அன்னம் - Tamil Name for Bar-headed Goose

75 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 25, 2023, 1:20:10 AM11/25/23
to Santhavasantham
அன்னம் - Tamil Name for Bar-headed Goose
------------------------------------------

மணற்குன்று நாரை (https://en.wikipedia.org/wiki/Sandhill_crane ) அமெரிக்காவில் குளிர்காலத்தில் கனடாவில் இருந்து தெற்கே வலசை வரும் அழகே தனி. நாரைகளும், அன்னப் பறவைகளில் பலவும் இரவு நேரத்தில் வலசைப் பயணம் மேற்கொள்கின்றன. மணற்குன்று நாரைகளின் ராத்திரி நேர வலசை பற்றிய அற்புதமான வர்ணிப்பை வாசிப்போம். அன்னம் (< அல்நம்) ஏன் இரவு பற்றிய சொல்லில் இருந்து *அன்னம்* என்ற பெயரை வைத்தனர் எனப் புரிந்துகொள்ள ஸேண்ட்ஹில் நாரைகளின் வலசை வண்ணிப்பு உதவும்.

https://www.themarginalian.org/2022/10/29/richard-powers-echo-maker/
Each winter, on the banks of the Platte River in Nebraska, one of Earth’s most otherworldly spectacles pours its cascade of white and crimson: the mass migration of sandhill cranes, Grus canadensis — elegant emissaries of prehistory carrying the story of this world on their back.

No photograph or footage can capture the sweeping grandeur of their myriad, the surreality at scale.

In the opening pages of his 2006 novel The Echo Maker, Richard Powers paints in words the truly unphotographable — a transportive piece of deep history that is at once a ravishing invitation to absolute presence:

    Cranes keep landing as night falls. Ribbons of them roll down, slack against the sky. They float in from all compass points, in kettles of a dozen, dropping with the dusk. Scores of Grus canadensis settle on the thawing river. They gather on the island flats, grazing, beating their wings, trumpeting: the advance wave of a mass evacuation. More birds land by the minute, the air red with calls. A neck stretches long; legs drape behind. Wings curl forward, the length of a man. Spread like fingers, primaries tip the bird into the wind’s plane. The blood-red head bows and the wings sweep together, a cloaked priest giving benediction. Tail cups and belly buckles, surprised by the upsurge of ground. Legs kick out, their backward knees flapping like broken landing gear. Another bird plummets and stumbles forward, fighting for a spot in the packed staging ground along those few miles of water still clear and wide enough to pass as safe. Twilight comes early, as it will for a few more weeks. The sky, ice blue through the encroaching willows and cottonwoods, flares up, a brief rose, before collapsing to indigo. Late February on the Platte, and the night’s chill haze hangs over this river, frosting the stubble from last fall that still fills the bordering fields. The nervous birds, tall as children, crowd together wing by wing on this stretch of river, one that they’ve learned to find by memory. They converge on the river at winter’s end as they have for eons, carpeting the wetlands. In this light, something saurian still clings to them: the oldest flying things on earth, one stutter-step away from pterodactyls. As darkness falls for real, it’s a beginner’s world again, the same evening as that day sixty million years ago when this migration began.

    […]

    There is only here, now, the river’s braid, a feast of waste grain that will carry these flocks north, beyond the Arctic Circle. As first light breaks, the fossils return to life, testing their legs, tasting the frozen air, leaping free, bills skyward and throats open. And then, as if the night took nothing, forgetting everything but this moment, the dawn sandhills start to dance. Dance as they have since before this river started.

அன்னம் (BH geese) < அல்லிரவில் வலசை வரும் ஹிமாலயப் பறவை, அல்நம்
-----------------------------------------------------

