சங்க இலக்கியத்தில் பெருமரம் (யால/ஆல மரம்)

232 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 9, 2020, 11:46:34 PM5/9/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
ஆப்பிரிக்காவில் இருந்து கொணர்ந்து அறபி நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்திய மரம் என்று தாவரவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுக்காலமாக, இந்தப் பப்பரப்புளி  தமிழர் நிலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக உண்டு. இக் கட்டுரையிலும், வேறுபல நூல்களிலும் இச்செய்தி உண்டு:
            ”இது போன்று அரேபியர்களால் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மரம்தான் பெருமரம். இம்மரமானது ‘பேய் மரம், பப்பரபுளி, பேப்புளி, ஆனைப்புளி’ என்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது. இப்பெயர்கள் இதன் உருவத்தின் அடிப்படையிலேயே இடப்பட்டுள்ளன. மற்றைய மரங்களில் இருந்து பெருமரத்தை வேறுபடுத்துவது அதன் சுற்றளவுதான். இம்மரம் வளரும்போது இதன் பட்டை கீழ்நோக்கி வளர்ந்துக் கொண்டே செல்வதால் இதன்சுற்றளவு பெருகிக்கொண்டே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே மேற்கூறியப் பெயர்களில் அழைக்கப்படுகிறது. இலங்கையில் ‘பெருக்கமரம்’ என்றழைக்கப்படுவது குறித்து ‘மரம் வரவர பெருக்கமடைந்து வருவதன் காரணமாகவே பெருக்கமரம் எனப் பெயரிட்டனர் போலும்’ என்று என்.எம். ஷாஜகான் என்ற ஈழத்தமிழறிஞர் ‘புத்தளம்’ (1992) என்ற தமது ஊர் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.
பொந்தப்புளி, போந்தைப்புளி, கோரக்கர்புளி என்பதெல்லாம் இதுதான். பப்பரப்புளி என்ற பெயர் உண்டு. பப்பர என்பது  Barbara என்னும் ஐரோப்பிய மொழிச் சொல்லின்
தமிழாக்கம். 2014-ல் இந்த பப்பரப்புளி மரம் பற்றி திரு. காளைராஜன் படங்கள் அனுப்ப, பப்பர-புளி என்ற சொல் பற்றியும்,  பொந்தை ஆங்கிலத்தில் போண்டா என்றாகி இந்தியா முழுதும் வழங்குவதும் உரையாடல்:
------------------------
 
தமிழர்கள் 5000 ஆண்டுகளாகக் கொண்டாடும் பெருமரம் மேலே குறிப்பிட்ட பப்பரப்புளி அன்று.
சங்க இலக்கியத்திலே பெருமரம் என்று சிறப்புப்பெயர் கொண்ட மரத்தை வர்ணிக்கின்றனர். இது ஆலமரம். இந்தியாவின் தேசியமரம் . உலகத்திற்கே நிழல்தரும் மரம் என்று ஔவையார் அகநானூற்றில் பெருமரம் ஆகிய யால (> ஆல) மரத்தை வர்ணிக்கிறார். அண்மையில் யாழ்ப்பாண தொல்லியல் பேரா. புஷ்பரட்ணம் தென் இலங்கையில் வெளியான முதல் காசுகளில் தமிழர் பெயர்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். சங்க இலக்கியம் பெருமரம் என்று பரியாயப் பெயரால் யால்/ஆல் மரத்தை அழைப்பர். இப் பெருமரத்தின் பெயரால், தென்னிலங்கையில் உள்ள வனம்: யால தேசிய வனம் https://en.wikipedia.org/wiki/Yala_National_Park .
ஔவை பாட்டைக் கூர்ந்து படித்தால் சங்க காலத்திற்கு 1000 ஆண்டு பின்னர் தோன்றும் பாபாப் (Baobab) மரத்திற்கும், ஆல மரத்திற்கும் உள்ள வேறுபாடு அறிந்து வைத்த பெயர் விளங்கும். பேய்மரம் என்றும் பப்பரப்புளிக்கு ஒரு பெயர். இலைகள் இன்றி, பல கை கால் நீட்டி இருப்பது போல, பப்பரப்புளி இருப்பதால் பேய்மரம். ஆனால், சங்க இலக்கியப் பெருமரமோ ஊருக்கே நிழல் அளிக்கும் ஆலமரம். கவிமணி மலரும் உள்ளம் நூலிலும் புகழ்ந்தமரம். இன்னொன்று: சங்க இலக்கியத்தில் கோவலர்கள் தீ எரிக்க ஆலங்குச்சிகளைப் பயன்படுத்துவர் என வரும். ஆல மரம் “நாரில் பெருமரம்” என்பார் ஔவை. அதாவது கெட்டியான மரம் அல்ல. தீயில் எளிதில் வெந்து கரியாகும். “பெருமர வள்ளி” என்று அருமையான உவமை நற்றிணையில்
உண்டு. இங்கே, ஆலமரத்தின் விழுது “வள்ளி” எனப்படுகிறது. யாலம் விழுது(=வள்ளி, வளைவது)களைப் பிணித்துப் பெண்கள் ஊசலாடுவர். அதனை உவமையாக்கும் பாடல். இந்தியாவுக்கே உரிய மரம், இரண்டு (அ) மூன்று ஏக்கர் கூடப் பராவும் பெருமரம். கல்கத்தாவில் ஒன்றரை ஏக்கரில் உள்ள பெருமரம் ஆலமரம்.
விள்-/ விட்டு/விண்டு :::  >> விஷ்ணு (கதிரவன் கதிர் - இருக்கு வேதத்தில்). அதுபோல்,
வள்-/ வட-/ வண்டு/டி ::: >> ஸம்ஸ்கிருதத்தில் வட விருக்‌ஷம் என்பது யால் மரத்தின் வள்ளி/விழுது தரும் பெயர்தான். https://groups.google.com/forum/#!topic/minTamil/plcY6VvEnes

சங்க இலக்கியப் பெருமரம் (ஆல்) தமிழர்/த்ராவிடர் வானியலில் பெருமிடம் உண்டு. இயற்பியல் பேரா. நண்பர் சந்திரமோகன் துருவ நட்சத்திரம் கிரேக்கர் மூலம் தமிழர் கி.மு. 5-ம் நூற்றாண்டு என திருக்குறள் நூலில் குறிப்பிட்டபோது, சிந்துவெளியில் வட மீன் என்னும் துருவ நட்சத்திரம், ஒவ்வொரு திருமணத்திலும், அருந்ததி - வடமீன் பார்த்தல் பற்றிச் சிறிது குறிப்பிட்டேன். இன்றைக்கு, நேற்றைக்கு ... என்பதுபோல் கு எனும் சாரியை பெற்று வடக்கு என்ற திசைப்பெயரும், வட மீன் என ’போல் ஸ்டார்’ (Pole Star) பெயரும் இந்தியப் பெருமரம் ஆலின் பெயரால் அமைந்தவை.வட திசைக்கண், ரிஷபநாத தீர்த்தங்கரரும், சிவபெருமானும் அதற்கும் முன்னர் (மழுவாள் நெடியோன் வருணனும் வேதத்தில்) வட பெருமரத்தின் அடிக்கீழ் இருப்பது இம்மரப்பெருமை உணர்த்தும். இன்றைய இந்தியாவின் தேசியமரம் இந்த சங்க இலக்கியப் பெருமரம்.

