வாளை மீன் பரத்தைக்கு உள்ளுறை (சங்க இலக்கியம்)

11 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 26, 2020, 5:59:41 AM11/26/20
to Santhavasantham
பர- என்ற வடசொல் பரங்குன்று என்பதில் இருக்கிறது. இப் பெயர்ச்சொல்லில் (மதுரை அருகே உள்ள குன்றம்) உள்ள பரன் = வருணன்.
இது, பரன்குன்றில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது என விளக்கியுள்ளேன். 

இப்போது, மருதத்திணைச் செய்யுள்களைப் பார்த்துவருகிறேன். நிறையப் பாடல்களில் மீன் பரத்தைக்கு,
- முக்கியமாக, யாழ்வல்லபி, சதிராட்டக்காரிகளாய் இருந்த பாண் சேரிப்பரத்தைக்கு- உவமையாய் வருகிறது.
நெய்தல் திணைப்பாடலிலும், திணைமயக்கமாக, மீன் = பரத்தை என்னும் உள்ளுறை உவமை இருக்கிறது.
உதாஹரணமாக, நான்கு பாடல்களைக் கொடுத்துள்ளேன். https://groups.google.com/g/vallamai/c/MEvxRVJUAlc
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம்  ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய பாடல்கள். சதிர் வல்ல (சேரிப்) பரத்தை மீன்.
இந்த மீன் துள்ளிக் குதித்து ஆட்டம் ஆடுதலால், அதை விரும்பித் தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிறாள்.
இதைக் காணும், இல்லிடைப் பரத்தையருக்குப் பொறாமை, சினம், புலம்பல் எழுதல் இயற்கை.
இவர்களை இவ்விரண்டு பாட்டிலும், தாமரைப் பூவாக விளங்கும் தலைவி + தாமரைப் பாசிலைகளாக
இற்பரத்தையர் பாடியுள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு பெரிய Household வளமனையின் குவார்ட்டர்ஸில்
இருப்பவர்கள். இதனை அரண்மனைகளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும்
(உ-ம்: மத்திய கிழக்கு) காணலாம். தாமரைத் தாவரம் முழுமையாகப் பயன்ப்படுத்தியுள்ளனர்.
தேசம் (தேஎம், தேஅம்) என்பதுபோல, பரத்தை என்பதிலும் பரஸ்தா (=பரஸ்த்ரீ ) என்னும் வடசொல்
இருக்கிறது. பரத்தர் - பாணரொடு கோவலன் இருந்ததைச் சிலம்பில் சொல்கிறார்.
வள்ளுவரும் பரத்தன் என்றசொல்லை ஆள்கிறார். பரத்தன் பரஸ்த என்னும் வடசொல்லில் இருந்து பிறப்பதாகும்.

சங்ககாலப் புலவர்கள் கணிகை போன்றவர்கள் வரும் வடமொழிப் பாடல் மரபுகளில் இருந்து
பாணன், விறலி, இற்பரத்தை. சேரி நயப்புப் பரத்தை, தலைவன், தலைவி ஊடல், ...
வைத்து இப் பாடல்களை உருவாக்கினரோ?

நா. கணேசன்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு

(அதிகாரம்:புலவி நுணுக்கம் குறள் எண்:1311)

மணக்குடவர் உரை: பரத்தமை உடையாய்! நின்மார்பைப் பெண்மை உடையார் எல்லாரும் தமக்குப் பொதுவாக நினைத்துக் கண்ணினாலே நுகராநிற்பர்; அதனால் யான் அதனைத் தீண்டேன் என்றவாறு.
இது தலைமகள் புலவி கண்டு, என் மாட்டுக் குற்றம் யாதோ என்று கூறிய தலைமகற்கு அவள் கூறியது.

பரிமேலழகர் உரை: (உலாப்போய் வந்த தலைமகன் பள்ளியிடத்தானாகத் தலைமகள் சொல்லியது.) பரத்த - பரத்தைமையுடையாய்; பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுவுண்பர் - நின்னைப் பெண் இயல்பினையுடையார் யாவரும் தம் கண்ணான் பொதுவாக உண்பர்; நின் மார்பு நண்ணேன் - அதனால் அவர் மிச்சிலாய நின் மார்பினைப் பொருந்தேன்.
(கற்பு நாண் முதலிய நற்குணங்களின்மையின் பரத்தையர்க்குள்ளது பெண் இயற்கை மாத்திரமே என்னுங் கருத்தால், 'பெண் இயலார்' என்றாள். பொதுவாக உண்டல் - தஞ்சேரிச் செலவின் முறையானன்றி ஒரு காலத்து ஒருங்கு நோக்குதல்; அதுவும் ஓர் குற்றம். தாம் நோக்கி இன்புற்றவாறே அவரும் நோக்கி இன்புறுவர் என ஆசங்கித்து அவர்பாற் பொறாமை எய்துதலின், நுணுக்கமாயிற்று.)