பாரத உபகண்டத்தின் தென்கோடியில் உள்ள தமிழகம், ஈழத் தீவுக்கு வலசை வருதற்காக, இமாலயப் பெருமலையை ஆண்டுக்கு இரண்டு முறை தாண்டுவதால் அன்னப் பறவைகளை Superbird என பறவையியல் அறிஞர் அழைக்கின்றனர். சங்க காலத்தில் தமிழர்கள் இமயத்தில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வளர்க்கும் அன்னப் பறவைகள் தமிழகத்தில் கூடுகட்டுவதில்லை என வியந்தனர். சுமார் 8 மணி நேரத்தில் இமயத்தைக் கடப்பவை அன்னங்கள். வடமொழியில் ஹம்சம் என்பது இந்த BH geese தான் என முதலில் விளக்கி நூல் எழுதிய ஸம்ஸ்கிருதப் பேராசிரியர் J. Ph. Vogel ( https://en.wikipedia.org/wiki/J._Ph._Vogel ) ஆவார்.The goose in Indian literature and art, E.J. Brill, Leiden, 1962. ஹம்சத்துக்குத் தமிழ்ப்பெயர் அன்னம். இப்பெயர் “அல்” என்றால்  இரவு  என்ற சொல்லை வேராய்க் கொண்டு அமைத்துள்ளனர். காரணம், பல கோடி வருஷங்களாய், இரவுக் காலத்தில் பறந்து நம்மிடையே வரும் பறவை என்பதால் ஆகும். அல் என்னும் சொல்லை அடிப்படையாய் வைத்து, அலவன் “நண்டு, சந்திரன்” என்ற சொற்கள் உண்டு.

அல்லிரவில் வலசை போகும் அன்னம் (அல்நம்)
------------------------------------

ஏன் அன்னங்கள் இரவில் பறக்கின்றன? வலசைப் பயணம் இரவிலே அமைவதற்கு, ஆக்சிஜன் உயிர்வளி அடர்த்தியாய் இருப்பது ஒரு காரணம். சூரியனின் வெப்பத்தால் Turbulence eddy currents சுழற்சி, மேலெழும்புதல் இன்மை பறப்பதற்குப் பகலில் இடையூறு. அல்லிரவில் அந்தச் சிக்கல் இல்லை. 20 பாகை வெப்பம் குறைவதால், பறக்கும் முயற்சி (Effort)குறைகிறது.  To probe further,
https://www.scientificamerican.com/article/olympians-of-the-sky/
https://royalsocietypublishing.org/doi/epdf/10.1098/rspb.2012.2114
The trans-Himalayan flights of bar-headed geese (Anser indicus)
https://www.pnas.org/doi/10.1073/pnas.1017295108
https://phys.org/news/2011-06-highest-flying-bird-himalayas.html
https://www.sci.news/biology/science-bar-headed-geese-flying-himalayas-02410.html
https://twitter.com/HimalayanNature/status/1707712415088214020?s=20
Colder air = higher O2 concentration...
https://twitter.com/MattIDCarter/status/935515048281300992
https://twitter.com/JanakiLenin/status/1285500512465453062
https://deponti.livejournal.com/1118846.html
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4346704/
https://www.mentalfloss.com/article/533976/why-do-canadian-geese-fly-night
https://youtu.be/yZrBmYogK0M
Bar-headed geese flying across the night sky in Mongolia
https://www.youtube.com/shorts/XYsqcQi0Vu4

அன்னம் பெயர்க்காரணம் பற்றிச் சிந்திப்போம். -ல்ந- என்னும் எழுத்து -ன்ன- எனத் தமிழில் மாறும். மெல்நகை = மென்னகை, வில்நூல் ‘தநுர்சாத்திரம்’ = வின்னூல், வல்நெஞ்சு = வன்னெஞ்சு, கல்நெய் ‘petrol' = கன்னெய், ...

கல்லு¹-தல் kallu- , 5 v. tr. cf. khal. 1. To work away gradually, as earth, pebbles; to dig out, as a hole; to hollow, as a rat; to excavate; தோண்டுதல். கல்லூற்றுழி (நாலடி, 185). 2. To scoop out, as a nut; துருவுதல். (W.) 3. To wash out, erode, as flowing water; நீர் அரித்தல். வெள்ளம் கரையைக் கல்லிவிட்டது. 4. To eat away, as caustic; தின்னுதல். இந்தக் காரமருந்து கல்லிக்கல்லி எடுத்துவிடும். (W.) 5. To tear, as a style, the palmyra leaf when writing upon; எழுத்தாணிக் கூர் கிழித்தல். (J.)

With a Schwa:
கெல்லு-தல் kellu- , 5 v. tr. < கல்லு-. [T. kelaku.] 1. See கல்லு-. கிணறு கெல்ல (தனிப்பா. ii, 140, 356). 2. To irritate or corrode and waste the stomach, as excessive stimulus; வயிற்றை அரித்துவிடுதல். (J.)

