கல் > கள் வெண்மை கருத்து வேர்

81 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Oct 15, 2022, 12:12:35 AM10/15/22
to வல்லமை
கல் > கள் வெண்மை கருத்து வேர் 

கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது  ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு 
கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல  என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் >  தெளிவு அறிவை குறிக்கும்.

கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.  கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைக்கால  business school, economic school போன்றதே இது.     

சக்திவேலு கந்தசாமி

unread,
Oct 15, 2022, 1:20:24 AM10/15/22
to vall...@googlegroups.com
சொற் பொருள் அறிதொறும் அறிதொறும் தமிழின் நுண்மை புலப்படுகிறது.  நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQM%3DB6-SDb2auMpZQurO9XHQcRY4Tg2rZ5jQfD7BWWzCg%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Oct 15, 2022, 8:45:29 AM10/15/22
to வல்லமை
இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து  ஒலிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

seshadri sridharan

unread,
Oct 15, 2022, 11:30:30 AM10/15/22
to வல்லமை
On Sat, 15 Oct 2022 at 18:15, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
On Sat, 15 Oct 2022 at 09:42, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
கல் > கள் வெண்மை கருத்து வேர் 

கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம். இதன் வேர் 'கல்' ஆகும். வெண்மை என்பது  ஒளிர்வது என்ற பொருளில் கருத்த இரவு கழிந்து ஒளிரும் பகல் நிகழ்வு கல் எனப்பட்டது. வடக்கே இன்றும் 'கல்'>நாளை என்ற பொருளில் பகலை குறித்தது. தமிழில் காலை என்பதும் ஒளிர்வு 
கருத்தால் கல் வேரில் இருந்து வந்ததே. காலை என்பது மலையாளத்தில் வெளுப்பு, கன்னடத்தில் belage. ஒள் - நள்>நாள் > நாளை ஒளிர்வு கருத்தே. தெலுங்கில் காலையை குறிக்கும் தெல்லவாரி என்பது தெல் > தெல்ல  என்ற வெண்மைப் பொருளில் தோன்றியது. தெல் > தெலிவி - அறிவு என்று வழங்குகிறது. தமிழில் தெல் > தெள் >  தெளிவு அறிவை குறிக்கும்.

கல்விக்கு 'கல்' என்றால் தோண்டுதல் என்ற பொருளை பாவாணர் தருவதாகத்  தெரிகிறது. ஆனால் இது தவறு.  கல் என்ற வெண்மை > ஒளிர்வு வேரின் அடிப்படையில் தான் கல்வி என்ற சொல்லும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதாவது ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுவது என்பதே அது. கல்வி பயிற்றும் இடமே கலை என்று வழங்கியிருக்க வேண்டும். இதற்கு வடகலை, தென்கலை என்ற வைணவப் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.   வடகலை என்றால் northern school of thought. தென்கலை என்றால் southern school of thought. அண்மைக்கால  business school, economic school போன்றதே இது.     

இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து  ஒளிக் கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில் இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று தவறாக பொருள் கூறுகின்றனர்.

இந்த பல் என்ற வெண்மை கருத்து வேர் "புல்"  என்ற வெண்மைக்கான மூல வேரில் இருந்து கிளைத்தது. பொழுது புலர்ந்தது என்றால் இருள் விலகி வானம் வெளுத்த வைகறையை குறிக்கும். மலையாளிகள் வைகறையை "புலரி" என்றும் "புலர் வேளை" என்றும் குறிக்கின்றனர். புலப்படு என்றால் என்றால் கண்ணிற்கு தெளிவாகத் தோன்று எனப்பொருள். புலன் என்பது இதில் இருந்து அறிவையும் குறிக்கும் புலன் என்றானது. வெண்மை - ஒளி - அறிவு ஆகியன உறவுள்ள கருத்துக்களாகும்.

kanmani tamil

unread,
Oct 15, 2022, 2:23:10 PM10/15/22
to vallamai
புதிய கோணம்; சிந்திக்க வேண்டியது. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Oct 15, 2022, 9:15:21 PM10/15/22
to வல்லமை
கல் என்றால் வெண்மை கருத்து என சொன்னேன். இனி அதன் வழி கண் என்ற சொல்லை காண்போம். பலரும் கருமை கருத்தையே கண்ணிற்கு காட்டுகின்றனர். இதை இன்னொரு வேர் விளர்சி சொற்கள் கொண்டு பார்த்தால் தவறு என விளங்கும். 

விள் - வெள் = வெண்மை கருத்து வேர். விளாங்காய் வெண்ணிற ஓட்டை கொண்ட காய். 

விள் என்ற பிளவுக் கருத்து வழி ஒளிக் கருத்தும் தோன்றும். விடியல் என்றால் ஒளிபடரும் வைகறை. விடி > விழி. விழி கண்ணையும் குறிக்கும். விழித்து பார் என்ற ஏவலையும் குறிக்கும். விள் வெண்மையை குறிக்கும் என்றால் விழி என்ற உறுப்பும் வெண்மை கருத்து உடையது தானே? எனில் கள் > கண் வெண்மையான கண் படலத்தை குறிப்பதாகத் தானே இருக்கவேண்டும்? ஆனால் முறணாக கருப்பு என்று வேர் பொருள் சொல்கின்றனரே? ஏனென்றால் கல் என்பதற்கு வெண்மைக் கருத்தும் உண்டு என்று உய்துணராததே காரணம். 

இங்கே மீண்டும் வெண்மை - ஒளிர்வு ஆகியவற்றுக்குள்ள தொடர்பால் விழி என்ற சொல்லின் பொருள் கொண்டு கண்ணின் பொருளும் வெண்மை என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. விள் வேர் விளக்கம் ஏற்கனவே ப. அருளி விளக்கியுள்ளார்.  

N. Ganesan

unread,
Oct 16, 2022, 6:24:23 AM10/16/22
to வல்லமை
கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.

கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)
கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
-----------------------------------------------------

கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.
கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள்  இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.
கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.