சங்ககாலப் பெருமரம் பற்றி அறிய:
”Hindu texts written over 2,500 years ago describe a cosmic 'world tree,' that references an upside-down-growing banyan that has roots in heaven and extends a trunk and branches down toward Earth to deliver blessings. Over centuries, the tree took on significance as a symbol of fertility, life, and resurrection. The banyan also served as a source of medicine and food for centuries, and the bark and roots are still used today to treat a variety of disorders, particularly in Ayurvedic medicine.”

2500 ஆண்டு அல்ல, 5000 ஆண்டுகளாய் யாலமரம் (வட விருக்‌ஷம்) இந்தியாவில் வழிபடப்படுகிறது. 3000+ ஆண்டுமுன் பாடிய ரிக்வேதத்தில் துருவ நட்சத்திரம் மற்ற விண்மீன்களை கண்ணுக்குத்தெரியாத வள்ளி/விழுதுகளால் இணைக்கிறது. அதனால்தான் விண்மீன்கள் கீழே விழுந்துவிடாமல் வானத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன என்று பாடுகிறது. ஆல் எனும் பெருமரத்தை பிரபஞ்சத்திற்கே உவமை ஆக்கும் அரிய பாடல்கள். வேதம் துருவ நட்சத்திரம் வருணன் என்றும் கூறும். இவ்வருனன் சங்க இலக்கியத்தில் மழுவாள் நெடியோன் எனப்படுதலும், குடிமல்லத்தில் இந்தியாவின் முதல் இலிங்கமாக இருப்பதும் விளக்கியுள்ளேன் [1]. அருந்ததி, வடமீன் பார்த்தல் என்னும் பழந்தமிழர் கலியாணச் சீர் இந்த துருவ நட்சத்திரத்தை 5000 ஆண்டாகப் பார்ப்பது தான். நற்றிணைப் பாடலில் ’பெருமர வள்ளி’ என்பது யால(> ஆல) மரத்தின் விழுது என்று கூறினேன். தொல்காப்பியத்திலும், வேதப் பெருந்தெய்வம் வருணன் வருகிறான் - நெய்தல் திணைத் தெய்வதமாக. தொல்காப்பியர் வள்ளி என்பதை ஆலம்விழுது என்ற பொருளில் சூத்திரம் பாடியுள்ளார். வேத இலக்கியத்தால் இது விளங்கும்.
     கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
     வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
     கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85.
இங்கே, வள்ளி என்பது ஆலம் விழுது. தமிழரின் பண்டை வானியலாலும், இருக்காலும் தெளியலாகும் செய்தி. இதனை உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்:
வள்ளி என்பதுவும் கொடியை என்னை? பன்மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடி எனப்படுதலின் அத் தொடையினை இடைவிடாது உடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார் : முத்துக் கொடி எனவும் மேகவள்ளி எனவும் கூறுமதுபோல் கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையேவைத்தார். (தொல்.புறம். 33) (நச்சி.)

வைஷ்ணவ சமயத்தின் வித்தாக இந்தச் சூத்திரத்தை நச்சினார்க்கினியர் காண்கிறார்:
கொடிநிலை = ஞாயிற்று மண்டிலம், (= கனலிவட்டம் என்று திருத்தக்கதேவர் சொல்வது);
கந்தழி = பற்றுக்கோடின்றி அருவாகித் தான்தோன்றி;
வள்ளி = தண்கதிர் மண்டிலம்.

தொல்காப்பியச் சூத்திரத்தை ரிக்வேத மந்திரத்தின் வாயிலாக நன்கு புரிந்துகொள்ளமுடியும். அவர்காலத்தில் வருணனை ஏன் நெய்தல் திணையின் தெய்வம் என்பதும், நெய்தற்பறை பற்றிய செய்திகளும் உணரமுடியும். (1) கொடிநிலை என்பது கனலிவட்டம் ஆகிய கோள்கள், விண்மீன்கள். (2) கந்தழி = வானத்து ஆலமரம். ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித்  தானே  நிற்குந்  தத்துவங்  கடந்த  பொருள் (வருணன்). (3) வள்ளி = வானத்து ஆலின் விழுதுகள். தண்மையான கதிர்கள் போல, துருவ நக்ஷத்ரத்தையும் (கந்தழி), ஞாயிற்று மண்டிலத்தையும் இணைப்பவை. ஆலமரத்தின் ஆதியான கந்து காலப்போக்கில் அழிந்துவிடும். பின்பிறந்த வள்ளிகளே மரத்தைத் தாங்கும். எனவே, கந்தழியை வருணன்/துருவநட்சத்திரத்துக்கு உவமை ஆக்கினார் காப்பியர். வள்ளி என்று அந்த வானாலத்துச் சடைகளை/விழுதுகளைச் சொன்னார். கொடிநிலை என்பது வருணன் (ஆல்) வள்ளிவீழ்களால் விசும்பில் நிலைபெற்று நிற்கும் விண்மீனும்,கோளும் குறித்தார்.

இதனை, நம்மாழ்வார் சங்கம் வென்ற அகவலிலும், பெருமரம் என்று வானத்து ஆலமரத்தைக் குறிப்பிடுகிறார். வெண்மணற் பரப்பில் பெருமரம் - வெண்மனல் விண்மீன்களுக்கு உவமை.
பெருமரம் ஆகிய ஆலமரம் ஆற்றங்கரைகளில் இருப்பது (புறப்பாட்டில் மா வாராதே என்னும் பாடல், ...) :
கம்பர் சடகோபரந்தாதிக் கண்ணே,
சுவடிறக் கத்தொட ராசைக் களிற்றைத் தொடர்ந்திரண்டு
கவடிறக் கட்டிய பாசத் தளைக்கண் பரிந்துசங்கக்
குவடிறக் குத்திய மாறப் பெயர்க்கொலை யானைநங்காய்
இவடிறத் தொன்றும் படரந்தி வான மிருள்கின்றதே.

