சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடையில் 12 ராசிகளைக் கொண்ட வருஷத்தில்,மேஷ ராசி தலை ஆக இருப்பதும், பதிற்றுப்பத்து சேரர்வரலாற்று நூலில்,அகத்தியர் ஆசிரமம் இருந்த தண்டகாரணியத்தில் வருடை என்னும் மலை ஆட்டைச்சேரநாட்டுக்குக் கொணர்ந்தான் என ஓர் உருவகமாக, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்காலத்தில் சக அப்த முறையில் சித்திரை முதலாக ஆண்டு ஏற்படுத்தப்பட்டது என்பதும்பார்த்தோம். தொல்காப்பியத்திலே 12 மாதப் பெயர்களும், 27 நட்சத்திரப் பெயர்களும்எந்தெந்த எழுத்தில் முடியும் என ஆராய்ந்து சொல்லப்பட்டிருக்கிறது. சேரலாதன்வாழ்ந்த வஞ்சி மாநகர் அருகே இருந்தவர் திருத்தக்கதேவர்.அவர் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தில் அப்போதிருந்த கலைகள் பற்றியபல செய்திகள் கிடைக்கின்றன. ஆடல், பாடல், கூத்து பற்றிய அரிய செய்திகள் உள்ளன.பருந்தும் நிழலும் போலப் பாட்டும் பண்ணும் இருக்கவேண்டும் என்று கூறியவர் அவர்தான்.பின்னாளில் தமிழ் இசை பற்றி மிகுந்த ஆராய்ச்சிகள் தந்த அடியார்க்குநல்லார் உரையை,சிலப்பதிகார நூலும், அடியார்க்குநல்லார் உரையும் பருந்தும் நிழலும் போல இருக்கிறது என்றுஇந்த உவமையைப் பயன்படுத்திப் புகழ்ந்திருக்கிறார்கள். தமிழ் இசை வளர்த்த மங்கலப்பண்டிதர்கள் சங்க காலப் பாணர்கள் வகுப்பாரில் பெரும்பிரிவினர் என்பது சீவக சிந்தாமணியால்அறிகிறோம். சோதிட சாத்திரச் செய்திகள் பலவும் சிந்தாமணியில் கிடைக்கிறது.வருடத்திற்குப் 12 திங்கள்கள் என்றும், அயனம் என்னும் கதிரவனின் வட, தென்திசைச் செலவுகள் பற்றியும் விளக்கியுள்ளார்.வருடத்தில் 12 மாதங்கள். 12 X 1 = 6 X 2 = 4 X 3 என 12-ஐப் பகுக்கலாம்.6X2 - இரண்டிரண்டு மாதங்களாய் 6 பருவங்கள் வகுக்கப்பெற்றன.
வசந்த ருது - இளவேனில் காலம் ( சித்திரை , வைகாசி) கிரீஷ்ம ருது - முதுவேனிற் காலம் ( ஆனி, ஆடி) வருஷ ருது -மழைக்காலம் (ஆவணி, புரட்டாசி) சரத் ருது - கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை ) ஹேமந்த ருது - முன்பனிக்காலம் (மார்கழி, தை) சிசிர ருது - பின்பனிக்காலம் (மாசி, பங்குனி) (வசந்தம் மார்ச் 20-ல் தொடங்க வேண்டும். இதுபற்றிப் பாரதியார் நல்ல கட்டுரை எழுதினார்.)வருடத்தை நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பிரிவுகளாகப் பகுத்தல் உண்டு.”இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.” (எஸ். ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வாளர், சென்னை). சித்திரை மாதத்தில் வேனிலான் எனப்படும் காமதேவனின் வசந்தோற்சவம். இந்திரவிழா சிறப்பாக நடந்ததை சிலம்பு 5-ம் காதை விவரிக்கிறது.