திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன - தொல்காப்பியர்
(மாதப் பெயர்களுக்கும், நட்சத்திரப்பெயர்களுக்கும் இலக்கணம் கூறும் தொல்காப்பியச் சூத்திரங்கள்).
திங்கள் உங்கள் கவிதைத் தலைப்பில் உள்ளது. பானாள், பாணாள் விளக்கம் சிறப்பு.
நாள் என்ற பெயர் நள்-“இருள், கருமை, செறிவு” என்ற வேரில் உருவாகியுள்ள சொல். நள்ளமலை >> நல்லமலை ஆந்திராவில்
கரும்பெண்ணை பேரியாறு பிறக்கும் மலை. கரிய பெண்ணை என்பான் கம்பன். இன்று, கிருஷ்ணா (க்ருஷ்ணவேணி, ப்ராகிருதம்:: கண்ஹபெண்ணா)
ஆகிவிட்டது. நாளணன் > நாரணன் என நாராயணன் பெயரின் மூலம். நாளகிரி அஞ்சனமலை போன்ற யானை.
கொங்குவேளிரின் பெருங்கதை, புத்த சரித்திரத்தில் புத்தரைக் கொல்லவந்த யானைப் பெயர் கருமலை என்பது நாளகிரி.
ஆக, இரவுக்குப் பெயராக நாள் ஆரம்பித்து, பகலையும் சேர்த்து 24 மணிநேர “நாள்” ஆகிவிட்டது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்(குறள்). ஆனால், சொல் தோற்றத்தில்
நாள் என்றால் இருட்டு, இருள் செறிந்த இரவு தான். பிறகு பகலையும் சேர்த்துக்கொண்டது: நாளங்காடி, அல்லங்காடி.
இதில் முக்கியம் என்னவென்றால், அல் என்பதே நள்- என்பதில் பிறப்பதுதான். அல், அலவன் (இருளில் திரியும் நண்டு) < நள்-.
கிழமை = இரவு(நாள்) + பகல். கோளுக்கு உரிமை செய்து முழுநாளையும் அழைக்கலாயினர். திங்கட் கிழமை, செவ்வாய்க்கிழமை, ....
நாள் இரவு என்பதால், அதில் உள்ள நக்ஷத்ரங்களையும் நாள் என அழைக்கிறோம். நாள்மீன்கள் அவை.
இது மிகப் பழைமையான திராவிடர்களின் வானியற்கோட்பாடு. ஈரான் தேசத்தில் உள்ள
அவெஸ்தா என்னும் பாரசீக ஆரியர்களின் (இந்தியாவில் பார்ஸி மதத்தார், டாட்டா உள்பட)
வேதத்துக்கும், பாரதத்தின் ரிக் வேதத்துக்கும் உள்ள முக்கியமான வேற்றுமை பாரசீக நாட்டில்
பகல், பகலில் நடந்த வேள்விகள் இந்தியாவில் இரவுக் காலத்தில் நடப்பதாக மாறின.
பாரசீகத்தில் அசுரன் என்றால் பெருந்தெய்வம்: அஹுர மஃஜ்த(Ahura Mazda).
அங்கே பகலுக்கும், இரவுக்கும் போர். இந்தியாவில் மாறி இராப் போது முக்கியத்துவம் பெற்றது.
சிந்துவெளியில் இருந்த விடங்க வழிபாடு, வருணனுடன் ஒன்றி இருக்குவேத காலத்தில் ஆகிவிட்டான்.
அவனது சின்னம் துருவ நட்சத்திரம். பிற்காலத்தில், கனலிவட்டம் (ஃசோடியாக்கு) சிந்தாமணி
தரும் கலைச்சொல்) இந்தியா வந்தபோதும், தை மாத சின்னமாக மகரம் - வருணனின் சின்னம் -
அப்படியே நின்றுவிட்டது. குடிமல்லத்தில் வணங்கப்படுவது இந்த வேதக் கடவுளின் வடிவமே.
நேரம் கிடைக்கிறபோது, தொல்காப்பியர் திங்கள் என்று மாதத்தையும், நாள் என்று நட்சத்திரத்தையும்
(வெய்-வெயில். அதை மறைக்கும் கூரை அமைப்பது வேய்தல். வே(ய்)ந்து - வேந்தன்) அழைப்பதும்
மாஸ, நக்ஷத்ர சந்தி இலக்கணத்தை எவ்வாறு காப்பியர் கூறுகிறார் என என் போன்றவர்களுக்கு
விளக்க வேண்டுகிறேன். தொல்காப்பியர் எழுத்ததிகாரம், உயிர்மயங்கியலில் நக்ஷத்ரங்கள், மாதங்கள்
இவற்றின் சந்தி இலக்கணம் கூறுகின்றார்:
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், உயிர்மயங்கியல் நூற்பாக்கள்:
திங்கள் முன்வரின் இக்கே சாரியை. (தொல்,248)
திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல்,286)
இவற்றில் உள்ள மாதங்கள், நட்சத்திரங்கள் பற்றிய இலக்கணம் அறியத் தாருங்கள்.
நக்ஷத்ர கணிதம் இந்தியாவில் 4500 ஆண்டுகளாய் இருக்கிறது.
நா. கணேசன்