பொதுவாக, வளைநா ஒலி (ரெட்ராஃப்லெக்ஸ்) உள்ள சொல்ல்லுக்கும். இல்லாத சொல்லுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு.
கல் வேறு, கள் வேறு. கல்,கள் சொற்களை ஆராய்ந்தால் உணரலாம். சில காட்டினேன்.

NG

N. Ganesan

unread,
Oct 16, 2022, 6:28:31 AM10/16/22
to வல்லமை
On Saturday, October 15, 2022 at 7:45:29 AM UTC-5 சிலம்பன் நீலன்   wrote:

இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து  ஒலிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

ப- வ- என மாறுவதுண்டு. பகு- > வகு-, பால் > வால். வாலுக (வெள்ளை மணல்).
வாலறிவன். வாலறிவு = கேவல ஞானம் என்னும் சமண சமயச் சொல்லாடலை
வாலறிவன் *வெண்மை அறிவு, தூய்தான அறிவு, முற்றறிவு* என மொழிபெயர்த்தார் வள்ளுவர்.

நா. கணேசன்
 
N. Ganesan

unread,
Oct 16, 2022, 6:54:52 AM10/16/22
to vall...@googlegroups.com, Niranjan Bharathi

> பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இதில் பல் என்பது யாக குண்டத்தில்
> இடும் விறகால் "ஒளிரும்" யாகசாலை என்ற பொருளில் தான் சிறப்புப் பண்பாக
> குறித்துள்ளனர். ஆனால் பலரும் இதை பல யாக சாலைகளை கட்டியவன் என்று
> தவறாக பொருள் கூறுகின்றனர்.

பல்யாகம் என்பது பல யாகம். இதற்கு வெள்ளையான யாகம் என எங்கும் பொருள் இல்லை.

மதிரை மாநகரிலும், மற்ற இடங்களிலும் பெரிய அசுவமேத யாகங்கள் நடத்தியுள்ளான்
இந்த முதுகுடுமிப் பெருவழுதி. முதுகுடுமி - பழமையான குடும்பத்தின் வாரிசாக வந்தவன்.
அதாவது, சிந்துவெளியில் இருந்து வந்த வேளிர் வழி வந்தோன். எனவே, பல்வேறு யாகங்கள்
செய்தான்.

மதுரை அருகே முதலைக் குளம் உண்டு. அங்கே, குளக்கரையில் முதலையை (மகரத்தை)
யாகம் செய்தவன். தமிழ் ப்ராமிக் கல்வெட்டு அங்கே உண்டு. பெருவழுதி என்ற காசுகள்
கிடைக்கின்றன. பெருவழுதி என்னும் அரிய வெள்ளி மோதிரம் கிடைத்துள்ளது.
https://groups.google.com/g/santhavasantham/c/rDHY3FOgS04/m/_SJdBwQtAAAJ

பெருவழுதி என்னும் தமிழ் ப்ராமி (தமிழி) எழுதிய நாணயங்கள் பல கரூரிலும், மதுரையிலும்
கிடைக்கின்றன. அதில் உள்ளது மகரம் என விளக்கினேன். சங்ககாலத் தமிழ் நாணயவியலின்
தந்தை தினமலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவு,
இன்ஸ்டிட்யூட் ஒப் ஆசியன் ஸ்டடீஸ், .. எனப் பல இடங்களில் நேரில் வாழ்த்திப் பேசினார்.
http://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html
https://www.vallamai.com/?p=49442

நா. கணேசன்

> கள் - வெண்மை, ஒளிர்வு கருத்து வேர் கொண்டது. தென்னம் கள், பனம் கள் ஆகியன வெண்மை நிறம்.
கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.

கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)
கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
-----------------------------------------------------

கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.
கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள்  இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.
கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.

பொதுவாக, வளைநா ஒலி (ரெட்ராஃப்லெக்ஸ்) உள்ள சொல்ல்லுக்கும். இல்லாத சொல்லுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு.
கல் வேறு, கள் வேறு. கல்,கள் சொற்களை ஆராய்ந்தால் உணரலாம். சில காட்டினேன்.

NG

On Saturday, October 15, 2022 at 7:45:29 AM UTC-5 Seshadri wrote:

இதே போல் பல் > பால் என்பன வெண்மையை குறிக்கும். பல் > பள் வெண்மைக் கருத்து  ஒலிக்கருத்திற்கு அடியாக உள்ளது. பளபள, பளப்பு. பல் > பள் > பட் என நீண்டு பட்டப்பகல். இதாவது ஒளிரும் பகல். வெளிச்சமான பகல்.  பட்டு - பளபளவென ஒளிரும் நூலிழை.    

ப- வ- என மாறுவதுண்டு. பகு- > வகு-, பால் > வால். வாலுக (வெள்ளை மணல்).
வாலறிவன். வாலறிவு = கேவல ஞானம் என்னும் சமண சமயச் சொல்லாடலை
வாலறிவன் *வெண்மை அறிவு, தூய்தான அறிவு, முற்றறிவு* என மொழிபெயர்த்தார் வள்ளுவர்.

நா. கணேசன்
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Oct 17, 2022, 5:53:00 AM10/17/22
to vall...@googlegroups.com
On Sun, 16 Oct 2022 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.

கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)
கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
-----------------------------------------------------

கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.
கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள்  இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.
கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.

கல் கருமை வேர் மட்டுமே கொண்டதல்ல வெண்மை வேரும் கொண்டது. இதை யாரும் இதுவரை சொல்லவில்லை நான் தான் முதன்முதலாக சொல்லுகிறேன். நள் >  நாள் > நாளை ஒளிரும் விண்மீன் நாள் எனப்பட்டது. நாளை என்பது ஒளிரும் வரும்நாட் பொழுதை குறிப்பது. இரவில் மனித நடவடிக்கை குறைவு என்பதை நோக்குக. நல் > நள் போன்று தான் வடக்கே இந்தியில் "கல்" என்பது நாளைப் பொழுதை குறிக்கும்.  தமிழில் விடிந்த பொழுதை காலை என்கின்றனர். காலை என்பதற்கு வேரியல் பொருள் என்ன? இதுவரை இல்லை. எனவே கல் வேருக்கு ஒளிக் கருத்தும் உண்டு என்றால் வெண்மை கருத்தும் இயல்பாகவே இருக்க வேண்டும். ஆனால் வெண்மையை குறிக்க "கள்" உள்ளதே தவிர அதன் முந்து நிலை "கல்" என்பதை வைத்து நேர் வெண்மைக் கருத்து சொல் இப்போது இல்லை. இனி இது பற்றிய சிந்தனை ஓடும் என்று நம்புகிறேன்.