Virus-free. www.avg.com

On Tue, Nov 24, 2020 at 1:41 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Tue, Nov 24, 2020 at 11:02 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> நற்றிணை - 310
>  விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
> களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
> உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
> வாளை பிறழும் ஊரற்கு நாளை
> [...]
> நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (பின்னத்தூரார், உவேசா) உரையுடன்,
> http://nganesan.blogspot.com/2012/12/310.html
>

தோழி கூற்று 
(பரத்தை கூற்றும் ஆம்)

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்   
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க                                         
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை             
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே   5     
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன் 
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்           
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை  
வள்ளுயிர்த் தண்ணுமை போல                          10   
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.  

விளக்கம் : பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானல், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. 'நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம். இதனால், சொல்பவரின் வெகுளியையும் காணலாம்.

இறைச்சிப் பொருள் : வாளைமீன், தாமரை வருந்தவும், மகளிர் அஞ்சி ஒடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும்' என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தை யிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம்.

 மேற்கோள் : ஆசிரியர் நச்சினர்க்கினியர், இது விறலிக்கு வாயின் மறுத்தது என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் (தொல். பொருள் 156) இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர்.” (நற்றிணை 310, புலியூர்க்கேசிகன்)

இங்கே, தாமரை மலர் குலமகள் ஆகிய தலைவிக்கும், தாமரை நாளம் தாங்கும் பச்சிலைகள் இல்லிடைப் பரத்தையர்க்கும் குறியீடுகள் என்பது தெளிவு.  தாமரை இலைகள் அலையுறுதல், காமக்கிழத்தியர் கதறுதலைக் குறிக்கிறது. வாளை மீன் எனத் துள்ளிச் சதிர் ஆடும் (சேரிப்) பரத்தையிடம்
தலைவன் போய்விட்டால் என்னாவது என இல்லிடைப் பரத்தையர் அமைமோதுகின்றனர். இதே போல, பெண்களின் Harem ஒன்றை தாமரை மலரைத் தலைவிக்கு நேராகச் சொல்லாமல் குறிப்பாகக் காட்டி, இற்பரத்தையர் ஆகிய பச்சை இலைகள் அலைப்புண்டதை இன்னொரு பாட்டிலும்
பரணர் பாடியுள்ளார். அகம் 186, நர்றிணை 310 ஒப்பிடலாம். 

அகம் 186
-------------------
தாமரை இலை - இற்பரத்தை, தாமரை - குடும்பத் தலைவி என்று வரும் பாடல்களை முழுமையாகப் பார்க்கணும்.
உவேசா, பின்னத்தூரார், புலியூர்க் கேசிகன் - நாளம் (ஆர் > அரவிந்த) தாங்கும் பச்சை இலைகள் பரத்தையர் என்று
கூறும் உரையைத் தொகுத்து தருகிறேன்.

நற்றிணை 310 போலவே, தாமரை இலை அலைமோதுவதுபோல, இற்பரத்தை அலைப்புண்டதைப் பேசும் பாடலை
அகநானூற்றில் பரணர் பாடியுள்ளார். தாமரை மலர் ஆகிய தலைவி நேரடியாகக் குறிக்கப்படவில்லை. இறைச்சித் தொனியில் இருக்கிறாள் தலைவி.
அவள் தன்னை ஏன் நோகிறாள் என்று பேசுகிறாள் இற்பரத்தை. சேரிப் பரத்தை, அங்கே யாழ், முழவு எல்லாம் பாணர் செய்ய
அங்கே இருக்கும் தலைவனின் சேரிப் பரத்தையை அல்லவா தலைவி நோகணும் என்கிறாள் இற்பரத்தை.
இங்கே, ஒரே தாவரமாக - சுல்தான்களின் ஹேரம் போல - இற்பரத்தையர் தாமரை இலைகளாகவும், தலைவி தாமரைப் பூவாகவும்
இருப்பதை அகநானூற்றுப் பாடலும், நற்றிணை 310 போலவே காட்டுகிறது.

அகம். 186

பரத்தை கூற்று

பொருள் :
 தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது
திணை : மருதம்
ஆசிரியர் : பரணர்

வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை
இருங் கயம் துளங்க, கால் உறு தோறும்
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே!
 நட்பே,
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
மாரி அம்பின், மழைத்தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.

நா. கணேசன்
இன்னும் இவை போன்ற, தாமரைப்பூ, தாமரைப் பாசிலை இவற்றுடன்
குலவிளக்கு (தலைவி), இற்பரத்தையர் பற்றிய அகப் பாடல்கள் இருக்கலாம்.

 
> SK wrote:
> > வாளைமீன் = பரத்தை
> > மீன் துள்ளி விழுதல் = பரத்தையின் அத்து மீறிய ஆட்டம்
>
> > என்னதான் வாளைமீன் துள்ளி விழுந்தாலும் இலைகள் மட்டும் தான் அலையும். தாமரை ஆடும்; அலையாது. ஏனென்றால் இலையின்
> > தண்டை விடப் பூவின் தண்டு வலுவாக இருக்கும். பரத்தை, அவளது ஆட்டம் இதற்கெல்லாம் தலைவி சோர்வடையாது மனத்திண்மையோடு
> > இருக்கிறாள். ஏனென்றால் அவள்தான் குடும்பத்தலைவி; அந்தத் தகுதி அவளுக்கு மட்டுமே உரியது. அதற்கு ஒருபோதும் ஆபத்து நேராது;
> > ஏனென்றால் குடும்ப அமைப்பு அந்த அளவுக்குக் கட்டுக்கோப்பானது.
>
> Yes. Let me cite another example from Sangam literature.
>
> பரத்தை ஏன் அத்து மீறி ஆடுகிறாள் என்பதைக் குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது:
>
> கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
> பழன வாளை கதூஉம் ஊரன் (குறுந்தொகை 8: 1-2)
>
> இங்கே, உள்ளுறை உவமம்:
> தோட்டத்தில் உள்ள மா மரன் (கழனி மாஅ) ==> தலைவன்/ஊரன்
> பழன வாளை மீன் (கழனி அருகே உள்ள வயலின் வாளை மீன்) ===> குதித்தாடும் (சேரிப்) பரத்தை.
> மாமரம் உகுக்கும் தீம் பழம் ===> பரத்தையர் ஊரனிடம் கொள்ளும் செல்வம்.

நடனம் பற்றிப் பேசும் பாடல். எனவே, வாளை போலத் துள்ளி ஆடும் பரத்தையைக்
கூறிப் பாடலைத் தொடங்குகிறார்:
ஆலங்குடியில் வங்கம் ஓட்டுபவராகப் புலவர் வாழ்ந்தார் போலும். இப்போது
போல, ஆறுகளைக் கடக்கும்
பாலங்கள், அதற்கான எஞ்சினீரிங் இல்லை
     ஆலங்குடி யானை யாலால முண்டானை
    ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்
    குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்
    மடியாரோ மண்மீ திலே  (காளமேகம்).

குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று

(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின்
பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே
இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல்
ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’
என்று கூறிய

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல5
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.
- ஆலங்குடி வங்கனார்.

வயல் அருகில் உள்ள மா மரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய பழத்தை
பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு இடமாகிய ஊரை உடைய தலைவன்
எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று
தம்முடைய வீட்டில் முன்னின்றார் தம் கையையும் காலையும் தூக்க தானும்
தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப்போல தன்னுடைய மனைவிக்கு
அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

முடிபு: ஊரன், எம்மிற் பெருமொழி கூறிப் புதல்வன் தாய்க்குத் தம்மில் மேவன
செய்வான்.

கருத்து: தலைவன் தன் மனைவியை அஞ்சி ஒழுகினான்.

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 26, 2020, 10:57:09 AM11/26/20
to Santhavasantham
சங்க இலக்கியத்தின் பல பாடல்களில் மீன் = பரத்தை (< பரஸ்தா) என்று உள்ளுறுத்திக் காட்டியிருப்பர் சான்றோர். அவற்றில் சில காண்போம்.
(1) நற்றிணை 310: வேளாண்மைக் குறிப்புக் கூறும் செய்யுள் இஃது.
நற்றிணை 310.           மருதம்
                              பரணர் பாடியது
தோழி கூற்று  (பரத்தை கூற்றும் ஆம்)

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்   
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க                                         
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை             
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே   5     
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன் 
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்           
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை  
வள்ளுயிர்த் தண்ணுமை போல                          10   
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.

