--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு மரைக்காடு - where Mustangs roam-------------------------------மரைகள் நிறைந்த மரைக்காடு (antelope forest). மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை 1940களில் தொடங்கி விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட புராணக் கதையைத் தேவாரத்தில் வாசிக்கலாம்.சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர்.ஆனால், பழைய பெயர் மரைக்காடு என்பதனை புலவர்கள் 1940களில் இருந்து விளக்கி,அவ்வூர் மக்கள் மரைக்காடு, திருமரைக்காடு எனப் பயன்படுத்துகின்றனர்.புராணங்களை விட்டு தமிழ் தன் பழைமையைப் புரிந்துகொண்டுவளர்கிறது என்பதற்கு திருமரைக்காடு என்று பயன்படுத்துதல்நல்ல சான்றாகும்.
'மறை வனம்' என்ற வடசொல் கலந்த தலத்தின் பெயரை ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழ்படுத்தி 'மறைக்காடு' என்று அத்தலத்திற்கு தமிழ் பெயர் சூட்டியவர் திருஞானசம்பந்தர் என்பதை நூல் ஆதாரத்துடன் வேற்றொரு இழையில் எடுத்துக் கூறினோம்.
அதனை ஏற்க மாட்டாது எவ்வித நூல் ஆதாரமும் இன்றி அவர் சொன்னர் இவர் சொன்னார் என்று ஆருடங்களை எடுத்துக் கட்டிக் கொண்டு பேசுவது எதனால்?
தான் கொண்ட கருத்தே மின் தமிழில் நிலைக்க வேண்டும் என்றொரு மனோபாவம் இருந்தால் அதனைப் படிப்போர் புரிந்து கொள்வார். அப்புறம் தங்கள் கருத்துக்கு மின் தமிழ் குழுமம் எந்த அளவில் செவி சாய்க்கும் என்பதை தாங்களே புரிந்து கொள்வீர்.அன்றே 'மறை வனம்' என்ற சொல்லைத் தமிழ்ப்படுத்தி 'மறைக்காடு' என்று பாடிய தமிழ் விரகர் அது 'மரைக்காடு' என்று இருந்தால் அவ்வாறு கூறியிருக்க மாட்டாரா?
'மறைக்காடு' என்ற சொல்லில் வரும் 'மறை' என்னும் சொல் வேதத்தைக் குறிக்காது காரணம் சிவபெருமானை திருமேனி வழிபாட்டில் வழிபட வேதத்தில் மந்திரங்கள் ஏதும் இல்லை என்று சொல்லியும் அதனை ஏற்கமாட்டாது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று விதண்டாவாதம் செய்வது ஏன்?
அயலார் 'மறைக்காடு' என்பதை 'வேத ஆரணியம்' என்று அவர் வசதிக்கு ஏற்றவாறு தப்பாகக் கூறினால் கேட்பாருக்கு மதியில்லையா? மின் தமிழில் வேற்றொரு இழையில் முன்வைத்த எமது கருத்தை அயலாருக்கும் தமிழருக்கும் அறிவுருத்தி அவர்களைச் திருந்தச் செய்வது அல்லவா தமிழரின் அறிவுடைமையாகும்.இதனைச் செய்ய மாட்டாது நாங்கள் தமிழ் பெயரை வைக்கின்றோம் என்று கூறி இருப்பதையும் கெடுப்பது அறிஞர் பெருமக்களுக்கு அழகல்ல.
இத்தகைய ஒருதலைப் பட்சமான செயல்பாட்டை 'திருக்குறள்' சமண நூல் என்று மீண்டும் மீண்டும் மின் தமிழில் எழுதி வருவதிலிருந்தும் காண்கிறோம். இரண்டு சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து இவ்விடம் பதிவு செய்து சமணர் வாதம் பொய்யுடையது என்பதை நிருவினோம்.சமண மதம் சாதிய கொள்கை அற்றது என்று ஒரு சிலர் மின் தமிழில் கூறி வந்ததையும் நூல் ஆதாரத்துடன் பொய் என்று நிருவினோம். சமண மத கோட்பாடுகளை மறுக்கும் பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியிருந்தும் உண்மையை அறிய மாட்டார் எப்படி தமிழ் அறிஞர் ஆனார் என்பது எமக்குப் புரியவில்லை.மு. கமலநாதன்
'
இத்தகைய ஒருதலைப் பட்சமான செயல்பாட்டை 'திருக்குறள்' சமண நூல் என்று மீண்டும் மீண்டும் மின் தமிழில் எழுதி வருவதிலிருந்தும் காண்கிறோம். இரண்டு சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து இவ்விடம் பதிவு செய்து சமணர் வாதம் பொய்யுடையது என்பதை நிருவினோம்.சமண மதம் சாதிய கொள்கை அற்றது என்று ஒரு சிலர் மின் தமிழில் கூறி வந்ததையும் நூல் ஆதாரத்துடன் பொய் என்று நிருவினோம். சமண மத கோட்பாடுகளை மறுக்கும் பல குறள்களைத் திருவள்ளுவர் இயற்றியிருந்தும் உண்மையை அறிய மாட்டார் எப்படி தமிழ் அறிஞர் ஆனார் என்பது எமக்குப் புரியவில்லை.
மு. கமலநாதன்
On Wednesday, August 9, 2017 at 3:51:33 AM UTC+8, N. Ganesan wrote:
2000 ஆண்டுகளுக்கு முன்னால் மரைக்காடு என்ற பெயர் அந்த ஊருக்கு இருந்ததா? எந்த இலக்கியத்தில் வருகிறது?
அன்புடன்,இராம.கி.
//திரு மரைக்காடு ஊர்க்காரர்கள் பயன்படுத்துகின்றனர்//ஐயா கணேசன் அவர்களின் வாதப்படி மரைக் காடு என்பது மறைக் காடு ஆனது என்றும் . மரை (மான் வகை) மிகுதியாக வாழ்வதால் மரைக்காடு என்பதே சரியானது என்றும் சொல்கிறார். அதாவது திருமரைக்காடு என்ற பெயர் திருமறைக்காடு என்றாகிவிட்டது என்கிறார்.மான் என்ற விலங்கினத்தை மரியாதையாக திரு என்று அழைக்கும் விதம் அருமையாக உள்ளது ஐயா.
மிகப்புதுமையாக உள்ளது.நன்றி.
2017-08-10 1:23 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Wednesday, August 9, 2017 at 11:15:06 PM UTC-7, செல்வன் wrote:திருமறைக்காட்டில் மட்டுமா மரைகள் இருந்தன?பல பகுதிகளில் இருந்த மரைகள் அங்கேயும் இருப்பது எப்படி ஆதாரம் ஆகும்?திருமரைக்காட்டில் தான் மரைகள் மிக அதிகம். தென்னிந்தியாவிலேயே.ஆதாரத்துடன் சொன்னால் நன்று
தமிழ்நாட்டில் ஆய்வாளர்கள் மறைக் காடுகளையும் இறை நம்பிக்கைக்குரிய விலங்கினங்களையும் பட்டியலிட்டுள்ளனர்மான்களில் புள்ளிமான் சிவனுக்கும் புத்தருக்கும் சமண தீர்த்தங்கரருக்கும் இணைத்துக் கூறுவதாகக் குறிப்பிடும் தரவுகள அடிப்படையிலான தகவல்.
அதுபோன்றே தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான மறைக்காடுகள் பற்றிய பட்டியல் கீழேசரடுநாதன்
Post-Scriptum
Interestingly, there is a place called
அறியா மறைக் காடு
Ariyamaraikadu, Tamil Nadu 614616, India
at location:
https://www.google.de/maps/@10.1492914,79.1061254,15.25z
See screen shot.
-- jlc
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
########################
Dear Sir,
greetings from Hamburg (Germany).
As a small contribution to this debate,
here is a list of villages in TN which have "kadu" in their names
I have just extracted it from a list of
"List of the 16300 Revenue Villages for Tamil Nadu in december 2000"
which I had compiled long ago while working on the "Digital Tevaram" CD
based on some T.Nadu information data bases
of the {National Informatics Center (NIC), Tamil Nadu State Unit}
(online at that time).
I don't have a personal opinion on the debate concerning மரை / மறை
-- Jean-Luc Chevillard
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
########################
---------- REVENUVI.HTM
...........................
<li>Aravankadu [[Villupuram_DISTRICT: Sankarapuram_TALUK]]
<li>Ariyamaraikadu [[Pudukkottai_DISTRICT: Aranthangi_TALUK]]
<li>Asaveerankudikkadu [[Ariyalur_DISTRICT: Sendurai_TALUK]]
............................
பிளாக் பக் பற்றிய குறிப்பு இங்கேசரடுநாதன்
2017-08-10 19:06 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:திருமரைக்காடு என்று புலவர்கள், பொதுமக்கள் பயன்படுத்துகிறார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
What about Tēvāram 7:79_(1)
மானும், மரைஇனமும், மயில்இனமும், கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து(த்) தடஞ் சுனைநீர்களைப் பருகி,
பூ மா மரம் உரிஞ்சி, பொழில்ஊடே சென்று, புக்கு,
தேமாம்பொழில் நீழல்-துயில் சீ பர்ப்பதமலையே.
- V.M. Subrahmanya Ayyar glosses:
- மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும் தாமே மிக மேய்ந்து
- the deer, herd of indian elk and flocks of peacocks miring together everywhere they themselves having eaten their food sumptuously according to their desire.
- தடஞ்சுனை நீர்களைப் பருகி
- drinking the water in several big mountain springs.
- பூ மாமரம் உரிஞ்சி
- rubbing their bodies against the big blossomed trees.
- பொழிலூடே சென்று
- going through the denseness of those trees.
- புக்கு
- entering.
- தேமாம் பொழில் நீழல் துயில் சீபர்ப்பதமலையே
- the mountain called Cīparppatam is the mountain of Civaṉ, where in the shade of the sweet mango-groves, they sleep.
-- Jean-Luc Chevillard (in Hamburg)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 10/08/2017 16:23, திருத்தம் பொன்.சரவணன் wrote
மறைக்காட்டினைப் பற்றிப் பாடிய சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரில் ஒருவர் கூட மரைகளை அதாவது மான்களைப் பற்றிப் பாடவேயில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
அந்த சார்பற்ற தன்மை இருக்கும் யாரும் 1300 ஆண்டுகளாக இருக்கும் பெயரை மாற்ற சொல்லி இங்கே எழுதிகொண்டிருக்கமாட்டார்கள். அப்படி மாற்றூவது தவறு என கண்டித்திருப்பார்கள்.2017-08-10 16:44 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:ஆய்வாளராக இருக்கும் பொழுது எனது சமயம், எனது நாடு, எனது மொழி என்ற உணர்வுகள் வருவது தவறு... Their bias starts to creep in, impartial analysis is required.