இனி இதற்கு வலு சேர்க்க அருளியார் விளக்கிய எல் பற்றி காண்போம். யெல் > எல் வெண்மைக் கருத்து உடைய ஒளிக்கருத்து. ஞாயிறு அதன் வெள்ளொளியால் தமிழில் எல்லி எனப்படுகிறது. எலுமிச்சைக்கு ஒளிரும் நிறம் கருதி அப்பெயர் வந்தது என்கிறார் அருளி.

எல் > எர். தெலுங்கில் நாளை என்பது ரேபு என்று சிதைந்து வழங்குகிறது. மூலம் எர்பு = ர்-எ+பு > ரேபு. இதாவது ஒளிரும் வரும்நாட் பொழுது. எருபு என்றால் தெலுங்கில் சிவப்பு நிறம். மீண்டும் நாளை மறுநாள் என்பதை தெலுங்கர் எல்லுண்டி (ఎల్లుండి) என்கின்றனர். எனில் நாளையை குறிக்கும் "எல்" என்ற சொல் இருந்துள்ளது.  எல் என்ற வெண்மை, ஒளிமை கருத்து கல் என்பதற்கும் வெண்மை, ஒளிமை கருத்து உண்டு என்பதை வலுப்படுத்துகிறது அன்றோ.  

N. Ganesan

unread,
Oct 17, 2022, 6:10:26 AM10/17/22
to vall...@googlegroups.com
On Mon, Oct 17, 2022 at 4:53 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
On Sun, 16 Oct 2022 at 15:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கலா என்பது இந்தோ-ஐரோப்பியச் சொல் ஆகும். சந்திரகலா, culture போன்ற சொற்களுடன் தொடர்புடையது.

கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)
கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
-----------------------------------------------------

கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.
கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள்  இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.
கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.

கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் காணோம்.

கல்/கரி
ஒல்/ஒரு
எல்/எரி
...

N. Ganesan

unread,
Oct 17, 2022, 11:02:33 AM10/17/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
பல்-/பரு என்றாகும். பல்லுப்பல்லாக உள்ளது பருநல்/பருத்தி. பன்னல் < பருநல். கருநல் > கன்னல் போல. பல்+து = பற்று. பற்றுவது பல். Gear teeth - கோவை மேட்டுப்பாளையம் தொடங்கி ஊட்டிவரை செல்வது பல்லுச்சக்கர ரயில்.

கல்/கரி
ஒல்/ஒரு
எல்/எரி
... போல

பகு- என்ற வினைதருவது பகல். இது பால் என நீளும் (பால்+து = பாறு எனும் வினைச்சொல்). இரத்தத்தை உடலில் பகுத்து வருவது பால்.
பால் வெண்மை. பகு-/வகு- > பகல்/பால் > வால். வாலறிவன்.

வாலறிவன் பற்றிய கட்டுரை, பொன்னூர்ப் புலவர் தன்யகுமார் எழுதியது. அனுப்புகிறேன்:
கல்- தோண்டுதல். தோண்டப்பட்டது கலம்/கலன் (உ-ம்: மரக்கலம்) நோக்குக. கலயம் > கலசம் ...
கல்லூற் றுழியூறும் ஆறேபோல் (நாலடி)
கல் ஊற்று = வினைத்தொகை; தோண்டும் ஊற்று
-----------------------------------------------------

கள்- கருமை. களிமண். காளி. இருளில் நிகழுவது களவு. களவர்/கள்வர்/கள்ளர் - கருமை என்னும் பொருளால்.
கள் மதுவின் பெயர். மயக்கும் இருள் உண்டாக்கும். கள்  இந்தக் களிப்பு உண்டாக்குவதால்.
கம்பன் பாடிய களியாட்டுப் படலம் மிக அருமையானது.

பொதுவாக, வளைநா ஒலி (ரெட்ராஃப்லெக்ஸ்) உள்ள சொல்ல்லுக்கும். இல்லாத சொல்லுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு.
கல் வேறு, கள் வேறு. கல்,கள் சொற்களை ஆராய்ந்தால் உணரலாம். சில காட்டினேன்.

NG

seshadri sridharan

unread,
Oct 17, 2022, 12:10:16 PM10/17/22
to vall...@googlegroups.com
On Mon, 17 Oct 2022 at 15:40, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் காணோம்.

கல்/கரி
ஒல்/ஒரு
எல்/எரி

சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி  என்றால் காலை. எல்லா தென்னக மொழிகளிலும் வெள்ளை நிறம் தான் காலையை குறிக்கப் பயன்கொள்ளப்படுகிறது.  எனில் தமிழின் காலையும் வெண்மை நிறத்தில் அமைந்தது தானே? கால் +ஐ = காலை. கால் > கல் மூலத்தில் இருந்து தோன்றியது என்று கொள்ளலாமா? கல் > கள் வெள்ளையாக உள்ள போதை நீர் என்பது வலுவான சான்று.  கால் + து = காந்து.   வெண்மையே ஒளிக் கருத்திற்கு அடியாக உள்ளது என்பதற்கு நள் > நாள் (விண்மீன்)  > நாளை (வெளிச்சமான வரும்நாட் பொழுது) என்பதை எடுத்துக் காட்டாக வைத்தேன். இந்த நாளை என்பது இந்தி போன்ற மொழிகளில் "கல்" (வெளிச்சமான வரும்நாட் பொழுது) எனப்படுகிறது. அதே நேரம் நேற்று என்பதும் இந்தியில் "கல்" எனப்படுகிறது. நேற்று என்ற "கல்" பொருள் கழிந்த, கடந்த என்ற இறந்த கால பொருளில் வந்தது. 

இதுவரை யாரும் கல் என்றால் வெளுமை என்று குறிக்கவில்லை.  முதன்முதலாக நான் கூறுகிறேன்.

