செந்தமிழ் செல்வி செம்பவளம் எனும் ஹே ஹுவான் ஓக் (Korea - Tamil Links)

433 views
Skip to first unread message

N. Kannan

unread,
Oct 3, 2017, 6:15:17 AM10/3/17
to மின்தமிழ்
தொடக்கம் (1)

1982 மார்ச்சு. சும்மா ஆய்வு, ஆய்வு என்று இருந்தவனை வம்படியாகக் கால்கட்டு போட வைத்துவிட்டனர். வெறும் நானூறு ரூபாய் ஆய்வு உதவித் தொகை பெற்று வந்த என்னையும் நம்பி பெண் கொடுத்தார்கள் எனில் அது பெரிய காரியம் :-)

என் குடும்பம் என்றால் அப்போது 5 அக்காமார்கள், அவர்கள் குடும்பம் அவ்வளவுதான். மாமனார், மாமியார் தொல்லை இருக்காது என்று கொடுத்திருக்கலாம். ஆனால் என் மனைவியின் (சுமி) குடும்பம் பெரிசு. சித்தி, பெரியம்மா, மாமா, அத்தை என எல்லோரும் தொடர்பில் இருக்கும் குடும்பம்.  சுமியின் மாமா பெண் கொரியா போய்விட்டு வந்து கொரிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னது என் காதில் என் மனைவி மூலமாக விழுந்தது. எனவே என் கொரியத் தொடர்பு 1982 - ல் ஆரம்பமாகிறது. (சுமியின் மாமா பெண் ஜெயந்தி தற்போது கொரிய ஆய்வு மையத்தில் பேராசிரியராக உள்ளார். (Vyjayanti Raghavan, Centre for Korean Studies,School of Language, Literature and Culture Studies, JNU. Delhi). இந்தியக் கொரியத்தொடர்பின் மிக முக்கிய புள்ளியாகத் திகழ்கிறார்) 

அதே நேரத்தில் ஜப்பானிய ஆய்வாளர் சுசுமு ஓனோ மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கும் ஜப்பான் மொழிக்குமுள்ள தொடர்பு குறித்து ஆய்வுகள் செய்து வருகிறார். அதாவது நான் மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்த அதே காலத்தில் அவரும் அங்கு இருந்திருக்கிறார். ஆனால் முடிச்சுகள் எப்போது அவிழ்க்கப்பட வேண்டும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

நான் 1985 பிப்ரவரியில் ஜப்பானிய அரசின் உயர் கல்வி நிதி (Monbukagakusho Scholarship) பெற்று மட்சுயாமா நகரில் இருக்கும் எகிமே பல்கலைக் கழகத்திற்கு  பயணப்படுகிறேன். அப்போது அங்கு நானும் முனைவர் சுப்ரமணியனும்தான் தமிழர்கள். எனவே எங்களை உற்சாகப்படுத்த எங்கள் பேராசிரியர் ரியோ தத்சுகவா எங்களிடம் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்குமுள்ள உறவு குறித்துப் பேசினார். ஆய்வாளரான அவர் ஆதாரத்தோடு விளக்க சுசுமு ஓனோ அவர்கள் வெளியிட்டிருந்த ஓர் நூலை எங்களிடம் காட்டினார். அதில் ஏராளமான சங்கத் தமிழ்ச் சொற்கள் ஜப்பானிய மொழியில் புழங்கி வருவதை எடுத்துக் காட்டியிருந்தார் ஓனோ. எனக்குப் பெரிய ஆர்வமாகப் போய்விட்டது. காரணம் நான் இளம்கலை அறிவியல் படிக்கும் போது ‘அறிவியல் தமிழ்’ எனும் பாடத்தை விருப்பப்பாடமாக எடுத்திருந்தேன். அப்போதே கலைக்கதிர் போன்ற பத்திரிக்கைகளுக்கு தமிழில் அறிவியல் சொல்ல ஆரம்பித்திருந்தேன். மதுரைப் பல்கலைக் கழகத்தில் என் தமிழ் ஆர்வத்தைக் கண்ணுற்ற பேராசிரியர் கிருஷ்ணசாமி (பின்னால் துணைவேந்தர்) அப்போது வ.சு.ப.மாணிக்கனார் ஆரம்பித்திருந்த ஓர் அறிவியல் தமிழ் ஏட்டில் என்னை எழுத வைத்தார். பேராசிரியர் ஓனோவின் நூலைக்கண்ணுற்ற பின் ஜப்பானியத் தமிழ்த் தொடர்புகளைத் தேட ஆரம்பித்தேன். 

நிச்சயமாகத் தொடர்பு இருப்பது தெரிந்தது. அவை இருவகையில் தென்பட்டன, ஒன்று புத்தர் நெறி பாற்பட்ட சமயத் தொடர்புகள். அவை கிருஸ்து பிறப்பிற்குப் பின் ஏற்பட்டிருந்த தொடர்புகள். அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. ஊருக்கு ஊர் புத்தர் கோயில்கள். துவார பாலகர்கள் கொண்ட கோயில்கள். இந்திரன், பிரம்மன் போன்றோர் அக்கோயில்களில் துணைத் தெய்வங்களாக சித்தரிக்கப்பட்டனர். மிக முக்கியமாக “தாருமா” எனும் புத்த பிட்சுவிற்கு அதிக முக்கியத்துவம் அக்கோயில்களில் இருந்தன. யார் இந்தத் தாருமா? என்பது பின்னால்தான் விளங்கியது.

புத்த நெறி அங்கு வருவதற்கு முன்பே இந்தியத் தொடர்பு இருந்திருக்கிறது. ஓனோ சென்செய் (பேராசிரியர்) சொல்வது சரி என்று பட்டது. ஏனெனில், ஜப்பானியர்களின் மூதாதையர் வழிபாடு நமது நாட்டார் வழக்கோடு ஒத்திருந்தது. உதாரணமாக, நமது கிராமிய குலதெய்வங்களுக்கு சாராயம் படைக்கப்படும். சுருட்டு கொடுப்பப்படும் (இன்றும் மலேசியப் பினாங்கு கோயில் ஒன்றில் இவ்வழக்கத்தைக் காணலாம்). ஜப்பானிய கிராமங்களில் சிறு சிறு கோயில்களில் ஊதுபத்தி ஏற்றி வைத்து சாராயம் (சாக்கே), சுருட்டு, பிற உணவு வகைகள் படையலாக இன்றளவும் வைக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை அதிசயமானது. இது ஜப்பானில் மட்டுமே காணக்கிடைக்கிறது. 

இந்திய தூரக்கிழக்கு ஆய்வில் ஜப்பான் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. ஏனெனில், தொன்மையான இந்தியச் சீன உறவுகளை இன்றளவும் ஜப்பானே தக்க வைத்திருக்கிறது. உதாரணமாக, சங்க காலத்தில் சீனர்களுக்கும் தமிழ் வணிகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு பட்டுப்பாதை வழியாக இருந்திருக்கிறது. சீன மட்கலங்கள் சேர நாட்டில் கிடைப்பது இதனால்தான். கடைசிச் சோழ அரசர்கள் வரை நாகபட்டிணத்தில் சீன யாத்திரீகர்களுக்காக விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இராஜராஜ சோழன் அமைத்த பெரிய கோயிலில் இருக்கும் தொப்பி வைத்த யாத்திரீகர் ஐரோபியர் அன்று. அவரொரு தூரக் கிழக்கு வணிகராக இருந்திருக்க வேண்டும் என்பது என் யூகம். எனவே பண்டைய இந்தியத் தொடர்பில் இருந்த சீனம் இப்போது சீனாவிலேயே வழக்கொழிந்து விட்டது. ஆனால் அச்சீனம் இன்றும் ஜப்பானில் உயிர் வாழ்கிறது. எனவேதான் பண்டையச் சீன மொழி ஆவணங்களை வாசித்து அறிந்து கொள்ள அறிஞர்கள் ஜப்பானியர் உதவியை நாடுகின்றனர். இங்குதான் போதி தருமர் பற்றி சமகாலத்தில் உற்சாகமாகப் பேசிவரும் பேராசிரியர் Tstuomu Kambe அவர்களின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. சீனத்தில் எழுத்தப்பட்டிருந்த ஆவணத்தை அவர் வாசித்து பொருள் கொண்டு, “தாருமா” என ஜப்பானியர்களால் அழைக்கபடுபவர் பல்லவ இளவல் போதிதருமர் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. எனவே சங்க காலத்தைப் புரிந்து கொள்ள நாம் ஜப்பானியமும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது..... (தொடரும்)

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Suba

unread,
Oct 3, 2017, 6:23:57 AM10/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அருமை கண்ணன்.
இயல்பான நடை மனதைக் கவர்கிறது.

நமது கொரிய-தமிழ் ஆய்வு  முற்சிகளை விளக்கும் சீரியப் பதிவாக இது அமையும் என்றும் நம்புகிறேன்.
நல்வாழ்த்துகள்.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி

Innamburan S.Soundararajan

unread,
Oct 3, 2017, 6:49:28 AM10/3/17
to mintamil, Subashini Kanagasundaram
தொடருக, கண்ணன். இது ஒரு பாமரகீர்த்தி. படிக்கப்படிக்க சுவை கூடுகிறது.
அன்புடன், 
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Oct 3, 2017, 9:50:02 AM10/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
நன்றி இன்னம்பூரான் & சுபா.

கொரியத் தமிழ் தொடர்பு பற்றி நான் பேச ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. It has gained momentum as I expected. ஆயினும் பலருக்கு இதன் நதி மூலம், ரிஷி மூலம் தெரியவில்லை. எனவே காலக்கிரமாக இந்த ஆய்வு பற்றி என் பங்களிப்பைச் சொல்ல உள்ளேன். என் பங்களிப்பு என்பது ஒரு நிலையில் மின் தமிழின் பங்களிப்பாக மாறியது. தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் மேற்கே இங்கிலாந்திலிருந்து கிழக்கே ஜப்பான் வரை பரந்து விரிந்து கிடக்கிறது. நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், இந்த நிகழ்வுகள் எப்படி உருக்கொண்டன எனப் பார்ப்பது சுவையாக உள்ளது.

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Oct 4, 2017, 2:06:13 AM10/4/17
to மின்தமிழ்
பகுதி 2.

நான் நிப்போன் (ஜப்பானியர் தம் நாட்டை அப்படித்தான் அழைத்துக் கொள்கின்றனர்) போன பின் தான் தெரிந்தது, நிப்போன் ஆசியாவின் திட்டிவாசல் என்று (Japan: The gate way of Asia). இந்தியர்களாகிய நாம் ஆங்கில மேலாண்மையில் நமது கிழக்கு நோக்கிய பார்வையை சுத்தமாக மறந்துவிட்டோம். நமது கல்வி ஆங்கில வழியில். நமது சர்வ ஞானமும் ஆங்கிலம் வழியில்! பக்கத்து வீட்டு மலையாள இலக்கியம் என்றால் கூட ஆங்கில வழியிலேயே நமக்குப் புரிகிறது. ஆங்கிலேயர் தந்திரமாக தமிழ், சமிஸ்கிருதக் கல்வியை நம்மிடமிருந்து பிடுங்கி விட்டனர். இழப்பு, நமது வேர்கள் பற்றிய பரிட்சயமே இல்லாமல் போய்விட்டது. அதை இட்டு நிரப்ப உயர்வு நவிற்சியாக தமிழைக் கொண்டாடி சமிஸ்கிருதத்தை பழிக்கத் தொடங்கிவிட்டோம். இழப்பு இரண்டு மொழிப் பாண்டித்தியமும்தான். ஆனால் நிகோங்கோ (ஜப்பான் மொழி) வைப் பேச, புரிந்து கொள்ள நமக்கு ஆங்கிலம் தேவை இல்லை! நான் நிப்போனில் இறங்கியவுடன் என்னை வரவேற்று கவனித்துக் கொண்ட முனைவர்.சுப்ரமணியன் அட்டகாசமாக நிஹோங்கோ பேசினார். எப்படி? இப்படி? என்று கேட்டேன்! பேசுவதற்கே ஆளில்லாத சூழலில் இவர்களோடு பேசிப்பேசி அதுவாக வந்துவிட்டது என்றார். நானும் மெல்ல, மெல்ல பேசத்தொடங்கினேன். உண்மையில் தமிழர்கள் நிஹோங்கோ பேசுவது எளிது. சிக்கலான உச்சரிப்பு அல்ல. ஆனால், நிஹோங்கோ எழுதுவது, படிப்பது என்பது வேறு விஷயம்! ஏனெனில், இம்மொழியின் வரிவடிவம் பண்டையச்  சீனவரிவடிவத்தைக் கொண்டுள்ளதே. உண்மையில் கிழக்காசியா முழுவதுமே சீன வரிவடிவமே ஒரு காலத்தில் கோலோட்சியது. அது சீன அரசியல் மேலாண்மையின் விளைவு. பிற்பாடுதான் ஹங்குல் (கொரியா), வியட் (வியட்நாம்), ஹிரகானா/கதகானா (நிப்போன்) போன்ற வரிவடிவங்கள் தோன்றத் தொடங்கின. இவை ஏன் தோன்றின எனப் பார்த்தால் ஓர் பேருண்மை புரியும். நிப்பொனியர், கொரியர், வியட்நாம் மக்கள் சீனர்கள் போல்தோற்றமளித்தாலும் அவர்கள் உண்மையில் பல்லினக் கூட்டு. எனவே அவர்களது மொழியும் அவர்களது வேர்களைப் பிரதிபலிப்பதாக அமைந்தன. அவ்வகையில்தான் நிஹோங்கோவிற்கும் தமிழுக்குமான உறவு வருகிறது. 

அங்கு எப்படித் தமிழ் போனது? என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான துப்பு கொரியாவில் உள்ளது. இதை பேராசிரியர் காம்பே (Tstuomu Kambe) எனக்கு சென்னையில் விளக்கினார். டாக்டர் ஜான் சாமுவேல் அவரது ஆசியக் கல்வி மையத்தில் ஓர் கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார். Silver Jubilee Celebrations of the Institute of Asian Studies International Seminar on the CONTRIBUTIONS OF TAMILS To THE COMPOSITE CULTURE OF ASIA (16th – 18th January 2011) அதற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். நான் அப்போது கொரியாவிலிருந்தேன். அங்குதான் பேரா. காம்பே அவர்களைக் கண்டேன். அவருக்கு நான் சொன்ன கொரியத் தமிழ் உறவு மிகவும் பிடித்திருந்தது. அது உண்மை என்றார். எப்படி எனக் கேட்டேன். நிப்போன் சரித்திரவாளர்களின் புரிதல் படி தெற்கு நிப்போன் பகுதியில் யாயோயி எனும் இனக்குழு தென் கொரியாவிலிருந்து அரசியல் நெருக்கடியால் இடம் பெயர்ந்து நிப்போனுக்கு குடி பெயர்ந்தனர் என்றார். இந்த இனக்குழு யாரென நாங்கள் தோண்டிப் பார்த்த போது அது தென்கொரியாவில் காயா அரசை உருவாக்கிய ஒரு தென்னகக் குடி என்று புரிந்தது. இவர்கள் மூலமாகவே தமிழ் நிப்போனுக்குள் செல்கிறது. பேரா. ஓனோவின் ஆய்வுகளை வைத்துப் பார்க்கும் போது இவ்விடப்பெயர்வு கிருஸ்து சகாப்தத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றிருக்க வேண்டும். அதனால்தான் சங்கச் சொற்கள் நிரம்ப நிஹோங்கோவில் உள்ளன.  இதை வலுப்பெறச் செய்யும் தகவுகளை பேராசிரியர்கள் மனோன்மணி சண்முக சுந்தரம், சண்முக சுந்தரம் அளிக்கின்றனர். இவர்களை நான் நண்பர் முனைவர் நெடுங்செழியன் ஏற்பாடு செய்திருந்த "உலகப் பண்பாட்டிற்குத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் / இயக்கங்களின் பங்களிப்பு" எனும் கருத்தரங்கில் (மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில், மார்ச்சு திங்கள் 6,7,8, 2008) சந்திக்கிறேன். அங்கும் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். நிஹோங்கோவில் சங்கக் கவிதையை ஒட்டிய ஓர் வடிவு இருப்பதாக இவர்கள் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர். ஆக, சங்க காலத்தில் தொன்நிப்போன் மொழியும், தமிழும் கலந்துரையாடி இருக்கின்றன. அதே காலக்கட்டத்தில் தமிழும் இந்தோ ஆரிய மொழிக் குடும்பதைச் சேர்ந்த சங்கதத்துடன் (சமிஸ்கிருதம்) உறவாடி உயர் இலக்கியங்களை படைத்துக் கொண்டிருந்தது!

மரபணு பரிசோதனை செய்தால் நிச்சயம் இவ்வுறவை நிரூபிக்க முடியும். ஏனெனில் தென்நிப்போனியர் கோடை காலத்தில் நிறம் கருக்கும் போது இந்தியர்கள் போலவே காணப்படுகின்றனர். 

கொரியா பற்றி அப்போது எனக்கொன்றும் தெரியாது. தொலைக்காட்சியில் வரும் கொரிய சித்திரம் உணர்ச்சி வசப்படக்கூடிய மக்கள் என்பதையே காட்டியது. கொரியாவிலிருந்து நிப்பொனுக்கு படிக்கவரும் மாணவர்கள் அடக்க ஒடுக்கமாக இருந்த இடம் தெரியாமல் இருப்பர். நாங்களெல்லாம் ஆங்கில மொழியில் ஆய்வு செய்யும் போது கொரிய மாணவர்கள் மட்டும் நிஹோங்கோவில் தீஸீஸ் எழுத வேண்டும். கொரியாவை நிப்போன் ஆக்கிரமித்து வன்கொடுமை செய்த வரலாறு எனக்கு அப்போது தெரியாது. கொரிய மாணவர்கள் எதுவும் பேசாமல் காரியமே கண்ணாயினர் என்று இருப்பர். கொரியப் பெண்கள்நிப்போனியரை விட அழகு. எனது சகா திருவிக்கிரமன் எப்படியோ கிம் எனும் பெண்ணை கணக்குப் பண்ணிவிட்டான். அந்தப் பெண்ணோடு பேசும் போதெல்லாம் ஏதோ கற்பின் கனலியோடு பேசுவது போல் உணர்வேன். ஏனென்று பின்னால்தான் புரிந்தது. அவர்களுக்கு நிஹோங்கோ ஒரு பெரிய சவால் இல்லை என்று போகப்போகத் தெரிந்து கொண்டேன். கேட்டபோது இருமொழிக்கும் ஆழமான உறவு இருக்கிறது என்றனர். கொரியா பற்றிய என் வியப்பு கூடியது!

நாரா எனும் நகரில் ஒரு மிகப்பெரிய புத்தர் கோயில் உள்ளது. தோடாய்ஜி என்று பெயர் (இங்கு ஜீ என்பது கோயிலைக் குறிக்கும்). அக்கோயிலை நிர்மாணித்தவர்கள் கொரியர்கள் என்றனர். அத்தனை கலை நுணுக்கத்துடன் கூடிய ஒரு பிரம்மாண்டத்தைக் கட்ட வேண்டுமெனில் இவர்கள் எத்தகைய விற்பன்னர்களாக இருப்பர் என்று யோசித்தேன். கோயிலில் இருக்கும் புத்தர் சிலையின் மூக்குத்துளை வழியாக ஒரு மனிதன் உட்புக முடியும் எனில் சிலை எவ்வளவு பெரிசு என யோசித்துக் கொள்ளலாம்!

கொரிய உணவான கிம்சிச்சோறு எனக்கு முதலில் கிடைத்தது ஓசாகா நகரில். எனது நண்பர் யோஷி எனக்காக பிரத்தியேகமாக சமைத்துக் கொடுத்தார். இந்த உணவு பின்னால் என் பிரியமான உணவாக மாறும் என்று நான் அப்போது கனவில் கூட எண்ணவில்லை!

(தொடரும்)

Suba

unread,
Oct 4, 2017, 2:33:38 AM10/4/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
Kannan - forwarding a note from Para aunty..

---------- Forwarded message ----------
From: Para Sundha <paras...@gmail.com>
Date: 2017-10-04 8:24 GMT+02:00
Subject: [MinTamil] செந்தமிழ் செல்வி செம்பவளம் எனும் ஹே ஹுவான் ஓக் (Korea - Tamil Linksஒரு சிறு திருத்தும்
To: Suba <ksuba...@gmail.com>

மனோன்மணி சண்முக சுந்தரம், சண்முக சுந்தரம்

 இலங்கையைச் சேர்ந்த   பேராசிரியர்கள் திரு சண்முகதாஸ் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் 

என வரவேண்டும் 

Oct 4, 2017, 5:00:34 AM10/4/17
to மின்தமிழ்
2017-10-04 8:06 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

 //அதை இட்டு நிரப்ப உயர்வு நவிற்சியாக தமிழைக் கொண்டாடி சமிஸ்கிருதத்தை பழிக்கத் தொடங்கிவிட்டோம். // சமஸ்கிருதத்தை மிக உயர்த்திப் பிடிக்கும்பாங்கும் தமிழைப் படிப்படியாக ஒழித்துக் கொண்டு அங்கே சமஸ்கிருததை நிலையாட்டிய நிகழ்வுகளின் எதிரொலியால் எழுந்த ஒரு எதிர்ப்பு உணர்வு தான் இது. ஆக இத்தகைய விசயங்களைத் தொடும் போது கவனமாக மூலகாரணத்தையும் உணர்ந்து உணர்த்தும் வகையில் நாம் சொல்ல வேண்டிய கடமையும் உண்டு எனக் கருதுகிறேன்.

தொடர் அருமை . தொடர்க

​சுபா​

N. Ganesan

unread,
Oct 4, 2017, 7:51:03 AM10/4/17
to மின்தமிழ்
பேரா. நா. கண்ணனின் கொரிய, ஜப்பானிய நினைவலைகள் சுவையாகச் செல்கின்றன.

On Tuesday, October 3, 2017 at 11:33:38 PM UTC-7, Dr.K.Subashini wrote:
Kannan - forwarding a note from Para aunty..

---------- Forwarded message ----------
From: Para Sundha <paras...@gmail.com>
Date: 2017-10-04 8:24 GMT+02:00
Subject: [MinTamil] செந்தமிழ் செல்வி செம்பவளம் எனும் ஹே ஹுவான் ஓக் (Korea - Tamil Linksஒரு சிறு திருத்தும்
To: Suba <ksuba...@gmail.com>

மனோன்மணி சண்முக சுந்தரம், சண்முக சுந்தரம்

 இலங்கையைச் சேர்ந்த   பேராசிரியர்கள் திரு சண்முகதாஸ் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் 

என வரவேண்டும் 

ஆமாம். இவர்கள் நூல்கள் சில என்னிடமுண்டு.

அண்மையில் நாகர்கோவிலில் இத் தம்பதியரைச் சந்தித்தேன். இருவரிடமும் தமிழ், ஜப்பானிய மொழிகளுக்கு
ஜெனெடிக் உறவுகள் உண்டா என வினவினேன். ஓனோ கட்டுரைகளுக்கு சுவெலெபில் கருத்தும்,
பலவும் பேசினோம். இப்பொழுது ஆஸ்திரேலியாவிலோ, கனடாவிலோ இருப்பதாகச் சொன்னார்கள்.

பேராசிரியர் தம்பதியினர் - மனோன்மணி & சண்முகதாஸ்

நா. கணேசன்

N. Kannan

unread,
Oct 4, 2017, 11:25:19 PM10/4/17
to மின்தமிழ்
2017-10-04 17:00 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:
 //அதை இட்டு நிரப்ப உயர்வு நவிற்சியாக தமிழைக் கொண்டாடி சமிஸ்கிருதத்தை பழிக்கத் தொடங்கிவிட்டோம். // சமஸ்கிருதத்தை மிக உயர்த்திப் பிடிக்கும்பாங்கும் தமிழைப் படிப்படியாக ஒழித்துக் கொண்டு அங்கே சமஸ்கிருததை நிலையாட்டிய நிகழ்வுகளின் எதிரொலியால் எழுந்த ஒரு எதிர்ப்பு உணர்வு தான் இது. ஆக இத்தகைய விசயங்களைத் தொடும் போது கவனமாக மூலகாரணத்தையும் உணர்ந்து உணர்த்தும் வகையில் நாம் சொல்ல வேண்டிய கடமையும் உண்டு எனக் கருதுகிறேன்.

​I know it is politically sensitive to say this way. But Tamil diaspora is wider than the bondaries of Tamilnadu and Indian politics. If you do research on Tamilheritage in South & Far east Asia, at least a minimum knowledge of Sanskrit is needed. It was only the Pallavas, Cholas and Pandiays who spread Sanskrit in those regions.

Kannan

N. Kannan

unread,
Oct 5, 2017, 1:17:35 AM10/5/17
to மின்தமிழ்
மிக்க நன்றி முனைவரே

திருத்தத்திற்கு நன்றி. இத்தம்பதியர் தமிழுக்கோர் சொத்து. இனிமையாகப் பழகக்கூடியவர்கள். முனைவர் மனோன்மணியின் ஆய்வு மிக முக்கியமானது!
வேளாங்கன்னி கோயிலின் முன்பு அவர்களோடு எடுத்துக் கொண்ட படம் இணைத்துள்ளேன்.

நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

N. Kannan

unread,
Oct 5, 2017, 2:55:17 AM10/5/17
to மின்தமிழ்
பகுதி 3

கொரியத் தமிழ் தொடர்பை நாம் புரிந்து கொள்ள, முன்னமே ஆய்வுகள் செய்யப்பட்டு தரவுகள் கிடைக்கும் நிப்போன் தமிழ் உறவைப் புரிந்து கொள்ளுதல் அவசியம். அதனால்தான் சொன்னேன் நிப்போன் ஆசியாவின் திட்டிவாசல் என்று. மேற்குலகம் இவ்வாசல் வழியாகவே இந்தியாவைக் காண்கிறது. நிப்போன் வந்து ஜென் பற்றி அறிய முற்படும் போதுதான், அது இந்தியாவிலிருந்து புறப்பட்ட நெறி என அறிகின்றனர். இன்னும் ஆழமாக அறியும் பொதுதான் இந்த நிப்போனிய “தாருமா”, கொரியாவில் “தல்மா” என்று அழைக்கப்படுகிறார், சீனாவில் “தாமோ” என்று அழைக்கப்படுகிறார், ஆனால் அவரது இயற்பெயர் போதிதருமர் அவரொரு தென்னிந்தியர் (தமிழர்) என அறிகின்றனர். இப்புரிதல் மேற்கத்தியருக்கு மட்டுமன்று. ஆங்கிலமயமாக்கப்பட்ட இந்தியர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் இத்திட்டி வாசலே இந்திய தரிசனத்தை வழங்குகிறது. ஆசியாவில், அது நிப்போன், கொரியா, வியட்நாம், தைவான், தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் எங்கிருந்தாலும் ஆண்களும் மென்மையானவர்களாக இருக்கிறார்கள். பொதுவில் அழுவதற்குத் தயங்குவதில்லை. பெரியவர்களுக்கு பேருந்துகளிலெழுந்து இடமளிக்கின்றனர். பணத்தை இடது கையால் வாங்குவதில்லை. மெதுவாகப் பேசுகிறார்கள், பண்பாக நடந்து கொள்கிறார்கள். ஆனால் மலேசியாவிலிருந்து மேற்கே போகப் போக (ஆங்கிலக் காலனிகள்) இந்த ஆசிய குணம் குறைகிறது. நாம் வெள்ளைக்காரர்கள் போல் ஆகிவிட்டோம் நடை, உடை, பாவனைகளில்! எதற்குச் சொல்கிறேன் எனில் ஆசிய குணமறிய, ஆசியப் பண்பாடு அறிய நாம் மீண்டும் கிழக்கு நோக்கிப் பார்க்க வேண்டியுள்ளது எனும் உண்மையைச் சொல்ல!

