எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது. அது பிறரை வருத்தமூட்டுவது போலவும் உணர்கிறேன்.அதனால் தான் ஒரு தனி இழையில் என்பாட்டுக்கு ஒவ்வொரு மறுப்பையும் பதிவு செய்தால் மற்றவர் மனம் நோகாமல் ஒரு ஓரமாகப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றுதான் இந்த இழை....///என் யூடியூப் சேனல் பசுமைக்கவிஞனில் உள்ள சங்க சாகரம் தொடரில் நற்றிணை பாடல் எண் 58க்கு காணொளி விளக்க உரை அளித்திருக்கிறேன்.அதற்கான சுட்டி இதோ ---> https://www.youtube.com/watch?v=misiFadAK2Qகுழுவில் உள்ள பெருமக்கள் இதனைக் கேட்டு கருத்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்/// Dr. கணேசன் pasted in the string''வவ்வுதல்...... '10 hrs agoஆர்வத்தையும், உவமையைப் பொருத்தி விளக்கிய திறமையையும் முதலில் பாராட்டியே தீர வேண்டும். 'பறையில் தீட்டிய குருவி மொத்துறுவதுபோல் சேர்ப்பனின் தேரில் பூட்டிய குதிரை மொத்துறுவதாக' என்ற பாடல்கருத்தில் பொதிந்திருக்கும் நுட்பமான காதல் கருத்தை வெளிக்கொண்டு வந்தது தனித்திறமை.
சிக்கல் தோன்றுவது தலைவி காதல் கொண்ட தலைவன் தித்தன் என்று சொல்லிச் செல்வது தான்.காதலன் 'சேர்ப்பன்' என்று வெளிப்படையாகச் சுட்டுகிறார் புலவர்.சேர்ப்பன் பரதவர் தலைவன்- அதாவது நெய்தல் திணைமாந்தர் தலைவன். (இது நாம் பள்ளிக்கூடத்தில் பொருளிலக்கணம் பயிலும்போது இலக்கணப் புத்தகத்தில் இடம்பெறும் கருத்து தான்.)தித்தன் 'வீரை வெளியன் வேண்மான்' என்றும் பாடலில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது....அதாவது வேளிர்குலத் தோன்றல். (தித்தன் உறந்தையைச் சேர்ந்தவன் என்று பட்டினப்பாலையில் செய்தி உள்ளது.) காவிரிக்கரையோர வேளிரின் செல்வ வளம்; பாடல் பேசும் மாலைநேர வருணனையிலும், சிறுவர் தோற்றத்திலும் புனையப்பட்டுள்ளது. தித்தனும், அவனது செல்வமும் பாடலில் இடம்பெறக் காரணம் அச்செல்வச் சூழலை விளக்கி; அதற்கிடையில் தலைவியின் துன்பத்தைக் கூறுமுகமாக; அவனது தேர் அவனது வாழிடம் நோக்கிச் செல்கிற போது....ஒரு முரண்பாட்டை உருவாக்கி அவளது நோயின் வீரியத்தைப் புலப்படுத்துவது தான்.மாலைப் பொழுதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும்; தொடர்ந்து எங்கும் ஏற்றப்படும் விளக்குகளும், பனி பெய்யும் பொழுதும்... காதல் நோயைத் தாங்கமுடியாத தலைவியின் துன்பத்தை மிகுவிக்கின்றன. அவள் தித்தனின் ஊரைச் சேர்ந்தவள்....அவ்வளவே. அவ்வளவு செல்வச் செழிப்பிற்கு நடுவில் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தலைவன் வாய்ப்பளிக்கவில்லை. எவ்வளவு கோபம் வரும்?!ஆற்றாமை மிகுந்தாலும் தலைவன் மொத்துறுவதாக என்று சொல்லிவிட இயலவில்லை; ஆதலால் அவன் குதிரை மொத்துறுவதாக என்கிறாள்.பேசுவது தோழி என்று சொல்வதன் காரணம்; ஒரு பெண் தன் தாபத்தைக் கூறுவதாகப் பாடல் புனைவது அவளது பெருமைக்கு இழுக்கு என்று கருதும் ஆணாதிக்கப் போக்கு என்று இன்றைய சூழலில் சொல்லத் தயங்க வேண்டியதில்லை.தலைவி தன்மைப்பன்மையில் பேசுவது போல் எண்ணிப் பார்த்தால் பாடல் இன்னும் சுவை உடையதாகத் தான் இனிக்கிறது."செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ? என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd3%3Dz4R8OC%3D6FUsXi1haOWTH0FgGtgJZ-ZpE-CPtDrf1w%40mail.gmail.com.
