ஆக. மூவேந்தர் பெயர்கள்: சேரன் (< கீறு-/கீரு-, தெங்கு), சோழன் (< கொழ்- ), பாண்டியன் (< பழு-, Cf. பண்டிதன், பாண்டே).
ஐயாற்றுப் பதிகம். சோழர் காலச் சிற்பங்கள் இப்பதிகத்தில் வரும் பறவை, விலங்குகளைக் காட்டுகிறது. அன்னப்பறவை என்று Bar-headed Goose சோழர்களால் காட்டப்பட்டுள்ளது அரிய, அருமையானது. இதுபற்றி யான் எழுதிய குறிப்பைக் கூறிய நல்ல கட்டுரை குடவாயில் பாலு அவர்கள் தினமணியில் முன்னர் எழுதியிருக்கிறார்கள்.
பெடை என்றதால் கோழி சேவலைக் குறித்தது. *கொழிப்பது கோழி.*
ந = dental n ; ன = alveolar n; ண = retroflex n. அதுபோல,
மூன்று த இருக்கிறது: த = dental t; ற = alveolar t; ட = retroflex t.
alveolar ṯa என்பர். ற (= ṯa) ட என்றோ, த என்றோ மாறும் இயல்பினது.
அறங்கோடு உச்சரிப்பில் அதங்கோடு என்றும் ஆக சாத்தியமுண்டு.
பதறு- பதற்றம், பதட்டம், பதத்தம் என்றாவதை இ. அண்ணாமலை குறிப்பிட்டார்கள்.
பதலை - ஒருகட்பறை (சங்க இலக்கியம்). பதலை இசைக்குழுச் சிற்பங்களில் 2000 வருஷமாய் உண்டு,
பதலை >> தபலா - மெட்டாதீஸீஸ் (மத்யகிழக்கின் தாக்கம் இதில் இருக்கலாம்).
எற்று- பந்தை எற்றி உதைத்தான் (alveolar t)
எத்து- பந்தை எத்தி உதைத்தான் (dental stop t)
எட்டு - பந்தை எட்டி உதைத்தான் (retroflex t)
(2) செற்-
செறி- (alveolar t)
செதி- (செதில் - scales of fish) (dental stop t)
செடி (retroflex t)
https://groups.google.com/forum/#!msg/mintamil/Tc8yuo1gkJg/AYj7WQuMAQAJ https://groups.google.com/d/msg/mintamil/U_CXy_qIWmE/ZwFkVsY_CQAJதமிழில் மூன்று நகரம் (ந,ண,ன,), மூன்று லகரம் (ல, ள, ழ) இருப்பதுபோல மூன்று தகரமும் (த, ற, ட)
இருக்கிறது.
ந - dental n, ன - alveolar n, ண - retroflex n
ல - dental l, ழ - frictionless alveolar l, ள - retroflex l
த - dental t, ற- alveolar t, ட- retroflex t
Being unstable, ற- alveolar t changes to either dental t or retroflex t.
சிறு- > (1) சிட்டுக்குருவி (< சிறு+குருவி = *சிற்றுக்குருவி(2) சித்தப்பா (< சிற்றப்பா)
சிற்று சற்று என்றாவதும் உண்டு.
பதறு- > பதற்றம்: பதட்டம், பதத்தம் என்றும் சில கிளைமொழிகளில் உண்டு.
பறபற = படபட. பறத்தல், பறவை.
கெழ்/கேழ் - சிவப்பு. *கெழுழ் >> எழுழ் > எறுழம்பூ - குறிஞ்சித் திணையில் இன்றும் செக்கச்செவேர் எனப் பூக்கும் எறுழ மரம். எடுப்பாக உள்ளது.
(கெழ்-/கேழ்- >) எழுழ்/எறுழ்/எடுப்பு.
-----------------------
கொழ்- கொழு போல இருப்பது கோறைப்பல். கோழி குப்பையைக் கிழித்துக் கிளறுவதுபோலச் செய்வது கோறைப்பல் எனப்படுகிறது.
கோறைப்பல் = canine teeth. மாட்டின் கொம்பு (கோடு) போல் கோறும் பல் = கோறைப்பல்.
இது, கோரைப்பல் என வழங்குகிறது. நாயின் கோறைப்பல்
https://en.wikipedia.org/wiki/Canine_tooth#/media/File:Azawakh_K9.jpghttps://ta.wiktionary.org/wiki/கோரைப்பல்குரங்கின் கோறைப்பல்/கோரைப்பல் < கோறுதல் < கோடு.
https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5e/Bonnet_Macaque_DSC_1125.jpgஎனவே, கோறு-தல் :: வகிர்ந்து கொல்லல்.
சிலம்பு:
கொலை_கள பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே
கள்வனைக் *கோறல்* கடும் கோல் அன்று
வெள் வேல் கொற்றம்-காண் என
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை *கோறல்*
பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள் 26:4
அறவினை யாது எனின் கொல்லாமை *கோறல்*
பிற வினை எல்லாம் தரும் - குறள் 33:1
தெளிவு இலார் நட்பின் பகை நன்று சாதல்
விளியா அரு நோயின் நன்றால் அளிய
இகழ்தலின் கோறல் இனிதே மற்று இல்ல
புகழ்தலின் வைதலே நன்று - நாலடியார்
சிந்தாமணி - கோறல்
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான் - சிந்தா:1 261/4
ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால் - சிந்தா:7 1741/2
இனி சிறிது எழுந்து வீங்கி இட்டு இடை கோறும் நாங்கள் - சிந்தா:9 2040/1
நீலகேசி
கோறல் பொய்த்தல் கொடும் களவு நீக்கிப் பிறர் மனைகள் மேல்
சேறல் இன்றிச் செழும் பொருள் மேல் சென்ற சிந்தை வேட்கையினை
ஆறுகிற்பின் அமர்_உலகம் நுங்கட்கு அடியதாம் என்றான்
நீறும் ஓடும் நிழல் மணியும் பொன்னும் நிகரா நோக்குவான்.
------------------------
Axe in India's Megalithic sites - பெருங்கற்காலத் தொல்லியலில் மழு
https://groups.google.com/g/vallamai/c/AumitS6zdHk/m/Ywfmsw7WAwAJவாய்மைக்குச் செய்யும் மழுவைக் காய்ச்சிச் செய்யும் பரிசோதனை பற்றித் தமிழ் நூல்களில் காணலாகும்: மழு - Red hot iron, used in ordeals; பழுக்கக் காய்ச்சிய இரும்பு. ஆஸ்ரிதவிஷயத்தில் மழுவேந்திக் கொடுத்துக் காரியஞ் செய்யுமவன் (ஈடு, 2, 6, 9). கணிச்சி = pick-axe, குந்தாலி. கணிச்சியின் பொருளை பரிமேலழகர் (குறள்), நச்சினார்க்கினியர் (சிந்தாமணி), ... காண்க. ஒரோவழி, மழு தவிர கணிச்சி (pick-axe), சூலம் போன்றனவும் சிவன் ஆயுதங்களாக இலக்கியங்களில் வரும். ’குளம் தொட்டு வளம் பெருக்க’ கணிச்சி சின்னம், ‘காடுகொன்று நாடாக்க’ மழு சின்னம். மறு/மடு/மழு தொடர்புடைய சொற்கள். மடுத்தல்/மறுத்தல் (வாய்க்காலில் மடை < மடு-) செய்வது மழு. மரத்தை வெட்டுவது மழு மறுக்கும்/மடுக்கும்/மழுக்கும் செயல்.
மழு - மரத்தை வெட்டுவது மழு. மறுக்கும்/மடுக்கும்/மழுக்கும் செயல். இது போலவே, ழ்/ட்/ற் தொடர்புகளை கொழ்- தாதுவேரில் காணலாம்.
கொழ்- கொழு “Plough-tip'. கோழி (> கோடி, தெலுங்கு). கோறல் (< கோறு-தல்). கோறைப்பல் ‘Canine teeth' etc., கழிகோறு என்று கழிகோடு/கோழிக்கோடு நகரப் பெயர் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றுள்ளது.
பிற பின்,
நா. கணேசன்