கல்லு- = தோண்டு- இந்த வினைச்சொல் அடியாகப் பிறப்பது: (1) கல்நம் = கன்னம். முகத்தில் குழி விழும் இடம். பல் இல்லாத போது, கன்னம் குழியாய் இருக்கும்.
(2) கன்னக்காரன் kaṉṉa-k-kāraṉ , n. < id. +. [T. kannagāḍu, K. kannagāṟa, M. kanna-k-kāran.] House-breaker, burglar; கன்னமிடுந் திருடன். (கதவை, சுவரைத் துளைத்துத் தோண்டிக் கள்ளன் புகுவான்.)
(3) கல்நம் + கோல் = கன்னக்கோல்.
கன்னக்கோல் kaṉṉa-k-kōl , n. [T. kannakōla, M. kannakkōl.] Iron-crow of thieves; சுவரை அகழ்தற்குக் கள்ளர் கையாளுங் கருவி.
(4)கல்நகம் ==> கன்னக மின்றியுங் கவைக்கோ லின்றியும் (சிலப். 16, 142).
(5) கல்நம் = தோண்டும் துளை. துளைகளால் அலங்கரிக்கப்பட்ட பரண்கூடு “கன்னசாலை” (= Balcony).
கன்னசாலை kaṉṉa-cālai , n. Balcony; மேல்மாளிகைப் பக்கங்களில் முன்புறம் நீண்டுள்ள பரண்கூடு. மீதொருபாற் கன்னசாலை குல வயிரத்தா லமைத்த கொள்கையாலே (பெரியபு. திருக்குறிப். 91).
(6) கன்னக்களவு kaṉṉa-k-kaḷavu , n. < கல்நம் +. [K. kannakaḷavu.] Theft by house-breaking; சுவரில் கன்னம்வைத்துச் செய்யுங் களவு.
இது போலே,
அல்லில் (இரவில்) வலசை போவதால், அல்நம் எனப் பெயரைத் தொல்தமிழர் 5000 ஆண்டு முன்னே அமைத்தனர். அல்நம் (BH geese) >> அன்னம் ( (Cf. கல்நம் >> கன்னம்).

-------------

அன்னப் பறவை ஆண்டுதோறும் இமயத்தை இருமுறை தாண்டுபவை. சங்கப் புலவோர் தென்னிந்தியாவில் கூடு கட்டுவதோ, முட்டையிடலோ இல்லை என வியந்துள்ளனர். எனவே, இவ்வகை geese (அன்னத் தாரா) ஆத்மாவுக்கு உவமையாகக் கொள்வர் பாரத கலை, இலக்கிய நூல்களில். மெக்சிகோ மாயன் நாகரிகத்திலும், கனடா தாரா ( https://en.wikipedia.org/wiki/Canada_goose )வை ஆத்மாவுக்கு உவமையாகக் கொண்வதுண்டு.  எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது எனத் தெரியாத காலங்களில் ஏற்பட்ட உவமை. 4000 ஆண்டு முன்னர், சுமேரியாவில் கிடைத்த, தந்தத்தால் ஆன, கல்லறைகளில் “மேலுஹா பறவை” அன்னம் எனக் கருதுகிறேன். ஆர்க்கியாலஜிஸ்ட் டேன் பாட்ஸ் (நியூ யார்க்/ஆஸ்திரேலியா) அவர்களிடம் சொன்னேன். அவர் குடுமிவாத்து என எழுதினார். ஆனால், அது பொருந்தவில்லை. அன்னம் கல்லறையில் வைப்பது. பௌத்த ஸ்தூபிகளில் கிடைப்பது. விரிவு பின்னர். அன்னப் பறவை பற்றி என் கட்டுரைகள்,
https://archive.org/details/Annam_the_Himalayan_Superbird_and_Tirukkural/mode/2up
https://archive.org/details/annam_BHgoose_II_Int_Tirukkural_Conference_UK

Published in:
Second International Conference on Tirukkuṟaḷ.
Souvenir, June 27-29, 2018, Liverpool, England.

Aṉṉam - the Himalayan Superbird and Tirukkuṟaḷ
Abstract: In Tirukkuṟaḷ, the human soul is compared to a bird that is leaving its nest once sufficient time has elapsed after its hatching. It is interesting to analyze the ornithological identity of the bird in this important poem with the background of Indian tradition. Tiruvaḷḷuvar is generally thought to be of Jaina religion as the first four chapters of his work reveal, and also his strict vegetarianism, abstinence from alcohol, importance given to the ascetics, impermanence of life and his preaching of equality among castes. Looking at the arts and literature of the Śramaṇic religions, the bar-headed goose crossing Himalayas where they raise their young and reaching Tamil country 2000 miles south during the frigid winter months stands out as "the bird" representing the soul. In Buddhist stūpas, often a bar-headed goose made of crystal is placed inside a bowl. Hence, the hamsa/aṉṉam is taken to represent the human soul in sepulchral monuments and in this Tirukkuṟaḷ verse. Also, two couplets describing the intimate relationship between lovers compare them to soul-body pair and significantly, a particle of comparison is employed in them by Tiruvaḷḷuvar hinting with a dhvani of aṉṉam bird.

சே, சேவல் (சே -அல் எனும் விகுதி பெறும்) என்பது கேவுதல் - மூச்சிரைத்தல் என்னும் வினையடிப் பிறக்கும் சொல். கேந்திப்பாட்டு = erotic song.
https://groups.google.com/g/santhavasantham/c/zo4DJKpcDjI/m/LiT07cLMAAAJ
தூதுப் பிரபந்தங்களின் தோற்றம். கன்னியாகுமரியில் இருந்து ஹிமாலயம் செல்லும் அன்னச் சேவலை முன்னிலைப்படுத்திப் பாடிய புறப்பாட்டு:
http://puram1to69.blogspot.com/2011/04/67.html
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாம் கையறுபு இனையக்
குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்,
நா. கணேசன்

அன்னத்தின் வெற்றி (ஹம்ச மந்திரம் மீதானது):
--------------------------------------
ராமேசுவரத்தின் கடற்கரை வில்போன்ற அமைப்புடையது. வில் போல வளைந்து (கோடிச்) செல்லும் வளைகுடா ஆனதால் வில்கோடி (Bay of the Bow) என்பது தமிழிற் பெயர். இப்பெயர் தனுஷ்கோடி ஆனது. Rameswaram (English) https://youtu.be/nGg9WY8F960

ஶ்ரீ முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் அருளிய ‘இராமநாதம் பஜேகம்’ என்ற வடமொழிக் கீர்த்தனை கேட்போம். ஹம்ஸ மந்திரத்தைச் சொல்லித் தீக்ஷிதர்  பூர்த்தி செய்கிறார். காசி ராமக்கிரியை ராகம். பேரா. கு. ஞானசம்பந்தன் காசி ராமேஸ்வர யாத்திரை: https://youtu.be/DPKiVkYFw2E
ஹம்ச மந்திரம் ::‘அன்னத்தின் வெற்றி’ (கிவாஜ) படித்தருளுக. http://nganesan.blogspot.com/2023/04/hamsa-mantra-ajapaa-annattin-verri.html

https://youtu.be/15SMW_Cnjjg பாலைக்காடு கேவிஎன்
https://youtu.be/G3P1oru1-F0 எம்எஸ்
https://youtu.be/mZG717Z5fiQ சஞ்சய்

*rāma nāthaṃ bhajēham*
- rāgaṃ kāśī rāmakriya - tāḷaṃ rūpakam

*pallavi*
rāma nāthaṃ bhajēhaṃ
rāma candra pūjitam

*anupallavi*
kāmita phala prada dēvaṃ
kōṭi tīrtha prabhāvaṃ

kumāra guru guha viditaṃ
kapi br̥ndādi sannutam

*caraṇam*
sētu madhya gandha mādana-parvata vihāraṃ
sadā parvata vardhanī manōllāsa-karam

hastāmalaka nata varaṃ hāṭaka-maya hāra dharaṃ
hatyādi pāpa haraṃ haṃsassōhākāram

N. Ganesan

unread,
Nov 27, 2023, 7:46:22 AM11/27/23
to housto...@googlegroups.com, vallamai
On Sat, Nov 25, 2023 at 8:40 AM Vish <vish...@yahoo.com> wrote:
> I thought swans are called அன்னம் in Tamil.

This is a very recent usage. Swans were introduced in India during the 19th century via zoos, European art etc.,
Swans got the name, annam (Tamil) or hamsa (Sanskrit, IA), from BH goose. People consider Swans for their beauty.