சங்க காலத்தில் தமிழன் நிப்போன்வரை போயிருக்க சாத்தியமுண்டா? எனக் கேட்டுப்பார்க்களாம். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களே அதற்குச் சான்றாக அமைகின்றன. வேறு எந்த மொழியில் ஐந்து காப்பியங்கள் இயற்றப்பட்டு அவை அனைத்தும் வணிகர்கள் பற்றியே பேசுகிறது? எந்த மொழியில் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உலக நோக்கு உள்ளது?  அஞ்சுவண்ணத்தார், திசை ஆயிரத்து ஐநூற்றுவர், நூற்றுவர் கண்ணர், மணிகிராமத்தார், நானாதேசிகள் எனும் வணிகக் குழுக்கள் கிருஸ்து சகாப்தத்திற்கு முன்பே கிழக்கும் மேற்கும் போய் வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். இவர்கள் செல்லும் போது பௌத்த மத பிட்சுக்களும், பிக்குணிகளும் (இதே வார்த்தை கொரியாவில் பெண் புத்தநெறியாளர்களைக் குறிக்க இன்றளவும் பயன்படுகிறது) கூடவே பயணப்பட்டு புத்த நெறியை தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரப்பினர். இதற்குச் சான்றாக நாம் 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிமேகலை காவியத்தைச் சொல்லலாம். இதே காலக்கட்டத்தில் நானாதேசிகள் பர்மாவில் ஸ்தாபிதம் செய்த “நானாதேசிகள் விண்ணகரம்” பற்றிய கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன. பூஜாங் பள்ளத்தாக்கில் தமிழ் வணிகர்கள் வந்து போனதற்கான சான்றுகள் பல்லவ கிரந்தத்தில் கிடைக்கின்றன. திசை ஆயிரத்து ஐநூறு அறிந்து வைத்திருக்கின்றனர் எனில் இவர்கள் உலக வியாபாரிகளாக சுற்றியிருக்க வேண்டும். இந்தப் போக்குவரத்துதான் தமிழ் வணிகர்களை, இளம் அரசர்களை, அரச குமாரிகளை தூரக்கிழக்குவரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். நம் கொரிய அரசி பற்றிப் பேசும் போது இதை விரிவாகக் காண்போம்.

இப்படிப் பயணப்படுவோர் தம்மோடு தம் இனம் சார்ந்த சமயம், இலக்கியம், பிற பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச் செல்லுதல் இயல்பு. அப்படித்தான் விஷ்ணு வழிபாடு தென்கிழக்கு ஆசியாவில் பரவி இருக்க வேண்டும். தாய்லாந்தின் பூர்வீகப் பெயர் “சியாம்”. ஷியாமள வண்ணன் என்பது கண்ணனுக்கான பெயர். உலகின் மிகப்பெரிய விஷ்ணு ஆலயம் அங்கோர்வாட் எனும் கம்போடிய நகரில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாஷிங்டன் டி.சியில் அமைந்திருக்கும் இந்தோனீய தூதரக வாசலில் மிக அழகான “சரஸ்வதி” சிலை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதை உலகிலேயே முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனீசியா செய்திருக்கிறது. இதே இந்தோனீசியாவில்தான் பாலி எனும் இந்துக்கள் அதிகம் வாழும் ஓர் தீவு உள்ளது. முளைப்பாரி வைத்து, குலவை கொட்டி இவர்கள் நடத்தும் சடங்குகள் தமிழகத்துச் சடங்குகளிலிருந்து வேறுபட்டது அல்ல.  பிலிபைன்ஸ் தீவுகளில் ஒன்றின் பெயர் “பல்லவா” என்பது. ஸ்ரீவிஜயப் பேரரசின் தமிழி (பிராமி) செப்பேடு பிலிபைன்ஸில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இவையெல்லாம் சங்க காலத் தொடர்பால் விளைந்தவை.

நிகோங்கோ (ஜப்பானிய மொழி)விற்கும் தமிழுக்கும் தொடர்பு இருக்கிறது என்று பேராசிரியர் சுசுமு ஓனோ 350 வார்த்தைகளை ஒப்பு நோக்கி 1985 ல் மதுரையில் நடந்த தமிழாராய்ச்சி மாநாட்டில் பேசினார். அதற்கு முன்னர் கால்டுவெல் இம்மொழிகளுக்கான தொடர்பு பற்றி யூகித்தார். பின்னால் இதை ஆதர்சமாக வைத்து இலங்கையைச் சேர்ந்த முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தோக்கியோ பல்கலைக் கழகத்தில் செய்த ஆய்வுகள் வெறும் வார்த்தைகளைத் தாண்டி நிப்போனிய இலக்கியமே சங்கத் தமிழ் இலக்கியத்தின் சாயல் கொண்டு இருப்பதாக நிரூபித்தார். நிஹோங்கோ இலக்கியத்தில் மிகத்தொன்மையானது என அறியப்படும் ”மன்யோஷூ” கவிதைகள் சங்க இலக்கியச் சாயல் கொண்டவை என்றும், அதை விளங்கிக்கொள்ள தொல்காப்பிய சூத்திரங்கள் உதவுகின்றன என்றும் நிரூபித்தார். இக்கவிதைகளின் முதல் தொகுப்பை அவர் கிபி 2000 ஆண்டில் வெளியிட்டார். அதன் இரண்டாம் தொகுதியை விரைவில் வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார். கிபி 759 சேர்ந்தவை என நம்பப்படும், “பத்தாயிரம் இலைகள்” எனும் மன்யோஷூ (மான் என்றால் 10,000 என்று பொருள்) கவிதைகள் பேசும் இச்செறிப்பு என்பது ஓர் தமிழ் வழக்கமாகும். களவியல் படி இல் தாண்டி வெளியே சென்ற தன் பெண்ணின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் தாய் அவளை வீட்டில் சிறை வைப்பது இல் + செறிப்பு (இச்செறிப்பு) ஆகும். இது மன்யோஷூ கவிதையில் உள்ளது. ஆயின் இதன் பொருளை துலங்க வைப்பது சங்க மரபுச் செறிவு ஆகும். அது தெறியாவிடில் இக்கவிதைகளைப் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் முனைவர் மனோன்மணி. தமிழின் மிகப்பெரிய வரம், சங்க காலத்தில் இருந்த மொழி, அதன் இலக்கியங்கள் இன்றளவும் சீர்கெடாமல் இருப்பதுதான். இதைத்தான் சுந்தரம் பிள்ளை, “உன் சீரிளமைத் திறம் வியந்து, செயல்மறந்து வாழ்த்துதுமே” என்று வாழ்த்துகிறார். எப்படி வாழும் கிழக்காசியப் பண்பாடு மறந்து போன தமிழர் விழுமியங்களை மீட்டெடுக்க உதவுகின்றனவோ அது போல பொருள் புரிந்து கொள்ள முடியாத தூரக்கிழக்கு இலக்கியத்தை தொன்தமிழ் மரபு கொண்டு புரிந்து கொள்ள உதவுகிறது.

எனவேதான் தமிழின் செம்மை புரிய கிழக்கே நோக்க வேண்டியது அவசியமாகிறது!

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் நிப்போன் - தமிழ் உறவு பற்றிய நேர்காணல்

Suba

unread,
Oct 5, 2017, 3:15:23 AM10/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-05 8:55 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

​நமது தொடங்கப்பட உள்ள பௌத்த ஆய்வுகளுக்கு இது தகுந்த அரிமுகத்தைத் தருகிறது.​

​மிகச் சிறப்பாக வளர்கிறது தொடர்.

சுபா​
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

N. Kannan

unread,
Oct 5, 2017, 5:43:53 AM10/5/17
to மின்தமிழ்
நன்றி!

நா.கண்ணன்

N. Kannan

unread,
Oct 5, 2017, 5:44:32 AM10/5/17
to மின்தமிழ்
நன்றி இன்னம்பூரான்.

நா.கண்ணன்

--

N. Kannan

unread,
Oct 5, 2017, 10:45:39 PM10/5/17
to மின்தமிழ்
பகுதி 4

இத்தொடர் எழுதுவதற்கோர் முக்கிய காரணமிருக்கிறது. நான் கொரியாவில் காலடி வைத்த ஜூன் 2003 லிருந்து கொரியத் தமிழ் உறவு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அது மெல்ல, மெல்ல எப்படி வடிவம் கொள்கிறது என்பதைக் காலக்கிரமத்தில் சொல்கிறேன். ஆனால் அதற்கு முன், கொரிய இளவரசி ஓர் தமிழச்சியாக இருக்க வாய்ப்புண்டு என்று சொன்னவுடன் தமிழக ஊடகங்கள் உற்சாகத்தில் குதிக்கின்றன. ஏதோ கொரியாவே தமிழர்களின் வாரிசு என்பது போல். அதை அப்படிப் பார்க்கக்கூடாது. இந்த ஆய்வு சுட்டுவதெல்லாம் பன்னெடும் காலமாகத் தமிழன் கடலோடி பல்வேறு தேசங்களுக்குப் போயிருக்கிறான். அச்சமயங்களில் இவனது மொழியும், பண்பாடும், சமய நம்பிக்கைகளும் சென்ற இடங்களில் பரவி இருக்கின்றன என்பது மட்டுமே. 

சங்க காலத்தில் மனிதன் கிழக்கே நிப்போன் (ஜப்பான்) வரை போயிருக்க முடியுமா? என்பதுதான் நாம் சந்தேகமாகக் கேட்கும் கேள்வி. ஆனால் அதற்கும் முன், அதாவது கற்காலத்தில், குறிப்பாக பெருங்கற்காலத்திலேயே மனிதன் உலகம் சுற்றியிருக்கிறான் என்பதை நிரூபிக்க முடியும். உதாரணமாக பெருங்கற்கால மக்கள் இறந்தோருக்கு கல்திட்டு (டோல்மன்) அமைத்து மரியாதை செய்வது வழக்கம். இந்தக் கல்திட்டுகள் இங்கிலாந்து தொடங்கி நிப்போன்வரை ஒன்று போல் உள்ளன. அது எப்படி? சுவாரசியமாக இந்தியாவிலேயே அதிக அளவு கல்திட்டுகள் தமிழகத்தில்தான் உள்ளன. ஒன்று தமிழர்கள் அக்காலத்திலேயே கிழக்கும் மேற்கும் சென்றிருக்க வேண்டும், அல்லது ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதன் கடற்கரைத் தாவல் எனும் முறையில் சிறு, சிறு படகுகள் மூலம் மெல்ல, மெல்லக் கரைவிட்டுக் கரை தாவி பரவியிருக்க வேண்டும். மனிதப் பரிணாமத்தில் பல்வேறு சமயங்களில் கடல் குறைந்தும், சில நேரங்களில் உறைந்தும் இடப்பெயர்விற்கு வழி விட்டு இருக்க வேண்டும். இல்லையெனில், மேற்கிலிருந்து கிழக்கு வரை கல்திட்டுகள் எப்படி ஒன்றேபோல்  அமையும்?

தமிழர்களையே எடுத்துக் கொள்வோம். இவர்களுக்கு முக்கிய அடையாளமாக தோலின் நிறம் கருப்பு என்றாலும் இக்கருப்பு ஆப்பிரிக்கக் கருப்பிலிருந்து வேறு படுகிறது. அட்டைக் கரியிலிருந்து மாநிறம் சிவப்பு என்று பல்வேறு வர்ண பேதங்கள் உள்ளன. அதே போல் தமிழர்களின் முகச்சாயலிலும் ஆப்பிரிக்க முகமும், மலைவாழ் மக்கள் முகமும் (இது ஆஸ்திரேலிய பழங்குடி முகம் என மானுடவியல் பிரிக்கிறது), தெற்காசிய சீன முகச்சாயலும், ஐரோப்பிய மங்கோலிய முகச்சாயலும், அரேபிய மக்களின் முகச்சாயலும் தெரிகின்றன. இது எப்படி சாத்தியம்? ஒன்று திரை மீண்டு வந்த தமிழன் பல்வேறு மரபணுக்களை தென்னனகத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். இல்லை, பல்வேறு இனக்குழுக்கள் தமிழ் மண்ணைப் பண்டு தொட்டு தொட்ட வண்ணமிருக்க வேண்டும்! சங்ககாலக் காப்பியங்கள் எல்லாம் கிரேக்க, ரோமானிய இலக்கியத்தின் தாக்கமாக எழுந்தவை என்பார் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி. அப்படி யெனில் பண்பாடுகள் தோன்றும் முன்பும், தமிழ்ப் பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையிலும் தமிழர்கள் பிறநாட்டுத்தொடர்பில் இருந்திருக்கின்றனர் என்றுதான் பொருள். சில கிரேக்கப் பெயர்கள் சங்க இலக்கியத்திலுள்ளன என்பார் இ.பா. மேலும் முத்து வியாபார நிமித்தம் பாண்டிய மன்னர்களின் மெய்காப்பாளர்களாக கிரேக்க ரோமானியர்கள் (யவனர்கள்) இருந்தனர் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது.

இந்தியாவிலேயே மற்ற இனங்களுக்கு இல்லாத பெருமை தமிழர்களுக்கு உண்டு. இவர்களது கடல் வழி வணிகம் மிகப்பிரபலமாக இருந்ததால்தான் இந்தியாவின் தொன்மை மிகு காவியங்களான இராமாயணமும், மகாபாரத்தமும் பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பேசுகின்றன. பண்டு என்றால் பழமை. பண்டு என்பதிலிருந்து பாண்டியன் என்ற பெயர் வருவது போல், பாண்டவர் என்ற பெயரும் வந்திருக்க வாய்ப்புண்டு. இதே ஏரணம் (லாஜிக்) கொண்டு சிந்தித்தால் கடலோடித் தமிழன் கிழக்கே கொரியா, நிப்போன் சென்றிருக்க வாய்ப்புண்டு. சென்ற இடத்தில் இனக்கலப்பு செய்யவும், மொழி, கலாச்சார பரிவர்த்தனை செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படித் தமிழ் மண்ணில் இனக்கலப்பு இருந்தாலும் நாம் தமிழர்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கிறோமோ அதுபோல் கொரியர்களும், நிப்போனியரும் இனக்கலப்பு இருந்தாலும் அவரவர் இன அடையாளத்தோடு வாழ்கின்றனர். 

நாம் நோக்க முற்படுவதெல்லாம் தமிழனின் கிழக்கு நோக்கிய பயணத்தின் தொன்மையை. அதன் சுவடுகளை! அதன் மூலம் நமது பண்டைய பெருமையை மீட்டுடெத்தல்! அதன் வழியாக சமகாலத் தமிழனுக்கு நம்பிக்கை ஊட்டல். அவனை உலகக் குடிமகனாக மாற்றுதல். பிற கலாச்சாரங்களோடு நல்லுறவு கொள்ளச் செய்தல், முன்பு போல் வணிகப் பொருளாதாரத்தில் மேம்படச் செய்தல். இது இக்காலக்கட்டத்தில் அவசியமாகப் படுகிறது. ஏனெனில், பன்னாட்டு வியாபாரம் என்பது சந்தையை அடிப்படையாகக் கொண்டு பிற நாட்டு வளங்களைச் சுரண்டுவதாக உள்ளது. இதனால் தமிழன் கொஞ்சம் மிரண்டு போயுள்ளான். ஆனால், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எனும் நிலைக்கு அவன் ஆளாகி விடக்கூடாது. எல்லா இயக்கங்களின் பின்புலத்தையும் கவனமாகப் பார்த்து இவன் வலுப்பெற வேண்டும். உதாரணமாக, சீனர்களைக் கண்டு தமிழர்கள் மிரண்டு போயுள்ளார்கள். இளைஞர்களிடையே ஓர் எதிருப்புணர்வைக் காண்கிறேன். ஆனால் சீனர்களும், தமிழர்களும் மிக நல்ல வாணிப நட்புறவில் இருந்திருப்பதை நம் சரிதம் சொல்லும். நமக்கும் சீனர்களுக்கும் எப்பகையுமில்லை. ஆயினும், சுதந்திரமடைந்த பின் ஏற்பட்ட சீன இந்திய மோதல் நமக்குள் ஓர் சீன பீதியை உண்டாக்கியுள்ளது. அது அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு இத்தகைய ஆய்வுகள் தேவை.

சீனர்கள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டுகிறார்கள் என்றொரு புரளி. ஆனால், சங்ககாலத்தில் தமிழன் ரோமானியப் பேரரசின் பொருளாதாரத்தையே வணிகப் பெருக்கால் ஆட்டம் காண வைத்திருக்கிறான் என்றால் நம்மால் நம்பவா முடிகிறது? நாணயவியல் நிபுணர் தினமலர் கிருஷ்ணமூர்த்தி எழுதுகிறார், “ஒரு காலத்தில் மிளகு, ஏலக்காய், முத்து, பட்டு வியாபாரம் மூலம் ரோம சாம்ராஜ்ஜியத்தில் இருந்த தங்க நாணயங்களையெல்லாம் தமிழன் கொண்டு வந்து விட்டான். அதனால் பீதியடைந்த ரோமப்பேரரசு தமிழ் நாட்டோடு கூடிய வணிகத்தைத் தடை செய்தது!” என்று. அதாவது சமகாலத்தில் பேசப்படும் டிரேட் எம்பார்கோ என்பது சங்க காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. வியாபார நிமித்தமாகவே இராஜேந்திர சோழன் கடாரம் மீது போர் தொடுக்கிறான். தமிழரின் வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை போட்ட ஸ்ரீவிஜய மன்னர்களின் கொட்டத்தை அடக்க தமிழகத்திலிருந்து பல நூறு மைல் கடல் பயணத்தை மேற்கொள்கிறான் சோழன். மேலும், மேற்கிலிருந்து வந்த தங்கம் தடைபட்டபோது புதிய தங்க மார்க்கம் தேடி மலேசிய மண்ணைத் தொட்டு இருக்கிறான். மலேசியாவிற்குப் பண்டையப் பெயர் “ஸ்வர்ண பூமி” என்பது. அதாவது தங்கம் விளையும் நாடென்பது பொருள்.

வணிகம் என்பதே தமிழ்ப் பண்பாட்டை உயர்த்தியிருகிறது. அதுவே மொழி மேன்மைக்கும், பண்பாட்டுச் செழுமைக்கும் வித்திட்டிருக்கிறது. மறந்து போன கடல் மேலாண்மையை தமிழன் மீட்டெடுக்க வேண்டும். அதற்கான திறவுகோல்தான் இத்தகைய ஆய்வுகள்.

(தொடரும்)

Suba

unread,
Oct 6, 2017, 9:43:36 AM10/6/17
to மின்தமிழ்
2017-10-06 4:45 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

​இந்தப் பதிவில் கல்திட்டை பற்றிய கருத்தும் தமிழனின் திரைகடல் ஓடி தேடிய திரவியம் பற்றிய கருத்துக்களும் முக்கியமானவை. பாராட்டுக்கள். தொடர்க.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Oct 6, 2017, 11:39:47 PM10/6/17
to மின்தமிழ்
பகுதி 5

தமிழனின் கடல் வாணிபத்தோடு அவன் தமிழ் மண்ணில் கண்ட கலாச்சாரமும் விற்பனை ஆகிறது. சங்கம் மருவிய காலத்தில் பௌத்த, சமண நெறிகள் தமிழகப் பண்பாட்டிற்கு வளம் சேர்த்தன. அதன் பயனாய் உலகிற்கே பயனளிக்கக் கூடிய நன்னூல்கள் தமிழில் இயற்றப்பட்டன. அவை சொல்லும் கருத்து தென் கிழக்கு ஆசியா, தூரக்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளுக்கு பௌத்தம் பரவிய போது கொடையாகக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக தனிமனித ஒழுக்கம் பற்றி பௌத்தம் அதிக அக்கறை கொள்கிறது. சீனாவிலிருந்து கொரியா, ஜப்பானுக்கு வந்த கன்பூசியன் சித்தாந்தம் சமூக அமைப்பு பற்றி அக்கறை கொள்கிறது. எனவே பௌத்த, கன்பூசியனிசம் இவையிரண்டும் சேர்ந்து தூர கிழக்கு நாடுகளான கொரியாவையும் நிப்போனையும் (ஜப்பான்) சீர்மிகு சமுதாயங்களாக மாற்றி இருக்கின்றன. ஒரு உதாரணம் காண்போம். சமூக மேம்பாடு என்பது தனிமனித ஒழுக்கமின்றி நடைபெறாது. அதனால்தான் வள்ளுவம் ஒழுக்கம் பற்றி மிக அழுத்திச் சொல்கிறது.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

உயிரை விட ஒழுக்கமே மேல் என்று சொல்லும் அளவு ஒரு காலத்தில் தமிழகம் ஒழுக்கத்திற்கு உயர்வு கொடுத்து நடந்திருக்கிறது. ஆயின் காலப்போக்கில் இந்த நல்ல பண்பு தமிழர்களிடமிருந்து தப்பிப்போய் சமுதாயம் பல்வேறு சீரழிவுகளைக் கண்டிருப்பது கண்கூடு. ஆயின் இன்றளவும் ஒழுக்கத்தின் உயர்வு நிப்போனில் உயிரைவிட மேலாகக் கருதப்படுகிறது. ஓய்வூதியச் சம்பளம் வாங்கிக் கொண்டு வீடு சேரும் பல முதியவர் கைப்பையை காசோடு டாக்சியில் விட்டு விட்டு வீடு போய் விடுவது வழக்கம். ஆனால் நாணயம் மிக்க டாக்சி ஓட்டுநர்கள் அப்பணத்தை எப்பாடு பட்டாவது உரியவரிடம் சேர்த்து விடுவது வழக்கம். இது புகழ்ச்சி அல்ல. நடைமுறை. தினம் செய்தித்தாளில் காணலாம். ஒருமுறை ஒரு முதியவர் தோக்கியோ பெருநகர் கட்டிடத்திலிருந்து தனக்கு வந்த காசுகளை கைதவற விட்டுவிட்டார். வீதி முழுவதும் காசு பறக்கிறது. தமிழகமாக இருந்தால் அடுத்த நிமிடம் அவ்வளவு காசும் காணாமல் போயிருக்கும். ஆனால் தோக்கிய நகர மக்கள் ஒழுக்கம் உயிரைவிட உயர்வானது எனக்கருதியதால் அத்தனை பணத்தையும் எடுத்து அடுக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு தத்தம் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டனர். இது சங்க காலத்தில் நடந்த நிகழ்வல்ல 1987 -ல் தோக்கியோவில் நடந்தது. பத்திரிக்கையில் வந்த சேதி. 

நாணயம், ஒழுக்கம் என்பதின் உயர்வு கருதி வள்ளுவம் கவரிமான் போல் மானமுடன் வாழ்வர் தமிழர் என்று சொல்கிறது. 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா 
ருயிர் நீப்பர் மானம் வரின்

ஆயின் சமகால தமிழ்ச் சமுதாயத்தைக் கண்ணுறும் எவருக்கும் இம்மாதிரிப் பண்புகளிலிருந்து தமிழன் தவறிக் கெட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது தெரியும். ஆயின் மிக சமீபத்தில்கூட கொரிய பிரதமர் ஒருவர் மானம் பெரிதென்று மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். நிப்போனியர் இதற்கென வயிற்றைக் கிழித்துக் கொண்டு சாகும் ஒரு வழக்கத்தை வைத்திருக்கின்றனர். அதற்குப் பெயர் “ஹிரக்கரி” என்பது. இப்பண்புகள் பௌத்தம் தூரக்கிழக்கிற்கு போனபோது போயிருக்க வேண்டும். ஏனெனில் சமகாலத்தில் பௌத்த நெறிகளை உலக அளவில் பரப்ப தைவான் நாட்டைச் சேர்ந்த சென்யென் (Cheng Yen) எனும் பிக்குணி Tzu Chi Foundation எனுமோர் அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இந்த அம்மையாரின் பொன்மொழிகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அதைத் தமிழில் ஆக்கும் முயற்சியில் இருக்கிறேன். ஒவ்வொரு பொன்மொழியும் அப்படியே நாலடியார், திருக்குறள், பழமொழி நாற்பது இன்னபிற நீதி நூல்களில் உள்ளவாறே இருப்பது கண்டு அதிசயத்தேன். அப்படியெனில் இந்த நல்ல பழக்கத்தை, பண்புகளை பௌத்தம் உலகெங்கும் விதைத்துள்ளது. அது தென்கிழக்கு ஆசியாவில் ஆழப்பதிந்துள்ளது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

இதை நோக்குங்கால் தமிழகத்தில் சங்கத்தின் மீட்டுருவாக்கம் மீண்டும் நிகழ வேண்டும் என மனது விழைகிறது. பௌத்தம் பரவிய நாடுகள் இந்த நல்லொழுக்கங்களைப் பேணி உலகில் உயர்வுற்று இருக்கும் போது தமிழன் இதையெல்லாம் மறந்து ஏன் அல்லலுற வேண்டும்? என மனது வருத்தமடைகிறது!

தொடரும்

Suba

unread,
Oct 7, 2017, 6:55:13 AM10/7/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
அருமை கண்ணன். இந்த ஒழுக்கம் என்பது தற்காலச் சூழலில் தமிழ் மண்ணில் மறைந்து விட்டது. வெளிப்படையான திருட்டுகள் நடக்கின்றன. மனிதன் ஏமாற்றுவதை ஒரு கலாச்சாரமாகக் காண்கிறான். கெட்டிக்காரத்தனம்..வாழத்தெரிந்தோர் என புகழ்கிறான்... வைதீக அமைப்பு தமிழ்ச் சிந்தனையை பாழ்படுத்தி விட்டதன் எதிரொலி இது.

நாளை பௌத்த மறுமலர்ச்சி மானாடு ஒன்று சென்னையில் நடைபெறுகிறது. இத்தககைய நிகழ்வுகள் சிந்திக்கும் மறுமலர்ச்சியை தமிழருக்கு ஏற்படுத்தலாம்.

suba

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Oct 8, 2017, 12:35:09 AM10/8/17
to மின்தமிழ்
பகுதி 6

நிப்போனுக்கும் கொரியாவிற்கும் உள்ள தொடர்பு பங்காளிகள் தொடர்பு. கட்டிக் கொள்வார்கள், பின் சண்டை போடுவார்கள். ஆரம்ப காலத்தில் காயா அரசை நிர்மாணித்த இந்தோ கொரிய மக்கள் வடக்கிருந்து வந்த பகைமை காரணமாக தெற்கே போய் நிப்போனில் நுழைந்து அம்மக்களோடு கலந்து விடுகின்றனர். இக்கலப்பினால்தான் நிகோங்கோவிற்கும் தமிழுக்கும் சாயல் இருக்கிறது. அது சங்ககாலக் கலப்பு. கொரியப் பெண்கள் நிப்போனியரை விட அழகாக இருப்பதால் பெரும்பாலான நிப்போன் அரசர்கள் கொரியாவிலிருந்து பெண் எடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அதே நேரத்தில் நிப்போன் என்பதோர் தீவு. தீவான்களுக்கே உரிய உயர்வு நவிற்சியின் காரணமாக கொரியாவைக் கைக்கொள்ள நிப்போனிய அரசுகள் தொடர்ந்து போரிட்டு இருக்கின்றன. ஆனால் வெல்ல முடியவில்லை. மெய்ஜி அரசர் காலக் கட்டத்தில் ஓர் முக்கிய நிகழ்வு இப்பிரதேச சரித்திரத்தையே மாற்றி விடுகிறது. 

