என் மறுப்புகள்

378 views
Skip to first unread message

kanmani tamil

unread,
May 25, 2020, 8:55:48 AM5/25/20
to mintamil, vallamai
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது. அது பிறரை வருத்தமூட்டுவது போலவும் உணர்கிறேன்.
அதனால் தான் ஒரு தனி இழையில்  என்பாட்டுக்கு ஒவ்வொரு மறுப்பையும் பதிவு செய்தால் மற்றவர் மனம் நோகாமல் ஒரு ஓரமாகப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றுதான் இந்த இழை....
 ///என் யூடியூப் சேனல் பசுமைக்கவிஞனில் உள்ள சங்க சாகரம் தொடரில் நற்றிணை பாடல் எண் 58க்கு காணொளி விளக்க உரை அளித்திருக்கிறேன்.
அதற்கான சுட்டி இதோ ---> https://www.youtube.com/watch?v=misiFadAK2Q
குழுவில் உள்ள பெருமக்கள் இதனைக் கேட்டு கருத்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்/// Dr. கணேசன் pasted in the  string''வவ்வுதல்...... '
10 hrs ago 

ஆர்வத்தையும், உவமையைப் பொருத்தி விளக்கிய திறமையையும் முதலில் பாராட்டியே தீர வேண்டும். 'பறையில் தீட்டிய குருவி மொத்துறுவதுபோல் சேர்ப்பனின் தேரில் பூட்டிய குதிரை மொத்துறுவதாக' என்ற பாடல்கருத்தில் பொதிந்திருக்கும் நுட்பமான காதல் கருத்தை வெளிக்கொண்டு வந்தது தனித்திறமை.

சிக்கல் தோன்றுவது தலைவி காதல் கொண்ட தலைவன் தித்தன் என்று சொல்லிச் செல்வது தான்.
காதலன் 'சேர்ப்பன்' என்று வெளிப்படையாகச் சுட்டுகிறார் புலவர்.
சேர்ப்பன் பரதவர் தலைவன்- அதாவது நெய்தல் திணைமாந்தர் தலைவன். (இது நாம் பள்ளிக்கூடத்தில் பொருளிலக்கணம் பயிலும்போது இலக்கணப் புத்தகத்தில் இடம்பெறும் கருத்து தான்.)
தித்தன் 'வீரை வெளியன் வேண்மான்' என்றும் பாடலில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது....அதாவது வேளிர்குலத் தோன்றல். (தித்தன் உறந்தையைச் சேர்ந்தவன் என்று பட்டினப்பாலையில் செய்தி உள்ளது.) காவிரிக்கரையோர வேளிரின் செல்வ வளம்; பாடல் பேசும் மாலைநேர வருணனையிலும், சிறுவர் தோற்றத்திலும் புனையப்பட்டுள்ளது. தித்தனும், அவனது செல்வமும் பாடலில் இடம்பெறக் காரணம்  அச்செல்வச் சூழலை விளக்கி; அதற்கிடையில் தலைவியின் துன்பத்தைக் கூறுமுகமாக; அவனது தேர் அவனது வாழிடம் நோக்கிச் செல்கிற போது....
ஒரு முரண்பாட்டை உருவாக்கி  அவளது நோயின் வீரியத்தைப் புலப்படுத்துவது தான்.  
மாலைப் பொழுதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும்; தொடர்ந்து எங்கும் ஏற்றப்படும் விளக்குகளும், பனி பெய்யும் பொழுதும்... காதல் நோயைத்  தாங்கமுடியாத தலைவியின் துன்பத்தை மிகுவிக்கின்றன. அவள் தித்தனின் ஊரைச் சேர்ந்தவள்....அவ்வளவே. அவ்வளவு செல்வச் செழிப்பிற்கு நடுவில் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தலைவன் வாய்ப்பளிக்கவில்லை. எவ்வளவு கோபம் வரும்?!
 
ஆற்றாமை மிகுந்தாலும் தலைவன் மொத்துறுவதாக என்று சொல்லிவிட இயலவில்லை; ஆதலால் அவன் குதிரை மொத்துறுவதாக என்கிறாள்.

பேசுவது தோழி என்று சொல்வதன் காரணம்; ஒரு பெண் தன் தாபத்தைக் கூறுவதாகப் பாடல் புனைவது அவளது பெருமைக்கு இழுக்கு என்று கருதும் ஆணாதிக்கப் போக்கு என்று இன்றைய சூழலில் சொல்லத் தயங்க வேண்டியதில்லை.
தலைவி தன்மைப்பன்மையில் பேசுவது போல் எண்ணிப் பார்த்தால் பாடல் இன்னும் சுவை உடையதாகத் தான் இனிக்கிறது.

"செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ? என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.
சக 
   

N. Ganesan

unread,
May 25, 2020, 10:15:21 AM5/25/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 25, 2020 at 7:55 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது. அது பிறரை வருத்தமூட்டுவது போலவும் உணர்கிறேன்.
அதனால் தான் ஒரு தனி இழையில்  என்பாட்டுக்கு ஒவ்வொரு மறுப்பையும் பதிவு செய்தால் மற்றவர் மனம் நோகாமல் ஒரு ஓரமாகப் போய்க் கொண்டே இருக்கலாம் என்றுதான் இந்த இழை....
 ///என் யூடியூப் சேனல் பசுமைக்கவிஞனில் உள்ள சங்க சாகரம் தொடரில் நற்றிணை பாடல் எண் 58க்கு காணொளி விளக்க உரை அளித்திருக்கிறேன்.
அதற்கான சுட்டி இதோ ---> https://www.youtube.com/watch?v=misiFadAK2Q
குழுவில் உள்ள பெருமக்கள் இதனைக் கேட்டு கருத்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்/// Dr. கணேசன் pasted in the  string''வவ்வுதல்...... '
10 hrs ago 

ஆர்வத்தையும், உவமையைப் பொருத்தி விளக்கிய திறமையையும் முதலில் பாராட்டியே தீர வேண்டும். 'பறையில் தீட்டிய குருவி மொத்துறுவதுபோல் சேர்ப்பனின் தேரில் பூட்டிய குதிரை மொத்துறுவதாக' என்ற பாடல்கருத்தில் பொதிந்திருக்கும் நுட்பமான காதல் கருத்தை வெளிக்கொண்டு வந்தது தனித்திறமை.

நிரஞ்சன் பாரதியாரின் கொள்ளுப்பேரன். என் கிளாஸ்மேட்ஸின் மகன். சினிமாப் பாடலாசிரியர். சென்னையில் வளர்ந்த இளைஞர் இவ்வளவு ஆரவமுடன் இருப்பது அரிது. நிரஞ்சனின் அம்மா, “என் மகன் உங்கள் ரசிகன்” என்பார்.

> "செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ?
> என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.

செவ்வரிப்பறை = செ+ அரிப்பறை. உறுமி, பம்பை போன்ற மேளம் என நினைக்கிறேன். தோளில் இருந்து தொங்கவிடப்படுவதைச் சொல்கிறது பாடல். அம்மன் அழைப்பு மேளம்: https://www.youtube.com/watch?v=GECdfLYV-O0
அரிப்பறை மேகலை யாகியார்த்தவே (சீவக. 2688)

அரிக்கோல் - அடிக்காமல், அரித்து (=தேய்த்து) ஒலி எழுப்பும். கர்நாடகாவில் வீரபத்திரருக்கு இசைக்கும் கருவிகளில் கேட்கலாம்.
கறடிகை என்ற தாளக் கருவி சிறப்பு. இதனை வீரபத்திரர் கூத்துகளில்
கர்நாடகத்தில் கேட்கலாம். Death drums - சாப்பறை ஆக போர்ப்பறை ஒலிக்கும்.
சிவனது விழாக்களில் கரடி என்னும் இவ்வாத்தியம் செண்டை மேளத்தின்
18 வகை தாளவாச்சியங்களில் ஒன்று. அரிக்கோல் ஒன்று கரடிப்பறையின்
தோலைக் கறண்டும். எனவே கரடி(கை). சுடுகாட்டில் சுடலையாடி
நடனத்தைக் கண்டுகளிக்கும் காரைக்காற் பேய் சொன்ன பாடல்களில்
கரடிப்பறை உண்டு. கரடிப்பறை போன்றவற்றை ஒரு குறளில் குறித்தார் வள்ளுவரும்.
NG
 

சிக்கல் தோன்றுவது தலைவி காதல் கொண்ட தலைவன் தித்தன் என்று சொல்லிச் செல்வது தான்.
காதலன் 'சேர்ப்பன்' என்று வெளிப்படையாகச் சுட்டுகிறார் புலவர்.
சேர்ப்பன் பரதவர் தலைவன்- அதாவது நெய்தல் திணைமாந்தர் தலைவன். (இது நாம் பள்ளிக்கூடத்தில் பொருளிலக்கணம் பயிலும்போது இலக்கணப் புத்தகத்தில் இடம்பெறும் கருத்து தான்.)
தித்தன் 'வீரை வெளியன் வேண்மான்' என்றும் பாடலில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது....அதாவது வேளிர்குலத் தோன்றல். (தித்தன் உறந்தையைச் சேர்ந்தவன் என்று பட்டினப்பாலையில் செய்தி உள்ளது.) காவிரிக்கரையோர வேளிரின் செல்வ வளம்; பாடல் பேசும் மாலைநேர வருணனையிலும், சிறுவர் தோற்றத்திலும் புனையப்பட்டுள்ளது. தித்தனும், அவனது செல்வமும் பாடலில் இடம்பெறக் காரணம்  அச்செல்வச் சூழலை விளக்கி; அதற்கிடையில் தலைவியின் துன்பத்தைக் கூறுமுகமாக; அவனது தேர் அவனது வாழிடம் நோக்கிச் செல்கிற போது....
ஒரு முரண்பாட்டை உருவாக்கி  அவளது நோயின் வீரியத்தைப் புலப்படுத்துவது தான்.  
மாலைப் பொழுதை அறிவிக்கும் முரசொலியும், சங்கொலியும்; தொடர்ந்து எங்கும் ஏற்றப்படும் விளக்குகளும், பனி பெய்யும் பொழுதும்... காதல் நோயைத்  தாங்கமுடியாத தலைவியின் துன்பத்தை மிகுவிக்கின்றன. அவள் தித்தனின் ஊரைச் சேர்ந்தவள்....அவ்வளவே. அவ்வளவு செல்வச் செழிப்பிற்கு நடுவில் இருந்தாலும் அவள் மகிழ்ச்சியுடன் இருக்கத் தலைவன் வாய்ப்பளிக்கவில்லை. எவ்வளவு கோபம் வரும்?!
 
ஆற்றாமை மிகுந்தாலும் தலைவன் மொத்துறுவதாக என்று சொல்லிவிட இயலவில்லை; ஆதலால் அவன் குதிரை மொத்துறுவதாக என்கிறாள்.

பேசுவது தோழி என்று சொல்வதன் காரணம்; ஒரு பெண் தன் தாபத்தைக் கூறுவதாகப் பாடல் புனைவது அவளது பெருமைக்கு இழுக்கு என்று கருதும் ஆணாதிக்கப் போக்கு என்று இன்றைய சூழலில் சொல்லத் தயங்க வேண்டியதில்லை.
தலைவி தன்மைப்பன்மையில் பேசுவது போல் எண்ணிப் பார்த்தால் பாடல் இன்னும் சுவை உடையதாகத் தான் இனிக்கிறது.

"செவ்வரிப் பறை" என்னும் சொற்றோடரின் பொருள் ஆழம் என்ன ? என்று எனக்கு இன்னும் ஐயமாகவே உள்ளது.
சக 
   

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctubu3d2-A%2BW_8BfTG9S61uqtjf%2BBGUH-9K5q-cMFdL%3Dg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 25, 2020, 10:48:10 AM5/25/20
to vallamai, mintamil
நேற்று தான் வரி = நெல் எனப் பார்த்தோம். 
செவ்வரி = செந்நெல் 
நெல் அறுவடையின் போது பறை கொட்டுவதைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. 
பாடலில் போற்றுவது தித்தனின் உறந்தை வளம்.
அங்கே வயலில் பணியாற்றும் துடியரின் சிறுவர் பொன் அணிகலன் அணிந்து செவ்வரிப் பறையைத் தோளில் கோத்துக் கொண்டு குருவி ஓப்ப; விடாது பறையை ஒலிக்கின்றனர்(அவ்வளவு செல்வவளம்). 
காலமோ...பனி தொடங்கி விட்டது. 
அறுவடை நெருங்கி  விட்டது. 
அதனால் தான் இரங்கல் பொருளில் பாடலும் அமைந்துள்ளது. 
அதை விளையாட்டுப் பறை என்று என்னால் ஏற்க முடியவில்லை.  
நீங்கள் சொல்லும் கரடிப்பறையை அவர்கள் தம் தொழிலைச் செய்யப் பயன்படுத்துவதாக உணர்கிறேன்.  
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd3%3Dz4R8OC%3D6FUsXi1haOWTH0FgGtgJZ-ZpE-CPtDrf1w%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 25, 2020, 10:55:42 AM5/25/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 25, 2020 at 9:48 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நேற்று தான் வரி = நெல் எனப் பார்த்தோம். 
செவ்வரி = செந்நெல் 
நெல் அறுவடையின் போது பறை கொட்டுவதைப் பற்றிப் பல பாடல்கள் உள்ளன. 
பாடலில் போற்றுவது தித்தனின் உறந்தை வளம்.
அங்கே வயலில் பணியாற்றும் துடியரின் சிறுவர் பொன் அணிகலன் அணிந்து செவ்வரிப் பறையைத் தோளில் கோத்துக் கொண்டு குருவி ஓப்ப; விடாது பறையை ஒலிக்கின்றனர்(அவ்வளவு செல்வவளம்). 
காலமோ...பனி தொடங்கி விட்டது. 
அறுவடை நெருங்கி  விட்டது. 
அதனால் தான் இரங்கல் பொருளில் பாடலும் அமைந்துள்ளது. 

அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு.
 

வேந்தன் அரசு

unread,
May 26, 2020, 12:15:23 AM5/26/20
to vallamai, mintamil


திங்., 25 மே, 2020, பிற்பகல் 6:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.


 நானும் எனக்கும்தான். தனிப்பட்டு யாரையும் தாக்கலையே. கருத்துக்கு மாற்று.


தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல் செல்லுவது போல்தான் பாடல்.  பறைக்கண்ணில் உள்ள குருவி அதிர்வதுபோல், குதிரைகளை அடிச்சிவிரட்டிக்கொண்டு வருவானாகுக. 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

kanmani tamil

unread,
May 26, 2020, 12:54:06 AM5/26/20
to vallamai, mintamil
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  

kanmani tamil

unread,
May 26, 2020, 1:06:22 AM5/26/20
to vallamai, mintamil

///தலைவனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தலைவிக்கு தோழி ஆறுதல் செல்லுவது போல்தான் பாடல்.  பறைக்கண்ணில் உள்ள குருவி அதிர்வதுபோல், குதிரைகளை அடிச்சிவிரட்டிக்கொண்டு வருவானாகுக. /// திரு. வேந்தன் அரசு wrote 50 mts.  ago.

தலைவியைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் நல்லெண்ணம் தான் காரணம் என்று கருதுகிறேன்.

பாடலின் இறுதி அடி "ஓடுதேர்" என்று தலைவனின் தேரைச் சொல்வது....பொதுவாக நம்மைத் தேடி வரும் தேரை ஓடுகின்ற தேர் என்று குறிப்பதில்லை. அது நாடி வருவதால் 'நாடுதேர்' / 'தேடு தேர்' /  'வருதேர்' ......இப்படி எத்தனையோ....
இங்கே ஓடுதேர் = நம்மைவிட்டு ஓடுதேர்....பிரிந்து செல்லும் தேர். அதனால் நான் அப்படிப் பொருள் கொண்டேன்.
சக        

kanmani tamil

unread,
May 26, 2020, 2:19:21 AM5/26/20
to vallamai, mintamil
நற்றிணை - 57
///  https://www.youtube.com/watch?v=WpK5kcqCquc /// Dr.Ganesan pasted Niranjan Bharathi's U- tube video  1day ago .

'தலைவியை உடன் அழைத்துச் சென்றுவிடு' என்று தோழி தலைவனை வேண்டும் பாடல் என்பது சரி ; ஆனால் இறைச்சியுடன் கூடிய  உள்ளுறை  உவமம் சரிவரப் பொருத்திக் காட்டப்படவில்லை.
அகப்பாடலைப் பொருத்தவரை எந்த ஒரு சொல்லோ பொருளோ தேவையில்லாமல் இருக்கவே இருக்காது.
திரு. நிரஞ்சன் பாரதி சொல்லும் விளக்கத்தில் எனக்குப் பல முரண்பாடுகள்.

1.) ஆமான் தலைவிக்கு உவமம் எனின் கன்றோடு இருப்பதாகக் காட்ட வேண்டிய தேவை ? 
2.) குரங்கு தலைவனைக் குறிக்கிறது எனின் குட்டியோடு வரவேண்டிய தேவை?
3.) ஆமான் தூங்கப் போகிறது என்று குறிப்பிட்டுச் சொல்வானேன்?
4.) கன்றை ஈன்ற ஆமானின் பாலைக் கறக்க குரங்கு "வீங்கு சுரை ஞெமுங்க" வாங்குவானேன்? (கன்றை ஈன்ற பசுவிடம்  பால்பீய்ச்சும்  எவரும் மடியை  ஞெமுக்குவதில்லையே)
5.) பீய்ச்சிய பாலைக் குட்டிக் குரங்கின் கையில் சேர வைப்பானேன்? பன்றிக்குட்டி பசுவிடம் பால் அருந்துவது போல் படமும் போட்டுவிட்டு.....? 
6.) குரங்குக் கூட்டம் தலைவனின் சுற்றம் எனின்....தலைவி இருக்குமிடம் வரை தலைவன் சுற்றம் வருமா? (அப்படி வருவதாக அகப் பாட்டு ஏதும் உளதா?)
7.) தலைவன் சுற்றம் அகப்பாடல் பாத்திரமாக அமைவதாக அக இலக்கணம் சொல்கிறதா? 
இப்படிப் பல ஐயங்கள் எழுகின்றன.... 

இறைச்சியுடன் கூடிய உள்ளுறை உவமம் :
ஆமான் தலைவிக்கு உவமம்...சரி.
ஆனால் "தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக் 
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்" - என்னும் அடிகள் சொல்லும் கன்று ஆமானின் வயிற்றுக்குள் இருக்கிறது.

ஆமான் இன்னும் ஈனவில்லை; அது கருவுற்று இருக்கிறது..... தலைவி கருவுற்று இருக்கிறாள் .
ஆமானின் மடி பருத்துக் காணப்படுகிறது.....கருவுற்ற பெண்ணின் உடலில் தோன்றும் மாற்றங்கள் தலைவியிடம் காணப்படுகின்றன. அவளது 
                                                                                  மார்பகம் திண்மையாகக் காணப்படுகிறது.
ஆமான் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறது..... கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் நிலையும் இதுவே; தலைவி அப்படித்தான் இருக்கிறாள்.
குரங்குக்கூட்டம் = ஊரார்; தலைவியின் உடற்கூறு மாற்றங்களும் நடவடிக்கையும் பற்றித் தமக்குள் அலர் தூற்றுகின்றனர்....ஐயம் எழுகிறது.
குரங்கு தன் கைகளால் கூட்டத்தின் ஆரவாரத்தை அடக்கிக் குட்டியுடன் ஆமான் அருகே செல்வது ஐயத்தை உறுதிப்படுத்திக் கொள்ள...
ஆமான் கருவுற்றமைக்கு அடையாளம்- சுரப்பு... ஈன்ற பசுபோல இல்லாமல் மடியை ஞெமுக்கிச் சுரப்பு இருப்பதைக் குரங்கு உறுதி செய்கிறது.
குட்டியின் கை நிறையுமளவு (மிகச் சிறிதளவே) பீய்ச்சிக் காட்டும் பொல்லாத குரங்கு போல் ஊர்மக்கள் பொல்லாதவர்....ஆமான் பாவப்பட்டது போல் தலைவி பாவப்பட்டவள்...கள்ளம் இல்லாதவள்....எனவே அவளை உடன் அழைத்துச் சென்றுவிடு.... அவள் கருவுற்று இருப்பதை ஊரார் முன் மறைக்க முடியாது....

கருவுற்ற பெண்ணிடம் தோன்றும் புற மாறுபாடுகளை ஆமானின் மேலேற்றி நாசூக்காக...நாகரிகமாக....நயமாகப் பாடியுள்ளார் புலவர்.
பாடல் பேசும் பொருள் யார் மனதிலும் அசூயை ஏற்படுத்தாதவாறு; தலைவி மேல் இரக்கம் தோன்றுமாறு.... 

தொகைநூல்களின் அகப்பாடல் அழகிற்கும், செறிவிற்கும் நிகர் ஏதும் இல்லை. 
சக      

N. Ganesan

unread,
May 26, 2020, 8:51:14 AM5/26/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.
சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது. )

இன்னொன்று: பறை என்றால் ஃப்ரேம் ட்ரம். நெல் அளக்கும் அளவை. இன்றும் ஒரு காணி வயலுக்கு இத்தனை பறை என்று அளவை கேரளத்தில் உள்ளது. பறை என்ற சொல் நெல் அளவைக்கும்,
தாளக் அருவிக்கும் இருப்பது தமிழ் மொழி ஒன்றிலே தான். இதனைப் பெண்கள் தான் முழக்கத் தொடங்கினர் என்பது சுமேரிய சிற்பங்களில் காண்கிறோம். பெண்ணியம் கோலோச்சிய காலத்தில்,
மெர்லின் ஸ்டோன் எழுதிய When God was a Woman நூலைப் படிக்கலாம். அதில் இந்த சிறுபறை என்னும் செவ்வரிப் பறை பற்றி அறியமுடியும்.
பிள்ளைத்தமிழ் பருவங்களில் சிறுபறை ஆண்களுக்கு என்றிருந்தாலும், ஆண்டாளும் ”இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா எற்றைக்கும்”
பறை என்பதற்கு அருமையாக ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் வியாக்கியானங்கள் செய்துள்ளார்கள்.

மீன் என்பது நீர் உயிரிக்கும், வானத்து மீன்/தேவருக்கும் ஒரே சின்னமாக தமிழர் சிந்துவெளியில் எழுதுதல் போல,
பறை என்ற சொல்லும், வரி (நெல்லை)யின் அளவைக்கும், ப்ரேம் சட்டகத் தாளக்கருவிக்கும் பெயர் ஆக உலக மொழிகளிலே
வருதல் தமிழ் ஒன்றுதான். மீன், கால், கை - சின்னங்கள் குறிப்பிடுவன பற்றி விரிவாக :
இன்னொன்று:
சிந்துவெளியில் வேளாளர்கள் “மருவிய புள்” - domesticated fowl - கோழி. கிரேக்கர்களுக்கும், ஈரானியர்களுக்கும் எப்போதும் போர் (இப்போதும்).
இந்தியாவில் இருந்து மருவியபுள் கோழியினை ஈரானியர் வாங்கினர். அவர்களின் பிரியானி பற்றிச் சொன்னேன் (அதில் வரி/வ்ரீகி என்னும் நெல் இருக்கிறது).
சேவல் கொக்கரிக்கும். இதனை ஈரானில் இருந்த் கிரேக்கர் பெற்றனர். கிரேக்க முதுகலை எழுதிய தாழிகளில் வீரர்கள் சித்திரங்களை அதியற்புதமாக
எழுதியிருப்பர். அதில் யவனவீரன் கைக் கவசங்களில்/கேடயங்களில் சேவல் இருக்கும். வாரணப் போர் என்கிறானே கம்பன். அதுதான். கி.மு. 800 வாக்கில்
எழுதிய ஜாடிகள் (ஜாடி/சாடி < தாழி. கோழி > கோடி; தாழை > Toddy போல).  மரா யானை = non-domesticated elephant = wild elephant (அகநானூறு.)
அதைவைத்து மருவுபுள் = வளர்ப்புப் பறவை (கோழி) .

ஆண்டாள் வைத்த சிறுபறை போல, இந்தச் செல்வர் விளையாடும் வரிப்பறையில் குருவி வரைந்துள்ளது கிரேக்கர்கள் கவசங்களில் எழுதிய சேவலை
நினைவுபடுத்தும். காந்தார நாட்டில் தான் முருகன்/சுப்பிரமணியன் முதலில் கலைவடிவம் பெறுகிறான். அவன் கோழிக்கொடி (அதாவது, திடம்பு/பேனர்)
கையில் வைத்திருப்பான். காரணம் தெளிவு.