Classic examples are Raja Ravi Varma's Swan as a Messenger for Damayanti.
https://twitter.com/BimlaVerma6/status/1368591655360630785
Also, see the Ramakrishna Mission's logo depicting the swan. Bhagavan Ramakrishnar is known as "Parama-Hamsa".
https://www.flickr.com/photos/belurmath/29045165481

But before the British rule, அன்னம் is BH goose only. See the Chola Lingodbhava images. I provide
an example of several BH geese in Pratihara (10th century) Lingodbhava Murti, Gujarat.
This is annam/hamsa representing Brahma.
https://twitter.com/ayudha_h/status/1235950457937219584
Or, the moonstone from Sri Lanka depicting BH goose (= அன்னம்)
https://ianlockwood.blog/2020/09/14/moonstone-wanderings-in-anuradhapura/
See the Lingodbhava Murti (Chola) at the Met, NY (I have seen this beautiful sculpture in person.)
https://www.metmuseum.org/art/collection/search/38137

It will be really worthy for an Art Historian to write the அன்னம் sculptures on Lingodbhava Murti-s in India. It will be a good M.A. thesis to see how annam changes to have peacock tail, cUDu-tuft of a cockerel on the head, etc., over time. Prof. Jean Filliozat's 1961, Arts Asiatiques paper on Lingodbhavamurti can be a good starting point. Also, Iconography of Liṅgodbhavamūrti in South India: A Probe into Stylistic Evolution, T. Chandrakumar, East and West, 1991. etc., With modern hi-res cameras in mobile phones, a curated group in social media such as Twitter can upload all photos of annam on Lingodbhava-s and so on.

-----------------
The change from BH geese to Swans in 19th century India is discussed in:

https://archive.org/details/Annam_the_Himalayan_Superbird_and_Tirukkural/mode/2up
https://archive.org/details/annam_BHgoose_II_Int_Tirukkural_Conference_UK

NG

N. Ganesan

unread,
Nov 27, 2023, 7:58:38 AM11/27/23
to Santhavasantham
முருக பக்தர்கள் இல்லங்களில் சதா ஒலிப்பது: கந்தசஷ்டிக் கவசம். 17-ம் நூற்றாண்டிலே சென்னிமலைக் குருக்கள், தேவராய பண்டிதர் இயற்றிய அரிய நூல். கோடிக்கணக்கான மக்கள் கேட்பது.

அவ்வூரில் இருந்து புலவர் தமிழாபரணன் அனுப்பிய வாழ்த்து. அவரது அன்புக்குப் பணிவார்ந்த வணக்கம்:

சிந்துவின் செல்ல மைந்தற்குச் சீர்சால் வாழ்த்து
25-11-2023

கலி விருத்தம்

மண்ணளந்த காளிபுரத் துதித்தின்ற மெரிக்காவில்
விண்ணளந்த நாசாவின் மேலாளராய் வீற்றிருக்கும்
கணேசுகற்ற கவின்கலைகள் பெற்றகன விருதுகளைக்
கணக்கிட்ட நான்முகற்கும் கலைமகட்கும் கடும்வாதம்.

“கலையாவும் கணேசற்குக் கற்பித்தா யோகலைச்சி?”
“கலையாவும் கற்பித்தேன் ! காசினியில் என்சேய்க்கே
அரிதாயும் ஆழ்ஞானம் அளித்துவந்தேன் ! அறிஞர்கோன்
தரியாத விருதுகளெவை ? உலகறியத் தாரும்!”என்றாள்

  விரல்விட்டுக் கணக்கிட்ட வேதாவும் வியப்புற்றுக்
  குரல்விட்டுத் கிழத்தியிடம் “கூவுதும்மெய் !இருகரஞ்சேர்
  விரல்சொடுக்கி அவன்விருதுகள் விளம்பலாமோ? பன்னூறுகை
  விரல்மடக்கிக் கூட்டலன்றோ?வேதவல்லி பொறுத்தி!´என்றான்  

   தமிழாபரணன்
   சென்னிமலை
   M.S.விவேகானந்தன்

N. Ganesan

unread,
Dec 27, 2024, 6:59:43 PM12/27/24
to Santhavasantham
திருப்பையூர்க் குளத்தில் அன்னப் பறவைகள்
-----------------------------------

