செம்மொழியான தமிழ் மொழியாம்!

516 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jul 5, 2010, 8:27:11 AM7/5/10
to மின்தமிழ்
பாகம் 1

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்ற பாரதியின் கனவு நிறைவேறி இருப்பதை மிகப் பிரம்மாண்டமாக நடந்து
முடிந்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு உலகிற்கு எடுத்துக்
காட்டியுள்ளது. இம்மாநாட்டின் scope என்னவென்று நான் முதலில் அறிந்தேன்
இல்லை. அங்கு போன பிறகுதான் தெரிந்தது, கதிரவனின் கண்ணில் படும்
எல்லாவற்றைப் பற்றியும் தமிழர்கள் அங்கு பேசி விட்டுப் போயிருக்கிறார்கள்
என்று. இது மாதிரி ஒரு உலக அதிசயம் இதுவரை நடந்துள்ளதா என்று
தெரியவில்லை. மொழி, இன உணர்வு என்பது நமக்கு மட்டும் சொந்தமல்ல. உலகில்
பல நாடுகளில் இதைக் கண்ணுற முடியும். ஆனால் எந்த நாடும் இப்படி உலகெலாம்
பரவி இருக்கும் தம்மக்களை அழைத்து மாநாடு நடத்தியதில்லை. அழைப்பு
தமிழர்களுக்கு என்றில்லை. தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இன மக்களுக்கும்
என்பது இதன் சாரம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்! எனும் கணியன்
பூங்கன்றனின் இதமான சொற்களை தமிழக அரசு மெய்பித்துள்ளது. ஒரு தாய், தன்னை
விட்டு பொருளீட்ட அகன்ற பிள்ளையை மீண்டும் அழைத்து கண்ணுற்று மகிழும்
அளவிலா மகிழ்ச்சியை இம்மாநாடு மெய்பித்துக் காட்டியுள்ளது. தமிழ்
உணர்வுடன் பள்ளிக்குச் சென்றவர்கள் நாங்கள். பாரதியும், பாரதிதாசனும்
எங்களை வழி நடத்தினர். அந்த உணர்விற்கு செம்மொழி மாநாடு என்ற பேருரு
உண்டு என்று நான் கண்டு அதிசயக்கிறேன்.

இதுவொரு தொடக்கம் என்று முதல்வர் தனதுரையில் சொன்னார். அப்படித்தான்
இருக்க வேண்டும். ஒரு செம்மொழி உலகில் எங்கெங்கோ, என்னென்னவோ தொழில்
செய்யும், எவரெவரையோ இப்படி ஈர்க்கும் என்று யார் கண்டார்கள்? இதுவொரு
நல்ல தொடக்கம். தமிழ் உணர்வுடையோர் இவ்வேள்வித்தீயை தாங்கள் வாழ்கின்ற
நாடுகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும். தமிழகம்
இவ்வுணர்வை செப்பமுடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இம்மாநாடு உண்மையான தமிழ் உணர்வுடன் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக அரசு
செய்திருக்கிறது என்றாலும், கட்சியின் உரத்த குரல் எங்கும் பதியவில்லை.
கட்சிக் கொடிகள் எங்கும் பறக்கவில்லை. கட்சிக்காரர்கள் இருக்குமிடம்
தெரியாமல் பண்புடன் வளைந்து, வளைந்து போய் வந்தனர். என் வாழ்வில் முதன்
முதன்முறையாக பக்கத்து இடம் காலியானவுடன், பணிவாக ஒருவர் வந்து,
இவ்விருக்கை காலி என்றால் அமைச்சர் வந்து உட்காரலாமா? என்று
கேட்டுவிட்டு, ஒரு அமைச்சர் வந்து உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சிகளைக்
கூர்ந்து கவனித்தை பார்த்ததில்லை. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை
நல்ல நண்பர் போல் எங்கள் எல்லோரிடமும் பழகினார். எந்த பந்தாவுமில்லை.

மாநாட்டுத்துவக்க விழா உரைகள் அனைத்தும் மிகக் கவனத்துடன்
தயாரிக்கப்பட்டு விஷயத்தை மட்டும் பேசின. இதில் முதல்வர் கருணாநிதி,
துணைமுதல்வர் ஸ்டாலின் இவர்களின் உரைகள் விதிவிலக்கல்ல என்பது
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. எல்லாம் கன கச்சிதம். நேரத்தில்
ஆரம்பித்து நேரத்தில் முடிந்தன.

சங்க காலத்தில் வீதிகளில் முத்தும் பவளமும் கொட்டிக் கிடக்குமாம். எதை
எடுப்பது, எதை விடுவது என்று தெரியாதாம். அது போல் ஆகிவிட்டது
இம்மாநாட்டு நடப்பு. எத்தனை அருமையான கட்டுரைகள். எவ்வளவு பெரியவர்கள்!!
அடடா!

இம்மாநாடு பல தொன்மங்களை பொய்பித்துள்ளது. இம்மாநாட்டில் சமயத்திற்கு
இடமில்லை என்றொரு வதந்தி. ஆண்டாளும், ஆழ்வார்களும் போகுமிடமெல்லாம் வலம்
வந்தனர். சைவமும் தமிழும் அங்கிங்கெனாத படி ஆனந்தமாக நடமாடின (தர்மபுரம்,
பேரூர் ஆதீனகர்த்தாக்களை கண்டு பேசியது செம்மொழி வளாகத்தில்தான்).
பிராமணர்களுக்கு இடமுண்டா? என்றொரு உன்குழல் விழிமம் (வீடியோ). எங்கு
பார்த்தாலும் திருமண்களும், திருநீற்றுப்பட்டையும்தான். சரி, தலித்,
அரவாணிகள், ஓரினப்பாலோர், மாற்றுத்திறனாளிகள்? அவர்களும் எங்கு
பார்த்தாலும்! என்ன அதிசயம் இது?

மைக்கேல் கேப்ளன் என்னிடம் சொன்னார் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாட்டு
ராப் இசையுடன் கலக்கல்! என்று. அதுவும் உண்மைதான். சென்னையில் எங்கள்
வீட்டுக்குழந்தைகள் எல்லாம் இதையே பாடிக்கொண்டு இருக்கின்றன.

வரும்...

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan Innamburan

unread,
Jul 5, 2010, 9:58:55 AM7/5/10
to mint...@googlegroups.com
இதை படிக்கும்போது, மஹாகவி பாரதியைப்பற்றிய குறும்படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. கன பொருத்தம். தொடருக.
இன்னம்பூரான்

2010/7/5 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

விஜயராகவன்

unread,
Jul 5, 2010, 10:16:18 AM7/5/10
to மின்தமிழ்
On 5 July, 13:27, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> பாகம் 1
>
> சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
> என்ற பாரதியின் கனவு நிறைவேறி இருப்பதை மிகப் பிரம்மாண்டமாக நடந்து
> முடிந்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு உலகிற்கு எடுத்துக்
> காட்டியுள்ளது.


கண்ணன், கோவை 2010 மாநாட்டில் பாரதியின் கனவு நினைவாகியது
மகிழ்ச்சி.என்னென்ன கலைச் செல்வங்களை எட்டு திக்கிலும் கொண்டு வந்தார்கள்
என பட்டியல் போட முடியுமா? முன் நன்றிகள்

விஜயராகவன்

karthi

unread,
Jul 5, 2010, 8:48:23 PM7/5/10
to mint...@googlegroups.com
உங்கள் குதூகலம் புரிகிறது. எனக்கும் அப்படித்தான். எனது
மகிழ்ச்சியை ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.

ஸ்வேதா ஊர் திரும்பியாச்சா? அப்படியானால் எந்த ஊர்?

ரெ.கா.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 5, 2010, 10:06:18 PM7/5/10
to mint...@googlegroups.com
மாநாட்டுக்கு சென்று திரும்பிய பல நண்பர்கள் (அரசியல் சார்புகள் ஏதும் இல்லாதவர்கள்) விவரித்ததற்கும் -
 
காட்சி ஊடகங்களில் நாங்கள் அனைவரும் பார்க்க நேர்ந்ததற்கும் நேர்மாறாக இருக்கிறது கண்ணன் அவர்களின் பதிவு.

புரியவில்லை.

அன்புடன்

பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/6 karthi <karth...@gmail.com>

N. Kannan

unread,
Jul 5, 2010, 11:38:53 PM7/5/10
to mint...@googlegroups.com
பாகம் 2

பொய்த்துப்போன தொன்மங்கள் என்பதில் முக்கியமாக சேர்க்க வேண்டிய ஒன்று
செம்மொழி மாநாட்டில் ஈழத்தமிழர்களின் பங்கேற்பு. மின்வெளியில் வந்த
கடிதங்கள், தொடுப்புகள் (நம் மின்தமிழ் மடல்களையும் சேர்த்து) போன்றவை
மிகக்கடுமையான ஒரு நிலைப்பாட்டை காண்பித்து நின்றன. இந்திய/தமிழகச் சாடல்
என்பது அதன் முக்கிய அம்சமாக இருந்தது. ஆனால் செம்மொழி மாநாட்டில் நான்
கண்ணுற்றதோ இதற்கு எதிர்மாறான காட்சி. பேரா.சிவத்தம்பி அவர்களுக்கு
மேடையில் முதல்வருக்கு அடுத்த இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. சிவத்தம்பி
அவர்கள் குத்தலாக, நக்கலாக, இடக்கரடக்கலாக ஏதாவது பேசுவார் என்று
எதிர்பார்த்தால் அவர் மிகச் சாவதானமாக மாநாட்டின் சிறப்புகள், தமிழ்
மொழியின் செம்மை பற்றிச் சொல்லிவிட்டு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர்
என்று புகழாரம் சூட்டிவிட்டு அமர்ந்துவிட்டார் (மன்னிக்க அவர் எழுந்து
பேசவே இல்லையே! ;-). நிறைய ஈழத்துப் பேராளர்கள் மாநாட்டில் கலந்து
கொண்டனர். 70களுக்குப் பிறகு தமிழகத்தைக் காணும் ஒரு ஈழத்துப் பள்ளி
ஆசிரியை என்னிடம் தமிழகம் கண்டுள்ள வளர்ச்சியைக் கண்டு பிரம்மித்துப்
போய் இருப்பதாய் சொன்னார். இலங்கை என்பது தவிர வெளி நாடுகளில் வாழும்
இலங்கைத் தமிழர்கள் பாரிய அளவில் மாநாட்டில் கலந்து கொண்டதைக் கண்ணுற
முடிந்தது. என்னால் ஒன்று புரிந்து கொள்ள முடிந்தது, என்னதான்
வீராவேசமாகப் பேசினாலும், ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால் உறவுகள்
பகைமை மறந்து எப்படிக் கலந்து கொள்ளுமோ, அதே மனோபாவத்தில் ஈழத்தமிழர்கள்
அங்கு வந்து சிறப்பித்தமை தமிழரின் அடிப்படை நற்குணத்தைக் காட்டுவதாக
இருந்தது.

வரும்..

N. Kannan

unread,
Jul 5, 2010, 11:42:03 PM7/5/10
to mint...@googlegroups.com
2010/7/6 karthi <karth...@gmail.com>:

> உங்கள் குதூகலம் புரிகிறது. எனக்கும் அப்படித்தான். எனது
> மகிழ்ச்சியை ஏற்கனவே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
> மேலும் படிக்கக் காத்திருக்கிறேன்.
>

மிகச்சரியான பார்வை. எல்லாம் வாசித்தேன்.


> ஸ்வேதா ஊர் திரும்பியாச்சா? அப்படியானால் எந்த ஊர்?
>

ஸ்வேதா இன்று ஜெர்மனி திரும்பி விடுகிறாள். பெர்லின் இந்தியத்
தூதரகத்தில் கோடை மாண உதவிப்பணி கிடைத்திருக்கிறது.

க.>

N. Kannan

unread,
Jul 5, 2010, 11:45:24 PM7/5/10
to mint...@googlegroups.com
2010/7/5 விஜயராகவன் <vij...@gmail.com>:

> கண்ணன், கோவை 2010 மாநாட்டில்  பாரதியின் கனவு நினைவாகியது
> மகிழ்ச்சி.என்னென்ன கலைச் செல்வங்களை எட்டு திக்கிலும் கொண்டு வந்தார்கள்
> என பட்டியல் போட முடியுமா? முன் நன்றிகள்
>


அன்பின் ராகவன்:

4000 மேற்பட்ட வெளிநாட்டுத் தமிழர்களின் ஆர்வமான பங்களிப்பே பாரதி கண்ட
கனவை மெய்ப்பிக்கிறது. அது தவிர தொடர்ந்து வெளி நாட்டில் உள்ள
தமிழர்களின் இந்தியப் பங்களிப்பு இந்திய மேம்பாட்டிற்கு எவ்வளவு
உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. கருத்தரங்கின் வெற்றி பங்கேற்பவரின்
உற்சாகத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா வகையிலும் இதுவொரு வெற்றிகரமான
மாநாடு என்பதில் இரு கருத்து இருக்க வாய்ப்பில்லை.

க.>

N. Kannan

unread,
Jul 5, 2010, 11:46:51 PM7/5/10
to mint...@googlegroups.com
அன்பின் பென்:

ஒரு பேராளாரரின் பார்வை என்ற நோக்கில் என் மடலைக் காண்க. அங்கு வந்து
சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. நாம் பார்ப்பதுதானே கண்ணில்
படும் ;-)

க.>

2010/7/6 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>:

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 6, 2010, 1:20:10 AM7/6/10
to mint...@googlegroups.com

கண்ணன்

மாநாட்டுக்கு வராத எங்களைப்  போன்றவர்கள் கண்களில் ஊடகங்கள் வழியாகப் பட்டவை மற்றும் அங்கு நேரில் சென்று வந்தவர்கள் கண்களில் பட்டவை போன்ற   எவையுமே உங்கள் கண்களில் படவில்லையே என்பதுதான் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

மீண்டும் சொல்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

ஒன்றும் புரியவில்லை.

எல்லோருக்கும் எல்லாம் புரிய வேண்டும் என்கிற அவசியம் எல்லாம் இப்போது கிடையாது.  நீங்கள் தொடருங்கள்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/6 N. Kannan <navan...@gmail.com>
--

Sri Sritharan

unread,
Jul 6, 2010, 2:24:11 AM7/6/10
to mint...@googlegroups.com
On 6/07/2010 1:38 PM, N. Kannan wrote:
> பாகம் 2

>
> ஆனால் செம்மொழி மாநாட்டில் நான்
> கண்ணுற்றதோ இதற்கு எதிர்மாறான காட்சி. பேரா.சிவத்தம்பி அவர்களுக்கு
> மேடையில் முதல்வருக்கு அடுத்த இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. சிவத்தம்பி
> அவர்கள் குத்தலாக, நக்கலாக, இடக்கரடக்கலாக ஏதாவது பேசுவார் என்று
> எதிர்பார்த்தால் அவர் மிகச் சாவதானமாக மாநாட்டின் சிறப்புகள், தமிழ்
> மொழியின் செம்மை பற்றிச் சொல்லிவிட்டு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர்
> என்று புகழாரம் சூட்டிவிட்டு அமர்ந்துவிட்டார்
ஈழம் என்பதே சிங்களச் சொல் என மாநாட்டில் வைத்தே சொன்னவரிடம் வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?

அன்புடன்
சிறீதரன்

Swaminathan Venkat

unread,
Jul 6, 2010, 2:57:06 AM7/6/10
to mint...@googlegroups.com
கண்ணன்,
 
உங்களைக் கண்ணன் என்று அழைத்தலே என்க்கு பாந்தமாகவும் நெருக்கமாகவும் இருக்கிறது. சம்பந்தமும் பொருத்தமுமில்லாத அளவுக்கு மீறி மிகப்படுத்தப்படட் அடைமொழிகளே பெயராக ஆகிவிட்ட ஒரு ஆபாச, மூர்க்கத்தனமான சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
 
உங்களுடைய அறிவு விசாலத்துக்கும், பாண்டித்யத்துக்கும் எல்லோரையும் அரவணைதுதுச் செல்லும் பாங்கு என்னில் மிகுந்த மரியாதை உணர்வை வேண்டுகிறது. தருகிறேன். ஆனால் உங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம் எல்லையற்று விஸ்தரிக்கப்பட்டுப் போகிறது. அது உங்கள் சுபாவம். ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆபாசத்தையும் அழகையும், மூர்க்கத்தனத்தையும் தீர்க்க அறிவையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணம் என்றாவது தராதரம் அறிந்து ஏற்பதும் ஒதுக்குவதும் நிகழவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
 
நான் யார், யாருடைய குணத்தையும் மாற்ற ஆசைப்படுவதற்கு என்ற அடிப்படையான கேள்வி எழும். அதற்கு என்னிடம் பதில் இல்லை.
 
மற்றபடி மின் தமிழ் பெரிய காரியம் ஆற்றிக்கொண்டிருக்கிறது. அதன் பின் நல்ல நோக்கங்கள் இருப்பதைக் காண்கி/றேன். ஆனால் செம்மொழி மாநாட்டுக்கு உந்துதலாக இருந்தது எந்த நல்ல லட்சியங்களும் இல்லை என்று என் கண்களுக்கும் உணர்வுகளுக்கும் படுகிறது.
 
நீங்களே சொலிவிட்டீர்களே. நீங்கள் பார்த்ததும் கேட்டதும் மற்றவர்கள் பார்க்கவில்லை. கேட்கவில்லை. அதுவும் ஒரு நியாயம் தான்.
 
சிவத்தம்பியைப் ப்ற்றிச் சொன்னீர்கள். அவர் எழுந்து நிற்கவே இல்லையே என்று. நீங்கள் பார்க்கத் தவறியது, அவரால் அது இயலாத காரியம். செயலற்றவர் அவர். அதில் நான் குறை காணவில்லை. அவர் சுபாவமே அவர் கனத்த சரீரத்தையும் மீறி, காற்றடிக்கும் பக்கமெல்லாம், அதிகாரமும், சலுகைகளும் இருக்கும் பக்கமெல்லாம் சாய்ந்து மிதந்து சல்னிப்பவர். அவரிடம் எள்ளல், கிண்டல் வகையறாக்களைக் காணோமே என்று திகைத்துப் போகிறீர்கள். அவர் பணிந்து வண்ங்கியே வளர்ந்தவர். சுடு சொல்லோ, கோபமோ, கிண்டலோ, எகத்தாளமோ அவரிடம் என்றும் இருந்ததில்லை. கடைசியில் உங்கள் தாரக மந்திர வாக்கியத்துக்கே திரும்பலாம். ஒவ்வொருத்தரும் கண்டதும், கேட்டதும், அறிந்ததும் வேறாகத் தான் இருக்கிறது.
 
உங்கள் பயணத்தால், ப்ங்கேற்பால், ஒரு கழுதைக்கு பூமாலை சூட்டி வந்திருக்கிறீர்கள்.  நீங்கள் போற்றும் ஆழ்வார்களும், ஆசாரியார்க்ளும், ஏற்பதை ஏற்று, நிராகரிக்க வேண்டியவற்றை நிராகரித்திருக்கிறார்கள். அவர்கள் போற்றிய்தும் உண்டு. தூற்றியதும் உண்டு. பிரபந்தங்களைப் பற்றி நானா உங்களுக்குச் சொல்லவேண்டும்.?

 

N. Kannan

unread,
Jul 6, 2010, 5:02:09 AM7/6/10
to mint...@googlegroups.com
அன்பின் வெ.சா:

நீங்கள் உருத்திரங்கண்ணனார் ;-) அப்படியே பார்த்துப் பழகியவர்.

எல்லோரும் குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவே நமக்கு
மனப்பழக்கமும் ஆகிவிட்டது. நானும் கூட..சில நேரங்களில் அப்படித்தான்!!
ஒரு அறிவுஜீவி என்பவன் குறை மட்டும் காண்பவன் என்று கூட சூத்திரம் வந்துவிட்டது ;-)

நான் என்னை அறிவுஜீவியாகவோ, பத்திரிக்கையாளனாகவோ, திறனாய்வாளனாகவோ கற்பனை
செய்து கொள்ளாமல், ஒரு வெளிநாட்டு பங்கேற்பாளன் எனும் கண்ணோட்டத்தில்
எழுதுகிறேன் (எனக்கே இதுவொரு மனப்பயிற்சியாக உள்ளது!).

வேறொரு மிக முக்கியமான பாடம் எனக்கு இம்முறை கிடைத்தது. நமது மின்வெளி
அவதாரங்கள் நாம் என்னுவதைவிட மூர்க்கமானவை என்று!!.
நம்புங்கள். அது உண்மை! தமிழகம் இன்னும் பண்போடுதான் உள்ளது. நிஜ
மனிதர்கள் நேசிக்கத்தக்கவர்களாக உள்ளனர்.

மாநாட்டில் குறைகள் இல்லாமல் இல்லை. அதையும் சொல்லுவேன் ;-)

க.>

2010/7/6 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

--

N. Kannan

unread,
Jul 6, 2010, 5:04:09 AM7/6/10
to mint...@googlegroups.com
2010/7/6 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

> சிவத்தம்பியைப் ப்ற்றிச் சொன்னீர்கள். அவர் எழுந்து நிற்கவே இல்லையே என்று.
> நீங்கள் பார்க்கத் தவறியது, அவரால் அது இயலாத காரியம். செயலற்றவர் அவர். அதில்
> நான் குறை காணவில்லை.

நானும் குறையாகச் சொல்லவில்லை ஐயா!
மு.கவும், சி.தவும் அமர்ந்திருந்த வண்ணமே பேசினர்.

க.>

N. Kannan

unread,
Jul 6, 2010, 5:08:31 AM7/6/10
to mint...@googlegroups.com
2010/7/6 Sri Sritharan <ksth...@bigpond.com>:

>
> ஈழம் என்பதே சிங்களச் சொல் என மாநாட்டில் வைத்தே சொன்னவரிடம்  வேறென்ன
> எதிர்பார்க்கிறீர்கள்?
>


ஏதாவது அசம்பாவிதம் நடக்குமோ? என்ற பீதியில் இருந்த பலருக்கு யதார்த்தம்
இதமாக இருந்தது ஆறுதல் அளித்தது.
ஈழத்துப் பேராளர்களுடன் இனிமையாகப் பழக முடிந்தது. அதுதான் நமக்கு வேண்டியது.
பொருளாதார முன்னேற்றமே பகைமையைப் போக்கும். நம் எல்லோருக்கும் நல் வாழ்வளிக்கும்.
அதில் ஈழத்தையும் கைகோர்த்து நடக்க வேண்டுமென்று என் பேச்சில் குறிப்பிட்டேன்.

க.>

N. Kannan

unread,
Jul 6, 2010, 5:12:24 AM7/6/10
to mint...@googlegroups.com
பென்:

வெளிநாட்டில் வாழ்பவர்களின் கண்ணோட்டத்தில் இந்தியா மிக வித்தியாசமான நாடு.
கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள்.
குறைகளுக்கும், அசௌகர்யங்களுக்கும், முறைப்பாடுகளுக்கும் பழகிவிட்ட
இந்திய மனது வெறுமையில் சுடுகிறது.
அதில் என் இன்சொற்கள் ஆவியாகிப் போவதை நான் காண்கிறேன். ஆயினும், நான்
கண்டதைத்தானே எழுதமுடியும்?
நான் ஏன் கற்பனை செய்து கொண்டு ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதற்குக் குரல்
கொடுக்க வேண்டும்?
ஒரு மாறுதலுக்காகவாவது வாசியுங்கள் ;-)

க.>

2010/7/6 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>:

N. Kannan

unread,
Jul 6, 2010, 5:43:22 AM7/6/10
to mint...@googlegroups.com
பாகம் 3

தமிழக மக்கள் அடிப்படையில் இனிமையானவர்கள். நகரமயமாக்கல் நம்மை
அந்நியப்படுத்தி வெறுமையைக் கூட்டுகிறது. இம்மாதிரி பெரிய கூட்டங்களில்
நல்ல பயிற்சி இருந்தால் ஒழிய இனிமையாகப் பழக முடியாது. ஆச்சர்யம்!
எல்லோரும் இனிமையாகப் பழகினர்.

எங்களில் பலருக்கு வந்து சேர்ந்தவுடனே பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன.
பிரச்சனை என்றால் உடனே கோபம்தானே வரும்! எங்கள் கோபத்தைக் கண்டு
அதிகாரிகள் மிரண்டுவிடவில்லை. மாறுதலாக பொறுமையுடன் செயல்பட்டனர். இது
விமான நிலையத்திலிருந்து, கக்கூஸ் வரை செயல்பட்டதுதான் ஆச்சர்யத்திற்குக்
காரணம்.

முதன்முறையாக சாப்பிடப் போகும் போது, வரிசையாக எல்லோரும் நின்று கொண்டு
கை கூப்பி முகமன் கூறி வரவேற்றது ஆறுதலாக இருந்தது. வணங்கும் நல்ல
பழக்கத்தை நாம் தாய்லாந்து மக்களிடம் கொடுத்துவிட்டதாக நம்பிக்
கொண்டிருந்தேன்!!

தங்கிய இடத்தில் காலை உணவு, இரவு உணவு அளித்தவர்கள் மிக இனிமையாக ஏதோ
தங்கள் வீட்டிற்கு வந்த உறவு போல் கவனித்துக் கொண்டது நிச்சயம்
கவனிக்கத்தக்கது!

பேட்ஜ் இல்லையென்று கடும் கோபத்துடன் அணுகினால் இளம் மாணவர்கள் நம்மை
வெகுளித்தனத்துடன் பார்த்து என்ன செய்யலாமென்று கண்ணால் சொன்ன போது,
கோபம் போய் இரக்கமே வந்தது. பயணப்படி தரும் இடத்தில் ஒரே கோபாவேசம்!
ஆனால் அதிகாரிகள் கோபப்படவே இல்லை. பொறுமையாக, அதே சமயம் பொறுப்புடன்
செயல்பட்டு எல்லாவற்றையும் பைசல் செய்து வைத்தனர்.

கக்கூஸ் என்பது தீண்டப்படாத இடம். எனவே அங்கு இனிமையை எதிர்பார்க்க
முடியாது. ஆனால் சுகாதார ஊழியர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து
சுத்தம் செய்தனர். நான் வளாகத்தை நோக்கி போய் கொண்டிருந்த போது சுகாதார
ஊழியர் என்னிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்து உங்கள்
அபிப்பிராயத்தை எழுதுங்கள் என்றார். பாராட்டி எழுதியவுடன் அதை அருகில்
இருந்த சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதுவொரு கனவுக்காட்சி. அது
செயற்கையானது என்று என்னுள் இருந்த அறிவுஜீவி சொன்னது. ஆனால் இதுவே தமிழக
யதார்த்தமாக ஆக வேண்டுமென்று மனது விரும்பியது. காரணம், உலகின் எல்லா
நாடுகளிலும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றுதான் ஜீவனம்
நடக்கிறது, இந்தியாவைத் தவிர!! வெளிநாடுகளில் மனிதன், மனிதனாக
மதிக்கப்படுகிறான். இம்மாநாடு இந்த தலித் மக்களுக்கு தன்னம்பிக்கை தரும்
வாய்ப்பாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில், வெளிநாட்டில்
வாழும் மேட்டுக்குடிகள் எக்காலத்தில் இவர்களுடன் சமமாக இனித்துப் பேசி
பழகி இருப்பர்? இம்மாநாடு எல்லோருக்குமே ஒரு கல்வியாக அமைந்திருக்கும்
என்று நம்புகிறேன்.

அடுத்து, பாலியல் சுதந்திரம் வேண்டும் மாற்றுணர்வுடையோர் (திருநங்கைகள்
போன்றோர்). இவர்களெல்லாம் சகஜமாக வளாகத்தில் உலா வந்தனர். அவர்களுக்கான
மேடைகளில் தங்கள் குறைகளைப் பேசி அலசினர். மாற்றுத்திறனாளர்கள் தங்கள்
மீது கவனம் வேண்டுமென்று முறையிட்டனர். தொலைக்காட்சி, ஊடகங்கள் இவர்களைப்
பேட்டி கண்டனர். இது, மாறி வரும் தமிழகத்தை இனம் காட்டுவதாகவே நான்
உணர்ந்தேன்.

இம்மாநாட்டின் இன்னொரு சிறப்பு என்னவெனில், தமிழ் உணர்வுடன், உண்மையான
காதலால் தமிழ் கற்ற அனைத்து வெளிநாட்டாரும் கௌரவிக்கப்பட்டது. இப்படியொரு
மாநாடு நடக்கும் என்று ஜியார்ஜ் ஹார்ட் எதிர்பார்த்து தமிழ் கற்கவில்லை.
அஸ்கோ பர்போலாவும், தமது ஆய்வு இவ்வளவு பெரிய சிறப்பை தமக்கு அளிக்கும்
என்று எதிர்பார்த்து சிந்து சமவெளி ஆய்வில் ஈடுபடவில்லை. ஆனால், தமிழ்
மண் எப்போதும் வந்தாரை வரவேற்று, வாழ்த்திய மண். அது இம்மாநாட்டிலும்
காணக்கூடியதாக இருந்தது. எனது நண்பர் பேரா.உல்ரிக நிக்கொலஸ் நான் பிறந்த
ஊர் ஜெர்மனி, புகுந்த ஊர் தமிழகம். நான் உங்கள் வீட்டு மருமகள் என்று
சொன்னபோது கரகோஷம். அவரை நன்கு அறிந்த எனக்குத்தெரியும், அவர் இதை
கைதட்டலுக்காகச் சொல்லவில்லை என்று.

வரும்...

karthi

unread,
Jul 6, 2010, 7:01:42 AM7/6/10
to mint...@googlegroups.com
> கக்கூஸ் என்பது தீண்டப்படாத இடம். எனவே அங்கு இனிமையை எதிர்பார்க்க
> முடியாது. ஆனால் சுகாதார ஊழியர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து
> சுத்தம் செய்தனர். நான் வளாகத்தை நோக்கி போய் கொண்டிருந்த போது சுகாதார
> ஊழியர் என்னிடம் ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்து உங்கள்
> அபிப்பிராயத்தை எழுதுங்கள் என்றார். பாராட்டி எழுதியவுடன் அதை அருகில்
> இருந்த சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக தமிழகத்தில் இந்தக் கழிவறை ஊழியர்களுக்கு சுத்தம் என்பது
"ஏறக்குறைய" என்ற அள்வில்தான் இருக்கிறது. மலேசியாவிலோ மேலை
நாடுகளிலோ சுத்தம் என நாம் நினைப்பது நீரில்லாத, காய்ந்த, மணமில்லாத
கழிவுப் பீங்கான்கள். ஆனால் தமிழ் நாட்டில் நீரில் தோய்ந்து கொஞ்சம்
வாடையோடுதான் கழிவறை இருக்கிறது. அதுதான் அவர்கள் உயர்ந்தபட்ச
சுத்தம்.

சென்னையில் இசை சீசனில் கழிவறைகளில் பினாயிலை தோய்த்து ஊற்றுகிறார்கள்.
கழிவுநீர் நாற்றத்தை பினாயில் நாற்றம் முழுகடிக்க வேண்டும் என்பது அவர்கள்
குறிக்கோள். நமக்கோ மூக்குக்குள் ஏறிக் குமட்டுகிறது.

நல்லவேளையாக மாநாட்டில் பினாயில் இல்லை. பிழைத்தோம்.

உடற்குறை உள்ளவர்கள் கழிவறைக்குச் செல்ல பலவசதிகள் செய்திருந்தார்கள்.
உதவவும் ஊழியர்கள் தயாராக இருந்தார்கள்.

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 6, 2010, 7:16:04 AM7/6/10
to mint...@googlegroups.com


2010/7/6 N. Kannan navan...@gmail.com

 
 
 
 
நாம் பார்ப்பதுதானே கண்ணில்
படும் ;-)
 
அருமை! 
-சுபா
 

க.>

2010/7/6 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>:
> மாநாட்டுக்கு சென்று திரும்பிய பல நண்பர்கள் (அரசியல் சார்புகள் ஏதும்
> இல்லாதவர்கள்) விவரித்ததற்கும் -
>
> காட்சி ஊடகங்களில் நாங்கள் அனைவரும் பார்க்க நேர்ந்ததற்கும் நேர்மாறாக
> இருக்கிறது கண்ணன் அவர்களின் பதிவு.
>
> புரியவில்லை.
>
> அன்புடன்
>
> பென்னேஸ்வரன்

--

Nakinam sivam

unread,
Jul 6, 2010, 7:29:50 AM7/6/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

எல்லோரும் குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவே நமக்கு
மனப்பழக்கமும் ஆகிவிட்டது.


மிக சரியான உண்மை 

இன்றைக்கு மனிதர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 
ஆனால் மன வளர்ச்சி மட்டும் ஏற்படவில்லை.
அனைவரையும் சமமாக பாவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலை 
உள்ளவர்களால் எப்படி நிறைகளை காண முடியும்.
நாம் கற்பதே நமது பண்பினை வளர்பதற்காகதான் என்ற நிலை மாறி 
பொருளாதார வளர்ச்சிக்காகதான் என்னும் நிலை 
நம்மை பதப் படுத்துவதற்கு பதிலாக 
நம் சிந்தனையை மாற்றி பிரிவினையை வளர்க்கவே உதவுகிறது.
சக மனிதரை அன்பு செய்வதனால் என்ன குறைந்து விட போகிறோம்.
ஆனால் 
இந்த சமூகத்தில்  நிறைய நபர்கள் தங்களை அறிவு ஜீவிகளாக காட்டிக் கொள்ளதான்
முயற்சிக்கிறார்களே தவிர தங்களை பண்புள்ள அனைவரிடமும் அன்பு செய்பவர்களாக, அனைவரையும் சமமாக பாவிப்பவர்களாக மாற தயாரில்லை.
ஏற்ற தாழ்வு மறைய வேண்டும் என்று பாடுபடும் உயர்ந்தவர்கள் மத்தியில் ஏற்ற தாழ்வு இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்க தானே செய்கிறார்கள்.

உங்களை போன்ற பண்பட்ட அறிவு ஜீவிகள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று நினைப்பது மகிழ்ச்சியை தருகிறது.

ஒருவனை தவறானவனாக பார்ப்பதற்கு அடிப்படையே 
நான் சரியானவன், எனது செயல்கள் சரியானவை
அது போல அவன் இல்லை ஆகவே அவன் தவறானவன்
என்று ஒரு நிலையினை வைத்திருக்கிறோம்.
நம்முடைய பார்வையில் நாம் சரியானவர்களாக 
இருப்பினும் மற்றவர்கள் பார்வையில் அது சரியானதாக 
இருக்கும் என்று சொல்ல முடியாது.

அதுபோல தான் உங்களை போன்ற வெளி நாட்டிலிருந்து வந்த 
அறிஞர்கள் நடு நிலை சிந்தனையோடு வந்ததனால் 
உங்கள் கண்களுக்கு குறையை விட நிறையே அதிகமாக தெரிந்தது.

ஆனால் இங்கே உள்ளவர்களுக்கு இது அரசியல் சார்ந்தவர்களால் 
நடத்தப்பட்டதனால் (அரசியல்வாதிகளை பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லாத காரணத்தால்) தவறான ஆட்களால் நடத்தப்படும் ஒரு விழா என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப் பட்டது.
ஆகவே இந்த விழாவில் குறைகளே அதிகம் அவர்கள் பார்வையில் பட்டது. யார் நடத்தினாலும் அது தமிழுக்கான விழா என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் நிறைகளையும் காணலாம்.

உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்வெய்தினேன்.

அன்புடன்
சிவம்

2010/7/6 karthi <karth...@gmail.com>



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

N. Kannan

unread,
Jul 6, 2010, 7:37:07 AM7/6/10
to mint...@googlegroups.com
2010/7/6 karthi <karth...@gmail.com>:

>மலேசியாவிலோ மேலை
> நாடுகளிலோ சுத்தம் என நாம் நினைப்பது நீரில்லாத, காய்ந்த, மணமில்லாத
> கழிவுப் பீங்கான்கள். ஆனால் தமிழ் நாட்டில் நீரில் தோய்ந்து கொஞ்சம்
> வாடையோடுதான் கழிவறை இருக்கிறது. அதுதான் அவர்கள் உயர்ந்தபட்ச
> சுத்தம்.
>

நான் எழுதினேன் அவர்கள் கொடுத்த பயனாளர் குறிப்பேட்டில், ‘வெளிநாட்டினர்
பலர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், நீரில்லாத, காய்ந்த, மணமில்லாத
கழிவறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டுமென்று’. நான் என்ன சொல்ல வருகிறேன்
என்பது புரியாததால் அவர்கள் வெளிநாட்டினர் பயன்படுத்தும் கமோடுகள்
உள்ளனவே என்றனர். இதற்குக் காரணம் நம்மவர் பலருக்கு வெளிநாட்டு கழிப்பிட
வசதிகள் பற்றித் தெரியாது. தண்ணீர் கொண்டு கால் கழுவும் பழக்கம் நமக்கு
மட்டுமென்றில்லை, ஆசியா முழுக்க இருக்கிறது, ஐரோப்பாவில் பின்லாந்தில்
இருக்கிறது. ஆனால் அங்கெல்லாம், நம்மைப் போல் நீரை வீணாக்குவதில்லை.
ஜப்பான் கொரியாவில் மிக நளினமான நீரூற்று கழிப்பிட தொட்டிகள் (கமோடு)
வந்துவிட்டன. நீர் என்பது எவ்வளவு அத்யாவசியமான பொருள் என்று
இந்தியர்களுக்குச் சொல்லியா தெரிய வேண்டும்? ஆனால் அங்குதான் நீர்
வீணாகிறது. பல இடங்களுக்குப் போய் வரும் போது பார்த்து, அது போன்ற
முன்னேற்றம் வந்து சேரலாம். எல்லோர் வீடுகளிலும் கழிப்பறை நச, நசாதான்.

எனக்கு மைக்கேல் கேப்ளினைப் பார்க்கும் போதெல்லாம் கவலை! இந்தக்
கழிப்பறையில் இந்த ஊனமுற்ற மனிதர் என்ன செய்வாரென்று. நமக்கே இவர்கள்
போட்ட தாமச, ரஜோ உணவுகள் வயிற்றைக் கலக்கும் போது, வெளிநாட்டினர் பாடு??

