உத்தம சோழன் செப்பேடு

63 views
Skip to first unread message

dorai sundaram

unread,
Nov 7, 2018, 8:47:56 AM11/7/18
to mint...@googlegroups.com

உத்தம சோழன் செப்பேடு


முன்னுரை

தொல்லியல் அறிஞர் ச.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தமிழ்,  வரலாறு ஆகிய இரு துறைகளிலும் புலமையுடையவர். தொல்லியல் துறையில் அலுவலராகப் பணி நிறைவு செய்தவர். செப்பேடுகளை விரிவாக ஆய்ந்து எழுதுவதில் வல்லவர். அவருடைய சில நூல்கள் என்னிடம் உண்டு. அண்மையில், அவருடைய நூலொன்றினைப் படித்துக்கொண்டிருந்தேன். உத்தம சோழனின் செப்பேடுகள் பற்றிய நூல். ”காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் செப்பேடுகளும் கல்வெட்டுகளும்”  என்னும் தலைப்பிட்டது. மதுராந்தகன் என்னும் பெயர்கொண்ட உத்தம சோழன், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் வழிபாட்டுக்கு வழங்கிய நிவந்தமே இச்செப்பேடு. இச்செப்பேட்டினையும், இச்செப்பேடு வாயிலாக அறியவரும் வரலாற்றுச் செய்திகளையும் விரிவாக எடுத்துரைக்கின்றார் ஆசிரியர். தமிழகத்தின் கோயில்கள்தாம் எத்துணை வரலாற்றுப் பெட்டகங்களைத் தம்முள் பொதித்து வைத்துள்ளன என்பதை நினைக்கையில் பெரும் வியப்பு எழுகிறது. எத்தனை கோயில்கள்! எத்தனை கல்வெட்டுகள்! அனைத்தையும் அறிந்துகொள்ள எவ்வளவு காலம் நமக்குத் தேவைப்படும்? இந்த இடத்தில், தொல்லியல் அறிஞர் ஹுல்ட்ஸ் அவர்கள் (Dr. E. HULTZSCH) கூறியது நினைவுக்கு வருகிறது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் 1891-ஆம் ஆண்டுக்குரிய ஆண்டறிக்கையில்,


“மதராஸ் பிரசிடென்சியின்கீழ் எண்ணற்ற பெருங்கோயில்கள் - இந்தியாவின் பிற பகுதிகளில் காணவியலாதன - உள்ளன; அவற்றின் கலை வடிவங்கள் பெருஞ்செல்வங்கள்.  டாக்டர். ஃபெர்குசன் (Dr. FERGUSSON) சிறப்பாகக் குறிப்பிடுகின்ற சீரங்கம், சிதம்பரம், நெல்லை, காஞ்சி, தஞ்சை, மதுரை போன்ற பல கோயில்கள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் உள்ளவை. இப்பிரசிடென்சியின் விரிந்த நிலப்பரப்பில் பரவிக்கிடக்கும் கோயில்களைத் தற்போதுள்ள பணியாளர்களைக் கொண்டு ஆய்வு செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும் எனக் கூறவியலாது. ஒரு பத்தாண்டுக்காலம் ஆகலாம். மிகப்பெருங் கோயில்களில் ஒன்றான இராமேசுவரத்தை மட்டும் முற்றாக ஆய்வு செய்ய இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும். கிருஷ்ணா மாவட்டத்தில், காலத்தால் முற்பட்ட பௌத்தச் சிற்பங்களையும், கல்வெட்டுகளையும் கொண்டுள்ள மேடுகளை ஆய்வு செய்ய மட்டுமே பல்லாண்டுகள் ஆகக்கூடும்.


என்று குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் இக்கருத்தைச் சொல்லுகையில், தஞ்சை, மதுரை, வேலூர், இராமேசுவரம் ஆகிய கோயில்கள் ஆய்வு செய்யப்பட்டுவிட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். செப்பேடுகள், கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிந்துகொள்ள, பல்வேறு அறிஞர்களின் பல்வேறு நூல்கள் துணை செய்கின்றன. இவற்றால்தாம், வரலாற்றுச் செய்திகள், வரலாற்றில் ஆர்வமுடையவர்க்குப் பரவலாகச் சென்றடைகின்றன. இவ்வாறு தெரிந்துகொண்டவற்றை இன்னும் பலருக்கு எட்டவைக்கும் முயற்சியாகவே என் கட்டுரைப் பணியைக் கருதுகிறேன். ச.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூலின் அட்டைப் பகுதியில் இரண்டு ஒளிப்படங்கள் தெளிவாக இருந்தன. இவை செப்பேட்டின் இரு பக்கங்களின் படங்கள். அவற்றில் உள்ள எழுத்துப் பொறிப்புகள், இராசராசனின் தஞ்சைக்கோயில் கல்வெட்டு எழுத்துகளின் வடிவ அழகுக்கும் நேர்த்திக்கும் முன்னோடியாக அமைந்துள்ளதைப் பார்க்கையில், அவற்றின் பாடத்தோடு நூலாசிரியரின் ஆய்வுக் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள எழுந்த ஆவலைத் தடுக்க இயலவில்லை.  அதன் பகிர்வு இங்கே.


செப்பேட்டின் அமைப்பு

தற்போது, சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டுத் தொகுதியில் ஐந்து ஏடுகளே உள்ளன. ஏடுகளின் இடப்பக்க மையத்தில் உள்ள துளைகள் வழியே ஒரு வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழர் இலச்சினை உள்ளது. மொத்தம் நூற்று இருபத்தொரு வரிகள்; முதல் பன்னிரண்டு வரிகள் கிரந்த எழுத்துகள்; வடமொழி.  மற்றவை தமிழ் எழுத்து; தமிழ் மொழி. தொடக்கத்தில் கிரந்தப்பகுதியில் சில ஏடுகளும், இறுதியில் ஒரு தமிழ் ஏடும் இல்லாததால் உத்தம சோழனின் மெய்க்கீர்த்தியை அறிய இயலவில்லை.


செப்பேட்டின் காலம்

உத்தம சோழனுடைய பதினாறாம் ஆட்சியாண்டில், கி.பி. 985-86 –ஆம் ஆண்டில் செப்பேடு வெளியிடப்பட்டது.