கொரியா, நிப்போன் இரண்டும் புத்த நேறியில் அமைக்கப்பட்ட அரசுகள் என்றாலும் 16ம் நூற்றாண்டில் (கி.பி 1543) நிப்போன் கரையைத் தொட்ட போர்த்துக்கீசிய பாதிரிகளை நிப்போன் ஏற்றுக் கொண்டது. அவர்களிடமிருந்து துப்பாக்கி சுடும் பழக்கதைக் கற்றுக் கொள்கிறது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்குப் பின் (கிபி 11653) டச்சுக்காரர்கள் கொரியத் தீவான ஜேஜு தீவில் கப்பல் தரை தட்டி இறங்குகின்றனர். நிப்போனியர் ஐரோப்பியர்களுக்கு கொடுத்த வரவேற்பை கொரியர்கள் தரவில்லை. மாறாக அவர்களைச் சிறை வைத்தும் பல நேரங்களில் சித்திரவதை செய்து கொன்றும் இருக்கின்றனர். மெய்ஜி அரசு நிப்போனில் கொண்டு வந்த ஐரோப்பிய சீர் திருத்தம் நிப்போனை தொழில் நுட்ப, பண்பாட்டு வளர்ச்சியில் முன் தள்ளியது. இதன் பயனாய் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 35 வருடங்கள் கொரியா நிப்போன் கைவசம் இருந்தது. 1945 -ல் நிப்போனியப் படைகள் அமெரிக்க நெருக்குதலால் விலகும் போது கொரியா முன்னேற முடியாத வண்ணம் அழிவுகளைச் செய்துவிட்டுச் சென்றது. இது கொரிய-நிப்போனிய உறவில் மிகவும் கறை படிந்த பக்கங்கள். இதனால் இன்றளவும் இவ்விரு நாடுகளுக்கிடையே பாகிஸ்தான் - இந்தியா உறவு போன்ற ஒரு நெருடலான உறவே சித்தித்து இருக்கிறது. எனவே நான் 1989 ல் நிப்போனை விட்டுக் கிளம்பும் வரை கொரியாவைப் பற்றிய நல்ல எண்ணங்களை நிப்போன் எனக்கு உருவாக்கித் தரவில்லை. பின்னால் நான் டாய்ச்சுலாந்து (ஜெர்மனி) போன போது அந்த நாட்டிற்கும் போலந்து நாட்டிற்கும் இத்தகைய உறவு இருப்பதை அவதானித்தேன். எப்படி நிப்போனியர் தன்னை உயர்வாகக் கருதுகின்றனரோ, அதே போல் டாய்ச்சுலாந்தர் தன்னை உயர்வாகவே எண்ணுவதைக் கண்ணுற்றேன்.

நான் நிப்போனில் இருந்த காலத்தில் கடற்சூழல் வேதியியலில் ஆய்வுகள் செய்தேன். எப்படி நமது விவசாய, தொழில்முறை வேதிமங்கள் (உம். பூச்சி கொல்லிகள்) பல்லாயிரம் மைல்கள் தாண்டிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன என்பது என் ஆய்வு. மேலும் அரிசி எண்ணை எடுக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட ஓர் வேதிமக் கசிவு 2000 பேரை நச்சேற்றிய நிகழ்வு குறித்த என் ஆய்வு உலக கவனத்தைப் பெற்றது. அதுவே என்னை டாய்ச்சுலாந்திற்கு இட்டுச் சென்றது. 1989 லிருந்து 2003 வரை நான் கொரியா பற்றி அதிகம் சிந்திக்கவே இல்லை. எனது நிப்போன் நண்பர்கள் என்னைக் காண டாய்ச்சுலாந்து வருவதும், நான் கருத்தரங்கில் கலந்து கொள்ள நிப்போன் செல்வதுமாக இருந்தது. ஆனால் எனது ஆய்வு நகர்வுகளை ஒரு கொரிய ஆய்வாளர் கண்காணித்து வருகிறார் என்பது அப்போது எனக்குத் தெரியாது. அவர்தான் ஓ ஜே ரியோங். இவருக்கு என்னைக் கொரியாவிற்கு அழைத்து வர வேண்டுமென்ற ஆசை. அதைச் சொல்ல கீல் நகருக்கு ஒருமுறை விஜயம் செய்தார். அப்போது கீல் நகரில் ஒரு கொரிய உணவகம் இருந்தது. அதனால் அவரை நல்லமுறையில் கவனித்துக் கொள்ள முடிந்தது. அதன் பின் அவர் தொடர்ந்து என்னை கொரியா வருமாறு அழைக்க 2003 ஜூன் மாதம் நான் கொரியாவிற்கு அறிஞர் குழு (Brain Pool) எனும் அமைப்பின் கீழ் அழைக்கப்பட்டேன். அதன் பிரகாரம் கொரியாவின் தலை சிறந்த கடலியல் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனம் (KIOST - Korean Institute of Ocean Science and Technology), ஆசிய ஐக்கிய நாடுகள் சபையின் (APEC -Asia Pacific Economic Cooperation) ஆதரவில் நடத்தி வந்த கடற்சூழலியியல் பயிற்சி மையத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றேன். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சென்ற நான் அங்கு எட்டு ஆண்டுகள் தங்குவேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கும் தென்னாட்டிற்கும் ஒர் ராசி உண்டு போலும்! நிப்போனின் தென்தீவான ஷிகோகுவின் தலை நகரான மட்சுயாமாவில் படித்து எனது இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பெற்றேன். கொரியாவின் தென்கரையான கோஜே எனும் நகரில் அமைந்த தென்கரை கடலாய்வு மையத்தில் வேலை பார்த்தேன்!

தென்கொரியா வந்த சில நாட்களில் தெருவில் நடந்த போது ஒரு பெண்ணின் குரல் “அப்பா” என அழைத்தது. குடும்பத்தை விட்டு வந்திருந்த எனக்கு அது என் பெண் அழைப்பது போலிருக்க சட்டெனத் திரும்பினேன்! வேறொரு சிறுமி வேறொரு தந்தையை அழைத்துக் கொண்டு இருந்தாள்! ம்ம்ம்..ஆனால் நான் அப்பா என்றுதானே கேட்டேன் என்ற சந்தேகம் வந்து விட்டது எனக்கு! கொஞ்ச தூரம் போனால் இன்னொரு சிறுவன் தன் அன்னையை “அம்மா” என்று அழைத்தான். அடடா! இது தற்செயல் அல்ல, இவர்கள் தாய் தந்தையரை தமிழர்கள் போல் அப்பா - அம்மா என்றே அழைக்கின்றனர் எனப் புரிந்து கொண்டேன். தன் சுட்டு, பிறர் சுட்டு எனத் தமிழில் வரும் ‘நான்’ ‘நீ’ என்பது அதே பயன்பாட்டில் இருப்பதையும் கண்டேன். மேலும் சில பயன்பாட்டு ஒலிகள் அப்படியே தமிழ் போல் ஒலிப்பதைக் கண்டேன். உதாரணமாக ஒரு குழந்தையைப் பார்த்து இங்கே வா! என அழைப்பது போலவே அவர்களும் ‘இது வா’ என்ற போது ஆச்சர்யப்படுப் போனேன்.  நிஹோங்கோ (ஜப்பானிய மொழி) - கொரிய உச்சரிப்புகள் ஒன்று போல் பட்டாலும் அங்கு இவ்விதப் பயன்பாட்டை நான் காணவில்லை. இதில் ஏதோ அதிசயம் இருப்பதை உணர்ந்தேன். முன்பே வீட்டில் இத்தொடர்பு பற்றி என் மனைவியின் குடும்ப உறவுகள் பேசிக்கொண்டது நினைவிற்கு வந்தது. அப்போது, முனைவர் வைஜெயந்தி ராகவன் இத்துறையில் தேறி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் ஆகிவிட்டார் என்று தெரியாது. அதைவிட ஆச்சர்யம் எங்களுக்கெல்லாம் தமிழ் கொரியத் தொடர்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர் கொரிய மொழியில் புலமை பெற்ற பின்பும் இவ்விரு மொழித்தொடர்பு பற்றி சிந்திக்க வில்லை. சமீபத்தில் ஒரு கருத்தரங்கு விஷயமாகப் பேசிக்கொண்ட போதுதான் அவர் ஆச்சர்யப்பட்டு என் ஆய்வை சிலாகித்துப் பேசினார். 

நான் கொரியர்களிடம் இது பற்றி விசாரித்த போது அவர்கள் தாங்கள் மங்கோலிய வம்சாவழியினர் என்றும், இந்தியாவிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்றனர். ஏதோ முரண்பாடு இருப்பதை உணர்ந்தேன். இதே காலக்கட்டத்தில் கொரியாவைச் சேர்ந்த ஜுங் நாம் கிம் என்பவர் என்னோடு மின்னஞ்சல் தொடர்பில் வந்து இவ்விரு மொழிகளுக்குமுள்ள தொடர்பு பற்றிப் பேசத்தொடங்கினார். கொரிய - தமிழ் விளிச்சொற்கள் ஏறக்குறைய அப்படியே இருப்பதைக் காட்டினார். மேலும் எப்படித் தமிழ் வரலாற்றை நாம் மூவேந்தர் வரலாறு (சேர, சோழ, பாண்டியர்) என்கின்றோமோ அது போல் கொரிய சரிதமும் மூவேந்தர் வரலாறு என்றே செப்புகிறது (சம்யூஉசா) என்றார். ஒரு படி மேலே போய் கொரியாவிலுள்ள ‘சொல்லா’ எனும் வட்டாரம் சோழர்களைக் குறிக்கிறது. எப்படிக் கடாரம் கொண்ட சோழன் இருந்தானோ அது போல் சோழர்களின் ஆகக்கிழக்கு பாசறையாக கொரியா இருந்தது என்றார். ஜுங் நாம் கிம் செம்மொழி மாநாட்டில் இச்சேதிகளை வெளியிட்டவுடன் அவர் மிகவும் போற்றப்பட்டு ‘பேராசிரியர்’ எனும் பட்டத்தையும் ஊடகங்கள் வாயிலாகப் பெற்றார். ஆனால், கிம் அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர். கனடாவில் வசிக்கிறார். ஒரு நாள் பேருந்துப் பயணத்தில் ஈழத்துத் தமிழர்கள் பேசிக்கொண்டு போனது கொரிய மொழி போல் காதில் பட்டதால், இது என்ன மொழி? என அறிந்து கொள்ள விழைந்த போது இந்தத் தொடர்பை உணர்ந்து இருக்கிறார்!

அவர் என்னைத் தொடர்பு கொண்டு இப்படியெல்லாம் எழுதிய போது என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் கியோங்ஜூ அருங்காட்சியகம் சென்றது என்னுள் ஒரு கல்லைப் புரட்டிப் போட்டது!

தொடரும்...

Suba

unread,
Oct 8, 2017, 10:25:27 AM10/8/17
to மின்தமிழ்
2017-10-08 6:35 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:

​கண்ணன்,

தொடர் நன்கு பயணிக்கின்ற்டஹு. நல்ல தகவல்களை பதிந்து வருகின்றீர்கள்.

பேரா. வாச்சேக் (மறைந்த செக் பேரா) மங்கோலிய மொழிக்கும் பண்டைய தமிழ் மொழிக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக நமக்கு அலித்த பேட்டியில் சொல்லியிருக்கின்றார். இந்த ஆய்வினை நாம் முன்னெடுகக் வேண்டும் என. முனைவர் பசும்பொன் அவர்களிடம் சொல்லியிருக்கின்றேன். அவரும் சம்மதம் தெரிவித்துல்ளார். உங்கள் ஆய்வின் பரிமாணம் விரிகின்ரது.

சுபா​

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Kannan

unread,
Oct 9, 2017, 10:13:15 AM10/9/17
to மின்தமிழ்
பகுதி 7

ஆய்வகத்தில் அமர்ந்து அறிவியல் ஆய்வு செய்வதற்கும், மக்களோடு பழகி மானுடவியல் ஆய்வு செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அறிவியல் செய்யும் போது முழுவதும் objective வாக இருக்க முடியும். குறிப்பாக வேதியலில் ஒரு வேதிமத்தோடு அன்பு செய்ய முடியாது. பழக முடியாது. ஆனால் மானுடவியல் ஆய்வு என்பது அப்படி இல்லை. நான் இரண்டு வருடங்கள் ஞானக்குழு அமைப்பின் கீழ் கொரியா சென்று ஜெர்மனி மீள்வதாகத்தான் எண்ணம். மேலும் என் நிப்போனிய வாழ்வு இம்மக்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் தரவில்லை! ஆனால் கொரியா சென்று அவர்களோடு ஒண்ணுமண்ணாய் வாழ்ந்த போதுதான் இவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று தெரிந்தது.  ஒருவகையில் கொரியர்கள் இந்தியர்கள் போல்தான். நம் சரிதத்தைப் புரட்டினால் நாம் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போனதில்லை, ஆனால் வருவோர் போவோரெல்லாம் நம்மைத் தாக்கிவிட்டு, ஆக்கிரமித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். கொரியாவும் எந்த வம்பிற்கும் போனதில்லை. ஆனால் சீனாவும், நிப்போனும் இவர்களைப் படுத்தி எடுத்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் பண்பான நாடு என்றால் அது கொரியா என்று தீர்மானமாகச் சொல்லலாம். பௌத்தம் சொன்ன நன்னெறிகளை இன்றளவும் கடைப் பிடிக்கும் சமூகமாக கொரிய சமூகம் விளங்குகிறது! கொரியாவில் பெண்கள் இரவு, நடுநிசி எப்போதும் தெருவில் நடக்க முடியும். நான் பலமுறை இதைக் கண்டுள்ளேன். கொரியக் குழந்தைகள் மாம்பழம் போல். கடித்து சாப்பிட்டுவிடலாம் ;-) எனவே இனிமேல் இந்த ஆய்வு கொஞ்சம்  subjective ஆகப் போகும். அதில் தவறில்லை! இந்திய சரிதம் எனும் புத்தகம் எழுதிய ஹெர்மான் குல்க (கீல் பல்கலைக் கழகம், டாய்ச்சுலாந்து) எங்கள் குடும்ப நண்பர். தேநீர் அருந்தும் போது சொல்வார், ‘இந்தியர்கள் குல்க என்பதைக் கல்கி என்று எழுதுகின்றனர். அதுவும் பாந்தமாகவே இருக்கிறது’ என்று. இந்தப் பிடிப்பு, பாசம் இல்லையெனில் மற்றொரு கலாச்சாரத்திற்குப் போய் ஆய்வு செய்ய இயலாது!

இப்படித்தான் ஞானக்குழு சுற்றுலா (Brain Pool Scholars Tour) ஒன்று ஏற்பாடாகியிருந்தது. கொரியாவை வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்து கொள்ள சில முக்கிய இடங்களுக்கு கூட்டிச் சென்றார்கள். அதில் குவான்ஞ்சு எனுமோர் இடம். ஷில்லா அரசின் தலைநகரமாக இருந்த இடம். பௌத்த கலையின் நளினமான வெளிப்பாடுகளைக் கொண்ட ஆட்சி இருந்த வட்டமது! அந்த அருங்காட்சியகம் போன போது எனக்குக் கொரியாவில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ புத்த கயா, சாஞ்சி என்று இந்திய நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகம் என்பது போன்ற உணர்வு. தடுக்கி விழுந்தால் இந்தியத் தொன்மம். பிரம்மித்துப் போய் வெளியே வரும் போது ஓர் நடுத்தர வயது மாது என்னிடம், “தாங்கள் இந்தியாவா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். நம் இரு நாடுகளுக்கும்  ஒற்றுமை இருப்பது தெரிகிறதா? என்றார். ‘நிச்சயமாக’ என்றேன். ஏனெனில் வந்த அடுத்த வாரத்திலேயே கோஜே தீவிற்கு அருகிலுள்ள தொங்க்யோங் நகரில் இருக்கும் 800 வருடப் பழமையான புத்தர் கோயிலுக்கு போய் வந்திருக்கிறேன். ஆயினும் இந்த அம்மையார் வேறு ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்தது. அவர்களைப் பேச விட்டேன். ‘நாங்கள் ஏன் எங்கள் தந்தையை இந்தியர்கள் போல் அப்பா என்றும் அன்னையை அம்மா என்றும் அழைக்கிறோம் எனத்தெரியுமா?” என்றார். இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்! ‘சொல்லுங்கள்!’ என்றேன். அப்போதுதான் நான் முதன் முதலாக கிம் சுரோ அரசனின் கதை கேட்கிறேன்.

அந்தக் கொரிய மாது எனக்கொரு கதை சொன்னார். அது சரிதமா? ஐதீகமா? என்பதில் தெளிவில்லை. ஆனால், கிம் வம்சா வழியினருக்கு அது சரிதம்! அதன் படி கொரிய மன்னனான கிம் சுரோ இளைஞனாக அரசேற்று இருக்கும் போது அவனுக்கொரு கனவு வந்தது. அதில் தனக்கு மனைவியாகப் போகின்றவள் மேற்கிலிருந்து வருவாள் என்று வந்தது. புத்த நெறியில் உள்ள கொரிய/நிப்போனியர்களுக்கு மேற்கு திசை என்பது சொர்க்கத்தின் திசை. ஏனெனில் கௌதம சித்தார்த்தன் என்ற சாக்கிய முனி தோன்றிய திசை அது. எனவே சுரோ கொரியப் பெண்களை மணந்து கொள்ளாமல் மேற்கிலிருந்து வரும் ஒரு நங்கைக்காகக் காத்திருந்தான். அதே சமயத்தில் இந்தியாவில் ஓர் அழகிய இளவரசியின் தந்தைக்கும் ஓர் கனவு வந்தது. அதன் படி தன் பெண்ணிற்கு கணவன் தூரக்கிழக்கில் இருக்கிறான் என்பது. எனவே அவ்வரசன் தன் பெண்ணை பரிவாரங்களோடு கடற்பயணம் மேற்கொள்ள அனுப்பிவிட்டான். அந்தப் பெண் கொரியக் கரை வந்து சுரோ மன்னனை மணந்து பல பிள்ளைகள் பெற்று இன்று கொரியாவின் செல்வாக்குள்ள குடிகளான கிம், ஹே இனக்குழுக்களைத் தோற்றுவித்தாள். அவள் இறக்கும் போது தன் கணவனிடம் ஒரு வரம் கேட்டாள். அதன் படி அவள் பிள்ளைகள் தம் பெற்றோரை எப்படி அம்மா/அப்பா என்று அழைத்தனரோ அது போலவே எல்லாக் கொரிய மக்களும் தத்தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்க வேண்டும் என்பதே அவள் கேட்ட வரம். அதன் படியே இன்றளவும் நடந்து வருவதாக அந்த மாது சொன்னாள்.

தொன்மம் என்பது ஓர் கதைசொல்லி மரபு. நடந்த ஓர் உண்மை சம்பவம் காலப்போக்கில் கதை, கதையாய் வாய் மொழியாக வரும் போது மாற்றம் பெற்று, ஒரு புதினப்பூச்சு கொண்டு ஐதீகமாக மாறிவிடுகிறது. இராமானுஜர் எனும் காவியத்தலைவனின் கதைகளில் இந்தப் புதினப் பூச்சு இருப்பதால்தான் தொல்லியல் நிபுணர் நாகசாமி அப்படியொரு நபர் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றே இல்லை என்று புத்தகம் எழுத முடிகிறது. ஆனால் அது முறையல்ல. இராமானுச முனி ஏற்படுத்திய சம்பிரதாயம் வாழ்கிறது. அவர்கள் வம்சாவழியினர் இன்றும் வாழ்கின்றனர். கொஞ்சம் புதினம் இருந்தாலும் அடிப்படைக் கரு என்பது உண்மை. தொன்மங்களின் வாசிப்பு என்பதோர் கலை!

எனவே இரண்டு வருடமென அங்கு போனவன் ஓர் புதிய உறவுமுறை கிடைத்தவுடன் இது நம்ம ஊர்தான் என்று தங்கத்தொடங்கினேன். இது எனக்கு மட்டும் வந்த புரிதல் என்று எண்ணினேன், ஆனால் கோஜே நகரில் அமைந்திருக்கும் சாம்சுங், தேவு கப்பல் கட்டும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் இது போலவே எண்ணுகின்றனர் என்பது அவர்கள் அறிமுகம் கிடைத்த போது உணர்ந்தேன். இது உலகம் சுருங்கிவிட்ட காலத்தில் நாடுகளுக்குள் இருக்க வேண்டிய மிக முக்கிய எண்ணப்போக்கு. குறிப்பாக இரண்டு நாடுகள் பரஸ்பர வியாபாரம் செய்ய முற்படும் போது இத்தகைய தொன்மங்கள் இருமுக உறவை பலப்படுத்த வல்லவை. இந்தியாவை நம்பி, அல்லறும் அதன் அரசியல் பொருளாதார நிலையை நம்பி இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகள் குறைவு. குறிப்பாக 80-90 களில் இந்தியாவை நம்பி காசை இங்கு கொட்டுவது என்பது முதலை வாயில் போன உணவு போலத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இப்படியொரு தொன்மம் கொரியாவில் இருப்பதை வைத்து கொரியர்கள் மிகத்தைர்யமாக கோடிக்கணக்கில் இந்தியாவில் முதலீடு செய்தனர். கொரியாவில் ஹுயுந்தே (ஹுண்டாய் அல்ல!) நிறுவனம் கார்கள் செய்வதில் பலசாலிகள். அவர்களது இரண்டாவது பெரிய தொழிற்சாலை தமிழகத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கிறது.

இதைவிட சுவாரசியமான விஷயம் என்னவெனில், கொரியர்களின் நூற்றுக்கு மேற்பட்ட தொழில் முதலீடுகள் தமிழகத்தில்தான் நடந்திருக்கின்றன! ஏன் இந்தியாவில் வேறு மாநிலங்கள் இல்லையா? யோசித்தால் புரியும் சுரோ மன்னனுக்கு பெண் கொடுத்தவர்கள் தமிழர்கள் என்று. இரத்த பாசம் அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிட்டது!

இன்னுமொரு ஆச்சர்யமான கதையை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அது வேறு யாருக்குமல்ல கொரியாவிற்குச் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி எனும் இந்தியத் தூதருக்கு நடந்தது. கேட்டால் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்!

தொடரும்.

N. Kannan

unread,
Oct 10, 2017, 12:06:34 AM10/10/17
to மின்தமிழ்
பகுதி 8

கிழக்கே நோக்கு எனும் தாரக மந்திரத்தை முதலில் சொன்னவர் கேரள வம்சாவளியினரான மலேசிய மேனாள் பிரதமர் மகதீர் முகம்மது குட்டி. அவரது இலக்கு நிப்போன். அதுதான் மலேசியாவை எவ்வளவு உயர்த்திவிட்டது! ஏன் மேற்கே நோக்காமல் கிழக்கே நோக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. இந்தியா என்ற உந்நதமான தேசத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொள்ளை அடித்தவர்கள் மேற்கு தேசத்தைச் சேர்ந்த ஆஃப்கான், பாரசீகம், அரேபியா, துருக்கி, பின்னால் ஐரோப்பியர் போன்ற நாட்டினர். ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைந்து ஆக்கிரமித்து நம் சரிதத்தையே மாற்றிய அவர்கள் தங்கள் இருப்பிற்குச் சொன்ன காரணம், “நாங்கள் முன்னாள் (ஆரியர்) வந்தோம், எனவே இப்போது இருக்கத் தகுதி உண்டு” என்பதுதான் என்ன மமதை பாருங்கள்! ஆனால் கிழக்கு தேசங்களான பர்மா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளுக்கு இந்த அகம்பாவம் இல்லை. அவை இந்தியாவை மதிக்கின்றன. புத்தன் என்ற வள்ளலைத் தந்த நாடெனப் போற்றுகின்றன. நம்மை மதிப்பவனை நாம் கண்டு கொள்ளாமல் நம்மை ஏறி மிதிப்பவனை ஆராதித்துக் கொண்டு இருந்து விட்டோம். இனியாவது அது மாற வேண்டும். தமிழனுக்கும் சீனனுக்கும் எப்பகையுமில்லை. நெருக்கமான உறவே இருந்துள்ளது. தமிழனுக்கும் மலேசியனுக்கும், இந்தோனீசியனுக்கும், இந்தோசீனனுக்கும் (கம்போடியா) எப்பகையுமில்லை. மாறாக அவர்கள் நம் பண்பாட்டு உறவைக் கொண்டாடுகிறார்கள். கொரியாவும், நிப்போனும் இந்தியாவில் முதலீடு செய்து பொருளாதார மேம்பாட்டை விரும்புகின்றன. எனவேதான் கிழக்கே நோக்கு எனும் மந்திரம் தமிழ் வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்கிறேன்.

உண்மையில் நாம் இந்த ஆய்வை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பௌத்த சமண காலங்களுக்குப் பிறகு இந்து மீட்சி நடந்த போது சமணர்கள் கழுவேற்ற பட்டனர், பௌத்தம் முற்றாக அழிந்தது. பலன்? மிகவும் முக்கியமான பௌத்த தடயங்கள் நம் கைவிட்டுப் போயின! தென்னகத்தில் பௌத்தம் இருந்து மேன்மை கொண்டதை எந்த சரித்திர ஆசிரியரும் பேசுவதில்லை. பௌத்தம் என்றாலே நேபாளம், புத்த கயா, சாஞ்சி என்று கங்கைக் கரைக்கு போய்விடுகிறது எண்ணம்? பாலாற்றின் அருகிலுள்ள காஞ்சீபுரம் நினைவிற்கு வருவதில்லை! நகரேஷு காஞ்சி என்று கொண்டாடப் பட்ட அந்த நகரில் புத்த நெறி ஆய்வுகள் சீறும் சிறப்புமாக நடந்திருக்கின்றன. அந்த நகரில் தெலுங்கர், தமிழர் இணைந்து புத்த நெறியின் மிக நுட்பமான கருத்துகளை ஆராய்ந்துள்ளனர். நாளந்தா பல்கலைக் கழகம் போல் அங்கொரு பல்கலைக் கழகம் இருந்திருக்கிறது. சோழர்களின் கல்வெட்டு இம்மாதிரிப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் ஊதியத் தொகை எவ்வளவு, ஆசிரியருக்கு என்ன சம்பளம் என்றெல்லாம் சொல்கிறது! ஆனால், பௌத்த சுவடுகள் முற்றும் அழிக்கப்பட்ட நிலையில் கொரிய, நிப்போனிய ஆய்வாளர்கள் வட இந்தியாவையே நம்பி உள்ளனர். அப்போது இழந்தது மட்டுமல்ல, இப்போதும் இழந்துவிட்டோம். கொரிய கிம் இனக்குழு தம் குலதெய்வமான ஹே ஹுவாங் ஓக் அயோத்தியாவில் பிறந்தாள் என்று அங்கு போய் கோடிக் கணக்கில் கொட்டி நினைவாலயம் எழுப்புகின்றனர். நாம் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறோம். சட்டியில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்? 

இதற்கும் சேர்த்து நாம் கிழக்கே நோக்க வேண்டியுள்ளது. அங்கிருந்துதான் நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் நாம் நம் கருத்தியலை உருவாக்க வேண்டியுள்ளது! நாம் செய்ய வேண்டியதை, மாறாக ஒரு நிப்போனியர் செய்து கொண்டு இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் காம்பே. அவர் பிடிவாதமாக போதி தருமனுக்கு காஞ்சியில் நினைவாலயம் எழுப்ப வேண்டும் என்கிறார். தன் சரிதமறியாத் தமிழன் பாராமுகமாக உள்ளான். என்ன அவலம்!

சரி, நாம் மீண்டும் கொரியாவிற்குச் செல்வோம். திரு. பார்த்தசாரதி இந்தியத்தூதராக சோல் நகரில் பொறுப்பேற்றவுடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரு சோதிடரைப்பார்த்து இருக்கிறார். நம்மிடம் இருப்பது போல் அருள் வாக்கு சொல்லும் வல்லமை கொரியாவிலும் இருக்கிறது. வந்த அருள் வாக்கு தூதரை கிம்ஹே நகருக்குச் செல்லுமாறு சொல்லியிருக்கிறது. இவர் முதலில் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது துணைவியார் நம்பிக்கையோடு அந்த வாக்கில் ஏதோ பொருள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, பார்த்தசாரதி கிம்ஹே போகிறார். அங்கு கிம் சுரோ, ஹே ஹுவாங் ஓக் நினைவாலயம் உள்ளது. அது குறித்த பல சரித்திரக் குறிப்புகளை 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பிட்சு இல்யோன் விவரமாகச் சொல்கிறார். அதன் படி அந்த நினைவாலயம் பல இடர்களை, கொள்ளையர்களின் தாக்குதல்களை முறியடித்து இன்றுள்ள நிலையில் இருப்பதாக உள்ளது. அங்கொரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக இல்யோன் சொல்லிச் செல்கிறார். அந்த சக்தியை நம் தூதர் உணர்ந்த கதையை என்னிடம் சோல் நகரில் சந்தித்த போது சொன்னார். 

அதன் படி அவர் கிம்ஹே நகரில் தங்கியிருக்கிறார். நினைவாலயப் பார்வை நேரமெல்லாம் மூடிய இரவில் இவரை யாரோ வந்து அழைத்தது போல் தோன்றி இருக்கிறது. அவரும் உடனே இரவில் நினைவாலயம் நோக்கி நகர்கிறார். அதிசயமாக வாசற்கதவு பூட்டப் படவில்லை. இவர் மெல்ல நுழைந்து உள்ளே செல்லச் செல்ல ஹே ஹுவாங் ஓக் தன் கதையை இவருக்குச் சொல்கிறாள். காட்சி மேல் காட்சியாக இவருக்குக் கிடைக்கிறது. அது நிஜமா? இல்லை கனவா? என்று புரியாத ஓர் நிலை. இரவு அறைக்கு வந்து சேர்ந்த பின் தீர்மானமாக இவளது கதையை உலகிற்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானம் கொள்கிறார். அதன் பயனாய் விளைந்ததுதான் இவரது பட்டும் அரசியும் எனும் நாவல் ( ‘Bi Dan Hwang Hoo’ (Silk Empress). அதில் இவர் தெளிவாக அந்த ராணி தமிழக மல்லைக்ரையிலிருந்து கொரியா செல்வதாகக் கூறியிருக்கிறார். 

நான் அவரை மீண்டும் சென்னையில் சந்தித்த போதும் அந்த நிகழ்வு குறித்து நெகிழ்ந்து பேசினார். இது எனக்கு லா.ச.ராமாமிர்தம் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஓர் நினைவோட்டத்தை ஞாபகப்படுத்தியது. அதை அவர் கனவு போன்ற ஓர் நிஜம் என வருணிக்கிறார். பாரதியின் குயில்பாட்டுக் கூட இத்தகைய தன்மை கொண்டதே! நெட்டை நெடும் கனவு என்பது போன்ற நினைவு! இதுவொரு மாந்திரீக நிஜம் (magical realism). இல்யொன் சொல்லும் கதைகளும் இத்தகைய தன்மை உடையனவே. தமிழ் இலக்கிய ஈடுபாடுடைய எனக்கு இதுவோர் ஆர்வத்தை ஊட்டியது. நானும் கிம்ஹே சென்று இந்த நினைவாலயத்தைப் பார்வையிட வேண்டுமென தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் அது எனது கொரிய நாட்களின் பின்னால்தான் நடந்தேறியது. அதற்கு முன் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் என்னை இவ்வாய்விற்கு இட்டுச் சென்றன. அதில் முக்கியமானது கிவாஞ்சு தொழிற்கல்வி நிறுவனம் சென்ற போது நடந்தது. தமிழ் மாணவர் ஒருவர் எனக்கு எப்படி கொரிய மொழியை வாசிப்பது என்று பேருந்திற்குக் காத்திருக்கும் ஒரு மணி நேரத்தில் சொல்லிக் கொடுத்தார். சேஜோன் அரசன் 15ம் நூற்றாண்டில் கொரிய மொழிக்கு தனித்துவமான வரிவடிவம் தருகிறார். அந்த வரிவடிவம் தமிழின் நெடுங்கணக்கை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை நான் கண்டறிந்த போது என் ஆச்சர்யத்திற்கு அளவில்லை! அந்த என் கண்டுபிடிப்புதான் கொரிய-தமிழ் ஆய்விற்குள் என்னைத் தள்ளியது.அது என்னவென்று பின்பு பார்ப்போம்!

தொடரும்

N. Kannan

unread,
Oct 10, 2017, 11:11:00 PM10/10/17
to மின்தமிழ்
பகுதி 9

குணசேகரன் பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் எனக்கு ஹங்குல்லை (கொரிய வரிவடிவம்) எப்படி வாசிப்பது என்று கற்றுக் கொடுத்துவிட்டார்! இதில் என்ன அதிசயம்? என்று கேட்கலாம். இருக்கிறது!

நிஹோங்கோ (ஜப்பானிய மொழி) கற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆகும். ஏனெனில் பத்திரிக்கை வாசிக்கும் அளவு படிப்பறிவு வேண்டுமெனில் 5000 காஞ்சி (சீனக் கோட்டோவிய எழுத்து) தெரிந்திருக்க வேண்டும். இது ‘படம் பார்த்து கதை சொல்’ என்பது போன்ற கற்றல் முறை. 5000 கற்றுக்கொள்ள தாவு கழண்டுவிடும். இது ஒருவகையான pattern matching அடிக்கடி எழுதிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருக்க வேண்டும். இடைவெளி விட்டால் போச்சு, மறந்துவிடும். எஹிமே பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர்கள் கூட புதிதாக உருவாகும் காஞ்சியைக் கற்ற வண்ணம் இருப்பர். இது எவ்வளவு சிக்கலானது என யோசித்துப் பாருங்கள். முதுகலை வகுப்பில் உட்கார்ந்து அரிச்சுவடி கற்றால் எவ்வளவு கேவலமாக இருக்கும்? ஆனால் வேறு வழி இல்லை, அந்த வரிவடிவ முறை அப்படி. போதாக்குறைக்கு, நிப்போன் மொழி இன்னும் இரண்டு வரிவடிவங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. உதாரணமாக பௌத்தம் செழித்திருந்த காலங்களில் சமிஸ்கிருத நூல்களில் வரும் சொற்களுக்கு ஏற்ற காஞ்சி இருப்பதில்லை. இக்குறையை நீக்க ஹிரகானா எனும் முறையை உருவாக்கினர். அதன் பிறகு ஐரோப்பியர் வந்தனர். ஏகப்பட்ட சொற்கள் அம்மொழிக்குள் புகுந்தன. அதை சமாளிக்க கதகானா எனும் முறையை உருவாக்கினர். ஆக, ஒரு நிப்போன் நாளிதழ் வாசிக்க காஞ்சி, ஹிரகானா, கதகானா தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நாம் தற்குறிதான்! என்ன அவலம்! 

ஆனால் ஹங்குல் எழுத்து அப்படி அல்ல ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியமாகிறது எனில் அம்மொழி வரிவடிவம் தமிழின் நெடுங்கணக்கை ஒத்திருக்கிறது. தமிழ் நெடுங்கணக்கு என்பது உயிர் எழுத்தையும் (vowval) மெய் எழுத்தையும் (consonant) இணைத்து உயிர்மெய் வரிவடிவத்தை உருவாக்குகிறது.  இதை தொல்காப்பியம்,

எழுத்தெனப் படுப)                                                      
வகரமுத னகர விறுவாய்)                                      
முப்பஃ தென்ப)                                                            
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே என்கிறது. 

அதாவது

எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பது என்ப

உதாரணம்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ,ஒ, ஓ, ஒள- உயிர்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்- மெய்

இப்படி 12 உயிரும், 18  மெய்யும் சேர்ந்து 30 எழுத்து தெரிந்தால் பின் இவைகளை வைத்து பிற எழுத்துக்களைக் கூட்டி உருவாக்கிவிடமுடியும். அப்படி உருவாக்கும் எழுத்துகள் மொத்தம்  247 ஆகும். (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88).

ஹங்குல் எழுத்துமுறை ”ஈ அடிச்சான் காப்பியாக” இதே முறை. அங்கு உயிர் எழுத்து 10, மெய்யெழுத்து 14. இவை இணைந்து உருவாக்குபவை மொத்தம் 140 எழுத்துக்கள். அவ்வளவுதான். (https://modernseoul.files.wordpress.com/2012/04/korean-alphabet-chart-modern-seoul.pdf).

நண்பர் குணசேகரனை விட்டு அகன்ற பின் இது பற்றி ஆராய்ந்தேன். பல ஆச்சர்யங்கள் கிடைத்தன. கொரிய, நிப்போனியர் எப்போதும் தாம் ஓரினம் என்று எண்ணுவர். நாமே ‘பன்மையில் ஒற்றுமை’ என்று பேசிக்கொண்டிருப்போம். இப்போதுதான் அவர்களுக்கும் இது மெல்ல மெல்லப் புரிகிறது. உலகில் எந்த இனமும் 100% பச்சை ரத்தம் இல்லை. எல்லாமே கலப்புத்தான். தமிழர்களின் முகத்தைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம். ஆதி காலத்தில் கொரிய, நிப்போன் தேசங்கள் சீனாவின் பண்பாட்டு நிழலில் வளர்ந்த தேசங்கள். எனவே சீன மொழியிலேயே அவர்கள் கல்வி அமைந்தது. அவர்கள் சீன மொழி கற்று எழுதினாலும் கொரிய மொழியமோ, நிப்போன் மொழியோ சீனக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல. அவர்கள் பேச்சு வழக்கு சீன ஒலி வடிவம் (tonal language) அல்ல. இந்தக் சிக்கல் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. இதை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தவர் 4 வது சோசென் பேரரசர். அவர் பெயர் சேசொங். இவர் ஹங்குல் வரிவடிவத்தை 1446 ஆண்டு அறிமுகப்படுத்துகிறார். கிமு 108ல் தொடங்கிய சீன எழுத்துமுறை பல நூற்றாண்டுகளுக்குப் பின்தான் முடிவிற்கு வருகிறது. இது 15ம் நூற்றாண்டில் அறிமுகமானாலும் 1948 ல் தான் அது வடகொரியாவில் அரசு மொழியாக பரிந்துரைக்கப் படுகிறது. ஆயினும் மிகுந்த  
தயக்கத்திற்குப் பின்னே, குடியரசான பின் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அறிஞர்கள் பலர் அதைக் கொச்சை மொழி என்றனர். காரணம் சீனத்தில் எழுதுவது உயர்வாகக் கருதப்பட்டது. 

நல்ல மொழி அறிஞன் என அறியப்படும் சேசொங் அரசன் பல வருடங்கள் ஆராச்சி செய்து இந்த வரிவடிவத்தை உருவாக்குகிறான். அவன் வாழ்ந்த காலத்தில் பௌத்த கொரியத் தொடர்பு ஓர் வளர்ந்த நிலையில் இருந்திருக்கும். தமிழகத்தைச் சேர்ந்த பல தமிழ் புத்த பிட்சுக்கள் கொரியா போய் வந்த வண்ணம் இருக்க வேண்டும். சில பிட்சுக்களின் பெயர்களைச் சுட்டுகிறார் முனைவர் ராஜ பொன்துரை. எனவே தமிழ், சமிஸ்கிருத நெடுங்கணக்கு முறை கொரிய அரசருக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும். ஆயினும், புத்தம் புதிதாய் அவ்வெழுத்து முறை கொரியாவில் அறிமுகப்படுத்த முடியாது என்பதால் அவர் சீன ஓவிய முறையிலிருந்து எழுத்துக்களை அடுக்கி வைக்கும் பாணியைக் கையாள்கிறார். இம்முறை மிக எளிதானது. உதாரணமாக க் + அ என்பது ‘க’ வடிவம் கொள்கிறது. இங்கு ‘க’ என்பது புதிய வடிவம். இதற்குப் பதில் ‘க்அ’ என்று ஏன் எழுதக்கூடாது? ‘க்’ எழுத்தை மேலேயும், அ எழுத்தை கீழேயும் அடுக்கிவிட்டால் அது ‘க’ என்றாகிவிடும். இல்லையா? இம்முறையால் உயிர்மெய் எனும் எழுத்துக்களே தேவை இல்லாமல் போய்விடுகிறது. உயிரும் மெய்யும் சேர்ந்து எழுத்தில் வரும். எப்படி என்று மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். 

இவ்வளவு எளிதான எழுத்து வடிவத்தை சேசொங் பொது மக்களுக்கு கல்வி அறிவு பெருக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்குகிறான். இதன் சீர்மை கண்டு இம்முறையை எழுத்து வடிவம் இல்லாத பல நாடுகள் சமீபத்தில் ஏற்றுக் கொண்டிருப்பது ஹங்குலின் சிறப்பு. 

எனக்கு என்ன ஆச்சர்யம் எனில் தமிழ் நெடுங்கணக்கிற்கும் ஹங்குலுக்கும் தொடர்புள்ளது என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. நான்தான் முதன் முதல் 2006 வருடம் சிங்கப்பூரில் Institute of Southeast Asian Studies ஏற்பாடு செய்திருந்த WORKSHOP ON RISING INDIA AND INDIANS IN EAST ASIA
(26-27 October 2006) எனும் பயிலரங்கில் முன்வைக்கிறேன். இந்த என் கட்டுரையை கீழுள்ள சுட்டியை அழுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சமிஸ்கிருதமும் இது போல் நெடுங்கணக்கு வைத்திருக்கிறதே பின் ஏன் சேசொங் தமிழ் நெடுங்கணக்கை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமெனக் கேட்கலாம். இதைக் கொரிய மொழியின் பேச்சிலிருந்து அவதானிக்கலாம். செய்யப்பட்ட செம்மொழியான சமிஸ்கிருதம் ஓர் சீர்மை பெற்ற மொழி. அதில் ஏறக்குறைய எல்லா ஒலிக்கும் எழுத்து இருக்கிறது. இதை வர்க்கம் என்பர். உதாரணமாக ’க’ என்பதைப் பலவகையில் ஒலிக்க முடியும். Ka, Kha, Ga, Gha. இது போல் ‘ச’ என்பதை ca, cha, ja, jha என ஒலிக்கலாம். இதற்கென எழுத்துக்கள் உள்ளன. ஆனால் கொரிய மொழியில் தமிழில் உள்ளது போல் வர்க்க வேறுபாடு கிடையாது. பூசான் எனும் நகர்ப் பெயரை Busan என்றும் எழுதலாம்! பாவம், Bhavam வேறுபாடு உண்டு, பொருளில். நான் அங்கு வாழ்ந்த சிற்றூரின் பெயர் ஜஞ்மோக். அதை எழுதும் போது சங்மோக் என்றுதான் எழுதுவர். ஆனால் பேசும் போது ஜங்மோக் என்பர். இது போல் ஆங்கில ‘F' ஒலி அம்மொழியில் கிடையாது, எனவே Coffee என்பதை தமிழில் எழுதுவது போல் ‘காப்பி’ என்றே எழுத வேண்டும்.   ஆயினும் தமிழில் உள்ளது போல் குறில், நெடில் எனும் வேறுபாடு அங்கில்லை. ‘ல’, ‘ற’, ‘ர’ வேறுபாடும் இல்லை. 

சேசொங் தமிழை முன் மாதிரியாகக் கொண்டான் என்பதற்கு அவன் தமிழிலிருந்து கடன் வாங்கியிருக்கும் சில எழுத்துக்களைச் சொல்லலாம். அது ‘ப’, ‘ம’, ’ல’ போன்றவை. 

இந்த அரிய கண்டுபிடிப்பை நான் கொரிய மொழி அறிஞர்களிடம் சொன்ன போது ஏற்கவில்லை. நம்மவரும் சட்டை செய்யவில்லை. தமிழுக்கும் கொரிய மொழிக்கும் தொடர்புள்ளது என்று கால்டுவெல் சொல்லியிருக்கிறார். அவர் போன்ற இன்னொரு பாதிரி இது பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். அவர் பெயர் Hulbert, Homer B. (1863-1949) என்பது. இவர் 1906ம் ஆண்டு A comparative grammar of the Korean language and the Dravidian languages of India எனும் நூலை எழுதுகிறார். அதில் இருமொழி ஒப்பாய்வு செய்கிறார். அதற்குப் பின் 2006 ல் நான் பேசுகிறேன். அதுவரை இம்மொழித்தொடர்பு அறியப்படாமலே இருந்திருக்கிறது.

தொடரும்....

N. Kannan

unread,
Oct 13, 2017, 2:49:50 AM10/13/17
to மின்தமிழ்
பகுதி 10

நான் 2003 ஆண்டுதான் கொரியாவில் கால் வைக்கிறேன். ஆனால் 2001 ம் ஆண்டே கொரிய இளவரசி அயோத்தியைச் சேர்ந்தவள் என்று அவளுக்கு நினைவாலயம் எழுப்பிவிட்டனர். இது எனக்குத்தெரியாது. அயோத்தி மன்னர் வம்சம் பிராமண வம்சம். பிராமணர்கள் கடல் தாண்டுவதில்லை. எனவே 1997 ல் முதன் முதலாக பேராசிரியர் கிம் பியோங்மோ அயோத்தி மிஸ்ரா அரச வம்சத்தினரைப் பேர்த்து எமக்கும், உமக்கும் தொடர்பிருக்கிறது என்ற போது அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போயினர். ஏனெனில் இந்த வம்சமே ஒரு 10 தலைமுறைக்குள்தான் அங்கு வந்து அரசாள்கின்றனர். எனவே கிபி 49-ல் அயோத்தியிலிருந்து தம் வம்சத்தைச் சேர்ந்த பெண் கொரியாவரை போயிருக்கிறாள் என்பதை அவர்களாலேயே ஒப்புக் கொள்ள முடியவில்லை. இதை அவர்கள் பி.பி.சி நேர்காணலில் சொல்கின்றனர். அன்போடு வந்து சொன்னதால் ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லி அயோத்திய சுற்றுலாவிற்கு இதுவொரு கூடுதல் ஈர்ப்பு என்று முடித்து விட்டனர். இந்த அரசியல் எனக்குப் பின்னால்தான் தெரிய வருகிறது.

பேராசிரியர் கிம் பியோங்மோ இந்த ஆய்விற்குள் காலடி வைத்ததே ஒரு விசித்திரமான உணர்வால் வந்தது. ஏறக்குறைய மூன்று மில்லியன் கொரிய மக்கள் தங்கள் தாய் வழி மூதாதையர் இந்தியாலிருந்து வந்ததாக நம்புகின்றனர். அந்த கிம் இனக்குழுவைச் சேர்ந்த நம் பேராசிரியருக்கு ஒரு நாள் சந்தேகம் வருகிறது. நாம் ஏன் மற்றவர்களைவிடக் கொஞ்சம் கருப்பாக இருக்கிறோமென்று. தனது இன வரலாறை ஆராய்ந்த போது இல்யோன் எனும் புத்த பிட்சு கி.பி. 1285 வருடம் எழுதிய சம்குக் உசா எனும் நூலில் இது பற்றி விவரித்திருப்பதை அறிகிறார். அதன் பிரகாரம் கிம் சுரோ எனும் அரசன் இந்தியாவிலிருந்து வந்த ஹே ஹுவாங் ஓக் எனும் பெண்ணைத் திருமணம் செய்ததால் தம் மக்கள் உருவாயினர் என அறிந்தார். அந்த தொன்மத்தில் வந்து சேர்ந்த அரசி தான் “அயுத்த” எனும் நாட்டிலிருந்து வருவதாகச் சொல்கிறாள் என்று இல்யொன் எழுதுகிறார். இப்பெயருக்குப் பொருத்தமான ஓர் ஊரை இந்திய உபகண்டத்தில் தேடிய போது அயோத்தியா எனும் நகரம் பிடிபட்டு இருக்கிறது. அயோத்தியா எனும் நகரம் பழம் நகரம், பிரபலமானது, இராமகாதையுடன் தொடர்புடையது, எனவே அவருக்கு ஏற்புடையதாகப் பட்டது. ஆனால், அயோத்தியா கடற்கரை நகரமல்ல! ஆனால் இல்யொன் கதைப் படி அவள் காவி (சிவப்பு) பாய்மரத்தில் வந்து இறங்கியதாக செய்தி உள்ளது. இதை இரண்டையும் முடிச்சுப் போட அவரொரு கருதுகோளை முன்வைத்தார். அதன் படி, ஹே ஹுவாங் ஓக்கின் மூதாதையர் நில வழியாக, பர்மா கணவாய் வழி சீனா அடைந்து அங்குள்ள தென்சீன மஞ்சள் ஆறு படுகையில் குடி பெயர்ந்தவர்கள் என்றும். அங்கிருந்து அப்பெண் மஞ்சள் கடலைக் கடந்து தென்கொரியா வந்து விட்டாள் என்பதாகும். 

கொரியர்களைப் பொருத்தவரை இல்யோன் எழுதிய சம்குக் உசா எனும் நூல் விவிலியம் போல் பார்க்கப்படுகிறது. அதுவும் கொரியாவிலேயே மிகவும் பிரபலமான கிம் இனக்குழு தம் மூதாதையர் இந்தியர்கள் என்று நம்பும் போது இக்கருதுகோள் வலுப்பெறுகிறது. எனவே அவர் தலைமையிலேயே ஒரு குழு 1997 ல் அயோத்தியா செல்கிறது. இதில் பெரிய துரதிர்ஷ்டம் என்னவெனில் பேராசிரியர் கிம் கடல்வழி பட்டுப் பாதை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காததுதான். இது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருவது. ஏனெனில், நான் கொரியாவின் தலைநகரான ‘சோல்’ (Seoul - சியோல் அல்ல சோல் என்று உச்சரிக்க வேண்டும்) நகரின் மாபெரும் அருங்காட்சியகம் சென்றிருந்த போது கடல்வழிப் பட்டுப்பாதையின் வழி கொரியா, இந்தியாவோடு தொடர்புடன் இருந்ததைத் தெளிவாக விளக்கியிருந்தனர். அடுத்து அவருக்குத் தமிழர்கள் கடலோடிகள் என்ற சரிதம் தெரியாது. இது இந்தியாவிலேயே சரித்திரப் பாடத்தில் இருப்பதில்லை. வெளிநாட்டினர் எழுதும் நூல்களிலும் இது பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. எனவே பேராசிரியர் கிம் பியோங்மோ இது பற்றி அறிந்திருக்க நியாயமில்லை.

மேலும் அவருக்குக் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் மொழியியல் ரீதியான தொடர்பு இருப்பதும் தெரியாது. தமிழக நாட்டார் வழக்கும், கொரிய வழக்குகளும் ஒத்திருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. நான்தான் முதன்முதலாக இருமொழிகளும் நெடுங்கணக்கு முறையில் அமைந்திருப்பதையும் அதன் ஒற்றுமைக் கூறுகளையும் பற்றிப் பேசுகிறேன். இது குறித்த எனது பதிவுகள் மின்தமிழ் ஆரம்பிக்கப்பட்ட 2006 வருடமே வெளிவருகிறது.

மூன்று வருடம் கழித்து மீண்டும் இது பற்றி எழுதுகிறேன்

02.08.09

இக்குறிப்பை திராவிட மொழி ஒப்பாய்வு செய்த Hulbert, Homer B. (1863-1949) அவர்களும் சொல்லவில்லை. இப்போது யோசித்தால், கிம்ஹேயில் கிடைத்த பானையெழுத்திலிருந்து, ஹங்குல்வரை இதுவரை யாரும் ஒப்பு நோக்கியதில்லை. அதை மின்தமிழில் செய்துள்ளேன். அகழ்வாய்வு, தொன்சரிதம், பண்பாட்டு நோக்கில், மரபணு ஆய்வுகள் எனப் பன்முக நோக்கில் இந்த ஆய்வை முன்னெடுத்துச் சென்றிருக்கிறேன். அதை விரிவாக விளக்குகிறேன். அதற்கு முன் நம் கைமுன் கை நழுவிய வாய்ப்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. அயோத்தியாவில் நினைவாலயம் எழுந்த பின் அந்த இந்தியப் பெண் வட இந்தியர் என்றே எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர். நான் இதுவரை பார்த்த அத்தனை கொரிய வலைத்தளங்களும் அயோத்தி பற்றியே பேசுகின்றன. இந்திய அரசு ஊடகங்களும் அது பற்றி மேலாய்வு செய்யாமல் ஏற்றுக்கொண்டு விட்டன. அயோத்தி அரசர்களே இல்லை என்பதைக் கூட அவர்கள் சட்டை செய்யவில்லை. பின்னால் இது குறித்து புதினம் எழுதிய திரு. பார்த்தசாரதியும் அவளுக்கு சூரிரத்னா என்றே வடமொழிப் பெயரிட்டு வட இந்தியராக்கிவிட்டார். அடிப்படையான இரண்டு கேள்விகளை பேராசிரியர் கிம் கேட்கவில்லை. அவரது உடல் நிறத்தில் கருமை எங்கிருந்து வந்தது எனத்தேட வேண்டுமெனில் ஆரிய கலப்பு அதிகமுள்ள வட தேசத்திற்கு ஏன் போக வேண்டும்? தென் தமிழகம் அல்லவா வந்திருக்க வேண்டும்? அடுத்து, கொரிய மக்கள் அம்மா, அப்பா எனப் பெற்றோரை அழைக்கும் போது அது தென் தமிழ்நாட்டு வழக்கம், வட இந்திய வழக்கமில்லை என்றாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? இது ஏதும் செய்யாமல் இந்திய இளவரசியை வடநாட்டிற்கு கொண்டு போய் மேலாய்வுகளும் செய்யத் தொடங்கிவிட்டனர்! 2015 -ல் இந்திய பன்னாட்டு மையம் கீழ்க்காணும் விவரப்படி ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் செய்வித்து அயோத்திய இளவரசியின் தொன்மத்தை சரிதமாக்கும் முயற்சியில் இறங்கியது!:

India International Centre, New Delhi International Conference on "Shared Heritage" a new variable in the Indo-Korean relations: Historicising the legend of princess from Ayodhya and its legacy 14-15 July, 2015.

இதற்கெல்லாம் ஒரே எதிர்குரல் எனது மின்தமிழ் மடலாடலும், கொரியா சென்ற இளவரசி தமிழச்சி எனும் தீர்மானமான என் முடிவும்தான். நல்ல வேளையாக தமிழக அரசு 2010 ல் ஏற்பாடு செய்திருந்த செம்மொழி மாநாட்டில் (ஜூன் 23-27, 2010) எனது விரிவான விளக்கத்தை அத்துடன் இணைந்து நடந்த தமிழ் இணைய மாநாட்டில் வெளிக்கொணர முடிந்தது. அம்மாநாட்டில் பேசிய எனது கட்டுரையின் விரிவான விளக்கங்களை நான் மின்தமிழ் மடலாடற்குழுவில் பகிர்ந்து கொண்டேன். அக்கட்டுரைகளை கீழ்க்காணும் தொடுப்பின்மூலம் அணுகலாம்:

இக்கட்டுரைகள் வெளிவரும் காலத்தில் கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் இந்த ஆய்வில் இணைந்து கொண்டு இதைக் கொரியத் தூதரகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறார். அவர் எடுத்த முயற்சியின் பலனாக 2015 நவம்பரில் சென்னையில் எங்கள் குரல் உரத்துக் கேட்கும் வண்ணம் ஓர் கருத்தரங்கம் ஏற்பாடாகியது. கொரியத் தூதரகமும், தமிழியல் மையமும் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கின் தலைப்பு: பண்டை தொட்டு நடந்த இந்திய கொரிய பண்பாட்டு கொடுக்கல் வாங்கல் என்பதாகும். இது நவம்பர் 6ம் தேதி ஹோட்டல் கிரோன் பிளாசாவில் நடந்தது. இக்கருத்தரங்கில் தூதர் பார்த்தசாரதி, கொரிய-தமிழ் இவான்சலிஸ்ட் ஜுங் நாம் கிம், ஒரிசா பாலு மற்றும் பல கொரிய இந்திய ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அது சமயம் கொரிய தூதர் இதுவரை ஏற்பட்டிருக்கும் கொரிய முதலீடுகள் அனைத்தும் தமிழகத்தில் அமைந்தது தற்செயலானது அல்ல என்று சொன்னார். அதுதான் எவ்வளவு உண்மை!

ஒருபுறம் மத்திய அரசின் மொழிசார் மேலாண்மை பற்றி எதிர்குரல் எழுப்பும் நம்மவர், கிடைக்கின்ற எல்லா வாய்ப்பையின் வட இந்தியா நோக்கி நகர்த்தும் நகர்வின் ஒரு செயலாக கொரிய அயோத்தியா ஆய்வைக் காண்பதில்லை. நாம் தமிழ்த் தொடர்பு இருக்கிறது என நிரூபிக்க முயன்றால் கேலி செய்யப்படுகிறோம். கடுமையாக விமர்சிக்கப்படுகிறோம். ஒரு ஆர்வத்தில் ஈடுபடுவோரும் ஒருங்கிணைந்து செயல்படாமல் தத்தம் வழியில் இந்த ஆய்வைக் கடத்திச் செல்ல முயல்கின்றனர். இவையெல்லாம் வருத்தமளிக்கின்றன. 

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் இவள்
என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள் தாய்

என்று பேசுகிறான் பாரதி. அவன் சொன்னது உண்மை என்று தொல்லியல் ஆய்வுகள் சுட்டிய வண்ணமுள்ளன. அப்படி இருக்கையில் நாம் ஒருங்கிணைந்து ஆதரவோடு பாரதி வழியில் செல்ல வேண்டாமோ?

தொடரும்... 

N. Kannan

unread,
Oct 14, 2017, 5:45:41 AM10/14/17
to மின்தமிழ்
பகுதி 11

உறவுகள் தொடர் கதை என்பார்கள். நான் முனைவர் பட்டம் பெற்று அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட வேண்டும் என்பதே என் பேரவா! உலகம் உருண்டை என்பதால் கிழக்கு செல்ல மேற்கே பயணித்த கொலம்பஸ் போல் நான் அமெரிக்கா போகும் ஆசையுடன் நிப்போன் போய் சேர்ந்தேன். பாருங்கள் விதியை! 1987 ல் எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அதுவும் நான் மிகவும் ஆசைப்படும் USEPA நிறுவனத்தில். ஆனால், எனது நிப்போன் பேராசிரியர் அந்த ஆசையில் மண்ணைப் போட்டுவிட்டார். அதன் பின் செல்லும் வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தும் டாய்ச்சுலாந்தின் ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா போக முடியவில்லை. விதி கொரிய தமிழ் ஆய்விற்கு என்று என்னை தயார் செய்து வைத்திருந்தால் நான் என்ன செய்ய இயலும்? இப்போது கூட நான் மலேசியாவில் இருப்பது தென்கிழக்கு/தூரக்கிழக்கு தொடர்புகள் குறித்து ஆய்வு செய்யவே! ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அடிக்கடி சொல்லுவார், ஏன் ஐயா! அந்தச் சீனாக்காரர்களுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறீர்? பேசாமல் ரங்கனை சேவித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் திவ்யமாய் காலம் கழிக்கலாமென்று! முடியவில்லையே! 

2003 ல் கொரியாவில் இறங்கியவுடன் கேட்ட ஒரு சிறுமியின் “அப்பா” எனும் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ 2000 ஆயிரம் வருடங்களுக்கு முன் ஒலித்த குரல் போல்! நான் கொரியாவை விட்டுக் கிளம்புமுன் கொரிய தமிழ் இளவரசி நினைவாலயம் சென்று வேண்டிக் கொண்டேன். ஆத்தா! நீ யாருன்னு தெரியலை! இனம் காட்டிவிடு! என்று! அவள் கொடுக்கும் சக்தி இந்த ஆய்வை மென்மேலும் இட்டுச் செல்கிறது. அவளது நினைவாலயத்தை சுத்திகரிக்கும் போது கிடைத்த திசுக்களின் மாதிரியிலிருந்து அந்தப் பெண் எந்த இனத்தை, எந்த நாட்டைச் சேர்ந்தவள் என அவளது டி.என்.ஏ (மரபணு) ஆய்வு செய்தனர். ஆச்சர்யம் என்னவெனில், உண்மையிலேயே அப்பெண் தென்னாசிய இனத்தைச் சேர்ந்தவள் என்று தெரிய வந்தது. இருக்கின்ற ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது அவள் அயோத்தியைச் சேர்ந்த பிராமணப் பெண் என்பதை விட தென் தமிழகத்தின் பாண்டி நாட்டுப் பெண்ணாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அதை நோக்கியே என் ஆய்வு நகர்கிறது.

நான் முதன் முதல் சிங்கப்பூரில் (2006) இது பற்றிப் பேசியபோது அவையே குதூகலமடைந்தது. ஏனெனில் இதுவரை யாரும் இது பற்றிப் பேசியதில்லை. நெடுங்கணக்கு அச்சாக தமிழ் போல் இருப்பதும், தமிழ் மொழி போல் வர்க்க வேறுபாடு அற்ற வரிவடிவமாக இருப்பதும், அந்தப் பகுதியில் இல்லாத வழக்கமாக நல்ல உறைப்பான சாப்பாட்டைக் கொரியர்கள் சாப்பிடுவதும் (குறிப்பாக கிம்சி எனும் ஊறுகாய்) , தமிழர்கள் போல் கற்பு நெறியோடு, தாய், தந்தையரைப் பேணுவதும், பெரியோரை மதித்தலும் இன்ன பிற அடையாளங்களிலும் தமிழர்களை ஒத்து இருப்பதாலும், 2000 வருடங்கள் முன் சென்ற பெண் தமிழ் பெண்ணே என்றேன்! நானொரு சூழலியல் விஞ்ஞானி, சரித்திர, தமிழ் மொழி ஆய்வாளன் இல்லை என்று சொன்னது மேலும் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது! 

நல்லவேளையாக எங்களது ஆய்வுக்களமாக மின்தமிழ் மடலாடற்குழு 2006 லிருந்து செயல்படுவதால் அதில் இது பற்றித் தொடர்ந்து உரையாட முடிந்தது. அதுவும் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த கையோடு நான் எழுதிய கட்டுரைகள் ‘கடலோடிகளான’ திரு. நரசய்யா, ஒரிசா பாலு போன்றோரை இந்த ஆய்விற்குள் கவர்ந்திழுத்தது. அப்போது பாலு எழுதுகிறார்: தமிழ் மரபு அறக் கட்டளையின் மின் தமிழ் மடலாடும் குழுமத்தை சேர்ந்த நண்பர்கள் கொடுக்கும் ஆய்வு சுருக்கத்தையும் நமது கொரிய தமிழ் மடலாடும் குழுமத்தை பற்றி சொல்லி வழிப்படுத்தி நான் தொடர்ந்து தூண்டுதல்  கொடுத்து உருவாக்கப்பட்ட கட்டுரைகள் இந்த குழுமத்தில்  சரியாக கவனிக்க படாத ஒரு ஆய்வின் வெளிப்பாடு  இந்த ஆய்வின் கூறுகளை நமக்குள் உருவாக்கியவர் கொரியாவில் பல வருடங்கள் வாழ்ந்து தமிழின் கூறுகளை கொரியாவில் கண்ட  கண்ணன் அவர்கள்! என்று (2015-09-08). 

அடுத்த முக்கியமான கருத்தரங்கு சென்னையில் அமைந்துள்ள ஆசிய ஆய்வு மையம். அதன் நிறுவனர் முனைவர் ஜான் சாமுவேல் அவர்கள் எனது கொரிய ஆய்வு பற்றிய கட்டுரை ஒன்றை அவர் நடத்தும் ஆசிய பண்பாட்டில் தமிழர்களின் பங்களிப்பு எனும் கருத்தரங்கில்  (2011) அளிக்கச் சொன்னார். அப்போதுதான் நிப்போன் பேராசிரியர் காம்பே அவர்களையும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் ராஜ பொன்துரை அவர்களையும் சந்தித்தேன். செம்மொழி மாநாட்டில் ஆரம்பிக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மையத்திலும் இது குறித்துப் பேசும் வாய்ப்பு 2012 ல் கிடைத்தது! அதே வருடம் பேராசிரியர் ஔவை நடராஜன் அவர்கள் தலைமையில் மேனாள் முதலமைச்சர் அண்ணாதுரை, மு.வ போன்றோர் பேசிய ஒய்.எம்.சி.ஏ அரங்கில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.  மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளராக இருந்த முனைவர் பசும்பொன் அழைப்பின் பேரில் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், சென்னை பல்கலைக் கழகத்திலும் பேசும் வாய்ப்புக் கிட்டியது. நான் எனது ஆய்வை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் எனும் நெடுநாள் கனவு அன்று நிறைவேறியது. அன்று பேசிய போது இந்த ஆய்வு பொருளாதார ரீதியில் தமிழக அரசிற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரிய வைத்தேன். இதற்கெல்லாம் உச்சாணி போல் அமைந்ததுதான் கொரியத் தூதரகம் அமைத்த 2015 நவம்பர் 6 தேதி கருத்தரங்கம். அது மத்திய அரசிற்கு ஓர் சவால் போல் அமைந்தது. பொறுப்புள்ள அரசு ஆய்வாளர்கள் எங்களோடு இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டால் நிறைய சாதிக்கலாம். சமகாலத் தமிழக அகழ் ஆய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன. தமிழகம் இந்தியாவின் சுடர் விளக்கு என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் புகழ் இந்தியாவிற்குத்தானே!

2006 லிருந்து 2015 வரையிலான ஆய்வுப்பணிகள்:

1. WORKSHOP ON RISING INDIA AND INDIANS IN EAST ASIA (26-27 அக்டோபர் 2006). சிங்கப்பூர் Institute of Southeast Asian Studies ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் "Indians in Korea" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.

2. செம்மொழி மாநாடு – தமிழ் இணைய மாநாடு,  ஜூன் 23-27, 2010. இந்த அனைத்துலக மாநாட்டில் "தமிழ்க் கொரியத் தொடர்புகள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்புரை ஆற்றப்பட்டது.

3. International Seminar on the CONTRIBUTIONS OF TAMILS To The COMPOSITE CULTURE OF ASIA (16 – 18 ஜனவரி 2011) தமிழகத்தின் சென்னையில் உள்ள Institute of Asian Studies ஏற்பாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் "Tamil–Korean relationship" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசிக்கப்பட்டது.

4. தமிழகத்தின் சிவகாசி நகரில் உள்ள காளீஸ்வரி மகளிர் கல்லூரியில் 2012ம் ஆண்டு “தென்/கிழக்கு ஆசியாவில் தமிழ்ச்சுவடுகள்" என்ற தலைப்பிலான ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிக்கபப்ட்டது. அதே ஆண்டு, பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையிலும் கொரியத் தமிழ் தொடர்பு பற்றி சிறப்புரை ஆற்றப்பட்டது.

5. ஜனவரி 19ம் தேதி வியாழன் (2012) மதியம் 3 மணிக்கு சென்னை செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தில்  செம்மொழி ஆய்வு வட்டத்தின் சார்பில் நா.கண்ணனின் ‘தமிழும் தூரக்கிழக்கும்’ எனும் சிறப்புரை.

6. பிப்ரவரி 28, 2012 செவ்வாய் இரவு ஒய்.எம்.சி.ஏ அரங்கம். உரை: “தமிழும் கொரியமும்” பேரா.ஔவை நடராஜன் தலைமை.

7. எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரியும், தமிழ் மரபு அறக்கட்டளையும் 17.06.2014ல் இணைந்து நடத்திய பன்னாட்டுக்கருத்தரங்கத்தில் "தமிழகத்தின் தென்னாசிய, தூரக்கிழக்கு தொடர்புகள்"என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது.

8.  மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையும் இணைந்து 16.07.2015 அன்று நடத்திய கருத்தரங்கில் "தமிழகத் தென்கொரியத் தொடர்புகள்"என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படைக்கப்பட்டது. 

9. In search of an ancient relationship between Tamilnadu and Gaya Kingdom in International Conference on Cultural Exchange between India and Korea in antiquity. Nov. 6, 2015

டி.வி.எஸ் நிறுவனம் நடத்தும் இன்கோ எனும் கலாச்சார அமைப்பு கொரியத் தமிழ் தொடர்பில் மிக்க ஆர்வம் காட்டி வருவது நல்ல ஊக்குவிப்பாக உள்ளது!

தொடரும்...

N. Kannan

unread,
Oct 15, 2017, 4:16:19 AM10/15/17
to மின்தமிழ்
பகுதி 12

ஜூலை 14-15, 2015 நாட்களில் தில்லியில் மத்திய அரசு நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கு அயோத்தி-கொரியத் தொடர்பை சரித்திரமாக்க வேண்டுமெனச் சொல்கிறது.  Historicising a legend என்பது சுவாரசியமான விஷயம். மாந்த்ரீக மெய்மை எனும் கதையாடல் இலக்கியத்தின் ஒரு மிக முக்கிய கூறு. அது 2000 வருடங்களுக்கு முன்தான் நடந்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது எப்போதும் நிகழ்வது. கி.ராஜநாராயணன் நம்மோடு வாழ்பவர். பரிசு பெற்ற அவரது “கோபல்ல கிராமம்” எனும் சிறுகதையில் முகம்மதியப் படைகளிடமிருந்து இவரது மூதாதையர் தப்பி வரும் போது மரம் வளைந்து கொடுத்து ஆற்றைக் கடப்பதாக ஒரு காட்சிவரும். அதுவொரு மிகைக்காட்சி. ஆனால் தப்பி வரும் மனநிலையை விளக்க வரும் போது இத்தகையக காட்சிகள் கேட்போரின் கவனத்தைக் கட்டாயம் ஈர்க்கும். அச்சம்பவம் நினைவில் நிற்கும். தொன்மங்கள் பற்றிப் பேசும் ஜேசப் கேம்பல், ‘அபத்தம்’ என்பது தொன்மத்தின் மிக முக்கிய கூறு என்பார். இவ்வளவு ஏன் போக வேண்டும். கொரிய இந்தியத் தூதர் தனக்கு செம்பவளத்தின் கதை அமானுஷ்யமாக காட்சி படுத்தப் பட்டது என்றுதானே சொல்கிறார். அது 21ம் நூற்றாண்டில் நிகழ்ந்ததுதானே!   எனவே தொன்மங்களை சரித மாக்கும் போது முடிந்தவரை அறிவியலுக்கு ஒத்துப் போகும் வண்ணம் உண்மைகளைக் கோர்க்க வேண்டும். இதற்கு நிறையச் சான்றுகள் வேண்டும். சான்றுகள் கிடைக்க நிறைய ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்ய அரசின் விருப்பமும், மானியமும் வேண்டும். அந்த வகையில் கொரிய - இந்திய ஆய்வு என்பது கொரியாவில் இதுவரை கிடைக்கும் ஆதாரங்களை வைத்தே பின்னப்படுகிறது. அங்கு கூட இன்னும் ஆழமாக இதை ஆராய வேண்டும். கொரிய சமூகம் பன்முகம் கொண்டது, கலப்பின சமூகம் எனும் கருதுகோள் பெரும்பாலும் விலை போவதில்லை. தமிழகத்திலும் தமிழ் இனம் மாசற்ற தனி இனம் எனச் சொல்லும் கருத்திற்கே ஆதரவு கிடைக்கும். கலப்பு ரத்தம் என்பதை யாரும் விரும்பார். இச்சூழலில், இந்திய ரத்தம் கொரியாவில் இருக்கிறது என்பதை நிரூபிக்க அவர்கள் மெனக்கிட வேண்டுமென எதிர்பார்ப்பது வீண். நம்மவர் செய்யலாம். காரணம் நம்மிடம் தொன்மை இருக்கிறது. சமகால ஆய்வுகள்குறைந்தது 3000 வருடப் பழமைக்குச் சான்று பகர்கின்றன, கடல் வழிப் பயணக் குறிப்புகள் ஏராளமாக உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ஆய்வால் பொருளாதார ரீதியில் பயன் பெறப் போவது தமிழகமே!

தமிழகம் தொன்மை மிகுந்தது என்பது வாய்வழியாக வரும் ஓர் சமூக நினைவலை. ஆனால் அதன் சரிதம் பற்றி தெளிவான ஆய்வுகள் செய்து முறையான ஓர் தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை. தமிழகத்தில் இந்த நிலை எனில், மத்திய அரசிற்கு இது குறித்து எந்த அக்கறையும் இல்லை. மொழிவாரி அரசியல் இதற்குக் காரணம். இந்தியாவின் எந்த மூலை சரித்திரம் சொன்னாலும் அது கண்டு இந்தியன் பூரிப்படைய வேண்டும். அதை ஆவணப்படுத்த வேண்டும். ஆனால், அப்படியான மனநிலை தற்போது இல்லை. சுந்ததிரமடைந்த காலக்கட்டத்தில் இந்திய தேசியம் பற்றிய பூரிதம் இருந்தது. இப்போது, பழைய உடைந்த இந்தியாவாகிவிட்டது. இச்சூழலில், தமிழர்கள் தங்கள் வளங்களை ஒருங்கிணைத்து ஆய்வுகள் செய்து பண்டைய தமிழகத்தின் பெருமையை இந்தியாவிற்குச் சொல்ல வேண்டும். எப்படி விவேகாநந்தர் என்ற மாமுனி தென்திசைக் கடல் முனையில் பூரண ஞானம் பெற்றாரோ அது போல் இந்தியா பெருமையுற தென்னகம் வர வேண்டும் எனும் கருத்தை இந்தியா முழுவதும் விதைக்க வேண்டும். அதற்கு முதல் படியாக தென்னக ஆய்வுகளை ஆர்வமுள்ள தொல்லியர், சரித்திரவியலர், தமிழ் அறிஞர்கள் துணை கொண்டு நிறுவ வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் ஈடுபாடு என்பது ஒரு விஷயம். ஆனால், அவர்களது உதவி இல்லாமலே இதை நாம் செய்விக்க முடியும். உதாரணமாக, ஓய்வுற்ற அறிஞர்களின் வழிகாட்டலை உள்வாங்கி செயல்படும் தன்னார்வக் குழுக்களை உருவாக்க வேண்டும். சமூக வலைத்தளங்களும், விவேக கைப்பேசிகளும் ஆட்சி செய்யும் இக்காலத்தில் இதை எளிதாக சாதிக்க முடியும். நான் அடிக்கடி சொல்லும் ஓர் கருத்து. தமிழகத்தில் வேலை ஓய்வு பெற்றோருக்கு பட்டறிவு இருக்கிறது வலு இல்லை. பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு என்ன செய்வது என பரபரக்கும் சக்தி இருக்கிறது, ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். இந்த இரு பெரும் சக்திகளை இணைத்து இயக்கத் தெரிந்தால் தமிழகத்தில் ஓர் புரட்சியே வெடிக்கும்.

இதைத்தான் கடந்த 16 வருடங்களாக தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) எனும் சர்வதேச தன்னார்வ அமைப்பு செய்து வருகிறது. அதன் செயற்பாடுகள் மின்தமிழ் எனும் மடலாடற் குழுவின் வழியாக ஒருங்கிணைக்கப் படுகின்றன (http://groups.google.com/group/minTamil). மேலும் சமகால சமூக ஊடகங்களான முகநூல், வலைப்பதிவு, என்னாப்பு (வாட்ஸ்அப்) மூலமும் தமிழ் மனித வளத்தை முறைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மின்தமிழ் மடலாடற்குழுவில் கொரிய தமிழ் பற்றி எழுத ஆரம்பித்தவுடன் அதன் எதிர்காலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு ஒரிசா பாலு இணைகிறார் (https://www.facebook.com/orissa.balu). செம்மொழி மாநாட்டில் நானும் முனைவர். சுபாஷிணியும் நாகராஜன் எனும் ஓய்வுற்ற பேராசிரியரைச் சந்திக்கிறோம் (https://www.facebook.com/nagarajan.vadivel). அவரை எங்கள் இயக்கத்தில் இணைக்கிறோம். அவர் கணிசமான அளவு கொரிய தமிழ் தொடர்பு பற்றி சிந்தித்து வருகிறார், துணை நிற்கிறார். இந்த கூட்டிசைவின் வெளிப்பாடாக 2015 ல் தமிழ் மரபு அறக்கட்டளை கொரிய தமிழ் தொடர்பு பற்றிய ஒரு விரிவான மின்னூலை வெளியிடுகிறது. இந்த ஆய்வில் ஆர்வமுள்ளோர் வாசிக்க வேண்டிய முக்கிய ஆவணமாக அதைக் கருதுகிறேன். அந்த நூலை கீழ்க்காணும் வலைத்தளத்திலிருந்து தரவிரக்கம் செய்து கொள்ளலாம். இந்த நூலை முனைவர் நா.கண்ணன் தொகுக்க, நூலுக்கு பங்களித்தவர்கள் என முனைவர்.சுபாஷிணி, முனைவர் வ.நாகராஜன், முனைவர். பானுமதி, ஒரிசா பாலு, மலர்மங்கை, மகாதேவன், பவளசங்கரி, ராஜசுப்பிரமணியன், சிந்தியா போன்றோர் அமைகின்றனர். 

கொரிய ஆய்வாளர்களுக்கு எங்கள் முயற்சியால் இப்போது புத்துணர்ச்சி வந்திருக்கிறது.  மெல்ல, மெல்ல தமது மூதாதையரை தமிழகத்தை விட்டு அயோத்தியாவில் கொண்டு போய் வைத்துவிட்டோமே என்ற எண்ணம் வரத் தலைப்பட்டு இருக்கிறது. ஆனால், கொரிய முதலீடு முழுவதும் தமிழகத்தில் இருக்கிறது. அவர்களுக்கு தமிழ் மொழி மீது இயற்கையான ஈர்ப்பு வருகிறது. அவர்களை மேலும் உற்சாகப்படுத்த நாம் கொரிய மொழி கற்றுக் கொள்ள வேண்டும். கொரிய மக்களின் ஆங்கிலப் புலமை என்பது மிகக்குறைவு. நாம் கொரிய மொழியில் பேசினால் உடனே ஆர்வம் கொள்வர். 2015-ல் சந்தித்த கொரிய ஆய்வாளர்கள் எஃகு உலை என்பது இந்தியாவிலிருந்து கொரியா போயிருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். நாம் இதை வலுப்படுத்தும் வண்ணம் இரும்பு, எஃகு பற்றிய சங்ககால இலக்கியத் தரவுகளைக் காட்டலாம். 2013-ல் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில் பேராசிரியர் ராஜனும், அவரது ஆய்வுக் குழுவினரும் நடத்திய அகழாய்வில், 2,300 ஆண்டுகளுக்கு முன்னரே வணிக நகரமாக இருந்த கொடுமணலில், இரும்பு, எஃகு உருக்கு ஆலை மற்றும் கல்மணிகள் செய்யும் ஆலைகள் இயங்கியிருப்பது தெரிய வந்தது. எகிப்திய நாட்டு பிரமிடு அகழாய்வில் கிடைத்த இரும்பு உளி சுத்தி முதலிய கருவிகள்  கிடைத்து உள்ளன 
இவைகள் கொங்கு நாட்டில் இருந்து அங்கே கொண்டு சென்றார் கள் என இரும்பு ஆராய்ச்சி வல்லுனர்கள் ஜேஎம் ஹீத்  மற்றும் சார் ஜே.ஜே.வில்கின்சன் அவர்கள் கருத்தாகும். வார்ப்பு இருப்பு செய்யும் மிகப்பெரிய உலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குட்டூர் எனும் இடத்தில் கிமு 350 வாக்கில் இருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் கூறுகின்றன. இரும்பு ஆயுதங்கள் வந்த பின் நான்கு திணைகளில் இனக்குழுக்களாக இருந்து வந்த தமிழர் வாழ்வியல் வெகுவாக மாற்றமுறுகிறது. மருத நிலத்து வேளாண்மையும், குடிசார் அரசு நிர்மாணியமும் புதிதாய் உருவாகின்றன. இதே மாற்றத்தை அதாவது உருக்கு ஆலைகளை முதன்மையாக வைத்துத்தான் காயா அரசு கொரியாவில் நிறுவப்பட்டு செயல்பட்டிருக்கிறது. கிம் சுரோ எனும் அரசன், தமிழ்ப் பெண்ணான செம்பவளம் என்பவளோடு திருமண உறவு வைத்துக் கொள்வதற்கு முன் ஒன்பது இனக்குழுக்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்ததாகவும், சுரோ மன்னனே முதன் முதலாக ஒரு அரசமைப்பை உருவாக்குகிறான் என்பது மிக அழகாக இரும்பு காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட ஐந்திணை மரபு மாற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

இரும்புக் கலப்பைகள் விவசாய அபிவிருத்திக்கு முக்கிய பங்கு அளித்திருக்கின்றன. நெல் சாகுபடி என்று எடுத்துக் கொண்டாலும் அதுவும் தமிழகத்தில் தொண்டு தொற்று இருந்து வந்திருக்கிறது. உதாரணமாக, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் ராஜன், தன் ஆய்வு மாணவர்களோடு பழநி அருகே '"பொருந்தல்" என்ற கிராமத்தில் மேற்கொண்ட அகழாய்வு, பல புதிய திறப்புகளை வழங்கியுள்ளது. ஒரு ஜாடியில் இருந்த இரண்டு கிலோ நெல்மணிகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு.490-ம் ஆண்டைச் சேர்ந்தவை என்றும், தமிழர்களின் நெல் விவசாயப் பாரம்பரியம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் நிரூபித்தது. அதே ஆய்வில் கண்டறியப்பட்ட சுடுமண்பாண்டம் ஒன்றில் 'வயிர’ என்ற தமிழி எழுத்துகள் இருந்துள்ளன. இதன் மூலம் தமிழி வரி வடிவத்தின் தொன்மை, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொரிய ஆய்வாளர்களில் சிலர் கொரியாவிற்கு இரும்பு ஆலைத் தொழில் நுட்பத்தையும், நெல் விவசாயத்தையும் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டுமென நம்புகின்றனர். 

அந்தக் கொரிய அரசியை “செம்பவளம்” என ஏன் நான் அழைக்கிறேன்?

Heo Hwang-ok அல்லது Hŏ Hwang-ok என்பதை சீனத்தில் எழுதினால்  許黃玉 என்று வரும்! ஓவியக் குறியீடுகளான இவற்றின் பொருள்?

許 = permit or advocate
黃 = Saffron
玉 =  Jade

கொரியா போய் சேர்ந்த “செம்பவளம்” எனும் 16 வயது இளம் மங்கை தன் பெயரைச் சொல்லியிருக்கும். அதற்குப் பொருள் என்ன என்று கேட்டிருப்பர்? இவள் சொல்லிருப்பாள். அதன் பொருளுக்கேற்றார் போல் அவர்கள் அக்காலத்தில் இருந்த எழுத்து வடிவில் எழுதியிருப்பர். பின்னர் 13ம் நூற்றாண்டில் இல்யோன் எழுதும் போது அவ்வொலிக்கேற்றார் போல் சீன ஓவியச் சுட்டு கொடுத்திருப்பார். எனவே நம்மவூர் செம்பவளம் கொரியா போனவுடன் ஹே ஹுயுவாங் ஓக் என்று அழைக்கப்பட்டிருக்களாம். பவள வியாபாரம் தழைத்திருந்ததை கொரிய ஆவணங்களும் சுட்டுகின்றன. எனவேநீட்டி முழக்கி ஹே ஹுயுவான் ஓக் எனச் சொல்லாமல் செம்பவளம் என்றே இனிச் சொல்லிப் போகிறேன். 

தொடரும்...

bala subramani

unread,
Oct 15, 2017, 4:28:51 AM10/15/17
to mintamil
...

images (7).jpg
images (8).jpg
images (6).jpg
images (4).jpg
images (1).jpg
images (4).jpg

N. Kannan

unread,
Oct 16, 2017, 9:07:57 AM10/16/17
to மின்தமிழ்
பகுதி 13

ஒரு புதிய ஆய்வு வெளிப்படும் போது பல்வகையான எதிர்வினைகள், இணைவினைகள் உண்டாகும். எதிர்வினைகளின் காரணம் சொல்பவரைப் பிடிக்காததால் இருக்கலாம். சொல்லும் கருத்து தன், முன் அனுமானங்களோடு ஒத்துப்போகாமல் இருக்கலாம். இல்லை அது இதுவரை கேள்விப்படாத ஒன்றாக இருக்கலாம், அதனால் நம்ப முடியாமல் இருக்கலாம். சான்றுகளோடு நிறுவப்படும் போது ஏற்றுக்கொள்ளப் படலாம். இணைவினை என்பதும் சுவாரசியமானது. சொல்பவரைப் பிடிப்பதால் அவர் சொல்வது உண்மையாக இருக்கும் என நம்புவது. அடுத்து சொல்வரின் ஞானம், பயிற்சி, பட்டம் இவை ஏற்றுக்கொள்ள உதவலாம். இன்னொரு வகை இருக்கிறது! அது என்னவெனில், அட! இவர் சொல்வது புதுமையாக இருக்கிறதே இது பற்றி நாமும் பேசினால் நமக்கும் ஒளிக்கீற்று (லைம்லைட்) கிடைக்குமே என்பது. இது கொஞ்சம் ஆபத்தானது! ஏனெனில், இது மற்றொருவர் செய்த ஆய்வை நகலெடுக்க முயல்வது. அவர் தோளில் ஏறி பலனை நுகர முயல்வது! ஆய்வுத்துறை பற்றிய அறிவு இருக்க வேண்டும். அறிவியல் பயிற்சி இருக்க வேண்டும். கிடைக்கும் தரவுகளின் நம்பகத்தன்மையை சோதிக்கும் பக்குவம் இருக்க வேண்டும். துறைசார் பிடிப்பு இருக்க வேண்டும். களப்பணி அனுபவம் இருக்க வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் ஒளிக்கீற்றுக்கான முயற்சியாக மட்டும் ஈடுபட்டால் அது ஔவை போன்றாரால் கேலி செய்யப்படும்!

