ஊச்சு- < மூச்சு :: சொல்லாய்வு (தமிழில் ஓர் மிகப் பழைய சொல்)

198 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 28, 2021, 8:06:58 AM8/28/21
to vallamai, housto...@googlegroups.com
ஊச்சு- < மூச்சு  :: சொல்லாய்வு
-----------------------------

தமிழில் பல சொற்கள், சொல்லில் முதலாக உள்ள மெய்யெழுத்து மறைந்து ஏற்படுவன. ஒரு நூறு வார்த்தைகளைத் தொகுத்து, க், ச், ம், ந், வ், ய் எனும் எழுத்துக்கள் சொன்முதல் இருப்பது மறைந்து ஏற்படும் சொற்களைத் தொகுக்கலாம். பொறுமையாக, உயிரெழுத்தில் தொடங்கும் எல்லாத் தமிழ்ச் சொற்களையும் ஆராய்ந்தால், சொன்முதல் மெய் (க், ச், ம், ந், வ், ய்) அழிந்து, தோன்றும் தமிழ்/த்ராவிட வார்த்தைகளைத் தொகுக்கலாம். மொழியியலார் செய்ய வேண்டிய பணி இது. ஒரு சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.

(1) சொல்முதல் "க்" மறைவு:
(a) காம்பு > ஆம்பல் (நீண்ட காம்புள்ள நீர்ப்பூக்கள் (lily, lotuses, ...), காம்பு போன்ற துதிக்கை
உள்ள யானைக்கும் ஆம்பல் என்ற பெயருண்டு.
(b) கல்-/கரு- என்னும் தாதுவேர் தரும் கனல் ‘தீ, சிவத்தல்/சினத்தல், கருகுதல்’ > அனல்
(c) கறுகு > அறுகு (புல்).
(d) கனல் (Cf. கஞலு-தல்) > அனல்
(e) கெழு- >> கெறு- >> எறு- (எறுழ், எறுப- ‘சிவப்பு’). எறுழி = கேழல்.
etc.,

(2) சொல்முதல் "ச்" மறைவு:
(a) சீ (சீமாறு, சீக்காடு > ஈக்காடு (ஈர்க்காடு)) சீ- (சீந்து/சிந்து ஆறு) > ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ...
(b) சீ- சீழம் > ஈழம். சீ -ழ் ஈறு பெறுகிறது.
(c) சிப்பி > இப்பி,
(d) சமர் > அமர்
(e) சமணர் > அமணர்,
(f) சதியமான் > அதியமான் (சண்பைக் கல்வெட்டு)
(g) சுண்ண > சுஷ்ண > உஷ்ண (வடமொழியில்)
https://groups.google.com/g/tiruvalluvar/c/x_CxuwmOwkU/m/L0jrq6T5oUQJ
etc.,

(3) சொல்முதல் "ந்" மறைவு:
(a) நுண்ணி- > உண்ணி (குருவாயூர் உண்ணி க்ருஷ்ணன்; உண்ணி - நாய் உண்ணி).
(b) நீர்- > ஈரம்
(c) நுந்து > உந்து (நுந்தாவிளக்கு, நொந்தாவிளக்கு, நந்தாவிளக்கு : தூண்டாவிளக்கு)
(d) நிமைத்தல் > இமைத்தல் (நிமிஷ என்னும் வடசொல்லின் மூலம்).
நீலிக்குக் கண்ணீர் நிமையிலே" (பழமொழி)
’செம்மீன் நிமைக்கும் மாக விசும்பு’ (புறப்பாட்டு 60, Cf. நிமிஷம்)
https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E/m/DJnJZhUDAwAJ

நூ- எனும் தாதுவேர். நூல். நூவு/நுவ்வு ‘எள்’. நுவ்வி > நவ்வி ‘chinkara', ஒரு மரை (antelope).
முக்கியமாக,
ஒலிம்பிக்ஸ் ட்ரேக்&ஃபீல்ட் போட்டியில் முதல்முதலாக நூக்கு (javelin) எறிவீரர், நீரஜ் சோப்ரா,
https://en.wikipedia.org/wiki/Neeraj_Chopra
2021_8$largeimg_1329945744.jpg
நூக்கு¹-தல் nūkku- , 5 v. tr. 1. [T. K. nūku, Tu. nūkuni.] To shove, push, thrust aside
நூக்கு = javelin, பெயர்ச்சொல் ஆக, .
(e) நூக்க மரங்கள் = ஈட்டி செய்யப் பயன்படும் மர இனங்கள்,
Dalbergia species like sisoo or black wood.
நூக்கு- - (எறியீட்டி) தூண்டுதல்.
நூக்குவித்தல் > ஊக்குவித்தல். 

புரிதல் - to do physically. In abstract terms, purithal = to understand.
Similarly, ஊக்குவித்தல் - தூண்டுதல் என்ற பொருளில் பயன்படுகிறது.
etc.,

(4) சொல்முதல் "வ்" மறைவு:
(a)விடங்கர் > இடங்கர் “Gharial, one of 3 species of crocs in India, mentioned in old Tamil, the source of Linga worship initially for VaruNa as in Gudimallam, later Pallava period as god Shiva"
(b) விந்து > இந்து ‘தந்திரயாநத்தில் முக்கியச் சொல், யோக நூலில் திருமந்திரம் தந்திரம் எனப் பிரியும்; இந்து வேதத்திலும், இடங்க சங்க நூல்களிலும் பதிவாகும் பழஞ்சொல்.
இந்து - drop, dot, Soma, semen, moon ..' தமிழில் விந்துமதி/பிந்துமதி வெண்பாக்கள் இலக்கணத்தில் உண்டு. இந்துமதி வெண்பா எனலாம்.
(c) வரி (வ்ரீகி) > அரி (அரிகி/அரிசி). வேளிர் வட இந்தியாவில் இருந்து கொணர்ந்த வேளாண் பயிரில் முக்கியமானது. 3000 ஆண்டு இருக்கலாம். வேள் ஒருவன் இறந்தபோது உடைத்த குடத்தில் கொற்றி, விடங்கர், நெல், நெல்வயலின் கொக்கு காட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பழைய சமயக் கதை ஆதிச்சநல்லூர்ப் பானையோட்டில் சொல்லப்பட்டுள்ளது. For details, the most important find of Adichanallur burial urn, undoubtedly one of the most important ceramic ever found in Tamil country.
Its photograph is given as Figure 7.
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5/mode/2up
also, see viTaGkar (> iTaGkar) in 4700 years old amulet revealing the Astronomy of India,
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