செப்பேடு வெளியிட்ட இடம்

காஞ்சியில் இராசராசனின் தமையன் கரிகாலன் ஓர் அரண்மனை கட்டுவித்ததும், அந்த அரண்மனையில் சுந்தர சோழன் இறந்துபோனதும் அறியப்பட்ட செய்திகள். அந்த அரண்மனையில், சித்திர மண்டபம் என்னும் ஒரு மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது செப்பேட்டுக்கான நிவந்த ஆணை வெளியிடப்படுகிறது. இதே சித்திர மண்டபத்தில், முதலாம் இராசேந்திரன் எசாலம் செப்பேட்டினை வெளியிட்டான் என்பது குறிபிடத்தக்கது. காஞ்சி அரண்மனை, செப்பேட்டில், “கச்சிப்பேட்டு கோயில்”  எனக் குறிப்பிடப்படுகிறது.  கோயில் என்பது அரச அரண்மனையைக் குறிக்கும். (இறைவனின் கோயில் ஸ்ரீகோயில் என வழங்கும்). காஞ்சி என்பது பண்டு கச்சிப்பேடு”  என்றே வழங்கியதை நோக்குக. அப்பெயரையும் சுருக்கி “கச்சி”  என்றழைப்பதும் வழக்கமாயுள்ளது. கச்சி என்னும் பெயர், காலப்போக்கில் கஞ்சி எனவும்,  பின்னர் காஞ்சி எனவும் மருவியிருக்கக் கூடும். கோட்டையோடு கூடிய நகரமாதலால், பல்லவர் காலத்தில் காஞ்சிபுரம் என வழங்கியிருக்கலாம். கச்சிப்பேடு” என்னும் ஊர்ப்பெயரில் பின்னொட்டாக வருகின்ற “பேடு”  என்னும் சொல் கருதத்தக்கது. பேடு என்னும் இச்சொல், பல ஊர்களின் பெயர்களில் உள்ளதைக் காணலாம். கோயம்பேடு, மப்பேடு, தொழுப்பேடு என்று சில ஊர்ப்பெயர்களை எடுத்துக்காட்டலாம். எழுத்துப்பொறிப்புடன் கூடிய சங்க காலத்து  நடுகல்லான புலிமான் கோம்பைக் கல்லில் “கல்பேடு”  என்னும் ஊர் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுகிறது.


செப்பேட்டுத் தொகுதியில் இரண்டு ஏடுகளின் ஒளிப்படங்கள் முன்னரே குறிப்பிட்டவாறு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. படங்கள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.  அவற்றின் படங்களும், பாடங்களும் கீழே தரப்பட்டுள்ளன.



                                         முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48. 




முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.


பாடம்:


37  ட்டை நாளைக்கிடக்கடவ பொலிசைப்பொன் கழஞ்சே நாலு மஞ்சாடியும் நி

38  வந்தஞ்செய்(த)படி திருவமிர்து மூன்று ஸந்திக்கு நெல் முக்குறுணி

    அறுநாழியு 

39  ம் கறியமுது இரண்டுக்கு மூன்று ஸந்திக்கு நெய் நானாழியும் நெய்யமுது

    நிசதம்

40  உழக்கினுக்கு நெல் ஐஞ்ஞாழியும் தயிரமுது போது உரியாக மூன்று

    ஸந்திக்கும் (த)

41  யிரமுது நாழி உரிக்கு நெல் முன்னாழியும் அடைக்காயமுது மூன்று

    ஸந்திக்கு

42  நெல் முன்னாழியும் விறகினுக்கு நெல் இரு நாழியும் ஆராதிக்கும்

43  வேதப்ராஹ்மணன் ஒருவனுக்கு நெல் பதக்கும் இவனுக்கு புடவை முதல்

44  ஓராட்டை நாளைக்கு பொன் ஐ(ஞ்)கழஞ்சும் பரிசாரகஞ் செய்யு மாணி

    ஒருவனுக்கு

45  நெல் அறுநாழியும் இவனுக்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்

46  கழஞ்சும் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு நிசத நெல் குறுணியும் இவனு

47  க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொனிருகழஜ்சும் நந்தனவனம்

    உ(ழ)ப்

48  பார் இருவர்க்கு நிசத நெல் குறுணி நானாழியும் இவர்களுக்கு புடவைக்கு

    பொன்



                                            இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.




இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.


பாடம்:


49  கழஞ்சும் சங்கிராந்தி ஒன்றினுக்கு ஆசார்ய பூசனை உட்பட பொன் கழஞ்சேய்

    காலா

50  க சங்கிராந்தி பன்னிரண்டினுக்கு பொன் பதினைங்கழஞ்சும் திருமெய்ப்பூச்சு

51  க்கும் திருபுகைக்கும் திங்கள் அரைக்கால் பொன்னாக ஓராட்டை நாளைக்கு

52  பொன் கழஞ்சரையும் திருநமனிகை மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொ

53  ன் முக்காலும் திருபரிசட்டம் மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொன் கழஞ்

54  சும் உகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்

55  றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இரண்டும் கை

56  மணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலி

57  ஊட்டு நெல் னூற்றைம்பதின் காடியும் கச்சிப்பேட்டு நகரத்தார் பக்கல்

    விலை  கொ

58  ண்டுடைய நிலத்தில் சித்திரவல்லிப் பெருஞ்செறுவான பட்டியும் துண்டு

59  ணுக்கச் சேரியில் விலை கொண்டுடைய நிலத்தில் மேட்டு மதகாறு பாஞ்ச

60  சேந்தறைப்போத்தன் நிலத்துக்கு வடக்கில் தடி மூன்றும் காடாடி குண்




செப்பேடு கூறும் செய்திகள்


 உயர் அதிகாரியின் விண்ணப்பம்

முன்னரே குறிப்பிட்டவாறு, உத்தம சோழன் காஞ்சி அரண்மனையில் வீற்றிருந்தபோது, மூவேந்தவேளான் என்னும் ஒரு பதவி நிலையில் உள்ள பெரிய அதிகாரியான நக்கன் கணிச்சன் என்பான் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகச் செப்பேடு தொடங்குகிறது. உலகளந்தான் கோயிலுக்கு, கச்சிப்பேட்டிலும், துண்டுணக்கச்சேரி என்னும் ஊரிலும் நிலங்கள் இருந்துள்ளன. இந்நிலங்கள் கோயிலுக்குரிய முதலீடாக இருந்தன. விளைச்சலின் மூலம் வட்டியாக வரும் நெல் வருவாய் (பொலிசை, பொலியூட்டு) கோயிலின் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. விளைச்சல், பூ என்றும் போகம் என்றும் வழக்கப்பட்டது. இந்த நிலங்களைக் கண்காணிக்க, கருவுளான்பாடி, அதிமானப்பாடி ஆகிய ஊர்களைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டியே மேற்குறித்த மூவேந்தவேளான் அரசனிடம் விண்ணப்பம் செய்கிறான்.


கோயிலின் வருவாய்

கோயிலுக்கு வேறு வரவினங்களும் இருந்துள்ளன. முகந்து விற்கும் தானியம் முதலான பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் கோயிலைச் சாரும். இது (செப்பேட்டில்) “கால் அளவு கூலி”  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  முகத்தல் அளவைக்கு ‘கால்’ என்னும் கருவி பயன்பட்டது. ஊருக்குப் பொதுவாக இருக்கும் கால் ஊர்க்கால்; கோயிலுக்குத் தனியே கால் இருக்கும். அரசனின் பெயர் கொண்ட காலும் தனியே உண்டு. எடுத்துக்காட்டாக இராசகேசரிக் கால். இறைவனின் பெயர் கொண்ட காலுக்கு எடுத்துக்காட்டு ஆடவல்லான் கால். அதுபோலவே, நிறுத்து விற்கும் பொருள்கள் மீதான வரி வருமானமும் இக்கோயிலுக்கு இருந்தது. நிறுத்தலுக்குக் கோல் (துலாக்கோல்) பயன்பட்டது. இவ்வகை வருவாய் (செப்பேட்டில்) “கோல் நிறை கூலி”  என்னும் பெயரால் குறிக்கப்பெற்றது.  கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொன், காசு, பணம் ஆகிய வைப்புத்தொகைகள் முதலீடுகளாகவும், அவற்றால் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயாகவும் கோயிலுக்குப் பயன்பட்டன. கோயிலின் வரவினங்கள் தொடர்பான செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணித்துக் கணக்கில் வைக்க கணக்கர்களையும் நியமிக்க அரசனிடம் வேண்டுகிறான் மேற்குறித்த மூவேந்தவேளான். “நீயேய் நிவந்தம் செய்வீய்” என்று மன்னன், நிவந்தப்பொறுப்புகளை இந்த அதிகரியிடமே ஒப்படைக்கிறான்.  இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேடு குறிப்பிடும் பொது அல்லது முதன்மைச் செய்திகள். கோயிலில் நடைபெறும் வழிபாடு, (பூசனை, படையல் ஆகியன), நிர்வாகம், கோயிலின் பணியாளர்கள் ஆகியன பற்றியவை  சிறப்புச்செய்திகள்.