க.>

N. Kannan

unread,
Jul 6, 2010, 8:52:52 AM7/6/10
to mint...@googlegroups.com
பாகம் 4

கருத்தரங்க வளாகத்திற்குள் நுழைந்தவுடன் முதலில் பட்டது மலேசிய
எழுத்தாளர்கள்தான். ஏனென்றால் முதுகில் எழுதி ஒட்டியிருந்தது ;-) உடனே,
நான் என்ன கேட்டிருப்பேன் என யூகித்துக் கொள்ளலாம். ‘ஐயா! ரெ.கா எங்கே
இருக்கார்?’ வழமையான மலேசியப் பண்புடன் அவர் வந்து ரெ.காவைத்தேடிக் கண்டு
பிடித்து கையில் கொடுத்துவிட்டுப் போனார்.

ஜே, ஜே என்று கூட்டம். நிறையப் பேராளர்கள். ஒருவருடன் பேசிக்கொண்டு
இருக்கும் போதே இன்னொருவர் கண்ணில் படுவார். அவருடன் கை குலுக்கும் போது,
இன்னொருவர் தோளில் தட்டுவார். இப்படி திக்கு முக்காடிப்போகும் நண்பர்கள்
வலைப் பின்னல். மேலும் நாங்கள் நின்றிருந்தது தமிழ் இணைய மாநாட்டு
வளாகம். நிறைய நண்பர்கள் வந்து போகும் இடம்.

தமிழ் இணைய ஜாம்பவான்களான பாலப்பிள்ளை, முத்து, கல்யாண் இவர்களை நான்
தங்கிய இடத்திலேயே சந்தித்து விட்டதால் ஒரு திருப்தி. முதலில்
மு.இளங்கோவன் வந்து அறிமுகம் செய்து கொண்டார். அவரது, ‘கிளுக்’ சிரிப்பு
உடனே பிடித்துவிட்டது. அவரது சமீபத்திய நூல்களைத் தந்தார். கொஞ்ச
நேரத்தில், கவியரசன் வந்து கட்டிக் கொண்டார். அன்பின் அலை வேகமாக
வீசத்தொடங்கியதை உணர்ந்தேன். அதுதான் தொடக்கமென்று பின்னால்தான்
புரிந்தது. எனக்கு செம்மொழி மாநாட்டுக் குழுவினரிடமிருந்து அழைப்பு
வந்திருந்ததால், தமிழ் இணையப் பொறுப்புகள் பலவற்றை சுபாவிடம்
விட்டிருந்தேன். ஆனால், சுபா தமிழ் இணைய மாநாட்டுக் குழுவினரிடம் கண்ணன்
வருவார் கவனித்துக் கொள்ளுங்கள் என்று பின்னால் சொல்லிவிட்டார்
போலுள்ளது. பத்ரி, வெங்கட், மணியம், கவியரசன் என்று எல்லோரும்
வாஞ்சையுடன் இதைச் செய்யுங்கள் அதைச் செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

இணையம் இணைத்த நண்பர்களான இராம.கி, சிங்கைப் பழனி, சிங்கை கிருஷ்ணன்,
அருண் மகிழ்நன் இவர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்வளித்தது. சிரித்துக்
கொண்டே வந்தார் ஒருவர். அவர்தான், காசி ஆறுமுகம் என்று முகம் காட்டிக்
கொடுத்தது. நிழல்வெளி நிஜவெளியானது. ‘அண்ணா’ என்று அன்புடன் எழுதும்
காசியைக் கண்டதும் ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ எனும் உற்சாகம்!
ஒல்லியாக, நெடுமால் போல் வந்தொருவர், ‘நான் யார் தெரிகிறதா?’ என்றார்.
‘ஆமாச்சு’ என்று சரியாகச் சொல்லிவிட்டேன் (அவருக்கு உள்ளுக்குள் சந்தேகம்
இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து அதே கேள்வியைக் கேட்டார் :-)).
முகமெல்லாம் புன்னகையுடன் தகடூர் கோபி! அடடா! எத்தனை புண்ணிய ஆத்மாக்கள்.
எல்லாம் இலத்திரன் துகள்களாக இருந்து உயிர்பெற்று வந்து நின்றன!
‘நான்தான், அன்பு மணி!’ என்றார் என் முன்னாள் ‘பாசுரமடல் வாசகர்’. என்ன
வாஞ்சை! என்ன வாஞ்சை!! எழுத்திற்கு இத்தனை திறன் உண்டா? இத்தனை ஈர்ப்பை
உள் வைத்தா அது இப்படி வெளி வருகிறது!!?

இவர்களையெல்லாம் கண்ணுற்றவுடன் மீண்டும் பழைய தமிழ் இணைய ஆசாமியாக
மாறிப்போனேன் ;-) அதுதான் எனக்கும் பாந்தமாக உள்ளது என்று நினைக்கிறேன்.

என்ன! எனது இலக்கிய வட்டத்தை கண்டு கொள்ள முடியாமல் போனது குறையாக
உள்ளது. கவிஞர் மதுமிதா எழுதிய கடிதத்தை நேற்றுதான் வாசிக்க முடிந்தது.
தொலைபேசி எண் கொடுத்து கூப்பிடச் சொல்லியிருக்கிறார். முடியவில்லை.
சிவகாசியைச் சேர்ந்த கவிஞர் திலகபாமா இன்று வந்து, ஒரு வார்த்தை முன்னமே
சொல்லியிருந்தால் தொலைபேசி எண் கொடுத்திருப்பேனே? இவ்வளவு
அருகிலிருந்தும் பார்க்காமல் போனது வருத்தமே என்றார். கவிஞர் கனிமொழி,
ஒரு காலத்தில் எளிமையாக அணுகக்கூடிய நண்பர். அவருக்கு இப்போதுள்ள
காபந்தைப் பார்த்துவிட்டு நானே விலகிவிட்டேன். பிரசன்னா ராமசாமியை ஒரு
சில நிமிடங்கள்! தமிழச்சி அறிமுகம். வைரமுத்து தூரத்தில் பார்த்தது
மட்டுமே!

ஒரு நாவலாசிரியர் என்னிடம் வந்து, பாரதியின் முறுக்குடன், ‘யார் என்று
தெரிகிறதா?’ என்றார். படம் பார்த்து கதை சொல் என்பது இதற்குள்
பழகிவிட்டதே! உடனே, ‘திவாகர்!’ என்றேன். ஒரு பொற்கிழி வழங்கினார் :-))

இத்தனை நண்பர்களை வைத்துக் கொண்டு அரங்கத்திற்குள் எப்படிப் போய் பிறர்
பேச்சைக் கேட்க முடியும்? எனவே வளாக இணைப்புத் தடமே (லாபி) இருப்பு
என்றாகிப் போனது. அவ்வப்போது பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் வந்து
மிரட்டுவார். ‘என்ன எல்லோரும் இங்கேயே உட்கார்ந்திருந்தால் சபை
வெறிச்சோடிப் போகாமல் எப்படி இருக்கும்?’ என்று. அன்று காலையில்தான்
தினமலர் தமிழ் இணைய மாநாடு பற்றி கிண்டல் அடித்திருந்தது. ஆனால்
அவர்களுக்குத் தெரியாது தமிழ் இணைய வளர்ச்சியே இம்மாதியான நட்புப்
பின்னலில்தான் மலர்ந்திருக்கிறது என்று.

அங்கிருந்து கிளம்ப முடியாமல் போனதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதுதான்
ஊடகத்தின் கவனம். தினமலர், தினமணி, பாஷா இந்தியா, சென்னை எஃப்.எம்,
சிங்கைத் தொலைக்காட்சி என்று துளைத்து எடுத்துவிட்டார்கள். அவர்களுக்கு
இப்படி எல்லோரையும் ஒரு சேரப்பார்ப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு!
விடுவார்களா?

இம்மாதிரிக் கருத்தரங்குகளில் பாரதி கண்ட கனவான ‘கலைச் செல்வங்கள்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ எனும் தரவிறக்கம் இப்படித்தான் நடைபெறும்
என்று பலருக்குத் தெரியாது.

முனைவர் அனந்த கிருஷ்ணன் தமது சிறப்புரையில் சொன்னது போல், உலகத் தகவல்
தொழில் நுட்ப வளர்ச்சியே இம்மாதிரியான நடுத்தர வர்க்கத்து நண்பர்கள்
அலவுளாவும் போதுதான் நடந்திருக்கிறது என்று. ஒன்றுக்கொன்று கிரியா ஊக்கி.
ஒன்றிலிருந்து ஒன்றுக்கு ஆதர்சம்! தமிழ் இணைய வளர்ச்சி இதற்கு
மாறுபட்டதில்லையே!

கலிபோர்னியாவில் பார்த்த மணி மணிவண்ணன் தாம் கற்ற கலைச் செல்வங்களுடன்
சென்னையில் செட்டிலாகி கோவைக்கு வந்திருந்தார். சென்னைக் கவிகள் என்று 90
களின் இறுதியில் தமிழ் மின்பொருள் புரட்சி செய்ய வேண்டுமென்று களத்தில்
இறங்கிய மனோஜ் அண்ணாதுரை ஹாலிவுட் நடிகர் போல் முழு வழுக்கையுடன்
(தலைச்சவரம்) நின்று சிரித்துக் கொண்டிருந்தார். முரசு முத்து கலிபோர்னிய
கைச்சரக்குடன் எல்லோருக்கும் பொம்மலாட்டாம் காட்டிக் கொண்டிருந்தார்.

இத்தனை இணையக் கும்பலுக்கு நடுவில் அவ்வப்போது மலேசிய ”ஹஜ் குழுவினர்”
இங்கும் அங்கும் வந்து போனதுதான் அதிசயம். அப்படிச் சொல்லக் கூடாது,
தமிழ் இணையம் மலேசிய/சிங்கைக் கொடை அன்றோ!

வரும்...

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 9:01:33 AM7/6/10
to mint...@googlegroups.com
அன்புள்ள திரு கண்ணன் அவர்களே  உங்களுடன் கூடவே நின்று அனைவரையும் கண்டு களித்தாற் போல் ஒரு மகிழ்ச்சி  உங்கள் எழுத்துக்களை படித்தவுடன் வருகிறது
 
இயல்பான வர்ணனை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
6-7-10 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

meena muthu

unread,
Jul 6, 2010, 9:20:30 AM7/6/10
to mint...@googlegroups.com
கண்ணன், எத்தனை எத்தனை அந்நாளைய நண்பர்களை சந்தித்திருக்கிறீர்கள்! நீங்கள் எழுத எழுத என்னவோ நானே கலந்துகொண்டது போல உங்களின் குதூகலம் என்னையும் தொற்றிக்கொண்டது!

எவ்வளவு பேர் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து உங்களை பார்க்க,
பேச இயலாமல் வருத்தப்பட்டார்களோ!

இன்னும் தெரிந்துகொள்ள ஆவல் தொடருங்கள்.

2010/7/6 N. Kannan <navan...@gmail.com>
பாகம் 4



இங்கும் அங்கும் வந்து போனதுதான் அதிசயம். அப்படிச் சொல்லக் கூடாது,
தமிழ் இணையம் மலேசிய/சிங்கைக் கொடை அன்றோ!

வரும்...

Thiruvengada Mani T.K

unread,
Jul 6, 2010, 10:08:28 AM7/6/10
to mint...@googlegroups.com
" என்ன வாஞ்சை! என்ன வாஞ்சை!! எழுத்திற்கு இத்தனை திறன் உண்டா? இத்தனை ஈர்ப்பை உள் வைத்தா அது இப்படி வெளி வருகிறது!!?"....
கண்ணன் சார்! அது உண்மைதான் நான் ஏற்கனவே மின்தமிழில் எழுதி இருக்கிறேன். உங்கள் எழுத்துக்க ஓர் ஈர்ப்பு இருக்கிறது.. அதுதான் என்னை எல்லாம் இங்கே ஈர்த்திருக்கிறது. என் பிறந்த நாள் வாழ்த்து இழையில் என்னை வாழ்த்திய ஒவ்வொருவரைப் பற்றியும் என் எண்ணங்களை எழுதியிருக்கிறேன். கொஞ்சம் பாருங்கள்.
எத்தனையோ குழுக்கள் காணாமலே போய்விட்ட இம்மின்வெளியில் நம் குழுமட்டும் இலக்கை நோக்கிப் பீடுநடை போடுவதற்கு உண்மையில் உங்கள் நடுவு நிலைமாறாத அரவணைப்பும், அதேசமயம் இலக்குக்குப் புறம்மான மடல்களை உறுதியாக மறுதலிப்பதும், சுபா அவர்களின் தேனி போன்ற சுறுசுறுப்பும், திட்டமிட்ட செயல்பாடுகளும்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
எங்கள் உழைப்போ உதவியோ வெல்லாம் உங்களிருவரின் திறமைகளைப் போற்றிப் புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான் என்பதை நானறிவேன்.
நண்பர்கள் சொல்வது போல உங்கள் கட்டுரைகள் நாங்களே நேரில் சென்று மாநாட்டில் கலந்து கொண்ட உணர்வைத் தருகின்றன. தொடருங்கள்.... நன்றிமிக
மணி
 

2010/7/6 meena muthu <ranga...@gmail.com>



--
Dr.T.K.Thiruvengada Mani

Innamburan Innamburan

unread,
Jul 6, 2010, 7:47:07 PM7/6/10
to mint...@googlegroups.com
'...ஒல்லியாக, நெடுமால் போல் வந்தொருவர், ‘நான் யார் தெரிகிறதா?’ என்றார்.

‘ஆமாச்சு’ என்று சரியாகச் சொல்லிவிட்டேன் (அவருக்கு உள்ளுக்குள் சந்தேகம்
இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து அதே கேள்வியைக் கேட்டார் :-))...'


ஆமாம்! ஆமாம்! 'இல்லை' என்பது அவருடைய அகராதியில் கிடையாது.
ஆளைப்பிடிப்பது தான் கஷ்டம். குட்டி ஆமாச்சுவும் வந்தாச்சு. இன்னும்,
இந்த நெடுமால் அந்தர்த்தியானம்? எப்போ வரப்போராய், அப்பனே.


இன்னம்பூரான்

2010/7/6 Thiruvengada Mani T.K <tkt...@gmail.com>

N. Kannan

unread,
Jul 8, 2010, 9:30:24 AM7/8/10
to mint...@googlegroups.com
பாகம் 5
 
தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சியுடைய மாநிலம் என்று உலகெல்லாம் பேர் இருந்தாலும், அமைப்பாளர்கள் தேர்ந்தெடுத்திருந்த வலைப்பக்க நிபுணர்கள் சில விஷயங்களில் கோட்டை விட்டிருந்தனர். பலமுறை முயன்றும் என் போட்டோவை வலையேற்றம் செய்ய முடியவில்லை. ஒருவழியாக தனிஅஞ்சலில் அனுப்பி ஏற்றியபின், துணைப்பயணியின் விவரம் கொடுத்த போது அந்த மின்படிவம் அழிச்சாட்டியம் பண்ணியது. எங்கிருந்து கோவை வருகிறாய் என்ற கேள்விக்கு ‘சென்னை! சென்னை’ என்று கூவிக் கத்தினாலும் அது செவிடம் காதில் ஊதிய சங்குபோல் ஆனது. பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் திரும்பத்திரும்ப ஒரு நம்பரைக் கொடுத்து செல்பேசுங்கள் என்றார்கள். சரி, இனி ஒன்றும் நடவாது என்று அங்கு போனால், சென்னையில் அட்டை காட்டி வரவேற்று, பொன்னாடை போர்த்தி நட்ட நடு இரவிலும் வீடு சேர்த்த பெருந்தகைகள், கோயம்புத்தூர் போன போது கண்டு கொள்ளவில்லை. அந்தக் கணினியில் என் பேர் காட்டாததால் கையில் பொன்னாடை வைத்துக் கொண்டு போர்த்தமுடியாமல் அதிகாரிகள் தவித்ததைப் பார்த்துப் பரிதாபமாக் இருந்தது. சுபாவிற்கு பொன்னாடை கிடைத்தது ஆனால் தங்குமிட வசதியில் கோட்டை விட்டு விட்டனர். காலையில் எழுந்தால் சிலருக்கு பேட்ஜ் இருந்தது, எங்களில் பலருக்கு இல்லை. முதல் காரியமாக அங்கு போய் வாங்கி விடுங்கள் என்று சொல்ல. அங்கு போகுமுன்னர் வாயிற்காப்போன் (அதான் செக்கூரிட்டி) அடையாள அட்டை (identity badge) எங்கே? என்று கேட்டது முரண்நகை. சரி, போன இடத்திலாவது நம் பேர் விவரங்கள் இருக்குமா? என்றால் அவர்கள் ‘அடியைப் புடிடா! பாரதபட்டா!’ என்று மீண்டும் ஆரம்பத்திலிருந்து உங்கள் இரத்தவகை என்ன? என்று ஆரம்பித்தனர்.
 
இதையெல்லாம் அறியாத பாலபிள்ளை, அக்கல்லூரி மாணவிகளிடம், ‘Do you I exist?' என்றொரு தத்துவார்த்தமான கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருந்தார். சரி, மதுரைக்காரன் குணத்தைக் காட்டினால்தான் காரியமாகும் என்றறிந்து நான் சவுண்டைக் கொடுத்தேன். இங்கே யார் இன்-சார்ஜ்? என்று அதட்டிக் கேட்டவுடன். ஒரு அழகிய பெண் வந்தாள். நீங்கதான் இன்-சார்ஜ்ஜா? ”அப்படி இல்லை! உங்களுக்கு என்ன வேண்டும்? உதவுகிறேன்?’ என்று சொல்ல. இப்படி அப்படியென்று இந்த அமர்க்களத்தில் செம்மொழி மாநாடு என்னைக் கண்டு கொள்ளாமல் அது பாட்டிற்கு ஆரம்பித்துவிட்டது :-) சுபா, ரெ.கா போன்ற அதிர்ஷ்டசாலிகள் பந்தலில் போய் உட்கார்ந்துவிட்டனர். நாங்கள் குளு, குளு அறையில் டி.வியில் பார்த்துக் கொண்டு இருந்தோம் (அதுவே சுகம் என்று பின்னால்தான் தெரிந்தது).
 
அஸ்கோ பர்ப்போலா பேசும் போது பேட்ஜ் வந்தது. பாலா, ”வாங்க, வாங்க பந்தலுக்குப் போகலாம்!” என்றார். அறைகுறை மனத்துடன்தான் போனேன். நான் நினைத்தது போலவே வெளியே போனவுடன் நாங்கள் ‘கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போனோம்!’. ஆம்! அங்குள்ள கெடுபிடியில், யாரும், யாரையும் நம்பத்தயாராக இல்லை. இந்த பேட்ஜ்ஜுக்கு இந்த கேட்டு இல்லை, அங்கே போ என்று சொல்ல, அங்கு போனால், இங்கில்லை அங்கு போ என்று சொல்ல....அதற்குள் முதல்வர் பேசத்தொடங்கிவிட்டார். ‘சே! நிலமை இப்படி ஆகிப் போனதே என்ற வருத்தத்தில் எங்கு நின்றாவது பேச்சைக் கேட்போம் என்று வழியில் நின்று கொண்டு நான்  பேச்சில் ஆழ்ந்து போன போது, ஒரு காவல் அதிகாரி மிக மென்மையாக என்னிடம் வந்து, ‘சார்! நீங்க உள்ள போங்க சார்! என்று வழி காட்டி, அங்கே பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஊழியரை எழும்பச்சொல்லி எனக்கு இடம் கொடுத்து பேச்சைக் கேட்க விட்டது ஏதோ கனவு போல் உள்ளது. ஸ்வேதாவும் , பாலாவும் வேறு கட்டத்தில் (அதாவது இருக்கைக்கள் கட்டம், கட்டமாக அமைக்கப்பட்டிருந்தன) காணாமல் போய்விட நான் மட்டும் வேறு கட்டத்தில். கூர்ந்து பார்த்த போதுதான் தெரிந்தது நானும் ’ஹஜ் யாத்திரிகர்களுடன்’ (அதுதான் மலேசியக் குழுவுடன்) உட்கார்ந்து இருந்தது. எனக்கும் மலேசியாவிற்கும் அப்படியொரு பந்தம். விடாத பந்தம் :-)
 
Tamil-Haj.jpg
மலேசியக்குழு
 
ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்த பிறகுதான் தெரிந்தது ஜெயகாந்தன் எங்கள் கட்டத்தில் இருந்தார், இது போல் இன்னும் பல பெரிசுகள். வெளிவரும் வரிசையில் வைரமுத்து, பேரா.அனந்தகிருஷ்ணன், பழைய அமைச்சர் வீரப்பன், கவிஞர் இக்பால் இப்படிப் பலர். சரி, இவர்களுக்கே இந்தக் கதி என்றால், என் நிலை கண்டு கழிவிரக்கம் கொள்ளுதல் நியாயமில்லையென்று மனதைத்திடப்படுத்திக் கொண்டு வெளி வந்தால்...வந்தால்தானே! வரமுடியவில்லை! அதற்குள் மிக, மிகப்பிரபலங்கள் புறப்பட்டுவிட, வழி மறிக்கப்பட்டது. ஒரே இழுபறி. சாப்பாட்டு நேரம். வயிற்றைக் கிள்ளியது. சாப்பாடு எங்கள் கருத்தரங்க வளாகத்தில். அரைகிலோமீட்டர் வெய்யிலில் நடக்க வேண்டும். வழித்தடை, கும்பல், வேர்வை...அட ராமா! இந்த பாலாவால் என்ன பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டேன். குளு, குளு அறையில் சுகமாக இருந்து பேச்சைக் கவனமாகக் கேட்டிருக்கலாமே? என்ற ஞானோதயம் வந்தது. உண்மையைச் சொல்லப் போனால் வீட்டில் விசிறி, ஏசி சுகத்தில் இதைக் கண்ணுற்றவர் பாக்கியசாலி! நம்புங்கள். கொடிசியா வளாகம் குளிரூட்டப்பட்டிருந்தது. ஆனால் வெளிப்பந்தல் அல்ல.
 
நமது குடியரசுத்தலைவரை அப்போதுதான் முதன்முறை பார்த்தேன். பாவம் போல் இருந்தார்கள். பர்னால் ஒட்டி வைத்த புன்னகையுடன் கடைசிவரை இருந்தார். அவர் ஒருவர்தான் ஜனாதிபதிக்கு கம்பெனி. இரண்டு பக்கமும், சூழவும் தமிழும், ஆங்கிலமும். இந்தி இளைத்துப் போய் உட்கார்ந்திருந்தது குறியீடு போல் இருந்தது! எல்லோரும் தமிழில் பேசினர். அமெரிக்கத்தமிழ், ஜெர்மானியத்தமிழ், ஆங்கிலத்தமிழ், ரஷ்யத்தமிழ், பின்லாந்துத்தமிழ் இப்படிப் பல்வேறு தமிழ் பலுப்பல்கள். தமிழ் உலகமொழி இல்லையென்று யார் சொன்னது :-)?
 
அடிக்கடி நான் நேஷனல் ஜியாகிரபிக் பார்ப்பேனா? அதில் இந்த wild beast எனப்படும் வனவிலங்குகள் ஆற்றைக் கடக்கும் காட்சி என்னுள் எப்போதும் பீதியைக் கிளப்பும். ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டு, அடித்துப் புரண்டு கொண்டு அடுத்த கரை ஒன்றே குறியெனப் பாயும் காட்சி இப்போது நினைத்தாலும் குலை நடுங்க வைக்கும். ஆனால், அது எனக்கு அடுத்த சில நிமிடங்களில் நடக்கும் என்று அறிந்திருக்கவில்லை!
 
 
river-crossing.jpg
 
கருத்தரங்கு வளாகத்திற்கு அனுமதி ஒரு மிகச்சிறிய வாசல் மூலம். நிற்கும் கூட்டமோ அலை மோதுகிறது. காவல் அதிகாரிகளுக்கு அனுமதிச் சீட்டு இருக்கிறதா என்று பார்த்து அனுப்ப வேண்டுமென்ற கட்டளை. கடமையா? காட்சியா? என்று விழி பிதுங்கி நிற்கும் போது மக்கள் சுநாமி அப்படியே அடித்துப் புரண்டு கொண்டு உள்ளே பாய்ந்தது. அதில் நான், முத்து, பாலா, பேரா.அனந்தகிருஷ்ணன், பல வெள்ளையர்கள், என் பெண்!! என்னைப் பற்றிக் கவலை இல்லை. நான் அடிமனத்தில் கிராமத்துக்காளை. ஆனால் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் பாவம்! என்று பார்த்தால். எனக்கு முன் அடித்துப்புரண்டு அவர்கள் உள்ளே போய்விட்டனர்!!
 
பின்னால் மணி.மணிவண்ணன் எப்படி தனக்கு உந்துதல் (inspiration) வந்தது என்று சொன்னார். இவர் தயங்கித்தயங்கி நிற்க, பல வெள்ளையர்கள் மிகக் குஷியாக முண்டி அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும், சரி! விடு, நானொரு பச்சைத் தமிழன்! என்று அவரும் முண்டி அடித்து விட்டாராம்!
 
உள்ளே வந்த பேராளர்கள் முகத்தில் எல்லாம் எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது. லண்டனிலிருந்து வந்த சிவப்பிள்ளை, ‘ஏம்பா! இந்தச் சோத்துக்கு இப்படியொரு அடிதடியா? நம்மை ஆதி மனிதக் குரங்காக மாற்றிவிட்டனரே!’ என்றார். அருகிலிருந்த ஒரு வெள்ளைக்காரர், ‘எனக்கு யாரோ சொன்னார்கள், உலகின் முதல் குரங்கு கூட ஒரு தமிழ்க் குரங்குதானாமே?’ யார் சொன்னது? என்றார். சரிதான், புதுமைப் பித்தன் சொன்ன சொல் செந்தமிழ் மாநாட்டின் முதல் நாளிலேயே நிஜமாகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.
 
உள்ளே! இன்முகத்துடன் வரவேற்று அன்னபூர்ணா சாப்பாடு போட்டு, பீடா, வாழைப்பழம் கொடுத்தவுடன் பலரின் கோபம் இருந்த இடம் தெரியவில்லை.
 
வரும்...
 
Tamil-Haj.jpg
river-crossing.jpg

Innamburan Innamburan

unread,
Jul 8, 2010, 11:04:11 AM7/8/10
to mint...@googlegroups.com
'...இந்தி இளைத்துப் போய் உட்கார்ந்திருந்தது குறியீடு போல் இருந்தது!'
அப்பறம், இந்தி களை கட்டியது. யூட்யூப் பதிவுகளில், கட்டியம் கூறியது,
இந்தியே! இது யார் வேலை?

இன்னம்பூரான்

2010/7/8 N. Kannan <navan...@gmail.com>


>
> பாகம் 5
>
> தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் தேர்ச்சியுடைய மாநிலம் என்று உலகெல்லாம் பேர் இருந்தாலும், அமைப்பாளர்கள் தேர்ந்தெடுத்திருந்த வலைப்பக்க நிபுணர்கள் சில விஷயங்களில் கோட்டை விட்டிருந்தனர். பலமுறை முயன்றும் என் போட்டோவை வலையேற்றம் செய்ய முடியவில்லை. ஒருவழியாக தனிஅஞ்சலில் அனுப்பி ஏற்றியபின், துணைப்பயணியின் விவரம் கொடுத்த போது அந்த மின்படிவம் அழிச்சாட்டியம் பண்ணியது. எங்கிருந்து கோவை வருகிறாய் என்ற கேள்விக்கு ‘சென்னை! சென்னை’ என்று கூவிக் கத்தினாலும் அது செவிடம் காதில் ஊதிய சங்குபோல் ஆனது. பலமுறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் திரும்பத்திரும்ப ஒரு நம்பரைக் கொடுத்து செல்பேசுங்கள் என்றார்கள். சரி, இனி ஒன்றும் நடவாது என்று அங்கு போனால், சென்னையில் அட்டை காட்டி வரவேற்று, பொன்னாடை போர்த்தி நட்ட நடு இரவிலும் வீடு சேர்த்த பெருந்தகைகள், கோயம்புத்தூர் போன போது கண்டு கொள்ளவில்லை. அந்தக் கணினியில் என் பேர் காட்டாததால் கையில் பொன்னாடை வைத்துக் கொண்டு போர்த்தமுடியாமல் அதிகாரிகள் தவித்ததைப் பார்த்துப் பரிதாபமாக் இருந்தது. சுபாவிற்கு பொன்னாடை கிடைத்தது ஆனால் தங்குமிட வசதியில் கோட்டை விட்டு விட்டனர். காலையில் எழுந்தால் சிலருக்கு பேட்ஜ் இருந்தது, எங்களில் பலருக்கு இல்லை. முதல் காரியமாக அங்கு போய் வாங்கி விடுங்கள் என்று சொல்ல. அங்கு போகுமுன்னர் வாயிற்காப்போன் (அதான் செக்கூரிட்டி) அடையாள அட்டை (identity badge) எங்கே? என்று கேட்டது முரண்நகை. சரி, போன இடத்திலாவது நம் பேர் விவரங்கள் இருக்குமா? என்றால் அவர்கள் ‘அடியைப் புடிடா! பாரதபட்டா!’ என்று மீண்டும் ஆரம்பத்திலிருந்து உங்கள் இரத்தவகை என்ன? என்று ஆரம்பித்தனர்.
>
> இதையெல்லாம் அறியாத பாலபிள்ளை, அக்கல்லூரி மாணவிகளிடம், ‘Do you I exist?' என்றொரு தத்துவார்த்தமான கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருந்தார். சரி, மதுரைக்காரன் குணத்தைக் காட்டினால்தான் காரியமாகும் என்றறிந்து நான் சவுண்டைக் கொடுத்தேன். இங்கே யார் இன்-சார்ஜ்? என்று அதட்டிக் கேட்டவுடன். ஒரு அழகிய பெண் வந்தாள். நீங்கதான் இன்-சார்ஜ்ஜா? ”அப்படி இல்லை! உங்களுக்கு என்ன வேண்டும்? உதவுகிறேன்?’ என்று சொல்ல. இப்படி அப்படியென்று இந்த அமர்க்களத்தில் செம்மொழி மாநாடு என்னைக் கண்டு கொள்ளாமல் அது பாட்டிற்கு ஆரம்பித்துவிட்டது :-) சுபா, ரெ.கா போன்ற அதிர்ஷ்டசாலிகள் பந்தலில் போய் உட்கார்ந்துவிட்டனர். நாங்கள் குளு, குளு அறையில் டி.வியில் பார்த்துக் கொண்டு இருந்தோம் (அதுவே சுகம் என்று பின்னால்தான் தெரிந்தது).
>
> அஸ்கோ பர்ப்போலா பேசும் போது பேட்ஜ் வந்தது. பாலா, ”வாங்க, வாங்க பந்தலுக்குப் போகலாம்!” என்றார். அறைகுறை மனத்துடன்தான் போனேன். நான் நினைத்தது போலவே வெளியே போனவுடன் நாங்கள் ‘கடலில் கரைத்த பெருங்காயமாகிப் போனோம்!’. ஆம்! அங்குள்ள கெடுபிடியில், யாரும், யாரையும் நம்பத்தயாராக இல்லை. இந்த பேட்ஜ்ஜுக்கு இந்த கேட்டு இல்லை, அங்கே போ என்று சொல்ல, அங்கு போனால், இங்கில்லை அங்கு போ என்று சொல்ல....அதற்குள் முதல்வர் பேசத்தொடங்கிவிட்டார். ‘சே! நிலமை இப்படி ஆகிப் போனதே என்ற வருத்தத்தில் எங்கு நின்றாவது பேச்சைக் கேட்போம் என்று வழியில் நின்று கொண்டு நான்  பேச்சில் ஆழ்ந்து போன போது, ஒரு காவல் அதிகாரி மிக மென்மையாக என்னிடம் வந்து, ‘சார்! நீங்க உள்ள போங்க சார்! என்று வழி காட்டி, அங்கே பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஊழியரை எழும்பச்சொல்லி எனக்கு இடம் கொடுத்து பேச்சைக் கேட்க விட்டது ஏதோ கனவு போல் உள்ளது. ஸ்வேதாவும் , பாலாவும் வேறு கட்டத்தில் (அதாவது இருக்கைக்கள் கட்டம், கட்டமாக அமைக்கப்பட்டிருந்தன) காணாமல் போய்விட நான் மட்டும் வேறு கட்டத்தில். கூர்ந்து பார்த்த போதுதான் தெரிந்தது நானும் ’ஹஜ் யாத்திரிகர்களுடன்’ (அதுதான் மலேசியக் குழுவுடன்) உட்கார்ந்து இருந்தது. எனக்கும் மலேசியாவிற்கும் அப்படியொரு பந்தம். விடாத பந்தம் :-)
>

> மலேசியக்குழு
>
> ஒருவழியாக எல்லோரும் பேசி முடித்த பிறகுதான் தெரிந்தது ஜெயகாந்தன் எங்கள் கட்டத்தில் இருந்தார், இது போல் இன்னும் பல பெரிசுகள். வெளிவரும் வரிசையில் வைரமுத்து, பேரா.அனந்தகிருஷ்ணன், பழைய அமைச்சர் வீரப்பன், கவிஞர் இக்பால் இப்படிப் பலர். சரி, இவர்களுக்கே இந்தக் கதி என்றால், என் நிலை கண்டு கழிவிரக்கம் கொள்ளுதல் நியாயமில்லையென்று மனதைத்திடப்படுத்திக் கொண்டு வெளி வந்தால்...வந்தால்தானே! வரமுடியவில்லை! அதற்குள் மிக, மிகப்பிரபலங்கள் புறப்பட்டுவிட, வழி மறிக்கப்பட்டது. ஒரே இழுபறி. சாப்பாட்டு நேரம். வயிற்றைக் கிள்ளியது. சாப்பாடு எங்கள் கருத்தரங்க வளாகத்தில். அரைகிலோமீட்டர் வெய்யிலில் நடக்க வேண்டும். வழித்தடை, கும்பல், வேர்வை...அட ராமா! இந்த பாலாவால் என்ன பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டேன். குளு, குளு அறையில் சுகமாக இருந்து பேச்சைக் கவனமாகக் கேட்டிருக்கலாமே? என்ற ஞானோதயம் வந்தது. உண்மையைச் சொல்லப் போனால் வீட்டில் விசிறி, ஏசி சுகத்தில் இதைக் கண்ணுற்றவர் பாக்கியசாலி! நம்புங்கள். கொடிசியா வளாகம் குளிரூட்டப்பட்டிருந்தது. ஆனால் வெளிப்பந்தல் அல்ல.
>
> நமது குடியரசுத்தலைவரை அப்போதுதான் முதன்முறை பார்த்தேன். பாவம் போல் இருந்தார்கள். பர்னால் ஒட்டி வைத்த புன்னகையுடன் கடைசிவரை இருந்தார். அவர் ஒருவர்தான் ஜனாதிபதிக்கு கம்பெனி. இரண்டு பக்கமும், சூழவும் தமிழும், ஆங்கிலமும். இந்தி இளைத்துப் போய் உட்கார்ந்திருந்தது குறியீடு போல் இருந்தது! எல்லோரும் தமிழில் பேசினர். அமெரிக்கத்தமிழ், ஜெர்மானியத்தமிழ், ஆங்கிலத்தமிழ், ரஷ்யத்தமிழ், பின்லாந்துத்தமிழ் இப்படிப் பல்வேறு தமிழ் பலுப்பல்கள். தமிழ் உலகமொழி இல்லையென்று யார் சொன்னது :-)?
>
> அடிக்கடி நான் நேஷனல் ஜியாகிரபிக் பார்ப்பேனா? அதில் இந்த wild beast எனப்படும் வனவிலங்குகள் ஆற்றைக் கடக்கும் காட்சி என்னுள் எப்போதும் பீதியைக் கிளப்பும். ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டு, அடித்துப் புரண்டு கொண்டு அடுத்த கரை ஒன்றே குறியெனப் பாயும் காட்சி இப்போது நினைத்தாலும் குலை நடுங்க வைக்கும். ஆனால், அது எனக்கு அடுத்த சில நிமிடங்களில் நடக்கும் என்று அறிந்திருக்கவில்லை!
>
>
>

> கருத்தரங்கு வளாகத்திற்கு அனுமதி ஒரு மிகச்சிறிய வாசல் மூலம். நிற்கும் கூட்டமோ அலை மோதுகிறது. காவல் அதிகாரிகளுக்கு அனுமதிச் சீட்டு இருக்கிறதா என்று பார்த்து அனுப்ப வேண்டுமென்ற கட்டளை. கடமையா? காட்சியா? என்று விழி பிதுங்கி நிற்கும் போது மக்கள் சுநாமி அப்படியே அடித்துப் புரண்டு கொண்டு உள்ளே பாய்ந்தது. அதில் நான், முத்து, பாலா, பேரா.அனந்தகிருஷ்ணன், பல வெள்ளையர்கள், என் பெண்!! என்னைப் பற்றிக் கவலை இல்லை. நான் அடிமனத்தில் கிராமத்துக்காளை. ஆனால் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் பாவம்! என்று பார்த்தால். எனக்கு முன் அடித்துப்புரண்டு அவர்கள் உள்ளே போய்விட்டனர்!!
>
> பின்னால் மணி.மணிவண்ணன் எப்படி தனக்கு உந்துதல் (inspiration) வந்தது என்று சொன்னார். இவர் தயங்கித்தயங்கி நிற்க, பல வெள்ளையர்கள் மிகக் குஷியாக முண்டி அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும், சரி! விடு, நானொரு பச்சைத் தமிழன்! என்று அவரும் முண்டி அடித்து விட்டாராம்!
>
> உள்ளே வந்த பேராளர்கள் முகத்தில் எல்லாம் எள்ளும், கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது. லண்டனிலிருந்து வந்த சிவப்பிள்ளை, ‘ஏம்பா! இந்தச் சோத்துக்கு இப்படியொரு அடிதடியா? நம்மை ஆதி மனிதக் குரங்காக மாற்றிவிட்டனரே!’ என்றார். அருகிலிருந்த ஒரு வெள்ளைக்காரர், ‘எனக்கு யாரோ சொன்னார்கள், உலகின் முதல் குரங்கு கூட ஒரு தமிழ்க் குரங்குதானாமே?’ யார் சொன்னது? என்றார். சரிதான், புதுமைப் பித்தன் சொன்ன சொல் செந்தமிழ் மாநாட்டின் முதல் நாளிலேயே நிஜமாகிவிட்டதே என்று நினைத்துக் கொண்டேன்.
>
> உள்ளே! இன்முகத்துடன் வரவேற்று அன்னபூர்ணா சாப்பாடு போட்டு, பீடா, வாழைப்பழம் கொடுத்தவுடன் பலரின் கோபம் இருந்த இடம் தெரியவில்லை.
>
> வரும்...
>
>

Tthamizth Tthenee

unread,
Jul 8, 2010, 11:24:52 AM7/8/10
to mint...@googlegroups.com
விருந்தோம்பலின் மகிமை   எல்லாவற்றையும் மறக்கவைக்கும்
 
நம் முன்னோர்கள் நல்ல ரகசியங்கள்  அறிந்தவர்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 

 
8-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

karthi

unread,
Jul 8, 2010, 8:21:20 PM7/8/10
to mint...@googlegroups.com
அருமையான விவரணை.
 