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாக பாவித்து தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

கணினி, இணையம் வந்த பிறகு தகவல் என்பது தொடுபொறி அளவில் நிற்கிறது. எனவே தகவலை மட்டும் வைத்து, அதைக் கூட்டிக்கழித்து எழுதிவிட்டால் அது அறிவியல் என்று கருதப்படாது. ஆய்வு பொருள் பற்றிய பட்டறிவு, களப்பணி இருக்கும் போது, ஆய்வு கருதுகோள்  புலப்படும். எங்கு ஆராய்ந்தால் வேண்டிய விடை கிடைக்கும் என்று அறிவியல் அனுமானம் தோன்றும். அத்திசை நோக்கி ஆய்வை எடுத்துச் சென்று கோட்பாட்டை நிறுவ முடியும். இல்யோன் 13ம் நூற்றாண்டில் கொரியாவில் நிலவிய சமூக நினைவுகளை பௌத்தம் சார்ந்த கண்ணோட்டத்தோடு பதிவு செய்கிறார். இதை அறிவியல் கொண்டு நிறுவ வேண்டுமெனில் பல்வேறு வழிகள் இருக்கின்றன. பல்வேறு துறைசார் அறிவுகள் இதற்குப் பயன்படும். சோல் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கு மரபணுச் சோதனை வழியில் இதை நிறுவ முடியும் எனத் தெரிந்திருக்கிறது. அவர்கள் அதைச் செய்து இந்த சமூக நினைவுகளின் நம்பகத்தன்மையை நிரூபிக்கின்றனர். ஆயினும் இது ஆரம்பம் மட்டுமே! இன்னும் இதில் செய்ய வேண்டிய ஆய்வுகள் உள்ளன. 

2015 நவம்பர் கருத்தரங்கில் கொரிய ஆய்வாளர்கள் உருக்கு உலை என்பது நல்ல ஆய்வு பொருள் என்றனர். தமிழகத்திலுள்ள பண்டைய உருக்குச் சாமான்களையும், கொரியாவின் பண்டைய இரும்புச் சாமான்களையும் ஒப்பிட்டு தனிம ஆய்வை மேற்கொள்ளலாம் என்றனர். கிம் சுரோ எனும் மன்னனை உருக்கு அரசன் என்று சரித்திரம் கூறுகிறது. கிம் என்றால் தங்கம் என்று பொருள், சங்க காலத்தில் இரும்பிற்கும் அப்பெயர் இருந்திருக்கிறது. உரும்புத்தாதுவை தங்கம் போல் கொதி நிலையில் வைத்து வேண்டிய அளவு கரியைக் கலக்கும் போதுதான் எஃகு உருவாகிறது. எனவே இரும்பை, இந்தியத் தொழில் நுட்பத்தொடு கொரியாவில் நிலை நாட்டிய சுரோ மன்னனை “கிம்” என்றனர். அது மட்டுமல்லாது, அவர்களது அரசை ‘பொன்கயா’ என்றனர். அந்த அரசிற்கு காராக் என்றும் பெயர். இச்சொல் இரும்பு எனும் சொல்லோடு ஒத்த ஒலி அமைப்பு கொண்டதாகவும் உள்ளது. ஆயினும், இதிலும் செய்ய வேண்டிய ஆய்வுகள் நிரம்ப உள்ளன. அறிவியல் பூர்வமாகச் செய்த ஆய்வுகளை உலகத்தரமான அறிவியல் சஞ்சிகைகளில் வெளியிட்டு அதன் பின்னரே கோட்பாட்டை உறுதி செய்ய வேண்டியுள்ளது.

நான் கடலாய்வில் ஈடுபட்டது நிப்போனில். அங்கு தொடங்கியது, ஜெர்மனி, கொரியா என நீண்டது! Korea Institute of Ocean Science and Technology (KIOST) என்பது கொரியாவின் தலை சிறந்த கடலாய்வு மையம். இங்கு எட்டு வருடங்கள் வேலை செய்துவிட்டு 2011 டிசம்பரில் டாய்ச்சுலாந்து திரும்பினேன். அதன் பின் எனது கொரிய இந்திய தொடர்பு பற்றிய ஆர்வத்தை எனது சகா முனைவர் ஓ ஜே ரியோங் அவர்களிடம் தெரிவித்தேன். அவர் அதை ஹில் கொண்டு நான் மீண்டும் 2016 ல் கொரியா திரும்பிய போது KIOST ஆய்வாளர்களின் கவனத்தை என் மீது திருப்பினார். முதன்முறையாக அப்பெரும் ஆய்வகத்தில் ஓர் இந்தியன் கடல்சார் சரிதம் பற்றிய உரை நிகழ்த்துகிறான். இதை வெறும் தற்செயல் என்றும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நான் எப்படி பேரா.கிம் கடல்சார் வழித்தடத்தை மறந்து ஓர் கோட்பாட்டை முன்வைத்தார் என்று கேட்டது கடல்சார் விஞ்ஞானிகளான அவர்களுக்குப் புரிந்தது. மிக ஆர்வமாகக் கேட்டனர். அடுத்து இடை எப்படி நகர்த்தலாம் என யோசிக்க ஆரம்பித்தனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்திய இளவரசியான தமிழ்ப் பெண்ணை அயோத்திக்குக் கொண்டு சென்ற கிம் பியோங்மோ அவர்களை சந்திக்க வேண்டுமெனக் கொரியத் தூதரிடம் முன்பே சொல்லியிருந்தேன். அவரும் கிம்ஹே கிம் இனத்தைச் சேர்ந்தவர்தான். 2015 ல் அவர் ஏற்பாடு செய்த கருத்தரங்கிற்கு அழைத்திருந்தார். ஆனால் அவரால் வரமுடியவில்லை. நான் கொரியாவில் இது பற்றி உரை நிகழ்த்திய போது அவரையும் கேட்க அழைத்திருந்தேன். அப்பொதும் உடல் அசௌகர்யத்தால் அவரால் வரமுடியவில்லை. ஆனால் நிச்சயமாக நான் முன்னெடுத்திச் செல்லும் கடல் வழித் தொடர்பு பற்றிய சேதி அவருக்கு நிச்சயம் போயிருக்கும். அவரது எதிர்வினை என்ன என அறிய ஆவலாயுள்ளேன்!

கொரியாவில் மிகப் பிரபலாமான முதல்வர்கள் கிம் இனத்தைச் சேர்ந்தோர் இவர்கள் எல்லோரும் கிம்ஹே எனும் ‘கயா’ அரச வம்சாவளியினர். இரும்பு கருப்பு. தமிழனும் கருப்பு. கிம் மக்களும் கொஞ்சம் (துளி) கருப்பு. எனவேதான் அவர்களால் தங்களை இந்தியர்களோடு இணைத்துக் கொள்ள முடிகிறது.  எனது உரை முடிந்த பிறகு மெதுவாக KIOST ஆய்வாளர் கிம் சோங் கோன் (Dr. Kim Chong-Gon) என்னை அணுகி, தான் செம்பவள வம்சாவளியின் 70 வது தலைமுறை என்றும், தனக்கும் இந்த ஆய்வில் தனிப்பட்ட ஆர்வம் இருப்பதாகச் சொன்னார். அவரும் நானும் போட்டோ எடுத்துக் கொண்டோம். அவர் என்னைவிடக் கருப்பாக இருந்தது ஆச்சர்யம்! :-) 

நான் 2011 ஆம் ஆண்டு சென்னை ஆசியக் கல்வி மையத்தில் நிகழ்த்திய உரையின் எழுத்து வடிவம் கீழுள்ள சுட்டியில் கிடைக்கிறது!

தொடரும்...

N. Kannan

unread,
Oct 17, 2017, 5:31:56 AM10/17/17
to மின்தமிழ்
பகுதி 14

தமிழக-கொரிய ஆய்வு தொடங்கிய காலத்திற்குப் பிறகு நல்லூழ் காரணமாக நிறையத் தடயங்கள் தமிழகத்தின் தொன்மை சொல்லும் வண்ணம் கிடைத்துள்ளன. உதாரணமாக ஆதிச்சநல்லூர், கொடுமணல், அழகன்குளம், கீழடி ஆய்வுகள் சங்காலத்தில் தமிழனின் கடல் வாணிபம் குறித்த சான்றுகளைத் தந்த வண்ணமுள்ளன.  தமிழ் வரலாறின் தொடக்கம் ஐந்திணை வாழ்வியல் என தொல்காப்பியம் பகரும். திணை வாழ்வில், இனக்குழுக்களே பிரதானமாக இருந்தன. அதிலடங்கும் ஆய் குலம் பற்றிப் புறநானூறு பேசும்.

வட திசையதுவே வான் தோய் இமயம்.
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே

அதிசயமாக, இப்பாடல் தமிழ் கூறு நல்லுலகின் வட எல்லை வான் தோய் இமயம் என்று கூறுகிறது. தென்திசை ஆய்குடி. இக்குடியிலிருந்துதான் ஒரு மங்கை கொரியா சென்றிருக்க வேண்டும்.  தென்திசை ஆய்குடியைச் சேர்ந்தவள் என இவள் சொல்ல. அவர்கள் அதை தங்கள் நினைவேடுகளில் “ஆய் குல ஆத்தா” என பதிவிட அதுவே ஆயுத்தாவாகி பின்னர் அயோத்தியாவாக உருமாற்றம் பெற்றிருக்க வேண்டும். பேராசிரியர் நாகராஜன் தேடி எடுத்த பண்டைய வரைபடங்களில் “காயா” எனும் நாடு தென்புலத்தில் இருந்திருப்பதைக் காட்டுகிறது. இதே பெயரிலேயே கொரியாவிலும் ஒரு நாட்டை உருவாக்குகின்றனர் தமிழர்கள். இதை சாத்தியப் படுத்தியது வணிகமும், தொழில் நுணுக்கமும்! இக்காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் தமிழன் உருக்கு உலை வைத்து போர் ஆயுதங்களும், விவசாயக் கருவிகளும் செய்யத் தொடங்குகிறான். இந்த தொழில்நுட்பம் இனக்குழு அரசியலிலிருந்து பேரரசுகள் உருவாகக் காரணமாகின்றன. முதலில் விவசாயம் பெருகிறது. அதனால் வியாபாரம் பெருகிறது. வியாபாரத்தை தற்காத்துக் கொள்ள படை பலம் உருவாகிறது. 

குடையும் வாளும் நாள்கோள் அன்றி
மடையமை ஏணிமிசை மயக்கமும் (புறத்திணை சூத்திரம் 71)

என்று கொற்றவனின் குடைக்கு போர் வாள் காப்பு என்று சுட்டுகிறது.

களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன்
வாளோர் ஆடும் அமலையும் (புறத்திணை சூத்திரம் 72)

என்று அரசையும் வாளையும் இணைத்துப் பேசுகிறது. 

சம் குக் உசா வெனும் கொரிய சரிதமும் முதலில் இனக்குழு அரசியலையே முன் வைக்கிறது. இன்று கிம்ஹே எனப்படும் பிரதேசத்தில் முன்பு 9 இனக்குழுக்கள் அரசாண்டதாகவும் (இதை நமது கடையேழு வள்ளல்களோடு ஒப்பு நோக்குக), பின் இக்குழுக்களை இணைக்க கிம் சுரோ எனும் அரசன் வந்தான் என்றும். அவனுக்கு இம்முயற்சியில் பக்கபலமாக ஆய்குல மங்கை செம்பவளம் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற எஃகு உற்பத்தி தொழில்திறன் உதவியது என்று கொள்ள இடமுள்ளது. கிம் சுரோ தோன்றிய கதை திணை வாழ்வின் கூறுகளைக் கொண்டிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. தொல்காப்பியம் நாற்றிணைத் தெய்வங்களாக மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனும் தெய்வங்களைச் சொல்கிறது.

மாயோன் மேய காடுறை உலகமும் 
சேயோன் மேய மைவரை உலகமும் 
வேந்தன் மேய தீம்புனல் உலகமும் 
வருணன் மேய பெருமணல் உலகமும் 
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் 
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.

கொரிய ஐதீகமும் வானுறை உறையும் தேவேந்திரன் தன் சகாக்களுடன் மண்ணில் தோன்றுகிறான் என்கிறது. அதுவே கொரிய மக்களின் தோற்றம் என்கிறது. இல்யோன் இவரைச் சக்ரோதேவேந்திரா என்கிறார். சக்கரம் உடைய தேவன் கிருஷ்ணன். அல்லது வஞ்சிராயுதம் உடைய தேவன் இந்திரன் எனலாம். கண்ணனுக்கு உபேந்திரன் எனும் ஒரு பெயருமுண்டு. அதாவது இந்திரனின் தம்பி எனும் பொருளில். எப்படியாயினும் ‘இழிதல்’ (அவதாரம்) கோட்பாடு அங்கும் இருப்பது தெரிய வருகிறது. இன்னும் ஆச்சர்யமாக, சுரோ மன்னனின் தோற்றம் குந்தவிக்குக் கிடைத்த ஆறு புத்திரர்களின் வரலாறு போலவே உள்ளது. உதாரணமாக, சுரோ மன்னன் தோன்றும் முன் வான்வழி செய்தியாக அவர்களுள் ஒரு அரசன் தோன்றுவான் என்றும் அதைக் காண மலைமுகட்டிற்குச் சென்று “குகா, குகா” எனப்பாடும் படியும் சேதி வருகிறது! சென்று பார்த்தால் ஆறு தங்க முட்டைகள் உள்ளன. அவை என்னவென அறியாமல் மக்கள் திணற, அதே சேதி, அதிகாலை சூரிய ஒளி பட்டவுடன் இம்முட்டைகளிலிருந்து உங்கள் மன்னன் தோன்றுவான் எனச் சொல்கிறது. அதன் படி மூத்த மகனாக சுரோ மன்னனும் அவரது ஐந்து சகோதர்களும் தோன்றுகின்றனர். இது கர்ணன் மற்றும் பஞ்ச பாண்டவர் கதை போலவே உள்ளதை ஒப்பு நோக்கலாம்.  இதில் நாம் கவனிக்க வேண்டியது, சுரோ மன்னனின் தோற்றத்திற்கு முன்னமே, அதாவது பௌத்தம் பரவுவதற்கு முன்னமே பழமையான இந்தியப் புராணக் கதைகள் அங்கு சென்றிருக்கின்றன. அதை சாத்தியப் படுத்தியது ரோமாபுரி, நிப்போனை இணைத்த கடல்வழி பெருவழிப் பாதையில் தமிழர்கள் பயணங்களே! சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் சங்க காலச் சேர மன்னன். கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டைஆண்டவன். ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார்.

அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் - புறநானூறு 

எனவே மாபாரத, இராமாயணத் தொன்மங்கள் தமிழ் மண்ணில் உலவிய காலங்களிலிருந்தே தூரக்கிழக்கோடு தமிழர்களுக்குத் தொடர்பு இருந்திருக்க வேண்டும்.

பொன் முட்டையிலிருந்து வந்ததால் சுரோ மன்னனுக்கு “கிம்” (தங்கம்) என்று பெயர். அவன் அமைத்த அரசிற்கு பொன்கயா என்று பெயர்.  பட்டுப்பாதையிலிருந்து பவள இறக்குமதி பற்றி கொரியக் குறிப்புகள் உள்ளன. அங்கு செம்பவளம் எனும் தமிழச்சி செல்கிறாள். அவள் சென்ற பாய்மரக்கப்பலின் பாய்கள் செந்நிறத்தில் இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. அவள் கொண்டு சென்ற பரிசுகளில் யாழ், தேயிலை முக்கியமானது. ஏனெனில் கொரிய, நிப்போன் கலாச்சாரம் என்பதைத் தேயிலைக் கலாச்சாரம் என்றே சொல்லலாம். சங்க இலக்கியங்களான புறநானூறு, கலித்தொகை, பரிபாடல் மற்றும் ஆற்றுப்படை நூல்களிலும், திருக்குறளிலும் சிலப்பதிகாரம், பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் பக்தியிலக்கியங்களிலும் யாழ் பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. யாழின் வகைகளாகப் பேரியாழ், சீறியாழ், மகரயாழ், சகோடயாழ் என்று அறிய முடிகிறது. இதே போன்றதே தமிழகத்தின் முரசம், பறை போன்றவை. இவைகளை இன்றளவும் வாசிக்கும் திறன் பெற்ற ஆணும் பெண்ணும் கொரியா, நிப்போனில் உள்ளனர்.

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்
தமர முரசுகள் குடமுழவொடு துடி
சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

இந்தியக் கொரிய வரலாற்றில் சேரர்களின் பங்கும் இருந்திருக்க வேண்டும்.  ஏனெனில், பட்டுப்பாதையில் சேரநாட்டு கொற்கை முக்கியத் துறைமுகமாக இருந்திருக்கிறது. சேரர்களின் கொடி “வில்”. கொரிய மக்களின் மிகச்சிறந்த விளையாட்டு வில் வித்தை. ஒலிம்பிக் போட்டிகளில் வில்வித்தையின் தங்கப்பதக்கங்கள் கொரியாவையே சென்றடையும். கொரிய, நிப்போன் கோயில்கள் பெரும்பாலும் கேரள அம்பலங்களின் வடிவில் இருப்பதும் நோக்கத்தக்கது.

ஆயினும், செம்பவளம் பாண்டிய இளவரசி என்று சொல்வதற்கு முக்கிய காரணம் அவள் கொண்டு சென்ற கொடி மீன்கொடி. கொரியா முழுவதிலும் தேடினாலும் மீன் சின்னம் என்பது பொன்கயா பகுதியான கிம்ஹே தவிர வேறெங்கும் கிடையாது. இரட்டை மீன் சின்னம் என்பது பாண்டியர்களின் சின்னம் என்பது நாம் நன்கு அறிந்ததே. ஆயினும், பேரா. கிம் பியோங்மோ அது பாகிஸ்தானின் பெஷாவர் அல்லது அயோத்தியிலிருந்து வந்திருக்க வேண்டுமென முடிவு கட்டியது அவசர முடிவு. அவர் தமிழகம் வரவில்லை. தமிழக சரித்திரம் அறிந்திருக்கவில்லை. பட்டுப்பாதையில் கோலோச்சிய தமிழக வணிகர்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. தொல்லியல், தமிழ்த்துறை ஆய்வாளர் புலவர் இராசு அவர்களின் கண்டுபிடிப்பான ஓர் கல்வெட்டு தமிழக வணிகக் குழுக்களின் அடையாளங்களைக் காட்டுகிறது. அதிலொன்று சூலாயுதம். மீண்டும் இச்சூலாயுதம் என்பது கிம்ஹே நினைவாலயத்தில் மட்டுமே காணக்கிடைக்கிறது.  

இவை அனைத்துமே வெறும் தற்செயலான ஒற்றுமைகள் என்று ஒதிக்கிவிட முடியுமா?

தொடரும்..

Photos:

தேமொழி

unread,
Oct 17, 2017, 6:10:08 AM10/17/17
to மின்தமிழ்
தமிழகத்தில்  தேயிலை பயிரிடப்பட்டதன் துவக்கம் எப்பொழுது?

இதுவரை தமிழிலக்கியம் மற்றும் தொல்லியல் குறிப்புகளில் தேயிலை குறித்த குறிப்புகள் உள்ளனவா?

அவற்றில், என்ன பெயரில் தேயிலை குறிப்பிடப்படுகிறது?

உண்மையில் அரசியார் கொண்டு சென்றது தேயிலைதானா?  அல்லது வேறெதுவும் செடியா?

புத்தர்கள் இரட்டை மீன் சின்னம் 

கல்லடுக்குகள் புத்தத்தை நோக்கி திருப்புகிறது?

கொண்டு சென்றது தேயிலை ?

அது சங்கமித்திரை போதிமரக்கிளையைக் கொண்டு சென்றது போல அரச மரக்கிளையாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

கீழுள்ள சங்கமித்திரை கதையுடன் எந்த அளவு கொரியா இளவரசி கதை பொருந்துகிறது.

Sanghamitta, a nun of barely eighteen, and others from her order set sail from India in the third century B.C.E., carrying to the sultry green island of Sri Lanka a branch of the sacred Maha Bodhi tree, under which Siddhartha, the Buddha Shakyamuni, had attained enlightenment. Sanghamitta and her brother, Mahinda, soon established the first center of Theravada Buddhism outside India.

அரச மகள், சகோதரனுடன் கடல்பயணம் 

சுருக்கமாக:  தமிழகத்துடன்  தேயிலை சான்று பொருந்துவதாகத் தோன்றவில்லை. 

..... தேமொழி 

Suba

unread,
Oct 17, 2017, 6:10:42 AM10/17/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-09 16:13 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
பகுதி 7

ஆய்வகத்தில் அமர்ந்து அறிவியல் ஆய்வு செய்வதற்கும், மக்களோடு பழகி மானுடவியல் ஆய்வு செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. அறிவியல் செய்யும் போது முழுவதும் objective வாக இருக்க முடியும். குறிப்பாக வேதியலில் ஒரு வேதிமத்தோடு அன்பு செய்ய முடியாது. பழக முடியாது. ஆனால் மானுடவியல் ஆய்வு என்பது அப்படி இல்லை. நான் இரண்டு வருடங்கள் ஞானக்குழு அமைப்பின் கீழ் கொரியா சென்று ஜெர்மனி மீள்வதாகத்தான் எண்ணம். மேலும் என் நிப்போனிய வாழ்வு இம்மக்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் தரவில்லை! ஆனால் கொரியா சென்று அவர்களோடு ஒண்ணுமண்ணாய் வாழ்ந்த போதுதான் இவர்கள் எவ்வளவு நல்லவர்கள் என்று தெரிந்தது.  ஒருவகையில் கொரியர்கள் இந்தியர்கள் போல்தான். நம் சரிதத்தைப் புரட்டினால் நாம் யாரிடமும் வம்புச் சண்டைக்குப் போனதில்லை, ஆனால் வருவோர் போவோரெல்லாம் நம்மைத் தாக்கிவிட்டு, ஆக்கிரமித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். கொரியாவும் எந்த வம்பிற்கும் போனதில்லை. ஆனால் சீனாவும், நிப்போனும் இவர்களைப் படுத்தி எடுத்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் பண்பான நாடு என்றால் அது கொரியா என்று தீர்மானமாகச் சொல்லலாம். பௌத்தம் சொன்ன நன்னெறிகளை இன்றளவும் கடைப் பிடிக்கும் சமூகமாக கொரிய சமூகம் விளங்குகிறது! கொரியாவில் பெண்கள் இரவு, நடுநிசி எப்போதும் தெருவில் நடக்க முடியும். நான் பலமுறை இதைக் கண்டுள்ளேன். கொரியக் குழந்தைகள் மாம்பழம் போல். கடித்து சாப்பிட்டுவிடலாம் ;-) எனவே இனிமேல் இந்த ஆய்வு கொஞ்சம்  subjective ஆகப் போகும். அதில் தவறில்லை! இந்திய சரிதம் எனும் புத்தகம் எழுதிய ஹெர்மான் குல்க (கீல் பல்கலைக் கழகம், டாய்ச்சுலாந்து) எங்கள் குடும்ப நண்பர். தேநீர் அருந்தும் போது சொல்வார், ‘இந்தியர்கள் குல்க என்பதைக் கல்கி என்று எழுதுகின்றனர். அதுவும் பாந்தமாகவே இருக்கிறது’ என்று. இந்தப் பிடிப்பு, பாசம் இல்லையெனில் மற்றொரு கலாச்சாரத்திற்குப் போய் ஆய்வு செய்ய இயலாது!

இப்படித்தான் ஞானக்குழு சுற்றுலா (Brain Pool Scholars Tour) ஒன்று ஏற்பாடாகியிருந்தது. கொரியாவை வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்து கொள்ள சில முக்கிய இடங்களுக்கு கூட்டிச் சென்றார்கள். அதில் குவான்ஞ்சு எனுமோர் இடம். ஷில்லா அரசின் தலைநகரமாக இருந்த இடம். பௌத்த கலையின் நளினமான வெளிப்பாடுகளைக் கொண்ட ஆட்சி இருந்த வட்டமது! அந்த அருங்காட்சியகம் போன போது எனக்குக் கொரியாவில் இருப்பதாகத் தோன்றவில்லை. ஏதோ புத்த கயா, சாஞ்சி என்று இந்திய நகரில் அமைந்திருக்கும் அருங்காட்சியகம் என்பது போன்ற உணர்வு. தடுக்கி விழுந்தால் இந்தியத் தொன்மம். பிரம்மித்துப் போய் வெளியே வரும் போது ஓர் நடுத்தர வயது மாது என்னிடம், “தாங்கள் இந்தியாவா?” என்று கேட்டார். ‘ஆம்’ என்றேன். நம் இரு நாடுகளுக்கும்  ஒற்றுமை இருப்பது தெரிகிறதா? என்றார். ‘நிச்சயமாக’ என்றேன். ஏனெனில் வந்த அடுத்த வாரத்திலேயே கோஜே தீவிற்கு அருகிலுள்ள தொங்க்யோங் நகரில் இருக்கும் 800 வருடப் பழமையான புத்தர் கோயிலுக்கு போய் வந்திருக்கிறேன். ஆயினும் இந்த அம்மையார் வேறு ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்தது. அவர்களைப் பேச விட்டேன். ‘நாங்கள் ஏன் எங்கள் தந்தையை இந்தியர்கள் போல் அப்பா என்றும் அன்னையை அம்மா என்றும் அழைக்கிறோம் எனத்தெரியுமா?” என்றார். இதற்காகத்தானே நான் காத்திருந்தேன்! ‘சொல்லுங்கள்!’ என்றேன். அப்போதுதான் நான் முதன் முதலாக கிம் சுரோ அரசனின் கதை கேட்கிறேன்.

அந்தக் கொரிய மாது எனக்கொரு கதை சொன்னார். அது சரிதமா? ஐதீகமா? என்பதில் தெளிவில்லை. ஆனால், கிம் வம்சா வழியினருக்கு அது சரிதம்! அதன் படி கொரிய மன்னனான கிம் சுரோ இளைஞனாக அரசேற்று இருக்கும் போது அவனுக்கொரு கனவு வந்தது. அதில் தனக்கு மனைவியாகப் போகின்றவள் மேற்கிலிருந்து வருவாள் என்று வந்தது. புத்த நெறியில் உள்ள கொரிய/நிப்போனியர்களுக்கு மேற்கு திசை என்பது சொர்க்கத்தின் திசை. ஏனெனில் கௌதம சித்தார்த்தன் என்ற சாக்கிய முனி தோன்றிய திசை அது. எனவே சுரோ கொரியப் பெண்களை மணந்து கொள்ளாமல் மேற்கிலிருந்து வரும் ஒரு நங்கைக்காகக் காத்திருந்தான். அதே சமயத்தில் இந்தியாவில் ஓர் அழகிய இளவரசியின் தந்தைக்கும் ஓர் கனவு வந்தது. அதன் படி தன் பெண்ணிற்கு கணவன் தூரக்கிழக்கில் இருக்கிறான் என்பது. எனவே அவ்வரசன் தன் பெண்ணை பரிவாரங்களோடு கடற்பயணம் மேற்கொள்ள அனுப்பிவிட்டான். அந்தப் பெண் கொரியக் கரை வந்து சுரோ மன்னனை மணந்து பல பிள்ளைகள் பெற்று இன்று கொரியாவின் செல்வாக்குள்ள குடிகளான கிம், ஹே இனக்குழுக்களைத் தோற்றுவித்தாள். அவள் இறக்கும் போது தன் கணவனிடம் ஒரு வரம் கேட்டாள். அதன் படி அவள் பிள்ளைகள் தம் பெற்றோரை எப்படி அம்மா/அப்பா என்று அழைத்தனரோ அது போலவே எல்லாக் கொரிய மக்களும் தத்தம் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்க வேண்டும் என்பதே அவள் கேட்ட வரம். அதன் படியே இன்றளவும் நடந்து வருவதாக அந்த மாது சொன்னாள்.

தொன்மம் என்பது ஓர் கதைசொல்லி மரபு. நடந்த ஓர் உண்மை சம்பவம் காலப்போக்கில் கதை, கதையாய் வாய் மொழியாக வரும் போது மாற்றம் பெற்று, ஒரு புதினப்பூச்சு கொண்டு ஐதீகமாக மாறிவிடுகிறது. இராமானுஜர் எனும் காவியத்தலைவனின் கதைகளில் இந்தப் புதினப் பூச்சு இருப்பதால்தான் தொல்லியல் நிபுணர் நாகசாமி அப்படியொரு நபர் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றே இல்லை என்று புத்தகம் எழுத முடிகிறது. ஆனால் அது முறையல்ல. இராமானுச முனி ஏற்படுத்திய சம்பிரதாயம் வாழ்கிறது. அவர்கள் வம்சாவழியினர் இன்றும் வாழ்கின்றனர். கொஞ்சம் புதினம் இருந்தாலும் அடிப்படைக் கரு என்பது உண்மை. தொன்மங்களின் வாசிப்பு என்பதோர் கலை!

​எந்த நூலில் நாகசாமி இப்படிச் சொல்கின்றார் என அறிய ஆவல். கட்னத் 10 ஆண்டுகளில் அவர் சில நல்ல ஆய்வுகளையும் சில குழப்பமான செய்திகளையும் கலந்து வழங்குகின்றார் :-)

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Oct 17, 2017, 6:15:26 AM10/17/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-10 6:06 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
பகுதி 8

கிழக்கே நோக்கு எனும் தாரக மந்திரத்தை முதலில் சொன்னவர் கேரள வம்சாவளியினரான மலேசிய மேனாள் பிரதமர் மகதீர் முகம்மது குட்டி.
​குட்டி என்ற தனது மலையாள வம்சாவளிப்பெயரை அவர் பதிவியில் இருந்தவரை வெளியே சொன்னதில்லை. :-)

அவரது இலக்கு நிப்போன். அதுதான் மலேசியாவை எவ்வளவு உயர்த்திவிட்டது! ஏன் மேற்கே நோக்காமல் கிழக்கே நோக்க வேண்டும்? காரணம் இருக்கிறது. இந்தியா என்ற உந்நதமான தேசத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொள்ளை அடித்தவர்கள் மேற்கு தேசத்தைச் சேர்ந்த ஆஃப்கான், பாரசீகம், அரேபியா, துருக்கி, பின்னால் ஐரோப்பியர் போன்ற நாட்டினர். ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைந்து ஆக்கிரமித்து நம் சரிதத்தையே மாற்றிய அவர்கள் தங்கள் இருப்பிற்குச் சொன்ன காரணம், “நாங்கள் முன்னாள் (ஆரியர்) வந்தோம், எனவே இப்போது இருக்கத் தகுதி உண்டு” என்பதுதான் என்ன மமதை பாருங்கள்! ஆனால் கிழக்கு தேசங்களான பர்மா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், கொரியா போன்ற நாடுகளுக்கு இந்த அகம்பாவம் இல்லை. அவை இந்தியாவை மதிக்கின்றன. புத்தன் என்ற வள்ளலைத் தந்த நாடெனப் போற்றுகின்றன. நம்மை மதிப்பவனை நாம் கண்டு கொள்ளாமல் நம்மை ஏறி மிதிப்பவனை ஆராதித்துக் கொண்டு இருந்து விட்டோம். இனியாவது அது மாற வேண்டும். தமிழனுக்கும் சீனனுக்கும் எப்பகையுமில்லை. நெருக்கமான உறவே இருந்துள்ளது. தமிழனுக்கும் மலேசியனுக்கும், இந்தோனீசியனுக்கும், இந்தோசீனனுக்கும் (கம்போடியா) எப்பகையுமில்லை. மாறாக அவர்கள் நம் பண்பாட்டு உறவைக் கொண்டாடுகிறார்கள். கொரியாவும், நிப்போனும் இந்தியாவில் முதலீடு செய்து பொருளாதார மேம்பாட்டை விரும்புகின்றன. எனவேதான் கிழக்கே நோக்கு எனும் மந்திரம் தமிழ் வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்கிறேன்.

உண்மையில் நாம் இந்த ஆய்வை தமிழ்நாட்டிலிருந்து தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பௌத்த சமண காலங்களுக்குப் பிறகு இந்து மீட்சி நடந்த போது சமணர்கள் கழுவேற்ற பட்டனர், பௌத்தம் முற்றாக அழிந்தது.
​தானாக பௌத்தம் அழியவில்லை. அது அரசு ஆதரவுடன் அழிக்கப்பட்டது. விரட்டப்பட்டது என்பதை நாம் மறுக்கக் கூடாது. தலை கொய்யப்பட்ட முகம் சிதைக்கப்பட்ட சிலைகள் நமக்கு அதனை உறுதி செய்கின்றன. கிராமங்களில் எங்கெல்லாம் பௌத்தம் அழிக்கப்படாத நிலையிருந்ததோ அங்கெல்லாம் பௌத்தம் வேறு சாமிகளாக உருமாறியது. ​

பலன்? மிகவும் முக்கியமான பௌத்த தடயங்கள் நம் கைவிட்டுப் போயின! தென்னகத்தில் பௌத்தம் இருந்து மேன்மை கொண்டதை எந்த சரித்திர ஆசிரியரும் பேசுவதில்லை. பௌத்தம் என்றாலே நேபாளம், புத்த கயா, சாஞ்சி என்று கங்கைக் கரைக்கு போய்விடுகிறது எண்ணம்? பாலாற்றின் அருகிலுள்ள காஞ்சீபுரம் நினைவிற்கு வருவதில்லை! நகரேஷு காஞ்சி என்று கொண்டாடப் பட்ட அந்த நகரில் புத்த நெறி ஆய்வுகள் சீறும் சிறப்புமாக நடந்திருக்கின்றன. அந்த நகரில் தெலுங்கர், தமிழர் இணைந்து புத்த நெறியின் மிக நுட்பமான கருத்துகளை ஆராய்ந்துள்ளனர். நாளந்தா பல்கலைக் கழகம் போல் அங்கொரு பல்கலைக் கழகம் இருந்திருக்கிறது. சோழர்களின் கல்வெட்டு இம்மாதிரிப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களின் ஊதியத் தொகை எவ்வளவு, ஆசிரியருக்கு என்ன சம்பளம் என்றெல்லாம் சொல்கிறது! ஆனால், பௌத்த சுவடுகள் முற்றும் அழிக்கப்பட்ட நிலையில் கொரிய, நிப்போனிய ஆய்வாளர்கள் வட இந்தியாவையே நம்பி உள்ளனர். அப்போது இழந்தது மட்டுமல்ல, இப்போதும் இழந்துவிட்டோம். கொரிய கிம் இனக்குழு தம் குலதெய்வமான ஹே ஹுவாங் ஓக் அயோத்தியாவில் பிறந்தாள் என்று அங்கு போய் கோடிக் கணக்கில் கொட்டி நினைவாலயம் எழுப்புகின்றனர். நாம் கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறோம். சட்டியில் இருந்தால் அல்லவோ அகப்பையில் வரும்? 

இதற்கும் சேர்த்து நாம் கிழக்கே நோக்க வேண்டியுள்ளது. அங்கிருந்துதான் நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன. அதை வைத்துதான் நாம் நம் கருத்தியலை உருவாக்க வேண்டியுள்ளது! நாம் செய்ய வேண்டியதை, மாறாக ஒரு நிப்போனியர் செய்து கொண்டு இருக்கிறார். அவர்தான் பேராசிரியர் காம்பே. அவர் பிடிவாதமாக போதி தருமனுக்கு காஞ்சியில் நினைவாலயம் எழுப்ப வேண்டும் என்கிறார். தன் சரிதமறியாத் தமிழன் பாராமுகமாக உள்ளான். என்ன அவலம்!

​உண்மை உண்மை.

சரி, நாம் மீண்டும் கொரியாவிற்குச் செல்வோம். திரு. பார்த்தசாரதி இந்தியத்தூதராக சோல் நகரில் பொறுப்பேற்றவுடன் ஒரு நிகழ்ச்சியில் ஒரு சோதிடரைப்பார்த்து இருக்கிறார். நம்மிடம் இருப்பது போல் அருள் வாக்கு சொல்லும் வல்லமை கொரியாவிலும் இருக்கிறது.
​அங்குமா :-)

வந்த அருள் வாக்கு தூதரை கிம்ஹே நகருக்குச் செல்லுமாறு சொல்லியிருக்கிறது. இவர் முதலில் இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது துணைவியார் நம்பிக்கையோடு அந்த வாக்கில் ஏதோ பொருள் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, பார்த்தசாரதி கிம்ஹே போகிறார். அங்கு கிம் சுரோ, ஹே ஹுவாங் ஓக் நினைவாலயம் உள்ளது. அது குறித்த பல சரித்திரக் குறிப்புகளை 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பிட்சு இல்யோன் விவரமாகச் சொல்கிறார். அதன் படி அந்த நினைவாலயம் பல இடர்களை, கொள்ளையர்களின் தாக்குதல்களை முறியடித்து இன்றுள்ள நிலையில் இருப்பதாக உள்ளது. அங்கொரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக இல்யோன் சொல்லிச் செல்கிறார். அந்த சக்தியை நம் தூதர் உணர்ந்த கதையை என்னிடம் சோல் நகரில் சந்தித்த போது சொன்னார். 

அதன் படி அவர் கிம்ஹே நகரில் தங்கியிருக்கிறார். நினைவாலயப் பார்வை நேரமெல்லாம் மூடிய இரவில் இவரை யாரோ வந்து அழைத்தது போல் தோன்றி இருக்கிறது. அவரும் உடனே இரவில் நினைவாலயம் நோக்கி நகர்கிறார். அதிசயமாக வாசற்கதவு பூட்டப் படவில்லை. இவர் மெல்ல நுழைந்து உள்ளே செல்லச் செல்ல ஹே ஹுவாங் ஓக் தன் கதையை இவருக்குச் சொல்கிறாள். காட்சி மேல் காட்சியாக இவருக்குக் கிடைக்கிறது. அது நிஜமா? இல்லை கனவா? என்று புரியாத ஓர் நிலை. இரவு அறைக்கு வந்து சேர்ந்த பின் தீர்மானமாக இவளது கதையை உலகிற்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானம் கொள்கிறார். அதன் பயனாய் விளைந்ததுதான் இவரது பட்டும் அரசியும் எனும் நாவல் ( ‘Bi Dan Hwang Hoo’ (Silk Empress). அதில் இவர் தெளிவாக அந்த ராணி தமிழக மல்லைக்ரையிலிருந்து கொரியா செல்வதாகக் கூறியிருக்கிறார். 

நான் அவரை மீண்டும் சென்னையில் சந்தித்த போதும் அந்த நிகழ்வு குறித்து நெகிழ்ந்து பேசினார். இது எனக்கு லா.ச.ராமாமிர்தம் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஓர் நினைவோட்டத்தை ஞாபகப்படுத்தியது. அதை அவர் கனவு போன்ற ஓர் நிஜம் என வருணிக்கிறார். பாரதியின் குயில்பாட்டுக் கூட இத்தகைய தன்மை கொண்டதே! நெட்டை நெடும் கனவு என்பது போன்ற நினைவு! இதுவொரு மாந்திரீக நிஜம் (magical realism). இல்யொன் சொல்லும் கதைகளும் இத்தகைய தன்மை உடையனவே. தமிழ் இலக்கிய ஈடுபாடுடைய எனக்கு இதுவோர் ஆர்வத்தை ஊட்டியது. நானும் கிம்ஹே சென்று இந்த நினைவாலயத்தைப் பார்வையிட வேண்டுமென தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் அது எனது கொரிய நாட்களின் பின்னால்தான் நடந்தேறியது. அதற்கு முன் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் என்னை இவ்வாய்விற்கு இட்டுச் சென்றன. அதில் முக்கியமானது கிவாஞ்சு தொழிற்கல்வி நிறுவனம் சென்ற போது நடந்தது. தமிழ் மாணவர் ஒருவர் எனக்கு எப்படி கொரிய மொழியை வாசிப்பது என்று பேருந்திற்குக் காத்திருக்கும் ஒரு மணி நேரத்தில் சொல்லிக் கொடுத்தார். சேஜோன் அரசன் 15ம் நூற்றாண்டில் கொரிய மொழிக்கு தனித்துவமான வரிவடிவம் தருகிறார். அந்த வரிவடிவம் தமிழின் நெடுங்கணக்கை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதை நான் கண்டறிந்த போது என் ஆச்சர்யத்திற்கு அளவில்லை! அந்த என் கண்டுபிடிப்புதான் கொரிய-தமிழ் ஆய்விற்குள் என்னைத் தள்ளியது.அது என்னவென்று பின்பு பார்ப்போம்!

தொடரும்

​அருமை

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Oct 17, 2017, 6:18:05 AM10/17/17
to மின்தமிழ்
2017-10-11 5:10 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
பகுதி 9

குணசேகரன் பேருந்திற்கு காத்திருக்கும் நேரத்தில் எனக்கு ஹங்குல்லை (கொரிய வரிவடிவம்) எப்படி வாசிப்பது என்று கற்றுக் கொடுத்துவிட்டார்! இதில் என்ன அதிசயம்? என்று கேட்கலாம். இருக்கிறது!

நிஹோங்கோ (ஜப்பானிய மொழி) கற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆகும். ஏனெனில் பத்திரிக்கை வாசிக்கும் அளவு படிப்பறிவு வேண்டுமெனில் 5000 காஞ்சி (சீனக் கோட்டோவிய எழுத்து) தெரிந்திருக்க வேண்டும். இது ‘படம் பார்த்து கதை சொல்’ என்பது போன்ற கற்றல் முறை. 5000 கற்றுக்கொள்ள தாவு கழண்டுவிடும். இது ஒருவகையான pattern matching அடிக்கடி எழுதிக்கொண்டும், படித்துக் கொண்டும் இருக்க வேண்டும். இடைவெளி விட்டால் போச்சு, மறந்துவிடும். எஹிமே பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர்கள் கூட புதிதாக உருவாகும் காஞ்சியைக் கற்ற வண்ணம் இருப்பர். இது எவ்வளவு சிக்கலானது என யோசித்துப் பாருங்கள். முதுகலை வகுப்பில் உட்கார்ந்து அரிச்சுவடி கற்றால் எவ்வளவு கேவலமாக இருக்கும்? ஆனால் வேறு வழி இல்லை, அந்த வரிவடிவ முறை அப்படி. போதாக்குறைக்கு, நிப்போன் மொழி இன்னும் இரண்டு வரிவடிவங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. உதாரணமாக பௌத்தம் செழித்திருந்த காலங்களில் சமிஸ்கிருத நூல்களில் வரும் சொற்களுக்கு ஏற்ற காஞ்சி இருப்பதில்லை. இக்குறையை நீக்க ஹிரகானா எனும் முறையை உருவாக்கினர். அதன் பிறகு ஐரோப்பியர் வந்தனர். ஏகப்பட்ட சொற்கள் அம்மொழிக்குள் புகுந்தன. அதை சமாளிக்க கதகானா எனும் முறையை உருவாக்கினர். ஆக, ஒரு நிப்போன் நாளிதழ் வாசிக்க காஞ்சி, ஹிரகானா, கதகானா தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நாம் தற்குறிதான்! என்ன அவலம்! 

ஆனால் ஹங்குல் எழுத்து அப்படி அல்ல ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியமாகிறது எனில் அம்மொழி வரிவடிவம் தமிழின் நெடுங்கணக்கை ஒத்திருக்கிறது. தமிழ் நெடுங்கணக்கு என்பது உயிர் எழுத்தையும் (vowval) மெய் எழுத்தையும் (consonant) இணைத்து உயிர்மெய் வரிவடிவத்தை உருவாக்குகிறது.  இதை தொல்காப்பியம்,

எழுத்தெனப் படுப)                                                      
வகரமுத னகர விறுவாய்)                                      
முப்பஃ தென்ப)                                                            
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே என்கிறது. 

அதாவது

எழுத்து எனப்படுப
அகர முதல் னகர இறுவாய்
முப்பது என்ப

உதாரணம்
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ,ஒ, ஓ, ஒள- உயிர்
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்- மெய்

இப்படி 12 உயிரும், 18  மெய்யும் சேர்ந்து 30 எழுத்து தெரிந்தால் பின் இவைகளை வைத்து பிற எழுத்துக்களைக் கூட்டி உருவாக்கிவிடமுடியும். அப்படி உருவாக்கும் எழுத்துகள் மொத்தம்  247 ஆகும். (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88).

ஹங்குல் எழுத்துமுறை ”ஈ அடிச்சான் காப்பியாக” இதே முறை. அங்கு உயிர் எழுத்து 10, மெய்யெழுத்து 14. இவை இணைந்து உருவாக்குபவை மொத்தம் 140 எழுத்துக்கள். அவ்வளவுதான். (https://modernseoul.files.wordpress.com/2012/04/korean-alphabet-chart-modern-seoul.pdf).

நண்பர் குணசேகரனை விட்டு அகன்ற பின் இது பற்றி ஆராய்ந்தேன். பல ஆச்சர்யங்கள் கிடைத்தன. கொரிய, நிப்போனியர் எப்போதும் தாம் ஓரினம் என்று எண்ணுவர். நாமே ‘பன்மையில் ஒற்றுமை’ என்று பேசிக்கொண்டிருப்போம். இப்போதுதான் அவர்களுக்கும் இது மெல்ல மெல்லப் புரிகிறது. உலகில் எந்த இனமும் 100% பச்சை ரத்தம் இல்லை. எல்லாமே கலப்புத்தான். தமிழர்களின் முகத்தைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ளலாம். ஆதி காலத்தில் கொரிய, நிப்போன் தேசங்கள் சீனாவின் பண்பாட்டு நிழலில் வளர்ந்த தேசங்கள். எனவே சீன மொழியிலேயே அவர்கள் கல்வி அமைந்தது. அவர்கள் சீன மொழி கற்று எழுதினாலும் கொரிய மொழியமோ, நிப்போன் மொழியோ சீனக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல. அவர்கள் பேச்சு வழக்கு சீன ஒலி வடிவம் (tonal language) அல்ல. இந்தக் சிக்கல் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. இதை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தவர் 4 வது சோசென் பேரரசர். அவர் பெயர் சேசொங். இவர் ஹங்குல் வரிவடிவத்தை 1446 ஆண்டு அறிமுகப்படுத்துகிறார். கிமு 108ல் தொடங்கிய சீன எழுத்துமுறை பல நூற்றாண்டுகளுக்குப் பின்தான் முடிவிற்கு வருகிறது. இது 15ம் நூற்றாண்டில் அறிமுகமானாலும் 1948 ல் தான் அது வடகொரியாவில் அரசு மொழியாக பரிந்துரைக்கப் படுகிறது. ஆயினும் மிகுந்த  
தயக்கத்திற்குப் பின்னே, குடியரசான பின் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. அறிஞர்கள் பலர் அதைக் கொச்சை மொழி என்றனர். காரணம் சீனத்தில் எழுதுவது உயர்வாகக் கருதப்பட்டது. 

நல்ல மொழி அறிஞன் என அறியப்படும் சேசொங் அரசன் பல வருடங்கள் ஆராச்சி செய்து இந்த வரிவடிவத்தை உருவாக்குகிறான். அவன் வாழ்ந்த காலத்தில் பௌத்த கொரியத் தொடர்பு ஓர் வளர்ந்த நிலையில் இருந்திருக்கும். தமிழகத்தைச் சேர்ந்த பல தமிழ் புத்த பிட்சுக்கள் கொரியா போய் வந்த வண்ணம் இருக்க வேண்டும். சில பிட்சுக்களின் பெயர்களைச் சுட்டுகிறார் முனைவர் ராஜ பொன்துரை. எனவே தமிழ், சமிஸ்கிருத நெடுங்கணக்கு முறை கொரிய அரசருக்கு அறிமுகமாகி இருக்க வேண்டும். ஆயினும், புத்தம் புதிதாய் அவ்வெழுத்து முறை கொரியாவில் அறிமுகப்படுத்த முடியாது என்பதால் அவர் சீன ஓவிய முறையிலிருந்து எழுத்துக்களை அடுக்கி வைக்கும் பாணியைக் கையாள்கிறார். இம்முறை மிக எளிதானது. உதாரணமாக க் + அ என்பது ‘க’ வடிவம் கொள்கிறது. இங்கு ‘க’ என்பது புதிய வடிவம். இதற்குப் பதில் ‘க்அ’ என்று ஏன் எழுதக்கூடாது? ‘க்’ எழுத்தை மேலேயும், அ எழுத்தை கீழேயும் அடுக்கிவிட்டால் அது ‘க’ என்றாகிவிடும். இல்லையா? இம்முறையால் உயிர்மெய் எனும் எழுத்துக்களே தேவை இல்லாமல் போய்விடுகிறது. உயிரும் மெய்யும் சேர்ந்து எழுத்தில் வரும். எப்படி என்று மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். 

இவ்வளவு எளிதான எழுத்து வடிவத்தை சேசொங் பொது மக்களுக்கு கல்வி அறிவு பெருக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உருவாக்குகிறான். இதன் சீர்மை கண்டு இம்முறையை எழுத்து வடிவம் இல்லாத பல நாடுகள் சமீபத்தில் ஏற்றுக் கொண்டிருப்பது ஹங்குலின் சிறப்பு. 

  மக்கள் எல்லோரும் கல்வியறிவு பெறவேண்டும் என நினைத்துச் செயல்படுத்திய சேசொங் ​​ பாராட்டுதலுக்குரியவன்.

சுபா

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Oct 17, 2017, 6:27:12 AM10/17/17
to மின்தமிழ்
2017-10-13 8:49 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
பகுதி 10

நான் 2003 ஆண்டுதான் கொரியாவில் கால் வைக்கிறேன். ஆனால் 2001 ம் ஆண்டே கொரிய இளவரசி அயோத்தியைச் சேர்ந்தவள் என்று அவளுக்கு நினைவாலயம் எழுப்பிவிட்டனர். இது எனக்குத்தெரியாது. அயோத்தி மன்னர் வம்சம் பிராமண வம்சம். பிராமணர்கள் கடல் தாண்டுவதில்லை. எனவே 1997 ல் முதன் முதலாக பேராசிரியர் கிம் பியோங்மோ அயோத்தி மிஸ்ரா அரச வம்சத்தினரைப் பேர்த்து எமக்கும், உமக்கும் தொடர்பிருக்கிறது என்ற போது அவர்கள் ஆச்சர்யப்பட்டுப் போயினர். ஏனெனில் இந்த வம்சமே ஒரு 10 தலைமுறைக்குள்தான் அங்கு வந்து அரசாள்கின்றனர். எனவே கிபி 49-ல் அயோத்தியிலிருந்து தம் வம்சத்தைச் சேர்ந்த பெண் கொரியாவரை போயிருக்கிறாள் என்பதை அவர்களாலேயே ஒப்புக் கொள்ள முடியவில்லை. இதை அவர்கள் பி.பி.சி நேர்காணலில் சொல்கின்றனர். அன்போடு வந்து சொன்னதால் ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லி அயோத்திய சுற்றுலாவிற்கு இதுவொரு கூடுதல் ஈர்ப்பு என்று முடித்து விட்டனர். இந்த அரசியல் எனக்குப் பின்னால்தான் தெரிய வருகிறது.

ஆனால் தவறான ஒரு புரிதலுக்கு இது இட்டுச் சென்று விட்டமையை மறுக்க இயலாது அல்லவா..? நான் கருதுவது.. அநேகமாக தமிழகத்திலிருந்தும் பெரும்பாலும் இலங்கையிலிருந்தும் கொரியாவிற்குத் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேராசிரியர் கிம் பியோங்மோ இந்த ஆய்விற்குள் காலடி வைத்ததே ஒரு விசித்திரமான உணர்வால் வந்தது. ஏறக்குறைய மூன்று மில்லியன் கொரிய மக்கள் தங்கள் தாய் வழி மூதாதையர் இந்தியாலிருந்து வந்ததாக நம்புகின்றனர். அந்த கிம் இனக்குழுவைச் சேர்ந்த நம் பேராசிரியருக்கு ஒரு நாள் சந்தேகம் வருகிறது. நாம் ஏன் மற்றவர்களைவிடக் கொஞ்சம் கருப்பாக இருக்கிறோமென்று. தனது இன வரலாறை ஆராய்ந்த போது இல்யோன் எனும் புத்த பிட்சு கி.பி. 1285 வருடம் எழுதிய சம்குக் உசா எனும் நூலில் இது பற்றி விவரித்திருப்பதை அறிகிறார். அதன் பிரகாரம் கிம் சுரோ எனும் அரசன் இந்தியாவிலிருந்து வந்த ஹே ஹுவாங் ஓக் எனும் பெண்ணைத் திருமணம் செய்ததால் தம் மக்கள் உருவாயினர் என அறிந்தார். அந்த தொன்மத்தில் வந்து சேர்ந்த அரசி தான் “அயுத்த” எனும் நாட்டிலிருந்து வருவதாகச் சொல்கிறாள் என்று இல்யொன் எழுதுகிறார். இப்பெயருக்குப் பொருத்தமான ஓர் ஊரை இந்திய உபகண்டத்தில் தேடிய போது அயோத்தியா எனும் நகரம் பிடிபட்டு இருக்கிறது. அயோத்தியா எனும் நகரம் பழம் நகரம், பிரபலமானது, இராமகாதையுடன் தொடர்புடையது, எனவே அவருக்கு ஏற்புடையதாகப் பட்டது. ஆனால், அயோத்தியா கடற்கரை நகரமல்ல! ஆனால் இல்யொன் கதைப் படி அவள் காவி (சிவப்பு) பாய்மரத்தில் வந்து இறங்கியதாக செய்தி உள்ளது. இதை இரண்டையும் முடிச்சுப் போட அவரொரு கருதுகோளை முன்வைத்தார். அதன் படி, ஹே ஹுவாங் ஓக்கின் மூதாதையர் நில வழியாக, பர்மா கணவாய் வழி சீனா அடைந்து அங்குள்ள தென்சீன மஞ்சள் ஆறு படுகையில் குடி பெயர்ந்தவர்கள் என்றும். அங்கிருந்து அப்பெண் மஞ்சள் கடலைக் கடந்து தென்கொரியா வந்து விட்டாள் என்பதாகும். 

கொரியர்களைப் பொருத்தவரை இல்யோன் எழுதிய சம்குக் உசா எனும் நூல் விவிலியம் போல் பார்க்கப்படுகிறது. அதுவும் கொரியாவிலேயே மிகவும் பிரபலமான கிம் இனக்குழு தம் மூதாதையர் இந்தியர்கள் என்று நம்பும் போது இக்கருதுகோள் வலுப்பெறுகிறது. எனவே அவர் தலைமையிலேயே ஒரு குழு 1997 ல் அயோத்தியா செல்கிறது. இதில் பெரிய துரதிர்ஷ்டம் என்னவெனில் பேராசிரியர் கிம் கடல்வழி பட்டுப் பாதை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காததுதான். இது மிகுந்த ஆச்சர்யத்தைத் தருவது. ஏனெனில், நான் கொரியாவின் தலைநகரான ‘சோல்’ (Seoul - சியோல் அல்ல சோல் என்று உச்சரிக்க வேண்டும்) நகரின் மாபெரும் அருங்காட்சியகம் சென்றிருந்த போது கடல்வழிப் பட்டுப்பாதையின் வழி கொரியா, இந்தியாவோடு தொடர்புடன் இருந்ததைத் தெளிவாக விளக்கியிருந்தனர். அடுத்து அவருக்குத் தமிழர்கள் கடலோடிகள் என்ற சரிதம் தெரியாது. இது இந்தியாவிலேயே சரித்திரப் பாடத்தில் இருப்பதில்லை. வெளிநாட்டினர் எழுதும் நூல்களிலும் இது பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. எனவே பேராசிரியர் கிம் பியோங்மோ இது பற்றி அறிந்திருக்க நியாயமில்லை.

மேலும் அவருக்குக் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் மொழியியல் ரீதியான தொடர்பு இருப்பதும் தெரியாது. தமிழக நாட்டார் வழக்கும், கொரிய வழக்குகளும் ஒத்திருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. நான்தான் முதன்முதலாக இருமொழிகளும் நெடுங்கணக்கு முறையில் அமைந்திருப்பதையும் அதன் ஒற்றுமைக் கூறுகளையும் பற்றிப் பேசுகிறேன். இது குறித்த எனது பதிவுகள் மின்தமிழ் ஆரம்பிக்கப்பட்ட 2006 வருடமே வெளிவருகிறது.

மூன்று வருடம் கழித்து மீண்டும் இது பற்றி எழுதுகிறேன்

02.08.09

இக்குறிப்பை திராவிட மொழி ஒப்பாய்வு செய்த Hulbert, Homer B. (1863-1949) அவர்களும் சொல்லவில்லை. இப்போது யோசித்தால், கிம்ஹேயில் கிடைத்த பானையெழுத்திலிருந்து, ஹங்குல்வரை இதுவரை யாரும் ஒப்பு நோக்கியதில்லை. அதை மின்தமிழில் செய்துள்ளேன். அகழ்வாய்வு, தொன்சரிதம், பண்பாட்டு நோக்கில், மரபணு ஆய்வுகள் எனப் பன்முக நோக்கில் இந்த ஆய்வை முன்னெடுத்துச் சென்றிருக்கிறேன். அதை விரிவாக விளக்குகிறேன். அதற்கு முன் நம் கைமுன் கை நழுவிய வாய்ப்பைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேச வேண்டியுள்ளது. அயோத்தியாவில் நினைவாலயம் எழுந்த பின் அந்த இந்தியப் பெண் வட இந்தியர் என்றே எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர். நான் இதுவரை பார்த்த அத்தனை கொரிய வலைத்தளங்களும் அயோத்தி பற்றியே பேசுகின்றன. இந்திய அரசு ஊடகங்களும் அது பற்றி மேலாய்வு செய்யாமல் ஏற்றுக்கொண்டு விட்டன. அயோத்தி அரசர்களே இல்லை என்பதைக் கூட அவர்கள் சட்டை செய்யவில்லை. பின்னால் இது குறித்து புதினம் எழுதிய திரு. பார்த்தசாரதியும் அவளுக்கு சூரிரத்னா என்றே வடமொழிப் பெயரிட்டு வட இந்தியராக்கிவிட்டார். அடிப்படையான இரண்டு கேள்விகளை பேராசிரியர் கிம் கேட்கவில்லை. அவரது உடல் நிறத்தில் கருமை எங்கிருந்து வந்தது எனத்தேட வேண்டுமெனில் ஆரிய கலப்பு அதிகமுள்ள வட தேசத்திற்கு ஏன் போக வேண்டும்? தென் தமிழகம் அல்லவா வந்திருக்க வேண்டும்? அடுத்து, கொரிய மக்கள் அம்மா, அப்பா எனப் பெற்றோரை அழைக்கும் போது அது தென் தமிழ்நாட்டு வழக்கம், வட இந்திய வழக்கமில்லை என்றாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா? இது ஏதும் செய்யாமல் இந்திய இளவரசியை வடநாட்டிற்கு கொண்டு போய் மேலாய்வுகளும் செய்யத் தொடங்கிவிட்டனர்! 2015 -ல் இந்திய பன்னாட்டு மையம் கீழ்க்காணும் விவரப்படி ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் செய்வித்து அயோத்திய இளவரசியின் தொன்மத்தை சரிதமாக்கும் முயற்சியில் இறங்கியது!:

​நல்ல பதிவு கண்ணன்.
கொரிய - தமிழ் ஆய்வில் உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானது. இதனை மிகச் சிறப்பாக நாம் மேலும் முன்னெடுக்க வேண்டும்.

சுபா​

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 17, 2017, 10:47:41 AM10/17/17
to மின்தமிழ், vallamai
Themozhi wrote:
> தமிழகத்தில்  தேயிலை பயிரிடப்பட்டதன் துவக்கம் எப்பொழுது?

தமிழகத்தில் தேயிலை பயிரிடத் தொடங்கியது பிரிட்டிஷார் காலத்தில்.
சஹ்யாத்ரி என்னும் சையமலைகளில் அப்போது எங்கள் உறவினர்களில் ஒருவர் தேயிலை தோட்டங்களுக்கு மாட்டுவண்டி ஓட்டத் தொடங்கி,
பெரிய தொழிலதிபர் ஆனார். அவர் பெயரில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் அவரது மகன் கட்டினார்:

டீ என்னும் ஆங்கிலச் சொல், தமிழில் தே என்றாகியுள்ளது.

> சுருக்கமாக:  தமிழகத்துடன்  தேயிலை சான்று பொருந்துவதாகத் தோன்றவில்லை. 

இன்னொன்றும். கயா அரசியின் பெயர் சீனாவில் கிடைக்கும் Yellow Jade கல்லின் நிறம்
என்ற பெயர். பேரா. வ. நாகராஜனுக்கு முன்பு எழுதிய மடலொன்று:
On Monday, July 25, 2016 at 10:50:55 PM UTC-7, பச்சைத் தமிழன் wrote:
அன்புடை கணேசர் ஐயா
கொங்குநாடு இயற்கையில் விளைந்த வைடூரியங்களையும் மற்றும்பல கற்களையும் வாங்கி அவர்களின் ஊதுலைகளில் இரும்பிக்கம்பிமூலம் துளையிட்டு மாலை மற்றும் காதணிகளாகச் சீனாவுக்கு ஏறுமதி செய்தது.

சீனாவுக்குப் போனதா என தெரியவில்லை. யவனர் தேசங்களுக்கு கொங்குநாடு தன் கற்களை ஏற்றுமதி செய்தது உண்மை. நண்பர், தொல்லியல் பேரா. கா. ராஜன் போன்றோர் ஆய்வுகளில் காணலாம்.

மஞ்சள் நிறமுள்ள யெல்லோ ஜேட் சீனாவில் அதிகம் விற்பனையானது.  கொங்குநாடு அடங்கிய பாண்டியநாட்டு இளவரசி செம்பவளம் என்ற கல்மணியைத் தானும் அணிந்து மன்னருக்குப் பரிசாகவும் அளித்துத் தான் பிறந்த இடம் செம்பவளம் ஏற்றுமதி செய்யும் நாடு என்று குறிப்பிடுவதாகத்தான் பொருள் சொல்ல முடியும்
பச்சைத்தமிழன்

ஆம். மஞ்சள்நிற செண்பகக் கல் (Yellow Jade) சீனாவுடையது. மக்களும் மஞ்சள் இனத்தவர். கொரியர்கள் அவ்வினம் எனவே Yellow Jade வண்ண இளவரசி என்று தங்கள் கி.பி. 13-ஆம்
நூற்றாண்டு புராணங்களில் எழுதியுள்ளனர். இதில் வியப்பேதுமில்லை. 

சங்க இலக்கியங்கள் எங்கே தமிழர் கடலாடினர். இறக்குமதி, ஏற்றுமதி ஆன பொருள்கள் எல்லாம் தருகின்றன. ஆனால், கொரியா அதில் இல்லை.
கொரிய மொழி வேறு, தமிழ் மொழி வேறு. தமிழறிஞர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

நா. கணேசன்

2017-10-17 3:10 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:
--

N. Kannan

unread,
Oct 18, 2017, 11:57:46 PM10/18/17
to மின்தமிழ்
பகுதி 15

இந்த உலகில் கோடிக்கணக்கான ஜீவராசிகள் உள்ளன. அவைகளிலிருந்து மனிதைத் தனித்துக் காட்டுவது அவனது சிந்திக்கும் திறன். இப்படி சிந்திக்கத் தொடங்கிய முதல் மனிதன் கேட்ட முதல் கேள்வி, “நான் யார்?” “நான் ஏன் இங்கிருக்கிறேன்?”. முதற் கேள்வி மனிதனை சமயங்களை நோக்கித் திருப்புகிறது. இரண்டாவது கேள்வி மனிதனைக் கற்பனை கலந்த பல்வேறு கதையாடல்களுக்கு இட்டுச் செல்கிறது. இதை நாம் தொன்மம் (myth) அல்லது ஐதீகம் என்கிறோம். குறிப்பாக இங்கு இந்திய, கொரிய, நிப்போன் தொன்மங்களை உற்று நோக்குவோம். உலகின் கிழக்குக் கோடியில் இருக்கும் நிப்போன் (ஜப்பான்) நாட்டின் கொடி சிவப்புச் சூரியன் ஆகும். அவர்கள் சூரிய வம்சம் என்று கருத்துகின்றனர். பிரபஞ்சத் தோற்றம் பற்றிய அவர்கள் கதையாடல் சுவாரசியமானது.  இதை கிபி 721ல் எழுந்த கோஜிகி (Kojiki) எனும் புத்தகம் விவரிக்கிறது.  இதன்படி ஆதியில் ஒன்றுமற்ற ஓர் குழம்பு (beaten and shapeless kind of matter) இருந்ததாகவும் அதில் துகள்களின் சலனமாக ஓசை கிளம்ப அதிலிருந்து மிகவும் மெலிதான ஒளிக்கீற்று கிளம்ப, அந்த ஒளிமயமான உலகமே தேவலோகமாகவும், கனமான பிற துகள் சேர்ந்த உலகமாக பூமியும், பிற கோள்களும் அமைகின்றன என்று சொல்கிறது கோஜிகி. மேலுலகம் உருவானவுடன் முதலில் மூன்று தெய்வங்கள் உருவாகுகின்றன. அவை முறையே (Amenominakanushi (天之御中主神), Taka-mi-musuhi-no-kami (高御産巣日神) மற்றும் Kami-musuhi-no-kami (神産巣日神) என்பனவாகும். நிஹோங்கோ (ஜப்பானிய மொழி) பயன்பாட்டில் ”காமி” என்பது தமிழ் “சாமி” என்பதற்கு ஒப்பு என்பது நோக்குதற்குரியது. அதன்பின் பல தெய்வங்கள் தோன்றி, அவைகளுள் ஒன்று பூமிக்கு வந்து மனித குலத்தை உருவாக்குவதாகப் போகிறது இக்கதை! (https://en.wikipedia.org/wiki/Japanese_creation_myth)

இதில் ஆச்சர்யம் என்னெவெனில் இந்த கோஜிகி சொல்லும் கதையாடல் அப்படியே திருவாய்மொழியில் பதிவாகிறது.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் 
      மற்றும் யாதும் இல்லா 
அன்று நான்முகன் தன்னொடு தேவர் 
      உலகோடு உயிர் படைத்தான் 
குன்றம் போல் மணி மாடம் நீடு 
      திருக்குருகூர் அதனுள் 
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே? 

தேவர்கள், உலகம், உயிர் மற்றும் யாதும் இல்லாத நிலையிலிருந்து ஒவ்வொன்றாய் நான்முகன் தொடக்கம் பல உலகுகள், உயிர் படைத்தான் என்பது திருவாய்மொழி. இந்த ஆதிப்பிரானே பின் சூரியனாக வந்து உலகிற்கு உயிர் தருகிறான். எனவே சூரியனை “சூரிய நாரணன்” எனக்காணும் வழக்கமுள்ளது. எனவே சூரிய வம்சம் என்பது இச்சூரியனிலிருந்து உருவான உயிர்த்தோற்றத்தைச் சொல்லலாம். இப்பின்னணியில் இப்போது சோழர்களின் தோற்றத்தைப் பற்றிய தொன்மத்தைக் கவனியுங்கள் (திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறும் சோழர் பரம்பரை பற்றிய தகவல்.):

இச்செப்பேட்டின் சம்ஸ்கிருதப் பகுதியில் 137 ஸ்லோகங்கள் உள்ளன. 

அடுத்ததாக, சூரியனின் தொடங்கி சோழ அரசர்களின் வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. மனு, இக்ஷ்வாகு, புரஞ்செயன், ஆர்யமன் என்று பல புராண கால அரசர்களின் தீரத்தை வரிசையாகச் சொல்லிக்கொண்டுவருகிறது இந்தப் பகுதி. விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டும் காலயவனனைக் கொன்ற முசுகுந்தச் சக்கரவர்த்தியும் இவ்வரிசையில் வருகிறார். அதன்பின் புறாவுக்காக தன் சதையைத் தியாகம் செய்த சிபி குறிப்பிடப்படுகிறார். சிபிக்கு அடுத்து மருத்தன் என்ற அரசனும் அதன்பின் துஷ்யந்தன் என்ற அரசனும் ஆண்டனர். துஷ்யந்தனின் மகன் பரதன். இந்தப் பரதனுக்குப் பிறந்தவன் சோழ ராஜன். இவனுடைய பெயரை வைத்துத்தான், சோழ வம்சம் என்று இந்தப் பரம்பரை குறிப்பிடப்படுகிறது. சோழனின் மகன் ராஜகேசரி, அவனுடைய மகன் பரகேசரி. இவ்விருவருடைய பெயர்களைத்தான் தங்கள் விருதுப்பெயர்களாக மாறி மாறி பிற்காலச் சோழர்கள் சூட்டிக்கொண்டனர். அதன்பின் வருகின்ற அரசர்களின் பெயர்களில் பகீரதன், சுரகுரு, வசு, விஸ்வஜித் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் விஸ்வஜித் துவாபர யுகத்தின் இறுதியில் ஆண்டதாகக் கூறப்படுகிறது (முகநூல் பதிவு: மணி பாரி - https://www.facebook.com/pariadvocate/posts/1597383820323942).

கிபி 13 நூற்றாண்டில் உருவான சம் குக் உசா எனும் கொரிய நூல் கொரியர்களின் தோற்றத்தை இவ்வகையிலேயே சித்தரிக்கிறது. அதாவது தேவேந்திரன் தன் சகாக்களான 6000 தேவர்களுடன் முதல் அரசனாக கொரிய நாட்டில் வந்து உதிக்கிறான் என்கிறது இந்த தொன்மம். இப்படித் தோன்றிய முதல் கொரிய அரசன் பெயர் Dangun Wanggeom (단군왕검; 檀君王儉) என்பதாகும். இவனது குடிகளாக 6000 தேவர்களும் வந்து சேர்கின்றனர். இவனது மந்திரியாக ஐம்பூதங்கள் அமைகின்றன. இவை எவ்வளவு தூரம் இந்திய தொன்மங்களுடன் ஒத்திசைகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்! இழிதல் அல்லது அவதாரம் எனும் கோட்பாட்டின் படி மேலிருந்து கீழிறங்கும் போது பிரதான தெய்வத்திற்குத் துணையாக பிற தெய்வங்களும், தேவர்களும் வருவர் என்பது இந்தியப் புரிதல். அதன்படி நாரணன், இராமனாக அவதாரம் எடுக்கப் போவதாக அறிவித்தவுடன் சிவன் முதலிய பிற தெய்வங்கள் இந்த அவதாரத்தில் பங்கேற்கின்றன. அதனால்தான் அவதாரம் முடிந்தவுடன் எல்லோரையும் அழைத்துக் கொண்டு விண்ணகம் சென்றுவிடுகிறான் இராமன். இதை 

கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான் முகனார் பெற்ற நாட்டுளே (திருவாய்மொழி 7-5-1)

இராமவதாரம் என்பதில் புல், எறும்பு என எல்லாம் தேவர்களின் அம்சமாக இருப்பதால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் நாரணன் மீட்டுக்கொள்கிறான்.

தென்னகம் என்பது தொன்மங்களின் தோற்றம். ஆதிப்பிரானாக “கருந்தெய்வம்” ஒன்றை முன்வைக்கிறது தமிழகம். ”ஊழிமுதல்வன் உருவம் போல் மெய்கறுத்து” நிற்கிறது அத்தெய்வம். அதுவே கண்ணன் எனும் கருந்தெய்வம் என்கிறது நாச்சியார்திருமொழி. இத்தெய்வமே மானுடத்தை வழிநடத்தி அதன் மேன்மைக்கு வித்தாகிறது. ஆதியில் மீனுருவம் கொண்டு பிரளயத்திலிருந்து காக்கிறது. பின் ஆமையாகி கடலோடிகளுக்கு வழிகாட்டுகிறது. பன்றியாய் வந்திறங்கி பூமிக்குக் கீழே இருக்கும் உணவைக் காட்டிக்கொடுக்கிறது (for the hunter gatherers). வனவிலங்குகளின் வலிமையைக் காட்டி அதைப்பெறும் வழியைக் காட்டுகிறது (நரசிங்கம்), பின் “ஏர் பின்னது உலகம்” என உழவுத்தொழிலை கற்றுத் தருகிறது (பலராமன்). அதுவே இராமனாய் சமூக/குடும்பப் பொறுப்புடைய தலைவனாய் வாழக் கற்றுத்தருகிறது. பின் அஷ்ட சித்திகள் கைவரப் பெற தெய்வமாகும் நிலையையும் சுட்டுகிறது (கண்ணன்). இப்படி தொன்மங்கள் வழியாக மனித வரலாற்றைச் சுட்டுவது தமிழக வழக்கம். 

இத்தமிழர்கள் பெருங்கற்கால காலத்திலேயே கடலோடிகளாக நானாதேசங்களுக்கும் சென்று வந்திருக்கின்றனர். சங்க காலம் என்பது நமது தோற்றம் அன்று. அதற்கும் முற்பாற்பட்டது! சங்ககாலம் காட்டும் தமிழன் பண்பாட்டில் மிக உயர்ந்தவனாக இருக்கிறான். காவியங்கள் படைக்கிறான். எனவே அது தமிழ்ச் சமூகம் நன்கு வளர்ச்சியுற்ற ஒரு நிலையைத்தான் சுட்டுகிறது. அதற்கு முன் இருந்த அவனது சரிதம் தொன்மங்களில் மறைந்து கிடக்கிறது. இத்தொன்மங்கள் கிழக்கே பரவி நமக்கு இன்றும் ஒளி காட்டுகின்றன (தொன்ம வாசிப்பு என்பதோர் கலை என்பார் ஜோசப் கேம்பல்).

கிபி 48 ல் செம்பவளம் கொரியா செல்கிறாள். இவள் ஆய்குல மங்கையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், சங்கப்பாடல்களில் மிகவும் பாடப்பெற்ற ஆறு வைகை நதியாகும். இதை, “வையை எனும் பொய்யாக்குலக்கொடி” என்று வருணிக்கிறார் இளங்கோவடிகள். திருப்பூவணம் வட்டத்தில் இருக்கும் கீழடி அகழ்வாராய்ச்சிகள் இந்நதிதீரத்து வணிகம் உலகப்பிரசித்தி பெற்றது என்கிறது. அதாவது தென்கடலோடு வையை ஒரு கொடி போல் இணைந்து நிற்கிறது. அது பொய்க்காமல் நீர் வளத்தோடு சிலப்பதிகாரக் காலம் மட்டும் இருந்ததால் அதில் கப்பல் போக்குவரத்து இருந்திருக்க வேண்டும். எனவே மேற்கிலிருந்து யவனர்களும், கிழக்கிலிருந்து சீனர்களும் வையைப் பட்டிணங்களுக்கு வந்த வண்ணமிருந்திருக்க வேண்டும். பல வணிகக் கேந்திரங்கள் இருந்திருக்க வேண்டும். அதில் மணலூர் ஒன்று. ஒரிசா பாலுவின் கடலாய்வுகள் பல அரிய உண்மைகளை எடுத்துக் காட்டுகின்றன. அதன் வழியில் யோசித்தால் அத்தியூத்து எனும் ஊரும், அழகன்குளம் துறைமுகமும் முக்கியத்துவம் பெறுகின்றன. தென்கரையில் அமைந்ததுதான் தேவேந்திர பட்டிணம். செம்பவளம் இந்த அத்தியூத்தைச் சேர்ந்தவளாக இருக்க வாய்ப்புள்ளது. தான் அத்தியூத்து என்று சொல்ல ஆதிக்கொரியர் அதை ‘அயுத்த’ எனப்பதிவு செய்திருக்கலாம். அதைப் போய் பின்னால் உருவான அயோத்யாவுடன் இணைத்துப் பார்ப்பது பொருந்தவில்லை. (மின்தமிழில் இது குறித்து நீண்ட ஆய்வுகளை முனைவர் நாகராஜன் செய்துள்ளார்)

இல்யோன் கதையில் சொல்லப்படும் ”Dangun Wanggeom” என்பவனை சந்தன அரசன் என்கிறனர். இது நமக்கு இத்தொன்மங்கள், தமிழகம் வழியாகச் சென்றிருப்பதைச் சுட்டுகின்றன. சந்தனம் என்பது கொரியத் தாவரம் அல்ல. கொரியாவில் சந்தன மரம் கிடையாது. அயோத்தியிலும் சந்தன மரம் கிடையாது. சந்தன மரம் இருப்பது பொதிகைக் காடுகளில். இப்பொதிகை மன்னர்கள்தான் ஆய் ஆண்டிரன், ஆய் எயினன் போன்றோர். முதல் ஏழு வள்ளல்களில் சிறந்த வேள், பாரி என்பார் இவர்களே. இந்த ஆய் இனத்தைச் சேர்ந்தவளே செம்பவளம் எனும் கொரிய சுரோ மன்னனுக்கு வாக்குப்பட்ட இளவரசி. இவள் அத்தியூத்து (அயுத்த) எனும் ஊரைச் சேர்ந்தவள்.

ஆக, தொன்மங்கள் மனிதனின் இருப்பிற்கான காரணத்தைத் தேடும் கதையாடல்கள் என்று கண்டோம். இப்போது வாணிக நிமித்தம் கொரியர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர். அதற்குக் காரணம் கூறியாக வேண்டும். அதற்குத்தான் இந்த உறவுப் பாலம். இந்தியாவில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் கொட்டாத முதலீட்டைக் கொரியா ஏதோவொரு நம்பிக்கையில் கொட்டுகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இல்யோன் சொன்ன தொன்மம். பேரா. கிம் பியோங்மோ ஒரு உளவியல் சொல் கொண்டு இதை விளங்கிக் கொள்கிறார். அச்சொல் “Transference” என்பதாகும். Transference என்றால் என்ன? Transference is a phenomenon characterized by unconscious redirection of feelings from one person to another. அதாவது கொரியர்கள் தமிழர்கள் பால் கொள்ளும் அன்பு இந்த வகையைச் சார்ந்தது! எப்படி இந்த அன்பு வருகிறது? One definition of transference is "the inappropriate repetition in the present of a relationship that was important in a person's childhood" இங்கு பாலபருவ நினைவுகள் என்பதை ‘ஆதித்தொடர்பு’ எனக்கொண்டால் அவர்கள் இருப்பிற்குக் காரணம் புரிந்துவிடும். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்! என்பான் தமிழன். அதாவது ஆதித்தொடர்பு, ஓர் உள்ளுணர்வு. இது பாராட்டிற்குரியது. ஏனெனில் ஆங்கிலேயர் இங்கு வந்த போது முன்பு ஆரியனாக வந்து மேலாண்மை செய்தோம் இப்போது கிழக்கிந்தியக் கம்பெனியாக வந்து மேலாண்மை செய்கிறோம் என்றார்கள். ஆனால் அந்தக் கண்ணோட்டத்திலிருந்து கொரியர்கள் சொல்லும் காரணம் எவ்வளவு வித்தியாசப் படுகிறது பாருங்கள்! அன்று அங்கு சென்ற தமிழன் அவர்களை அடிமை கொள்ளவில்லை. கடாரம் கொண்ட இராசேந்திரன் கூட வணிக வழியைத் திறந்துவிட்டுத் திரும்புகிறான். உலகின் பெருநெறியான ஜென் புத்த நெறியை போதிதருமன் காஞ்சீபுரத்திலிருந்து எடுத்துச்சென்று கீழை நாடுகளுக்கு ஒளியூட்டுகிறான். இந்தப் பண்பாடுதான் தமிழன் வரலாறு. கொரிய தமிழன் உறவுப்பாலமும் இதன் அடிப்படையில் அமைவதே!

தொடரும்...

See also...

Sajeev Chandrapragasam

unread,
Oct 19, 2017, 3:29:12 AM10/19/17
to மின்தமிழ்
இந்தப் பதிவில் “ஸ்வர்ண பூமி” எனக் குறிப்பிடும் இடம். தாய்லாந்தின் இப்போதைய தலைநகரம் (பங்க்கோக்).

kanmani tamil

unread,
Oct 20, 2017, 6:38:55 AM10/20/17
to mintamil
பட்டுப்பாதையில் சேரநாட்டு கொற்கை முக்கியத் துறைமுகமாக இருந்திருக்கிறது
ஐயா வணக்கம் .
ஒரு ஐயம் .கொற்கை என்னும் துறைமுகம் பாண்டிய நாட்டில் இருந்தது.சேர
நாட்டில் இருந்ததா?
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 20, 2017, 8:43:40 AM10/20/17
to மின்தமிழ், vallamai
2017-10-20 3:38 GMT-07:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
பட்டுப்பாதையில் சேரநாட்டு கொற்கை முக்கியத் துறைமுகமாக இருந்திருக்கிறது
ஐயா வணக்கம் .
ஒரு ஐயம் .கொற்கை என்னும் துறைமுகம் பாண்டிய நாட்டில் இருந்தது.சேர
நாட்டில் இருந்ததா?

கொற்கை பாண்டியநாட்டுத் துறைமுகம். கொற்கை, சாலியூர், தொண்டி மூன்றும் பாண்டிய நாட்டில் இருந்தன.
இன்னொரு தொண்டி கேரளாவில் உண்டு.

பழயமடலில் கொற்கை பற்றிய முனைவர் ஆய்வேட்டு வலைக்கண்:
தமிழ் இலக்கியத்தில் கொற்கை, 1994,

நா. கணேசன்
(தமிழ்நாட்டின் பிஎச்டி தீஸிஸ் இணையத்தில் குறைவு. அண்ணாமலை, சென்னை, மதுரை, கோவை, .... பல்கலை நூலக காகிதங்கள்
பல்வேறு காரணத்தால் அழிவதன் முன்னர் இணையத்தில் காக்கப்பட வேண்டும்.)
 
கொற்கை பற்றி விரிவாக முதலில் எழுதியவர் கால்ட்வெல் பாதிரியார். கொற்கையில் நடந்த அகழ்வாய்வுகள் குறைவு.
இரா. நாகசாமி காலத்தில் ஒரு பானையோட்டில் எழுத்துகள் கிடைத்தன. அவற்றை TIFR, Bombay-கு அனுப்பி காலப் 
பரிசோதனை கேட்டனர். கி.மு. 7-ஆம் நூற்றாண்டு காட்டியது என நினைக்கிறேன். ஆனால், அதில் உள்ள பிரச்சினையை
நாகசாமி எனக்கு விளக்கினார்: எங்கு தோண்டினாலும்  உடனே தண்ணீர் வந்துவிடுகிறது (கடல் அருகு என்பதால்).
எனவே, தனித்தனி லேயர்ஸ் ஆக முடிவதில்லை, Contamination spoils the accurate determination of the period in KoRkai excavations.
கி.பி. (அ) கி.மு 1,2 நூற்றாண்டுகளின் பொருள்கள் நிறையக் கிடைக்கும். பெருமணலூரில் (கீழடி), சாலியூர் (அழகன்குளம்), ... போல.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages