கொழிப்பது கோழி எனல் சரியே. கோழி என்பது இருபாலுக்கும் வரும்.
http://sivaaramutham.blogspot.com/2012/03/blog-post_30.htmlபோழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
இந்த அப்பர் திருப்பாட்டில், கோழி என்பது சேவல். அச் சேவல் பெட்டைக் கோழியுடன் வருகிறது. இதன் உரையிலே, கொழிப்பது கோழி என்றுள்ளது. இதுபறி முன்னர் அகத்தியர், CTamil குழுக்களிலே குறிப்பிட்டுப் பேசியுள்ளேன்.
கீறுதல் - கீரன். கேரம் நாரிகேரம்/நாலிகேரம். எனவே, கேர-/சேர- ... போல (தலைநகர் வஞ்சி. கரூர்), கோழி காவேரி நதி வண்டலை/வண்டு கொழிக்கும்/திணர்க்கும் வயல்கள் கொண்ட நாடு சோழ நாடு (< கோழ நாடு). இதன் சின்னமாக, கோழி எனச் சோழர் தலைநகர் உறந்தை அழைக்கப்பட்டது. இரு தமிழ் மன்னர்களும் போர் இடுவர். சங்ககாலக் காசுகள் கோழி யானையுடன் மோதுவதாக உள்ளன. பின்னரும் சோழர்கள் கோழிக்காசுகளை வெளியிட்டனர்.
நா. கணேசன்
கே- மூச்சு இரைக்க ஓசை எழுப்புதல். கேவு-தல் : புணர்ச்சிக் காலத்தில். கேந்தி (கே-) அடங்காக் காமம்.
கேவ்-> சேவு- > சேவல்.