---------------------------------------------
திருப்புகழ் பதிப்பாசிரியர் ஸ்கந்தஸ்ரீ வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், பின்னர் அவர் திருமகன் தணிகைமணி அவர்களும் கிடைத்த திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரிய தலங்கள் யாவை என்னும் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். சிலவற்றின் இடங்கள் விளங்கவில்லை என்றும் தணிகைமணி குறிப்பிட்டார்கள். சிலவற்றுக்குப் பிழையான இடங்கள் கூறப்பட்டன, பெயர் ஒத்துவருவதால். உ-ம்: கோடை மாநகர். இதனைக் கோடம்பாக்கம் என்று முதல் திருப்புகழ்ப் பதிப்புகளில் காணலாம். பின்னர்தான் தெரிந்தது: கோடை நகர் என்பது வல்லக்கோட்டை என்று. இதனைக் குறிப்பிட்டுச் சரிசெய்தனர் தணிகைமணி யவர்கள். இவைபோல் பல. பம்மல் சம்பந்த முதலியார், திருப்புகழ் ஸ்தலங்கள், பிற சுப்பிரமணிய ஸ்தலங்கள் பற்றி ஒரு நூல் இயற்றினார்.
http://www.tamilvu.org/library/nationalized/pdf/22-pammalk.sambandam/50-subramanyashrines.pdfஇதில் ”திருப்புகழ் பெற்றது” என்று பல ஊர்களைச் சொல்கிறார். ஆனால், எந்தத் திருப்புகழ் (உ-ம்: முதல் அடித் தொடக்கச் சொற்கள்) தரவில்லை. எனவே, சிக்கல்கள் உள்ளன. மேலும், அவர் குறிப்பிடும் தலங்கள் பலவற்றுக்கும் திருப்புகழ் காணோம். சில திருப்புகழ் ஸ்தங்கள் உள்ள இடங்கள் பிழையாகத் தரப்பட்டுள்ளன.
தணிகைமணி அவர்களுக்குப் பின்னர், அருணகிரிநாதர் அடிச்சுவட்டில் பயணித்த வலையப்பேட்டை சகோதரர்கள் அமரர் இரா. ராமசேஷன், அவரது இளவல் ரா. கிருஷ்ணன் சில முக்கியமான ஆய்வுகளைச் செய்து திருப்புகழ் தலங்கள் சிலவற்றின் இட நிர்ணயத்தை நிச்சயித்துள்ளனர். உதாரணங்கள் சில பார்ப்போம்.
http://murugan.org/research/rakrishnan.htmயார் மொழிபெயர்த்தது எனத் தெரியவில்லை. பல பிழைகளுடன் தமிழில்,
http://murugan.org/tamil/rakrishnan.htm(இதனை திரு. ரா. கிருஷ்ணனிடம் திருத்திப் பெற்று, பேட்ரிக் ஹாரிகனிடம் கொடுத்து மாற்றணும். பேட்ரிக் யாழ்ப்பாணம் -கதிர்காம யாத்திரை ~ ஆண்டுதோறும் சுமார் 30 வருஷங்கள் _ செய்தவர். ஹுஸ்டன் மீனாட்சி கோவிலில் அவரது கதிர்காமம் பற்றிய சொற்பொழிவை முன்பொருமுறை ஏற்பாடு செய்தேன்.)
‘திருப்புகழ் அமுதன்’ வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் அவர்களால் தெளிவான திருப்புகழ் ஸ்தலங்களிற் சில:
(1) வாகை மாநகர்:
”Vakai Manakar: Tiruvaloliputtūr the abode of Lord Śiva, praised by Tiru Jñāna Sambandhar and Sundarar in Tēvāram hymns, is currently known as Tiru Valapattūr.25 This place is near Pantanallūr and 16 kilometres away from Mayilatuturai. It is interesting to note that a vakai tree is the sthala vrksam; hence Arunagirinathar refers to this place as Vakai Manakar (for Tirukkalimunram). The sthala vrksam is the plaintain, which Arunagirinathar refers as katali vanam (katali means plaintain).26 Likewise this place has been referred as Vakai Manakar. Mahāvidvān Śrī Mīnaksisundaram Pillai (of Tiruvāvatuturai Atīnam) has written the sthala purānam for Tiruvallōliputtūr in which he refers to this place as Vakaimanakar. The temple is dedicated to Lord Ratnapurīsvaran. Hence one may conclude that this place is the Tiruppukal shrine. "
http://www.kaumaram.com/thiru/nnt0990_u.html"வாகை மாநகர் செய்யார் அருகே திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவோத்தூர் வட்டத்தில் உள்ளது." - இப்படி ஓர் ஊரில் பழைய முருகன் கோவில் இல்லை. பெயர் ஒப்புமையால் இப்படி எழுதினார் பம்மல் சம்பந்தம்.
எனவே, ரா. கிருஷ்ணன் குறிப்பிடும் திருவாளொளிபுத்தூர் என்னும் வாகை மாநகர்க்கான திருப்புகழ் இது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வாக்கால் இது தெளிவு. இவ்வாறு திருந்திய வாகை மாநகருக்குச் சென்ற சித்ரா மூர்த்தியின் கட்டுரை:
http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4674&id1=53&id2=0&issue=20180801(2) விசூர் - விசுவை - திருப்புகழ்.
Vicuvai: This place was identified as Vicūr near Uttimērūr in Kanchipuram District.20 Here there is a temple for Śrī Agastīcuvarar-Akilantēcuvar. Here the Goddess shows her visvarūpa and hence this place is known as Vicuva Manakar, which is short-formed as 'Vicuvai'. There is a beautiful idol of Murukan with Valli and Teyvayānai. The epigraphy inscriptions of King Rāja Rāja I (AR 387 of 1923) have been deciphered in this temple. There is no other place by the name Vicūr or Vicuvai in our survey and hence this place should be regarded as the Tiruppukal shrine. (வலயப்பேட்டை ரா. கிருஷ்ணன்).
http://www.kaumaram.com/thiru/nnt0991_u.htmlஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம் எல்லாம் பொருந்தவில்லை. விசாகப்பட்டினம் விசாகை எனத் தமிழில் குறுகும். விஜயவாடா = விசயப்பாடி.
எனவே, திருப்புகழ் அமுதன் குறிப்பிடும் விசூர் எனும் தலம் விசுவைத் திருப்புகழ் பெற்ற தலம் ஆகும். விசுவ மாநகர் ஊரில் இருப்பது அகத்தீஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி. இதே போல, கந்தனூர் திருப்புகழில் (தாராபுரம் எனும் ஸ்கந்தபுரம்) அகில, அண்ட, விசுவரூபமான அம்பிகையைப் பாடியுள்ளார். கந்தனூரிலும் (தாராபுரம்)
அகத்தீஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி தான்.
https://arunagiritemples.wordpress.com/2019/01/03/64-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/http://thirupugazhtemples.blogspot.com/2018/12/blog-post_28.html(3) கரபுரம்:
"Karapuram: There are three Tiruppukal songs ending with the reference to Karapuram and two songs with Virinjai or Vrincipuram. Tanikaimani opines that both Karapuram and Vrincinipuram are one and the same. There is a reference in Tiruvirincai Murukan Pillait Tamil by Marga Sahaya Devar that Vrincnipuram has been referred to as 'Karapuram' or 'Karapuri' and also in Vruncapuram Stala Purānam . But in our study we have established the present 'Tirupparkatal' near Kaveripakkam in Vellore District as 'Karapuram'. This temple known as "Karapurees Warar Temple" has the inscription of Partaventirati Verman (957-970 BC) who refers the Lord as Karapurattu Perumanatikal.10 Hence as per the present Tiruparkatal village should be the 'Karapuram' worshipped by Saint Arunagirinathar. The Śanmukha on peacock with Valli and Teyvāyanai seated on both sides at Karapurīcurara Temple is quite interesting to see as worshipped by Saint Arunagirinathar." (R. Krishan)
http://kaumaram.com/thiru/nnt0669_u.htmlhttp://aalayangal.blogspot.com/2012/07/blog-post.html (இதில் உள்ள கல்வெட்டில் (கி. பி. 2000) “உத்தம வேள்” உள்ள கரபுரநாதர் ஆலயத் திருப்புகழ்ப் பாடல் இல்லை என்பது சிறப்பு.
இன்னொரு பழைய கரபுரம் சேலத்தின் அருகே, மணிமுத்தாறு நதிக்கரையில் இருக்கிறது. சுவாமி பெயர்: கரபுரநாதர். உத்தமசோழபுரம் என்பது ஊரின் பெயராக உத்தமசோழன் காலத்தில் ஆகியுள்ளது. கரபுரம் -உத்தமசோழன் தொடர்பால் இத் தலத்துத் திருப்புகழில் “உத்தம வேள்” என்று முருகனைப் பாடியுள்ளார்.
http://www.kaumaram.com/thiru/nnt0668_u.htmlhttp://kaumaram.com/thiru/nnt0671_u.htmlஇரையு முததியிற் கடுவை மிடறமைத்
துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
திலகு பெறநடிப் பவர்மு னருளும் உத்தமவேளே
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
தவனி தனிலெழிற் கரும முனிவருக்
கினிய கரபுரப் பதியில் அறுமுகப் ...... பெருமாளே.
சைவ சித்தாந்த மகாசமாஜப் பதிப்பில், கரபுரம் பற்றிய 10 பாடல்களில், அறுமுகப் பெருமாளே என்று முடிவனவற்றை,
“உத்தம வேள்” எனப்போற்றும் உத்தம சோழபுரத்தின் கரபுரநாதர் என்று கொள்ளுதல் சிறப்பு.
(4) பெருங்குடி - தொலைபேசியில் பேசும்போது திரு ரா. கிருஷ்ணன் வயலூர் அருகே உள்ள தலம். வீர வல்லாள ராசனின் கல்வெட்டு உள்ள
முற்காலச் சோழர் தலம் என விளக்கினார். திருப்புகழைப் படித்தால் அதுவே பொருத்தம். தணிகைமணி அவர்கள் குறிப்பிட்ட சென்னை
அருகே உள்ள பெருங்குடி அன்று என்று தெளியலாகும்.
https://www.vikatan.com/spiritual/temples/151656-series-about-arunagirinatharhttps://arunagiritemples.wordpress.com/2020/02/09/128-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/http://www.kaumaram.com/thiru/nnt0700_u.html(5) கீரனூர் -
“Kīranūr: Tanikaimani refers to Kīranūr near Palani on the way to Dharapuram as the Tiruppukal shrine.16 But in our findings there is no cannatti of Lord Murukan in this Kīranūr Temple. We have identified are Kīranūr near Mayilatuturai (near Tiruppariyalūr, one of the famous astavrata sthalams where the presiding deity is known as Śivalokanāthar and His consort Bālambāl alias Ksīrambāl.17 This temple is of Chola period. Ksīram means milk. In Tamil it is written as kīram. The goddess of this temple known as Ksīrambāl means Goddess of Milk and the place is known as the place of milk Ksīranūr or Kīranūr. There is also the episode of Tiruppālkatal (Sea of Milk) described in the Kīranūr Tiruppukal as an added proof for our contention.” (திருப்புகழ் அமுதன்)
http://kaumaram.com/thiru/nnt0952_u.htmlகீரனூர் பழநிக்கு வடக்கே 10 மைலில் தாராபுரம் செல்லும் வழியில் உள்ளது. கொங்குநாட்டின் புராதனமான கோவில்களில் ஒன்று
கீரனூர். அனைத்து மன்னர்களின் கல்வெட்டுகளும் உள்ள சிவாலயம். இங்கே மகாமண்டபத்தில் உள்ள முருகனைப் பாடியுள்ளார்
என தணிகைமணி அவர்கள் குறிப்பிடுவதன் காரணம், ஏடுகளில் இப்பாடல் இடம்பெறும் ஸ்தலமுறை ஆகும். கொங்குநாட்டு
ஊர்களுக்கான பாடல்களைக் கோர்த்து, அதன்பின்னர் பாண்டிநாட்டு ஸ்தலங்கள் வருகின்றன. கொங்குநாட்டு ஊர்களின்
கடைசியாக வருவதால், சோழநாட்டு ஸ்தலம் அன்று என்று தணிகைமணி கொண்டிருக்கிறார். பாடலும், கீரனூர்
ஸ்தலபுராணத்தை ஒட்டி அருணகிரிநாதர் பாடியுள்ளார். அம்பாள்: அமிர்தகரவல்லி. அமிர்தகரவல்லி ஸமேத ஆதிநடேசுவரஸ்வாமி
திருக்கோவில். இவ்வூரின் மலை “கொண்டலிறங்கி” மலை சிவலிங்கம் போல் இருக்கும். மஞ்சு தவழ் மாமலை என்னும் இலக்கிய
வழக்கை ஓர்க. அடிவாரத்தில் விஜயநகர கால மல்லிகார்ஜுனர் - பிரமராம்பிகை கோவில் உள்ளது. ஆனால், பழமையான கீரனூர்
சிவாலயத்தில் உள்ள முருகனைத் திருப்புகழ் துதிக்கிறது. அமிர்தம் கடைந்து பாற்கடலை எடுக்கையில் ஆலகால
விஷத்தை உண்டு தேவர்களைக் காத்து, அமிர்தம் அமரர்களுக்குக் கிடைத்தபோது நடம் ஆடியவர் ஆதிநடேசர்.
அம்மன் அமிர்தகரவல்லி. எனவே, கீரனூர் திருப்புகழ் இந்த ஸ்தலபுராணத்தை, பாற்கடல் கடைந்ததும், அதன் நடுவே
கூர்மத்தின் மேலே அமர்ந்த விஷ்ணுவின் மருகோனே என அழைக்கிறார்:
பாதி வாலிபி டித்திட மற்றொரு
பாதி தேவர்பி டித்திட லக்ஷுமி
பாரி சாதமு தற்பல சித்திகள் ...... வருமாறு
கீர வாரிதி யைக்கடை வித்ததி
காரி யாயமு தத்தைய ளித்தக்ரு
பாளு வாகிய பச்சுரு வச்சுதன் ...... மருகோனே
(6) நிம்பபுரம்
”Nimbapuram: Nimba, a Sanskrit word, means 'Vembu' (Neem) and hence Tanikaimani identifies this place as Veppūr. He also refers to another information that there is a place as 'Nimbapuram' near Hampi, the capital of the famous Vijayanagar Empire. This village has been the victim of the fury of the river Godavari and reduced to paddy field by the floods, one hundred years ago.2 There is no temple at present.”
ஆம். நிம்பபுரம் என்பது ஹம்பி (< பம்பி. பம்பை ஆறு ஓடும் பகுதி. வ்ரூபாக்ஷநாதஸ்வாமிக்கு பம்பாநாதர் என்ற திருநாமம்)யின் பகுதி தான். ‘அதல சேடனாராட’ என்னும் திருப்புகழில் அருணகிரியார் ‘பிரபுட தேவ மாராசன்’ எனக் குறிப்பிடும் இம்மடி தேவராய மகாராசாவின் கி.பி. 1450-ம் ஆண்டுக் கல்வெட்டு கிடைத்துள்ளது. இங்கே, கோதாவரி இல்லை. துங்கபத்திரை ஆறு தான் பெரிய ஆறாக உள்ளது.
https://en.wikipedia.org/wiki/Tungabhadra_River#/media/File:Karnataka_topo_deu.pngVijayapuram of Tiruppukazh is at the beginning area of Tungabhadra river.
Further downstream is Nimbapuram (Hampi). East of Hampi is Kamathur (Kumaraswamy male).
All the three have beautiful Tiruppukaz songs.
நிம்ப- (நிம்பபுரம்) சொல்லாய்வு:
-------------------------
நீம்-/நீவ்- என்னும் வினைச்சொல் திராவிட மொழிகளில் உள்ளது. வெயில் காலத்தில் பூத்து மலர்ந்து, பச்சிலைகள் தருதலால், வே-வேப்பு/வேம்பு எனப் பெயர். வேப்பிலை நோயாளிகளுக்குப் பூசாரிகள் சிறகடித்து நோயைக் குணமாக்குதலிலும், அம்மனைக் கும்பம் தாளித்து ஆற்றிலிருந்து எடுத்துவந்து அலங்கரிப்பதிலும், பொங்கல், மணவிழா, ... போன்றவற்றின் காப்புக்கட்டுதலிலும் முக்கியமானது. அம்மை வார்த்தால் வேப்பிலைதான் பிரதானம், எனவே, மாரியம்மனின் சின்னமாக வேம்பும், இலையும். நோயாளியை வேப்பிலைகொண்டு நீவுதலால், நீவு-/நீமு- எனும் வினை குறுகி நிம்மு-/நிம்பு- (Cf. அம்மா > அம்பா) எனப் பெயர்ச்சொல் பிறக்கும். எனவே, நீம்/நிம்ப எனும் வேப்ப மரத்தின் ஸம்ஸ்கிருதப் பெயர்கள் த்ராவிடபாஷைகள் தந்தவை எனலாம். பாண்டிய மன்னன் குலமரம் வேம்பு. வேப்பந்தார் அணிபவன் தென்னன் என்னும் பாண்டியராஜன். நிம்பூ என எலுமிச்சை இனமும், நிம்ப- என வேம்பு இனமும் ஒரே பெயராக அழைக்க, அதில் உள்ள கசப்பு முக்கியக் காரணம். இரண்டு தாவரக் குடும்பங்களிலும் உறவுடைய வேதிப்பொருள்கள் விளைகின்றன:
https://en.wikipedia.org/wiki/LimonoidCologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary
Nimbū (निम्बू):—[from nimba] m. the common lime, Citrus Acida ([varia lectio] nisbū), [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]
https://www.wisdomlib.org/definition/nimbuநிம்பபுரம், செம்பேடு (செஞ்சி), இந்தம்பலம், சிறுகூர், கொண்டலிறங்கி கீரனூர் (பழனி அருகே), கொடும்பை (கொடுமளூர் - பரம்பைக்குடி சமீபம்) போன்ற அரிய திருப்புகழ் தலங்கள் பற்றியும் பார்ப்போம். முதலில், கந்தனூர் (ஸ்கந்தபுரம்/காந்தபுரம் - கங்கர்கள் ஆண்ட தலைநகர்: கொங்கூர், தாராபுரம்) திருப்புகழ்.
கர்னாடகத்தில் உள்ள மூன்று திருப்புகழ் தலங்கள்:
காமத்தூர் - திருப்புகழ்:
https://groups.google.com/g/houstontamil/c/jRxIa0gT-Hg/m/BWpV3tbbBQAJhttps://groups.google.com/g/vallamai/c/CjFAGypU51o/m/2zCjw4czAQAJவட விஜயபுரம் - திருப்புகழ்:
https://groups.google.com/g/houstontamil/c/Xv85uxvg58I/m/qdh9sE2lAQAJhttps://groups.google.com/g/houstontamil/c/Xv85uxvg58I/m/xP3uXNPzAQAJநா. கணேசன்
http://nganesan.blogspot.com