----------------------------------------------------------------------------------------------------
திருப்புகழ் பதிப்பாசிரியர்கள் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியபிள்ளை,
அவர் திருமகனார் தணிகைமணி வ. சு. செங்கல்வராயர் தலம் தெரியாத
திருப்புகழ்களைத் தம் பதிப்பின் இறுதியில் கோர்த்து அச்சிட்டுள்ளனர்.
அதில், காமத்தூர் என்னும் திருப்புகழ் தலம் பற்றி அறிய முடிகிறது.
அது பற்றி ஒரு குறிப்பு.
காமத்தூர் என்பது காமம்+ஊர் எனப் பிரியும். காமம் க்ராமம் எனும்
ஸம்ஸ்கிருதத்தின் பிராகிருதச் சொல். காமக் கணியார் என்ற சங்கப்
புல
வரை அறிவீர்கள். கிராமத்துக் கணியனார் எனப் பொருள். கதிர்காமம்
என்ற முருகன் தலம் ஈழத்தீவில் பிரசித்தமானது. இதிலும் காமம் என்பது
கிராமம் என்ற சொல்லின் பிராகிருதம். பல்லவர், அவர் பின்னவர் ஆகிய
மன்னர்கள் ஆட்சியில் கிராமம், நாட்டார் என்று ஒவ்வொரு ஊரிலும்
ஆட்சிச் சபைகள் இருந்தன என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.
காமத்தூர் என்னும் சுப்ரமண்யஸ்வாமி ஸ்தலம் எது?பம்பாநதி தீரத்தில் பம்பி மாநகர் அமைந்தது.இன்றைய ஹம்பி. ஏன் பம்பையில் கிரவுஞ்சம் வாழ்வதை வால்மீகி வர்ணிக்கின்றார்? அன்றில் (=கிரவுஞ்சம்) வாழும் தென்னிந்தியா ஆனதாலும், அந்த பம்பையாறு கிரவுஞ்சகிரி வழியே பாய்வதாலும் ஆகும். சண்டூர் - முருகன் கிரவுஞ்ச கிரியை வடிவேலால் தூள் தூளாகப் பொடிசெய்த இடம் சண்டூர் (பெல்லாரி மாவட்டம்), அதன் அருகே ஹம்பி நகரம் உள்ளது. சசசு, சச்சு, சண்டிசு - to pound, to hit, ... என்கிறது கிட்டல் கன்னட அகராதி. வடிவேலால் சண்டு செய்தது போல gorges அதிகமாக இயற்கையாகவே உள்ள இடம் சண்டூர். கிரவுஞ்சகிரி குமாரஸ்வாமி கோவில் உள்ள இடம். இந்த மலைத்தொடர்களை ஸ்வாமிமலை என்று கன்னடியர் அழைக்கின்றனர். தென்னிந்தியாவின் முதல் முருகன் கோவில் இதுதான் என்கின்றனர்.அன்றிலங்கிரியுடன் சண்டை செய்த ஊர் சண்டூர். இந்த புராணத்துடன் பம்பையில் க்ரௌஞ்சம் (அன்றில்) வாழ்வதை வால்மீகி குறிப்பதும் ஒப்பிடத்தக்கது.
தேவகிரி என்றும், கிரவுஞ்சகிரி என்றும் வழங்கும் ஸ்வாமிமலை:
https://en.wikipedia.org/wiki/Krauncha_Giriஇங்கே குமாரஸ்வாமி கோவிலும், அருகேயே, பார்வதிதேவி கோவிலும் உள்ளன. மிகப்பழைய சுப்பிரமணிய ஸ்தலங்களில் ஒன்று.
“வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!” - திருமுருகுவேலால் பாலமுருகன் தாரகாசுர வதம் செய்தான். எனவே, குழந்தைக் குமரனும், அவன் அருகிலே பார்வதிதேவியும் கோவில் கொண்டுள்ளனர். இம் மலையின் அருகே உள்ளது காமத்தூர் என்னும் அருணகிரிநாதர் பாடிய கார்த்திகேய ஸ்வாமி தலமாகும்.
ஸ்வாமிமலை (பெல்லாரி சண்டூர்) காமத்தூர் என்று பாடிப் பரவியுள்ளார். இங்கே பாலதேவஸ்வாமி என முருகனின் பெயர் என்றும் குறிப்பிடுவது முக்கியமானது.
தாரகனாய் நின்ற கிரவுஞ்சப் புள்ளைக் கொன்றபின்னர் அவனது தமையன் சூரபன்மனை வேலால் வதம் செய்து பிளந்து,
மயில், சேவல் இரண்டையும் வாகனமாகவும், கொடியாகவும் முருகன் ஏற்கிறான் என்பது கந்தபுராணம்.
கிரவுஞ்ச பக்ஷி
https://en.wikipedia.org/wiki/Red-naped_ibisசெஞ்சூட்டு அன்றில் - இந்தியா முழுதும் இருக்கும் பறவை. இந்தியாவில் மட்டும் வாழும் பறவை அன்றில்/க்ரௌஞ்சம்
https://groups.google.com/g/vallamai/c/TMDvEonVomU/m/i4U1qEaoBgAJ (2016 மடல்)
மிக இளமையான காலத்தில் கிரவுஞ்சம் என்னும் அன்றில் குருகுப்
பறவையாக நின்ற தாரகன் என்ற அசுரனை வதைத்த தலம் இது.
