----------------------------------------
கார்த்திகேயன் (கார்த்தி) என்று பெயர் எல்லாத் தமிழர்க்கும் உறவு, நட்புகளில் இருக்கும். ஆறு விண்மீன்கள் ஒளிர்வது. எனவே, அறுவாய், ஆறாமீன், ஆறல் (> ஆரல்) என்ற பெயர் கார்த்திகை நாளுக்கு உண்டு.
https://ta.wikipedia.org/wiki/கார்த்திகை_விளக்கீடுநிகண்டுகளில், அகராதிகளில்:
கார்த்திகை = அறுமீன், அறுவாய், அங்கிநாள், அழற்குட்டம், தழல், எரி, அளகு, அளக்கர், ஆல், ஆறாமீன், இறால், நாவிதன். Pleiades, as containing six stars
ஆறாமீன் = கார்த்திகை மீன்
https://books.google.com/books?id=6HVFAAAAcAAJ&pg=PP47& 1842 Jaffna Dictionary
https://books.google.com/books?id=1z9CbrOVvo8C&pg=PA172& 1855 Tamil-French dictionary
MTL:
ஆறாமீன் āṟā-mīṉ n. <id.+id.+. Pleiades, as containing six stars; கார்த்திகை.
ஆறாமீனறவோட்டு āṟā-mīṉ-aṟa-v-ōṭṭu n. <id.+. Passage of the sun through the segment of the Zodiac occupied by Pleiades, regarded by seamen as a period when rough weather is to be anticipated;
கார்த்திகையில் சூரியன் பிரவேசிக்குங்காலம். (W.)
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – மலைபடுகடாம் – 10ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.
சொற்களில் றகரம் ரகரம் ஆதல்:
2010-ல் எழுதிய மடல்:
https://groups.google.com/g/thamizayam/c/F8Gpo2zubUoபறுந்து > பருந்து (ஒப்பு: பாறுதல், பாறு)
[...]
கார்த்திகை (Pleiades) இதற்கு
அறுமீன் என்று பெயர். [முருகன் = அறுமீன் காதலன் (திவாகரம்)]
அறுவாய் = கார்த்திகை மீன் 6.
எனவே, (6 > ஆறு + அல்) ஆறல் : ஆரல்
ஆரல் மீன்: பெயர்க்காரணமும் 10 ஆண்டு முன்பு எழுதியுள்ளேன்,
அறல் என்றால் ஆற்று மணலில் உள்ள வரிவரியான கோடுகள்,
பெண்ணின் கூந்தலுக்கு உவமையாய் சங்க இலக்கியத்தில் வரும்.
ஆற்றில் அடியே மணலருகே கிடக்கும் விலாங்கு மீனுக்கு
ஆரல் என்று பெயர். ஆறல் : ஆரல்/ஆரால்.
ஆறல்:ஆரல் Rhynchobdella aculeata (sand eel, மணல் விலாங்கு)
http://www.aquapage.cz/Obrazky/Ryby/3483.jpgதேசெம்/தேசம் என்னும் வடசொல் சங்க இலக்கியத்தில் தேஎம், தேஅம் எனப் பெயரும். எந்த “ச்” மெய் என்பதால் விட்டுவிட்டனர்.
ஆறல்/ஆரல் இருவிதமாகவும் உச்சரிப்பு சங்க இலக்கிய காலங்களில் இருந்திருக்கும். எனவே, ற/ர சிக்கலைத் தீர்க்க
மலைபடுகடாம் ஆசிரியர் ஆறல்/ஆரல் என்ற கார்த்திகை நாள்மீனை ஆஅல் என்று ஆவணம் ஆக்கினார்.
ஆஅல், தேஎம் போன்றவை ”இடைக்குறை” என்று தமிழ் இலக்கணாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவை அளபெடை அல்ல.
------------
இந்த ஆஅல் (< ஆறல்/ஆரல்) எனும் கார்த்திகை நக்ஷத்ரப் பெயர் முந்து-திராவிடம் ( Proto-Dravidian) எனும்
தொல்திராவிட மொழியில் யால்/ஆல் (Cf. யானை/ஆனை < யால்நை) எனும் ஆலமரப் பெயரினும் வேறானது.
யால்/ஆல் மரம், யானை/ஆனை முறையே விழுது, துதிக்கையால் அமைந்த பெயர்கள். இப்பெயர்களுக்கும்
ஆஅல் என்னும் கார்த்திகையின் பெயருக்கும் தொடர்பில்லை என்பது வெள்ளிடைமலை.
இந்த ஆலமரம் எனும் வட விருக்ஷம் (நியகுரோதம்) வானத்தில் துருவ நட்சத்திரமாய் (=வருணனாக) பேசப்படுகிறது.
இதன் கண்ணுக்குத் தெரியாத விழுதுகள் விண்மீன்களை, கோள்களை தாங்கிப் பிடிக்கின்றன என்பது இருக்குவேதம்.
