சே, சேங்கன்று, சேவல்

26 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 23, 2023, 5:38:03 PM11/23/23
to Santhavasantham
சே, சேங்கன்று, சேவல்
--------------------
இமயவரம்பன்> “சே அமர்ந்தவர்” - இங்கே “சே” என்னும் சொல் ஏற்றைக் குறிக்கிறதா?

ஆம். ஏறு, விடை போலவே சே என்பதும் காலியினத்தில் ஆண் (Zebu male is cE, ERu, viTai, kALai. Ox = எருது. இன்றும் வேளாநண்தொழிலில் உயிர்ப்புடன் இருக்கும் சொல். பள்ளிச் சிறுவனாய் இருக்கும் காலத்தில், தோட்டத்தில் மாடு கன்று ஈன்றபின், பண்ணையாட்கள் வந்து ’சேங்கன்று போட்டிருக்குது மாடு” என்பர்.   சேங்கன்று=   காளங்கன்று. கிடாரிக்கன்று என்றால் பெண். கடாரி > கிடாரி. கடா + ஏறி ===>> கடேறி/கடேரி. விவசாயம் மங்கி வருதலால், பலருக்கும் இச்சொற்களின் பொருள் தெரிவதில்லை.

         ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
         சேவும் சேவலும் இரலையும் கலையும்
         மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
         போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
         யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
                         (தொல். பொருள். மரபியல்)

முல்லைத்திணை ஆகிய கொங்குநாட்டில் பெண் கலியாணம் ஆகி மணமகன் வீடு சென்றபின்னர் பசுமாடு போகும். “பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்” அனுப்புவது பற்றி, கவிராயர்கள் பாடும் கலியாண வாழ்த்தில் கேட்கலாம். வெங்கலத் தாம்பாளத்தில் பாலும், பழமும் பிசைந்து உண்டு, தூக்கிக் குடித்தபின் நாட்டுக்கவிராயர்கள் பாடுவது கலியாணவாழ்த்து.

சே - ஆண் காளைக் கன்று. சேதா, சேதா என்று சங்க இலக்கியத்தில் வரும். அதற்குச் சிவந்த மாடு என்றால் சிறப்பான பொருளில்லை.
ஏர், வண்டி, கமலை பூட்டப் பயன்படும் அழகிய காளைக் கன்றை உடைய ஆ = சேதா.
ஈனாக் கிடாரி = இளம் பசுமாடு, பயிர் ஆகாதது. இதிலிருந்து கிடைப்பது சிவனுக்குகந்த கோமயம். பஞ்ச கௌவ்வியங்களுள் ஒன்று - ஆனைந்து.

-------------

கே- கேவுதல் - மூச்சு இரைக்க ஓசை எழுப்புதல். கேந்தி (கே-) அடங்காக் காமம். கேவு-> சேவு- > சேவல். கோழிகளில் மட்டும் சேவல் இல்லை. அன்னச் சேவல் பற்றிப் புறநானூற்றுச் செய்யுளே உண்டு. அன்னம் = இமயத்தில் இருந்து தமிழகத்துக்கு வலசை வரும் பட்டைத்தலை அன்னம் பற்றிய பாடல் அது: Bar-headed geese. கருடன். உயர்கொடிச் சேவலோய் (பரிபா. 3, 18). குதிரையின் ஆணுக்குச் சேவல் என்ற பெயர் உண்டு. ”குதிரையுள் ஆணினைச் சேவலென்றலும்” (தொல். பொ. 623).

(அமெரிக்கக்) கடமான் சேவல்:  சே என்பது ஒரு காரணப்பெயர்.
https://www.youtube.com/watch?v=8jgv8OoB078
Bull bellows and bugles
https://www.tandfonline.com/doi/abs/10.1080/09524622.2016.1275805
https://www.youtube.com/watch?v=scfBRuaF3QA
https://www.flickr.com/photos/thermop/7183411330
https://depositphotos.com/video/bull-zebu-like-cattle-in-aggression-and-sexual-arousal-195272124.html

~NG



On Sat, Nov 11, 2023 at 9:59 AM Anand Ramanujam <anandbl...@gmail.com> wrote:
மிக அருமை!

சே அமர்ந்தவர்” - இங்கே “சே” என்னும் சொல் ஏற்றைக் குறிக்கிறதா?

On Sat, Nov 11, 2023 at 9:20 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Yes.

சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி


V. Subramanian


On Sat, Nov 11, 2023 at 8:36 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

6)

மூவ ரின்முதல் மூர்த்தி ஆயவர்  

சேவ மர்ந்தவர் தேனி லாவிய

பூவ ணிந்தவர் பூண நூலது பொலியும் மார்பினரே

ஏவை எய்ம்மதன் எழிலு டம்பது

வேவ நோக்கிய விமலர் வார்குழற்

பாவை பங்கினர் பறிய லூருறை பரசு பாணியரே.



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Nov 23, 2023, 8:33:03 PM11/23/23
to சந்தவசந்தம்
அருமை ஐயா மேலும் 
அருணகிரிநாதர் திருப்புகழில் 

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
     சீராக வேயு ரைத்த ...... குருநாதா

சேவேறும் ஈசர் சுற்ற ... நந்தியின் மீது ஏறுகின்ற ஈசராம் சிவனார்
உன்னை வலம் வர,

மாஞான போத புத்தி ... சிறந்த ஞான உபதேசத்தை

சீராகவே உரைத்த குருநாதா ... செம்மையாகவே சொன்ன
குருநாதனே,
Reply all
Reply to author
Forward
0 new messages