சங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்றுஎழுதினர். அவ்வழியில் திருமரைக்காட்டு மக்கள் செல்கின்றனர். அதனைக் கண்டு ஆவணப்படுத்தவே இவ்விழை தொடங்கப்பெற்றது,நா. கணேசன்
சைவ மறுமலர்ச்சிக்குமுன் களப்பிரர் காலத்துக்குமுன் தமிழகத்தில் இருந்த கோவில்கள் பற்றி தரவுகள் அடிப்படையில் அமைந்த தகவல் ஏதும் கிட்டவில்லை. இயற்கையை வணங்கிய தமிழ்ப் பழங்குடி சங்க காலத்துக்குப்பின்னரே சைவ சித்தாந்தம் தமிழகத்துக்கு அறிமுகமான பின்னர் ஆகம் அடிப்படையிலான கோவில்கள் தோன்ற ஆரம்[இத்தன என்று கருதலாம்
தமிழகத்தில் ஆகமும் வேதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இல்லாமல் முரண்பட்டே இருந்தன - சரடுநாதன்
சமயம் மறுமலர்ச்சியில் தங்கள் சமயத்தைப் பரவலாக்க பலவகை தொன்மக் கதைகளைக் கட்டிவிட்டு ஒவ்வொரு ஊரையும் தங்கள் சமயத்தின் கீழ் கொண்டு வரும் சூழ்ச்சியாகத் தோன்றுகிறது.இப்பாடல்கள் யாவும் சமயமறுமலர்சிக் காலாத்திய உருவாக்கங்கள் என்பதுவே எனது கணிப்பு.மக்கள் தங்கள் மனம் போல ஊரின் முன்னாள் பெயரை உள்வாங்கி, தொன்மக் கதைகள் உருவாக்கி, அதை எழுத்திலும் பரப்பும் (ஏடுகளில்) பரப்பி விட்டார்கள்.
The age of the earth had earlier been pegged at 6,000 years by European religious scholars, based on readings of the Bible, with estimates ranging to 100,000 years (based on other religions) at the high end. Darwin’s theory implied it was much, much older, transforming not only the field of biology, but geology too, along with archaeology and anthropology.
The theory, of course, faced widespread resistance. Evolution from apes? Did god not create humans in his own image? Wasn’t it blasphemy to suggest otherwise? “No,” said one bold geologist from British India whose discoveries supported Darwin’s theory. His name was Robert Bruce Foote. " ...
"மையில நனைச்சி பேப்பரில் அடிச்சா மறுத்துப் பேச ஆளில்லே" --- என்பதை அக்காலத்திலும் கூட ஒருவகையில் உணர்ந்திருப்பார்கள் போலிருக்கிறது.மரைக்காடு > மறைக்காடு > திருமறைக்காடு என மாற எவ்வளவு காலம் பிடிக்கும். முன்னர் அந்த ஊர் ஒரு முக்கியத்துவம் இல்லாத ஒரு ஊராகவே இருந்திருக்கலாம், பின்னர் ஆன்மிகச் சுற்றுலாத்தலமாக மாற்றிவிடப் பட்டிருக்கலாம்.கத்தோலிக்க சமயத்தினர் கப்பலேறி நாடு நாடாகச் சென்று, கடலில் புயலில் சிக்கியதாகவும், மேரியைக் காப்பாற்றும்படி வேண்டிக் கரையிறங்கினால் அங்கு ஒரு தேவாலயம் கட்டுவதாகக் கூறியதாக அப்பகுதி மக்களிடம் நிலம் வாங்கி, ஆலயம் கட்டி, சமயம் பரப்பிய செயல்களில் இருந்து என்னால் வேறுபடுத்திக் காண இயலவில்லை.பிற சமயங்களைச் சார்ந்திருக்கும் மக்களை தங்கள் சமயத்தில் உள்வாங்கி சமயம் பரப்பும் இயக்கங்களின் தொடர் முயற்சிகளில் ஆரம்பக் கட்டம் என்றே என்னால் கொள்ள முடிகிறது.செல்வனின் திருப்புலியூர் என்பதையொட்டிய எனது கருத்து, >>> https://groups.google.com/d/msg/mintamil/n2MGsQINvsA/upAiFxzPAgAJசங்ககால பீடார் உறந்தையின் கோழியூர் என்ற பெயரில் ஏற்றப்பட்ட கதைகளும் உண்டு என்று காட்டும் நோக்கில், திரு. கணேசனின் இழையைத் திசை திருப்பாமல் அது தனியே வருகிறதுதமிழக மன்னர்கள் தங்களது வெற்றிக்கு அறிகுறியாக அவற்றைப் பறை சாற்ற அதனடிப்படையில் ஊர்களின் பெயர் மாற்றம் செய்ததையும்,சுதந்திர இந்தியாவின் காந்தி, நேரு, இந்திரா, சுபாஷ் சந்திர போஸ் சாலைகள் உருவானதையும்கழகக் கட்சிகள் அண்ணா, பெரியார் என்று பெயரிடத் தொடங்கிய நம் முன்னோர்களின் மனநிலையையும்அக்கால மக்களின் மனநிலையில் இணைத்துப் பார்ப்பது கடினமல்ல...... தேமொழி
On Thursday, August 10, 2017 at 9:42:43 AM UTC-7, செல்வன் wrote:2017-08-10 2:51 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:என் கருத்து அல்ல ஐயா. திருமரைக்காடு என்று எழுதுபவர்கள் அந்த ஊர்க்காரர்கள், தமிழ் அறிஞர்கள்.திருப்புலியூர் (சிதம்பரம்) எதனால் திரு என்று தொடங்குகிறதோ, அதே காரஅம் தான்திருமரைக்காடு (வேதாரண்யம்). இரண்டு ஊர்களிலும் பெரிய கோவில்கள்.ஸப்தரிஷிகள் மகாவிஷ்ணுவைத் துதிக்க, அவர் இந்திரனை அனுப்பினார். இந்திரன் புலியாக மாறி, அந்த தேவதையைக் கொன்றான். அதனால் இந்த ஸ்தலத்திற்கு ‘திருப்புலியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஸப்தரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், மாயப்பிரானாகத் தோன்றி காட்சி அளித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.ஆக இந்திரன் புலியாக மாறீயதால் அது திருப்புலி, திருப்புலியூர் ஆனதுஉங்க லாஜிக்படி திருப்ப்லியூரில் புலிகள் மிகுதி என சொல்வீர்கலா?மரைக்காட்டுக்கு திரு என அடைமொழி சேர்க்கும் அவசியம் உங்கள் லாஜிக்படி இல்லை. மறைகளை தான் திருமறை என விளிக்கும் வழக்கம் உண்டு
இப்ப நீங்க சார்லஸ் டார்வின் ஆகிவிட்டீர்கள். ரைட்டு.. ஆனால் அதை விட நீங்கள் செய்வதுக்கு பொருத்தமான உதாரணம் உள்ளது
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு பாமியானில் உள்ள புத்தர்சிலைகளை இடித்து தள்ளினார்கள். காரணம் வரலாற்று தூய்மைவாதம்.
கிட்டத்தட்ட பாமியான் புத்தர் கால தொன்மையுள்ள திருமறைக்காடு எனும் பெயரையும் வரலாற்று தூய்மைவாத காரணம் காட்டி நீங்கள் மாற்ற முனைவதுக்கு தலிபானின் உதாரணமே பொருந்தும். புத்தர்சிலையை இடிக்ககூடாது என்பவர்களை பவுத்தமதவாதிகள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.
மதறாஸ் என்பதை அதைவிடப் பழைய பெயர் சென்னை எனப் பயன்படுத்துவோர் வரலாற்று தூய்மை வாதம் என்றா சொல்வது? சென்னை, மயிலாடுதுறை, ... வந்துவிட்டது.தமிழ் இளைஞர்களுக்கு அறிவியல் முறையில் தமிழ் ஊர்ப்பெயர்கள் ஆராய தமிழறிஞர்கள் கொடுத்துள்ள திருமரைக்காடு அமைந்தால் சிறக்கும்.பேரா. தி. நெடுஞ்செழியன் 2008-ல் சொல்வதை ஆராய்ந்தால் தெரியும்.நா. கணேசன்
மரைக்காடும் நியாயமான மாற்றமே. பீக்கிங்குக்கு பெய்ஜிங் என்ற பழஞ்சீனப் பெயர் போல. மரைக்காடு வேதாரண்யத்தின் பழந்தமிழ்ப் பெயர்.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக நூலில் உள்ளபடி.
இலக்கியக் குறிப்பு சங்க இலக்கியத்தில் உள்ளது. மொழியியலில் ப்ரொட்டோ-திராவிட மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழி எல்லாம் அறிஞர்கள் எழுதியஇலக்கியங்களில் இருக்கிறது. மரைக்காடு என்று உள்ள இலக்கியங்கள் கொடுத்துள்ளேன். மரைக்காட்டுக்கும் (வேதாரண்யம்), மரைக்கும் உள்ளதொடர்பு அதிகம்.

#ங்க இலக்கிய ஆய்வாளர்களாக உள்ள தமிழறிஞர்கள் சார்பற்ற தன்மையைக் கொண்டவர்கள். எனவேதான், திருமரைக்காடு என்பது பழந்தமிழ்ப் பெயர் என்று எழுதினர்.#தாங்கள் குறிப்பிட்டுச் சொன்ன பேரா. ரா.பி. சேதுபிள்ளைக்கும், பாவாணருக்கும் சார்பு தன்மை இல்லை என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்?அவர் எக்காலத்தவர்? எந்த மனோ நிலையில் தமிழை மீட்டெடுக்க வாழ்ந்தவர்? அப்படி மீட்டெடுக்க வேண்டுமானால் 'வேதாரண்யம்' என்பது தப்பாகச் செய்யப் பட்ட மொழிபெயர்ப்பு என்பதற்கு மாற்று கருத்து ஒன்றை முன் வைக்க வேண்டுமானால் அதற்குரிய ஆதாரங்களைத் தேடும்பொழுது எப்படி சார்பற்ற நிலையில் நிற்க முடியும்?இருவருமே 'மறை' என்பது வேதத்தைக் குறித்தது அல்ல என்று கூற வந்தவர். அவர் காலத்தில் 1940-ம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வேதத்தை மறுத்த எவருக்காது முதல் மரியாதை கொடுக்கப் பட்டதா? பேரா. ரா.பி. சேதுபிள்ளைக்கு மக்களிடையே தனக்கிருந்த மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை இருந்தது. அதனால் 'மறை' என்பது 'வேதம்' அல்ல என்று எவ்வகையில் சொன்னாலும் எதிர்ப்பு எழும் என்பது அவருக்குத் தெரியும். அதனை நேரிடையாக மறுக்காது மறைமுகமாக மறுக்க 'மரை' என்றொரு காரணம் அவருக்குத் தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்தம் கருத்தை முன் வைத்தார்.பாவாணரோ, தாம் பிறந்த பொழுது கொண்டு வந்தது யாதொன்றுமில்லை, இனி போகும் பொழுதும் கொண்டு செல்ல யாதொன்றுமில்லை என்று தன் சுயநலத்தையும், ஆசையையும், அச்சத்தையும் தூக்கி எறிந்து விட்டு வாழ்ந்து காட்டியவர். அதனால்தான் ஆரியத்தையும், வடமொழியை ஆதிக்கத்தையும் மறுத்து எழுதி வாழ்க்கையில் வறுமையின் உச்ச வரம்புக்கு உட்படுத்தப் பட்டார்.இவ்விருவரும் கொண்ட நோக்கத்தில் தவறில்லை. அதனைச் சாதிக்கும் முறை வலுவிழந்து போனால் அப்பிழையைச் சரி செய்வது இக்காலத்தவர் கடமை. அதனால்தான் 'மறை' என்ற சொல் 'மறைத்தல்' என்ற பொருளில் வந்தது என்றும் அது அக்காட்டுக்கு காரணப் பெயராகியது என்பதை நிருவ முனைந்தேன். அதற்கு தேவாரத்தில் உள்ள தரவுகளை ஆதாரமாகக் கொண்டேன்.அக்காலத்திலேயே அது 'மரைக்காடு' என்று காரணப்பெயர் பெற்றிருந்தால் ஏதாவது ஒரு ஆதாரத்தை விட்டு வைத்துச் சென்றிருக்க மாட்டார்களா?அருளாளர் அத்தலைத்தை நேரிடையாகக் கண்டு கதைத்தவர். நாமோ காணததைக் கொண்டு கதைக்கின்றோம். அவர் கூற்று ஏற்குமா அல்லது நமது கூற்று ஏற்குமா? சிந்தியுங்கள்.
-
I find mention of எருமைக்காடு
in Dinamalar
இங்கு, 10 கிராமங்களுக்கு மட்டும் சாலை வசதியுள்ளது. தோல்தூக்கி, கலசப்பாடி, தேத்தப்பட்டி, கருத்தம்பட்டி, குண்டல்மடுவு, சாலம்பள்ளி, எருமைக்காடு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மண் சாலைகளும், மலைப்பாதை கரடு, முரடான பாதைகளையும் கொண்டது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1284369
-- Jean-Luc (in Hamburg)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
+++++++++++++++++++++++++++
I also find a
கழுகாபுலிக்காடு
10.411899, 79.282347
https://www.google.de/maps/@10.411899,79.282347,15z
I wonder whether that splits as
கழுகு + ஆ + புலி
#######################
Dear இராம.கி.
what about
Ettupulikkadu?
Tamil Nadu, India
10.480239, 79.321542
https://www.google.de/maps/@10.480239,79.321542,15.5z
(taken from the list of villages with names containing "kadu"
which I sent yesterday)
அன்புடன்
-- Jean-Luc (in Hamburg)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 11/08/2017 13:09, Lakshmanan Krishnan wrote:
மரைக்காடு என்று கொண்டாலும் அது வேற்றுமைத்தொகை ஆகிறது. மரைகளின் காடு எனில் வேறு விலங்குகளின் காடு தமிழகத்தில் உள்ளதா? விலங்குக்காடு என?
இராம. கி
Sent from my iPhone
On 11-Aug-2017, at 14:39, jeanluc.c...@gmail.com via mintamil+bncBD6L7CX4TUDRBUHIWXGAKGQETVSYI...@googlegroups.com <jeanluc.c...@gmail.com> wrote:
Dear Suba,
there cannot be any conclusion
;-)
On the one hand,
there is the invisible (but immense) power of desires
such as the ones voiced in this page:
http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis059.htm
On the other hand,
there is the (written) linguistic reality of today,
such as evidenced by the images contained in this post
https://groups.google.com/d/msg/tamilmanram/nu4rKP7dAig/bRS988v5AwAJ
I have partly read those posts because they are an interesting example
of the passion surrounding "Shibboleth-s" (שִׁבֹּלֶת),
https://en.wikipedia.org/wiki/Shibboleth#Origin
although this one is partly a purely orthographic Shibboleth
especially when in many dialects
the distinction between வல்லின "ற"
and இடையின "ர"
is lost ...
அன்புடன்
-- ழான் (Jean-Luc)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 11/08/2017 09:35, Suba wrote:
இந்த ஆய்வில் நாம் இப்போது எங்கே இருக்கின்றோம்?🤔திருமறைக்காடா ? திருமரைக்காடா..?
I find mention of எருமைக்காடு
in Dinamalar
இங்கு, 10 கிராமங்களுக்கு மட்டும் சாலை வசதியுள்ளது. தோல்தூக்கி, கலசப்பாடி, தேத்தப்பட்டி, கருத்தம்பட்டி, குண்டல்மடுவு, சாலம்பள்ளி, எருமைக்காடு உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மண் சாலைகளும், மலைப்பாதை கரடு, முரடான பாதைகளையும் கொண்டது.
விலங்கு (AnaikkaduThere is also Aanaikkadu in Salem district, referring to elephants,
Anaikkadu is in fact
அணைக்காடு
It is not a விலங்கு ...
See
https://ta.wikipedia.org/s/4x1x
(அணைக்காடு ஊராட்சி)
-- Jean-Luc (ழான்)
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
On 11/08/2017 16:34, nkantan r wrote:
விலங்கு (Anaikkadu
2017-08-11 11:55 GMT-05:00 பழமைபேசி <pazam...@gmail.com>:////உலகில் எந்த நாட்டிலும் ஊர்களுக்கு 7ம் நூற்றாண்டில் வைத்த பெயரை மாற்றும் வழக்கம் இல்லை. //////மயிலாடுதுறை மாயவரம் ஆனது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. மொழியும் அங்கே மாறியது.//நன்றி. வணக்கம்!! __/\__இரண்டாவது கூற்றுதான் இன்றைய நிலை!! பாராட்டுகள்!!நல்ல வேடிக்கைமயிலாடுதுறையின் பெயர் எப்போதுமே மயிலாடுதுறைதான்.மாயவரம் என்பது அதன் சமஸ்கிருத பெயர். ஜெர்மனியை பிரெஞ்சு மொழியில் Allemagne என அழைப்பதுபோல.ஜெர்மானிய அரசு அபிசியலாக "எங்கள் குடியரசின் பெயர் ஜெர்மனி" என அறிவிப்பதுபோல் தான் மயிலாடுதுறையை மயிலாடுதுறை என அறிவித்ததும். அது பெயர் மாற்றமே கிடையாது. இன்றைக்கும் பிரெஞ்சு மக்கள் ஜெர்மனியை Allemagne எனத்தான் அழைத்துவருகிரார்கள். அவர்கள் மொழியில் அப்படி கலோக்கியலாக அழைப்பது அவரள் விருப்பம். ஆனால் அபிசியலாக ஜெர்மனியின் பெயர் ஜெர்மனிதான். அதுபோல் மயிலாடுதுறை என்றும் மயிலாடுதுறைதான். திருமறைக்காடு என்றும் திருமறைக்காடுதான்
பழைய தமிழ்ப் பெயராகிய திருமரைக்காடு என்று எழுத்வோரும் உள்ளனர். மரை:மறை ர்/ற் வேறுபாடு உள்ள சொல். மரைக்காடு என்பது தூய செந்தமிழ். எனவே, அப்பெயர் பயன்படுகிறது.
இறாமசாமி என்று எழுதுவது உண்டு. ஆனால் இராமசாமி என்பது சரியான பெயர். அதுபோல் திருமரைக்காடு செந்தமிழ்ப் பெயர்.
நா. கணேசன்
ஆய்வா? அப்படி என்றால் சரி!
1) ழான் அனுப்பிய "காடு" பட்டியலில் காடு தாவரம் (Nanalkadu, Vellarikkadu, Mullakadu), மரம் (Veppankkadu), விலங்கு (Anaikkadu, இடச்சிறப்பு (Teppakkadu), ஆள் (Kattayankadu), இப்படி அமைகிறது...
2) ஒரு இடம் மட்டும் மறை தொடர்புள்ளது (Ariyamaraikadu) இது தமிழில் அறியாமறையா, அறியாமரையா, அரியாமரையா நாம் அறியோம்.
3) காடு வேதம் தொடர்பானது என்பது சிறிது (அறிவிற்கு) நெருடலானதே.
4) மறைக்காடு எனும் சொல்லில் மறை என்பது (வடவர்) வேதம் எனச் சாதிப்பவர் காட்டும் ஆதாரம் சைவ பக்தி பாடல்கள்; (மானுக்கு திரு ஏன், எதுகை மறைக்கு பொருந்துகிறது என்பதல்லாம் கூடுதலான விவரம்!, தேவையற்றது, குழுமத்திற்கு ஏற்புடைய எழுத்தும் அல்ல).
5) மரைக்காடு எனச்சொல்பவர் நா, கணேசன்; ஒரு சிலர் (எமை போன்றவர் ) அப்படியும் இருக்கலாம் என எண்ணம் கொண்டவர். இதை இப்படித்தான் என நிறுவ வேண்டிய தரவு ஏதும் இல்லை.(தரவில்லாத ஒரு கருத்தாக இதை முதலில் சொன்னவர் தேவ நேயப் பாவாணர் எனது தெரிகிறது;) ஆரிய எதிர்ப்பு எனும் உணர்ச்சிப்பாங்கில் பலர் இதுவே சரி எனக்கொண்டுள்ளனர்.
6) சொல்லப்போனால் மறைக்காடு 7-ம் நூற்றாண்டில் தான் பாடப்பட்டதாகத் தெரிகிறது. அதுவும் பக்தி இலக்கியங்களில். அதற்கு முன்னர் இப்பெயர் வந்ததாக தெரியவில்லை
7) தமிழில் பயண இலக்கியங்களோ, இட வரைபடங்களோ, விலங்கு பற்றிய தொன்மை நூல்கள் இல்லாததாலும் இது இப்படித்தான் என அறுதியிட்டு கூற முடியாது.
rnk
( a different take; may be it was called vedaaranyam originally by people who settled around there from north? and sambandhar in a spirit of "tamilizing" vedaaranyam has called it as maraikkadu? just another thought!)
On Friday, August 11, 2017 at 1:05:33 PM UTC+5:30, Dr.K.Subashini wrote:
இந்த ஆய்வில் நாம் இப்போது எங்கே இருக்கின்றோம்?🤔
திருமறைக்காடா ? திருமரைக்காடா..?
On Friday, August 11, 2017 at 7:34:50 AM UTC-7, nkantan r wrote:ஆய்வா? அப்படி என்றால் சரி!
1) ழான் அனுப்பிய "காடு" பட்டியலில் காடு தாவரம் (Nanalkadu, Vellarikkadu, Mullakadu), மரம் (Veppankkadu), விலங்கு (Anaikkadu, இடச்சிறப்பு (Teppakkadu), ஆள் (Kattayankadu), இப்படி அமைகிறது...Yes. There are many Aanaikkadu in South India. refering to elephants. My own taluk has "umpalkaaDu" referred to in PatiRRuppattu, one of the two PuRam genre books of Sangam.umpar = high, umpal = elephant.2) ஒரு இடம் மட்டும் மறை தொடர்புள்ளது (Ariyamaraikadu) இது தமிழில் அறியாமறையா, அறியாமரையா, அரியாமரையா நாம் அறியோம்.அரியமரை = rare antelope. Must be a place of Chinkara-s or Four Horn-s, both were rare. Now completely wiped out of south India. Both are gone.3) காடு வேதம் தொடர்பானது என்பது சிறிது (அறிவிற்கு) நெருடலானதே.சம்பந்தர் சொல்லும் புராணம் அஃது. நான்கு (சதுர - Indo-Aryan) வேதங்களே மரைக்காட்டுக்கு வந்து வணங்கினவாம் ஈசனை.சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும் .... சம். தேவாரம்.It is far easier to explain the name of the area by r/R alternation. Both மரை/மறை refer to antelopes in Tamil. I gave the entry from Tamil Lexicon.4) மறைக்காடு எனும் சொல்லில் மறை என்பது (வடவர்) வேதம் எனச் சாதிப்பவர் காட்டும் ஆதாரம் சைவ பக்தி பாடல்கள்; (மானுக்கு திரு ஏன், எதுகை மறைக்கு பொருந்துகிறது என்பதல்லாம் கூடுதலான விவரம்!, தேவையற்றது, குழுமத்திற்கு ஏற்புடைய எழுத்தும் அல்ல).Not just in திருமரைக்காடு, temples around this 'antelope-forest' temple have மரை antelopes worshipping god, Shiva. Tevaram itself has a nice poem that speaks of the antelope - Shiva connection.The kRSNa-mRga intimately connected with Vedas is mentioned as "sundaramaan" (beautiful antelope() which these marai-s are.Tevaram authors used the right moment when Sangam literature gets forgotten, and the Sangam words lose their significance. If you read Tevaram poems, the distinction between antelope vs. deer (with antlers) gets lost.Sambandhar & Appar use their times as the right moment and seize the opportunity to generate fictional mythology that 4 Vedas came to Tirumaraikkadu. They play on the double meanings of maRai = (1) Veda (2) door closingto write myths on the toponym.5) மரைக்காடு எனச்சொல்பவர் நா, கணேசன்; ஒரு சிலர் (எமை போன்றவர் ) அப்படியும் இருக்கலாம் என எண்ணம் கொண்டவர். இதை இப்படித்தான் என நிறுவ வேண்டிய தரவு ஏதும் இல்லை.(தரவில்லாத ஒரு கருத்தாக இதை முதலில் சொன்னவர் தேவ நேயப் பாவாணர் எனது தெரிகிறது;) ஆரிய எதிர்ப்பு எனும் உணர்ச்சிப்பாங்கில் பலர் இதுவே சரி எனக்கொண்டுள்ளனர்.தேவநேயப் பாவாணர் அல்லர் திருமரைக்காடு என்று முதலில் சொன்னவர். துடிசைக்கிழார் பழுத்த சைவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சைவ பக்தியிற் சிறந்தது.சைவ சிந்தாந்த நூற். கழகம் வெளியிட்ட நூலில் உள்ள செய்தி. சைவர்களே பயன்படுத்த ஆரம்பித்ததை பாவாணர் எழுதியுள்ளார்.
தூய தமிழ் சொல்லைப் புதுமைப் படுத்துகின்றோம் என்று தமிழர் பெருவாரியாகப் பின்பற்றி வரும் சமயத்தை நீக்கி விட்டு ‘திருமறைக்காடு’ என்ற தலத்திற்கு புதுமைக் காண முற்பட்டால் அது அறியாமையின் இலக்கணமாகி விடும். சிவசிவ.
கஸ்தூரிபா காந்தி குருகுலம் வேதாரண்யத்தில் புகழ்பெற்ற நிறுவனம். குருகுல அச்சகம், திருமரைக்காடு என்று கோவை இளஞ்சேரனார் அச்சிட்டுள்ளார்கள்.2017-08-12 14:13 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:செல்வன் இது திரு. கணேசனின் இழை, அவர் இழையில் அவர் கருத்தை எழுத அவருக்கு உரிமையில்லையா?கருத்திருந்தால் பகிருங்கள், இடையூறு எதற்கு?
மரைக்காடு என்பது மறைக்காடு என ஆனது என்பது யூகமா, ஆதாரத்தின் அடிப்படியில் ஆன தகவலா?
On Saturday, August 12, 2017 at 1:25:09 PM UTC-7, K Selvan wrote:மரைக்காடு என்பது மறைக்காடு என ஆனது என்பது யூகமா, ஆதாரத்தின் அடிப்படியில் ஆன தகவலா?மரை என்பது மறை என்றாகும் ஆதாரம் கொடுத்துள்ளேன். படிக்கவில்லையா?
தமிழ்நாட்டில் ஆயிரக் கணக்கில் சிவன் கோவில்கள். மரைக்காட்டில் உள்ள கோவிலில் தான் மரைகள்சிவனைத் தொழுகின்றன என்பது தலவரலாறு.
(இந்த விவாதத்திற்கு அடிப்படையான என் கேள்வியே மறை என்பது வேதம் என்றால் வேதத்திற்கும் காட்டுக்கு என்ன தொடர்பு, என்பதே!)
1) எப்படி மரைக்காடு என்பதற்கு நிரூபிக்கக்கூடிய நேரடி தரவு இல்லையென்றாலும், தமிழ் ஆர்வத்தாலும், சமஸ்க்ரித (ஆர்ய) எதிர்ப்புணர்வாலும் மரை + காடு என்ற விளக்கம் உள்ளதோ,
2) அப்படியே சமய பாடலை ஆதாரமாகவும், அதற்கு பக்தியைப் பின்புலமாக்கி, (அறிவை ஒரு கண்ணோட்டத்தில் செலுத்தும்) கற்பனை சார்ந்தே மறை+ காடு எனும் விளக்கமும் உள்ளது.
3) திருத்தம் பொன். சரவணன் அவர்கள் தந்துள்ள மறைக்காடு என்பதற்கான விளக்கம் அவ்வகைத்தே :
===> வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.
===> வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின
(இதை ஏற்பது முழுவதும் பக்தியைச்சார்ந்ததே அல்லவா?)
எம்மைப்போன்ற பக்தியற்ற மூடர்கள் வேதம் என்பது பலகாலம் எழுதப்படாத வெறுமே ஓதப்பட்ட (எழுதாக்கிளவி) பாடல்கள்; அவை எப்படி மலர் தூவும் என்று M R ராதா போல கேட்கலாம் என்று, அதற்கு ஒரு "அறிவியல்" விளக்கம் இப்பொழுது தரப்பட்டுள்ளது!
quote begins
வேதங்கள் மரங்களின் வடிவாகக் கோவிலைச் சுற்றிநின்று பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்தி வழிபட்டன என்னும் கருத்தினை எளிதாக அறிந்துகொள்ளலாம். உண்மை என்னவெனில், கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ' மறையினை ஓதும் காடு ' என்ற பொருளில் அவ் ஊருக்கு 'மறைக்காடு' என்ற பெயர் சூட்டினர்.
quote ends
எப்படிப்பட்ட அற்புதமான காட்டை நாம் இழந்து நிற்கிறோம்.
rnk
NG> 40 ஆண்டுகளாய் இப் புராணம் படித்து வருகிறேன்.திருமரைக்காடு என்ற பெயரை அறிவியல்பூர்வமாக 1940-களிலே இருந்து தமிழ்ப்புலவர்கள் விளக்கினர். துடிசைக்கிழார் அவர்கள் 1943-ல் எழுதிய நூலில் இருந்து மேற்கோள் கொடுத்தேன். இப்பொழுது வேதாரண்யம் பகுதி மக்கள் பலரும் திருமரைக்காடு என எழுதுகின்றனர்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
மரைகள் நிறைந்த மரைக்காடு. மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. இதனைக் காட்டிப் புலவர்கள் விளக்கியதை ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு எழுதுகின்றனர்,மரை என்பதை மறை என்று எழுதலாம் மறை என்பதை மரை என்று எழுதலாமா?ஐயோ மறை கழண்றுபோச்சே என்று சொல்லும் மறை எந்த வகை?
தமிழ்நாட்டு என்று பெயர் சூட்ட எவ்வளவு நாட்கள் ஆனது என்பது தங்களுக்குத் தெரியாதாவேதாரண்யத்தை மாற்ற திராவிடக் கண்மணிகளின் உதவ்யை நாடவும் நடக்கும்
நரசுஸ் காப்பி
2017-08-14 19:31 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
NG> 40 ஆண்டுகளாய் இப் புராணம் படித்து வருகிறேன்.திருமரைக்காடு என்ற பெயரை அறிவியல்பூர்வமாக 1940-களிலே இருந்து தமிழ்ப்புலவர்கள் விளக்கினர். துடிசைக்கிழார் அவர்கள் 1943-ல் எழுதிய நூலில் இருந்து மேற்கோள் கொடுத்தேன். இப்பொழுது வேதாரண்யம் பகுதி மக்கள் பலரும் திருமரைக்காடு என எழுதுகின்றனர்.அதன் காரணம், அப்பகுதியில் தமிழின் மீது தணியாத, உண்மையான ஆர்வம் கொண்டவர்களும், திராவிட கழகக் கொள்கையைப் பின்பற்றியவரும் அக்காலத்தில் பலர்.சமயப் பற்று கொண்டிருந்தாலும், கண்மறைக்கும் அளவிற்கு சமயக்கொள்கைப் பிடிப்பு கொண்டிருந்தவர்கள் குறைவு.அப்பகுதியின் ஊர்கள் பல கழகக் கட்சியின் கோட்டை எனவும் பறைசாற்றிக் கொள்ள விரும்பியிருந்தார்கள் எனக் கேள்விப்பட்டதுண்டு.இக்காலத் தலைமுறையின் பெற்றோர்கள்/முன்னோர்கள் அவர்கள்.இக்கால நிலையை அறியேன். இவையாவும் செவிவழிச் செய்தியால் அறிந்தது..... தேமொழிஇது போன்று பழைய தமிழ்ப்பெயர்களை மக்களிடையே வழங்கச் செய்தவர்களில் தமிழறிஞர் கோவை. இளஞ்சேரன் ஒருவர். ஆராய்ச்சிக்கட்டுரைகள் நூலில் திருமரைக்காடு என்னும் பெயரை விளக்கியுள்ளார் கோவை. இளஞ்சேரன்.கோவை. இளஞ்சேரன் பற்றி எழுதினேன். நல்லாசிரியர். தமிழியக்கமாகவே வாழ்ந்தவர். தொழிலாளர் தலைவர் ப. ஜீவா அவர்களால் இளஞ்சேரன் என அழைக்கப்பட்டு அதுவே பெயரானது. இயற்பெயர்: மெய்கண்டசிவன். முதலில் வித்வான் பட்டம் பெற்றார் (திருவையாறு அரசர் கல்லூரி). கஸ்தூரிபா காந்தி குருகுல அச்சகத்தில் அச்சிட்டபோது திருமரைக்காடு எனப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.கஸ்தூரிபா காந்தி குருகுலம் - புகழ்மிக்க நிறுவனம். 1930களில் இருந்து. கோவை இளஞ்சேரன் அவர்களின் நூலை வெளியிடும்போது திருமரைக்காடு என அச்சிட்டதைக் காணலாம்.
மரைகள் நிறைந்த மரைக்காடு. மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. இதனைக் காட்டிப் புலவர்கள் விளக்கியதை ஊர்மக்கள் ஏற்றுக்கொண்டு எழுதுகின்றனர், இணையத்திலும் பார்க்கலாம். ஆராய்ச்சி இல்லாமல் இருப்போர் புராணக்கதைகளில் மூழ்கி இருக்கட்டும்.திருமரைக்காடு திருமணம் என்று பார்த்தால் கூகுள் காட்டும். https://www.facebook.com/photo.php?fbid=939861482822212&set=gm.1364685140279447&type=3&theater “திருமரைக்காடு கிளிக்கர்ஸ்”.மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).