நேற்று தான் வரி = நெல் எனப் பார்த்தோம்.செவ்வரி = செந்நெல்நெல் அறுவடையின் போது பறை கொட்டுவதைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன.பாடலில் போற்றுவது தித்தனின் உறந்தை வளம்.அங்கே வயலில் பணியாற்றும் துடியரின் சிறுவர் பொன் அணிகலன் அணிந்து செவ்வரிப் பறையைத் தோளில் கோத்துக் கொண்டு குருவி ஓப்ப; விடாது பறையை ஒலிக்கின்றனர்(அவ்வளவு செல்வவளம்).காலமோ...பனி தொடங்கி விட்டது.அறுவடை நெருங்கி விட்டது.அதனால் தான் இரங்கல் பொருளில் பாடலும் அமைந்துள்ளது.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvD_qzutA1AQN8E%2BBLAajp1rvEhV557Owya4_3e3%2BqXJQ%40mail.gmail.com.
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6h5rPEYNFq2C9RFBcwc668jvkENnXWbig9dOPa1MMF_xw%40mail.gmail.com.
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் காலமும் பொருந்துகிறது.சக
பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ5 வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர உயர்திரை10 நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே.
திங்., 25 மே, 2020, பிற்பகல் 6:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu801RENhuSga6jUk%3DDosTeM4Cpoy2vDK7jSHDT4WLScQ%40mail.gmail.com.
On Tuesday, May 26, 2020 at 11:10:32 AM UTC-7, N. Ganesan wrote:
On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும் காலமும் பொருந்துகிறது.சகஅரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை. நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள். இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.
///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///என் மறுப்பு .....முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும்.என் மறுப்பு:நாம் ஓக்லகோமா பெண் என்று குறிப்பிட்டது, அவ்வாறு யுட்யூபில் இருப்பதால்.
முனைவர் கணேசன்;எந்த இடத்தில் நீங்கள் சுட்டுவது போலக் குறிப்பிடப்படுகிறது.நக்கீரன் நெறியாளர் பேராசிரியை என்றுதானே குறிப்பிடுகிறார் !!!!

/// அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள். இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.....சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது.) /// Dr.Ganesan wrote 17 hrs.ago.இல்லை; முனைவர் கணேசன் அவர்களே .செந்நெற் பறை உறுமி/ பம்பை போல இருந்திருக்க வாய்ப்பில்லை.அந்தப் பறையை சிறுவர் தோளில் சேர்த்திருக்கின்றனர்.....அது கோலால் அடிக்கப்படுவது....நற்றிணைப் பாட்டு குதிரையை அடிப்பது பற்றித் தான் பேசுகிறது....அதுவும் குருவி படம் போட்டுப் பறவைகளை விரட்டுவதற்குரியதாக.....
காலம் ரொம்பவே மாறிவிட்டது.தொண்ணூறுகளில் நான் பணியாற்றிய பெண்கள் கல்லூரியில் நாட்டுப்புறவியல் சான்றிதழ் வகுப்புகளை பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியிலுள்ள நாட்டுப்புறவியல் துறையின் உதவியோடு நடத்தினோம். நிறைவு விழாவிற்கு அக்கல்லூரியிலிருந்து ஒரு குழுவினர் வந்து நாட்டார் நிகழ்த்து கலைகளை மேடையில் ஆடிப்பாடிப் பறைமுழக்கிக் கொண்டாடுவர். அக்குழுவிலேயே பெண்களும் சேர்ந்து ஆடிப்; பறை முழக்குவர். இப்போது அந்தத்துறை இருக்கிறதா? என்று தெரியவில்லை. மறைத்தந்தை பிரிட்டோ அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி மிக மிக நுட்பமான செய்திகளை எல்லாம் சொல்வார்; அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது...20ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால் பெண்கள் தொண்ணூறுகளிலேயே பறைமுழக்கி ஆடினர் என்பது உறுதி.பொதிகை தொலைக்காட்சியில் மாலை நிகழ்ச்சிகளில் பெண்கள் பறை முழக்கி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன்..2013-2014- நான் பணியாற்றிய கல்லூரியில் தேசீய தரநிர்ணயக்குழுவை வரவேற்க என் மாணவர்களைக் கொண்டு பறையாட்டம் நடத்த வைத்தேன்; வடநாட்டு விருந்தினர் மிகவும் ரசித்தனர். வாயாரப் புகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய முனைவர் ஆனந்த் சர்மா...'எங்கள் பக்கம் மாணவர் கலைநிகழ்ச்சி என்றாலே சினிமாப் பாட்டுக்குரிய ஆட்டம் தான் இருக்கும். இங்கே சினிமாப்பாட்டே இல்லாமல் ஒருமணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது கல்லூரியின் தரத்தைக் காட்டுகிறது ' என்று புகழ்ந்தார்.இங்கே இப்போது பல பள்ளிகளில் பறையிசை வகுப்புகள் நடைபெறுகின்றன. யாரும் விகற்பமாக எண்ணுவதில்லை.என் பேரன் பயிலும் பள்ளியிலும் பறைவகுப்பும் ஆடல்பயிற்சியும் உண்டு. என் பேரனும் பறை அடித்து ஆடப் பயில்கிறான்.ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் அந்தப் பள்ளி முதல்வர் ஒரு பறைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து; அவரே நடுவில் நின்று ஆடவும் செய்வார். அவரது பறை சிறிய அளவினதாக இருக்கும்; இடுப்பில் கோத்திருப்பார். பிள்ளைகள் அடிக்கும் பறை நீங்கள் சொல்லும் தெலுங்கப்பறை என்று எண்ணுகிறேன். தப்பாட்டம் என்று சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகள் பலர் சேர்ந்து பறை அடித்து ஆடுகின்றனர்; இணைப்பில் காட்டியிருக்கிறேன்.சக
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c2b9e101-fece-4deb-9f65-017fc6c9e563%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcs7iAojxGhxqWbcvSrZQYaBJYHGxg_o2o%2BLqP-dcca8yQ%40mail.gmail.com.
