வொன்றும் ஒவ்வொரு
கருத்துப்பொருளில் உருவானவை. இனமான பிறமொழிச்சொற்களோடு

ஒப்பிட வேண்டுமென்றால் தக்க ஒரு சொல்லோடு ஒப்பிடுங்கள்.

விடியும் முன் இருக்கும் இருளைக் கருக்கல் என்றும் சொல்வார்கள். 

காலைக்கருக்கல் வெள்ளென வரும் ஒளியால் தொலைவதால் தான் வெண்மை அடிப்படையாக கொண்டு பல சொற்களை உருவாகியுள்ளார் என்றேன். அந்த வகையில் கல் - கால் - காலை வெண்மை கருத்து கொண்டவை என்கிறேன். விழி வெள்ளொளியை கருப்பது போல கண் வெண்மையை தான் குறிக்கிறது என்றேன். 

Seshadri Sridharan

unread,
Oct 19, 2022, 6:38:47 AM10/19/22
to tamil...@googlegroups.com

தேடித் தேடி கல்நார் என்ற வெள்ளை நிற கனிமம் பற்றி  அறிய முடிகிறது. இறுக்கத்தின்  காரணமாக கல் எனப்பட்டதா வெண்மையின் காரணமாக இப்பெயர் வந்ததா என்று உறுதி செய்ய முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=H7JNcrEewzE

கல்நார் ஓர் அறியாத அரிய மூலிகை

அனுபோக வைத்தி ருவநீதம் - மூன்றாம்

http://14.139.186.253 › ...

PDF 1995கல்நார் பற்பம்.

C.R. Selvakumar

unread,
Oct 19, 2022, 9:29:40 AM10/19/22
to tamil...@googlegroups.com
சேசாத்திரி,

கரும்பு என்னும் சொல் நீளம் என்னும் கருத்தில் உருவான ஒரு சொல்லன்று என்று கூறினேன்,
அதுபோல 
காலை என்பதும் வெண்மை என்னும் பொருளில் அமைந்த சொல்லன்று. 

வெண்மை என்னும் உங்கள் கருத்து செல்லாதது. 

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 19, 2022, 12:02:50 PM10/19/22
to tamil...@googlegroups.com
On Wed, Oct 19, 2022 at 2:20 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
சேசாத்திரி,

தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளில் வழங்கும்

சொற்களுக்கு ஈடான வெள்ளை என்னும் பொருள்தரும் தமிழ்ச்சொற்கள் உண்டு.

ஆனால் காலை என்பது வெள்ளை என்னும் பொருளில் உருவான சொல்லன்று. 

தெலுங்கில் తెలుపు (தெலுப்பு, Telupu) என்றால் வெள்ளை. தமிழில் தெள் என்னும்

வேர்வழி தெளிவு, தெள்:> தெண் > தெண்மை (clear, white, transparency) போன்ற 

பல சொற்கள் உண்டு. செல்வா

எனக்கு அறிவு மந்தம் அதனால் உடனே சிந்திக்க முடியவில்லை. இன்று மாலை தியானம் செய்யத் தொடங்கிய போது என் மறதியில் அமிழ்ந்த சில சொற்கள் மேலெழும்பி நினைவில் வந்தன. அதை தொடர்ந்து சொற்பிறப்பியல் பேரகர முதலியை துழாவிய போது சில சொற்கள் தட்டுப்பட்டன.

பல் என்பது வெண்மை அல்ல பற்றுதல் என்றீர். பல் பன்மையில் பற்கள் ஆகின்றன. வெண்மையான எழுதும் "பலபம்" சிறுவர் கையில் உள்ளது. இன்னும், சித்த மருத்துவத்தில் உண்ணும் வெண்மையான மருந்துச் சாம்பல் "பற்பம்" - பல்+பம் எனப்படுகிறது.