கோவை இளஞ்சேரன் அங்கே வாழ்ந்த பெரும்புலவர். நாகையில் மறைமலை அடிகளுக்குச் சிலை நிறுவியவர் அவர். அவர் நூல்கள் இணையப்பல்கலையில் கிடைக்கின்றன. அந்நூல்களை கஸ்தூரிபாய் காந்தி குருகுலம், திருமரைக்காட்டில் அச்சாகி உள்ளன. அவற்றில் குருகுலம், திருமரைக்காடு என்றே அச்சிடப்பட்டுள்ளது காணலாம். காங்கிரஸ் குடும்பம் சர்தார் வேதரத்தினத்தின் குடும்பம். அவரது மகன்கள், பேரன்கள் ராமகிருஷ்ண வித்தியாலயம் கோவையில் படித்தனர். மாமன்களுடன் படித்ததால், எங்கள் ஊர்களுக்கு வருவர். வேதாரண்ய குருகுல அச்சுக்கூடத்திலும் திருமரைக்காடு என பயப்படுத்துவது சிறப்பு. எனவே, கட்சி வேறுபாட்டுக்கு இடம்தராமல், தமிழுக்கு முதன்மைதந்து திருமரைக்காடு என்ற பழந்தமிழ் அவ்வூரில் பயன்படுத்துகின்றனர். மரைக்காட்டீசரின் திருப்பாத கமலங்களை மரைகள் தொழுகின்றன என தேவாரம், தலபுராணங்கள், .... குறிப்பிடுகின்றன.சங்க இலக்கியத்தில் மரை, மரையா, பக்திகாலத்தில் மரைகள் தொழுகின்ற திருமரைக்காடு, ஆங்குள்ள கோவில் விரிவாகப் பார்க்கலாம்.NG
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
2008/6/12 Neduchezhian T. Chezhian <tamil...@gmail.com>:>மரை என்பது மான்களைக் குறிக்கும்,
> குறிப்பாக கடல் சார்ந்து வாழும் மான்களையும் அதிலும் ஒற்றைக் கொம்புடைய மான்களை
> குறிக்கும். ஸ்குரு ஆணியை கவிழ்த்து வைத்தார்போல மானின் நெறியில் அந்த ஒற்றைக்
> கொம்பைக் கொண்ட மான்கள் இன்றைக்கும் வேதாரண்யம் கடல் சார்ந்த சதுப்புநில
> காடுகளில் அதிகம் என்பதை உணரவேண்டும். இந்த வகை மான்கள் வேறு எந்த பகுதியிலும்
> இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுவாரசியமாக இருக்கிறதே! ஒற்றைக் கொம்பு கொண்ட மான்? இம்மானின் படம்
அனுப்ப முடியுமா? இம்மானின் அறிவியல் பெயரென்ன?
இங்கு "ஒற்றைக் கொம்பு" என்று சொன்னது "unicorn " என்ற அடிப்படையில் அல்ல! கிளைகள் இல்லாமல் ஒற்றை கம்பாய் இருப்பது! (இரண்டு கொம்புகள், கிளைகள் இல்லாமல்!)
following is from http://ivansatheesh.blogspot.in/2011/05/மிளா (Sambar Deer)
தெற்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கும் மான் மிளா. நம்முடைய வனப் பகுதியில் வாழும் மான்களிலேயே அதிக உயரமும் பருமனும் கொண்ட மான்கள் மிளா மான்கள் தான். சுமார் 300 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. புள்ளி மான்களை போன்று பெரிய குழுக்காளாக இவை வாழ்வதில்லை.
ஆண் மான்களுக்கு பெரிய கொம்புகளும், பெண் மான்கள் கொம்புகள் இல்லாமலும் இருக்கும். தமிழ் நாட்டில் மேற்கு பகுதியை ஒட்டிய வனங்களில் இவை வாழ்கின்றன.
===============================================வெளி மான் (Black Buck)
இன்றைய இந்தியாவில் வாழும் விலங்குகளில் மிகவும் வேகமாக ஓடும் திறன் மிக்கது வெளி மான் (Black Buck). ஆண் மான்கள் கரும்பழுப்பு நிறமாகவும், பெண் மான்கள் செம்பழுப்பு நிறமாகவும் காணப்படும். ஆண் மான்களுக்கு திருகு அமைப்பிலான கொம்புகள் உண்டு.
அடர்ந்த காடுகளை விடவும், ஓரளவு சமவெளிப் பகுதிகளில் தான் இவை தங்களின் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டிருந்தன. இன்று இவற்றின் வாழ்நிலை தீவுகளை போலாகிவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் இவை தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன.
தமிழ் நாட்டில் கோடியக்கரை, சத்தியமங்கலம் மற்றும் வல்ல நாடு ஆகிய வனவிலங்கு சரணலாயங்களில் வாழ்கின்றன. வல்ல நாடு வன விலங்கு சரணாலயம் இந்த மான்களுக்கு என்று உருவாக்கப்பட்டது. "வல்ல நாடு வெளி மான்கள் சரணாலயம்" தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது.
சென்ற ஆண்டு, இங்கு நான் ( that is mr satheesh of http://ivansatheesh.blogspot.in/2011/05/) நேரடியாக சென்ற போது, அங்கிருந்த வனத் துறை அதிகாரிகளிடம் பேசினேன். தற்சமயம் வெறும் 20 மான்கள் மட்டுமே அங்கு உள்ளதாக சொன்னார். மான்கள் சரணாலயத்தில் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் மான்கள் இருப்பது மிகவும் வேதனை. இந்த மான்கள் ஒரு சிறிய வனப் பகுதிக்குள் தஞ்சம் அடைந்துள்ளன.
கோடியக்கரைக்கும் வல்ல நாட்டுக்கும் மான்களால் இடம்பெயர முடியாது. இது போன்ற சமயங்களில், குறைந்தபட்சம் அருகில் உள்ள வேறு சில வனப் பகுதிகளுக்கு செல்லும்வகையில் பாதை (Corridor ) அமைக்கப்பட்டால் இவற்றின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது.
=================
rnk
if changing the name to மரைக்காடு would help to conserve and increase the population, we all should welcome that move
----------------------------------------------------------
மறைக்காடு என்பதைப் தப்பாக புரிந்து கொண்டு வேத ஆரண்யம் என்று மொழி பெயர்த்தார் என்றால் எதற்காக தப்பான மொழிபெயர்ப்பைக் கொண்டு நாம் வாழ வேண்டும்? நாம் மறைக்காடு என்றே தூய தமிழில் சொல்லி விட்டுப் போகலாமே. அயலாரின் தப்பான புரிதலை மறுப்பதற்காக நாம் ஏன் 'மரைக்காடு' என மேலும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்? மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தினால் அது அறிவுடைமையா?
2017-08-21 2:30 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, August 19, 2017 at 12:40:02 PM UTC-7, மணிவண்ணன் wrote:எப்படிச் சொல்லுகிறீர்கள்? இது உங்கள் யூகமே அன்றி அறுதியிட்டுச் சொல்லமுடியாதே! ஆய்வென்று வந்தால் ஒரு நேர்மை வேண்டுமன்றோ.என் யூகமே அல்ல. 1930, 1940களில் இருந்து தமிழ்ப்புலமை நடாத்திய அறிஞர்கள் சங்க இலக்கியத்தையும், தேவாரத்தையும் ஆராய்ந்து அறிவித்தமுடிபு மரைக்காடு காலப்போக்கில் மறைக்காடு ஆயிற்று என்பது. சங்க இலக்கியத்தில் மரை தான். பின்னர் மறை என்றாகியுள்ளது.இந்த மரைமான்கள் திருமரைக்காட்டு ஈசனை வழிபடலை தேவாரம் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.தமிழ்ப் புலவர் சொ. ஞானசம்பந்தன் தமிழறிஞர்களின் நெடிய மரபின் வழிவந்தவர். அவர் எழுதுகிறார்:2 - வேதாரண்யம் -- திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சிறு காடு மரைக்காடு என இனிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது. மரை என்றால் மான்;மான்கள் நிறைந்த காடு ஆதலால் அது மிகப் பொருத்தமான பெயர். தாமரை என்னும் சொல்லை, தா + மரை ஆகப் பிரித்துத் தாவுகின்ற மான் என்று பொருள் கொள்ளலாம் என இலக்கணத்தில் படித்திருக்கிறோம்.தமிழ் சரியாய் அறியாத பார்ப்பனர், அதை மறைக்காடு (மறை = வேதம்) எனத் தவறாய்ப் புரிந்துகொண்டு, வேதாரண்யம் என்று மாற்றினர்;வேதம் + ஆரண்யம் = வேதக் காடு!வேதம் என்ன புலியா சிங்கமா, அதற்கு ஒரு காடு ஒதுக்க? கொஞ்சங்கூடப் பகுத்தறிவு இன்றிச் செய்த மொழிபெயர்ப்பு அது! ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் காட்டுக்கும் என்ன தொடர்பு? அடிமை மனப்பான்மை மிக்க தமிழர் அதை எதிர்ப்பின்றி ஏற்றனர்; சிலர் மட்டும் தமிழ்ப் படுத்தியும் திரு சேர்த்தும் "திருமறைக்காடு" என்றனர்; ஆனால் அது அற்ப ஆயுளில் மறைந்து சமற்கிருதப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.இந்த விசித்திர மாற்றங்களுக்கு ஒரு பாலமும் உள்ளானது: சென்னையில் திருவல்லிக்கேணியையும் மய்லாப்பூரையும் இணைக்கிற பாலம் ஹமில்ட்டன் பிரிட்ஜ் என யாரோ ஒரு வெள்ளைக்காரரின் பெயரைக் கொண்டிருந்தது; பாமரர்கள் அதை அமில்ட்டன் வாராவதி என்று அழைத்தார்கள்; காலப் போக்கில் அது அம்பட்டன் வாராவதி ஆயிற்று. ஆங்கில மோகம் உடையோர், பார்பர்ஸ் ப்ரிட்ஜ் என மொழிபெயர்த்தார்கள். ஹமில்ட்டன், பார்பர் ஆனார்! இப்போது பிபி எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது.நா. கணேசன்On Thursday, August 17, 2017 at 12:06:30 PM UTC-4, N. Ganesan wrote:
On Thursday, August 17, 2017 at 7:47:35 AM UTC-7, மணிவண்ணன் wrote:'ற' கர உச்சரிப்பு தமிழகத்தில் மாறியது 300 -400 ஆண்டுகளுக்கு முன் இருக்க முடியாது. அதிலும் தென் தமிழகம் - இன்னமும் ஈழத்தவர் ta எனத்தானே பலுக்கிறார்? அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவாரத்தின் காலம் ஏழாம் ஏன் எட்டாம் நூற்றாண்டு எனக்கொண்டாலும் 'ற'கரத்தை 'ர'கரமாக உச்சரித்திருக்க மாட்டார் தமிழர். தேவாரத்தில் மரைக்காடு என இல்லையே -
ரகரத்தை றகரமாக உச்சரித்துள்ளனர்.
-மணிவண்ணன்
On Thursday, August 17, 2017 at 12:26:26 AM UTC-4, N. Ganesan wrote:
On Tuesday, August 15, 2017 at 12:01:25 PM UTC-7, மணிவண்ணன் wrote:மறை - speckled beast என்ற பொருளும் உண்டல்லவா? ஒருவேளை புள்ளிமானோ?-மணிவண்ணன்.மறு = spots, speckles மால் மணிவண்ணன் மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸம் தமிழில் ”திரு மறு” .எங்கள் ஊர்களில் செம்மறை = செவலை மாட்டில் வெள்ளை மறை (Cf. மறு) கொண்டது.கருமறை = காரி மாட்டில் வெள்ளைமறை கொண்டது. இங்கே பார்க்கலாம்:மறைமான் புள்ளிமானுக்குப் (axis deer, chital) பொருத்தமான பெயர்தான். ஆனால்,பழைய இலக்கியங்களில் இப்பெயர் காணவில்லை.ஆனால், தேவாரம், பின்னர் எழுந்த புராணங்களில் வேதாரண்ய ஈசனைத் தொழுவதுமரைகள் (antelopes) எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். எனவே தான், தமிழறிஞர்கள்மரைக்காடு மறைக்காடு ஆகியது என்று விளக்கியுள்ளனர். புள்ளிமான் என்பதைக்காட்டிலும் மரைமான் (அக்காடுகளின் சிறப்பு) காடுகள். Black bucks are the most importantspecies in Vedaranyam.
கருமரைக் காடுகள் - இதனை வேதாரண்யம் என்று ஆக்கிப் புராணங்கள் செய்தனர்.மரை:மறை வேறுபாடு உண்டு. அதனைப் பயன்கொண்டுள்ளனர்.
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகிலென நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடியிடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகள் ஓடு விழுவன வன மேதிநா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/ycRU-e5Au2g/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
தாங்கள் முதலில் கொண்ட நிலையிலிருந்து கொஞ்சமும் மாறவில்லை திரு. நா கணேசனாரே.அந்த தலத்தில் ஈசனை மரைகள் வணங்கின என்று எந்த தேவார பாடலிலும் இல்லை. அவ்வாறு இல்லாததை இருக்கு என்றே சாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதனால் எந்த பயனும் இல்லை.
ஒரு கருத்தை தீர்க்கமானாதாக ஏற்க வேண்டுமானால் அக்கருத்து பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும். தங்களின் கருத்துக்குப் பதில் கருத்தை முன் வைத்த பெரும்பாலோர் உடன் பட்டு வரவில்லை.ஆதலால் இதனை விட்டுட்டு வேற்று நல்ல வேலையைப் பார்ப்போம்.இது நாள் வரை பல அரிய சான்றுகளை முன் வைத்ததர்க்கு நன்றி.அன்புடன் கமலநாதன்.
புலி (அ) சிங்கம் இருப்பது (புலி) உறைகாடு எனப்படும்.
ஏதாவது கட்டடம் மறைந்திருந்தால், அது (கட்டடம்) மறைகாடு எனப்படும். கட்டடம் மறைக்காடு என்றாகாது.
சங்கப் புலவர் பிசிர் ஆந்தையார் பாட்டுக்கு கவிஞர் சிவசக்தி எழுதிய புதுப்பாட்டு. (அரசியல் பேய்கள்) உறைகாடு என்கிறார்.
உறைக்காடு என வாராது.
http://www.tamilauthors.com/01/454.html
திரு நிறைசெல்வி, புலி உறை காடு, கட்டடம் மறைகாடு ... என வரும். புலிஉறைக்காடு, கட்டடம் மறைக்காடு, ... என இல்லை.
எனவேதான், தமிழறிஞர்கள் ஆக்காடு, புலிக்காடு, எருமைக்காடு, பன்றிக்காடு, அரியமரைக்காடு, .... போல சோழ அரசர்களின் கோடியக்கரை காடுகளில் மரைக்காடு என்பது மறைக்காடு ஆகிவிட்டது என்று எழுதியுள்ளனர். மரை மறை என்றாகும். அவ்வாறு தேவார காலத்தில் ஆனது புராணக்கதைகள் உருவாகக் காரணம். எந்தக் கட்டடமாவது மறைந்திருந்தால் மறைகாடு என எழுதியிருப்பர். தேவாரமும், பின் வந்தோரும் கரு மரைகள் வந்து சிவனை வணங்கும் தலம் என்று பாடியுள்ளனர்.
மரைக்காடு(> மறைக்காடு) - சோழர்களுக்கு உரியது.
பாண்டியர்களுக்கு உரியது ராமேசுவரம் (தனுஷ்கோடி). பாண்டியரின் தொன்முதுகோடி பற்றிய சங்கப்பாடல் :
https://groups.google.com/forum/#!msg/mintamil/4EJMw8I_uzw/n5VeR-0sCgAJ
நா. கணேசன்
> as regard the second issue,. when i write something, there are people here who pounce upon me hinting that i have a hidden agenda in my writing! and they are fair enough to question my tamil origin and my caste! so what is wrong in my mentioning my caste? i have strong views on god, religion, the fancy ideas of astrology and other meta-"sciences", our (i mean indian) constitution, laws, reservations and the regular cinging "whine of suppression for last 2000 years being reversed and redeemed" etc
>
> regards
> rnk
>
நாலுவேதபதி என்ற ஊரில் (கள்ளிமேட்டின் தெற்கே) நாலு வேதங்கள் மனித உருவில் வாழ்ந்தன. மறைக்காட்டுக்கு வந்து
பூசை செய்து பின் கதவை மூடிவிட்டுச் சென்றுவிடும். சம்பந்தர், அப்பர் வந்து மறைத்த கதவை திறந்தனர் என்பது
ஸ்தல புராணம். இதெல்லாம் கதை.
மறை, காடு இரண்டுமே பெயர்ச்சொற்கள். எனவே, வினைத்தொகை அல்ல. வினைத்தொகைகளில் வல்லெழுத்து மிகுவதில்லை. இங்கே, மறை = மரை. மறையை வேதம் எனக் கொண்டு புராணங்கள் எழுந்தன. மரை என்பது மறை என வரும் என்பதை விட்டுவிட்டார்கள். அகத்தியான்பள்ளி : அகத்தியன்பள்ளி (அகஸ்தியம்பள்ளி) என்பதன் பேச்சுவழக்கு. ஆலமரத்தூர் : ஆலாமரத்தூர் என்போம். அதுபோல. அகத்தியான்பள்ளி, மறைக்காடு - இரண்டு பேச்சுவழக்கும் தேவாரத்தில் உண்டு.
மரைக்காடு பேச்சுவழக்கில் மறைக்காடு ஆனது அல்லவா? அதேபோலத் தான் தேவாரத்தில் அகத்தியன்பள்ளி அகத்தியான்பள்ளி என்ற பேச்சுவழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஊர்ப்பெயர் மரவக்காடு. கோயில்பெயர்: அகத்தியன்பள்ளி (> அகத்தியான்பள்ளி), மரைக்காடு > மறைக்காடு போல.
http://www.shivatemples.com/sofct/sct126.php
வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே!
எங்கள் ஊர்ப்பக்கம் மரையூர் உள்ளது. மூணாறுக்கும், உடுமலைக்கும் நடுவே உள்ள ஒரே ஊர் மரையூர் தான். மறையூர் என்றும் எழுதுவார்கள். கி.மு. 500 வாக்கிலேயே உள்ள காவிக்கல்லால் ஆன மான்கள், மரைகள் ஓவியங்கள் இங்கே உள்ளன. வருடாவருடம் ஜீப்பில் மூணாறு போகும் போது இவ்வூரைக் கடந்து செல்வோம். கல்வெட்டு இருக்கிறது. அதில் “ர” தான், தமிழ் வணிகர்கள் மரவூர் என எழுதியுள்ளனர். இந்தக் கல்வெட்டை தென்கொங்கு சதாசிவம், துரை சுந்தரம் வெளிப்படுத்தியுள்ளனர். மரை, மரவி, மராவு என மலைவாழ் மக்கள் மொழிகளில் சொல்லப்படுகிறது. மரவு/மரவி மரைகளுக்கு பழைய பெயர். கன்னடத்திலும், கோண்ட் மக்களும் பயன்படுத்தும் பெயர். மரவு/மரவி (மரை) + ஊர் = மரவூர் எனக் கல்வெட்டில் உள்ளது. ஆனால், மலையாளத்திலும், தமிழிலும் மரையூர் என்றும், மறையூர் என்றும் வழங்குகிறது. கோண்டு இன திராவிட மக்கள் மராவி என்று பெயர் வைப்பர். அவர்களது ஒரு குலப்பெயர் மராவி. (மராவு = Nilgai).
மரைக்காடு (> மறைக்காடு), மரையூர் (> மறையூர்) இரண்டுக்கும் ஒரு தொடர்புண்டு. இரண்டுமே, வறண்ட, மழை மிகக் குறைவான நிலங்கள். அடர்ந்த காடுகள் அல்ல.
Marayoor has the best-quality sandalwood in the world and is the only place in Kerala where it grows naturally. Smuggling of this costly wood is rampant, where a single tree can fetch more than a lakh of rupees.
https://books.google.com/books?isbn=8173197768
S. Ignacimuthu, S. Jayaraj, 2006.
Interestingly, Marayoor, another high land site selected for the study, recorded the lowest overall values of diversity indices and richness. Marayoor is a rain shadow area and receives very low rainfall compared to the other sampling sites.
மரை, மரவு (எனவே, மரவு+ஊர் = மரவூர். பெருவாரியான வழக்கு மரையூர்/மறையூர்), மரைக்காடு (> மறைக்காடு) - dry forests with low rainfall & their hosting of antelopes and deer. பல ஆயிரம் ஆண்டுகளான தமிழ்ப்பெயர்கள் இவை. சங்க இலக்கியத்தால் பெயர்க்காரணம் நன்கு விளங்குகிறது.
Antelopes - Nilgai's horn is the source of Unicorns in Indus Valley art. Ultimately Rishyashringar story. Unicorn myth of India spread to Egypt, Greece and then Christianity. Also, eastward to the Orient, this has been written recently.
But, the names of these antelopes, marai, maraiyaa(n) (= Nilgai), maraavu, maravi in Kannada & Gond dravidian tribal folks having a Kulam named after maravi and maraavi are not well known to India specilists. Both Maraiyuur (Idukki district) and Maraikkaadu (Vedaranyam forest) are low rainfall forests & ancient Tamils aptly named the tiny villages inside the forest after the antelopes and deer that inhabit there.
நா. கணேசன்
மரைக்காடு என்பது மறைக்காடு என்ற பேச்சுவழக்காகி தேவாரத்தில் கதைகளுடன் எழுதப்பட்டது தாங்கள் அறிவீர்கள்.
அதேபோல, அகத்தியன்பள்ளி (அகஸ்தியம்பள்ளி கோயில்) அகத்தியான்பள்ளி என்று மக்கள் பேச்சுவழக்கில் அழைப்பதை சம்பந்தரும் அப்பர் அடிகளும் பதிவுசெய்துள்ளனர். சம்பந்தர் பதிகம் முன்மடலில் கொடுத்தேன். இப்பொழுது அப்பர் குறிப்பது அகத்தியான் பள்ளியை. இது மரவக்காட்டில் உள்ள கோவில். மரவம் = கடம்ப மரங்கள், நெய்தல் திணைக்கு விசேடம். கடம்பர்கள் என்னும் கடற்கரைப் பிரதேச மன்னர்களின் குலச்சின்னம் இந்தக் கடம்பு மரங்கள். ஆதாரம்: பதிற்றுப்பத்து.
https://shaivam.org/tamil/thirumurai/thiru06_023.htm
ஆடல் மால்யானை யுரித்தான் கண்டாய்
அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்
குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்
நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்
நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம்
வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் றானே.
மரைக்காடு, மரையூர் (தென்கொங்கின் சையமலையில் உள்ள ஊர்) இரண்டுமே வறண்ட காடுகள். மரை மான்கள் வசிக்கும் பிரதேசம். மரையூரில் 2500 வருட காவிக்கல்லில் வரைந்த பாறை ஓவியங்கள் மிகுதி. எ-டு:
https://commons.wikimedia.org/wiki/File:Marayoor_Rock_paintings_01.JPG
NG
2017-08-11 12:58 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>://பட்டிமன்றம் என்பது தொன்று தொட்டு வழங்கி வருவது.மக்கள் ஆர்வத்துடன் (பேச்சாளராகவும், பார்வையாளராகவும்) பங்கேற்பது.பொன்னான நேரம் வீணாகிறது என்று கவலைப்படுவோர் எவரும் இது போன்ற விவாத இழைகளைத் தவிர்த்துவிடுவதே நல்லது. //எனக்கும் பட்டிமன்றம்பற்றித் தெரியும்.இது பட்டிமன்றம் அல்ல.இங்கு நடப்பது விதண்டாவாதம்.அதனால்தான் நான் எப்பக்கமும் கருத்துப்பதியவில்லை.
ஒரு அரிசோனன்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Further evidence for the lack of distinction is the ‘folk’ method of distinguishing them, i.e. /r/ (ர ) is referred to as cinna ra ‘small r’, while /r/ (ற) is referred to as periya ra ‘big r’. If there were a real phonetic distinction between the two, there would not be a need for a folk name based on their size. Further evidence for the lack of a phonetic distinction is the fact that many people make mistakes in orthography, using ற when ர is called for, and vice versa.
Many speakers of Tamil claim to make a distinction based on this terminology, but if pressed will admit that they trill /r/ when speaking ‘correctly’ (i.e. when speaking Literary Tamil), but do not do so when speaking spoken Tamil. Other than with speakers of Kanyakumari dialect, therefore, it is very difficult to find non-literate speakers of Tamil who make a phonetic distinction between these two r’s. The distinction therefore seems to be an artifact of literacy. Furthermore, the existence of a “folk” system for referring to them (“small vs. big” r) shows that the failure to distinguish them is a widespread issue; if there were a true phonetic distinction between them, there would be no need for a labeling system based on the size of the graphemes.
~~~~~~~~~~~~~~~~~சென்னை : ""கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும்,'' என அமைச்சர் பெரிய கருப்பன் பேசினார்.
சென்னை தமிழ்க் கணினி மொழியியல் கழகம் மற்றும் "காந்தளகம்' வெளியீட்டகம் சார்பில், ஒலியியல் அறிஞர் புனல் க.முருகையன் எழுதிய "பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு' நூல் வெளியிட்டு விழா சென்னைப் பல்கலையில் நேற்று நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் நூலை வெளியிட, திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டார்.விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில், பன்னிரு திருமுறை ஒலி பெயர்ப்பு நூல் வெளியிடுவது பொருத்தமான நிகழ்வு. கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை மீட்டுத் தருவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
ஞானக் கருவூலமான பன்னிரு திருமுறையை, வேற்று மொழியாளர் அவர் மொழி வடிவிலேயே பயிலும் வகையில் ஒலி பெயர்ப்பு நூல் வெளிவந்துள்ளது. இது தமிழுக்கு ஒரு புதிய வகை இலக்கிய படைப்பு. தற்காலிக கணினி ஆளுமையில், இந்நூல் தமிழுக்கு புதிய பரிமாணத்தைத் தரும்.
இவ்வாறு பெரியகருப்பன் பேசினார்.காந்தளகம் பதிப்பக உரிமையாளர் சத்திதானந்தம் பேசும்போது,""திருமுறைகளை அனைத்து மொழிகளிலும் எடுத்துச் சென்றுள்ளோம். ஏழு மாத உழைப்பில் வந்துள்ள பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல், புது அத்தியாயத்தை ஏற்படுத்தும். தமிழில் 97 ஒலிகள் உள்ளது கண்டறிந்தது வரலாற்றுப் பணி'' என்றார்.
திருப்பனந்தாள் காசித் திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் பேசும்போது,""பன்னிரு திருமுறைகள் ஒலி வடிவம் பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதே நேரத்தில், திருமுறைகளை பயில யாரும் முன் வருவதில்லை.திருமுறைகளை முறையாக கற்றுத் தருபவர்கள் வெகுசிலரே உள்ளனர். திருமுறைகளை கற்றுத்தர ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாமல், இன்னொரு தலைமுறையை உருவாக்க வேண்டும்'' என்றார்.முடிவில் நூலாசிரியர் புனல் க.முருகையன் ஏற்புரை நிகழ்த்தினார். விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மவுன குமாரசாமி தம்பிரான், சென்னைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் தெய்வசுந்தரம், சிங்கப்பூர் சிம் பல்கலை தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன், சிட்னி பல்கலை முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் கந்தையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-----------
சிவன் கையில் உள்ளது கருமான் (இரலை < சிரலை. Cf. இரும்பு < சிரும்பு) எனப்படும் மரை. திருமரைக்காட்டில் (வேதாரண்யம்) வாழ்கின்ற மரைகள். தென்னிந்தியாவிலே அதிகமாக சிவபிரான் கையில் இருக்கிற மரை வாழும் காடுகள் உள்ள இடம் திருமரைக்காடு (வேதாரண்யம்) தான். கறுப்பாக இருக்கும் மரையேறு இது. எனவே, ஆங்கிலத்தில் Black buck என்றும், வடமொழியில் க்ருஷ்ணமிருகம் என்றும் வழங்குவது. இதில் பெண்மான்கள் சிவந்த நிறம் அவை செம்மான் எனப்படும். ’செம்மான் மகளைத் திருடும் திருடன்’ - அருணகிரிநாதர். பெரும்புலவர் மறைக்காட்டில்/மரைக்காட்டில் வாழும் இந்த மான்களையும், ஈசனையும் பாடியுள்ளார்.சிறந்த புத்தகம்:
Field Days: A Naturalist's Journey Through South and Southeast Asia
pg. 38:"Great Vedaranyam Swamp in the north and west. Calimere boasts the last 'large' patch of tropical dry evergreen forest in our country. In addition to nearly 2000 blackbuck - the largest population in south India - chital, wild pigs, hares, bonnet macaques, jackals, jungle cats, civets and grey mongoose make this forest their home.Calimere is well known among ornithologists, ..."
--1967-ல் திருமரைக்காட்டில் சிறப்பாக வாழும் மரைகளைக் காப்பாற்ற வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மரைகள் வாழும் காடுகள் மிகுந்த இடம் திருமரைக்காடு என்னும் வேதாரண்யம் தான். மரை என்ற பெயர் திராவிட மொழிகளில் எப்படி ஏற்பட்டது என்றும் நான் தொடங்கிய இவ்விழையில் சொல்கிறேன்.நா. கணேசன்திரு மரைக்காடு - where Mustangs roam-------------------------------மரைகள் நிறைந்த மரைக்காடு (antelope forest). மரை இனத்தை மறை என்றும் எழுதுதல் உண்டு. மொழிபெயர்ப்பில் பிழை ஏற்படுவது இயற்கை. மரைக்காடு மறைக்காடு எனப் புரிந்துகொள்ளப்பட்டு வேதாரண்யம் எனப் புராணக்கதைகள் கட்டப்பட்டன. வேதம் எதற்குக் காட்டுக்கு வருகிறது? - எனச் சிந்தித்த தமிழறிஞர்கள் அவ்வூர் இயற்கையைக் கொண்டு ஊர்ப்பெயரை 1940களில் தொடங்கி விளக்கலாயினர். தஞ்சை மாவட்டத்திலேயே பெரிய காடுகள் இன்றும் இருப்பது திரு மரைக்காட்டின் அருகேதான். மஸ்டேங்க்ஸ் திரிகின்ற வனமும் அஃதே. அமெரிக்க மஸ்டாங்ஸ் போல, இந்திய மஸ்டாங்ஸ் உள்ள காடு மரைக்காடு (= வேதாரண்யம்).மறை என்ற சொல்லுக்கு வேதம் என்று நான்கு மறைகள் எனவும்,கதவு மறைக்கிறது என்றும் இருபொருளாலும் ஏற்பட்ட புராணக் கதையைத் தேவாரத்தில் வாசிக்கலாம்.சைவ சித்தாந்தம் நன்கு கற்றோர் சிவபிரான் வேதங்களை ஓதுதலைத்தேவாரத்தில் இருந்து காட்டியுள்ளனர்.ஆனால், பழைய பெயர் மரைக்காடு என்பதனை புலவர்கள் 1940களில் இருந்து விளக்கி,அவ்வூர் மக்கள் மரைக்காடு, திருமரைக்காடு எனப் பயன்படுத்துகின்றனர்.புராணங்களை விட்டு தமிழ் தன் பழைமையைப் புரிந்துகொண்டுவளர்கிறது என்பதற்கு திருமரைக்காடு என்று பயன்படுத்துதல்நல்ல சான்றாகும்.மரையூர் - என்ற அழகான ஊரில் மரைகள் இருப்பதைக் கற்கால ஓவியங்களில்இருந்து இன்றுவரை காணலாம். மரைக்காட்டிலும் அவ்வாறே.மரை ‘antelope' தமிழில் மறை என்றும் எழுதப்படும்.சென்னைப் பேரகராதி:மறை&sup6; maṟai, n. [T. mara.] 1. See மரை¹, 5, 6. 2. Spiral of conch; சங்கின் முறுக்கு. (யாழ். அக.)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
On Friday, August 4, 2017 at 9:42:35 AM UTC-7, தேனீ wrote:சிந்தாமணி நிகண்டில், நெய்தல் தலைவன் செப்பும் ‘மரவமே ஞாழல்’ என்று கூறப்படுகின்றது. மரவம் என்பதற்கு குங்கும மரம் என்று பொருளும் கூறப்பட்டுள்ளது.
சிந்தாமணி நிகண்டு சென்ற நூற்றாண்டு நூல். மரப்பெயர்கள் மறந்த காலம்.ஞாழலும் மரவமும் ஒன்றல்ல என்பதனைப் பழம் நூல்கள் காட்டுகின்றன.விரவி ஞாழல், விரி கோங்கு, வேங்கை, சுரபுன்னைகள்,மரவம், மவ்வல், மலரும், திலதை(ம்) மதிமுத்தமே. - சம்பந்தர்கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில்:56. ஞாழல்57. மௌவல்58. கொகுடி59. சேடல்60. செம்மல்61. சிறுசெங்குரலி62. கோடல்63. கைதை64. வழை65. காஞ்சி66. கருங்குவளை (மணிக் குலை)67. பாங்கர்68. மரவம்etc., இது போல பல பாடல்களில் ஞாழல் (பலுனி, பிரியங்கு), மரவம் (கடம்பு வகைகள் - Indian oak tree species)வேறுபடுத்திப் பாடியுள்ளனர்.மரவத்தின் பெயர் வைக்க மரவக்காடு என்றே சொல்லியிருப்பர். ஏன் மரைக்காடு/மறைக்காடு?மரைக்காடு அருகேயே மரவக்காடு (அகத்தியான்பள்ளி) திருத்தலமும் உள்ளதே. மரவம் = கடம்பு வகைகள்.(கடம்பு, வெண்கடம்பு, செங்கடம்பு, மஞ்சட்கடம்பு, நீர்க்கடம்பு, வெள்ளைக்கடம்பு, ... Indian oak trees).
முனைவர் திரு. நா. கண்ணன் அவர்கள் பதிவேற்றிய கருத்துக்கு இப்பதிலே போதுமானதாகும். ஆனாலும் அவர் பேரா. ரா.பி. சேதுபிள்ளை அவர்களை மேற்கோள் காட்டி ‘மரைக்காடு’ என்பதே சரியான பொருளாகும் என்று கூறியதால் அதற்கும் ஒரு விளக்கத்தை முன் வைக்க வேண்டியுள்ளது.
பேரா. ரா.பி. சேதுபிள்ளையை மேற்கோள் காட்டி பாவாணரும் அது அக்காலத்தில் மான்கள் வாழ்ந்த காடு என்பதால், ‘மரைக்காடு’ என்பது ஆரியர் வருகைக்குப் பின் ‘மறைக்காடு’ என்று திரிந்ததாக அவர்தம் நூலில் கூறியுள்ளார்.
இவ்விரு தமிழ் அறிஞர் வாழ்ந்த காலம் கடந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் தொடங்கியது. தமிழ் மொழி அயலார் மொழியின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுக்கத் ‘தமிழ் மறுமலர்ச்சி இயக்கம்’ ஆரம்பித்தக் காலத்தவர். இவ்விருவரும் அவ்வியக்கத்தின் முன் அணியில் நின்றவர். இதற்கு காரணம் அவர்தம் புண்பட்ட மனமே. இவ்விருவரில் பாவாணர் பிந்நாளில் திராவிட பாசறையில் வளர்ந்தார்.
அக்காலத்தில் ‘மறை’ என்றாலே அச்சொல் சைவ தென்புல வைணவத் திருமுறைகளில் வேதத்தைக் குறிக்கும் என்ற கருத்து அயலார் மொழி சார்புடையோரிடையே இருக்கமாகப் பற்றிருந்து வந்துள்ளது. வைணவ பிரபந்தத்தில் ‘மறை’ என்னும் சொல் வேதத்தைக் குறித்தது என்றால் அதனை நான் மறுக்கமாட்டேன். ஆனால் அதே நிலை தென்னாடுடைய சைவத்தின் மேல் ஏற்றுவது பொருந்தாது காரணம் தென்னாடுடைய சைவத்திற்கு வேதமும் ஆகமும் இறைவன் அருளிய சுருதி நூலாகும். ஆகையால் ‘மறை’ என்ற சொல் வேதம் ஆகமம் ஆகிய இரண்டையுமே குறிக்கும். இவ்விரண்டு நூலுமே அயலார் மொழியில் இருந்ததால் அதுவே அக்கால தமிழறிஞரின் வெறுப்புக்கு ஆளாகியது. மேலும் இவை வர்ணாசிரமத்தை ஏற்பன. ஆகையால், ‘மறை’ என்பது வேதமானாலும் சரி ஆகமமானாலும் சரி இரண்டையும் ஏற்பதில்லை என்று முழு மூச்சில் அவற்றை விலக்குவாரானார் அக்கால தமிழ் பற்றுடைய தமிழ் அறிஞரில் ஒரு பகுதியினர்.
அதன்காரணமாகவே பேரா. சேதுபிள்ளையும் சரி பாவாணரும் சரி ‘மரைக்காடு’ என்பதை அவர்தம் ஆரூடமாகவே கூறினாரே ஒழிய அதற்கான உண்மைச் சான்றுகளை முன் வைக்க இயலவில்லை.
திருஞானசம்பந்தர் ‘வண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே’ என்று பாடியதில் ‘மாமறைக் காடு’ என்பதனைப் ‘பெரிய காடு’ அல்லது ‘சிறந்த காடு’ என்று பொருள் கொள்வோமா அல்லது ‘பெரிய மான்’ அல்லது ‘சிறந்த மான்’ என்று பொருள் கொள்வோமா? கல்விமான்களைச் சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.
ஒட்டு மொத்த கருத்தாக ‘மறைக்காடு’ என்பதே நூல் ஆதாரத்தின் வழி பொருந்தும் மாறாக ‘மரைக்காடு’ என்பதற்கு நூல் ஆதாரமில்லை என்பதால் அதை விடுத்து ‘வேதாரண்யம்’ ‘திருமறைக்காடு’ என்று தன் இயற்பெயரில் விளங்குவதே சிறப்பாகும். சிவசிவ.
சிவபிரான் வேதம் = மறை ஓதுபவன் என்று ஆயிரக் கணக்கான பாடல்கள்தமிழ் இலக்கியத்திலே உள்ளன. அதனால்தான் பழந்தமிழர் 7-ஆம் நூற்றாண்டில் இருந்துமறைக்காடு = வேதாரண்யம் என்கின்றனர். ஆனால், நாம் பார்ப்பது சங்க காலப்பெயர் எதுவென.ர/ற மாற்றம் பல இடங்களில் நிகழ்வது. கொங்குநாட்டில் உடுமலை - மூணாறு நடுவழியில் மரையூர் உள்ளது.பலரும் மறையூர் என எழுதுகிறார்கள். நாகை அருகேயும் மரையூர் உண்டு.மரை (antelope) என்றாலே பொருள் மறந்த நிலையில் இவ்வாறு ரகர றகர திரிபு இயற்கை.இறாமசாமி, றாமசாமி, றங்கணன், சீறங்கம், ... என்றெல்லாம் ஓலைச்சுவடிகளில்,கல்வெட்டுகளில் காணலாம்.ஆர்க்காடு = ஆத்தி மரக் காடு. ஆற்காடு ஆகி, ஆறு (6) என எடுத்து ஷடாரண்யம் என
மொழிபெயர்த்தனர். இதனைக் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். ஏர்க்காடு - ஏற்காடுஎனப் பிழைபட எழுதுகின்றனர்.வேதாரண்யம் பகுதி மரைகளுக்குச் சிறப்பான பகுதி - தமிழ்நாட்டிலேயே.ர/ற மாற்றத்தை உணராமல் மறைக்காடு என்று கொண்டு வேதாரண்யம் என ஆயிற்று.பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூர் - தேவாரம். இதன் பழைய பெயர்பெண்ணைநல்லூர் என்பது தெளிவு. எழுத்துச் சான்று வெண்ணெய்நல்லூர்,எனவே, வெண்ணெய் புராணங்களை அப்படியே எடுத்துக்கொள்வதா??பெண்ணைநல்லூர் (> வெண்ணைநல்லூர்) பழம்பெயர் என்பதுபோல, மரைக்காடு (> மறைக்காடு) பழம்பெயர்.வேதாரண்ய புராணம் மறைக்காடு என்ற பெயரை வைத்து உருவானது.கதவு மறைத்திருந்ததாம். பாடல் பாடத் திறந்தது என்கிறது பெரியபுராணம்.திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப்பட்டிருந்த தென்றும்,கண்ணினால் உமைக்காணக் கதவினைத்திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும்மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும்.நா. கணேசன்
2017-08-04 11:25 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:> மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயு மறைக்காட்> டிரவு மெல்லியும் பகலும் ஏத்துதல் குணமென லாமே” (2:91:5)பொழிப்புரை: குங்கும மரங்கள் நீண்டுயர்ந்த சோலைகளில் வண்டுகள் யாழ் போல இசைதரும் திருமறைக்காடாகும் . அங்குள்ள பெருமானை இரவும் பகலும் ஏத்துதலே குணமாகும்
> குங்கும மரங்கள் அடர்த்தியானவை. இது நான் மலேசியாவில் கண்ட அளவுக்குச் சொல்கிறேன். இத்தகைய மரங்கள் நீண்டு உயர்ந்து வளர்ந்த சோலையில் கதிரவனின் ஒளிக்கதிர் தரையில் படா வண்ணம் மறைத்து நிற்கும். அத்தகைய சோலையில் கதிரவன் ஒளிகற்றை மறைக்கும் தன்மையால் காரணப்பெயராகி மறைக்காடு என்று பெயர் பெற்றது என்றால் அது பிழையாகுமா?
புதிய சிந்தனை. நீங்கள் மலேசியாவில் காண்பது குங்கிலிய மரக் காடுகள் என நினைக்கிறேன். அவை Shorea இன மரங்கள். கேரளாவில் அதிகம் உண்டு.
மரவம் என்பது குங்கும மரம். குங்கும மரம் = Saffron tree. இது காஷ்மீரத்தில் உள்ள மரம். தமிழ்நாட்டுக் கடற்கரையில் இல்லாதது. தேவாரத்தில் உள்ள மரவ மரம் = கடம்பு மரம். வெண்கடம்பு. இது ஊர்ப்பெயர் என்றால் மரவக்காடு என்று இருக்கும். கடப்பங்காடு, கடம்பவனம் என்றும் வரும். அப்பெயர்கள் மறைக்காட்டுக்கு இல்லை. தமிழ்நாட்டிலேயே ஒருவகை மரைகள் (antelopes) மறைக்காட்டில் தான் மிக அதிகம். எனவே தான்,
மரைக்காடு மறைக்காடு ஆனது என பேரா. ரா. பி. சேதுப்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர். கடம்பவனம்/கடப்பங்காடு = மதுரைக்கு ஒரு பெயர்.
நா. கணேசன்
பேரா. தி. நெடுஞ்செழியன், 2008-ல் தினமணிக்கு எழுதிய கடிதம்:
https://groups.google.com/forum/#!msg/mintamil/vAB9A-DmoNY/u8TTLGpoaaMJ
திருமறைகாடு வேண்டாம் - மரைக்காடு வேண்டும்
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்
Post-Scriptum
Interestingly, there is a place called
அறியா மறைக் காடு
Ariyamaraikadu, Tamil Nadu 614616, India
| 071 | பிடாரிக்காடு |
| 072 | மேல்மங்களம் |
| 073 | அரியாமரைக்காடு |
| 074 | சீனமங்களம் |
| 075 | களக்குடி |
at location:
https://www.google.de/maps/@10.1492914,79.1061254,15.25z
See screen shot.
-- jlc
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
########################
Dear Sir,
greetings from Hamburg (Germany).
As a small contribution to this debate,
here is a list of villages in TN which have "kadu" in their names
I have just extracted it from a list of
"List of the 16300 Revenue Villages for Tamil Nadu in december 2000"
which I had compiled long ago while working on the "Digital Tevaram" CD
based on some T.Nadu information data bases
of the {National Informatics Center (NIC), Tamil Nadu State Unit}
(online at that time).
I don't have a personal opinion on the debate concerning மரை / மறை
-- Jean-Luc Chevillard
https://univ-paris-diderot.academia.edu/JeanLucChevillard
https://twitter.com/JLC1956
########################
---------- REVENUVI.HTM
...........................
<li>Aravankadu [[Villupuram_DISTRICT: Sankarapuram_TALUK]]
<li>Ariyamaraikadu [[Pudukkottai_DISTRICT: Aranthangi_TALUK]]
<li>Asaveerankudikkadu [[Ariyalur_DISTRICT: Sendurai_TALUK]]
............................