(d) Palm squirrels என்னும் கையடக்கமான அணில்களுக்கு மாத்திரம் வெளில் என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
வெளில் என்ற பெயர் ‘பால்ம் ஸ்குரில்’ பெறும் விதம் வெள்ளிடைமலையாம்.
தெற்கே மூவரி அணில்களும், வடக்கே ஐவரி அணில்களும் இருக்கின்றன.
வெண்மையான வரிகள் கொண்ட கையில் அடங்கும் அணில் = வெள்- + இல் (விகுதி) வெளில் என்று பெயர்.
வெளில் “palm squrirrel"  உள்ள சங்கப் பாடல்கள் கொண்ட நூல்கள்:
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
மூவரி வெளில் (அ) வரிப்புறம்: https://en.wikipedia.org/wiki/Indian_palm_squirrel
ஐவரி வெளில் (அ) வரிப்புறம்: https://en.wikipedia.org/wiki/Northern_palm_squirrel
வெளில் > அளில் (கன்னடத்தில், வ்-  இழப்பு).
etc.,

(5) சொல்முதல் "ய்" மறைவு:
யால்- > ஆல்- “Aerial Roots of the Banyan tree, hence the tree of Shiva/Rishabhanath of gets its name". வடம் என்பதும் யால் (> ஆல்) என்பதன் பரியாய நாமம் தான். இதனால், துதிக்கையால் யால்- >> யானை பெயர் பெறுகிறது. யானை > ஆனை, யால்- > ஆல மரம், ...
யா/யாம் - யாத்தல், சேர்ந்துகட்டுதல். எனவே, ஓடு ஒட்டி உள்ளது யாமை. யமுநா என்ற ஆற்றின் பெயர் இந்த் த்ராவிட வார்த்தையால் பெற்றது. யமுனா < யாமை.
யா மரம் - பட்டை உடைய Shores species. யா- > ஆ மரம் (தேவாரம்). ஆச்சா மரம். யா மரங்களில் 300 சாதிகள் உள்ளன. இவை மிகுதியாய் உள்ள தீவிற்கு யாவகம் எனப் பெயரிட்டனர் தமிழர். யாவகம் > சாவகம் > ஜாவா எனப்படுகிறது.

யாடு (Aries - ram, Zodiac sign) என்னும் சொல் யாட்டை, யாண்டு என்ற ஆண்டுக்கான தமிழ்ச்சொற்கள் இரண்டையும் தந்தது. யாடு ஐ விகுதி ஏற்று யாட்டை என வந்தது. கச்சிப் பேடு --> பேடு+ஐ = பேட்டை போல. ‘யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை (< யால்), யாளி, யார், யாப்பு, யாக்கை, யா, யால்’ என்பன யகாரத்தில் தொடங்கும் பழந்தமிழ்ச் சொற்கள் ஆகும். இவை இடைக்காலத்தில் மொழிக்கு முதலில் வரும் யகர மெய்யை இழந்து, முறையே, ‘ஆறு, ஆண்டு, ஆடு, ஆமை, ஆனை, ஆளி, ஆர், ஆப்பு, ஆக்கை, ஆ (மரம்), ஆல் (மரம்)’ என ஆகாரத்தில் தொடங்கும் சொற்களாக மாறி அமைந்தன.  காடு : காண்டா (மிருகம்), கீடு-கீண்டு (கீடம் = புழு), கூடு-கூண்டு, தாடு-தாண்டு (மேகெ தாடு - ஆடுதாண்டு காவேரி), நீடு-நீண்டு, வேடு-வேண்டு, சூடு-சூண்டு(சுண்டு), ... போல யாடு (சித்திரை மாத ராசி) தொடக்கம் ஆதலால் யாண்டு, யாட்டை எனச் சங்க காலத்தில் ஆண்டுக்குப் பெயர்.

யாடு >> யாட்டு, யாண்டு (சங்க நூல்களில்).
யாட்டுக்கோட்பாடு கொணர்ந்த சேரலாதன் - பதிற்றுப்பத்து. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் பஞ்சாங்கம் நிறுவிய சேர மன்னன் புகழப்பெறுகிறான்.
கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் சொல்லியுள்ளேன். எங்குமே, தொல்காப்பியர் ஆவணியை எப்பொழுதும் ஆண்டு (< யாண்டு/யாடு) பிறப்பாகக் கொள்ளவில்லை. முந்நான்கு பருவமாக சித்திரையில் தொடங்கும் 12 மாதங்களைப் பகுத்து, க்ரீஷ்ம பர்வத்தில் தொடங்கும் வட இந்திய முறையைத் தமிழகத் தட்பவெப்ப நிலைக்கு மாற்றுகிறார் காப்பியர். பிராமி எழுத்து தமிழகம் வந்தபோது, சில மாற்றங்களை - உ-ம்: புள்ளிக் கோட்பாடு - செய்தவர் தொல்காப்பியர். மேலும், வல்லமை எழுத்துக்களை வல்லெழுத்து இனமாக வைத்தார். அதே போலத்தான் வேளாண்மைக்காக கார்ப்பருவத்தை முதலில் சொல்வதும் ஆகும். சமணர்கள் பலரும் வேளாண்மைத் தொழிலர். வேளாண்மைக்கு அடிப்படை கார்காலம், எனவே 6 பருவச் சுழற்சியை வேளாண்மையை முதன்மையாக வைத்துத் தருகிறார். சமணர்கள் செய்த நிகண்டுகளும் அவ்வாறே. கனலிவட்டம் - தமிழில் Zodiac என்பதன் கலைச்சொல் (சிந்தாமணியில்) இழையில் விரிவாக விளக்கியுள்ளேன். நச்சினார்க்கினியர் திருநாளாக சிங்க மாசத்தை (ஆவணி 1) வைக்கலாம். வேளாண் சுழற்சி துவங்கும் மாதம் கார்ப்பருவம். அதற்காக, யாண்டு/யாட்டு < யாடு தமிழ் ஆண்டுப் பிறப்பு மாறுவதில்லை.

(6) சொல்முதல் "ம்" மறைவு:

மலர் > அலர்
மஞ்சைக்களம் > அஞ்சைக்களம்  (அஞ்சை < அஞ்ஞை/மஞ்ஞை)
மோய்தல் > ஓய்தல்,
முச்சி > உச்சி
மடுப்பு > அடுப்பு,
மட்டியல் > அட்டியல் (கழுத்தில் குறுக்கே உள்ள அணி)
மட்டணங்கால் > அட்டணங்கால். (ஒருகாலை மடித்து மேலே இட்டமர்தல்)
மாசு > ஆசு
மாமரம் > ஆம்ர
முள்ளல் > உள்ளல் ‘Hilsa fish'
முண்ணிச் செடி > உண்ணிச் செடி (https://en.wikipedia.org/wiki/Lantana_camara
                           https://ta.wikipedia.org/wiki/உண்ணிச்செடி )
முட்டை/முண்டம் > மண்டை > அண்டம் ‘egg' (வேதத்தில்)
மோட்டை > ஓட்டை
மேழகம் > ஏழகம்
....
மேலே காட்டியுள்ள எடுத்துக்காட்டுகள் போல,சொன்முதல் மகர மெய்கெட்டுத் தோன்றுவது ஊச்சு-தல் “to snuff, உறிஞ்சுதல்" ஆகும்.
மூச்சு (DEDR 4886) > ஊச்சு

எல்லா நாடுகளிலும் மூக்குப்பொடி டப்பி கலைநுட்பத்துடன் சுமார் மூன்று நூற்றாண்டுகளாகச் செய்யப்பட்டுள்ளன.
தாம்பூலப்பெட்டியை வெற்றிலைச் செல்லம் என அழைப்பதுபோல், அழகான பொடி டப்பாக்களை
பொடிச்செல்லம் என்றழைக்கலாம்.  ஊச்சு என்றே மூக்குத்தூளுக்குப் பெயரிடல் பழைய தமிழ்ச்சொல்லைப்
புரிந்துகொள்ள உதவும்: (1) பொடி (2) மூக்குப்பொடி (3) துகட்காரம் (4) நாசிகாசூரணம் (5) ஊச்சு (6) ஆக்கிராணப்பொடி (7) நசியம் ...

சற்று மென்மையாக தொழிற்படும் வினை: மோத்தல்/முகர்தல். மோப்பக் குழையும் அனிச்சம் - குறள்.
மூக்கு என்ற சொல்லுடன் தொடர்புடையது மூச்சு இழுத்தலும், விடுதலும். மூசு-தல்/மூச்சு-தல்/மூஞ்சு-தல்.
மூஞ்சு- வினையில் இருந்து மூஞ்சூறு என்ற பெயர் பிறந்தது. https://en.wikipedia.org/wiki/Asian_house_shrew
கொங்குநாட்டில் busy என்பதற்கு இணையாக, மிகப்பழைய சொல்: முசு/முசுவு (cf. முகு/முக்கு-தல்). I am busy = ”நான் முசுவாக இருக்கிறேன்”,
”ஒரே வேலை முசுவு, வர முடியலை” ... - எனக் கேட்கிறோம். இதுவும், மூச்சுவாங்கும் அளவுக்கு வேலை என்பதால் ஏற்பட்ட சொல்.
படைவீரர்கள் உள்ள பாடிவீட்டுக்கு, முசுப்பதி என்ற பெயர் உண்டு. அவர்கள், பல உடற்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, ...
மேற்கொண்டுள்ள முகாம். முசுவாக உள்ள இடம் = முசுப்பதி (war camp).

மூச்சுதல் எனும் வினைச்சொல், சொன்முதல் மகரமெய் இழந்து ஊச்சுதல் என்றானது. மூக்குப்பொடியை ஊச்சி நுகர்வர்.
புகையிலைப் பழக்கம் உமிழ்தல், உறிஞ்சல், ஊச்சுதல் என மூன்றுவகைப்படும்.
உமிழ்தல் - (chewing &) spitting; ஊச்சல் - to snuff; ஊதல் - புகை ஊதுதல் (சுருட்டு, சிகரெட், பீடி).
இவை உடல் நலக் கேடு தரும் என்னும் வெண்பா.

  சுருட்டுப் புகைப்புத் துகட்காரம் ஊச்சல்
  சுருட்டு சுருட்பாகு துய்த்தல் - அருட்டுறும்
  எச்சிற் படுத்தல் இயைதல் உமிழ்தலிவை
  நச்சிற் கெடும்யாண் நலன்
கு-ரை: துகட்காரம் - மூக்குப்பொடி; ஊச்சல் - உறிஞ்சுதல்; சுருட்டுசுருள் - வெற்றிலைச் சுருள்,
பாகு - பாக்கு. அருட்டுறும் - அருவருக்கப்படும்; எச்சிற்படுத்தல் - எச்சிலியைதல், எச்சிலுமிழ்தல் எனக்
கூட்டுக. நச்சின் - விரும்பினால். யாண் - அழகு. யாணலன் - நல்லழகு.
           திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை, அபிதான மணிமாலையில் கூறுகிறார்:
   ”2129 உறிஞ்சல் உறிதல் ஊச்சல் என்று ஓதுப”

சங்கத்தமிழில் ஊச்சுதல் வினைக்குப் பொருள் விரிதல்:
-----------------------------------------------

மூக்கு, அதில் மூச்சு >> ஊச்சு என்றாகிச் சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன.
மூக்கில் காற்றில் ஊச்சுவது உறிஞ்சுவது என்னும் பொருள்கொண்ட வினைச்சொல்.
இதனை, வாயில் நீரை உறிஞ்சிக் குடிப்பதற்கும் உரிய சொல்லாக ஆண்டுள்ளனர்.
அழகான பாலைத் திணைப் பாடலைப் பார்ப்போம்.

'மான் செய்த தந்திரம்' (கி. வா.ஜ. விளக்கம்)
**************************************

நீரில்லாத பாலைவனந்தான் அது. பல இடங் களில் பழைய காலத்தில் தண்ணீர் தேங்கி இருந்த குழிகள் மாத்திரம் இருக்கின்றன. இரண்டு மான்கள் நாவறண்டு கண் சுழலத் திரிகின்றன. ஒன்று பெண்; மற்றொன்று அதன் ஆண் மாணுக்குத் தன் தாகம் பெரிதாகத் தோன்ற வில்லை. 'இந்த மெல்லியலுக்குச் சிறிது நீர் தேடித் தரவேண்டுமே!' என்று அது தவிக்கின்றது. கடவுள் கருணை செய்கிறார். எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறிய சுனை காணப்படுகிறது. சூரியனது வெயிலால் அதில் சுண்டிப்போய்க் குழம்பிய சிறிதளவு நீர் தேங்கி நிற்கிறது. இரண்டு மான்களும் அந்தச் சுனைக்கருகில் நிற்கின்றன.