கல்கண்டு/கற்கண்டு - வெண்மையான கரும்பு சாற்றுத் திரள். இது வரை யாரும் கல்கண்டிக்கிற்கு வேர் பொருள் தரவில்லை. ஏனெனில் கல் என்றால் வெண்மை என்று அறியாதே.
கல்சட்டி - வெண்மையான மாவுக்கல் சட்டி.
கற்றாழை - கல்+தாழை. வெண் சோறு கொண்ட தாவரம்.

ய > ஞ > ந என்ற திரிபில் யண்டு > ஞண்டு > நண்டு - கருமை  நிற நண்டை குறிக்கும்.  கடகம் என்பதும் நண்டே.. கல்+கடகம் = கற்கடகம் என்றால் வெண் நண்டு. ஆனால் இதை சமசுகிருதம் என்கின்றனர். கல்பதரு / கற்பக மரம் வெண்ணிறத்தது என்று படித்த நினைவு தேடினால் கிட்டவில்லை.

அகரமுதலி தந்த சொற்கள்
கற்பூ - ஈயம், கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax), கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை. கற்பூரம் - வெண்மையான சூடம்,

Lead  image
image.png  

Borax
image.png

C.R. Selvakumar

unread,
Oct 19, 2022, 2:56:35 PM10/19/22
to tamil...@googlegroups.com

சேசாத்திரி,

ஏன் நீங்கள் இப்படித் தப்பு தப்பாகப் பொருள் கொள்கின்றீர்கள்?!

“பலபம்” தமிழன்று.

பஸ்பம் என்பது பற்பம். பாஸ்கரன் என்பதைப் பாற்கரன் எனல் வழக்கம்.

இது  கிரந்த எழுத்தைத் தமிழுக்கு இயைபத் தமிழ் எழுத்தாகத் திரித்தல்.

கண்டு என்பது நூற்கண்டு என்பது போன்ற திரள். கண்டு என்பது இனிப்புத்துண்டு.

ஆங்கிலச்சொல்லாகிய candy என்பதும் தமிழ் கண்டு என்பதில் இருந்து வந்தது.

இனிப்புத்திரட்சி இனிப்புக் கண்டு. கல் என்பது தனித்தனியாக கட்டிகட்டியாக

இருப்பதைக் குறிக்கும். நிறம் அன்று. மேலும் கன்னல் என்றால் கரும்புச்சாறு.

கன்> கன்னல் கண்டு கற்கண்டு (கல்> கன், கற் +கண்டு) என்றும் ஆகும்.

கல்சட்டி என்பது கல்லால் ஆன சட்டி. அது மாவுக்கல். வெள்ளை என்பது அங்கு 

பொருளோ கருத்தோ அன்று.

கல்தாழை, கல்லால், கல்லித்தி, கல்லிச்சி போன்றவை காட்டு வகை. Wild என்பது கருத்து.

கடிய என்னும் கருத்து. சில மீன் வகைகளுக்கும் இந்தக் கல் என்னும் முன்னொட்டு உண்டு.

அவை கூரிய முள் போன்ற பகுதிகள் கொண்டிருக்கும். ‘கல்” > கடிய என்பது கருத்து.

வெள்ளை நிறத்தைக் குறிக்கவில்லை. கல்லீரல் (liver) என்பது கருஞ்சிவப்பு நிறம் கொண்ட

உள் உறுப்பு. கல்லுப்பு என்பது கெட்டியான உப்புப்பாறைகளில் இருந்து பெறுவது.

உப்பு வெள்ளையாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. 

உங்களுக்கு தமிழ்சசொற்களின் வேர்ப்பொருளை எவ்வாறு அறிவது என்று தெரியவில்லை, கண்டபடி

தொடர்புபடுத்துகின்றீர்கள் என்பதற்கு உங்களின் அண்மைய பல பதிவுகள் சான்றுகள்.