நீர்த்துறை = வளம் மிகுந்த மருதத் திணையின் ஓர் ஊர்.
உண்ணு நீர்த்துறை =பல குடும்பங்கள் பயன்கொள்ளும் ஊர், ஊருணி.
நீரெடுக்க வந்த பெண்கள் இரிதல் = தலைவன், தலைவி குடும்பத்தில் நடக்கும் சண்டை, கௌவை கேட்டு ஊரார் விலகுதல்/மிரளுதல்.
விளக்கு போன்ற தாமரை = குடும்ப விளக்கு போன்ற தலைவி [Ref. சிலம்பின் பாத்திரப் பெயர்கள்]
தாமரையின் பசிய இலைகள் = ஊரனின் வளமனைப் போக (bhoga) வாழ்க்கை வாழும் இற்பரத்தையர்.
(ஒரே காம்பவுண்ட்/காலனி ஆனதால், தாமரைத் தாவரம் முழுக்க உவமைக்குப் பயன்படுகிறது. இதேபோல், அகம் 186-லும் பார்க்கலாம்.)
வாளைமீன் = பரத்தை
மீன் துள்ளி விழுதல் = பரத்தையின் சதிர் ஆட்டம். பழக்கியவன் பாணன், அல்லது விறலி. வாயின்மறுத்தல் துறைச் செய்யுள் இது.
பச்சை இலைகள் அலையுண்டல் = வளமனையில் சுக வாழ்வு வாழும் இற்பரத்தையர், நயப்புப்பரத்தையால் தம் வாழ்வு முடியும் எனக் கவலல்/கதறல்.
பெண்கள் மிரட்சி = பரத்தை ஆடும் கூத்தைப் பார்த்து ஊரார் விலகல்.

தாமரை தலைவி என்பது சரியே. ஆர் = தாமரை நாளம். ஆர்/ஆரம் + விரிந்த (=விந்த)  ===> அரவிந்த என்னும் வடசொல் ஆனது. 
சிலம்பின் தலைவிக்கு, தாமரை என்ற பெயரால் சூட்டுவதை, ஆசிரியரே தெரிவித்துள்ளார். கர்ணகா/கர்ணகீ >> கர்ணகி/கர்ணகை (இன்றும்
நாட்டார் பாடலில் இப்பெயர் தான்) >> கண்ணகி என்று பெயர். கோவலன் ( கோபாலனை ஒட்டி அமைத்த தனித்தமிழ்ப் பெயர்). அண்ணன் பலராமன், வசுதேவன் புத்திரர். கோவலன் பெயர் விளக்கம் முன்பிறப்பு செய்திகளில், மதுராபதி தெய்வம் உரைப்பதாக அமைத்தார். 
கண்ணகி < கர்ணகீ “தாமரைப் பொகுடு” (Pericarp of the Lotus, hence Lakshmi).  கனக விஜயர் - வடநாட்டு மாந்தர். குருக்ஷேத்திரப் போரை
நினைவூட்டும் வகையில் கனக-விஜயர் என்றார். கனகன் = ஹரி (பொன்னர்), விஜயன் = அர்ஜுனன், கீதை உபதேசக் காட்சி போர்க்களம்.
மாதவி கணிகை, கோவலனையே வரிந்து வாழ்ந்தவள்- இப்படிப் பல கணிகையர் தமிழ்வரலாற்றிலுண்டு - கோவில் தேவதாசியர், நிலக்கொடை,
ஏரிக்கொடை எல்லாம் அளித்த தாசிகள் (கல்வெட்டுகளில்) .... - முல்லை கற்பின் சின்னம்/அடையாளம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் குருகு/குருக்கத்தி.
இதன் வடமொழிப் பெயர் மாதவி. சங்க நூல்களில் முல்லை, மாதவி ஒன்றாய் இடம்பெறும். முல்லை என்னும் கற்புக்கு கண்ணகியும்,
அதன் அருகே உள்ள குருக்கத்தியை மாதவி என்றும் பெயர் வைத்தார், முத்தமிழ்க் காப்பியம் தமிழின் முதல் தமிழ்தேசிய நாவலில். ....
சிலம்பின் கதைமாந்தர் பெயர்கள் பற்றி நல்ல கட்டுரை ஒன்று எழுதவேணும். யாரும் தமிழின் முதல் நாவலின் பாத்திரங்களின் பெயரை அதன் ஆசிரியர் அமைத்தது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ...

விளக்கம் : பேச்சிலே நகைச்சுவை பொதிந்து கிடக்கிறது. நின் தலைவனுக்குப் புதிய பெண் ஒருத்தி தேவையானல், இங்கு ஏன் நீ வரவேண்டும்? அவன் தரும் பொருளை விரும்பும் பரத்தையின் தாயரையே கண்டு பேசிச் சேர்த்து வைக்கலாமே? என்கின்றது காண்க. 'நின் சொல் எம்பாற் பயன்படாது' என்பதும் ஆம். இதனால், சொல்பவரின் வெகுளியையும் காணலாம்.

இறைச்சிப் பொருள் : வாளைமீன், தாமரை வருந்தவும், மகளிர் அஞ்சி ஒடவும், குண்டு நீரில் துள்ளிப் பிறழும்' என்றனள். தலைவனும் யாம் வருந்தவும், காமக்கிழத்தியர் இல்லத்திலிருந்து கதறவும், நீ சேர்த்துவைத்த புதிய பரத்தை யிடம் சென்று தங்கா நிற்பான் என்றதாம்.

 மேற்கோள் : ஆசிரியர் நச்சினர்க்கினியர், இது விறலிக்கு வாயின் மறுத்தது என்று, 'பெறற்கரும் பெரும் பொருள் முடிந்தபின்' என்னும் சூத்திரத்தின் உரையுள் (தொல். பொருள் 156) இச் செய்யுளை எடுத்துக் காட்டுவர்.” (நற்றிணை 310, புலியூர்க்கேசிகன்)

இங்கே, தாமரை மலர் குலமகள் ஆகிய தலைவிக்கும், தாமரை நாளம் தாங்கும் பச்சிலைகள் இல்லிடைப் பரத்தையர்க்கும் குறியீடுகள் என்பது தெளிவு. 
தாமரை இலைகள் அலையுறுதல், காமக்கிழத்தியர் கதறுதலைக் குறிக்கிறது. வாளை மீன் எனத் துள்ளிச் சதிர் ஆடும் (சேரிப்)
பரத்தையிடம் தலைவன் போய்விட்டால் என்னாவது என இல்லிடைப் பரத்தையர் அலைமோதுகின்றனர். இதே போல, பெண்களின் Harem ஒன்றை தாமரை மலரைத் தலைவிக்கு நேராகச் சொல்லாமல் குறிப்பாகக் காட்டி, இற்பரத்தையர் ஆகிய பச்சை இலைகள் அலைப்புண்டதை இன்னொரு பாட்டிலும்
பரணர் பாடியுள்ளார். அகம் 186, நற்றிணை 310 ஒப்பிடலாம். 

(2) குறுந்தொகை - 8. மருதம் - காதற் பரத்தை கூற்று
(தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்று அறிந்த காதற் பரத்தை அத்தலைவியின்
பக்கத்திலுள்ளார் கேட்கும்படி, “தலைவன் எமக்கு வயப்பட்டான் போல இங்கே
இருந்து விட்டு, தலைவிபாற் சென்றுஅவளுக்கு அடங்கி அவள் மனம்போல்
ஒழுகினான்; தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் அதுபோலும்!’’
என்று கூறிய பாடல்.)

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல  5
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

இங்கே, உள்ளுறை உவமம்:
தோட்டத்தில் உள்ள மா மரன் (கழனி மாஅ) ==> தலைவன்/ஊரன் (தலைவி, இற்பரத்தை வதியுமிடம் கழனி என்க).
பழன வாளை மீன் (கழனி அருகே உள்ள பொய்கை/வயலின் வாளை மீன்) ===> குதித்தாடும் (சேரிப்) பரத்தை.
’மடையில் வாளை பாய’ - சம்பந்தர் தேவாரம்.

மாமரம் உகுக்கும் தீம் பழம் ===> பரத்தையர் ஊரனிடம் கொள்ளும் செல்வம்.

(3) அகம் 186
மழையே தேவை இல்லா மீனவர் -கடின உழைப்புத் தேவைப்படும் தொழிலில் ஈடுபடத் தேவையற்ற கூட்டுவிக்கும் தொழிலுடைப் பாணர்கள்
மீனவன் தூண்டிலில் சிக்கிய மீன் - பாணனால் சதிர் ஆட்டக்கலையில் தேர்ச்சி பெறும் சேரிப்பரத்தை. அவள் யாழ்வல்லபியாக
இருத்தலும், பாணனின் முழவமும் பாடலின் பின்னர் வருகிறது. இச் சேரிப் பரத்தை தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிவிட்டாள்
என்கிறது பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும் தாமரைத் தாவரம். பதும மலர் - தலைவி. தாமரைத் தண்டின் பச்சை இலைகள் - சுக வாழ்வு வாழும் இற்பரத்தையர்.

மீனவன் பாணருக்கு உவமை. பாணர் பிடிக்கும் மீன், வாளை போன்றன யாழ் வல்ல சேரிப் பரத்தை.
இம் மீன்களால், இல்லிடைப் பரத்தையர் (தாமரைத் தண்டில் உள்ள பச்சிலைகள்) கலங்குகின்றனர், கதறுகின்றனர்.
இற்பரத்தையரிடம் இருந்த தலைவன் பாணர் - பரத்தையர் சேரிக்குப் போய்விடுகிறான். வேழப்புணை பரத்தையர்க்கு உவமை. For both illiDai & cEri kinds; hero uses them just for pleasure - Use & Throw culture.

"அவன் எம்மிடம் இல்லை; பாண் சேரியில் அல்லவா இருக்கிறான்? எம்மை ஏன் நோகிறாள் தலைவி? அவள் நிலையிலே தான் நாங்களும்” என்று சக்களத்தி (சேரிப் பரத்தை) பற்றி இல்லிடைப் பரத்தையர் புலம்பும் பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும், ஒரே இல்லில் வாழும் இற்பரத்தையர் என்னும் காமக்கிழத்தியர் தாமரைத் தாவரத்தின் பச்சிலைகளுக்கும், தாமரைப் பூ தலைவிக்கும் உவமையாக மகாகவி+ ஜர்னலிஸ்ட் பரணர் பாடிய பாடல் அகம் 186.
எப்பொழுதும் போல, சரித்திர நிகழ்ச்சி ஒன்றை - பழையன் காவிரிக் கரையில் போஒர் - பதிவு செய்கிறார். காமக்கிழத்தி ஆகிய இற்பரத்தை, சேரிப்பரத்தையைச் சாடி,
தன்னிடம் இல்லை தலைவன் எனத் தெரிவிக்கும் பாடல்.

தலைவன் சேரிக்குச் சென்றதால், தாமரைச் செடி போல, தலைவி (பூ) நிலையும், தம் (பாசிலை)நிலையும் ஒன்றுதான் என்கிறாள் இற்பரத்தை. அற்புதமான பாடல்.
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம் ஒருசேர வாசிக்கவேண்டியவை.

(4) நெய்தல் திணைப் பாடல் - திணைமயங்கு செய்யுள்.
ஐங்குறுநூறு 184
துறை : வாயில் வேண்டி வந்தார், தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது.

நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!

இங்கும், மீன் = பரத்தை.  மீன், கடல்வாளை ஆயின் சேரிப்பரத்தை எனலாம்.

உள்ளுறை : கழியிடைச் செல்லும் குருகு, அவ்விடத்தேயான அழகிய நெய்தலை விரும்பாது, இழிந்த மீனையே விரும்பி உண்டுவிட்டு, இளங்கானலிலே சென்று தங்கும் என்றனள். இது தலைவனும் தலைவியின் பெருநலனைப் போற்றிக் கொள்ளாதே வெறுத்தானாய், இழிவான பரத்தையரையே விரும்பிச்சென்று நுகர்ந்து களித்தானாய், வேறெங்கோ சென்று தங்குவானுமாயினன் என்பதனை உள்ளுறுத்துக் கூறியதாம்.(புலியூர்க் கேசிகன்).

”நெய்தல் திணையில் மருதத்தின் உரிப்பொருள்
நெய்தல் திணையில் நெய்தல் நிலமானது ‘நெய்தல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.184:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும இடம்பெற்றுள்ளது என்பது இங்குச் சுட்டத்தக்கது. நெய்தல் நிலமானது பெரிய நீர்நிலையும், அந்நீர் நிலையில் மலர்ந்த நெய்தல் மலரும், நெய்தல் மலருக்கு அருகில் மீன்களும், அம்மீன்களை உண்ட குருகு கடற்கரைச் சோலையில் தங்குவதாகவும் வருணிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை,

“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன்உண் குருகினம் கானல் அல்கும்
கடல்அணிந்தன்று அவர் ஊரே” (ஐங்.நெய்.184:1-3)
என்னும் பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன. இப்பாடலில், நெய்தல் நிலம், இந்நிலத்திற்குரிய பெரிய நீர்நிலைகள், நெய்தல் மலர், நெய்தல் நிலத்தினைச் சார்ந்து வாழும் மீனை உண்ணும் குருகினம், கடற்கரைச்சோலை, கடல் ஆகிய வருணனைக் கூறுகளை உட்படுத்தி நெய்தல் நிலத்தினை வருணித்திருப்பது அம்மூவனாரின் கவிப் புலமையினை வெளிப்படுத்தும் சிறப்பு எனலாம்.

நெய்தல் நிலத்திலுள்ள பெரிய நீர்நிலையில் மலர்ந்திருந்த மணமிக்க நெய்தல் மலர் தலைவி. நெய்தல் மலருக்கு அருகிலுள்ள இழிந்த நாற்றமுடைய மீன் பரத்தை. அம்மீனை உண்ட குருகானது பரத்தையிடம் இன்பம் அனுபவித்த தலைவன். குருகு கடற்கரைச் சோலையில் தங்குவது என்பது தலைவன் பரத்தையர் சேரியில் தங்குதல் என்பதாக உள்ளுறைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுரிப்பொருளானது மருதத்திணையில் இடம்பெற வேண்டியது நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பதைத் திணைமயக்கம் என்று கூறுவர். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் நெய்தல் திணையாக அமைந்துள்ளது. உள்ளுறைப்பொருளால் மட்டும் மருதத்தின் உரிப்பொருள் வந்துள்ளது. இப்பாடலின் மூலம், நெய்தல் நிலத்திலும் தலைவன் பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.

இக்கட்டுரையில் நெய்தல் நிலத்தின் பல்வேறுபட்ட பெயர்கள் எத்தனைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் புள்ளிவிவரத்தோடு அறியமுடிகின்றது. நிலவருணனையின் வாயிலாக நிலத்தினுடைய தன்மை வெளிப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளாக உள்ளுறையின் வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மருதத்திணையின் உரிப்பொருளானது நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ளதால் திணைமயக்கத்திணையும் இங்குக் காணமுடிகின்றது.” பா. ஈஸ்வரன், http://www.muthukamalam.com/essay/literature/p179.html

------------
இன்னும் இரண்டு செய்யுள், மீன் = பரத்தை என்பதற்குக் காட்டுதும்.
(5) நற்றிணை : 400
திணை : மருதம்
துறை : பரத்தை தலைவனைப் புகழ்ந்தது.
ஆசிரியர் : ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்
அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர
[...]

இங்கேயும், மீன் பரத்தைக்கு உவமை தான்.
உள்ளுறை:- வாழையினது பூவை அசைக்கின்றனவாகிய வயலில் உண்டாகும் நெற்கதிர்களை மள்ளர்கள் அறுத்துப்போகட்ட அரிச்சூட்டின் அயலின்கண்ணே வாளை பிறழுமென்றது, தலைவியினது நெஞ்சை வருத்துகின்றனவாகிய காதற் பரத்தையின் செய்கைகளை வாயில்கள் அடக்க அவள் நெஞ்சிலே தலைவன் விளங்கலாயினா னென்பதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவனைப் பரத்தை புகழ்தல்.

புலியூர்க் கேசிகன் விளக்கினார்:
உள்ளுறை : வாழையின் தொங்கும் பூவை வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அசைக்கும் வயலிலே, மள்ளர்கள் அறுத்துப் போட்ட கதிர்ச்சூட்டின் பக்கத்தே வாளை மீன்கள் பிறழும் வளமான ஊர் என்றனர். வாழையின் பூவை வளர்ந்து அசைத்த நெற்பயிர்போலத் தலைவியின் காதல்வாழ்வைத் தன்னுடைய இளமை நலத்தால் படர்ந்து அலைவித்தனள் பரத்தை. வாயிலர்கள் அவள் உறவை முடித்துப் போட்டது கதிர் அறுத்துப்போட்ட சூட்டினைப்போன்றதாம். சூட்டயலிலே வாளைமீன் பிறழ்தல் போலப் புதிய பரத்தையர் அவள் எதிரேயே அவனைக் கொண்டு செல்லக் காத்திருப்பவராயினர் என்பதாம்.
விளக்கம் : வாழை மென்தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி என்றது, நெல்லானது செழித்து வளர்ந்துள்ளபோது, வாளையின் மெல்லியவான தாற்றின் நுனிப் பூவானது கவிந்து வந்து அவற்றின் அளவுக்குத் தாழவும், அந் நெற்பயிர் காற்றால் அசையும்போது, அப் பூவையும் ஆட்டுவிக்கும் என்றனர். இளமைச் செழுமைக் கவினாலே செருக்குற்ற பரத்தையரைக் கண்டதும், தலைவன் தன் தகுதி தாழ்ந்து அவர் உறவை நச்சிவந்து சார, அவர்கள் தம் அன்னையரால் ஏவும்பொழுதெல்லாம் அவனை அதற்கேற்றபடி ஆடச் செய்வர் என்பதாம். சூட்டயலிலே வாளை பிறழும் என்றது, அடுத்து வரும் தன் அழிவை நினையாத அறியாமையால் ஆகும். அவ்வாறே பரத்தையர் பலரும் தலைவனைச் சூழ்ந்து ஆடியும் பாடியும் அவனைக் கவர்தற்கு முயல்வர் என்பதாம். அன்றித் தன்னோடு உறவாடி யிருந்த நெற்பயிர் அறுப்புண்டு வெளியேபோவது கண்டும், கவலாது பிறழும் வாளை மீன்போல, தலைவன் பிரிவைக் கண்டும் கவலாது, மீண்டும் அவனைத் தன்பால் ஈர்க்க முயன்றனள் பரத்தை என்பதுமாம்.
பயன் : இதனால், தலைவன் அவள்பால் வெறுப்பு அடையாத வகை மீண்டும் அவளை விரும்பி வருதலும் கூடும் என்பதாம்.”

(6)  குறுந்தொகை 164
கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
(7) அகநானூறு 276
etc. etc., ~NG

On Thu, Nov 26, 2020 at 4:57 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பர- என்ற வடசொல் பரங்குன்று என்பதில் இருக்கிறது. இப் பெயர்ச்சொல்லில் (மதுரை அருகே உள்ள குன்றம்) உள்ள பரன் = வருணன்.
இது, பரன்குன்றில் கிடைத்துள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டால் உறுதிப்படுகிறது என விளக்கியுள்ளேன். https://youtu.be/WyB3h08w0Yc

இப்போது, மருதத்திணைச் செய்யுள்களைப் பார்த்துவருகிறேன். நிறையப் பாடல்களில் மீன் பரத்தைக்கு,
- முக்கியமாக, யாழ்வல்லபி, சதிராட்டக்காரிகளாய் இருந்த பாண் சேரிப்பரத்தைக்கு- உவமையாய் வருகிறது.
நெய்தல் திணைப்பாடலிலும், திணைமயக்கமாக, மீன் = பரத்தை என்னும் உள்ளுறை உவமை இருக்கிறது.
உதாஹரணமாக, நான்கு பாடல்களைக் கொடுத்துள்ளேன். https://groups.google.com/g/vallamai/c/MEvxRVJUAlc
நற்றிணை 310-ம், அகநானூறு 186-ம்  ஒப்பிட்டுப் பார்க்கப்பட வேண்டிய பாடல்கள். சதிர் வல்ல (சேரிப்) பரத்தை மீன்.
இந்த மீன் துள்ளிக் குதித்து ஆட்டம் ஆடுதலால், அதை விரும்பித் தலைவனுக்கு நயப்புப் பரத்தை ஆகிறாள்.
இதைக் காணும், இல்லிடைப் பரத்தையருக்குப் பொறாமை, சினம், புலம்பல் எழுதல் இயற்கை.
இவர்களை இவ்விரண்டு பாட்டிலும், தாமரைப் பூவாக விளங்கும் தலைவி + தாமரைப் பாசிலைகளாக
இற்பரத்தையர் பாடியுள்ளனர் எனத் தெரிகிறது. ஒரு பெரிய Household வளமனையின் குவார்ட்டர்ஸில்
இருப்பவர்கள். இதனை அரண்மனைகளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும்
(உ-ம்: மத்திய கிழக்கு) காணலாம். தாமரைத் தாவரம் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
Reply all
Reply to author
Forward
0 new messages