அன்பின் அதிசய சக்திதான் அன்ன சிறப்புடையது! அன்பின் முதிர்வில் இணையற்ற தியாகம் கனிகின்றது. அந்தச் சுனையிலுள்ள சிறிதளவு நீரை நார் உண்பது என்பதில் விவாதம் வந்துவிடுகின்றது. அசுர எண்ணம் அந்த மான்களிடத்தில் தோன்ற வில்லை. 'நீ குடி' என்று ஆண்மான் அன்பு கனியச் சொல்கிறது; 'நீதான் குடிக்கவேண்டும்' என்று பெண் மான் பேசுகிறது. தெய்வீகக் காதலிலே தோன்றிய எண்ணமல்லவா?

சிறிது நேரம் இரண்டும் அங்கே நிற்கின்றன. ஆண்மான் தன்னுடைய ஆண்மை அதிகாரத்தினால் பெண்மானைக் குடிக்கும்படி வற்புறுத்தலாம். பெண் மானும் அந்த வற்புறுத்தலுக்கு அஞ்சிக் குடிக்கலாம். அப்பொழுது அது மனத்தில் மகிழ்ச்சியோடு இனிமையாக உண்ணாதே. 'நம் காதலன் குடிக்க வில்லையே!' என்ற வருத்தத்தோடு அது குடிக்கும். அந்த வருத்த மிகுதியினால் அது குடித்தும் குடிக் காததுபோலவே அல்லவா இருக்கும்? இந்தயோசனை ஆண் மானுக்குத் தோன்றுகிறது. இரண்டு பேரும் குடிக்கவோ அதில் ஜலம் இல்லை; அது போதாது. இந்தச் சங்கடத்தில் என்ன செய்வது?

தான் உண்டு மிஞ்சிய நீரைக் குடிப்பதானால் பெண்மான் அதனை இனிது உண்ணும். இல்லை யெனில் உண்ணாது. அதன் காதல் உயர்வு அப்படி இருக்கிறது. இந்தப் பெரிய சிக்கலைப் போக்கு வதற்குத் திடீரென்று அதற்கு ஒரு தந்திரம் தோன்று கின்றது.

வெகு வேகமாக அந்தச் சுனையில் ஆண்மான் தன் வாயை வைது உறிஞ்சுகின்றது; வாஸ்தவத்தில் ஜலத்தைக் குடிக்கவில்லை. குடிப்பது போலப் பாசாங்கு செய்கிறது. "உஸ்" என்ற ஒலி மட்டும் கேட்கிறது. அது பெண்மானின் காதிலே படும்போது அதன் உள்ளம் குளிர்கின்றது. பாதித்தாகம் அடங்கி விடுகிறது. 'நம் காதலன் உண்டு தாகம் தீர்த்துக் கொண்டான். அவன் உண்டு மிஞ்சியதை நாம் இனிக் குடிக்கலாம்' என்று அது நினைக்கின்றது. அப்படியே மிக்க மகிழ்ச்சியோடு அது சுனையிற் சிறிதளவுள்ள நீரைக் குடித்துவிடுகின்றது. அந்நீர் எய்தாது (போதாது) என்று எண்ணிக் கலங்கிய கலைமான், பிணைமான் இனிது உண்ண வேண்டித் தன் கள்ளத்தினால் ஊச்சிய (உறிஞ்சிய) தந்திரம் பலித்து விட்டது. அது பிணைமானைத் தழுவிக் களிக்கின்றது.
* * * *

பாலை வெம்மையினிடையே நிகழும் இந்த அன்பு நிகழ்ச்சி தோழியின் உள்ளத்தைக் குளிர்விக் கின்றது. அதை அப்படியே தலைவிக்குச் சொல் கிறாள். 'உன் காதலர் திருவுள்ளத்திலே போவதாக விரும்பிய நெறி இத்தகையது' என்கிறாள். 'வெவ்விய பாலையிலே ஆண்மான் தன் பெண்மானின் துயரைத் தீர்க்கச் செய்யும் தந்திரத்தைப் பார்த்து நின் காதலன் உன்னை நினைப்பான். அந்த மானுக்குள்ள அன்பு நிலைகூடத் தன்னிடத்திலே இல்லையே என்று வருந்து வான். விரைவிலே போன காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடுவான்' என்ற விஷயத்தைத் தோழி சொல்வதில்லை; ஆனாலும் அந்த மான் கதை யைக் கேட்ட தலைவி அதை ஊகித்துக் கொள்கிறாள். அவளுக்கு நம்பிக்கை உதயமாகிறது. 'வருவான்' அன்ற துணிவோடு அவனை எதிர்பார்த்து நிற்கிறாள்.

இந்தக் காட்சிகளையே பின்வரும் பாடல் உணர்த்துகிறது.

    தோழி கூற்று

    சுனையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
    பிணைமான் இனி துண்ண வேண்டிக்--கலைமாத்தன்
    கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப, காதலர்
    உள்ளம் படர்ந்த நெறி.
          --ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்.

[எய்தாது - போதாது. பிணைமான் - பெண்மான். கலை மான் - ஆண்மான். கள்ளத்தின் - பொய்யாக. ஊச்சும் - உறிஞ்சும். சுரம் - பாலைவனம். படர்ந்த - விரும்பிய.]