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

rajam

unread,
Oct 19, 2022, 9:25:50 PM10/19/22
to tamil...@googlegroups.com
/// தேடித் தேடி கல்நார் என்ற வெள்ளை நிற கனிமம் பற்றி  அறிய முடிகிறது. இறுக்கத்தின்  காரணமாக கல் எனப்பட்டதா வெண்மையின் காரணமாக இப்பெயர் வந்ததா என்று உறுதி செய்ய முடியவில்லை. /// 

இறுக்கத்தின்’ காரணம் என்பேன். ‘கன்னி’ என்ற சொல்லின் உட்பொருளை நோக்குக. வேண்டுமென்றால் … ஒரு OBG (Obstetrics and Gynecologist) மருத்துவரிடம் போய்ப் பெண்ணுறுப்பின் வளர்ச்சி/மாற்றம் பற்றியும் அந்தந்தப் பருவங்களில் அந்த உறுப்பின் நிறம்/தன்மை பற்றியும் அறிந்துகொள்ளவும். 

இது அடுத்த சுற்றுக்கான கேள்வி: ‘கற்பு’ என்ற சொல்லை எப்படி அலசி ஆராய்வீர்? 

வணக்கம்,
ராஜம்     

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 20, 2022, 3:31:11 AM10/20/22
to tamil...@googlegroups.com
On Thu, Oct 20, 2022 at 6:56 AM rajam <ra...@earthlink.net> wrote:
/// தேடித் தேடி கல்நார் என்ற வெள்ளை நிற கனிமம் பற்றி  அறிய முடிகிறது. இறுக்கத்தின்  காரணமாக கல் எனப்பட்டதா வெண்மையின் காரணமாக இப்பெயர் வந்ததா என்று உறுதி செய்ய முடியவில்லை. /// 

இறுக்கத்தின்’ காரணம் என்பேன். ‘கன்னி’ என்ற சொல்லின் உட்பொருளை நோக்குக. வேண்டுமென்றால் … ஒரு OBG (Obstetrics and Gynecologist) மருத்துவரிடம் போய்ப் பெண்ணுறுப்பின் வளர்ச்சி/மாற்றம் பற்றியும் அந்தந்தப் பருவங்களில் அந்த உறுப்பின் நிறம்/தன்மை பற்றியும் அறிந்துகொள்ளவும். 

இது அடுத்த சுற்றுக்கான கேள்வி: ‘கற்பு’ என்ற சொல்லை எப்படி அலசி ஆராய்வீர்? 

வணக்கம்,
ராஜம்    

 image.png
image.png

Seshadri Sridharan

unread,
Oct 20, 2022, 4:20:01 AM10/20/22
to tamil...@googlegroups.com
On Thu, Oct 20, 2022 at 12:26 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

சேசாத்திரி,

ஏன் நீங்கள் இப்படித் தப்பு தப்பாகப் பொருள் கொள்கின்றீர்கள்?!

“பலபம்” தமிழன்று.

சரி கரும்பலகையில் எழுதுவது  அயலவர் அறிமுகப்படுத்திய முறை என்றால் பலபம் அயற்சொல் என்று விட்டுவிடலாம்.

பஸ்பம் என்பது பற்பம். 

சாம்பலுக்கு சமசுகிருதத்தில்  "பஸ்ம" என்று தான் உள்ளது "பஸ்பம்" இல்லை. பற்பம் என்பதே சரி. ஆனால், பேச்சு  வழக்கில் பஸ்பம் என்றாகிவிட்டது.  பிராபத்து ரஞ்சன் சர்க்கார் உலோக பற்பங்கள் கரைக்க முடியாதவை உடலிலேயே சாகும் வரை தங்கிவிடும் ஆபத்தானவை என்கிறார். இது சித்த மருத்துவ முறை என்கிறார். இது ஆயுர் வேதம் அல்ல. எனவே இது சமசுகிருத சொல்லும் அல்ல. மேனாள் குடியரசு தலைவர் K R நாராயணன் பற்ப மருந்தை வெளியேற்ற முடியாமல் இறந்தார்.  பற்பம் என்ற சொல்லாட்சி சித்த மருத்துவ நூல்களில் பழமை முதலே வழங்கி வருகிறது. பல் - வெண்மை கருத்து வேர் விளக்கத்தில் ப. அருளி தமிழ் சொல்லாகவே பற்பத்தை விளக்குகிறார். நான் பேரா. அரசேந்திரனோடு அலைபேசியில் பேசும்போது ப. அருளி ஆழமாக சிந்திப்பவர் ஆனால் பிறரது சொல்லாய்வு முறையை ஏற்கமாட்டார் மாறாக குறை கூறுவார் என்றார். அருளி பெருஞ்சித்திரனாரின் மாப்பிள்ளை அரசேந்திரன் பெருஞ்சித்திரனார்க்கு மாணவர் முறை.  அருளியின் யா நூலை நான் அரசேந்திரனிடம் இருந்தே பெற்றேன் படி எடுத்துக்கொண்டேன்.

கண்டு என்பது நூற்கண்டு என்பது போன்ற திரள். கண்டு என்பது இனிப்புத்துண்டு.

ஆங்கிலச்சொல்லாகிய candy என்பதும் தமிழ் கண்டு என்பதில் இருந்து வந்தது.

இனிப்புத்திரட்சி இனிப்புக் கண்டு. கல் என்பது தனித்தனியாக கட்டிகட்டியாக

இருப்பதைக் குறிக்கும். நிறம் அன்று. மேலும் கன்னல் என்றால் கரும்புச்சாறு.

கன்> கன்னல் கண்டு கற்கண்டு (கல்> கன், கற் +கண்டு) என்றும் ஆகும்.

கல்கண்டு படிகாரம் போல வெண்மை கருத்தினாலேயே அப்பெயர் வந்தது. தனித்தனி துண்டு என்ற பொருள் "கல்" லிற்கு இல்லை.

கல் > கள்  > கள்ளி > கண் - கண்டங்கத்தரி முள்ளுடையது. எனவே உமது கருத்துப்படி கற்றாழை முள்ளுடையது என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு.  எனவே அதை விட்டுவிடலாம்.

பிற சொற்கள் என்னவாயின? 
அகரமுதலி தந்த சொற்கள்
கற்பூ - ஈயம், கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax), கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை. கற்பூரம் - வெண்மையான சூடம்,

கற்கண்டு                                                                                 
image.png   image.png

கல்சட்டி என்பது கல்லால் ஆன சட்டி. அது மாவுக்கல். வெள்ளை என்பது அங்கு 

பொருளோ கருத்தோ அன்று.

கல்தாழை, கல்லால், கல்லித்தி, கல்லிச்சி போன்றவை காட்டு வகை. Wild என்பது கருத்து.

கடிய என்னும் கருத்து. சில மீன் வகைகளுக்கும் இந்தக் கல் என்னும் முன்னொட்டு உண்டு.

அவை கூரிய முள் போன்ற பகுதிகள் கொண்டிருக்கும். ‘கல்” > கடிய என்பது கருத்து.

வெள்ளை நிறத்தைக் குறிக்கவில்லை. கல்லீரல் (liver) என்பது கருஞ்சிவப்பு நிறம் கொண்ட

உள் உறுப்பு. கல்லுப்பு என்பது கெட்டியான உப்புப்பாறைகளில் இருந்து பெறுவது.

உப்பு வெள்ளையாக இருப்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. 

உங்களுக்கு தமிழ்சசொற்களின் வேர்ப்பொருளை எவ்வாறு அறிவது என்று தெரியவில்லை, கண்டபடி

தொடர்புபடுத்துகின்றீர்கள் என்பதற்கு உங்களின் அண்மைய பல பதிவுகள் சான்றுகள். - செல்வா

உமது முடிவில் அவசரம் வேண்டாம் சற்று பொறும் . இன்னும் தேடி சில சொற்களை அகரமுதலியில் இருந்து எடுத்துள்ளேன். ஏற்கனவே ஈயம் (கற்பூ)  படிகாரம் (கற்காரம்)  பற்றி ஏதும் கூறவில்லை நீர். கீழே இன்னும் அதிக சொற்கள் வெண்மை பொருளில்.