செப்பேடு கூறும் சிறப்புச் செய்திகள்


இறைவனின் பெயர்

கோயிலின் இறைவன் உலகளந்த பெருமாள், செப்பேட்டில் “ஊரகப் பெருமான்” என்று குறிப்பிடப்படுகிறார்.


வழிபாடு (பூசனை, படையல்)

கோயிலில் மூன்று சந்தி வழிபாடு நடை பெற்றது. மூன்று சந்திக்கும் திருவமுது படைக்கப்பெற்றது. திருவமுதோடு சேர்ந்த பிற அமுதுகளாவன:

கறியமுது -  காய்கறிகளைக்கொண்ட உணவினைக் குறிக்கும். அதாவது பொறிக்கறி.

தயிரமுது.

அடைக்காயமுது - பாக்கினைக் குறிக்கும். இச்செப்பேட்டில் வெற்றிலை தனியே குறிக்கப்படவில்லையெனினும் வெற்றிலையையும் சேர்த்தே அடைக்காய் அமுது என்னும் சொல் நின்றது. (சில கல்வெட்டுகளில் இலை அமுது தனியே குறிக்கப்பெறும். அடைக்காய் என்னும் பழந்தமிழ்ச் சொல், தற்போது தமிழில் வழங்குவதில்லை என்றாலும், கன்னடத்தில் இந்த வழக்கு இன்றும் தொடர்வதைக் காண்கிறோம். கன்னடத்தில் இலை, எலெ என்றும் அடைக்காய், அடிக்கெ என்றும் திரிந்து வழங்குகின்றன. வெற்றிலை பாக்கு என நாம் குறிப்பதைக் கன்னடர்கள் எலெ-அடிக்கெ என்பார்கள். அடைக்காய் என்னும் தமிழ்ச் சொல் ஆங்கிலத்தில் “ARECA”  என்று வழக்கும். “ட”  தமிழ் ஒலிப்பு ஆங்கிலத்தில் “ர/ற”  ஒலிப்பாக மாறியுள்ளது. ஒரு ஆங்கில அகராதி, “ARECA” –வின் மூலத்தை, மலையாளம் எனவும், மலையாளத்திலிருந்து போர்த்துகீசிய மொழிக்குச் சென்றது எனவும் குறித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாயில்லை.)

நெய் அமுது.

சங்கிராந்தி – கோயில் வழிபாடுகளில் சங்கிராந்தி வழிபாடும் இருந்தது. ஞாயிறு(கதிரவன்) ஓர் இராசியில் புகும் காலம் சங்கிராந்தியாகும். அதுவே, புதிய  மாதப்பிறப்பாகும்.  கல்வெட்டுகளில் மாதங்களின் பெயர்கள் சித்திரை, வைகாசி, ஆனி   என்னும் பெயர்களில் குறிப்பிடப்படுவதில்லை.  ஞாயிறு புகும் இராசியின் பெயராலேயே குறிக்கப்படும். சித்திரை மாதத்தில், ஞாயிறு, மேழ(மேஷ) ராசியில் புகுவதால் மேழ(மேஷ) ஞாயிறு என்றும், இதே போன்று, வைகாசி, இடப(ரிஷப) ஞாயிறு என்றும், ஆனி, மிதுன ஞாயிறு என்றும் வரிசைப்படுத்திப் பன்னிரண்டு இராசிகளின் பெயரால் மாதங்கள் குறிக்கப்பட்டன. எனவே, ஆண்டின் இறுதி மாதமாகிய பங்குனி, மீன ஞாயிறு என அமையும். இவ்வாறு, பன்னிரண்டு சங்கிராந்திகள். பன்னிரண்டு சங்கிராந்தி பூசனைகள்.

ஆச்சாரிய பூசனை -  சங்கிராந்தி தோறும், ஆச்சாரிய பூசனை என்னும் ஒரு வழிபாடும் உடன் நடந்ததாகச் செப்பேட்டின் வாயிலாக அறிகிறோம். இது குருவை வணங்குதல் என்னும் நிகழ்ச்சியாகும். செப்பேட்டின்படி, இந்த ஆச்சாரிய பூசனை பன்னிரண்டு சங்கிராந்தியின்போதும் நடந்துள்ளது.


இறைவனை வழிபடும்போது, ‘சோடச உபசாரம்’ என்னும் பதினாறு வகையான வழிபடுதல் முறைகள் உண்டு.  அவற்றில் பலவற்றை இச்செப்பேட்டில் காண்கிறோம்.



திருமெய்ப்பூச்சு – இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குப் பூசும் சந்தனம்

                   முதலான நறுமணப்பூச்சு.

திருப்புகை – நறுமணப்புகை.

திருநமனிகை - இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் செய்யும் நீராட்டு.

திருப்பரிசட்டம் - இறைவனின் உலோகத்திருமேனிகளுக்குச் சார்த்தும் உடை.


கோயிலில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டவர்கள்

ஆராதிக்கும் வேத பிராமணன் – பூசைசெய்யும் வேதம் வல்ல பிராமணன்.

ஆச்சாரியர்- குரு

பரிசாரகம் செய்யும் மாணி – கோயிலில் ஏவல் தொழில் செய்யும் பிரம்மச்சாரி.

திருமெய்காப்பான் – திருமெய்காப்பு என்பது கோயில் காவலைக் குறிக்கும்.

எனவே, திருமெய்காப்பான் என்பவன் கோயில் காவல் பணி செய்பவன்.

திருமெழுக்கிடுவார் – கோயிலைப் பெருக்கி மெழுகித் தூய்மை செய்து வைப்பவர்.

நந்தவனம் உழப்பார் -  நந்தவனத்தில் பணியிலிருக்கும் உழவன். (இக்கோயிலில் உழப்பார் இருவர் இருந்துள்ளனர்)

உவச்சர்கள் – செப்பேடு, ஓரிடத்தில், உகச்சகள் என்றும், மற்றோரிடத்தில் உவச்சர்கள் என்றும் குறிப்பிடுகிறது.  இவர்கள், இசைக்கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஆவர்.  கல்வெட்டுகளில், இசைத்தல் என்னும் சொல்லுக்குத் தலைமாற்றாகக் (பதிலாக) கொட்டுதல் என்னும் சொல்லே பயிலுவதைக் காண்கிறோம். ‘பறை முதலியன கொட்டுவித்து’,   ‘மத்தளம் கொட்டுகிற’, ‘உவைச்சன் கொட்டுவிதாக’, ‘பஞ்சமா ஸப்தம் கொட்டுகின்ற’  போன்றவை சில சான்றுகள். காளத்தைக் குறிக்கையில் மட்டும் ஊதுதல்’ என்னும் குறிப்பைக் காண்கிறோம்.  புழக்கத்திலிருந்த சில இசைக்கருவிகள் ஆவன:



பறை

தலைப்பறை

மத்தளம் அல்லது மத்தளி

கறடிகை

கைமணி

சேகண்டிகை

தாளம்

காளம் அல்லது எக்காளம்

திமிலை

பஞ்சமா சப்தம்

உடுக்கை

வீணை

சகடை (முரசு)



நிவந்தத்தின் விளக்கம்

கோயிலின் வருமானங்களாகிய நெல்லும், பொன்னும்(கழஞ்சும்) கீழ்க்கண்டவாறு நிவந்தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

திருவமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றுக்கு நெல் வழங்கப்பட்டது. திருநொந்தாவிளக்கெரிக்கத் தேவையான நெய்க்காகவும் நெல் கொடுக்கப்பட்டது.