அனைவருக்கும் வணக்கம்,2000 ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்தில் வெளவால்கள் கூட இடம்பெற்றிருந்தமை பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.கொரோனா தொற்று கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் வெளவால்கள் மீது வெறுப்பு ஓங்காமல் அன்பே ஏற்பட வேண்டும் என்னும் நோக்கத்தில் நற்றிணையின் 87ஆவது பாடலை என் சேனல் பசுமைக்கவிஞன்-இல் விளக்கி காணொளி பதிவேற்றியிருக்கிறேன்.அந்தக் காணொளிக்கான சுட்டி இதோ --> https://www.youtube.com/watch?v=50vjTS0xwpU/// Dr.Ganesan pasted on 25th may in the string 'வவ்வானி.......'
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு 5 பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும் பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUeU8iLkdiPHQXLLRQFf7kj9ymC6v1ZyLdeEExcTz5OGbA%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs%3DT%3D48NgB0hHoWA5CLT-HzkGPTz%3DeE-PtTrraoY1KTuA%40mail.gmail.com.
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்கு.றவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6in0AtfzddeON_zhJw9U9CAj1%3DyeVxOpsGxiNXAn2S82w%40mail.gmail.com.
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.
குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6in0AtfzddeON_zhJw9U9CAj1%3DyeVxOpsGxiNXAn2S82w%40mail.gmail.com.
எல்லாக் காதலனும் நாடன் இல்லை. சான்றாக ஐங்குறுநூறில் மருதப்பாடல்களின் தலைவன் ஊரன். (திணைமாந்தன் / கிழான்).நாடன் வேறு; ஊரன் வேறு என்பதைப் புறநானூறு தெளிவாக வரையறுக்கிறதே."நாடன் என்கோ; ஊரன் என்கோபாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ"எல்லாக் குறவனும் தந்தையுமில்லை.இங்கே தலைவன் ஆற்றி இருக்கும்போது அவன் நிலையுடன் தந்தைமகள் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் பலனில்லை. தனித்திருக்கும் தலைவன் தன்னைக் குடும்பம் / இல்லற இனிமையுடன் ஒப்பிடும் போது தான் ஏக்கவுணர்வும், பொருட்சிறப்பும் மேம்படும்.போதையில் இருக்கும் தந்தையிடம் மகள் குறுநொடி பேசினாள் என்பது.......அபத்தமாகத் தோன்றுகிறதே.
On Mon, Jun 1, 2020 at 2:24 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.
குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcaNTNJufi3TR%2BJNJ%3D4va6LpPBr-p9V6W%2BRZJ9jHR4ovQ%40mail.gmail.com.
தங்கள் நற்றிணைப் பாடல் பொருள் காண்டலில் குறவர் என்கிற சொல்லுக்கு தந்தை என்று சொல்லப்பட்டுள்ளதே
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvocMGQAK6BB9CDsTFfGDiaCHCaTJcGcdKCJhjtNK66jA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFfhOEiFLUyN9QBqOA_%3D3EEY_Nezk_KK9MvWkx_1XNYRMUhFcA%40mail.gmail.com.
குரவர் - ஐம் பெருங் குரவர் ஆணை; . குறவர் என்பது தந்தை என்கிற பொருள் தருமா?
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago."குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsGQA9z83sz9BDb2tFyN5saC%3DCLGcVaCyT4UfCQ53ihXg%40mail.gmail.com.