கற்பு - முல்லை (வெந்நிறத்தது)

கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை.

கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக.

கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

image.png  image.png

Seshadri Sridharan

unread,
Oct 20, 2022, 4:24:11 AM10/20/22
to tamil...@googlegroups.com

C.R. Selvakumar

unread,
Oct 20, 2022, 11:26:24 AM10/20/22
to tamil...@googlegroups.com

சேசாத்திரி,

ஒரு பொருளுக்குப் பல பண்புகள் இருக்கலாம். அப்பொருளுக்கான சொல் ஒன்று எதன் அடிப்படையில் அமைந்த்து என்பதை முறையாக ஆயவேண்டும். கரும்பு நீளமாக இருபப்தால் கரு என்றால் நீளம் என்று பொருள் கொள்ளக்கூடாது.  இந்த அடிபப்டையை நீங்கள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை.

கல் உப்பு என்பது கல் (உப்புப் பாறை) -இல் இருந்து பெற்ற உப்பு. சிறுசிறு கட்டியாக இருக்கும் உப்பு என்றும் பொருள். கற்கண்டு என்பதில் கல் என்பது கல்லாக (படிகமாக) உருவான இனிப்புத்துண்டு.  

தமிழ்ப்பேரகராதி (Lexicon): 

கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)

பஸ்மம் என்பதைப் பஸ்பம் என்று சொல்லுதல் தமிழில் வழக்கம். பஸ்பம் > பற்பம் என்று சொல்லவந்தேன்.

சமஸ்கிருதம் என்பதை சமற்கிருதம் என்பதைப் போல. 

கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)

கற்பூ என்பது mountain plant என்றும்  ஒருவகை ironwood என்றும் சொல்கிறது அகராதிகள்.

இவை மலை, கல் என்பதன் அடிப்படையில் உருவான பெயர். முன்னர் wild என்று நான் சொன்னவற்றிலும் சில

மலை என்னும் பொருளில் அமைந்தவை. மலையில் கிடைப்பதைக் கடுங்காட்டில் கிடைப்பதாகக் கொள்வது

மரபு. 

கற்காரம் என்பதற்குப் பேரகராதி (Lexicon)  தரும் பொருள்களை நோக்குங்கள்:

கற்காரம்¹ kaṟ-kāram , n. < id. + kāra. Stone-work; கல்வேலை. புலிமுகமான சோபானத் துக்கு வேண்டும் பொன்னிட்டுக் கற்காரஞ்செய்வித்தான் (S.I.I. iii, 86).

கற்காரம்² kaṟ-kāram , n. < id. + kṣāra. A kind of caustic mineral; காரக்கல்.

காரக்கல் என்று சொல்வதைப் பாருங்கள். 

விளாம்பழத்துக்குக் கற்காய் என்பதன் காரணம் அதன் ஓடு கெட்டியாக இருப்பதால்.

விளாம்பழத்துக்கும் வெண்மைக்கும் என்ன பொருத்தம்?! 

விளா என்பது ஒரு மரம்.  ஆங்கிலத்தில்  Wood-apple என்கின்றனர். இதனை விள, விளவு, விளம், விளரி எனத் தமிழில் சொல்லுகின்றனர். விளா மரத்தின் பழம் விளாம்பழம். விளா என்பதற்கு உருண்டை வட்டம் என்றும் பொருள் உண்டு. உழவில் ஒரு வட்டப்பாதையை விளா என்பார்கள் 'உழவில் வருஞ்சுற்று” என்று அகராதிகள் குறிக்கும். அதாவது வட்ட வட்டமாகப் பரவுவதையும் விளவுதல், விளாவுதல் என்று சொல்வார்கள். 

விளாம்பழம் உருண்டையாக இருப்பதால் அதற்கு விளாம்பழம் என்று பெயர். இதற்கும்

வெள்ளைக்கும் ஏதும் தொடர்பில்லை. 

கற்பூரவல்லி வாழைக்கு ஏன் அப்பெயர் எனத் தெரியவில்லை. இனிப்பின் காரணம் பற்றி
இருக்கலாம். 

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 20, 2022, 10:25:43 PM10/20/22
to tamil...@googlegroups.com
On Thu, Oct 20, 2022 at 8:56 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

//கற்காரம்² kaṟ-kāram , n. < id. + kṣāra. A kind of caustic mineral; காரக்கல்.//

இரண்டாவதாக மூன்றாவதாக இரு பொருளை குறிக்கின்றதே அதை ஏன் விட்டுவிட்டீர். அதை  கிழே ஒட்டியுள்ளேன்

image.png

காரக்கல் என்று சொல்வதைப் பாருங்கள். 

Seshadri Sridharan

unread,
Oct 20, 2022, 10:30:20 PM10/20/22
to tamil...@googlegroups.com
On Thu, Oct 20, 2022 at 8:56 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

சேசாத்திரி,

ஒரு பொருளுக்குப் பல பண்புகள் இருக்கலாம். அப்பொருளுக்கான சொல் ஒன்று எதன் அடிப்படையில் அமைந்த்து என்பதை முறையாக ஆயவேண்டும். கரும்பு நீளமாக இருபப்தால் கரு என்றால் நீளம் என்று பொருள் கொள்ளக்கூடாது.  இந்த அடிபப்டையை நீங்கள் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை.

கல் உப்பு என்பது கல் (உப்புப் பாறை) -இல் இருந்து பெற்ற உப்பு. சிறுசிறு கட்டியாக இருக்கும் உப்பு என்றும் பொருள். கற்கண்டு என்பதில் கல் என்பது கல்லாக (படிகமாக) உருவான இனிப்புத்துண்டு.  

தமிழ்ப்பேரகராதி (Lexicon): 

கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)

கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)

கற்பூ என்பது mountain plant என்றும்  ஒருவகை ironwood என்றும் சொல்கிறது அகராதிகள்.

இவை மலை, கல் என்பதன் அடிப்படையில் உருவான பெயர். முன்னர் wild என்று நான் சொன்னவற்றிலும் சில

மலை என்னும் பொருளில் அமைந்தவை. மலையில் கிடைப்பதைக் கடுங்காட்டில் கிடைப்பதாகக் கொள்வது

மரபு.

விளாம்பழத்துக்குக் கற்காய் என்பதன் காரணம் அதன் ஓடு கெட்டியாக இருப்பதால்.

விளாம்பழத்துக்கும் வெண்மைக்கும் என்ன பொருத்தம்?! 

கற்பூரவல்லி வாழைக்கு ஏன் அப்பெயர் எனத் தெரியவில்லை. இனிப்பின் காரணம் பற்றி
இருக்கலாம். 

செல்வா

இல் - இள் என்றால் ஒளிரும் வெண்மை.  இலங்கு கதிர். இள் - இளி  > வெளிர்த பல்லை காட்டி சிரி. "ஈய்" ன்னு பல்லை இளிக்காதே. 

ஈயம் -  வெண்மை, பாதிரி மரம். வெண்ணிறப்பூ பூப்பதால் பாதிரி ஈயம் எனப்பட்டது. "ஈயம் பூசறது கலாய் பூசறது" என்று கூவிக்கொண்டே வருவான் ஈயம் பூசுபவன், கலாய் பூசுபவன். கல் > கலாய் - வெண்மையான ஈயம். தகரத்தை தான் அப்படி பூசுகிறான். Tin is a silvery-coloured metal.

image.png

//கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)//

பளிங்கு (Sphatikam - படிகம்) என்றால் வெண்மை கருத்தை குறிப்பதை காண்க. கல் கண்டு என்பதும் வெண்மை குறித்தே வழங்குகிறது.