இங்கே மண் செந்நிறமாக இருத்தலும், முருகபிரான் ஏவிய வேலினால்
அன்றில் மலை (க்ரௌஞ்சகிரி) பிளவுபட்டு இருப்பதும் இன்றும் காணலாகும்.
(1) நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக்
குருகொடு பெயர் பெற்ற மால்வரை உடைத்து (பரிபாடல் 5-9)
(2) குன்றக் குரவை - சிலப்பதிகாரத்தில் இம்மலையைப் பாடுகிறார் இளங்கோவடிகள்.
சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே.
https://vaiyan.blogspot.com/2017/09/silappathikaram-24.html(3) மணிமேகலைக் காப்பியத்தில் உதயகுமரனைப் பற்றி சுதமதி மணிமேகலையிடம்
வருணனை:
"குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாளாயின் பைந்தொடி நங்கை”
(4) குறுந்தொகை - கடவுள் வாழ்த்து
' தாமரை புரையும் காமர் சேஅடிப்
பவளத்து அன்ன மேனித் திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே. '
காமத்தூர் வேறு, காமக்கூர் வேறு:
---------------------------
திருப்புகழ்ப் பதிப்பாசிரியர்கள் காமத்தூர் இன்ன ஊர் என்று திருப்புகழ் பதிப்புகளில் குறிப்பிடவில்லை.
ஆனால், அண்மையில் நண்பர் திரு. வலையப்பேட்டை ஆர். கிருஷ்ணன் விகடன் போன்ற பத்திரிகைகளில்
காமக்கூர் என்னும் ஆரணி அருகே உள்ள ஊரை காமத்தூர் என எடுக்கலாம் என எழுதியுள்ளார்.
அதற்கு ஓர் காரணம் வ. ரா. கிருஷ்ணன் தருகிறார்: ’காமத்தூர் என எங்கள் சர்வேயில் எங்கே எனத் தெரியவில்லை’.
ஆனால், காமத்தூர் = காமக்கூர் எனல் பொருத்தமாக இல்லை. ஆரணி காமக்கூர் அருகே அக்கூர் உள்ளது. அங்கேயும்
சிவன் கோவில் உண்டு. காமம்+அக்கூர் = காமக்கூர். அக்கூரைச் சார்ந்த க்ராமம் எனக் காமக்கூர் ஏற்பட்டுள்ளது.
காமத்தூர் எனக் கல்வெட்டுகளிலோ, காமக்கூர் பற்றி 110+ ஆண்டு முன் காமக்கூர்ப் புலவர்
சுந்தரமுதலியார் பதிப்பித்த அவ்வூர்த் தலபுராணத்திலோ எதுவும் இருபெயரும் ஒன்றுதான் எனச் சொல்லப்படவில்லை.
எனவே, காமத்தூர் திருப்புகழ் பாலதேவஸ்வாமியாக, தன் தாய் உமாதேவியாருடன் கோயில் கொண்டுள்ள
குமாரஸ்வாமியைப் பாடிய திருப்புகழ் ஆகும். சக்திவேல் வழங்கும் தாயுடன் கோவில் கொண்டுள்ளதலம்.
தாரகனை அங்கே வேலால் பிளந்து, பின்னர் சூரபன்மனைக் கடலில் பிளந்து மயில், சேவல் ஆக்கினான்.
காமத்தூர் திருப்புகழில் பாலதேவப் பெருமாள் என்றும், அசுரர் வதம், மயில், சேவல் ஏற செய்திகள்
வருகின்றன. Kamathur = Deogiri (Kraunchagiri), Sandur, Bellari district, Karnataka.
This Subrahmanya stalam is sung by Arunagirinathar in his Tiruppukazh.
You can read Kraunchagiri-Kamathur Tiruppukazh here:
http://kaumaram.com/thiru/nnt0988_u.htmlதானத் தானத் தானத் தானத்
தானத் தானத் ...... தனதானா
......... பாடல் .........
ஆகத் தேதப் பாமற் சேரிக்
கார்கைத் தேறற் ...... கணையாலே
ஆலப் பாலைப் போலக் கோலத்
தாயக் காயப் ...... பிறையாலே
போகத் தேசற் றேதற் பாயற்
பூவிற் றீயிற் ...... கருகாதே
போதக் காதற் போகத் தாளைப்
பூரித் தாரப் ...... புணராயே
தோகைக் கேயுற் றேறித் தோயச்
சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா
சோதிக் காலைப் போதக் கூவத்
தூவற் சேவற் ...... கொடியோனேபாகொத் தேசொற் பாகத் தாளைப்
பாரித் தார்நற் ...... குமரேசா
பாரிற்
காமத் தூரிற் சீலப்
பாலத் தேவப் ...... பெருமாளே.நா. கணேசன்
http://nganesan.blogspot.comபராசக்திக்காக சிவாஜியை தேர்வு செய்த காமக்கூர் வீடு
http://www.puthiyathalaimurai.com/newsview/82622/Today-is-Shivaji-Ganesan-s-birthday--Kamakkur-House-who-select-Shivaji-as-a-hero-for-the-film-Parasakthi