நுதல், நுதலிய குறள்

60 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 9, 2023, 11:32:50 PM3/9/23
to Santhavasantham
நுதல், நுதலிய குறள்
----------------------------

நுத்- என்னும் தாதுவேர் தமிழில் பல சொற்கள் பிறக்கக் காரணமாக இருக்கின்றது. நுத்து-தல் : முதலில் தோன்றுதல். எனவே, நெற்றிக்குப் பெயராக நுதல் அமைந்துள்ளது. குழந்தை பிறக்கும் போது முதலில் தோன்றுவதால் “நுதல்”. நுதலிய பொருள் : கட்டுரை அல்லது நூலில் சொல்லப்படும் பொருளை முதலில் அறிவிப்பது. Abstract (of the article) = *நுதலி* என அழைக்கலாம்.

அணக்கும் ஆற்றல் கொண்டது அணங்கு. அதுபோல், நுத்து-தல்/நுந்து-தல் தன்வினை/பிறவினை ஜோடியாக வரும். நுந்து-தல் இவ்வினைச்சொல்லில் சொன்முதல் ந்- கெட்டு உந்து-தல் என்னும் வினை தோன்றுகிறது. நுந்தாவிளக்கு (>> நொந்தாவிளக்கு, நந்தாவிளக்கு = தூண்டாவிளக்கு). நுத்- என்னும் தாதுவேர் நுத்தை என்ற சொல்லாக தொல்திராவிட மொழியில் இருந்திருக்கும் எனக் கருதலாம். புல்-லுதல் மரம், சுவர், கூரை இவற்றில் புல்லும் உயிரி, புல்லி > பல்லி என்றாதல் போல, நுத்தும் உயிரி நுத்தை > நத்தை. ஈழத்தீவில் நந்திக் கடல் என்பதும் நத்தையின் பெயரால் ஏற்பட்ட பெயர் என்பர்.

நுந்து-தல் > உந்து-தல். இவை போலப் பல உதாரணங்கள் கொடுத்துள்ளேன். Many words in Tamil have lost word initial consonants (k, c, t, m, n, y, v). See several examples:
https://groups.google.com/g/vallamai/c/soJbLYwgaA8/m/WqEp_7imBAAJ

சென்ற வாரத்தில், சங்க கால உணவாகிய பாசவல் பற்றிப் பார்த்தோம். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும், சவல் > அவல், சமலை > அமலை உண்டு. An important substratum for the staple food, rice from Dravidian all across India. இவை சொன்முதல் ச்- கெடுதற்கு நல்ல காட்டுகள். நெல்லரிசியில் சமைக்கும் அவல் (< சவல்), அமலை (< சமலை) என்ற சொற்கள் பற்றிய விளக்கம்:
https://groups.google.com/g/santhavasantham/c/5Y2MdNZilDc/m/GEf1tK-CAQAJ

நுதல்¹(லு)-தல் nutal- , 5 v. tr. 1. To denote; to mean, intend; கருதுதல். பல்லவை நுதலிய வகர விறுபெயர் (தொல். எழுத். 174). 2. To speak, tell; கூறுதல். நூற்குள் நுதலிய பொருளல் லனவற்றை அதற்குத் தந்துரைத்தலின் தந்துரை (நன். 1, சங்கர.). 3. To bring into being, create; தோற்றுவித்தல். தேவுபல நுதலி (திவ். இயற். திரு வாசி. 4).

   நுதல்² nutal , n. < நுதல்-. Word; சொல். (W.)

   நுதல்³ nutal , n. < niṭala. 1. [T. nuduru, K. nosal, M. nutal, Tu. nesalu.] Forehead; நெற்றி. தன்கைக் கொண்டெ னன்னுத னீவியும் (நற். 28). 2. Eyebrow; புருவம். (பிங்.) 3. Head, skull; தலை. குடுமி களைந்த நுதல் (புறநா. 77). 4. Top, upper part; மேலிடம். தாமரை வரம்பணைந் ததனுதற் கிடந்த வார்செந்நெல் (சீவக. 1442).

   நுதலணி nutal-aṇi , n. < நுதல்³ +. An ornament for the forehead; நெற்றிச்சுட்டி. (யாழ். அக.)

நுதலிப்புகுதல் nutali-p-pukutal , n. < நுதல்- +. (Gram.) A literary device which consists in stating one's theme before dealing with it in detail, one of 32 utti, q. v.; உத்தி முப்பத்திரண்டனுள் சொல்லப்போகும் விஷயத்தை முதலிற்குறித்துப் பின்விளக்குவதான தந்திரவுத்தி. (நன். 14.)

இது, மதுரன் நுதலிய குறளுக்குப் பின்னூட்டமாக, நுதல் ‘நெற்றி’, நுதலு-தல் (Cf. நுத்து-தல்/நுந்து-தல்) பற்றிய சிந்தனை. அக் குறளைப் பார்ப்போம். ~NG
-------------------------------------------------

அன்பர் ஒருவர் கேட்டார்:
வெளி போதாததால் குறள் வெண்பாவில் இரட்டுற மொழிதலணி சற்றுக் கடினமானது.....
நுதல் என்ற சொல்லை வைத்து இரட்டுற மொழிதலணி பூண்ட குறள் வெண்பா ஒன்றை யாத்துத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இரட்டுற மொழிதல் அணி - சிலேடை என்றுஞ் சொல்வர்

யாம் யாத்தளித்த குறட்பா:

வண்டமிழால் வான மதியொளியை வாழ்த்தென்றால்
நுண்டுணையாம் பாவை நுதல்


பாவை - பெண், பாவினை/பாட்டினை
நுதல் - நெற்றி, சொல்லுக/குறிப்பிடுக

நுண்டுணை - நுண் துணை
வண்டமிழ் - வண் தமிழ்
 
கேட்டவரே குறள் வெண்பாவில் பதிலிறுத்தினார்:

பார்த்த மறுநொடி பாவை நறுந்தமிழில்
யாத்ததை யென்னென்பேன் யான்....

(Rajini Pirathap Singh on Facebook)

N. Ganesan

unread,
Mar 11, 2023, 7:07:32 PM3/11/23
to Santhavasantham
நுத்து-/நுந்து- என்னும் சொற்களில் இருந்து நுத்தை > நத்தை என வரும் என்பது பார்த்தோம். நுந்து > நந்து, நந்தம் என்றாகும். கடற்கரையில் நுந்திக் கொண்டிருக்கும் சங்கினங்கள், நத்தைகள் மிகுதியால், நந்துக்கரை என்ற பெயர் ஏற்பட்டு, நந்திக்கரை என இலங்கைத் தீவில் இருக்கிறது.
Nanthi Kadal is "the Sea of Conches".
https://en.wikipedia.org/wiki/Nanthi_Lagoon
https://www.tamilnet.com/art.html?catid=98&artid=28619

நத்து² nattu , n. < நந்து. [T. M. natta.] 1. See நத்தம்². நத்தொடு நள்ளி (பரிபா. 10, 85).
நத்தம்² nattam , n. < நந்து. 1. Conch; சங்கு. (சூடா.) (சீவக. 547, உரை.) 2. Snail; நத்தை. (அக. நி.)
 நத்தை¹ nattai , n. < நந்து. Snail, Buccinum; கருநந்து. (திவா.)
நந்தம்¹ nantam , n. 1. cf. நந்து. Conch; சங்கு.
நந்து²-தல் To stir, trim; தூண்டுதல். விளக்கை நந்து. Loc.
நந்து³ nantu  Conch; சங்கு. (திவா.), Snail; நத்தை. (பிங்.)

நுந்து கன்று என்ற தொடர், வேளாண்மைத் தொழிலில் இருந்துள்ளது. தாய்ப்பசு, வளர்ந்த கன்றை உதைத்து பக்கல் வரவொட்டாமல் தடுக்கும். Weaning of the Calf by the cow. கன்றை நுந்துவதால் ஏற்படும் வினைத்தொகை இது: நுந்துகன்று - தாய்ப்பசுவால் உதைத்துத் தள்ளப்பட்ட கன்று.  நுந்து- > உந்து- . மாணிக்கவாசகர் பாடிக் குறித்துள்ளார்.

 பேரா. சு. பசுபதி பதிவுக்கு 2018-ல் அளித்த பின்னூட்டு:
https://groups.google.com/g/vallamai/c/9Ffi1cK0l-c  
கவிஞர் சு. பசுபதி (வாங்கல்/சென்னை/டொராண்டோ) அவர்கள் மகாவித்துவான் பிள்ளையவர்கள் நினைவுதினத்தில்
அவரது தலைமாணாக்கர் உவேசா எழுதிய திருவாசகப்பாடலில்
அரிய சொல்லைப் பற்றிய செய்தியைப் பதிவிட்டுள்ளார்.
http://s-pasupathy.blogspot.com/2018/02/978-4.html

நுந்துகன்று:
“நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வ நயந்தறியா வண்ணமெல்லாம்
தாயுற்று வந்தென்னை யாண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ”

நுந்து கன்று என்பது தாய்ப்பசுவால் வலுக்கட்டாயமாக
(உ-ம்: உதைத்து) வெளியே தள்ளப்படும் கன்று. A calf weaned away by its mother cow.
அதுபோல் என்னை விட்டுவிடாதே என சிவபிரானிடம் வேண்டுகிறது திருவாசகம்.  
நுந்துதல் > உந்துதல். உந்தி கையாலோ, காலாலோ தள்ளப்படும் பந்து. “உந்தீ! பற!”.
நீர் > ஈரம், நுண்ணி > உண்ணி (கிருஷ்ணன் குழந்தை - குருவாயூர்) ... நுந்து > உந்து.
நுந்தாவிளக்கு - தூண்டாவிளக்கு.

நுந்துகன்று என்னும் மாணிக்கவாசகர் பயன்படுத்தும் சொல்லைப்போல
பலசொற்கள் படைக்கலாம் என தோன்றுகிறது.
நுந்துகன்று = நுந்தப்பெற்றகன்று =  A calf weaned away by its mother cow.

சுற்றுப்புறச் சூழல், இயற்கை பற்றி ஆங்கிலம், தமிழில் எழுதும்
நண்பர் எஸ். டி பாஸ்கரன் ஒருமுறை ‘domesticated animal' தமிழில்
எப்படிச் சொல்வது எனக் கேட்டிருந்தார்:
https://groups.google.com/forum/#!msg/mintamil/DD1JC6qgen8/hg5hmbZLEAAJ

நுந்துகன்று - நுந்தப்பெறும்கன்று
அதுபோல,
படிவிலங்கு - (படியவைக்கப்படும் விலங்கு) - tamed animal
பயில்விலங்கு - பயிற்றப்படும் விலங்கு - trained animal
வளர்விலங்கு - (மனிதனால்) வளர்க்கப்பெறும் விலங்கு - domesticated animal.

நா. கணேசன்

என் சரித்திரம், உவேசா
http://s-pasupathy.blogspot.com/2018/02/978-4.html

வியாழன், 1 பிப்ரவரி, 2018
978. மீனாட்சிசுந்தரம் பிள்ளை - 4
‘நுந்து கன்று’
உ.வே.சாமிநாதையர்

kanmani tamil

unread,
Mar 11, 2023, 8:06:18 PM3/11/23
to vallamai

நத்தம் (பழங்காநத்தம்)
நந்தவனம் (சோலை) 

போன்ற சொற்கள் இப்பொருளோடு தொடர்பு உடையவையா? 

சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeOXbiMZk%3D9EMSbAoTnz0Yfr_bhdvALxkFbzJzcqEmzaA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Mar 11, 2023, 8:07:25 PM3/11/23
to வல்லமை
On Saturday, March 11, 2023 at 7:06:18 PM UTC-6 kanmani...@gmail.com wrote:

நத்தம் (பழங்காநத்தம்)
நந்தவனம் (சோலை)
போன்ற சொற்கள் இப்பொருளோடு தொடர்பு உடையவையா? 

no
Reply all
Reply to author
Forward
0 new messages