இது என் பொதுவான மடல்.தனிப்பட யாருக்கும் குறிப்பிட்டு எழுதும் பதில் இல்லை.எனக்கு அவ்வப்போது இப்படி ஒரு இடம் தேவைப்படுகிறது.இயல்பாக மூச்சுவிட வேண்டும்.இல்லையென்றால் திட்டி விடுவேனோ? கோபத்தைக் கொட்டி விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது.என்ன மனப்பான்மை!ஒரு கணவன் பணி நிமித்தமாக மனைவியைப் பிரிந்து இருக்கும்போது அவளை நினைத்துப் பார்க்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத......இது தானே ஆணாதிக்க மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு.நேற்று முழுவதும் அமைதி காத்த காரணம்; என் சினம் அடங்கட்டும் என்பது தான்.
பத்து வயதுப்பெண் போதையிலிருக்கும் தந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்... கணவனுக்குக் குடும்ப நினைப்பு வரும்... அது தான் .- 341ன் தலைவனுக்கும் வந்தது என்று கூறுகின்றனர்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6h_4PhU8FwX8xBu2KChMJrGLWWFd%2BKKy9c4OPMJW%2B0ySA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcu1XwGuLc%3DmBQ0nXaF2AiEtvyp_XaTEYD8HHu2HOYKQLw%40mail.gmail.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/063729B2-72FA-4BD3-8EDD-00DC0E66AD1C%40hxcore.ol.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6ih%2B4ONve5xBU56CwcBwP_Q70hGum%2BZBqx1ooi9Nzh3Rw%40mail.gmail.com.
கன்று பெறு வல்சி = உணவிற்காகக் கன்றைப் பெற்ற...என்று பொருள் கொள்கிறேன் ஐயாசக
On Fri, 20 Nov 2020, 7:59 am வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:கன்றுபெறு வல்சி:உரித்து தின்றலென்பது தவறான பொருள். அம்மா'வின் அரசு மக்களுக்கு, ஆடு கொடுத்தது. உரித்துத்தின்ன அல்ல.வளர்த்து, விற்று வருமானம் பெற.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcuxdS_9umkD9%3DG-AEe5EfNorHHJvcwP%3D55exLQHKs44kw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfd%3D8EnuiNjVLOhK0DD3CPYmmO6kU8Jt8gFViZR5o-nOQ%40mail.gmail.com.
வல்லை = விரைந்துசரிதான்; அதற்காக பாணன் கன்றை உண்டமைக்கு அச்சொல் ஆதாரமாகி விடாது.'வல்லை' என்பது வினையடையாக உள்ளது. அது ஒரு வினையைச் சிறப்பிப்பதாகவே அமைய இயலும்."கன்று பெறு வல்சிப் பாணன் கையதைவள்ளுயிர்த் தண்ணுமை" யின் செயலுக்கு உரிய அடை அதுவாகும்.
வேந்தர் ஐயா;கன்றை இனாமாகக் கொடுப்பது செவ்விலக்கியக் காலக் குடும்பத் தலைவன்; பரத்தமை பூண்டவன்.அம்மா அரசோடு அதை ஒப்பிடவே இயலாது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6imqZ043nKbcaGtPYe9vUDCdwnup3P5gbhqb_4VHF9N_g%40mail.gmail.com.
களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன். பாணனது வரிசை உணர்த்தி நின்றது. There is a version of this poem with the words கன்று பெறு வல்சிப் பாணன், which does not appear to be right. In the copying and recopying process of the original poem the ‘ளி’ in களிறு could have been easily copied in error as ‘ன் ‘. Pinnathūr Narayanaswamy Iyer who wrote the first commentary for Natrinai had the words in the poem as கன்றுபெறு வல்சிப் பாணன், and interpreted them as ‘bards who peel and eat calves.’ The word ‘peel’ is just not there, nor is it implied. In Akanānūru 106, the phrase களிறு பெறு வல்சிப் பாணன் has been used, proving that the word கன்று is a copy error. There are many references to kings donating elephants to bards and poets. There are no references to bards, poets or other artists eating calves or cows. In Kurunthokai 295, the word வல்சி means ‘livelihood with a single cow’ – ஓர் ஆன் வல்சி. There are 4 references of wayside forest bandits killing and eating cows – அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர், அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து. Kings gifted bards with elephants. Puranānūru 12, 151, 233, 369, have references to this. Bards also received as gifts, gold lotus flowers in Puranānūru 12, 29, 126, 141, 244, 319, 361, 364, gold ornaments in Puranānūru 160, abundant food in Puranānūru 33, 34, 180, 212, 320, 326, 327, 328, 332, 334, 376, 382, agricultural towns in Puranānūru 302, and toddy in Puranānūru 115, 170, 224, 239. The words பாண்கடன் in Puranānūru 201 and 203 imply that the kings and benefactors owed responsibility to bards who nurtured Tamil.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv0hnG2hBjVC2gdHHDHcviycMjsddPeh4ftukp9n%3DHEJg%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iGwpWo778%3DUBSERtmSROia6EXBCF_KW3wEj7Ej20d7HA%40mail.gmail.com.
களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன். பாணனது வரிசை உணர்த்தி நின்றது. There is a version of this poem with the words கன்று பெறு வல்சிப் பாணன், which does not appear to be right. In the copying and recopying process of the original poem the ‘ளி’ in களிறு could have been easily copied in error as ‘ன் ‘. Pinnathūr Narayanaswamy Iyer who wrote the first commentary for Natrinai had the words in the poem as கன்றுபெறு வல்சிப் பாணன், and interpreted them as ‘bards who peel and eat calves.’
Yes , I accept his opinion.
The word ‘peel’ is just not there, nor is it implied.
No, it can be prooved .
In Akanānūru 106, the phrase களிறு பெறு வல்சிப் பாணன் has been used, proving that the word கன்று is a copy error.
No; Akam 106 reads as follows:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcEdRs6RA5qXZ%2BAnmaSXS_iFNFoA%3DqpUdMfxysgw2AZdQ%40mail.gmail.com.
///தாமரையின் பசிய இலைகள் = குடும்பத்தின் கிளைஞர் (பங்காளிகள்; அதாவது அவர்களும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்)மருதத்திணையின் இப்பாடலில், முழுக்க முழுக்க பெண்களே இடம்பெறுகின்றனர்.இல்லை. பாணன் கன்றைப் பெறும் செய்தி உள்ளது. பாணன் ஆண்மகன்.
எனவே, நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (உவேசா, பின்னத்தூர்) கூறும் இற்பரத்தையர் (ஊரனின் காமக்கிழத்தியர்) = தாமரை நாளத்தில் உள்ள பசிய இலைகள் என்பது மிகப் பொருந்துகிறது.உளவியல் அடிப்படையில் பொருந்தவில்லை.பரத்தமையில் ஈடுபடுபவன் தலைவன் தான்; ஆசை நாயகிகள் அவனுக்கு மட்டுமே உரியவர்கள் தாம்; அவர்களைப் பரத்தையர் என்று சொல்வதே ஆண் முதன்மைச் சமுதாயம் பெண்களுக்கு இழைத்த கொடுமை என்பேன்.
பங்காளிகள்என்றால், ஆண்கள் 50% இருப்பர். அவர்களுக்குத் தலைவன் எத்தனை பெண்களை வைத்திருந்தால் என்ன கவலை? ஒன்றுமில்லை.இன்றைய பொருளாதாரச் சூழலை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்; தொகைநூற்காலக் கூட்டுக் குடும்பத்தை மனதில் இறுத்திவைத்துப் பேச வேண்டும். அன்றைய பொருளாதாரம் வேளாண்மை சார்ந்தது; தலைவனின் பரத்தமை கூட்டுக் குடும்ப வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்காது.
இந்தியாவில், ஆப்பிரிக்காவில், சீனாவில், இஸ்லாம் நாடுகளில், பல பெண்களை செல்வர்கள் மணந்து வைத்திருப்பது (உ-ம்: சிலம்பு ...)வாடிக்கை. எனவே, முழுதும், பெண்டிர் பாட்டாகிய நற். 310-ல் உவேசா, பின்னத்தூரார் கூறும் காமக்கிழத்தியருக்கு உள்ளுறை தாமரையின்அகன்ற பச்சை இலைகள் எனக் கொள்கிறேன்.பாடலாசிரியர் பரணர், தொகுத்தவர், தொகுப்பித்தவர், ஏடு திரட்டிய உ.வே.சா., உரை எழுதிய பின்னத்தூரார், இப்போது கருத்துரைக்கும் நீங்கள் எல்லோரும் ஆண்முதன்மைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகத் தான் பார்க்கிறீர்கள்.ஆசைநாயகியாக இருக்கும் பெண்; தலைவி மட்டுமே குடும்ப விளக்குப் போன்றவள் என்று ஒருபோதும் சொல்லவும் மாட்டாள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள்.பொருளாதாரத்தால் பிரிக்கமுடியாத கிளைஞர் குடும்பத்தலைவியின் அதிகாரம் தெரிந்து அவளைக் குடும்பவிளக்கு என்று ஒத்துக்கொள்வர்.
100% பெண்கள் பற்றிய பாடல், அவர்கள் உரையாடல். /// Dr.Ganesan wrote 3days ago.இன்னொரு விஷயம்.தலைவி தாமரை என்னும் குறியீடு பெறுவதற்கு இன்னும் சில பாடல்கள் உள்ளன.அதுபோல ஊர்மேயும் தலைவன் எருமை என்று குறிப்பிடும் பாடல்கள் பல.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsa_BkMf4hZ3yMSr4um9Lw97wervqBMEHnNXF9-pDKvmw%40mail.gmail.com.
100% பெண்கள் பற்றிய பாடல், அவர்கள் உரையாடல். /// Dr.Ganesan wrote 3days ago.
இன்னொரு விஷயம்.தலைவி தாமரை என்னும் குறியீடு பெறுவதற்கு இன்னும் சில பாடல்கள் உள்ளன.அதுபோல ஊர்மேயும் தலைவன் எருமை என்று குறிப்பிடும் பாடல்கள் பல.
இன்னும் புலால் நாறும் மீன் தலைவன் பரத்தமைக்குத் துணை செய்யும் பெண் என்பதும் மிகுந்த பாடல்களில் உள்ளன.இவையெல்லாம் தொகைநூற் கால நாட்டார் வழக்காற்றில் மறித்து வந்த கருத்துக்கள்.பாடலைப் பாடியது பரணர் எனினும் அவர் தன்கால வழக்காற்றைத் தான் பன்னிப் புனைந்தார். அவ்வழக்காறு ஆசைநாயகியைத் தாமரை இலை என்று வேறு எங்கும் சொல்லவில்லை. இருந்தால் எடுத்துக் காட்டுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctcLE0xP1Z9XSJiJfAr0wQ5--JufWNcOgM%2B-f0B8r9KBw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdHzAFJXfzbfRW-hVhN16Yx%3Dw23-ggQ0gKvBorYEVHVSA%40mail.gmail.com.
அகம்- 186உள்ளுறை உவமம்:தாமரை = தலைவிதாமரை இலைகள் = தலைமகளுக்குப் பாங்காயினோர்காற்று = ஊரார் புறம்பேசல்பாணனது தூண்டிலில் சிக்கிய மீன் = பரத்தமை பூண்ட தலைவன்இறைச்சி:புணை = இற்பரத்தை
வெள்ளத்தை நீந்துதல் = காமம் தீர்தல்And miles to go before you understandAnd miles to go before you understandSk
அகம்- 186உள்ளுறை உவமம்:தாமரை = தலைவிதாமரை இலைகள் = தலைமகளுக்குப் பாங்காயினோர்காற்று = ஊரார் புறம்பேசல்பாணனது தூண்டிலில் சிக்கிய மீன் = பரத்தமை பூண்ட தலைவன்இறைச்சி:புணை = இற்பரத்தைவெள்ளத்தை நீந்துதல் = காமம் தீர்தல்
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/f3aefc8a-b95e-41d5-902b-cf69a5b2419dn%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv55csPsM7XdYaTDvBxZh_yZMps56M-q8kLXLww5cWTZw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6jUq-AUkQreT4MaZCm_KMaKfmxSP8cP%2BG_UbvbUV1Z5UQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6j7A_JbmcbeqfJN5w0HQgx1iY4SZY%3DQ3GfmnHn2e0i0Jw%40mail.gmail.com.
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago."குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6joQrhBHgHLGhKcq0t_MfYXBQ%2BcKUSaN-PzvOjv2xuOnw%40mail.gmail.com.
நற்றிணை- 400ம் பாடலும் அதற்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரையும் பின்வருமாறு :
வாழைமென் தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி நேர்கண் செறுவின் அரிவனர் இட்ட சூட்டயல் பெரிய இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர5 நின்இன்று அமைகுவென் ஆயின் இவண்நின்று இன்னா நோக்கமொடு எவன்பிழைப்பு உண்டோ மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறங்கெடல் அறியாது ஆங்குச் சிறந்த கேண்மையொடு அளைஇ நீயே10 கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6hDxhTHyEjXufss4mwOUvZ%3DKkLocukHGNLLp4AqY8XE9w%40mail.gmail.com.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தன்னை மணந்து கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கத் தெரியாத தலைவன்.... என்ன செய்ய வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? வெற்றிகரமாகத் தன்னை மணப்பது எப்படி என்றெல்லாம் தோழி அவனுக்குப் பாடமெடுத்து அறத்தொடு நிற்க வற்புறுத்துகிறாள். அவன் கட்டிளம் காளை தான்; தலைவி மேல் காதல் மிகுந்தவன் தான். காரியக்காரனாக இல்லாமல்; விஷயம் கைமீறிப் போவதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவன்; பெண்கேட்கத் தன் பெற்றோரை வற்புறுத்தாமல் வாளா இருக்கிறான். அவனுக்கு 'ஓரிப் புதல்வன்' என்று பட்டம் கட்டுகிறாள்; இதுகூடத் தெரியவில்லையே என்ற போக்கில் புலம்பும் தலைவி.
பாடலின் போக்கு அது திருமண நாள் இல்லை; திருமணம் நெருங்குகிறது என்றுதான் சொல்கிறது. பின்னர் எப்படி எருமைக்கொம்பு நடப்பட்டது என்று சொல்ல இயலும்? அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது எருமைப்பெடை சீதனமாகப் பேசப்பட்டது என்பது தான் பொருத்தம். டௌரி கொடுக்கும் திணைமாந்தர் பழக்கத்திற்கு நல்ல சான்றுப்பாடல். அது மட்டுமல்ல; தூது இலக்கணம் பொருந்திய தொகை இலக்கியப் பாடல் என்னும் பெருமையும் இப்பாடலுக்கு உள்ளது.
