> //ஆனால் கணினி இவ்வளவு எளிதாக வந்துவிட்ட பின்னர் ஏன் இந்த
> சீர்திருத்தம்? //
> மேலதிகமாக இன்னொரு பத்து வரிவடிவங்களை கற்க முடியாத சோம்பேறித்தனம்
> எனக்கூறலாமோ :)
> அடுத்த ( உயிரெழுத்து ) சீர்திருததமாக இதைக்கருதலாம்:!!
> அா அி அீ அு அூ அெ அே அை அொ அோ அௌ
நெடில்களுக்கு மாத்திரம் துணைக்கால் இடலாம் என்பதும் ஓர்
கருத்து. அவர்களுக்கு இந்த யூனிகோட் தெரியாது :)
மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் சீர்மையை ஆதரித்து
எழுதிய மடல்:
http://groups.google.com/group/minTamil/msg/1b4a6b0bd012115e
காந்தளகம் ஐயாவின் தளத்தில் தேவாரத்தை உ/ஊ பிரித்து,
நல்ல டய்னமிக் ஃபாண்டாகக் காட்டவேண்டுவேன்.
> அின்னும் பன்னிரு வரிவடிவங்களை சேமிக்கலாம் பாருங்கள். (நிற்க.
> திபேத்தியம் அிப்படித்தான் தனது அுயிர் அெழுத்து வரிசியினை
> கொண்டுள்ளது )
ஆம். பலர் பல சீர்மைகளைச் சொன்னாலும், - நீங்கள்
கிண்டல் அடிப்பதுபோல் - தமிழ் பிரமி எழுத்துக்கும்
போகலாம் :) -
வாசெகு போன்றோர் சொல்வது ஒரு மினிமம் திட்டமே.
> > முனைவர் வா.செ.கு.வின் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவையானதுதானா?
> > பல ஆண்டுகளாக அவரும் தமக்குக் கிடைக்கும் அரங்குகளில் எல்லாம்
> > அதனை முன்வைத்து வருகிறார். ஆனால் கணினி இவ்வளவு எளிதாக
> > வந்துவிட்ட பின்னர் ஏன் இந்த சீர்திருத்தம்?
ஏதோ அவராவது சொல்கிறாரே, நிலவைத் தொட்ட கருவி செய்த
மயில்சாமி அண்னாதுரையும் பேசுகிறேன் என்கிறார்.
எப்படி எழுத்தை எழுதுவதும் சாத்தியம்தான். ஆனால்
அதிகாரப்பூர்வமாக்க இதுபோன்ற அதிகாரிகள் வேண்டும்.
வாசெகு, ஐராவதம், சாலை இளந்திரையன், கொடுமுடி சண்முகம்
கொடுத்த அழுத்தமே இன்று தமிழ் எழுத்தின் எளிமைக்குக்
காரணம். இல்லையென்றால் வெறும் பேப்பரில் நிற்கும் (தினமலர்) :)
ஐராவதம் சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத்
தொடங்கும் குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில்
இருந்தால் சிறப்பு.
முதலில் உ/ஊ பிரிபட்டும் எழுதலாம் என்ற கருத்தாக்கம்.
அதனால் உயிர்மெய்கள் உருவாகும் மேட்ரிக்ஸ், சார்பு
எழுத்துக்களின் பண்பு தெளிவாகப் புலப்படும். உ/ஊ
உருவங்களும் மறக்கா.
நா. கணேசன்
> On Jul 31, 12:42 pm, "karthige...॰gmail.com" <karthige...॰gmail.com>
> wrote:
> > On Jul 31, 2:35 pm, annamalai sugumaran <amirthami...॰gmail.com>
> > wrote:
> > > *சென்னையில் செம்மொழித் தமிழாய்வு கலந்தாய்வுக் கூட்டம் *
> > >> தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பேராசிரியர் ப.மருதநாயகம் “கலைஞர்
> > > மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை விருது” பற்றிய தகவல் சிற்றேட்டினை
> > > வெளியிட்டார். முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், முனைவர் கூ.மு.புவனேசுவரி ஆகியோர்
> > > “கலைஞரின் சங்கத் தமிழ் இசைப் பாடல்களைப்” பாடி, குறுந்தகட்டினை அறிமுகம்
> > > செய்தனர். அதனையடுத்து, ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியவற்றின் துணைத் தலைவர்
> > > முனைவர் வா.செ.குழந்தைசாமி, “தமிழ் எழுத்துச் சீரமைப்பு” தொடர்பான
> > > குறுந்தகட்டினை அறிமுகம் செய்து, கருத்துரைகள் வழங்கிய பின், பிற
> > > உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
> > முனைவர் வா.செ.கு.வின் தமிழ் எழுத்துச் சீரமைப்பு தேவையானதுதானா?
> > பல ஆண்டுகளாக அவரும் தமக்குக் கிடைக்கும் அரங்குகளில் எல்லாம்
> > அதனை முன்வைத்து வருகிறார். ஆனால் கணினி இவ்வளவு எளிதாக
> > வந்துவிட்ட பின்னர் ஏன் இந்த சீர்திருத்தம்?
> > ரெ.கா.
ஐராவதம் சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத் தொடங்கும்
குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில் இருந்தால் சிறப்பு.
ஐராவதம் சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத்
தொடங்கும் குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில்
இருந்தால் சிறப்பு. //
புதிய முறை எழுத்தில் இட ஆக்கிரமிப்பு அதிகம்போல் தெரிகிறது.
ஐந்து வரி ஆறு வரி ஆகிவிட்டதே.
தேவ்
ஆம். எழுத்துக்களில் மிகக் குறுக்கமானது தேவநாகரி ~ கூட்டெழுத்துக்களால்.
தமிழின் வரிவடிவத் தன்மை கூட்டெழுத்தில் இருந்து விலகல்.
உ-ம்:
यूनिकोड क्या है? in Hindi
யூனிக்கோடு என்றால் என்ன?, in Tamil
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
-------------------
மிக விரிவானது தமிழ் - கூட்டெழுத்து அற்றது. அதனால்தான்
வாசெகு சொல்லும் இ/ஈ பிரிப்பு தேவையில்லை என்பேன்.
அதையும் சேர்த்தால் இன்னும் நீளும்,
மேலும் ஓர் ஒழுங்கமைதி இ/ஈ க்கு உள்ளது.
இந்த நீளத்தைக் குறைக்க ஒரு வழி,
உ,ஊ கிரந்தக் குறியீட்டை 90 பாக நெட்டுக்குத்தாக
திருப்புவது. அதைத்தான் வாசெகு செய்துள்ளார்.
எது பொருத்தமோ, அழகோ, அகலத்தில் சிக்கனமானதோ
அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாசெகு பரிந்துரை பொருத்தம்தான்.
அன்புடன்,
நா. கணேசன்
> தேவ்
எது பொருத்தமோ, அழகோ, அகலத்தில் சிக்கனமானதோ
அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாசெகு பரிந்துரை பொருத்தம்தான். //
நீங்கள் கூறுவது சரியே.ஹிந்தி / வடமொழி மொழிபெயர்ப்பில் பக்கச் சுமை
அதிகமாவதைப் பார்த்துள்ளேன். அதனால் தான் இந்த ஐயத்தை எழுப்பினேன்.
சிக்கனம்,எளிமை,அழகு அனைத்தும் பொருந்திய எழுத்துச் சீர்மையைத்
தமிழர் உவந்து வரவேற்பர் என்றே நம்புகிறேன்.
தேவ்
On Jul 31, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> Jul 31, 4:41 pm, "N. Ganesan"
>
> எது பொருத்தமோ, அழகோ, அகலத்தில் சிக்கனமானதோ
> அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாசெகு பரிந்துரை பொருத்தம்தான். //
>
> நீங்கள் கூறுவது சரியே.ஹிந்தி / வடமொழி மொழிபெயர்ப்பில் பக்கச் சுமை
> அதிகமாவதைப் பார்த்துள்ளேன். அதனால் தான் இந்த ஐயத்தை எழுப்பினேன்.
ஆம். இந்தி எழுத்து பேப்பரில் (காகிதம் - அரபுமொழியில் இருந்து
துருக்கரிடம்
இந்தியர்கள் பெற்ற வார்த்தை. இதுபற்றி ஏ.சி. பர்னெல் புஸ்தகத்தில்
காண்க. புக்ஸ்.கூகுள்.கொம் தளத்தில் முழுப் புத்தகமும் இலவசம்.
ஏ. சி. பர்னல் படம் தஞ்சையிலிருந்து ஜீன் - லூய்க் செவ்வியார்
ஒருமுறை எங்கோ கொடுத்தார் - எங்கென்று நினைவில் இல்லை.)
இந்தி பேப்பரில் மையால் நுணுக்கி, நுணுக்கி எழுதப்பட்ட ஓர் எழுத்து.
சம்யுக்தாட்சரங்களால் வரிநீளம் மிகக் குறைச்சல்.
தமிழ் சம்யுக்தங்களை காலங்காலமாக விலக்கிவருவது -
புள்ளி/விராமக் கோட்பாட்டால் (தொல்காப்பியர்), வீரமா முனியால்,
பெரியார்-வாசெகு-எம்ஜிஆரால், இன்றைய வளர்ச்சியை அடைந்துள்ளோம்.
அரைக்கிணறு தாண்டிய நிலைக்கே இவ்வளவு சிரமம்!
முழுமையடைய உ/ஊ உயிர்மெய் உடையணும்.
யூனிக்கோட் உ/ஊ உயிர்மெய் ஒரு சார்பு எழுத்து (கொங்கு நன்னூலார்
12-ஆம் நூற்றாண்டிலே விளக்கினதுதான்) என்று கணினிகளில்
நிறுவிவிட்டது. கொங்குநாட்டார் பெரியார், வாசெகு, கொடுமுடி,
ம. அண்ணாதுரை (இஸ்ரோ), ... இன்னும் பலரால்
உ/ஊ உடைத்தெழுதவும் ஒரு ஜி.ஓ வரும்.
> சிக்கனம்,எளிமை,அழகு அனைத்தும் பொருந்திய எழுத்துச் சீர்மையைத்
> தமிழர் உவந்து வரவேற்பர் என்றே நம்புகிறேன்.
>
What I'm interested, and and what's feasible practically
for Government to act is this u/uu cheermai. This is an
*actionable program*, not just time-pass emails.
நா. கணேசன்
(BTW, யாழ்ப்பாணம் வசீகரனின் “யூனிகோட் என்றால் என்ன?” என்னும் பெயர்ப்பு
கிடப்பில் கிடந்தது. தூசி தட்டி இந்திப்பேர்ப்பு வந்த்அதும்
யூனிகோட் தளத்தில் இடம்பெற வைத்ததில் என் பங்குண்டு :)
http://www.unicode.org/standard/WhatIsUnicode.html
தமிழ் மொழிபெயர்ப்பு சரியா என்று எல்லோரும் பார்த்துச் சொல்லுங்கள்.
)
> தேவ்
தொடுப்பு இதுதான்:
http://www.unicode.org/standard/translations/tamil.html
> )
>
>
>
> > தேவ்- Hide quoted text -
>
> - Show quoted text -
தமிழ் எழுத்துத்திருத்தம் கணினி உலகில் தேவையில்லை எனப் பலரும்
வலியுறுத்திவரும் வேளையில் நீரியல் அறிஞர் வா.செ.கு.அவர்கள் வாய்ப்பு
நேரும் இடமெல்லாம் தம் கண்டுபிடிப்பான திருத்த எழுத்துகளை எப்படியாவது
நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சி செய்வது வாடிக்கையான ஒரு வேலைதான்.1983
அளவிலிருந்து அவர் இந்தத் திருப்பணியில் தம் வாழ்நாளைக்
கரைத்துக்கொண்டாலும் அதனைத் தமிழ் அறிஞர்கள் யாரும்
பொருட்படுத்துவதில்லை.தினமணி போன்ற புகழ்பெற்ற ஏடுகளில் அவர் வரைந்த
கட்டுரைகள் தமிழ் அறிஞர்களின் கண்டனத்திற்கு ஆளானதே தவிர ஒருவராலும்
பாராட்டப்படவில்லை.
இருப்பினும் தமக்குச் சார்பான ஆட்களை வைத்து அங்குமிங்கும்
கருத்தரங்குகள் நடத்துவது,கூடிப் பேசுவது போன்ற பணிகளைத் தொடர்ந்து
செய்து வருகிறார்.அவர் முயற்சியை மனந்திறந்து ஆதரிக்க தமிழகத்தில் ஆட்கள்
மிகவும் குறைவே.
அவ்வாறு ஒரு வாதத்திற்கு எழுத்துத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டாலும் பழைய
நூல்களை எப்படி படிப்பது?இவர்களின் கண்டு பிடிப்பால் தட்டச்சிடும் பக்கம்
கூடுமே தவிர,குழப்பம் எஞ்சுமே தவிர வேறு பயன் இல்லை.
வா.செ.கு.அவர்களுக்கும் அவர்களின் முன்மொழிவைத் தலைமேல் கொண்டாடும் அவர்
கொள்கைவழிப்பட்டவர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.நீங்கள் தமிழ்வழிக்
கல்வி பற்றி வலியுறுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்போம்.உங்கள் பிள்ளைகளை
ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு யார் படிக்க, எழுத உங்கள்
திருத்தப்பணிகள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.தமிழகமே ஆங்கில
வழிப்பள்ளிகளின் வேட்டைக்காடாகி விட்ட சூழலில் தமிழைப் பழைய
எழுத்துக்கூட்டிப் படிக்கவே ஆட்கள் குறைவான சூழலில் உங்கள் திருத்த
முயற்சிகளைக் கைவிடுவது சிறப்பு.
மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
உங்கள் நீரியல் துறை சார்ந்து ஒரு பத்துப் பக்கத்தில் தமிழில் ஒரு
கட்டுரை எழுதி உதவுங்கள்.உங்கள் வா.செ.கு.மாதிரி பற்றி எங்களுக்குப்
புரியும்படி 5 பக்கத்தில் தமிழில் ஒரு கட்டுரை எழுதி உதவுங்கள்.பொறியியல்
சார்ந்த கட்டுரைகள்தான் விக்கிப்பீடியாவில் எழுத ஆள் இல்லை
என்கின்றார்கள்.அந்தப் பணிகளில் ஈடுபட்டால் தமிழர்கள் உங்களை நன்றியுன்
போற்றுவர்.மாறாகத் தமிழர்களுக்கு எதிரான வீண் வேலைகளில் ஈடுபட்டால் காலம்
தூற்றும்.
தமிழ்த்தம்பி
தமிழ் விக்கிப்பீடியாவின் மொழிவெறியையும் கொள்கை திணிப்பையும்
கைவிடச்சொல்லுங்கள் முதலில்
இப்படிக்கு,
முன்னாள் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி
On Jul 31, 8:43 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> தமிழ் எழுத்துத் திருத்திகளுக்கு வணக்கம்.
>
> தமிழ் எழுத்துத்திருத்தம் கணினி உலகில் தேவையில்லை எனப் பலரும்
> வலியுறுத்திவரும் வேளையில் நீரியல் அறிஞர் வா.செ.கு.அவர்கள் வாய்ப்பு
> நேரும் இடமெல்லாம் தம் கண்டுபிடிப்பான திருத்த எழுத்துகளை எப்படியாவது
> நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சி செய்வது வாடிக்கையான ஒரு வேலைதான்.1983
> அளவிலிருந்து அவர் இந்தத் திருப்பணியில் தம் வாழ்நாளைக்
> கரைத்துக்கொண்டாலும் அதனைத் தமிழ் அறிஞர்கள் யாரும்
> பொருட்படுத்துவதில்லை.தினமணி போன்ற புகழ்பெற்ற ஏடுகளில் அவர் வரைந்த
> கட்டுரைகள் தமிழ் அறிஞர்களின் கண்டனத்திற்கு ஆளானதே தவிர ஒருவராலும்
> பாராட்டப்படவில்லை.
>
> இருப்பினும் தமக்குச் சார்பான ஆட்களை வைத்து அங்குமிங்கும்
> கருத்தரங்குகள் நடத்துவது,கூடிப் பேசுவது போன்ற பணிகளைத் தொடர்ந்து
> செய்து வருகிறார்.அவர் முயற்சியை மனந்திறந்து ஆதரிக்க தமிழகத்தில் ஆட்கள்
> மிகவும் குறைவே.
> அவ்வாறு ஒரு வாதத்திற்கு எழுத்துத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டாலும் பழைய
> நூல்களை எப்படி படிப்பது?இவர்களின் கண்டு பிடிப்பால் தட்டச்சிடும் பக்கம்
> கூடுமே தவிர,குழப்பம் எஞ்சுமே தவிர வேறு பயன் இல்லை.
>
பழைய நூல்களை இணையத்தில் வைத்துவிடலாமே.
எப்படி வேண்டுமானாலும் நேயர் விருப்பம் போல் படிக்கலாம்.
எழுத்துரு மாற்றுவது ஒன்றும் கடினம் இல்லை.
”பழைய நூல்களை எப்படிப்படிப்பது?” இக்கேள்வி எம்ஜிஆர் முன்னும்,
மலையாள கமிட்டி முன்னும் எழுப்பப்பட்ட பழைய கேள்விதான்.
இப்போது இணையம் வேறு வந்துவிட்டது, வேண்டுவோர் அந்த
ஃபாண்ட் வைத்துப் படிக்கலாம் தானே.
அன்புடன்,
நா. கணேசன்
> வா.செ.கு.அவர்களுக்கும் அவர்களின் முன்மொழிவைத் தலைமேல் கொண்டாடும் அவர்
> கொள்கைவழிப்பட்டவர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.நீங்கள் தமிழ்வழிக்
> கல்வி பற்றி வலியுறுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்போம்.உங்கள் பிள்ளைகளை
> ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு யார் படிக்க, எழுத உங்கள்
> திருத்தப்பணிகள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.தமிழகமே ஆங்கில
> வழிப்பள்ளிகளின் வேட்டைக்காடாகி விட்ட சூழலில் தமிழைப் பழைய
> எழுத்துக்கூட்டிப் படிக்கவே ஆட்கள் குறைவான சூழலில் உங்கள் திருத்த
> முயற்சிகளைக் கைவிடுவது சிறப்பு.
>
நண்பரே,
தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கச் செய்வதில்தான் சீர்மை மிக உதவும்.
இது வா.செ.கு. போன்றோரின் முதன்மையான வாதம்.
அன்புடன்,
நா. கணேசன்
> மீண்டும் உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நீங்கள் நிறைய எழுதுவது மகிழ்ச்சி.
அதற்காக எம் நன்றி.
On Jul 31, 8:43 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> தமிழ் எழுத்துத் திருத்திகளுக்கு வணக்கம்.
>
> தமிழ் எழுத்துத்திருத்தம் கணினி உலகில் தேவையில்லை எனப் பலரும்
> வலியுறுத்திவரும் வேளையில் நீரியல் அறிஞர் வா.செ.கு.அவர்கள் வாய்ப்பு
> நேரும் இடமெல்லாம் தம் கண்டுபிடிப்பான திருத்த எழுத்துகளை எப்படியாவது
> நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சி செய்வது வாடிக்கையான ஒரு வேலைதான்.1983
> அளவிலிருந்து அவர் இந்தத் திருப்பணியில் தம் வாழ்நாளைக்
> கரைத்துக்கொண்டாலும் அதனைத் தமிழ் அறிஞர்கள் யாரும்
> பொருட்படுத்துவதில்லை.தினமணி போன்ற புகழ்பெற்ற ஏடுகளில் அவர் வரைந்த
> கட்டுரைகள் தமிழ் அறிஞர்களின் கண்டனத்திற்கு ஆளானதே தவிர ஒருவராலும்
> பாராட்டப்படவில்லை.
>
உண்மையாகவா? தி. முத்துக்கண்ணப்பர், கொடுமுடி சண்முகம், ...
மருந்தை டாக்டர் கொடுப்பதுபோல, டாக்டர் வாசெகு.
இதற்கு ஓட்டெடுப்புத் தேவையில்லை.
ஒரேநாளில் வாசெகுவுக்குத் தெரிவித்து எம்ஜிஆர் மாற்றினார்.
இன்று நிலைகொண்டுவிட்டது. பழைய புத்தகங்களைப்
படிப்போர் எழுத்துரு மாற்றிப் படிக்கவும் வகை இருக்கிறது.
> இருப்பினும் தமக்குச் சார்பான ஆட்களை வைத்து அங்குமிங்கும்
> கருத்தரங்குகள் நடத்துவது,கூடிப் பேசுவது போன்ற பணிகளைத் தொடர்ந்து
> செய்து வருகிறார்.அவர் முயற்சியை மனந்திறந்து ஆதரிக்க தமிழகத்தில் ஆட்கள்
> மிகவும் குறைவே.
> அவ்வாறு ஒரு வாதத்திற்கு எழுத்துத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டாலும் பழைய
> நூல்களை எப்படி படிப்பது?இவர்களின் கண்டு பிடிப்பால் தட்டச்சிடும் பக்கம்
> கூடுமே தவிர,குழப்பம் எஞ்சுமே தவிர வேறு பயன் இல்லை.
>
இடையில் கொஞ்ச நாள் இருக்கும். பிறகு எம்ஜிஆர் எழுத்துப் போலப்
பழகிவிடும்.
நா. கணேசன்
தமிழ் விக்கிப்பீடியாவின் மொழிவெறியையும் கொள்கை திணிப்பையும்
கைவிடச்சொல்லுங்கள் முதலில்
On Jul 31, 9:04 am, "Maravanpulavu K. Sachithananthan"
<tamiln...@gmail.com> wrote:
> வணக்கம்எழுத்துச் சீர்மைபற்றிப் பேசலாம்.
> ஆள்களைப் பார்க்காமல் ஆட்டத்தைப் பார்க்கும் நிலை இருப்பின் மடலாடல் பயன்தரும்.
> வாசெகுவின் எழுத்துச் சீர்மை முன்மொழிவுகளில் உள்ள குறைகளை மட்டும் பேசுவதே
> பொருத்தமாகும்.
> வளர்ச்சியை நோக்கி எழுத்துச் சீர்மைபற்றிப் பேசுவோர் பலர் உளர்.
> வாசெகு அவர்களுள் ஒருவர்.
> எழுத்துச் சீர்மைபற்றிய என் கட்டுரையை மதுரையில் நடைபெற்ற 5ஆவது உலகத்
> தமிழாராய்ச்சி மாநாட்டில் 1981இல் முன்வைத்தபொழுது அதற்கு முன்பே அத்துறையில்
> ஈடுபட்டுக் கருத்துரைத்தோர் பட்டியலைக் காட்டியுள்ளேன்.
அந்தக் கட்டுரையை இங்கோ, எனக்கோ அனுப்பமுடியுமா?
ஏதோ எழுத்துச் சீர்மையால் குடிமுழுகிப் போவது போலவும்,
பழைய நூல்களைப் படிக்க முடியாது என்பதெல்லாம்
உப்புச் சப்பில்லாத வாதம். இப்போது “கணினி வந்துவிட்டதே,
எதற்கு இதெல்லாம்?” என்ற பல்லவி.
தமிழ் எழுத்து மத்திய, மேல்தட்டு வர்க்கத்தாரிடம் விலகி வருகிறது
கண்கூடு. பல சூழல்களில் தமிழ்க் குழந்தைகள்.
உயிர்மெய்களை ஒரு மேட்ரிக்ஸ் ஆக்கி எளிமைப்படுத்தல்
இன்றைய காலத்தின் கட்டாயம். பாரதிதாசன் பாட்டை,
மு. இளங்கோவன் தரப்போகும் அதன் செம்பதிப்பை,
கம்பனை, தேவாரத்தை, பாரதியை, ... எளிமையாகக்
குழந்தைகள் உ/ஊ உயிர்மெய்யை உடைத்துப்
படித்தால், ட்விட்டர் செய்திகள் செல்போன்களில்
அந்த வரிகளை நுண்பதிவாக்கினால் மகிழலாம்.
உ/ஊ சீர்மை உதவுமே தவிர குறையொன்றுமில்லை!
முதல்வரிடம் வாசெகு போன்றோர் பெறவேண்டிய ஜி.ஓ.
நன்றி!
நா. கணேசன்
> ஈவேராவுக்கு முன்னரே எழுத்துச் சீர்மையை முன்மொழிந்தவர் மாணிக்கவேலு நாயக்கர்
> என்று நினைக்கிறேன்.
ஆம். பாகல்பட்டி ஜமீந்தார்.
என்னைப் போலவும், வினோத் ராஜனைப் போலவும்
கிண்டி பொறியியற் கல்லூரியில் பயின்றவர்.
> எழுத்துச் சீர்மை தேவை என்பவர்களின் கருத்துக்கு மாற்றுக் கருத்துகளை
> முன்வைப்பது அறிஞருலகின் கடன். தமிழரின் வளர்ச்சிக்கு 1979இன் தமிழக அரசாணை
> தந்த நன்மைகள் பல.
> மடலாடலில் கருத்துக்குக் கருத்து வரின் நல்லதல்லவா?
> நன்றி
> 2009/7/31 மு இளங்கோவன் <muelango...@gmail.com>
> Maravanpulavu K. Sachithananthan- Hide quoted text -
On Jul 31, 9:43 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> முத்துக்கண்ணப்பர்,கொடுமுடியார்,தங்கள் திருத்தங்களை யார் ஏற்றார்கள்?
> கொடுமுடியார் அவர் கண்ட எழுத்து வடிவில் கட்டுரை
> வரைந்து.இ.ப.த.ம.கருத்தரங்க ஆய்வுக்கோவையில் வெளியிடுவார்.படிப்பவர்கள்
> யாரும் இல்லை.
> புதுவையில் ஓர் அன்பர் 4 வடிவ குறியீடுகள் கொண்டு தமிழ் எழுத்துகளை
> எழுதிவிடலாம் என்கிறார்?
> ஆள் ஆளுக்கு ஒரு குறியீடு,திருத்தம் சொன்னால் யார் சொல்வதை ஏற்பது?
அதனால்தான் அரசு ஒரு குழு அமைத்து முடிவெடுக்கவேண்டும்.
என்னைப் பொருத்தவரை குறைந்தபட்சமாய்,
உ/ஊ உடைபட்டும் எழுத ஜி.ஓ வரவேண்டும்.
நா. கணேசன்
என் நிலையை மாற்றிக்கொண்டது இதுவும் ஒரு காரணம். கிரேக்க இலக்கியங்களை
மிக அழகாக தமிழில் எழுதுபவர் :). எங்கள் அண்ணா பல்கலைக்கழக நூலகத்தில்
இருக்கும் சொற்ப தமிழ் நூல்களில் இவர் எழுதிய நூல்களும் அடங்கும்
On Jul 31, 9:43 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> முத்துக்கண்ணப்பர்,கொடுமுடியார்,தங்கள் திருத்தங்களை யார் ஏற்றார்கள்?
> கொடுமுடியார் அவர் கண்ட எழுத்து வடிவில் கட்டுரை
> வரைந்து.இ.ப.த.ம.கருத்தரங்க ஆய்வுக்கோவையில் வெளியிடுவார்.படிப்பவர்கள்
> யாரும் இல்லை.
> புதுவையில் ஓர் அன்பர் 4 வடிவ குறியீடுகள் கொண்டு தமிழ் எழுத்துகளை
> எழுதிவிடலாம் என்கிறார்?
> ஆள் ஆளுக்கு ஒரு குறியீடு,திருத்தம் சொன்னால் யார் சொல்வதை ஏற்பது?
ஒரு நல்ல நாளில் விரைவில் தேவாரம் முழுக்க
சீர்மை வடிவிலும் இணையத்தில் வெளிவர உள்ளது
- மறவன்புலவார் தமிழுக்கு நன்கொடை!