கிரீஷ்ம, வர்ஷ, சரத் என்னும் நந்நான்கு மாதமாய் ஆண்டினை மூன்று பிரிவாக்குவதைச் சீவகசிந்தாமணி விளக்கியுள்ளது. இங்கே, வேனில், மழை, குளிர் என்று இப்பிரிவுகள். வேனில்பருவம் என்றுசித்திரையில் ஆண்டு தொடங்குவதைக் கூறியுள்ளார். இதே போல, திருவலஞ்சுழிக் கல்வெட்டிலும் சித்திரை விஷு என்று வருடத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் கூறப்பட்டுள்ளன.சித்திரையில் வருட தொடக்கம் எனக் காட்டும் சீவகசிந்தாமணி பாடல்கள்:
3070 நளிசிலம் பதனி னுச்சி நாட்டிய பொன்செய் கந்தி னொளியொடு சுடர வெம்பி யுருத்தெழு கனலி வட்டந் தெளிகடல் சுடுவ தொத்துத் தீயுமிழ் திங்க ணான்கும் விளிவரு குரைய ஞான வேழமேற் கொண்டு நின்றான். (இ - ள்.) நளி சிலம்பதனின் உச்சி - (முற்கூறியவை) செறிந்த குன்றின் உச்சியிலே; விளிவு அரும் ஞான வேழம் மேற்கொண்டு - கெடுதல் இல்லாத ஞானமாகிய வேழத்தை ஊர்ந்து; நாட்டிய பொன் செய் கந்தின் - நாட்டப்பெற்ற பொன்னாலாகிய தூண்போல; உருத்து எழு கனலி வட்டம் - சினந்து எழும் ஞாயிற்றின் வட்டம்; தெளி கடல் சுடுவது ஒத்து - தெளிந்த கடலைச் சுவறப் பண்ணுந் தன்மையை ஓத்து; ஒளியொடு சுடர வெம்பி - ஒளியோடே விளங்கும்படி சினந்து; தீ உமிழ் திங்கள் நான்கும் - நெருப்பைச்சொரியும் திங்கள் நான்கும்; நின்றான் - நின்றான்.
(வி - ம்.) குரைய : அசை,
நளி - செறிவு, சிலம்பு - மலை, கந்தின் - தூணைப்போன்று , கனலி வட்டம் - ஞாயிற்று மண்டிலம். சித்திரை வைகாசி ஆனி ஆடி
யாகிய திங்கள் நான்கும் என்க. இஃது இளவேனிலும் முதுவேனிலும் ஆகிய கோடைக்காலத்துச் சீவகன் றவநிலை கூறிற்று.
( 472 )
3071 பார்க்கடல் பருகி மேகம் பாம்பினம் பதைப்ப மின்னி வார்ப்பிணி முரசி னார்த்து மண்பக விடித்து வான நீர்த்திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான். மூர்த்தியாய் முனிவ ரேத்து முனிக்களி றனைய கோமான். (இ - ள்.) மூர்த்தியாய் முனிவர் ஏத்தும் முனிக்களிறு அனைய கோமான் - தவவுருவினனாகி, முனிவர்கள் வாழ்த்தும் முனிக்களிறு போன்ற அரசன்; வானம் மேகம் பார்க்கடல் பருகி - வானிலே முகில் பாறையையுடைய கடலிலே நீரைப் பருகி; பாம்பு இனம் பதைப்ப மின்னி - பாம்பின் திரள் துடிக்க மின்னி; வார்ப்பிணி முரசின் ஆர்த்து - ஆர்ரால் இறுகிய முரசென முறுகி; மண்பக இடித்து - நிலம் பிளக்க இடித்து; நீர்த் திரள் பளிக்குத் தூணி சொரிந்திட நின்று வென்றான் - நீர்த்திரளைப் பளிங்குக் கோல் கிடக்குந் தூணி அதனைப் பெய்வது போலப் பெய்ய (ஆவணி முதலிய திங்கள் நான்கும்) நின்று வென்றான்.