நா. கணேசன்
     திணை : நெய்தல்.
     துறை : இது, பகற்குறிவந்து நீங்குந் தலைமகன் போக்கு நீக்கித் தோழி மாவின்மேல் வைத்துச் சொல்லியது.
     (து - ம்.) என்பது, பகற்குறியின்கண்ணே தலைமகளை யத்துய்த்த தோழி, தலைமகன்பாற் சென்று அவனை 'இற்றைநாள் இங்குத் தங்கிப் போவா' யென்றலும், அவன் உடன்படாமை கண்டு 'அவனது செலவை நீக்குமாறு மாலைப்பொழுதிலே தனித்து வருந்தும்படி எம்மைக் கைவிட்டுப் பெயருஞ் சேர்ப்பன் ஏறுகின்ற தேர்க்குதிரைகள் ஒறுக்கப் படுவனவாக' வென்று குதிரைகளின்மேல் வைத்து வரைவுடன்படக் கூறாநிற்பது.
     (இ - ம்.) இதனை, 'என்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல்-கள- 23) என்னும் விதியின்கண் அன்புதலையடுத்த வன்புறை' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
    
பெறுமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர் 
    
சிறுதோள் கோத்த செவ்வரிப் பறையின் 
    
கண்ணகத் தெழுதிய குரீஇப் போலக் 
    
கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ 
5
வீரை வேண்மான் வெளியன் தித்தன் 
    
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின் 
    
வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக்  
    
கையற வந்த பொழுதொடு மெய்சோர்ந்து 
    
அவல நெஞ்சினம் பெயர உயர்திரை 
10
நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் 
    
ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே. 
     (சொ - ள்.) வீரை வேள்மான்வெளியன் தித்தன் முரசு முதல் வெள் கோடு இயம்ப நுண்பனி அரும்ப மாலை விளக்கின் - 'உறையூரின்' கண் அரசாண்ட, வீரைவேண்மான் வெளியன் என்னும் தித்தனுடைய முரசு முதலியவற்றோடு வெளிய சங்குகள் ஒலியாநிற்பச் சிறிய பனியுண்டாக வரிசையாக எடுக்கப்பட்ட விளக்குகளுடனே; கொளீஇய கையற வந்த பொழுதொடு - சென்று எதிர் கொள்ளுகின்ற பிரிந்துறை மகளிர் செயலறும்படி வந்த மாலைப்பொழுதிலே; மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர - மெய் சோர்ந்து வருந்திய மனத்தேமாகிப் பெயர்ந்து போகும்வண்ணம்; உயர்திரை நீடுநீர்ப் பனித்துறைச் சேர்ப்பன் - ஓங்கி யெழுகின்ற அலைகளையுடைய நீண்ட நீர்வடிவாகிய கடலின் குளிர்ந்த துறையையுடைய சேர்ப்பனது, ஓடு தேர் நுண் நுகம் நுழைத்த மா - ஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்திற் பூட்டப்பட்டுச் செல்லுகின்ற குதிரைகள் தாம்; பெறும் முது செல்வர் பொன் உடைப் புதல்வர் - முற்செய்த தவத்தாற் பெற்ற முதிர்ந்த செல்வரின் பொன்னணிகளையுடைய புதல்வர்; சிறுதோள் கோத்த செவ்அரிப் பறையின் கண் அகத்து எழுதிய குரீஇப் போல - சிறிய தோளில் மாட்டிய செவ்விதின் ஒலிக்கும் பறையின் கண்ணில் எழுதிய குருவி அடி படுதல் போல; கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் - கோலைக் கொண்டு அடிக்க அதனாலே துன்பப்படுவனவாக !; எ-று.
     (வி - ம்.) பெருமுதிரென்ற பாடத்திற்குப் பெரிய முதிர்ந்த என்றவாறு.
     கோயிலகத்து மாலையில் வாச்சியமொலிப்பித்தலை அம்மாலையை எதிர் கோடலாக உபசரித்தார். நுண்பனியரும்பு மாலையெனவே கூதிர்ப்பொழுதெனக் கருதலானே, இரவிடைமுயக்கம் இன்றியமையாதாயிற்று. இரவில் வெளிப்படையாகத் தங்கவேண்டின் வரைந்தன்றி இயலாமையின் வரைவுதோன்றக் கூறியதாயிற்று. மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - குறிப்பினால் வரைவுகடாதல்.
     (பெரு - ரை.) முரசு வெண்கோடுமுதல் இயம்ப மாலைக் கொளீஇய விளக்கின் பொழுது என இயைத்து வரிசையாக ஏற்றப்பட்ட விளக்கினையுடைய பொழுது என்றும் பொருள் கூறுதலாகும். கொளீஇய-கொளுத்திய; ஏற்றப்பட்ட.


 

திங்., 25 மே, 2020, பிற்பகல் 6:25 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எந்நேரமும் பிறர் சொல்வதை எதிர்த்து எதிர்த்துப் பேசுவதுபோல் எனக்குப் படுகிறது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcu801RENhuSga6jUk%3DDosTeM4Cpoy2vDK7jSHDT4WLScQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 26, 2020, 4:38:39 PM5/26/20
to மின்தமிழ், vallamai



On Tuesday, May 26, 2020 at 11:10:32 AM UTC-7, N. Ganesan wrote:


On Tue, May 26, 2020 at 12:33 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Tuesday, May 26, 2020 at 5:51:16 AM UTC-7, N. Ganesan wrote:
On Mon, May 25, 2020 at 11:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அரிப்பறை அரிக்கோல் கொண்டு தேய்த்திழுத்தால் ஏங்கும். சிறந்த அரிப்பறை = செவ்வரிப்பறை. ஏங்கும் ஒலி ஆனதால் இரங்கற் குறிப்பு/// Dr.Ganesan wrote 13 hrs. ago.

பாடற்பொருளோடு பொருந்தவில்லையே?அவனை மொத்த வேண்டும் என்று சொல்லக் காதல்மனம் இடம் தராததால் குதிரையை மொத்த வேண்டும் என்கிறாள். அதற்கு உவமை குருவி படம் போட்ட பறையை அடித்தல்; தேய்த்து இழுத்து ஏங்கும் அரிப்பறை எப்படிப் பொருந்தும்?
எனக்கு இது செந்நெற்பறை ; அறுவடையை எதிர்நோக்கி இருக்கும்  காலமும் பொருந்துகிறது.
சக  


அரிப்பறை என்று அரிக்கோலால் இழுத்து ஏங்கும் பறை - கரடிகை, இதனை வீரபத்திரர் திருவிழாக்களில் இன்றும் கேட்கலாம். இது ஒருவகை நெய்தற்பறை.  நெய்தற் பறை பற்றித் திருக்குறள் ஒன்று உண்டு.
அது பொருந்தாது என்று இப்பாடலில் நீங்கள் கூறுவது பொருந்தமாக இருக்கிறது. ஏற்கிறேன். சந்தோஷம். நற்றிணைப் பதிப்பாசிரியர் அரிப்பறை என்றே கொள்கிறார்.
அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.
தெலுங்கப் பறை அருந்ததியர்களின் பறை. விஜயநகர காலத்தில் தெலுங்கப்பறை தமிழகம் வந்து சேர்ந்தது. இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.


///இப்போது ஓக்லகோமா பெண் போன்றோர் முழக்குவது இதுவே.///

என் மறுப்பு .....

முனைவர் கணேசன் இனி குறிப்பிடுகையில் ஓக்லகோமா பேராசிரியர் எனக் குறிப்பிடவும். 

என் மறுப்பு:
நாம் ஓக்லகோமா பெண் என்று குறிப்பிட்டது, அவ்வாறு யுட்யூபில் இருப்பதால்.


On Tue, May 26, 2020 at 3:19 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
முனைவர் கணேசன்; 
எந்த இடத்தில் நீங்கள் சுட்டுவது போலக் குறிப்பிடப்படுகிறது. 
நக்கீரன் நெறியாளர் பேராசிரியை என்றுதானே குறிப்பிடுகிறார் !!!!


ஓக்லகோமா பெண் தப்பட்டை அடிபதைக் கற்றுக்கொண்டுள்ளார்.
அவரது பேட்டியின் ஆரம்பமே அதைத் தான் காட்டுகிறது:
’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
இதிலும் அவர் பெண் என்றே குறிப்பிட்டுள்ளனர். நான் பார்த்த அளவிலும் அவர் பெண் என்றே தெரிந்தது.

நீங்கள் இந்த அமெரிக்க ஓக்லகோமா பெண்ணை சந்தித்ததுண்டா?
வரும் ஆண்டில் ஓக்லகோமா சென்று சந்திக்க உள்ளேன், எங்கள் அண்டை மாநிலம் தான்.
அடிக்கடி டல்லாஸ் வருகிறார்.
amerikka_peN_Zoe_tappaTTai.png
நீங்கள் இங்கே வந்தாலும், இந்த ஓக்லகோமா பெண்மணியைச் சந்திக்கலாம்.
டல்லஸில் தான் இந்த வாரம் இருக்கிறேன்.

தெலுங்கப் பறை என்னும் தப்பட்டை பிரபலம் ஆக்குவதில் நண்பர் ஃசோ
அவர்களின் பணி பெரிது. சென்ற பொங்கல் விழாவில் டல்லஸுக்கு
அழைத்தனர். சென்றிருந்தோம். அப்போது பல தமிழ் நண்பர்கள்,
“ஐயா, ஓக்லகோமா பெண்மணி நம்ம ஊர் தப்பட்டையை நல்லா அடிக்கிறாங்க”
என்றார்கள். எனக்கு அவரை தெரியும் என்றேன். அரிய ஓக்லகோமா பெண்.
பெண் பிள்ளைத்தமிழில் சிறுபறை இருக்காது. தப்பட்டை முழக்கும் பணி
பெண்கள் தமிழ்நாட்டில் இனிச் செய்வர். ’தமிழில் பாடி பறை அடிக்கும் அமெரிக்க பெண்’
என நக்கீரன் போன்ற பிரபல பத்திரிகைகள் பரப்புவதால் இவ் வேலைவாய்ப்பு அமையும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 26, 2020, 6:20:13 PM5/26/20
to மின்தமிழ், vallamai
தேமொழி>video  thumbnail படத்தில் இருப்பது மரியாதை தரும் வகையில் இல்லை,  ஆனால் ஊடகங்களிடம் அதற்கு மேல் எதிர் பார்க்க முடியாது. 
பொதுமக்கள் கவனத்தைக் கவர உருவாக்கப்பட்டவை அவை .. ஆனால் அது உங்களுக்கு ஒரு பேராசிரியரை  எப்படியும் பொதுவெளியில் குறிப்பிடலாம் என்று வழி வகுக்கவில்லை.

எனக்கு புரியவில்லை. டல்லாஸில் அவர் இருக்கும்போது, தமிழர்கள் பலர் “அண்ணா, அமெரிக்கா பொம்பளை (பெண், பெண்மணி) ஒருவர் தப்பட்டை வாசிக்கிறாங்க” என்றார்கள். இது தவறா? பெண்ணை பெண் என்று சொல்லக்கூடாதா? அவர் ஓக்லகோமா பெண். ஆனால், அமெரிக்க பெண் என்று நக்கீரன் போன்ற
பத்திரிகைகள் சொல்கின்றன.

இந்த ஓக்லகோமா பெண்மணியை தப்பிசை வாசிக்க டல்லஸ், ஹூஸ்டன், ஆஸ்டின், ... நகர தமிழ் சங்கங்களைச் செய்யலாம். ‘ ’தமிழில் பாடி தப்பட்டை அடிக்கும் ஓக்லகோமா பெண்மணி” ப்ரபசர் வருகிறார் என அழைப்பிதழ் அனுப்பலாம். கலிபோர்னியா தமிழ் சங்கங்களில் வரவேறு அளிக்கச் செய்யுங்கள்.தமிழ் பேசுகிறார்.
வீரமா முனிவர் போன்றோர் நண்பர் ஃசோ பேசியது மாதிரிப் பேசியிருப்பார்கள் என தோன்றுகிறது.

NG

N. Ganesan

unread,
May 27, 2020, 9:13:52 AM5/27/20
to மின்தமிழ், vallamai
On Wed, May 27, 2020 at 6:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
/// அரிப்பறை வேறு, வரிப்பறை வேறு என இப்பாட்டால் தெரிகிறது. செவ்வரி = செந்நெல் என்கிறீர்கள்.  இந்த செந்நெற் பறை உறுமி/பம்பை போல இருந்திருக்கும்.....சங்க இலக்கியப் பறை வேறு (துடுமு/துடும்பு என இடுப்பில் கட்டி இருப்பது. முரசு அதனினும் பெரிது.) ///  Dr.Ganesan wrote 17 hrs.ago.

இல்லை; முனைவர் கணேசன் அவர்களே .
செந்நெற் பறை உறுமி/ பம்பை போல இருந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தப் பறையை சிறுவர் தோளில் சேர்த்திருக்கின்றனர்.....அது கோலால் அடிக்கப்படுவது....நற்றிணைப் பாட்டு குதிரையை அடிப்பது பற்றித் தான் பேசுகிறது....அதுவும் குருவி படம் போட்டுப் பறவைகளை விரட்டுவதற்குரியதாக..... 
 
தோளில் கோத்து, கோலால் அடிக்கப்படும் உறுமி உண்டே. அதனால் குறிப்பிட்டேன்.
இங்கே பாருங்கள்: உறுமி மேளம் https://www.youtube.com/watch?v=M962XYIwsZo
அரிக்கோலால் தேய்த்தும், மறுபக்கம் அடிகோலால் அடித்தும் உறுமி இசைக்கப்படுகிறது. வரிப்பறை = நெற்பறை, இந்த அரிப்பறை (அரிக்கோல், அடிக்கோல் கொண்ட உறுமி) தானா என்பது கேள்வி.

மேலும், வரிப்பறை = நெற்பறை என்பது அருமை. பெருமழைப்புலவர் பொருள் விளங்காப்பாடல் என்று கூறும் ஒரு பாடலுக்கு, இந்த செந்நெற் பறை எனப் பொருள் கொண்டால் பொருள் சிறக்கும். அப்பாட்டில்,
வட்டமாக இருக்கும் வரிப்பறையின் கண்ணில் எழுதிய “குருவி” பெயருமிருக்கிறது. வடமொழியில், நெல்லம் வயல்களில் இருக்கும் இப்பறவை பெயர் வருதற்கு இச் சங்கப்பாடல் தாதுவேர் காட்டும்.
தனியிழையில் அப்பாடலைப் பார்ப்போம்.

---------------------------------

ஃபாதர் பிரிட்டோ தப்பட்டை இசையை பெண்களிடையே பரப்பினார் என்பது அறிய மகிழ்ச்சி. அந்த தெலுங்கப் பறையை, தப்பிசையை, முன்னெடுத்து வருகிறார் முனைவர் ஃசோ (Zoe) இங்கே ஓக்லஹோமாவில்.

சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் பறை - யாழ்ப்பாணத்திலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் உள்ளது. அது துடும்புடன் சேர்ந்து திருவிழாக்களில் வாசிப்பது.
அடிமுறை மாற்றி, சாப்பறை ஆகவும் வாசிப்பதுண்டு. இந்த நெய்தற்பறை திருவள்ளுவரால் குறிப்பிடப்படுகிறது. நெய்தல் திணைத் தெய்வதம் வருணனுக்கானது.
டிரம்ஸ் சிவமணி அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் எந்த நிகழ்ச்சிக்கு எம்முறையில் பறை அடிப்பது என விளக்கினார்.

மட்டக்களப்பில் சங்க இலக்கியத்தில் கூறும் பறை இங்கே:
பறையும் துடும்பும். உட்கார்ந்து வாசிக்கின்றனர் யாழ்ப்பாணத்தில்:
நின்று வாசிக்கும் போது, இடுப்பில் கோத்து வாசிப்பது.
புகழ் மிக்க மாங்குடிகிழார் பாட்டில் வரும் துடி, பறை இரண்டும் இவை எனக் கருதுகிறேன்.
துடி = துடும்பு என இக்காலத்தில் சொல்கிறோம். ”துடியன் பாணன் பறையன் கடம்பனென்று” - மாங்குடி கிழார்.
ஒருமுறை, ஊரில் இருந்தபோது தினமலரில் மடத்துக்குளம் பகுதியில் வாசிக்கும் பறை என எழுதினர்.
ஈழத்தீவில் வாசிக்கும் பறை, துடி அமைப்பு முக்கியமானவை.

ஃசோ, ஃபாதர் பிரிட்டோ, ... போன்றோர் பிரபலப்படுத்தி வருவது தெலுங்கப்பறை ஆகிய தப்பட்டை/தப்பாட்டப் பறை.
தமிழ்நாட்டுக்கு விஜயநகர காலத்தில் அருந்ததியர் கொணர்ந்த தாளக் கருவிவகை.

நா. கணேசன்
 

காலம் ரொம்பவே மாறிவிட்டது.
தொண்ணூறுகளில் நான் பணியாற்றிய பெண்கள் கல்லூரியில் நாட்டுப்புறவியல் சான்றிதழ் வகுப்புகளை பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியிலுள்ள நாட்டுப்புறவியல் துறையின் உதவியோடு நடத்தினோம். நிறைவு விழாவிற்கு அக்கல்லூரியிலிருந்து ஒரு குழுவினர் வந்து நாட்டார் நிகழ்த்து கலைகளை மேடையில் ஆடிப்பாடிப் பறைமுழக்கிக் கொண்டாடுவர். அக்குழுவிலேயே பெண்களும் சேர்ந்து ஆடிப்; பறை முழக்குவர். இப்போது அந்தத்துறை இருக்கிறதா? என்று தெரியவில்லை. மறைத்தந்தை பிரிட்டோ அந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி மிக மிக நுட்பமான செய்திகளை எல்லாம் சொல்வார்; அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது...20ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது. ஆனால் பெண்கள் தொண்ணூறுகளிலேயே பறைமுழக்கி ஆடினர் என்பது உறுதி.

பொதிகை தொலைக்காட்சியில் மாலை நிகழ்ச்சிகளில் பெண்கள் பறை முழக்கி ஆடுவதைப் பார்த்திருக்கிறேன்..

2013-2014- நான் பணியாற்றிய கல்லூரியில் தேசீய தரநிர்ணயக்குழுவை வரவேற்க என் மாணவர்களைக் கொண்டு பறையாட்டம் நடத்த வைத்தேன்; வடநாட்டு விருந்தினர் மிகவும் ரசித்தனர். வாயாரப் புகழ்ந்தனர். அவர்களில் ஒருவர் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடைய முனைவர் ஆனந்த் சர்மா...'எங்கள் பக்கம் மாணவர் கலைநிகழ்ச்சி என்றாலே சினிமாப் பாட்டுக்குரிய ஆட்டம் தான் இருக்கும். இங்கே சினிமாப்பாட்டே இல்லாமல் ஒருமணி நேரம் கலைநிகழ்ச்சிகள் நடத்தியது  கல்லூரியின் தரத்தைக் காட்டுகிறது ' என்று புகழ்ந்தார். 

இங்கே இப்போது பல பள்ளிகளில் பறையிசை வகுப்புகள் நடைபெறுகின்றன. யாரும் விகற்பமாக எண்ணுவதில்லை.
என் பேரன் பயிலும் பள்ளியிலும் பறைவகுப்பும் ஆடல்பயிற்சியும் உண்டு. என் பேரனும் பறை அடித்து ஆடப் பயில்கிறான்.
ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் அந்தப் பள்ளி முதல்வர் ஒரு பறைநிகழ்ச்சி ஏற்பாடு செய்து; அவரே நடுவில் நின்று ஆடவும் செய்வார்.  அவரது பறை சிறிய அளவினதாக இருக்கும்; இடுப்பில் கோத்திருப்பார். பிள்ளைகள் அடிக்கும் பறை நீங்கள் சொல்லும் தெலுங்கப்பறை என்று எண்ணுகிறேன். தப்பாட்டம் என்று சொல்வார்கள். அந்த நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகள் பலர் சேர்ந்து பறை அடித்து ஆடுகின்றனர்; இணைப்பில் காட்டியிருக்கிறேன்.  
சக 

தப்பாட்டம் ஆடும் டாக்டர் ஃசோ, ஓக்லஹோமா, அமெரிக்கா 
amerikka_peN_Zoe_tappaTTai.png

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 28, 2020, 12:38:25 PM5/28/20
to mintamil, vallamai
/// On Thu, Apr 30, 2020 at 12:39 AM Niranjan Bharathi <niranjan...@gmail.com> wrote:
அனைவருக்கும் வணக்கம்,
2000 ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்தில் வெளவால்கள் கூட இடம்பெற்றிருந்தமை பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.
கொரோனா தொற்று கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் வெளவால்கள் மீது வெறுப்பு ஓங்காமல் அன்பே ஏற்பட வேண்டும் என்னும் நோக்கத்தில்  நற்றிணையின் 87ஆவது பாடலை என் சேனல் பசுமைக்கவிஞன்-இல் விளக்கி காணொளி பதிவேற்றியிருக்கிறேன்.
அந்தக் காணொளிக்கான சுட்டி இதோ -->  https://www.youtube.com/watch?v=50vjTS0xwpU/// Dr.Ganesan pasted on 25th may in the string 'வவ்வானி.......'  

நற்றிணை - 87
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு		5
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலே
சுட்டியில் இடம்பெற்ற செய்தியில் நான் கொண்ட மறுப்பு பின்வருமாறு:
தலைவியின் கூற்றாக அமையும் இப்பாடலில் அழிசியின் காடு சுட்டப்படுகிறது. இதனால் தலைவியின் காதலன் அழிசி என்று முடிவு செய்யக் கூடாது. ஏனெனில் பாடலின் ஆழமான பொருளைச் சரிவரப் புரிந்துகொள்ளும்போது இத்தகைய வரலாற்றுக் குறிப்புகள் ஒரு நோக்கத்துடன் எடுத்தாளப்பட்டு உள்ளமை அறிகிறோம்.  
அகப்பாடலில் தலைவியின் பெயரும் தலைவனின் பெயரும் சுட்டாமல் பாடும் நாகரிகம் செவ்விலக்கியத்தில் உள்ளது என்பதைப் பெருமைக்குரிய செய்தியாக இன்றுவரை கூறி மகிழ்பவர் நாம்.

'உள்ளூர் மாமரத்தின் உயர்ந்த கிளையிலே தொங்கிக்கொண்டு தூங்கும் கூர்மையான பற்களை உடைய வவ்வால்; அத்தூக்கத்திற்கிடையில் வெகு தூரத்தில் உள்ள சோழன் அழிசியின் காட்டில் விளையும் நெல்லிக்கனியைச் சுவைத்து உண்பதாகக் கனவு காண்பதைப் போல நானும் கண்டேன்; அது பலிக்காதது போல என் கனவும் பலிக்க வாய்ப்பில்லை போல் தெரிகிறது.' என்கிறாள் தலைவி. 
வவ்வாலுக்கு தான் தூங்கும் மரத்திலேயே இனிய மாங்கனி கிடைக்கும் எனினும் அதன் ஆசை எல்லாம் நெல்லிக்கனியின் மேல் தான். அந்த தூரத்து இனிமையின் அளவையும், ஆசையையும் குறிக்க அழிசியின் காடு ஒரு கருவியாகப் பயன்பட்டு உள்ளது.

இதே இழையில் நற்றிணை 58ல் தித்தனின் உறந்தை இடம்பெறுவது....வளத்தை விவரித்துத் தலைவியின் மனச்சோர்வோடு ஒப்பிட்டு ஒரு முரண்பாட்டைப் புலப்படுத்தி உணர்வு வெளிப்பாட்டிற்குத் துணைசெய்யும் உத்தியாகப் பயன்பட்டுள்ளது எனக் கண்டோம்.    
    
அதுபோல கைக்கெட்டும் மாங்கனியை விட மிக நீண்டதூரத்தில் உள்ள நெல்லிக்கனியை விரும்புகிறது என்னும் கருத்திற்கு அழுத்தம் கொடுக்கவே அழிசியின் காடு (உரையாசிரியர் ஆர்க்காடு என்கிறார்.) இப்பாட்டில் இடம்பெறுகிறது.

மாங்கனியைக் காட்டிலும் நெல்லியை விரும்பக் காரணம் என்ன என்று புரிந்து கொள்ளும் போது தான் தலைவியின் மனநிலையைத்  துல்லியமாகப் புரிந்துகொள்ள இயலும்.
மாங்கனியில் இனிமை மிகுதி; அதை உண்ணும்போது அச்சுவையை அறிந்துகொள்ள இயலும். எந்த மாங்கனி ஆனாலும் உண்டபிறகு நீர் அருந்தினால் வாயில் இனிமை நிற்காது; துவர்ப்பு தான் மிஞ்சும்.
நெல்லிக்கனியில் புளிச்சுவையை இயன்றமட்டும் ரசித்து உண்ணலாம்; ஆனால் உண்டபின்னர் நீர் அருந்தினால் வாயில் இனிமையை உணரலாம். திகட்டாத அந்த இணையற்ற இனிப்பிற்காக மீண்டும் நெல்லியை உண்ணத் தோன்றும். நெல்லியின் இந்த இனிப்பு மாங்கனியில்  இல்லாத  சிறப்பு. இது தான் வவ்வால் நெல்லியை உண்பதுபோல் கனவு கண்டமையின் ஆழமான உட்பொருள்.

இங்கே தலைவி தன் வாழிடத்தில் மன்றம், மாமரம், மக்கள், இனிய வாழ்க்கை எல்லாம் இருப்பினும்; நெல்லி போன்ற நிரந்தரச்சுவை தலைவனை மணந்தால் தான் அவளுக்குக் கிடைக்கும். அது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்குக் குறைகிறது. அது மட்டுமல்ல.....