என்னும் பாட்டிற் சடகோபரைச் சங்கமாகிய மலைக்குவடு இடியக்குத்திய மாறன் என்னும் பெயருடைய கொலையானை எனக் கூறியுள்ளார். இதனால் சடகோபர் காலத்தே சங்கம் ஒன்றிருந்ததெனவும் அதனை அவர் வென்றனரெனவும் கம்பர் குறித்தனராவர்.

சடகோபர் சங்கம் ஒன்றை வென்ற கதை வைணவருக்குள்ளும் விளங்குகின்றது. அச்சங்கம் கூடலில் முந்நூறு புலவரையுடைத்தாயிருந்த தெனவும் அப்புலவரெல்லாம் வீற்றிருந்த தனிமரப்பலகை ஆழ்வாரருளிய ஒரு செய்யுள் வரைந்த ஓலையொன்றிற்கு இடந்தந்து வேறியார்க்கும் இடந்தராமற் றன்னுட்சுருங்கியதெனவும் அதுகண்டு புலவரெல்லாம் ஆழ்வாரைப் புகழ்ந்து பாடினரெனவும் கூறுவர்.” (கவிச்சக்கரவர்த்தி கம்பர், ரா. ராகவையங்கார்).

அண்டகோள மெய்ப்பொருள்

தற்சிறப்புப்பாயிரம்

சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென
யாரும் தெளிய வியம்புகேன் - பாரிற்
றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்
அருள்காட்ட மெய்ம்மை யறிந்து.

---------*---------

ஆழ்வார்
சங்கத்தார்க்கு எழுதிய அகவல்

----------*------------

அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
வேரும் வித்து மின்றித் தானே   (5)
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலி னழுந்தி
யறுகாற் குறவ னீரற விளைக்குஞ்  (10)
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட் டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன (15)
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.

இது 'மயர்வற மதிநலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற்
குழாங்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய
திருப்பாசுரம் என்பது, கூடலழகர் புராணத்தில் 'அண்டகோ ளத்தாரென்னு மாரியத்
தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்
' என வருங் கடவுள் வணக்கப்
பாடலால் (13) துணியலாகும்.

----------------------------------------------------------------------------------------

அண்டகோ ளத்தாரென்னு மாரியத்
தமிழா லன்று, தண்டமிழ்ச் சங்கம் வென்ற சடகோபர். அதுபோல்,

நற்றிணைப் பாடலில் ’பெருமர வள்ளி’ என்பது யால(> ஆல) மரத்தின் விழுது என்று கூறினேன். தொல்காப்பியத்திலும், வேதப் பெருந்தெய்வம் வருணன் வருகிறான் - நெய்தல் திணைத் தெய்வதமாக. தொல்காப்பியர் வள்ளி என்பதை ஆலம்விழுது என்ற பொருளில் சூத்திரம் பாடியுள்ளார். வேத இலக்கியத்தால் இது விளங்கும்.
     கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
     வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
     கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85.

தொல்காப்பியர் தந்த ஆரியத் தமிழ் இது. பாணிநி, வேதங்கள், பிராகிருத இலக்கணம் எல்லாம் கற்று, தமிழ் பிராமி இலிபிக்கு  புள்ளிக் கோட்பாட்டைத் தமிழுக்கு கி.பி. 2-ம் நூற்றாண்டில் தந்த பெருமான் அவர். பிராமியைத் தமிழ்பிராமி ஆக்கும் ழ, ள, ற, ன என்னும் நான்கு எழுத்தையும் கடைசியாகக் கோத்தார்.

நா. கணேசன்
தமிழின் உயிர் தொல்காப்பியம்
தமிழனின் உயிர் திருக்குறள் - கால்டுவெல் வேள்நம்பி


N. Ganesan

unread,
May 10, 2020, 6:51:34 PM5/10/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Fri, May 8, 2020 at 10:58 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நேற்று வந்தனர் - 4ம் வேற்றுமைத் தொகை 
நேற்றைக்கு வந்தனர் - 4ம் வேற்றுமைத் தொடர் 

கு என்னும் நான்கன் உருபு சேரும்போது, உறுதி சேர்கிறது. நாளை வருவேன். இதைவிட, நாளைக்கு வருவேன் என்பதில் நிச்சயமாய் என்பதும் தொனிக்கிறது. “குறளின் அவசியம் நேற்றும் இன்று மட்டுமில்லை; என்றைக்கும் நெறிகாட்டும் குறள்.” இங்கே “கு” உறுதிப்பொருள்.
காலவரையறைக்குப் பயன்படுகிறது:
காலவரையறைப்பொருள்:
  • புதியவர்கள் இருவாரகாலத்துக்குப் பயிற்சி பெறவேண்டும்.
  • மாலை நான்கு மணிக்கு வந்துவிடுவேன்.
  • ஒருநாளைக்கு மூன்றுவேளை மாத்திரை போடவேண்டும்.
(இவற்றில் நான்கன் உருபு கு நீங்கின் பொருள் சிறக்காது.)

சிலபோது கு பொதுச்சாரியையாக வரும்:
அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம், நம், நும், ஏ, அ, உ, ஐ, கு, ன் ஆகிய பதினேழும் பொதுச் சாரியைகள் என்று (நன்னூல் நூ.243) குறிப்பிடுகின்றது. அச்சூத்திரத்தில் ‘பிற’ என்று சொல்லப்பட்டிருப்பதைக் கொண்டு தன், தான், தாம், ஆம், ஆ, து என்பனவும் பொதுச் சாரியைகளாகக் காட்டப்படுகின்றன.

நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கு என்பன (1) காலவரையறை உறுதிப் பொருளிலோ, (2)பொதுச் சாரியை ஆகவோ வரும்.

சாரியை ஆகக் கு வருதல்:
வட, தென், கிழ, மேல் என்னும் திசைப்பெயர்கள் கு எனும் சாரியை சேர்ந்து
வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என வருபவை. நேற்றைக்கு, இன்றைக்கு,
நாளைக்கு காலவரையறைப் பொருளில் வருவது போல, 4 திசைப்பெயர்களில்
திசைவரையறைப் பொருள் எனினும் அமையும். (Space-Time).

