cAval 'rice', aval < caval 'pestled rice', amalai < camalai 'rice ball'

61 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 26, 2023, 11:42:04 AM2/26/23
to Santhavasantham
cAval 'rice', aval < caval 'pestled rice', amalai < camalai 'rice ball'
-----------------------------------------------------------------------------------------

Śrī. Y. Bharath wrote about "aval" (= flattened rice) < "caval" :
https://twitter.com/ybharath77/status/1628615496341032962
> Replying to @oligoglot
> but cāval is comparable (or borrowed from Drav)
> Since South Dravidian lost initial 'c' , we have
> avalakki (Ka)
> aval (Ta)
> But North/Central Dravidian maintains initial 'c' like Parji

> Pa. cavil mortar; cavkol (pl. cavkocil) pestle
>Ka. aval pound
> CDIAL 4749
> DED 2391

Yes. "aval" (=  flattened rice by pestle) < "caval". Many words in Tamil have lost word initial consonants (k, c, t, m, n, y, v). See several examples:
https://groups.google.com/g/vallamai/c/soJbLYwgaA8/m/WqEp_7imBAAJ

*aval comes from caval*. Also, amalai < camal- "rice ball".  "veN eRintu iyaRRiya mAkkaN amalai" (malaipaTu kaTAm 441)
MTL: அவல் aval , n. < அவை-. 1. [K. M. aval.] Rice obtained from fried paddy by pestling it; நெற்பொரியிடியல். பாசவலிடித்த . . . உலக்கை (அகநா. 141).
DEDR 2456 has cāy (-pp-, -tt-) to cause to incline, bend or stoop, turn in a new direction, drive, steer, prejudice, spoil, defeat;

So, cāp- "to flatten, to dehusk" is the root verb for cāvala/cāmala 'rice'.
CDIAL 4749 *cāmala or *cāvala- 'husked rice'. [S. K. Chatterji ZII ix 31 < *cāma-, √cam with little probability: Pk. and several NIA. lggs. have no trace of nasal. Poss. of ultimately same non-Aryan origin as taṇḍulá-]
    Pk. cāulā m. pl., cavala- m. 'rice' Deśīn.; S. cā̃uru, cā̃varu m. 'a grain of rice', cā̃uro 'pertaining to husked rice'; L. cāval m. 'husked rice', awāṇ. cāvul, P. cāval, °var, cāul, caul m., WPah. bhal. ċā̆u m. pl., jaun. cau, Ku. caũl, gng. ċā̃wōw, N. cā̃wal, cāmal, A. sāul, OB. tāula, B. cāul, cāl, Or. caü̃ḷa, cāuḷa, cāura, Bi. Mth. Bhoj. cāur, H. cā̃wal, cāw°, cā̃war m., OMarw. cāvala m., G. cāvaḷ m. (usu. pl.).
    *cāmalapiṣṭa-; *rasikācāmala-.
    Addenda: *cāmala- [~ Drav. DED 1976]: Brj. cā̃wal, °war, cāwal, °war m. 'husked rice'.

Sangam literature talks of two konds of "aval", one from fried paddy, another from raw, uncooked paddy 'pAcaval iTitta karuGkAl ulakkai' (kuRuntokai 238). pAcu < pAku 'green'. Here, pAcu 'green' = fresh, raw, uncooked. There is a famous anthropology book: https://en.wikipedia.org/wiki/The_Raw_and_the_Cooked

DEDR 2456  cA- cAp- gives rise to DEDR 2331. (Cf. kOvai 'tindora fruit' > kovvai etc.,)
DEDR 2331 Ta. cappaṭṭai flatness, anything flat; cappaṭi anything flat; cappaḷi (-v-, -nt-) to flatten, be crushed, pressed out of form; cappu (cappi-) to be bent, pressed in; cappai that which is flattened. Ma. cappaṭa flat; cippu what is smoothed, flat. Ka. cappaṭe, capaṭe, appaṭe flatness, flat; cappaḍia large flat stone; cappe that which is flattened or pressed down. Te. cappi flat, not projecting; cappiḍi flat, not projecting, snub. Kol. (Pat., p. 115) sapaṭ flat. Konḍa sapaṭam ki- to crush. Kuwi (Isr.) sap ta flat. / Cf. Skt. carpaṭa-, etc.; Turner, CDIAL, no. 4696. DED 1924. ,

DEDR 3075 Ta. tappu (tappi-) to strike, beat, kill; This comes from DEDR 2331 with a change, c- to t-.

A parallel to cA-/cAp- giving rise to cAval/cAmal 'rice', aval < caval 'flattened paddy', amalai < camalai 'rice ball' can be seen in the verb, kO-/kOp- "to join, to string, to clasp .."
kOvaNam, kaupiina, kOmaNam = loin cloth. https://en.wikipedia.org/wiki/Kaupinam
On kOvaNam, see pg. 11, Th. Burrow, Collected Papers in Dravidian Linguistics, 1968.

N. Ganesan
https://nganesan.blogspot.com

N. Ganesan

unread,
Feb 26, 2023, 9:32:32 PM2/26/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
On Mon, 27 Feb 2023, 1:24 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
வறுக்காமல் அவல் செய்யும் முறை உள்ளது. இது பாசவல். இம்முறை பல காலம் இருந்த பின்னரே, வறுத்து அவல் செய்யும் முறை உருவாகியிருக்க வேண்டும். பாசவல் எளிதில் செய்கிறார்கள். 

பாசவலும் (aval from Uncooked, Fresh, Raw rice), வறுத்த அவலும் (aval from Fried rice)
-------------------------------------------------------------------------------------------------------------------------

பாசவல் இன்று பச்சை அவல் எனப்படுகிறது. சேர நாட்டிலே இந்த இரு வகையில் தயாராகும் அவல்களும் பயன்பாட்டில் உள்ளன. பலருக்கும் பாசவல் என்று சங்க இலக்கியங்களும், பின்னரும் வரும் அவல்வகை தெரிவதில்லை. எனவே, குறிப்பிட்டு விளக்கியிருந்தேன். ~5 ஆண்டுகளுக்கு முன் என் தாயாரிடம் கேட்டு அறிந்துகொண்டது இது. அப்போதும் குறிப்பிட்டேன். என் பழய மடல்களில் பார்க்கலாம். என் அம்மா வீட்டார், உறவினர்களுக்கு  ஏராளமான நில புலங்கள் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் இருந்தன. சித்தூரில் கொங்கன்படை என்ற திருவிழா பகவதி கோவிலில் நடக்கிறது. பாலக்காடு மாவட்டத்துக்கு அத் திருவிழா நாள் அரசாங்க விடுமுறை ஆகும். எங்கள் அம்மாவின் பாட்டியார் அளித்த நிலத்தில் மீனாட்சிபுரத்தில் அரசாங்க ஆஸ்பத்திரி உண்டு. அதில் அப் பாட்டியின் ஒளிப்படத்தை மலையாள அரசாங்கம் வைத்துள்ளது ...

சேர நாட்டில் இன்றும் பாசவல் என்னும் பச்சை அவல் அம்மன் கோவிகளில் நைவேத்யம் ஆகிறது. அம்பலங்களில் பாசவல் போட்டு, அவல் பாயசம் செய்கின்றனர். ஏனெனில், வறுத்த அவல் வளமை தராது. எனவே, பச்சை அவல் பயன்பாடு. பாலைக்காட்டு மட்டை அரிசி, சங்க நூல்களில் செந்நெல் எனப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க இச் செந்நெல்லை (மட்டை அரிசி) சோறுவடித்து, சுவாமி சித்பவானந்தர் கல்வி நிறுவனங்களில் பரிமாறுகின்றனர். பாசவல் செம்மையான அவல் என்பதற்கு ஒரு பெயர் உண்டு. செவ்வி அவல் = auspicious aval, as fit for offering to Gods. செவ்-/சிவ்- சிவ = auspicious
https://www.dinamalar.com/news_detail.asp?id=233467
”பச்சை அவல் தந்தால் குழந்தைபேறு,...” கரூர் மாரியம்மன் கோவில் சண்டி யாக பெருவிழா...