தூள் என்பது மிகப் பழைமையான சொல். தூளி (dhuuli)
சிந்தூர செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்... (நாச்சியார் திருமொழி).
வண்ணக் கலவை சேர்ந்து ஓவியம் எழுதுதல் தூளிகை > தூரிகை ஆகிறது.
அதே போல, செந்தூள் >> சிந்தூர- ஆகிறது.
நள்-நாள் ‘கருமை’ > நாளணன் > நாரணன்.
ஆழம் (ஆழி), > அகழுதல்;  ஓச்சு- (ஓங்குதல்) > உகச்சர்/உவச்சர்; கூகு-/கூவு- (வினை) > குகில்/குயில்;
பா- (பால்) > பகல்; மீ- > மிகல்; தூள் > துகள் என மாறுவது போல,
யால் > ஆல் (விழுது, aerial root of the banyan)  >> அகல் என்றாகி,
அகல்விளக்கு, அகலம், மார்பு, ... என்றெல்லாம் மிகப் பழங்காலத்திலே பொருள் விரிவாகிறது.
எண்ணெய் எல்லா வித Oil-க்கும் பொதுப்பெயர் ஆகிவிடுகிறது.

ஊச்சு- மூக்கிலே உறிஞ்சுதல் மாத்திரம் அல்லாமல்,
வாயில் உறிஞ்சுதற்கும் பயன்படும் பொருள்விரிவை சங்க காலத்திலேயே
காண்கிறோம். “ கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரம்என்ப

நா. கணேசன்

kanmani tamil

unread,
Aug 28, 2021, 8:53:46 AM8/28/21
to vallamai
அருமையான தேடலும் விளக்கமும்...
நன்றி. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcTiORoTunxtybuPegf44YojyjpYr%2BT8tK%3DS5sxQEzctQ%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2021, 9:52:13 PM8/28/21
to vallamai
மம்மி-->அம்மா
பப்பா--> அப்பா
மாமா---> அம்மாவன்

சனி, 28 ஆக., 2021, பிற்பகல் 6:23 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
Aug 28, 2021, 10:40:10 PM8/28/21
to vallamai
சிந்திக்க வைக்கும் சொற்கள் வேந்தர் ஐயா. 

'பப்பா' > அப்பா என்ற உறவுமுறைச் சொல் தமிழில் எக்காலத்தில் இருந்து வழங்கியது?
பார்க்க வேண்டும். 
தொகையிலக்கியத்தில் அச்சொல் இல்லை. 

சக 

N. Ganesan

unread,
Aug 30, 2021, 8:23:40 AM8/30/21
to vallamai
On Sat, Aug 28, 2021 at 9:40 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
சிந்திக்க வைக்கும் சொற்கள் வேந்தர் ஐயா. 

'பப்பா' > அப்பா என்ற உறவுமுறைச் சொல் தமிழில் எக்காலத்தில் இருந்து வழங்கியது?
பார்க்க வேண்டும். 
தொகையிலக்கியத்தில் அச்சொல் இல்லை. 

சக 


For almost 2 centuries, Linguists have thought on this question: why pA and mA
words are used worldwide for close kith and kin.

ஆனால், இந்த என் இழைக்குத் தொடர்பு இல்லாதது.

NG

N. Ganesan

unread,
Aug 30, 2021, 8:24:31 AM8/30/21
to vallamai
On Sat, Aug 28, 2021 at 7:53 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அருமையான தேடலும் விளக்கமும்...
நன்றி. 
சக 

நன்றி

N. Ganesan

unread,
Jun 23, 2023, 1:04:51 AM6/23/23
to santhav...@googlegroups.com
On Sat, Aug 28, 2021 at 7:19 AM NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
Very interesting.and informative Sri Ganesan
மிகவும் ரசித்துப் படித்தேன்
நன்றி
          — தில்லைவேந்தன்


https://twitter.com/aadhinaathan/status/1670290490972049408
ஆதிநாதன்✴️
@aadhinaathan
#சுப்பை < #சூம்பி = Dried out, skinny, bony
#சூம்பு cūmpu   III. v. i. shrink, wither, fade, வாடிப்போ; 2. suck, fondle with lips.

J.P.Fabricius Tamil and English Dictionary
cūmpu   III. v. i. shrink, wither, fade, வாடிப்போ; 2. suck, fondle with lips.
    சூம்படைய, to be reduced in circumstances, to be indolent.
    சூம்பல், சூம்புதல், v. n. shrinking; 2. sucking.
    சூமபற்றோள், shrivilled (shrunk) shoulder.

Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சூம்பு cūmpu  கிறது, சூம்பினது, ம், சூம்ப, v. n. To wither as a limb, &c., to be blighted, as fruit, &c., வாடிப்போக. 2. To be shrunk, as the countenance by sorrow, முகஞ்சூம்ப. 3. To dry up, as an ulcer, blister, pustule, பருச்சூம்ப. (c.) Compare கூம்பு, v.
        சூம்பினகை, s. A withered hand.
        சூம்பிப்போனகாய், s. A withered un ripe fruit.
        சூம்படைந்தவன், appel. n. A gloomy looking person. 2. One whose hopes have been blasted. (c.)

------------
for cUmpu, cuppu- (cuppai noun), there are more related words:
cum-/cup- is the root-dhAtu. Cf. aNukku/aNuGku (aNaGku/aNakku) ...

cum-/cup- > cuvai (as in aRu cuvai). cf. kOmaNam/kOvaNam -m-/-v- alternation.
cuppu > uppu 'salt' (loss of word-initial c-)
cum- > cumaNar > umaNar (loss of word-initial c-) 'salt merchants'
cumpaLam > umpaLam 'salt pan' cumpaLam/campaLam, cuppu/cappu, cuumpu/caampu ...

more examples for the Loss of word-initial consonants:
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ

கல்லாத ஒருவனையான் கற்றாய் என்றேன்
     காடேறித் திரிவானை நாடா என்றேன்
பொல்லாத ஒருவனையான் நல்லாய் என்றேன்
     போர்முகத்துக் கோழையையான் புலியே றென்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை
    வழங்காத கையனையான் வள்ளால் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
     யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!  - ஔவை

நா. கணேசன்

kanmani tamil

unread,
Jun 23, 2023, 5:01:50 AM6/23/23
to vallamai
Oh! What a coincidence!!!

நேற்று கலித்தொகையில் மொழிமுதல் 'த்' மறைந்து தோன்றும் ஒரு சொல் பார்த்தேன். நானே இந்த இழையைத் தேடிப் பதிய வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று அந்த இழை தானே முன்வந்து விட்டது. 

கலித்தொகை 136
சொக்கட்டான் ஆடுவதை உவமையாகக் கூறும் பாடல். நாம் தாயக்கட்டை அல்லது சோழி உருட்டித் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம். 

இப்பாடலில் 'தாயம்' > ஆயம் என்று ஆகிறது.