இதனை, தமிழில் அழகாக முதலில் சொல்லியவர் தொல்காப்பியர் ஆவார். இந்த வானப் பெருமரத்தை,
மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரை வென்ற அகவலில் நம்மாழ்வார் அழகாக விளக்கியுள்ளார்.
https://groups.google.com/g/santhavasantham/c/lwqp4CxPFso/m/WDXbIozTCQAJசங்ககாலப் பெருமரம் பற்றி அறிய:
https://science.howstuffworks.com/life/botany/understanding-roots-banyan-tree.htm”Hindu texts written over 2,500 years ago describe a cosmic 'world tree,' that references an upside-down-growing banyan that has roots in heaven and extends a trunk and branches down toward Earth to deliver blessings. Over centuries, the tree took on significance as a symbol of fertility, life, and resurrection. The banyan also served as a source of medicine and food for centuries, and the bark and roots are still used today to treat a variety of disorders, particularly in Ayurvedic medicine.”
2500 ஆண்டு அல்ல, 5000 ஆண்டுகளாய் யாலமரம் (வட விருக்ஷம்) இந்தியாவில் வழிபடப்படுகிறது. 3000+ ஆண்டுமுன் பாடிய ரிக்வேதத்தில் துருவ நட்சத்திரம் மற்ற விண்மீன்களை கண்ணுக்குத்தெரியாத வள்ளி/விழுதுகளால் இணைக்கிறது. அதனால்தான் விண்மீன்கள் கீழே விழுந்துவிடாமல் வானத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன என்று பாடுகிறது. ஆல் எனும் பெருமரத்தை பிரபஞ்சத்திற்கே உவமை ஆக்கும் அரிய பாடல்கள். வேதம் துருவ நட்சத்திரம் வருணன் என்றும் கூறும். இவ்வருனன் சங்க இலக்கியத்தில் மழுவாள் நெடியோன் எனப்படுதலும், குடிமல்லத்தில் இந்தியாவின் முதல் இலிங்கமாக இருப்பதும் விளக்கியுள்ளேன் [1]. அருந்ததி, வடமீன் பார்த்தல் என்னும் பழந்தமிழர் கலியாணச் சீர் இந்த துருவ நட்சத்திரத்தை 5000 ஆண்டாகப் பார்ப்பது தான். நற்றிணைப் பாடலில் ’பெருமர வள்ளி’ என்பது யால(> ஆல) மரத்தின் விழுது என்று கூறினேன். தொல்காப்பியத்திலும், வேதப் பெருந்தெய்வம் வருணன் வருகிறான் - நெய்தல் திணைத் தெய்வதமாக. தொல்காப்பியர் வள்ளி என்பதை ஆலம்விழுது என்ற பொருளில் சூத்திரம் பாடியுள்ளார். வேத இலக்கியத்தால் இது விளங்கும்.
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85.இங்கே, வள்ளி என்பது ஆலம் விழுது. தமிழரின் பண்டை வானியலாலும், இருக்காலும் தெளியலாகும் செய்தி. இதனை உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்:
வள்ளி என்பதுவும் கொடியை என்னை? பன்மீன் தொடுத்த உடுத்தொடையைக் கொடி எனப்படுதலின் அத் தொடையினை இடைவிடாது உடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார் : முத்துக் கொடி எனவும் மேகவள்ளி எனவும் கூறுமதுபோல் கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையேவைத்தார். (தொல்.புறம். 33) (நச்சி.)
வைஷ்ணவ சமயத்தின் வித்தாக இந்தச் சூத்திரத்தை நச்சினார்க்கினியர் காண்கிறார்:
கொடிநிலை = ஞாயிற்று மண்டிலம், (= கனலிவட்டம் என்று திருத்தக்கதேவர் சொல்வது);
கந்தழி = பற்றுக்கோடின்றி அருவாகித் தான்தோன்றி;
வள்ளி = தண்கதிர் மண்டிலம்.
http://www.tamilvu.org/library/suvadi/s012/html/s0125098.htmI spoke about Tamil history, a bird's eye view from Philology, Linguistics, Art History and Archaeology aspects on the day next to Saraswathi Pooja, 2020.
https://youtu.be/WyB3h08w0Ycஇந்த ஆய்வுச் சொற்பொழிவில், மதுரை திருப்பரங்குன்றம் எனும் பேரில், பரன் என்ற சம்ஸ்கிருதப்பெயர் மழுவாள் நெடியோன் என்னும் வருணனுக்கு ஆனது. அவ் வருணனை, அழகான தமிழ் ப்ராமிக் கல்வெட்டாக, “மூ நாகரா [யால்/ஆல் சின்னம்] மூ சக்தி” எனக் குறிப்பிட்டுள்ளனர். பரன் = நெடியோன். காலப்போக்கில், வருணனுக்கு ஏற்பட்ட பெயர், முருகனுக்கு ஆன குன்றமாக மாறிவிட்டது. பழைய தமிழ்ச் சங்க கல்வெட்டுகள் (உ-ம்: முதலைக்குளம்), பல்யாக சாலை பெருவழுதி நாணயம், சங்க காலத்தில் சேரநாட்டின் தலைநகராக இருந்த வஞ்சி (இன்றைய கரூர்) மாநகரில் கிட்டிய பெருவழுதி மோதிரம், பரங்குன்றுக் கல்வெட்டு, .... இவற்றால் ஆராய்ந்து அறிந்துகொள்ளலாம்.
நா. கணேசன்