(வி - ம்.) இஃது ஆவணி புரட்டாதி ஐப்பசி கார்த்திகை யாகிய காரும் கூதிருமாகிய பருவத்துத் தவநிலை கூறுகின்றது. பார் - பறை, பாப்பினம் - பாம்பின் திரள். ”விரிநிற நாகம் விடருளதேனும் உருமின் கடுஞ்சினம் சேணின்று முட்கும்” ஆதலான் பாப்பினம் பதைப்ப என்றார். மேகம் நீர்த்திரளைப் பளிக்குத்தூணி பளிக்குக்கோலைச் சொரிவதுபோலச் சொரிய என்க. பக - பிளக்க. மூர்த்தி - தவவேடம்.
( 473 )
3072 திங்கணான் கவையு நீங்கத் திசைச்செல்வார் மடிந்து தேங்கொள் பங்கயப் பகைவந் தென்னப் பனிவரை யுருவி வீசு மங்குல்சூழ் வாடைக் கொல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ விங்குநான் காய திங்க ளின்னுயி ரோம்பி னானே. (இ - ள்.)
நான்கு திங்கள் அவையும் நீங்க - நான்கு திங்களாகிய காரும் கூதிரும் கழிந்த பிறகு; திசைச் செல்வார். மடிந்து - திசைதொறும் செல்கின்றவர் செல்லாமற் சோம்பியிருக்க; தேம் கொள் பங்கயப் பகை வந்தென்ன - அவ்விடங்களிலே கொண்ட பனி வந்ததாக, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான - பனி மலையைத் தடவி வரும் இருள் சூழும் வாடைக்குத் தளராதவனாய்; வெள்ளிடை வதிந்து - வெளியிடத்திலே தயங்கியிருந்து; இங்கு நான்கு ஆய திங்கள் இன உயிர் ஓம்பினான் - தங்கிய அந்நான்கு திங்களாகிய பனிக்காலத்திலே இனிய உயிரைக் காப்பாற்றினான்.
விளக்கம் : முன்பனி, பின்பனி இரண்டுங் கூடிய பனிக்காலத் தவநிலை கூறினார். பங்கயப்பகை - பனி, இங்குதல் -தங்குதல். (474)
சித்திரை திங்கள் வருஷத்தின் முதல் மாதம் எனக் காட்டும் முக்கியமான இலக்கியமாகசீவக சிந்தாமணி திகழ்கிறது.நா. கணேசன்On Sat, Apr 18, 2020 at 8:51 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:சித்திரையில் வருஷப் பிறப்பைத் தமிழர் கொண்டாடினர் என்பதற்கு
அரிய கல்வெட்டுச் சான்று உள்ளது. சக்கரவர்த்தி ராஜராஜ சோழனின்
ஆட்சியில் திருவலஞ்சுழி தலத்தில் க்ஷேத்திர பாலகர் திருக்கோயில்
கல்வெட்டு, கி.பி. 998-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது.
இக்கோயிலில் ராஜராஜன், ராஜேந்திரன் என்னும் பெருமன்னர்கள்
கல்வெட்டுக்கள் தாம் உள்ளன. ராஜராஜ சோழன் சிவபாதசேகரன் என்றழைக்கப்பட்டது போல,
ராஜேந்திரசோழன் சிவசரணசேகரன் என ழைக்கப்பட்டது தெரிவது இத்தலக்
கல்வெட்டுக்களால் தான். அவர்கள் காலத்தில் எந்தத்
தனிநபர் கல்வெட்டும் இங்கே எழுதப்படவில்லை.
(1) சித்திரை விஷு (2) தட்சிண அயனம் (3) ஐப்பசி விஷு (4) உத்தர அயனம்
என்ற வரிசைக் கிரமத்தில் வருஷத்தின் நான்கு முக்கியமான சங்கிராந்திகள் எழுதப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் ஆட்சிக் கல்வெட்டு தமிழ்வருஷப் பிறப்பு சித்திரை விஷு என்று காட்டுகிறது.
அதுவே முதல் சங்கிராந்தியாக உள்ளது, திருக்கோவில்களில் பஞ்சாங்கம் படித்தல் என்னும்
நிகழ்ச்சி நடக்கும். இந்த வருஷப் பிறப்பைத் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியா முழுதும்
பல்லவர் காலத்தில் பரப்பியுள்ளனர், சித்திரை விஷு, ஐப்பசி விஷு இரண்டும்
“அரைநாள்” எனச் சங்க இலக்கியம் கூறும் Equinox.
வடசெலவு = உத்தராயணம், தென்செலவு = தட்சிணாயனம்.
இவை இரண்டும் ஞாயிறு திசை திரும்புநாள்கள் (Solstcies).
சித்திரை விஷு = Vernal Equinox
தட்சிணாயனம் = Summer Solstice
ஐப்பசி விஷு = Autumnal Equinox
உத்தராயணம் = Winter Solstice
https://www.weather.gov/cle/Seasons
https://www.youtube.com/watch?v=SCm5ws87uyY
இக் கல்வெட்டுச் சான்று போலச் சில இலக்கியச் சான்றுகள் பார்ப்போம்.
நா. கணேசன்
விஞ்ஞானி ஜெயபாரதன் எழுதினார்:
<<<
2000 ஆண்டுகட்கு முன்னர் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக்க தமிழ் இலக்கணம் வகுத்த அந்தண மேதை தொல்காப்பியர் நாட்கிழமை, மாதம், வருடம் தெரிய சூரிய நகர்ச்சி, பூமி சுழற்சி, நிலவு சுழற்சியைக் கணக்கெடுத்து நிச்சயம் நாள், கிழமை, மாதம், வருடம் குறிப்பிட்ட நாட்காட்டிச் சுவடி, வீட்டுச் சுவரில் தொங்காமல் இருப்பாரா ?
அவரது காலத்தில் வான சாஸ்திரமும்,ஜோதிடமும் இந்தியாவில் பஞ்சாங்க வடிவில் பயன்பாட்டில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.
அது யூகிக்கும் திருவள்ளுவர் ஆண்டோ, தை திங்கள் முதலன்றோ தமிழாண்டுப் பிறப்பாக கருத இடமில்லை. தமிழாண்டு பிறப்பு சித்திரை முதல் தேதியாக தொல்காப்பியர் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்க இடமிருக்கிறது.
சி. ஜெயபாரதன்
>>>நிச்சயமாக, சமணர்கள் தொல்காப்பியர், திருவள்ளுவர் (ஸ்ரீவல்லபதேவர்), திருத்தக்க தேவர் சூரியமான பஞ்சாங்கம்சித்திரை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டது என அறிந்து பரப்பினவர்களில் முக்கியமானவர்கள்.ப்ராகிருத வழி வரும் பெயர்கள் தமிழில் முந்தியவை. இவை இந்திரனைப் பூனை ஆக்கின சமணர்களின் கொடை.பின்னாளில் தான் சம்ஸ்கிருதச் சொற்கள் அப்படியே தமிழுக்கு வரலாயின (பார்க்க: கமில் சுவெலெபில் ஆய்வுகள்).தம் சமயத்தார் தமிழுக்குக் கொணர்ந்த 12 மாதங்களை - ஆடு தலைஆக இருக்கும் ஆடு கோட்பாடு -இலக்கணம் வகுத்தளித்தவர் தொல்காப்பியர். பலருக்கும் தெரியாது என்பது வெள்ளிடைமலை.தொல்காப்பியரின் எழுத்தத்திகார, பொருளதிகார சூத்திரங்களைப் பின்னாளில் ஒரு கட்டுரை எழுத எண்ணமிருக்கிறது.இப்போது, உலக சம்ஸ்கிருத மாநாட்டுக்கு “அளி விடுதூது - Bees in Classical Tamil" என்ற கட்டுரைக்குஆயத்தமாகிறேன்.தொல்காப்பிய அறிஞர் செ. வை. சண்முகம் மடலைப் பாருங்கள்.