திருப்புகழ் ஸ்தலம்: காமத்தூர். ‘ஆகத்தே தப்பாமல்’ (திருப்புகழ்)

33 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 3, 2020, 2:03:02 PM10/3/20
to housto...@googlegroups.com, vallamai, panbudan, tiruva...@googlegroups.com
திருப்புகழ் ஸ்தலம்: காமத்தூர்.  ‘ஆகத்தே தப்பாமல்’ (திருப்புகழ்)
----------------------------------------------------------------------------------------------------

திருப்புகழ் பதிப்பாசிரியர்கள் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியபிள்ளை,
அவர் திருமகனார் தணிகைமணி வ. சு. செங்கல்வராயர் தலம் தெரியாத
திருப்புகழ்களைத் தம் பதிப்பின் இறுதியில் கோர்த்து அச்சிட்டுள்ளனர்.
அதில், காமத்தூர் என்னும் திருப்புகழ் தலம் பற்றி அறிய முடிகிறது.
அது பற்றி ஒரு குறிப்பு.

காமத்தூர் என்பது காமம்+ஊர் எனப் பிரியும். காமம் க்ராமம் எனும்
ஸம்ஸ்கிருதத்தின் பிராகிருதச் சொல். காமக் கணியார் என்ற சங்கப்
புலவரை அறிவீர்கள். கிராமத்துக் கணியனார் எனப் பொருள். கதிர்காமம்
என்ற முருகன் தலம் ஈழத்தீவில் பிரசித்தமானது. இதிலும் காமம் என்பது
கிராமம் என்ற சொல்லின் பிராகிருதம். பல்லவர், அவர் பின்னவர் ஆகிய
மன்னர்கள் ஆட்சியில் கிராமம், நாட்டார் என்று ஒவ்வொரு ஊரிலும்
ஆட்சிச் சபைகள் இருந்தன என நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் உள்ளன.

காமத்தூர் என்னும் சுப்ரமண்யஸ்வாமி ஸ்தலம் எது?

பம்பாநதி தீரத்தில் பம்பி மாநகர் அமைந்தது.இன்றைய ஹம்பி. ஏன் பம்பையில் கிரவுஞ்சம் வாழ்வதை வால்மீகி வர்ணிக்கின்றார்? அன்றில் (=கிரவுஞ்சம்) வாழும் தென்னிந்தியா ஆனதாலும், அந்த பம்பையாறு கிரவுஞ்சகிரி வழியே பாய்வதாலும் ஆகும். சண்டூர் - முருகன் கிரவுஞ்ச கிரியை வடிவேலால் தூள் தூளாகப் பொடிசெய்த இடம் சண்டூர் (பெல்லாரி மாவட்டம்), அதன் அருகே ஹம்பி நகரம் உள்ளது. சசசு, சச்சு, சண்டிசு - to pound, to hit, ... என்கிறது கிட்டல் கன்னட அகராதி. வடிவேலால் சண்டு செய்தது போல gorges அதிகமாக இயற்கையாகவே உள்ள இடம் சண்டூர். கிரவுஞ்சகிரி குமாரஸ்வாமி கோவில் உள்ள இடம். இந்த மலைத்தொடர்களை ஸ்வாமிமலை என்று கன்னடியர் அழைக்கின்றனர். தென்னிந்தியாவின் முதல் முருகன் கோவில் இதுதான் என்கின்றனர்.அன்றிலங்கிரியுடன் சண்டை செய்த ஊர் சண்டூர். இந்த புராணத்துடன் பம்பையில் க்ரௌஞ்சம் (அன்றில்) வாழ்வதை வால்மீகி குறிப்பதும் ஒப்பிடத்தக்கது.

தேவகிரி என்றும், கிரவுஞ்சகிரி என்றும் வழங்கும் ஸ்வாமிமலை: https://en.wikipedia.org/wiki/Krauncha_Giri
இங்கே குமாரஸ்வாமி கோவிலும், அருகேயே, பார்வதிதேவி கோவிலும் உள்ளன. மிகப்பழைய சுப்பிரமணிய ஸ்தலங்களில் ஒன்று.
“வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ!
இழையணி சிறப்பின் பழையோள் குழவி!
வானோர் வணங்குவில் தானைத் தலைவ!” - திருமுருகு

வேலால் பாலமுருகன் தாரகாசுர வதம் செய்தான். எனவே, குழந்தைக் குமரனும், அவன் அருகிலே பார்வதிதேவியும் கோவில் கொண்டுள்ளனர். இம் மலையின் அருகே உள்ளது காமத்தூர் என்னும் அருணகிரிநாதர் பாடிய கார்த்திகேய ஸ்வாமி தலமாகும்.
ஸ்வாமிமலை (பெல்லாரி சண்டூர்) காமத்தூர் என்று பாடிப் பரவியுள்ளார். இங்கே பாலதேவஸ்வாமி என முருகனின் பெயர் என்றும் குறிப்பிடுவது முக்கியமானது.

தாரகனாய் நின்ற கிரவுஞ்சப் புள்ளைக் கொன்றபின்னர் அவனது தமையன் சூரபன்மனை வேலால் வதம் செய்து பிளந்து,
மயில், சேவல் இரண்டையும் வாகனமாகவும், கொடியாகவும் முருகன் ஏற்கிறான் என்பது கந்தபுராணம்.
கிரவுஞ்ச பக்ஷி
https://en.wikipedia.org/wiki/Red-naped_ibis
செஞ்சூட்டு அன்றில் - இந்தியா முழுதும் இருக்கும் பறவை. இந்தியாவில் மட்டும் வாழும் பறவை அன்றில்/க்ரௌஞ்சம்
https://groups.google.com/g/vallamai/c/TMDvEonVomU/m/i4U1qEaoBgAJ  (2016 மடல்)

மிக இளமையான காலத்தில் கிரவுஞ்சம் என்னும் அன்றில் குருகுப்
பறவையாக நின்ற தாரகன் என்ற அசுரனை வதைத்த தலம் இது.
இங்கே மண் செந்நிறமாக இருத்தலும், முருகபிரான் ஏவிய வேலினால்
அன்றில் மலை (க்ரௌஞ்சகிரி) பிளவுபட்டு இருப்பதும் இன்றும் காணலாகும்.

(1)  நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக்
குருகொடு பெயர் பெற்ற மால்வரை உடைத்து (பரிபாடல் 5-9)

(2) குன்றக் குரவை - சிலப்பதிகாரத்தில் இம்மலையைப் பாடுகிறார் இளங்கோவடிகள்.
  சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
  திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே-
  வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
  குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே.
https://vaiyan.blogspot.com/2017/09/silappathikaram-24.html

(3) மணிமேகலைக் காப்பியத்தில் உதயகுமரனைப் பற்றி சுதமதி மணிமேகலையிடம்
வருணனை:
"குருகு பெயர்க் குன்றம் கொன்றோன் அன்ன நின்
முருகச் செவ்வி முகந்து தன் கண்ணால்
பருகாளாயின் பைந்தொடி நங்கை”

(4) குறுந்தொகை - கடவுள் வாழ்த்து
' தாமரை புரையும் காமர் சேஅடிப்
பவளத்து அன்ன மேனித் திகழ் ஒளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல்
சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே. '

காமத்தூர் வேறு, காமக்கூர் வேறு:
---------------------------

திருப்புகழ்ப் பதிப்பாசிரியர்கள் காமத்தூர் இன்ன ஊர் என்று திருப்புகழ் பதிப்புகளில் குறிப்பிடவில்லை.
ஆனால், அண்மையில் நண்பர் திரு. வலையப்பேட்டை ஆர். கிருஷ்ணன் விகடன் போன்ற பத்திரிகைகளில்
காமக்கூர் என்னும் ஆரணி அருகே உள்ள ஊரை காமத்தூர் என எடுக்கலாம் என எழுதியுள்ளார்.
அதற்கு ஓர் காரணம் வ. ரா. கிருஷ்ணன் தருகிறார்: ’காமத்தூர் என எங்கள் சர்வேயில் எங்கே எனத் தெரியவில்லை’.
ஆனால், காமத்தூர் = காமக்கூர் எனல் பொருத்தமாக இல்லை. ஆரணி காமக்கூர் அருகே அக்கூர் உள்ளது. அங்கேயும்
சிவன் கோவில் உண்டு. காமம்+அக்கூர் = காமக்கூர். அக்கூரைச் சார்ந்த க்ராமம் எனக் காமக்கூர் ஏற்பட்டுள்ளது.
காமத்தூர் எனக் கல்வெட்டுகளிலோ, காமக்கூர் பற்றி 110+ ஆண்டு முன் காமக்கூர்ப் புலவர்
சுந்தரமுதலியார் பதிப்பித்த அவ்வூர்த் தலபுராணத்திலோ எதுவும் இருபெயரும் ஒன்றுதான் எனச் சொல்லப்படவில்லை.

எனவே, காமத்தூர் திருப்புகழ் பாலதேவஸ்வாமியாக, தன் தாய் உமாதேவியாருடன் கோயில் கொண்டுள்ள
குமாரஸ்வாமியைப் பாடிய திருப்புகழ் ஆகும். சக்திவேல் வழங்கும் தாயுடன் கோவில் கொண்டுள்ளதலம்.
தாரகனை அங்கே வேலால் பிளந்து, பின்னர் சூரபன்மனைக் கடலில் பிளந்து மயில், சேவல் ஆக்கினான்.
காமத்தூர் திருப்புகழில் பாலதேவப் பெருமாள் என்றும், அசுரர் வதம், மயில், சேவல் ஏற செய்திகள்
வருகின்றன. Kamathur = Deogiri (Kraunchagiri), Sandur, Bellari district, Karnataka.
This Subrahmanya stalam is sung by Arunagirinathar in his Tiruppukazh.
You can read Kraunchagiri-Kamathur Tiruppukazh here: http://kaumaram.com/thiru/nnt0988_u.html

தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதானா

......... பாடல் .........

ஆகத் தேதப் பாமற் சேரிக்
     கார்கைத் தேறற் ...... கணையாலே

ஆலப் பாலைப் போலக் கோலத்
     தாயக் காயப் ...... பிறையாலே

போகத் தேசற் றேதற் பாயற்
     பூவிற் றீயிற் ...... கருகாதே

போதக் காதற் போகத் தாளைப்
     பூரித் தாரப் ...... புணராயே

தோகைக் கேயுற் றேறித் தோயச்
     சூர்கெட் டோடப் ...... பொரும்வேலா

சோதிக் காலைப் போதக் கூவத்
     தூவற் சேவற் ...... கொடியோனே


பாகொத் தேசொற் பாகத் தாளைப்
     பாரித் தார்நற் ...... குமரேசா

பாரிற் காமத் தூரிற் சீலப்
     பாலத் தேவப் ...... பெருமாளே.


நா. கணேசன்
http://nganesan.blogspot.com

பராசக்திக்காக சிவாஜியை தேர்வு செய்த காமக்கூர் வீடு
http://www.puthiyathalaimurai.com/newsview/82622/Today-is-Shivaji-Ganesan-s-birthday--Kamakkur-House-who-select-Shivaji-as-a-hero-for-the-film-Parasakthi

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Oct 4, 2020, 12:30:56 PM10/4/20
to housto...@googlegroups.com, vallamai, panbudan, tiruva...@googlegroups.com
பேராகிருங்கை சேதுபதி எழுதினார்:
>நேர்பட மொழிந்த நியாய விளக்கம். அடுத்தடுத்துச் சான்றுகள் 
> காட்டி, உண்மையை வலுவாக நிறுவியது சிறப்பு!

இன்னும், திருப்புகழ் பெற்ற காமத்தூர் பற்றிய சில செய்திகள்:
காமத்தூர் - (1) முருகன் தாயுடன் விருப்புடன் அமர்ந்த பதி (Cf. காமத்துப்பால்), அல்லது (2) க்ராமம் > காமம் என்னும் ஊர் ஸபையால்
ஏற்பட்ட பெயர் எனலாம். காரணம்: அநுஜ- எனும் பெயர் மலையாளத்தில் அனியன் என்றாதற்போல, grAma > gAma (Prakrits) > kAma
- where gAma- got devoiced word-initial k- as kAmathUr (= kAma +th + Ur) Kamathur மிகப் பழைய பெயர், அனியன் ( -ஜ- > -ய- )மலையாளத்தில்
இருப்பது போல, கருநாடகத்தில் காமத்தூர் (kAma- < gAma-) என்ற பெயர் தேவகிரி/க்ரௌஞ்சகிரி என்னும் ஸ்வாமிமலை அருகே உள்ள கிராமத்திற்கு இன்றும் உள்ளது. காமத்தூர், சண்டூர் தாலூக்கா, பெல்லாரி மாவட்டம், கர்நாடகா. இப்பெயர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலம்,
ஆங்கிலம் எல்லாம் இருக்கிறது. இப்போது, பெயரின் பழமை தெரியாமல், ஹிந்தி முறையில் அநுஸ்வாரம் வைத்து எல்லாம் எழுதுவது தொடங்கியுள்ளது! கோவை > கொவ்வை, ... போல, காமத்தூர் > கம்மத்தூர் என்றும் ஆகிறது.
காமத்தூர் குமராஸ்வாமி - காமத்தூர் திருப்புகழில் குமாரசாமியைக் குமரேசா என்கிறார் அருணகிரிநாதர். (ஆகத்தே தப்பாமல் - திருப்புகழ்)
கன்னடத்தில் குமாரஸ்வாமி ஸ்துதிகள்: https://www.youtube.com/watch?v=guoqzMjnJ04

While the mines of Deccan Syndicate Mining are adjacent to those of the National Mining Development Corporation in Kamathur village of Sandur taluk, https://www.deccanherald.com/content/197996/cbi-inspects-mines-sandur.html  
https://indiankanoon.org/doc/64162251/ P.V.NAGESH AGED ABOUT 28 YEARS R/O. KAMATHUR VILLAGE DEOGIRI POST, SANDUR TALUK DISTRICT, BELLARY.  
 Providing buses for school going children from Kamathur to Sandur,  https://www.youtube.com/watch?v=six-a_peKBo etc. etc.,

இந்தியாவின் முதல் சூழலியல், வன உயிரிகள் பற்றி எழுதிய மா. கிருஷ்ணன் (அ. மாதவையா மகன்) பல ஆண்டுகள் மாஜிஸ்ட்ரேட் போன்ற பதவிகளை சண்டூர் அரசாங்கத்தில் வகித்தவர். காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் இங்கே தங்கியிருக்கிறார். புதுக்கோட்டை தொண்டமான் அளித்த பாவைவிளக்கு கம்பீரமாக, இப்போது ஹோட்டலாக மாறியுள்ள சண்டூர் சிவவிலாசம் அரண்மனையில் நிற்கிறது. https://www.youtube.com/watch?v=bmuSN1SInG8 . சிவவிலாசத்தில் சில நாள் தங்கி ஹம்பி (< பம்பி, பம்பை ஆற்றால் பெற்ற பெயர்.), சண்டூர், கிரவுஞ்சகிரி, காமத்தூர் செல்ல ஆசை. 1930களில் ஹரிஜனங்கள் தரிசனம் செய்யலாம் என அந்த ராஜாங்கம் சட்டம் இயற்றியது. இதனைப் பாராட்டினார் காந்தி:
The head trustee of the Kumaraswamy temple, MY Ghorpade, a former Congress finance minister of Karnataka and also the last Maharaja of Sandur, felt that religion should not discriminate. Thanks to his progressive outlook, the ban on the entry of women into the temple was lifted in 1996. The Ghorpades, well-loved and respected by the locals, had declared the temple open to Scheduled Castes/ Scheduled Tribes as early as the 1930s. After learning of this on his visit to Sandur, Mahatma Gandhi wrote in his magazine, “A small state in south India has opened the temple to the Harijan, the heavens have not fallen.” 

ரா. பி. சேதுப்பிள்ளை, வேலின் வெற்றி https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0615.html 
verse and translation. 

क्रौन्चम् तु गिरिम् आसाद्य बिलम् तस्य सुदुर्गमम् |
अप्रमत्तैः प्रवेष्टव्यम् दुष्प्रवेशम् हि तत् स्मृतम् || ४-४३-२५ Valmiki Ramayana
Translation:
Thereafter on reaching Mount. Krauncha, you shall cautiously enter into a highly impassable tunnel of that mountain to search Sita. That tunnel, they say is an un-enterable one.
Kalidasa in the work Megha Sandesa describes the gap in the mountain.  
10881637_1508712252735317_7730260916184503998_n.jpg
குமாரஸ்வாமி (குமரேசன் - காமத்தூர் திருப்புகழ்) வேலால் துளைத்த அன்றிலங்கிரி (க்ரௌஞ்சகிரி, குருகுபெயர்க்குன்று, தேவகிரி - பாலதேவப் பெருமாள் என்கிறார் காமத்தூர் முருகனை அருணகிரி. ஸ்வாமிமலெ = (குமார)ஸ்வாமிமலை).
The-famous-Sandur-gorge-by-Samad-Kottur.jpg

Sandur1.jpg
Sandur_650f.jpg

Unique feature of the mountain is its elliptical shape with a diametric narrow pass. According to legend, this gap is made when Kartikeya pierced the mountain in the battle with the demon Tharaka, with his sphere weapon vel to kill the demons who were hidden inside mountain. This legend is held in high esteem in Hindu mythologies including Mahabharata (salya parva.46), Skanda Purana(asura kandam).  http://gnanamrutham.blogspot.com/2016/11/kumaraswamy-temple-kraunchagiri-sandur.html 

முதல் பாதி திருப்புகழில் எப்போதும் பாடும் பொருண்மையில் பாடிவிட்டு,
காமத்தூர் திருப்புகழில், அடர்ந்த வனம் இருப்பதால், வள்ளியைப் பற்றிப் பேசுகிறார்:
பாகு ஒத்தே சொல் பாகத்தாளைப் பாரித்து ஆர் நல் குமரேசா ” குமாரஸ்வாமி = குமரேசா என விளித்துப் பாடினார்.
அதற்கு முன்பு, மயிலில் ஆரோகணித்துப் சேவல் கொடியேந்தி பொரும் வேலால் அசுரனை வாட்டியதைச் சொன்னார்:
தோகைக்கே உற்று ஏறித் தோயம் சூர் கெட்டு ஓடப் பொரும்
வேலா
 
சோதிக் காலைப் போதக் கூவு அத் தூவல் சேவல்
கொடியோனே
ஈற்றடியில், பொரு வேல் தந்த தாயின் அருகே, காமத்தூரில் பாலதேவனாக,
தேவகிரியில் விரும்பி அமரும் குமாரஸ்வாமியைப் புகழ்கிறார்:
பாரில் காமத்தூரில் சீலப் பாலத் தேவப் பெருமாளே! 

I have explained the identity of Krauncha bird (= anRil in Tamil) as red-naped ibis
in the World Sanskrit Conference, 2018, University of British Columbia, Vancouver, Canada.

On Sat, Oct 3, 2020 at 1:02 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
திருப்புகழ் ஸ்தலம்: காமத்தூர்.  ‘ஆகத்தே தப்பாமல்’ (திருப்புகழ்)
----------------------------------------------------------------------------------------------------

திருப்புகழ் பதிப்பாசிரியர்கள் வடக்குப்பட்டு த. சுப்பிரமணியபிள்ளை,
அவர் திருமகனார் தணிகைமணி வ. சு. செங்கல்வராயர் தலம் தெரியாத
திருப்புகழ்களைத் தம் பதிப்பின் இறுதியில் கோர்த்து அச்சிட்டுள்ளனர்.
அதில், காமத்தூர் என்னும் திருப்புகழ் தலம் பற்றி அறிய முடிகிறது.
அது பற்றி ஒரு குறிப்பு.

காமத்தூர் என்பது காமம்+ஊர் எனப் பிரியும். காமம் க்ராமம் எனும்
ஸம்ஸ்கிருதத்தின் பிராகிருதச் சொல். காமக் கணியார் என்ற சங்கப்
புலவை அறிவீர்கள். கிராமத்துக் கணியனார் எனப் பொருள். கதிர்காமம்
Reply all
Reply to author
Forward
0 new messages