"ஆயம் பத்து" என்கிறார் நல்லந்துவனார். 

நீங்கள் இதுவரை கூறிய சான்றுகளில் 'த்' மறைவதாகக் கூறவில்லை. ஆனால் இங்கு 'த்' மறைகிறது. 

நான் சொல்வது சரி தானே? 
Please, clear my doubt.
Thank you 

சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Jun 23, 2023, 12:58:57 PM6/23/23
to வல்லமை


On Fri, 23 Jun 2023, 2:31 p.m. kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
Oh! What a coincidence!!!

நேற்று கலித்தொகையில் மொழிமுதல் 'த்' மறைந்து தோன்றும் ஒரு சொல் பார்த்தேன். நானே இந்த இழையைத் தேடிப் பதிய வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று அந்த இழை தானே முன்வந்து விட்டது. 

கலித்தொகை 136
சொக்கட்டான் ஆடுவதை உவமையாகக் கூறும் பாடல். நாம் தாயக்கட்டை அல்லது சோழி உருட்டித் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம். 

இப்பாடலில் 'தாயம்' > ஆயம் என்று ஆகிறது.

"ஆயம் பத்து" என்கிறார் நல்லந்துவனார். 


முதலில் தாயம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். தாய் தல் என்றால் உரசுதல் உதாவது, ஒன்றுடன் ஒன்றை உரசுவதால் தாய்க்கட்டை எனப்பட்டது. 






நீங்கள் இதுவரை கூறிய சான்றுகளில் 'த்' மறைவதாகக் கூறவில்லை. ஆனால் இங்கு 'த்' மறைகிறது. 

நான் சொல்வது சரி தானே? 
Please, clear my doubt.
Thank you 

சக 


On Fri, 23 Jun 2023, 10:34 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
Jun 23, 2023, 11:47:45 PM6/23/23
to vallamai
நன்றி ஐயா 
சக

seshadri sridharan

unread,
Jun 24, 2023, 5:27:27 AM6/24/23
to வல்லமை
On Fri, 23 Jun 2023 at 22:28, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

On Fri, 23 Jun 2023, 2:31 p.m. kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
Oh! What a coincidence!!!

நேற்று கலித்தொகையில் மொழிமுதல் 'த்' மறைந்து தோன்றும் ஒரு சொல் பார்த்தேன். நானே இந்த இழையைத் தேடிப் பதிய வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று அந்த இழை தானே முன்வந்து விட்டது. 

கலித்தொகை 136
சொக்கட்டான் ஆடுவதை உவமையாகக் கூறும் பாடல். நாம் தாயக்கட்டை அல்லது சோழி உருட்டித் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம். 

இப்பாடலில் 'தாயம்' > ஆயம் என்று ஆகிறது.

"ஆயம் பத்து" என்கிறார் நல்லந்துவனார். 


முதலில் தாயம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். தாய் தல் என்றால் உரசுதல் உதாவது, ஒன்றுடன் ஒன்றை உரசுவதால் தாய்க்கட்டை எனப்பட்டது.

நான் சிறுவனாக இருந்த போது கோலி விளையாடுவேன். தெருப் பையன்கள் எல்லோரும் கோலி ஆடுவர். அப்போது "எம் மேல தாயாதே டா" என்பான் உடன் விளையாடுவான். ஏனெனில் மேலே உரசினால் குறி தவறிவிடும் என்பதற்காக. இச்சொல் இன்றும் வடசென்னையில் வழக்கில் உள்ளது.

N. Ganesan

unread,
Jun 24, 2023, 8:11:23 PM6/24/23
to vall...@googlegroups.com
On Fri, 23 Jun 2023, 2:31 p.m. kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
> Oh! What a coincidence!!!

> நேற்று கலித்தொகையில் மொழிமுதல் 'த்' மறைந்து தோன்றும் ஒரு சொல் பார்த்தேன்.
> நானே இந்த இழையைத் தேடிப் பதிய வேண்டும் என்று நினைத்தேன்.

>  இன்று அந்த இழை தானே முன்வந்து விட்டது.

>  கலித்தொகை 136
> சொக்கட்டான் ஆடுவதை உவமையாகக் கூறும் பாடல். நாம் தாயக்கட்டை அல்லது
> சோழி உருட்டித் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பிப்போம்.

>    இப்பாடலில் 'தாயம்' > ஆயம் என்று ஆகிறது.
>    "ஆயம் பத்து" என்கிறார் நல்லந்துவனார்.

ஆமாம். தாயம் > ஆயம். சொன்முதல் தகரமெய் இழப்புத் தான். தாயம் சொற்பிறப்பைப் பின்னர் பார்ப்போம். சூது < த்யூத என்னும் வடசொல்லின் தமிழாக்கம். அதுபோல, தாயம்.

உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
  போஒய் புறமே படும் - குறள் 94:3

மணக்குடவர் உரை: புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.

பரிமேலழகர் உரை: உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும்.
(கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. *ஆயம் - வடமொழித் திரிசொல்*, காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)

உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
  அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9

இங்கே, ஆயம் (< தாயம்) சூதுக்கு ஆகுபெயராக வந்தது.

--------------

முன்பு எழுதிய காட்டுகள்: சொல்முதல் த்- மறைவு

தீ போல சிவந்து இருக்கும் பூவுடைய மரம் எறுழம். எறுழங்கோதை என்ற பெண் எழுதுவித்த வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (1) தெறுழ் > எறுழ். தெறுதல் -தீயினால் சுடுதல் (வள்ளுவர், சங்க இலக்கியம்).

இதே போல, (2) தழல் > அழல்,

(3) திமில் > இமில்.

(4) காடைப் பறவைகளுக்கு (Quails) சங்க இலக்கியத்தில் பெயர்: இதல். இதல் < திதல் (Cf. திதலை, தித்தி)

(5) தித்தி > இத்தி > இச்சி

------------

Some more word-initial t- loss in Tamil words like (1) timil 'zebu hump' > imil (2) tital 'spots, spotty bird like quail' > ital (3) teRu 'fire, red' > eRu (cf. eRuzam 'hill tree with red flower' (4) tazal 'fire' > azal. தொறு=தொழு போல, தெறல் = தெழல், தெழல் > தழல் என்றானதோ? தெள்- (தேள்) > அளம் ஆதற்போல, நெண்டு/ஞெண்டு > நண்டு போல.

(5) தள்- எனும் வேர்: தண்மை தண்+நீர் = தண்ணீர். தளி > சளி > அளி - மூன்றும் ‘Cool, Coolness'

(6) து(ய்)ப்பு = துப்பு. துப்பு 'enjoyment, food' > சுப்பு (சுவை) 'taste, cuppu/cappu' > உப்பு ‘salt'

துப்பு² tuppu, n. < து-. 1. Enjoyment; நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197). 2. Object of enjoyment; நுகர்பொருள். வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480). 3. Food; உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள், 12). 4. [K. tuppa.] Ghee; நெய். (பிங்.) உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை. 18).

(7) தெள்ளு/தெள்கு = flea, tick. தோலைக் கொட்டுவதால். Cf. தேள் 'scorpion' கடி, கொட்டு. கொட்டால் பெற்ற பெயர் தேள்.
தெள்-/திள்- தேளுக்கு பிற த்ராவிட பாஷைகளில்: திடொர், சிடு, எடெ
DEDR 2956 Kol. tiṭor, (P.) tiṭor, (SR.) ṭumṭer, ṭūmṭor, (Kin.) ṭunṭor scorpion. Nk. ṭiṭor, kiṭor id. Nk. (Ch.) ṭiṭṭo, ciṭu, ciṭukli id. ? Go. (Mu.) kiṛkaṛ, ēṭe kiṛkaṛ, ēṭe kikkaṛ, ēṭe kihkaṛ, ēṭokaṛ id. (ēṭe crab; Voc. 378, 692). DED(S) 2409.
தெள்-திள்- > இள்- இடுக்கி = claws or pincers of a scorpion
DEDR 444 Ta. iṭukku (iṭukki-) to take between the fingers or toes, grasp as with pincers, take under one's arm, press or squeeze as between two boards; n. prehensile claws as those of a scorpion or of a lobster; iṭukki pincers, tongs, tweezers, steel trap, prehensile chela of a crab or a scorpion; iṭṭiṭai vice in a turner's lathe. Ma. iṭukku claws of lobster; iṭukkuka to press, pinch (as a crab); iṭukki pincers, tongs, forceps. Ko. ikḷ tongs. Ka. iḍaku to pinch, tweak; ikkur̤, ikkur̤a, ikkar̤a, ikr̤a pair of tongs, pair of pincers; (PBh.) ir̤kur̤i tongs, pincers. Tu. iḍumbulu (in wrestling) the act of seizing each other tightly with both hands; ikkuḷi, ikkuḷe, (B-K.) ikkuḷu pair of pincers or tongs. Kui ḍīpa tongs, pincers. DED 356, 377.


தெள்- > எள்- /அள்-  கொட்டும்/கவ்வும் உறுப்பு.
தெள்-/எள்- (with loss of initial t-): அளகம் = பன்றி முள் porcupine's quill.
அலம் (அள-/எள- < தெள்-) = தேள். வடமொழியில் ள இல்லை, எனவே அள- அல- என்றாகிறது.
அலம்² alam , n. < ala. 1. Scorpion, as having a sting; தேள். (திவா.) 2. Scorpio of the zodiac; விருச்சிக ராசி.

Reference:
https://groups.google.com/g/santhavasantham/c/QtZxXwJpuk4/m/H3Z5MkgEAAAJ

~NG

kanmani tamil

unread,
Jun 25, 2023, 8:58:12 AM6/25/23
to vallamai
ஓ... இப்படிப் பல சொற்கள் உள்ளனவோ ! நன்றி. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 25, 2023, 10:55:43 AM6/25/23
to vall...@googlegroups.com


On Sun, Jun 25, 2023 at 7:58 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> ஓ... இப்படிப் பல சொற்கள் உள்ளனவோ ! நன்றி.
> சக

Eventually, I want to write a paper listing many examples of word-initial க், ச், த், ம், ந், வ், ய்  loss for each letter.

kanmani tamil

unread,
Jun 25, 2023, 10:54:55 PM6/25/23
to vallamai
வாழ்த்துகள்... எழுதுங்கள்... நல்ல முயற்சியாக அமையும்.  திராவிட மொழிகள் பலவற்றிலும் இருக்கும் வழக்காறுகளை ஒப்பிடுவதாகவும்; தேவைப்படும் இடங்களில் மட்டும் வடமொழி வழக்கை எடுத்துக் காட்டுவதாகவும்; மூலதிராவிடத்தை நோக்கிய பயணமாகவும் அமைந்தால் மறுத்துப் மேச இயலாது. ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும் முயற்சியாக அமையும். 

சக 

சக 

seshadri sridharan

unread,
Jun 27, 2023, 1:44:09 AM6/27/23
to vall...@googlegroups.com
 கணேசர் எங்கிருந்து இந்த பொருளை எடுத்தார் என்று தெரியவில்லை  தெள்- > எள்- /அள்- இவற்றுக்கு கொட்டும், கவ்வும், முள், claws என்ற பொருளில்லை. 
 

N. Ganesan

unread,
Mar 8, 2024, 7:51:25 AMMar 8
to Santhavasantham
<<<
இன்று ஒரு சொல் : சந்தி.  இச்சொல்லைப் பகுப்பது எப்படி?
சந்தி = சம் + தி. சேர்தல் + தேக இருப்பு. சேர்ந்த வடிவம், சேர்ந்த நிலை. இணைப்பு. கூடல். எழுத்து அல்லது சொல் புணர்ச்சி. கதிரவன் பூமியுடன் நெருங்கி இருக்கும் காலை, மாலை வேளை. அகமும் புறமும் ஒன்றுதல்.  - சொல்லாக்கியன்
>>>

ஆம். saMdhi என்ப. https://en.wikipedia.org/wiki/Sandhi இந்தியாவின் இரு பழைய செம்மொழிகளின் இலக்கணிகள் வெகுவாக சந்தி இலட்சணத்தை ஆய்ந்துள்ளனர். சந்தி என்பதன் தமிழ்ச்சொல்: புணர்ச்சி. உ-ம்: வெண்பா இயற்றுகையில் குற்றியலுகரப் புணர்ச்சியைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்களில் சொன்முதல் மெய் அழிந்து சொற்கள் தோன்றும். அவ்வகையில், *சந்தி > அந்தி* என வரும்.