பாசவல் செய்யும் முறை:
தமிழர்களின் மிகப் பழைய திருவிழா: கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம் எல்லோரும் கொண்டாடுவோம்!
https://www.facebook.com/utmksiddha.org/posts/1019467188109477/
குளிர்காலத்திலும் தொடர்ந்த மழையானது கார்த்திகை தீபத்திற்கு முன்போ பின்போ படிப்படியாக குறையத் தொடங்கும்.உலக உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரினைக் கொடுத்த மழைக்கு(இதன் சிறப்பு பற்றியே வள்ளுவரும் 'வான் சிறப்பு' என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார் ) நன்றி தெரிவிக்கும் பொருட்டு கார்த்திகை மாத வெள்ளுவா(முழு நிலவு) அன்று வீடுகளிலும்,கழனிகளிலும் கட்டுத்தறிகளிலும் அகல் விளக்கினை வரிசையாக ஏற்றி வைத்தும்,விளக்கினை வானத்தை நோக்கி ஏந்திப் பிடித்தும் வானுக்கு நன்றி தெரிவிப்பர்.
வரிசையாக அடுக்கிய அகல் விளக்குகள் இலை உதிர்ந்த  இலவம் மரத்தின் பூக்களைப் போல் இருந்ததென அகநானூறு வர்ணிக்கும். இவ்விழாவினை பெருவிழா எனவும்,பச்சை அவல்(முளைகட்டிய நெல்லை அவிக்காமல் இடித்துப் பெறும் அவல்-பாசவல்) இடித்துப் படைத்ததாயும் அகநானூறு கூறுகின்றது.

---------------

பாசவல் என்ற தொடர்களைச் சங்க இலக்கியத்தில் வாசிக்கவும். இந்தப் பச்சை அவல், வறுத்துச் செய்யும் அவலை விடக் கடினமானது. இதனை வாயில் முக்கி மகளிர் நீர் விளையாட்டில் ஈடுபடுவர். "நிலத்திற்கு அணியென்ப நெல்லும் கரும்பும்” என்ற நான்மணிக்கடிகை (11), விருந்தினருக்கு வேளாண்மை செய்தற் பொருட்டு, பாசவல் செய்து வைத்துள்ளனர். கரும்பும், பாசவலும் அளித்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணலாகும். வறுத்த அவலைப் போட்டு அதக்கினால் எளிதில் கரைந்துவிடும். சங்க நூல்களின் பின்னர், கொங்குவேளிர் பாசவல் என்னும் பச்சை அவல் பற்றிக் குறித்துள்ளார்:

பெருங்கதை - 2 - இலாவாண காண்டம்
ஏனல் குறவர் இரும் குடி சீறூர்
மான் அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ
வெம் கண் மறவர் வில்லின் வீழ்த்த
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின்
அறை உரல் நிறைய ஐவன பாசவல்        50
இசையொடு தன் ஐயர் இயல்பு புகழ்ந்து இடிக்கும்
அம்மனை வள்ளை இன் இசை கேட்டும்
கோயில் மகளிர் மேயினர் ஆட
பொரு_இல் போகமொடு ஒரு மீக்கூறிய
உருவ பூம் தார் உதயணகுமரனும்

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0502.html
அங்ஙனம் உறைந்த உதயணன், ஒருவாறு கவலை தீர்ந்து வாசவதத்தையுடன் சென்று கான்யாற்றுக் கடும்புனலாடியும்;பலநிற மலர்கள் பூத்து, மேல் மூடியைத் திறந்த ஆபரணப் பெட்டிபோலத் தோன்றும் குறுவாய்ச் சுனைநீரில் முழவொலியைப் பிறப்பித்து அத்தாளத்திற் கேற்பப் பாடியும்; காட்டிலுள்ள அரமகளிர்போன்றவரும் குழையர், கோதையர், இழையர், இணர்த்தழையர், தாரினர்களுமாகிய பலவகை மகளிர்களின் இடையே நின்று அவர்களுடைய ஆடலைக் கண்டும்; பாடல்களைக் கேட்டு இன்புற்றும்; பாறையாகிய உரலில் ஐவனநெல்லைச் சொரிந்து யானைக் கொம்பாகிய உலக்கையால் தம் ஐயருடைய‌ இய‌ல்புகளைப் புகழ்ந்துகொண்டு *பாசவல் இடிக்கும் வேட‌ மகளிருடைய* அம்மனை, வள்ளைப்பாட்டைக் கேட்டும்; அருவியாடியும்; சுனை விளையாடியும்; பூங்குழைமகளிர் பொன்வள்ளத்தேந்திய தேறலையும் மதுவையும் உண்டும்; ஓர் உயிரை உடைய இரு தலைப் புள்ளைப்போல் ஒட்டி இன்புற்றும்; அம்மலைச் சாரலில் உண்டாட்டயர்ந்தனன்.
--------------

உவேசா, குறுந்தொகை 238

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் னலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.
http://tamilvu.org/slet/l1220/l1220uri.jsp?poemno=238

*பாசு அவல் இடித்த - பச்சை அவலை*
பாசவல் - நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல்.

------------

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=913
"கூழைக் கூந்தற் குறுந்தொடி மகளிர்
பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதுஇடி வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு..."
(அகநானூறு: 141:16-19)

"நெருங்கிய கூந்தலை உடைய சிறுவளை அணிந்த பெண்கள் பெரிய வயலில் விளையும் நெல்லின் வளைந்த கதிரை முறித்துப் பச்சை அவலை இடிக்கும் பெரிய உறுதியான உலக்கையின் கடுமையான இடியோசைக்கு நிறைகருப்பமான வெண்நாரை வெருளும்..."

-------------
பச்சை அவலை இடித்த வயிரம் பாய்ந்த கரிய உலக்கையைக் குழந்தையெனப் பாவித்து, அழகிய கதிரையுடைய நெற்பயிர் நிறைந்திருக்கும் வயல்களின் வரப்பாகிய அணையில் படுக்கவைத்து, அதைக் கண் வளரச் செய்து விட்டு விளையாட்டயர்வர் என்று ஒண்டொடியணிந்த தொண்டி நகர்ச் செல்வ மகளிரின் சிந்தை யினிக்கும் சீரிய விளையாட்டினைக் குன்றியன் என்ற புலவர் குறிக்கின்றார்:

    "பாசவல் இடித்த
    கருங்காழ் உலக்கை
    ஆய்கதிர் நெல்லின்
    வரம்பணைத் துயிற்றி
    ஒண்டொடி மகளிர்
    வண்டல் அயரும் தொண்டி .” [21]
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0712.html

https://ta.wikisource.org/wiki/பக்கம்:புறநானூறு-செய்யுளும்_செய்திகளும்.pdf/95
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZl2kuUy.TVA_BOK_0003874
https://ta.wikisource.org/wiki/பக்கம்:ஆரியர்க்கு_முற்பட்ட_தமிழ்ப்பண்பாடு.pdf/243
https://iniyavaikatral.in/சங்க-இலக்கியத்தில்-நெற்ப/
---------------

https://www.dinamani.com/tholliyalmani/yuththa-bhoomi/2016/nov/11/அத்தியாயம்-43---நடுகற்கள்-வகைகளும்-வகைப்பாடும்---36-2596626.html
நானிலத்திலும் இவ்வாறே அரிசியை முன்மையாகக் கொண்டு நிகழ்ந்த பண்டமாற்றங்களைச் சங்க இலக்கியம் விரிவாகக் காட்சிப்படுத்துகிறது. நெய்தலில் உப்புக்கும், மீனுக்கும் நெல் பண்டமாற்றம் ஆனதை “உமணர் தந்த உப்புநொடை நெல்”*33, “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி, நெல்லோடு வந்த பல்வாய்ப் பஃறி”*34, “உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு”*35, “பசுமீன் நொடுத்த வெண்நெல் மாஅ”*36 போன்ற வரிகள் காட்சிப்படுத்துகின்றன. குறிஞ்சி நிலத்துப் பொருட்களான “தேன், கிழங்கு இவற்றுக்கு மீனும் நெய்யும் கள்ளும் பெற்றதையும், மருத நிலத்து கரும்பு, அவல் இரண்டுக்கும் மாற்றாக மான் தசையுடன் கள் பெற்றதும்”*37, மான் தசைக்கும், தயிருக்கும் வெண்ணெல் பெற்றதையும், வரால் மீனுக்கு வெண்ணெல் மாற்றானதும்”*38 சங்கக் காட்சிகளே.

வறுத்த அவல் செய்முறை:
https://www.inidhu.com/அவல்-இடித்தது-மங்கம்மாள/
(வறுத்த அவல் அவல் என்றே குறிப்பிடுவது வழக்கம். சங்க நூல்களின் உரைகளில் காண்க. ஔவை துரைசாமிப்பிள்ளை, த. கோவிந்தன், சி. பாலசுப்பிரமணியன், ...) https://www.youtube.com/watch?v=RiAkhtqqqck
https://www.youtube.com/watch?v=A4Un45nixYI

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0712.html
https://en.wikipedia.org/wiki/Flattened_rice
Flattened rice is a type of rice dish made from raw, toasted, or parboiled rice grains pounded into flat flakes.
Like Tamil Nadu, Kerala, we have many countries that do make "paacaval" (aval from fresh paddy).
https://www.cooksinfo.com/flattened-rice

பாசவல், வறுத்த அவல் வேறுபாடும், இரண்டு வகை அவல்களின் செய்முறைகள், பயன்பாடுகள் அறிவோம்!

நா. கணேசன்


 

--

N. Ganesan

unread,
Feb 28, 2023, 7:48:13 AM2/28/23
to Santhavasantham, sivasub...@sivasubramanian.in, sirpi balasubramaniam, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, Karthikeya Sivasenapathty, Asko Parpola
பாசவல், (வறுத்த) அவல் என்றால் என்ன? இரண்டுக்கும் வேறுபாடு யாவை? அவைகளின் செய்முறைகள் எவ்வாறு? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. பாசவல் பற்றிக் கொஞ்சம் குறிப்பிட்டேன். https://groups.google.com/g/santhavasantham/c/5Y2MdNZilDc/m/BBPhnuiiAQAJ
தற்போது கேரளத்து அம்பலங்களில் நைவேத்தியம் ஆகும் “அவல் பாயசம்” செய்முறை - பாசவல் கொண்டு செய்வது - அழகாகச் சொல்லும் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது. பச்சரிசியில் இருந்துதான் மாவிளக்கு ஏற்றுவோம். மாவிளக்கு எடுத்தல், பட்டி நோன்பின் போது சிறுமியர், கன்னிப்பெண்கள் மாட்டுப் பட்டியைச் சுற்றி, பெண்கள் குலவையிட்டு வருவது பல ஆயிரம் ஆண்டுகளாக உண்டு. கோவில்களிலும் மாவிளக்கு உண்டு. மாவிளக்கு செய்யப் பச்சரிசி. அதே போல, திருக்கோவில்களில் படைக்கப்படும் அவல் பாயசம், பச்சை நெல்லில் உருவாகும் பாசவல் கொண்டு செய்வதாகும்.

கூகு - கூர்மையான கம்பு/கழி. மாணவன் பென்சில் கூகு சீவிக்கொண்டிருக்கிறான். கூகு- > ஶூக (கூர்மையான கட்டை) > ஶூசி. ஶூசி சொன்முதல்மெய் அழிந்து ஊசி ‘needle' எனத் தமிழிலே உருவாகிறது. த்ராவிட பாஷைகள் வட இந்தியாவில் இந்தோ-ஆர்ய பாஷைகளாய்த் திரிந்த காலத்தில் நிகழும் மாற்றம் இது. க்- வர்க்கம் சொன்முதலில் ஶ்- வர்க்க வார்த்தைகளாய் சிந்துவெளி நாகரிகம் அழிந்த காலத்தில் மாறுவதற்குப் பல உதாஹரணங்களை இங்கே அறியலாம்: https://archive.org/details/NGanesan_IJDL_2018
Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language.
International Journal of Dravidian Linguistics, 1-20, Vol. XLVII, Number 2, June 2018.

அதே போல், பா- (பரவுதல்) : பச்சை எங்கும் பரவிய வண்ணம். எனவே, பாகு- = பச்சை. பாகு+அல் = பாகற்காய், காய்களிலே தனிப்பச்சையாய் உள்ள காய் நிறத்தால் பெயர்பெற்றது. பாகு > பாசு (Cf. ஶூகி > ஶூசி > ஊசி). கோவை > கொவ்வை (காய்) ... போல, பாசு > பச்சை எனவும் வரும். பாசவல் = பச்சை அவல், பாசடை = பச்சை அடை (=இலை) ...

-------------------------

சா(ய்)-/சாவ்-/சாப்-/சாம்- என்னும் த்ராவிட/தமிழ் தாதுவேர் பல சொற்களைப் பிறப்பிக்கிறது. உ-ம்: சாய்த்தல் சாபம் ‘வில்’ - இந்த ஸம்ஸ்கிருதச் சொல் த்ராவிட வார்த்தை என்பர் மொழியியல் அறிஞர்கள். சாபம் > சாவம் > ஆவம் என்றும் வரும். சாய்தலால், சவம் > ஶவம் (இது த்ராவிடச் சொல் என்பர்).

சாப- > சப்பளி- ... இந்த வினைச்சொல் தருவன வடமொழிகளில் சப்பாத்தி போன்றவை. சப்பாணி கொட்டுதல், ...
சாம- > சாமல்/சாவல் ‘அரிசி’.
கோவை > கொவ்வை, பாசு > பச்சை, ... போல, சாம- எனும் வினைச்சொல் சம்மு-தல் என்ற வினையாகவும் வரும். இது சம்மு- >> சம்மட்டி.

குழைவி-த்தல் > குழவி. அம்மிக் குழவி என்று பெயர். குழைந்தை/குழைவி - குழைந்து இருப்பது.
சம்மு- >> சம்மட்டி.
குழைவி கொண்டு உடைத்துச் சாய்த்து மாவு, சட்டினி ஆகிறது.
சம்மு-தல் (வினைச்சொல்) ==> *சம்மி > அம்மி.
ammi < cammi, "aval" (=  flattened rice by pestle) < "caval", amalai 'rice ball' < camalai. Many words in Tamil have lost word initial consonants (k, c, t, m, n, y, v). See several examples:

https://groups.google.com/g/vallamai/c/soJbLYwgaA8/m/WqEp_7imBAAJ

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் இந்துக்களின் கலியாணச் சீர்களில் முக்கியமானது. சங்க இலக்கியத்திலே இரண்டு பாடல்கள் தாம் திருமணங்களை வர்ணிக்கும் பாடல்கள். கொங்குநாட்டில் நடக்கும் கலியாணங்கள் போல எனப் புலவர்கள் கூறியுள்ளனர். சங்க காலத் திருமணப் பாடல்களிலே சாலினி (அருந்ததி) இடம்பெறுகிறாள். கொற்றவையை மரப்பாவையாக வைத்து, அவள் சிந்துவெளிக் காலத்திலேயே அணிந்த எருமைக் கொம்பினையும் வைத்து வழிபட்டுத் திருமணங்கள் சங்க காலத்தில் நிகழ்ந்தன.http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல். சம்மு-தல் (வினைச்சொல்) ==> *சம்மி (Cf. சம்மட்டி) > அம்மி.

https://www.dravidaveda.org/?cat=575
   வாரணமாயிரம் - ஆண்டாள் நாய்ச்சியார்

    இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
    நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
   செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
   அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்!