'பெரிய அடிமரத்தை உடைய புன்னையின் பனித்துளி போன்ற அரும்புகள் உதிர்ந்து சிதற; அடியில் மேயும் சிப்பிகளின் மேல் வீழ்ந்து அவற்றின் புறத்தோற்றத்தை நிறம் மாற வைக்கும் கடல்துறை அருகில் தலைவனின் நாடு உள்ளது; அங்கு பரதவர் எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்; அவ்விடம் பகல்பொழுதிலும் மிகுந்த குளிர்ச்சியை உடைய பெருமை கொண்டது. தலைவி வாழும் ஊரினின்று மிகுந்த தூரத்தில் உள்ளது'.

இந்தச் சிப்பிகள் எவ்வாறு நிறம் மாறித் தோன்றுகின்றனவோ அப்படியே தலைவியும் பிரிவில் மேனி நிறம் மாறிப் பசலை படர்ந்து மெலிந்திருக்கிறாள். புன்னையின் மகரந்தம் சிப்பியின் நிறம் மழுங்கக் காரணம்; அதுபோல் தலைவன் பிரிந்துள்ளமை தலைவியின் துன்பத்திற்குக் காரணம் ஆகிறது என்பது உள்ளுறை.
தன் சொந்த ஊரில் தலைவிக்குக் கிடைக்கும் வசதியும் வாழ்வும் மாங்கனிச்சுவை போன்றதே; அது எதிர்காலத்தில் இனிமை பயக்காது.
தலைவனுடன் இணைந்து நடத்தும் இல்லறமே அவள் கனவின் எதிர்பார்ப்பு....நெல்லி போன்ற எதிர்கால இனிமை.
தன் காதல் இல்லறமாகத் தொடரவேண்டும் என்ற கனவு பலிக்குமா? என்று ஆற்றாமையில் புலம்புகிறாள் தலைவி.  
சக      

kanmani tamil

unread,
May 30, 2020, 12:59:40 PM5/30/20
to mintamil, vallamai

/// ஔவையார் சேரமன்னர் வரலாறு நூலில் வானி என்ற பெயரை நன்கு விளக்கியுள்ளார்.
ஒளவை சு.து. என்று சுட்டுவதே சரி; ஒளவையார் என்று சுட்டுவது   வருங்கால சந்ததிக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.     
 பாலக்காட்டுக் கணவாய்க்கு வடக்கே உள்ள வடபெருங்கோட்டில் (Cf. cilampu) உற்பத்தியாகும் நதிகள் பல வானி எனப்பெயர்பெறும். 
கர்நாடகாவில் வானியாறு ஹோனவாறு (சாராவதி) ஓடுகிறது. தக்க்ஷிண-உத்தர கன்னட மாவட்டங்களைப் பிரிப்பது 
தென் கன்னடத்தில் மேற்கு நோக்கி ஓடுவது வானவாறு; இன்றைய ஹோனவார்... ஷீராவதி என்னும் பெயர் சேரவாறு என்பதன் மரூஉ .
இவ் வானியாறு. வானவன் என்னும் சேரனால், மலை பெயர்பெற்றது.
வானவாற்றை எல்லையாகக் கொண்டு ஆண்டமையால் சேரன் வானவரம்பன் எனப்பட்டான். எனவே  சேரனால் மலை பெயர்பெறவில்லை. வானமலையில் தோன்றியது வானவாறு. 'வானிவரம்பன்' என்ற பெயர் சேரனுக்கு இல்லை என்பது நோக்கத்தக்கது. இதிலிருந்து என்ன தெரிகிறது? சேரர் முதலில் காலூன்றிய நிலப்பரப்பு மேலைமலைக்கும் மேலைக்கடலுக்கும் இடையில் இருந்த நிலப்பகுதி என்பது உறுதிப்படுகிறது..    
வானசாஸ்திரத்தை வடக்கே இருந்து கொணர்ந்தவர்கள் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் /// Dr.Ganesan wrote on 25th May in the string  வவ்வானி...
சேரன் வானசாஸ்திரத்தைக் கொண்டுவரவேண்டிய தேவை இருக்கவில்லை. (வானியல் தொடர்பான ஒரு கொள்கையை....- one among the two schools of thought...?)  திணைமாந்தர் ஆழமான வானியல் அறிவு கொண்டு திகழ்ந்தனர் என்பதற்குத் தொகைநூல்களில் வழங்கும் தூய தமிழ்ப் பெயர்களே சான்று. 27நாள்மீன்களுக்கும் தமிழ்ப்பெயர்கள் உள்ளன. அத்தனையும் காரணப்பெயர்கள். (தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ப்பெயர்த்தொகுதி & தமிழாகிய பெயர்த்தொகுதி இரண்டும் வழக்கில் இருந்திருக்க வாய்ப்புண்டு. 'திங்களும் நாளும்' என்று பொதுவாகச் சுட்டிய காரணமும் இதுவாகலாம்.) தொகைநூல்களில் ஓரளவு தமிழ்ப் பெயர்களே கிடைக்கின்றன; ஆய்வாளர் நிகண்டுகளின் துணை கொண்டு பிற தமிழ்ப் பெயர்களை எடுத்துக்காட்டுகின்றனர். இன்று நாம் வழங்கும் பெயர்கள் தமிழாகிய பெயர்கள். ஒருவேளை அவனால் தமிழாகிய பெயர்த்தொகுதி பெருவழக்கிற்கு வந்திருக்கலாம்.
 சக    

kanmani tamil

unread,
May 31, 2020, 10:50:09 AM5/31/20
to mintamil, vallamai
நற்றிணை 341. மதுரை மருதனிள நாகனார்
    திணை : குறிஞ்சி.
தவறு; முல்லைத்திணை. தலைவன் பாசறையில் இருக்கிறான். தலைவியைப் பிரிந்து இருக்கிறான்
பாடலில் குன்றக்குறவன் இடம் பெறுகிறான் என்பதற்காக திணை = குறிஞ்சி என்று சொல்லக் கூடாது. 
இது மலைப்புறத்துக்காடு; உரிப்பொருளை  அடிப்படையாக  வைத்தே திணையை அறுதியிட வேண்டும்.
குன்றக்குறவன் இங்கே கருப்பொருள் தான். திணைமயக்க விதியின்படி இடம்பெற்று உள்ளான்.
   
துறை : இது, வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.
தவறு; தலைவன் ஆற்றி இருக்கிறான்; தன் தலைவியை நினைத்து ஏங்குகிறான். 
வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
துணைநன் குடையள் மடந்தை; யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம் தமியேம் பாசறை யேமே.
இப்பாடல் காட்சியில் பாசறை அமைந்த ஒரு காட்டுப்பகுதி இடம்பெற்று உள்ளது. போர் வேந்தனுக்கும் வேளுக்கும் இடையில் நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாவது 'வரிப்பறை' பற்றிய உவமை. 
பாடலில் குன்றக்குறவனும் அவனது மனைவியும் 'பால்' மடுத்துள்ளனர்; அதாவது சாராயம் குடித்துள்ளனர். (திணைமாந்தர் சமுதாயத்தில் இது ஏற்றுக்கொள்ளப் பட்டது. முருகு அயரும்போதும் சுற்றத்தோடு சேர்ந்து தேறல் மாந்தியதாகத் தான் திருமுருகாற்றுப்படை சொல்கிறது.) 
சிறு மயக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சில சுற்றத்தோடும் சேர்ந்து (கிளை = சுற்றம்) விளையாட்டும் சிரிப்புமாகக் குழறித் தன் தலைவனோடு  
(துணை= கணவன்); அவனுக்கு மட்டுமே புரியும் கேலிப் பேச்சில் ஈடுபடுகிறாள். (இங்கே கூட்டுக்குடும்பக் காட்சி புனையப்பட்டுள்ளது. சுற்றத்தார் அருகு இருந்தாலும்; தலைவனும் தலைவியும் தமக்கு மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய அந்தரங்கப் பேச்சு= குறுநொடி) இந்த இல்லற இனிமை முல்லைத்திணைக்கு உரியது. இந்த இன்பநிலையுடன் தலைவன் தன் நிலையை ஒருங்கு எண்ணி முரண்படுத்திப் பார்க்கிறான். 
'தன் தலைவியைப் பிரிந்து (துணையிலேம்); ஆறாத சினம் காரணமான போருக்காக; மழை பொழியும் கூதிர் காலத்தில்; காட்டாறு 
பெருகும் கரையில்; பகலா? மாலையா? என்று சொல்லமுடியாத பருவத்தில்; (வடக்கிலிருந்து வீசும் = வேறுபுல) வாடைக்காற்று  
துன்பத்தை மிகுதிப்படுத்த; தனிமையில் வாடுகிறேனே'  என்பது தலைவனின் தவிப்பு. 

முனைவர் கணேசன் சொல்வதுபோல் தந்தை தமையனுடன் தலைவி குறுநொடி பயிலவில்லை; அப்படிப் பேசுவதும் அழகல்ல. பாடலில் இரண்டு துணை இடம்பெறுவதே ஒப்பீட்டிற்காகத் தான். முதல் துணை = குன்றக்குறவன்- மடந்தையின் கணவன். 
இரண்டாவது துணை = பாசறையில் பிரிந்து இருக்கும் தலைவனின் மனைவி (எவ்வளவு அழகு! வாழ்க்கையில் துணை- கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஆவர் என்ற கருத்து இடம்பெறும் பாடல் இது.)

பின்னத்தூரார் குன்றக்குறவனின் மனைவி (போதையில்) கிளையை ஒடித்துப் பேசுவதாகச் சொல்வது பொருளை மேம்படுத்தவும் இல்லை; சூழ்நிலைக்குப் பொருத்தவும் இல்லை.
சக       

வேந்தன் அரசு

unread,
Jun 1, 2020, 3:24:25 AM6/1/20
to vallamai, mintamil
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.

ஞாயி., 31 மே, 2020, பிற்பகல் 8:20 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcs%3DT%3D48NgB0hHoWA5CLT-HzkGPTz%3DeE-PtTrraoY1KTuA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Jun 1, 2020, 5:02:46 AM6/1/20
to vallamai, mintamil
எல்லாக் காதலனும் நாடன் இல்லை. சான்றாக ஐங்குறுநூறில் மருதப்பாடல்களின் தலைவன் ஊரன். (திணைமாந்தன் / கிழான்). 

நாடன் வேறு; ஊரன் வேறு என்பதைப் புறநானூறு தெளிவாக வரையறுக்கிறதே.
"நாடன் என்கோ; ஊரன் என்கோ 
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ"  

எல்லாக் குறவனும் தந்தையுமில்லை.
இங்கே தலைவன் ஆற்றி இருக்கும்போது அவன் நிலையுடன் தந்தைமகள் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் பலனில்லை. தனித்திருக்கும் தலைவன் தன்னைக் குடும்பம் / இல்லற இனிமையுடன் ஒப்பிடும் போது தான் ஏக்கவுணர்வும், பொருட்சிறப்பும் மேம்படும்.

போதையில் இருக்கும் தந்தையிடம் மகள் குறுநொடி பேசினாள் என்பது.......
அபத்தமாகத் தோன்றுகிறதே.    
சக 
On Mon, 1 Jun 2020 12:54 pm வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்கு.றவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

N. Ganesan

unread,
Jun 1, 2020, 7:21:33 AM6/1/20
to மின்தமிழ், vallamai
On Mon, Jun 1, 2020 at 2:24 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.

அப்படித்தான் நான் பொருள்கொண்டேன். குறுநொடி கூறித் தன் ஐயுடன் விளையாடுவதாகக் கொண்டேன். காரணம் அந்தக் காலத்தில் மிகச்சிறு வயதிலே கலியாணம் ஆகிவிடும். அச் சிறுமி (10 வயசு) சாராயம் குடித்த தந்தை ஆகிய குறிஞ்சிக் கிழவனிடம் விளையாடுகிறாள். பின்னத்தூரார் வாக்கில் இருந்து மாறுபட்டேன். கண்மணி அவர்கள் விளக்கம் பின்னத்தூரார் சரியாய்க் கூறியிருக்கிறார் என எண்ண வைக்கிறது. பின்னத்தூரார் இளமையிலே காலமாகிவிட்டார், அவரை மிக மதிப்பவர் தி. வே. கோபாலையர் எனக் கேள்விப்பட்டுள்ளேன் (ஃழான், ...). பரணர் 20-ஆம் நூறாண்டில் பாரதி போல, சங்க கால ஜர்னலிஸ்ட். பரணர் கூறும் வேளாண் சமுதாயச் செய்தி, நற்றிணை 310-ல் உண்டு:  http://nganesan.blogspot.com/2012/12/310.html   தும்பி சொகினனார்,  தும்பி சோகீரனார் (புறம் 249) என்ற புலவர் பெயர்களில் உள்ள பிரச்சினையை பின்னத்தூரார் எழுதிய பின்னர்தான், பாடலின் கருத்து வடக்கே யிருந்து வேளிர் நாகரீகம் பராவல் (உ-ம்: மழுவாள் நெடியோன், ப்ராமி வருகை) தும்பி சேரகீரனார் எனத் துணிய முடிகிறது.

பின்னத்தூரார், " குறவனொடு நொடி பயிற்றலும் பிறவுங் கணவனைப் பிரிந்தார்க் கின்மையின் ஈண்டுத் தன் காதலியைக் கூறியதல்லாமை தெளிக."மடந்தை என்பது வேறு பெண். மடந்தை மகிழ்ச்சியாய் இருக்கிறாள். ஆனால் தலைவனைப் பிரிந்த தலைவி துன்புற்று இருப்பாள் என்கிறார் பி. நா. ஐயரவர்கள். கண்மணி கூறும் கூற்றும் மடந்தை-குறிஞ்சிக் கிழவன் ஜோடி வேறு; தலைவன் தலைவி ஜோடி வேறு என்பதாக இருக்கிறது. எனவே, என் உரையில் சற்று மாற்றினேன். முன்பு குறளில் சொற்கள் வெவ்வேறு பொருள் தருமிடங்கள் கேட்டீர். தந்தேன். அதுபோல, இக்குறளில், துணை என்பது இருவேறு பொருளில், இரண்டு பெண்களைப் பற்றியதாக கண்மணி கூறுகிறார். இருக்கலாம். https://groups.google.com/forum/#!msg/vallamai/jakjvKFiiQE/shHUSwfaAAAJ

நா. கணேசன்

 

image.png







வேந்தன் அரசு

unread,
Jun 1, 2020, 8:59:15 AM6/1/20
to vallamai, mintamil


திங்., 1 ஜூன், 2020, பிற்பகல் 2:32 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
எல்லாக் காதலனும் நாடன் இல்லை. சான்றாக ஐங்குறுநூறில் மருதப்பாடல்களின் தலைவன் ஊரன். (திணைமாந்தன் / கிழான்). 

நாடன் வேறு; ஊரன் வேறு என்பதைப் புறநானூறு தெளிவாக வரையறுக்கிறதே.
"நாடன் என்கோ; ஊரன் என்கோ 
பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ"  

எல்லாக் குறவனும் தந்தையுமில்லை.
இங்கே தலைவன் ஆற்றி இருக்கும்போது அவன் நிலையுடன் தந்தைமகள் நிலையை ஒப்பிட்டுப் பார்ப்பதில் பலனில்லை. தனித்திருக்கும் தலைவன் தன்னைக் குடும்பம் / இல்லற இனிமையுடன் ஒப்பிடும் போது தான் ஏக்கவுணர்வும், பொருட்சிறப்பும் மேம்படும்.

போதையில் இருக்கும் தந்தையிடம் மகள் குறுநொடி பேசினாள் என்பது.......
அபத்தமாகத் தோன்றுகிறதே. 

குறிஞ்சி நிலத்துக்காதலனை (திணையல்ல) "குறவன் " என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன். அவன் குன்ற நாடன், கல்நாடன், வரைநாடன், மலைநாடன் என்றுதான் சொல்லப்படுகிறான். ( குன்றநாடன் மகள் என்றும் வரலாம்)

அவ்வை அதியனுடன் கள் அருந்தியவர்தானே.

மடந்தைக்கு  துணையாக பலவும் உள்ளன.. நானோ தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளில் பாட்டு . 
 


N. Ganesan

unread,
Jun 1, 2020, 9:04:57 AM6/1/20
to மின்தமிழ், vallamai
On Mon, Jun 1, 2020 at 6:23 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Mon, Jun 1, 2020 at 2:24 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
காதலி தன் இல்லத்தில், அருவியாடியும் கள்ளுண்டும், குன்றக்குறவனோடு (தந்தை) அளவளாவியும் மகிழ்ந்து இருக்க்க நான் பாசைறையில் தனிமையில் இருக்கிறேன் என்ற பொருளை நான் கொள்வேண். திணை நெய்தல்.

குறவன் காதலன் அல்லன். காதலனை நாடன் என்பர். குறவன் என்றால் தந்தை, மலைவாழ்குடியினன்தான்.

வேந்தர் சொல்வது ஒருவாறு பெருமழைப்புலவர் கூற்றை ஒக்கும்:

"இதன்கண் மடந்தை என்றது பிறள் ஒருத்தியை என்று கோடல் சிறப்பாகத் தோன்றவில்லை. ஒருவாறு மடந்தை (தலைவி) யேனும் இல்லத்தின்கண் குன்றக் குறவனொடு நொடிபயிற்றும் துணையுடையள். அஃதாவது நம் குன்றிற்கு உரிமையுடையோனாகிய நம் புதல்வனோடு நொடி பயிற்றும் துணையொன்றைனயுடையள் என்றவாறென்க.."

மடந்தை என்றால் தலைவி என்றே எடுத்து, குன்றக்குறவன், சிறுகுழந்தை என்கிறார் பெருமழைப்புலவர். ஆனால், சாராய ஜாடியைத் திறந்து குடித்துக் கொண்டிருக்கும் புதல்வனைத் தடிகொண்டு அல்லவா அம்மா அடிப்பாள்?
எனவே, பின்னத்தூரார் கூறும் குறவன் - மடந்தை ஜோடி வேறு எனக் கொள்ளல் பொருந்துகிறது.

kanmani tamil

unread,
Jun 2, 2020, 12:04:56 AM6/2/20
to vallamai, mintamil
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago. 
"குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?
சக 

kanmani tamil

unread,
Jun 2, 2020, 12:31:39 AM6/2/20
to vallamai, mintamil
இது என் பொதுவான மடல்.
தனிப்பட யாருக்கும் குறிப்பிட்டு எழுதும் பதில் இல்லை.

எனக்கு அவ்வப்போது இப்படி ஒரு இடம் தேவைப்படுகிறது.
இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
இல்லையென்றால் திட்டி விடுவேனோ? கோபத்தைக் கொட்டி விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது. 

என்ன மனப்பான்மை!
ஒரு கணவன் பணி நிமித்தமாக மனைவியைப் பிரிந்து இருக்கும்போது அவளை நினைத்துப் பார்க்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத...... 
இது தானே ஆணாதிக்க மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு.
நேற்று முழுவதும் அமைதி காத்த காரணம்; என் சினம் அடங்கட்டும் என்பது தான்.

பத்து வயதுப்பெண் போதையிலிருக்கும் தந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்... கணவனுக்குக் குடும்ப நினைப்பு வரும்... அது தான் நற்றிணை- 341ன் தலைவனுக்கும் வந்தது என்று கூறுகின்றனர்.

ஏன்? மனைவியின் நினைப்பு வந்தால் தலைவன் தாழ்ந்து விடுகிறானா?
இன்று..... பணி நிமித்தம் பிரிந்திருக்கும் எந்த ஆணுக்கும் மனைவி நினைவு வருவதில்லையா?
கடமை முடிவதற்கு முன்னால் மனைவி பற்றிய நினைவு வருவது பாவமா?....ஒழுக்கக்கேடா?
மனைவி பற்றிய நினைவு இருந்தால் கடமையாற்ற முடியாதா?
ஒழுக்கமான ஆண்மகன் பணி நிமித்தம் பிரிந்திருக்கும்போது மனைவியை மறந்து குடும்பத்தை நினைக்க இயலுமா?

அயலூரில் பணியிலிருக்கும் பெண்கள் எல்லோரும் கணவனை மறந்து விடுகிறார்களா?
அப்படிமறந்து விடுவார்களானால் ஆண்கள் அதுகுறித்துக் கொள்ளும் நிலைப்பாடு என்ன?

திருக்குறள் காமத்துப்பால் பற்றிய உரைகளிலும் இதே ஆணாதிக்க மனப்பான்மை விளையாடி உள்ளதைப் பார்க்கிறேன்.
சக 

kanmani tamil

unread,
Jun 2, 2020, 12:34:04 AM6/2/20
to vallamai, mintamil
குரவர் = தலைவர் 
தந்தையையும் குறிக்கும்.

சைவ சமய குரவர் நால்வர் = சைவ சமயம் சார்ந்த தலைவர் நால்வர் 

இருமுது குரவர் = மாமனார் & மாமியார் (சிலப்பதிகாரம்) 
சக 

kanmani tamil

unread,
Jun 2, 2020, 2:17:14 AM6/2/20
to mintamil, vallamai
குறவர் - குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களுக்கு உரிய பொதுப்பெயர். 

அங்கு வாழும் தந்தை, தமையன், காதலன் முதலிய எல்லா ஆண்களும் குறவர் தாம். 

இந்தக் காலம் பாசிஊசி விற்கும் குறவர் என்று நினைத்து விடக் கூடாது. 

அவர்கள் தேன் எடுத்தனர்.  வேட்டை ஆடினர். தினை விளைத்தனர்.
சக  

On Tue, 2 Jun 2020 10:08 am Sathivel Kandhan Samy, <sat...@msn.com> wrote:
தங்கள் நற்றிணைப் பாடல் பொருள் காண்டலில் குறவர் என்கிற சொல்லுக்கு தந்தை என்று சொல்லப்பட்டுள்ளதே

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Jun 2, 2020, 6:34:23 AM6/2/20
to மின்தமிழ், vallamai


On Mon, Jun 1, 2020 at 11:29 PM Sathivel Kandhan Samy <sat...@msn.com> wrote:

குரவர் - ஐம் பெருங் குரவர் ஆணை; .   குறவர் என்பது தந்தை என்கிற பொருள் தருமா?  

தராது. குரவர் < guru என்னும் வடசொல்.  துரை வடசொல்; தமிழ்ச்சொல் துறை.
(1) துரை/துறை, (2) குரவன்/குறவன் : வட, தென் சொற்கள்.
லகுவுக்கு எதிர்ப்பதம் குரு. > குரவர். சமணத் துறவியரை குரத்தி எனக் கல்வெட்டுக்களில் காண்கிறோம்.
மிகப் பொருள்பொதிந்த நாடுகாண்காதையில் கவுந்தி அடிகள் என்னும் குரத்தியரை வட பெருங்கோட்டில்
சென்று சிராவகன் கோவலன் கண்ணகி தம்பதியர் சந்திக்கின்றனர் (சிலம்பு).

குறவன் : குறிஞ்சித்திணைவாசி, எனவே, வள்ளிக் குறத்தி. குறவருக்கு குறிஞ்சியில் வேட்டை தொழில். எனவே
வள்ளிக் குலம் வேடுவர். அவள் வேடுவச்சி என்பதும் உண்டு. இன்றும் வேட்டுவர் பலருண்டு.
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப்புக்கு நின்று
        குருவி ஓட்டித் திரிந்த தவமானைக்
   குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்து
       குமரகோட்டத்தமர்ந்த பெருமாளே''
('அறிவிலாப்பித்தன்' திருப்புகழ்).

குறத்தியைக் கைத்தலம் பற்றியதால் (பாணிக்கிரகணம்) முருகனுக்கும் ஒரோவழி குறவன் என்ற பேருண்டு.
முருகனுக்கு வள்ளி அவள் பெற்றோரால் வார்க்கப்பட்டவள் (> வாக்கப்பட்டவள்).
குற்றாலக் குறவஞ்சியில் குறவனின் முதல் வேட்டை: https://www.hindutamil.in/news/spirituals/99116--1.html

NG

வேந்தன் அரசு

unread,
Jun 2, 2020, 9:05:16 PM6/2/20
to vallamai, mintamil


செவ்., 2 ஜூன், 2020, முற்பகல் 9:34 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago. 
"குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?
சக 

குறவன் தலைவியின் தந்தை.  காதலன் அல்லன் .

 

வேந்தன் அரசு

unread,
Jun 2, 2020, 9:15:24 PM6/2/20
to vallamai, mintamil


செவ்., 2 ஜூன், 2020, முற்பகல் 10:01 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
இது என் பொதுவான மடல்.
தனிப்பட யாருக்கும் குறிப்பிட்டு எழுதும் பதில் இல்லை.

எனக்கு அவ்வப்போது இப்படி ஒரு இடம் தேவைப்படுகிறது.
இயல்பாக மூச்சுவிட வேண்டும்.
இல்லையென்றால் திட்டி விடுவேனோ? கோபத்தைக் கொட்டி விடுவேனோ? என்று பயமாக இருக்கிறது. 

என்ன மனப்பான்மை!
ஒரு கணவன் பணி நிமித்தமாக மனைவியைப் பிரிந்து இருக்கும்போது அவளை நினைத்துப் பார்க்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத...... 
இது தானே ஆணாதிக்க மனப்பான்மையின் முதல் வெளிப்பாடு.
நேற்று முழுவதும் அமைதி காத்த காரணம்; என் சினம் அடங்கட்டும் என்பது தான்.