நல்ல தொடக்கம் ஆனதால் தினமணி, விடுதலை (தமிழர் தலைவர் வீரமணி),
தினமலர், .. கேட்டுக்கொள்ளலாம். கொஞ்சம் கொஞ்சமாய்,
பின் வா.செ.கு. தமிழின தலைவர் கலைஞர், அவர் பின் வருவோர், ...
கேட்போம்.
பாரதிதாசன் பாட்டுக்களை உ/ஊ சீர்மையில் குழந்தையர் படிக்கும்
நாளும் வரும் என்ற நம்பிக்கையில்,
நா. கணேசன்
நன்றி!
பெரியார் (அதற்கு முன்னர் காரைக்குடி சொ. முருகப்பா, மலாயாவில் வாசம்,
1930)
சொன்ன கருத்தே உயிர்மெய் சீராக்கம்:
ஜனவரி 1935-ல் பெரியார் கட்டுரை:
http://www.thamizhkkaaval.net/1108/nanthi1.html
இங்குக் குறிப்பிடவேண்டியது முனைவர் மு. இளங்கோவன் வாழும் அதே
புதுச்சேரியில் வாழும் திராவிடர் இயக்க தலைவர் நந்திவர்மன்
சீர்மைக்கு ஆதரவளித்து 1935-ஆம் வருஷக் கட்டுரையைத்
துழாவி எடுத்து நமக்கு அளிக்கிறார். ஆக, சீர்மைக்கு
ஆதரவு புதுச்சேரியிலும் உள்ளது என்பது உறுதி ஆகிறது அல்லவா?
பெரியார் சொன்ன கால கட்டத்தைவிட தமிழெழுத்தைக்
கணினியில் எளிமைப் படுத்தவேண்டிய சூழல்
தமிழ்ப் பெருங்குடியினருக்கு இருக்கிறது.
இதனையே 2009-ல் அறிஞர் வா.செ.கு. முன்வைக்கிறார்;
http://video.google.co.uk/videoplay?docid=-6588419071760471274&hl=en
ஆனால், நீங்கள் குறிப்பிடும் வரிநீள அதிகரிப்பு.
அதனால் இ, ஈ உயிர்மெய் கொக்கிகளை வலப்புறம்
நகர்த்தலைக் கைவிட்டுவிடலாம். உ/ஊ உயிர்மெய்
உடைபட்டால் சீர்மை பூர்த்தியாய் விடும்.
நா. கணேசன்
On Jul 31, 8:48 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> //.உங்கள் வா.செ.கு.மாதிரி பற்றி எங்களுக்குப்
> புரியும்படி 5 பக்கத்தில் தமிழில் ஒரு கட்டுரை எழுதி உதவுங்கள்.பொறியியல்
> சார்ந்த கட்டுரைகள்தான் விக்கிப்பீடியாவில் எழுத ஆள் இல்லை
> என்கின்றார்கள்.//
>
> தமிழ் விக்கிப்பீடியாவின் மொழிவெறியையும் கொள்கை திணிப்பையும்
> கைவிடச்சொல்லுங்கள் முதலில்
>
> இப்படிக்கு,
>
> முன்னாள் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி
Just now in Tamilmanam, I see this post:
http://koottanchoru.wordpress.com/2009/07/21/ஆரியர௠கள௠-வேதங௠கள௠-பற௠ற/
http://vijvanbakkam.blogspot.com/2009/06/blog-post.html
G
> > தமிழ்த்தம்பி- Hide quoted text -
The problem is Tamil Wikipedia [Admin Team - The guys who control
everything] is rooted in hatred and pure hatred alone.
If even the common காண்டாமிருகம் is renamed to மூக்குக் கொம்பன் (funny
name) just because it contains Sanskrit. That is suppose to be height
of insanity. I think this example would suffice to give a feel about
the policies of Tamil Wikipedia.
And if you had thought, wiki was a place were people can write stuff,
so as to enable them learn about new stuff. You are Wrong !! It is a
place to spit hatred and impose personal vengeance and agenda !!!
V
On Jul 31, 9:18 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jul 31, 8:48 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > //.உங்கள் வா.செ.கு.மாதிரி பற்றி எங்களுக்குப்
> > புரியும்படி 5 பக்கத்தில் தமிழில் ஒரு கட்டுரை எழுதி உதவுங்கள்.பொறியியல்
> > சார்ந்த கட்டுரைகள்தான் விக்கிப்பீடியாவில் எழுத ஆள் இல்லை
> > என்கின்றார்கள்.//
>
> > தமிழ் விக்கிப்பீடியாவின் மொழிவெறியையும் கொள்கை திணிப்பையும்
> > கைவிடச்சொல்லுங்கள் முதலில்
>
> > இப்படிக்கு,
>
> > முன்னாள் தமிழ் விக்கிப்பீடியா நிர்வாகி
>
> Just now in Tamilmanam, I see this post:http://koottanchoru.wordpress.com/2009/07/21/ஆரியர௠கள௠-வேதங௠கள௠-பற௠ற/http://vijvanbakkam.blogspot.com/2009/06/blog-post.html
On Jul 31, 8:43 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> வா.செ.கு.அவர்களுக்கும் அவர்களின் முன்மொழிவைத் தலைமேல் கொண்டாடும் அவர்
> கொள்கைவழிப்பட்டவர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.நீங்கள் தமிழ்வழிக்
> கல்வி பற்றி வலியுறுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்போம்.உங்கள் பிள்ளைகளை
> ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு யார் படிக்க, எழுத உங்கள்
> திருத்தப்பணிகள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.தமிழகமே ஆங்கில
> வழிப்பள்ளிகளின் வேட்டைக்காடாகி விட்ட சூழலில் தமிழைப் பழைய
> எழுத்துக்கூட்டிப் படிக்கவே ஆட்கள் குறைவான சூழலில் உங்கள் திருத்த
> முயற்சிகளைக் கைவிடுவது சிறப்பு.
>
தமிழைப் படிக்க ஆட்கள் குறைந்துவருவது சிக்கலான விடயம்தான்.
தமிழ்நாட்டில் பள்ளி வகுப்புகளில் (கான்வெண்ட் ஆனாலும்,
அரசாங்கத்தார் பள்ளி ஆனாலும்) ஒரு பாடமாக வைக்க
சட்டம் கலைஞர் கொண்டுவர வேண்டும்.
தமிழ் படிக்க ஆள் பிடிப்போம்!
நா. கணேசன்
yes, Tamil kids find that the cheermai letters are much simple to
learn and remember.
As another effort, we will introduce Tevaram verses in cheermail also.
N. Ganesan
> தமிழைப் படிக்க ஆட்கள் குறைந்துவருவது சிக்கலான விடயம்தான்.
இந்தக் கூற்று சரியானதுதானா என வினவ விரும்புகிறேன்.
பொதுவாக தமிழ் மொழிக்கான வாசகர்கள்/அந்த மொழியைப்
புழங்குவோர் எண்ணிக்கை கடந்த 10/20 ஆண்டுகளில்
உயர்ந்திருக்க வேண்டும் எனபதுதான்
என் கருத்து. தமிழ் ஊடகங்களின் பெருக்கம் அதற்கு ஒரு
முக்கிய காரணம். இணையத்தில் தமிழ்ப் புழக்கம் பெருகியிருப்பது இன்னொரு
காரணம். தமிழ் இணையதளங்களின் hit எண்ணிக்கை பார்த்தால் தெரியும்.
> >தமிழகமே ஆங்கில
> > வழிப்பள்ளிகளின் வேட்டைக்காடாகி விட்ட சூழலில் தமிழைப் பழைய
> > எழுத்துக்கூட்டிப் படிக்கவே ஆட்கள் குறைவான சூழலில்<<
என இளங்கோவன் எழிதியதிலும் எனக்கு ஐயப்பாடு உண்டு.
மொத்தத்தில் தமிழ் நாட்டில் தமிழ்ப் படிப்போர் தொகை
குறைந்து விட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.
இதை ஆதரிக்கப் புள்ளி விவரங்கள் உண்டா?
பெரும்பாலோர் இலவசத் தமிழ்க் கல்வியைக் கைவிட்டு
பணம் கொடுத்து ஆங்கிலம் படிக்கும் அளவுக்குத்
தமிழ்நாட்டுப் பொருளாதாரம் மாறிவிட்டதா என்ன?
புள்ளிவிவரங்கள் இல்லாத அளவில் இந்த இரண்டு
கூற்றுக்களும் தமிழின் மேல் உள்ள ஆர்வ மிகுதியால்
கூறப்படும் கூற்றுக்களே அன்றி, உண்மையின் அடைப்படியில்
ஆனவை இல்லை என்றே கூற விரும்புகிறேன்.
ரெ.கா.
On Jul 31, 6:15 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> அனபு கணேசனார் அவர்களுக்கு,
>
> > தமிழைப் படிக்க ஆட்கள் குறைந்துவருவது சிக்கலான விடயம்தான்.
>
> இந்தக் கூற்று சரியானதுதானா என வினவ விரும்புகிறேன்.
தென்றல் இதழிகைக்கு எழுதிய என் வாசகர் கடிதம்:
http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=89&cid=16&aid=4817
" எல்லோரும் தமிழ் படிக்கவேண்டும்
'பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி
அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே.
எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC)
முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு
படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள்
12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த
சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டு விடும்?'
என்று வா.செ.கு. அவர்கள் கூறியிருக்கிறார்.
இது 1995-ன் நிலைமையாக இருந்திருக்கலாம். ஆனால், 2008-ல் பள்ளிகளில்
தமிழ் பயிலும் நிலைமை தனியார் ஆங்கிலக் கான்வென்டுகளால் தலைகீழாக
மாறிவிட்டது. நகரங்களில் இன்று மையக்கல்வி வாரியம் (CBSE), மெட்ரிகுலேஷன்
போன்ற பள்ளிகள் அரிதாய் இருந்த நிலை மாறி தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட
பள்ளிகளைக் காட்டிலும் அதிகமாக எண்ணிக்கையில் ஏறிக்கொண்டே போகின்றன.
இன்று தமிழை ஒரு பாடமாக எடுக்காத பள்ளி மாணவர்கள் தமிழ்நாட்டில் கணிசமாக
இருக்கிறார்கள். ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்
தொகை மாநிலக் கல்வி இயக்ககத்தின் பள்ளி மாணவர்களின் தொகைக்கு நிகராகி
வருகிறது. இதைப் பாருங்கள்: அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன
அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள். ஆனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகள்
எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம். ஆதாரம்:
http://www.tn.gov.in/schooleducation/statistics/tablep3.htm
"
My post on English medium effect:
http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html
ஆங்கில மீடியம் பள்ளித் தாக்கம் இளங்கோவன்
சொல்வது சரியென்றே கருதுகிறேன்.
நா. கணேசன்
> பொதுவாக தமிழ் மொழிக்கான வாசகர்கள்/அந்த மொழியைப்
> > > ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு யார் படிக்க,- Hide quoted text -
On Jul 31, 6:15 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> அனபு கணேசனார் அவர்களுக்கு,
>
> > தமிழைப் படிக்க ஆட்கள் குறைந்துவருவது சிக்கலான விடயம்தான்.
>
http://ilavasakkalvi.blogspot.com/2009/07/blog-post_31.html
http://ilavasakkalvi.blogspot.com/2009/07/blog-post_05.html
http://ilavasakkalvi.blogspot.com/2009/07/blog-post.html
http://ilavasakkalvi.blogspot.com/2009/06/blog-post_16.html
....
மு. குருமூர்த்தி 4 தசாப்தங்கள் பள்ளி ஆசிரியர்.
படிக்க வேண்டிய பதிவு அவருடையது!
தமிழ்விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்புகள் அனைத்தும் கீழுள்ள சுட்டியில் தொகுக்கப்பட்டுள்ளன;
இவற்றில் ஏதாவது ஓரிடத்திலேனும் மொழிவெறி அல்லது கொள்கைத்திணிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரியவில்லையே.
அன்புடன்
சிறீதரன்
“படிக்கும் வாய்ப்பு அமைந்ததா?” என்பது உங்கள் கேள்வி என்று எண்ணுகிறேன்.
நான் சுமார் 100,000 தமிழ்நூல் பட்டியல் தயார் செய்தேன்.
பூராடன் பெயர் புதுமையாய் இருந்தது. அவர் நூல்தலைப்புகளைக்
குறித்துக் கொண்டேன்.
நீங்கள் சொல்வதால் அவற்றை வாங்கிப் படிப்பேன்.
நா. கணேசன்
> மு.இளங்கோவன்
இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கல்வியில் தங்களுக்கு வேண்டியதைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ள மக்களுக்கு முழுச் சுதந்திரமும்
choicesஉம் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு ஜனநாயக முறை என்று
தெரிகிறது. ஆனால் பொருளாதாரத்தில் உள்ளது போன்று
கல்வியிலும் laissez faire முறையை அனுமதிப்பது சரிதானா
என்று யோசிக்க வேண்டும்.இது பண்பாடு, மரபு தொடர்பானது.
காக்கப்பட வேண்டும்.
மலேசியாவில் ஆரம்பக் கல்வி ஆங்கிலத்தில் நிகழ முடியாது.
மலாய், சீனம், தமிழ் ஆகிய ஏதாவது ஒரு மொழியில்தான்
நிகழ வேண்டும். இடைநிலைக் கல்வி மொத்தமாக மலாயில்தான்.
பல்கலைக் கழகத்திலும் மலாயே பயிற்று மொழி.
நான் மலாயில்தான் பாடங்கள் நடத்தினேன்; ஆய்வுகள்
செய்தேன்; மாநாட்டுக் கட்டுரைகள் படித்தேன். வெளிநாடு
போனால் மட்டுமே ஆங்கிலம்.
(ஆனால் பல்கலைக் கழக மலாய் பயிற்று மொழித் திட்டம்
இப்போது தளர்த்தப்பட்டு கணிசமாக ஆங்கிலம் பயன்படுத்தப்
படுகிறது. ஆனாலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்க முடியாது.)
ஆரம்பக் கல்வி நிலையில் தமிழைக் கட்டாயமாக்குவதை
தமிழ்நாடு அரசு யோசிக்கலாம். ஆனால் கல்வியில் இத்தனை
தூரம் போய்விட்டபிறகு இந்த நடவடிக்கை retrogressive
ஆகவே தெரியும். பலத்த எதிர்ப்பு இருக்கும்.
ஆனால் எல்லாப் பாடத்திட்டங்களிலும் தமிழை ஒரு
கட்டாயப் பாடமாக்குவது சாத்தியம். அதை அரசு செய்யலாம்.
ஒரு விஷயம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கில வழிக்
கல்வி தமிழ்நாட்டில் அதிகமாகவே ஆகிவிட்டாலும்
தமிழ் பேசுவோர், எழுதுவோர் தொகை குறைந்து விடப்
போவதில்லை எனபது என் அனுமானம். (இந்தப் புள்ளி
விவரம் எங்காவது கிடைக்குமா?)
சூழலின் கட்டாயத்தால் பெற்றோரிடமிருந்தும் பிற வழிகளிலும்
சொந்தமாகவும் தமிழ்ப் படிக்க எழுதத் தெரிந்து கொள்வார்கள்
என்றே நினைக்கிறேன். இது எனது optimist self சொல்வதாகவும்
இருக்கலாம்.
எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், உலக அளவில்
தமிழின் புழக்கம் முன்பு (10/20 ஆண்டுகள்) இருந்ததை விட
அதிகம் இருக்கிறது என்னும் உண்மையை மறுக்க முடியாது.
ரெ.கா.
On Aug 1, 7:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Jul 31, 6:15 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
> wrote:
>
> > அனபு கணேசனார் அவர்களுக்கு,
>
> > > தமிழைப் படிக்க ஆட்கள் குறைந்துவருவது சிக்கலான விடயம்தான்.
>
> > இந்தக் கூற்று சரியானதுதானா என வினவ விரும்புகிறேன்.
>
> தென்றல் இதழிகைக்கு எழுதிய என் வாசகர் கடிதம்:http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=89&cid=16&aid...
அட.. மஞ்சுசிறீன்னு மாத்திட்டாங்க போல...
இப்படிததான் பங்காளிப்பாளர்களுக்கு மரியாதை தர்ராங்க போல.. ம்ம்ம்..
இருக்கட்டும்,...
அட.. மஞ்சுசிறீன்னு மாத்திட்டாங்க போல...
இப்படிததான் பங்காளிப்பாளர்களுக்கு மரியாதை தர்ராங்க போல.. ம்ம்ம்..
இருக்கட்டும்,...
On Jul 31, 11:57 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > Trial results have been conducted by educationists, and can be conducted
>
> again once funds of several crores or
>
> > millions are alloted for the project.
>
> Before, I answer whether a ligated or unligated approach is easier to learn
> a set of alphabets in any language.
நீங்கள் பெரிய விஞ்ஞானி, மருத்துவராக விளங்கி வருகிறீர்கள்.
சில குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள்.
அதில் சீர்மை எழுத்தையும், இப்போதிருக்கும் எழுத்தையும் கற்பிக்கவும்.
எது எளிமை, கற்றுக் கொடுக்கும் நேரம் இரண்டையும்
அறிவித்தால் தெரியும்.
முத்துக்கண்ணப்பர், வாசெகு போன்றோர் இதை நடைமுறையில்
செய்து பார்த்துள்ளனர்.
தமிழே புறந்தள்ளப்படும் நிலையில் குழந்தைகள் எளிதில்
எழுத்துக்கூட்டிக் கணினியில் படிக்க வாய்ப்பு:
குழந்தையர் எப்படி உடனே சீர்மைக்கு ஆதரவளிக்கின்றனர்
என்பதைக் கொடுமுடி சண்முகம் கடைசி இருபக்கங்களில்
எழுதியுள்ளார்.
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf
ஹ்யூஸ்டன் தமிழ்ப் பள்ளிகளில் நல்ல ஆதரவு இருக்கிறது.
சந்திரயான் அண்ணாதுரை மகன் கோகுல்கிருஷ்ணன்
(கன்னடம் நன்கு தெரியும்) சீர்மையை விரும்புவதைக்
கண்ணாரக் கண்டேன். இன்னும் பல உதாரணம் தரலாம்.
நீங்கள் சீர்மை, பிணை இரண்டு முறையும் கற்றுக் கொடுத்துப்
பாருங்கள்.
> The "for" & "against" issues of the
> prevailing letters needs to be placed in a forum succinctly for all to
> understand the need for a "cheermai"!
வாசெகு போன்றோர் வைத்தே வருகின்றனர்.
இம்முறையிலும் எழுதலாம்/படிக்கலாம் என்ற நிலை கணினியில்
உருவாகணும். அதிகாரப்பூர்வமாக ஜி.ஓ.
தேவாரத் தளத்தை அவ்வாறு செய்துதர காந்தளகம் சச்சிதானந்தர்
இசைவளித்துள்ளார். அது ஒரு தொடக்கம் அல்லவா?
பின்னர் மற்ற பத்திரிகைகளுக்கும் போகலாம்.
> If there are trial results conducted
> on "Ezhththu Cheermai" by educationists, then those statistical details can
> be placed in this forum for all to view. What are the absolute benefits from
> a statistical parlance are required for any substantial evidence to
> corroborate.
>
ஸ்டேட்டிஸ்டிக்கல் எவிடென்ஸ் எடுக்கலாம். முக்கியமானது
ஜி.ஓ. - இது முதல்வரே எடுக்கமுடியும்.
> > Pothumai effort is the Web cheermai!
>
> This statement at this time seems more an "unilateral weak cry" rather than
> a consensual evidential practicality!
அப்படியும் எழுதலாம் என்ற நிலை வர கன்சென்சஸ் தேவையில்லை.
எம்ஜிஆர் கன்ஸென்ஸஸ்-க்கா காத்திருந்தார் சீர்மையை அமல்படுத்தியபோது?
மலையாள அரசாங்கம் கன்ஸென்ஸஸ் பெற்று உ/ஊ சீர்மையைப் புகுத்தவில்லையே.
நா. கணேசன்
On Jul 31, 11:54 pm, amachu <ramada...@amachu.net> wrote:
> தமிழால் பொருள் வளம் கிட்டும் எனும் நிலை வருவதே இதற்கு தீர்வு.
இப்போதைக்கு அந்நிலை வராது.
உலக மயமாதல் என்னும் சூழ்நிலை. இதில் தமிழ் எங்கே?
சன் டிவியைப் பார்த்தால் தெரியும் - கலைஞர், மாறன் குடும்பமே
தமிழைக் கைவிட்டு விட்டார்களே.
இன்றைக்குத் தமிழ் பட்டிமன்றப் பேச்சுக்கும், தமிழ் ஆசிரியர்களுக்கும்,
சில அரசியல்வாதிகளுக்கும் தானே உதவுகிறது.
இன்றைய நிலையில் பாரதிதாசன் பிறந்துவந்தால் கூட
1950, 60கள் போலத் தமிழுணர்வு ஊட்டுவது கடினமான செயல்
என்று கருதுகிறேன்.
நா. கணேசன்
On Jul 31, 9:52 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> ஆம், புள்ளிவிவரங்களுடனான உங்கள் தென்றல்
> பின்னூட்டம் இந்தப் பிரச்சினையில் ஒளிபாய்ச்சுவதாக
> உள்ளது. கவலைப்பட வேண்டிய நிலைமைதான்.
>
> இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கல்வியில் தங்களுக்கு வேண்டியதைத்
> தேர்ந்தெடுத்துக் கொள்ள மக்களுக்கு முழுச் சுதந்திரமும்
> choicesஉம் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு ஜனநாயக முறை என்று
> தெரிகிறது. ஆனால் பொருளாதாரத்தில் உள்ளது போன்று
> கல்வியிலும் laissez faire முறையை அனுமதிப்பது சரிதானா
> என்று யோசிக்க வேண்டும்.இது பண்பாடு, மரபு தொடர்பானது.
> காக்கப்பட வேண்டும்.
>
> மலேசியாவில் ஆரம்பக் கல்வி ஆங்கிலத்தில் நிகழ முடியாது.
> மலாய், சீனம், தமிழ் ஆகிய ஏதாவது ஒரு மொழியில்தான்
> நிகழ வேண்டும். இடைநிலைக் கல்வி மொத்தமாக மலாயில்தான்.
> பல்கலைக் கழகத்திலும் மலாயே பயிற்று மொழி.
> நான் மலாயில்தான் பாடங்கள் நடத்தினேன்; ஆய்வுகள்
> செய்தேன்; மாநாட்டுக் கட்டுரைகள் படித்தேன். வெளிநாடு
> போனால் மட்டுமே ஆங்கிலம்.
>
> (ஆனால் பல்கலைக் கழக மலாய் பயிற்று மொழித் திட்டம்
> இப்போது தளர்த்தப்பட்டு கணிசமாக ஆங்கிலம் பயன்படுத்தப்
> படுகிறது. ஆனாலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்க முடியாது.)
>
> ஆரம்பக் கல்வி நிலையில் தமிழைக் கட்டாயமாக்குவதை
> தமிழ்நாடு அரசு யோசிக்கலாம். ஆனால் கல்வியில் இத்தனை
> தூரம் போய்விட்டபிறகு இந்த நடவடிக்கை retrogressive
> ஆகவே தெரியும். பலத்த எதிர்ப்பு இருக்கும்.
>
இப்போதுதான் கர்நாடகாவில் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும்
கன்னட வழிக் கல்வி என்ற முயற்சியைக் கைவிடச் சொல்லி
சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது:
http://timesofindia.indiatimes.com/articleshow/4804741.cms
No to Imposition
BANGALORE: It's been a long, hard legal battle spanning more than a
decade. For the Karnataka Associated Management of Primary and
Secondary
Schools
, which led the fight against the government's language policy, the
apex court's order has come as a sweet victory.
Led by Krishna Iyer and G S Sharma, the fight began in 1994. In 2006,
the then primary and secondary education minister Basavaraj Horatti
decided to close down over 2,000 schools that had obtained permission
for Kannada-medium but were running English-medium institutes.
Good sense soon prevailed and the government decided to impose a
penalty on errring schools, instead of asking them to shut down, which
in turn could have jeopardized lakhs of children.
However, in 2008, when fresh applications were made to start English-
medium schools, the government turned down the requests. This prompted
the school managements to approach the high court, which on July 2,
2008 made it clear that it was for parents to choose the medium of
instruction and not the government. "The right to choose the medium of
instruction is the fundamental right of schools and the government has
no say in the matter,'' the HC had ruled.
But unmindful of several raps that followed, the state chose to ignore
the order which resulted in the SC coming down heavily on the state on
Tuesday.
SOME OF THE ARGUMENTS PUT FOPRWARD BY THE SCHOOLS
* It is well established that languages are not genetically imprinted
in a human being. It was once believed that a language imprint resided
in a child and that a child had a genetic preference to one language
over others. Scientific studies have conclusively established that
such theories are baseless and superstitious
* The state claims its language policy is supported by physiological
and psychological evidence; it is effectively under a burden to prove
to a medical certainty that a child who receives primary education in
a language which is not his mother tongue is perceptibly harmed. The
argument borders on medical superstition
* If a man speaks Kannada and the wife Hindi, they are likely to
decide that English being the language of communication between them,
is the ideal medium of instruction for their child
* The state has made a drastic usurpation of the most profound right
of a child and its parent to choose medium of instruction of their
choice. No country in the free world has gone so far
* The language policy is a breach of the promise of formal freedom of
education assured by the Constitution. It is an unwarranted intrusion
into the educational choice of a child and its parent
* The state of Karnataka has enormous linguistic diversity and people
of the state speak more than a hundred different languages in their
homes. The state provides for 8 languages only in its language policy
* Every other state in India freely allows English medium instruction
for children in Classes I to V; a law that contradicts the national
trend cannot be said to be in national interest at all
On Jul 31, 8:43 am, மு இளங்கோவன் <muelango...@gmail.com> wrote:
> தமிழ் எழுத்துத் திருத்திகளுக்கு வணக்கம்.
>
பெரியாரும் எழுத்துச் சீர்மையாளர்தான்.
பாரதிதாசனுக்குக் குரு அல்லவா பெரியார்?
>
> வா.செ.கு.அவர்களுக்கும் அவர்களின் முன்மொழிவைத் தலைமேல் கொண்டாடும் அவர்
> கொள்கைவழிப்பட்டவர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.நீங்கள் தமிழ்வழிக்
> கல்வி பற்றி வலியுறுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்போம்.உங்கள் பிள்ளைகளை
> ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு யார் படிக்க, எழுத உங்கள்
> திருத்தப்பணிகள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.தமிழகமே ஆங்கில
> வழிப்பள்ளிகளின் வேட்டைக்காடாகி விட்ட சூழலில் தமிழைப் பழைய
> எழுத்துக்கூட்டிப் படிக்கவே ஆட்கள் குறைவான சூழலில் உங்கள் திருத்த
> முயற்சிகளைக் கைவிடுவது சிறப்பு.
>
இதற்காகத் தான் எழுத்துச் சீர்மை. பல தொழில்களுக்கும் போக ஆங்கிலக்
கல்வி என்று உச்ச நீதிமன்றமே அறிவித்துவிட்டது. கர்நாடக அரசு
கன்னடவழிக் கல்விதான் தொடக்கப்பள்ளிகளில் என்றது.
அப்படிச் செய்யவேண்டாம் என்கிறது சுப்ரீம் கோர்ட்!
தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆங்கில கான்வெண்ட் பள்ளிகளை
மூட முடியாது. இரண்டு காரணங்கள்: (அ) பெற்றோர் (ஆ) தனியார் பள்ளி
நிர்வாகம் - காசு.
இந்திக்கு மாற்றாக அண்ணா கொண்டுவந்த ஆங்கிலம்
இன்று தமிழுக்கே உலைவைக்கிறது.
நா. கணேசன்
http://www.deccanherald.com/content/15180/school-managements-welcome-sc-decision.html
Fight was to help children
School managements welcome SC decision
Bangalore, DH News Service:
School managements in the State have welcomed the Supreme Court’s
decision to quash the State government’s petition seeking a stay
against a Karnataka High Court ruling on the medium of instruction.
The High Court had originally ruled that the government should give
permission to all schools that had applied for English medium since
1994.
The President of the Karnataka Unaided School Managements Association
(KUSMA), G S Sharma who welcomed said, “We argued that the future of
children will be at stake. If the State government does not change its
stand we could have an entire generation of unemployed people.”
Meanwhile, the Karnataka State Private Schools Management Federation
too welcomed the decision. Federation Secretary Sudi Suresh, who also
runs the S S Public School in Vigneshwar Nagar, said that the judgment
will be of great benefit to the middle and lower classes of society
who aspire for an English education.
Schools de-recognised
Hundreds of schools in Bangalore including S S Public School were de-
recognised by the State government for not following its language
policy. Although the schools were de-recognised, a majority of them
continued to function as the managements stuck to the High Court
ruling given in April, this year.
Meanwhile, Primary and Secondary Education Minister Visveshwar Hegde
Kageri, on Tuesday, said there was no change in the government’s stand
that Kannada or mother tongue should be the medium of instruction in
schools and would place its argument before the Supreme Court at its
next hearing.
Speaking to reporters in Bangalore, Kageri said the Supreme Court had
stayed the contempt proceedings initiated by the High Court of
Karnataka for not complying with court orders on the language issue.
The apex court had earlier stayed the contempt proceedings till July
24. “The present stay has been extended till the next hearing (August
27) in the Supreme Court. The stay has come as a relief to us. We will
place our argument in detail before the Supreme Court,” Kageri said.
Child’s right upheld
A Full Bench of the Karnataka High Court had on July 2, 2008, upheld
the right of a child to choose the medium of instruction at the
primary school.
A Division Bench of the Karnataka High Court had castigated the
government and the officials for failing to implement the judgement
and it had warned them of initiating contempt proceedings if they
continued to further defy the High Court verdict.
> எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், உலக அளவில்
> தமிழின் புழக்கம் முன்பு (10/20 ஆண்டுகள்) இருந்ததை விட
> அதிகம் இருக்கிறது என்னும் உண்மையை மறுக்க முடியாது.
>
> ரெ.கா.
உண்மைதான், ரெ, கா. இதற்குத் தமிழ்நாட்டுக்கு வெளியே
வாழும் தமிழர்களும், பெரிய கும்பெனிகள் தமிழைக்
கணினியில் ஏற்றியதும் முக்கியக் காரணங்கள்.
http://nganesan.blogspot.com/2009/07/valaippathivu.html
இன்னும் சொல்லப்போனால், 8-பிட் என்கோடிங்
ஒன்றே ஒன்றைத் தமிழ்நாட்டுத் தமிழர் ஏற்படுத்தியிருக்கலாம்.
அதாவது திஸ்கி - டாப் பிளவின்றி ஒரே ஒரு 8-பிட்
குறியேற்பு என்று ஏற்பட்டிருந்தால் பத்திரிகைகள்
கண்டபடி பல குறியேற்றங்களில் (8-பிட்) வந்திருக்காது.
ஒரு சாதாரண தமிழர் பேப்பருக்கு ஒரு ஃபாண்ட் இறக்குமதி என்றெல்லாம்
அவதிப்பட்டிருக்க மாட்டார். இன்னும் கணிப்புழக்கம்
தமிழ்நாட்டில் கூடியிருக்கும்.
இந்தத் தடைகளை உடைத்து இன்று வலைப்பதிவுலகம்
தோன்றிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ்நாட்டு
அரசாங்க வலைத்தளங்கள் தமிழில் உருவாகவில்லை!
நா. கணேசன்
On Aug 1, 5:14 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > தமிழால் பொருள் வளம் கிட்டும் எனும் நிலை வருவதே இதற்கு தீர்வு.
>
> இப்போதைக்கு அந்நிலை வராது என்று கூறுவது சரியா?
>
ஒருசிலரைத் தவிர (அரசாங்க மந்திரிகளின் அணுக்க தொண்டர்கள், பட்டிமன்ற
பேச்சாளர்,
அரசியல்வாதிகள், ...) மற்றபடி தமிழால் பொருள்வளம் கிட்டுவதில்லை.
தனியார் கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளர் 7-10 ஆயிரம் வாங்குகிறார்.
ஐடியில் லட்சம், 2 லட்சம் சம்பளம் சாதாரணம்.
நா. கணேசன்
> இக்குழுமத்திலேயே தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை ஆதரித்து அயலகத்தில்
என் கல்லூரி முதலாண்டில் ஆங்கிலப்பேராசிரியர் கூறியது, இந்திய மொழிகளில்
தமிழ் தான் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறதென்று. அதற்காக
பெருமைப்பட வேண்டுமென்று !
>
> அதாவது திஸ்கி - டாப் பிளவின்றி ஒரே ஒரு 8-பிட்
இந்த பிரிவு ஏன் ஏற்பட்டது. எனக்கு புரியாத ஒன்று. ஏன் இரண்டு பை-
லிங்குவல் என்கோடிங்க் என்பது ?
தமிழ்நாடு அரசுக்கும் இன்ஃபிட்க்கும் ஏதேவது சண்டையா :) ?
>
> உண்மைதான், ரெ, கா. இதற்குத் தமிழ்நாட்டுக்கு வெளியே
> வாழும் தமிழர்களும், பெரிய கும்பெனிகள் தமிழைக்
> கணினியில் ஏற்றியதும் முக்கியக் காரணங்கள்.http://nganesan.blogspot.com/2009/07/valaippathivu.html
>
> இன்னும் சொல்லப்போனால், 8-பிட் என்கோடிங்
> ஒன்றே ஒன்றைத் தமிழ்நாட்டுத் தமிழர் ஏற்படுத்தியிருக்கலாம்.
> குறியேற்பு என்று ஏற்பட்டிருந்தால் பத்திரிகைகள்
On Aug 1, 5:55 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > இந்தத் தடைகளை உடைத்து இன்று வலைப்பதிவுலகம் தோன்றிவிட்டது
>
> கணிப்பொறி என்பது ஒரு காலத்திற்கு தான், பிறகு என்ன மாற்றம் வருமோ யாரும்
> அறியார்.
மின்சாரம் என்பது ஒருகாலத்திற்கு தான், பிறகு என்ன மாற்றம் வருமோ!
On Aug 1, 6:00 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> உலக அளவில்
>
> > தமிழின் புழக்கம் முன்பு (10/20 ஆண்டுகள்) இருந்ததை விட
> > அதிகம் இருக்கிறது என்னும் உண்மையை மறுக்க முடியாது.
>
> என் கல்லூரி முதலாண்டில் ஆங்கிலப்பேராசிரியர் கூறியது, இந்திய மொழிகளில்
> தமிழ் தான் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறதென்று. அதற்காக
> பெருமைப்பட வேண்டுமென்று !
>
முக்கிய காரணம், மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் ஆட்சிமொழியாய் இருப்பதும்,
ஈழத் தமிழரை இலங்கை துரத்துவதால் ஏற்பட்ட தமிழ்மக்கள் வெளியேற்றமும்.
>
> > அதாவது திஸ்கி - டாப் பிளவின்றி ஒரே ஒரு 8-பிட்
>
> இந்த பிரிவு ஏன் ஏற்பட்டது. எனக்கு புரியாத ஒன்று. ஏன் இரண்டு பை-
> லிங்குவல் என்கோடிங்க் என்பது ?
>
பழைய வரலாறு. தனிமடலில் பேசலாம். இங்கே பலரும் அறிவர்.
டாப் - திஸ்கி மட்டுமா? முன்பு ஒரு பத்திரிகைக்கு ஒரு என்கோடிங்.
இப்போதுதான் ஒரு ஒழுங்குமுறை வருகிறது, அது அவசியம்
ஏனெனில் நகர்கணிகள், செல்பேசிகள், ... எல்லாமும்
தமி்ழ் ஏற்கவேண்டும்!
நா. கணேசன்
> தமிழ்நாடு அரசுக்கும் இன்ஃபிட்க்கும் ஏதேவது சண்டையா :) ?
>
>
>
>
>
> > உண்மைதான், ரெ, கா. இதற்குத் தமிழ்நாட்டுக்கு வெளியே
> > வாழும் தமிழர்களும், பெரிய கும்பெனிகள் தமிழைக்
> > கணினியில் ஏற்றியதும் முக்கியக் காரணங்கள்.http://nganesan.blogspot.com/2009/07/valaippathivu.html
>
> > இன்னும் சொல்லப்போனால், 8-பிட் என்கோடிங்
> > ஒன்றே ஒன்றைத் தமிழ்நாட்டுத் தமிழர் ஏற்படுத்தியிருக்கலாம்.
> > குறியேற்பு என்று ஏற்பட்டிருந்தால் பத்திரிகைகள்
> > கண்டபடி பல குறியேற்றங்களில் (8-பிட்) வந்திருக்காது.
> > ஒரு சாதாரண தமிழர் பேப்பருக்கு ஒரு ஃபாண்ட் இறக்குமதி என்றெல்லாம்
> > அவதிப்பட்டிருக்க மாட்டார். இன்னும் கணிப்புழக்கம்
> > தமிழ்நாட்டில் கூடியிருக்கும்.
>
> > இந்தத் தடைகளை உடைத்து இன்று வலைப்பதிவுலகம்
> > தோன்றிவிட்டது. ஆனால் இன்னும் தமிழ்நாட்டு
> > அரசாங்க வலைத்தளங்கள் தமிழில் உருவாகவில்லை!
>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
On Aug 1, 6:03 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > தமிழால் பொருள்வளம் கிட்டுவதில்லை. தமிழ் விரிவுரையாளர் 7-10 ஆயிரம்
>
> வாங்குகிறார்.
>
> இன்றைய நிலையில் அக்கால தமிழ ஆசிரியர்கள் போல் அல்லாமல் இக்கால் ஆசிரியர்கள்
> சிலர் ஒரு வேலை என்றில்லாமல் 2, 3 வேலைகள் என்று செய்து வருகின்றனர்.
> அதுவுமில்லாமல், இக்கால தமிழாசிரியர்கள் நிலைமை அறிந்தவர்கள், கணினி, கவிதை
> எழுதுவது, ஓவியம் தீட்டுவது என்று பல துறைகளில் தங்கள் திறமைகளை நிலை நாட்டி
> வருகின்றனர்.
>
ஒரு சிலரே. அரசு பள்ளிகளில் நல்ல சம்பளம். ஆனால், கந்துவட்டித் தொழிலில்
ஈடுபடுகிறார்கள் என்று நிலைமையை உணர்ந்தோர் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் ஆசிரியர்கள் அரசியலில் நுழைவதும் உண்டு.
ஆனால், தனியார் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஆசான்களின் சம்பளம்
குறைவு என்று குறைப்படுகிறார்கள். சினிமா, கணினி, பத்திரிகை, ...
என்று திறமையுள்ளவர்கள் நுழைதல் இயற்கை.
> திரைத்துரையில், முன்னில்லாத வகையில் பல புதியவர்கள், உரையாடல் எழுதுவது, பாடல்
> எழுதுவது, உரையாடல் உச்சரிப்புத் துறைகளில் சேர்ந்து முன்னேறி வருகின்றனர்.
> கூடிய விரைவில், பொறியியல், மருத்துவ மற்றும் சட்டத்துறை மாணவர்கள் தமிழை
> விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டு, தங்கள் துறையில் உள்ள வளர்ச்சிகளை தமிழில்
> எழுதவும் முனைவர்.
இன்றுவரை காணோம். ஆனால் எழுதக் கூடும்.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
நா. கணேசன்
On Aug 1, 6:21 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > இன்றுவரை காணோம். ஆனால் எழுதக் கூடும்.
>
> உங்கள் கண்களிலோ அல்லது செவிகளிலோ அவ்வாறானச் செய்திகள் விழவில்லை என்றால்
> அதற்கு இன்றுவரை காணோம் என்பது சரியான பதில் இல்லையே!
>
விக்கியில் எழுதுகிறார்களா?
| > On Aug 1, 10:01 am, amachu <ramada...@amachu.net> wrote:
| >
| >
| > > அது சரி முன்னாடியே இதே குழுமத்தில் இராமனுஜர் பற்றியக் கட்டுரையின் பேச்சு
| > > பகுதியில் பயங்கர தள்ளு முள்ளு நடந்ததை சுட்டியிருந்தேன். இப்போ மறுபடியும்
| > > சுட்டலாமுன்னு பார்க்கப் போனால் காணோமே!
| >
| > >http://bit.ly/kDtw4
| >
| > > ம்ம்ம். சரி.
| >
அந்த உரையாடல் ஓரிடமும் நகர்த்தப்படவுமில்லை, நீக்கப்படவும் இல்லை. அது அதற்கான இடத்திலேயே உள்ளது. பாருங்கள்:
On Jul 31, 9:52 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> ஆம், புள்ளிவிவரங்களுடனான உங்கள் தென்றல்
> பின்னூட்டம் இந்தப் பிரச்சினையில் ஒளிபாய்ச்சுவதாக
> உள்ளது. கவலைப்பட வேண்டிய நிலைமைதான்.
>
> இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கல்வியில் தங்களுக்கு வேண்டியதைத்
> தேர்ந்தெடுத்துக் கொள்ள மக்களுக்கு முழுச் சுதந்திரமும்
> choicesஉம் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு ஜனநாயக முறை என்று
> தெரிகிறது. ஆனால் பொருளாதாரத்தில் உள்ளது போன்று
> கல்வியிலும் laissez faire முறையை அனுமதிப்பது சரிதானா
> என்று யோசிக்க வேண்டும்.இது பண்பாடு, மரபு தொடர்பானது.
> காக்கப்பட வேண்டும்.
>
> மலேசியாவில் ஆரம்பக் கல்வி ஆங்கிலத்தில் நிகழ முடியாது.
> மலாய், சீனம், தமிழ் ஆகிய ஏதாவது ஒரு மொழியில்தான்
> நிகழ வேண்டும். இடைநிலைக் கல்வி மொத்தமாக மலாயில்தான்.
> பல்கலைக் கழகத்திலும் மலாயே பயிற்று மொழி.
> நான் மலாயில்தான் பாடங்கள் நடத்தினேன்; ஆய்வுகள்
> செய்தேன்; மாநாட்டுக் கட்டுரைகள் படித்தேன். வெளிநாடு
> போனால் மட்டுமே ஆங்கிலம்.
>
> (ஆனால் பல்கலைக் கழக மலாய் பயிற்று மொழித் திட்டம்
> இப்போது தளர்த்தப்பட்டு கணிசமாக ஆங்கிலம் பயன்படுத்தப்
> படுகிறது. ஆனாலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்க முடியாது.)
>
> ஆரம்பக் கல்வி நிலையில் தமிழைக் கட்டாயமாக்குவதை
> தமிழ்நாடு அரசு யோசிக்கலாம். ஆனால் கல்வியில் இத்தனை
> தூரம் போய்விட்டபிறகு இந்த நடவடிக்கை retrogressive
> ஆகவே தெரியும். பலத்த எதிர்ப்பு இருக்கும்.
>
> ஆனால் எல்லாப் பாடத்திட்டங்களிலும் தமிழை ஒரு
> கட்டாயப் பாடமாக்குவது சாத்தியம். அதை அரசு செய்யலாம்.
>
> ஒரு விஷயம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கில வழிக்
> கல்வி தமிழ்நாட்டில் அதிகமாகவே ஆகிவிட்டாலும்
> தமிழ் பேசுவோர், எழுதுவோர் தொகை குறைந்து விடப்
> போவதில்லை எனபது என் அனுமானம். (இந்தப் புள்ளி
> விவரம் எங்காவது கிடைக்குமா?)
>
> சூழலின் கட்டாயத்தால் பெற்றோரிடமிருந்தும் பிற வழிகளிலும்
> சொந்தமாகவும் தமிழ்ப் படிக்க எழுதத் தெரிந்து கொள்வார்கள்
> என்றே நினைக்கிறேன். இது எனது optimist self சொல்வதாகவும்
> இருக்கலாம்.
>
நல்ல optimist என்பது உண்மைதான்.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்
இக் குறளுக்கு விளக்கம் தேவையில்லை.
நம் வள்ளுவப் பெரியவரின் முதுமொழியை உணர்ந்து தமிழ்ப்
பெற்றோர் குழந்தைகளைத் தமிழைப் பேசச் செய்தல்வேண்டும்.
தமிழ்க்கணம் உருவாவதில் பெரும்தடை பெற்றோர்களாக
இருக்கக் கூடாது.
சினிமாப் பாட்டு எழுதும் பாடலாசிரியர்களும்
ஆங்கிலத்தைக் கலக்கின்றனரே. உறுதியாய்
கவிஞர் அறிவுமதி ஒருவரே நிற்கிறார்.
நா. கணேசன்
> எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், உலக அளவில்
> தமிழின் புழக்கம் முன்பு (10/20 ஆண்டுகள்) இருந்ததை விட
> அதிகம் இருக்கிறது என்னும் உண்மையை மறுக்க முடியாது.
>
> ரெ.கா.
>
> On Aug 1, 7:32 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Jul 31, 6:15 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
> > wrote:
>
> > > அனபு கணேசனார் அவர்களுக்கு,
>
> > > > தமிழைப் படிக்க ஆட்கள் குறைந்துவருவது சிக்கலான விடயம்தான்.
>
> > > இந்தக் கூற்று சரியானதுதானா என வினவ விரும்புகிறேன்.
>
> > தென்றல் இதழிகைக்கு எழுதிய என் வாசகர் கடிதம்:http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=89&cid=16&aid...
>
> > " எல்லோரும் தமிழ் படிக்கவேண்டும்- Hide quoted text -
On Aug 1, 5:01 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> எழுத்துச் சீர்மை என்பதை அம்மொழியில் புலமைவுள்ளவர்கள், அம்மொழிப் புலமைச்
> சான்றிதழ் பெற்றவர்களால் குழுவாக ஒரு சில ஆண்டுகள் பல ஆராய்ச்சிகள் செய்து
> முக்கியமாக தட்டச்சு மற்றும் நாளிதழ், வார மற்றும் திங்கள் இதழ்களுக்கு கொண்டு
> வரும் பழக்க வழக்கங்கள் என்று என்னோடு பணிபுரியும் நண்பரின் ஓய்வுபெற்ற கிரேக்க
> மொழி பேராசிரியத் தந்தை இன்று அந்தி வேளை உரையாடலின் போது குறிப்பிட்டார். அவர்
> மேலும் கூறியது அது உங்கள் தாய்மொழியாகயிருந்தாலும் உங்கள் மொழியில் புலமைப்
> பெற்றவர்களின் வழிக்காட்டுதலோடு நடந்தால், அம்முறைமை உங்கள் தாய்மொழிக்கும்
> மட்டுமின்றி உங்கள் தாய்மொழியை இன்றும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்,
> பல்கலைக்கழகங்களிலும் பயிற்றுவிக்கும் உங்கள் மொழி ஆசிரியர்களுக்கு நீங்கள்
> காட்டும் மரியாதை.
ஆம். ம. நன்னன், சுப. திண்ணப்பன் உலகறிந்த தமிழ்ப் பேராசிரியர்கள்.
சுப. திண்ணப்பன் வாழ்நாள் முழுக்க தமிழை தமிழருக்கும், மலாயருக்கும்,
சீனருக்கும் கற்பிக்கும் பதவியில் இருப்பவர். அவர் சீர்மைக்குப்
பரிந்துரை செய்கிறார்.
> அதைவிடுத்து, வேறு துறையிலிருந்துக் கொண்டு, தாய்மொழியில்,
> தாய்மொழியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் துணையில்லாமல் என்ன சீர்மைகளைக்
> கொண்டு வந்தாலும், அதற்கு வேண்டிய வரவேற்பு - சோர்வு காணும்!
எம்ஜிஆர் மாதிரி சீர்மைக்கு இருக்கிறது. பல ஆய்வுகளுக்குப் பின்னர்
வேண்டுவது ஒரு முதல்வர் ஜி.ஓ. இல்லையென்றால் தமிழ் ஆசிரியர்கள் சுப.
திண்ணப்பன்,
முத்து. கண்ணப்பன், ம. நன்னன், குழந்தைசாமி, ... ஆய்வுமுடிவுகள் வீண்ஆகி
விடும்.
நா. கணேசன்
On Jul 31, 9:52 pm, "karthige...@gmail.com" <karthige...@gmail.com>
wrote:
> ஆம், புள்ளிவிவரங்களுடனான உங்கள் தென்றல்
> பின்னூட்டம் இந்தப் பிரச்சினையில் ஒளிபாய்ச்சுவதாக
> உள்ளது. கவலைப்பட வேண்டிய நிலைமைதான்.
>
> இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கல்வியில் தங்களுக்கு வேண்டியதைத்
> தேர்ந்தெடுத்துக் கொள்ள மக்களுக்கு முழுச் சுதந்திரமும்
> choicesஉம் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு ஜனநாயக முறை என்று
> தெரிகிறது. ஆனால் பொருளாதாரத்தில் உள்ளது போன்று
> கல்வியிலும் laissez faire முறையை அனுமதிப்பது சரிதானா
> என்று யோசிக்க வேண்டும்.இது பண்பாடு, மரபு தொடர்பானது.
> காக்கப்பட வேண்டும்.
>
ஆம். ஒப்புகிறேன்.
> மலேசியாவில் ஆரம்பக் கல்வி ஆங்கிலத்தில் நிகழ முடியாது.
> மலாய், சீனம், தமிழ் ஆகிய ஏதாவது ஒரு மொழியில்தான்
> நிகழ வேண்டும். இடைநிலைக் கல்வி மொத்தமாக மலாயில்தான்.
> பல்கலைக் கழகத்திலும் மலாயே பயிற்று மொழி.
> நான் மலாயில்தான் பாடங்கள் நடத்தினேன்; ஆய்வுகள்
> செய்தேன்; மாநாட்டுக் கட்டுரைகள் படித்தேன். வெளிநாடு
> போனால் மட்டுமே ஆங்கிலம்.
>
> (ஆனால் பல்கலைக் கழக மலாய் பயிற்று மொழித் திட்டம்
> இப்போது தளர்த்தப்பட்டு கணிசமாக ஆங்கிலம் பயன்படுத்தப்
> படுகிறது. ஆனாலும் முழுமையாக ஆங்கிலத்தில் கற்க முடியாது.)
>
நல்லது. மலாய் அதிகம் புகுத்தப்பட்டால்
சிங்களவர் தமிழுக்கு செய்வது போல ஆகிவிடுமா?
அதற்கு வாய்ப்பில்லையா?
> ஆரம்பக் கல்வி நிலையில் தமிழைக் கட்டாயமாக்குவதை
> தமிழ்நாடு அரசு யோசிக்கலாம். ஆனால் கல்வியில் இத்தனை
> தூரம் போய்விட்டபிறகு இந்த நடவடிக்கை retrogressive
> ஆகவே தெரியும். பலத்த எதிர்ப்பு இருக்கும்.
>
> ஆனால் எல்லாப் பாடத்திட்டங்களிலும் தமிழை ஒரு
> கட்டாயப் பாடமாக்குவது சாத்தியம். அதை அரசு செய்யலாம்.
>
அதைச் செய்ய தமிழாசிரியர்கள் அரசுக்கு அழுத்தம் தரவேண்டும்.
தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்தால் நடக்கும்.
> ஒரு விஷயம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கில வழிக்
> கல்வி தமிழ்நாட்டில் அதிகமாகவே ஆகிவிட்டாலும்
> தமிழ் பேசுவோர், எழுதுவோர் தொகை குறைந்து விடப்
> போவதில்லை எனபது என் அனுமானம். (இந்தப் புள்ளி
> விவரம் எங்காவது கிடைக்குமா?)
>
> சூழலின் கட்டாயத்தால் பெற்றோரிடமிருந்தும் பிற வழிகளிலும்
> சொந்தமாகவும் தமிழ்ப் படிக்க எழுதத் தெரிந்து கொள்வார்கள்
> என்றே நினைக்கிறேன். இது எனது optimist self சொல்வதாகவும்
> இருக்கலாம்.
>
கிராமங்களில் இணைய இணைப்பை அரசாங்கம்
தரவேண்டும். தொலைக்காட்சிப் பெட்டிகள் மாத்திரம் போதாவே!
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
> எல்லாம் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், உலக அளவில்
> தமிழின் புழக்கம் முன்பு (10/20 ஆண்டுகள்) இருந்ததை விட
> அதிகம் இருக்கிறது என்னும் உண்மையை மறுக்க முடியாது.
>
ஆம். இணையம் ஒரு முக்கியக் காரணம்.
On Jul 31, 7:05 am, devoo <rde...@gmail.com> wrote:
> Jul 31, 4:41 pm, "N. Ganesan"
>
> எது பொருத்தமோ, அழகோ, அகலத்தில் சிக்கனமானதோ
> அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாசெகு பரிந்துரை பொருத்தம்தான். //
>
> நீங்கள் கூறுவது சரியே.ஹிந்தி / வடமொழி மொழிபெயர்ப்பில் பக்கச் சுமை
> அதிகமாவதைப் பார்த்துள்ளேன். அதனால் தான் இந்த ஐயத்தை எழுப்பினேன்.
> சிக்கனம்,எளிமை,அழகு அனைத்தும் பொருந்திய எழுத்துச் சீர்மையைத்
> தமிழர் உவந்து வரவேற்பர் என்றே நம்புகிறேன்.
>
> தேவ்
தமிழ்மணம் அமைத்த காசி ஒரு நல்ல வடிவம் தந்தார்.
அகலம் மிகக் குறைவானது. ர போன்று சிக்கனமான ஒரு அம்பு வடிவம்.
இதில் ஒன்றைக் கொடுத்தேன்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
கணேசன்
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
2.1.11 காலமறிதல்
பகல்வெல்லਹம் கਰகையைக் காக்கை இகல்வெல்லਹம்
வேந்தர்க்கਹ வேண்டਹம் பொழਹதਹ. 481
பரਹவத்தோடਹ ஒட்ட ஒழਹகல் திரਹவினைத்
தீராமை ஆர்க்கਹங் கயிறਹ. 482
அரਹவினை யென்ப உளவோ கரਹவியான்
காலம் அறந்தਹ செயின். 483
ஞாலம் கரਹதினਹங் கைகਰடਹங் காலம்
கரਹதி இடத்தாற் செயின். 484
காலம் கரਹதி இரਹப்பர் கலங்காதਹ
ஞாலம் கரਹதਹ பவர். 485
ஊக்க மਹடையான் ஒடਹக்கம் பொரਹதகர்
தாக்கற்கਹப் பேரਹந் தகைத்தਹ. 486
பொள்ளென ஆங்கே பਹறம்வேரார் காலம்பார்த்தਹ
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487
செறਹநரைக் காணின் சਹமக்க இறਹவரை
காணின் கிழக்காம் தலை. 488
எய்தற் கரியதਹ இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
கொக்கொக்க கਰம்பਹம் பரਹவத்தਹ மற்றதன்
கਹத்தொக்க சீர்த்த இடத்தਹ. 490
BTW,
எனக்குப்பிடித்த உ/ஊ சீர்மை வடிவம் ஒன்று உள்ளது. அந்தகாலத்து இன்ஃபிட்ட
மாநாட்டில் யாரோ ஒருவர் ஒரு பேப்பர் போட்டிருந்தார், கல்லூரி நூலகத்தில்
3 வருடங்களுக்கு முன்னால் கண்டது. உ/ஊ ***சீர்திருத்தலும்***
வேண்டுமெனில் அதைப்பயன்படுத்தலாம். Its non-alien and easy to adjust.
இதற்கு பதில் அதை ஏற்கலாமே ?
On Aug 1, 12:05 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> Code200இல் மட்டும் இது தெரியும் என்ற Disclaimer கொடுத்திருக்க
> வேண்டும் :)
>
> BTW,
>
> எனக்குப்பிடித்த உ/ஊ சீர்மை வடிவம் ஒன்று உள்ளது. அந்தகாலத்து இன்ஃபிட்ட
> மாநாட்டில் யாரோ ஒருவர் ஒரு பேப்பர் போட்டிருந்தார், கல்லூரி நூலகத்தில்
> 3 வருடங்களுக்கு முன்னால் கண்டது. உ/ஊ ***சீர்திருத்தலும்***
> வேண்டுமெனில் அதைப்பயன்படுத்தலாம். Its non-alien and easy to adjust.
> இதற்கு பதில் அதை ஏற்கலாமே ?
>
வடிவத்தை அனுப்புங்கள். பார்க்கலாம்.
தேவ் எழுதினார்:
> > > எது பொருத்தமோ, அழகோ, அகலத்தில் சிக்கனமானதோ
> > > அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாசெகு பரிந்துரை பொருத்தம்தான். //
>
> > > நீங்கள் கூறுவது சரியே.ஹிந்தி / வடமொழி மொழிபெயர்ப்பில் பக்கச் சுமை
> > > அதிகமாவதைப் பார்த்துள்ளேன். அதனால் தான் இந்த ஐயத்தை எழுப்பினேன்.
> > > சிக்கனம்,எளிமை,அழகு அனைத்தும் பொருந்திய எழுத்துச் சீர்மையைத்
> > > தமிழர் உவந்து வரவேற்பர் என்றே நம்புகிறேன்.
>
ஆம். உகர உயிர்மெய்யை உடைப்பதற்கு வழிமுறையை
நம்மைச் சூழ்ந்துள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில்
இருந்து தமிழரும் தமிழும் கற்கலாம்.
வரி நீளம் அதிகம் ஆகாத உகரக் குறி நம் அண்டை மொழிகளின்
எழுத்து எல்லாவற்றிலும் உள்ளது. பாருங்கள்!
அகர மృதல எழృத்தெல்லாம் ஆதி
பகவன் மృதற்றே உலகృ ( கృறள் எண் : 1 )
மృ.வ : எழృத்தృக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிரృக்கின்றன.
அதృபோல உலகம் கடவృளை அடிப்படையாக கொண்டிரృக்கிறதృ.
நா. கணேசன்
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
On Jul 31, 6:29 am, devoo <rde...@gmail.com> wrote:
> Jul 31, 3:41 pm, "N. Ganesan"
>
> ஐராவதம் சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
> தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
> என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
> தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத் தொடங்கும்
> குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில் இருந்தால் சிறப்பு.
>
> ஐராவதம் சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
> தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
> என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
> தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத்
> தொடங்கும் குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில்
> இருந்தால் சிறப்பு. //
>
> புதிய முறை எழுத்தில் இட ஆக்கிரமிப்பு அதிகம்போல் தெரிகிறது.
> ஐந்து வரி ஆறு வரி ஆகிவிட்டதே.
இம்முறையில் செய்தால் ஐந்துவரி ஆறுவரி ஆகாது.
தெலுகு, கன்னடம், மலையாளம் - எல்லாம் இம்முறையில்
உகர உயிர்மெய்களை எழுதுகின்றன.
அகர மృதல எழృத்தெல்லாம் ஆதி
பகவன் மృதற்றே உலகృ ( கృறள் எண் : 1 )
மృ.வ : எழృத்தృக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக
கொண்டிரృக்கின்றன.
அதృபோல உலகம் கடவృளை அடிப்படையாக கொண்டிரృக்கிறதృ.
>
> தேவ்
கன்னடத்தில் இருந்து சுட்டதா இல்லை தெலுங்கில் இருந்து சுட்டதா :? :)
http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/IMG_0005.jpg
இது தான் சொன்னது. கையெழுத்தில் வசதியாக இருக்கிறது. புது ஸ்ட்ரோக்
எதுவும் இல்லை என்பதால்.
அகர மృதல எழృத்தெல்லாம் ஆதி
பகவன் மృதற்றே உலகృ
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கృறள்
குறள்
அதே அகலம்தான் உள்ளது; அகலம் குறையவில்லை.
தற்போதைய தமிழ் வரிவடிவத்தில் குறை காண்பது நோக்கமன்று;
பெரிய அளவு கட்டுரை வரைவோரின் சுமை குறைய வேண்டும்.
காகிதப்பதிப்பில் பக்கம் குறைய வேண்டும்.
வேற்றுமை உருபுகளுக்கு எளிய குறியீடுகள் அமைக்கலாம்.
Font size குறைவதற்கு வழிவகை தேடலாம்.
குழந்தைகள் கற்பதற்கு எளிதாக இருக்க வேண்டும்.
அறிஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒருங்கிணைந்து
செயல் படுவது நலம் பயக்கும்.
தேவ்
தேவையில்லாமல் இருபக்கமும் தற்போது இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன.
On Aug 1, 1:02 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> இது கூட நல்லாதான் இருக்கு !!!
>
> கன்னடத்தில் இருந்து சுட்டதா இல்லை தெலுங்கில் இருந்து சுட்டதா :? :)
>
> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/IMG_0005.jpg
>
> இது தான் சொன்னது. கையெழுத்தில் வசதியாக இருக்கிறது. புது ஸ்ட்ரோக்
> எதுவும் இல்லை என்பதால்.
>
அருமை.
இதுதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உகர உயிர்மெய்க் குறி.
உ-ம்:
அகர மృதல எழృத்தெல்லாம் ஆதி
பகவன் மృதற்றே உலகృ ( கృறள் எண் : 1 )
மృ.வ : எழృத்தృக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக
கொண்டிரృக்கின்றன.
அதృபோல உலகம் கடவృளை அடிப்படையாக கொண்டிரృக்கிறதృ
அடிப்படையில் அறிஞர் வாசெகு உகரக் குறியைத் திருப்புவதும்
இதுதான்.
நா. கணேசன்
நெருப்புநரி உலாவியில் பார்க்கணும் (புள்ளிவட்டம் தெரியாமலிருக்க).
> On Aug 1, 10:53 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > தேவ் எழுதினார்:
>
> > > > > எது பொருத்தமோ, அழகோ, அகலத்தில் சிக்கனமானதோ
> > > > > அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாசெகு பரிந்துரை பொருத்தம்தான். //
>
> > > > > நீங்கள் கூறுவது சரியே.ஹிந்தி / வடமொழி மொழிபெயர்ப்பில் பக்கச் சுமை
> > > > > அதிகமாவதைப் பார்த்துள்ளேன். அதனால் தான் இந்த ஐயத்தை எழுப்பினேன்.
> > > > > சிக்கனம்,எளிமை,அழகு அனைத்தும் பொருந்திய எழுத்துச் சீர்மையைத்
> > > > > தமிழர் உவந்து வரவேற்பர் என்றே நம்புகிறேன்.
>
> > ஆம். உகர உயிர்மெய்யை உடைப்பதற்கு வழிமுறையை
> > நம்மைச் சூழ்ந்துள்ள தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில்
> > இருந்து தமிழரும் தமிழும் கற்கலாம்.
>
> > வரி நீளம் அதிகம் ஆகாத உகரக் குறி நம் அண்டை மொழிகளின்
> > எழுத்து எல்லாவற்றிலும் உள்ளது. பாருங்கள்!
>
> > அகர மృதல எழృத்தெல்லாம் ஆதி
> > பகவன் மృதற்றே உலகృ ( கృறள் எண் : 1 )
>
> > மృ.வ : எழృத்தృக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிரృக்கின்றன.
> > அதృபோல உலகம் கடவృளை அடிப்படையாக கொண்டிரృக்கிறதృ.
>
> > நா. கணேசன்
>
> > http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html- Hide quoted text -
On Aug 1, 1:23 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> ஒகர, ஓகார, ஔகரங்களை "சீர்திருத்தி" விட்டால் பிரச்சினை
> தீர்ந்துவிடும் :)
>
> தேவையில்லாமல் இருபக்கமும் தற்போது இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன.
>
ஸ்ரீமான் பொதுஜனத்திடம் எடுபடுமா? குழப்பவாதிகள் தமிழே தொலைந்துவிடும்
என்று சொல்லிவிடுவார்களே!
> On Aug 1, 11:19 pm, devoo <rde...@gmail.com> wrote:
>
>
>
> > Aug 1, 10:53 pm, "N. Ganesan"
>
> > அகர மృதல எழృத்தெல்லாம் ஆதி
> > பகவன் மృதற்றே உலகృ
> > அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
> > பகவன் முதற்றே உலகு
>
> > கృறள்
> > குறள்
> > அதே அகலம்தான் உள்ளது; அகலம் குறையவில்லை.
>
> > தற்போதைய தமிழ் வரிவடிவத்தில் குறை காண்பது நோக்கமன்று;
> > பெரிய அளவு கட்டுரை வரைவோரின் சுமை குறைய வேண்டும்.
> > காகிதப்பதிப்பில் பக்கம் குறைய வேண்டும்.
> > வேற்றுமை உருபுகளுக்கு எளிய குறியீடுகள் அமைக்கலாம்.
> > Font size குறைவதற்கு வழிவகை தேடலாம்.
> > குழந்தைகள் கற்பதற்கு எளிதாக இருக்க வேண்டும்.
> > அறிஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஒருங்கிணைந்து
> > செயல் படுவது நலம் பயக்கும்.
>
> > தேவ்- Hide quoted text -
தெலுங்கு/கன்னட உகரக்குறி இது தான்
தாங்கள் இட்டது ऋகாரக்குறி
On Aug 1, 1:35 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> மు.வ : எழుத்தుக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக
> கொண்டிரుக்கின்றன.
> அதుபோல உலகம் கடவుளை அடிப்படையாக கொண்டிரుக்கிறதు
>
> தெலுங்கு/கன்னட உகரக்குறி இது தான்
>
> தாங்கள் இட்டது ऋகாரக்குறி
>
ஆம். ருகரத்துக்கு உகர ஒலிப்பு இருப்பதனாலே (க்ருஷ்ணன், ...)
இரண்டுக்கும் மிக ஒற்றுமை.
> > > - Show quoted text -- Hide quoted text -
> ஐராவதம்சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
> தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
> என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
> தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத் தொடங்கும்
> குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில் இருந்தால் சிறப்பு.
>
> ஐராவதம்சொல்வதுபோல், பலர் பலதைப் பரிந்துரைத்தாலும்
> தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியும் எழுதலாம்
> என்ற நிலை வரணும். இது நம்மைப்போல் தமிழ் எழுதத்
> தெரிந்தவர்களுக்கு அல்ல. தமிழெழுத்துப் படிக்கத்
> தொடங்கும் குழந்தைகளுக்கு அறிமுகம் இம்முறையில்
> இருந்தால் சிறப்பு. //
> புதிய முறை எழுத்தில் இட ஆக்கிரமிப்பு அதிகம்போல் தெரிகிறது.
> ஐந்து வரி ஆறு வரி ஆகிவிட்டதே.
தேவ், இதைப் பார்த்தீர்களானால் நன்று.
----------------
ஐராவதம் சொல்வதృபோல், பலர் பலதைப் பரிந்தృரைத்தாலృம்
தேவை உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையே, அப்படியృம் எழృதலாம்
என்ற நிலை வரணృம். இதృ நம்மைப்போல் தமிழ் எழృதத்
தெரிந்தவர்களృக்கృ அல்ல. தமிழெழృத்தృப் படிக்கத் தொடங்கృம்
கృழந்தைகளృக்கృ அறிமృகம் இம்மృறையில் இரృந்தால் சிறப்பృ.
--------------
(அ) இட ஆக்கிரமிப்பு அதிகம் இல்லை.
ஐந்துவரி ஐந்தாகவே இருக்கிறது.
(ஆ) வா.செ.கு. சொல்வார்: கிரந்த
உகரக் குறியீடு அடிப்பகுதி 50 % காலியாய்
இருப்பது அழகில்லை. ஆம்.
அக்குறை இதனில் களையப்பட்டுவிட்டது.
(இ) தெலுங்கு, கன்னடம், மலையாளம்,
(உகரம் 90 பாகை) கிரந்தம், .. எல்லாம்
உகர உயிர்மெய் இவ்வடிவமே.
(ஈ) எழுதுதற்கு மிக எளிது. வினோத்
அனுப்பிய படம் பார்க்கவும்.
ஆக, உ/ஊ உயிர்மெய் சீர்மை விரும்புவோர்
இந்த 90 டிகிரி திருப்பிய உயிர்மெய் உகர வடிவைப்
பரிந்துரைக்கிறேன்.
நா. கணேசன்
If dotted circle shows up, use Firefox browser.
நான் அனுப்பிய குறியீடு பிராமி "உகர"க் குறியீட்டை மேலிழுத்தாற்போல
உள்ளதை கவனிக்கவும் . அவ்வாறு தான் தற்போதைய தென்னிந்திய உகர
குறியீடுகள், காலம் செல்ல செல்ல வளைந்து மேலெழுந்து தோன்றியிருக்க
வேண்டும்.
Back to Brahmi
On Aug 1, 11:39 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 1, 1:35 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
>
> > மు.வ : எழుத்தుக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக
> > கொண்டிரుக்கின்றன.
> > அதుபோல உலகம் கடவుளை அடிப்படையாக கொண்டிரుக்கிறதు
>
> > தெலுங்கு/கன்னட உகரக்குறி இது தான்
>
> > தாங்கள் இட்டது ऋகாரக்குறி
>
On Aug 1, 2:11 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > ஆம். ருகரத்துக்கு உகர ஒலிப்பு இருப்பதனாலே (க்ருஷ்ணன், ...)
> > இரண்டுக்கும் மிக ஒற்றுமை.
>
> நான் அனுப்பிய குறியீடு பிராமி "உகர"க் குறியீட்டை மேலிழுத்தாற்போல
> உள்ளதை கவனிக்கவும் . அவ்வாறு தான் தற்போதைய தென்னிந்திய உகர
> குறியீடுகள், காலம் செல்ல செல்ல வளைந்து மேலெழுந்து தோன்றியிருக்க
> வேண்டும்.
>
ஆம்.
பங்காளிகள் தெலுங்கர், கன்னடிகர், மலையாளர்
ஏற்றுக் கொண்ட உகர உயிர்மெய் போல் தமிழுக்கும்
சீரான உகர உயிர்மெய் வரும்.
கொரிய மொழி எழுத்து வடிவம் ஆதியில் சீன எழுத்தில் (ஓவியக்குறியீடு)
இருந்தது. ஆயினும் 16ம் நூற்றாண்டில் கொரிய அரசர் சேஜோன் என்பவர் ஒரு
புதிய குறியீட்டுமுறையை அறிமுகப்படுத்தினார். ஒரு அரசர் செய்கிறார், உடனே
எடுபடும் என எண்ண வேண்டாம். அவர் இதையொரு ரகஸ்ய திட்டமாகவே செய்தார்.
அவர் யார், யாரை கலந்தார், எப்படி ஒரு முடிவிற்கு வந்தார் என்பது இன்றும்
பூடகமாக உள்ளது. கொரிய வரிவடிவம் அச்சாக நமது, `நெடுங்கணக்கு`. ஆனால்,
சீன, இந்திய எளிய குறியீடு. நம்மவர் கொஞ்சம் கொரிய முயற்சியை கவனித்தால்
சீர்மை இன்னும் சீர் படும். ஏனெனில் தமிழ் நெடுங்கணக்கை மாடலாகக் கொண்டு
உருவாகியிருக்கும் ஹங்குல் (கொரிய வரிவடிவம்) யுனஸ்கோவால் `அறிவியல்
பூர்வமான` எழுத்துமுறை. கற்பதற்கு எளிது என்று சான்றிதழ்
பெற்றிருக்கிறது!
500 வருடங்களுக்குப் பிறகு 1950களில்தான் கொரிய தேசியமென்ற ஒன்று உருவான
போது இம்முறை மீள்பரிசீலனைக்கு வந்து அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது
நுகர்விற்கு வந்திருக்கிறது. இதை முன்மொழிந்த அரசன் இதற்கு வைத்த பெயர்
`கொச்சை வடிவம்` (vulgar script). காரணம், புலவர் பேசி, எழுதிய மொழி
சீனம் சார்ந்தது. பொதுமக்களுக்கு படிப்பறிவு வர வேண்டுமென்று அவர்கள்
பேசும் மொழிக்கு ஒரு வரிவடிவம் தந்தான் செஜோன், அதுவும், பயந்து, பயந்து.
இவ்வரிவடிவிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. காரணம் கொரிய மொழியில்
ஏகப்பட சீனச்சொற்கள். அவைகளை வரிவடிவில் கொண்டுவரும் போது பிரச்சனை
உள்ளது (ஒலி ஒன்றாக இருந்தாலும் ஓவியக்குறிப்பில் பல்வேறு அர்த்தங்களை
சீனம் சொல்கிறது).
க.>
2009/8/1 Kannan Natarajan <thar...@gmail.com>:
இது பற்றிய முறையீடு விக்கி நிருவனத்திற்கு போயிருக்கிறதா?
இது விக்கியின் நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளதே!
தமிழின் முதுசொம் பின் எப்படி உள்ளது, உள்ளபடி உலகிற்கு தெரியவரும்?
க.>
2009/8/2 amachu <rama...@amachu.net>:
> இருந்தது இருந்தபடி - உள்ளது உள்ளபடி இடம்பெறச் வழி இருக்க வேண்டும்.
>
> வேறு இடங்களில் இக்கொள்கைகளை எடுத்துச் சொல்லி காலப்போக்கில் மாற்றம்
> கொண்டு வருவது வேறு இப்படி எழுவ வருவோர் தங்கள் வழக்கில் (அதுவும்
> தமிழ்தான்) உள்ளபடி எழுதக் கூடாது என்று கூறுவது ஒரு கும்பல்நாயகம் தான்
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஹரி கிருஷ்ணன் அவர்களே, உங்களை யாராவது அரி கிருட்டிணன் என விளித்தால் கோபிப்பீர்களா?
அன்புடன்
சிறீதரன்
2009/8/2 Hari Krishnan <hari.har...@gmail.com>:
>
> என்னைப் பலர் அவ்வாறு அழைத்து வருகிறார்கள். அது நாகரிகமற்ற போக்கு என்பதைச்
> சிலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறேன். மின்தமிழில் கூட (கிழக்கு பதிப்பகம்,
> ஜெயக்குமார் போன்ற பெயர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்) இதுபற்றிய என்
> கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.
>
> என்பெயரை எப்படி எழுதுவது என்பது நான் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. அதை
> மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்பது குறித்து எனக்கு அக்கறை இல்லை. அதது
> அவரவர்களை ‘நீட்டி அளப்பதோர் கோல்‘.
>
> ஆனால், என் படைப்புகளோடு என் பெயர் வெளிவருகையில் என் பெயர் இன்ன விதத்தில்தான்
> எழுதப்பட வேண்டும் என்பதில் நான் கறாராக இருக்கிறேன். ஹரிகிருஷ்ணன் என்று
> இடைவெளிவிடாமல் பிரசுரிக்கக்கூட நான் அனுமதிப்பதில்லை. பதிப்பாளரிடம்
> முன்கூட்டியே சொல்லிவிடுவேன்.
>
> இப்படி ஏன் செய்கிறேன் என்பது என் சொந்தக் கருத்து. என் சொந்த விருப்பு.
> சொந்தத் தேர்வு. என் தந்தை என்பெயரை இப்படித்தான் எழுதினார். அப்படியே நானும்
> தொடர விரும்புகிறேன். நான் என் பெயரை எழுதும் விதத்தை மதிக்காத இடங்களில்
> எனக்கு வேலையும் இல்லை. அவ்வளவே.
> --
> அன்புடன்,
> ஹரிகி.
இதை மதிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
என் மேதாவித்தனத்தால் அவதிப்பட்டதுண்டு.
ஆவரங்கால் ஸ்ரீவாஸை நான் ஸ்ரீநிவாசன் என்று நினைத்துக்கொண்டு குட்டு
வாங்கியிருக்கிறேன்.
அதே போல் மலேசிய நண்பர்கள் சில பெயரை உச்சரித்தும்
வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறேன். (சமீபத்தில் லீலாதுளசி சால்வோம் என்று
ஒரு தமிழ் பெண்ணின் பெயர். முதல் பாதி புரிந்தது, அடுத்த பாதி
புரியவில்லை. பின்னால் அவள் விளக்கினாள், செல்வம் என்பதின் மலேசிய
வடிவமென்று. அவளை அப்படித்தானே அழைக்க வேண்டும்? தென்னாப்பிரிக்காவில்
நிறைய Naidoo உண்டு ;-)
நண்பர் சிறீதரன் பெயர்கூட சிக்கல்தான். பெரியாழ்வார் மொழிபெயர்ப்பு
சிரீதரா! என்பதே. பெரியாழ்வார் தமிழ் அறிந்தவர்.
ஐரோப்பாவிலிருக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இடும் பெயர்களைத்
தமிழிலில் எழுதவும் முடியாது, உச்சரிக்கவும் முடியாது.
ஆனால், அது, அது அவரவர் இஷ்டம்.
பிறக்கும் போது எட்டுக்கோணலாகப் பிறந்த ஒரு ஞானியின் கதை மன்றத்தில்
சொல்லப்பட்டிருக்கிறது. அந்த ஞானி தன்னில் எதைப்பார்க்கச் சொல்கிறாரோ
அதைப் பார்ப்பதே சிறப்பு.
நா.கண்ணன்
தமிழ்ப் பெயர்கள் அயலகம் போனவுடன் திரிவு படுகின்றன. ஆனால், அது
குடும்பப்பெயராகும் போது அப்படி அழைப்பதுதானே முறை. `சால்வோம்` என்று
இருந்தால், அது அப்படித்தான்.
நான் முன்பு காட்டினேனே. சுபந்தித் எனும் திரிவுபட்ட தாய்லாந்துப் பெயர்
சுப பண்டிட் என்பது என்று. எனக்குத்தெரியும் என்பதற்காக அவளை சுப பண்டிட்
என்றால் அவளுக்குப் புரியாது. இன்னொரு பெண்ணின் பெயர் ஸ்ரீவதனா என்பது.
அதை சிறீ வ..த்..த..னா என்றால்தான் அவளுக்கு தன்னைக் கூப்பிடுவதாகப்
புரிகிறது. அவ்ளவுதான் அரிகிருட்டிணன் சொல்வது ;-)
க.>
2009/8/2 Kannan Natarajan <thar...@gmail.com>:
> Australia-வை - "ஆஸ்திரேலியா" என்று ஒரு சிலரும், "அவுஸ்திரேலியா" என்று வேறு
> சிலரும் எழுதுகிறார்கள். இதனால், சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை - மற்ற
> மொழிச் சொற்களை ஒலியோடு ஒப்பிட்டு எழுதும்போது - தேவையில்லாதப் புதிராக உள்ளதே
> என்றுள்ளனர்!
>
இதை English, American spelling என்பது போல் பார்த்துப்பழகிக்கொள்ள
வேண்டியதுதான். Pronoun என்று வந்துவிட்டால் இட்ட பெயரை இட்டபடி அழைப்பதே
முறை!
On Aug 1, 11:00 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நண்பர் சிறீதரன் பெயர்கூட சிக்கல்தான். பெரியாழ்வார் மொழிபெயர்ப்பு
> சிரீதரா! என்பதே. பெரியாழ்வார் தமிழ் அறிந்தவர்.
>
சிரீதரன் எழுத்துப்பேர்ப்பு அல்லவா? திருமகள்கேள்வன் என்பது
மொழிபெயர்ப்பு.
லக்ஷ்மி - இலக்குமி, இலட்சுமி, இலச்சுமி, இலக்சுமி என்று பெயரும்.
நா. கணேசன்
இதற்கு இந்தியத் தொடர்பு இருக்கிறது. திபெத்திய வழியில் மங்கோலிய பௌத்தம்
இந்திய எழுத்துமுறையைப் பெற்றிருக்கிறது. அதனைக் கொரியர்கள்
பெற்று மேம்போக்காக சீன பட எழுத்துமாதிரி இருந்தாலும், கொரிய
எழுத்து உள்ளே ஒரு ஆல்பாபெட் தான்.
உதாரணமாக, ஹங்குல் எப்படி எழுத்துக்களாகப் பிரியும் என்பது:
http://en.wikipedia.org/wiki/File:Hangeul.svg
http://en.wikipedia.org/wiki/Hangul
கொரிய எழுத்துக்கள் பல்ல்லாயிரமும்
இந்தக் கீழ்வரும் ஜமோக்களால் பிரிபடுகின்றன:
http://www.unicode.org/charts/PDF/U1100.pdf
யூனிகோட் டெக்னிக்கல் குழுவில் நான் ஓர்
அங்கத்தினன் ஆனதால் இருக்கும் ஹங்குல்
பட எழுத்துக்களை ஜமோக்களாய் பிரிக்கும்
கணிநிரல் உள்ளதா? என்று வினவினேன்.
ஆண்ட்ரு வெஸ்ட் என்பவர் உடனே ப்ரோகிராம்
எழுதிக் கொடுத்தார். இருக்கும் எல்லா ஜமோக்களையும்
அதம் மூல அங்கக் கூறுகள் ஆக்குகிறது.
அதன் சுட்டியைத் தேடித் தருகிறேன்.
நா. கணேசன்
> சிரீதரன் எழுத்துப்பேர்ப்பு அல்லவா? திருமகள்கேள்வன் என்பது
> மொழிபெயர்ப்பு.
>
மன்னிக்க...உண்மைதான்.
திருமகள்கேள்வன் என்றும் இன்னும் பல அரிய தமிழ் பெயர்களிலும் அவனை
ஆழ்வார்கள் அழைப்பதுண்டு.
நம்மைப் போல் அவர்களுக்கு மொழி வெறி இல்லாததால் சில இடங்களில்
எழுத்துப்பெயர்ப்பு செய்து பயன்படுத்துவதுமுண்டு. அச்சமயங்களில் தமிழ்
முறையில் எழுதுவர். இது தாங்கள் அறியாதது அல்ல!
க.>
ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா என்றும், தமிழகத்தவர்கள் ஆஸ்திரேலியா என்றும் அழைக்கிறார்கள்.
Australia என்பதற்குச் சரியான ஒலிப்பு "ஒஸ்ட்றேலியா".
ஸ்ரீதரன் ஈழத்தமிழர்கள் சிறீதரன் (சி**ற**ப்பு என்பதில் வரும் ற ஒலிப்பு) என ஒலிப்பார்கள்.
பெரியாழ்வாரின் படி, தமிழகத் தமிழர்கள் சிரீதரன் (சி**ரி**ப்பு என்பதில் வரும் ர ஒலிப்பு??).
ஆங்கில ஒலிப்பை மட்டுமே எழுதினேன். அதற்காக நாம் நமது தமிழின் பாரம்பரிய இலக்கண விதிமுறைகளை மாற்ற வேண்டும் எனச் சொல்ல வரவில்லை.
ஆங்கிலத்தில் ஒலிப்புகளைத் தருவதற்கு IPA என்ற வழிகாட்டியை வைத்திருக்கிறார்கள். பார்க்க:
http://en.wikipedia.org/wiki/Wikipedia:IPA_for_English
தமிழில் இதே போல் உள்ளதா?