'டாலர் சிட்டி' என அழைக்கப்படும் திருப்பூர், 60,000 கோடி ரூபாய்க்கு ஆண்டுதோறும் துணிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் நகராய் மாறிவிட்டது. கெமிக்கல்ஸ் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு அதிகம். கொங்குநாட்டின் பழைய பிரபந்தங்களிலே திருப்பூர் "திருப்பையூர்" என அழைக்கப்பட்டுள்ளது. இப்பெயரை  விரிவாக ஆய்ந்தவர் புலவர் சுந்தர கணேசன், தலைமை ஆசிரியர். திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு இவ்வாண்டும் மங்கோலியாவில் இருந்து, இமயம் தாண்டி, அன்னப்பறவைகள் வந்துள்ளன. பனிக்காலத்தில் அன்னங்கள் இந்தியா வலசை வருவது பல கோடி வருஷங்களாய் நிகழும் நிகழ்ச்சி. எங்கே இருந்து வருகிறது, எங்கே செல்கிறது என அறியாக் காலங்களில் அன்னத்தை மனிதனின் ஆத்மாவுக்கு உவமையாக இலக்கியங்களும், கலைகளும் ஆக்கின. ஸ்தூபிகளில் உள்ள கலசத்தில் நடுவே, ஸ்படிகத்தால் ஆன அன்னப் பறவை இருப்பது இதனால் தான். அன்னம் முட்டை இடுவதோ, கூடு கட்டுவதோ இந்தியாவில் இல்லை. அன்னம் என்ற மிகப் பழைய பெயர் பல்லாயிரம் ஆண்டுகளாய்த் தமிழில் இருக்க, Bar-headed goose என்ற ஆங்கிலப் புதுப்பெயரை, பட்டைத்தலை வாத்து எனப் பெயர்த்துப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. வாத்து < Patu என்னும் போர்ச்சுகீசியச் சொல். தாரா என்பது தமிழ் வார்த்தை (தாராக்காரன் - வயலில் வாத்து மேய்ப்போன்).

சரசுவதி, பிரமன் இவர்களின் வாகனம் இந்த அன்னம். சிவாலயங்களில், கருவறைப் பின்புறம் லிங்கோத்பவ மூர்த்தியில் காண்க. 2200 ஆண்டு ஆன, சந்திரகேதுகாட் (வங்கம்) கிடைத்த சரசுவதி சிற்பத்தில் சரசுவதியுடன் அன்ன வாகனம் உள்ளது. ஶ்ரீ முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் அருளிய ‘இராமநாதம் பஜேகம்’ என்ற வடமொழிக் கீர்த்தனை கேட்போம். ஹம்ஸ மந்திரத்தைச் சொல்லித் தீக்ஷிதர்  பூர்த்தி செய்கிறார். காசி ராமக்கிரியை ராகம். காசிக்கும் சேதுவுக்கும் வலசை செல்லும் ஹம்சம்/அன்னத்தை நினைந்து காசிராமக்கிரியை ராகத்தில் ராமநாதரைத் துதிக்கிறார். புறப்பாட்டில் அன்னச்சேவல் தூது போல. கிவாஜ, அன்னத்தின் வெற்றி (சிறுகதை), https://nganesan.blogspot.com/2023/04/hamsa-mantra-ajapaa-annattin-verri.html
அன்னம் பாலையும், நீரையும் பிரிக்கும் என்னும் கதை உருவாக்கம்:
https://groups.google.com/g/vallamai/c/N6km_w3NMNk/m/BPG_tBFhCgAJ

பிற்காலச் சிற்பத்தில் மயில் தோகையொடு இணைத்து ஒருவகை Chimera-ஆக அன்னத்தை இந்தியர்கள் ஆக்கினர். இவற்றை அன்ன விளக்கு, அன்ன வாகனம், கோயில் தூண்கள், ... பார்க்கலாம்.  தமிழ்நூல்களில், செங்கால் அன்னம் = Graylag goose. இவையும் இந்தியா வருபவை, அரியவை.

In Meso America, Canada geese were compared to the Soul, just as in India for Hamsam/Annam. Swans do not cross Himalayas, and got introduced in India's zoos only in the 19th century. J. Ph. Vogel, The goose in Indian literature and art, E.J. Brill, Leiden, 1962.

அன்னம் - Tamil Name for Bar-headed Goose:
https://groups.google.com/g/vallamai/c/Ae7z0nhE8kE/m/yTL-yKIpAQAJ


Aṉṉam - the Himalayan Superbird and Tirukkuṟaḷ
Second International Conference on Tirukkuṟaḷ. Souvenir, June 27-29, 2018, Liverpool, England.
Reply all
Reply to author
Forward
0 new messages