N. Ganesan

unread,
Feb 28, 2023, 12:49:15 PM2/28/23
to Santhavasantham
On Tue, Feb 28, 2023 at 6:47 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பாசவல், (வறுத்த) அவல் என்றால் என்ன? இரண்டுக்கும் வேறுபாடு யாவை? அவைகளின் செய்முறைகள் எவ்வாறு? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. பாசவல் பற்றிக் கொஞ்சம் குறிப்பிட்டேன். https://groups.google.com/g/santhavasantham/c/5Y2MdNZilDc/m/BBPhnuiiAQAJ
தற்போது கேரளத்து அம்பலங்களில் நைவேத்தியம் ஆகும் “அவல் பாயசம்” செய்முறை - பாசவல் கொண்டு செய்வது - அழகாகச் சொல்லும் பாடல் சங்க இலக்கியத்தில் உள்ளது. பச்சரிசியில் இருந்துதான் மாவிளக்கு ஏற்றுவோம். மாவிளக்கு எடுத்தல், பட்டி நோன்பின் போது சிறுமியர், கன்னிப்பெண்கள் மாட்டுப் பட்டியைச் சுற்றி, பெண்கள் குலவையிட்டு வருவது பல ஆயிரம் ஆண்டுகளாக உண்டு. கோவில்களிலும் மாவிளக்கு உண்டு. மாவிளக்கு செய்யப் பச்சரிசி. அதே போல, திருக்கோவில்களில் படைக்கப்படும் அவல் பாயசம், பச்சை நெல்லில் உருவாகும் பாசவல் கொண்டு செய்வதாகும்.

கூகு - கூர்மையான கம்பு/கழி. மாணவன் பென்சில் கூகு சீவிக்கொண்டிருக்கிறான். கூகு- > ஶூக (கூர்மையான கட்டை) > ஶூசி. ஶூசி சொன்முதல்மெய் அழிந்து ஊசி ‘needle' எனத் தமிழிலே உருவாகிறது. த்ராவிட பாஷைகள் வட இந்தியாவில் இந்தோ-ஆர்ய பாஷைகளாய்த் திரிந்த காலத்தில் நிகழும் மாற்றம் இது. க்- வர்க்கம் சொன்முதலில் ஶ்- வர்க்க வார்த்தைகளாய் சிந்துவெளி நாகரிகம் அழிந்த காலத்தில் மாறுவதற்குப் பல உதாஹரணங்களை இங்கே அறியலாம்: https://archive.org/details/NGanesan_IJDL_2018
Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language.
International Journal of Dravidian Linguistics, 1-20, Vol. XLVII, Number 2, June 2018.

அதே போல், பா- (பரவுதல்) : பச்சை எங்கும் பரவிய வண்ணம். எனவே, பாகு- = பச்சை. பாகு+அல் = பாகற்காய், காய்களிலே தனிப்பச்சையாய் உள்ள காய் நிறத்தால் பெயர்பெற்றது. பாகு > பாசு (Cf. ஶூகி > ஶூசி > ஊசி). கோவை > கொவ்வை (காய்) ... போல, பாசு > பச்சை எனவும் வரும். பாசவல் = பச்சை அவல், பாசடை = பச்சை அடை (=இலை) ...

-------------------------

சா(ய்)-/சாவ்-/சாப்-/சாம்- என்னும் த்ராவிட/தமிழ் தாதுவேர் பல சொற்களைப் பிறப்பிக்கிறது. உ-ம்: சாய்த்தல் சாபம் ‘வில்’ - இந்த ஸம்ஸ்கிருதச் சொல் த்ராவிட வார்த்தை என்பர் மொழியியல் அறிஞர்கள். சாபம் > சாவம் > ஆவம் என்றும் வரும். சாய்தலால், சவம் > ஶவம் (இது த்ராவிடச் சொல் என்பர்).

சாப்- > சப்ப- Look at these from CDIAL:

4673 capēṭa m. 'slap with open hand' Kathās., °ṭā-, °ṭī- f. Pāṇ. 2. capaṭa- lex. 3. *cappēṭa-. 4. *cappēṭṭa-. [← Drav. T. Burrow BSOAS xii 137: cf. carpaṭa-, cipiṭá-, *capp-]
    1. Pk. caviḍā-, cavēlā- f. 'slap'; P. cameṛṇā 'to slap'; WPah. bhal. cε῀ṛe m. pl. 'slaps'.
    2. A. sawar 'slap on cheek', B. caṛ ODBL 346.
    3. P. capeṛ f. 'slap', capeṛṇā to 'slap'.
    4. S. capeṭa f. 'blow'; P. capeṭ f., °ṭā m. 'slap', Ku. capeṭo, M. capeṭā m.

4674 *capp 'press'. 2. *camp-. 3. *cipp-. [Derivation of *capp- and *cipp- and of *cuppa-¹ by Bloch LM 330 (followed in ND 183a) < *carp-, *cr̥pya- is very doubtful: if conn. with carpaṭa- (see *carpa-), capēṭa- and cipiṭá-, they are rather of non-Aryan origin. — Cf. capáyati and further *cibba-, *cimb-, *chapp- and *chipp-, *japp-]
    1. Pk. cappaï 'presses'; Kho. čopik 'to gather, pick' (← Ir., Wkh. čip- Morgenstierne BSOS viii 667, but perh. → Ir.); S. cāpaṇu 'to shampoo the limbs' (ā?); P. cappaṇ m. 'cover'; N. cyāpnu, cep°, 'to press, squeeze', capeṭnu 'to press, follow, goad to work'; A. sāpibā 'to be contracted'; B. cāpā 'to press, get upon, cover'; Or. cāpibā 'to press down', intr. capibā 'to sink into'; H. capnā 'to be pressed', capnī f. 'flat lid'; G. cāpṛɔ m. 'clasp'; M. ċāpṇẽ 'to press'.
    2. Pk. caṁpaï 'presses'; Mth. cā̃pab 'to press, squeeze', OAw. cāṁpaï; H. cā̃pnā 'to pound'; G. cā̃pvũ 'to press'.
    3. BHSk. cipyatē 'is crushed', -cippitaka- 'crushed'; Pa. cippiyamāna- 'crushed flat'; Wg. (Lumsden) "chipállún" 'to squeeze'; Paš. weg. čip- 'to bite off'; K. ċipiñ f. 'pinching'; S. cipaṇu 'to press, stamp', cipo 'bruised, flattened', cipu f. 'silence'; A. sepiba 'to press, squeeze', B. cipā, Or. cipibā, G. cīpvũ, M. cipṇẽ, cepṇẽ.
    Addenda: *capp-. 2. *camp-: OMarw. (Vīsaḷa) pp. m.pl. cā̆ṁpyā 'oppressed, restrained'.
    3. *cipp- [Cf. piccayati]: S.kcch. cīplāṇū 'to be pressed between' ~ G. pīclāvũ AKŚ 31.
    CAM:ācamati.

4675 *cappayati 'chews'. [Onom., cf. Pa. capucapukāra- 'making the sound of chewing': cf. cárvati]
    Pa. cappēti 'chews', Dm. ċapāy-, Sh. čapóĭki̯, koh. čăpōnṷ, gur. čăpyōnṷ; K. ċāpun 'to eat', ċopᵘ m. 'bite'; WPah. bhal. ċāpṇū 'to chew', Ku. capoṇo, N. capāunu, capkāunu; Si. sapanavā, ha° 'to chew, bite, gnaw, crush'.
    *cappēṭa-, *cappēṭṭa- 'slap' see capēṭa-.
    CAM 'sip': cāmya-; *ācama-, ācamana-, ācāma-, ā́cāmati, ācāmayati, *nicamati.

also, CDIAL 4696

N. Ganesan

unread,
Mar 2, 2023, 6:53:46 AM3/2/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Dr.Krishnaswamy Nachimuthu
பச்சரிசி, புழுங்கல் அரிசி - இரு விதமான அரிசிகளுக்கும் தயாரிப்பு முறையில் உள்ள வேறுபாட்டை விளக்கும் நல்ல காணொளி:
இயற்கை வேளாண்மை, காரைக்கால் பாஸ்கர் விளக்குகிறார்,
https://youtu.be/cQ_MSrr75qg

தமிழ்த்தாத்தா உவேசா இரு நூல்களில் பாசவல் செய்முறை பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறார். முதன்முதலாக, பெருங்கதை பற்றிய உதயணன் கதைச்சுருக்கம் எழுதியபோதும், அதன் பின்னர் குறுந்தொகைப் பதிப்பிலும் குறிப்பிட்டுள்ளார்கள். மங்கலகரமான அவல் என்பதால் செவ்வி அவல் எனப் பாசவல் வழங்கப்பெறுகிறது.

அண்மையில், பொள்ளாச்சியில் இருந்தபோது, உறவினர்கள் தொழிற்சாலைகளைப் பார்த்தேன். இராமபட்டினம் பாலு திருமூர்த்தி, விர்ஜின் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு, அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறப்புடன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தரத்துடன் இருக்கிறது. அது போல, அவல்களில் இரு விதம்: பச்சை நெல்லை வறுக்காமல் செய்யும் பச்சை அவல் - பாசவல் என்பது 2500 ஆண்டுக்காலப் பெயர் - , நெல்லை வறுத்துச் செய்யும் அவல் இரண்டையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். வறுத்த அவல் ஃபேக்டரிகளில் செய்வது நடைமுறைமுறையில் பல காணொளிகளில் காட்டப்படுகிறது. ஆனால், பாசவல் செய்யும் ஃபேக்டரிகள் உண்டா எனப் பார்க்கவேண்டும். பாசவலை ‘விர்ஜின் அவல்’ எனலாம். பழைய இந்த அவலை எவ்வாறு ஃபேக்டரி கட்டுவது எனத் தொழில் முனைவோர் ஆராய்ந்து அமைக்க வேண்டும்.

பாசவல் கெட்டியாக இருக்கும். இதனை வாயில் முக்கி, நீரில் பாய்ந்து நீராடுவர் (புறம் 63):
        கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
        பாசவல் முக்கி தண்புனல் பாயும்

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0523_01.html
அகம் 141
துவரப் புலர்ந்து தூமலர் கஞலித்
தகரம் நாறுந் தண்நறுங் கதுப்பின்
புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
பல்கோட்டு அடுப்பில் பால்உலை இரீஇக்         15
கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்

பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப்
பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக்
கடிதிடி 2வெரீஇய கமஞ்சூல் வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்குமடல் இராது

துவரப்புலர்ந்து - முற்ற உலர்ந்து, தூமலர் கஞலி - தூயமலர்கள் நெருங்கப்பெற்று, தகரம் நாறும் -மயிர்ச்சாந்து மணக்கும், தண்நறும் கதுப்பின் -தண்ணிய நறிய கூந்தலையுடைய, புதுமண மகடூஉ – புதிய மணமகள், அயினிய - உணவு மிக்க,கடிநகர் - மண மனையில், பல்கோட்டு அடுப்பில் - பலபுடைகளையுடைய அடுப்பில், பால் உலை இரீஇ - பாலைஉலையாக வார்த்து, கூழைக் கூந்தல் குறு தொடி மகளிர்- கூழையாகிய கூந்தலையும் சிறிய வளையலையும் உடையஇளமகளிருடன்; பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர்முறித்து - பெரிய வயலில் விளைந்த நெல்லின்வளைந்த கதிரினை முறித்து, பசு அவல் இடிக்கும் -பசிய அவலாகக் குற்றும், இரும் காழ் உலக்கைக் கடிதுஇடி வெரீஇய - கரிய வயிரமாய உலக்கையின் விரைந்தஇடிக்கு அஞ்சிய, கமம் சூல் வெண் குருகு நிறைந்த -சூலினையுடைய வெள்ளிய பறவை, தீம் குலை வாழை ஓங்குமடல் இராது - இனிய குலையினையுடைய வாழையின்உயர்ந்த மடலி லிராது, - நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்

இதே அக. 141 பாடலை முனைவர் ப. பாண்டியராஜா விளக்குகிறார்:
http://www.muthukamalam.com/essay/literature/p52b.html
ஒரு பெரிய பண்ணை வீடு; அதாவது, ஊருக்கு வெளியே, ஓர் அகன்ற நிலப் பரப்பில், சுற்றிலும் வயல்களும், சிறிய, பெரிய மரங்கள் கொண்ட சோலைகளுமாய், நடுவில் பெரிதாக அமைந்திருக்கும் ஒரு பண்ணையாரின் வீடு. வயலில் நெல் விளைந்து முற்றிப்போய் அறுவடை செய்யப்படும் நேரம். பண்ணையாரின் மகனுக்குத் திருமணமாகி, புதுமணப்பெண் அன்றைக்கு முதல் முதலாகச் சமைக்க ஆரம்பிக்கிறாள். அதற்கு அவல்பாயசம் செய்ய எண்ணுகிறாள். உலையில் பசும்பாலை வைத்தாகிவிட்ட்து. அவலுக்காக, நன்றாக முற்றிய நெற்கதிர்கள் சிலவற்றை அறுத்துக் கொணர்ந்திருக்கிறார்கள். பொதுவாக அவல் செய்ய, வீட்டிலுள்ள காய்ந்த நெல்லைச் சற்று ஊறவைத்து, ஈரப்பதமாக்கி, உரலில் போட்டு இடிப்பார்கள். வயலில் நெற்பயிரிலேயே கொய்து எடுக்கப்பட்ட நெல்மணிகள் அல்லவா! அதை வீட்டு வேலைக்காரப் பெண்கள் அப்படியே உரலில் போட்டு இடிக்கிறார்கள். இடித்து உமியை நீக்க அவல் கிடைக்கும். இதுதான் பச்சைநெல் அவல். சங்கப் புலவர் இதனைப் பாசவல் என்கிறார். அடை என்றால் இலை என்று ஒரு பொருள் உண்டு. பச்சையான இலையை, இலக்கியங்கள் பாசடை என்னும். ஆனால், இங்கே பச்சை என்பது raw என்ற பொருள் தரும். அந்த நேரத்தில், அருகில் உள்ள ஒரு வாழை மரத்தின் உச்சியில் ஒரு கொக்கு அமர்ந்திருக்கிறது. நிறை கர்ப்பம் - அதாவது முட்டையிடும் பருவத்தில் உள்ள விடைக்கொக்கு. உரலில் போட்டு, நெல்லை உலக்கைகளால் இரண்டு பெண்கள் மாறி மாறி ‘ணங், ணங்’-கென்று இடிக்கிறார்கள். உலை வைத்தாகிவிட்டதல்லவா? அதனால், விரைவாகவும், வலுவாகவும் உலக்கைகளை உரலில் இறக்குகிறார்கள். இந்த இடிப்புச் சத்தத்தால் கொக்கு வெருண்டுபோகிறது. வாழை மரத்தைவிட்டுப் பறந்து சென்று, அருகில் இருக்கும் ஓர் உயரமான மா மரத்தின் கிளையில் அமர்கிறது. இப்போது கொக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறது. இருப்பினும் உலக்கைச் சத்தம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அப்படிக் கேட்கும் ஒவ்வொரு இடிப்பொலியின் போதும், பயந்த கொக்கு அடுத்தடுத்த கிளைகளுக்கு மாறிமாறிப் பறந்து சென்று அமர்கிறது. இவ்வாறு கிளைவிட்டுக் கிளைதாவி, மாறி மாறிப் பறந்து அமரும் கொக்கையே, புலவர் குறும்பறை பயிற்றும் குருகு என்கிறார். நக்கீரர் இயற்றிய ஓர் அருமையான அகநனூற்றுப் பாடலின்(141) பகுதி இதுதான்

பச்சரிசியில் மாவிளக்கு எடுப்பது போலவே, பச்சை அவல் கோவில்களில் செய்யும் அவல் பாயசம் போன்றவற்றிற்குப் பயன்படுகிறது. பாலக்கட்டு மட்டை அரிசி எனப் படும் செந்நெல் அரிசியில்,  (பாசவல்) பச்சை அவலில் செய்யும் அவல் பாயச நிவேதனத்தின் செய்முறை (recipe) சங்கப் பாட்டிலே காண்கிறோம்.
காவிரி பாயும் உறையூரிலும் செந்நெல் வேளாண்மைப் பயிராக 2000 ஆண்டு முன்னர் இருந்திருக்கிறது.

  இருங்கதிர் அலமருங் கழனிக் கரும்பின்
  விளைகழை பிழிந்த அந்தீஞ் சேற்றொடு
  பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் - அகநானூறு 237.

It will be worthwhile to find the process by which "Virgin aval" (பாசவல் = பச்சை அவல்) can be produced in an industrial scale. Just like manufacturing "Virgin Coconut Oil", Thenneera from palm trees, etc., "Virgin aval" can be automated from green, raw rice.

Dr. N. Ganesan

N. Ganesan

unread,
Sep 20, 2023, 10:57:08 PM9/20/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com
பாசவல்:
--------------

வயலில் இருந்து அறுத்த பச்சை நெல்லைக் குத்துரலில் இட்டுக் குற்றினால் பச்சரிசி ( = பச்சை அரிசி, raw/fresh rice) கிடைக்கிறது. பாசவல் (= பச்சை அவல், i.e., raw/fresh flattened-rice) என்னும் உணவுப்பொருள் பல சங்கச் சான்றோர் பாடலில் இடம்பெறுகிறது. இன்றும் பாசவல் செய்முறை உள்ளது. இதனைப் பச்சை அவல் என்று கூறுகிறார்கள். *வெப்பச் சூடே இல்லாமல் தயாரிப்பதால்*, பாசவல் (பச்சை அவல்) எனப் பெயர் என்பது தெளிவு. பச்சரிசி தயாரிப்புக்கும், பச்சை அவல் தயாரிப்புக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளனர். திருக்கோயில் நிவேதனத்திற்கு இந்தப் பச்சை அவல் (பாசவல்) இன்றும் பயனாகிறது.

பச்சரி, பச்சை அவல் : செய்முறை வேறுபாடு:
(1) பச்சை நெல் ==> உரலில் குற்றுதல் ==> பச்சை அரிசி
vs.
(2) பச்சை நெல் ==> முளை கட்டுதல் ==> பின்னர், உரலில் குற்றுதல்  ==> பச்சை அவல் (பாசவல்).


பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை – குறு 238/1 - பச்சை அவலை இடித்த கரிய வைரம்பாய்ந்த உலக்கைகளை.

உவேசா, பெருமழைப் புலவர் பொ.வே.சோ. நடுக்காவேரி மு. வே. நாட்டார் ஐயா போன்றோர் நெல்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தார்கள்.
மருதத் திணை நிலத்தார் அவர்கள் நெல்தரும் உணவு வகைகளை நன்கறிவர். அவர்கள் பாசவல் என்பதன் விளக்கம் கூறியுள்ளனர்.


சேர நாட்டில் இன்றும் பாசவல் என்னும் பச்சை அவல் அம்மன் கோவிகளில் நைவேத்யம் ஆகிறது. அம்பலங்களில் பாசவல் போட்டு, அவல் பாயசம் செய்கின்றனர். ஏனெனில், வறுத்த அவல் வளமை தராது. எனவே, பச்சை அவல் பயன்பாடு. பாலைக்காட்டு மட்டை அரிசி, சங்க நூல்களில் செந்நெல் எனப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க இச் செந்நெல்லை (மட்டை அரிசி) சோறுவடித்து, சுவாமி சித்பவானந்தர் கல்வி நிறுவனங்களில் பரிமாறுகின்றனர். பாசவல் செம்மையான அவல் என்பதற்கு ஒரு பெயர் உண்டு. செவ்வி அவல் = auspicious aval, as fit for offering to Gods. செவ்-/சிவ்- சிவ = auspicious
https://www.dinamalar.com/news_detail.asp?id=233467
”பச்சை அவல் தந்தால் குழந்தைபேறு,...” கரூர் மாரியம்மன் கோவில் சண்டி யாக பெருவிழா...

பாசவல் செய்யும் முறை:
தமிழர்களின் மிகப் பழைய திருவிழா: கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம் எல்லோரும் கொண்டாடுவோம்!
https://www.facebook.com/utmksiddha.org/posts/1019467188109477/
குளிர்காலத்திலும் தொடர்ந்த மழையானது கார்த்திகை தீபத்திற்கு முன்போ பின்போ படிப்படியாக குறையத் தொடங்கும்.உலக உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத நீரினைக் கொடுத்த மழைக்கு(இதன் சிறப்பு பற்றியே வள்ளுவரும் 'வான் சிறப்பு' என்ற ஒரு அதிகாரத்தையே படைத்துள்ளார் ) நன்றி தெரிவிக்கும் பொருட்டு கார்த்திகை மாத வெள்ளுவா(முழு நிலவு) அன்று வீடுகளிலும்,கழனிகளிலும் கட்டுத்தறிகளிலும் அகல் விளக்கினை வரிசையாக ஏற்றி வைத்தும்,விளக்கினை வானத்தை நோக்கி ஏந்திப் பிடித்தும் வானுக்கு நன்றி தெரிவிப்பர்.
வரிசையாக அடுக்கிய அகல் விளக்குகள் இலை உதிர்ந்த  இலவம் மரத்தின் பூக்களைப் போல் இருந்ததென அகநானூறு வர்ணிக்கும். இவ்விழாவினை பெருவிழா எனவும்,
பச்சை அவல் (முளைகட்டிய நெல்லை அவிக்காமல் இடித்துப் பெறும் அவல்-பாசவல்) இடித்துப் படைத்ததாயும் அகநானூறு கூறுகின்றது.

https://solalvallan.com/பாசவல்/
பாசவல் – நெல்லை வறுத்து இடிக்காமல் பச்சையாக இடித்து இயற்றிய அவல் – பொ.வே.சோ – உரை விளக்கம்.

உவேசா, குறுந்தொகை:
https://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=22&song_no=238

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
 - பசு அவல் இடித்த - பச்சை அவலை இடித்த, கரு காழ் உலக்கை-கரிய வயிரம் பொருந்திய உலக்கையை,
 பாசவல் - நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல்.

இன்னொரு நூலிலும், உவேசா குறிக்கிறார்:
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0502.html
உதயணன் சரித்திரச் சுருக்கம், எழுதியவர்: உ.வே. சாமிநாதையர்
”பாசவல்-பச்சை அவல்; வறாது இடிக்கப்படும் அவல். ”

https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-kurunthokai-201-400/
Meanings:  பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை – pounding rods made with black dense wood that are used for poundingc fresh rice, black pounding rods that pound rice that has not been fried (பாசவல் – நெல்லை வறாமல் இடித்துச் செய்த அவல்),

https://www.vikatan.com/spiritual/temples/my-vikatan-article-about-tanjore-temple
அப்படித்தான் சமீபத்தில் பாலகுமாரன் எழுதிய உடையார் நாவலை படிக்க வாய்ப்பு கிடைத்தது.
தஞ்சைக்கு அருகே உள்ள பழமார்நேரியில் பிறந்து வளர்ந்தவர் பாலகுமாரன். மிகச்சிறிய வயதிலேயே பிரகதீஸ்வரர் கோயில் அருகே போய் நின்றபோது உடம்பெல்லாம் ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டதாய் நெகிழ்ந்து கூறுகிறார். அப்பேர்ப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் வரலாற்றை முழுவதுமாய் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

”அவர்கள் உணவு முறை எப்படி இருந்திருக்கும் என்பதும் கதை நெடுக காணலாம். சிகப்பு அரிசியும், தேங்காய் துருவலும் கலந்த இனிப்பு புட்டு, அதிரசம், தேன் குழல், வடை, எள் உருண்டை, அப்பம், பாலும் தேனும் கலந்த கஞ்சி, கொழுக்கட்டை, *பச்சை அவல்*, பொட்டு கடலை வெல்ல உதிரி, அரிசி மாக்களி, கடலைப் பருப்பு பாயசம்.. இதுபோன்று மேலும் பல தூய உணவுகளை குறிப்பிட்டு இருப்பார்.”