வேத பிராமணன், பரிசாரக மாணி, திருமெய்காப்பான், நந்தவனம் உழப்பார் ஆகியோர்க்கு நெல்லும், இவர்களுக்கான ஆடைகளுக்காகப் பொன்னும்(கழஞ்சும்) வழங்கப்பட்டன. ஆடை என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவை’ என்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது. திருமெழுக்கிடுவார்க்கு நெல் மட்டுமே அளிக்கப்பட்டது.

சங்கிராந்தி, ஆச்சாரிய பூசனை,  திருமெய்ப்பூச்சு, திருபுகை, திருநமனிகை, திருபரிசட்டம் ஆகியவற்றுக்குப் பொன்(கழஞ்சு) வழங்கப்பட்டது.


திருவிழாக்கள்

மகர சங்கராந்தி (செப்பேடு இதை உத்தரமயன சங்கராந்தி என்று குறிக்கிறது),  சித்திரை விஷு ஆகிய இரு திருவிழாக்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டன. சித்திரைத் திருநாள் ஏழு நாள் விழவாக நடைபெற்றது. திருவிழாவுக்கான செலவினங்களுக்குக் கழஞ்சு வழங்கப்பட்டது. திருவிழாக்களின்போது, எண்ணெய், பூ, சந்தனம் போன்றவைக்குச் சிறப்பு ஒதுக்கீடுகள் இருந்தன. தேவரடியார், இறைவனுக்குப் பள்ளிச் சிவிகை சுமப்பார், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. செப்பேட்டில், சிவிகை சுமப்போரைக் குறிப்பிடுகையில்,


வரி 85 . . . . . . . . . . . . . . . . . தேவர் பள்ளிச் சிவிகை காவும் சிவி

வரி 86 கையார்க்கும் . . . . . . . . . . . . . . . . .


என்று எழுதப்பட்டுள்ளது. இதில் “காவும்”  என்னும் சொல் ஆளப்பட்டுளது கருதத்தக்கது. சுமக்கும் என்பதற்கான நல்ல தமிழ்ச் சொல் இங்கு பயின்றுவந்துள்ளது. பரிமேலழகர் இச்சொல்லைக் கையாண்டிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். சிவிகையைத் (பல்லக்கு) தோளில் சுமப்பதுபோலவே, முருகக் கடவுளுக்கு எடுக்கும் காவடியும் தோளில் சுமக்கப்படுவதாலேயே, அதற்குக் காவடி என்னும் சொல்லால் பெயரிட்டிருப்பர் எனலாம். காவுதல் என்னும் சொல்லின் அடிப்படையில் ‘காவடி’ உருவாகியிருக்கலாம்.


செப்பேடு குறிக்கும் சில மக்கள்


பட்டசாலிகள்

செப்பேட்டில், அதிமானப்பாடி, கருவுளான்பாடி ஆகிய இரு ஊர்களைச் சேர்ந்த நெசவாளர்களே வரவு செலவுகளைக் கண்காணிக்கும் ஸ்ரீகாரியம் செய்பவர்களாகக் குறிக்கப்படுகிறார்கள். செப்பேட்டின் வடமொழிப்பகுதி, இவர்களைப் பட்டசாலி என்று கூறுகிறது. வடமொழித் தொடரான ராஜ-வஸ்த்ர க்ருதாமேஷா(ம்)”   என்ற தொடரும் இவர்களையே சுட்டும் எனலாம். அவ்வாறெனின், பட்டசாலிகள் என்னும் நெசவுக்குடிகள், அரசனுக்குரிய துணிகளை நெய்கின்றவர் எனப் பொருள் அமைகிறது.


சோழாநியமத்தார்

கச்சிப்பேட்டில் இருந்த வணிகர் குழுவினராக இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்களில் சிலரைச் செப்பேடு “தோளாச் செவியர்” என்று கூறுகிறது. இத்தொடர், பொருள் பொதிந்த கவின் தொடர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தோளாச் செவியர் என்னும் தொடர், தோட்கப்படாத செவி என்று பொருள் தரும். அதாவது துளைக்கப்படாத செவி; ”தொள்”  என்பதே வேர்ச்சொல்லாக இருக்கவேண்டும். அவ்வாறெனில், தொளைத்தல், தொளை என்பதே சரியான வடிவங்களாயிருக்கவேண்டும்; ஆனால், நாம், ‘துளைத்தல்’, துளை என்று மருவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறோம் என்றாகிறது.







துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி :  9444939156.



Thevan

unread,
Nov 7, 2018, 5:03:30 PM11/7/18
to mint...@googlegroups.com
அருமையான தகவல், நன்றி ஐயா

7/11/18 அன்று, dorai sundaram <doraisu...@gmail.com> எழுதியது:
> *உத்தம சோழன் செப்பேடு*
>
>
> *முன்னுரை*
> *செப்பேட்டின் அமைப்பு*
>
> தற்போது, சென்னை எழுமூர் அருங்காட்சியகத்தில் உள்ள இச்செப்பேட்டுத் தொகுதியில்
> ஐந்து ஏடுகளே உள்ளன. ஏடுகளின் இடப்பக்க மையத்தில் உள்ள துளைகள் வழியே ஒரு
> வளையத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. வளையத்தில் சோழர் இலச்சினை உள்ளது. மொத்தம்
> நூற்று இருபத்தொரு வரிகள்; முதல் பன்னிரண்டு வரிகள் கிரந்த எழுத்துகள்;
> வடமொழி. மற்றவை தமிழ் எழுத்து; தமிழ் மொழி. தொடக்கத்தில் கிரந்தப்பகுதியில்
> சில ஏடுகளும், இறுதியில் ஒரு தமிழ் ஏடும் இல்லாததால் உத்தம சோழனின்
> மெய்க்கீர்த்தியை அறிய இயலவில்லை.
>
>
> *செப்பேட்டின் காலம்*
>
> உத்தம சோழனுடைய பதினாறாம் ஆட்சியாண்டில், கி.பி. 985-86 –ஆம் ஆண்டில் செப்பேடு
> வெளியிடப்பட்டது.
>
>
> *செப்பேடு வெளியிட்ட இடம்*
>
> காஞ்சியில் இராசராசனின் தமையன் கரிகாலன் ஓர் அரண்மனை கட்டுவித்ததும், அந்த
> அரண்மனையில் சுந்தர சோழன் இறந்துபோனதும் அறியப்பட்ட செய்திகள். அந்த
> அரண்மனையில், சித்திர மண்டபம் என்னும் ஒரு மண்டபத்தில் அரசன்
> அமர்ந்திருந்தபோது செப்பேட்டுக்கான நிவந்த ஆணை வெளியிடப்படுகிறது. இதே சித்திர
> மண்டபத்தில், முதலாம் இராசேந்திரன் எசாலம் செப்பேட்டினை வெளியிட்டான் என்பது
> குறிபிடத்தக்கது. காஞ்சி அரண்மனை, செப்பேட்டில், “கச்சிப்பேட்டு கோயில்” எனக்
> குறிப்பிடப்படுகிறது. கோயில் என்பது அரச அரண்மனையைக் குறிக்கும். (இறைவனின்
> கோயில் ஸ்ரீகோயில் என வழங்கும்). காஞ்சி என்பது பண்டு ”கச்சிப்பேடு” என்றே
> வழங்கியதை நோக்குக. அப்பெயரையும் சுருக்கி “கச்சி” என்றழைப்பதும்
> வழக்கமாயுள்ளது. கச்சி என்னும் பெயர், காலப்போக்கில் கஞ்சி எனவும், பின்னர்
> காஞ்சி எனவும் மருவியிருக்கக் கூடும். கோட்டையோடு கூடிய நகரமாதலால், பல்லவர்
> காலத்தில் காஞ்சிபுரம் என வழங்கியிருக்கலாம். ”கச்சிப்பேடு” என்னும்
> ஊர்ப்பெயரில் பின்னொட்டாக வருகின்ற “பேடு” என்னும் சொல் கருதத்தக்கது. பேடு
> என்னும் இச்சொல், பல ஊர்களின் பெயர்களில் உள்ளதைக் காணலாம். கோயம்பேடு,
> மப்பேடு, தொழுப்பேடு என்று சில ஊர்ப்பெயர்களை எடுத்துக்காட்டலாம்.
> எழுத்துப்பொறிப்புடன் கூடிய சங்க காலத்து நடுகல்லான புலிமான் கோம்பைக்
> கல்லில் “கல்பேடு” என்னும் ஊர் குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுகிறது.
>
>
> செப்பேட்டுத் தொகுதியில் இரண்டு ஏடுகளின் ஒளிப்படங்கள் முன்னரே
> குறிப்பிட்டவாறு நூலில் வெளியிடப்பட்டுள்ளன. படங்கள் தெளிவாகப்
> பதிவாகியுள்ளன. அவற்றின் படங்களும், பாடங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
>
>
>
> *முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ;
> வரிகள் : 37-48. *
>
> <https://1.bp.blogspot.com/-zYm8ddW6JCU/Wz5OlMvIGVI/AAAAAAAAHck/y8alHOj4R94NW6LT6udZXe5Mk6QwE7d1wCLcBGAs/s1600/Uththama%2BCholan-seppedu-1.JPG>
>
>
>
>
> முதல் படம் – ஏடு-2 ; பக்கம் – 2 ; வரிகள் : 37-48.
>
>
> பாடம்:
>
>
> 37 ட்டை நாளைக்கிடக்கடவ பொலிசைப்பொன் கழஞ்சே நாலு மஞ்சாடியும் நி
>
> 38 வந்தஞ்செய்(த)படி திருவமிர்து மூன்று ஸந்திக்கு நெல் முக்குறுணி
>
> அறுநாழியு
>
> 39 ம் கறியமுது இரண்டுக்கு மூன்று ஸந்திக்கு நெய் நானாழியும் நெய்யமுது
>
> நிசதம்
>
> 40 உழக்கினுக்கு நெல் ஐஞ்ஞாழியும் தயிரமுது போது உரியாக மூன்று
>
> ஸந்திக்கும் (த)
>
> 41 யிரமுது நாழி உரிக்கு நெல் முன்னாழியும் அடைக்காயமுது மூன்று
>
> ஸந்திக்கு
>
> 42 நெல் முன்னாழியும் விறகினுக்கு நெல் இரு நாழியும் ஆராதிக்கும்
>
> 43 வேதப்ராஹ்மணன் ஒருவனுக்கு நெல் பதக்கும் இவனுக்கு புடவை முதல்
>
> 44 ஓராட்டை நாளைக்கு பொன் ஐ(ஞ்)கழஞ்சும் பரிசாரகஞ் செய்யு மாணி
>
> ஒருவனுக்கு
>
> 45 நெல் அறுநாழியும் இவனுக்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொன்
>
> 46 கழஞ்சும் திருமெய்காப்பாளன் ஒருவனுக்கு நிசத நெல் குறுணியும் இவனு
>
> 47 க்கு புடவை முதல் ஓராட்டை நாளைக்கு பொனிருகழஜ்சும் நந்தனவனம்
>
> உ(ழ)ப்
>
> 48 பார் இருவர்க்கு நிசத நெல் குறுணி நானாழியும் இவர்களுக்கு புடவைக்கு
>
> பொன்
>
>
>
> * இரண்டாவது படம் – ஏடு-3 ;
> பக்கம் – 1 ; வரிகள் : 49-60.*
>
> <https://2.bp.blogspot.com/-CufuxpHla24/Wz5PTcP-luI/AAAAAAAAHcs/3fjsKN0aEUkhhTUu1no0RGziiptxJnkbwCLcBGAs/s1600/Uththama%2BCholan-seppedu-2.JPG>
>
>
>
>
> இரண்டாவது படம் – ஏடு-3 ; பக்கம் – 1 ; வரிகள் : 49-60.
>
>
> பாடம்:
>
>
> 49 கழஞ்சும் சங்கிராந்தி ஒன்றினுக்கு ஆசார்ய பூசனை உட்பட பொன் கழஞ்சேய்
>
> காலா
>
> 50 க சங்கிராந்தி பன்னிரண்டினுக்கு பொன் பதினைங்கழஞ்சும் திருமெய்ப்பூச்சு
>
> 51 க்கும் திருபுகைக்கும் திங்கள் அரைக்கால் பொன்னாக ஓராட்டை நாளைக்கு
>
> 52 பொன் கழஞ்சரையும் திருநமனிகை மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொ
>
> 53 ன் முக்காலும் திருபரிசட்டம் மூன்றுக்கு ஓராட்டை நாளைக்கு பொன் கழஞ்
>
> 54 சும் உகச்சகள் தலைப்பறை ஒன்றும் மத்தளி இரண்டும் கறடிகை ஒன்
>
> 55 றும் தாளம் ஒன்றும் சேகண்டிகை ஒன்றும் காளம் இரண்டும் கை
>
> 56 மணி ஒன்றுமாக ஆள் ஒன்பதினுக்கு புடவை முதலுட்பட உழை ஊர் பொலி
>
> 57 ஊட்டு நெல் னூற்றைம்பதின் காடியும் கச்சிப்பேட்டு நகரத்தார் பக்கல்
>
> விலை கொ
>
> 58 ண்டுடைய நிலத்தில் சித்திரவல்லிப் பெருஞ்செறுவான பட்டியும் துண்டு
>
> 59 ணுக்கச் சேரியில் விலை கொண்டுடைய நிலத்தில் மேட்டு மதகாறு பாஞ்ச
>
> 60 சேந்தறைப்போத்தன் நிலத்துக்கு வடக்கில் தடி மூன்றும் காடாடி குண்
>
>
>
>
> *செப்பேடு கூறும் செய்திகள்*
>
>
> *உயர் அதிகாரியின் விண்ணப்பம்*
>
> முன்னரே குறிப்பிட்டவாறு, உத்தம சோழன் காஞ்சி அரண்மனையில் வீற்றிருந்தபோது,
> மூவேந்தவேளான் என்னும் ஒரு பதவி நிலையில் உள்ள பெரிய அதிகாரியான நக்கன்
> கணிச்சன் என்பான் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைப்பதாகச் செப்பேடு தொடங்குகிறது.
> உலகளந்தான் கோயிலுக்கு, கச்சிப்பேட்டிலும், துண்டுணக்கச்சேரி என்னும் ஊரிலும்
> நிலங்கள் இருந்துள்ளன. இந்நிலங்கள் கோயிலுக்குரிய முதலீடாக இருந்தன.
> விளைச்சலின் மூலம் வட்டியாக வரும் நெல் வருவாய் (பொலிசை, பொலியூட்டு) கோயிலின்
> செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. விளைச்சல், பூ என்றும் போகம் என்றும்
> வழக்கப்பட்டது. இந்த நிலங்களைக் கண்காணிக்க, கருவுளான்பாடி, அதிமானப்பாடி ஆகிய
> ஊர்களைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டியே மேற்குறித்த மூவேந்தவேளான் அரசனிடம்
> விண்ணப்பம் செய்கிறான்.
>
>
> *கோயிலின் வருவாய்*
>
> கோயிலுக்கு வேறு வரவினங்களும் இருந்துள்ளன. முகந்து விற்கும் தானியம் முதலான
> பொருள்களின் மீது விதிக்கப்படும் வரி வருமானம் கோயிலைச் சாரும். இது
> (செப்பேட்டில்) “கால் அளவு கூலி” என்னும் பெயரால்
> குறிக்கப்பெற்றது. முகத்தல் அளவைக்கு ‘கால்’ என்னும் கருவி பயன்பட்டது.
> ஊருக்குப் பொதுவாக இருக்கும் கால் ஊர்க்கால்; கோயிலுக்குத் தனியே கால்
> இருக்கும். அரசனின் பெயர் கொண்ட காலும் தனியே உண்டு. எடுத்துக்காட்டாக
> இராசகேசரிக் கால். இறைவனின் பெயர் கொண்ட காலுக்கு எடுத்துக்காட்டு ஆடவல்லான்
> கால். அதுபோலவே, நிறுத்து விற்கும் பொருள்கள் மீதான வரி வருமானமும்
> இக்கோயிலுக்கு இருந்தது. நிறுத்தலுக்குக் கோல் (துலாக்கோல்) பயன்பட்டது.
> இவ்வகை வருவாய் (செப்பேட்டில்) “கோல் நிறை கூலி” என்னும் பெயரால்
> குறிக்கப்பெற்றது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட பொன், காசு, பணம் ஆகிய
> வைப்புத்தொகைகள் முதலீடுகளாகவும், அவற்றால் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி)
> வருவாயாகவும் கோயிலுக்குப் பயன்பட்டன. கோயிலின் வரவினங்கள் தொடர்பான
> செயல்பாடுகள் அனைத்தையும் கண்காணித்துக் கணக்கில் வைக்க கணக்கர்களையும்
> நியமிக்க அரசனிடம் வேண்டுகிறான் மேற்குறித்த மூவேந்தவேளான். “நீயேய் நிவந்தம்
> செய்வீய்” என்று மன்னன், நிவந்தப்பொறுப்புகளை இந்த அதிகரியிடமே
> ஒப்படைக்கிறான். இந்தச் செய்திகள் எல்லாம் செப்பேடு குறிப்பிடும் பொது அல்லது
> முதன்மைச் செய்திகள். கோயிலில் நடைபெறும் வழிபாடு, (பூசனை, படையல் ஆகியன),
> நிர்வாகம், கோயிலின் பணியாளர்கள் ஆகியன பற்றியவை சிறப்புச்செய்திகள்.
>
>
> *செப்பேடு கூறும் சிறப்புச் செய்திகள்*
>
>
> *இறைவனின் பெயர்*
>
> கோயிலின் இறைவன் உலகளந்த பெருமாள், செப்பேட்டில் “ஊரகப் பெருமான்” என்று
> குறிப்பிடப்படுகிறார்.
>
>
> *வழிபாடு (பூசனை, படையல்)*
> *நிவந்தத்தின் விளக்கம்*
>
> கோயிலின் வருமானங்களாகிய நெல்லும், பொன்னும்(கழஞ்சும்) கீழ்க்கண்டவாறு
> நிவந்தங்களுக்கு
> ஒதுக்கீடு செய்யப்பட்டன.
>
> திருவமுது, கறியமுது, நெய்யமுது, தயிரமுது, அடைக்காய் அமுது ஆகியவற்றுக்கு
> நெல் வழங்கப்பட்டது. திருநொந்தாவிளக்கெரிக்கத் தேவையான நெய்க்காகவும் நெல்
> கொடுக்கப்பட்டது.
>
> வேத பிராமணன், பரிசாரக மாணி, திருமெய்காப்பான், நந்தவனம் உழப்பார் ஆகியோர்க்கு
> நெல்லும், இவர்களுக்கான ஆடைகளுக்காகப் பொன்னும்(கழஞ்சும்) வழங்கப்பட்டன. ஆடை
> என்பதற்குச் செப்பேட்டில் ‘புடவை’ என்னும் சொல் பயன்படுத்தப்பெறுகிறது.
> திருமெழுக்கிடுவார்க்கு நெல் மட்டுமே அளிக்கப்பட்டது.
>
> சங்கிராந்தி, ஆச்சாரிய பூசனை, திருமெய்ப்பூச்சு, திருபுகை, திருநமனிகை,
> திருபரிசட்டம் ஆகியவற்றுக்குப் பொன்(கழஞ்சு) வழங்கப்பட்டது.
>
>
> *திருவிழாக்கள்*
>
> மகர சங்கராந்தி (செப்பேடு இதை உத்தரமயன சங்கராந்தி என்று
> குறிக்கிறது), சித்திரை விஷு ஆகிய இரு திருவிழாக்களுக்குச் சிறப்பு
> ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டன. சித்திரைத் திருநாள் ஏழு நாள் விழவாக
> நடைபெற்றது. திருவிழாவுக்கான செலவினங்களுக்குக் கழஞ்சு வழங்கப்பட்டது.
> திருவிழாக்களின்போது, எண்ணெய், பூ, சந்தனம் போன்றவைக்குச் சிறப்பு
> ஒதுக்கீடுகள் இருந்தன. தேவரடியார், இறைவனுக்குப் பள்ளிச் சிவிகை சுமப்பார்,
> இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.
> செப்பேட்டில், சிவிகை சுமப்போரைக் குறிப்பிடுகையில்,
>
>
> வரி 85 . . . . . . . . . . . . . . . . . தேவர் பள்ளிச் சிவிகை காவும் சிவி
>
> வரி 86 கையார்க்கும் . . . . . . . . . . . . . . . . .
>
>
> என்று எழுதப்பட்டுள்ளது. இதில் “காவும்” என்னும் சொல் ஆளப்பட்டுளது
> கருதத்தக்கது. சுமக்கும் என்பதற்கான நல்ல தமிழ்ச் சொல் இங்கு
> பயின்றுவந்துள்ளது. பரிமேலழகர் இச்சொல்லைக் கையாண்டிருப்பதாக நூலாசிரியர்
> குறிப்பிடுகிறார். சிவிகையைத் (பல்லக்கு) தோளில் சுமப்பதுபோலவே, முருகக்
> கடவுளுக்கு எடுக்கும் காவடியும் தோளில் சுமக்கப்படுவதாலேயே, அதற்குக் காவடி
> என்னும் சொல்லால் பெயரிட்டிருப்பர் எனலாம். காவுதல் என்னும் சொல்லின்
> அடிப்படையில் ‘காவடி’ உருவாகியிருக்கலாம்.
>
>
> *செப்பேடு குறிக்கும் சில மக்கள்*
>
>
> *பட்டசாலிகள்*
>
> செப்பேட்டில், அதிமானப்பாடி, கருவுளான்பாடி ஆகிய இரு ஊர்களைச் சேர்ந்த
> நெசவாளர்களே வரவு செலவுகளைக் கண்காணிக்கும் ஸ்ரீகாரியம் செய்பவர்களாகக்
> குறிக்கப்படுகிறார்கள். செப்பேட்டின் வடமொழிப்பகுதி, இவர்களைப் பட்டசாலி என்று
> கூறுகிறது. வடமொழித் தொடரான ”ராஜ-வஸ்த்ர க்ருதாமேஷா(ம்)” என்ற தொடரும்
> இவர்களையே சுட்டும் எனலாம். அவ்வாறெனின், பட்டசாலிகள் என்னும் நெசவுக்குடிகள்,
> அரசனுக்குரிய துணிகளை நெய்கின்றவர் எனப் பொருள் அமைகிறது.
>
>
> *சோழாநியமத்தார்*
>
> கச்சிப்பேட்டில் இருந்த வணிகர் குழுவினராக இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள்.
> இவர்களில் சிலரைச் செப்பேடு “தோளாச் செவியர்” என்று கூறுகிறது. இத்தொடர்,
> பொருள் பொதிந்த கவின் தொடர் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். தோளாச்
> செவியர் என்னும் தொடர், தோட்கப்படாத செவி என்று பொருள் தரும். அதாவது
> துளைக்கப்படாத செவி; ”தொள்” என்பதே வேர்ச்சொல்லாக இருக்கவேண்டும்.
> அவ்வாறெனில், தொளைத்தல், தொளை என்பதே சரியான வடிவங்களாயிருக்கவேண்டும்; ஆனால்,
> நாம், ‘துளைத்தல்’, துளை என்று மருவிய வடிவத்தைப் பயன்படுத்துகிறோம்
> என்றாகிறது.
>
>
>
>
>
>
>
> துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
>
> அலைபேசி : 9444939156.
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
>


--
அ. பெருமாள் தேவன்

Alternative No.75400 78380

Working Hours : 10 am to 7 pm

https://www.facebook.com/apthevan

http://perumalthevan.blogspot.in/

https://www.youtube.com/channel/UCAslvhtxaa8NJaUvnzb_CNw

தேமொழி

unread,
Nov 7, 2018, 6:01:18 PM11/7/18
to மின்தமிழ்
/// பரிமேலழகர் இச்சொல்லைக் கையாண்டிருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். ///


காவுதல் என்பது தோளில் சுமத்தல்,   சங்கத்தமிழ்ச் சொல். 

ஆம். காவடி என்பதன் துவக்கம் அதுதான்.

காவடி எடுத்துச் செல்வோர் நீண்ட தொலைதூர  நடைப்பயணத்தில்  தங்களுக்கு வழித்தேவைக்கான  உணவு நீர்  போன்றவற்றைச் சுமந்து செல்லப் பயன்படுத்தியது.

பிற்காலத்தில் அதற்கானத் தேவை இல்லாது போனாலும் அதை இறைப்பயணத்துடன் இணைத்து தூக்கிச் சென்று வருகிறார்கள்.

முருகவழிபாட்டில் மட்டுமே காவடி இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தோளில் சுமந்து செல்வதை ஒளவையும் ஒரு புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுவார்.

அதியமான் வாயிற்காவலனிடம் என் மூட்டை முடிச்சு   இசைக்கருவியைத் தூக்கிக் கொண்டு வெளியேறிவிடுவேன் என்று கூறுமிடத்து அவ்வாறு சொல்கிறார்.
எத்திசைச் செலினும் சோறே (புறநானூறு 206) பாடலில் ...

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;  (10)

காவுதல் = சுமத்தல்; கலம் = யாழ்; கலப்பை = கலம் + பை = யாழ் மற்றும் பல பொருள்களையும் தூக்கிச் செல்வதற்குப் பயன்படும் பை


காவுதல் என்ற சொல்லை இன்றும் இலங்கைத் தமிழர் பாவிப்பதைக் கண்டேன்.

ஒரு காணொளியில் கனடாவில் இறந்தவர் இலங்கையில் இறந்திருந்தால் எவ்வாறு உறவினர்கள் வந்து மரியாதை செய்து தோளில் அவரைச் சுமந்து இறுதிப்பயணத்தை நடத்தி வைத்திருப்பார்கள்.  இப்படி கனடாவில் இறந்து காரில்  கொண்டு செல்கிறார்கள் என்று அழகு தமிழில் விளக்குவார்.

N D Logasundaram

unread,
Nov 8, 2018, 3:02:58 AM11/8/18
to mint...@googlegroups.com
நூ த லோ சு
மயிலை

நன்றி

Suba

unread,
Nov 8, 2018, 5:38:20 AM11/8/18
to மின்தமிழ்
அருமையான கட்டுரை.
நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

dorai sundaram

unread,
Nov 8, 2018, 5:40:01 AM11/8/18
to mint...@googlegroups.com
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூல் வழி காவுதல் என்னும் நல்ல தமிழ்ச் சொல்லை 
அறிந்தேன். காவடியும் காவுதலின் அடிப்படையில் உருவான சொல் என யூகம்
செய்தது  சரியானதாய் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 
திருவாளர்கள் தேவன், தேமொழி, நூ.த.லோ.சு.  ஆகிய மூவருக்கும் நன்றி.
சுந்தரம்.

--

dorai sundaram

unread,
Nov 8, 2018, 5:40:45 AM11/8/18
to mint...@googlegroups.com
நன்றி சுபா அவர்களே.
சுந்தரம்.

Thiruvengada Mani T.K.

unread,
Nov 8, 2018, 5:41:23 AM11/8/18
to mint...@googlegroups.com
அருமையான கட்டுரை!
வாழ்த்துகள்

dorai sundaram

unread,
Nov 8, 2018, 7:20:57 AM11/8/18
to mint...@googlegroups.com
நன்றி ஐயா.
சுந்தரம்.

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 8, 2018, 7:24:31 AM11/8/18
to mint...@googlegroups.com
அருமை நண்பர் திரு துரை.சுந்தரம்.

தங்கள் முயற்சியும், கவனிப்பும், பதிவிடுதலும் மிகவும் சிறப்பு!

வாழ்த்தும் பாராட்டும்!

தீபாவளியன்று திருவலம் கோவிலுக்குச் சென்றேன். பல கல்வெட்டுகள். மங்கியும் மறைந்தும். Sand blast செய்திருப்பார்கள் போலும். தரையில் ஒரு துண்டுக் கல்வெட்டு பதிந்திருந்தது. எவ்வளவு செய்திகளோ!

சொ.வினைதீர்த்தான்

dorai sundaram

unread,
Nov 8, 2018, 7:37:26 AM11/8/18
to mint...@googlegroups.com
பாராட்டுதலுக்கு மிகவும் நன்றி ஐயா.
பல கோயில்களில் இவ்வாறு தூய்மை செய்வதாக நினைத்துக்
கற்களின் மேற்பரப்பைச் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால்,
பல நூற்றாண்டுகளாக வரலாற்றைக் காட்டி நிற்கும் கல்வெட்டுகள்
அழிந்து வருகின்றன. வருந்த வைக்கும் சூழல். 
சுந்தரம்.

N. Ganesan

unread,
Nov 8, 2018, 5:00:00 PM11/8/18
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, dorai sundaram, Sethupathi Sethukapilan, மு இளங்கோவன், kanmani tamil, S. V. Shanmukam
On Thu, Nov 8, 2018 at 3:40 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நூல் வழி காவுதல் என்னும் நல்ல தமிழ்ச் சொல்லை 
அறிந்தேன். காவடியும் காவுதலின் அடிப்படையில் உருவான சொல் என யூகம்
செய்தது  சரியானதாய் அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 
திருவாளர்கள் தேவன், தேமொழி, நூ.த.லோ.சு.  ஆகிய மூவருக்கும் நன்றி.
சுந்தரம்.



அரிய செய்திகள் அமைந்த செப்பேடு. முதல் செப்பேடு கிடைக்கவில்லையா?
முதலில் வடமொழி வாசகங்கள் அமைந்திருக்கும். பிறகு தமிழில் என இந்தியச்
செம்மொழிகள் இரண்டும்.

காவுதல் - கவ்வுதல், (யானை கவளங் கொள்ளல்) ... கோவை:கொவ்வை, பாசி:பச்சை, ... போல.
காவுதடி என்னும் வினைத்தொகை காவடி எனப் பேச்சில் ஆகிவிட்டது,
சிந்து முத்திரைகளில் காவடி உண்டு. கொற்றவையின் புலியை வணங்கும் பூசகன் (அ) அடியார்
பற்றி என் மகர விடங்கர் கட்டுரைகளில் காணமுடியும். 
நீர் எடுப்பதற்கும், பெற்றோரை சுமப்பதற்கும் காவடிகள் பயன்பட்டன. அரிச்சந்திர புராணம்
காந்தியைக் கவர காவடியும் ஓர் காரணம்.

------

கறடிகை என்ற தாளக் கருவி சிறப்பு. இதனை வீரபத்திரர் கூத்துகளில்
கர்நாடகத்தில் கேட்கலாம். Death drums - சாப்பறை ஆக போர்ப்பறை ஒலிக்கும்.
சிவனது விழாக்களில் கரடி என்னும் இவ்வாத்தியம் செண்டை மேளத்தின்
18 வகை தாளவாச்சியங்களில் ஒன்று. அரிக்கோல் ஒன்று கரடிப்பறையின்
தோலைக் கறண்டும். எனவே கரடி(கை). சுடுகாட்டில் சுடலையாடி
நடனத்தைக் கண்டுகளிக்கும் காரைக்காற் பேய் சொன்ன பாடல்களில்
கரடிப்பறை உண்டு. கரடிப்பறை போன்றவற்றை ஒரு குறளில் குறித்தார் வள்ளுவரும்.

யாழ் வகைகளில் - கின்னர மிதுனங்கள் இசைப்பது - மிகப் பழைய பேர்களைப்
பார்க்கிறேன். அவற்றில் கரட யாழ் உள்ளது. கரடியாழ்/கரண்டக யாழ் என்றும் கூறலாம்.
கரடிப் பறை வேறு, கரட யாழ் வேறு. கரடம்/கரண்டகம் = சிரட்டை/கொட்டாங்கச்சி.
கச்சபம் = star turtle. கச்சபி = இந்த யாமை ஓட்டினால் செய்யும் யாழ், கலைமகளுக்குப்
பிரியமான யாழிது, கச்சபம், கச்சபி என்ற பெயர்களையும், கூர்மம், யாமை பெயர்களையும்
ஆராய்தல் வேண்டும். செய்வோம். ருண்ட யாழ், கச்சபி யாழ், சுரை யாழ், கரத யாழ் போல
ஏகதந்தி (ஏக்தாரி) யாழ் தான். Primitive string instruments of India.

இருள்/இருமை = கருமை என்ற சொற்களிலன் தோற்றத்தையும்,
கரட-/கரட்ட > சிரட்டை என்று தமிழில் மாறுதலும் களைதல் > கிளைதல்
இழையில் சொல்லாய்வோம். அப்போது கரடி, கரடிகை என்னும் பறைவகைகள்,
கரட யாழ் பற்றி விளங்கும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 9, 2018, 5:59:28 PM11/9/18
to dorai sundaram, மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Fri, Nov 9, 2018 at 2:26 AM dorai sundaram <doraisu...@gmail.com> wrote:
முதலில் இருக்கவேண்டிய சில ஏடுகளும் (கிரந்த ஏடுகள் என்க) இறுதியில்
இருக்கவேண்டிய தமிழ் ஏடு ஒன்றும் காணப்படவில்லை என்று கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 
குறிப்பிடுகிறார். கிடைத்தவற்றில் முதல் ஏட்டின் 11 வரிகள் சமற்கிருத மொழியில் 
கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. 11-ஆவது வரியின் இறுதியில் “ஸ்ரீகோப்பர” என்னும்
தமிழ்ச்சொல் தொடங்கி 12-ஆம் வரியிலிருந்து இறுதி ஏட்டில் 121-ஆவது வரியில் 
“அறந்தாங்கி  போர்முக வீரனா”  என்பது வரை தமிழ்ப்பகுதி உள்ளது. இவை மொத்தம் 
ஐந்து ஏடுகள். தமிழ்ப்பகுதியில் இன்னும் ஒரு ஏடு இருக்கவேண்டும் என்கிறார். 
வடமொழிப்பகுதியில் நிவந்தம் ஏற்படுத்திய செய்தி மட்டுமே உள்லது; காணாமல் போன
ஏடுகளில் சோழரின் பிரசச்தி இடம் பெற்றிருக்கவேண்டும் என்றும் ஆசிரியர் கூறுகிறார்.

காவடி என்னும் சொல்லையும், தொடர்ந்து பல சொற்களையும் ஆய்ந்து 
அரிய பல செய்திகளைப் பகிர்ந்த கணேசன் ஐயாவுக்கு நன்றி.
சுந்தரம்.




ஆராய்தல் வேண்டும். செய்வோம். ருண்ட யாழ், கச்சபி யாழ், சுரை யாழ், கரட யாழ் போல

தேமொழி

unread,
Nov 9, 2018, 6:11:28 PM11/9/18
to மின்தமிழ்



தனிமடலில் கிடைத்த மறுமொழியொன்று :



காவுதல் என்பது தோளில் சுமத்தல்,   சங்கத்தமிழ்ச் சொல். 

யாழ்ப்பாண வழக்கு -காவுதல் 
சுமத்தல் பேச்சு வழக்கில் இல்லை --இன்று    எழுத்து வழக்கிலே வந்துவிட்டது 
ஆனாலும் எழுத்திலும் பேச்சிலும் காவுதலே வழக்கத்தில்  உள்ளது 
 

dorai sundaram

unread,
Nov 10, 2018, 2:49:24 AM11/10/18
to mint...@googlegroups.com
நன்றி.
ஆனாலும், மக்க்ள் வழக்கில்  இருக்கும் சும்மாடு, சுமை தாங்கிக்கல்
ஆகிய சொற்களை ஒதுக்க இயலாது. 
சுந்தரம்.

--
Reply all
Reply to author
Forward
0 new messages