நா. கணேசன்On Wed, Apr 22, 2020 at 6:52 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:தொல்காப்பியத்தில் மாதப் பெயர்கள், நட்சத்திரப் பெயர்கள்தொல்காப்பியர்விருது பெற்றவரும், தொல்காப்பியத்தைப் பல பதிற்றாண்டுகளாகஆராய்ந்துவரும் முதுபேரறிஞர் செ. வை. சண்முகம் (அண்ணாமலைப் பல்கலை)2 நிமிஷம் மு அனுப்பின மடல்:<<<திங்கள் பெயர்எங்கேயும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு உயிர் மயங்கியல் இரண்டு சூத்திரங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.உயிர் மயங்கியலில் (46)இகர ஈற்று ச் சொற்களின் புணர்ச்சி மாற்றத்தைக் கூறும்போது திங்கள்முன்னே இக்கே சாரியை என்பதால் வைகாசிஆனி,ஆடி,ஆவணி, புரட்டாசி,ஐப்பசி மாசி மார்கழி பங்கு/னி .. என்பதும் (9)நீங்கள் குறிப்பிட்ட சூத்திரம் (84) ஐகார ஈற்றுப் புணர்ச்சியை விளக்கும் பகுதி என்பதால் சித்திரை, கார்த்திகை, தை (3) ஆகிய மூன்றும் அடங்கும்நாள் பெயர் இகர ஈற்று வரிரையிலும் ( 45) ஐகார வரிசையிலும் (84) புள்ளி மயங்கியிலில் மகர ஈற்று வரிசையிலும்(36) குறிப்பிடப்பட்டுள்ளன.அவையும் இன்று 27 நட்சத்திர பெயர்களின் ஈற்றெழுத்தொடு ஒத்துப் போகின்றன. அன்று அஸ்தம் அத்தம் என்றும் அனுஷம் அனுடம் என்று வழங்கியிருக்கலாம். பரிபாடலை பார்க்கவும் அது பற்றி பின்னர் எழுதுகிறேன்சண்முகம்>>>On Wed, Apr 22, 2020 at 6:25 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:Zodiac என்னும் சொல்லுக்கு அருமையான கலைச்சொல்லாக,
கனலிவட்டம் என்ற பெயரைத் தமிழில் முதன்முறையாகப் படைத்தளித்தவர்
சீவகசிந்தாமணி உடையார். இசையின் நுட்பமான செய்திகள் பலவும்,
இசைவாணர்கள் ஆக இருந்த மங்கலர்கள் பற்றியனவும், வானியலில்
பல செய்திகளும், சக ஆண்டு க்ரீஷ்மம், வர்ஷம், ஶரத் என முந்நான்கு
மாதங்கள் எனப் பகுக்கும் பழைய முறையில் சித்திரை மாதம்
முதல் நாளை சித்திரைத் திருநாள் சித்திரை விஷு என அறியவைக்கும்
பாடல்களைத் தந்தவர்.
முந்நான்கு என்று வருடத்தின் 12 மாதங்களைப் பகுக்கும் முறை
சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
நா. கணேசன்
02.09.2011 நாளிட்ட தினமணியில்...
இன்றைய தமிழக அரசும் - இன்றைய சூழலுக்கேற்பச் சித்திரை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுவதை எங்ஙனம் மறுக்கவோ தடுக்கவோ இல்லையோ, அது போலத் தை முதல் நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டையும் அவரவர் விருப்பப்படி கொண்டாட இடம் தந்து, அரசு இரண்டையும் ஆதரிப்பதே முறையாகும்.
- தமிழண்ணல்
தொல்காப்பியர் தமிழ் வருஷத்தில் உள்ள மாதங்களுக்கும்,
திங்கள்வட்டத்தின் (27 Lunar Mansions. Cf. கனலிவட்டம் 12 Solar Mansions)
நட்சத்திரங்களுக்கும் சந்திவிதி கூறினார். எல்லா மாதங்களும், நக்ஷத்ரங்களும்
முடியும்வகையை நன்கு ஆய்ந்து சூத்திரங்கள் செய்துள்ளார் என வியக்காமல் இருக்க இயலாது.