//பல்-/பரு என்றாகும். பல்லுப்பல்லாக உள்ளது பருநல்/பருத்தி. பன்னல் < பருநல். கருநல் > கன்னல் போல. பல்+து = பற்று. பற்றுவது பல். Gear teeth - கோவை மேட்டுப்பாளையம் தொடங்கி ஊட்டிவரை செல்வது பல்லுச்சக்கர ரயில்//

பல் > பால் என்பதற்கு வெண்மை என்ற பொருளை சுட்டுபவர் வேரியல் ஆய்வறிஞர் பி அருளி நான் அல்லன். இது அவரது மாமனார் தொடங்கிய தேன்மொழி திங்கள் இதழில் வந்தது. அவர் கசட்டு மேனிக்கு எழுதுபவரா?  பல் பரு என்றாவது சேர்க்கை, கூடுகை வினையால். பற்று என்றால் பிடித்தல். அதுவும் சேர்க்கை கருத்தே.  

seshadri sridharan

unread,
Oct 17, 2022, 12:38:38 PM10/17/22
to vall...@googlegroups.com
On Mon, 17 Oct 2022 at 21:40, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

முன்னைய ஆய்வாளர்கள் சொல்லாததால் என் கருத்து  தவறும் ஆகாது, செல்லாததும் ஆகாது.  நான் புதிதாக இந்த கருத்தை வைக்கிறேன். எனக்குள்ள ஒரே தகுதி நான் தமிழன் என்பது மட்டுமே.  தமிழில் எனக்கு தேர்ச்சி இல்லாவிடினும் கருத்துரிமை அடிப்படையில் இந்த "கல்" வேரியல் கருத்தை சொல்கிறேன்.    

"புல்"  என்ற வெண்மைக்கான மூல வேரில் இருந்து "புலர்" என்ற வெளிச்சமான காலைக் கருத்து வந்தது. புலன் என்பது இதில் இருந்து அறிவையும் குறிக்கும் புலன் என்றானது. வெண்மை - ஒளிமை  - அறிவு ஆகியன உறவுள்ள கருத்துக்களாகும். எனவே "கல்வி" ஒரு கருத்தை குறித்து ஒளி பெறுதல் என்பதாக "கல்" என்ற வெண்மை, ஒளிமை கருத்தில் இருந்து வந்தது தோண்டுதல் என்ற கருத்தில் அல்ல.  பொன்னந்தி மாலை என்ற சொற்றொடரை போல வெள்ளந்திக் காலை என்ற சொற்றொடரை பாவாணர் குறிக்கிறார். காலைக்கு வெள்ளந்தி என்று குறிக்கும் போதே வெள்ளை நிறக்  கருத்து வருகிறதே பின் ஏன் தவறாக கருப்பு நிறத்தை இருளின் மூலத்தை காலைக்கும் அதன் வேர் 'கல்'லிற்கும் குறிக்க வேண்டும்?  இப்போது ஐயம் தெளிந்ததா?

N. Ganesan

unread,
Oct 17, 2022, 1:29:36 PM10/17/22
to vall...@googlegroups.com
Seshadri wrote:

>> இதுவரை யாரும் கல் என்றால் வெளுமை என்று குறிக்கவில்லை. முதன்முதலாக நான் கூறுகிறேன்.
>>

கல்- என்றால் வெளுமை என எங்கும் காணோம்.

NG

seshadri sridharan

unread,
Oct 18, 2022, 4:48:26 AM10/18/22
to vall...@googlegroups.com
n Mon, 17 Oct 2022 at 22:59, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கல்- என்றால் வெளுமை என எங்கும் காணோம். NG

காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா? அதை முதலில் கூறும்.  ஒன்று பலவாவது,  பலவற்றில் இருந்து அந்த ஒன்றை நோக்கி போவது என்பது தான் எனது வழிமுறை. ascending order, descending order போல. காலை என்பதற்கு வேர் "கல்" தான். வேரியல் ஆய்வாளர்  ப அருளி கய் > கய்ல் > கல் என் முன்வைக்கிறார். பாவாணர், அரசேந்திரன்  "கல்" என்று முன்வைக்கின்றனர். ஏற்கனவே கல் வழிவந்த "கள்" குடி தமிழிய மொழிகளில் உண்டு. கள் ஏற்படுத்தும் களிப்பினால் தான் களிப்பு என்ற சொல் தோன்றியது. களிப்பு என்ற சொல் கல் என்றாகவில்லை. இதற்கு பாவாணர் விளக்கமே போதும்.    

N. Ganesan

unread,
Oct 18, 2022, 8:17:57 AM10/18/22
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Niranjan Bharathi, C.R. Selvakumar, Gomes Ganapathi

Seshadri Sridaran wrote:
>> காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?

காலை - காலம் என்ற சொல்லில் இருந்து வருவது. இடுக்கண் வருங்கால் நகுக. இங்கே கால் = காலை/காலம். இந்திய வானியலில் ஒரு தினம் என்பது, சூரியோதய காலம் ஆகும். கால்- என்ற சொல் அடிப்படையானது. அசைவது, நடப்பது என்ற வினை செய்யும் கருவி/உறுப்பு: கால். எனவே, காற்று < கால் + து (கால் = காற்று). விடிகாலை என்பதைக் காலம்பெற என்கிறோம், காலம் உருவாகும் வேளை அது. நல்லவேளை = நல்லகாலம். சூரியன் கால் ஊன்றும் நேரத்தைக் காலை என்கிறோம்.  காலம் என்ற சொல் பற்றி, http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html

காலை¹ kālai , < kāla. n. 1. Time; பொழுது (பிங்.) 2. Life-time; வாணாள். நோகோ யானே தேய் கமா காலை (புறநா. 234). 3. Season, opportunity; தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). 4. Occasion, turn; முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24). 5. cf. kālya. Early part of the morning; விடியற்காலம். காலைக்குச் செய்தநன் றென் கொல் (குறள், 1225) 6. Sun; சூரியன். காலை யன்ன சீர்சால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4). 7. Day-time; பகல். எல்லியிது காலையிது வென்ப தறிகல்லாள் (சீவக. 1877). 8. Waking-drum; பள்ளியெழுச்சி முர சம். மேல்வந்தான் காலைபோல் . . . துயிலோ வெடுப் புக (கலித். 70). — adv. 1. Early, betimes, early in life; காலம்பெற. (W.) 2. When, while; பொழு தில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).