கற்பு (கல் +பு) என்பதற்கு சேனாவரையர் வெண்மையான முல்லை பூவை சுட்டுகிறார். இங்கே கல் என்பது வெண்மை.

கற்பூ (கல் + பூ) - ஈயம்

கற்காரம் (கல் + காரம்) - வெண்காரம், படிகாரம் (borax). கல், வெண்,  படி ஆகியன வெண்மை கருத்து கொண்டவை.  பல் > பட் > பட்ட பகல் = தெளிவான பகல், வெளிச்சமான பகல். பட் > படி > படு கொலை- எல்லாருக்கும் தெரியும்படியான கொலை. எனவே படி என்றால் வெண்மை. கற்காரம், வெண்காரம் படிகாரம் ஆகியன வெண்மை கருத்தால் எழுந்தவை.  

கற்புரை (கல் + புரை) - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை. புரை என்றால் மேலெழும்பும் புகை. இதாவது மேலெழும்பும் வண புகை தான் கற்புரை.

கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக. விள் என்றால்  வெண்மை என்றவர் ப அருளி. இதற்கு விளாம்பழத்தை காட்டுகிறார்.

கற்பம் (கல் +வம்) - (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

//கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)//  பூரம் என்பது camphor அல்ல.

கற்பூர வாழை என்பது இனிமை, மணம் குறித்து வந்ததல்ல.  பூரம் என்றால் நிரம்பிய, படிந்த எனப் பொருள். அப்பழம் உள்ளேயும் சாம்பல் படிந்த வெண் நிறத்தில் இருக்கும், வெளியேயும் வெண்மை படிந்திருக்கும்.  

இலங்கு கதிரவன். இதில் கதிர் என்பதும் வெண்மை கருத்தில் தோன்றியதே.  கல் + து = கது > கதி - கதிர் = வெண்மையான ஒளிக்கற்றை.

C.R. Selvakumar

unread,
Oct 21, 2022, 2:04:19 PM10/21/22
to tamil...@googlegroups.com

சேசாத்திரி,

விள் என்பது வெள் > வெள்ளை என்பதன் வேராக இருப்பதில் எனக்கு மறுப்பில்லை.

ஆனால் கல் என்றால் வெண்மை அன்று. 

கற்காரம் என்பது கற்பொடி போன்ற உருவில் இருப்பதால் அப்பெயர். அது வெண்மையாக இருக்கும் (borax)  என்பதால் வெண்காரம் என்றும் பெயர். எனவே கல்=வெண்மை என்பது தவறான கருத்து. யானைக்குப்

பல பெயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு கருத்து பற்றி அமைந்தது. கைமா என்றால்

கைபோன்ற தும்பிக்கை உடைய விலங்கு. யா என்றால் கறுப்பு. யானை என்பது கரிய விலங்கு,

எனவே கை என்றால் கறுப்பு என்று பொருள் கொள்ளக்கூடாது. 

நீங்கள் தவறான அணுகுமுறையில் பொருள் கொள்கின்றீர்கள். 

செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Oct 22, 2022, 1:16:39 AM10/22/22
to tamil...@googlegroups.com
On Fri, Oct 21, 2022 at 11:34 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

சேசாத்திரி,

விள் என்பது வெள் > வெள்ளை என்பதன் வேராக இருப்பதில் எனக்கு மறுப்பில்லை.

ஆனால் கல் என்றால் வெண்மை அன்று. 