--------------

Clause Levi-Strauss' book, The Raw and The Cooked is a classic:
https://en.wikipedia.org/wiki/The_Raw_and_the_Cooked
https://en.wikipedia.org/wiki/Claude_Lévi-Strauss

தமிழில், Raw = பாசு-/பச்சை.இதனை பச்சரிசி, பாசவல் என்ற இருவகை உணவுப்பொருளில் தமிழர் 2500 ஆண்டுகளாய்க் கையாண்டு வரல் அருமையான செய்தி ஆகும். Cooked ஒருவகையில் நோக்கினால், ஓர் உதாரணம்: வறு அவல்.

பேரா. ப. பாண்டியராஜாவின் பாசவல் விளக்கத்தில், முளைகட்டுதலைச் சேர்த்தால் பொருள் தெளிவு கிட்டும்.

நா. கணேசன்

On Sun, Feb 26, 2023 at 8:31 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

lns2...@gmail.com

unread,
Sep 21, 2023, 6:30:47 AM9/21/23
to சந்தவசந்தம்
> அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல். சம்மு-தல் (வினைச்சொல்) ==> *சம்மி (Cf. சம்மட்டி) > அம்மி.

Traditional derivation is

Ta. ammi < Pkt amha, amhi (dimunitive),  Skt aśman  meaning 'rock'

Hope this helps,

Srini

N. Ganesan

unread,
Sep 21, 2023, 7:46:44 AM9/21/23
to santhav...@googlegroups.com, housto...@googlegroups.com
On Thu, Sep 21, 2023 at 5:30 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
> அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல். சம்மு-தல் (வினைச்சொல்) ==> *சம்மி (Cf. சம்மட்டி) > அம்மி.

Traditional derivation is

Ta. ammi < Pkt amha, amhi (dimunitive),  Skt aśman  meaning 'rock'
Hope this helps,

Srini

Thanks, Srini. Does MTL give this? Does amha/amhi get used in the North as we use ammi (Kallu)? will be interesting to check. ammi can be explained from cammu-tal/ammu-tal Tamil verb more directly, I feel.

Green and Cold-pressing "paasaval"
-----------------------------------------------------

I just used Wikipedia to introduce a famous Professor's works. He lived to be 101 years old. https://en.wikipedia.org/wiki/The_Raw_and_the_Cooked 
This book is really worth reading.

பாசவல் - பெயர் தெளிவாக உள்ளது. பச்சை அரிசி, பச்சை அவல் என வழங்கும் பொருள்களின் செய்முறையில் வெப்பத்தால் வறுப்பது கிடையாது. இதைப் பல தமிழறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். உவேசா, பொவேசோ, நமுவே நாட்டார் போன்ற தஞ்சாவூர் மாவட்டத்தார்கள். இவர்களுக்கு நெல்பயிர் விளைபொருள்கள் உற்பத்தி நன்கு தெரியும்.

பச்சை அவல் நைவேத்தியத்திற்குப் பயன்படுவது காண்கிறோம். செய்முறை என்ன என்றும் விளக்கியுள்ளனர். “ பச்சை அவல் (முளைகட்டிய நெல்லை அவிக்காமல் இடித்துப் பெறும் அவல்-பாசவல்) இடித்துப் படைத்ததாயும் அகநானூறு கூறுகின்றது. ”.

யாராவது இம்முறையில் பச்சை அவல் செய்து காட்டவேண்டும். பச்சை அவல் என இன்று வழங்கும் பாசவலில், அடுப்பில் வறுப்பது (சிறிது நேரமோ, நீண்ட நேரமோ) கிடையாது என்பது கொடுத்துள்ள தரவுகளால், நான் கருதுகிறேன்.

>> குற்றி அவல் எடுத்துக் காட்டுங்கள். சபாஷ் போடுகிறேன்.

People tell the method to make "paasaval/paccai-aval". See above. It does not involve heating in oven at all. It makes sense to me, why ancients named so, as distinct from "vaRutta aval" (fry-aval vs. fresh-aval).

Some one in Tamil Nadu should try making a video using the given "paccai aval" process. (1) Taking fresh paddy, make them sprout (muLai kaTTal) (2) Pound the slightly sprouted raw/fresh paddy to make flattened-rice (green/fresh poha).

Nowadays, there are many food products called as "virgin" process, meaning no frying involved. (a) Virgin coconut oil (b) Virgin castor oil ... etc.,
(1)
Virgin Coconut Oil - No heating involved. பச்சைத் தேங்காய் எண்ணெய்.

(2) பச்சைக் காப்பி/குளம்பி : Cold-pressed Coffee.
...

இவை போல, சூட்டில் வறுக்காமல், பச்சை நெல்லை முளைகட்டி உடன், குற்றிச் செய்வது பாசவல்/பச்சை அவல். “பச்சை அவல் (முளைகட்டிய நெல்லை அவிக்காமல் இடித்துப் பெறும் அவல்-பாசவல்) இடித்துப் படைத்ததாயும்”.

எளிதில் பாசவல் தயாரிப்பு முறையைக் கொடுத்துள்ளனர். “Virgin/Green/Cold-pressed aval" = பச்சை அவல் = பாசவல்.

~NG

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/500e48ad-b819-49b6-9c42-93cd7d022af4n%40googlegroups.com.

lns2...@gmail.com

unread,
Sep 21, 2023, 7:57:10 AM9/21/23
to சந்தவசந்தம்
> Thanks, Srini. Does MTL give this? Does amha/amhi get used in the North as we use ammi (Kallu)? will be interesting to check. ammi 
> can be explained from cammu-tal/ammu-tal Tamil verb more directly, I feel.

The ordinary Hindi word nowadays for 'அம்மி' is सिलबट्टा (silbaṭṭā). 'सिल' is stone and 'बट्टा' stands for குழவி. It's like saying 'அம்மி குழவி'.

Hope this helps,

Srini

N. Ganesan

unread,
Sep 21, 2023, 8:43:52 AM9/21/23
to santhav...@googlegroups.com
On Thu, Sep 21, 2023 at 6:57 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
> Thanks, Srini. Does MTL give this? Does amha/amhi get used in the North as we use ammi (Kallu)? will be interesting to check. ammi 
> can be explained from cammu-tal/ammu-tal Tamil verb more directly, I feel.

The ordinary Hindi word nowadays for 'அம்மி' is सिलबट्टा (silbaṭṭā). 'सिल' is stone and 'बट्टा' stands for குழவி. It's like saying 'அம்மி குழவி'.

நன்றி. குழைவித்தலின் குழைவி/குழவி. பழைமை/பழமை போல.

அம்மி வேறு,  ஸம்ஸ்கிருத aśman வேறு எனக் கருதுகிறேன்.
MTL does not link the two words: அம்மி ammi , n. [M. ammi.] Horizontal stone for macerating spices for curry, grinding fine mortar and other substances; அரைகல். (காசிக. கற்பிலக். 26.)

In Tamil commentaries, acumārōpanam occurs.
அசுமாரோபணம் acumārōpanam , n. id. + ārōpaṇa. Ceremony of the bridegroom's placing the bride's right foot on the grinding stone; அம்மி மிதிக்கை. (சீவக. 2464, உரை.)

