திருப்பையூர்க் குளத்தில் அன்னப் பறவைகள்
-----------------------------------
'டாலர் சிட்டி' என அழைக்கப்படும் திருப்பூர், 60,000 கோடி ரூபாய்க்கு ஆண்டுதோறும் துணிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் நகராய் மாறிவிட்டது. கெமிக்கல்ஸ் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு அதிகம். கொங்குநாட்டின் பழைய பிரபந்தங்களிலே திருப்பூர் "திருப்பையூர்" என அழைக்கப்பட்டுள்ளது. இப்பெயரை விரிவாக ஆய்ந்தவர் புலவர் சுந்தர கணேசன், தலைமை ஆசிரியர். திருப்பூர் நஞ்சராயன் குளத்துக்கு இவ்வாண்டும் மங்கோலியாவில் இருந்து, இமயம் தாண்டி, அன்னப்பறவைகள் வந்துள்ளன. பனிக்காலத்தில் அன்னங்கள் இந்தியா வலசை வருவது பல கோடி வருஷங்களாய் நிகழும் நிகழ்ச்சி. எங்கே இருந்து வருகிறது, எங்கே செல்கிறது என அறியாக் காலங்களில் அன்னத்தை மனிதனின் ஆத்மாவுக்கு உவமையாக இலக்கியங்களும், கலைகளும் ஆக்கின. ஸ்தூபிகளில் உள்ள கலசத்தில் நடுவே, ஸ்படிகத்தால் ஆன அன்னப் பறவை இருப்பது இதனால் தான். அன்னம் முட்டை இடுவதோ, கூடு கட்டுவதோ இந்தியாவில் இல்லை. அன்னம் என்ற மிகப் பழைய பெயர் பல்லாயிரம் ஆண்டுகளாய்த் தமிழில் இருக்க, Bar-headed goose என்ற ஆங்கிலப் புதுப்பெயரை, பட்டைத்தலை வாத்து எனப் பெயர்த்துப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன. வாத்து < Patu என்னும் போர்ச்சுகீசியச் சொல். தாரா என்பது தமிழ் வார்த்தை (தாராக்காரன் - வயலில் வாத்து மேய்ப்போன்).
சரசுவதி, பிரமன் இவர்களின் வாகனம் இந்த அன்னம். சிவாலயங்களில், கருவறைப் பின்புறம் லிங்கோத்பவ மூர்த்தியில் காண்க. 2200 ஆண்டு ஆன, சந்திரகேதுகாட் (வங்கம்) கிடைத்த சரசுவதி சிற்பத்தில் சரசுவதியுடன் அன்ன வாகனம் உள்ளது. ஶ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அருளிய ‘இராமநாதம் பஜேகம்’ என்ற வடமொழிக் கீர்த்தனை கேட்போம். ஹம்ஸ மந்திரத்தைச் சொல்லித் தீக்ஷிதர் பூர்த்தி செய்கிறார். காசி ராமக்கிரியை ராகம். காசிக்கும் சேதுவுக்கும் வலசை செல்லும் ஹம்சம்/அன்னத்தை நினைந்து காசிராமக்கிரியை ராகத்தில் ராமநாதரைத் துதிக்கிறார். புறப்பாட்டில் அன்னச்சேவல் தூது போல. கிவாஜ, அன்னத்தின் வெற்றி (சிறுகதை),
https://nganesan.blogspot.com/2023/04/hamsa-mantra-ajapaa-annattin-verri.htmlஅன்னம் பாலையும், நீரையும் பிரிக்கும் என்னும் கதை உருவாக்கம்:
https://groups.google.com/g/vallamai/c/N6km_w3NMNk/m/BPG_tBFhCgAJபிற்காலச் சிற்பத்தில் மயில் தோகையொடு இணைத்து ஒருவகை Chimera-ஆக அன்னத்தை இந்தியர்கள் ஆக்கினர். இவற்றை அன்ன விளக்கு, அன்ன வாகனம், கோயில் தூண்கள், ... பார்க்கலாம். தமிழ்நூல்களில், செங்கால் அன்னம் = Graylag goose. இவையும் இந்தியா வருபவை, அரியவை.
In Meso America, Canada geese were compared to the Soul, just as in India for Hamsam/Annam. Swans do not cross Himalayas, and got introduced in India's zoos only in the 19th century. J. Ph. Vogel, The goose in Indian literature and art, E.J. Brill, Leiden, 1962.
அன்னம் - Tamil Name for Bar-headed Goose:
https://groups.google.com/g/vallamai/c/Ae7z0nhE8kE/m/yTL-yKIpAQAJ
Aṉṉam - the Himalayan Superbird and Tirukkuṟaḷ
Second International Conference on Tirukkuṟaḷ. Souvenir, June 27-29, 2018, Liverpool, England.