கற்காரம் என்பது கற்பொடி போன்ற உருவில் இருப்பதால் அப்பெயர். அது வெண்மையாக இருக்கும் (borax)  என்பதால் வெண்காரம் என்றும் பெயர். எனவே கல்=வெண்மை என்பது தவறான கருத்து. யானைக்குப் பல பெயர்கள் இருக்கலாம். ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு கருத்து பற்றி அமைந்தது. கைமா என்றால் கைபோன்ற தும்பிக்கை உடைய விலங்கு. யா என்றால் கறுப்பு. யானை என்பது கரிய விலங்கு, எனவே கை என்றால் கறுப்பு என்று பொருள் கொள்ளக்கூடாது. நீங்கள் தவறான அணுகுமுறையில் பொருள் கொள்கின்றீர்கள்.  - செல்வா

//நான் சென்னைப் பல்கலைப் பேரகராதியில் கல்- எனத் தொடங்கும் எல்லாச் சொற்களையும் பார்த்தேன். ஒன்றுக்குக் கூட கல் என்றால் வெள்ளை என்ற பொருள் இல்லை.//

தமிழில் சொல்லாய்வு ஒரு நெறிப்படி (formula) மேற்கொள்ளப்படுகிறது. அதில் வடிவம், வண்ணம் என ஒத்த கருத்துள்ள சொற்கள் இன்ன பிற எல்லாம் கருத்தில் கொள்ளப்பட்டு தொடக்க வேர் இது என்று கொள்ளப்படுகிறது.  இல் -  இள் வெண்மை, ஒண்மை என்றால் அதே எழுத்து இடம் பெற வேண்டும் என்று இல்லை.  இள்- இளி என்றால் வெண் பல்லை காட்டுதல் என்று பொருள். அதை வைத்து இளக்காரம், இளப்பம் என்ற பல்லைக்காட்டி நகுக்கும் சொல் உருவானது.  இள் என்று தொடங்கும் சொல் இல்லை அதனால் ஏற்க முடியாது என்பது சிறுபிள்ளை ஒட்டராம்.

பள்ளியில் மூன்றாம் நான்காம் வகுப்பில் சேர்த்து எழுதி, பிரித்து எழுதி கற்றுக்கொடுப்பார்கள்.  அதன்படி  (ஈயம்) > கற்பூ - கல் + பூ என்று மாணவர் பிரிப்பர். கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax) - கல்+காரம் என்று மாணவர் பிரிப்பர். கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை, கற்பூரம் - வெண்மையான சூடம் என்பதை (கல் + பூரம்) என்று பிரிப்பர். கற்பு - முல்லை (வெந்நிறத்தது) மாணவர் கல் + பு என்று பிரிப்பர். கல் + புரை > கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே இங்கே கல் என்றால் வெண்மை தான். சாம்பிராணி வெண்மை. கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக. மாணவர் கல் + காய் என்று பிரிப்பர். 

கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

உ > இ > எ > அ என்ற வரிசையில் வேரியலார்  சொற்களை தேடுகின்றனர், பொருத்துகின்றனர். அதன்படி சில இடங்களில் சொற்கள் இலக்கியத்திலோ, கல்வெட்டிலோ பேச்சு வழிக்கிலோ இன்று இல்லாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு  குல் > கில் > கெல் > கல் என்பதே அது.  இப்படியே சொற்கள் மேலும் மேலும் விரியும். கள் வெண்மை என்றால் அதன் வேர் கல் என்று முடிபு கொண்டு கல் என்ற வரிசையில் சொற்களை தேட முற்படவேண்டும்.

பேரா. செல்வா கற்பம் (சாம்பல்), கற்பு (முல்லை), கற்புரை (சாம்பிராணி), கல்பூரம்  இவற்றை எல்லாம் கெட்டியான இறுகிய என்று சொல்லி தள்ளமுடியவில்லை எனவே இவற்றை அப்படியே skip செய்துவிடுகிறார். kaleang (கலாய்) என்ற மலாய் சொல் தகரத்தை குறிக்கும் சொல். அதில் வெண்மையை குறிக்கும் கல் வேர் உள்ளது.  தமிழின் தகரம் தக்கை என்ற பொருளில் மட்டும் வழங்குவது அல்ல வெண்மை என்ற பொருளிலும் வழங்குகிறது.  தகதக - ஒளிரும் வெண்மை கருத்து.    
Reply all
Reply to author
Forward
0 new messages