எண்ணுப் பெயரில் நான்கு/நாலுகு (< ஞாலுதல்) என்பதிலும் இந்தத்
திசைவரையறை உறுதிப்பொருளுக்காக கு சேர்ந்துள்ளது.
Both fish and gharial are shown as divinities in the sky in Indus valley seals. 
Being equivalent of Gharial crocodile, it has been shown in Ref. [2] that it will be more appropriate to call 
the deity in Figure 1 as “Proto-Varuna”. The four wild animals surrounding the gharial god represent the 
four cardinal directions (A. Hiltebeitel, Anthropos, 1978). There are tablets from Harappan civilization 
showing these wild animals in a row representing the four directions, and the gharial above them overseeing 
them from the sky. The etymology for the digit four, nalu in Dravidian is discussed using these tablets in 
Section 3.0.  [...]
It is likely that the  four wild animals in Figure 1 surrounding the Gharial (= vitankar in Tamil) represent the four cardinal 
directions. Figure 8 shows the four wild animals, an elephant, a rhino, a wild buffalo and a tiger in a row in 
IVC tablets. And the crocodile, Makara Vitankar acts as their overseer from the sky above. The Tamil verb, 
nalu-tal refers to “hanging down” (DEDR 2912) and the Crocodile god supporting Life in all four directions 
from the Pole Star above via invisible ropes is the possible reason why the digit four is named as nalu/nanku 
(< nalu-) in Dravidian. On another side of the tablet, the overseer Crocodile in the sky is above another set of 
4 animals and possibly they represent the four dependent directions. Together the entire Universe in all eight 
directions are under the control of the Crocodile deity. On the tablet’s third side along with some plants and 
animals, there is a copulating human couple indicating the role of the tablet in fertility rituals. It is possibly 
the reason Varunastava is used in coronation rituals for a King, and also in Hindu marriage ceremonies. It is 
important to note that among the names of 12 months, only “tai” which means “Father, King” in Tamil is a 
pure Tamil word. Even now, “tai” or “makara” representing the heavenly crocodile exists as the only native 
month name in Indian calendars while all the other eleven month names in Indian calendars ultimately come 
from Hellenistic astronomy from Babylon. 
வானத்தில் உள்ள பெருமரம் (ஆல்) அங்கிருந்து நான்கு திசைகளிலும் கோளும், மீனும்
வள்ளி விழுதால் கட்டுதல். இதனால் எழுந்த நான்கு/நாலுகு எனும் எண்ணுப்பெயர்
தொல்காப்பிய சூத்திரம் விளக்கும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் பசு, பதி, பாசம்
தத்துவங்களைக் காட்டும் எண்ணுப்பெயர் ஆகும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 30, 2020, 3:44:42 PM10/30/20
to vallamai, housto...@googlegroups.com
பல ஆண்டுகளுக்கு முன்னர் தொல்திராவிட மொழியில் யால்- (Cf. யானை) மரம் > ஆல மரம் என எழுதியுள்ளேன். அப்போது, குறிப்பிட்ட நற்றிணைப்பாடல். அப்பாடலை முழுதும் பார்ப்போம். உதாரணமாக, இணையப் பல்கலை, ப. பாண்டியராஜா தளத்தில், ... இருந்து.
தமிழர்கள் 5000 ஆண்டுகளாகக் கொண்டாடும் பெருமரம் மேலே குறிப்பிட்ட பப்பரப்புளி அன்று.
சங்க இலக்கியத்திலே பெருமரம் என்று சிறப்புப்பெயர் கொண்ட மரத்தை வர்ணிக்கின்றனர். இது ஆலமரம். இந்தியாவின் தேசியமரம் . உலகத்திற்கே நிழல்தரும் மரம் என்று ஔவையார் அகநானூற்றில் பெருமரம் ஆகிய யால (> ஆல) மரத்தை வர்ணிக்கிறார். அண்மையில் யாழ்ப்பாண தொல்லியல் பேரா. புஷ்பரட்ணம் தென் இலங்கையில் வெளியான முதல் காசுகளில் தமிழர் பெயர்கள் இருப்பதை வெளிப்படுத்தினார். சங்க இலக்கியம் பெருமரம் என்று பரியாயப் பெயரால் யால்/ஆல் மரத்தை அழைப்பர். இப் பெருமரத்தின் பெயரால், தென்னிலங்கையில் உள்ள வனம்: யால தேசிய வனம் https://en.wikipedia.org/wiki/Yala_National_Park .
ஔவை பாட்டைக் கூர்ந்து படித்தால் சங்க காலத்திற்கு 1000 ஆண்டு பின்னர் தோன்றும் பாபாப் (Baobab) மரத்திற்கும், ஆல மரத்திற்கும் உள்ள வேறுபாடு அறிந்து வைத்த பெயர் விளங்கும். பேய்மரம் என்றும் பப்பரப்புளிக்கு ஒரு பெயர். இலைகள் இன்றி, பல கை கால் நீட்டி இருப்பது போல, பப்பரப்புளி இருப்பதால் பேய்மரம். ஆனால், சங்க இலக்கியப் பெருமரமோ ஊருக்கே நிழல் அளிக்கும் ஆலமரம். கவிமணி மலரும் உள்ளம் நூலிலும் புகழ்ந்தமரம். இன்னொன்று: சங்க இலக்கியத்தில் கோவலர்கள் தீ எரிக்க ஆலங்குச்சிகளைப் பயன்படுத்துவர் என வரும். ஆல மரம் “நாரில் பெருமரம்” என்பார் ஔவை. அதாவது கெட்டியான மரம் அல்ல. தீயில் எளிதில் வெந்து கரியாகும். “பெருமர வள்ளி” என்று அருமையான உவமை நற்றிணையில்
உண்டு. இங்கே, ஆலமரத்தின் விழுது “வள்ளி” எனப்படுகிறது. யாலம் விழுது(=வள்ளி, வளைவது)களைப் பிணித்துப் பெண்கள் ஊசலாடுவர். அதனை உவமையாக்கும் பாடல். இந்தியாவுக்கே உரிய மரம், இரண்டு (அ) மூன்று ஏக்கர் கூடப் பராவும் பெருமரம். கல்கத்தாவில் ஒன்றரை ஏக்கரில் உள்ள பெருமரம் ஆலமரம்.
விள்-/ விட்டு/விண்டு :::  >> விஷ்ணு (கதிரவன் கதிர் - இருக்கு வேதத்தில்). அதுபோல்,
வள்-/ வட-/ வண்டு/டி ::: >> ஸம்ஸ்கிருதத்தில் வட விருக்‌ஷம் என்பது யால் மரத்தின் வள்ளி/விழுது தரும் பெயர்தான். https://groups.google.com/forum/#!topic/minTamil/plcY6VvEnes

சங்க இலக்கியப் பெருமரம் (ஆல்) தமிழர்/த்ராவிடர் வானியலில் பெருமிடம் உண்டு. இயற்பியல் பேரா. நண்பர் சந்திரமோகன் துருவ நட்சத்திரம் கிரேக்கர் மூலம் தமிழர் கி.மு. 5-ம் நூற்றாண்டு என திருக்குறள் நூலில் குறிப்பிட்டபோது, சிந்துவெளியில் வட மீன் என்னும் துருவ நட்சத்திரம், ஒவ்வொரு திருமணத்திலும், அருந்ததி - வடமீன் பார்த்தல் பற்றிச் சிறிது குறிப்பிட்டேன். இன்றைக்கு, நேற்றைக்கு ... என்பதுபோல் கு எனும் சாரியை பெற்று வடக்கு என்ற திசைப்பெயரும், வட மீன் என ’போல் ஸ்டார்’ (Pole Star) பெயரும் இந்தியப் பெருமரம் ஆலின் பெயரால் அமைந்தவை.வட திசைக்கண், ரிஷபநாத தீர்த்தங்கரரும், சிவபெருமானும் அதற்கும் முன்னர் (மழுவாள் நெடியோன் வருணனும் வேதத்தில்) வட பெருமரத்தின் அடிக்கீழ் இருப்பது இம்மரப்பெருமை உணர்த்தும். இன்றைய இந்தியாவின் தேசியமரம் இந்த சங்க இலக்கியப் பெருமரம்.
     திணை : பாலை.

     துறை : (1) இது, தோழி வாயின்மறுத்தது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைவிகொண்ட ஊடலைத் தணித்தற்பொருட்டுத் தூதாகவிடுக்கப்பட்ட வாயிலவரைத் தோழி நெருங்கி நம் காதலர் இறைவியின் கண்கள் தம்மைப் பிணிக்குமென்றெண்ணாது கடுஞ்சுரஞ் செல்பவர் பின்பு எதைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிதலோ அவர்க்கு அரிது, அவர் கருதியவை யாவர் அறிவார் என்று மறுத்துக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "பரணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும்" (தொல். கற். 9) என்னும் விதி கொள்க.

     துறை : (2) செலவழுங்குவித்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை (உரை இரண்டற்கும் ஒக்கும்.)

     (இ - ம்.) இதற்கு, "பிரியுங்காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" என்னும் விதி கொள்க. இத்துறைக்கு இதனை முன்னிலைப் புறமொழியாகக் கொள்க.

    
குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப் 
    
பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன் 
    
மாலைக் கட்டின் மார்பூர்பு இழிய 
    
அவ்வெயிறு ஒழுகிய வெவ்வாய் மாண்நகைச் 
5
செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி  
    
திருமுகத்து அலமருங் கண்நினைந்து அல்கலும் 
    
பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னார் 
    
சிறுபல் குன்றம் இறப்போர் 
    
அறிவார் யாரவர் முன்னி யவ்வே. 

     (சொ - ள்.) குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணி - குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செவ்விய கிண்கிணியையும்; பால் ஆர் துவர் வாய்ப் பைம்பூண் புதல்வன் - பாலுண்ணுஞ் சிவந்த வாயையும் மற்றும் பல பசிய கலன்களையுமுடைய புதல்வன்; மாலைக்கட்டு இன் மார்பு ஊர்பு இழிய - மாலையணிதலையுடைய இன்பத்திற்குக் காரணமாகிய மார்பிலூர்ந்து இறங்குதலால்; அவ் எயிறு ஒழுகிய வெவ் வாய் மாண் நகைச் செயிர்தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி - அழகிய எயிற்றினின்றொழுகிய விருப்பமுற்ற மாட்சிமைப்பட்ட நகையையும் குற்றமற்ற கோட்பாட்டினையுமுடைய நம்முயிர் போன்ற விருப்பமிக்க காதலியினது; திருமுகத்து அலமரும் கண் நினைந்து அல்கலும் பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார் - அழகிய முகத்திலே உலாவுகின்ற கண்கள் துன்பமெய்தி நாள்தோறும் பெரிய மரத்தைச் சுற்றிய வள்ளிக்கொடியைப் போல நம்மைப் பிணிக்குமே என்று கருதாராய், சிறு பல் குன்றம் இறப்போர் - எப்பொழுதும் சிறிய பலவாய குன்றங்கடந்து சுரஞ்செல்வாராயினர், அத்தகையார் பின்பு எதனைத்தான் செய்யார்? பரத்தையிற் பிரிந்து செல்லுதலோ அவர்க்கு அரியது, அஃதியல்புதானே; அவர் முன்னிய யார் அறிவார் - இன்னும் அவர் கருதி உள்ளவை யாவர்தாம் அறியவல்லார்? எ - று.

     (வி - ம்.) குரும்பை மணிப்பூண் - அரையிற் கட்டும் கிண்கிணி.

     காதலனது முயக்கம் வேண்டாது புதல்வன் முகத்தில் ஆறியிருக்கவும் அமையுமென்பாள், புதல்வனை முற்கூறினாள், காதலி முயக்கத்தை வெறுத்ததன்றிச் செறுநரும் விரும்புஞ் சேயின் காட்சியையும் வெறுத்துச் செல்பவர், யாதுதான் செய்யாரெனக் கொண்டு கூறினாளுமாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

     (பெரு - ரை.) இரண்டாவது துறைக்கு மெய்ப்பாடு அழுகை. பயன் - செலவழுங்குவித்தல் என்க. 'பெரும வள்ளியிற் பிணிக்கும்' என்றும் பாடம்.

# 269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன்
மாலை கட்டில் மார்பு ஊர்பு இழிய
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி		5
திரு முகத்து அலமரும் கண் இனைந்து அல்கலும்
பெருமர வள்ளியின் பிணிக்கும் என்னார்
சிறு பல் குன்றம் இறப்போர்
அறிவார் யார் அவர் முன்னியவ்வே
# 269 பாலை எயினந்தை மகன் இளங்கீரனார்

குரும்பை போன்ற மணியையுடைய பூணாகிய பெரிய செம்மையான கிண்கிணியையும்
பால் பருகும் சிவந்த வாயையும், பைம்பொன் அணிகலன்களையும் கொண்ட புதல்வன்
மாலை அணிந்த மார்பினில் ஏறி இறங்கி விளையாட,
அழகிய பற்கள் வரிசையாக அமைந்த அழகிய வாயின் மாட்சிமையுள்ள நகைகொள்ளும்
குற்றமற்ற கற்பொழுக்கத்தையுடைய நம் உயிரான விருப்பமுள்ள காதலியின்
அழகிய முகத்தில் சுழலும் கண்கள் துன்பம் அடைந்து, நாளும்
பெரிய மரத்தின் வள்ளிக்கொடியைப் போல நம்மைக் கட்டிப்போடும் என்று கருதாராய்ச்
சிறிய பலவான குன்றங்களைக் கடந்து செல்வோர்; 
அறிவார் யார் அவர் மனத்தில் கருதியதை -

பெருமரம் = ஆலமரம். இது பெருந்தரு என்றும் வரும்.
காழுறு பெருந்தரு நாறு காசினி
     வீழுறு தூரொடு மெலிந்து நின்றன
          ஊழுறு பருவம்வந் துற்ற காலையில்
               சூழுறு தொன்னிலை என்னத் தோன்றினான். ......    96  - கந்தபுராணம் 

பெருமரம் = பெருந்தரு. வருணன், பின்னர் சிவனுக்கு ஆன மரம். எனவே, நடுகற்களை மக்கள் இறந்தபின்
எழுப்புவது வழக்கமாக இருந்துள்ளது.
எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை
அம்ஆ(று) அலைக்கும் சுரநிறைத்(து) அம்மா
பெருந்தரு தாளாண்மைக்(கு) ஏற்க அரும்பொருள்
ஆகும்அவர் காதல் அவா.
  - ஐந்திணை எழுபது. 

இந்த Cosmic Banyan பெருமரத்தை நம்மாழ்வார் சங்கத்தாரை வென்ற அகவலிலும் பாடியுள்ளார்.

இன்று, ஸ்கந்தன் என்னும் சொற்பெயர் ஏன் வந்தது என விளக்கிய பதிவிலும்,
பரிபாடலில் துருவ நக்ஷத்ரமாய் இந்த ஆல மரம் (Cosmic Banyan) இருப்பதும்,
அதன் அருகே சப்த ருஷி மண்டிலம், அவர்களுடன் அவர்கள் மனைவியர்,
செம்மீன் என்னும் அருந்ததி எழுவரில் ஒருத்தி, அவள் தவிர மற்ற அறுவருக்கும்
சிவனது இந்து அடைந்து ஸ்கந்தஸ்வாமி தோன்றினான் என்னும் புராணம் பற்றிய மடல்:

On Sat, May 9, 2020 at 10:48 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 1, 2020, 3:55:38 AM11/1/20
to vallamai, housto...@googlegroups.com
வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் உவேசாவின் தலைமை மாணவர். கலைமகளின் ஆசிரியர். 1952-ல் “பெரும்பெயர் முருகன்” என்ற நூலை வெளியிட்டார். திருமுருகன் அவதாரத்தை விரிவாக உரைக்கும் சங்க இலக்கியப்பாடலுக்கு விளக்கம் தந்துள்ளார். முழுதும் படிக்கவேண்டிய நூல் இது. பரிபாடலில் கடுவன் இள எயினனார் ஸ்கந்தனின் திரு அவதாரத்தை முழுதுமாக விவரித்துள்ளார். ”பாய் இரும் பனிக் கடல்” எனத் தொடங்கும் பரிபாடலின் ஐந்தாம் பாடல் இது. இதன் விளக்கம் முழுதுமாக, திருஅவதாரக் கதை என்ற கட்டுரையாக “பெரும்பெயர் முருகன்” நூலிலே இருக்கிறது. வாரியார் சுவாமிகள் நடத்திய பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முருகன் அவதாரம் http://www.tamilvu.org/ta/library-l1250-html-l1250203-124635
இப்பாடலின் பழைய பொருளை அறிய, சிந்து சமவெளிக் கால இந்திய வானியல், சப்தரிஷி மண்டிலம், அங்கே உள்ள அருந்ததி எனும் செம்மீன் (எனவே, சாலினி எனவும் பேர் உண்டு), சிஞ்சுமார மண்டலம் எனும் துருவ நட்சத்திர மண்டலம் பற்றி அறிதல் வேண்டும். மழுவாள் நெடியோன் (மதுரைக் காஞ்சி) என்பது என்ன என இந்திய, தமிழகத் தொல்லியல் வழியாக விரிவாகக் காட்டியுள்ளேன். அந்த “மழுவாள்” ஆயுதம் ஸ்கந்த ஸ்வாமியின் அவதாரத்தில் எவ்வாறு பயன்பட்டது எனக் காட்டும்  சங்கப் பாடல் வரிகளை இங்கே ஆராய்வோம்.

பெரும்பெயர் முருகன், கிவாஜ
10. திரு அவதாரக் கதை
கடுவன் இளவெயினனார் பாட்டு.

முருகு என்னும் அணங்கு, வானியலில் பொருந்தி சுப்பிரமணிய சுவாமியாக உருவெடுக்கிறது.
“ ‘பூசாரியின் தோத்திரத்தை உண்மையாக்கி முருகன் வருகிறானே!’ என்று ஆச்சரியப்பட்டுப் போன புலவர் முருகனை இப்படிப் பாடுகிறார்.”

“ சங்க காலத்து நூலாகிய பரிபாடலில் வரும் இந்தப் பாட்டில் கடுவன் இளஎயினனார் கூறும் திருவவதாரக் கதை, கந்தபுராணக் கதைக்குப் பலவகையில் வேறுபட்டது. சங்க காலத்தில் முருகன் திருவவதாரத்தைப் பற்றிய இந்த வரலாறே வழங்கிவந்தது என்று நாம் கொள்ள வேண்டும்.”

”சிவபெருமான் உமாதேவியோடு காமத்தை நுகர்கின்ற திருமணம் புரிந்துகொண்டான், அத்தேவியோடு அளவளாவி நெடுங் காலம் இருந்த பிறகு, அமைதி உற்ற சமயத்தில் இமையாநாட்டத்தை உடைய அப்பெருமானிடத்திலே இந்திரன் வந்தான். “அப்பனே, ஒரு வரம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். “கேள்; தருகிறோம்” என்றான் இறைவன். “உமாதேவியோடு அளவளாவியது போதும்; அதன் விளைவாக உண்டாகிய கருவைச் சேதித்தருள வேண்டும்” என்றான். சத்தியமே உருவாகிய எம்பெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தை மாற்றாமல், அதனைத் தன்னுடைய மழுவாய்தத்தைக் கொண்டு பல கண்டமாகச் சேதித்தான்.”

இதை அயின்றனர் சப்த ரிஷி மண்டலத்தில் அருந்ததி/செம்மீன் போக மற்ற அறு தாய்மார். மழு வாள்/ஆயுதம் தமிழகத்தின் எல்லா சிவ மூர்த்தங்களில் இருப்பது இதனால் தான். “மழுவாள் நெடியோன்” (மதுரைக் காஞ்சி). தொல்லியலில் மழுவாள் நெடியோன் எனும் என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். இன்னொரு கரத்தில் கருமான் இருக்கும்.

காம வதுவை - சிவன் இச்சையாற் செய்த திருமணம்.

“இந்திரனுடைய வேண்டுகோளுக்கு இரங்கினான் இறைவன். அப்போது வெளியான கரு, உலக மெல்லாம் தாங்கற்கரிய உக்கிரம் கொண்டு நின்றது. இந்திரனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி அக்கருவைத் தன் மழுவாயுதத்தால் சேதித்தான். அதுகண்டு இவ் வுலகேழும் வியந்தது. “மாற்றாத வாய்மையை உடையவன்” என்று பாராட்டியது.

விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது
அரிதென மாற்றான், வாய்மையன் ஆதலின்;
எரிகனன்று ஆனாக் குடாரிகொண் டதன் உருவு
திரித்திட் டோன்இவ் வுலகுஏழும் மருள.

[விரிந்த கதிரை உடைய மணிகளாகிய பூணை அணிந்த அந்த இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் நிறைவேற்றற்கு அரிதென்று சொல்லி வாக்கு மாறுதல் இல்லாத சத்தியத்தை உடையவன் ஆதலால், இறைவன் நெருப்புக்கனன்று அமையாத மழுவாயுதத்தைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தை இவ்வுலகமெல்லாம் வியக்கும்படி சேதித்தான். குடாரி - மழு. திரித்தல் - சிதைத்தல் ]

இறைவனது அமிசமாகிய அக் கருவானது சிதைக்கப் பெற்றாலும், அதன் வன்மை மாறாதென்ற எண்ணத்தோடு இந்திரன் அதைக் கைக்கொண்டு சென்றான். அவன் செல்லும்பொழுது ஆங்கிருந்த ஏழு முனிவர்களும் கண்டார்கள். சமாதியினால் அவர்கள் உண்மையை உணர்ந்தார்கள். அது சேயாகவேண்டிய கரு வென்பதை அறிந்துகொண்டார்கள். அதனை இந்திரனிடமிருந்து அம் முனிவர்கள் வாங்கிக்கொண்டனர்.

கருப்பெற்றுக் கொண்டோர், கழிந்தசேய் யாக்கை
நொசிப்பின் ஏழுறு முனிவர் நனிஉணர்ந்து
[எழுவராகிய முனிவர் தம்முடைய சமாதி யோகத்தினால், சேயாக வேண்டிய யாக்கை கழிந்த உருவம் அது என்று நன்றாக உணர்ந்து அந்தக் கருவைப் பெற்றுக் கொண்டார்கள். நொசிப்பு - யோகம்.] “

அழல் வேட்டு: அவ் அவித்
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
45 அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்:
                       - பரிபாடல், செவ்வேள் பாட்டு, கடுவன் இள எயினனார்.

இங்கே, “வட வயின்” இருக்கும் ஆல் என்பது வட திசையைக் குறிப்பது. வட மீன்  = அருந்ததி (அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், கலியாணச் சீர்).
ஆல் “Cosmic Banyan/வட விருட்சம்" = துருவ நக்ஷத்ரம் = வருணன்/மகரவிடங்கர்.  தொல்காப்பியர் கூறும் ’கந்தழி’ இந்த ஆல். இந்த துருவ நக்ஷத்ரம் வடதிசையில் உள்ள பகுதி சிஞ்சுமாரம் (= மகரம்/முதலை) என்பது இந்திய வானியல் சாத்திரங்கள்.

மிகப் பழைய வானியல் பற்றி அறியாமையால், உரையாசிரியர் பெருமழை பொ.வே. சோமசுந்தரனார் போன்றோர் பரிபாடல் 5-க்கு எழுதியதில் பிழை நேர்ந்துவிட்டது. இங்குள்ள ஆல் ஆரல் என்பதன் இடைக்குறை அன்று. பரங்குன்ற நெடியோன்  “ஆல்” எனப்படும் பண்டைய பாரத வானியல், தொல்காப்பியரின் கந்தழி இந்த வானத்து வட வயின் உள்ள ஆல மரம். மேலும் அறிய,  https://youtu.be/WyB3h08w0Yc
துருவ நக்ஷத்திரம் தனி மீன். பூமத்திய ரேகைக்கு வடக்கே வாழ்நருக்கு நிலையாக அசைவின்றி இருக்கும். எனவே துருவ நட்சத்திரம் எனப்பெயர். வட-தென் துருவ அச்சில் இருப்பது துருவ நட்சத்திரம். இது வரையறை. வட ஹெமிஸ்பியர் மக்களுக்கு துருவ நட்சத்திரத்தைச் சுற்றியே வானம் சுழல்வதாகத் தெரியும்.

சிந்து சமவெளிக் காலத்தில் ’தூபன்’(Thuban) துருவமீனாக இருந்தது. ~4000 - 1800 BCE. அப்புறம் துருவ நட்சத்திரம் இல்லாது போய்விட்டது. இதன் காரணமாகவே, கார்த்திகையை ஸ்கந்த மாதாக்கள் என்ற கதை பின்னர் ஏற்படுகிறது. ஆனால், ஸப்த ருஷிகளின் மனைவியரில், அருந்ததி தவிர, அறுவர் முதலில் ஸ்கந்தமாதாக்கள் ஆவர்.  இப்பொழுது, போலாரிஸ் எனும் மீன், கி.பி. 500 - கி.பி. 3000 வரை போலாரிஸ் தான் துருவ மீன். கி.பி. 23000-ல் மீண்டும் தூபன் சிந்துவெளிக் காலத்தில் இருந்தது போல் துருவமீன் ஆகிவிடும். இதற்குக் காரணம்: பூமியின் அச்சின் ப்ரெசெஷன் ( https://en.wikipedia.org/wiki/Precession ) . பம்பரமாக சுழலும் கைராஸ்கோப்பின் அச்சைப் பார்க்கவும்.

வேளாண்மையில் தானியம் நேம்புதல் பார்த்திருப்பீர்கள். அதில் இருந்து நேமி = felly of the Wheel உருவாகிறது.
https://groups.google.com/g/houstontamil/c/3xHr-YeZnKI/m/v401oc8GAQAJ
https://mymintamil.blogspot.com/2017/10/Etymology-of-the-word-NEMI-by-N-Ganesan.html
பிரபஞ்சத்தில், விண்மீன்கள் சுழலும் அச்சாக இருப்பதால், துருவ நட்சத்திரம் நட்சத்திர நேமி எனப்படுகிறது.

துருவசக்கரம் turuva-cakkaram , n. < id. +. 1. The wheel of Dhruva, turning the heavens and causing the diurnal motions; இரவு பகல்களை உண்டாக்குவதாகக் கருதப்படும் வானசக் கரம். மேருவின் புறஞ்சூழ்ந்தாடுந் துருவசக்கரம்போல் (திருவிளை. திருமணப். 161). 2. Ursa major; சப்த ரிஷிமண்டலம்  
சிம்சுமாரசக்கரம் cimcumāra-cakkaram , n. < Šiṃšumāra +. The Pole-star. See துருவ சக்கரம்.  
சிம்சுமார ப்ரஜாபதி cimcumāra-p-prajāpati , n. < šiṃšumāra +. The region of the Pole Star beyond the nakṣatra-pada; நக்ஷத்திர பதத்துக்கு மேலெல்லையான துருவமண்டலம். ’நக்ஷத்ர பதத்து மேலெல்லை சிம்சுமார ப்ரஜாபதியிறே’ (திவ். திருநெடுந். 5, வ்யா. பக். 45).
ப்ரஜாபதி - தந்தை போன்றவன். எனவே, இந்த மகர விடங்கருக்கு ஆன சிந்துவெளி எழுத்து உள்ளது. அரிய கண்டுபிடிப்பால் தெரிந்தது. இவ்வெழுத்தை ஆய்வுக் கட்டுரைகளில் காணலாம். 4000+ ஆண்டு சிந்து எழுத்தில் உறுதியாக என்ன என்று தெரிவது இது. இதனைப் பிழையாக, ஐராவதம் மகாதேவன் முருகன் என்றார்.
சிந்துவெளியில் மீன் சின்னம் வானோரைக் காட்டும். மகரச் சின்னம் துருவநட்சத்திரம். அதன் மண்டிலம் மகர மண்டிலம். இவனை “மழு வாள் நெடியோன்” (மதுரைக் காஞ்சி), பரங்குன்றத் தமிழ் பிராமிக் கல்வெட்டு மழுவாள் நெடியோன் என்பதன் விளக்கமாக எழுதப்பட்டது.
https://4.bp.blogspot.com/-XZWV4zOiQlA/WgjiSUojzeI/AAAAAAAAIbo/pETIEvNVrlIFVJyyRYVPBF0UGI0O8yLswCLcBGAs/s1600/indus-makara.png
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

நெடியோன் என்று பரங்குன்றப் பாடல்களில் வரும் நெடியோன் = மழுவாள் நெடியோன். பின்னர் முருகனுக்கு பரங்குன்றம் மாறியுள்ளது. முருகு எனும் அணங்கு வேத இலக்கிய ஸ்கந்தஸ்வாமி ஆன காலத்தில். இதற்குச் சாட்சி, மலை உச்சியில், எளிதில் வயதானோர் சென்று பார்க்க இயலாத தமிழ் ப்ராமிக் கல்வெட்டு இது.

வானியலில் வடமீன் (அருந்ததி), அவள் உள்ள சப்தரிஷி மண்டலத்தின் அருகே உள்ள துருவமீன் தந்தையாக. தன் + தை = தந்தை. எனவே தான், தை மாதம் = மகர மாசம். தை = மகரம் (ஸ்கந்த பிதா). 12 ராசி மண்டிலம் பாபிலோனில் இருந்து வந்தாலும், மகரம்/தை மாத்திரம் தமிழ் மரபு இந்தியா முழுவதும் பஞ்சாங்கங்களில் மாறவே இல்லை. தை/மகரம் போக, மற்ற மாதங்களின் பெயர்கள் இம்போர்ட்ஸ் இந்தியாவுக்கு.

Thuban துருவ நட்சத்திர பதவியை இழந்தபின்னர், கார்த்திகை மீனை முருகனின் தாயர் என ஆக்கின ஹிந்து சமயப் புராணங்கள். கார்த்திகை மீன் கூட்டம் போல ஒளிவீசி மலர்ந்த முசுட்டை (மலைபடுகடாம் - 100). ஆரல் என்பதன் இடைக்குறை.  இந்த ஆறல்மீன் முருகனின் ஆறு தாயர் என்று வருவது பிற்காலம். சங்கத் தமிழில் ஆஅல் வேறு, ஆல் வேறு. ஆஅல் < ஆறல் என்பதன் இடைக்குறை. விரிவாக விளக்கினேன். https://groups.google.com/g/vallamai/c/ZJcgK5lzXnw
ஆனால், மலைபடுகடாம் 100. ஆஅல். இது இடைக்குறை. தேஎம்/தேஅம் < தேசம் போல். ஆஅல் < ஆறல் = கார்த்திகை மீன். இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் உரைகள் எழுதப்பட்டுள்ளன. Precession என்பதும், அதன் விளைவும் பற்றி அறியாமையினால் நேர்ந்த விளைவுகள் இவை. ஸ்கந்தனின் அவதாரம் முதலில் வேத காலத்தில் எப்படிச் சொல்லப்பட்டது. பின்னர் கார்த்திகை நாள்மீனுக்கு எப்படி மாறிற்று எனத் தெரியாததால் இவ்வாறு உரைகள் எழுதியுள்ளனர். ஆனால், பரிபாடல் தெளிவாக இருக்கிறது.

கார்த்திகை ஆறு தாய்மார் ஸ்கந்தனுக்கு என ஆவது பிற்காலம்.  கார்த்திகை மீன்தொகையில் அருந்ததி இல்லை. அதைக் காட்டத்தான் பரிபாடல் பாட்டை - அதில் உள்ள ஆல் என்பது வட விருட்சம், அங்கே அறுவர் சப்த ரிஷிகளின் மனைவியர். + அருந்ததி அங்கே இருக்கிறாள் என்ற செய்தி எல்லாம் பரிபாடலில் இருப்பது வேத வழக்கு. வேத வழிவரும் இலக்கியங்களிலும், பரிபாட்டிலும் கந்தழி ஆகிய வடவிருட்சம் (மகரவிடங்கர்) மகனாக, சப்த ரிஷி மண்டலத்தின் ஆறு தாய்மார் (அருந்ததி தவிர) சொல்லப்படுகிறது.

அருந்ததி துருவ மீன் அருகே இருக்கும் தாரா. சப்தரிஷி தாராகணத்தைச் சேர்ந்தவள். உலகெங்கும் கடலோடிகள் துருவ மீனைக் கருவியாகக் கொண்டே நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டினர். துருவமீன் மறைந்த காலத்தே,  செம்மீனை வைத்துத் திசையைக் கடலோடிகள் கணித்தலைக் குறிப்பிடுகிறார் மருத்துவன் தாமோதரனார் (புறம் 60). (1) பதிற்றுப்பத்து உரையில் வஞ்சி மாநகர் ambiguity. பின்னர் வஞ்சி மாநகர் எது என தொல்லியல் காட்டிற்று (2) தான்றி மரம், தான்றிக்குடி வேறு, தோன்றி வேறு என்று விளக்காமை, ... போல (3) திசையறியக் கடல் ஆடுவோர் பயன்படுத்தும், செம்மீன் = வடமீன்/அருந்ததி/சாலினி/ ஸ்டாரை, செவ்வாய் கோள் என்கிறார் ஔவை சு. துரைசாமி. பாடல் முழுக்கப் படித்தால், செம்மீன் ஆதிரை அன்று, செவ்வாயும் அன்று என உணரலாகும்.

நா. கணேசன்
Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, 16th World Sanskrit Conference Proceedings, Bangkok, Thailand, 2016.    
https://archive.org/stream/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC#page/n0/mode/2up

Reply all
Reply to author
Forward
0 new messages