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/1e881fc5-5cdb-4f1b-8e41-59d48d6d949dn%40googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcunZsogKDCQtpoS-32SLQPw6vBzrO9QuZzCTvwt7z8oWA%40mail.gmail.com.
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ - அகம் 141/15
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்/வடி உறு பகழி கொடு வில் ஆடவர் - அகம் 159/4,5 ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்/ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா - புறம் 164/1,2
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி - அகம் 393/14
முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி - பெரும் 99
உமணரும் மழவரும் கல்லடுப்பு பயன்படுத்துகின்றனர். புன்செய் உணவாகிய களி கல்லடுப்பில் சமைக்கப்பட்டுள்ளது.
'பல்கோட்டு அடுப்பு' என்றும் 'கோடுயர் அடுப்பு' என்றும் கோட்டடுப்பு இருபாடல்களில் இடம்பெற்று உள்ளது.
'சூட்டடுப்பு' என்ற தொடர் தொகை இலக்கியத்தில் இல்லவே இல்லை.
'முரியடுப்பு' என்ற தொடருக்கு முந்தைய மடலில் சொல்லிய முரிந்த அடுப்பு என்பதே ஏற்றுக்கொள்ளக் கூடியது.
நான் எனது கட்டுரைக்காகத் துழாவியதில் நெருப்பில் சுட்டு உண்ண ஒரு அடுப்பு 'தந்தூர் அடுப்பு' என்று அழைக்கப்பட்டதால் தமிழில் சூட்டடுப்பு என்று சொன்னேன்.
நெருப்பில் சுடுவது 'சூடு' என்றும் 'சூட்டு' என்றும் அழைக்கப்பட்டது (தமிழ் அகராதி Tamil Dictionary சூட்டு | அகராதி).
வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163 ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் - சிறு 177
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பெரும் 282 எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் - நற் 83/6 குறு முயலின் குழை சூட்டொடு/நெடு வாளை பல் உவியல் - புறம் 395/3,4 பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி - புறம் 395/37
தீயில் சுட்டு உண்பது ஆரியநாகரிகம் என்பர். (Zubin D’Souza, The Origins of the Tandoor, 2014, The origins of theTandoor).
The basic construction of a tandoor is rather simple. It is a large bell shaped earthen pot with an opening on the top to allow coal to be tipped in or skewers of food to be cooked and an opening at the side to allow air to pass to fan the flames. Tandoors are then insulated with sand and earth and are encased in tiles or metal. The ingredients that go into the making of a tandoor are rather complex and they do not merely contain clay. Apart from clay, horsehair, strands of woven coir and sometimes even human hair are added to increase its strength. Once a tandoor has been installed it has to be gradually tempered. At first a small amount of coal is heated at its base. A cooked mixture that comprises of ground spinach, yoghurt, palm sugar and mustard oil is massaged evenly to its insides. Gradually every day the amount of coal is increased and the layering of the insides with the spinach – palm sugar mixture continues. This process takes about five days to a week. Once the tandoor has been suitably tempered, coal and heat can be increased without fear of it breaking up
ஹரப்பா அகழ்வாய்வில் கிடைத்துள்ள அடுப்பு ஆரியநாகரிகத்தின் தடயம் என்ற கருத்தும் உள்ளது. (Dumpukht, Aryan cuisine, History of Tandoor, 2010, Aryan Cuisine: History of Tandoor)
5000 ஆண்டுகளாக மனிதன் நெருப்பில் சுட்டு உண்டான் என்பது மறுப்பதற்கு இல்லை.
யார்யாரெல்லாம் அதற்கெனத் தனி அடுப்பு வைத்திருந்தனர் என்பதே சமூகப் பொருளாதாரத்தை அடியொட்டிய ஆய்வு.
பனங்கிழங்கைச் சுட்டுத் தின்றது புறம்.225.
'விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப' புறம்.366; என்பது 'சூட்டுக்கோலால் கிழித்து' எனப் பொருள்படும். 'காழிற்சுட்ட கோழூன் கொழுங்குறை' பொரு.L.105
வீழ்த்திய பன்றியைச் சுடவேண்டிய பக்குவம்; மலைபடுகடாம் L.247-249ல் கூத்தருக்குச்சொல்லும். 'குறு முயல் கொழுஞ்சூடு கிழித்'துப் பாணர் உண்டனர் (புறம்.34).
வேட்டுவன் தீயில் சுடும் முள்ளம்பன்றி ஊனின் மணம் 'கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்’ எனப்படும். புறம்.325, அகம்.237, புறம்.393 எல்லாம் ஊன்சூட்டைச் சிறப்பிக்கின்றன.
வாடூன், பச்சூன் என இருவகை மீன் ஊனையும் நெருப்பில் சுட்டு உண்டனர்.
வலைஞர் பச்சைமீனைச் சுட்டு வழிச்சென்ற பாணர்க்கு அளித்தனர் பெரு.L.275-282 ‘தண்மீன் சூட்டு’ நெல்லின் கொக்குகிர் நிமிரலுக்குரிய இணை ‘பசுங்கண் கருனைச் சூட்டு’ புறம்.395.
வாடூனாகிய கருவாட்டை இரும்புநாராசத்தில் குத்திச்சுட்டது 'சூடுகிழித்து வாடூன் மிசைய' புறம்.396.
3700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய அடுப்பு என அகழ்வாய்வு குறிப்பிட்ட அடுப்பு தமிழகத்துத் திணைமாந்தருடையது அன்று. அது வேந்தரும் மன்னரும் மட்டுமே பயன்படுத்தியது.
ஒகேனக்கல்லில் தண்ணீர் விழுந்தவுடன் சென்றால் ஒரு நூறு பேராவது அவ்வப்போது ஆற்றில் மீன் பிடித்து உடன் ஆற்று நீரிலேயே சுத்தம் செய்து மசால் தடவி நாலு சுள்ளியை மூட்டிச் சுட்டு விற்பார். அதற்கு என்று அடுப்பு தேவை இல்லை.
தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை. ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.
இன்றும் அவ்வாறு சுட்டுப் பயன் பெறுகிறோமே...
அன்னக்கிளி திரைப்படத்தில் கதாநாயகி ஒரு மருத்துவச்சி; தன் காதலனுக்கு ஆற்றில் பிடித்த மீனை உடன் சுட்டுக் கொடுப்பாள்... அதற்காகப் பஞ்சாயத்து கூடும்.
அவ்வளவு ஏன்?!!
அவ்வப்போது நானும் என் பேரக்குஞ்சுகளுக்கு மண்ணீரல் வாங்கி வந்து காழில் கோத்து LPG gasல் இன்றும் சுட்டுக் கொடுக்கிறேன்... அடியும் பிடியுமாகப் போகும்.
நன்றி. 'tamil concordance'
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iW7Ytne%2BTYMAVSNmc1%2Bd7njWTmL-UY6bcqqtCW42mffg%40mail.gmail.com.
/Dr.Ganesan wrote in the string நேரிமலை on 25th Julyஒருகாலத்தில் தொல்லியலார் வஞ்சியை மேற்கரையில் காண இயலவில்லை என்றார்கள். இன்று பட்டணம் என்ற இடத்தில் கி.பி.1-3நூ.ஐச் சேர்ந்த தடயங்கள் கிடைத்துவிட்டன. அதைத் தானே முசிறி என்கின்றனர். பட்டணம் என்ற பெயரே அங்கு ஒரு நகரம் இருந்ததைச் சொல்கிறதே. வேறென்ன வேண்டும்?!சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/abd15096-dae2-4135-b9a1-5fd0fc84b438n%40googlegroups.com.
/வாடூன் வகைகள் இரண்டு:
(1) Jerky https://en.wikipedia.org/wiki/Jerky . இதன் சங்ககாலப் பெயர் “வறல்”.
(2) Kabab https://en.wikipedia.org/wiki/Kebab . இதன் சங்ககாலப் பெயர் “சூடு”./Dr.Ganesan wrote on 27th Julyஒட்டுமொத்தமாகத் தரவுகள் அனைத்தையும் பார்த்துப் பகுத்து ஆய்ந்தால் இந்த முடிபின் குறைபாடு தெரியும்.சூடு மூன்று வகைப்பட்டது.1. தாளிதத்தோடு எண்ணெயில் பொரிப்பது ஒரு வகைச் சூடு.2. எண்ணெயில் மூழ்க வறுத்து எடுப்பது இன்னொரு வகை.3. நேரடியாக நெருப்பில் சுடுவது.மூன்றன் குறிப்புகளும் இலக்கியத்தில் உள்ளன. முதல் இரு வகைகள் திராவிடர்க்கே உரியவை.நல்லெண்ணெயின் பயன்பாடு திராவிடருடையது. ஆரியர் நெய்யே பயன்படுத்தினர்.வாடூன் இரண்டு வகைப்பட்டது.1. விலங்கிறைச்சி வாடூன்2. மீனிறைச்சி வாடூன்.இரண்டன் செய்முறையும் இலக்கியத்தில் உள்ளன.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6gvumvVTSf7bhAV8FEUV-gdHJbvcWPhNgb3%2BAwzmbeOzQ%40mail.gmail.com.