அந்தி³ anti , n. < sandhi. 1. Twilight, as joining day with night; சந்தியா காலம். காலை யந் தியு மாலை யந்தியும் (புறநா. 34). 2. Evening twilight; மாலை. அந்தியம்போ திதுவாகும் (திவ். பெரியாழ். 2, 8, 1). 3. Red glow of sunset; செவ்வானம். அந்திவண் ணர் (பெரியபு. அமர்நீதி. 3). 4. Morning and evening prayers; சந்தியாவந்தனம். ஓதி யுருவெண்ணு மந் தியால் (திவ். இயற். 1, 33). 5. Night; இரவு. அந்திகாவலன் (திவ். பெரியதி. 8, 5, 1). 6. Intersection of three streets; முச்சந்தி. அந்தியுஞ் சதுக்கமு மாவண வீதியும் (சிலப். 14, 213). 7. (Mus.) An ancient secondary melody-type of the pālai class; பாலை யாழ்த்திறவகை. (பிங்.)

*சங்க நூல்களில் சந்தி > அந்தி பயன்பாடு:*
அந்தி (22)
நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் - பொரு 46
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப - பெரும் 413
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி/ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே - மது 427,428
அந்தி விழவில் தூரியம் கறங்க - மது 460
அந்தி அந்தணர் அயர கானவர் - குறி 225
அந்தி மாட்டிய நந்தா விளக்கின் - பட் 247
மாலை அந்தி மால் அதர் நண்ணிய - நற் 238/4
புன்கண் அந்தி கிளை-வயின் செறிய - நற் 343/6
அந்தி மாலை விசும்பு கண்டு அன்ன - பதி 35/7
மட நடை மா இனம் அந்தி அமையத்து - கலி 92/17
படர் அணி அந்தி பசும்_கண்_கடவுள் - கலி 101/24
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் - கலி 103/13
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து - கலி 119/12
பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து - அகம் 48/23
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப - அகம் 71/6
அந்தி கோவலர் அம் பணை இமிழ் இசை - அகம் 124/14
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை - அகம் 201/8
அந்தி பராஅய புது புனல் நெருநை - அகம் 266/2
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ - அகம் 360/8
தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி/கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு - அகம் 370/11,12
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் - புறம் 2/22
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி/சிறு நனி பிறந்த பின்றை செறி பிணி - புறம் 376/2,3
 
    அந்தியும் (2)
காலை அந்தியும் மாலை அந்தியும் - புறம் 34/8
காலை அந்தியும் மாலை அந்தியும்/புறவு கரு அன்ன புன்_புல வரகின் - புறம் 34/8,9


தமிழில் பல சொற்கள், சொல்லில் முதலாக உள்ள மெய்யெழுத்து மறைந்து ஏற்படுவன. ஒரு நூறு வார்த்தைகளைத் தொகுத்து, க், ச், ம், ந், வ், ய் எனும் எழுத்துக்கள் சொன்முதல் இருப்பது மறைந்து ஏற்படும் சொற்களைத் தொகுக்கலாம். பொறுமையாக, உயிரெழுத்தில் தொடங்கும் எல்லாத் தமிழ்ச் சொற்களையும் ஆராய்ந்தால், சொன்முதல் மெய் (க், ச், ம், ந், வ், ய்) அழிந்து, தோன்றும் தமிழ்/த்ராவிட வார்த்தைகளைத் தொகுக்கலாம். மொழியியலார் செய்ய வேண்டிய பணி இது. ஒரு சில எடுத்துக்காட்டுகள் காண்போம்.


(2) சொல்முதல் "ச்" மறைவு:
(a) சீ (சீமாறு, சீக்காடு > ஈக்காடு (ஈர்க்காடு)) சீ- (சீந்து/சிந்து ஆறு) > ஈந்து/ஈங்கு/ஈஞ்சு, ...
(b) சீ- சீழம் > ஈழம். சீ -ழ் ஈறு பெறுகிறது.
(c) சிப்பி > இப்பி,
(d) சமர் > அமர்
(e) சமணர் > அமணர்,
(f) சதியமான் > அதியமான் (சண்பைக் கல்வெட்டு)
(g) சுண்ண > சுஷ்ண > உஷ்ண (வடமொழியில்)
https://groups.google.com/g/tiruvalluvar/c/x_CxuwmOwkU/m/L0jrq6T5oUQJ
etc.,

நா. கணேசன்

kanmani tamil

unread,
Mar 8, 2024, 7:56:15 PMMar 8
to vallamai
அருமையான தொகுப்பு முனைவர் கணேசன். 

இவற்றில் பல தரவுகள் நீங்கள் ஏற்கெனவே முன்னர் குழுமத்தில் பகிர்ந்து கொண்டவை தாம் எனினும்...

எதற்காக இப்படிக் குழுமத்தில் பகிர்வதோடு நிறுத்திக் கொள்கிறீர்கள்!

இது ஒரு தரமான கருதுகோள் (hypothesis). இதைச் சிறந்த ஆய்வுக் கட்டுரை ஆக உருமாற்றுங்கள். அது தான் அடுத்தகட்ட நடவடிக்கை ஆக இருக்க வேண்டும். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 23, 2024, 4:28:34 PMMar 23
to Santhavasantham
அலை-தல், அலங்கு-தல் : இவற்றுடன் ஒப்பிட சுலவு (> உலவு) அடிப்படையான பொருள் வேறுபாடு கொண்டவை. சுற்றுதல் வேறு. அலைதல் வேறு. காற்றில் மரம் அலைகிறது. மனம் அலைப்புண்டது ... அலங்கு உளைப் புரவி. அல- (அலை-/அலங்கு- ...) to wave, to shake, to move back and forth. அல- தாதுவேர் வேறு; சுலா- > உலா- தாது வேறு.
அலங்கல் அரிமா: https://www.vallamai.com/?p=53239

--------
சுல்-அடிப்படையான வேர்ச்சொல். சுல்+து = சுற்று- சுலவு- / சுலாவு- = சுற்றுதல்.
சுலவு-/சுலாவு > உலவு-/உலாவு. சொன்முதல் சகர மெய் மறைந்து ஏற்படுவது.
ஏராளமான தமிழ்ச் சொற்களில் சொன்முதல் மெய் மறைதலைக் காணலாம்.
Reply all
Reply to author
Forward
0 new messages