------------------------

காலம்/காலை என்னும் சொற்களை வைத்துக் கருமை எனப் பொருள்படும் கல் என்றால் ஒளி எனச் சொல்ல இயலாது. கால்/காலை/காலம் இதற்கும் கல் என்ற சொல்லுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் இல்லை.
பேரா. செல்வா விளக்கினார்: https://groups.google.com/g/tamilmanram/c/-HLpwJ778yY/m/3j2svrw7AQAJ

கல்/கரி
ஒல்/ஒரு
எல்/எரி
பல்/பரு (பருநல் :  https://groups.google.com/g/vallamai/c/htZQJAQZYFc/m/8cTqljNoAgAJ  )
etc. etc.,

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Oct 18, 2022, 11:42:38 AM10/18/22
to vall...@googlegroups.com

//On Tue, 18 Oct 2022 at 17:47, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

>> காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?

காலை - காலம் என்ற சொல்லில் இருந்து வருவது. இடுக்கண் வருங்கால் நகுக. இங்கே கால் = காலை/காலம். இந்திய வானியலில் ஒரு தினம் என்பது, சூரியோதய காலம் ஆகும். கால்- என்ற சொல் அடிப்படையானது. அசைவது, நடப்பது என்ற வினை செய்யும் கருவி/உறுப்பு: கால். எனவே, காற்று < கால் + து (கால் = காற்று). விடிகாலை என்பதைக் காலம்பெற என்கிறோம், காலம் உருவாகும் வேளை அது. நல்லவேளை = நல்லகாலம். சூரியன் கால் ஊன்றும் நேரத்தைக் காலை என்கிறோம்.  காலம் என்ற சொல் பற்றி, http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html

காலை¹ kālai , < kāla. n. 1. Time; பொழுது (பிங்.) 2. Life-time; வாணாள். நோகோ யானே தேய் கமா காலை (புறநா. 234). 3. Season, opportunity; தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). 4. Occasion, turn; முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24). 5. cf. kālya. Early part of the morning; விடியற்காலம். காலைக்குச் செய்தநன் றென் கொல் (குறள், 1225) 6. Sun; சூரியன். காலை யன்ன சீர்சால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4). 7. Day-time; பகல். எல்லியிது காலையிது வென்ப தறிகல்லாள் (சீவக. 1877). 8. Waking-drum; பள்ளியெழுச்சி முர சம். மேல்வந்தான் காலைபோல் . . . துயிலோ வெடுப் புக (கலித். 70). — adv. 1. Early, betimes, early in life; காலம்பெற. (W.) 2. When, while; பொழு தில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).//

காலை என்பதும் பொழுது என்ற வகையில் காலத்தின் ஒரு கட்டத்தை குறிப்பது தான்ஆனால் அது கால் என்ற நகரும் அசையும் கருத்தில் வந்ததல்ல என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். அதற்கு தான் பிற தமிழிய மொழிச் சொற்களை காலைக்கு ஈடாக எடுத்துக்காட்டினேன். மீண்டும் சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி  என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள். இதில் நகர்தல் கருத்தும் இல்லை, கருமைக்  கருத்தும் இல்லை  நேரடியாக வெண்மைக் கருத்தே உள்ளது.   முன்னைய ஆய்வாளர்கள் கருமை கருத்தை  கொண்டு மயங்கியதால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது.   பிற தென்னக மொழிச் சொற்களை ஒப்பிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.

ப. அருளி கய் > கய்ல் > கல் என்று தான் குறிப்பார்.  இந்த கய் > காய்  என்று விரிந்து அதில் இருந்து காய்தல் என்ற ஒளிமை கருத்து தான் காந்து காந்தி என்ற சொல்லின் நேர் விளக்கம் ஆகும்.  ஒளிமை இருந்தால் வெண்மையும் உண்டு.

N. Ganesan

unread,
Oct 18, 2022, 2:01:43 PM10/18/22
to vall...@googlegroups.com
(1) கல் என்பது மூலச்சொல். இதில் ய் எல்லாம் இல்லை. கை(கய்) வேறு, கல் வேறு.
(2) தெள்ளத் தெளிவு. தெள்- என்னும் மூலம்,  தெலுங்கில் தெல்ல- என்றாகும். Loss of Retroflexion.

கய்ல் - தேங்காய்த் தொட்டி - கயில். கையில் செய்யும் கயிறு (கயில்+து).

காலை என்பது காலம் என்ற சொல். இதற்கும் கல்லுக்கும் என்ன தொடர்பு?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 18, 2022, 2:39:30 PM10/18/22
to vall...@googlegroups.com
>> துளுவில் kaande காந்தி  என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள்.

காண்டெ-வா? காந்தெ-யா?

துளுவில் காலை என்பது நஸ்கு எனும் சொல்:

N. Ganesan

unread,
Oct 18, 2022, 3:19:45 PM10/18/22
to vall...@googlegroups.com
கா- காகு- வெளிப்படுதல், வீசுதல் என்ற பொருள். கா/காகு (வே-/வேகு- போல) >> கக்கு.
கக்கு¹-தல் kakku- , 5v. [T. K. M. Tu. kakku.] tr. 1. To vomit, spew from the stomach; வாந்தி செய்தல். (பிங்.) 2. To eject, as a snake its poison; வெளிப்படுத்துதல். புனல்பகுவாயிற் கக்க (கம்பரா. இரணி. 89). — intr. 1. To skip with a rebound, fly back, recoil, as a nail; ஆணிமுத லியன பதியாமல் எதிரெழுதல். ஆணி கக்கிப்போயிற்று. (W.) 2. To overflow, as a river; பெருக்கெடுத் தல். ஆறு கக்கிப்பாய்கிறது. (W.) 3. To shoot out, as ears of corn; கதிரீனுதல். (W.) 4. To yield the essence, as drugs put in boiling water; சார மிறங்குதல். Loc. 5. To ooze out, as oil through the pores of the skin; கசிதல். எண்ணெய் கக்கிப் போட்டது. (W.)