மலேசியா ("ஹஜ் யாத்திரிக") குழுவுக்கும் உட்காரும் இடம் அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
ஒரு மூலையில் தள்ளிக்கொண்டு போனார்கள். எங்கள் உறுப்பினர்களில் மாணிக்கம் என்பவருக்கு வெங்கலக்
குரல். "நாங்கள் யாரென்று தெரியுமா? இந்தக் கோட்டைப் பார்த்தீர்களா? இதன் மகிமை தெரியுமா?" என்று சத்தம்
போட நல்ல இடம் கிடைத்தது. குரலை உயர்த்திப் பேசினால் பல காரியங்கள் சுபமாக நடக்கின்றன.
 
"நமது குடியரசுத்தலைவரை அப்போதுதான் முதன்முறை பார்த்தேன். பாவம் போல் இருந்தார்கள்."
 
 ஆமாம்! ஒரு விவசாயக் குடும்பத்தின் இல்லத்தரசி போல இருந்தார். ஆனால் இந்த அம்மா அண்மையில்
விமானத்திலிருந்து வான்குடையில் குதித்து சாதித்த கதை தெரியுமா? இது pint sized bomb! "உருவு கண்டு
எள்ளாமை வேண்டும்!"
 
ரெ.கா.
----- Original Message -----
From: N. Kannan
--
Tamil-Haj.jpg
river-crossing.jpg

N. Kannan

unread,
Jul 8, 2010, 10:49:06 PM7/8/10
to mint...@googlegroups.com


2010/7/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>

'...இந்தி இளைத்துப் போய் உட்கார்ந்திருந்தது குறியீடு போல் இருந்தது!'
அப்பறம், இந்தி களை கட்டியது. யூட்யூப் பதிவுகளில், கட்டியம் கூறியது,
இந்தியே! இது யார் வேலை?
இன்னம்பூரான்
 
 
புரியவில்லை சார்?
 
செம்மொழி மாநாடு பற்றி இந்தி வர்ணனையைச் சொல்லுகிறீர்களா?
 
க.>

N. Kannan

unread,
Jul 8, 2010, 10:56:16 PM7/8/10
to mint...@googlegroups.com
2010/7/9 karthi karth...@gmail.com

 ஆமாம்! ஒரு விவசாயக் குடும்பத்தின் இல்லத்தரசி போல இருந்தார். ஆனால் இந்த அம்மா அண்மையில்
விமானத்திலிருந்து வான்குடையில் குதித்து சாதித்த கதை தெரியுமா? இது pint sized bomb! "உருவு கண்டு
எள்ளாமை வேண்டும்!"
 
 
உண்மையில் அந்த அம்மா நன்றாகப் பேசினார். ஆனால் இடையிடையே பொது மக்களிடமிருந்து கூச்சல். என்னடா! இந்திய தேசத்தின் முதல் குடிமகள் பேசுகிறாள் கவனமாகக் கேட்க வேண்டுமென்ற அக்கறை வேண்டாமோ?
 
பிறகுதான் புரிந்தது, அந்தக் கூச்சல் குடியரசுத்தலைவரின் பேச்சுக்கான எதிரொலி அல்ல என்று. நடுவில் இருந்த கேமிரா அச்சமயம் பார்த்து பொது மக்களை ஜூம் பண்ண, இந்த அசடுகள் தங்கள் முகம் தொலைக்காட்சியில் வர வேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதால் எழுந்த குழப்பமென்று.
 
1. உலகின் மிகப்பெரிய குடியரசின் தலைவர் பேசுகிறார். பொறுப்புடன் கேட்க வேண்டுமென்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத பாமர ஜனங்கள் கொண்ட ஒரு நாடு!!
 
2. தொலைக்காட்சி என்பதே தமிழகத்தின் உயிர் நாடியாகச் செயல்படுவது.
 
3. முதல் குடிமகள் பேசும் போது சில்மிஷம் செய்த தொலைக்காட்சிக் குழுவினர் (வெளிநாடாக இருந்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்).
 
ஐயா! அது இந்தியா!! அது இன்னும் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்....
 
இப்படிச் சில எண்ணங்கள்.
 
க.>

meena muthu

unread,
Jul 9, 2010, 12:39:58 AM7/9/10
to mint...@googlegroups.com
//நடுவில் இருந்த கேமிரா அச்சமயம் பார்த்து பொது மக்களை ஜூம் பண்ண, இந்த அசடுகள் தங்கள் முகம் தொலைக்காட்சியில் வர வேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதால் எழுந்த குழப்பமென்று.//

அதில் முன் இரண்டு வரிசை தவிர்த்து மூன்றாவது வரிசையில் இருப்பவர்கள் (ஆண்கள்)முதல்கொண்டு..இதை இங்கு தொலைக்காட்சி வழி பார்க்கும் போது வேடிக்கையாக இருந்தது! அதே சமயம் இவர்கள் நம் மக்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்!அயல் நாட்டவர் பார்த்தால் கேலிக்கு இடமாகுமே என்று வருத்தமாகக்கூட இருந்தது :(

2010/7/9 N. Kannan <navan...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Jul 9, 2010, 1:27:24 AM7/9/10
to mint...@googlegroups.com
'...குரலை உயர்த்திப் பேசினால் பல காரியங்கள் சுபமாக நடக்கின்றன...'
கூடவே, கையையும் ஆட்டி ஆட்டினால், அவகளை அமுக்கிடலாம்.
திரு.கண்னனுக்கு,

நமக்கு சுட்டப்பட்ட யூ ட்யூப் வீடியோக்களில் இந்தி நேவிகேஷன் வழிகுறைகள்.

இன்னம்பூரான்

2010/7/9 meena muthu <ranga...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Jul 9, 2010, 6:35:18 AM7/9/10
to mint...@googlegroups.com
இந்த அசடுகள் தங்கள் முகம் தொலைக்காட்சியில் வர வேண்டுமென்று சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டதால் எழுந்த குழப்பமென்று.//

பலருக்கும் வாழ்க்கையில் லட்சியமே தொலைக்காட்சியில் முகம் தெரியணும்னு தான். குறிக்கோளே அதுதானே? அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யறாங்க!

2010/7/9 N. Kannan <navan...@gmail.com>

--

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 9, 2010, 7:33:57 AM7/9/10
to mint...@googlegroups.com
பலருக்கும் வாழ்க்கையில் லட்சியமே தொலைக்காட்சியில் முகம் தெரியணும்னு தான். குறிக்கோளே அதுதானே? அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யறாங்க!

 

ஆமாம்...
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/9 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 9, 2010, 11:09:05 AM7/9/10
to mint...@googlegroups.com
புரியலை பெண்ணேஸ்வரன், உங்களோட பின்னூட்டத்துக்கு அர்த்தம் புரியலை, அல்லது என்னால் யோசிக்க முடியலை!

ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியிலே தங்களோட முகம் தெரியணும்,குடும்பத்தோட எல்லாரும் வரணும்னு எந்த நிலைக்கு வேண்டுமானாலும் போறதைப்பார்த்து மனம் நொந்து போய் அந்தப்பின்னூட்டத்தைப் போட்டேன். அதிலும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் னு தேர்ர்ந்தெடுக்க வேண்டிய ஒரு பையனுக்காக டிஜிடல் பானர், பிட் நோட்டீஸ்கள், பெரிய பெரிய போஸ்டர்கள்னு செலவு பண்ணி இருக்காங்க. இதிலே டிஜிடல்பானர் மட்டும் தொலைக்காட்சியோட செலவாம், மத்தது பையனின் பெற்றோராம்! எங்கே போறோம்????? :((((((((((((((((((((

2010/7/9 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

vadivelu kaniappan

unread,
Jul 9, 2010, 9:27:37 PM7/9/10
to mint...@googlegroups.com
வாழ்கவளமுடன்! என்கருத்தை அப்படியே தாங்கள் பிரதிபலிக்கிறீர்கள் ஐயா!
என்று தணியும் இந்த தொலைக்காட்சி தொடர் பார்க்கும் என் மக்களின் மோகம்
என்று மடியும் எம்மக்களின் தொலைக்காட்சி தொடர் பார்க்கும் மோகம்!
அந்த நாளும் வந்திடாதோ? தொலைக்காட்சித் தொடர் மோகத்தால் படிக்கும் பழக்கம் இளம் சிறார்களிடம் குறைந்து வருகிறதே. பெரியவர்க்கு தொடர்க்காட்சி மோகம் என்றால் சிறுவர்க்கு, சிறுவர்க்கான ஒளிப்பரப்படும் சானல்கள் மோகம். இதற்கு காலம்தான் பதில் அளிக்கவேண்டும். விதி என்ன செய்ய இருக்கிறதோ எம் தாய்த் திருநாட்டை? என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திருநாடு!!!

10 ஜூலை, 2010 6:46 am அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:
தமிழ்நாட்டு டிவிக்களில் காட்டபடும் குப்பை,திராபை,தீசல்களை பார்ப்பதை மக்கள் நிறுத்தணும்.டிவி பெட்டியை விற்றுதொலைத்துவிட்டு வீட்டுக்கு ஒரு கணிணி வாங்கணும்.டிவி பார்த்தே ஆகணும்னா டிஸ்கவரி,என்.ஜி.சி புரொக்ராம்களை பார்க்கலாம்.ஒப்பாரி வைக்கும் சீரியல்கள்,தனிமனித துதிபாடலை மையமாக கொண்ட திரைபடங்கள், வெற்று வார்த்தை அலங்காரங்களை வைத்து கட்டப்பட்ட கவியரங்கங்கள் ஆகியவற்ரை புறக்கணிக்க வேண்டும்.குமுதம்,விகடன் குப்பைகளை வாங்குவதை நிறுத்தினால் மனம் சுத்தமாகும்.அதுக்கு பதில் செய்திதாள் வாங்கலாம் அல்லது மேகசின் படிசே ஆகணும்னா கிரைம் நாவல்,சூப்பர் நாவலை வாங்கி படிக்கலாம்.

மொத்தத்தில் தமிழ் ஊடகங்கள் என்ற குண்டுசட்டியை விட்டு மக்கள் வெளியே வரவேண்டும்.சாட்டிலைட் டிவிக்களை அடியோடு புறக்கணிக்க வேண்டும்.


--
செல்வன்

www.holyox.blogspot.com

Women who seek to be equal with men lack ambition.  ~Timothy Leary

RK.SATHISH KUMAR

unread,
Jul 10, 2010, 12:44:39 AM7/10/10
to mint...@googlegroups.com
தமிழன் வேடிக்கை பார்ப்பதில் அதிக ஆர்வம் உடையவன் என்பதே அனைத்திற்க்கும் அடிப்படை...இல்வசமாக கிடைக்கும் பொருட்களை வாங்க வந்த கூட்டமே அதிகம் என பத்ரி சேசாத்ரி சொன்னது நினைவுக்கு வருகிறது..

2010/7/5 N. Kannan <navan...@gmail.com>
பாகம் 1

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்ற பாரதியின் கனவு நிறைவேறி இருப்பதை மிகப் பிரம்மாண்டமாக நடந்து
முடிந்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு உலகிற்கு எடுத்துக்
காட்டியுள்ளது. இம்மாநாட்டின் scope என்னவென்று நான் முதலில் அறிந்தேன்
இல்லை. அங்கு போன பிறகுதான் தெரிந்தது, கதிரவனின் கண்ணில் படும்
எல்லாவற்றைப் பற்றியும் தமிழர்கள் அங்கு பேசி விட்டுப் போயிருக்கிறார்கள்
என்று. இது மாதிரி ஒரு உலக அதிசயம் இதுவரை நடந்துள்ளதா என்று
தெரியவில்லை. மொழி, இன உணர்வு என்பது நமக்கு மட்டும் சொந்தமல்ல. உலகில்
பல நாடுகளில் இதைக் கண்ணுற முடியும். ஆனால் எந்த நாடும் இப்படி உலகெலாம்
பரவி இருக்கும் தம்மக்களை அழைத்து மாநாடு நடத்தியதில்லை. அழைப்பு
தமிழர்களுக்கு என்றில்லை. தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இன மக்களுக்கும்
என்பது இதன் சாரம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்! எனும் கணியன்
பூங்கன்றனின் இதமான சொற்களை தமிழக அரசு மெய்பித்துள்ளது. ஒரு தாய், தன்னை
விட்டு பொருளீட்ட அகன்ற பிள்ளையை மீண்டும் அழைத்து கண்ணுற்று மகிழும்
அளவிலா மகிழ்ச்சியை இம்மாநாடு மெய்பித்துக் காட்டியுள்ளது. தமிழ்
உணர்வுடன் பள்ளிக்குச் சென்றவர்கள் நாங்கள். பாரதியும், பாரதிதாசனும்
எங்களை வழி நடத்தினர். அந்த உணர்விற்கு செம்மொழி மாநாடு என்ற பேருரு
உண்டு என்று நான் கண்டு அதிசயக்கிறேன்.

இதுவொரு தொடக்கம் என்று முதல்வர் தனதுரையில் சொன்னார். அப்படித்தான்
இருக்க வேண்டும். ஒரு செம்மொழி உலகில் எங்கெங்கோ, என்னென்னவோ தொழில்
செய்யும், எவரெவரையோ இப்படி ஈர்க்கும் என்று யார் கண்டார்கள்? இதுவொரு
நல்ல தொடக்கம். தமிழ் உணர்வுடையோர் இவ்வேள்வித்தீயை தாங்கள் வாழ்கின்ற
நாடுகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும். தமிழகம்
இவ்வுணர்வை செப்பமுடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இம்மாநாடு உண்மையான தமிழ் உணர்வுடன் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக அரசு
செய்திருக்கிறது என்றாலும், கட்சியின் உரத்த குரல் எங்கும் பதியவில்லை.
கட்சிக் கொடிகள் எங்கும் பறக்கவில்லை. கட்சிக்காரர்கள் இருக்குமிடம்
தெரியாமல் பண்புடன் வளைந்து, வளைந்து போய் வந்தனர். என் வாழ்வில் முதன்
முதன்முறையாக பக்கத்து இடம் காலியானவுடன், பணிவாக ஒருவர் வந்து,
இவ்விருக்கை காலி என்றால் அமைச்சர் வந்து உட்காரலாமா? என்று
கேட்டுவிட்டு, ஒரு அமைச்சர் வந்து உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சிகளைக்
கூர்ந்து கவனித்தை பார்த்ததில்லை. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை
நல்ல நண்பர் போல் எங்கள் எல்லோரிடமும் பழகினார். எந்த பந்தாவுமில்லை.

மாநாட்டுத்துவக்க விழா உரைகள் அனைத்தும் மிகக் கவனத்துடன்
தயாரிக்கப்பட்டு விஷயத்தை மட்டும் பேசின. இதில் முதல்வர் கருணாநிதி,
துணைமுதல்வர் ஸ்டாலின் இவர்களின் உரைகள் விதிவிலக்கல்ல என்பது
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. எல்லாம் கன கச்சிதம். நேரத்தில்
ஆரம்பித்து நேரத்தில் முடிந்தன.

சங்க காலத்தில் வீதிகளில் முத்தும் பவளமும் கொட்டிக் கிடக்குமாம். எதை
எடுப்பது, எதை விடுவது என்று தெரியாதாம். அது போல் ஆகிவிட்டது
இம்மாநாட்டு நடப்பு. எத்தனை அருமையான கட்டுரைகள். எவ்வளவு பெரியவர்கள்!!
அடடா!

இம்மாநாடு பல தொன்மங்களை பொய்பித்துள்ளது. இம்மாநாட்டில் சமயத்திற்கு
இடமில்லை என்றொரு வதந்தி. ஆண்டாளும், ஆழ்வார்களும் போகுமிடமெல்லாம் வலம்
வந்தனர். சைவமும் தமிழும் அங்கிங்கெனாத படி ஆனந்தமாக நடமாடின (தர்மபுரம்,
பேரூர் ஆதீனகர்த்தாக்களை கண்டு பேசியது செம்மொழி வளாகத்தில்தான்).
பிராமணர்களுக்கு இடமுண்டா? என்றொரு உன்குழல் விழிமம் (வீடியோ). எங்கு
பார்த்தாலும் திருமண்களும், திருநீற்றுப்பட்டையும்தான். சரி, தலித்,
அரவாணிகள், ஓரினப்பாலோர், மாற்றுத்திறனாளிகள்? அவர்களும் எங்கு
பார்த்தாலும்! என்ன அதிசயம் இது?

மைக்கேல் கேப்ளன் என்னிடம் சொன்னார் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாட்டு
ராப் இசையுடன் கலக்கல்! என்று. அதுவும் உண்மைதான். சென்னையில் எங்கள்
வீட்டுக்குழந்தைகள் எல்லாம் இதையே பாடிக்கொண்டு இருக்கின்றன.

வரும்...

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.sathish777.blogspot.com/

N. Kannan

unread,
Jul 10, 2010, 8:38:48 AM7/10/10
to mint...@googlegroups.com
பாகம் 6
 
தமிழைச் செம்மொழி என்று சொல்வதிலோ, தமிழகத்தின் நீண்ட பாரம்பரியத்தைப் பற்றிப் பெருமை கொள்வதிலோ நம்மில் பலருக்கு பெருத்த ஆட்சேபம் இருக்காது என்று எண்ணலாம். ஏனெனில் நம் குடும்பத்தின் பெருமை, உறவுகளின் பெருமை, குலத்தின் பெருமை என்று நாம் அன்றாடம் பேசிக்கொள்வதெல்லாம் தமிழ்ப் பாரம்பரியம் எனும் பெரு விருட்சத்தின் உபகிளைகள்தான். ஆகா, நாம் அன்றாடம் நம்மைப் பற்றிப் பெருமையாகத்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அதையே ஒரு மாநில அளவில் செய்யும் போது நம்மில் பலர் எதிர் நிலை கொள்கிறோம். ஏதோ அது நமக்கு ஒவ்வாதது என்பது போல்.
 
செம்மொழிக் கருத்தரங்கம் என்று ஏதோவொரு கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ நடந்திருந்தால் அது நம் கவனத்தை அவ்வளவு ஈர்த்திருக்காது. ஆனால், இதையொரு பெரும் விழாவாகச் செய்யும் போது நாம் எதிர்நிலை கொள்கிறோம்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாடு ’ஒரு’ மாநாடு அல்ல. ஐந்து பெரும் நிகழ்வுகள் கொண்ட ஒரு பெருமுயற்சி. 1. செம்மொழி மாநாடு (பொது), 2. செம்மொழிக் கருத்தரங்கம் (ஆய்வாளர்களுக்கு), 3. தமிழ் இணையம் 2010 கருத்தரங்க (ஆய்வாளர்களுக்கு), 4. சங்கமம் நிகழ்வு (சென்னையில் வருடா வருடம் நடைபெறும் நிகழ்வு கோவையில் முதன்முறை), 5. இந்திய விடுதலை தினத்தன்று தில்லியில் நடக்கும் பேரணி போன்றதொரு நிகழ்வு.
 
இராஜராஜ சோழன் தஞ்சைக் கோயில் கட்டியது போன்ற ஒரு பெரும் கனவு இது. அவன் கட்டிய போது நிறையப் பேர் குறை சொல்லியிருப்பர். மக்கள் வரிப்பணத்தை கல்லில் போய் கொட்டுகிறான் என்று!! இன்று நாம் அது நம் பாரம்பரியம் என்று பெருமைப் படுகிறோம். அவன் பெரிய கோவில் கட்டுவதற்கு முன் கோயில்களே இல்லை என்றில்லை. அவனுக்கும் முன்னுதாரணங்கள் இருந்திருக்கின்றன. ஆயினும் அவன் அக்கோயிலை ஒரு Mega event என்று செய்து பார்த்தான். காலம் தன்னை நினைவில் கொள்ள வேண்டுமென்ற ஆசையினால். அதே போல் தமிழகத்தில் இம்மாநாட்டிற்கு முன் தமிழ் மாநாடுகள் பாரிய அளவில் நடந்துள்ளன.
 
மொழியை ஏன் பிரதானப்படுத்த வேண்டுமென்று கேட்கலாம்? வேறு வழியில்லை! என்று இந்திய உபகண்டம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதோ அன்றே மொழி அரசியலாகிவிட்டது. நாம் யாரையாவது குறை கூற வேண்டுமெனில் நம் இந்திய சாசனத்தை உருவாக்கிய இப்பெரு நாட்டை உருவாக்கியவர்களைத்தான் சொல்ல வேண்டும். இதே போல், சமயம் என்பதும் நம் அரசியலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் காந்தி சமயத்தை அரசியலில் கொண்டு வந்து புகுத்தினார்? அது காலத்தின் தேவையாக இருக்கலாம். இல்லை இந்திய சரித்திரமே இக்கூறுகளை அப்படிப் பின்னிப் பிணைந்து வைத்து வளர்ந்திருக்கலாம்.
 
கழக அரசுகள் மொழிப் பிரச்சனையை முன்வைத்து அரசியலுக்குள் வந்தவர்கள். அவர்கள் மொழியைக் கொண்டாடுவதைத் தவிர்க்கவியலாது. முதல்வர் தமது துவக்க உரையில் சொல்லியிருப்பது போல் தன் வாலிப காலத்திலிருந்து மொழி என்பதே அவரை அரசியலுக்குள் செயல் பட வைத்திருக்கும் பெரும் காரணி என்பதைக் காணலாம். அப்பின்புலத்தில் தமிழ் மொழியை தன் வாழ்நாள் காலத்தில் செம்மொழி என்றாக்கி அதை மத்திய அரசு தேசிய மொழி என அறிவிக்க வேண்டும் என்ற அளவிற்கு கொண்டு வந்திருப்பது ஒரு கட்சியின் வெற்றி. அதைக் கொண்டாடுவதிலும் அக்கட்சி சார்ந்த அரசிற்கு நியாயம் இருப்பதை மறுக்க முடியாது.
 
எல்லோருக்கும் திரும்பத்திரும்பச் சொல்வது இவ்வளவு செலவு தேவையா? என்பது. எவ்வளவு செலவு என்பது இன்னும் ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லோரும் குத்து மதிப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். யோசித்துப் பார்த்தால் ஐந்து மெகா நிகழ்வுகளுக்கு சமகால செலவுக்கணக்கைக் கொண்டு பார்த்தால் இவ்வளவு ஆகும் என்பது மட்டுமல்ல, வெளிநாட்டில் இதே நிகழ்வு நடந்திருந்தால் ஆகியிருக்கும் செலவில் பாதிதான் ஆகியிருக்கும் என்றும் சொல்லலாம். அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது என்பது ஒரு வாதம். நாம் அதிகாரத்திற்கு மட்டுமே செவி சாய்க்கிறோம். நியாயத்திற்கு அல்ல. இது நடைமுறை. நம் அன்றாட வாழ்வில் நடைமுறையாக உள்ளவொன்று மாநில அளவில் நடந்தால் குறை ஏன் காண வேண்டும்?
 
இவ்வளவு செலவும் எதற்கு? என்பது பலரின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால், நடந்திருக்கும் நிகழ்வுகளை உற்று கவனித்தால் புரியும். முதல்வர் மிக விரிவாக தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை தமது முதலுரையில் கூறுகிறார். முடிக்கும் போது இத்தகைய பெரும் புகழுக்குரிய நாம், நம் சரிதம் முறையாக அறிந்தோமில்லை, வெளிநாட்டுப் பாதிரிகளும், ஆய்வாளர்களும் சொல்லித்தான் நாம் நம் புகழை அறிய வேண்டிய நிலையில் இன்றும் உள்ளோம் என்று சொல்கிறார். இதுதான் அடிக்கோடு. இந்தியா விடுதலை அடைந்து அறுபத்திச் சொச்சம் ஆண்டுகள். நாம் அடிமைகள் என்னும் உணர்வு இன்னும் நம்மிடமிருந்து முழுதும் வெளிவரவில்லை. நம் தாழ்வு மனப்பான்மை இன்னும் முற்றும் தீர்ந்த பாடில்லை. தன்னம்பிக்கை இன்னும் வந்த பாடில்லை. கொரியா சுதந்திரம் வாங்கிய 40 ஆண்டுகளுக்குள் மண்ணில் கிடந்த பொருளாதாரத்தை உலகின் முதல் 19 பொருளாதாரமாக மாற்றிவிடுகிறது. அது தன்னம்பிக்கையின் உதாரணம். நமக்கு இன்னும் சுயம் முழுமையாய் உருவாகவில்லை. நாம் தமிழன் என்ற உணர்வு இன்னும் முழுமையாய் நிலைபெறவில்லை. நம்மால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை வரவில்லை. அந்த நம்பிக்கையை ஊட்ட இத்தகையை பெரும் பார்ட்டிகள் தேவைப்படுகின்றன.
 
இம்மாதிரி விழாக்களில் வெளிநாட்டுக்காரர்கள் வந்து நம்மைப் பற்றிச் சொல்லும் போது நம் நம்பிக்கை கூடுகிறது. நம்மில் உலக அளவில் வெற்றி கண்டவர்கள் வந்து நிற்கும் போது ஒரு சாதாரணனுக்கு தன்னபிக்கை வருகிறது. ஆதர்சம் கிடைக்கிறது. இம்மாதிரி மாநாடுகளில் பல்வேறு அறிஞர்கள் தமிழ் மண்ணின் கூறுகளை அலசி ஆராயும் போது நம்மைப் பற்றி நாமே முன்னைவிடப் புதிதாகப் புரிந்து கொள்கிறோம். கணினி போன்ற வளரும் துறையொன்றின் பரிமாணங்களைக் காட்டும் போது ஒரே கற்றைத் தாவலில் (quantum jump)  நாம் நம் இடர்களைத் தாவிவிடுகிறோம்.
 
அங்கு வந்திருந்த லட்சோபலட்சம் மக்கள் அனைவரும் முட்டாள்கள், சும்மா வேடிக்கை பார்க்க வந்தார்கள் என்று ஒரு மேட்டுக்குடி மனப்பான்மையில் எள்ளி நகைப்பது நியாயமில்லை. மணிக்கணக்காக நின்று கணினிக்காட்சி, பண்பாட்டுக் காட்சியென்று அவர்கள் கண்டு களித்தது நிச்சயம் அவர்களுக்குள் ஒரு புதிய புரிதலைத் தந்திருக்கும். அதுவும் கோவை வாழ் மக்களின் பொறுமையை நாம் பாராட்ட வேண்டும். கணினிக் காட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த திரு.ஆனந்தன் அவர்களால் பேசவே முடியாத அளவு தொண்டை புண்ணாகியிருந்தது. அவர் வாழ்வில் இத்தனை மக்களோடு இப்படி உறவாடி இருப்பாரா? என்பதே சந்தேகம். எல்லாமே மெகா (பெரிய) அலகில் அங்கு நடந்தன. இவ்வளவிற்கும் ஒவ்வொரு பூத்திலும் இருந்த இளைஞர்கள் மிக உற்சாகமாகவே இருந்தனர். மகிழ்வுடன் ஊடாடினர். கோடிக்கணக்கான சிடிக்கள் இலவசமாக தினம் தினம் வழங்கப்பட்டது. வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு அலகில் இப்படியானதொரு நோக்கில் இப்படியானதொரு நிகழ்வு நடத்தப்பட்டிருக்குமா? என்பதே சந்தேகம். இது போன்ற தன்னம்பிக்கை தரும் நிகழ்வுகள் ஆப்பிரிக்காவில் நடக்குமானால் அந்த நாடுகளும் முன்னேற்றமடையும். ஆயின் அங்கு இன அழிவும், வறுமையும்தான் மண்டிக்கிடக்கின்றன.
 
ஒரு உபகண்டத்தையே விடுதலை உணர்வு பெற வைக்க வேண்டுமெனில் ஒரு சின்ன நிகழ்வு காணாது. ஒரு வாலியன் பாக், ஒரு சிப்பாய் கலகம், ஒரு தண்டி யாத்திரை இப்படிப் பல நிகழ்வுகள் நடக்கும் போதுதான் பொது மக்கள் விழித்துக் கொள்கின்றனர். இழப்பு இருந்தால்தான் கவனம் வருகிறது. ஒரு மாநிலத்தையே தன் தாய் மொழி மீது கவனம் கொள்ள வைக்க வேண்டுமெனில் இம்மாதிரி மெகா நிகழ்வுகள் நடக்கத்தான் வேண்டியுள்ளன.
 
பக்தி இயக்கம்தான் நினைவிற்கு வருகிறது. சில நூற்றாண்டுகள் தொடர்ந்து ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தியின் மூலம் தமிழின் பெருமை சொல்லி நமக்கு தன்னம்பிக்கை உருவாக்கி வந்திருக்கின்றனர். சும்மா ஒரு ஆழ்வார் பாடினால் போதாது. ‘பேசிற்றே பேசல் அல்லால்’ என்று எல்லா ஆழ்வார்களும் ஒரே கருத்தை தொடர்ந்து பல நூற்றாண்டுகளில் சொல்ல வேண்டும். அப்போதுதான் சொல்லவரும் நோக்கம் நிலைக்கும்.
 
தமிழ்நாட்டின் நிலமை peculiar ஆனது. யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்பது நம் அடிப்படைப் புரிதல். எனவே வந்தோரை வரவேற்கும் மனம் வேண்டும். அதே சமயத்தில் வந்தோர் இம்மண்ணின் குணத்தையே மாற்ற முயலும் போது தன் மண்ணின் மணத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இது சிரமமான செயல். சங்கம் தொட்டு இதுதான் இங்கு நடைபெற்று வருகிறது. தன்னை, தன் சுயத்தைத் தக்க வைத்துக் கொள்ள தமிழகம் போராடியே வந்துள்ளது. ‘இரத்தமின்றி, யுத்தமின்றி’ இதைச் செய்து வந்திருக்கிறது. இதன் சமீபத்திய பங்காளர்கள் கழகத்தினர் என்று சொன்னாலும் அவர்களுக்கு முன்னோடிகள் என்று ஒரு பெரும் இயக்கமே இருந்திருக்கிறது. அதில் இறையனார் கூட கூட்டு சேர்கிறார். அவர் ‘களப்பொருள்’ இயற்றவில்லையெனில் பக்தி இயக்கமே தோன்றி இருக்காது.
 
மாறிவரும் இந்திய அரசியல் இம்மாநாட்டு நிகழ்வில் புரிந்தது. ஜெர்மனியில், சமீபத்தில் இங்கிலாந்தில் நடப்பது போல் பலகட்சிக் கூட்டாச்சி என்று வரும் போதுதான் இதுவரை சிறுபான்மையாக இருந்தவர்களின் குரல் மத்தியில் கேட்பதற்கான சந்தர்ப்பம் வருகிறது. செம்மொழி மாநாடு என்பது ஒரு வகையில் இந்தியாவே ஒரு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டதற்கு ஒப்பானது. இந்தியப் பெருமை என்பது தமிழின் பெருமையை தன்னகத்தே கொண்டதாகவே இருக்க வேண்டும். அதை குடியரசுத்தலைவரின், ஆளுநரின் பேச்சுக்கள் தெளிவாகக் காட்டின. நமக்கு முதலில் சுயமரியாதை வந்தால்தான் மற்றவன் நம்மை ஒரு ஆளாகவே மதிப்பான். அதற்கான விலை வெறும் 400 கோடியென்றால் அது கொசுறு என்றே சொல்லலாம். ஏனெனில் மடைமை(அறியாமை)யின் விலை பல கோடிகளாக இருக்கின்றன. என்ன செய்ய?
 
வரும்...
 
 

Dr M.D.Jayabalan

unread,
Jul 10, 2010, 11:34:11 AM7/10/10
to மின்தமிழ்

கட்டுரை மிக அருமையாக உள்ளது. பாராட்டுகள்.

எம்.டி.ஜெயபாலன்

O தோழன்:-}

unread,
Jul 10, 2010, 12:42:30 PM7/10/10
to mint...@googlegroups.com
திரு கண்ணன் அவர்கள்
செம்மொழி மாநாட்டின்  நிகழ்வுகளை இவ்வளவு தெள்ளத்தெளிவாக
எடுத்து விவரிக்கும் பாணி மிக்க பெருமைக்குரியது
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது பழமொழி
 
அது மொழிக்கும் பொருந்தும் .இது போன்ற  ஆய்வுகளோடு கூடிய மாநாடுகள் மாதாமாதம் நடந்தால்தான் தமிழ் என்ற ஒரு மொழி
இந்தியாவில் இருந்தது என எதிர்கால சந்ததியினர்  எடுத்துரைக்க  முடியும் .இதற்க்கு உதாரணம் நம்  நாட்டில் ஒரு காலத்தில்  தலை சிறந்து விளங்கிய ஒரு மொழியையே நம்மவர்கள் இறந்த மொழி என இதுக்கிவிட்டனர் .அது போன்ற ஒரு நிலை தமிழுக்கு நேராமல் இருக்கவேண்டுமாயின்  உலகளாவிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் .
 
2010/7/10 Dr M.D.Jayabalan <jayabalan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"
http://hariom.acnrep.com/

http://velmurugantemple.org.uk/

karuannam annam

unread,
Jul 10, 2010, 12:58:47 PM7/10/10
to mint...@googlegroups.com

ஐயங்களுக்கு

அருமையான விளக்கங்கள்.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

பாராட்டுகள்.

 வெளிநாட்டில் இதே நிகழ்வு நடந்திருந்தால் ஆகியிருக்கும் செலவில்
> பாதிதான் ஆகியிருக்கும் என்றும் சொல்லலாம். அரசாங்கம் தனது அதிகாரத்தைப்
> பயன்படுத்தியிருக்கிறது என்பது ஒரு வாதம். நாம் அதிகாரத்திற்கு மட்டுமே செவி
> சாய்க்கிறோம். நியாயத்திற்கு அல்ல.>
> இவ்வளவு செலவும் எதற்கு? என்பது பலரின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்தால்,
>> இத்தகைய பெரும் புகழுக்குரிய நாம், நம் சரிதம் முறையாக அறிந்தோமில்லை,
> வெளிநாட்டுப் பாதிரிகளும், ஆய்வாளர்களும் சொல்லித்தான் நாம் நம் புகழை அறிய
> வேண்டிய நிலையில் இன்றும் உள்ளோம் என்று சொல்கிறார். இதுதான் அடிக்கோடு.
>> நமக்கு இன்னும் சுயம் முழுமையாய் உருவாகவில்லை. நாம் தமிழன் என்ற உணர்வு
> இன்னும் முழுமையாய் நிலைபெறவில்லை. நம்மால் எதுவும் முடியும் என்ற நம்பிக்கை
> வரவில்லை. அந்த நம்பிக்கையை ஊட்ட இத்தகையை பெரும் பார்ட்டிகள் தேவைப்படுகின்றன.
>
> இம்மாதிரி விழாக்களில் வெளிநாட்டுக்காரர்கள் வந்து நம்மைப் பற்றிச் சொல்லும்
> போது நம் நம்பிக்கை கூடுகிறது. நம்மில் உலக அளவில் வெற்றி கண்டவர்கள் வந்து
> நிற்கும் போது ஒரு சாதாரணனுக்கு தன்னபிக்கை வருகிறது. ஆதர்சம் கிடைக்கிறது.
> இம்மாதிரி மாநாடுகளில் பல்வேறு அறிஞர்கள் தமிழ் மண்ணின் கூறுகளை அலசி ஆராயும்
> போது நம்மைப் பற்றி நாமே முன்னைவிடப் புதிதாகப் புரிந்து கொள்கிறோம். கணினி
> போன்ற வளரும் துறையொன்றின் பரிமாணங்களைக் காட்டும் போது ஒரே கற்றைத் தாவலில்
> (quantum jump)  நாம் நம் இடர்களைத் தாவிவிடுகிறோம்.
>
> அங்கு வந்திருந்த லட்சோபலட்சம் மக்கள் அனைவரும் முட்டாள்கள், சும்மா வேடிக்கை
> பார்க்க வந்தார்கள் என்று ஒரு மேட்டுக்குடி மனப்பான்மையில் எள்ளி நகைப்பது
> நியாயமில்லை. மணிக்கணக்காக நின்று கணினிக்காட்சி, பண்பாட்டுக் காட்சியென்று
> அவர்கள் கண்டு களித்தது நிச்சயம் அவர்களுக்குள் ஒரு புதிய புரிதலைத்
> தந்திருக்கும்.  பக்தியின் மூலம் தமிழின் பெருமை சொல்லி நமக்கு

> தன்னம்பிக்கை உருவாக்கி வந்திருக்கின்றனர். சும்மா ஒரு ஆழ்வார் பாடினால்
> போதாது. ‘பேசிற்றே பேசல் அல்லால்’ என்று எல்லா ஆழ்வார்களும் ஒரே கருத்தை
> தொடர்ந்து பல நூற்றாண்டுகளில் சொல்ல வேண்டும். அப்போதுதான் சொல்லவரும் நோக்கம்
> நிலைக்கும்.
>
>குடியரசுத்தலைவரின், ஆளுநரின் பேச்சுக்கள் தெளிவாகக் காட்டின. நமக்கு முதலில்
> சுயமரியாதை வந்தால்தான் மற்றவன் நம்மை ஒரு ஆளாகவே மதிப்பான். அதற்கான விலை
> வெறும் 400 கோடியென்றால் அது கொசுறு என்றே சொல்லலாம். ஏனெனில்
> மடைமை(அறியாமை)யின் விலை பல கோடிகளாக இருக்கின்றன. என்ன செய்ய?
>

meena muthu

unread,
Jul 10, 2010, 1:02:04 PM7/10/10
to mint...@googlegroups.com
 மிகத்தெளிவாக வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள்!ஒவ்வொரு வரியும்
உணர்ந்து எழுதி இருப்பது தெரிகிறது!இப்படி ஒன்றை உங்களிடம் இருந்து எதிர்பார்த்திருந்தேன்!

2010/7/10 N. Kannan <navan...@gmail.com>
 

--

செல்வன்

unread,
Jul 10, 2010, 1:33:34 PM7/10/10
to mint...@googlegroups.com
பல்லவன் பரம்பரை பன்னி மேய்ப்பதும், சோழன் பரம்பரை கோழி மேய்ப்பதும் தான் இன்று யதார்த்தம். பழம்பெருமை பேச நமக்கு எல்லா உரிமையும் உண்டு.அதுக்கான பட்ஜெட் எத்தனை, மீடியம் எது என்பதுதான் கேள்வி.

1993ல் காவிரி தந்த கலைசெல்வி இதை விட ஆடம்பரமாக தமிழ்மாநாடு நடத்தினார்.அதன்பின்னர் தமிழின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?1968ல் அண்னாதுரை தமிழ்மாநாடு நடத்தினார்.அதுக்கும் லட்சகணக்கில் கூட்டம் கூடியது.அதன்பின் தான் மெட்ரிக் பள்ளிகள் மடைதிறந்தாற்போல் தமிழ்நாடெங்கும் பல்கிபெருகி இன்று தமிழே அழிகிறது என கூக்குரல்கள் கேட்கின்றன.அந்த மனகுறையை நீக்க மீண்டும் ஒரு மாநாடு நடத்தி பெருமைபட்டுகொள்வோம்.இதுதான் நம் மக்களின் இயல்பு.

மக்களுக்கு நம்பிக்கை வர மாநாடு நடத்துவது என்பது உலகில் எங்கேயும் கேள்விபடாத புதுமை.1993 மாநாட்டுக்கு பிறகு மக்களின் நம்பிக்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?இந்த மாநாட்டை மூன்று மாதத்துக்கு பிறகு எத்தனைபேர் நினைவில் வைத்திருக்க போகிறார்கள்?எழுதபடிக்க தெரியாத நிலையில் கோடிகணகான மக்கள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு இதனால் என்ன பலன்?இந்த 430 கோடியில் எத்தனை பள்ளிகள் கட்டி,எத்தனை பேருக்கு கல்வி அளித்திருக்கலாம்? கர்மவீரர் காமராஜர் அதுபோன்று தெருவெங்கும் பள்ளிகள் கட்டியதால் தானே இன்று தமிழ்நாட்டில் படித்தவர் எண்ணிக்கை அதிகரித்தது? இதை தமிழுக்கு மேலான சேவை எது?

ராஜராஜ சோழன் தன் வெற்றி சின்னமாக கோயில் கட்டினான்,எகிப்திய மன்னர்கள் மேலுலகம் போக பிரமிடு கட்டினர்,ஷாஜகான் பொண்டாட்டி நினைவாக தாஜ்மகால் கட்டினான்...இந்த ஸ்கீம்களால் அவர்கள் நாடு அன்று போண்டியானது.இன்ரைய மக்களாட்சிகளால் இப்படி எல்லாம் தண்டசெலவு செய்ய முடியாது. இன்ரைய மன்னர்களை அவரகள் ஆட்சிதிறனை வைத்துதான் ஆயிரமாயிரம் காலம் கழித்த தலைமுரைகள் அறியவேண்டிவரும்.தாஜ்மகால் கட்டி பெரும் புகழை அடைவதை விட அபிரகாம் லிங்கன் மாதிரி மாபெரும் சாதனைகளை புரிந்து முன்னூறு ஆண்டுகள் கழித்தும் நம் பெயரை மக்கள் நினைவில் வைத்திருக்கும்படி செய்வது கடினமான விஷயம்தான்.

தமிழுக்கு பெரும் சேவை புரிந்தவர்கள் யார் என்று பார்த்தால் உவேசா மாதிரி மாநாடு நடத்தாமல்,அரசின் அதிகாரம் இல்லாமல் தன்னுழைப்பை நல்கி பணிபுரிந்தவர்கள் தான் கண்ணுக்கு தெரிகிறார்கள்.

//வேறு எந்த நாட்டிலும் இப்படியொரு அலகில் இப்படியானதொரு நோக்கில் இப்படியானதொரு நிகழ்வு நடத்தப்பட்டிருக்குமா? என்பதே சந்தேகம். இது போன்ற தன்னம்பிக்கை தரும் நிகழ்வுகள் ஆப்பிரிக்காவில் நடக்குமானால் அந்த நாடுகளும் முன்னேற்றமடையும். ஆயின் அங்கு இன அழிவும், வறுமையும்தான் மண்டிக்கிடக்கின்றன.//

வேறு எந்த நாட்டிலும் இதுபோல நிகழ்வுகள் நிகழாது என்பது உண்மைதான்.

அமெரிக்காவும்,இங்கிலாந்தும்,கொரியாவும்,ஜப்பானும் செம்மொழி மாநாடு நடத்தி முன்னேறியதுபோல ஆபிரிக்காவும், பீகாரும்,ஒரிசாவும் நடத்தி முன்னேறட்டும்.மாதா மாதம் மாநாடும், வாரா வாரம் கலைநிகழ்ச்சிகளும் நடந்து காங்கோவும், சூடானும் முன்னேறட்டும்.

S.Partha sarathy

unread,
Jul 10, 2010, 2:11:01 PM7/10/10
to mint...@googlegroups.com
///////இராஜராஜ சோழன் தஞ்சைக் கோயில் கட்டியது போன்ற ஒரு பெரும் கனவு இது. அவன் கட்டிய போது நிறையப் பேர் குறை சொல்லியிருப்பர். மக்கள் வரிப்பணத்தை கல்லில் போய் கொட்டுகிறான் என்று!! இன்று நாம் அது நம் பாரம்பரியம் என்று பெருமைப் படுகிறோம்//////

ஏன் பிரமீடுகளுக்கு மத்தியில் தஞ்சை கோவில் எம்மாத்திரம்? இன்று நாம் அவற்றைக் கண்டு வியப்பதினால் அவர்கள் அன்று அடிமைகளை வைத்து செய்தது சரி என்று கூறிவிடமுடியுமா?

ஐயா, தங்களைப் போல அறிஞர் பெருமக்கள் பலர் தமிழுக்கு தொண்டு செய்ய வாய்ப்புகிடைத்தது என்பது உண்மை. ஆனால் இவ்வளவு பிரமாண்டம் தேவை என அதை தாங்களே புகழ்வது எனக்கு வியப்பைத் தருகின்றது!

அன்புடன்
சே. பார்த்தசாரதி



2010/7/10 N. Kannan <navan...@gmail.com>
 

--

வினோத் ராஜன்

unread,
Jul 10, 2010, 2:33:42 PM7/10/10
to மின்தமிழ்
//ஏன் பிரமீடுகளுக்கு மத்தியில் தஞ்சை கோவில் எம்மாத்திரம்? இன்று நாம்

அவற்றைக்
கண்டு வியப்பதினால் அவர்கள் அன்று அடிமைகளை வைத்து செய்தது சரி என்று
கூறிவிடமுடியுமா? //

This is an extinct belief.

It is now proved that the Pyramid were built by paid workers. In fact,
they were looked after very well, with all the necessary support.
AFAIK Separate villages were established, near the construction sites.

V

On Jul 10, 11:11 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> ///////இராஜராஜ சோழன் தஞ்சைக் கோயில் கட்டியது போன்ற ஒரு பெரும் கனவு இது. அவன்
> கட்டிய போது நிறையப் பேர் குறை சொல்லியிருப்பர். மக்கள் வரிப்பணத்தை கல்லில்
> போய் கொட்டுகிறான் என்று!! இன்று நாம் அது நம் பாரம்பரியம் என்று பெருமைப்
> படுகிறோம்//////
>
> ஏன் பிரமீடுகளுக்கு மத்தியில் தஞ்சை கோவில் எம்மாத்திரம்? இன்று நாம் அவற்றைக்
> கண்டு வியப்பதினால் அவர்கள் அன்று அடிமைகளை வைத்து செய்தது சரி என்று
> கூறிவிடமுடியுமா?
>
> ஐயா, தங்களைப் போல அறிஞர் பெருமக்கள் பலர் தமிழுக்கு தொண்டு செய்ய
> வாய்ப்புகிடைத்தது என்பது உண்மை. ஆனால் இவ்வளவு பிரமாண்டம் தேவை என அதை தாங்களே
> புகழ்வது எனக்கு வியப்பைத் தருகின்றது!
>
> அன்புடன்
> சே. பார்த்தசாரதி
>

> 2010/7/10 N. Kannan <navannak...@gmail.com>

> ...
>
> read more »

mmanivannan

unread,
Jul 10, 2010, 2:35:50 PM7/10/10
to மின்தமிழ்

On Jul 10, 11:11 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:

>
> ஏன் பிரமீடுகளுக்கு மத்தியில் தஞ்சை கோவில் எம்மாத்திரம்? இன்று நாம் அவற்றைக்
> கண்டு வியப்பதினால் அவர்கள் அன்று அடிமைகளை வைத்து செய்தது சரி என்று
> கூறிவிடமுடியுமா?

எகிப்து பிரமிடுகள் அடிமைகளின் உழைப்பினால் எழுந்தவை என்னும் கூற்று
கட்டுக்கதை என்று அண்மையில் நிறுவியிருக்கிறார்கள்.

http://blogs.discovermagazine.com/80beats/2010/01/11/egypt-finds-tombs-of-pyramid-builders-and-more-evidence-they-were-free-men/

தஞ்சைக் கோவிலும் அடிமைகளால் கட்டப்பட்டது என்று சிலர் கூறலாம்.

ஆனால், இவை இரண்டுமே, 1930களில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் செய்தது
போல் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க அரசு செய்யும் பொதுப்பணித்
துறை வேலைகள் எனலாம். இது இல்லாவிட்டால் அண்டை நாட்டின் மீது போர்
தொடுக்க வேண்டும். பேரரசுச் சோழர்களுக்கு அண்டை நாட்டின் மீது
படையெடுக்கும் வல்லமையும், துணிச்சலும் இருந்தது. தற்காலச்
சோழர்களுக்குப் பொதுப்பணித் துறையில் ஈட்டும் வருவாய் நல்லது என்று
தோன்றி இருக்கலாம். போர் தொடுத்து மக்களை இழப்பதைக் காட்டிலும்,
இந்திரவிழா எடுப்பது சாலச் சிறந்தது என்று பூம்புகார்ச் சோழர்
நினைத்திருக்கலாம். அதைக் குறை கூற முடியுமா? இந்திர விழா
எடுக்காவிட்டால், இன்னொரு கடல்கோள் சீற்றத்துக்கு ஆளாக வேண்டுமே! இந்திர
விழா எடுத்ததால் இமயவர் அன்பராகத் தொடர முடிகிறதல்லவா? யோவான் மேநார்டு
கீந்சும் இதை ஒப்புவார் எனக் கருதலாம்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

செல்வன்

unread,
Jul 10, 2010, 2:47:27 PM7/10/10
to mint...@googlegroups.com
அடிமையை வைத்து கட்டலை என்பதற்காக பிரமிடு புத்திசாலிதனமான முதலீடு ஆகிடுமா?

நாலாயிரம் வருஷம் கழிச்சு டூரிஸ்ட் மூலம் இன்று எகிப்துக்கு வருமானம் வருது. கட்டப்பட்ட காலத்தில் அது டெட் இன்வெஸ்ட்மெண்ட். இந்த காசில் பள்ளிகள் கட்டியிருந்தால், ஆசிரியர்களை நியமித்திருந்தால் அது பயனுள்ல செயல் என ஏற்றுக்கலாம்.

karthi

unread,
Jul 10, 2010, 9:12:20 PM7/10/10
to mint...@googlegroups.com
கண்ணன்,
 
மீண்டும் உங்கள் நோக்கு ஆக்ககரமாகவும் நடுநிலையாகவும் அமைந்திருக்கிறது.
 
பெரும் செலவு செய்தார்கள் என்பது உண்மையே. ஆனால் அந்தச் செலவால் லட்சக்
கணக்கானோருக்கு மகிழ்ச்சியும், பெருமிதமும், பலருக்குச் சோறும் கூட அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உணர்வு கிலோமீட்டர் கணக்கிலும் தமிழ் வளர்ச்சி அங்குலக் கணக்கிலுமாவது
வளர்ந்திருக்கிறது.
 
கட்டுரையாளர்களுக்குப் போக்குவரத்துச் செலவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இது தமிழ்நாட்டில்
முதல் முறையாக?) ஆகவே பலரோடு பகிர்ந்துண்டிருக்கிறார்கள். (பகிர்ந்தது
கொஞ்சம் உண்டதே அதிகம் என்ற கூக்குரல் பின்னர் எழும். எதிர்பார்க்கப்பட வேண்டியதே.)
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு mega event நடக்கத் துணிச்சல் மிக்க mega thinker வேண்டும்.
இந்தக் கால கட்டத்தில் கருணாநிதி.
 
தொடர் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்பதும் தெரிகிறது. இன்னும் நல்லவை
நடக்க இவை அடிகோல வேண்டும்.
 
ரெ.கா.
 
 
 
 
----- Original Message -----
From: N. Kannan
--

N. Kannan

unread,
Jul 10, 2010, 10:02:15 PM7/10/10
to mint...@googlegroups.com
2010/7/11 S.Partha sarathy <spsar...@gmail.com>

> ஐயா, தங்களைப் போல அறிஞர் பெருமக்கள் பலர் தமிழுக்கு தொண்டு செய்ய வாய்ப்புகிடைத்தது என்பது உண்மை. ஆனால் இவ்வளவு பிரமாண்டம் தேவை என அதை தாங்களே புகழ்வது எனக்கு வியப்பைத் தருகின்றது!
>

அன்பின் சே. பார்த்தசாரதி

பிரம்மாண்டத்தின் மீது நம் எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. நம்
கடவுளருகெல்லாம் நான்கு கைகள், சிலருக்கு நான்கு முகம். அசுரர்களில்
பத்துத்தலை இராவணன். பாணாசுரனுக்கு எண்ணற்ற தலைகள், கைகள். இப்படி..

எனக்கு கல்யாணம் என்றவுடன், நான் மிக எளிமையாக ஒரு கோயிலில் வைத்து நடக்க
வேண்டுமென்றேன் (அப்போது நான் வறுமையின் நிறம் சிவப்பு :-) என் மாமனார்
கேட்கவில்லை. பல லட்சம் செலவழித்து படோடாபமாகச் செய்தார். அது அவர் ஆசை!
ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பவர் நம்மில் ஒருவர்தானே? நாம் யோசிப்பது
போலத்தானே யோசிப்பார். அவர் மட்டும் வித்தியாசமாக யோசிக்க வேண்டுமென்று
ஏன் நாம் கருத வேண்டும்?

சரி, கல்யாணமெல்லாம் சீரும் சிறப்புமாக நடந்தது. கல்யாண மாப்பிள்ளை நான்
மட்டும் மூஞ்சியைத்தூக்கி வைத்துக் கொண்டு இருக்க முடியுமா? I
thoroughly enjoyed the party!!

தமிழக முதல்வர் உலகத்தமிழர்களையும், தமிழ் உணர்வு கொண்டோரையும் வரவழைத்து
ஒரு பெரிய விருந்து கொடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறார். இது
சரித்திரத்திலேயே மிக வித்தியாசமான ஆசை. இதுவரை இதற்கொரு
முன்னுதாரணமில்லை. மிகச் சிறப்பான விருந்து. விருந்திற்குள் விருந்து
எனப் பல விருந்துகள். நம்மவூர் வழக்கில் சொல்வதானால் ஒரு மெகா கல்யாணம்.
ஒரு கல்யாணத்தில் நடக்க வேண்டிய எல்லாம் நடந்தன, ஊர்வலம், விருந்து, கலை
நிகழ்ச்சிகள். தமிழ் அன்னைக்குக் கல்யாணம். தொண்டு கிழவியான அவள்,
சீரிளமையோடு இருப்பதால் நவீன யுகத்துடன் சேர்த்து வைத்து கல்யாணம் செய்து
வைத்துப் பார்க்கிறார்கள். இது நம்ம வீட்டுக் கல்யாணம் என்பதால் கலந்து
கொண்டு மகிழ்ந்தேன். கல்யாணமென்றால் ‘சம்பந்திச் சண்டை’ இல்லாமல்
இருக்குமா? அதுவும் இருக்கிறது :-)))

க.>

N. Kannan

unread,
Jul 10, 2010, 10:19:03 PM7/10/10
to mint...@googlegroups.com
செல்வன்:

நீங்கள் சொல்வதை மறுக்க முடியுமா?

ஒரு முதலீடு. பணம் வைத்திருப்பவர் முதலிடுகிறார். பார்த்துக் கொண்டு
இருப்பவர்கள் இதை வெவ்வேறு வகைகளில் முதலீடு செய்திருந்தால் இன்னின்ன
வகையில் லாபம் என்று கருத்துச் சொல்லலாம். ஆயினும் அதிகாரம் உள்ளவர்தான்
இறுதியில் முதலீடு எதில் என்று முடிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசியல் சூழலை வைத்துதான் நாம் இதை முடிவு செய்ய முடியும்.

நண்பர் நக்கினம் சிவன் அவர்களுடன் செங்கல்பட்டு சந்தையில் ஒரு சிறு
சுற்று வந்தேன். 80 களில் மிக அமைதியாக இருந்த இராஜாஜி தெரு ‘ரங்கநாதன்
தெரு’ போல் ஆகிவிட்டது. அவ்வளவு வியாபாரப் பெருக்கம். என் பெண் சிபாரிசு
செய்தாளே என்று ‘மஞ்சள்’ எனும் சோப்பு வாங்கினேன். சிவன் அவர்களும்
சோப்பு ஒன்றைச் சிபாரிசு செய்தார். கடைக்காரர் போகும் போது, நான்
எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டார். தெரிந்து கொண்டவுடன் கேட்ட முதல்
கேள்வி, ‘செங்கல்பட்டு இப்ப எப்படி இருக்கு?’. அதாவது நமது முன்னேற்றம்
மற்றவர் கண்ணில் படும்படி உள்ளதா? ஆம்! என்றால் அதிலொரு பெருமிதம். இது
இயல்பான உளவியல். நான் சொன்னேன், ‘வளர்ச்சி அபரிதமாக உள்ளது. ஆனால்
பொறுப்பு இன்னும் வளரவில்லை. இந்தத்தெருவை இவ்வளவு அசுத்தமாக வைத்துக்
கொண்டுதான் வியாபாரம் செய்ய வேண்டுமா?’ என்று. வெளிநாடுகளிலும் இதே
பண்டங்கள்தான். ஆனால் விலை அதிகம். ஏன்? Presentation!! சுத்தமாக, அழகாக
கடையை, தெருவை வைத்துக் கொள்வதற்கு செல்வாகும். அச்செலவு பண்டத்தின் விலை
மீது ஏறும். இந்தியாவில் விலைவாசி வெளிநாடுகள் போல் கூடிக்கொண்டேதான்
போகிறது. எனவே தமிழன் காசு கொடுக்கத் தயங்க மாட்டான். எனவே Presentation
என்பதை நம்மவர் கணக்கில் கொண்டால், தமிழகம் மிக அழகாக இருக்கும். நண்பர்
சுகு என்னை அரவிந்தர் ஆஸ்ரமத்திற்கு அழைத்துப் போனார். அங்கு எல்லாம்
இயற்கையோடு இயைந்து இருக்கின்றன. பனை, அரச மரத்திற்கு நடுவேதான் கடைகள்.
ஆனால் என்ன சுத்தம்! விலையும் அதிகம். ஏன் இதை எல்லோராலும் பின் பற்ற
முடியவில்லை?

நான் சொல்ல வருவது என்னவெனில், சாதாரணத் தமிழன் தன்னளவில் கொள்கைப்
பிடிப்போடு வாழ்ந்து காட்டினால் தமிழகமே மாறும். நாம் மாற மாட்டோம்,
ஆனால் ஆட்சி பீடம் மட்டும் மாறுதலாய் இருக்க வேண்டுமென்று தமிழக
புத்திசாலிகள் (அறிவுஜீவிகள்) நினைப்பது முரண்நகை இல்லையா?

க.>


2010/7/11 செல்வன் <hol...@gmail.com>:

S.Partha sarathy

unread,
Jul 10, 2010, 10:33:11 PM7/10/10
to mint...@googlegroups.com
///சரி, கல்யாணமெல்லாம் சீரும் சிறப்புமாக நடந்தது. கல்யாண மாப்பிள்ளை நான்
மட்டும் மூஞ்சியைத்தூக்கி வைத்துக் கொண்டு இருக்க முடியுமா?  I////

!
 ஐயா, மாப்பிள்ளையாக தாங்கள்(அறிஞர்பெருமக்கள்) தான் என்பது இப்போதுதான் தெரிகின்றது. கல்யாணத்தை நடத்தியவர்தான் மாப்பிள்ளை என விளம்பரத்தையும் கல்யாண பத்திரிக்கையைப் பார்த்து பெரும்பாலானோர் நம்மிக் கொண்டிருந்ததால் வந்த குழப்பம் இது. உண்மையில் கல்யாணம் தங்களுக்கும் தமிழுக்கும் எனில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

அன்புடன்
சே.பார்த்தசாரதி


2010/7/11 N. Kannan <navan...@gmail.com>
360.gif

செல்வன்

unread,
Jul 10, 2010, 11:05:07 PM7/10/10
to mint...@googlegroups.com


2010/7/10 N. Kannan <navan...@gmail.com>

ஒரு முதலீடு. பணம் வைத்திருப்பவர் முதலிடுகிறார். பார்த்துக் கொண்டு
இருப்பவர்கள் இதை வெவ்வேறு வகைகளில் முதலீடு செய்திருந்தால் இன்னின்ன
வகையில் லாபம் என்று கருத்துச் சொல்லலாம். ஆயினும் அதிகாரம் உள்ளவர்தான்
இறுதியில் முதலீடு எதில் என்று முடிவு செய்ய வேண்டும்.


ஐயா

அந்த அதிகாரம் மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்யப்பட்டிருக்கிறதா,அல்லது மக்கள் பணம் விரயமாக்கபட்டிருக்கிறதா என்பதுதான் இங்கே விவாதம்.430 கோடி இங்கே முதலீடு செய்யபட்டதா,விரயமாக்கபட்டதா என்பது இன்னொரு கேள்வி.முதலீடு என்றால் 430 கோடியை விட அதிகமாக லாபம் வந்திருக்க வேண்டும்.இல்லை...இதில் எந்த பணரீதியான லாபமும் இல்லை.ஆக இது செலவு.மகக்ள் பணம் செலவு செய்யபட்டிருக்கிறது.அது தண்ட செலவா, இல்லை நல்ல செலவா?நல்ல செலவு என்றால் அதன் பலன் பெரும்பான்மையான மகக்ளை போய் சேர்ந்ததா இல்லை ஒரு பகுதியினரை மட்டும் போய் சேர்ந்ததா?


நண்பர் நக்கினம் சிவன் அவர்களுடன் செங்கல்பட்டு சந்தையில் ஒரு சிறு
சுற்று வந்தேன். 80 களில் மிக அமைதியாக இருந்த இராஜாஜி தெரு ‘ரங்கநாதன்
தெரு’ போல் ஆகிவிட்டது. அவ்வளவு வியாபாரப் பெருக்கம். என் பெண் சிபாரிசு
செய்தாளே என்று ‘மஞ்சள்’ எனும் சோப்பு வாங்கினேன். சிவன் அவர்களும்
சோப்பு ஒன்றைச் சிபாரிசு செய்தார். கடைக்காரர் போகும் போது, நான்
எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டார். தெரிந்து கொண்டவுடன் கேட்ட முதல்
கேள்வி, ‘செங்கல்பட்டு இப்ப எப்படி இருக்கு?’. அதாவது நமது முன்னேற்றம்
மற்றவர் கண்ணில் படும்படி உள்ளதா? ஆம்! என்றால் அதிலொரு பெருமிதம்.


முன்னேற்றம் தானாக கண்ணில் பட்டால் பரவாயில்லை ஐயா..ராஜாஜி தெரு வியாபாரிகள் தலைக்கு பத்தாயிரம் செலவு செய்து "நாங்க முன்னேறிவிட்டோம்" என ஊர்கூட்டி மாநாடு நடத்தவில்லையே?ஏன்?காரணம் அவர்களுக்கு பணத்தின் அருமை தெரியும்..அது அவர்கள் பணம்..சொந்த பணம் என்றால் எல்லோரும் பொறுப்புணர்வோடு இருப்பார்கல் ஐயா.ஒ.பி.எம் (அதர் பீப்பில்ஸ் மணி) என்றால் கணக்குவழக்கின்றி செலவு செய்வார்கள்


வெளிநாடுகளிலும் இதே
பண்டங்கள்தான். ஆனால் விலை அதிகம். ஏன்? Presentation!! சுத்தமாக, அழகாக
கடையை, தெருவை வைத்துக் கொள்வதற்கு செல்வாகும். அச்செலவு பண்டத்தின் விலை
மீது ஏறும். இந்தியாவில் விலைவாசி வெளிநாடுகள் போல் கூடிக்கொண்டேதான்
போகிறது. எனவே தமிழன் காசு கொடுக்கத் தயங்க மாட்டான். எனவே Presentation
என்பதை நம்மவர் கணக்கில் கொண்டால், தமிழகம் மிக அழகாக இருக்கும். நண்பர்
சுகு என்னை அரவிந்தர் ஆஸ்ரமத்திற்கு அழைத்துப் போனார். அங்கு எல்லாம்
இயற்கையோடு இயைந்து இருக்கின்றன. பனை, அரச மரத்திற்கு நடுவேதான் கடைகள்.
ஆனால் என்ன சுத்தம்! விலையும் அதிகம். ஏன் இதை எல்லோராலும் பின் பற்ற
முடியவில்லை?


வெளிநாட்டில் விலை அதிகம் என கூறமுடியாது ஐயா.அமெரிககவில் பெட்ரோல் ஸ்டேஷன் ரொம்ப சுத்தமாக இருக்கும்.ஆனால் பெட்ரோல் விலை  லிட்டருக்கு 33 ரூபாய்.ஹாண்டா சிவிக் கார் இங்கே 20,000 டாலர்.இந்தியாவில்  30,000 டாலர்.42 இஞ்சு சாம்சங் எல்சிடி டிவி 25,000 ரூபாய்க்கு வாங்கினேன்.அதையே என் உறவினர் 42,000 ரூபாய்க்கு இந்தியாவில் வாங்கியிருக்கிறார்

சுத்தமாக இருக்க பெரிதாக செலவு ஆகாது ஐயா.அது ஒரு பண்பு.பண்பை வளர்க்க பணம் வேண்டியதில்லை...மனம் இருந்தால் முயற்சி இருந்தால் போதும்


நான் சொல்ல வருவது என்னவெனில், சாதாரணத் தமிழன் தன்னளவில் கொள்கைப்
பிடிப்போடு வாழ்ந்து காட்டினால் தமிழகமே மாறும். நாம் மாற மாட்டோம்,
ஆனால் ஆட்சி பீடம் மட்டும் மாறுதலாய் இருக்க வேண்டுமென்று தமிழக
புத்திசாலிகள் (அறிவுஜீவிகள்) நினைப்பது முரண்நகை இல்லையா?

நகைமுரண் எதுவும் இல்லை ஐயா...எந்த நாட்டிலும் மாற்ரம் வரவேண்டுமெனில் தலைவர்கள் தான் மக்களை வழிநடத்தவேண்டும்.காந்தியும்,காமராஜும் அப்படி தான் இருந்தார்கள்.எளிமையையும், சிக்கனத்தையும் தம் கட்சியினருக்கு கற்பித்தார்கள்.மக்கள் எல்லைமீறியபோது மகக்ளை காந்தி கண்டித்தார்.அவர்களை திருத்த தான் உண்ணாவிரதம் இருந்தார்...அரசியல் தலைமை ஒழுங்காக இருந்தவரை நாடும் ஒழுங்காக இருந்தது.அது கெட்டவுடன் நாடும் கெட்டுவிட்டது.

மக்களை திருத்த தான் தலைவர்கள் தேவை.மக்களை காரணம் காட்டி தான் தவறு செய்ய அல்ல தலைமை


--
செல்வன்

www.holyox.blogspot.com

"A democracy will continue to exist up until the time that voters discover that they can vote themselves generous gifts from the public treasury. From that moment on, the majority always votes for the candidates who promise the most benefits from the public treasury, with the result that every democracy will finally collapse due to loose fiscal policy" - Alexis de Tocqueville

N. Kannan

unread,
Jul 10, 2010, 11:19:25 PM7/10/10
to mint...@googlegroups.com
பாகம் 7
 
என்னைத்தொலைக்காட்சியில் கண்ணுற்றதலால் மகிழ்வுற்ற தமிழர்களில் சிலர் என்னுடன் சேர்ந்து படமெடுத்துக் கொண்டதைப் பற்றி எழுதியிருந்தேன். ஆனால் வேறொரு வேண்டுகோளுடன் ஒருவர் வந்து என்னுடன் படமெடுத்துக் கொண்டார். அவர் என்னிடம் வந்து, ‘இரமணீதரனை நினைவிருக்கிறதா?’ என்றார். கேட்டவுடன் பளிச்சென்று இரண்டு இரமணீதரர்கள் தோன்றினர். ஒருவர் செகுவேரா, இராப்பிச்சைக்காரன் என்றெல்லாம் பெயர் சூட்டிக்கொள்ளும் பெயரிலி ;-) அவர் ஈழம். இரண்டாவது இரமணீதரன் கோவை. வைணவ ஆய்வாளர். அவரது நூலொன்றிற்கு நான் முகவுரை தந்துள்ளேன். ‘சார்! நான் கோவை இரமணீதரனின் நண்பன். உங்களை அவசியம் கண்டு வரச் சொன்னார். அத்தாட்சியாக இந்த போட்டோ!’. நான் அப்படியே நெகிழ்ந்து விட்டேன்! இலட்சபோலட்சம் மக்கள் கூடும் ஒரு பெருவிழா, அதில் ஆயிரக்கணக்கான பேராளர்கள் இங்கும் அங்கும். அதில் என்னைக் கண்டு பிடித்து முகமன் சொல்ல வேண்டுமெனில், அது என்ன நட்பு? வேடிக்கை என்னவெனில், நான் இதுவரை அந்த இரமணீதரனை நேரில் கண்டதில்லை!! பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன்கள் முன்னைவிட இப்போதுதான் அதிகம். உண்மை. நம்புங்கள்.
 
இதை சாத்தியப்படுத்திய பாலப்பிள்ளை, முத்து நெடுமாறன் என்ற இரண்டு மலேசியர்களை நன்றியுடன் நினைவுகூறாமல் மேலே தொடர முடியாது. தமிழ் மடலாடல் வரலாற்றின் இரண்டு கண்கள் இவர்கள்.
 
 muthu+bala.jpg
 
முத்துவின் தந்தை முனைவர் நெடுமாறன் புலவர். எனவே அவருக்கு தமிழ் முறையாக வந்து சேர்கிறது. ஆனால், பாலா, டெக்ஸாஸ் மாட்டுக்காரன் (அதாவது cow boy). நெஞ்சுநிறையக் கனவுகளுடன் நடமாடும் அறிவுஜீவி.பாலா தமிழ்.நெட் என்ற தமிழின் முதல் மடலாடற்குழுவை தொண்ணூறுகளில் நிறுவுகிறார். அவர் ஆங்கிலத்தில்தான் அதை நடத்துகிறார். ஆனால் வார்ப்பாளர் முத்து தமது முரசு அஞ்சல் எனும் தமிழ் எழுதி மூலம் தமிழில் மடலாடச் செய்கிறார். அதுவொரு புரட்சி. அதுவே இன்று நம்மையெல்லாம் இப்படிக் கூட்டி வைத்து சிந்திக்க வைக்கிறது. அதுவே எண்ணிலா நண்பர்களை எனக்கு அளித்து சிறப்பித்து இருக்கிறது!
 
tagadore.jpg
 
எனக்கு மின்தமிழ் (குழுமத்தை மட்டும் சொல்லவில்லை) அளித்திருக்கும் புதிய நண்பர்கள். செல்வமுரளி, தகடூர் கோபி, ஆமாச்சு. இவர்களெல்லாம் பெரும் கனவுகளுடன் நடமாடும் செயல்வீரர்கள். மீண்டும் நினைவுறுத்துகிறேன், தகவல் தொழில் நுட்பப் புரட்சி என்பது மத்திமர்களால் உருவாக்கப்பட்டு, மத்திய வர்க்கத்தினராலே வளர்த்தெடுக்கப்படுகிறது. நல்ல உதாரணம், தமிழ்ப் பற்றுக் கொண்ட இந்த இளைஞர்கள். தமிழா! தமிழா!! எ-கலப்பை முகுந்தராஜ் வந்து அறிமுகப்படுத்திக்கொண்டார். இப்படி அவ்வளாகம் முழுவதும் நம்பிக்கை நட்சத்திரங்களால் ஜொலித்தது! இதற்கெல்லாம் வாய்ப்பளித்திருக்கும் நம் தமிழக அரசை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?
 
 
toys.jpg
 
மாநாட்டு வளாகத்தில் புதிதாக அறிமுகமாகும் நட்சத்திரங்கள் வேறு. இரமணீதரன் என்று லண்டனிலிருந்து வந்திருக்கும் ஈழத்துத் தமிழர் (என்ன செய்ய? என்னைச் சுற்றி ஒரே இரமணீதரர்கள்!!). தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தனது தமிழ்ச் சொப்புகளைக் காட்டினார். இச்சொப்புகள் மூலம் குழந்தைகள் எளிதில் தமிழ் கற்றுக் கொள்ளலாமென்றார். துடிப்பான, அமைதியான இளைஞர். பாருங்கள்! உலகெங்கும் எவ்வளவு ஆர்வமான இளைஞர்கள் தமிழ் அடுத்த தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயல்படுகின்றனர் என்று.
 
இப்படத்தைக் கூர்ந்து கவனியுங்கள். பின்னால் வேடிக்கை பார்ப்பவர்கள் வளாகத் துப்புரவுத் தொழிலாளர்கள். அவர்களுக்கு என்னவொரு அரிய வாய்ப்பு இது? அவர்களால் கனவில் கூட இம்மாதிரியான ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள முடியுமா? ஆனால் அங்கு நடக்கும் அத்தனை கூடல்களையும் கண்டு இரசித்துக் கொண்டு இருந்தனர். இப்படி வேடிக்கை பார்க்கும் அன்னைக்கு என்ன தோன்றும்? தன் மகள்/மகன் இது போல் ஓர் நாள் பெரிய அறிவாளியாகி, உலக அரங்கங்களில் வலம் வர வேண்டும் என்றுதானே. அப்பெரும் கனவை இந்த மாநாடு எத்தனை உள்ளங்களில் விதைத்திருக்கும்? அதற்கு என்ன விலை நாம் கொடுக்க முடியும்?
 
இதுபோன்ற இன்னொரு உதாரணம், பழைய காலத்து காசுகளில் ஈடுபாடு காட்டும் போலீஸ்காரர் ஒருவர்!!
 
coin.jpg
 
பாருங்கள்! மற்ற காவல்காரர்கள் போல் இவர் இல்லாமல் பழைய காசுகளை தொண்டி, இராமேஸ்வரம் கடற்கரைகளில் தேடி எடுத்து தமிழனின் பெருமை சங்க காலத்தில் எப்படி இருந்தது என்பதை நிறுவுவதில் அக்கறை கொண்டுள்ளார். இவர் மற்றவர்கள் போல் முறையாகக் கல்வி கற்று இத்துறை அறிவு பெற்றவர் அல்லர். ஆயின், தான் செய்வது தமிழுக்கு வளமளிக்கும் என்று நம்புவர்கள். சும்மா, காவல் உத்தியோகம் மட்டும் செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள். இவர்கள் கனவுகளை மேலும் வளர்த்துவிட இம்மாநாடு துணை போயிருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் பல அறிஞர்களை சந்தித்து இருக்கிறார். இவரிடம் மட்டும் மூன்று மூட்டைகளில் பழைய காசுகள் உள்ளன. நம்மில் ஆர்வமுள்ளவர் ஒருவர் வந்தால் இவர் இருக்கும் இராஜபாளையத்திற்கு அனுப்பி இவரது சேகரத்திலுள்ள காசுகளை முறையாக மின்னாக்கம் செய்யலாம். பின் தினமலர் கிருஷ்ணமூர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் காட்டி இக்காசுகளின் சிறப்பை அறியலாம். பொன்னியின் செல்வன் குழும நண்பர்களும் இதில் ஈடுபடலாம். இவரது முகவரி விவரங்கள் என்னிடம் உள்ளன.
 
ஒரு மாநாட்டின் சிறப்பு என்பது மாபெரும் நிகழ்வுகளில் மட்டும் அமைந்துவிடுவதில்லை. வளாகத்திற்குள் நடைபெறும் சிறு, சிறு நிகழ்வுகளில்களிலும் அது அமைகிறது.
 
வரும்...
 
 
coin.jpg
tagadore.jpg
toys.jpg
muthu+bala.jpg

N. Kannan

unread,
Jul 10, 2010, 11:33:56 PM7/10/10
to mint...@googlegroups.com
2010/7/11 செல்வன் <hol...@gmail.com>
>
> மக்களை திருத்த தான் தலைவர்கள் தேவை.மக்களை காரணம் காட்டி தான் தவறு செய்ய அல்ல தலைமை
>


செல்வன்:

இங்கு அடிப்படையாக நாம் வேறுபடுகிறோம். தமிழகத்தில் நீதி நூல்கள்
தோன்றுவதற்குக் காரணமே மாற்றம் என்பது கீழிலிருந்து மேலாகப் போக வேண்டும்
என்பதே. ஒருவரைச் சுட்டும் போது மற்ற மூன்று விரல்கள் நம்மைத்தான்
சுட்டுகின்றன என்பார்கள். எனவே தமிழக தலைமை அப்படி இருக்கிறது என்று
குற்றம் சொன்னால், தமிழகம் அப்படி இருக்கிறது என்றுதான் பொருள். எனவே
குற்றம் சொல்வதை விட நாம் திருந்துவதற்கான மாற்றங்கள் பற்றிப் பேசலாம்
என்பது என் நோக்கு. குறை சொல்வது மிக எளிது. ஆனால், அதனால்
எப்பயனுமில்லை.

மாநாடு துவங்கிய அடுத்த நாள் வட இந்திய ஊடகங்கள் இவ்விழா பற்றி
தாறுமாறாகப் பேசின. அதற்குத் துணை போகும் வண்ணம் அவர்கள் அபிப்பிராயம்
கேட்டது ‘சோ’ ராமசாமியிடம். அவர் மற்றவர் மீது குறை சொல்லியே காலத்தைக்
கழித்தவர். அவர் இதுவொரு அரசியல் ‘தமாஷா!’ என்றார். சும்மா இருக்கிற
வாய்க்கு அவல் கொடுத்தது போன்று இவர் ‘தமாஷா’ என்ற பிரயோகத்தை வட
இந்தியனுக்குத் தருகிறார். இது நம்மை நாமே இழிவு செய்து கொள்வதாக ஆகாதா?
எங்கள் நேரத்தையும், சிரமங்களையும் பொருட்படுத்தாது வந்து கலந்து
கொள்ளும் ஒரு நிகழ்வு வெறும் ‘தமாஷாவா?’ எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு இது?
எத்தனை அறிஞர்கள் எங்கெங்கெலாமிருந்து வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.
இதை முறையாகச் சொல்ல வேண்டியது அல்லவோ தமிழனான சோவின் பொறுப்பு. அவர்
செய்வது அரசியலா? இல்லை, கட்சிக்கொடி பறக்கக்கூடாது, கட்சிக்காரர்கள்
அதிகப்பேச்சுக்கூடாது, தன்னைப் புகழாமல் தமிழை மட்டும் புகழுங்கள் என்று
சொல்லி நடத்தப்படும் ஒரு நிகழ்வு அரசியலா? என்ன சார் நியாயம்? மனசாட்சியே
இல்லாமல் நாமும் நடந்து கொண்டால்? ‘படித்தவன் சூதும் வாதும் சொன்னால்
போவான். போவான், ஐயோவென்று போவான்!’ என்கிறான் பாரதி.

க.>

karthi

unread,
Jul 10, 2010, 11:34:22 PM7/10/10
to mint...@googlegroups.com
அன்பின் சே.பார்த்தசாரதி,
 
கல்யாண ஏற்பாட்டாளரைத் துதிபாடியெதெல்லாம் பொது அரங்கில்தான்.
இங்குதான் பந்தல் காண்டிராக்டரகள் குழுமியிருந்தார்கள்.
 
கல்யாணம் நடந்ததும் மாப்பிள்ளைகள் பெண்கள் கம்பீரமாக நடந்ததும்
ஆய்வரங்கங்களில். அங்கும் இங்குமாக மாமனாருக்கு வணக்கமும் வாழ்த்தும்
சொன்னவர்கள் இருந்தாலும் பெரும்பான்மையாக அவரவர் காரியத்தில்தான்
அவரவர்க்குக் கண்.
 
இணைய அரங்கங்களில் மாமனார் பெயர் கூடப் பேசப்பட்டதா எனத் தெரியவில்லை.
நான் பார்த்தவரை அவர்களும் "காரியமே கண்ணாயினார்".
 
ரெ.கா.
360.gif

S.Partha sarathy

unread,
Jul 10, 2010, 11:58:03 PM7/10/10
to mint...@googlegroups.com
///இணைய அரங்கங்களில் மாமனார் பெயர் கூடப் பேசப்பட்டதா எனத் தெரியவில்லை///

தனியாக நடக்கவேண்டிய திருமணம்..., ஒரே மேடையில் நடந்தபோதும் அதன் இயல்பில் மாறாதது மகிழ்ச்சியே!.
அன்புடன்
சே.பார்த்தசாரதி

2010/7/11 karthi <karth...@gmail.com>
360.gif

செல்வன்

unread,
Jul 11, 2010, 12:00:41 AM7/11/10
to mint...@googlegroups.com


2010/7/10 N. Kannan <navan...@gmail.com>

இங்கு அடிப்படையாக நாம் வேறுபடுகிறோம். தமிழகத்தில் நீதி நூல்கள்
தோன்றுவதற்குக் காரணமே மாற்றம் என்பது கீழிலிருந்து மேலாகப் போக வேண்டும்
 
சரி.அப்ப .மக்கள் மோசமாக இருக்கிறார்கள்,அதனால் அரசும் மோசமாக இருக்கிறது,இந்த மாநாடும் அப்படி நடந்த ஒரு தவறான முயற்சி என வைத்துகொள்ளலாமா?


எனவே
குற்றம் சொல்வதை விட நாம் திருந்துவதற்கான மாற்றங்கள் பற்றிப் பேசலாம்
என்பது என் நோக்கு. குறை சொல்வது மிக எளிது. ஆனால், அதனால்
எப்பயனுமில்லை.


நாம் திருந்துவதை பற்றியும் பேசுவோம்.குறைகளை பற்றியும் பேசுவோம்.குறைகளை பேசாமல் இருந்தால் திருந்துவது என்று?


மாநாடு துவங்கிய அடுத்த நாள் வட இந்திய ஊடகங்கள் இவ்விழா பற்றி
தாறுமாறாகப் பேசின. அதற்குத் துணை போகும் வண்ணம் அவர்கள் அபிப்பிராயம்
கேட்டது ‘சோ’ ராமசாமியிடம். அவர் மற்றவர் மீது குறை சொல்லியே காலத்தைக்
கழித்தவர். அவர் இதுவொரு அரசியல் ‘தமாஷா!’ என்றார். சும்மா இருக்கிற
வாய்க்கு அவல் கொடுத்தது போன்று இவர் ‘தமாஷா’ என்ற பிரயோகத்தை வட
இந்தியனுக்குத் தருகிறார். இது நம்மை நாமே இழிவு செய்து கொள்வதாக ஆகாதா?

ஆகாது.

இடிப்பாரை இல்லா ஏமறா மன்னன்
கெடுபாரிலாமல் கெடும் என்கிறார் வள்ளுவபெருந்தகை.

Dissent is the highest form of patriotism என்பது அமெரிக்காவில் புகழ்பெற்ற வாசகம்.அரசின் தவறுகளை சுட்டிகாட்டுவது தான் ஜனநாயகத்தின் சிறப்பம்சம்


எங்கள் நேரத்தையும், சிரமங்களையும் பொருட்படுத்தாது வந்து கலந்து
கொள்ளும் ஒரு நிகழ்வு வெறும் ‘தமாஷாவா?’

அவர் உங்களை குறை கூறவில்லை.உங்கள் கட்டுரைகள் ஒரு பல்கலைகழகத்தின் சார்பில் எளிய கருத்தரங்காக சமர்பிக்கபட்டிருந்தால் பேரணி,ஊர்வலம்,ஐந்துநாள் விடுமுறை செலவுகள் எல்லாம் தமிழகத்துக்கு மிச்சமாகி இருக்கும்.நீங்களும் எத்தனையோ துறைசார் கருத்தரங்குகளில் கலந்துகொண்டிருப்பீர்கள்.அங்கெல்லாம் இப்படிதான் பெரும் செலவு செய்து கருத்தரங்குகள் நடைபெற்றதா?


இல்லை, கட்சிக்கொடி பறக்கக்கூடாது, கட்சிக்காரர்கள்
அதிகப்பேச்சுக்கூடாது, தன்னைப் புகழாமல் தமிழை மட்டும் புகழுங்கள் என்று
சொல்லி நடத்தப்படும் ஒரு நிகழ்வு அரசியலா?

இதை ஒரு பல்கலைகழகத்தில் எளிமையான கருத்தரங்காக நடத்தி முதல்வரும்,கல்வியாளர்களும் கலந்துகொண்டு சிறபித்திருந்தால் இதை யாரும் குறைகூறியிருக்க போவதில்லை.இத்தனை செலவு,பேரணி,பந்தல்,அலங்காரம்,தமிழ்நாடு முழுக்க ஐந்துநாள் விடுமுறை..இதை தான் பலரும் குறைகூறுகிறார்கள்.இது கட்டுரையாளர்கள் மேலான விமர்சனம் அல்ல.அரசின் மேலான விமர்சனம் மட்டுமே.

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 11, 2010, 3:16:37 AM7/11/10
to mint...@googlegroups.com

எதையும் பேசவேண்டாம் என்று மிகவும் பொறுமை காத்து வந்தேன்

கண்ணன் எழுதி வரும் தொடர் முழுதும்    இந்தியர்களைப் (!!!!!!) பற்றியும் தமிழர்களைப் பற்றியும் அங்கங்கே தெறித்து வரும் அவருடைய ஆய்வு செறிந்த வெளிப்பாடுகள்  தற்போதைக்கு அவர் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து கோவை வந்து சென்றதைப் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. 

நிறைய விஷயங்களைப் பார்த்து வலுக்கட்டாயமாகக் கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு எழுத உட்கார்ந்திருப்பதும் வெளிப்படையாக இருக்கிறது.

எங்களுக்குத்தான் அந்தத் தலையெழுத்து என்றால் வேற்று கிரகங்களில் வசிப்பவர்களுக்கு இதுபோல என்ன நெருக்கடி வந்தது என்று புரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வருங்காலத்தில் ஏதேனும் வேற்று கிரகத் துறைக்கு தனியாக அமைச்சர் பதவி என்று ஏற்படுத்தினால் டெல்லியில் சோனியா காந்தி வட்டாரம் வழியாக கலைஞர் காதுக்கு கண்ணன் வெளியிடும் பரவசத் தகவல்களை எல்லாம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்து தருகிறேன். 

ஆனால் ஏற்கனவே கலைஞரின் காதுகளில் இவையெல்லாம் எட்டியிருக்க ஏற்பாடுகள் நடந்து இருக்கும் என்றே நம்புகிறேன்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/11 செல்வன் <hol...@gmail.com>
--

N. Kannan

unread,
Jul 11, 2010, 3:46:34 AM7/11/10
to mint...@googlegroups.com
ha..haa!

இது நான் எதிர்பார்த்ததுதான் :-))

எல்லோரும் புழுதிவாரிக் கொட்டும் போது நானும் ஏன் அதில் சேர வேண்டும்?
அது மிக எளிதான செயல். எல்லோரும் எதிர்பார்ப்பது! எளிதானது!
அறிவுஜீவிகளைத் திருப்திப்படுத்துவது!

ஆனால் இப்போது நான் செய்வது வித்தியாசமானது, உண்மையானது.

நான் மீண்டும், மீண்டும் சொல்லிவிட்டேன் இது அரசியல் நோக்கில் எழுதப்பட்ட
ஒன்றல்ல. வெளிநாட்டில் கடந்த கால் நூற்றாண்டுகளாக தன் காலில் உழைத்து
வரும் ஒரு சாதாரண விஞ்ஞானிக்கு இதனால் என்ன பெரிய அரசியல் ஆதாயம்
வந்துவிடப்போகிறது? ஆனால், தாங்கள் ஏற்பாடு செய்யப் போகும் டெல்லி
விழாவிற்கு அழைப்பில்லை என்பது வேண்டுமானால் இப்போது தெரிகிறது ;-)

ஒரு வெளிநாட்டுப் பேராளன் ஒரு மாநாட்டில் கலந்து கொண்ட போது பார்த்ததை,
அனுபவப்பட்டதை அப்படியே உள்ளது, உள்ளது போல சொல்லிவருகிறேன்.

தாங்கள் எல்லோரும் ஒரு பிம்பத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். எனக்கு
அப்படியானதொரு பிம்பம் இல்லை. மாறாக நான் தினம், தினம் உயிர் பெறுகிறேன்,
வாழ்கிறேன், மடிகிறேன். நான் பார்த்தது உண்மை. சொல்வது உண்மை. இப்படியும்
கூட இருக்கும் என்றளவிலேனும் எடுத்துக் கொள்ள முடியாதபடி பதப்படுத்தல்
நடந்திருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

ஒரு நிகழ்விற்கு பல்வேறு பரிணாமங்கள் இருக்கும் என்னும் அடிப்படை உண்மையை
உணர்ந்தால் இப்பரிமாணம் புரியும். நான் ஏன் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்?
நான் நேரில் கண்டதை எழுதுகிறேன். தாங்களோ ஊடகம் வாயிலாக, பிறர் சொன்னதை
வைத்து ஒரு அபிப்பிராயம் வளர்த்துக் கொண்டு நானும் அதன் படி எழுத
வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.

நம் பிம்பங்களிலிருந்து விடுபட்டு காணும் காட்சியில் ஒரு புத்துணர்ச்சி
உண்டு என்பதை இத்தொடருக்கு பலர் கொடுக்கும் பின்னூட்டம் காட்டுகிறது.
அதிருப்தி இருக்கும் என்பதற்காக அதிருப்தியை மகிழ்ச்சிப் படுத்தும்
எழுத்தாக எழுதுவது எழுத்தாளலின் வேலை இல்லையே. ஏன் உலகை கருப்பு வெள்ளை
என்ற இரண்டு வட்டத்திற்குள் போடுகிறீர்கள். There are plenty of grey
shades in between ;-)

க.>

2010/7/11 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>:

--

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 11, 2010, 3:56:20 AM7/11/10
to mint...@googlegroups.com

தாங்கள் எல்லோரும் ஒரு பிம்பத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறீர்கள். எனக்கு

அப்படியானதொரு பிம்பம் இல்லை. மாறாக நான் தினம், தினம் உயிர் பெறுகிறேன்,
வாழ்கிறேன், மடிகிறேன். நான் பார்த்தது உண்மை. சொல்வது உண்மை. இப்படியும்
கூட இருக்கும் என்றளவிலேனும் எடுத்துக் கொள்ள முடியாதபடி பதப்படுத்தல்
நடந்திருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

நம் பிம்பங்களிலிருந்து விடுபட்டு காணும் காட்சியில் ஒரு புத்துணர்ச்சி

உண்டு என்பதை இத்தொடருக்கு பலர் கொடுக்கும் பின்னூட்டம் காட்டுகிறது.
அதிருப்தி இருக்கும் என்பதற்காக அதிருப்தியை மகிழ்ச்சிப் படுத்தும்
எழுத்தாக எழுதுவது எழுத்தாளலின் வேலை இல்லையே. ஏன் உலகை கருப்பு வெள்ளை
என்ற இரண்டு வட்டத்திற்குள் போடுகிறீர்கள். There are plenty of grey
shades in between ;-)

இதுதான் நான் நீங்கள் செய்வதாகச் சொன்னது.  இதைத்தான் வலுவாக நீங்கள் மெய்ப்பித்து வருகிறீர்கள்.

டெல்லி மாநாட்டுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.  ஒரு நல்ல செறிவுள்ள மாநாட்டை நடத்துங்கள் என்று அறிவுரை சொன்னதைத் தவிர. 
 
அங்கு பிற்காலத்தில் எனக்கே அழைப்பு இருக்குமா என்பது தெரியாது. 
 
உங்களுக்குக் கண்டிப்பாக இருக்கலாம்.
அவர்களுக்கும் நிறைய கொள்கை பரப்புச் செயலாளர்கள் தேவைப்படுகிறார்கள். 
 
இப்போது தமிழக அரசுக்குத் தேவைப்படுவது போல. 
 
உங்கள் இந்தத் தொடரை அவர்கள் படித்தால் கண்டிப்பாக உங்களைக் கூப்பிடுவார்கள். 
 
அவர்களுக்கும் வேற்று கிரகத்தில் இருந்து பெறும் சப்பைக்கட்டுக்களும் ஆறுதல்களும் தேவைப்படுமே. 

நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

 அன்புடன்

பென்னேஸ்வரன்

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/
 
 
 

2010/7/11 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Jul 11, 2010, 4:24:38 AM7/11/10
to mint...@googlegroups.com
அடேங்கப்பா!

எவ்வளவு விரைவாக பிம்பங்களை உருவாக்குகிறீர்கள் :-))

தங்கள் விருப்பப்படியே என் எழுத்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது
என்ன நியாயம்? அப்படி இல்லையெனில் தூற்றுவதும் என்ன நியாயம்? ஏன்
பதட்டப்படுகிறீர்கள்? இப்போது என்ன குடிமுழுகிப்போய்விட்டது? பல
நேரங்களில் பெரும் நிகழ்வுகள் நம்மைக் கண்டு கொள்ளாமல் நடந்துவிடுகின்றன
(என்னைக் கேட்காமல் மாநாடு தொடங்கியது போல :-)) நமது இயலாமையை காட்டியே
ஆக வேண்டுமென்ற அவசியமில்லை. பல எதிர்ப்புகளுக்கு இடையே இம்மாநாடு எவ்வித
அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்து விட்டது. நியாய உணர்வுடைய எவரும்
கலந்து கொண்டிருப்பின் இப்படித்தான் எழுதியிருப்பர். அதிருப்திப்பட
ஒழுங்கபைப்பில் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் இதன் மாபெரும் அலகைக்
கணக்கில் கொண்டால் அக்குறைபாடுகள் கூட நியாய மற்றதாய் போய் விடுவதைக்
காண்கிறேன். நல்லது நடந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு புதிய
அலை எழும்புவதைக் காண்கிறேன். இதுதான் எல்லாம்! முடிவு! என்று யாருமே
மேடையில் சொல்லவில்லை. இதுவொரு தொடக்கம் என்றுதான் திரும்பத் திரும்பச்
சொன்னார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பிற நாடுகளில் இது போன்ற
மாநாடுகள் நடைபெற வேண்டும். அதன் மொத்த விளைவு நன்மை பயப்பதாகவே


இருக்கும்.

க.>

2010/7/11 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>:

> அவர்களுக்கும் நிறைய கொள்கை பரப்புச் செயலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

Geetha Sambasivam

unread,
Jul 11, 2010, 5:02:51 AM7/11/10
to mint...@googlegroups.com
1993ல் காவிரி தந்த கலைசெல்வி இதை விட ஆடம்பரமாக தமிழ்மாநாடு நடத்தினார்.அதன்பின்னர் தமிழின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?1968ல் அண்னாதுரை தமிழ்மாநாடு நடத்தினார்.அதுக்கும் லட்சகணக்கில் கூட்டம் கூடியது.//

இவை எதுவுமே தமிழ்நாட்டை அப்போது ஆண்டு வந்த ஆட்சியாளர்களால் நடத்தப்படவில்லை. தமிழ் மொழிக்கான சர்வதேச அமைப்பால் நடத்தப்பட்டு அரசு ஆதரவும், உதவியும் செய்ததாய் நினைவு.

2010/7/10 செல்வன் <hol...@gmail.com>
--

N. Kannan

unread,
Jul 11, 2010, 7:01:28 AM7/11/10
to mint...@googlegroups.com
பாகம் 8
 
இம்மாநாட்டின் சில நிகழ்வுகள் என் கண்களைத்திறந்து விட்டன. நமது வாழ்வு என்பது பல படி நிலைகளில் இயங்குகிறது. நிஜ வாழ்வென்பது ஒன்று. இரவில் கனவுலகம் என்பதொன்று. பல நேரங்களில் நிஜமும், கனவும் போன்ற இடை நிலைகள் கூட வருவதுண்டு. கணினி தொழில் நுட்பம் வந்த பின் நமக்குப் புதியதொரு ‘அவதாரம்’ கிடைத்திருக்கிறது. அவதாரம் என்றால் ஏதோ புனைப்பெயரில் எழுதினால்தான் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். சொந்தப் பெயரில் எழுதினாலும் மின்வெளி அவதாரம் நம் நிஜத்தைவிட வேறாகவே உள்ளது. இது எப்படித்தெரிய வந்தது என்றால், தமிழ் இணைய மாநாட்டை நடத்துபவர்கள் உத்தமம் என்ற சர்வதேச அமைப்பாகும் (www.infitt.org). அந்த அமைப்பின் ஆரம்பகால உருப்பினன் நான், பல மாநாடுகளில் ஐரோப்பியக் குழுவிற்கு தலைமை ஏற்றிருக்கிறேன், சென்ற ஆண்டுவரை அதன் செயற்குழு உருப்பினனாக இருந்தேன். இம்மாநாட்டிற்கு முன் இவ்வமைப்பில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. காரசாரமான கடிதப்போக்குவரத்து. இதுவரை உத்தமம் அமைப்பை நடத்தி வந்தோர் மீது அவநம்பிக்கை, அவதூறுகள். ஒரு நிலையில் உத்தமம் உருப்பினர்களில் பலர் ஏண்டா? இந்த அமைப்பில் வந்து சேர்ந்தோம் என்பது போன்ற ஒரு மனோநிலைக்கு தள்ளப்பட்டனர். இப்பின்னணியில்தான் மாநாட்டின் இறுதியாக இவ்வமைப்பின் பொதுக்குழு கூடியது. மூத்த உருப்பினர்களெல்லாம் மிகவும் பயந்து கொண்டேதான் அமர்ந்திருந்தனர். ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில் அப்படி எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை. முடிவுரை செய்யும் போது பேரா. அனந்தகிருஷ்ணன் கூட செக்கூரிட்டி தயார் செய்ய வேண்டுமோ என அஞ்சி இருந்தேன் என்று சொல்லும் அளவிற்கு அச்சம் பலருக்கு இருந்தது.
 
இந்த அவதாரம் நிஜ உலகில் அடங்கிப் போனதேன்? முக்கிய காரணம், மின்வெளியில் முகம் காணாமல் நாம் குரல் எழுப்புகிறோம். மனித நேயம் என்பதற்கு முகம் அவசியமில்லை என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. முகம் தெரியாததும், ஆள் நேரில் இல்லை எனும் தைர்யமும் நம் ‘அவதார புருஷனை’ ஒரு angry young man வடிவத்தை எடுத்துக் கொள்ளத்தூண்டுகிறது. எனவே இந்த அவதாரம் பேசும் பேச்சில் காரம் அதிகம் இருக்கும். மரியாதை குறைவாய் இருக்கும். அவையடக்கம் இருக்காது அல்லது குறைவாய் அமையும். ஆனால் இம்மாநாட்டைக் கண்ணுற்ற போது அவர்கள் யாரையெல்லாம் பகைவர்கள் என்று மின்வெளியில் கண்டார்களோ அவர்களெல்லாம் நேரில் பார்த்துப் பழகுவதர்க்கு இனிமையானவர்களாக இருப்பதைக் கண்டனர். மேலும், நிஜ உலகில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கௌரவம் என்ற ஒன்று இருக்கிறதில்லையா? நம் கௌரவத்தை விட்டு நாம் பொதுவாய் யாருடனும் சண்டைக்குப் போவதில்லை. ஆனால் நிழல்வெளியில் இப்படியொரு கௌரவம் நமக்கு இருப்பதில்லை. ஏனெனில் நாமே நிழலாகத்தானே அங்கு நடமாடுகிறோம்!
 
ஆக, உத்தமம் பொதுக்குழு அமர்வு எங்கள் எதிர்பார்ப்பை தோற்கடித்து மிக இனிமையாக முடிந்தது. அதுவொரு இன்ப அதிர்ச்சி. அதே சமயம் நமது மின்வெளி அவதாரம் எவ்வளவு மூர்க்கமாக உருவெடுக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இக்குழுவிலும், இத்தொடரிலும் நான் சொல்வது நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. நாமெல்லாம் நேரில் சந்தித்தால் அதன் வேதிமமே வேறாக இருக்கும். மின்வெளியை நான் நிழல்வெளி என்று சொன்னேன். உண்மை என்று இப்போது புரிகிறது. நமக்குள் இருக்கும் மூர்க்கம், வெறுப்பு, பயம், வெகுளி இவையெல்லாம் நிழல்களாக ஒதுங்கும் வெளி அது என்று புரிகிறது. எனவேதான் மின்வெளி என்பது நம் உண்மையான உருவை (நல்லதும் கெட்டதும்) புரிந்து கொள்ள உதவும் கருவி என்று நான் கருதுவது சரியென்றே படுகிறது.
 
 
umarthambi_arangu.jpg
 
உமர்தம்பி அரங்கில் ஒரு கலந்துரையாடல். தரவுத்தளங்கள், தேடுபொறிகள், உரைக்கோவைகள். இதன் தொடுப்பு தற்போது கிடைத்துள்ளது. அதை நான் நாளை வெளியிடுகிறேன். இதன் ஒரு பகுதியை முன்பு வெளியிட்டேன் (எனது உரை மட்டும்).
 
தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் இணையத்திற்காக பாடு பட்ட பலருக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளது. இதிலெல்லாம் அரசு எவ்விதத்திலும் தலையிடவில்லை என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக சிங்கையின் நா.கோவிந்தசாமி, சுஜாதா, யாழன் சண்முகலிங்கம் போன்றோர். இதில் துபாயைச் சேர்ந்த உமர் தம்பி அவர்களைக் கௌரவிக்க வேண்டுமென்ற ஒரு வேண்டுகோள் அவர்கள் உறவினர்களால் எழுப்பப்பட்டது. அது என் பார்வைக்கு வந்தபோது நான் பரிந்துரைத்தேன். உமர் உண்மையிலேயே தன்னலமற்ற தங்கம். நம்மில் எத்தனை பேருக்கு அவர் உதவியிருக்கிறார்.  அவர் பெயரில் ஒரு அரங்கம் உருவானது மட்டுமல்ல தமிழ் உலகம் அறக்கட்டளை அவரை இம்மாநாட்டில் விருது கொடுத்து கௌரவித்தது.அது சமயம் நான் இருந்ததைக் கௌரவமாகக் கருதுகிறேன். உமரை நேரில்தான் பார்க்க முடியவில்லை. அவர் நினைவு நிகழ்விலாவது கலந்து கொள்ள முடிந்ததே என்ற திருப்திதான்.
 
 
umar.JPG
படத்தில்: (இடமிருந்து வலம்) சிங்கை பழனி, நான், உமரின் உறவினர்கள், ஆல்பெர்ட் (பெயர் தெரியவில்லை), பாலா.
 
இந்த மாநாட்டில் சந்தித்த இன்னொரு முக்கியமான நபர் ஆல்பெர்ட் அவர்கள். எப்படியோ தமிழ் இணைய மாநாடுகளில் சந்தித்து விடுகிறோம். கடைசியாக சந்தித்தது மாயவரத்தில் நடந்த பக்தி கருத்தரங்கில். ஆல்பெர்ட் அவர்களும் தன்னலமற்ற முறையில் தமிழ் மேம்பாட்டிற்காக உழைப்பவர். இவர்களையெல்லாம் சந்திப்பதே நம்மில் உள்ள கசடுகளைக் களைந்து ஒரு பொது நோக்கை நமக்கு வரப்பிரசாதமாக அளிக்கிறது என்று சொல்லலாம். சுஜாதாவின் பெயர் இம்மாநாட்டில் எளிதாக இடம் பெற்றிருக்கும். காரணம் கவிஞர் கனிமொழி அவர்கள் சுஜாதாவின் ஆக்கங்களை நன்கு அறிந்தவர். ஆனால் இலக்கிய உலகில் அவரொரு பிரச்சனையான எழுத்தாளர். பலருக்கு அவரைப் பிடிப்பதில்லை. 2000 வருடத்தில் காலச்சுவடு சரித்திரம் காணாத அளவில் ஒரு இலக்கிய மாநாடு நடத்தியது. அதில் இணையமும், இலக்கியமும் எனும் அமர்வை நான் தலையேற்று நடத்த வேண்டுமென்று அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் தோன்றியது சுஜாதா போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் இன்னும் உயிருடன் உலவும் போது, அவரது கணிசமான கணினித்தமிழ் பங்களிப்பை அறிந்த பின்பும் நான் தலைமை ஏற்றல் சரியில்லை என்று என் மனது சொன்னது. உடனே சுஜாதாவை நேரில் சந்தித்து தலைமை ஏற்குமாறு அழைத்தேன். வழக்கமான தமிழக இலக்கிய நுண் அரசியல் இருப்பதை உணர்ந்தேன். ஆயினும் அதுவே சரி என்று எனக்குப் பட்டது. நான் அப்படி முடிவு செய்த பின் பெரியவர் சு.ரா ஒன்றும் சொல்லவில்லை.சுஜாதா வந்து சிறப்பித்தார். ரெ.கா அந்த அமர்வில் கலந்து கொண்டார் என்று நினைவு.
 
வரும்..
 
 
umarthambi_arangu.jpg
umar.JPG

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 11, 2010, 7:04:37 AM7/11/10
to mint...@googlegroups.com
            அடேங்கப்பா!

எவ்வளவு விரைவாக பிம்பங்களை உருவாக்குகிறீர்கள் :-))

தங்கள் விருப்பப்படியே என் எழுத்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது

என்ன நியாயம்? அப்படி இல்லையெனில் தூற்றுவதும் என்ன நியாயம்? ஏன்
பதட்டப்படுகிறீர்கள்? இப்போது என்ன குடிமுழுகிப்போய்விட்டது? பல
நேரங்களில் பெரும் நிகழ்வுகள் நம்மைக் கண்டு கொள்ளாமல் நடந்துவிடுகின்றன
(என்னைக் கேட்காமல் மாநாடு தொடங்கியது போல :-)) நமது இயலாமையை காட்டியே
ஆக வேண்டுமென்ற அவசியமில்லை.
 
 

இங்குதான் வருவீர்கள் என்பதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
சரியாக வந்து விட்டீர்கள். 
 
பிம்பங்களை யார் உருவாக்கி வருகிறார்கள்? 
 
நம்முடைய விருப்பப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது கண்டிப்பாக நியாயம் இல்லை.  அப்படி நினைக்கவும் முடியாது.  ஆனால் நடந்ததை சில சௌகர்யங்களுக்காக வேறு வகையில் பதிவு செய்து கொண்டு வருவது நியாயமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 
 
இங்கு நாம் பேசிக்கொண்டு இருப்பது அங்கு நடந்தவை பற்றி அல்ல.
 
  அவற்றைப் பற்றிப் பின்தொடரும் பதிவுகளைப் பற்றித்தான்.  பிடிவாதமாக கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு செய்யப்படும் பதிவுகளைப் பற்றித்தான்.
 
அது சரி.  அவரவருக்கு அவருடைய காரியங்கள். 
 
நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.  நான் ஏதும் பேசப்போவதில்லை.  எதையாவது சொன்னால் இந்திய மனப்பான்மை, தமிழர்களின் உளப்பாங்கு - இயலாமை என்று பல்வேறு வகையான பிம்பங்களை என் மீது உருவாக்குவீர்கள். 
 
இப்போதைக்கு நீங்கள் தமிழக அரசு மற்றும் முதல்வர் மீதான பிம்பங்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள்.   அதனைத் தொடருங்கள். 
 
இனி  மௌனமான வாசகனாக மட்டுமே இருக்கப்போகிறேன்.
 
இங்கே அதிகம் பேர் பேசாமல் இருப்பது உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறார்கள் என்று தயவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 
பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/
 
 
 
2010/7/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>
 
K1993ல் காவிரி தந்த கலைசெல்வி இதை விட ஆடம்பரமாக தமிழ்மாநாடு நடத்தினார்.அதன்பின்னர் தமிழின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டது?1968ல் அண்னாதுரை தமிழ்மாநாடு நடத்தினார்.அதுக்கும் லட்சகணக்கில் கூட்டம் கூடியது.//

N. Kannan

unread,
Jul 11, 2010, 7:15:19 AM7/11/10
to mint...@googlegroups.com
2010/7/11 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

> நம்முடைய விருப்பப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைப்பது கண்டிப்பாக நியாயம் இல்லை.  அப்படி நினைக்கவும் முடியாது.  ஆனால் நடந்ததை சில சௌகர்யங்களுக்காக வேறு வகையில் பதிவு செய்து கொண்டு வருவது நியாயமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.


>
> இங்கு நாம் பேசிக்கொண்டு இருப்பது அங்கு நடந்தவை பற்றி அல்ல.
>
>   அவற்றைப் பற்றிப் பின்தொடரும் பதிவுகளைப் பற்றித்தான்.  பிடிவாதமாக கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு செய்யப்படும் பதிவுகளைப் பற்றித்தான்.
>


ஆச்சர்யமாக உள்ளது. பார்த்தது நான்! என் கண்கள்!! அது இல்லை என்று எப்படி
உங்களால் மறுதலிக்க முடிகிறது! இது என்ன பிடிவாதம்? ;-)

> இப்போதைக்கு நீங்கள் தமிழக அரசு மற்றும் முதல்வர் மீதான பிம்பங்களை உருவாக்குவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள்.   அதனைத் தொடருங்கள்.
>

இவையெல்லாம் வேண்டாத நுண் அரசியல் சிந்தனைகள். ஏன் இந்தியர்களால்
வெகுளியாக, எளிமையாக விஷயங்களைப் பார்க்கமுடியவில்லை?
(பொதுமைப்படுத்துவதற்கு மன்னிக்க). ஏன் எல்லாவற்றையும் குதர்க்கமாகப்
பார்க்க வேண்டும்? நான் எழுதுவதற்கு முன்னமே ரெ.கா எழுதியிருக்காரே!
சிங்கப்பூர்காரர்களை எழுதச் சொல்லுங்கள். மலேசியா மிகப்பெரிய குழுவை
அனுப்பி இருக்கிறது. அதன் தலைவர் இராஜேந்திரனை எழுதச் சொல்லுங்கள். யார்
பேசுவது உண்மை என்பது புலப்படும் கண்ணை மூடிக்கொண்டு தமிழக
முதல்வரைத்திட்ட வேண்டுமென்று எனக்கொரு விதி இல்லை. நான் அவரை இழுக்கவே
இல்லையே. ஒரு மாநாடு எப்படி சிறப்பாக நடந்தது என்றுதானே எழுதிவருகிறேன்.

அடராமா!

க.>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 11, 2010, 7:28:08 AM7/11/10
to mint...@googlegroups.com

கண்ணை மூடிக்கொண்டு தமிழக

முதல்வரைத்திட்ட வேண்டுமென்று எனக்கொரு விதி இல்லை. நான் அவரை இழுக்கவே
இல்லையே. ஒரு மாநாடு எப்படி சிறப்பாக நடந்தது என்றுதானே எழுதிவருகிறேன்.
 
 
மீண்டும் மீண்டும் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்து இறங்கியதைப் போல இந்திய மனப்பான்மையை சிறுமைப்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்.
 
அதே போல முதல்வரை திட்டச் சொன்னேனா?  வார்த்தைகளை ஏன் திணித்துக் கொள்கிறீர்கள்? 
 
ஏற்கனவே சென்னையில் இருக்கும் சில நண்பர்கள் இங்கு டெல்லியில் இருக்கும் நலம் விரும்பும்  நண்பர்களுக்கு என்னுடைய மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.  உங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.   அது ஒன்றும் பிரச்னையில்லை.
 
நீங்கள் எழுதுங்கள் நண்பரே.  எழுதியவற்றை மீண்டும் நேரம் கிடைக்கும்போது மறுவாசிப்பு செய்து பாருங்கள்.  நான் சொல்கிற விஷயங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியும். 
 
 நீங்களும் புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.  அதை விட்டு இந்திய மனப்பான்மை, தமிழனின் உளப்பாங்கு இயலாமை என்று மீண்டும் மீண்டும் ஆரம்பிக்காதீர்கள்.
 
ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளரின் வலைப்பதிவுகளை பற்றிச் சொல்லப்போய் இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.
 
எங்கு செருப்படி  பட்டாலும் எனக்குப் புத்தி வராது.  நீங்கள் பேஷாகத் தொடருங்கள்.
 
பென்னேஸ்வரன்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/
 
 
 
2010/7/11 N. Kannan <navan...@gmail.com>
 
--
 

mmanivannan

unread,
Jul 11, 2010, 9:54:43 AM7/11/10
to மின்தமிழ், mmani...@gmail.com

> அடிமையை வைத்து கட்டலை என்பதற்காக பிரமிடு புத்திசாலிதனமான முதலீடு ஆகிடுமா?
>
> நாலாயிரம் வருஷம் கழிச்சு டூரிஸ்ட் மூலம் இன்று எகிப்துக்கு வருமானம் வருது.
> கட்டப்பட்ட காலத்தில் அது டெட் இன்வெஸ்ட்மெண்ட். இந்த காசில் பள்ளிகள்
> கட்டியிருந்தால், ஆசிரியர்களை நியமித்திருந்தால் அது பயனுள்ல செயல் என
> ஏற்றுக்கலாம்.


மனிதர்களை ஏலம் போட்டு எடுத்து அவர்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டு
வேடிக்கை காட்டும் அரங்குகளும் பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை
தொடர்கின்றன.

ஐ.பி.எல், விளையாட்டுகளின் வீணாகும் தொகையை வைத்து பள்ளிகள்
கட்டியிருந்தால், ஆசிரியர்களை நியமித்திருந்தால்...

இந்த உலகக் கோப்பை விளையாட்டுகளாலோ, ஒலிம்பிக் விளையாட்டுகளாலோ, அவற்றை
ஏற்று நடத்தும் நாடுகளுக்கு என்ன ஆதாயம்? அந்தச் செலவுகளுக்குப் பகராக
பள்ளிகள் கட்டியிருந்தால், ஆசிரியர்களை நியமித்திருந்தால்....

ஒவ்வொரு பண்பாடும் ஏதாவது ஒரு செய்தியைக் கொண்டாடுகிறது. அமெரிக்காவில்
பேய்த்திருநாளில் ஆகாத பணவிரயமா? தூய பேட்ரிக் நாளன்று குடிக்காத
குடிநீரா? அமெரிக்கன் ஃபுட்பால், ஹாக்கி, பேஸ்பால் இதெல்லாம் மக்கள் மன
மகிழ்வுக்காக ஆடும் ஆட்டங்கள்தாமே. அவற்றினால் என்ன பயன்?

மற்றவர்கள் மொழியைக் கொண்டாடுவதில்லை. தமிழர்கள் தம் மொழியைக்
கொண்டாடுவது மற்றவர்களுக்கு வியப்பளிக்கலாம். தமிழர்களுக்குமா?

இந்த மாநாட்டின் மீது எனக்குப் பல கடுமையான பார்வைகள் உண்டு.

ஆனால், இது முழுக்க முழுக்கப் பண விரயம் என்று சொல்பவர்கள், இதைப் போன்ற
பல பண விரயங்கள் தம் கண்ணுக்குப் புலப் படாமல் போவதையும் உணர வேண்டும்.

இந்த மாநாட்டினால் பல்லாயிரக்கணக்கான பலர் கோவைப் பக்கத்தில்
குவிந்தனர். இதனால் கோவைக்குப் பொருளாதார ஆதாயம் இல்லையென்றா சொல்ல
முடியும்? பல சாலைகள், தெருக்கள், கட்டிடங்கள், தங்கும் விடுதிகள் என்று
எண்ணற்ற கட்டுமானப் பணிகள். பல விடுதிகளில் இடம் இல்லை என்னும்
அளவுக்குப் பேராளர்கள் தங்கினர். வந்த பேராளர்கள் பலர் உள்ளூர்க்
கடைகளில் ஏதாவது வாங்கிச் சென்றனர். புடவைக் கடைக்காரர்கள் பாடு
கொண்டாட்டமாய் இருக்கும். இந்த மாநாடு இல்லையென்றால் இந்த விற்பனைகள்
இல்லை.

மாநாட்டை ஒட்டி விமான நிலையத்தை மேம்படுத்தினர். மாநாட்டு வளாகம்
எவ்வளவு பெரிய நிகழ்ச்சிகளையும் நடத்தும் வசதியுள்ளது என்பது எங்களில்
பலருக்குப் பெருவியப்பளித்தது. கொர்டீசியா வளாகத்துக்கு இணையாகச்
சென்னையில் கூட ஒரு பெரும் கூடம் இல்லை. ஒரே நேரத்தில் முப்பது
அமர்வுகள், இரு பெரும் கண்காட்சிகள், நாளுக்கு இரு நூறாயிரம் பேரைத்
தாக்குப் பிடிக்கக் கூடிய வணிக வளாகம் என்று கோவை வியப்பில் ஆழ்த்தியது.

இதன் மூலம் வருங்காலத்தில் மேலும் பல வணிகக் காட்சிகள் கோவையில் கூடும்
வாய்ப்பு கூடியிருக்கிறது.

வளாகத்துக்கு அருகில் மேலும் பல வணிகக்கூடங்கள் ஏற்படும் வாய்ப்புகள்
கூடியிருக்கின்றன. பொதுவாக கோவைப் பக்கத்தில் மனைகள், வீடுகளின் மதிப்பு
மாநாட்டால் கூடியிருக்கிறது. இதே போல் ஆசிய விளையாட்டுகள் நடந்த
இடத்தில் மனை மதிப்பு கூடின. சென்னையில் அண்ணா நகர் பகுதிய் உருவானதே
எக்ஸ்போ 67 நடந்ததால்தான். இது போன்ற அடிப்படைக் கட்டுமானப் பணிகளை
முதலீடு என்றே குறிப்பிட வேண்டும். 450 கோடியில் குறைந்தது 100
கோடியாவது கோவை மக்கள் கையில் சென்று சேர்ந்திருந்தால் (இலவசமாகக் கூட
அல்ல, அவர்களது விற்பனைப் பொருள்கள், பணிகளுக்கான வருமானம் என்று..) அது
ஒரு பெரும் வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

பிரமிடுகள், தாஜ்மகால்கள், தஞ்சைப் பெருங்கோவில்கள், லிபர்ட்டி மங்கை
சிலைகள், இவை போன்ற பெரு முயற்சிகளை எல்லாம் கீனீசியன் பொருளாதாரக்
கண்ணோட்டத்தோடு பார்க்கலாம்.

ஒரு வாரம் கால்பந்து விளையாடுவதனால் வரும் நன்மையை விட ஒரு வாரம் தமிழ்
மாநாடு கூட்டுவதால் வரும் பயன் கூடுதல் என்பதை ஏற்காதவர்கள் தம் அரசியல்
கண்ணோட்டத்தைச் சற்று விலக்கி விட்டுத் திறந்த மனதோடு பார்க்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான செய்தி.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குப் புதுமையாக இருக்கலாம்.

இன்றைய இந்தியா, இன்றைய தமிழகம், மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் ஏழை
நாடல்ல. செல்வச் செழிப்புள்ள நாடு. அதனால் ஏழ்மை இல்லை என்றோ, செல்வம்
சீராக எல்லோரிடமும் பரவி இருக்கிறது என்றோ கூறவில்லை. இந்த 450 கோடி,
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஒரு பெரிய தொகையே அல்ல. இதைச் செலவிட்டதால்
பள்ளிகள் கட்டவும், ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழத்திடம் பணம் வற்றி
விடவில்லை.

கோவையில் இந்த மாநாட்டில் இட்ட மூலதனத்தால், கோவைக்கு இழப்பு ஏதும்
இல்லை. மாறாகப் பொருளீட்டும் வாய்ப்பு கூடியிருக்கும்.
தமிழ்நாட்டுக்கும் இதனால் இழப்பு ஏதும் இல்லை.

மாநாட்டைக் குறை கூற வேறு பல இருக்கின்றன. அவற்றை விட்டு விட்டு,
ஆளுக்கு 50 லட்சம் பிடுங்கினார்கள் போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
அப்படி 50 லட்சம் பிடுங்கியிருந்தால் அது மாநாட்டுக்காக
இருந்திருக்காது. அப்படிக் கொடுக்கும் வல்லமை உள்ளவர்களும் லேசுப்
பட்டவர்கள் அல்லர். அவர்களுக்கு 50 லட்சத்தை 50 கோடியாக்கும் வித்தை
தெரிந்திருக்கும். நம் அனுதாபம் அவர்களுக்குப் போக வேண்டியதில்லை.

ஓராண்டுக்குப் பின்னரும் முள்வேளி முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும்
அப்பாவி மக்களை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்று பேசலாம். பேசி என்ன
பயன்? அதுதான் பாரதி ஏற்கனவே சொல்லி விட்டுப் போனானே!

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி, கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி, கிளியே செய்வதறியாரடி.

அந்த நிலை இன்றும் மாறவில்லை என்பதுதான் உண்மை.

இல்லாவிட்டால் நாம் மனிதர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.
பணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.

வினோத்-VINOTH

unread,
Jul 11, 2010, 10:00:11 AM7/11/10
to mint...@googlegroups.com


2010/7/11 mmanivannan <mmani...@gmail.com>


இன்றைய இந்தியா, இன்றைய தமிழகம், மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் ஏழை
நாடல்ல.  செல்வச் செழிப்புள்ள நாடு.
 
தமிழகத்தின் மொத்த கடன் சுமை ரூ.74,858 கோடி (கிட்டத்தட்ட $23 பில்லியன் வெள்ளி) என்று முதல்வர் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Thu, 14/01/2010


ஒத்துக்கொள்கிறேன். இந்தியா செல்வ செழிப்புள்ள நாடுதான்.


--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


mmanivannan

unread,
Jul 11, 2010, 10:03:22 AM7/11/10
to மின்தமிழ், mmani...@gmail.com
On Jul 11, 8:34 am, "karthi" <karthige...@gmail.com> wrote:

> இணைய அரங்கங்களில் மாமனார் பெயர் கூடப் பேசப்பட்டதா எனத் தெரியவில்லை.
> நான் பார்த்தவரை அவர்களும் "காரியமே கண்ணாயினார்".

பேசினார்கள், பேசினார்கள்.

தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும், புரவலர் வாழ்த்து இடம் பெறுவது
மரபுதானே. ஆனால், அது முறையோடு நடந்தது. உமிழ்நீரெல்லாம் தமிழ்நீராகும்
அசிங்கங்கள் இங்கு இல்லை.

மற்ற இடங்களில் மருந்துக்கும் பேசவில்லை. அதுதான் பேசுவதற்கு ஆயிரம்


இருக்கிறதே.

அதே போல, ஆய்வரங்குகளில் உளவுத்துறை கடைசி வரிசையில் உட்கார்ந்து
எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருந்ததே தவிர, எதிலும்
குறுக்கிடவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் என்று பலர் அங்குமிங்கும்
இருந்தாலும், யாரும் யார் துதியும் பாட வேண்டும் என்று வற்புறுத்தவும்
இல்லை. அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை.

ஆய்வரங்குகளில் அரசியல்கட்சிகளின் குறுக்கீடு அறவே இல்லை.

mmanivannan

unread,
Jul 11, 2010, 10:15:06 AM7/11/10
to மின்தமிழ், Mani Manivannan
வினோத்,

நீங்கள் மிகவும் இளையவர் போலிருக்கிறது.

நான், கண்ணன், கலியாணசுந்தரம் போன்றவர்கள் எல்லோரும் ஏழை இந்தியாவில்
பிறந்தவர்கள்.

உங்கள் கண்ணுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிபவை எனக்கு மலைப்பாக இருக்கிறது.

பெசன்ட் நகர் கடற்கரை வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விலைக்குப்
போகிறது என்பதை நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. இதை அலட்சியமாக
வாங்கக் கூடிய மக்கள், தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து பொருளீட்டுபவர்கள்
என்பது இந்த நாட்டின் செல்வச் செழிப்புக்கு அடையாளம்.

மற்றபடி டெஃபிசிட் பைனான்ஸிங் போட்டியில் அமெரிக்காவின் டெஃபிசிட் கூடத்
தமிழ்நாடு போட்டி கூடப் போட முடியாது. அமெரிக்காவின் இன்றைய கடனை வைத்து
அதை நீங்கள் ஏழை நாட்டுப் பட்டியலில் சேர்க்கிறீர்கள் என்றால்,
தமிழ்நாடும் அமெரிக்காவுக்குப் பின்னால் போய் நிற்கலாம்.

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

On Jul 11, 7:00 pm, வினோத்-VINOTH <vinoth...@gmail.com> wrote:
> 2010/7/11 mmanivannan <mmanivan...@gmail.com>


>
> > இன்றைய இந்தியா, இன்றைய தமிழகம், மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் ஏழை
> > நாடல்ல.  செல்வச் செழிப்புள்ள நாடு.
>

> தமிழகத்தின் மொத்த கடன் சுமை* ரூ.74,858 கோடி (கிட்டத்தட்ட $23 பில்லியன்
> வெள்ளி) *என்று முதல்வர் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
> *Thu, 14/01/2010*

Tthamizth Tthenee

unread,
Jul 11, 2010, 10:17:02 AM7/11/10
to mint...@googlegroups.com
திரு மணிவண்ணன் அவர்களின் பார்வை  ஒரு நியாயமான பார்வையே
 
நாட்டில்   நாம் செய்யும் எந்தச் செயலுக்கும் ஒத்த விளைவும்  எதிர் விளைவும்  நிச்சயம்
 
சாதக பாதகங்களை  அலசுவது நல்ல செயல்தான்
 
 
நடிக நடிகையருக்கு  கோடி கோடியாகக் கொட்டிக்கொடுக்கும் திரைப்பட  முதலாளிகள்
 
வித்யாசமான  திருமணமாக இருக்கவேண்டும் என்பதற்காக  எலிகாப்டரில்  திருமணம்  செய்பவர்கள்
 
தன் பெண்ணின் திருமணத்துக்கு  வந்தவர்களுக்கெல்லாம் ஒரு சவரன் நாணையத்தை அள்ளிக்கொடுத்து  ஆர்ப்பாட்டமாக  தன் அந்தஸ்தை வெளிக்காட்டிக்கொள்ளும்  பணக்காரர்கள்
 
திரைப்படங்களில்  கோடி கோடியாக  செலவழித்து  பெரிய பெரிய  அரங்கங்களை  நிர்மாணித்து  அவற்றை ப்ரும்மாண்டம்  என்னும் பெயரில்  எரித்து  திரைப்படம் எடுத்து பணத்தை  வீணடிக்கும்  இயக்குனர்கள்
 
இவர்களையெல்லாம்  பார்க்கும் பொழுது 
 
நம் தமிழுக்காக  நம் தாய் மொழிக்காக   450 கோடி செலவழித்தது  தவறே  அல்ல
 
அப்படியே   ஒட்டு மொத்த  தமிழர்களின் நிலை உயரவும்  சில கோடிகளை   செலவழித்தாலும் தவறே  அல்ல
 
தமிழுக்கு அளிக்கும் மதிப்பில் ஒரு சதவிகிதமாவது  தமிழரையும், தமிழ்நாட்டையும் முன்னேற்றும்  நலத்திட்டங்களுக்கு செலவழித்தால் ஆதரிக்கலாம் தவறே அல்ல
 
பணம்  என்பது எவ்வளவு  கோடியாக இருந்தாலும்  அந்தப் பணத்தை  செலவழிக்கும் நோக்கம்  நியாயமாக  இருந்தால்  பாராட்டத்தான்  வேண்டும்,
 
தமிழ்நாட்டில்  மின்சாரத் துறை, நுகர்வோர் அங்காடிகள், மற்றும் அடிப்படை  வசதிகள் போன்றவற்றுக்கும்  செலவழிக்கலாமே  என்பதுதான்  நம் எண்ணம்
 
மற்ற  வெளிநாடுகளைப் பார்க்கும் போது  மக்களுக்கு  இருக்கும் எந்தவித  அடிப்படை  வசதிகளும் நம் நாட்டு மக்களுக்கு  இன்னும் கிடைக்காமல்  இருப்பதைப் பார்க்கும்போது  வருத்தமாகத்தான்  இருக்கிறது
 
அரசு  மனம் வைத்தால் நம் நாட்டையும்  இன்னும் உயர்த்தலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
11-7-10 அன்று, mmanivannan <mmani...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

வினோத்-VINOTH

unread,
Jul 11, 2010, 10:30:50 AM7/11/10
to mint...@googlegroups.com


2010/7/11 mmanivannan <mmani...@gmail.com>

வினோத்,

நீங்கள் மிகவும் இளையவர் போலிருக்கிறது.

நான், கண்ணன், கலியாணசுந்தரம் போன்றவர்கள் எல்லோரும் ஏழை இந்தியாவில்
பிறந்தவர்கள்.

உங்கள் கண்ணுக்கு மிகச் சாதாரணமாகத் தெரிபவை எனக்கு மலைப்பாக இருக்கிறது.

பெசன்ட் நகர் கடற்கரை வீடுகள் ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் விலைக்குப்
போகிறது என்பதை நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.  இதை அலட்சியமாக
வாங்கக் கூடிய மக்கள், தமிழ் நாட்டிலேயே வாழ்ந்து பொருளீட்டுபவர்கள்
என்பது இந்த நாட்டின் செல்வச் செழிப்புக்கு அடையாளம்.

மற்றபடி டெஃபிசிட் பைனான்ஸிங் போட்டியில் அமெரிக்காவின் டெஃபிசிட் கூடத்
தமிழ்நாடு போட்டி கூடப் போட முடியாது.  அமெரிக்காவின் இன்றைய கடனை வைத்து
அதை நீங்கள் ஏழை நாட்டுப் பட்டியலில் சேர்க்கிறீர்கள் என்றால்,
தமிழ்நாடும் அமெரிக்காவுக்குப் பின்னால் போய் நிற்கலாம்.


நீங்கள் சொல்வது சரிதான், மிகப்பெரிய பணக்காரத்தனம் தெரிகிறது நிஜம் தான். அந்த பணங்கள் பணம் உள்ளவரிடமே மேலும் மேலும் சேருவது கவலைக்குரியது.

நீங்கள் சொன்ன விலைமதி்ப்பான பல ஏக்கர் பட்டா போட்டு பெரிய கோடீஸ்வர்களுக்கு பிச்சை போட்ட முதல்வரை பாராட்டியே ஆகணும்.

ஏன்னா குப்பத்து ஏழைகளுக்கு இலவச  டிவி பார்த்து வயறுநிறையும் பாருங்க,

நான் இப்போதும் ஏழையாகவே இருக்கிறவன்

செம்மொழி மாநாடு நடந்ததற்கு நிச்சயமாக பெருமையே படுகிறேன். அதில் செலவழிக்கப்பட்டதில் பாதியையாவது நிஜ தமிழ் வளர்ச்சிக்கு செலவவித்திருந்தால் இன்னும் மிகப்பெருமை பட்டிருப்பேன்.

அதை விட்டுவிட்டு 100 கோடிக்கு மத்திய அரசு உதவும் என அறிக்கை விடுவதற்கு 400 கோடி செலழித்ததில் எந்த பெருமையும் இல்லை..



--

செல்வன்

unread,
Jul 11, 2010, 11:06:58 AM7/11/10
to mint...@googlegroups.com


2010/7/11 mmanivannan <mmani...@gmail.com>

மனிதர்களை ஏலம் போட்டு எடுத்து அவர்களை ஒருவரோடு ஒருவர் மோத விட்டு
வேடிக்கை காட்டும் அரங்குகளும் பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை
தொடர்கின்றன.

ஐ.பி.எல், விளையாட்டுகளின் வீணாகும் தொகையை வைத்து பள்ளிகள்
கட்டியிருந்தால், ஆசிரியர்களை நியமித்திருந்தால்...

ஐ.பி.எல் தனியார் அமைப்பு.அவர்களது பணத்தை கீழே போட்டு எரிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு.அதை வைத்து பள்ளிகள் கட்டுவர்கள் என நாம் எதிர்பார்க்க இயலாது


இந்த உலகக் கோப்பை விளையாட்டுகளாலோ, ஒலிம்பிக் விளையாட்டுகளாலோ, அவற்றை
ஏற்று நடத்தும் நாடுகளுக்கு என்ன ஆதாயம்?  அந்தச் செலவுகளுக்குப் பகராக
பள்ளிகள் கட்டியிருந்தால், ஆசிரியர்களை நியமித்திருந்தால்....

ஒலிம்பிக்ஸை லாபகரமாக நடத்த இயலும்.பலநகரங்கள் அதை லாபகரமாக நடத்தியிருக்கிறார்கள்.சில நகரங்கள் ஒலிம்பிக்ஸால் மீளாத கடன்சுமையில் சிக்கி இருக்கிறார்கள்....ஆக ஒலிம்பிக்ஸ் ஒரு பக்கா பிசினஸ் முயற்சி.சீனா மாதிரி மேற்குடாடுகள் டாம்பிகத்துக்கு ஐம்பது பில்லியன் செலவு செய்வது ஒலிம்பிக்சை நடத்துவது இல்லை.


ஒவ்வொரு பண்பாடும் ஏதாவது ஒரு செய்தியைக் கொண்டாடுகிறது.  அமெரிக்காவில்
பேய்த்திருநாளில் ஆகாத பணவிரயமா?  தூய பேட்ரிக் நாளன்று குடிக்காத
குடிநீரா?  அமெரிக்கன் ஃபுட்பால், ஹாக்கி, பேஸ்பால் இதெல்லாம் மக்கள் மன
மகிழ்வுக்காக ஆடும் ஆட்டங்கள்தாமே.  அவற்றினால் என்ன பயன்?

இதெல்லாம் பொதுமக்கள் தம் சொந்த காசை செலவு செய்து கொண்டாடும் பண்டிகைகள்....மக்கள் ஹாக்கி ஆடுவதை நிறுத்துவதும்,தொடர்வதும் அவர்கள் விருப்பம்.அரசு இதில் எல்லாம் மக்கள் நிதியை விரயமாக்குவதில்லை.நாலைந்து கோடீசுவரர்கள் கூடி கொடிசியா அரங்கை வாடகைக்கு எடுத்து தம் சொந்த நிதியில் உலக தமிழ் மாநாட்டை நடத்தியிருந்தால் யார் என்ன சொல்லியிருக்க போகிறார்கள்?


பிரமிடுகள், தாஜ்மகால்கள், தஞ்சைப் பெருங்கோவில்கள், லிபர்ட்டி மங்கை
சிலைகள், இவை போன்ற பெரு முயற்சிகளை எல்லாம் கீனீசியன் பொருளாதாரக்
கண்ணோட்டத்தோடு பார்க்கலாம்.

பார்ப்பதானால் இன்ப்ளேஷன்,டெபிசிட் போன்ற பல பொருளாதார அடிப்படைகளில் இதை அணுகவேண்டும்.1937ல் டிப்ரஷன் முடிவுக்கு வர இருந்த சமயத்தில் கெயின்ஸே "செலவு செய்தது போதும்.அரசுகள் இனி செலவை நிறுத்தவேண்டும்." என ஆலோசனை கூறினார்.ஆக சும்மா செலவு செய்துவிட்டு பழியை கெயின்ஸ் மேலே போடகூடாது.கெயின்ஸின் கொள்கையின் அடிப்படையில் இது நடந்திருந்தது என்றால்  பொருளாதாரரீதியில் அதற்கான தேவைகள் இருந்தனவா, அப்படி இருந்தாலும் அந்த பணத்தில் மாநாடு எனும் "செலவை" செய்திருக்க வேண்டுமா அல்லது அன்றைய அமஎரிக்க அரசு செய்ததுபோல் "ஹூவர் டேம்" போன்ற "முதலீடுகள்" செய்யபட்டிருக்கவேண்டுமா என யோசிக்க வேண்டும்.


இன்றைய இந்தியா, இன்றைய தமிழகம், மற்றவர்களிடம் கையேந்தி நிற்கும் ஏழை
நாடல்ல.  செல்வச் செழிப்புள்ள நாடு.  அதனால் ஏழ்மை இல்லை என்றோ, செல்வம்
சீராக எல்லோரிடமும் பரவி இருக்கிறது என்றோ கூறவில்லை.  இந்த 450 கோடி,
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஒரு பெரிய தொகையே அல்ல. இதைச் செலவிட்டதால்
பள்ளிகள் கட்டவும், ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழத்திடம் பணம் வற்றி
விடவில்லை.

அப்புறம் ஏன் ஆசிரியரே இலலத பள்ளிகள், 500 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், பெஞ்சு சேர் இல்லாமல் மரத்தடியில் வகுப்பு நடக்கும் அவலம் தமிழ்நாட்டில் தொடர்கிறது?நிதி இருக்கிரது என்றால் இதை எல்லாம் மாற்ற வேண்டியதுதானே?மரத்தடியில் பிள்ளைகள் தமிழ் படிக்கும் நிலையை ஒரு  300 கோடி ரூபாய் செலவில் கணிசமாக குறைக்க இயலும் எனும்போது அதை செய்யாமல் 450 கோடியில் மாநாடு நடத்துவது ஏழைநாட்டு வரிபணத்தை புத்திசாலிதனமாக பயன்படுத்துவதன் அர்த்தம் ஆகாது.


கோவையில் இந்த மாநாட்டில் இட்ட மூலதனத்தால், கோவைக்கு இழப்பு ஏதும்
இல்லை. மாறாகப் பொருளீட்டும் வாய்ப்பு கூடியிருக்கும்.
தமிழ்நாட்டுக்கும் இதனால் இழப்பு ஏதும் இல்லை.

கோவைக்கு ஏதும் இழப்பு இல்லை.கோவையில் போட்ட ரோடுகள் இந்த மாநாட்டின் மூலம் நடந்த ஒரு நல்ல விசயம்.ஆனால் இதை மாநாடு போடாமலே செய்திருக்கலாம்.ரோடு போடுவது அரசின் கடமை.மாநாடு நடத்துவது அரசின் கடமை அல்ல.


அந்த நிலை இன்றும் மாறவில்லை என்பதுதான் உண்மை.

இல்லாவிட்டால் நாம் மனிதர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம்.
பணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.


மக்களாட்சியில் வரிப்பணத்தை பற்றியும்,அரசின் பிரயாரிட்டிகளை பற்றியும் வரிசெலுத்தும் குடிமக்கள் பேசிதானே ஆகவேண்டும்?

--
செல்வன்

www.holyox.blogspot.com

S.Partha sarathy

unread,
Jul 11, 2010, 11:44:09 AM7/11/10
to mint...@googlegroups.com
////தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும், புரவலர் வாழ்த்து இடம் பெறுவது
மரபுதானே////

ஐயா, செல்வன் அவர்கள் சொல்வதும் இதுதான். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு புரவலர் ஆகியிருக்கின்றார்.

உலகத்தமிழ் மாநாடு இல்லாத்தால்..செந்தமிழ் மாநாடு...ஏதோ ஒரு மாநாடு..உடைபடப்போவது கடைத்தேங்காய்தானே!
கடைத்தேங்காயினால் பயன்பெற்றவர் பட்டியிலை சிலர் கூறுகின்றனர்.
கடைத்தேங்காய்காரரின் நிலைபற்றி சிலர் கூறுகின்றனர்.


அன்புடன்

சே. பார்த்தசாரதி

ஒரு விண்ணப்பம். தவற்றில் நியாயம் இருகின்றது என கூறவருவதாலயே இழையைவிட்டு விலகும் வண்ணம் எழுதநேரிடுகின்றது.









2010/7/11 mmanivannan <mmani...@gmail.com>
--

mmanivannan

unread,
Jul 11, 2010, 12:37:34 PM7/11/10
to மின்தமிழ், Mani Manivannan

On Jul 11, 8:44 pm, "S.Partha sarathy" <spsarath...@gmail.com> wrote:
> ////தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும், புரவலர் வாழ்த்து இடம் பெறுவது
> மரபுதானே////
>
> ஐயா, செல்வன் அவர்கள் சொல்வதும் இதுதான். கடைத்தேங்காயை எடுத்து
> வழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு புரவலர் ஆகியிருக்கின்றார்.

நீங்கள் உங்கள் அரசியல் கண்ணாடியைக் கழற்றி வைத்து இதைப் பார்க்க
வேண்டும். இது கடைத்தேங்காயும் இல்லை இது வழிப்பிள்ளையாரும் இல்லை.
அரசின் முக்கியத் தலைவர்களைப் போற்றுவது அவைப் பண்பு. இத்தனை ஆயிரம்
அறிஞர்களை உலகெங்கும் இருந்து கொண்டு வந்து திரட்டியதற்கு மிக முக்கிய
காரணம் இது நடந்தே தீரவேண்டும் என்று முதலமைச்சர் விரும்பியதால்தான்.

உலக சமஸ்கிருத மஹாநாடு நடத்த வேண்டியது இந்தியாவின் பொறுப்பு. இதை ஒரு
அரசால் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. அப்படி இந்தியக் கூட்டரசு
செய்வதை யாரும் எதிர்ப்பதும் இல்லை. அந்த மஹாநாட்டில் குடியரசுத்
தலைவருக்கோ, தலைமை அமைச்சருக்கோ நன்றி தெரிவிப்பது முறையான பண்பாடு.

அதே போல் செம்மொழித் தமிழுக்கு உலக அறிஞர்களைக் கூட்டி ஆராய்ச்சி மாநாடு
நடத்துவதையும் ஓர் அரசின் துணையோடுதான் நடத்த இயலும். மாநாட்டின் கூடவே
நடந்த கண்காட்சி மிக நன்றாக அமைந்திருந்தது. வாஷிங்டனில், லண்டனில்,
பாரிசில் இருங்கும் அருங்காட்சியகங்கள் போல் நல்ல முறையில்
அமைத்திருந்தனர். அவை நிரந்தரக் கண்காட்சியாகச் சென்னையிலோ, கோவையிலோ
இருந்தால் மேலும் சிறப்பு.

மாநாடு என்பதைப் பொது அரங்கில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சியை வைத்தோ அல்லது
அரசியல் கோணங்களில் பார்த்தோ அலசுவதும் தவறல்ல. ஆனால், அது மட்டும்தான்
நடந்தது என்று சொல்லுவது சரியல்ல.

கண்ணன் அவர் கண்டதை விவரிக்கிறார்.

நான் மாநாட்டை முற்றிலும் எதிர்த்தவன். இதில் கலந்து கொள்ளலாமா என்று
என்னைக் கேட்ட அமெரிக்க அறிஞர்களிடம் ஏன் இதில் கலந்து கொள்ளக் கூடாது
என்பதையும், ஏன் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதையும் இரண்டையும்
எடுத்துச் சொன்னேன். இது ஓர் அரசியல் கட்சி மாநாடாக மாறிவிடக் கூடிய
அச்சம் அப்போது இருந்தது.

எழுத்துச் சீரழிப்பு, தமிழ் எண்மக் குறியீடு பற்றிய கருத்துகளைப் பதிவு
செய்ய வேண்டியே இம்மாநாட்டில் நான் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று.
ஏற்பாட்டாளர்கள் திறமை இன்மையால் பல குறைகள் இம்மாநாட்டில் இருந்தன
என்பது என் கருத்து. இம்மாநாட்டுக்கு அரசியல் கோணங்கள் உள்ளன என்பதை
நான் நன்றாக அறிவேன். இத்தனை இருந்தும், மாநாட்டின் எதிர்ப்பாளன் என்ற
நிலையில் இருந்து இம்மாநாட்டால் தமிழுக்கும் தமிழ் ஆராய்ச்சிக்கும் நன்மை
பயக்கும் என்பதை அறிந்து மாநாட்டின் எதிர்ப்பு நிலையைத் தளர்த்திக்
கொண்டுள்ளேன்.

இதை இணைய மாநாடு 2003 போல் நடத்தியிருக்க முடியும். ஆனால், தமிழ்
மாநாடுகள் மொழிப் பாதுகாப்புக்கு மக்களையும் பிணைக்கும் மாநாடுகளாக
இருந்து வந்திருக்கின்றன. இம்மாநாட்டில் அறிவித்தது போல், இது
எப்போதாவது நடக்கும் மாநாடாக இல்லாமல், அடிக்கடி நடக்கும் மாநாடுகளாக
நடந்தால் மொழிக்கு வளம் சேரும்.

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை என்பது ஒரு நல்ல
தொடக்கம்.

தமிழ் மொழி, தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக அமைய வேண்டியது காலத்தின்
கட்டாயம். அன்றாட அலுவலுக்குத் தேவையில்லாத மொழிகள் அடுக்களை மொழிகளாக
அழிந்து விடும் இடர்ப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

இந்த மாநாடு பலர் கண்களைத் திறந்துள்ளது. இதன் தாக்கம் தொடர்வது தமிழ்
மொழிக்கு நல்லது.

இதையும் மீறிக் கட்சிக்காரர்கள் என்ன செய்தார்கள் என்று மகாத்மா
காந்தியடிகள் சொன்னது போல் சாக்கடை ஆராய்ச்சியும் செய்யலாம். இந்த
மாநாடு இல்லாவிட்டால் என்ன, வேறு ஏதாவது செய்து கட்சிக்காரர்கள் அவர்கள்
செய்யவேண்டியதைச் செய்யத்தான் போகிறார்கள். அந்தக் கட்சிக்காரர்கள் கூட,
முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு “பறக்க வேண்டும் ஒரே சின்னக்
கொடி, அது தமிழ் மாநாட்டின் வள்ளுவர் சின்னக் கொடி” என்று பறக்க விட்டது
ஒரு தனிச் சிறப்பு. அந்த ஒற்றுமை தொடரும் என்று யாரும் நினைக்கவில்லை.

ஆனால், கண்ணன் தன் கண்ணோட்டத்தைப் பகிர்வதற்கு உள்நோக்கம் கற்பிப்பதில்
என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. கண்ணனின்
உற்சாகமான பதிவுக் கண்ணோட்டத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். ஆனால்,
அவரது கண்ணோட்டமும் இந்த மாநாட்டை முற்றிலும் புரிந்து கொள்ளத் தேவையான
360 பாகையில் ஒரு பங்கு என்பதையும் நினைவில் கொள்ளுவோம்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

Nagarajan Vadivel

unread,
Jul 11, 2010, 12:58:53 PM7/11/10
to mint...@googlegroups.com
உலகத் தமிழ் மாநாடு என்பது விரல் விட்டு எண்னக் கூடிய பன்னாட்டுத் தமிழ் அறிஞாகளைக் கொண்டு இந்திய மொழிகள் சார்பான மாநாடுகளில் தமிழ் புறக்கனிக்கப் படுவதைச் சமன் செய்ய தனிநாயக அடிகளால் என்ற மலாய வாழ் இலங்கையில் பிறந்த தமிழ் அறிஞரால்உருவாக்கப்பட்ட சிறு அமைப்பாகும்.
முதல் மாநாடு தமிழ் மண்னில் நிகழவில்லை என்பதும் இரண்டாவது மாநாடு மக்கள் தொடர்பே இல்லாத ஒரு அரசால் தமிழகத்தில் நடத்த ஏற்றுக் கொள்ளப்பட்டதும் வரலாற்றுச் செய்திகள்
தங்களுடைய மக்கள் குரலே மகேசன் குரல் என்ற கொள்கையை நிறைவேற்றவும் தங்களுடைய  மக்கள் தொடர்புத் திறனையும் எழுத்து, பேச்சு, நாடகம், வெள்ளித்திரைத் தொடர்புகளையும் இணைத்து மாநிலம் அதிர மாநாட்டை நடத்தும் முடிவை அறிஞர் அண்னா நினைக்க கலைஞர் அவர்களே இன்று போல் அன்றும் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாக நிகழ்த்தி காட்டினர்.
அன்று தொடங்கி இன்றுவரை ஒவ்வொரு முறையும் முந்தைய மாநாட்டைவிட சிறப்பாக விளங்க வேண்டும் என்று திராவிடக் கட்சிகள் போடடியிடுவதும் அதற்கென கோடிக்கணக்கில் செலவு செய்வதும் ஒரு தொடர் நிகழ்வு.
பேரா.நாகராசன்

2010/7/11 S.Partha sarathy <spsar...@gmail.com>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

mmanivannan

unread,
Jul 11, 2010, 1:34:14 PM7/11/10
to மின்தமிழ், mmani...@gmail.com

எல்லா நாடுகளிலும் தனியார் செலவுகள் தனி, அரசின் செலவுகள் தனி. அரசுக்கு
என்று சில கடமைகள் உள்ளன. பெரும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள்
அமைப்பது, ஆராய்ச்சி மாநாடுகளுக்கு மானியம் அளிப்பது, அடிப்படை
ஆராய்ச்சிகளுக்குத் துணை செய்வது, அருங்காட்சியகங்கள் அமைப்பது, போன்றவை
முக்கியமானவை. பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்கு பிரெஞ்சு அரசு அளிக்கும்
மானியம் இது போன்றதுதான். சமஸ்கிருத மொழி ஆராய்ச்சிக்கு இந்திய அரசு
அளிக்கும் மானியம் இது போன்றதே.

இந்த மாநாடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி வெளிநாட்டில் இருந்து வந்த
தமிழறிஞர்கள், வேற்று இனத்தினர் நல்ல கருத்துகளைச்
சொல்லியிருக்கிறார்கள். இதைத் தனியார் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது
இன்றைய நிலையில் இயலாது. பெரும் செல்வத்தைத் திரட்டியுள்ள பல
புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் மொழி மீதும் தமிழ்நாடு மீதும்
அவ்வளவாக அக்கறை இல்லை என்பதை நான் அறிவேன். தமிழ்நாட்டில் வாழும்
பெரும் தமிழ்ச் செல்வந்தர்கள் அமைதியாகத் தமிழுக்குக் கொடையளித்து
வருகின்றனர். அருட்செல்வர் நா மகாலிங்கம் போன்றோர் பன்னெடுங்காலமாகத்
தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றனர். ஆனால், இந்த மாநாடு அவர்கள்
சக்தியையும் மீறியது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிற மாநில, பிற நாட்டு மொழியியல்
அறிஞர்கள் முதன்முறையாகத் தமிழ்மொழி மீது தமிழ் மக்களுக்கு இருக்கும்
பற்றைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கும் மேலாக, தாம் தத்தம்
மொழிகளில் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிக்கும், தமிழ் அறிஞர்கள் தமிழ்
பற்றிச் செய்து வரும் ஆராய்ச்சிக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அவர்கள்
நேரடியாகவே அளவளாவ முடிந்தது. இது வரை இத்தகைய தொடர்புகள்
இருந்திருக்கவில்லை என்பதே இது போன்ற கருத்தரங்குகளின் தேவையை
உணர்த்துகிறது. இதற்கு முன்னர் நடந்த கருத்தரங்குகளில் பிறநாட்டார்,
பிறமாநிலத்தார் கலந்து கொள்ளவில்லை என்பதும் இத்தகைய தொடர்புகளுக்கு
அரசின் ஆதரவு தேவை என்பதைக் காட்டுகிறது.

ஐபிஎல் அமைப்பு “தனியார் அமைப்பு” என்ற தோற்றம் இருந்தாலும் அதற்குக்
கிடைக்கும் எண்ணற்ற அரசுச் சலுகைகள் இல்லையென்றால் அதை இவ்வளவு பெரிதாக
நடத்த முடியாது. அத்தகைய லாப நோக்குள்ள அமைப்புகள் சரியான வரி கட்டினாலே
போதும். எத்தனையோ பள்ளிகளைக் கட்டலாம்.


ஒலிம்பிக்சை விற்றுப் பணம் ஈட்டுவது பற்றிய கடுமையான விமரிசனங்கள் உள்ளன
(http://www.lilith-ezine.com/articles/health/Olympics-
Profiteerism.html ). வாழ்க்கையில் எல்லாமே வியாபாரம் இல்லை. மேற்கு
நாடுகளும் தங்கள் பண்பாட்டைக் கொண்டாடச் செலவு செய்பவைதான். ஆனால்,
அங்கே பெரும் செல்வந்தர்கள் பெரும் கொடையாளிகளும்கூட. பண்பாடு, கலை, ஏன்
மொழி வளர்ச்சிக்கும் கூடப் பெருங்கொடை அளிப்பது மேற்கத்திய மரபு. தன்
பெண்டு தன் பிள்ளை என்ற நிலையிலிருந்து மேம்பட்டு ஊருக்குக் கொடுக்கும்
மரபு தமிழகத்தில் 19, 20 நூற்றாண்டுகளில் தளர்ந்து விட்டது.

பேராசான் உ. வே. சாமிநாதையர் அவர்கள் சிலப்பதிகாரம் பதிப்புக்காகப்
புரவலர்களை நாடிய நேரம் என்று நினைக்கிறேன். ஊரெல்லாம் அலைந்து
கொண்டிருந்தார் அவர். தமிழின் ஒப்பற்ற இலக்கியங்களை ஆறுமுக நாவலர், சி.
வை. தாமோதரனார், உ. வெ. சா., போன்றோர் பதிப்பித்திருக்காவிட்டால் இப்போது
செம்மொழி மாநாடு என்று ஒன்றெல்லாம் கூட்டியிருக்கவே முடியாது. தமிழாவது
செம்மொழியாவது என்று இப்போதும் எள்ளுவோர் கூட்டம் சங்கத்தமிழ் எல்லாம்
கட்டுக் கதை என்று கூத்தாடியிருக்கும். பேராசான் இராமநாதபுரம் சேதுபதி
மன்னரிடம் கொடை நாடிச் செல்கிறார். தீபாவளித் திருவிழா. எங்கு
பார்த்தாலும் வாண வேடிக்கை. அரசர் அந்தக் காலத்தில் லட்சக் கணக்கில்
செலவு செய்து வாண வேடிக்கை காட்டுகிறார். மக்களும் மனம் மகிழ்கிறார்கள்.
சரியான நேரத்தில் பேராசானும் செல்கிறார். இவருக்கு வேண்டியது சில ஆயிரம்
ரூபாய்கள்தாம். மன்னரும் மனமுவந்து கொடை வழங்குகிறார். சிலப்பதிகாரம்
பதிப்பிக்க வேண்டிய செலவில் ஒரு பகுதி பேராசானுக்குக் கிடைத்த மகிழ்வில்
அவர் திரும்புகிறார். ஐயர், தம் வரலாற்றில், ஓரிடத்தில் கூட, என்னடா
இது, இந்த மன்னர் வாண வேடிக்கைக்கு இத்தனை லட்சம் செலவு செய்கிறார் ஆனால்
தமிழ்ப் பதிப்புக்கு சில ஆயிரம்தான் தருகிறார் என்று குறைப்பட்டுக்
கொள்ளவில்லை.

மாநாட்டை அரசு நடத்தியிருக்க வேண்டுமா? அரசு நேரடியாக
நடத்தியிராவிட்டால், முதலமைச்சரின் நேரடி ஈடுபாடு இருந்திருக்காவிட்டால்
இவ்வளவு சிறப்பாக நடத்தியிருப்பது கடினம். அடுத்தடுத்த மாநாடுகளில்
இவ்வளவு ஆரவாரம் இல்லாமல் அமைதியான கருத்தரங்குகளை நடத்துவது நல்லது.
செம்மொழி உயராய்வு மையம் எடுத்து நடத்தலாம்.


> மக்களாட்சியில் வரிப்பணத்தை பற்றியும்,அரசின் பிரயாரிட்டிகளை பற்றியும்
> வரிசெலுத்தும் குடிமக்கள் பேசிதானே ஆகவேண்டும்?

கடந்த பல ஆண்டுகளாக மிகப் பெரும் தொகைகளை இந்தியாவில் வரிப்பணமாகக் கட்டி
வரும் எனக்கு இந்த மாநாட்டின் செலவு பற்றிய கருத்துகள் உண்டு. ஆனால்
மாநாட்டுக்கு அரசு செலவழிப்பதை ஆதரிக்கிறேன்.

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இந்த நாட்டின் அரசின் கொள்கைகளை
விமரிசிப்பவர்கள் என்னைப் போல் இங்கே வந்து வாழ்ந்து கொண்டு விமரிப்பது
நல்லது. இந்தக் கருத்தை என்னிடம் முன்பொரு முறை வலியுறுத்தியவர் செல்வன்
என்று நினைவு.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

சென்னை, தமிழ்நாடு

பி. கு. உலகக் கோப்பை ஆட்டத்தினால் இணையப் புழக்கம் கூடியிருக்கிறதா
என்று தெரியவில்லை. பி.எஸ். என். எல். இல் இருந்து கூகிள்
பக்கத்துக்குக் கூடப் போக முடியவில்லை. அண்மைக்காலத்தில் இணையத் தொடர்பு
இவ்வளவு பையப்பையப் போய்ப் பார்த்ததில்லை.

Innamburan Innamburan

unread,
Jul 11, 2010, 7:45:11 PM7/11/10
to mint...@googlegroups.com
"... மகாத்மா
காந்தியடிகள் சொன்னது போல் சாக்கடை ஆராய்ச்சியும் செய்யலாம்..."

காந்தியடிகள் காதரின் மேயோவின் 'மதர் இந்தியா' என்ற நூலை இவ்வாறு குறை கூறினார்:

"... This book is cleverly and powerfully written. The carefully
chosen quotations give it the false appearance of a truthful book. But
the impression it leaves on my mind, is that it is the report of a
drain inspector sent out with the one purpose of opening and examining
the drains of the country to be reported upon, or to give a graphic
description of the stench exuded by the opened drains. If Miss. Mayo
had confessed that she had come to India merely to open out and
examine the drains of India, there would perhaps be little to complain
about her compilation. But she declared her abominable and patently
wrong conclusion with a certain amount of triumph: 'the drains are
India'..."

அந்த நூல் கிடைப்பது அரிது. அதன் ஒரு பிரதி போர்ட்ஸ்மத் யூனிவர்சிடி
நூலகத்தில் இருக்கிறது. முழுதும் படித்து விட்டு, யான் கூறுவது யாது
எனில்:

1. '...the drains are India...என்ற அவள் கூறியது தவறு; எனினும், இன்று
அது தான் பல துறைகளில் இருக்கும் அவலம்; எனினும்,அது முழு உண்மை அல்ல;

2. காந்திஜியின் உவமை பொருத்தமற்றது. அன்றைய அரசியலில் ஏற்கப்பட்டது.
சாக்கடைகளை இன்ஸ்பெக்ட் செய்யத்தானே, சானிடரி இன்ஸ்பெக்டர். என் தாத்தா
ஒரு ஜோக் சொல்லுவார். என்றோ ஒரு நாள் வரும் சானிடரி இன்ஸ்பெக்டர், சாலை
ஓர மலத்தை ( மேயோவும் பார்த்தாள், நானும் பார்க்கிறேன். நீங்களும்
பார்க்கலாம், கண்களை திறந்தால்), ஒரு குச்சியால் எடுத்து முகர்ந்து, 'இது
முந்தா நாள் மலம்!' என்றாராம்.

3. இந்த காந்தியடிகள் உவமையை கொணருவதால், தெரிந்தோ, தெரியாமலோ, முனைவர்
கண்ணன் அனாவசியமாக, பொருத்தமற்ற வகையில், குறை காணப்படுகிறார். எனக்கு
அது விசனத்தைத் தருவிக்கிறது.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2010/7/11 mmanivannan <mmani...@gmail.com>

N. Kannan

unread,
Jul 11, 2010, 11:13:22 PM7/11/10
to mint...@googlegroups.com
2010/7/12 mmanivannan <mmani...@gmail.com>

> ஆனால், கண்ணன் தன் கண்ணோட்டத்தைப் பகிர்வதற்கு உள்நோக்கம் கற்பிப்பதில்
> என்ன நியாயம் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.  கண்ணனின்
> உற்சாகமான பதிவுக் கண்ணோட்டத்திலிருந்து நான் வேறுபடுகிறேன்.  ஆனால்,
> அவரது கண்ணோட்டமும் இந்த மாநாட்டை முற்றிலும் புரிந்து கொள்ளத் தேவையான
> 360 பாகையில் ஒரு பங்கு என்பதையும் நினைவில் கொள்ளுவோம்.
>


நன்றி மணிவண்ணன்.
குறைகளும், குறை காணுதலும் யாரிடம்தான் இல்லை?
பொதுவாக நான் அரசியல் தொடர்புகளைத் தவிர்ப்பவன். அது நம் சுதந்திரத்தைக்
கட்டுப்படுத்தும் என்று எண்ணுபவன். சாதாரணமாக இருந்திருந்தால் நான்
கலந்து கொண்டு இருந்திருக்க மாட்டேன். ஆனால் இரு வீட்டார் அழைப்பு என்பது
போல் அழைப்பு வந்தது, தெய்வாதீனமாக விடுமுறையும் எடுக்க முடிந்தது,
அதனால் கலந்து கொண்டேன். எனக்கும் மாநாட்டின் மீது குறையுண்டு. அது
அரசியல் காரணங்களால் அல்ல. பொதுவான ஒழுங்கமைப்புக் குறைபாடுகள். அது
ஒட்டு மொத்த இந்தியக் குறைபாடாகவே நான் காணுவதால் இம்மாநாடு சிறப்பாக
அமைவதாகப் படுகிறது.

எனது உற்சாகத்திற்குக் காரணமுண்டு. நான் அண்ணாதுரை காலத்திலிருந்து
இம்மாநாடுகளைக் கண்டு களித்து வருகிறேன். 1985 வருட மாநாடு எங்கள்
மதுரைப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. அப்போதே ஐராவதம் மகாதேவன்
கட்டுரையைக் கண்டு வியந்தவன். மாநாட்டு கலை நிகழ்ச்சியெல்லாம் கண்டு
ரசித்தேன். பேராளர்களுக்காக நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்டல் அறைகளை காலி
செய்து கொடுத்தோம்.
அதைக் கண்ணுறும் போது 2010-ல் நான் ஒரு பேராளானாக இம்மாநாட்டில் கலந்து
கொள்வதில் பெருமை அடைகிறேன். தமிழகம் இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு
வளம் பெற்று விட்டது? எங்கள் ஹாஸ்டல் அறை எங்கே? இப்போது இவர்கள்
எங்களுக்குக் கொடுத்த 3 bed room apartment வசதி எங்கே?

மணிவண்ணன் சொல்வது போல் இதுவொன்றும் பெரிய செலவே இல்லை. வித்தியாசமான
பெரு விருந்தொன்றைத் தமிழக அரசு தந்திருக்கிறது. விருந்தில் கலந்து
கொண்டவர் மகிழ்கின்றனர். காணோதோர் பொறுமுகின்றனர் அல்லது குறை
காணுகின்றனர். இதுவும் சகஜமே.

என் வருதமெல்லாம் டெல்லிக்காரரின் நம்பகமான வட்டம் இம்மாநாடு தோல்வி
என்று சொல்வதால் நான் சொல்வது பிழை, அதற்கு ஏதேவொரு அரசியல் ஆதாயம்
இருக்கிறது என்பது போல் திரிப்பது குறுக்கு புத்தி என்றே தோன்றுகிறது
:-)) (take it light my friend). வந்திருந்த எத்தனையோ பேர் இம்மாநாட்டின்
சிறப்பைக் கூறிச் சென்றுள்ளனர். இன்று எனக்கு ஒரு பத்திரிக்கை
ஆசிரியரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. 2.5 லட்சம் பிரதிகள் விற்கும்
ஒரு பத்திரிக்கை. அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்:

“எனக்கு மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் வெகுவாக பிடித்திருந்தன. சிறந்த
ஆய்வரங்கங்கள் மூலம் பல கருத்துக்களை
தெரிந்து கொண்டேன்; உள்வாங்கிக்கொண்டேன்.
நேர்த்தியான செயல்முறை திட்டங்கள், விருந்தினர்களை உபசரிக்கும் மாண்பு,
நெகிழ்வான சந்திப்பு, அருமையான
சீதோஷ்ணம் என அனைத்து வகைகளிலும் சிறப்பாக அமைந்து மாநாடு வெற்றி பெற்றது
என்பதில் எனக்கு ஐயமில்லை.
26 ம் தேதி சனிக்கிழமை தங்கள் கட்டுøμயும், அதன் சாμமும் என்னை வெகுவாக
கவர்ந்தன. (நல்ல வேளையாக வேறு
அமர்வுக்கு சென்றிருக்கவில்லை.) தமிழுக்கும், தென்கொரிய மொழிக்கும் உள்ள
தொடர்பை வெட்ட வெளிச்சமாக சந்தேகத்திற்கு
இடமில்லாமல் தாங்கள் வெளிப்படுத்தியது சந்தோஷமிக்க தருணம். மனதால் பூரித்தேன்.”

இம்மாநாடு கட்டாயம் தோல்வி என்று முன்னமே மனக்கணக்கு போட்டுவிட்டால் நாம்
என்ன செய்ய முடியும்? துரியோதனன், தர்மர் கண்ட காட்சிதான் நினைவிற்கு
வருகிறது. துரியோதனன் பார்வையில் நாட்டில் எதுவுமே நல்லது நடக்கவில்லை.
தருமர் பார்வையில் எல்லாமே ஒழுங்காக நல்லதனமாக நடக்கின்றன. பார்வைகளில்
நமது மன ஆரோக்கியமும் அடங்கியுள்ளது என்பதை முதலில் சொல்லித்தான்
ஆரம்பித்தேன்.

க.>

karthi

unread,
Jul 11, 2010, 11:57:40 PM7/11/10
to mint...@googlegroups.com
"உடனே சுஜாதாவை நேரில் சந்தித்து தலைமை ஏற்குமாறு அழைத்தேன். வழக்கமான தமிழக இலக்கிய நுண் அரசியல் இருப்பதை உணர்ந்தேன். ஆயினும் அதுவே சரி என்று எனக்குப் பட்டது. நான் அப்படி முடிவு செய்த பின் பெரியவர் சு.ரா ஒன்றும் சொல்லவில்லை.சுஜாதா வந்து சிறப்பித்தார். ரெ.கா அந்த அமர்வில் கலந்து கொண்டார் என்று நினைவு."
 
ஆம் நான் இருந்தேன். சுஜாதா அறிமுகத்தையும் உங்கள் பேச்சையும் கேட்டேன்.
அங்கேதான் கல்வெட்டுக்களையும் ஓலைச்சுவடிகளையும் மின்னாக்கம் செய்வது பற்றி
அழுத்தமாகப் பேசினீர்கள்.
 
ஒரு adapter-உக்காக நீங்கள் ஓடியலைந்த கதையும் தெரியும்.
 
சுஜாதாவை சு.ரா. குழுவினர் நல்ல எழுத்தாளராக ஏற்பதில்லை. அப்போது
மனுஷ்யபுத்திரனும் அவர்கள் குழுவில் இருந்தார்.
 
சுஜாதா மறைந்தவுடன் அவரைப் பற்றி வழியவழிய எழுதினார்கள். ஹூம்!
அது வேறு கதை. இங்கே வேண்டாம்.
 
ரெ.கா.
 
 
----- Original Message -----
From: N. Kannan
--
umarthambi_arangu.jpg
umar.JPG

karthi

unread,
Jul 11, 2010, 11:59:41 PM7/11/10
to mint...@googlegroups.com
நான் இதில் இணைக்க விரும்புவது இரண்டு வாக்கியங்கள்தான். நானும் இந்தக்
கிரகத்து
மனிதனே! என் கால்கள் தரையில் நிலைபட நிற்கின்றன.

ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Sunday, July 11, 2010 7:15 PM
Subject: Re: [MinTamil] செம்மொழியான தமிழ் மொழியாம்!

karthi

unread,
Jul 12, 2010, 12:05:14 AM7/12/10
to mint...@googlegroups.com
> என் வருதமெல்லாம் டெல்லிக்காரரின் நம்பகமான வட்டம் இம்மாநாடு தோல்வி
> என்று சொல்வதால் நான் சொல்வது பிழை, அதற்கு ஏதேவொரு அரசியல் ஆதாயம்
> இருக்கிறது என்பது போல் திரிப்பது குறுக்கு புத்தி என்றே தோன்றுகிறது

டெல்லிக்காரரும் சரி, அவருக்கு ஒத்த கருத்துடைய மற்றவர்களும் சரி,
சொல்ல வருகின்ற செய்தி என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லாமலேயே
சாடுகிறார்கள். மாநாடு ஏன் வருந்துதற்குரியது/கண்டித்தற்குரியது/பயனற்றது
என்பன போன்றவற்றைத் தெளிவாகச் சொன்னால் ஏற்பன ஏற்கலாம்; அல்லன தள்ளலாம்.

ரெ.கா.

----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>

N. Kannan

unread,
Jul 12, 2010, 1:48:04 AM7/12/10
to mint...@googlegroups.com
பாகம் 9
 
உல்ரிக நிகோலஸ் ஜெர்மானிய கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். இதற்கு முன் இவர் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தார். அப்போதிருந்து பழக்கம். இவர் தமது தமிழியல் ஆய்வை விளிம்புநிலை மாந்தரும் அவர்தம் கடவுளரும் என்று அமைத்துக் கொண்டு நாட்டுப்புரக் கோயில்களை அலச ஆரம்பித்தார். இவர் திருநங்கைகள் குறித்து உருவாக்கியிருக்கும் குறும் படம் பார்க்க வேண்டிய ஒன்று. நமக்குத் தெரியாத பல சேதிகள் அதிலிருக்கும். நிறைய ஆவணப்படங்கள் எடுத்து இருக்கிறார். எப்போது சிங்கை போனாலும் இவரையும் சுப.திண்ணப்பன் அவர்களையும் காணாமல் வருவதில்லை. இவர்தான் என்னை அங்கோர்வாட் போயே தீரவேண்டும் என்று வற்புறுத்தியவர். அதுதான் எவ்வளவு அழகான அனுபவம்! கொலோன் பல்கலைக் கழகம் தமிழ்த்துறையை மூடிவிட வேண்டும் என்று முடிவெடுத்த போது உல்ரிக எங்களுக்கு எழுதினார். உடனே உத்தமம் அமைப்பின் மூலமாகவும், தனிப்பட்ட அளவிலும் துணை வேந்தருக்கு கடிதமெழுதி அத்துறையைக் காப்பாற்றி இருக்கிறோம். சென்ற தமிழ் இணைய மாநாடு கொலோன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. ஒருமுறை இவரைக் காணச் சென்ற போது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் இவரின் மீசைக்காரக் கணவரைச் சந்தித்தேன்! சரவணனுடன் பேசப்பேச உல்ரிகவின் உறவு இன்னும் நெருங்க ஆரம்பித்தது. சரவணன் திருப்பூவணம் பழையூர் ஐயனார் கோயில் பூசாரி. ஆக, உல்ரிக எங்க ஊர் மாட்டுப்பெண்!! அதிலிருந்து அவரிடம் ஒரு நெருக்கம். இந்த மாநாட்டில் தன் உரை முழுவதையும் தமிழிலேயே சொல்லி, இறுதியில் ‘நான் பிறந்த இடம் ஜெர்மனி, ஆனால் புகுந்த இடம் இந்தியா’ என்று கூறி ‘மதுரையின் மருமகள் நான்’ என்று கூறியதும் மாநாட்டுப்பந்தலே கரகோஷம் எழுப்பியது. ஒரு நொடியில் எல்லோர் உள்ளத்திலும் இடம் பெற்றுவிட்டார். அவருக்கு இந்தப் பெருமையைத் தந்தது எங்கள் திருப்பூவணம் என்பதில் எனக்கு மகிழ்வே!
 
 
ulrike.jpg
படத்தில்: நடுவே உல்ரிக நிக்கலோஸ் (சல்வார்), முத்து, ஆனந்தன், அருண், ஸ்வேதா, நான்
 
மாநாட்டின் தொடக்கத்திலிருந்து அவ்வப்போது வந்து போவார் கோவைச் செல்வம் நா.கணேசன். அது அவர் பேட்டை. எனவே நாங்களெல்லாம் அடக்கி வாசித்தோம் :-)) நிற்காமல் சுற்றிக் கொண்டிருந்தார். செந்தமிழ்/இணையம் என்று இங்கொரு கால் அங்கொரு கால் ;-)
 
அதே போல் முதலில் என்னைக் கண்டு கொண்டவர். அண்ணா கண்ணன். ‘காசுமியின் கவிதைகளை வாசித்தேன்!’ என்று ஆரம்பித்தார். நிறையப் பேசினோம். அடுத்த சந்திப்பில் தம் அன்னையை அறிமுகப்படுத்தினார் (போட்டோக்கள் அவர் வலைப்பூவில்). அன்னையுடன் வந்திருந்த ஒரே பேச்சாளர் அவராகத்தான் இருக்கும். அவர் அம்மாவிற்கு ஒரே கவலை. இப்படிப் பிள்ளை வைணவ மரபை விட்டுவிட்டு தமிழ், தமிழ் என்று அலைகிறதே என்று ;-) நான் சொன்னேன், கலியன் எனும் திருமங்கை ஆழ்வாரும் இப்படித்தான் சாமி இல்லை, பூதமில்லையென்று இருந்தார், ஆனால் ஒரு குமுதவல்லியைப் பார்த்தபின் தாசானுதாசனாக (அதாவது வைஷ்ணவதாசனாக ;-) மாறிவிட்டார் என்று. எனவே விரைவில் நாம் இந்த அண்ணாகண்ணனுக்கு ஒரு நல்ல குமுதவல்லியைக் கண்டு பிடித்து மணமுடிக்க வேண்டுமென்றேன். சிரித்துக் கொண்டார். (உண்மையாக இங்குள்ள பெரியோர்கள் இதற்கு உடனே ஏற்பாடு செய்யுமாறு பரிந்துரைக்கிறேன். கண்ணன் நல்ல பையன் நாம் சொல்லும் பெண்ணைப் பார்த்து வரவாவது போவார் என்று நம்புகிறேன் ;-). அண்ணாகண்ணனும், நா.கண்ணனும் முரசொலிமாறன் அரங்கில் ஒரே மேடையில் பேசினோம். பத்ரி தலைமை. பதிரி ஒரு பதிப்பாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர். அ.கண்ணன் பத்திரிக்கையாளை, கவிஞர், மின்மரபு வல்லுநர். பத்ரியின் கேள்விகளுக்குக் கொஞ்சமும் சளைக்காமல், நிதானமாகத் தெளிவாக பதில் அளித்த பாங்கு! அண்ணா கண்ணன் இளமையிலேயே மூதறிவு பெற்றவர். ரசித்து அனுபவித்தேன்.
 
 
இம்மாநாட்டின் செந்தமிழ் வளாகத்தில் உட்கார்ந்து இருக்கும் போது இரண்டு சிவனடியார்களைக் கண்டேன். ஒருவர் மிகவும் பரிட்சயமான முகம். விழுந்தடித்துக் கொண்டு போய் அருகில் பார்த்தால் பேரூர் சாந்தலிங்கசுவாமிகள் மடத்தின் இளைய பட்டம் டாக்டர் மருதாசலம் அடிகள்! வணங்கி நின்றேன். ‘அடடே! கண்ணன் நலமா?’ என்றார். ஸ்வேதா எள் என்றால் எண்ணெய் என்று சுவாமிகள் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். அடிகள் திருநீறு இட்டு நலம் விசாரிக்க உட்கார்ந்தார். கூடவே தர்மபுர ஆதீனமும் வந்திருந்தார். அவர் எனக்கு அறிமுகமில்லை. ஆயினும் அவர் ‘சைவத்திற்கு முதன்மை இல்லாது ஒரு செந்தமிழ்மாநாடா?’ என்று குறை கூறினார். என்ன உருத்திரங்கண்ணனார் (அதில் ‘உ’ silent இப்படி யாரோ ;-) என்பதைச் சிவனரங்கு என்றே சொல்லியிருக்கலாம் என்று அவர் எதிர்பார்த்து இருக்கலாம். ஆனால் நான் டாக்டர் மருதாசலம் அவர்களிடம் அவர்கள் நூலகத்திலுள்ள செந்தமிழ் பத்திரிக்கை அனைத்தையும் விரைவில் மின்பதிப்பாக்க வேண்டுமென்று சொன்னேன். ஒருமுறை களப்பணியில் இவர்கள் மடத்தில் 10 நாட்கள் தங்கியிருக்கிறேன். மிக ஒழுங்கமைப்பான தொன்மையான மடம். இவர்களுக்கு ஒரு தமிழ் கலைக்கல்லூரி உண்டு. கொங்கு நாட்டு தொல்லியல் எனக் கருத்தரங்கு நடத்திய போது கலந்து கொண்டிருக்கிறேன். எமது முதுசொம் காட்சியகத்தின் பெரும்பாலான artifacts இம்மடத்தில் நான் தங்கியிருந்தபோது ஆவணப்படுத்தியவையே!
 
 
perur.jpg
 
 
தற்போது இவர்களிடமுள்ள சுவடிகள், பழைய நூல்கள் சஞ்சிகைகள் எல்லாவற்றையும் மின்னாக்கம் செய்யப் போவதாகவும் அதில் எம் உதவி தேவையென்றும் கூறினார். தேன் வந்து காதில் பாய்ந்தது போல் இருந்தது. நானறிந்தவரை மிகவும் முற்போக்கு கொண்ட மடம் பேரூர் மடம். செந்தமிழ் மாநாடு முடிந்த கையோடு அடிகள் அமெரிக்க ஃபெட்னா மாநாட்டிற்குப் போவதாகக் கூறி தொடர்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றார். தமிழ் இணைய மாநாட்டில் சில அமர்வுகளுக்கு வந்திருந்து கவனித்தார்,
 
(அடுத்த மடலுடன் முடிவுறும்)
 
ulrike.jpg
perur.jpg

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 12, 2010, 1:49:18 AM7/12/10
to mint...@googlegroups.com
துவக்கத்தில் இருந்து இந்த இழையை சற்று பொறுமையாக கவனித்து வாருங்கள்.
 
நான் எங்கும் செலவினங்கள் பற்றிப் பேசவில்லை
 
மாநாட்டின் தேவை - தேவை இல்லாமை பற்றிப் பேசவில்லை.
 
முதல்வர் பற்றிப் பேசவில்லை.
 
அமைச்சர்கள் பற்றிப் பேசவில்லை
 
வசதிகள் பற்றிப் பேசவில்லை.
 
நான் நேரடியாக சொன்னது வேறு.  வெசாவும் அது குறித்து கோடிட்டுப் பேசி இருக்கிறார்.
 
இது தன்னுடைய வசதிக்காகக் கண்களை மூடிக் கொள்கிற விஷயத்தைப் பற்றி நான் பேசினேன். 
 
25 லட்சம் விற்கும் பத்திரிகை ஆசிரியர் சொன்னதை வைத்து பூரிக்கும் ஒரு மனத்தின் முன்பு வெறும் ஐந்தாயிரம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகையோடு தொடர்பு உடையவன் சொல்வது ஏற்புடையதாகுமா?
 
குறுகல் புத்திதான்.  ஏனென்றால் இது வேற்று கிரகத்தில் இருந்து வரவில்லை.  இந்திய புத்திதான். தமிழகம் பற்றி மட்டுமே அறிந்த புத்திதான்.
 
தொலைக்காட்சிக்குத் தலைகாட்டும் தமிழ்மனத்தைச் சாடும் இதே விசால மனம் தான் தலையைக் காட்டும் தொலைக்காட்சி நேர்காணலுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டதற்கு சாட்சியங்கள் இந்தக் குழுவின் மடல்களிலேயே உள்ளன.  இல்லை என்று சொல்லட்டும்.
 
இவர் கண்களை மூடிக்கொண்டதை சுட்டிக் காட்டியதற்கு என்னை அழைக்கவில்லை என்ற பொறாமை என்றார்.  இயலாமை என்றார்.  குறுகிய மனம் என்றார்.  
 
வெளிநாட்டில் இருந்து வந்த இவர்களைப் போன்றவர்களுக்குக் கிடைத்த வசதிமிக்க அனுபவத்தைப் பொதுமையாக்கிக் கொண்டிருக்கிறார்.    
 
இதற்கு மேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? 
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
 

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/12 karthi <karth...@gmail.com>

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 12, 2010, 1:51:34 AM7/12/10
to mint...@googlegroups.com
துவக்கத்தில் இருந்து இந்த இழையை சற்று பொறுமையாக கவனித்து வாருங்கள்.
 
நான் எங்கும் செலவினங்கள் பற்றிப் பேசவில்லை
 
மாநாட்டின் தேவை - தேவை இல்லாமை பற்றிப் பேசவில்லை.
 
முதல்வர் பற்றிப் பேசவில்லை.
 
அமைச்சர்கள் பற்றிப் பேசவில்லை
 
வசதிகள் பற்றிப் பேசவில்லை.
 
நான் நேரடியாக சொன்னது வேறு.  வெசாவும் அது குறித்து கோடிட்டுப் பேசி இருக்கிறார்.
 
இது தன்னுடைய வசதிக்காகக் கண்களை மூடிக் கொள்கிற விஷயத்தைப் பற்றி நான் பேசினேன். 
 
25 லட்சம் விற்கும் பத்திரிகை ஆசிரியர் சொன்னதை வைத்து பூரிக்கும் ஒரு மனத்தின் முன்பு வெறும் ஐந்தாயிரம் பிரதிகள் விற்கும் ஒரு பத்திரிகையோடு தொடர்பு உடையவன் சொல்வது ஏற்புடையதாகுமா?
 
குறுகல் புத்திதான்.  ஏனென்றால் இது வேற்று கிரகத்தில் இருந்து வரவில்லை.  இந்திய புத்திதான். தமிழகம் பற்றி மட்டுமே அறிந்த புத்திதான்.
 
தொலைக்காட்சிக்குத் தலைகாட்டும் தமிழ்மனத்தைச் சாடும் இதே விசால மனம் தான் தலையைக் காட்டும் தொலைக்காட்சி நேர்காணலுக்கு பில்டப் கொடுத்துக் கொண்டதற்கு சாட்சியங்கள் இந்தக் குழு
 
 
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/12 karthi <karth...@gmail.com>
என் வருதமெல்லாம் டெல்லிக்காரரின் நம்பகமான வட்டம் இம்மாநாடு தோல்வி

செல்வன்

unread,
Jul 12, 2010, 2:08:58 AM7/12/10
to mint...@googlegroups.com
2010/7/11 mmanivannan <mmani...@gmail.com>
எல்லா நாடுகளிலும் தனியார் செலவுகள் தனி, அரசின் செலவுகள் தனி.  அரசுக்கு
என்று சில கடமைகள் உள்ளன.  பெரும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள்
அமைப்பது, ஆராய்ச்சி மாநாடுகளுக்கு மானியம் அளிப்பது, அடிப்படை
ஆராய்ச்சிகளுக்குத் துணை செய்வது, அருங்காட்சியகங்கள் அமைப்பது, போன்றவை
முக்கியமானவை.  


ஆம்.முற்றிலும் உண்மை.இது அனைத்தும் அரசின் கடமை.ஆனால் ஐந்துநாள் அரசை ஷட்டவுன் செய்து,பொதுமக்கள் காசில் ஊரை கூட்டி மாநாடு நடத்துவது எந்த அரசின் கடமையும் அல்ல.அதன் பெயர் விரயம்.
 
பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்கு பிரெஞ்சு அரசு அளிக்கும்
மானியம் இது போன்றதுதான்.  சமஸ்கிருத மொழி ஆராய்ச்சிக்கு இந்திய அரசு
அளிக்கும் மானியம் இது போன்றதே.

கவிஞர்களுக்கு மானியம் அளிப்பது,மொழி வளர ட்ரஸ்ட் அமைப்பது,கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிப்பது இதெல்லாம் நியாயம்.மாநாடு நடத்துவது அரசின் வேலை அல்ல.


இந்த மாநாடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி வெளிநாட்டில் இருந்து வந்த
தமிழறிஞர்கள், வேற்று இனத்தினர் நல்ல கருத்துகளைச்
சொல்லியிருக்கிறார்கள். 

மாநாட்டுக்கு வந்தவர்கள் மாநாடு நடத்தியிருக்க கூடாது என்றா சொல்லுவார்கள்?விருந்துக்கு போன இடத்தை பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்லுவதுதான் பண்பாடு


இதைத் தனியார் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது
இன்றைய நிலையில் இயலாது.  பெரும் செல்வத்தைத் திரட்டியுள்ள பல
புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தமிழ் மொழி மீதும் தமிழ்நாடு மீதும்
அவ்வளவாக அக்கறை இல்லை என்பதை நான் அறிவேன்.  தமிழ்நாட்டில் வாழும்
பெரும் தமிழ்ச் செல்வந்தர்கள் அமைதியாகத் தமிழுக்குக் கொடையளித்து
வருகின்றனர்.  அருட்செல்வர் நா மகாலிங்கம் போன்றோர் பன்னெடுங்காலமாகத்
தொடர்ந்து தொண்டாற்றி வருகின்றனர்.  ஆனால், இந்த மாநாடு அவர்கள்
சக்தியையும் மீறியது.

ஏழைநாட்டின் சக்தியை மீறியது இந்த மாநாடு என்பதைதான் நான் சொல்லி வருகிறேன்.சொந்தகாசில் இம்மாதிரி ஐந்துநாள் திருவிழாவை யாரும் நடத்த மாட்டார்கள்.தமிழுக்கு உருப்படியாக வேறு என்ன செய்யலாம் என வேண்டுமனால் யோசிப்பார்களே ஒழிய சொந்தகாசில் மாநாடு நடத்தலாம் என யாரும் நினைக்கமாட்டார்கள்.அரசு பஸ்ஸை கொளுத்தும் ஆட்கள் நிறைந்த ஊரில் அரசின் காசு தன் காசு என்ற உணர்வு எத்தனை பேருக்கு இருக்கபோகிறது?அரசின் காசு எவன் காசோ, கிடைத்தவரை அடித்து சுருட்டு என தான் இருப்பார்கள்.பத்ரி கூட பதிவு போட்டு யாராரோ வந்து கிடைத்ததை சுருட்டிகொண்டு போனார்கள் என எழுதி புலம்பி தள்ளியிருந்தார்.



ஐபிஎல் அமைப்பு “தனியார் அமைப்பு” என்ற தோற்றம் இருந்தாலும் அதற்குக்
கிடைக்கும் எண்ணற்ற அரசுச் சலுகைகள் இல்லையென்றால் அதை இவ்வளவு பெரிதாக
நடத்த முடியாது.  அத்தகைய லாப நோக்குள்ள அமைப்புகள் சரியான வரி கட்டினாலே
போதும்.  எத்தனையோ பள்ளிகளைக் கட்டலாம்.

நூறு சதவிகிதம் வரிபோடுங்கள்.கட்டலைன்னா ஜெயிலில் போடுங்கள்...அது வேறு விஷயம்.ஆனால் கிடைத்த வரிப்பணத்தை அரசு பொறுப்புடன் செலவு செய்ய வேண்டும்.அது ஏழைநாட்டு மக்களின் பணம்.அந்த பொறுப்பு அரசுக்கு வேண்டும்.மக்களும் ஒழுங்கா வரி செலுத்த வேண்டும்.அவனை நிறுத்த சொல்லு,நான் நிறுத்தறேன் என்பதெல்லாம் இங்கே பொருந்தாது..


ஒலிம்பிக்சை விற்றுப் பணம் ஈட்டுவது பற்றிய கடுமையான விமரிசனங்கள் உள்ளன
(http://www.lilith-ezine.com/articles/health/Olympics-
Profiteerism.html ). 

எனக்கு அரசு வரிப்பணத்தை ஒலிம்பிக்ஸில் விரயம் செய்வதில் உடன்பாடில்லை.ஒலிம்பிக்ஸில் போட்ட காசுக்கு மேல் வருமானம் வரணும்.மக்கள் காசு தொலைய கூடாது.அவ்வளவுதான்...ஒலிம்பிக்சுக்கான பட்ஜெட் அந்தந்த நகரின் மேல் தான் விழணும்.நாட்டின் மேல் விழகூடாது.அந்த நகரம் தன் மக்களிடம் இருந்து பணத்தை திரட்டி ஒலிம்பிக்சை நடத்தணும்.வரும் லாப நஷ்டத்துக்கு மக்களிடம் பதில் சொல்லணும்.அப்பதான் அரசுகள் பொறுப்பா இருக்கும்.மத்திய அரசின் பணத்தை கணக்குவழக்கின்றி செலவழித்தால் ஒலிம்பிக்ஸ் என்பது இன்னொரு வெள்ளையானையா ஆகும்.அந்த போட்டியின் பாரம்பரியம்,அதை நடத்துவதால் கிடைக்கும் பெருமை எல்லாம் சும்மா உடான்ஸ்....காட்டை வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டந்தேன் என வெட்டி ஜம்பம் பேசுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.


பண்பாடு, கலை, ஏன்
மொழி வளர்ச்சிக்கும் கூடப் பெருங்கொடை அளிப்பது மேற்கத்திய மரபு.  தன்
பெண்டு தன் பிள்ளை என்ற நிலையிலிருந்து மேம்பட்டு ஊருக்குக் கொடுக்கும்
மரபு தமிழகத்தில் 19, 20 நூற்றாண்டுகளில் தளர்ந்து விட்டது.

மகக்ள் கொடுக்கமாட்டார்கள்,அரசு தான் கொடுக்கணும் எனும்போது அரசுதான் கொடுக்கணும் என்றால் அப்புறம் அரசு கொடுக்கும் காசையாவது நிஜமா மொழிவளர்ச்சிக்கு செலவு செய்யலாம் அல்லவா?


பேராசான் இராமநாதபுரம் சேதுபதி
மன்னரிடம் கொடை நாடிச் செல்கிறார்.  தீபாவளித் திருவிழா.  எங்கு
பார்த்தாலும் வாண வேடிக்கை.  அரசர் அந்தக் காலத்தில் லட்சக் கணக்கில்
செலவு செய்து வாண வேடிக்கை காட்டுகிறார். மக்களும் மனம் மகிழ்கிறார்கள்.
சரியான நேரத்தில் பேராசானும் செல்கிறார்.  இவருக்கு வேண்டியது சில ஆயிரம்
ரூபாய்கள்தாம்.  மன்னரும் மனமுவந்து கொடை வழங்குகிறார்.  சிலப்பதிகாரம்
பதிப்பிக்க வேண்டிய செலவில் ஒரு பகுதி பேராசானுக்குக் கிடைத்த மகிழ்வில்
அவர் திரும்புகிறார்.  ஐயர், தம் வரலாற்றில், ஓரிடத்தில் கூட, என்னடா
இது, இந்த மன்னர் வாண வேடிக்கைக்கு இத்தனை லட்சம் செலவு செய்கிறார் ஆனால்
தமிழ்ப் பதிப்புக்கு சில ஆயிரம்தான் தருகிறார் என்று குறைப்பட்டுக்
கொள்ளவில்லை.

தானம் கொடுத்த மாட்டை ஐயர் எதுக்கு பல்லை பிடித்து பார்க்க போகிறார்?எதாவது கிடைக்குமா என்ற ஐயத்தில் போனவர் பத்து காசு கிடைத்தாலும் இதுவாவது கிடைத்ததே என சந்தோஷமா தான் வருவார்.மக்கள் தான் "என் காசை கரியாக்காதே.ஐயருக்கு கொடுத்து தமிழை வளரு" என மன்னரிடம் சொல்லணும்.அவர்களும் வாணவேட்டிக்கையை வாய்பிளந்து பார்த்துகொண்டிருந்தால் அப்புறம் மன்னர் வருடா வருடம் வெடிதான் வெடித்துகொண்டிருப்பார்.ஐயரும்,தமிழும் வருடா வருடம் மன்னரிடம் யாசகம் கேட்டுகொண்டிருக்கும் நிலையில் தான் இருப்பார்கள்.


மாநாட்டை அரசு நடத்தியிருக்க வேண்டுமா?  அரசு நேரடியாக
நடத்தியிராவிட்டால், முதலமைச்சரின் நேரடி ஈடுபாடு இருந்திருக்காவிட்டால்
இவ்வளவு சிறப்பாக நடத்தியிருப்பது கடினம்.  அடுத்தடுத்த மாநாடுகளில்
இவ்வளவு ஆரவாரம் இல்லாமல் அமைதியான கருத்தரங்குகளை நடத்துவது நல்லது.
செம்மொழி உயராய்வு மையம் எடுத்து நடத்தலாம்.

இதை இந்த வருடமே செய்திருந்தால் 430 கோடி மிச்சம்


கடந்த பல ஆண்டுகளாக மிகப் பெரும் தொகைகளை இந்தியாவில் வரிப்பணமாகக் கட்டி
வரும் எனக்கு இந்த மாநாட்டின் செலவு பற்றிய கருத்துகள் உண்டு.  ஆனால்
மாநாட்டுக்கு அரசு செலவழிப்பதை ஆதரிக்கிறேன்.

நான் சின்ன தொகையை வரியாக கட்டும் குடிமகன் என்ற முறையில் இதை எதிர்க்கிரேன்.


வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இந்த நாட்டின் அரசின் கொள்கைகளை
விமரிசிப்பவர்கள் என்னைப் போல் இங்கே வந்து வாழ்ந்து கொண்டு விமரிப்பது
நல்லது.  இந்தக் கருத்தை என்னிடம் முன்பொரு முறை வலியுறுத்தியவர் செல்வன்
என்று நினைவு.

செல்வன் தினமும் முன்னூறு மடல் இந்தியாவை பற்றி எழுதுபவன்.அவன் எதுக்கு இந்தமாதிரி சொல்லபோகிறான்?நாம் அன்று விவாதித்த சப்க்ஜெக்ட் புலத்தில் குடியேறுவது நல்லதா இல்லையா என்பதுதானே ஒழிய அரசை விமர்சிப்பதல்ல.புலம்பெயர்ந்தவர்கள் பிறரை புலம் பெயராதே என சொல்லகூடாது என தான் நான் கூறினேன்.புலம்பெயர்ந்தவர்கள் அரசை விமர்சிக்க கூடாது என நான் கூறவில்லை

வினோத்-VINOTH

unread,
Jul 12, 2010, 2:32:03 AM7/12/10
to mint...@googlegroups.com


2010/7/12 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

துவக்கத்தில் இருந்து இந்த இழையை சற்று பொறுமையாக கவனித்து வாருங்கள்.
 
நான் எங்கும் செலவினங்கள் பற்றிப் பேசவில்லை
 
மாநாட்டின் தேவை - தேவை இல்லாமை பற்றிப் பேசவில்லை.
 
முதல்வர் பற்றிப் பேசவில்லை.
 
அமைச்சர்கள் பற்றிப் பேசவில்லை
 
வசதிகள் பற்றிப் பேசவில்லை.

ஆம் ஐயா. திரு கி.பென்னேஸ்வரன் அவர்கள் கூறுவது போல நிறை குறை என இரண்டு பக்கத்தையும் உள்ளீடு செய்வது மிக சிறந்த கட்டுரையாக மலரும் என அடியேனும்  நினைக்கிறேன். காலத்தின் பதிவுகளை பிற்காலத்தவருக்கும் தெளிவாக கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இது மிகச்சிறந்த கட்டுரை என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
 
--

N. Kannan

unread,
Jul 12, 2010, 4:57:52 AM7/12/10
to mint...@googlegroups.com
அன்பின் விநோத்:

நீங்களெல்லாம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை.

நான் எதைக் கண்டு கண்ணை மூடிக்கொண்டேன்? சொன்னால்தானே எனக்கு விளங்கும்.
பூடகமாகவே பேசினால் உங்கள் எதிர்பார்ப்பு என்னவென்று எனக்கெப்படி
புரியும்? நான் கண்டதைத்தான் எழுதினேன்.

பென் சாருக்கு என்ன கோபமென்று புரியவில்லை.

நான் பலமுறை சொல்லிவிட்டேன், நாங்கள் கண்ட குறைகள் ஒழுங்கமைவின்
குறைபாடுகள். அது திட்டமிடுதல் சார்ந்தது. பொதுவாக இந்தியாவில்
திட்டமிட்டுக் காரியங்கள் செய்வதில்லை. நான் இந்தியா போகும் நண்பர்களிடம்
சொல்லுவேன், do not plan anything in India and get disaapointed. Things
happen and you adjust to it. இதுதானே அங்கு நடைமுறை. நாங்கள் இறங்கி
வளாகத்திற்கு வந்த பின்னும் என்று, எந்த அரங்கில் பேசப்போகிறோம் எனும்
விவரம் தரப்படவில்லை (at least for me!). எரிச்சல்தான். ஆனால் இது
இந்தியாவில் அதிசமில்லை. அங்கு priorities வேறு.

மற்றபடி நான் இம்மாநாட்டின் அரசியல் நோக்கு பற்றியோ, செலவு பற்றியோ, is
it really justified என்பது பற்றியோ பேசப்போவதிலை. That is beyond the
scope of this thread. ஒரு பேராளன் பார்வையில் மாநாடு. அவ்வளவுதான்
இவ்விழை காட்டுவது. பிற நாட்டுக் குடிமகனான எனக்கு அதற்கு மேல் உரிமை
இல்லை. உங்கள் அரசியல், உங்கள் பாணி. அதில் நான் தலையிட விரும்பவில்லை.

க.>

பிகு: கடைசி மடலில் குறைகள். தவிர்க்கும் வழிகள் சொல்லுவேன். அது
மேம்பாட்டிற்கு உதவும் எனும் எதிர்பார்ப்பில். குறை காண வேண்டும் என்ற
ஒரே காரணத்தினால் அல்ல.

2010/7/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

Nakinam sivam

unread,
Jul 12, 2010, 7:31:13 AM7/12/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மிக சரியாக எடுத்து காட்டி இருக்கிறீர்கள்.

மாநாடு துவங்கிய அடுத்த நாள் வட இந்திய ஊடகங்கள் இவ்விழா பற்றி
தாறுமாறாகப் பேசின. அதற்குத் துணை போகும் வண்ணம் அவர்கள் அபிப்பிராயம்
கேட்டது ‘சோ’ ராமசாமியிடம். அவர் மற்றவர் மீது குறை சொல்லியே காலத்தைக்
கழித்தவர். அவர் இதுவொரு அரசியல் ‘தமாஷா!’ என்றார். சும்மா இருக்கிற
வாய்க்கு அவல் கொடுத்தது போன்று இவர் ‘தமாஷா’ என்ற பிரயோகத்தை வட
இந்தியனுக்குத் தருகிறார். இது நம்மை நாமே இழிவு செய்து கொள்வதாக ஆகாதா?
எங்கள் நேரத்தையும், சிரமங்களையும் பொருட்படுத்தாது வந்து கலந்து
கொள்ளும் ஒரு நிகழ்வு வெறும் ‘தமாஷாவா?’ எவ்வளவு பொறுப்பற்ற பேச்சு இது?
எத்தனை அறிஞர்கள் எங்கெங்கெலாமிருந்து வந்து சிறப்பித்து இருக்கிறார்கள்.
இதை முறையாகச் சொல்ல வேண்டியது அல்லவோ தமிழனான சோவின் பொறுப்பு. அவர்
செய்வது அரசியலா? இல்லை, கட்சிக்கொடி பறக்கக்கூடாது, கட்சிக்காரர்கள்
அதிகப்பேச்சுக்கூடாது, தன்னைப் புகழாமல் தமிழை மட்டும் புகழுங்கள் என்று
சொல்லி நடத்தப்படும் ஒரு நிகழ்வு அரசியலா? என்ன சார் நியாயம்? மனசாட்சியே
இல்லாமல் நாமும் நடந்து கொண்டால்? ‘படித்தவன் சூதும் வாதும் சொன்னால்
போவான். போவான், ஐயோவென்று போவான்!’ என்கிறான் பாரதி.

சோ ராமசாமி போன்ற கோமாளிகள் தங்களை எப்போதும் அறிவு ஜீவிகளாக காட்டிக்கொல்வதிலேதான் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.
எந்த ஒன்றிலிருந்தும் பிரச்சனைகளை தேடி பிடித்து பூதாகாரமாக காட்டுவதே இவர்களின் வேலை.
எந்த ஒரு பிரச்சனைக்காவது தீர்வு சொல்லி இருக்கிறாரா ?
நமது தமிழகத்திலே நடக்கும் ஒரு விழா 
அதுவும் தமிழுக்கான ஒரு விழா
அந்த விழா இவருக்கு பிடிக்கவில்லை என்றால்
வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கலாம்.
அதைவிடுத்து தன்னை வடநாட்டு பத்திரிக்கைகள் 
புகழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக்
எதிர்மறையான தகவலை தெரிவித்து 
தன்னை ஒரு மிக சிறந்த கோமாளி என்பதை நிருபித்து  இருக்கிறார்.
கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிந்தால் அந்த கல்
நாம் வாழும் வீட்டைதான் வீணாக்கும்.
தமிழை இவர் அல்ல எத்தனை முப்பாட்டன்கள் வந்தாலும்
ஒன்றும் செய்ய முடியாது.
என்ன இவர்களுக்கு கேவலமான விளம்பரம் (Cheap Publicity) மட்டுமே வந்து சேரும்.
அன்பு நண்பர் கண்ணன்  போன்ற நடுநிலை சிந்தனை கொண்டவர்கள் மத்தியில் 
இதுபோன்ற கோமாளி மனிதர்கள் இருப்பது வேதனையே தருகிறது.

சிவம்


2010/7/12 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 12, 2010, 7:55:23 AM7/12/10
to mint...@googlegroups.com
அதைவிடுத்து தன்னை வடநாட்டு பத்திரிக்கைகள்
புகழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக்
எதிர்மறையான தகவலை தெரிவித்து
தன்னை ஒரு மிக சிறந்த கோமாளி என்பதை நிருபித்து  இருக்கிறார்.
 
கண்ணன்
 
 
இது போன்ற மஹாபுருஷர்கள் எல்லாம் உங்களுக்குப் பக்கத் துணையாக இருக்கிறார்கள்.  என்ன ஒரு விஞ்ஞான பூர்வமான கண்டுபிடிப்பு?
 
எதற்குக் கவலைப் படுகிறீர்கள்?
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/
 
 
 
2010/7/12 Nakinam sivam <nak...@gmail.com>

வினோத்-VINOTH

unread,
Jul 12, 2010, 7:57:16 AM7/12/10
to mint...@googlegroups.com


2010/7/12 N. Kannan <navan...@gmail.com>

அன்பின் விநோத்:

நீங்களெல்லாம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை.

நான் எதைக் கண்டு கண்ணை மூடிக்கொண்டேன்?

அன்புள்ள ஐயா,

திரு பொன்னேஸ்வரம் ஐயாவின் பார்வையும், தங்களின் பார்வையும், ஒரு சாதாரணமான என்னுடைய பார்வையும் வேறு வேறு.

நீங்கள் எதையும் கண்டு கண்ணை மூடிக்கொண்டாதக நான் குறிப்பிடவில்லையே. சொல்லப்போனால் இன்று ஒருமடலில் படித்தபடி நல்லாருக்கு பார்வையில் கெட்டதே படாது என்பதாகக்கூட அது இருக்கலாம்.

 
அது திட்டமிடுதல் சார்ந்தது. பொதுவாக இந்தியாவில்
திட்டமிட்டுக் காரியங்கள் செய்வதில்லை.

இதை குறை சொல்ல முடிகிறது எனில் கொஞ்சம் தமிழைத்தாண்டிய நோக்கும் இருந்தால் நல்லது என்றே கூறினேன். ஏனெனில் நீங்கள் எழுதுவது ஒரு வரலாற்றுப் பதிவு.




மற்றபடி நான் இம்மாநாட்டின் அரசியல் நோக்கு பற்றியோ, செலவு பற்றியோ, is
it really justified என்பது பற்றியோ பேசப்போவதிலை.

ம்ம்ம். வேற்று நாட்டு குடியுரிமை கொண்டவருக்கு இது தேவையற்றது என கூறி ஒதுங்கி விட்டீர்கள்.

நல்லது, வேறு சொல்ல ஒன்றுமில்லை..

நான் இக்கட்டுரையைப்பற்றி நான் சொல்ல வந்த கருத்து மேற்கூறியதில் அடிபட்டு போகிறது. :)

"பிகு: கடைசி மடலில் குறைகள். தவிர்க்கும் வழிகள் சொல்லுவேன். அது
மேம்பாட்டிற்கு உதவும் எனும் எதிர்பார்ப்பில்"

இதை வரவேற்கிறேன்.

மற்றபடி செம்மொழி மாநாட்டிற்கு எனக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது. ( இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது  )

கடைசியாக ஒன்று ஒரு இந்தியனாக...

சில கருத்துகளை முழுவதுமாக  ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம், சில பத்திரிகைகள், அரசியல் சூழ்ச்சியை, நாடகத்தை கூறாமல் மக்களை திசை திருப்ப அரசைப் பற்றி நல்லவைகளைகளையே புகழ்ந்து எழுதுவை படித்துப்படித்து பழக்கப்பட்டதால் இருக்கலாம். இங்கே இது பழகிவிட்டது.

நீங்கள் தொடருங்கள்.

வினோத்-VINOTH

unread,
Jul 12, 2010, 8:06:39 AM7/12/10
to mint...@googlegroups.com


2010/7/12 Nakinam sivam <nak...@gmail.com>

அன்பு நண்பர் கண்ணன் அவர்களுக்கு,

மிக சரியாக எடுத்து காட்டி இருக்கிறீர்கள்.

மாநாடு துவங்கிய அடுத்த நாள் வட இந்திய ஊடகங்கள் இவ்விழா பற்றி
தாறுமாறாகப் பேசின. அதற்குத் துணை போகும் வண்ணம் அவர்கள் அபிப்பிராயம்
கேட்டது ‘சோ’ ராமசாமியிடம். அவர் மற்றவர் மீது குறை சொல்லியே காலத்தைக் கழித்தவர்.

ஒரு கருத்தை எதிர்ப்பவர்கள் எல்லோரும் ஒரே இரகம் என கணக்கிடுவது என்னைப்பொறுத்த வரை தவறு.


 
--

N. Kannan

unread,
Jul 12, 2010, 8:23:50 AM7/12/10
to mint...@googlegroups.com
2010/7/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>:
> சில கருத்துகளை முழுவதுமாக  ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணம், சில பத்திரிகைகள்,
> அரசியல் சூழ்ச்சியை, நாடகத்தை கூறாமல் மக்களை திசை திருப்ப அரசைப் பற்றி
> நல்லவைகளைகளையே புகழ்ந்து எழுதுவை படித்துப்படித்து பழக்கப்பட்டதால்
> இருக்கலாம். இங்கே இது பழகிவிட்டது.
>


நன்றி. நான் சில சமயம் பொதுவாய்ப் பேசுவேன். ஏனெனில் எல்லோரும் இதைப்
படிப்பதால் :-))

மேற் சொன்ன கருத்திற்கு என்ன சொல்ல? வருத்தமாக உள்ளது!
நல்லதை நல்லது என்று சொன்னால் கூட அதுவொரு அரசியல் சார்பு என்று இங்கு
கணிக்கப்படுகிறது. வாழ்வே கருப்பு வெள்ளை என்ற இரண்டு நிறத்திற்குள்
அங்கு அடக்கப்படுவது வருத்தமளிக்கிறது.
பெருமைப்பட வேண்டிய நேரத்தில் வலுக்கட்டாயமாக மூஞ்சியைத் தூக்கி வைத்துக்
கொள்ளும் மாமியார்த்தனம் அதிகமாய்விட்டது அங்கே :-)))

இன்னும் எழுத வேண்டிய விஷயங்கள் உள்ளன. எனவே எழுதுவேன்.

க.>

N. Kannan

unread,
Jul 12, 2010, 8:47:06 AM7/12/10
to mint...@googlegroups.com
அன்பின் நக்கினம் சிவம்:

மாநாட்டில் இருந்து கொண்டு, தொலைக்காட்சியில் சோவின் பேட்டியைப் பார்த்த
போது உண்மையிலேயே எரிச்சல் வந்தது. இந்தியப் பொது ஊடகத்தில் பேசும் போது
இன்னும் கூடக் கொஞ்சம் பொறுப்புடன் பேசி இருக்கலாமென்று தோன்றியது.
எல்லாமே கேளிக்கை, தமாஷா என்று முத்திரை குத்துவது பொறுப்பைக் கழிப்பதாக
அமையும். மீண்டும் அதுவொரு தமிழக அரசியல் போக்கு. அங்கு வெள்ளை-கருப்பு
இரண்டுதான் உண்டு. சோ வேறு மாதிரிப் பேசியிருந்தால் அவர் வேறு மாதிரி
பார்க்கப்பட்டிருப்பார். விமர்சிக்கப் பட்டிருப்பர். அங்கு மனது மிகவும்
அசுத்தமடைந்துள்ளது. கண்களில் சதை வளர்ந்து பார்வை
மட்டுப்பட்டிருக்கிறது. எல்லோரும் எதிர்பார்க்கும் பதிலைத்தருவதே
அம்மண்ணில் உசிதம். அதுவே வாழ்வியல். சோ வேறு மாதிரி பேசி இருக்கக்கூடாது
:-))

க.>

2010/7/12 Nakinam sivam <nak...@gmail.com>:

Nakinam sivam

unread,
Jul 12, 2010, 8:48:45 AM7/12/10
to mint...@googlegroups.com
அன்பு நண்பர் யதார்த்தா பென்னேஸ்வரனுக்கு எதோ பிரச்சினை என்ற நினைக்கிறேன். ஆகவேதான் ஒரு நிலையில் நின்று கொண்டு அதுதான் உண்மை என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

நமது தமிழ் மொழிக்கான ஒரு விழா யார் நடத்தினால் என்ன ?
நடத்தியது அரசியல்வாதிகள் என்பதை விட்டு விட்டு
இது மொழிக்கான ஒரு விழா என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்.

தங்களை தாங்களே புகழ்ந்து கொள்வதும்,
தங்களை பிறர் புகழ கேட்பதும்
அரசியல்வாதிகளுக்கு உடன் பிறந்தது.
அதை நாம் சட்டை செய்ய தேவை இல்லை.
காரணம் இது ஒன்றும் புதிது அல்ல.
அவர்கள் அப்படிதான்.

இவர்களின் செயல்களை எல்லாம் ஒதுக்கி தள்ளி விட்டு
நமது மொழிக்கான விழா என்பதனால் அதில் உள்ள
நிறைகளையும் காண வேண்டும்.
அதனால் பின்னால் விளைய போகும் பயன்களையும் 
நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாம் அரசியல்வாதிகளை குறை கூறுவதாக நினைத்துக் கொண்டு
நமது மொழியையே குறை கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

சிவம்



2010/7/12 N. Kannan <navan...@gmail.com>
2010/7/12 வினோத்-VINOTH <vino...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jul 12, 2010, 9:36:44 AM7/12/10
to mint...@googlegroups.com
அடேங்கப்பா!!!!
 
நான் எழுதி வந்ததெல்லாம் புலம்பல் போலத் தோற்றம் அளித்ததா? 
 
எனக்குக் கிடைத்த பதில்களை அல்லவா அந்த ரீதியில் நினைத்துக் கொண்டிருந்தேன்.
 
அன்பு நண்பர் நக்கினம் அவர்கள் மிகப்பெரிய சமூக விஞ்ஞானி என்பதை மெய்ப்பித்து வருகிறார். 
 
எனக்கு ஏதோ பிரச்னை என்று கண்டுபிடித்து இருக்கிறார் பாருங்கள்.  நானே கடந்த நாற்பது ஆண்டுகளாக மண்டையை உடைத்துக் கொண்டு இருந்தேன்.
 
ஒரு வேற்று கிரகத்தில் இருந்து பார்வையாளனாகத் தன் பதிவுகளை எழுதுகிறேன் என்றார் கண்ணன்.  அவர் அங்கேயே நின்றிருந்து பதிவு செய்து இருந்தால் இங்கே யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.
 
இந்திய மனப்பான்மை,  தமிழர் உளப்பாங்கு, அறிவுஜீவித்தனம் இப்படி எல்லாம் கிடைத்த திசைகளில் பாய்ந்து கொண்டிருந்தார்.
 
இவருக்குக் கிடைத்த கொஞ்சல்களை வைத்து ஏதோ அங்கு அன்பு வழிந்து ஓடியது போல எழுதினார்.
 
சக்திவேல் என்று ஒரு இளைஞர் இந்தக் குழுவில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.   அங்கு தனக்கு இழைக்கப்பட்ட சிறுமைகளைப் பற்றிப் பதிவு செய்து இருந்தார்.  அவர் மின்தமிழ் சார்பாக கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டு இருந்தார்.  அவரை மின்தமிழ் பண்டிதர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
 
கோவையில் இருந்து என்னை தொடர்பு கொண்டார்.  அவர் கட்டுரை வாசிக்க வேண்டி இருந்ததால் அங்குள்ள நண்பர்களின் எண்ணைக் கேட்டார்.  நான் உடனடியாகக் கண்ணனின் எண்ணைக் கொடுத்தேன்.
 
சக்திவேல் கண்ணனை முயற்சித்து இருக்கிறார்.  மணி அடித்து இருக்கிறது  கண்ணன் எடுத்து இருக்கிறார்.  சக்திவேல் பிரச்னையை சொல்லத் துவங்கியதும் தொலைபேசியை துண்டித்து இருக்கிறார்.  மின்தமிழ் சார்பாக சக்திவேலை அழைத்த யாரும் அவருக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கவில்லை.
 
ஒரு வகையான விளம்பரங்களை மட்டுமே பெற்றுக் கொள்ளத் துடிக்கும் துடிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.  தெரிந்து கொண்டிருக்கிறது.  
 
  மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.  அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.  நான் ஓட்டை வாய்.  உளறிக் கொண்டு இருக்கிறேன்
 
அந்த இளைஞர் தன் மனக்கொதிப்பைப் பதிந்து இருக்கிறார்.  அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும் கூட அந்த மாநாட்டுக்குச் சென்ற யாரும் அவருக்கு பதில் அனுப்ப வில்லை.
 
இது ஒரு சிறிய துளி மட்டுமே.
 
அதை விட்டு நான் மாநாட்டுக்கு எதிராகப் பேசுகிறேன்.  அது இந்திய மனப்பான்மை, தமிழரின் உளப்பாங்கு, ஆதங்கம், பொறாமை  என்று விண்ணாரம் பேசினார் கண்ணன்.   
 
தொலைக்காட்சியில்   முகம் காட்டத் துடிக்கிறான் தமிழன் என்று ஏளனம் செய்த இந்த மனிதர் செய்து வரும் வேலைகள் இந்தக் குழுமத்தில் காணக்கிடைக்கிறதே?  வேற்று கிரகத்தில் இருந்து வந்த இவருக்கே இப்படி இருக்கும்போது தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து வந்த இளைஞர்கள் தங்கள் முகத்தைக் காட்டத் துடிப்பது இயற்கைதானே?
 
மீண்டும் சொல்கிறேன்.  அங்கு நடந்த துவக்க விழா, பட்டிமன்றம், கவியரங்கம் யாவும் கண்ணன் மெச்சத்தக்க அளவில் இருந்ததா?  கேட்டால் உங்கள் அரசியல். அதில் எனக்குப் பங்கேற்பு கிடையாது என்கிறார்.  தனக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கிறார்.  அதன் பின்னணியில் உள்ள அரசியல் மட்டுமே உறுத்திக் கொண்டிருக்கிறது.  அதுவும் மிக விரைவில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன.
 
சரி.  அவரே நேர்மையாக சொல்லட்டும்.  அங்கு நடந்த எல்லாமே அவருக்கு ஏற்புடையதாக இருந்ததா?
 
நக்கினம் அவர்களே - பிரச்னை எங்கே என்று உங்கள் விஞ்ஞானபூர்வமான ஆய்வுகளை இன்னும் அகலப்படுத்திப் பாருங்கள்.  சோவைப் பற்றிய உங்கள் பார்வையும் அவதானமும் உங்களுடைய பார்வையின் தீட்சண்யத்தை தெளிவாக அடையாளம் காட்டுகிறது.  வட இந்தியப் பத்திரிகைகளில் தன்னைப் புகழ வேண்டும் என்று சோ எடக்கு மடக்காகப் பேசுகிறார் என்று சொன்ன உங்கள் அரசியல் அறிவு மற்றும் நாட்டு நடப்பு குறித்த அறிவு விசாலம் என்னை மயக்கம் கொள்ள வைக்கிறது.
 
என்னுடைய  பிரச்னையை விடுங்கள்-  உங்கள் பிரச்னையையும் கொஞ்சம் எப்போதாவது பார்த்துக் கொள்ளுங்கள்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
 

--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958   #  Web site: http://www.vadakkuvaasal.com/


2010/7/12 Nakinam sivam <nak...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 12, 2010, 10:13:46 AM7/12/10
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
திரு.பென்னேஸ்வரன்

2010/7/12 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் penne...@gmail.com
சக்திவேல் என்று ஒரு இளைஞர் இந்தக் குழுவில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.   அங்கு தனக்கு இழைக்கப்பட்ட சிறுமைகளைப் பற்றிப் பதிவு செய்து இருந்தார்.  அவர் மின்தமிழ் சார்பாக கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டு இருந்தார்.  அவரை மின்தமிழ் பண்டிதர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
 
1. மின்தமிழ் வழி திரு.சக்திவேலுவை அழைத்தது யார் எந்த தேதியில் என்று பெயரை சரியாகக் குறிப்பிடவும்.
 
2. மின் தமிழ் த.ம.அ ஒரு மடலாடற்குழு. அது தமிழ் மரபு அறக்கட்டளை செயற்குழு அல்ல என்பது இங்கு நினைவு படுத்துகிறேன்.
 
3.செம்மொழி கருத்தரங்கத்தை நடத்தியது தமிழக அரசு. கட்டுரை அனுப்ப வேண்டிய இறுதி நாளை உறுதி செய்தது இந்தக் குழு. அனைத்துக் கட்டுரையாளர்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய இறுதி நாள் மார்ச் 15. எனக்குத் தெரிந்து நான் கண்ணன் வேறு சில நண்பர்கள் இந்த நாளுக்குள் கட்டுரையை அனுப்பி வைத்தோம்.
 
4.உத்தமத்தின் இணைய மானாடு கட்டுரைக்கான இறுதி நாள் ஏப்ரல் 30. இந்த நாளுக்குள் செல்வமுரளி உட்பட பலர் அனுப்பி வைத்தனர்.
 
இப்படி இரண்டு மானாடுகளுக்குமே முறையாக ஏற்பாட்டினர் வழிமுறைகளைக் கூறியிருக்கும் போது இங்கு தமிழ் மரபு அறக்கட்டளை  எங்கு வந்தது.
 
 
 
கோவையில் இருந்து என்னை தொடர்பு கொண்டார்.  அவர் கட்டுரை வாசிக்க வேண்டி இருந்ததால் அங்குள்ள நண்பர்களின் எண்ணைக் கேட்டார்.  நான் உடனடியாகக் கண்ணனின் எண்ணைக் கொடுத்தேன்.
 
சக்திவேல் கண்ணனை முயற்சித்து இருக்கிறார்.  மணி அடித்து இருக்கிறது  கண்ணன் எடுத்து இருக்கிறார்.  சக்திவேல் பிரச்னையை சொல்லத் துவங்கியதும் தொலைபேசியை துண்டித்து இருக்கிறார்.  மின்தமிழ் சார்பாக சக்திவேலை அழைத்த யாரும் அவருக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கவில்லை.
 
கண்ணனை தவறாகக் காட்டவேண்டும் என்ற வகையில் சொற்களை இங்கு பயன்படுத்துகின்றீர்கள். எதற்காக கண்ணன் தொலைபேசி தொடர்பை துண்டிக்க வேண்டும்?  இது முறையற்ற குற்றச்சாட்டு.
 
மின் தமிழ் சார்பாக யார் அழைத்தது. எங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்று இங்கு அந்த மின்னஞ்சலைக் காட்டுங்கள்.
 
 
ஒரு வகையான விளம்பரங்களை மட்டுமே பெற்றுக் கொள்ளத் துடிக்கும் துடிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது.  தெரிந்து கொண்டிருக்கிறது.  
 
ஆமாம். அதற்குத்தான் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
 
 
  மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.  அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.  நான் ஓட்டை வாய்.  உளறிக் கொண்டு இருக்கிறேன்.
 
மற்றவர்கள் யார் என்று தாராளமாகச் சொல்லுங்களேன்.   யார் யாரெல்லாம் சொல்ல நினைக்கின்றார்களோ அனைவரும் உங்கள் பெயரைச் சொல்லுங்கள். தெரிந்து கொள்கிறோம். சென்னைக் குழு 20ம் தேதி 2 நிகழ்ச்சிகளை நடத்தினோம். த.ம.அறக்கட்டளைக்கு உழைக்கும் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். தேனீயாரைத் தவிர, காரணம் அவர் துபாயில் இருந்ததால்.  வெகு தூரத்திலிருந்து திருமதி.கீதா கணவரோடு வந்திருந்தார்.  இப்படி அனைவரும் ஒரு குடும்பம் போல மகிழ்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தோம்.
 
நானும் கண்ணனும் செய்து கொண்டுவரும் பல திட்டங்களை முழு ஆதரவுடன் பின்னால் நின்று துணை செய்து காத்துவரும் தோழர்கள் இருக்கின்றார்கள். யாரும் அமைதியாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இல்லை. சேர்ந்து உழைக்கின்றனர். 
 
தேவையற்ற விளம்பரமும் தொலைகாட்சி பேட்டிகளும் தான் கண்ணனுக்கு புகழ் இனி சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.  அவரது ஆய்வுத் துறையில் தனக்கென முத்திரைப் படைத்த ஒரு விஞ்ஞானி அவர்.  தொலைக்காட்சி என்பது ஒரு முக்கிய ஊடகம். அதனை சரியாக பயன்படுத்தும் போது சரியான தகவல் வந்து சேரும். எங்கள் பேட்டியைப் பார்த்தவர்கள் சிலர் பழம் நூல்களை கொடுக்க முன்வந்திருக்கின்ரார்கள். மின்னாக்கம் எவ்வளவு முக்கியம் என்று பல சாதாரண குடும்பத்தினரும் கூட அறிய இது வாய்ப்பாகியிருக்கின்றது.
 
சென்னைக்கு வந்திறங்கிய காலையிலேயே ஒவ்வொரு காரியமாக அலைந்து திரிந்து செய்து முடித்து ஓய்வின்றி நாங்கள் இல்லம் திரும்பி மட்டுமே ஓய்வெடுக்க முடிந்தது. கண்ணன் கோவைக்குச் செல்லும் நாள் வயிற்று வலியில் துடித்துக் கொண்டிருந்தார்.  அன்று காலையில் த.ம.அறக்கட்டளைக்காக ஒரு வேலை இருந்ததால் அதைச் செய்ய சென்று வந்தார். இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?  எதற்கு இப்படி தேவையற்ற வார்த்தைகளைப் பேசி வெறுப்பை காட்டுகின்றீர்கள்.
 
டிவி வைத்து முகத்தைக் காட்ட வேண்டும் என்றால் அதற்கு தமிழக சேனல்கள் தேவையில்லை. இணையத்திலேயே யாரும் பன செலவின்றி சேனலை உருவாக்கி தேவையான விளம்பரத்தை தேடிக் கொள்ளலாம். கணினி தொழில் நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்திருக்கின்றது.  எங்கள்  நோக்கம் என்ன என்பதை  நான் விளக்கவே வேண்டியதில்லை.   புரிந்தவர்களுக்கு புரியும்.
 
-சுபா

N. Kannan

unread,
Jul 12, 2010, 10:17:11 AM7/12/10
to mint...@googlegroups.com
அன்பின் பென்:

இப்போதுதான் புரிகிறது உங்கள் கோபத்தின் தார்மீகம்.

பென் பெரிய பிழை நடந்து இருப்பதை நான் உணர்கிறேன். தாங்கள் சுட்டும்
நண்பருக்கு என்றில்லை, அங்கு பலருக்கு கட்டுரை வாசிக்கும் வாய்ப்புக்
கிடைக்கவில்லை. ஆயினும் பலர் வந்து கலந்து கொண்டனர். உதாரணமாக, போலீஸ்
கான்ஸ்டபிள் ஆறுமுகசாமி. பழைய காசுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மேலே
என்ன செய்வதன்று அவருக்குத் தெரியவில்லை. எழுத்துச்சித்தர் என்று
சொல்லிக்கொண்டு ஒரு முஸ்லிம் நண்பர் அங்கு வந்து என்னை சந்தித்தார். அவர்
டாவின்சி கோடு போல் தமிழ் எழுத்தில் மறைந்திருக்கும் எண் சூட்சுமத்தை
விளக்கினார். அவரை நான் பலருக்கு அறிமுகப்படுத்தினேன்.அவருக்கு கட்டுரை
வாசிக்கும் வாய்ப்பில்லை.

சக்திவேல் என்னை அழைத்திருக்கலாம். எனக்கு நினைவில்லை. நான் எந்தத்
தொடர்பையும் துண்டிப்பதில்லை. எனக்கு வாய்த்த செல்பேசி அப்படி!
பேசுகின்றவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது!! என் மருமான் கழிச்சுக்கட்டிய
ஒரு செல்பேசி என்னிடம் வந்துவிட்டது. நான் சொல்வது பொய் என்று நீங்கள்
கருதினால் இதே அரங்கில் முனைவர்.தி.மணி அவர்களிடம் கேளுங்கள். நான் படும்
அவதியைக் கண்டு அவர் ‘என்னிடம் சொல்லியிருந்தால்’ எனது செல்பேசியைத்
தந்திருப்பேனே!’ என்றார். இல்லை நம் சுகுமாரனிடம் கேளுங்கள். மேலும்
மாநாட்டில் யாரிடமும் பேசக்கூட எனக்கு நேரமில்லை. வேண்டுமானால் நான்
எப்படி சில்லுப்பொல்லென்று விழுந்தேன் என்று என் மருமானிடம் கேட்கவும்.
இல்லை, உடம்பு சரியில்லாத என்னை விஜாரித்த என் அக்காவிடம் (மாநாடு போது
காய்ச்சல்) நான் சரியாகப் பேசவில்லை என்று குறை. ஆனால் நீங்கள் கூப்பிட்ட
போதெல்லாம் எனக்கு நேரமிருந்தது உங்கள் அதிர்ஷ்டம்.

என்னை ஏன் ஒரு கிராதகன் போல் காட்ட முற்படுகிறீர்? :-))

என்னிடம் பழகியவர்களிடம் கேளுங்கள்.

நீங்கள் அந்தக் காலத்து நளாயினிபோல் மிகவும் அவசரப்பட்டு முடிவிற்கு வருபவரா :-))

சக்திவேல் அங்கு வந்திருந்தால் எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி ஏதாவது
செய்திருக்கலாம். நீங்கள் ஒன்றை உணர வேண்டும், என் செல்வாக்கெல்லாம்
தமிழ் இணையம் 2010-ல் தான். செந்தமிழ் மாநாட்டுச் செல்வாக்கு என்பது
எனக்கு மேலிடம்!

அம்மாநாட்டில் ஒரு கொரியன் வந்திருந்தார். அவருக்கு கட்டுரை கோட்டா
கிடைக்கவில்லை. ஆயினும் எப்படியோ அவர் விடா முயற்சியாக ஒரு அமர்வின்
தலைமையைப் பிடித்து கட்டுரை வாசித்துவிட்டார். அவர் எப்போது பேசுவார்
என்பது கடைசி நிமிடத்தில்தான் தீர்மானமானது.

அடுத்தது, உங்கள் கோபம் நான் ஏன் பந்தல் விஷயம் பற்றிப் பேசவில்லை என்று.
நான் மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறேன், இது ஒரு மாநாடு என்ற பேரில்
நிகழ்ந்த 5 பெருநிகழ்வுகள் என்று.

பந்தல் சமாச்சாரம் பெரிசுகளுக்கான மேடை. அது முற்றும் முழுவதும் அரசியல்,
கேளிக்கை (அரசியல் கேளிக்கை அல்ல politics and entertainment) சார்ந்த
விஷயம். அங்கு நடந்தது லட்சோப லட்சம் பொது மக்களை திருப்திப் படுத்த.
எங்களுக்கும் (ஆய்வரங்கத்திற்கும்) அதற்கும் சம்பந்தமில்லை. அடுத்த
மடலில் சொல்லவிருந்தேன் (அதான் உங்கள் பொறுமை தெரிகிறதே :-)) நான் இங்கு
பேசுவது ஆய்வரங்கங்கள் சார்ந்த பார்வை மட்டுமே.

பொதுப்பந்தல் விவகாரம் கண்ணில் படவில்லை. நான் கண்ணை மூடிக்கொள்ளவில்லை.
உண்மையில் கண்ணில் படாமல் கொடிசியா அமர்வுகள் தனிமைப்
படுத்தப்பட்டிருந்தன. இது பற்றிய வருணனையையும் நான் சொல்லியிருக்கிறேன்
(முதல் நாள் சாப்பாடு).

பென்! நீங்க ரொம்ப எளிமையானவராக, உடனே உணர்ச்சிவசப்படக் கூடியவராக உள்ளீர்கள்.

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்!!

நல்லவேளை இப்போதாவது வாயைத்திறந்து விஜாரித்தீர்களே!! (அப்பப்பா..என்ன
திட்டு அதற்குள். சார், நான் இன்னும் உங்கள் ரசிகன்தான் ;-)

க.>

பிகு: அப்படியே தொலைக்காட்சி குறித்தும் சாடியுள்ளீர்கள். அன்பரே, அவை
நான் தேடிப்போய் கேட்டதில்லை. அழைத்தார்கள் போனேன். எங்கள் அமைப்பின்
தன்மை இவாஞ்சலிசம். அதற்கு பொது ஊடகம் மிக அவசியம். அதை ஒதுக்கும் மனம்
எங்களுக்கில்லை. இனியும் வருவோம்.

2010/7/12 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>:


> அடேங்கப்பா!!!!
>

> ஒரு வேற்று கிரகத்தில் இருந்து பார்வையாளனாகத் தன் பதிவுகளை எழுதுகிறேன்
> என்றார் கண்ணன்.  அவர் அங்கேயே நின்றிருந்து பதிவு செய்து இருந்தால் இங்கே
> யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

> இவருக்குக் கிடைத்த கொஞ்சல்களை வைத்து ஏதோ அங்கு அன்பு வழிந்து ஓடியது போல


> எழுதினார்.
>

> சக்திவேல் கண்ணனை முயற்சித்து இருக்கிறார்.  மணி அடித்து இருக்கிறது  கண்ணன்
> எடுத்து இருக்கிறார்.  சக்திவேல் பிரச்னையை சொல்லத் துவங்கியதும் தொலைபேசியை
> துண்டித்து இருக்கிறார்.  மின்தமிழ் சார்பாக சக்திவேலை அழைத்த யாரும் அவருக்கு
> என்ன நேர்ந்தது என்று கேட்கவில்லை.
>
> ஒரு வகையான விளம்பரங்களை மட்டுமே பெற்றுக் கொள்ளத் துடிக்கும் துடிப்பு
> வெளிப்படையாகத் தெரிந்தது.  தெரிந்து கொண்டிருக்கிறது.
>
>   மற்றவர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.  அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
> நான் ஓட்டை வாய்.  உளறிக் கொண்டு இருக்கிறேன்
>
> அந்த இளைஞர் தன் மனக்கொதிப்பைப் பதிந்து இருக்கிறார்.  அவருக்கு ஆறுதல்
> அளிக்கும் வகையிலும் கூட அந்த மாநாட்டுக்குச் சென்ற யாரும் அவருக்கு பதில்
> அனுப்ப வில்லை.
>
> இது ஒரு சிறிய துளி மட்டுமே.

> தொலைக்காட்சியில்   முகம் காட்டத் துடிக்கிறான் தமிழன் என்று ஏளனம் செய்த இந்த

It is loading more messages.
0 new messages