அவர் ஆட்டின் பழைய பெயர் யாடு என்றும் கூறினார்:
யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே
இளம்பூரணம் : (இ - ள்) : என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட
ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு.
யாறு, யாண்டு, யாடு, யாமை, யானை, யாளி, யார், யாங்கு, யாக்கை ...
இப் பழம்பெயர்களில் சொன்முதல் யகர அட்சரம் நீங்கிவிட்டது.
திருவள்ளுவர் யாண்டு (< யாடு) தைப்பொங்கல். திருவள்ளுவர் திருநாள்!
அது போல், தொல்காப்பியர் திருநாள் சித்திரை வருஷப் பிறப்பு
வேண்டும் என்று கேட்டவர் நாடு நன்கறிந்த தமிழ்ப் பேரா. தமிழண்ணல்.
ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71)
யாண்டுப லவாக நரையில வாகுதல்
யாங்கா கியரென வினவுதி ராயின் - பிசிராந்தியார்
http://www.languageinindia.com/july2019/profrajendrantamilnounscontentscomplete.pdf
“உடையார் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது” – திருவாரூர்க் கல்வெட்டு.
“இவ்வாட்டை மேஷ நாயற்று ஞாயிற்றுக்கிழமை” – உடையார்குடிக் கல்வெட்டு ...
“வருடையைப் படிமகன் வாய்ப்ப’ – பரிபாடல் 11:5 (வருடை – மேழம்; படிமகன் – செவ்வாய்)
2008-ல் தை 1 வருஷப் பிறப்பு என அந்நாள் முதல்வர் மு.க. மாற்றியபோது, பேரா. தமிழண்ணல் எழுதிய கட்டுரை.
யாடு - யாட்டுக் கோட்பாடு தந்த சேரலாதன் (பதிற்றுப்பத்து) - பிறப்பிப்பது யாட்டு, யாண்டு.
http://kilvaanam.blogspot.com/2008/01/blog-post_3433.html
http://viduthalaidaily.blogspot.com/2011/09/blog-post_8010.html
”இனி, ஞாயிற்றின் செலவை வைத்துத் தமிழர்கள் ஆண்டு தொடக்கத்தைக் கணக்கிட்டனர் என்பதைப் பற்றி, முன்னே சுட்டியபடி சான்று காண்போம். சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் - தை முதல் நாளாகும். இன்று தட்சிணாயனம், உத்தராயனம் என்பர். இது மேஷராசி யில் நடப்பதை அனைவரும் அறிவர். மேஷம் என்பது - ஆடு எனும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகும். ஆடு - முன்பு யாடு என்றே வழங்கியது. இதனால் தமிழர்கள் யாட்டை என முதலில் அழைத்து, பிறகு அது மூக்கொலி பெற்று யாண்டு- ஆண்டு என ஆயிற்று. கண்ணகி ஈராறு ஆண்டு அகவையாள் கோவலன் ஈரெட்டாண்டு அகவையான் என மங்கல வாழ்த்துப் பாடலில் குறிக்கப் பெறுகின்றனர். பதிற்றுப் பத்தில் யாண்டு தலைப் பெயர (15) யாண்டு ஓர் அனைய ஆக (90) என வருகிறது. கணவன் மனைவியைப் பார்க்க, ஓராண்டிற்கு ஒரு முறைதான் வருகின்றான். இதைத் தலைவி கூற்றாக, ஓர் யாட்டு ஒரு கால் வரவு (கலி.71) என்று கலித்தொகை குறிப்பிடுகிறது. யாடு (மேடம்) இராசியில் மாறுவதால், யாட்டு என ஆண்டு குறிக்கப்படுவதே முதல் வழக்கு. இன்றும் சனி கிரகம், ஏழரையாண்டு என்பதை ஏழரையாட்டைச் சனி என்றனர். அது மருவி ஏழரை நாட்டுச் சனி எனப் பிழைபட வழங்குகின்றது திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக, விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலம் என (நெடுநல். 160, 161) ஞாயிறு குறிக்கப் படுகிறது. ஆடு - மேட ராசியே முதலாவதாகும். ஆடுதலையாக என்பதற்கு மேடராசி முதலாக ஏனை இராசிகளில் சென்று திரியும் என நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்” யாடு என்பதில் இருந்து தான் யாட்டு, யாண்டு என்ற சங்க இலக்கியச் சொற்கள் பிறக்கின்றன
எனத் தெளிவாக விளக்கும் தமிழண்ணல், யாடு என்பது மேட இராசி என்கிறார் (2008).
சித்திரை விஷுத் திருவிழா பல கோவில்களில் வருஷப் பிறப்பாகக்
கொண்டாடப்பட்டிருப்பது, ஸ்ரீராஜராஜ தேவரின் கி.பி. 998-ம் ஆண்டின்
திருவலஞ்சுழிக் கல்வெட்டால் வெளிச்சமாகிறது. சீவக சிந்தாமணியிலும்
இந்தச் செய்தியைக் காணலாம். ஒவ்வொரு மாதமும், நாளும் ஏதாவது
ஓர் பண்டிகை இருந்துகொண்டே இருக்கும். ஆனால், சித்திரையில் பார்த்தால்
சித்திரை முதல்நாளுக்கான முக்கியத்துவம் பிற நாள்களுக்கு இல்லை.
சித்திரைத் திருநாள் என்று எல்லா தொலைக்காட்சிகளிலும்,
கச்சேரிகள், பட்டிமண்டபங்கள் தமிழ் வருடப் பிறப்பு நாளில் நடக்கின்றன.
மத்யமர்கள் வற்கத்தில் தமிழ்க்கல்வி தாழ்ந்துவரும் வேளையில்
“தமிழின் உயிர் தொல்காப்பியம்; தமிழனின் உயிர் திருக்குறள்” என்று உலகெங்கும்
உணர்வு ஊட்டி, தமிழை ஆழமாகக் கற்க, ஆராய அடுத்த இளந்தமிழ்த்
தலைமுறையை ஊக்குவிக்கும் கடமை நமக்கெல்லாம் நிறைய இருக்கிறது.
இதற்கு, தொல்காப்பியர் இலக்கணம் தந்த மாதங்கள் கொண்ட
வருடப் பிறப்பு நாளில், சித்திரை முதல் நாள், தொல்காப்பியர் திருநாள்
என அரசாணை (G.O) வெளியிட தமிழக முதல்வர்கள் முன்வரவேண்டும்.
அவ்வாறு செய்தல், தமிழண்ணல் அவர்களின் நினைவைப் போற்றுவதாக
அமையும். இலக்கியத்தில் முதன்மைபெற்ற திருக்குறள், திருவள்ளுவர் திருநாள்,
திருவள்ளுவர் தொடர்ஆண்டு என தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம் - அரசும்,
மக்களும். வள்ளுவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் தொல்காப்பியர்.
அவரது திருநாள் என, சித்திரை முதல்நாளை அமைக்க அரசு முன்வர வேண்டும்.
வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் திருநாளை மறைமலை அடிகள்
கொண்டாடினார். அமாவசை, பௌர்ணமி, நட்சத்திரம் எல்லாம் பார்ப்பது
பெருவாரியான தமிழர்க்கு இன்று இல்லாமல் போனது. அவற்றை எல்லாம்
விட்டு, தமிழர்களிடையே புகழ்பெற்று விளங்கும் சித்திரைத் திருவிழா
- இதுதான் தமிழர்கள் தென்கிழக்கு ஆசியாவில் கொடுத்த ஆண்டுப் பிறப்பும் கூட -
தொல்காப்பியர் திருநாள் என ஒரு ஜி.ஓ பெறுதற்கு, தமிழண்ணல் போன்ற,
இன்றைய தமிழறிஞர்கள் முயன்றால் வெற்றி கிட்டும்.
நா. கணேசன்