தாவரங்கள் வெளிப்படுத்துவது. மரம் காய்களைக் காய்த்தது.
நிலாக் காய்கிறது - திங்கள் நிலாக் கதிர்களை வீசுகிறது.
சூரியன் வெப்பம் காய்கிறது. காந்தக்கல் ஈர்ப்புக்கதிர்களைக் காய்வதால் காந்தம் எனப் பெயர்.

வெற்றிலைக் கவுளி. கெவுள்/செவுள் :: செவி (கன்னடத்தில் கிவி). மண்டையில் இருந்து காய்ந்து இருப்பது காது .

N. Ganesan

unread,
Oct 18, 2022, 3:25:02 PM10/18/22
to vall...@googlegroups.com
> துளுவில் kaande காந்தி  என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து .

காந்து என்பது காய்தல் என்ற மூலச் சொல்லில் வருவது. வே- வேய்ந்து/வேந்து.
அதுபோல் கா-/காய்- > காந்து. காந்து என்ற சொல்லுக்கு கால் என்ற சொல் தொடர்பற்றது.
கால்+து = காற்று என்றாகும்.

seshadri sridharan

unread,
Oct 19, 2022, 6:35:37 AM10/19/22
to vall...@googlegroups.com
On Tue, 18 Oct 2022 at 23:31, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
(1) கல் என்பது மூலச்சொல். இதில் ய் எல்லாம் இல்லை. கை(கய்) வேறு, கல் வேறு.
(2) தெள்ளத் தெளிவு. தெள்- என்னும் மூலம்,  தெலுங்கில் தெல்ல- என்றாகும். Loss of Retroflexion.

கய்ல் - தேங்காய்த் தொட்டி - கயில். கையில் செய்யும் கயிறு (கயில்+து).

காலை என்பது காலம் என்ற சொல். இதற்கும் கல்லுக்கும் என்ன தொடர்பு?

On Tue, Oct 18, 2022 at 10:42 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

//On Tue, 18 Oct 2022 at 17:47, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>> காலை என்பதற்கு வெளுமை கருத்து உண்டா இல்லையா?

காலை - காலம் என்ற சொல்லில் இருந்து வருவது. இடுக்கண் வருங்கால் நகுக. இங்கே கால் = காலை/காலம். இந்திய வானியலில் ஒரு தினம் என்பது, சூரியோதய காலம் ஆகும். கால்- என்ற சொல் அடிப்படையானது. அசைவது, நடப்பது என்ற வினை செய்யும் கருவி/உறுப்பு: கால். எனவே, காற்று < கால் + து (கால் = காற்று). விடிகாலை என்பதைக் காலம்பெற என்கிறோம், காலம் உருவாகும் வேளை அது. நல்லவேளை = நல்லகாலம். சூரியன் கால் ஊன்றும் நேரத்தைக் காலை என்கிறோம்.  காலம் என்ற சொல் பற்றி, http://nganesan.blogspot.com/2012/01/letters-u-o-and-om-in-pillaiyarcuzi.html

காலை¹ kālai , < kāla. n. 1. Time; பொழுது (பிங்.) 2. Life-time; வாணாள். நோகோ யானே தேய் கமா காலை (புறநா. 234). 3. Season, opportunity; தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). 4. Occasion, turn; முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24). 5. cf. kālya. Early part of the morning; விடியற்காலம். காலைக்குச் செய்தநன் றென் கொல் (குறள், 1225) 6. Sun; சூரியன். காலை யன்ன சீர்சால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4). 7. Day-time; பகல். எல்லியிது காலையிது வென்ப தறிகல்லாள் (சீவக. 1877). 8. Waking-drum; பள்ளியெழுச்சி முர சம். மேல்வந்தான் காலைபோல் . . . துயிலோ வெடுப் புக (கலித். 70). — adv. 1. Early, betimes, early in life; காலம்பெற. (W.) 2. When, while; பொழு தில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).//

காலை என்பதும் பொழுது என்ற வகையில் காலத்தின் ஒரு கட்டத்தை குறிப்பது தான்ஆனால் அது கால் என்ற நகரும் அசையும் கருத்தில் வந்ததல்ல என்பதை ஈண்டு கவனிக்க வேண்டும். அதற்கு தான் பிற தமிழிய மொழிச் சொற்களை காலைக்கு ஈடாக எடுத்துக்காட்டினேன். மீண்டும் சற்று தமிழின் உறவு மொழிகளை ஒப்பிடுவோம். தெலுங்கில் காலை என்பதை தெல்லவாரி (తెల్లవారి) என்பர். தெல்ல என்றால் தெலுங்கில் வெள்ளை நிறம். மலையாளத்தில் വെളുപ്പ്(നാമം):: പ്രഭാതം வெளுப்பு என்றால் காலை. கன்னடத்தில் ಬೆಳಿಗ್ಗೆ beḷigge (வெளிக்கே) என்றால் காலை. துளுவில் kaande காந்தி  என்றால் காலை. இதில் துளு சொல் காந்தி > காந்து = கால் + து . காந்து என்றால் காய்தல், ஒளிர்தல் எனப் பொருள். இதில் நகர்தல் கருத்தும் இல்லை, கருமைக்  கருத்தும் இல்லை  நேரடியாக வெண்மைக் கருத்தே உள்ளது.   முன்னைய ஆய்வாளர்கள் கருமை கருத்தை  கொண்டு மயங்கியதால் இன்றுவரை குழப்பம் நீடிக்கிறது.   பிற தென்னக மொழிச் சொற்களை ஒப்பிட்டிருந்தால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்காது.

ப. அருளி கய் > கய்ல் > கல் என்று தான் குறிப்பார்.  இந்த கய் > காய்  என்று விரிந்து அதில் இருந்து காய்தல் என்ற ஒளிமை கருத்து தான் காந்து காந்தி என்ற சொல்லின் நேர் விளக்கம் ஆகும்.  ஒளிமை இருந்தால் வெண்மையும் உண்டு.

தேடித் தேடி கல்நார் என்ற வெள்ளை நிற கனிமம் பற்றிய  அறிய முடிகிறது. இறுக்கத்தின்  காரணமாக கல் எனப்பட்டதா  வெண்மையின் காரணமாக இப்பெயர் வந்ததா என்று உறுதி செய்ய முடியவில்லை.

https://www.youtube.com/watch?v=H7JNcrEewzE

கல்நார் ஓர் அறியாத அரிய மூலிகை

அனுபோக வைத்தி ருவநீதம் - மூன்றாம்

http://14.139.186.253 › ...

PDF 1995கல்நார் பற்பம்.

seshadri sridharan

unread,
Oct 19, 2022, 12:12:26 PM10/19/22
to vall...@googlegroups.com
On Tue, 18 Oct 2022 at 17:47, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கல்- என்பதில் வெளுமை எனும் பொருள் இல்லை.
கல்/கரி
ஒல்/ஒரு
எல்/எரி
பல்/பரு (பருநல் :  https://groups.google.com/g/vallamai/c/htZQJAQZYFc/m/8cTqljNoAgAJ  )

எனக்கு அறிவு மந்தம் அதனால் உடனே சிந்திக்க முடியவில்லை. இன்று மாலை தியானம் செய்யத் தொடங்கிய போது என் மறதியில் அமிழ்ந்த சில சொற்கள் மேலெழும்பி நினைவில் வந்தன. அதை தொடர்ந்து சொற்பிறப்பியல் பேரகர முதலியை துழாவிய போது சில சொற்கள் தட்டுப்பட்டன.

பல் என்பது வெண்மை அல்ல பற்றுதல் என்றீர். பல் பன்மையில் பற்கள் ஆகின்றன. வெண்மையான எழுதும் "பலபம்" சிறுவர் கையில் உள்ளது. இன்னும், சித்த மருத்துவத்தில் உண்ணும் வெண்மையான மருந்துச் சாம்பல் "பற்பம்" - பல்+பம் எனப்படுகிறது.

கல்கண்டு/கற்கண்டு - வெண்மையான கரும்பு சாற்றுத் திரள். இது வரை யாரும் கல்கண்டிக்கிற்கு வேர் பொருள் தரவில்லை. ஏனெனில் கல் என்றால் வெண்மை என்று அறியாதே.
கல்சட்டி - வெண்மையான மாவுக்கல் சட்டி.
கற்றாழை - கல்+தாழை. வெண் சோறு கொண்ட தாவரம்.

ய > ஞ > ந என்ற திரிபில் யண்டு > ஞண்டு > நண்டு - கருமை  நிற நண்டை குறிக்கும்.  கடகம் என்பதும் நண்டே.. கல்+கடகம் = கற்கடகம் என்றால் வெண் நண்டு. ஆனால் இதை சமசுகிருதம் என்கின்றனர். கல்பதரு / கற்பக மரம் வெண்ணிறத்தது என்று படித்த நினைவு மீண்டும் தேடினால் கிட்டவில்லை.

அகரமுதலி தந்த சொற்கள்
கற்பூ - ஈயம், கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax), கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை. கல்பூரம் / கற்பூரம் - வெண்மையான சூடம்,

Lead  image  கற்பூ
image.png

Borax கற்காரம்
image.png

image.png image.png

seshadri sridharan

unread,
Oct 20, 2022, 8:54:06 AM10/20/22
to vall...@googlegroups.com
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தந்த வெண்மை கருத்து சொற்கள்கல் வேர் கொண்டவை

கற்பூ - ஈயம்
கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax)
கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை
கற்பூரம் - வெண்மையான சூடம்,

கற்பு - முல்லை (வெந்நிறத்தது)

கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை.

கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக.

கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

seshadri sridharan

unread,
Oct 20, 2022, 10:35:40 PM10/20/22
to vall...@googlegroups.com
On Thu, 20 Oct 2022 at 18:23, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தந்த வெண்மை கருத்து சொற்கள்கல் வேர் கொண்டவை

கற்பூ - ஈயம்
கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax)
கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை
கற்பூரம் - வெண்மையான சூடம்,

கற்பு - முல்லை (வெந்நிறத்தது)

கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை.

கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக.

கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

இல் - இள் என்றால் ஒளிரும் வெண்மை.  இலங்கு கதிர். இள் - இளி  > வெளிர்த பல்லை காட்டி சிரி. "ஈய்" ன்னு பல்லை இளிக்காதே. 

ஈயம் -  வெண்மை, பாதிரி மரம். வெண்ணிறப்பூ பூப்பதால் பாதிரி "ஈயம்" எனப்பட்டது. "ஈயம் பூசறது கலாய் பூசறது" என்று கூவிக்கொண்டே வருவான் ஈயம் பூசுபவன், கலாய் பூசுபவன். கல் > கலாய் - வெண்மையான ஈயம். தகரத்தை தான் அப்படி பூசுகிறான். Tin is a silvery-coloured metal.

image.png

//கற்கண்டு kaṟ-kaṇṭu , n. < கல் +. Rock-candy; பளிங்குபோன்று இறுகிய கருப்பஞ்சாற்றுக் கட்டி. (பதார்த்த. 188.)//

பளிங்கு (Sphatikam - படிகம்) என்றால் வெண்மை கருத்தை குறிப்பதை காண்க. கல் கண்டு என்பதும் வெண்மை குறித்தே வழங்குகிறது.

கற்பு (கல் +பு) என்பதற்கு சேனாவரையர் வெண்மையான முல்லை பூவை சுட்டுகிறார். இங்கே கல் என்பது வெண்மை.

கற்பூ (கல் + பூ) - ஈயம்

கற்காரம் (கல் + காரம்) - வெண்காரம், படிகாரம் (borax). கல், வெண்,  படி ஆகியன வெண்மை கருத்து கொண்டவை.  பல் > பட் > பட்ட பகல் = தெளிவான பகல், வெளிச்சமான பகல். பட் > படி > படு கொலை- எல்லாருக்கும் தெரியும்படியான கொலை. எனவே படி என்றால் வெண்மை. கற்காரம், வெண்காரம் படிகாரம் ஆகியன வெண்மை கருத்தால் எழுந்தவை.  

கற்புரை (கல் + புரை) - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை. புரை என்றால் மேலெழும்பும் புகை. இதாவது மேலெழும்பும் வண புகை தான் கற்புரை.

கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக. விள் என்றால்  வெண்மை என்றவர் ப அருளி. இதற்கு விளாம்பழத்தை காட்டுகிறார்.

கற்பம் (கல் +வம்) - (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

//கற்பூரம் என்பது கட்டியாக இருக்கும் பூரம் (camphor)//  பூரம் என்பது camphor அல்ல.

கற்பூர வாழை என்பது இனிமை, மணம் குறித்து வந்ததல்ல.  பூரம் என்றால் நிரம்பிய, படிந்த எனப் பொருள். அப்பழம் உள்ளேயும் சாம்பல் படிந்த வெண் நிறத்தில் இருக்கும், வெளியேயும் வெண்மை படிந்திருக்கும்.  

இலங்கு கதிரவன். இதில் கதிர் என்பதும் வெண்மை கருத்தில் தோன்றியதே.  கல் + து = கது > கதி - கதிர் = வெண்மையான ஒளிக்கற்றை.

N. Ganesan

unread,
Oct 21, 2022, 4:15:32 PM10/21/22
to வல்லமை

நான் சென்னைப் பல்கலைப் பேரகராதியில் கல்- எனத் தொடங்கும் எல்லாச் சொற்களையும் பார்த்தேன். ஒன்றுக்குக் கூட கல் என்றால் வெள்ளை என்ற பொருள் இல்லை.

பேரா. செல்வா குறிப்பிடுவது சரி.
https://groups.google.com/g/tamilmanram/c/-HLpwJ778yY/m/CnsyXzXeAwAJ
https://groups.google.com/g/tamilmanram/c/-HLpwJ778yY/m/weBKXqCFAQAJ

seshadri sridharan

unread,
Oct 21, 2022, 11:52:47 PM10/21/22
to vall...@googlegroups.com
On Sat, 22 Oct 2022 at 01:45, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நான் சென்னைப் பல்கலைப் பேரகராதியில் கல்- எனத் தொடங்கும் எல்லாச் சொற்களையும் பார்த்தேன். ஒன்றுக்குக் கூட கல் என்றால் வெள்ளை என்ற பொருள் இல்லை.

தமிழில் சொல்லாய்வு ஒரு நெறிப்படி (formula) மேற்கொள்ளப்படுகிறது. அதில் வடிவம், வண்ணம் என ஒத்த கருத்துள்ள சொற்கள் இன்ன பிற எல்லா கருத்தில் கொள்ளப்பட்டு தொடக்க வேர் இது என்று கொள்ளப்படுகிறது.  இல் -  இள் வெண்மை, ஒண்மை என்றால் அதே எழுத்து இடம் பெற வேண்டும் என்று இல்லை.  இள்- இளி என்றால் வண பல்லை காட்டுதல் என்று பொருள்.  அதை வைத்து இளக்காரம், இளப்பம் என்ற பல்லைக்காட்டி நகுக்கும் சொல் உருவானது.  இள் என்று தொடங்கும் சொல் இல்லை அதனால் ஏற்க முடியாது என்பது சிறுபிள்ளை ஒட்டராம்.

பள்ளியில் மூன்றாம் நான்காம் வகுப்பில் சேர்த்து எழுதி, பிரித்து எழுதி கற்றுக்கொடுப்பார்கள்.  அதன்படி  ஈயம் > கற்பூ - கல் + பூ என்று மாணவர் பிரிப்பர். கற்காரம்  - வெண்காரம், படிகாரம் (borax) கல்+காரம் என்று மாணவர் பிரிப்பர். கற்பூர வாழை - தோலில் வெண்மை படர்ந்த வாழை வகை, கற்பூரம் - வெண்மையான சூடம் என்பதை கல் ) பூரம் என்று பிரிப்பர். கற்பு - முல்லை (வெந்நிறத்தது) மாணவர் கல் + பு என்று பிரிப்பர். கல் + புரை > கற்புரை - நறைகல் (சாம்பிராணி). நறை என்றால் வெண்மை. எனவே கல் என்றாலும் வெண்மை இங்கே. சாம்பிராணி வெண்மை. கற்காய் = விளாம்பழம் போன்வற்றின் ஓடு, விள் - கல் வெண்மை கருத்து வேர் என்பதை நோக்குக. மாணவர் கல் + காய் என்று பிரிப்பர். 

கற்பம் = கல் +வம் > (ஆவின்) வெண்ணிற  சாம்பல் / திருநீறு.

உ > இ > எ > அ என்ற வரிசையில் வேரியலார்  சொற்களை தேடுகின்றனர், பொருத்துகின்றனர். அதன்படி சில இடங்களில் சொற்கள் இலக்கியத்திலோ, கல்வெட்டிலோ பேச்சு வழிக்கிலோ இன்று இல்லாமல் இருக்கலாம். எனினும் ம்ம்குறை தவறண்டு. குல் > கில் > கெல் > கல் என்பதே அது.  இப்படியே சொற்களை மேலும் மேலும் விரியும். கள் வெண்மை என்றால் அதன் வேர் கல் என்று முடிபு கொண்டு கல் என்ற வரிசையில் சொற்களை தேட முற்படவேண்டும்.

பேரா. செல்வா கற்பம் (சாம்பல்), கற்பு (முல்லை), கற்புரை (சாம்பிராணி), கல்பூரம்  இவற்றை எல்லாம் கெட்டியான இறுகிய என்று சொல்லி தள்ளமுடியவில்லை எனவே இவற்றை அப்படியே skip செய்துவிடுகிறார். kaleang (கலாய்) என்ற மலாய் சொல் தகரத்தை குறிக்கும் சொல். அதில் வெண்மையை குறிக்கும் கல் வேர் உள்ளது.  தமிழின் தகரம் தக்கை என்ற பொருளில் மட்டும் வழங்குவது அல்ல வெண்மை என்ற பொருளிலும் வழங்குகிறது.  தகதக - ஒளிரும் வெண்மை கருத்து.    
Reply all
Reply to author
Forward
0 new messages