பத்து வயதுப்பெண் போதையிலிருக்கும் தந்தையோடு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால்... கணவனுக்குக் குடும்ப நினைப்பு வரும்... அது தான் .- 341ன் தலைவனுக்கும் வந்தது என்று கூறுகின்றனர்.


மடந்தை என்றால் பத்துவயதுப்பெண்ணா?
சங்கப்பாடல்களில் , திருக்குறளில் , காதலியை மங்கை என்றுகூட சொல்லுவதில்லை. மடந்தை, அரிவை , தெரிவை மட்டுமே 

வேந்தன் அரசு

unread,
Jun 4, 2020, 12:59:45 PM6/4/20
to vallamai, mintamil
தெலுங்குமொழியில் வங்க/ஒங்க  என்றால் ஓடை, ஆற்றுப்பள்ளம்.


புத., 3 ஜூன், 2020, முற்பகல் 6:45 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Nov 19, 2020, 12:50:43 PM11/19/20
to vallamai
நற்றிணை - 310
 விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே.
(சொ - ள்.) விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க - விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய, களிற்றின் - யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; உண்துறை மகளிர் இரியக் குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு - நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே - இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரோடு உடன் ஒழிபு - மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ வல்லைக் கன்று பெறு வல்சிப் பாணன் கையது வள் உயிர்த் தண்ணுமைபோல - நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள் யாதும் இல்லது ஓர் போர்வைச் சொல் - உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லலை கொல் - சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? எ-று.
(வி - ம்.) தாமரை அதன் மலருக்கு ஆகுபெயர். யாதுமில்சொல் பயனற்ற சொல். தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.
பரத்தை நயக்குமாறு வேண்டும் பொய்ம்மைகூறிப் புணர்ப்பித்தலின் தொலைந்த நாவினென்றாள். பிறர் அறியாதவாறு மந்தணமாகக் செய்தமைத்தலிற் குறுமொழியென்றாள். இழிதகவு கருதாது முதியோரையும் புணர்க்கும் இயற்கையையென்பாள், தாயரொடு சொல்லலை கொலென்றாள். நின் பயனற்ற சொல் பரத்தையர்க்கும் அவரன்னையர்க்கும் ஏற்பதன்றி இங்குப் பயன்படாதென்பதாம்.இறைச்சி :- வாளைமீன் தாமரைவருந்த மகளிர் இரிந்தோடக் குண்டு நீரில் வெடி பாய்ந்து பிறழுமென்றது, தலைமகன் யாம் வருந்தக் காமக் கிழத்தியர் இரிந்தகல விருந்தாக நீ புணர்த்திய புதிய பரத்தையிடத்தே சென்று தங்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.
***************************************************************************************************************************************************************************** 
இப்பாடல் குறித்த கருத்து முரண்பாடுகள் அடிக்கடி பேசப்படுவது தான்.
பாடலில் பாணன் பெறுவது கன்றா? களிறா? என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை; ஏனென்றால் கன்றைக் கூலியாகப் பெற்ற வேளாண் இனத்தவரும் இருந்தனர் என்பது என் கருத்து. இன்றும் நான் பிறந்த ஊரில் ஒரு கூட்டத்திற்கு 'கன்னுதின்னி' என்று பெயர் உள்ளது. அதற்கு என்ன தான் அவர்கள் வேறு காரணம் கூறினாலும் அது தம்மை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் கட்டும் கதை என்று தான் சொல்வேன். 

என் மறுப்பு உள்ளுறை உவமம் தொடர்பானது.
பாடலில் உள்ளுறை இடம்பெறும் பின்புலத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உண்ணுநீர்த் துறை; அத்துறையில் விளக்கின் சுடர் போல நிற்கும் தாமரை; அத்தாமரையின் பச்சை இலைகள் ஆண்யானையின் செவிகள் போல அகன்று நீர்ப்பரப்பில் தோன்றுகின்றன. பெண்கள் துறைக்கு வந்து உண்பதற்குரிய நீரை எடுத்துக் கொண்டு உள்ளனர். அப்போது வாளைமீன் நீருக்கு மேலே பாய்ந்து விழுகிறது. இது கண்ட பெண்கள் மிரண்டு ஓடுகின்றனர். வாளை மீன் குதித்து விழுந்த வேகத்தில் தாமரை இலைகள் அலைபடுகின்றன.

நீர்த்துறை = செல்வம் மிகுந்த (கூட்டுக்)குடும்பம் 
உண்ணு நீர்த்துறை = கேளிரைத் தாங்கும் வளமான குடும்பம்
நீரெடுக்க வந்த பெண்கள் = தலைவனும் தலைவியும் நடத்தும் இல்லறத்தில் இரந்து பெற்று வாழும் கேளிர் 
விளக்கு போன்ற தாமரை = குடும்ப விளக்கு போன்ற தலைவி (குடும்பத்தலைவி)
தாமரையின் பசிய இலைகள் = குடும்பத்தின் கிளைஞர் (பங்காளிகள்; அதாவது அவர்களும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்)
ஆண்யானையின் செவிகள் போன்ற அகன்ற இலை = விரிந்த தலைக்கட்டுகள் உள்ள; எண்ணிக்கை மிகுந்த கிளைகளின் கூட்டம்
வாளைமீன் = பரத்தை
மீன் துள்ளி விழுதல் = பரத்தையின் அத்து மீறிய ஆட்டம் 
இலைகள் அலைதல் = பங்காளிகள் கூட நிலை தடுமாறுகின்றனர்
பெண்கள் மிரட்சி = பரத்தை ஆடும் கூத்தைப் பார்த்துக் கேளிர் ஒதுங்குகின்றனர்

என்னதான் வாளைமீன் துள்ளி விழுந்தாலும் இலைகள் மட்டும் தான் அலையும். தாமரை ஆடும்; அலையாது. ஏனென்றால் இலையின் தண்டை விடப் பூவின் தண்டு வலுவாக இருக்கும். பரத்தை, அவளது ஆட்டம் இதற்கெல்லாம் தலைவி சோர்வடையாது மனத்திண்மையோடு இருக்கிறாள். ஏனென்றால் அவள்தான் குடும்பத்தலைவி; அந்தத் தகுதி அவளுக்கு மட்டுமே உரியது. அதற்கு ஒருபோதும் ஆபத்து நேராது; ஏனென்றால் குடும்ப அமைப்பு அந்த அளவுக்குக் கட்டுக்கோப்பானது. 

அதனால் தான் தோழி நக்கலாகக் கேட்கிறாள்; 'நீ இன்னும் புதிதாக ஒரு பரத்தையைத் தலைவனுக்குக் கொண்டுவந்து சேர்த்தாலும் உன் சொல்லும் செயலும் உள்ளீடு இல்லாத தண்ணுமையின் ஒலி போன்றது (அதனால் தலைவியின் நிலை தாழப் போவதில்லை). வேண்டுமானால் அப்பரத்தையின் தாயோடும் பேசி உன் தொழிலைத் தொடர்வாயாக' என்கிறாள்.  

பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரத்தையர் தலைவனின் வீட்டிற்கு வந்து துணங்கை ஆடி அவனை மகிழ்வித்தனர் என்பதற்கு பாடல் சான்றுகள் உள்ளன (கலித்தொகை- 70).
குடும்பத்தில் இல்லறத்தான் கடமைகளாக கிளைஞர் பேணலும்; கேளிர் தாங்கலும் கருதப்பட்டன (அகம்.- 93).
மகப்பேறு பெற்ற தலைவியர் எல்லோரும் முதுபெண்டிர் ஆவர்.அவர்கள் இல்லறப் பொறுப்புகளைச் செய்யக் கடம்பட்டு இருந்தனர் (குறுந்தொகை - 325).

சக    
 



  
 
 
      

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Sakthivelu Kandhasamy

unread,
Nov 19, 2020, 1:45:32 PM11/19/20
to vall...@googlegroups.com

அரிய பாடலை அறிய வைத்தமைக்கு நன்றி.   ‘விளக்கு’  - பொருள் பொதிந்தச் சொல்.  

 

Sent from Mail for Windows 10

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcu1XwGuLc%3DmBQ0nXaF2AiEtvyp_XaTEYD8HHu2HOYKQLw%40mail.gmail.com.

 

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2020, 9:29:11 PM11/19/20
to vallamai
கன்றுபெறு வல்சி:உரித்து தின்றலென்பது தவறான பொருள். அம்மா'வின் அரசு மக்களுக்கு, ஆடு கொடுத்தது. உரித்துத்தின்ன அல்ல.வளர்த்து, விற்று வருமானம் பெற.

வியா., 19 நவ., 2020, பிற்பகல் 11:20 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcu1XwGuLc%3DmBQ0nXaF2AiEtvyp_XaTEYD8HHu2HOYKQLw%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 19, 2020, 9:39:43 PM11/19/20
to vallamai
நன்றி 
சக 

kanmani tamil

unread,
Nov 19, 2020, 9:48:40 PM11/19/20
to vallamai
கன்று பெறு வல்சி = உணவிற்காகக் கன்றைப் பெற்ற...
என்று பொருள் கொள்கிறேன் ஐயா 
சக  

N. Ganesan

unread,
Nov 20, 2020, 12:50:19 AM11/20/20
to vallamai, housto...@googlegroups.com
On Thu, Nov 19, 2020 at 8:48 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கன்று பெறு வல்சி = உணவிற்காகக் கன்றைப் பெற்ற...
என்று பொருள் கொள்கிறேன் ஐயா 
சக  

வேளாண்மையில், சேங்கன்று என்னும் காளைக் கன்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தேவை
உலக முழுமையும் இருக்கிறது. இதனை, விவசாய நூல்களில், கால்நடை வளர்ப்பு பற்றிய செய்திகளில்
காணலாம். பல ஆண்டுகளுக்கு முன் காட்டியுள்ளேன். பெருநிலக் கிழார்கள் பொலிகாளைகளை வைத்துப்
பராமரிக்க இயலும். 32 அறங்களுள் ஒன்று: பொலிவிடுதல் (ஏறு விடுதல்). 

பழைய மடல்களில் இன்னும் விரிவாகச் சொல்லியுள்ளேன்.
2008-ல்:

கொளு:
(வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது;
விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.)


கபில பரணர்' என்னும் தொடரால் சங்கச் செய்யுள்களின்
சிறந்த கவிஞர்களைப் பாராட்டுதல் பழைய மரபு.
பிரபல எழுத்தாளர் சுஜாதா நற்றிணைச் செய்யுள் 310-க்கு விளக்கவுரை
தனது அம்பலம்.காம் (www.ambalam.com) வலைத்தளத்தில் அளித்துள்ளார்.
அதனைப் பார்ப்போம்:

"விளக்கைப் போலச் சுடர்விடும் தாமரை
யானைக்காதைப் போன்ற அதன் பச்சைஇலை
கொண்ட குளத்தில் வாளை மீன்கள் துள்ள
அதைக்கண்டு பயப்படும் பெண்கள் கொண்ட ஊரனுக்கு
தினம் ஒரு பெண் கேட்கிறதோ? முட்டாள் பெண்ணே!
எப்போதும் பொய்பேசுமே உன் நாக்கு!
அந்தப் பரத்தையரின் தாய்களோடு பேசி மயக்கவில்லையோ!
ஆண்கன்றை அவசரமாக உரித்துத் தின்னும்
பாணன் கையில் உள்ள மத்தளம் போல
உள்ளே எதுவும் இல்லாத போர்வை உன் பேச்சு!"

வல்லை = விரைந்து அவசரமாக என்பதில் இருந்து“கன்றை உரித்துத் தின்றல்” என்னும் பொருள் உறுதியாகிறது.சேங்கன்று என்போம். சேங்கன்று = ஆண்கன்று 
  பின்னால் இவ்வழக்கம் அப்பர், ஆழ்வார்கள், மாணிக்கவாசக சுவாமிகள்
(திருக்கோவையார்) போன்றவற்றிலும் குறிக்கப்படுகிறது.  

NG

 

On Fri, 20 Nov 2020, 7:59 am வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:
கன்றுபெறு வல்சி:உரித்து தின்றலென்பது தவறான பொருள். அம்மா'வின் அரசு மக்களுக்கு, ஆடு கொடுத்தது. உரித்துத்தின்ன அல்ல.வளர்த்து, விற்று வருமானம் பெற.

விற்றால் உரித்துத் தின்னத்தான். விற்காமல், உரித்துத் தின்றலும் நிறைய.

Virus-free. www.avg.com

kanmani tamil

unread,
Nov 20, 2020, 6:58:20 AM11/20/20
to vallamai
வேந்தர் ஐயா;
கன்றை இனாமாகக் கொடுப்பது செவ்விலக்கியக் காலக் குடும்பத் தலைவன்; பரத்தமை பூண்டவன். 

அம்மா அரசோடு அதை ஒப்பிடவே இயலாது. 

பாணன் பரத்தையைக் கூட்டிக் கொடுத்தமைக்காக இங்கு இனாம்  மாதிரி தான் கன்றைப் பெறுகிறான். 

ஒரு வேளாண்மைச் சமுதாயத்தில் தகாத ஒழுக்கத்திற்குத் துணை நின்றமைக்காகப் பசுங்கன்றை எப்படி தானமாகக் கொடுப்பர்?

கோதானம் கொடுப்பது புண்ணியத்திற்காகத் தானே!
பாணனுக்குப் பசுங்கன்றைக் கொடுத்தாலும் புண்ணியம் சேர்க்க முடியாது. 

அதனால் அது காளைக்கன்று தான். 
உரித்துத் தின்னாமல் பாணன் காளைக்கன்றை வைத்து என்ன தொழில் செய்வான்?
என்ன தொழில் செய்ய முடியும்?
அவனது பாரம்பரியம் இசை& தூண்டில் போட்டு மீன் பிடிப்பது மட்டுமே. 
அதுவும் வருணத்தார் வந்தேறிய பிறகு வாழ்வின் விளிம்புநிலைக்குச் சென்றதால் தான் அவன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளான். 
அவனது இசைத் தொழிலுக்குத் தேவை தோல் தானே. 

அப்படியிருக்க அவன் கன்றைத் தின்னவில்லை என்று சொல்லி எதை நிறுவ முயல்கிறீர்கள்?
செவ்விலக்கியக் காலத்தில் இந்துத்துவமும் இல்லை. 

சக 


kanmani tamil

unread,
Nov 20, 2020, 8:13:35 AM11/20/20
to vallamai
வல்லை = விரைந்து 
சரிதான்; அதற்காக பாணன் கன்றை உண்டமைக்கு அச்சொல் ஆதாரமாகி விடாது. 
'வல்லை' என்பது வினையடையாக  உள்ளது. அது ஒரு வினையைச் சிறப்பிப்பதாகவே  அமைய இயலும். 

"கன்று பெறு வல்சிப் பாணன் கையதை 
வள்ளுயிர்த் தண்ணுமை" யின் செயலுக்கு உரிய அடை அதுவாகும். 

பாணன் தண்ணுமையை எவ்வளவு வேகமாக அடிப்பானோ; அவ்வளவு வேகமாக விறலி பேசுகிறாள். 

ஆனால் தண்ணுமையில் எவ்வாறு உள்ளீடு இல்லையோ; அதேபோல் விறலியின் பேச்சிலும் பொருட்சிறப்பே இல்லை. அது காரியம் சாதித்து இனாம் பெறுவதற்குரிய வெற்றுப் பேச்சு; பயனே கிடையாது. 

அதனால் தான் 'இத்தகைய பேச்சைப் பரத்தையின் தாயிடம் பேசிக்கொள்' என்று நக்கலாகச் சொல்கிறாள் தோழி. 

சக 






N. Ganesan

unread,
Nov 20, 2020, 8:59:19 AM11/20/20
to வல்லமை
On Friday, November 20, 2020 at 7:13:35 AM UTC-6 kanmani...@gmail.com wrote:
வல்லை = விரைந்து 
சரிதான்; அதற்காக பாணன் கன்றை உண்டமைக்கு அச்சொல் ஆதாரமாகி விடாது. 
'வல்லை' என்பது வினையடையாக  உள்ளது. அது ஒரு வினையைச் சிறப்பிப்பதாகவே  அமைய இயலும். 

"கன்று பெறு வல்சிப் பாணன் கையதை 
வள்ளுயிர்த் தண்ணுமை" யின் செயலுக்கு உரிய அடை அதுவாகும். 

நன்றி. பொருந்துகிறது.
நா. கணேசன்
 

வேந்தன் அரசு

unread,
Nov 20, 2020, 8:07:31 PM11/20/20
to vallamai


வெள்., 20 நவ., 2020, பிற்பகல் 5:28 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
வேந்தர் ஐயா;
கன்றை இனாமாகக் கொடுப்பது செவ்விலக்கியக் காலக் குடும்பத் தலைவன்; பரத்தமை பூண்டவன். 

அம்மா அரசோடு அதை ஒப்பிடவே இயலாது. 

 பாண்டியராஜன் ஐயா'வின் கருத்துப்படி வல்சி= வருமானம்
.ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை - குறு 295/4
ஒரு பசுவினால் வரும் "வருமானத்தால் உணவு கொண்டு வாழும் சிறப்பில்லாத வாழ்க்கை



kanmani tamil

unread,
Nov 20, 2020, 8:18:31 PM11/20/20
to vallamai
பாணன் பசுவை வைத்து சீரில்லாத வாழ்க்கை வாழ்ந்தமைக்கு சான்றுள்ளதா?

நீங்கள் குறிப்பிடும் குறுந்தொகைப் பாடல் யாரைப் பற்றியதென (இனிமேல் தான்) பார்க்க வேண்டும்.

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Nov 20, 2020, 8:40:41 PM11/20/20
to vallamai
As per Viathehi Herbert:

களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன்.  பாணனது வரிசை உணர்த்தி நின்றது. There is a version of this poem with the words கன்று பெறு வல்சிப் பாணன், which does not appear to be right.  In the copying and recopying process of the original poem the ‘ளி’ in களிறு could have been easily copied in error as ‘ன் ‘.  Pinnathūr Narayanaswamy Iyer who wrote the first commentary for Natrinai had the words in the poem as கன்றுபெறு வல்சிப் பாணன், and interpreted them as ‘bards who peel and eat calves.’   The word ‘peel’ is just not there, nor is it implied.  In Akanānūru 106, the phrase களிறு பெறு வல்சிப் பாணன் has been used, proving that the word கன்று is a copy error.  There are many references to kings donating elephants to bards and poets.  There are no references to bards, poets or other artists eating calves or cows.  In Kurunthokai 295, the word வல்சி means ‘livelihood with a single cow’ – ஓர் ஆன் வல்சி.   There are 4 references of wayside forest bandits killing and eating cows – அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்,  அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து.  Kings gifted bards with elephants.  Puranānūru 12, 151, 233, 369, have references to this.  Bards also received as gifts, gold lotus flowers in Puranānūru 12, 29, 126, 141, 244, 319, 361, 364, gold ornaments in Puranānūru 160, abundant food in Puranānūru 33, 34, 180, 212, 320, 326, 327, 328, 332, 334, 376, 382, agricultural towns in Puranānūru 302, and toddy in Puranānūru 115, 170, 224, 239. The words பாண்கடன் in Puranānūru 201 and 203 imply that the kings and benefactors owed responsibility to bards who nurtured Tamil.



சனி, 21 நவ., 2020, முற்பகல் 6:48 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Nov 21, 2020, 4:47:57 AM11/21/20
to vallamai
குறுந்தொகை- 295 
உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே
உரை:
தழைகளை உடுத்திக் கொண்டும், அவற்றை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டும், குழை முதலிய அணிகலன்களாகத் தழைகளை அணிந்தும், கூந்தலில் அவற்றைச் செருகியும், தழையலங்காரத்தால் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி இருந்து, நீ விழாவிற்குரிய அடையாளங்களோடு வருகின்றாய். இந்த ஊரில் உள்ளவர்கள், ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக்கொண்டு உண்ணும் உணவையுடைய, செல்வச் சிறப்பில்லாத வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த உனக்கு, மிகுந்த நன்மையுடைய இளமை பொருந்திய தலைவி மனைவியாக வந்ததால், இப்பொழுது விழாக்கோலம் பூண்டது போன்ற வாழ்க்கை உண்டாயிற்று என்று கூறுகின்றனர்
**********************************************************************************************************************************************************
இந்தப் பாடலுக்கு மேலே உள்ள உரையை இன்னும் சற்றுத் தெளிவாகக் கூறலாம்.

"உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே"

'தழையாடை உடுத்துக் கொண்டும்; தழைகளைத் தொடுத்து அணிகலன்களாகப் பூட்டிக் கொண்டும்; காதுகளில் தழையைச் செருகிக் கொண்டும்; அழகுபெறத் தோன்றுகின்ற பெண்களோடு கூடிக் கொண்டாடி மகிழ்ந்து நீ வருகிறாய்'.

".....................................................யிஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே"

'இந்த ஊர்மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?- இதைப் பாரேன்; ஒரே ஒரு பசுவை வைத்துக்கொண்டு சிலாகித்துச் சொல்லமுடியாமல் வாழ்ந்த இவனுக்கு மிகுந்த பெண்மைநலம் வாய்ந்த மனைவி வாய்த்துவிட; இப்போது வாழ்நாள் முழுதும் விழவு போலக் கொண்டாடும் வகையில் வளமாகி விட்டது.' என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

இங்கே யாரும் யாருக்கும் இனாம் கொடுக்கவில்லை.
திருமணத்திற்கு முன்னர் அவனிடம் இருந்தது ஒரு பசு மட்டுமே. அவனிடம் நிலபுலன்கள் ஏதும் இல்லை; அதனால் அவனது வாழ்க்கையில் செல்வச்சிறப்பு ஏதும் இல்லை. ஆனால் இப்போதோ மிகுந்த நற்குணம் வாய்ந்த மனைவி வாய்த்துவிட்டாள். அவளது இல்லறத்தில் ஒரு பசு பலவாகப் பெருகி விட்டது. ஏனென்றால் அவள் சோர்வில்லாது உழைத்து; அந்த மனை விளங்கப் பாடுபட்டு இருக்கிறாள். இவன் அன்றாடம் விழா கொண்டாடுபவன் போல ஷோக்குப் பேர்வழியாகி விட்டான்.

இது செவ்விலக்கியக் காலத்துத் தலைவி பற்றியது தான்; ஆனால் நான் இப்படிப்பட்ட பெண்ணை எனது இளமையில் நேரில் பார்த்து இருக்கிறேன். ஒரே ஒரு பசுவை ஆதாரமாக வைத்து வாழ்வைத் தொடங்கி; இருபது ஆண்டுகளுள் பத்துக்கும் மேற்பட்ட பசுக்களைப் பேணிப் பாதுகாத்து; மக்களை வளர்த்துக் கடமைகளை முடித்து; மகனுக்குச் சொந்தத் தொழில் வைத்துக் கொடுத்த அன்னையை நான் அறிவேன்.

இங்கே சொல்லப்படுவது பசுங்கன்று தான்; அது வாழ்வாதாரம் ஆகியது; இங்கே யாரும் பாணர் இல்லை. இனாமும் இல்லை.

திருமிகு வைதேகி ஹெர்பர்ட் சொல்லி உள்ள பாட பேதத்திற்கும், பொருள் விளக்கத்திற்கும் அடுத்த மடலில் வருகிறேன்.
சக



N. Ganesan

unread,
Nov 21, 2020, 9:08:11 AM11/21/20
to vallamai, housto...@googlegroups.com
SK > நீர்த்துறை = செல்வம் மிகுந்த (கூட்டுக்)குடும்பம் 
> உண்ணு நீர்த்துறை = கேளிரைத் தாங்கும் வளமான குடும்பம்
> நீரெடுக்க வந்த பெண்கள் = தலைவனும் தலைவியும் நடத்தும் இல்லறத்தில் இரந்து பெற்று வாழும் கேளிர் 
> விளக்கு போன்ற தாமரை = குடும்ப விளக்கு போன்ற தலைவி (குடும்பத்தலைவி)
> தாமரையின் பசிய இலைகள் = குடும்பத்தின் கிளைஞர் (பங்காளிகள்; அதாவது அவர்களும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்)
> ஆண்யானையின் செவிகள் போன்ற அகன்ற இலை = விரிந்த தலைக்கட்டுகள் உள்ள; எண்ணிக்கை மிகுந்த கிளைகளின் கூட்டம்
> வாளைமீன் = பரத்தை
> மீன் துள்ளி விழுதல் = பரத்தையின் அத்து மீறிய ஆட்டம் 
> இலைகள் அலைதல் = பங்காளிகள் கூட நிலை தடுமாறுகின்றனர்
> பெண்கள் மிரட்சி = பரத்தை ஆடும் கூத்தைப் பார்த்துக் கேளிர் ஒதுங்குகின்றனர்.