NG

 

Hope this helps,

Srini


Srinivasakrishnan ln

unread,
Sep 21, 2023, 9:16:44 AM9/21/23
to santhav...@googlegroups.com
It’s ‘asmorahanam’, not ‘asmaropanam’

More later,

Srini

Sent from my iPhone


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/5Y2MdNZilDc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdQ%2BpZJihPESbs6bADmuRvF7RxggKbDZkSG-BMDW%2BpncA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Sep 21, 2023, 2:05:20 PM9/21/23
to santhav...@googlegroups.com
On Thu, Sep 21, 2023 at 8:16 AM Srinivasakrishnan ln <lns2...@gmail.com> wrote:
It’s ‘asmorahanam’, not ‘asmaropanam’

சீவக சிந்தாமணி 2464, உரை பார்க்கவும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAFhgeVkeN3jiYD8-r-Dzt6HSty1okdS845MxcF%3DPD261YOzfgA%40mail.gmail.com
.

lns2...@gmail.com

unread,
Sep 22, 2023, 6:28:17 AM9/22/23
to சந்தவசந்தம்
asmarohanam, sorry. Typo

lns2...@gmail.com

unread,
Sep 22, 2023, 6:54:39 AM9/22/23
to சந்தவசந்தம்
No, its fine. I'll take your word for it. I dont have any preference for etymologies either. I'm just looking for a simple explanation.

ஆரோபணம் என்றால் (காலை கல்லின் மேல்) எடுத்து வைப்பது. ஆரோஹணம் என்றால் ஏறி நிற்பது.

அம்மி மிதிக்கும் மந்திரம்: (வரன் கன்னிகையைப் பார்த்து சொல்லுவதாவது)

आतिष्ठेममश्मानमश्मेव त्वं स्थिरा भव ।
अभितिष्ठ पृतन्यतस्सहस्व पृतनायतः ।।
   (आपस्तम्बगृह्यसूत्र २।५।२)

(தமிழில்) ஆதிஷ்டேமம் அஶ்மாநம் அஶ்மேவ த்வம் ஸ்திரா பவ | அபிதிஷ்ட்ட ப்ருதன்ந்யத: ஸஹஸ்வ ப்ருதநாயத: ||

"இந்தக் கல்லின்மீது ஏறி நிற்பாயாக; இந்தக் கல்லைப் போல் நிலையாக இருப்பாயாக; உன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக; உன் எதிரிகளை சகித்துக் கொள்வாயாக". இது ஆபஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரம் - தென்னாட்டில் பரவலாக ஓதப்படும் விவாஹ மந்திரம் இதுவே. பல்லவர்களுக்கு முன் இந்த சூத்திரம் அவ்வளவாக தமிழகத்தில் இல்லை என்று சில ஆய்வாளர்கள் கருத்து, அது நிற்க.

அடியேனுக்கென்னவோ அம்மி என்றது கல்லையே குறிக்கிறது என்றும் கல்லைக் குறிக்கும் சொற்களிலேயே இதன் சொற்பிறப்பையும் (etymology) எளிதாகக் காணலாம் என்று தோன்றுகிறது.

தாழ்மையுடன்

Srini

N. Ganesan

unread,
Oct 8, 2023, 7:16:30 AM10/8/23
to Santhavasantham
On Fri, Sep 22, 2023 at 5:54 AM lns2...@gmail.com <lns2...@gmail.com> wrote:
No, its fine. I'll take your word for it. I dont have any preference for etymologies either. I'm just looking for a simple explanation.

ஆரோபணம் என்றால் (காலை கல்லின் மேல்) எடுத்து வைப்பது. ஆரோஹணம் என்றால் ஏறி நிற்பது.

அம்மி மிதிக்கும் மந்திரம்: (வரன் கன்னிகையைப் பார்த்து சொல்லுவதாவது)

आतिष्ठेममश्मानमश्मेव त्वं स्थिरा भव ।
अभितिष्ठ पृतन्यतस्सहस्व पृतनायतः ।।
   (आपस्तम्बगृह्यसूत्र २।५।२)

ātiṣṭhēmamaśmānamaśmēva tvaṁ sthirā bhava .
abhitiṣṭha pr̥tanyatassahasva pr̥tanāyataḥ ..
    (āpastamba gr̥hyasūtra 2.5.2) 

(தமிழில்) ஆதிஷ்டேமம் அஶ்மாநம் அஶ்மேவ த்வம் ஸ்திரா பவ |
அபிதிஷ்ட்ட ப்ருதன்ந்யத: ஸஹஸ்வ ப்ருதநாயத: ||

"இந்தக் கல்லின்மீது ஏறி நிற்பாயாக; இந்தக் கல்லைப் போல் நிலையாக இருப்பாயாக; உன்னை எதிர்ப்பவர்களை எதிர்த்து நிற்பாயாக; உன் எதிரிகளை சகித்துக் கொள்வாயாக". இது ஆபஸ்தம்ப க்ருஹ்ய சூத்திரம் - தென்னாட்டில் பரவலாக ஓதப்படும் விவாஹ மந்திரம் இதுவே. பல்லவர்களுக்கு முன் இந்த சூத்திரம் அவ்வளவாக தமிழகத்தில் இல்லை என்று சில ஆய்வாளர்கள் கருத்து, அது நிற்க.

அடியேனுக்கென்னவோ அம்மி என்றது கல்லையே குறிக்கிறது என்றும் கல்லைக் குறிக்கும் சொற்களிலேயே இதன் சொற்பிறப்பையும் (etymology) எளிதாகக் காணலாம் என்று தோன்றுகிறது.

தாழ்மையுடன்

Srini

Dear LS,

vaNakkam.
அஶ்ம ஆரோபணம் (aśma ārōpaṇam), தமிழாகும்போது ‘அசுமாரோபணம்’ என வரும். ஒப்பீடு: அஶ்வம் ‘குதிரை’ அசுவம் என்றாகிறது. Cf. அசுவமேத யாகம். : அஶ்வ- < ஆஸு- ‘விரைவு’ (ஆஸுகவி).     அஶ்ம   > அசுமம்.   இது தமிழில் அம்மி என்றாக வாய்ப்பில்லை.

அம்மி எனும் சொல்:
------------------

(1) அம்- என்னும் தாதுவேரை அமுக்குதல், அமைதல், அமைதல் ... என்பனவற்றில் காண்கிறோம். *அம்- அமுக்கு- > அம்மி*. குழவி/குழைவிக் கல்லை அமுக்கி அரைக்கும் கல் ‘அம்மி’ எனப் பெயர் தமிழில் தோன்றியுள்ளது. மலையாளத்திலும் அதேதான்.

(2) கும்- குமுக்கு- குமுக்குச் சேர்த்தல் :: கூட்டம் சேர்த்தல். கூட்டமாகச் சேர்ந்து ஆடுவது கும்மி ஆட்டம். *கும்- குமுக்கு- > கும்மி*

(3) கம்- கமுக்கமாக இருத்தல் (அடங்கி இருத்தல்)  *கம்- கமுக்கு- > கம்மி*. குரல் கம்மி உள்ளது - மெலிந்து/குறைந்து/அடங்கி உள்ளது.
கம்முதல் என்ற சொல் “மெலிதல், குறைதல்” என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
ஐதே கம்ம யானே - நற்றிணை 143-1;
ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே - நற்றிணை 240-1;
ஐதே கம்ம யானே, கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே - குறுந்தொகை 217 6-7
ஐதே கம்ம, மெய்தோய் நட்பே  - குறுந்தொகை 401-6  .

(4) நுணுக்கு-தல் - சிறு துகள் ஆக்கல். *நுண்- நுணுக்கு- > நுண்ணி/உண்ணி*. உண்ணிக்ருஷ்ணன், உண்ணி, நாயில் சிறுபூச்சி.

1-4 காட்டுகள் போல் பல.

With kind regards,
~NG

Virus-free.www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages