நீம்-/நீவ்- என்னும் வினைச்சொல் திராவிட மொழிகளில் உள்ளது. வெயில் காலத்தில் பூத்து மலர்ந்து, பச்சிலைகள் தருதலால், வே-வேப்பு/வேம்பு எனப் பெயர். வேப்பிலை நோயாளிகளுக்குப் பூசாரிகள் சிறகடித்து நோயைக் குணமாக்குதலிலும், அம்மனைக் கும்பம் தாளித்து ஆற்றிலிருந்து எடுத்துவந்து அலங்கரிப்பதிலும், பொங்கல், மணவிழா, ... போன்றவற்றின் காப்புக்கட்டுதலிலும் முக்கியமானது. அம்மை வார்த்தால் வேப்பிலைதான் பிரதானம், எனவே, மாரியம்மனின் சின்னமாக வேம்பும், இலையும். நோயாளியை வேப்பிலைகொண்டு நீவுதலால், நீவு-/நீமு- எனும் வினை குறுகி நிம்மு-/நிம்பு- (Cf. அம்மா > அம்பா) எனப் பெயர்ச்சொல் பிறக்கும். எனவே, நீம்/நிம்ப எனும் வேப்ப மரத்தின் ஸம்ஸ்கிருதப் பெயர்கள் த்ராவிடபாஷைகள் தந்தவை எனலாம். பாண்டிய மன்னன் குலமரம் வேம்பு. வேப்பந்தார் அணிபவன் தென்னன் என்னும் பாண்டியராஜன்.
இவ்விரண்டு தலங்களுக்கும் செல்லும் முன்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பழைய தலத்தை அருணகிரிநாதர் பாடினார். அதனை வடக்கே உள்ள விஜயபுரம் ~ வடவிஜயபுரம் ~ என்று பாடினார். ”குடல் நிணம் என்பு ... விழியினில் வந்து பகீரதி மிசை வளருஞ் சிறுவா, வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே”. இப்பாடலிலும், கிரவுஞ்சகிரி முதலான ஏழு குலகிரிகளை மாய்க்கும் முருகவேளின் போர்த்திறத்தைப் பாடிப், பின்னர் சிவபிரானின் திரிபுர தகனப் போரைப் பாடுகிறார். காரணம், வடவிஜயபுரம் என்னும் ஹள்ளவூர் (பள்ளவூர்) துங்கபத்திரை நதிக்கரையில் உள்ளது. பூப்பள்ளி ஹூப்பள்ளி > ஹூப்ளி போல, பள்ளவூர் > ஹள்ளவூர்/ஹள்ளூர். ஹள்ளவூர் என்பது விஜயபுரத்தின் கன்னடப் பெயர். ஹொய்சள மஹாராஜாக்களின் முக்கிய ராஜதானி நகரங்களில் ஒன்றாகவும், ஹொய்சளரில் சிறந்த இரண்டாம் வீர வல்லாள தேவனின் விருப்பமான படைத் தலைநகராகவும் விளங்கியது விஜயபுரம் என்னும் ஹள்ளவூர். கன்னடக் கல்வெட்டுகள், செப்பேடுகள் பலவற்றிலும் விஜயபுரம் குறிப்பிடப்படுகிறது. எனவே தான், ஹம்பியை அடைவதன் முன்னர் இவ் விஜயபுரத்தை அருணகிரிநாதர் பாடிச் சிறப்பித்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலம் விஜயநகர மன்னர்கள் காலம். அதற்கும் சற்று முன்னால் இருந்த ஹொய்சளப் பேரரசர்களின் ராஜதானி யாகிய விஜயபுரத்தைக் கண்டு பாடியுள்ளார். இதனைப் பலரும் சரித்திரச் செய்திகள், செப்பேடுகள் கொண்டு முன்பு ஆராயவில்லை.
ஆக, நிம்பபுரம், காமத்தூர், வட விஜயபுரம் என்று மூன்று திருப்புகழ் ஸ்தலங்கள் கர்நாடகத்தில் உள்ளன. கண்டவியூக சூத்திரம் என்னும் மகாயான சூத்திரத்தில் உள்ள கர்நாடக, தமிழக இடங்கள் துல்லியமாக ஆராய்ந்தால் இன்னும் பல இடப்பெயர்கள், சங்க காலத்தின் முக்கிய ஊர்கள் பற்றின செய்திகள் கிடைக்கும். மோயாற்றின் தென்கரை அருகே விஜயநகர காலக் கோவில் உள்ளது. மோயாறு ரிசர்வாயர், மசினகுடி, ஊட்டி இவற்றின் நடுவே இயற்கையழகு கொஞ்சும், யானை, புலி, மந்திகள், முசு, அரிய பறவைகள், மீன்கள் எல்லாம் உள்ளது சிறுகூர். சிறுகூர் அருவி மிக அற்புதமானது. நீலகிரி மலைவாசி மொழிகள், கன்னடத்தில் சிறுகூர் சிக்கூர் (Siggur) என்பர். In English, SiRukuur/Sigguur is written as Sigur (Cf. Shivamogga is written as Shimoga in N. Karnataka). திருவண்ணாமலையில் இருந்து சத்தியமங்கலம் வழியாக சிறுகூர் முருகனைப் பாடிப் பரவியபின், மேற் சொல்லிய மூன்று முக்கியமான கர்நாடக ஸ்தலங்களில் முருகனுக்குத் திருப்புகழ்ப் பாக்களை அருணகிரிநாதர் பாடியருளினார். இந்தக் கர்நாடக, தமிழக உறவுகள் அதிபழமை ஆனவை. தமிழ் பிராமி என்னும் சங்க காலத் தமிழ் எழுத்து உருவாகச் சமணர்கள் கொணர்ந்ததும், பாசுபத சைவம் (Cf. கிண்ணிமங்கலம் லிங்கம் - பள்ளிப்படை) கொங்குநாடு வழியாக தென் தமிழ்நாடு அடைந்தது. முத்தமிழ்க் காப்பியம் பாடிய இளங்கோ அடிகளும் சொத்துக்களை இழந்த கோவலன் தன் மனைவியை அழைத்துக்கொண்டு, தம் குலகுரு பீடமாகிய சமணப் பள்ளிக்கு 30 காதம் பயணித்து, கவுந்தி அடிகளின் ஆசி பெற்று, அழைத்துக்கொண்டு மதுரை சென்றான் எனப் பாடியுள்ளார். அடைக்கலம் புகுதற்கு ஸ்ரீமத் ராமாநுஜர் இவ்வழியாக, ஹொய்சள அரசவையை அடைந்தார். அவர் வழியில், வேதாந்த தேசிகர், சத்தியமங்கலத்தில் ’பரமத பங்கம்’ எனும் அரிய நூலைப்பாடி கர்னாடகம் சென்று ஸ்ரீவைஷ்னவத்தை விஜயநகர தலைநகரில் பரப்பினார். 15-ஆம் நூற்றாண்டிலும், அவருக்கு முன்னர் 2500-2000 ஆண்டு தொடர்ந்து வரும் உறவுகளை விளக்கும், தமிழக - கருநாட்டு யாத்திரைகளை அருணகிரிநாதஸ்வாமியும் மேற்கொண்டு, எல்லையில் இயற்கை கொஞ்சும் அம்பலம் (திடல், Plateau) ஆக உள்ள சிறுகூரில் முருகனைப் பாடி, வடக்கே சென்று (1) விஜயபுரம் (இன்றைய ஹள்ளூர், ஹொய்சள ராஜதானி), (2) நிம்பபுரம் =ஹம்பி< பம்பி. பம்பை பாய்தலான்.) (3) காமத்தூர் (க்ரௌஞ்சகிரியின் க்ராமம்) - மூன்று தலங்களிலும் சுப்பிரமணியசாமியைப் அழகிய திருப்புகழ்களால் துதித்துப் போற்றியுள்ளார். குஹாரணியம் என்று ஹள்ளூர் பகுதியை அழைத்திருப்பது அருகே உள்ள ஹரிஹரேசுவரம் என்னும் ஹொய்சளர் காலக் கோவில் ஸ்தலபுராணத்தால் விளங்கும்:
https://en.wikipedia.org/wiki/Harihar . நிம்பபுரம் போலவே, விஜயபுரத்திலும் சோமேசர் ஆலயம்.
https://shaivam.org/temples-of-lord-shiva/haveri-district-lord-shiva-templesதமிழ்நாட்டின் அரசர்களின் வரலாறு கூறும் ஒரு முக்கியமான ஏடு: கொங்கதேச ராஜாக்கள் சரித்திரம். அதில், கங்க மன்னர்கள் கொங்குநாட்டின் ஸ்கந்தபுரம் (தாராபுரம் அருகே) என்ற ஊரைச் சார்ந்தவர்கள் என்று இருக்கிறது. கொங்கு = கந்தம் (மணம், gandha). கொங்கூர் = கந்தபுரம் எனப் பெயர்ந்து ஸ்கந்தபுரம் ஆயிற்று என்பர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், முனைவர் செ. இராசு, ... போன்றோர். அதிலே ஹொய்சள ராஜாக்களைப் பற்றிய செய்திகளில் விஜயபுரம் நகரில் தங்கி ஆண்டமையைக் குறிப்பிடுகிறது. இந்த முக்கியமான வரலாற்று நூலை, வில்லியம் டெய்லர் ஆங்கிலத்தில் 1848-லிலும், பின்னர் 20 நூற்றாண்டில் தமிழ் பதிப்பைக் கோவைகிழார் அவர்களும் அச்சிட்டார்கள். அங்கே காண்மின்.
Beginnings_Of_Vijayanagare_History, by H. Heras, 1929.
https://archive.org/details/beginningsofvija035382mbp/page/n59/mode/2up?q=vijayapura”Vijayanagara was not a new name for the Hoysala Emperors.
Thus Ballala II after conquering the Haneya fort, made a
city named Vijayagiri (Ep. Carn,, XI, Mk, 12); the same
monarch is once found residing, at Vijayapura "which is
Hallavur" (Ep. Carn., V, Cn, 244). The capital itself Dora-
samudra Is said to be "reckoned as Vijayasamudra" (Ep.
Carn., IV, Ng, 29).
Annual Report Of The Mysore Archaeological Deppt. For The Year 1901 To 1905.
https://archive.org/details/in.ernet.dli.2015.536411/page/n7/mode/2up?q=vijayapura"Several places in the Tamil country are named at which the kings were
encamped while engaged in expeditions for war, but these have not yet been
identified. On the other hand, Ballala II appears to have resided for a
considerable time at a place said to be on the Tungabhadra, called Hallavur,
with the classical names of Vijayasamudram and Vijayapura. The only name I can
find corresonding with this is Hulloor of the maps, which is on the left
bank of the Tungabhadra in tin Rane Bennur taluq, not far from Harihar. "
"Male Bennur is not far from Hallavur on the Tungabhadra,
where the Hoysala king Vira-Ballala lived for some time
three hundred years before."
https://en.wikipedia.org/wiki/Veera_Ballala_Ihttps://en.wikipedia.org/wiki/Veera_Ballala_IIhttps://en.wikipedia.org/wiki/Veera_Ballala_IIISectarianism in Medieval India: Saiva, Vaisnava, and Syncretistic Temple Architecture in Karnataka.
Naseem A. Banerji, 2019.
நா. கணேசன்