மருதத்திணையின் இப்பாடலில், முழுக்க முழுக்க பெண்களே இடம்பெறுகின்றனர். எனவே, நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (உவேசா, பின்னத்தூர்) கூறும் இற்பரத்தையர் (ஊரனின் காமக்கிழத்தியர்) = தாமரை நாளத்தில் உள்ள பசிய இலைகள் என்பது மிகப் பொருந்துகிறது. பங்காளிகள்
என்றால், ஆண்கள் 50% இருப்பர். அவர்களுக்குத் தலைவன் எத்தனை பெண்களை வைத்திருந்தால் என்ன கவலை? ஒன்றுமில்லை.
இந்தியாவில், ஆப்பிரிக்காவில், சீனாவில், இஸ்லாம் நாடுகளில், பல பெண்களை செல்வர்கள் மணந்து வைத்திருப்பது (உ-ம்: சிலம்பு ...)
வாடிக்கை. எனவே, முழுதும், பெண்டிர் பாட்டாகிய நற். 310-ல் உவேசா, பின்னத்தூரார் கூறும் காமக்கிழத்தியருக்கு உள்ளுறை தாமரையின்
அகன்ற பச்சை இலைகள் எனக் கொள்கிறேன். 100% பெண்கள் பற்றிய பாடல், அவர்கள் உரையாடல். 

தாமரை தலைவி என்பது சரியே. ஆர் = தாமரை நாளம். ஆர்/ஆரம் + விரிந்த (=விந்த)  ===> அரவிந்த என்னும் வடசொல் ஆனது. 
சிலம்பின் தலைவிக்கு, தாமரை என்ற பெயரால் சூட்டுவதை, ஆசிரியரே தெரிவித்துள்ளார். கர்ணகா/கர்ணகீ >> கர்ணகி/கர்ணகை (இன்றும்
நாட்டார் பாடலில் இப்பெயர் தான்) >> கண்ணகி என்று பெயர். கோவலன் ( கோபாலனை ஒட்டி அமைத்த தனித்தமிழ்ப் பெயர்). அண்ணன் பலராமன், வசுதேவன் புத்திரர். கோவலன் பெயர் விளக்கம் முன்பிறப்பு செய்திகளில், மதுராபதி தெய்வம் உரைப்பதாக அமைத்தார். 
கண்ணகி < கர்ணகீ “தாமரைப் பொகுடு” (Pericarp of the Lotus, hence Lakshmi).  கனக விஜயர் - வடநாட்டு மாந்தர். குருக்ஷேத்திரப் போரை
நினைவூட்டும் வகையில் கனக-விஜயர் என்றார். கனகன் = ஹரி (பொன்னர்), விஜயன் = அர்ஜுனன், கீதை உபதேசக் காட்சி போர்க்களம்.
மாதவி கணிகை, கோவலனையே வரிந்து வாழ்ந்தவள்- இப்படிப் பல கணிகையர் தமிழ்வரலாற்றிலுண்டு - கோவில் தேவதாசியர், நிலக்கொடை,
ஏரிக்கொடை எல்லாம் அளித்த தாசிகள் (கல்வெட்டுகளில்) .... - முல்லை கற்பின் சின்னம்/அடையாளம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் குருகு/குருக்கத்தி.
இதன் வடமொழிப் பெயர் மாதவி. சங்க நூல்களில் முல்லை, மாதவி ஒன்றாய் இடம்பெறும். முல்லை என்னும் கற்புக்கு கண்ணகியும்,
அதன் அருகே உள்ள குருக்கத்தியை மாதவி என்றும் பெயர் வைத்தார், முத்தமிழ்க் காப்பியம் தமிழின் முதல் தமிழ்தேசிய நாவலில். ....
சிலம்பின் கதைமாந்தர் பெயர்கள் பற்றி நல்ல கட்டுரை ஒன்று எழுதவேணும். யாரும் தமிழின் முதல் நாவலின் பாத்திரங்களின் பெயரை அதன் ஆசிரியர் அமைத்தது பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. ...

16, 17-ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மறுமலர்ச்சி, Enlightenment, தொழில்புரட்சி, .... ஏற்பட்டதால் உலகம் தாக்குண்டது. பைபிளை எடுத்துக்கொண்டு உலகம் முழுதும் உள்ள சமயங்களை மாற்ற மிஷநரிகள் புறப்பட்டனர். பல நாடுகள் அழிந்தன.
உ-ம்: அமெரிக்காவின் இருகண்டங்களில் இருந்த செவ்விந்தியர் தேசங்கள், நாடுகள், நாகரிகங்கள். இந்தியா ஏற்கெனவே,
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துவந்த சமயத்தோரால் அடிமைப்பட்டுக்கிடந்தது. இந்தியாவின் ஹிந்து சமயத்தை வீழ்த்தி,
கிறிஸ்துவ சமயத்தை நிலைநாட்டி, இந்தியாவை மதமாற்றம் செய்து பெரும்பாலோர் சமயமாக நாட்ட ஐரோப்பிய நாடுகளின்
மிஷனரிகள் மிகப்பெரும் முயற்சிகளை காலனீய அரசாங்கங்களின் உதவியோடு மேற்கொள்ளலாயினர். இதனை,
18-ஆம் நூற்றாண்டின் ஜெர்மானிய லுத்தரன் மிஷனரிகளின் படைப்புகளில், எல்லாப் பிற ஐரோப்பிய மொழிகளிலும்
காணலாகும். ஜெர்மானிய லுத்தரன் மிஷனரிகள் எழுதியதை உள்வாங்கிய கால்ட்வெல் பாதிரியார் போன்றோர்
தமிழர் ஜாதிகளைப் பற்றி எழுதி, மதமாற்றம் வெற்றி பெறச் செய்ய வேண்டிய திட்டங்களை நுட்பமாக வகுத்தளித்தனர்.
16-ம் நூற்றாண்டில் இருந்து தொழில்செய்துவரும் ஐரோப்பியர் தமிழின் அழகிய நூல்களின் பிரதிகளை எடுத்துச் சென்று
காத்ததாகக் காணோம். அவற்றை அச்சிட்டதாகவோ எதுவும் செய்தி பெரிதாக இல்லை.
றெவரண்ட் கால்ட்வெல், The Tinnevelly Shanars: A Sketch of Their Religion, and Their Moral Condition and Characteristics, as a Cast; with Special Reference to the Facilities and Hindrances to the Progress of Christianity Amongst Them (1849), இதனை எதிர்த்தாரும் உண்டு. உ-ம். நாடார் சமூகத்தவரான வின்பிரெட் பாதிரியார் நூலைக் குறிப்பிடலாம். கார்காத்தார் எனும் வேளாளர்கள் ‘வருண சிந்தாமணி’ செய்தனர். பாரதி இந்நூல் பற்றி எழுதியுள்ளார். 20-ஆம்
நூற்றாண்டில் தமிழரின் குலங்கள், ஜாதிகள், ... அடைந்த மாற்றங்கள் மிகப் பல. பொதுக்கல்வி, இந்தியாவின் விடுதலை, அரசியல் யாப்பு, ....

தமிழில் ஒரே மாதிரி எழுதப்படும் சொற்கள் வெவ்வேறு பொருள் கொண்டவை பல. உ-ம்: சான்றாண்மை. வள்ளுவர் என்ற பெயர்
வல்லப என்னும் வடசொல்லிலும்,  வள் வார் மரசம் போன்ற சங்க தொடர்களில் வரும் வள்-வளைதல் என்னும் தனித்தமிழாலும்
உருவாகும். திருவள்ளுவர் < ஸ்ரீவல்லபர், க்ஷத்ரிய வம்சத்தவர் எனக் காட்டினோர் பலர். நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர் 
விளக்கி நூல்கள் இயற்றியுளர். க்ஷத்ரிய சமயமான ஜைநசமயி திருவள்ளுவர். ஜைந சமயத்தின் தமிழ்க்கொடையை மக்களிடம் மறைத்துவிட்டனர்
த்ராவிட கக்ஷிகளின் ஆட்சியாளர்கள். 2 வாரம் முன்பு, வாட்ஸப்பில் அண்மைக்கால சிலைகள் படம் அனுப்பிக் காலம் கேட்டிருந்தனர்.
ஒன்று: யானை மீதிருந்து முரசு அறையும் வள்ளுவன். இன்னொன்று சைவ யோகியாக அமர்ந்துள்ள திரு வள்ளுவன். நல்ல சிற்பங்கள்.
சுமார் ஒரு நூற்றாண்டு இருக்கலாம் என எழுதி அனுப்பினேன். சென்னை கல்விச் சங்கம், காலேஜ் எல்லாம் அமைத்து தமிழ் நூல்களை
ஐரோப்பிய பாதிரிமார்கள் பரப்ப ஆரம்பித்த காலத்தில், நற்றிணை 310-ல் கன்று பெறு வல்சி களிறு பெறு வல்சி எனத் திருத்தலாயினர்
எனக் கணிக்கலாம். 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியாக இருக்கும். இது, ஹிந்து சமயம் பற்றி 17-ம் நூற்றாண்டு - 1950 வரை கிறிஸ்துவ சமய பாதிரியார்களின் நூல்களை ஆராய்ந்தால் புலப்படும். எதிர்திசையில்,  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், வின்பிரெட், .... பயணிக்கலாயினர்.

எது பழைய பாடல் என்று கடைசிவரிகளில் உள்ள எதுகையால் அறியலாம். மேலும், எல்லா விவசாயியும்
யானைகள் வைத்திருந்ததாக செய்திகள் இல்லை. பொருளாதாரமும் இடங்கொடுக்காது. இப்போது,
விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்கிறான். Go-betweens-கு யானை பரிசில் கொடுக்க
எங்கே போவான்? யாரோ அரசன் எதிரி மன்னனை வென்று, அவன் நாட்டை சின்னாபின்னமாக்கிக்
கவர்ந்த பொருள்கள், நாடுகள், கொண்டிமகளிர், ... என்னும் மகிழ்ச்சியைக் காட்ட, பாணன் களிறு
கொடுத்ததாகப் பாடல் உண்டு. அதற்காக, பாணன் எப்போதும் பெறுவது யானைகள் தான் என்பது
“குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம்” என்பதுபோல் ஆகிவிடும். 

பரணர் பாட்டின் பொருண்மை வேறு. அது சாதாரண வேளாண் சமுதாயத்தின் அன்றாட நிகழ்ச்சி. 
இதில் வரும் பாணன் (நற்றிணை 310) தமிழிசை வல்லவர்கள் ஆகிய மங்கலன்/மருத்துவன் எனக்
கருதலாம். பொலிக என மனையுட் புகுவோர் அவர்கள். கலியாணங்களில் மங்கல வாழ்த்துப் பாடுவோர்,
வீரர் கதைப்பாடல் என்னும் - அண்ணமார்சாமி கதை போல - காவியங்கள் படைப்போர். 
பொலி என்னும் ஈமச் சடங்கு நடத்துவோரும், நூல் வாங்குதல் என்னும் சடங்கு செய்வோரும் அவர்கள்.
இவ்வாறு ஆன பாணர்களில், பழைய வானியல் காட்டும் பாடலைச் செய்த ஒரு பெரும்புலவன் பாட்டைப்
பார்த்தோம். ’நீலிக்குக் கண்ணீர் நிமையிலே’ எனும் தமிழ்ப் பழமொழி (Number 275, in Jerman Jensen collection)
போன்றவற்றால், கண் நிமை (தொல்காப்பியம்), ’செம்மீன் நிமைக்கும் மாக விசும்பின்’ (புறம் 60):

நற்றிணையின் பிரதிகளை ஆராய்ந்து வெளியிட்ட பின்னத்தூரார், உவேசா எல்லாம் கொண்டது
‘வல்லைக் கன்றுபெறு வல்சி” என்னும் பாடம் தான். பேரா. ஏவா வில்டன் செம்பதிப்பிலும் காண்க.

~NG

kanmani tamil

unread,
Nov 21, 2020, 12:28:43 PM11/21/20
to vallamai
 As per Viathehi Herbert:

களிறு பெறு வல்சிப் பாணன் (9) – ஒளவை துரைசாமி உரை – களிற்றைப் பரிசிலாகப் பெற்று வாழும் பாணன்.  பாணனது வரிசை உணர்த்தி நின்றது. There is a version of this poem with the words கன்று பெறு வல்சிப் பாணன், which does not appear to be right.  In the copying and recopying process of the original poem the ‘ளி’ in களிறு could have been easily copied in error as ‘ன் ‘.  Pinnathūr Narayanaswamy Iyer who wrote the first commentary for Natrinai had the words in the poem as கன்றுபெறு வல்சிப் பாணன், and interpreted them as ‘bards who peel and eat calves.’ 

Yes , I accept his opinion. 

The word ‘peel’ is just not there, nor is it implied. 

No, it can be prooved . 

In Akanānūru 106, the phrase களிறு பெறு வல்சிப் பாணன் has been used, proving that the word கன்று is a copy error. 

No; Akam 106 reads as follows:

1
எரியும் நெருப்பு பூத்துக் கிடப்பது போலப் பொய்கையில் தாமரை பூத்திருக்கும். பொரியைப் பொய்கையில் கொட்டியது போல, சிறுமீன்கள் பசுமையான இலைகளைத் தின்னுவதற்காக அங்கே திரியும். சிறகு ஒடிந்த நாரை மீன் இரையைக் கொள்வதற்காக அங்கே மெல்ல மெல்ல அசைந்து செல்லும். இப்படிப்பட்ட துறை கொண்ட ஊரின் தலைவன் அவன்.  
2
அந்த ஊரனின் மனைவி, தன் கொழுநனை என்னோடு சேர்த்துப் பேசி அவனோடு பிணக்குப் போட்டுக்கொள்கிறாள் என்கின்றனர். எனக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை. இருப்பினும் இருப்பதாகக் காட்டி அவளைக் கொஞ்சம் மிரட்டிவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன். செல்லலாமா, தோழி, என்கிகிறாள், பரத்தை.
3
அப்படி நான் அவளைச் செய்யாவிட்டால்... வாள்-படை கொண்ட அரசன் ‘கொற்றச் செழியன்’... போரில் பகைவரை அழிக்கும்போதெல்லாம், அவனிடம் களிற்றைப் பரிசாகப் பெறும் பாணர் தம் தண்ணுமைப் பறையை முழக்குவர். அவர்கள் முழக்கும்போது பறை அடிபடுவது போல என் வயிறு அடிபட்டுத் துன்புறட்டும் 
1
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடைஉணீஇயர்பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை     5
2
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம் ஆயினும்உய்யாமையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசிசிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி!
3
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்  10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்தன் வயிறே.

பாடலில் இடம்பெறும் உவமை பாண்டிய வேந்தன் பற்றியது; அவன் போர்க்களத்தில் வெற்றி பெற்றவுடன் அதைப் போற்றிப் பாடும் பாணனுக்குக் களிற்றியானையைப் பரிசாகக் கொடுக்கிறான். வேந்தன் யானையைப் பரிசாகக் கொடுப்பதில் வியப்பு ஏதுமில்லை. அவனிடம் யானைப்படை இருக்கும். 
இந்தப் பாணனுக்கும் நற்றிணை 310 பாடலில் இடம்பெறும் பாணனுக்கும் தொழில் வேறு. இருவருக்கும் கொடுத்த தலைவரின் இனமும் வேறு. 
நற்றிணை 310ல் இடம்பெறும் பாணன் வேந்தனுக்குப் பரத்தையைக் கூட்டிக் கொடுக்கவில்லை.
நற்றிணைப் பாட்டில் தலைவன் நேரடியாக இடம்பெறவும் இல்லை; ஆனால் நீர் மேலாண்மை பற்றிய செய்தி இடம்பெறுவது வேளாண் இனத்துத் தலைவியைச் சுட்டுவதற்கு ஆதாரம் ஆகிறது. உண்பதற்காக குளம் வெட்டப்பட்டு இருக்கிறது... 
திணைமாந்தர் உறைகிணறு அமைத்தனர். (குளம் தொட்டு வளம் பெருக்கியவர் நெல் வேளாண்மையில் ஈடுபட்டவர் மட்டுமே. பாண்டியனும் சேரனும் அப்போது; தொகை இலக்கியக் காலத்தில் நெல் வேளாண்மையும் செய்யவில்லை; நீர் மேலாண்மையும் செய்யவில்லை.) 
குறிப்பிட்ட நற்றிணைப் பாட்டின் தலைவர் வேந்தர் இல்லை ஆகையால்; யானையை இனாமாகக் கொடுக்க இயலாது.    
There are many references to kings donating elephants to bards and poets.  
Yes, only venthar donated elephants. 
There are no references to bards, poets or other artists eating calves or cows.  In Kurunthokai 295, the word வல்சி means ‘livelihood with a single cow’ – ஓர் ஆன் வல்சி.   There are 4 references of wayside forest bandits killing and eating cows – அகநானூறு 97 – நிரை பகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர், அகநானூறு 129 – கொழுப்புதின்ற கூர்ம் படை மழவர், அகநானூறு 265 – இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத்தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் உற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்,  அகநானூறு 309 – கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன் புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்புஎறிந்து.
பாணரும் பாலைத்திணை மறவரும் திணை மாந்தர் தாம். அவர்களுக்குள் ஒத்த பழக்கவழக்கம் இருக்க வாய்ப்புள்ளது.  
Kings gifted bards with elephants.  Puranānūru 12, 151, 233, 369, have references to this. 
Let us see one by one.
puranaanooru- 12
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாணருக்கு யானைகளைப் பரிசளித்தான்.
அவன் வேந்தன்; அவனால் யானையைப் பரிசாகக் கொடுக்க முடியும்.
வேளாளர் மண்ணில் உழுதவர் (களமர் எனப்பட்டனர்.); அவர்களதுலைவராகிவேளிர்ன்ற குறுநிலமன்னரிடம் கோட்டை கூடக் கிடையாது; யானைப்படையும் கிடையாது.

புறநானூறு- 151
கண்டீரக்கோவும் இளவிச்சிக்கோவும் சேர்ந்து இருந்தவிடத்தில் கண்டீரக்கோவை மட்டும் பெருந்தலைச் சாத்தனார் பாடுகிறார். குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் அவன் பெண்யானையைப் பரிசாகக் கொடுக்கிறான்.
இரண்டு தலைவர்களும் வேளிரே; இருவரிடமும் யானைப்படை கிடையாது. ஆனால் மலைப்புறத்து நாடுகளை... அதாவது; விளைநிலங்களைக் கொண்டவர். இங்கு தான் விஷயமே இருக்கிறது.
அவர்களது வேளாண்மைக்கு மலைப்புறத்து யானைகளால் ஊறுநேரக் கூடாதெனில் அவற்றைக் கழிக்க வேண்டும்; அதனால்தான் பெண்யானைகளைக் கூடக் கண்டீரக்கோ கொடுக்கிறான்.

ஆய் அண்டிரன் வேளிர் எனப்படும் குறுநில மன்னன். அவன் பரிசிலர்க்கு மிகுந்த யானைகளைக் கொடுத்தான். ஏன்?
அவனது நாடு = விளைநிலங்கள் கவிரமலைப் பகுதியில் இருந்தன. அதாவது பொதிகை மலையின் கிழக்குப் பகுதி. தன் வேளாண்மைக்கு இடையூறு ஏற்படாதவாறு யானைகளைக் கொடுத்துக் கழிக்கிறான். புலவர் 'உன் நாட்டில் யானை ஒரு சூலுக்குப் பத்துக் கன்றுகளை ஈனுமோ?' என்று கேட்குமளவு மிகுதியாக யானைகளைக் கொடுத்தான். கொடைக்குக் கொடையும் ஆயிற்று; வேளாண்மைக்கு வசதியும் ஆயிற்று. 

இவ்வளவு ஏன்?! விச்சிக்கோவின் முன்னோன் தான் நன்னன். அவனது மரத்து மாங்காயை ஒரு கோசர் குலப்பெண் தின்று விட்டாள் என்று கொலைத்தண்டனை விதித்தான். கோசர்கள் வேந்தர் வருணத்தைச் சேர்ந்தவர்; தம் இனத்துப் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக 88 யானைகளைக் கொடுப்பதாக நன்னனிடம் கெஞ்சுகின்றனர். நன்னன் மறுக்கிறான். அவனுக்கு யானை தேவை இல்லை; இடைஞ்சல். அவனது விளைநிலங்களை அவை பாழ்படுத்தும். ஒரு மாங்காயை விட்டுக்கொடுக்காதவன் மனதார எப்படி யானைகளை ஏற்றுக்கொள்வான்? 

புறநானூறு- 233
இறந்துபட்ட அகுதை யானைப்பரிசுகளைக் கொடுக்கக் கூடியவன்.
அவன் ஆண்ட பகுதி குறித்தும்; அவனது இனம் குறித்தும் தெளிவான செய்திகள் இல்லை; அதனால் அவன் திணைமாந்தனா? குறுநில மன்னனா? என்று முடிபாகக் கூற இயலவில்லை.

புறநானூறு- 369
சேரவேந்தன் கடலோட்டிய வேல் கெழு குட்டுவன் பற்றிய பாட்டு... யானைப்படை வைத்துக் கடலுக்குள் சென்று தீவில் இருந்த கடம்பரை அடக்கியவன்; அவன் பரிசாக வேழம் நல்கியதில் வியப்பே கிடையாது.        
 Bards also received as gifts, gold lotus flowers in Puranānūru 12, 29, 126, 141, 244, 319, 361, 364, gold ornaments in Puranānūru 160, abundant food in Puranānūru 33, 34, 180, 212, 320, 326, 327, 328, 332, 334, 376, 382, agricultural towns in Puranānūru 302, and toddy in Puranānūru 115, 170, 224, 239.
okay.
 The words பாண்கடன் in Puranānūru 201 and 203 imply that the kings and benefactors owed responsibility to bards who nurtured Tamil./// 14 மணி நேரத்திற்கு முன் வேந்தன் ஐயா பதிவிட்டது.
No; The meaning for பாண்கடன் is entirely misunderstood here. It means that the death ceremony and rituals were done only by பாணர் in those days. Even now it is done by their clan only. They did it accepting that it was their duty. So it was mentioned as பாண்கடன் in புறப்பொருள் வெண்பாமாலை.

இதனால் எனது முடிபான கருத்து என்னவெனில் நற்றிணை 310ல் இடம்பெறும் சொல் "கன்று" தான்.
சக 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcEdRs6RA5qXZ%2BAnmaSXS_iFNFoA%3DqpUdMfxysgw2AZdQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Nov 24, 2020, 9:02:58 AM11/24/20
to vallamai
///தாமரையின் பசிய இலைகள் = குடும்பத்தின் கிளைஞர் (பங்காளிகள்; அதாவது அவர்களும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்)

மருதத்திணையின் இப்பாடலில், முழுக்க முழுக்க பெண்களே இடம்பெறுகின்றனர். 
இல்லை. பாணன் கன்றைப் பெறும் செய்தி உள்ளது. பாணன் ஆண்மகன்.  
எனவே, நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (உவேசா, பின்னத்தூர்) கூறும் இற்பரத்தையர் (ஊரனின் காமக்கிழத்தியர்) = தாமரை நாளத்தில் உள்ள பசிய இலைகள் என்பது மிகப் பொருந்துகிறது.
உளவியல் அடிப்படையில் பொருந்தவில்லை. 
பரத்தமையில் ஈடுபடுபவன் தலைவன் தான்; ஆசை நாயகிகள் அவனுக்கு மட்டுமே உரியவர்கள் தாம்; அவர்களைப் பரத்தையர் என்று சொல்வதே ஆண் முதன்மைச் சமுதாயம் பெண்களுக்கு இழைத்த கொடுமை என்பேன்.   
பங்காளிகள்என்றால், ஆண்கள் 50% இருப்பர். அவர்களுக்குத் தலைவன் எத்தனை பெண்களை வைத்திருந்தால் என்ன கவலை? ஒன்றுமில்லை.
இன்றைய பொருளாதாரச் சூழலை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்; தொகைநூற்காலக் கூட்டுக் குடும்பத்தை மனதில் இறுத்திவைத்துப் பேச வேண்டும். அன்றைய பொருளாதாரம் வேளாண்மை சார்ந்தது; தலைவனின் பரத்தமை கூட்டுக் குடும்ப வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்காது. 
இந்தியாவில், ஆப்பிரிக்காவில், சீனாவில், இஸ்லாம் நாடுகளில், பல பெண்களை செல்வர்கள் மணந்து வைத்திருப்பது (உ-ம்: சிலம்பு ...)
வாடிக்கை. எனவே, முழுதும், பெண்டிர் பாட்டாகிய நற். 310-ல் உவேசா, பின்னத்தூரார் கூறும் காமக்கிழத்தியருக்கு உள்ளுறை தாமரையின்
அகன்ற பச்சை இலைகள் எனக் கொள்கிறேன்.
பாடலாசிரியர் பரணர், தொகுத்தவர், தொகுப்பித்தவர், ஏடு திரட்டிய உ.வே.சா., உரை எழுதிய பின்னத்தூரார், இப்போது கருத்துரைக்கும் நீங்கள் எல்லோரும் ஆண்முதன்மைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகத் தான் பார்க்கிறீர்கள். 
ஆசைநாயகியாக இருக்கும் பெண்; தலைவி மட்டுமே குடும்ப விளக்குப் போன்றவள் என்று ஒருபோதும் சொல்லவும் மாட்டாள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். 
பொருளாதாரத்தால் பிரிக்கமுடியாத கிளைஞர் குடும்பத்தலைவியின் அதிகாரம் தெரிந்து அவளைக் குடும்பவிளக்கு என்று ஒத்துக்கொள்வர்.
 100% பெண்கள் பற்றிய பாடல், அவர்கள் உரையாடல். /// Dr.Ganesan wrote 3days ago.
இன்னொரு விஷயம். 
தலைவி தாமரை என்னும் குறியீடு பெறுவதற்கு இன்னும் சில பாடல்கள் உள்ளன. 
அதுபோல ஊர்மேயும் தலைவன் எருமை என்று குறிப்பிடும் பாடல்கள் பல. 
இன்னும் புலால் நாறும் மீன் தலைவன் பரத்தமைக்குத் துணை செய்யும் பெண் என்பதும் மிகுந்த பாடல்களில் உள்ளன. 
இவையெல்லாம் தொகைநூற் கால நாட்டார் வழக்காற்றில் மறித்து வந்த கருத்துக்கள். 
பாடலைப் பாடியது பரணர் எனினும் அவர் தன்கால வழக்காற்றைத் தான் பன்னிப் புனைந்தார். அவ்வழக்காறு ஆசைநாயகியைத் தாமரை இலை என்று வேறு எங்கும் சொல்லவில்லை. இருந்தால் எடுத்துக் காட்டுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.
சக   
 

N. Ganesan

unread,
Nov 24, 2020, 9:35:42 AM11/24/20
to vallamai
On Tue, Nov 24, 2020 at 8:02 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///தாமரையின் பசிய இலைகள் = குடும்பத்தின் கிளைஞர் (பங்காளிகள்; அதாவது அவர்களும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்)

மருதத்திணையின் இப்பாடலில், முழுக்க முழுக்க பெண்களே இடம்பெறுகின்றனர். 
இல்லை. பாணன் கன்றைப் பெறும் செய்தி உள்ளது. பாணன் ஆண்மகன்.  

ஊரன் - பாணன் தொடர்பை, பாணனின் கூட்டுவிக்கும் தொழிலைக் கூறுகின்றனர் பெண்கள்.
 
எனவே, நற்றிணைப் பதிப்பாசிரியர்கள் (உவேசா, பின்னத்தூர்) கூறும் இற்பரத்தையர் (ஊரனின் காமக்கிழத்தியர்) = தாமரை நாளத்தில் உள்ள பசிய இலைகள் என்பது மிகப் பொருந்துகிறது.
உளவியல் அடிப்படையில் பொருந்தவில்லை. 
பரத்தமையில் ஈடுபடுபவன் தலைவன் தான்; ஆசை நாயகிகள் அவனுக்கு மட்டுமே உரியவர்கள் தாம்; அவர்களைப் பரத்தையர் என்று சொல்வதே ஆண் முதன்மைச் சமுதாயம் பெண்களுக்கு இழைத்த கொடுமை என்பேன்.   

இற்பரத்தையர் புதிதாகப் பரத்தை ஒருத்தியிடம் போய்விட்டால் என்னாவது என்று அலைமோதுகின்றனர். அதைக் கூறும்பாடல். பரத்தையர் என்பது பழைய வழக்கு. பெருங்கோவில்கள் ஏற்படாக் காலம்.
 
பங்காளிகள்என்றால், ஆண்கள் 50% இருப்பர். அவர்களுக்குத் தலைவன் எத்தனை பெண்களை வைத்திருந்தால் என்ன கவலை? ஒன்றுமில்லை.
இன்றைய பொருளாதாரச் சூழலை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள்; தொகைநூற்காலக் கூட்டுக் குடும்பத்தை மனதில் இறுத்திவைத்துப் பேச வேண்டும். அன்றைய பொருளாதாரம் வேளாண்மை சார்ந்தது; தலைவனின் பரத்தமை கூட்டுக் குடும்ப வேளாண்மைப் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருக்காது. 

ஊரன் பல பரத்தையரை வைத்திருப்பது சங்க கால வழக்கம். இதனை மாற்றவே குறள் எழுதினார் வள்ளுவர்:
ஒருமை மகளிரே போல...
 
இந்தியாவில், ஆப்பிரிக்காவில், சீனாவில், இஸ்லாம் நாடுகளில், பல பெண்களை செல்வர்கள் மணந்து வைத்திருப்பது (உ-ம்: சிலம்பு ...)
வாடிக்கை. எனவே, முழுதும், பெண்டிர் பாட்டாகிய நற். 310-ல் உவேசா, பின்னத்தூரார் கூறும் காமக்கிழத்தியருக்கு உள்ளுறை தாமரையின்
அகன்ற பச்சை இலைகள் எனக் கொள்கிறேன்.
பாடலாசிரியர் பரணர், தொகுத்தவர், தொகுப்பித்தவர், ஏடு திரட்டிய உ.வே.சா., உரை எழுதிய பின்னத்தூரார், இப்போது கருத்துரைக்கும் நீங்கள் எல்லோரும் ஆண்முதன்மைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகத் தான் பார்க்கிறீர்கள். 
ஆசைநாயகியாக இருக்கும் பெண்; தலைவி மட்டுமே குடும்ப விளக்குப் போன்றவள் என்று ஒருபோதும் சொல்லவும் மாட்டாள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். 
பொருளாதாரத்தால் பிரிக்கமுடியாத கிளைஞர் குடும்பத்தலைவியின் அதிகாரம் தெரிந்து அவளைக் குடும்பவிளக்கு என்று ஒத்துக்கொள்வர்.

சங்க காலத்தில் இயங்கிய சமுதாயம். குடும்பத் தலைவியை குலமகளின் கற்பைப் போற்றியது. கற்பு வழுவாமல் இருந்தால் தான் குடும்பம் இயங்கும்.
அடுத்த தலைமுறைக்குச் செல்வம் போய்ச் சேரும்.  குலவிளக்கு ஆகத் தலைவி விளங்குகிறாள் என்பது சமூகம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு.
பரத்தையரை குடும்பவிளக்கு எனக் கூற முடியாது.

அதனால் தான், இப்பாடலின் வளர்ச்சி சிலம்பின் பாத்திரங்கள் எனக் கூறினேன். முல்லைக் கற்பின் திறம் : கர்ணகீ/கண்ணகி தாமரை வாழ் செல்வி ஆகிய லக்ஷ்மி.
கோவலனிடம் வாழ்ந்த கணிகை, முல்லைக்குப் பகரியான குருகு/குருக்கத்தி. எனவே, மாதவி எனப் பெயர் கொடுக்கிறார் அடிகள்.

நற்றிணைப் பாடலில், அலைமோதும் இலைகள் போன்றவர்கள் பரத்தையர் என்பது பொருத்தம். குஞ்சு, குளமான் எனும் குழந்தையெல்லாம்,
ஊரனின் காம வாழ்க்கையால் ஏன் அலைமோதுவர்?
 
 100% பெண்கள் பற்றிய பாடல், அவர்கள் உரையாடல். /// Dr.Ganesan wrote 3days ago.
இன்னொரு விஷயம். 
தலைவி தாமரை என்னும் குறியீடு பெறுவதற்கு இன்னும் சில பாடல்கள் உள்ளன. 
அதுபோல ஊர்மேயும் தலைவன் எருமை என்று குறிப்பிடும் பாடல்கள் பல. 

ஆமாம். அதனால் தான் கண்ணகி என்னும் பெயர் தாமரைப்பொகுட்டால் பெறும் பெயர் (சிலம்பில்) எனப் புரிந்தது.
உவேசா, பின்னத்தூரார், புலியூர்க் கேசிகன் - நாளம் (ஆர் > அரவிந்த) தாங்கும் பச்சை இலைகள் பரத்தையர் என்று
கூறும் உரையைத் தொகுத்து தருகிறேன்.

Busy right now.

நன்றி,
நா. கணேசன்


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 24, 2020, 10:15:58 AM11/24/20
to vallamai, housto...@googlegroups.com
On Tue, Nov 24, 2020 at 8:02 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

 100% பெண்கள் பற்றிய பாடல், அவர்கள் உரையாடல். /// Dr.Ganesan wrote 3days ago.

இவ்வரியை எழுதக் காரணம்: பாணன், அவன் கூட்டுவிப்பன். கூடலில் களிப்பவன் ஊரன்/தலைவன். இரு ஆண்களும் பாடலுக்கு வெளிமாந்தர்.
அவர்கள் செய்கை  முழுக்க முழுக்கப் பெண்டிரால் பேசப்படுகிறது. பெண்டிர் அலைப்புண்டது பற்றிய பாடல்.
 
இன்னொரு விஷயம். 
தலைவி தாமரை என்னும் குறியீடு பெறுவதற்கு இன்னும் சில பாடல்கள் உள்ளன. 
அதுபோல ஊர்மேயும் தலைவன் எருமை என்று குறிப்பிடும் பாடல்கள் பல. 
சங்க காலத்தில் இயங்கிய சமுதாயம். குடும்பத் தலைவியை குலமகளின் கற்பைப் போற்றியது. கற்பு வழுவாமல் இருந்தால் தான் குடும்பம் இயங்கும்.
அடுத்த தலைமுறைக்குச் செல்வம் போய்ச் சேரும்.  குலவிளக்கு ஆகத் தலைவி விளங்குகிறாள் என்பது சமூகம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு.
பரத்தையரை குடும்பவிளக்கு எனக் கூற முடியாது.

அதனால் தான், இப்பாடலின் வளர்ச்சி சிலம்பின் பாத்திரங்கள் எனக் கூறினேன். முல்லைக் கற்பின் திறம் : கர்ணகீ/கண்ணகி தாமரை வாழ் செல்வி ஆகிய லக்ஷ்மி.
கோவலனிடம் வாழ்ந்த கணிகை, முல்லைக்குப் பகரியான குருகு/குருக்கத்தி. எனவே, மாதவி எனப் பெயர் கொடுக்கிறார் அடிகள்.

 
இன்னும் புலால் நாறும் மீன் தலைவன் பரத்தமைக்குத் துணை செய்யும் பெண் என்பதும் மிகுந்த பாடல்களில் உள்ளன. 
இவையெல்லாம் தொகைநூற் கால நாட்டார் வழக்காற்றில் மறித்து வந்த கருத்துக்கள். 
பாடலைப் பாடியது பரணர் எனினும் அவர் தன்கால வழக்காற்றைத் தான் பன்னிப் புனைந்தார். அவ்வழக்காறு ஆசைநாயகியைத் தாமரை இலை என்று வேறு எங்கும் சொல்லவில்லை. இருந்தால் எடுத்துக் காட்டுங்கள். என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

தாமரை இலை - இற்பரத்தை, தாமரை - குடும்பத் தலைவி என்று வரும் பாடல்களை முழுமையாகப் பார்க்கணும்.
உவேசா, பின்னத்தூரார், புலியூர்க் கேசிகன் - நாளம் (ஆர் > அரவிந்த) தாங்கும் பச்சை இலைகள் பரத்தையர் என்று
கூறும் உரையைத் தொகுத்து தருகிறேன்.

நற்றிணை 310 போலவே, தாமரை இலை அலைமோதுவதுபோல, இற்பரத்தை அலைப்புண்டதைப் பேசும் பாடலை
அகநானூற்றில் பரணர் பாடியுள்ளார். தாமரை மலர் ஆகிய தலைவி நேரடியாகக் குறிக்கப்படவில்லை. இறைச்சித் தொனியில் இருக்கிறாள் தலைவி.
அவள் தன்னை ஏன் நோகிறாள் என்று பேசுகிறாள் இற்பரத்தை. சேரிப் பரத்தை, அங்கே யாழ், முழவு எல்லாம் பாணர் செய்ய
அங்கே இருக்கும் தலைவனின் சேரிப் பரத்தையை அல்லவா தலைவி நோகணும் என்கிறாள் இற்பரத்தை.
இங்கே, ஒரே தாவரமாக - சுல்தான்களின் ஹேரம் போல - இற்பரத்தையர் தாமரை இலைகளாகவும், தலைவி தாமரைப் பூவாகவும்
இருப்பதை அகநானூற்றுப் பாடலும், நற்றிணை 310 போலவே காட்டுகிறது.

அகம். 186

பரத்தை கூற்று

பொருள் :
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது
திணை : மருதம்
ஆசிரியர் : பரணர்

வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
நீர்மிசை நிவந்த நெடுந்தாள் அகல் இலை
இருங் கயம் துளங்க, கால் உறு தோறும்
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு
எழுந்த கௌவையோ பெரிதே!
நட்பே,
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
மாரி அம்பின், மழைத்தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
செறிவளை உடைத்தலோ இலனே; உரிதினின்
யாம் தன் பகையேம் அல்லேம்; சேர்ந்தோர்
திரு நுதல் பசப்ப நீங்கும்
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.

நா. கணேசன்
இன்னும் இவை போன்ற, தாமரைப்பூ, தாமரைப் பாசிலை இவற்றுடன்
குலவிளக்கு (தலைவி), இற்பரத்தையர் பற்றிய அகப் பாடல்கள் இருக்கலாம்.

 
சக   
 

Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Nov 24, 2020, 10:30:18 AM11/24/20
to vallamai
> The words பாண்கடன் in Puranānūru 201 and 203 imply that the kings and benefactors owed responsibility to bards who nurtured Tamil./// 14 மணி நேரத்திற்கு முன் வேந்தன் ஐயா பதிவிட்டது.
> No; The meaning for பாண்கடன் is entirely misunderstood here. It means that the death ceremony and rituals were done only by பாணர் in those days.
> Even now it is done by their clan only. They did it accepting that it was their duty. So it was mentioned as பாண்கடன் in புறப்பொருள் வெண்பாமாலை.

> இதனால் எனது முடிபான கருத்து என்னவெனில் நற்றிணை 310ல் இடம்பெறும் சொல் "கன்று" தான்.
> சக

நன்று. பாடல் தெளிவாக இருக்கிறது. கன்று களிறு என மாற்றியது அண்மைக்காலத்தில் நேர்ந்த குழப்பம். வைதேகி ஹெர்பெர்ட்டை அறிவேன்.
ஆர்வத்தில் சங்க மொழிபெயர்ப்பு செய்பவர். அவருக்கு எழுத வேண்டும்.

நா. கணேசன்


Virus-free. www.avg.com


Virus-free. www.avg.com

kanmani tamil

unread,
Nov 24, 2020, 12:53:49 PM11/24/20
to vallamai
அகம்- 186
உள்ளுறை உவமம்:

தாமரை = தலைவி 

தாமரை இலைகள் = தலைமகளுக்குப் பாங்காயினோர் 

காற்று = ஊரார் புறம்பேசல் 

பாணனது தூண்டிலில் சிக்கிய மீன் = பரத்தமை பூண்ட தலைவன் 

இறைச்சி:
புணை = இற்பரத்தை 
வெள்ளத்தை நீந்துதல் = காமம் தீர்தல் 

And miles to go before you understand 
And miles to go before you understand 
Sk

N. Ganesan

unread,
Nov 24, 2020, 2:59:42 PM11/24/20
to vallamai
On Tue, Nov 24, 2020 at 11:53 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அகம்- 186
உள்ளுறை உவமம்:

தாமரை = தலைவி 

தாமரை இலைகள் = தலைமகளுக்குப் பாங்காயினோர் 

காற்று = ஊரார் புறம்பேசல் 

பாணனது தூண்டிலில் சிக்கிய மீன் = பரத்தமை பூண்ட தலைவன் 

இறைச்சி:
புணை = இற்பரத்தை 

வேழக்கரும்பால் (கொறுக்கச்சியால்) செய்த புணை, இற்பரத்தை, யாழ் வல்ல சேரிப்பரத்தை இருவருக்கும் வருகிறது.
இல்லத்தில் இருக்கும்போது இற்பரத்தை, வெளியே சேரிப் பரத்தை. எனவே, பரஸ்த்ரீகளின் இருவகுப்பாருக்கும்
இடையே காமக்கடலைக் கடக்கும் புணையை வைத்தார் பரணர்.

குடும்பத்தில் தலைவி இருக்கும் இல்லில், கூடவே வாழும் இற்பரத்தையர் தாமரை, அத்துடன் உள்ள பாசிலைகள்.
தலைவன் செயல் இவ்விலைகளை அலைமோதச் செய்கிறது.

 
வெள்ளத்தை நீந்துதல் = காமம் தீர்தல் 

And miles to go before you understand 
And miles to go before you understand 
Sk


நா. கணேசன்

Virus-free. www.avg.com

வேந்தன் அரசு

unread,
Nov 24, 2020, 8:29:26 PM11/24/20
to vallamai


செவ்., 24 நவ., 2020, பிற்பகல் 11:23 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
அகம்- 186
உள்ளுறை உவமம்:

தாமரை = தலைவி 

தாமரை இலைகள் = தலைமகளுக்குப் பாங்காயினோர் 

காற்று = ஊரார் புறம்பேசல் 

பாணனது தூண்டிலில் சிக்கிய மீன் = பரத்தமை பூண்ட தலைவன் 

இறைச்சி:
புணை = இற்பரத்தை 
வெள்ளத்தை நீந்துதல் = காமம் தீர்தல் 



"நோன் ஞாண் வினைஞர்  எதற்கு உவமை? 

N. Ganesan

unread,
Nov 25, 2020, 6:26:02 AM11/25/20
to வல்லமை
பாணருக்கு உவமை. பாணர் பிடிக்கும் மீன், வாளை போன்றன யாழ் வல்ல சேரிப் பரத்தை.
இம் மீன்களால், இல்லிடைப் பரத்தையர் (தாமரைத் தண்டில் உள்ள பச்சிலைகள்) கலங்குகின்றனர், கதறுகின்றனர்.
இற்பரத்தையரிடம் இருந்த தலைவன் பாணர் - பரத்தையர் சேரிக்குப் போய்விடுகிறான். வேழப்புணை பரத்தையர்க்கு உவமை. For both illiDai & cEri kinds; hero uses them just for pleasure - Use & Throw culture.

"அவன் எம்மிடம் இல்லை; பாண் சேரியில் அல்லவா இருக்கிறான்? எம்மை ஏன் நோகிறாள் தலைவி? அவள் நிலையிலே தான் நாங்களும்” என்று சக்களத்தி (சேரிப் பரத்தை) பற்றி இல்லிடைப் பரத்தையர் புலம்பும் பாடல். நற்றிணை 310 போலவே, இங்கும், ஒரே இல்லில் வாழும் இற்பரத்தையர் என்னும் காமக்கிழத்தியர் தாமரைத் தாவரத்தின் பச்சிலைகளுக்கும், தாமரைப் பூ தலைவிக்கும் உவமையாக மகாகவி+ ஜர்னலிஸ்ட் பரணர் பாடிய பாடல் அகம் 186.
எப்பொழுதும் போல, சரித்திர நிகழ்ச்சி ஒன்றை - பழையன் காவிரிக் கரையில் போஒர் - பதிவு செய்கிறார்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Nov 25, 2020, 11:52:03 AM11/25/20
to vallamai
///"நோன் ஞாண் வினைஞர்"  எதற்கு உவமை? /// 14 மணி நேரத்திற்கு முன்னர் வேந்தர் ஐயா கேட்டது.

எதற்கும் உவமை இல்லை ஐயா. அது பாடல் சொல்வது போலவே பாணனை மட்டுமே குறிக்கிறது. ஏனென்றால்  
"வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சி"  என்கிறது பாடல். அதாவது மழை பொழியாமல் நீர்நிலையில் நீர் வற்றினாலும் கவலை இல்லை. பாணனுக்கு இழப்பு ஏதும் இல்லை. நீர் வற்றும் காலத்தில் கிடைக்கக் கூடிய மீன்கள் அவனுக்குப் போதுமானது. பாணர் கோளாறாகப் பிடிக்கும் மீன் மிகுந்த நீர்நிலை; அந்த நீர்நிலையில்... 
தாமரை= தலைவி.
பசிய இலைகள் = அவளுக்குத் தோழியராகவும் உறவினராகவும் இருக்கும் கூட்டுக்குடும்பத்தார்.
தலைவன் ஊரன் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டு இருப்பதால் அவன் திணைமாந்தன்; அதாவது கிழான்.
அவனது 'இற்பரத்தை' என்று தொகுத்தோர் கூறியிருப்பினும்; அவள் ஒருவீட்டில் உடன் உறைபவள் இல்லை என்பது பாடற்பொருளிலிருந்து  தெரிகிறது. எனவே தொகுத்த காலத்தில் எழுதப்பட்ட கொளு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. காதற்பரத்தை என்று சொல்லலாம்.
பாணர் மீன் பிடிப்பதைப் போலப் பரத்தமை ஒழுக்கத்தில் நாட்டமுள்ள தலைவனைத் தம் பக்கல் ஈர்த்து விட்டனர்.
தலைவனது புறத்தொழுக்கம் பற்றி ஊர்முழுதும் அலர் எழுகிறது.
அதைக்கேட்டு உறவினர் சலசலக்கின்றனர்.
அவர்களது ஐயம் காதற்பரத்தை மேல் எழுகிறது; அவள் இல்லை என மறுக்கிறாள். 
சக 

    

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Nov 25, 2020, 9:13:57 PM11/25/20
to vallamai
நன்றி

புத., 25 நவ., 2020, பிற்பகல் 10:22 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Nov 27, 2020, 7:36:09 AM11/27/20
to vallamai
///"நோன் ஞாண் வினைஞர்  எதற்கு உவமை?/// 2 நாட்களுக்கு முன் வேந்தர் ஐயா கேட்டது 
ஏற்கெனவே ஒருமுறை பதில் கூறினாலும்; தொடர்ந்து சிந்தனையைத் தூண்டிய கேள்வி.
இன்னொரு கோணம்:
இப்பாடல் திணைமாந்தனாகிய ஊரன் = கிழான் பற்றியது.
கிழார் பாரம்பரியமாகப் புன்செய் வேளாண்மை செய்தவர்.(வேளாளர் வந்தேறிய பின்னர் அவர்க்காகவும் சோழ மன்னனுக்காகவும் மட்டுமே நெல் வேளாண்மை செய்தனர்.)
புன்செய்ப்பயிருக்கு நீர் மிகுதியாகத் தேவைப்படாது.
எனவே மேம்போக்காக பாணன் மீன்பிடிப்பதைப் பேசினாலும்; 
                                             அது குறிப்பாகப் பரத்தமை மேற்கொண்ட தலைவனைப் பாணன் வசப்படுத்தினான் என்று புரிந்தாலும்;
ஆழ்ந்து பார்க்கும் போது இன்னொரு இறைச்சிப் பொருள் இருப்பதாகவும் படுகிறது.
பாணன் = பாட்டின் தலைவனாகிய ஊரன் 
மீன் = சேரிப்பரத்தை 
சக    


N. Ganesan

unread,
Nov 27, 2020, 8:48:23 AM11/27/20
to vallamai, housto...@googlegroups.com
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும்
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை

மீனவர் பாணர்க்கும், மீன் பரத்தைக்கும் உவமை.
மீன் என்பது குதிக்கும் கெண்டை (கயல்), வாளை போன்றன.
மீன்சேரியில் ஊரர் மீன் வாங்க வரும் நுகர்வோர் (Consumer)
பாண்சேரியில் ஊரன் பரத்தை பெற வரும் நுகர்வோன்.

மீனைப் பரத்தைக்கு ஒப்பிடும் சங்கப் பாடல் பல. ஏழு காட்டுகள்.

NG


 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Virus-free. www.avg.com

வேந்தன் அரசு

unread,
Nov 27, 2020, 8:22:47 PM11/27/20
to vallamai, mintamil


செவ்., 2 ஜூன், 2020, முற்பகல் 9:34 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
///குறிஞ்சி நிலத்துக்காதலனை(திணையல்ல) "குறவன்" என்று சொல்லும் பாடல் இல்லை என்று சொல்லுகிறேன்/// வேந்தன்ஐயா wrote 15hrs ago. 
"குன்றக்குறவன் காதல் மடமகள்" - எப்படி ஐயா பொருள் கொள்வது?
சக 


இங்கு குறவன் காதலன் அல்லன், தந்தை.


kanmani tamil

unread,
Nov 27, 2020, 11:38:38 PM11/27/20
to vallamai

kanmani tamil <kanmani...@gmail.com>

Jun 4, 2020, 12:22 AM
to mintamil
வேந்தன் ஐயா, 
நீங்கள் சொல்வது போல 'குன்றக்குறவன் காதல் மடமகள்' என்ற தொடரில் அவன் தந்தை என்றே கொள்ளலாம். 
ஆனால் குறிப்பிட்ட நற்றிணை 341ம் பாடலில் அவ்வாறு கொள்வதற்கில்லை
சக 




--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 10, 2020, 2:49:37 AM12/10/20
to vallamai
நற்றிணை- 400ம் பாடலும் அதற்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரின் உரையும் பின்வருமாறு : 

வாழைமென் தோடு வார்புறுபு ஊக்கும் 
    
நெல்விளை கழனி நேர்கண் செறுவின் 
    
அரிவனர் இட்ட சூட்டயல் பெரிய 
    
இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர 
5
நின்இன்று அமைகுவென் ஆயின் இவண்நின்று 
    
இன்னா நோக்கமொடு எவன்பிழைப்பு உண்டோ 
    
மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து 
    
அறங்கெடல் அறியாது ஆங்குச் சிறந்த 
    
கேண்மையொடு அளைஇ நீயே 
10
கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே. 

     (சொ - ள்.) வாழை மெல் தோடு வார் உறுபு ஊக்கும் - வாழையின் மெல்லிய தாற்றின் நுனியில் நாலும் பூவை நிலத்தினின்று ஓங்கி வளர்ந்துற்று அசையச் செய்கின்ற; நெல்விளை கழனி கண் நேர் செறுவின் - நெற்கதிர் விளையாநின்ற வயலிலே கண்ணுக்கு இனிய சேற்றில்; அரிவனர் இட்ட சூட்டு அயல் - கதிரறுக்கும் மள்ளர் அறுத்துப் போகட்ட அரிச்சூட்டின் பக்கத்தில்; பெரிய இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர - பெரிய கரிய பிடரையுடைய வாளைமீன் பிறழாநிற்கும் ஊரனே!; நின் இன்று அமைகுவென் ஆயின் - நீயின்றி யான் பொருந்தியிருப்பேனாயின்; இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டு - இங்கு நின்று இனிமையைத் தராத நோக்கத்துடனே என்ன பிழைப்புண்டு? யாதுமில்லை!; மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - ஆதலின் மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து; அறம் கெடல் அறியாது ஆங்கு - அறம் கெடவறியாது நின்று நிலைபெற்றாற் போன்று; நீ சிறந்த கேண்மையொடு அளைஇ என் நெஞ்சத்தான் கெடு அறியாய் - நீதான் சிறந்த நட்புடனே அளாவி என்னெஞ்சினின்று நீங்குந் தன்மையைக் கற்றறிந்தா யல்லை! அதனால் நீ உளனாயிருப்பின் யான் உளனாவேன் காண்!; எ - று.

     (வி - ம்.) நேர்கண் செறு - கண்ணுக்கினிய செறு. சுவல் - பிடர். உறுபு ஊக்கும், ஊக்குதல் - அசைத்தல்.

     உள்ளுறை:- வாழையினது பூவை அசைக்கின்றனவாகிய வயலில் உண்டாகும் நெற்கதிர்களை மள்ளர்கள் அறுத்துப்போகட்ட அரிச்சூட்டின் அயலின்கண்ணே வாளை பிறழுமென்றது, தலைவியினது நெஞ்சை வருத்துகின்றனவாகிய காதற் பரத்தையின் செய்கைகளை வாயில்கள் அடக்க அவள் நெஞ்சிலே தலைவன் விளங்கலாயினா னென்பதாம். மெய்ப்பாடு - உவகை. பயன் - தலைவனைப் பரத்தை புகழ்தல்.

பாடலைத் தொகுத்தோர் 'இது பரத்தையின் கூற்று' என்றும்; பரத்தை தலைவனைப் புகழ்கிறாள் என்றும் குறிப்பிடுகின்றனர்.

என் மறுப்பு:
இது தலைவியின் கூற்று.
இப்படி அறுதியிட்டுச் சொல்ல ஆதாரமாக அமைவது பாடலில் உள்ள இறைச்சியும் , உள்ளுறையும் ஆகும் .

பொதுவாகவே இந்த இறைச்சிப் பொருளை உரையாசிரியர் தவிர்த்து எழுதுவதைப் பார்க்க முடிகிறது. வெளிப்படையாகப் பேச முடியாதது ஆதலால்; சென்ற நூற்றாண்டில் உ.வே.சா. முதல் இன்றுவரை யாரும்  எடுத்துச் சொல்ல முனைவதில்லை.
ஆனால் தமிழாசிரியராகிய நாங்கள் சொல்லாமல் தவிர்த்தால் வகுப்பில் இருக்கும் பதின்ம வயது மாணவர் (பொதுப்பால்) தப்புத் தப்பாகக் கற்பனை செய்யத் தொடங்கி விடுவர். மாணவிகள் ஒருபடி மேலே சென்று 'இந்த ஆசிரியர்க்குப் பொருள் சரியாகத் தெரிவதில்லை; எதையும் தவிர்த்து விட்டுத் தாவிச் செல்கிறார்' என்று மேலதிகாரிகளுக்கு பின்னூட்டம் (feedback ) கொடுத்து விடுவர். அதனால் நாங்கள்  எதையும் பட்டும் படாமல் நாசூக்காகச் சொல்லியே பழகி விட்டோம்.

முதலில் இறைச்சி:
பாடலின் முதல் இரு அடிகளில் இருக்கிறது.
குலை தாழ்ந்த வாழைப்பூவின் மென்மையான மடலை கழனியில் விளைந்த நெற்கதிர்கள் தடவிக் கொண்டு இருக்கின்றன.      

"வாழைமென் தோடு வார்புறுபு ஊக்கும் நெல்விளை கழனி " 

வாழையின் குலை தாழ்ந்து இருப்பதன் காரணம: அதில் முற்றிக் கனிந்திருக்கும் பழங்கள், அதன் பாரம், இனிமை, வளமை எல்லாம்......... இது தலைவி இல்லறத்தில் தலைவனுக்குக் கடம்பட்டு இருப்பதைச் சொல்லாமல் சொல்லும் உத்தி. 
தலைநிமிர்ந்து நிற்கும் கதிர் அந்த வாழைக்குலையை உரசுகிறது..........தலைவன் தலைவியுடன் கூடி மகிழ்கிறான்.
கணவனும் மனைவியும் துய்க்கும் இன்பம் பற்றிப் பரத்தை பேச வேண்டிய தேவை இல்லையே; தலைவி தான் துய்த்த இன்பத்தைக் குறிப்பாகச் சொல்கிறாள். 

இனி உள்ளுறை:
"............ ............. ............ நேர்கண் செறுவின் 
அரிவனர் இட்ட சூட்டயல் பெரிய 
இருஞ்சுவல் வாளை பிறழும் ஊர"

கதிர் முற்றிவிட்டது; அதன் தலை சாய்ந்து விட்டது. இப்போது வாழையின் குலையும் கதிரும் சேரவில்லை......... தலைவன் மனைவியோடு இன்பம் துய்க்கவில்லை.   
மள்ளர் கதிரை அறுத்துச் செறுவில் குவிக்கின்றனர்........ பாணர் போன்றோர் தலைவனைப் புறத்தொழுக்கத்திற்குத் தூண்டுகின்றனர்.
களத்தின் அடுத்து உள்ள பொய்கையில் பெரிய வாளை துள்ளிக் கொண்டு இருக்கின்றது......... தலைவனுக்கு வாய்ப்பாக அருகில் ஆடல் வல்ல  பரத்தை இருக்கிறாள்.
இப்படிப்பட்ட ஊரின் தலைவனே ! 

தலைவி நேரடியாகச் சொல்லும் செய்தி:
உன்னைப் பிரிந்து இருப்பது எனக்கு என்ன இன்பத்தைத் தரப்போகிறது? எப்படி நான் உயிர்த்திருப்பேன்?
நீ என்னைப் பிரிந்து பிற பெண்ணை நாடிச் சென்று விட்டாய்; ஆனாலும் என் மனதிற்குள்ளே நீ தானே நிறைந்து இருக்கிறாய்; அதனால் தான் நான் துன்பத்துள் மூழ்காமல் உயிர்த்து வாழ்கிறேன். உன்னோடு கொண்ட உறவின் நெருக்கமும் அன்பும் எனக்குப் புத்துணர்ச்சி அளிக்கின்றன. 

"நின்இன்று அமைகுவென் ஆயின் இவண்நின்று 
இன்னா நோக்கமொடு எவன்பிழைப்பு உண்டோ
... ... ... ... ... ... ...........................................சிறந்த 
கேண்மையொடு அளைஇ நீயே 
கெடுவறி யாய்என் நெஞ்சத் தானே "
தங்கள் தாம்பத்தியத்தில் இருக்கும் நெருக்கம் பற்றிப் பேசுபவள் மனைவி. பரத்தைக்கு இந்தத் தலைவன் போனால் இன்னொருவன். 

செய்தியை வலுப்படுத்தும் உவமை:

"மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து 
அறங்கெடல் அறியாது ஆங்குச்"
சோழனின் தலைநகராகிய உறந்தையின் அவைக்களத்தை விட்டு அறம் நீங்குவதே இல்லை; அதுபோல் என் மனதை விட்டு நீ நீங்கவே இல்லை. 

பரத்தையிடமிருந்து தன் இல்லம் வந்த தலைவனிடம் மனைவி ஊடலை வெளிப்படுத்தும் நயம் தான் பாடலது அழகின் உச்சம்; அவள் வாயைத் திறந்து சண்டை போடவில்லை. ஆனால் அவளது சொல் ஒவ்வொன்றும் ஊசி போலத் தலைவன் மனதில் இறங்கிக் குத்தும். 

தொகுத்தோர் பரத்தை கூற்று என்று சொல்லக் காரணம்:
ஒரு குடும்பப் பெண் கணவனோடு துய்த்த இன்பத்தைக் குறிப்பாகக் கூடச் சொல்வது ஏற்றுக் கொள்ள இயலாதது என்ற மனப்பான்மை தான். 
சக 


வேந்தன் அரசு

unread,
Dec 10, 2020, 9:52:37 PM12/10/20
to vallamai


வியா., 10 டிச., 2020, பிற்பகல் 1:19 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
இப்படியும் பொருள்கொள்ளலாம்.
நான் பரத்தையே ஆனாலும் நீ இன்றி எனக்கு வாழ்வு இல்லை. உறந்தை நகரத்து நீதிபோல் என் உள்ளம் மாறாது என்றும் கொள்ளலாம்

Sakthivelu Kandhasamy

unread,
Dec 10, 2020, 10:12:27 PM12/10/20
to vall...@googlegroups.com

சரியான பொருள் கோளல்’ -  சொன்னதற்கு  நன்றி  ஐயா.

 

Sent from Mail for Windows 10

--

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 10, 2020, 11:14:05 PM12/10/20
to vallamai
தாமரை தலைவிக்குரிய குறியீடாகவும்; 

எருமை பரத்தமை பூண்ட தலைவனின் குறியீடாகவும்;

மீன் தலைவனின் பரத்தமைக்குத் துணையாக இருக்கும் பெண்டிர்க்குரிய குறியீடாகவும்;
அமைந்திருப்பது போல...

குலை தள்ளிய வாழை குடும்பத் தலைவிக்கு உரிய குறியீடு ஐயா. 
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Dec 12, 2020, 2:06:09 AM12/12/20
to vallamai
///நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீனுண் குருகிளங் கானல் அல்கும்
கடலணிந் தன்றவர் ஊரே
கடலினும் பெரிதெமக் கவருடை நட்பே!
                                                                           ஐங்குறுநூறு- 184 

நெய்தல் திணையில் மருதத்தின் உரிப்பொருள்
நெய்தல் திணையில் நெய்தல் நிலமானது ‘நெய்தல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.184:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும இடம்பெற்றுள்ளது என்பது இங்குச் சுட்டத்தக்கது. நெய்தல் நிலமானது பெரிய நீர்நிலையும், அந்நீர் நிலையில் மலர்ந்த நெய்தல் மலரும், நெய்தல் மலருக்கு அருகில் மீன்களும், அம்மீன்களை உண்ட குருகு கடற்கரைச் சோலையில் தங்குவதாகவும் வருணிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை,
“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி
மீன்உண் குருகினம் கானல் அல்கும்
கடல்அணிந்தன்று அவர் ஊரே” (ஐங்.நெய்.184:1-3)
என்னும் பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன. இப்பாடலில், நெய்தல் நிலம், இந்நிலத்திற்குரிய பெரிய நீர்நிலைகள், நெய்தல் மலர், நெய்தல் நிலத்தினைச் சார்ந்து வாழும் மீனை உண்ணும் குருகினம், கடற்கரைச்சோலை, கடல் ஆகிய வருணனைக் கூறுகளை உட்படுத்தி நெய்தல் நிலத்தினை வருணித்திருப்பது அம்மூவனாரின் கவிப் புலமையினை வெளிப்படுத்தும் சிறப்பு எனலாம்.

நெய்தல் நிலத்திலுள்ள பெரிய நீர்நிலையில் மலர்ந்திருந்த மணமிக்க நெய்தல் மலர் தலைவி. நெய்தல் மலருக்கு அருகிலுள்ள இழிந்த நாற்றமுடைய மீன் பரத்தை. அம்மீனை உண்ட குருகானது பரத்தையிடம் இன்பம் அனுபவித்த தலைவன். குருகு கடற்கரைச் சோலையில் தங்குவது என்பது தலைவன் பரத்தையர் சேரியில் தங்குதல் என்பதாக உள்ளுறைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுரிப்பொருளானது மருதத்திணையில் இடம்பெற வேண்டியது நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பதைத் திணைமயக்கம் என்று கூறுவர். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் நெய்தல் திணையாக அமைந்துள்ளது. உள்ளுறைப்பொருளால் மட்டும் மருதத்தின் உரிப்பொருள் வந்துள்ளது. இப்பாடலின் மூலம், நெய்தல் நிலத்திலும் தலைவன் பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.

இக்கட்டுரையில் நெய்தல் நிலத்தின் பல்வேறுபட்ட பெயர்கள் எத்தனைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் புள்ளிவிவரத்தோடு அறியமுடிகின்றது. நிலவருணனையின் வாயிலாக நிலத்தினுடைய தன்மை வெளிப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளாக உள்ளுறையின் வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மருதத்திணையின் உரிப்பொருளானது நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ளதால் திணைமயக்கத்திணையும் இங்குக் காணமுடிகின்றது.” பா. ஈஸ்வரன், http://www.muthukamalam.com/essay/literature/p179.html/// 

என் மறுப்பு
மேற்சுட்டிய விளக்கத்தில் உரிப்பொருள் பற்றியும் திணை மயக்கம் பற்றியும் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பொருத்தமற்றவை. 

தலைவன் கடல்சார் நிலப்பரப்பைச் சேர்ந்தவன்; என் அன்பு கடலைக்காட்டிலும் பெரிது என்று சொல்லும் தலைவி கணவனோடு சண்டை போடவில்லை. பாட்டில் ஊடல் தொனியும்  இல்லை 
பரத்தையிடம் போனால் உடனே மருதமாகாது; ஊடல் இருந்தால் மட்டும் தான் மருதம். இங்கு ஊடல் இல்லை.
அவள் அடக்க மாட்டாமல் அழுகிறாள். =  இரங்கல் நெய்தலுக்குரிய உரிப்பொருள்.
நெய்தல் நிலத்திலும் தலைவன் பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.  
அகப்பொருள் இலக்கணத்தின் அடிப்படை புரியாமல் சொல்லப்படும் கூற்று.
கூடல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து ஒழுக்கங்களும் தமிழகத்தில் இருந்த ஐந்துவகை நிலங்களிலும் காணப்பட்டவையே.
அதாவது களவுக்காதல், கற்புக்கடம் பூண்டு ஆற்றி இருப்பது, புறத்தொழுக்கம் கண்டு ஊடுவது, தாங்க இயலாத துயர் கொண்டு அழுவது என்ற இவை அனைத்தும் எல்லா மக்களின் வாழ்க்கையிலும் பொதுவாக நடக்கக் கூடியவையே. அதனால் இந்த உணர்ச்சிகளும் நிகழ்ச்சிகளும் உலகப் பொதுவானவை. 
ஆனால் ஒரு அகப்பாடலைப் புனையும் போது எந்த உணர்வுநிலையைப் பாட முனைகின்றனரோ; அந்த உணர்வுக்கு ஏற்ற இடப்பின்புலத்தையும் காலப்பின்புலத்தையும் வரையறுத்துக் கொடுப்பதே அகப்பொருள் இலக்கணம்.

ஒரு காதல் துளிர்ப்பதையும்; உற்றார்க்கும் பெற்றோர்க்கும் ஊரார்க்கும் தெரியாமல் சந்திப்பதையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பின்புலத்திலும்;
ஒரு தலைவியோ; தலைவனோ மனத்திண்மையோடு ஆற்றி இருப்பதை முல்லை பூத்த காட்டின் பின்புலத்திலும்;
வெளிப்படையாகவோ; மனதோடு புலம்பியோ கோபத்தைக் காட்டுவதைச் செழிப்பான ஆற்றின் வேளாண் பின்புலத்திலும்;
பொறுக்க மாட்டாமல் கண்ணீர் துளிர்க்கப் புலம்புவதைக் கடல் பின்புலத்திலும்;
பிரிந்திருக்க வேண்டிய சூழலைப் பாலைக்காட்டுப் பின்புலத்திலும்; 
பாடுவது சிறப்பு என்று வரையறுப்பதே தமிழின் தனிச்சிறப்பாகிய அகப்பொருள் இலக்கணம். 

மேற்சுட்டிய பாடலில் அவனுக்குச் சொந்தமான கடலைக்காட்டிலும் என் அன்பு பெரியது என்ற கூற்று பொறுக்கமாட்டாத வலிமிகுந்த மனத்தின் வெளிப்பாடு ஆகையால் இங்கே நெய்தலுக்கு உரிய உணர்வும் பின்புலமும் பொருத்தமே அன்றித் திணைமயக்கம் ஏதுமில்லை.

இந்த இலக்கணம் இருபதாம் நூற்றாண்டுத் திரைப்படங்களில் முற்றிலும் காலாவதி ஆகிப் போய்விட்டது.
ராஜஸ்தான் பாலைவனத்திலும் டூயட் பாட வைத்துப் படம் எடுப்பர். 

சக       





N. Ganesan

unread,
Dec 12, 2020, 6:17:27 AM12/12/20
to வல்லமை
சிறப்பு. நன்றி.

நெய்தல் திணைச் செய்யுளில்
குருகு, நாரை = தலைவன்.
மீன் = பரத்தை
என்னும் உதாரனத்திற்குத் தந்தேன்.
~NG

kanmani tamil

unread,
Mar 6, 2021, 3:03:51 PM3/6/21
to vallamai


///முல்லைத்திணையில் இருத்தல். அதன் கல்வெட்டு. கலியாணச் சீரில்
எருமைப்பேட்டின் கொம்பு வழிபாடு, ... நிறையச் சொல்லவேண்டும்./// Dr.கணேசன் nov 3rd 2019 எழுதியது . 

/// (2) அவன் மனை கௌரி/கொற்றவை எருமைக்கோட்டை வைத்து புதுமணல் பரப்பி, மணவறை சோடித்து நிகழும் கலியாணச் சீர்களில் வழிபடுவதை முல்லைக்கலிப் பாட்டு அறிவிக்கிறது. ///. Dr.Ganesan wrote on oct.25th 2019

///எருமைப்பெடையின் கோடு என்று வருவித்தால் தான் முல்லைக்கலியில் உள்ள 
கலியாணச் சீர் விளங்குகிறது எனத் தமிழறிஞர்கள் பல நூற்றாண்டுகளாக எழுதிவருகின்றனர்........
எருமைப்பெடைகோடு இல்லாவிட்டால் அப்பாடல் பொருள் இல்லை.
எருமையை கலியாணச் சீரில் முல்லைத்திணை மாந்தர் நிறுத்துவதில்லை.
முல்லை என்ற திணைப்பெயர் எங்கே கல்வெட்டில் என்று பார்த்து,
கலியாணங்களைக் கூர்ந்து கவனித்தால் அறிந்துகொள்ளலாம்.///  Dr.Ganesan wrote on oct.10th 2019

இப்படி இன்னும் எத்தனையோ முறை முல்லைக்கலியில் இடம்பெறும் பாடல் பற்றிக் கருத்துரை மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. இதற்குரிய என் மறுப்பை முழுமையாக நான் ஒருநாளும் சொல்லவில்லை ஆதலால் அதைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். குறிப்பிட்ட முல்லைக்கலிப் பாடல் திருமணத்தன்று பாடப்படவே இல்லை என்பது தான் உண்மை. பாடலை முழுமையாகப் பார்க்கலாம். முல்லைக்கலி 114

"வாரி, நெறிப்பட்டு, இரும் புறம் தாஅழ்ந்த
ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவ மலர் தைஇ, எமர் என் பெயரால்,
வதுவை அயர்வாரைக் கண்டு? 'மதி அறியா
ஏழையை' என்று அகல நக்கு, வந்தீயாய், நீ  5
தோழி! அவனுழைச் சென்று
'என் காதலன் ஓரி முடி உடைய  குழந்தை போல அழுது கொண்டு இருக்கிறானா? என் பெற்றோர் புதுமலர் சூட்டி எனக்குத் திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டும் எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கிறானே!  செயலாற்ற வேண்டியவன் அவன்தான் என்று புரிந்துகொள்ள இயலாது (மங்குணி மாதிரி) இருக்கிறானே ?!   என் இரங்கத்தக்க நிலைமை அறிந்து நீ இப்படிச் சிரித்துக் கொண்டு வருகிறாயே! அவனிடத்தில் சென்று சொல்வாயாக...'   இது தலைவியின் ஆற்றாமை மிகுந்த அங்கலாய்ப்பு .      

யான் அறிவேன்; கூறுக, மற்று இனி
  சொல் அறியாப் பேதை' மடவை!  
'எனக்குத் தெரியும்; இந்தச் சூழலை எப்படிக் கையாள்வதென்று ... நீ சொல்ல வந்ததைச் சொல். உனக்குத்தான் பேசத் தெரியாது; மக்கு ' இது தோழியின் நம்பிக்கை மிகுந்த பதில்  

................... ................ ................. மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று;
நினக்கு வருவதாக் காண்பாய்'. அனைத்தாகச்   10
சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு
தரு மணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய
'ஏலே; நீ என் நிலைமையில் இருந்தால் அல்லவா தெரியும்... என்னை நீங்கிச் சென்று காலம் தாழ்த்தாதே. உன் பிரச்சினை போல எண்ணிச் செயல்படக் கடவாய். அவனுக்கு எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துச் சொல். புதுமணல் பரப்பி விட்டனர்; சுவருக்குப் பூவல் ஊட்டி விட்டனர். ஒரு எருமைப் பெடையுடன் சேர்த்து மண ஏற்பாடு நடக்கிறது (அதனால் இத்திருமணம் உறுதியாக நிகழ்ந்து விடும்போல் தோன்றுகிறது.). ஆனால் நான் அவனைப் பிரிந்து தனிமையில் வாடுகிறேன்'. இது தலைவியின் பதட்டம்...   

வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த   15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்;
'அன்று தோழியரோடு சிற்றில் புனைந்து விளையாடிக் கொண்டு இருந்த போது என்னைத் தனியே அழைத்துச் சென்று மணந்தமை அவனுக்கு எப்படி மறக்கும்?' தன் களவைச் சொல்லி; அவன் நடத்தையை வியக்கிறாள். 
 
... ....... .................. ....................... 'ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ' 
'ஆனால் இப்போது ஒன்றுமே நடக்காத மாதிரி மனம் பதறாமல் இருக்கிறானே?!' தலைவி பதட்டத்தின்  உச்சத்தில்.... 
............. ................... ..................... அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு   20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?
'உலகமே கிடைத்தாலும் ஆயர்குலப் பெண் இரண்டு கணவரை ஏற்றுக்கொள்ள மாட்டாளே!' இது அவளது முடிவைக் குறிப்பாக உணர்த்தும் பேச்சு; ஒன்று - அவன் பெண்கேட்டு வரவேண்டும். / அல்லது தன்னை அழைத்துச் செல்லத் தயாராக இருக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் உயிர்வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தன்னை மணந்து கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கத் தெரியாத தலைவன்.... என்ன செய்ய வேண்டும்? என்ன சொல்ல வேண்டும்? வெற்றிகரமாகத் தன்னை மணப்பது எப்படி என்றெல்லாம் தோழி அவனுக்குப் பாடமெடுத்து அறத்தொடு நிற்க வற்புறுத்துகிறாள். அவன் கட்டிளம் காளை தான்; தலைவி மேல் காதல் மிகுந்தவன் தான். காரியக்காரனாக இல்லாமல்; விஷயம் கைமீறிப் போவதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவன்; பெண்கேட்கத் தன் பெற்றோரை வற்புறுத்தாமல் வாளா இருக்கிறான். அவனுக்கு 'ஓரிப் புதல்வன்' என்று பட்டம் கட்டுகிறாள்; இதுகூடத் தெரியவில்லையே என்ற போக்கில் புலம்பும்  தலைவி.

பாடலின் போக்கு அது திருமண நாள் இல்லை; திருமணம் நெருங்குகிறது என்றுதான் சொல்கிறது. பின்னர் எப்படி எருமைக்கொம்பு நடப்பட்டது என்று சொல்ல இயலும்? அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கும் போது எருமைப்பெடை சீதனமாகப் பேசப்பட்டது என்பது தான் பொருத்தம். டௌரி கொடுக்கும் திணைமாந்தர் பழக்கத்திற்கு நல்ல சான்றுப்பாடல். அது மட்டுமல்ல; தூது இலக்கணம் பொருந்திய தொகை இலக்கியப் பாடல் என்னும் பெருமையும் இப்பாடலுக்கு உள்ளது.

சக  



kanmani tamil

unread,
Jul 11, 2021, 1:16:24 PM7/11/21
to vallamai
/முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி
        வாராது அட்ட வாடூன் புழுக்கல் – பெரும் 99,100
விளிம்பு உடைந்துபோய் கரடுமுரடான குழியுடைய முரிந்த அடுப்பிலே ஏற்றி,
தாளிதம், தண்ணீர், எண்னெய் என எதுவும் வார்க்காமல்  சுட்ட (மான் தசையின்) வாடூன் (கபாப்).
இத்துடன், புழுக்கல் “steamed rice" பக்கலில் வைத்து உண்ணும் உணவு.

முரவுவாய் குழிசி = விளிம்பு உடைந்த பானை 
முரிஅடுப்பு ஏற்றி = முரிந்த அடுப்பில் ஏற்றி 
வாராது அட்ட = வடிக்காமல் சமைத்த 
வாடூன் புழுக்கல் = பதப்படுத்திய உப்புக்கண்டம் எனப்படும் கொடிக்கறியை வேகவைத்து...
பாடலின் 99ம் அடிக்கு முன்னர் எயிற்றியர் கரம்பை நிலத்தைத் தோண்டிப் புல்லரிசியைச் சேகரித்து அதைப் பாறையில் அமைந்த நிலவுரலில் குற்றுகின்றனர். குற்றிய தானியத்தைச் சமைக்க நீரைச் சேகரிக்கின்றனர். மிக முனைந்து தோண்டிய ஊற்றிலிருந்து உவர்நீரை எடுத்துவருகின்றனர். அந்நீரையே வேக வைக்கப் பயன்படுத்துகின்றனர் எனல் பொருந்தும். 
இங்கே சமைக்கப்பட்டது புல்லரிசியும் வேட்டையில் கிடைத்த மானிறைச்சியின் வாடூனும் ஆகும். 

பார்வை மானை வைத்து, மான் வருவதைக் கொன்று, கறி சமைக்கிறார்கள்.
அதாவது, venison (மான்கறி) kebab , புழுக்கிய சோறு, உப்புத் தண்ணீர்
- மூன்றும் பாணனுக்கு எயிற்றியர் அளிக்கின்றனர். நல்ல தண்ணீர் கூட இல்லாத உப்புக்கிணறு.
அந்தக் காட்டிலும், பாணனுக்கு மான்கறி கபாபும், அவித்த புழுக்கும் கிடைக்கிறது.
கை வாய் கழுவவும், தாகத்திற்கு அருந்தவும் உப்புநீர் தான் அங்கே உண்டு.

சமைப்பதற்கும் உவர்நீர் தான். இங்கே வலியுறுத்தப்படுவது அவர்களது விருந்தயரும் பண்பு. விளிம்பு உடைந்த குழிசி அவர்களது ஏழ்மையைக் காட்டுகிறது. முரிந்த அடுப்பு கூட அவர்களது எளிய வாழ்க்கையைக் காட்சிப்படுத்துகிறது. நன்னீர் கிடைக்காத பாலையிலும் உவர்நீரில் வேகவைத்தேனும் விருந்து அளிக்கும் திணைமாந்தராகிய எயினரின் பண்பாட்டுச் சிறப்பு புரிகிறது. 

image.png
3700 ஆண்டு ஆன “ முரவு வாய் குழிசி முரி அடுப்பு”
(குழிகுழியாய் முரவுவாய்களைக் கம்பிகளை வைக்க உள்ள “முரியடுப்பு”.
கோட்டடுப்பு, கொடியடுப்பு போல, வாடூன் (கபாப்) செய்ய “முரியடுப்பு”)

படத்தில் உள்ள அடுப்பின் பெயர் சூட்டடுப்பு. அது சூட்டு செய்யப் பயன்பட்டது. நெருப்பில் நேரடியாகச் சுடுவதற்குப் பயன்பட்டதாகையால் சூட்டடுப்பு. கபாப், தந்தூர் ஆகியவை செய்யப் பயன்பட்டது. அதற்கு பதப்படுத்திய வாடூன் தேவை இல்லை. பச்சை ஊனையே கபாப் செய்யலாம்; தந்தூரும் செய்யலாம். நெருப்பில் வாட்டுவது எல்லாம் சூட்டு. 

வார்த்தல் = பழைய சொல். கூழ்வார்த்தல், கஞ்சிவார்த்தல், தாரைவார்த்தல் ....
முக்கியமாக, வாள், சிலைகள், கலயங்களை வார்க்கும் Tin bronze casting
தமிழர்கள் கண்டது. ஏராளமாக, சிந்துவெளி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை
எல்லாம் கிடைக்கிறது. செம்பால் வார்த்த வாள், கத்தி. பொன்னை அச்சில் வார்த்த காசு.
இப்படி, நீர்மம் எதுவும் வார்க்காமல்  மேலே காட்டப்படும் அடுப்பு போன்ற குழியுடைய வாய்கள் கொண்ட அடுப்பில் காழ் ஏற்றி அட்ட வாடூன் (= Kabab) எனலாம். சங்கப் புலவர் ‘கபாப்’ செய்வதற்கு வருணனை 
கொடுத்துள்ளார்.

எயினர் வாடூனைச் சூட்டடுப்பில் சுட்டிருந்தால் இங்கே சூட்டு என்னும் கலைச்சொல் பயன்பாடு இருக்க வேண்டும். ஆனால் மிகத் தெளிவாக புழுக்கு என்று சொல்கிறார் புலவர். அத்துடன் வடிக்கவில்லை என்று வலியுறுத்துகிறார். ஏன்? 
(1)புன்செய் தானியங்களைச் சமைக்கும் போது இன்றும் வடிக்கும் பழக்கம் இல்லை. 
(2) புல்லரிசியோடு  உப்புக் கண்டமும் சேர்த்துப் புழுக்குகிறார்களே! வடித்தால் ருசி என்னாவது?
சாம்பார் சோறு ஆக்கும் போது உப்பு சேர்த்துப் பதப்படுத்திய மோர் மிளகாயை வறுத்துச் சேர்த்துச் சுவை கண்டோர் அறிவர்.     
இந்த உணவு சிந்துவெளியிலும் பிரபலம். வட இந்தியா, பாக்கிஸ்தான், ஆப்கானி, ஈரான்
என எல்லா மாமிச உணவு விரும்பி அனைவரும் உண்ணும் நாடுகளில் உள்ள வகை.
இறைச்சி வகைகளை விரும்பி உண்ட சங்கத் தமிழர் உணவிலும் வாடூன் (= Kabab)
இருந்துள்ளது எனக் காட்டுகிறது பெரும்பாணாற்றுப்படை.
வாடூன் (Kabab) + புழுக்கல் விருந்து:............. 
(2) இரண்டாவது வகையான வாடூன் பற்றி வரும் பாடல்.
  'வாடூன் கொழும் குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டு
துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு' - புறம் 328/9-11
இங்கே, புறப்பாட்டில், வாடூன் = கொடிக்கறி/உப்புக்கண்டம் (jerky) எனலாம்.

பதப்படுத்திய விலங்கிறைச்சி எல்லாமே வாடூன் தான். உப்பு சேர்த்துத் தான் பதப்படுத்தினர். மேற்சுட்டிய மேற்கோளில் வாடூனை நெல்லரிசியோடு நெய் சேர்த்துச் சமைக்கின்றனர்.    

வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்).
இரண்டுக்கும் சங்கச் செய்யுள் இருக்கின்றனமுனைவர் கணேசன் 11ஜூலையில் 'கொடிக்கறி' இழையில் எழுதியது.
சக  

வேந்தன் அரசு

unread,
Jul 12, 2021, 10:20:47 AM7/12/21
to vallamai
<வாடூன் வகைகள்: (1) கபாப் (2) ஜெர்க்கி (கொடிக்கறி/உப்புக்கண்டம்)>  சிறப்பு

ஞாயி., 11 ஜூலை, 2021, பிற்பகல் 10:46 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:

kanmani tamil

unread,
Jul 15, 2021, 2:35:45 AM7/15/21
to vallamai
அடுப்பு பற்றித் தொடரடைவு தரும் தரவுகள் இவ்வளவே .
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்/நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் - அகம் 119/8,9
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ - அகம் 141/15
உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின்/வடி உறு பகழி கொடு வில் ஆடவர் - அகம் 159/4,5
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்/ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா - புறம் 164/1,2

களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி - அகம் 393/14

முரவு வாய் குழிசி முரி அடுப்பு ஏற்றி - பெரும் 99


உமணரும் மழவரும் கல்லடுப்பு பயன்படுத்துகின்றனர். புன்செய் உணவாகிய களி கல்லடுப்பில் சமைக்கப்பட்டுள்ளது.

'பல்கோட்டு அடுப்பு' என்றும் 'கோடுயர் அடுப்பு' என்றும் கோட்டடுப்பு இருபாடல்களில் இடம்பெற்று உள்ளது.

'சூட்டடுப்பு' என்ற தொடர் தொகை இலக்கியத்தில் இல்லவே இல்லை.

'முரியடுப்பு' என்ற தொடருக்கு முந்தைய மடலில் சொல்லிய முரிந்த அடுப்பு என்பதே ஏற்றுக்கொள்ளக் கூடியது.


நான் எனது கட்டுரைக்காகத் துழாவியதில் நெருப்பில் சுட்டு உண்ண ஒரு அடுப்பு 'தந்தூர் அடுப்பு' என்று அழைக்கப்பட்டதால் தமிழில் சூட்டடுப்பு என்று சொன்னேன்.

நெருப்பில் சுடுவது 'சூடு' என்றும் 'சூட்டு' என்றும் அழைக்கப்பட்டது (தமிழ் அகராதி Tamil Dictionary சூட்டு | அகராதி).

வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் - சிறு 163
ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் - சிறு 177 
தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் - பெரும் 282
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும் - நற் 83/6
குறு முயலின் குழை சூட்டொடு/நெடு வாளை பல் உவியல் - புறம் 395/3,4
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி - புறம் 395/37

தீயில்  சுட்டு உண்பது ஆரியநாகரிகம்  என்பர்.  (Zubin D’Souza, The Origins of the Tandoor, 2014, The origins of theTandoor).

The basic construction of a tandoor is rather simple. It is a large bell shaped earthen pot with an opening on the top to allow coal to be tipped in or skewers of food to be cooked and an opening at the side to allow air to pass to fan the flames. Tandoors are then insulated with sand and earth and are encased in tiles or metal. The ingredients that go into the making of a tandoor are rather complex and they do not merely contain clay. Apart from clay, horsehair, strands of woven coir and sometimes even human hair are added to increase its strength. Once a tandoor has been installed it has to be gradually tempered. At first a small amount of coal is heated at its base. A cooked mixture that comprises of ground spinach, yoghurt, palm sugar and mustard oil is massaged evenly to its insides. Gradually every day the amount of coal is increased and the layering of the insides with the spinach – palm sugar mixture continues. This process takes about five days to a week. Once the tandoor has been suitably tempered, coal and heat can be increased without fear of it breaking up

ஹரப்பா அகழ்வாய்வில் கிடைத்துள்ள  அடுப்பு ஆரியநாகரிகத்தின் தடயம் என்ற கருத்தும் உள்ளது. (Dumpukht, Aryan cuisine, History of Tandoor, 2010, Aryan Cuisine: History of Tandoor) 


5000 ஆண்டுகளாக மனிதன் நெருப்பில் சுட்டு உண்டான் என்பது மறுப்பதற்கு இல்லை.

யார்யாரெல்லாம் அதற்கெனத் தனி அடுப்பு வைத்திருந்தனர் என்பதே சமூகப் பொருளாதாரத்தை அடியொட்டிய ஆய்வு.


பனங்கிழங்கைச் சுட்டுத் தின்றது புறம்.225.  

'விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப' புறம்.366; என்பது  'சூட்டுக்கோலால் கிழித்து' எனப்  பொருள்படும். 'காழிற்சுட்ட கோழூன் கொழுங்குறை' பொரு.L.105    

வீழ்த்திய பன்றியைச் சுடவேண்டிய பக்குவம்; மலைபடுகடாம் L.247-249ல்   கூத்தருக்குச்சொல்லும். 'குறு முயல் கொழுஞ்சூடு கிழித்'துப் பாணர் உண்டனர் (புறம்.34).

வேட்டுவன்  தீயில் சுடும் முள்ளம்பன்றி ஊனின் மணம் 'கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்’ எனப்படும்.   புறம்.325, அகம்.237, புறம்.393 எல்லாம் ஊன்சூட்டைச் சிறப்பிக்கின்றன. 

வாடூன், பச்சூன் என இருவகை மீன் ஊனையும் நெருப்பில் சுட்டு உண்டனர்.


வலைஞர் பச்சைமீனைச் சுட்டு வழிச்சென்ற  பாணர்க்கு அளித்தனர் பெரு.L.275-282 ‘தண்மீன் சூட்டு’ நெல்லின் கொக்குகிர் நிமிரலுக்குரிய இணை  ‘பசுங்கண் கருனைச்  சூட்டு’ புறம்.395.


வாடூனாகிய கருவாட்டை   இரும்புநாராசத்தில் குத்திச்சுட்டது 'சூடுகிழித்து வாடூன் மிசைய'  புறம்.396. 


3700 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய அடுப்பு என அகழ்வாய்வு குறிப்பிட்ட அடுப்பு தமிழகத்துத் திணைமாந்தருடையது அன்று. அது வேந்தரும் மன்னரும் மட்டுமே பயன்படுத்தியது.


ஒகேனக்கல்லில் தண்ணீர் விழுந்தவுடன் சென்றால் ஒரு நூறு பேராவது அவ்வப்போது ஆற்றில் மீன் பிடித்து உடன் ஆற்று நீரிலேயே சுத்தம் செய்து மசால் தடவி நாலு சுள்ளியை மூட்டிச் சுட்டு விற்பார். அதற்கு என்று அடுப்பு தேவை இல்லை.


தேறல் அருந்தும் தந்தைக்கு ஒரு மகள் அயிலை மீனை வஞ்சி விறகில் சுட்டுக் கொடுத்ததாக இலக்கியத்தரவு ஒன்று உண்டு. மீனைச் சுட அடுப்பு பயன்படுத்தப்படவில்லை என்பது வெளிப்படை. ஏனென்றால் வஞ்சி ஒரு கொடி. அதிலிருந்து சுள்ளி மட்டுமே கிடைக்க இயலும். நாலு சுள்ளியை மூட்டினால் பச்சை மீன் வெந்து விடும்.


இன்றும் அவ்வாறு சுட்டுப் பயன் பெறுகிறோமே...

அன்னக்கிளி திரைப்படத்தில் கதாநாயகி ஒரு மருத்துவச்சி; தன் காதலனுக்கு ஆற்றில் பிடித்த மீனை உடன் சுட்டுக் கொடுப்பாள்... அதற்காகப் பஞ்சாயத்து கூடும்.


அவ்வளவு ஏன்?!!

அவ்வப்போது நானும் என் பேரக்குஞ்சுகளுக்கு மண்ணீரல் வாங்கி வந்து காழில் கோத்து LPG gasல் இன்றும் சுட்டுக் கொடுக்கிறேன்... அடியும் பிடியுமாகப் போகும்.


நன்றி. 'tamil concordance'


சக


kanmani tamil

unread,
Jul 28, 2021, 11:08:16 AM7/28/21
to vallamai
பதிற்றுப் பத்துச் சேரர் அனைவரும் ஒரே காலகட்டத்தில் சேரப் பேரரசின் பல்வேறு பகுதிகளில் பொறுப்பில் இருந்து ஆண்டவர் என்பது பழம்பெரும்  ஆய்வாளர்களால் நிறுவப்பட்ட உண்மை. இதை மனதில் கொண்டே நாம் பண்டைச் சேரர் பற்றிப் பேச வேண்டும். தலைமையகமாக மேற்கரை வஞ்சி மூதூர் இருந்தது. 

/நீங்கள் இரு கடல் என்பதற்கு என்னவே, வங்காள விரிகுடாவிற்கு தொடர்பில்லாதது போல் வாதிட்டு எழுதிவந்தீர்கள். 

ஆமாம் இப்பவும் அதையே தான் சொல்கிறேன். பதிற்றுப்பத்துச் சேரருக்கும் வங்காள விரி குடாவிற்கும் தொடர்பு இல்லை. தொகை இலக்கியத்தில் அதற்குரிய சான்று எதுவும் இல்லை. 

ஔவை சு. து. தெளிவுபடுதியுள்ளார் என அறிய மகிழ்ச்சி.

தப்பாகப் புரிந்து கொள்ளக் கூடாது. 

அசுவமேதம் போல, யானைகளை அனுப்பி அறபிக் கடல், வங்காளக் கடல் என்ற இரு கடல்களிலும் பட்டாபிஷேகம் வஞ்சி மாநகர் என்னும் (இன்றைய கரூர்)  கொணர்ந்து பட்டாபிஷேகம் செய்தான் குட்டுவன். எனவே, பல்யானைச் செல்கழு குட்டுவன் என அழைக்கப்பட்டான். 

நல்ல கற்பனை.
யானைகளை வரிசையாக நிறுத்திப் புனித நீராடியவன் ஆதலால் அவனது பெயருக்கு முன்னால் 'பல்யானை' என்னும் அடைமொழி சேர்ந்தது எனல் தகும். வேறு விளக்கம் எதுவும் தொகை இலக்கியத்தில் கிடையாது. 

அவனது தாய்வழிப் பாட்டன் வெளியன் வேள். அவன் ஆட்சிக்கு உட்பட்ட ஊர் தொகையிலக்கியம் சொல்லும் 'வெளியம்'; இன்றைய விழிஞம். திருவனந்தபுரத்திற்குத் தெற்கே கொளச்சலுக்கு வடக்கே உள்ளது; பண்டை நூல்கள் சொல்லும் வேணாட்டுப் பகுதி. தன் தாத்தா ஊரில் இருந்து அவன் மேற்கடலில் நீராடி விட்டு யானைமேல் ஏறினால் பகலிலேயே தென்முனைக்குச் சென்று விடலாம். அதுவும் இன்றைய குமரிமுனை வேறு; பண்டைக் குமரிமுனை வேறு. இன்றைய கடியபட்டிணத்தின் பெயர்க்காரணம் அதை ஒட்டிப் பண்டு தென்முனை இருந்தது என்பர். அதை மனதில் கொண்டு பார்த்தால் தூரம் இன்னும் கணிசமாகச் சுருங்குகிறது. 

அவனது தலைநகர் வஞ்சி மாநகர் அருகிலே உள்ள மலைகளிலேயே யானைகள் கிடைத்தன

யானைகள் மேற்கு மலைத்தொடர் முழுவதும் கிடைத்தன. 

உம்பல் காடு (உம்பல் = யானை), நேரி மலை, அயிராமலை (அயிரைமலை, இன்றைய ஆனைமலை), ... அயிரை வழிபாடு சேர மன்னர்கள் செய்த கோவில் எது என சமணர்கள் கல்வெட்டுகள் விளக்கியுள்ளன. 

இதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் கிடையாது. 

பாண்டிக்கோவை சேரர் ஆட்சியில் இருந்த கீழைக் கடற்கரைப் பகுதிகளைப் பேசுகிறது.

பேசட்டுமே. அது இடைக்காலத்தைச் சேர்ந்தது. அதற்கும் தொகை இலக்கியக் கால வரலாற்றுக்கும் என்ன தொடர்பு?

பட்டாபிஷேகம் நடந்த வஞ்சி மாநகர் என்னும் கரூர் ஓரு ஊர் தான்.

என்ன ஆதாரம்? தொகை இலக்கியத்தில் எதுவும் இல்லையே. 

அது மேலைக் கடற்கரையில் இல்லை. தொல்லியல் அறிஞர்கள் அனைவரின் ஒருமித்த கருத்து. 
/Dr.Ganesan wrote in the string நேரிமலை on 25th July

ஒருகாலத்தில் தொல்லியலார் வஞ்சியை மேற்கரையில் காண இயலவில்லை என்றார்கள். இன்று பட்டணம் என்ற இடத்தில் கி.பி.1-3நூ.ஐச் சேர்ந்த தடயங்கள் கிடைத்துவிட்டன. அதைத் தானே முசிறி என்கின்றனர். பட்டணம் என்ற பெயரே அங்கு ஒரு நகரம் இருந்ததைச் சொல்கிறதே. வேறென்ன வேண்டும்?! 
சக 

N. Ganesan

unread,
Jul 28, 2021, 11:31:37 AM7/28/21
to வல்லமை
On Wednesday, July 28, 2021 at 10:08:16 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
அது மேலைக் கடற்கரையில் இல்லை. தொல்லியல் அறிஞர்கள் அனைவரின் ஒருமித்த கருத்து. 
/Dr.Ganesan wrote in the string நேரிமலை on 25th July

ஒருகாலத்தில் தொல்லியலார் வஞ்சியை மேற்கரையில் காண இயலவில்லை என்றார்கள். இன்று பட்டணம் என்ற இடத்தில் கி.பி.1-3நூ.ஐச் சேர்ந்த தடயங்கள் கிடைத்துவிட்டன. அதைத் தானே முசிறி என்கின்றனர். பட்டணம் என்ற பெயரே அங்கு ஒரு நகரம் இருந்ததைச் சொல்கிறதே. வேறென்ன வேண்டும்?! 
சக


மேலைக் கடற்கரையில் முசிரிப் பட்டினம் இருந்தது 2000 ஆண்டுக்காலமாக உலகில் அனைவரும் அறிந்திருந்தனர்.
100+ ஆண்டுகளாய் தமிழ், தொல்லியல் அறிஞர்கள் எல்லோரும் எழுதிய செய்தி தான்.

மேலைக்கடற்கரையில் வஞ்சி என்ற நகரம் சங்க காலத்தில் இல்லை என்று தமிழ், தொல்லியல் அறிஞர்கள்
ஆராய்ந்து முடிபுகண்டுள்ளனர். முசிரி பற்றியதில்லை இத் தமிழ், தொல்லியல் ஆய்வுகள்.

நா. கணேசன்


kanmani tamil

unread,
Jul 31, 2021, 12:38:14 PM7/31/21
to vallamai
/வாடூன் வகைகள் இரண்டு:
(1) Jerky  https://en.wikipedia.org/wiki/Jerky .  இதன் சங்ககாலப் பெயர் “வறல்”.
(2) Kabab  https://en.wikipedia.org/wiki/Kebab .  இதன் சங்ககாலப் பெயர் “சூடு”./Dr.Ganesan wrote on 27th July

ஒட்டுமொத்தமாகத் தரவுகள் அனைத்தையும் பார்த்துப் பகுத்து ஆய்ந்தால் இந்த முடிபின் குறைபாடு தெரியும். 

சூடு மூன்று வகைப்பட்டது.
1. தாளிதத்தோடு எண்ணெயில் பொரிப்பது ஒரு வகைச் சூடு. 
2. எண்ணெயில் மூழ்க வறுத்து எடுப்பது இன்னொரு வகை. 
3. நேரடியாக நெருப்பில் சுடுவது.

மூன்றன் குறிப்புகளும் இலக்கியத்தில் உள்ளன. முதல் இரு வகைகள் திராவிடர்க்கே உரியவை. 
நல்லெண்ணெயின் பயன்பாடு திராவிடருடையது. ஆரியர் நெய்யே பயன்படுத்தினர். 

வாடூன் இரண்டு வகைப்பட்டது. 
1. விலங்கிறைச்சி வாடூன் 
2. மீனிறைச்சி வாடூன். 
இரண்டன் செய்முறையும் இலக்கியத்தில் உள்ளன. 

சக 



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Jul 31, 2021, 11:09:45 PM7/31/21
to vallamai


சனி, 31 ஜூலை, 2021, பிற்பகல் 10:08 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
/வாடூன் வகைகள் இரண்டு:
(1) Jerky  https://en.wikipedia.org/wiki/Jerky .  இதன் சங்ககாலப் பெயர் “வறல்”.
(2) Kabab  https://en.wikipedia.org/wiki/Kebab .  இதன் சங்ககாலப் பெயர் “சூடு”./Dr.Ganesan wrote on 27th July

ஒட்டுமொத்தமாகத் தரவுகள் அனைத்தையும் பார்த்துப் பகுத்து ஆய்ந்தால் இந்த முடிபின் குறைபாடு தெரியும். 

சூடு மூன்று வகைப்பட்டது.
1. தாளிதத்தோடு எண்ணெயில் பொரிப்பது ஒரு வகைச் சூடு. 
2. எண்ணெயில் மூழ்க வறுத்து எடுப்பது இன்னொரு வகை. 
3. நேரடியாக நெருப்பில் சுடுவது.

மூன்றன் குறிப்புகளும் இலக்கியத்தில் உள்ளன. முதல் இரு வகைகள் திராவிடர்க்கே உரியவை. 
நல்லெண்ணெயின் பயன்பாடு திராவிடருடையது. ஆரியர் நெய்யே பயன்படுத்தினர். 

வாடூன் இரண்டு வகைப்பட்டது. 
1. விலங்கிறைச்சி வாடூன் 
2. மீனிறைச்சி வாடூன். 
இரண்டன் செய்முறையும் இலக்கியத்தில் உள்ளன. 



ஓ!

kanmani tamil

unread,
Aug 1, 2021, 8:54:05 AM8/1/21
to vallamai
ஆம் ஐயா 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages