நிமிரல் ‘சுடுசோறு’ (fresh boiled rice) - ஓசையால் தோன்றும் உண்டி வகைகள்

141 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Oct 18, 2023, 8:54:54 AM10/18/23
to Santhavasantham
ஞைஞை எனல் என்னும் ஒலிக்குறிப்புச் சொல்லுடன் தொடர்புடையது ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு. ஞை எனல் “to whine", ஞிம் எனல் “to buzz, to hum, etc.,". ஞைவினை >> ஔவை ஆத்திசூடியில் “நைவினை நணுகேல்” என்றார். அதுபோல், ஞிமிரல் நிமிரல் என்றும் வரும்.

பழைய மடல் ஒன்று:

நிமிர்தல்

உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; கோள் மீளத் திரும்புதல்.இவையெல்லாம் வண்டு, சுரும்பு, அளி, ... ஞிமிறுகள் இயக்கத்தில் தோன்றுதலால், நிமிர்தல் என்னும் வினைச்சொல் தோன்றியுள்ளது.

நிமி என்ற புராணக் கதாபாத்திரம், நிமிண்டு- நிமிஷம், நிமைத்தல்/இமைத்தல் போன்றனவும் அளிகளின் ஞிமிர்தல் செயலில் இருந்து தோன்றுபவை எனத் தெரிகிறது. நிமைத்தல்/இமைத்தல் தும்பி, தேனீ, சுரும்பு, வண்டு போன்ற அளிகள் மலரைத் தேய்த்து மகரந்தம் காவுவதும், தேன்/கள் கவர்வதும் ஒக்கும். நிமிண்டு- என்ற வினைச்சொல்லும் பிறக்கும். https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E/m/Jlwi_BTpAgAJ
Dazzling brilliance; விளக்கம். மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு. 85). ; 1. To glitter, twinkle, shine; ஒளிவிடுதல். (திவா.)
இத்துடன் ஒப்பிடுக:  வானம் நீங்கிய நீனிற விசும்பின் மின்னு நிமிர்ந்தனையராகி  (மதுரைக்காஞ்சி). அதாவது, தும்பி நிமிர்வதுபோல, (= அங்குமிங்கும் சுழல்வதுபோல்) நீல வானில் மின்னல் நிமைக்கிறது/இமைக்கிறது, glitters, twinkles. அதைப் போன்ற மகளிர் செயல் என்கிறது மதுரைக்காஞ்சி.

(4) ஞைஞை எனல்: High-frequency sound (350 - 600 Hz) = Whining
இந்த ஒலி கொசுக்கள் எழுப்புவது. ஞிம் எனல் எனும் ஞிமிர்தல் ஒலியில் இருந்து, இன்னும் அதிர்வெண் அதிகம்:  ஞைஞை (to whine) என்ற ஒலிக்குறிப்புக்கு.  whining - சிணுங்குதல் என்ற பெயரும் உண்டு. ஔவை “நைவினை நணுகேல்” என்றார் (ஆத்திசூடி). அதாவது, Stop whining என்பதாகும். https://youtu.be/h3_DPW8hKTI

Mosquitos whine. https://www.nytimes.com/2009/01/13/science/13obwhine.html
"A mosquito may not be anyone’s idea of a hopeless romantic, but the insect does produce a love song of sorts — the whine of its beating wings, resonating in a part of the body called the thoracic box. A female’s whine, at a fundamental frequency of 300 to 600 hertz, is enough to make a male mosquito swoon.

But Aedes aegypti, the mosquito species that transmits the viruses that cause dengue and yellow fevers in people, carries the love song concept to new aural heights, according to a paper published online in the journal Science. Lauren J. Cator, Ronald R. Hoy and colleagues at Cornell University report that A. aegypti males make it a duet, matching whines with the female.

Dr. Hoy said both males and females raise their whines to about 1200 hertz, which is a harmonic of the fundamental frequency of both the female (about 400) and male (about 600).

It’s the first time that such “harmonic convergence” has been shown to occur."
https://www.youtube.com/watch?v=RCoYrj8H7Lg
https://news.cornell.edu/stories/2009/01/study-mosquitoes-beat-out-love-song-mating
"Interestingly, the mosquitoes adjust the harmonic resonance of their thoracic box to produce a harmonic frequency that converges at a frequency that is the female's third harmonic (three times her fundamental frequency) and the male's second harmonic (two times his fundamental frequency)."

NG

N. Ganesan

unread,
Oct 18, 2023, 3:10:07 PM10/18/23
to Santhavasantham
பழைய சோற்றுக்கும், நிமிரல் என்னும் சுடுசோற்றுக்கும் வேற்றுமையினை அழகாகக் காட்டும் பாடல்:
புறநானூறு: 395. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.

வயலிலே உழும் உழவர்கள் காடுகளிலே பகடுகளை மேய விட்டுவிட்டுச் சூடான முயற்கறியும் வாளைமீனைப் பலவகை யாகப் பக்குவப்படுத்திய கறிகளும் பழஞ்சோற்றுடன் உண்டு, தளவப்பூச் சூடிக்கொண்டு, அரிப்பறையால் புள்கடிந்து, நெல்லிலிருந்துவடிக்கப்பட்ட கள்ளினை அருந்தி மகிழ்வர்.பழஞ்சோறே உண்டு பழக்கப்பட்ட உழக்குடிகளுக்கு,
சுடுசோறு நிமிரல் கொண்டு விருந்து படைப்பன் இந்தக் கிழான்: பெருஞ்சாத்தன் ஆவான்.

நிமிரல் - Freshly cooked rice படைத்து விருந்தாடல்:
அது வள்ளன்மையுடைய வேண்மானுக்கு உரியது. அவ்வூரில் உள்ள, அறத்தால் புகழ்பெற்ற சாத்தனுக்கு வேண்டியவர் யாங்கள்! முன்னொரு நாள், 'பெருமானே!” என மாலைப் போதில் தடாரி ஒலித்து அவன் வாயிலில் நின்றேன். என்னைக் கண்ட அவன் சிறிதும் காலம் தாழ்த்தாது, பேசவும் செய்யாது, மனைக்கண்ணுள்ள தன் மனைவியை அழைத்து, ‘என்னைப்போலக் கருதி இவனைப் பேணுக!' என்றான். அத்தகைய அன்பிற் சிறந்தானை என்றும் மறவேன். பிறரை நினைக்கவும் செய்யேன். 'உலகமெங்கும் பசியால் வாடித் துயரம் அடைந்த காலத்தினும், கொக்குநகம் போன்ற நிமிரல் என்னும் சுடுசோறும், சூடான இறைச்சியும், அளவற்றுத்தந்து உதவுகின்ற அவன் வாழ்க!' எனச் சான்றோர் வாழ்த்துவர். உள்ளதும் இல்லதும் என்று ஏதும் பாராது, வரையாது வழங்குபவன் அவனே யாவன்! அவன் திருவடிகள் வாழ்க!

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 18, 2023, 3:36:45 PM10/18/23
to vallamai
பகலிலே சமைத்த சோற்றை (நிமிரலை) காக்கைகளுக்குப் பலியாக முற்றத்தில் இடுதல்.
உகுத்தல்: சொரிதல்/இடுதல்/போடுதல். http://puram400.blogspot.com/2012/12/366.html


தூங்கல் வங்கம்
 களவுக்காதல் – நெய்தல் திணை – இரங்கல் – பகற்குறி வந்து தலைவியைச் சந்திக்க இயலாமல் திரும்பும் தலைவனுக்குத் தோழி கூறிய கூற்று.
கொண்கனே! தலைவியை வீட்டுக்குள் இற்செறித்து, தாய் அங்கேயே காவல் இருக்கின்றாள். (அதனால்தான் தலைவியால் உன்னைச் சந்திக்க இங்கே வர இயலவில்லை) இதை உனக்குச் சொல்வதற்காகவே பலப்பலவாகப் பூக்கள் பூத்துள்ள இந்தப் பூஞ்சோலையினுள் பகற்பொழுதுக்குரிய குறியிடமாகிய இங்கு வந்தேன்.
கற்களும் கொதிக்கும்படிக் காய்கின்ற வெயிலில் நடக்கும் கால்கள் வெம்பிப் பழுத்துப்போகின்ற பகல்பொழுதில் செல்வமும் அழகும் சிறப்பும் மிகுந்து பொலிவுடன் விளங்குகின்ற பெரிய நகருக்குள் வருகின்ற விருந்தினருக்குப் படைப்பதற்காகப் பொற்றொடி மகளிர் சமைத்த, கொக்குகளின் நகம் ஒத்த சோற்றில் ஒரு பகுதியினை முற்றத்தில் பலியாக வைக்க, அதனை உண்ணுகின்ற, குளிர்ச்சி தோன்றும் கண்களைக்கொண்ட காக்கை நாட்பொழுது மறைகையில், பெரும்பெரும் அங்காடிகளின் அசைகின்ற நிழற்பகுதியில் குவிந்திருக்கும் பசும் இறாலினைக் கவர்ந்துகொண்டு, நங்கூரமிட்டு அசைந்துகொண்டிருக்கும் மரக்கலங்களின் பாய்மரக் கூம்பில் சென்று அமருகின்ற மருங்கூர்ப்பட்டினத்தை ஒத்த அழகினையுடைய தலைவியின் இறுக்கமான அழகிய வளைகள் கழன்று விழுந்துவிடுவது போல் நெகிழ்வதைக்கண்டே தாய் அப்படிச் செய்கிறாள்.
பாடல் :
பல் பூங்கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத்
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் 10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே.
நற்றிணை 258, நக்கீரர், நெய்தற் திணை – தோழி தலைவனிடம்சொன்னது
அடிநேர் உரை : பல் பூங்கானல் பகற்குறி மரீஇ – பலப்பலவாகப் பூக்கள் பூத்துள்ள இப் பூஞ்சோலையினுள் பகற்பொழுதுக்கான குறியிடத்துக்கு;
செல்வல் – வந்துள்ளேன்; கொண்க – கடற்கரைத் தலைவனே!; செறித்தனள் யாயே தலைவியை வீட்டுக்குள் இற்செறித்துக் காவலிருப்பது, அவளது தாய்தானே.;
கதிர் கால் வெம்ப க் கல் காய் ஞாயிற்று – வெயிலில் நடக்கும் கால்கள் வெம்பிப் பழுக்குமாறும் கல்லுங்கூடக் கொதிக்கின்ற பகற்பொழுதில்;
திருவுடை வியல் நகர் வருவிருந்து அயர்மார் – செல்வமும் அழகும் பெருமையும் மிக்க பெரும் நகருக்கு வருகின்ற விருந்தினருக்கு வழங்குவதற்காக;
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த – பொன்னாலாகிய வளைகளை அணிந்த மகளிர் சமைத்து முற்றத்தில் பலியாக வைத்த;
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி , எல் பட, - கொக்கின் நகம் ஒத்த சோற்றினைப் பெருமளவில் உண்டு, நாட்பொழுது மறைகையில்;
அகல் அங்காடி அசை நிழல் குவித்த – அகன்ற பெரும் அங்காடிகளின் அசைகின்ற நிழற்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும்;
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை – பசுமையான இறாவினைக் கவர்ந்த குளிர்ந்த கண்களையுடைய காக்கை;
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் – அசைந்தாடிக்கொண்டிருக்கும் கப்பலின் பாய்மரக் கூம்பில் சென்று தங்கும்.
மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் – மருங்கூர்ப்பட்டினத்தின் அழகினை ஒத்த தலைவி;
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – இறுக்கமாக அணிந்திருந்த அழகிய வளையல்கள் கழன்றோடுவதுபோல் நெகிழ்ந்தமை கண்டதாலேயே.
அருஞ்சொற்பொருள் :
கால் – கால்கள்; காற்று எனினும் ஒக்கும். வியல் நகர் – நகரம்; பெரிய வீடு எனினும் ஒக்கும். உகிர் – நகம்; நிமிரல் – சோறு; மாந்தி – பெருமளவில் உண்டு; எல் – பகற்பொழுது; பட – மறைய; பச்சிறா – பசுமையான இறா, அப்போதுதான் கடலிலிருந்தும் கொண்டுவந்த இறா; தூங்கல் – அசைதல் ; வங்கம் – கப்பல், மரக்கலம்; கூம்பு – பாய்மரக் கூம்பு ; சேக்கும் – தங்கும், அமரும். நெருங்கு – இறுக்கமாக, நெருக்கமாக; ஏர் – அழகு ; எல்வளை – ஒளிபொருந்திய வளையல்.
கவிதை நயம் :
கொண்க, இற்செறித்தனள் யாயே எனக் கூறுவதன் மூலம் தலைவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவனுக்கு, தலைவனைச் சந்திக்கத் தலைவியால் வரமுடியாத நிலையும் தலைவி, அவளது தாயாலேயே இற்செறிக்கப்பட்டுள்ளாளென்ற முதல் செய்தியினையும், தோழி, அவசர அவசரமாக, தலைவனின் அச்சம் மற்றும் கவலையைத் தீர்க்குமாறு கூறிவிடுகிறாள். அதனைத் தொடர்ந்த செய்தியாக, காலைப் பொசுக்குகின்ற கதிரின் வெம்மையும் கல்லும் கொதிக்கின்ற அளவுக்கான பகற்பொழுது குறித்துக் கூறுகிறாள். இது அவள் தலைவியின் நலம் மற்றும் தலைவனுக்குத் தகவல் தெரிவிக்கும் முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு கல்லும் காயும் பகல்பொழுதில் கால்கள் வெம்ப நடந்துவந்த சிரமத்தை, தலைவன் மற்றும் தலைவியின் வாழ்க்கை மீதான அக்கறையினை வெளிக்காட்டுவதான முயற்சி. அதனைத் தொடர்ந்து மருங்கூர்ப்பட்டினத்துக்கு வருகின்றவர்களுக்காக விருந்து சமைக்கப்படுவதும் காக்கைக்கு பலிச்சோறு வழங்கப்படுவதும் குறிப்பிடுவதன் மூலம் தமது ஊர்மக்களின் விருந்தோம்பும் உயர் பண்பாட்டினைப் பொற்றொடி மகளிர் தலையாகக் கருதுவதும் காக்கைக்கும் உணவளிக்கின்ற ஈரநெஞ்சத்தினையும் மரபினை மதிக்கும் மாண்பும் உணர்த்தப்படுகிறது. அடுத்த செய்தி மருங்கூர்ப்பட்டினத்தின் பெரும்பெரும் அங்காடிகளும் அவற்றின் நிழற்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் பச்சிறாக் குவியல்களும் அசைந்தாடிக்கொண்டிருக்கின்ற கப்பல்களும் அந்த நகரத்தின் வணிகம் மற்றும் செல்வநிலையினை உணர்த்துகிறது. அத்தகைய மருங்கூர்ப்பட்டினம் ஒத்த அழகுடையவள் தலைவி எனும் போது விருந்தோம்பலும், உயிர்களுக்கு உணவிடும் கருணைநெஞ்சமும் மரபினை மதிக்கும் மாண்புமுடையவள் தலைவியென அவளது உள்ள அழகும் பண்பாட்டு உயர்வும் கூறப்படுகிறது. தலைவி பெருஞ்செல்வமுள்ள நகரில் பெருஞ்செல்வ வாழ்க்கையினை உடையவளென்பதும் உணர்த்தப்படுகிறது. மருங்கூர்ப்பட்டினத்தின் பேரழகினைக்கொண்ட தலைவி ஏன் இற்செறிக்கப்பட்டாளென்ற கேள்விக்கு பதிலாக, அவளது இறுக்கமான வளைகள் நெகிழ்ந்தமை கண்டு தாய் ஐயமுற்று இற்செறித்தாள் எனக்கூறிவிடுகிறாள். தலைவியின் வளை ஏன் நெகிழவேண்டுமெனில் தலைவனைச் சந்திக்கவியலாமற்போகும் சூழ்நிலை நினைந்தே தலைவன் மீதுள்ள ஏக்கத்தாலேயே வளை நெகிழ்ந்ததென்பது தலைவனுக்கு குறிப்பாக உணர்த்துவதாகிறது. எனவே உள்ள அழகும் உடலழகும் செல்வ உயர்வும் பண்பாட்டு மேன்மையுமிக்க தலைவியை உடனடியாக தலைவன் தமருடன் வந்து வரைந்துகொள்ளவேண்டுமென்பது தலைவனுக்கான உடனடிச் செய்தியாக உணர்த்தப்படுகிறது.
தலைவன் தலைவியைத் திருமணம் செய்தேயாக வேண்டுமென்பது தோழியின் நோக்கம். அந்த நோக்கத்திற்கேற்ப சமுதாயப் பண்பாட்டை பெருமைபட எடுத்துரைத்து, நகரின் செல்வம் மற்றும் வணிகப்பெருமையைக் கூறி, தலைவியின் உள்ள அழகும் பண்பாட்டுச் சிறப்பினையும் உணர்த்துகின்ற உளவியல் பாங்கினை உன்னி உணர்ந்து மகிழ்தற்குரியது.

N. Ganesan

unread,
Oct 18, 2023, 10:02:25 PM10/18/23
to Santhavasantham
புறநானூறு 398.

சேரமான் வஞ்சன் மீதான பாட்டு இது. வஞ்சி மாநகர் ஆளும் அரசனுக்கு வஞ்சன் 
எனப் பெயர் உண்டு போலும். காரணப்பெயர்: வஞ்சியான் வஞ்சன். 
இயற்பெயர் சொல்லப்படவில்லை.
”இரவுப்புறம் பெற்ற ஏம வைகறை - இரவுப்போது நீங்கும் விடியற்காலத்தில்;
பரிசிலர் - பரிசிலர்களை; வரையா விரைசெய் பந்தர் நீங்காத மணம் கமழும்
பந்தரின்கண்...; வரிசையின்  இறுத்த  வாய்மொழி  வஞ்சன் -  அவரவர்
வரிசையறிந்து புரவுக்கடன் செலுத்திய  வாய்மையே மொழியும்  சேரமான்
வஞ்சனுடைய;”

அதே போல, “பெரும்பெயர் மூதூர் - பெரும் பொருந்திய பெயரையுடைய
மூதூர்க்குச் சென்று” இம் மூதூர், சேர மன்னர்கள் தலைநகர் ஆகிய
வஞ்சி (கருவூர்) ஆகலாம்.

முன்பு பார்த்த பாடல் போலவே, வறுமையில் உள்ள பாணனுக்கு
நல்ல விருந்து படைக்கும் சேரமான், நல்ல அப்போது தான் சமைத்த
நிமிரல் (சுடுசோற்றை) வழங்கிச் சிறப்பித்தான். பழைய சோற்றை
வழங்கினான் என்பது பொருந்தவில்லை.


”மறவா வுள்ளத்தால் நின்னை நினைந்துவரும் பரிசிலருடைய
கொள்கலம் நிரம்ப - அரிய பொருள்களை வழங்குபவனே; எமக்குத் தள்ளா
நிலையையாகியர் என - எம்மிடத்து நீங்காத அன்புற்ற நிலையையுடையனாகுக
என்று என் வரவைக் குறிப்பித்து நின்றோனாக; என் வரவு அறீஇ - என்
வரவை யறிந்து; சிறிதிற்குப் பெரிதுவந்து - என் சின்மொழிக்குப் பெரிதும்
மகிழ்ந்து; விரும்பிய முகத்தனாகி - அன்பால் மலர்ந்த முகமுடையனாய்; என்
அரைத் துரும்பு படு சிதாஅர் நீக்கி - என் இடையில் சிதர்ந்து நார்நாராய்க்
கிழிந்திருந்த உடையை நீக்கி, தன் அரைப் புகை விரிந்தன்ன பொங்குதுகில்
உடீஇ - தன் அரையில் உடுத்திருந்த புகையை விரித்தாற் போன்ற உயர்ந்த
உடையைத் தந்து என்னை யுடுப்பித்து; அழல் கான்றன்ன அரும்பெறல்
இல்லையாயின என் உண்கலத்தில்; நிழல்காண் தேறல் நிறைய வாக்கி -
உண்பார் நமது நிழலைக் காணுமாறு தெளிந்த கட்டெளிவை நிரம்ப பெய்து;
யான் உண அருளல் அன்றியும் - யான் உண்டற்கு வழங்கியதேயன்றி; தான்
உண் மண்டைய கண்டமான்வறைக் கருனை - தான் உண்ணும்
மண்டையிடத்துத் துண்டித்த மானிறைச்சியாகிய வறுத்த பொரிக்கறியையும்;
கொக்கு உகிர் நிமிரல் - கொக்கின் நகம் போன்ற முறியாத நெல்லரிசிச் சோற்றையும்;

ஒக்கல் ஆர - என் சுற்றத்தார் உண்ண; வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் -
மலைபோன்ற மார்பிலணிந்த உலகமெலாம் விலைமதிக்கத் தக்க; விரவுமணி
ஒளிர்வரும் - பலமணிகள் விரவிக் கோக்கப்பட்டு ஒளி விளங்கும்; அரவு
உறழ் ஆரமொடு - பாம்பு போல் வளைந்து கிடக்கும் மாலையும்; புரைோன்
மேனிப் பூத்துகில் கலிங்கம் - உயர்ந்தோனாகிய அவன் மேனிக்கண் கிடந்து
விளங்கும் பூ வேலை செய்யப்பட்ட உடைகளை; உரைசெல அருளியோன் -
தன் புகழ் எங்கும் பரவ நல்கினான்; “

மான்வறைக் கருனை  -  இங்கே, கருனை = பொறிக்கறி. கருனைக் கிழங்கு அன்று.
இனி, சீவக சிந்தாமணிப் பாடலைப் படிப்போம். அதுவும்
வளங்கொழிக்கும் விருந்து. அப்பாட்டிலும், நிமிரல் என்றால்
பழஞ்சோறு அன்று.

On Wed, Oct 18, 2023 at 2:09 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
>

Rajja Gopalan

unread,
Oct 19, 2023, 1:44:46 AM10/19/23
to santhav...@googlegroups.com
அருமைத் தமிழ்ப் பாடம் ஐயா

நன்றி

மீ. ரா

Sent from my iPhone

On 19 Oct 2023, at 03:02, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUftB19hyvyx6Bu737z2gg%3D1YtRMU2wMf9GtuaS85j-b1Q%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 19, 2023, 7:57:12 AM10/19/23
to santhav...@googlegroups.com
On Thu, Oct 19, 2023 at 12:44 AM Rajja Gopalan <raj...@gmail.com> wrote:
அருமைத் தமிழ்ப் பாடம் ஐயா
நன்றி

மீ. ரா

நன்றி, கவிஞர் மீரா.

ஞைவினை நணுகேல் - நைவினை நணுகேல் என வருதல் போல, ஞிமிரல் நிமிரல் என்றாகிறது. மிகப்பழைய ஒலிக்குறிப்புச் சொல் இது. அளி வர்க்கங்களுக்கு ஆகிய தொழிற்பெயர் ஞிமிறு. மிஞிறு என வஞ்சி மாநகர் அரசர் புகழ் பாடும் பதிற்றுப்பத்தில் வருகிறது.ஞிமிறு > மிஞிறு ஒரு Metathesis (இடவலமாற்றம்).

பகலிலே சமைத்த சோற்றை (நிமிரலை) காக்கைகளுக்குப் பலியாக முற்றத்தில் இடுதல்.
உகுத்தல்: சொரிதல்/இடுதல்/கொட்டுதல்/போடுதல். http://puram400.blogspot.com/2012/12/366.html

இதில் இரு சொற்கள் மிக ஆழமானவை. பொருத்தப்பாடு அறிக.

உகுத்தல் - பொலி/பலி தரும் வழிபாட்டில் இச்சொல் இடம் பெறும். புகழ்பெற்ற மாங்குடி கிழார் பாடலில், “நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” என்கிறார்.
இந்த நெல் தூவி வாழ்த்துதல், வணங்குதல் இன்று simulation முறையில், அரிசியில் மஞ்சளைத் தோய்த்து அக்ஷதை போடுதல் ஆகிவிட்டது. நெல் நகர மாந்தர் கைகளில் குத்துகிறதாம்! நற்றிணைப் பாட்டில் அப்போது சமைத்த நிமிரல் என்னும் சுடுசோற்றைத் தலைவாயில் முற்றத்தில் (= புறங்கடை) குடிமகளிர் பலிச்சோறாக இடுகின்றனர். பகலிலே அதை விரும்பி உண்ணும் காக்கைகள், எல் பல, அதாவது இரவிலே பலிச்சோறு வழங்கார் இன்மையில், இறாலைப் பிடித்து உண்கிறது. பின்னர் கப்பல்களின் தூங்கலில் (sails tied to masts in ships/boats) சென்று உறங்கும்.

பகு-பகல் > பால். இது போல, உகு- உகல் (வினை) > ஊல் என வரும். ஊல்/ஊன் ஆகியது. ஊ ஊல்/ஊன், கா/கான். கோ/கோன், மா/மான், ஆ/ஆன். ... போல. எனவே, ஊ என்றாலே ஓரெழுத்துச் சொல் “ஊன்” ‘meat, flesh' எனப்பொருள். ஊல் (< உகல்) + து = ஊற்று- என வருதல்  காண்க. வில்லம்பு, வாள், கத்தி உயிர்களை வெட்டினால் அரத்தம் ஊற்றெடுக்கும். ஊல்/ஊனில் இருந்து சொரிவது ஊற்று-தல். பின்னர் geysers போன்றனவும் ஊற்று ஆகிறது. அண்மையில் இமயவரம்பன் ஒரு வெண்பாவில் குளிர்தேசத்தில் பொங்கும் ஊற்றுக்கு வெண்பா தந்தார். அப்போது எழுத நினைத்தேன். பின்னர் ஒருமுறை விரிவாகப் பார்க்கலாம்: உகு- > ஊ- > ஊல்/ஊன் (ஊல்+து = ஊற்று. ஆயுதத்தால் வெட்டுதல் போல, என்பதால் ஊன்+து = ஊன்று- எனவும் வினைச்சொல் உண்டு. செடியை ஊன்றினான், ஊன்றுகோல். இவையும் ஊல்- எனும் தாதுவேர். ஊன் என்பதற்கும், ஊண் என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குமுகமாய் எழுதின மடல்:
நம்பூதிரிமார் ஊனு கழிஞ்சதில்லா. ஊணு கழிஞ்சு
காக்கைக்குக் காலையில் பலிச்சோறு தருகின்றனர். அது அப்போதே அட்ட சுடுசோறு.நிமிரல் என்னும் ஒலிக்குறிப்பால் தோன்றும் காரணப்பெயர் காக்கைக்கு இடுகின்றனர்/கொட்டுகின்றனர். தலைவாயில் (முற்றத்தில்) பலிச்சோறாக நிமிரல் உகுக்கின்றனர் என்பது சங்கச் சான்றோர் வாக்கு.

நக்கீரர் பாடல்:
https://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=258

    திருவுடை வியனகர் வருவிருந்து அயர்மார் 
    பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த     
    கொக்குகிர் நிமிரல் மாந்தி எற்பட    
 
    அகலங் காடி அசைநிழற் குவித்த     
    பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை     
    தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும் 

கொண்க கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்று - கொண்கனே! கதிர் எறித்தலானே மக்கள் முதலாயினோர் கால்கள் வெம்பும்படி கீழைத்திசைமலையிலே தோன்றிக் காய்கின்ற ஞாயிற்றினுடைய இயக்கம் பொருந்திய பகற் பொழுதிலே; திருவுடை வியன் நகர் வரு விருந்து அயர்மார் - செல்வம் உடைய அகன்ற நகரின் கண்ணே வருகின்ற விருந்துகளைப் பாதுகாக்கும்படி; பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்கு உதிர் நிமிரல் மாந்தி - பொன்னாலாகிய தொடியையுடைய மகளிர் சமைத்து நிவேதித்து முற்றத்திலே பலியாகப் போட்ட கொக்கினது உகிர்போன்ற சோற்றைத் தின்று;

நெல்லு உகுத்தல், பலிச்சோறு நிமிரல் (சுடுசோறு) உகுத்தல் - வழிபாட்டில் “உகுத்தல்” பயன்பாடும், இச்சொல்லின் தாதுவேரியலும் கண்டோம்.
புறங்கடை உகுத்த எனப் பாடுகிறார் நக்கீரர். இல்லங்களின் தலைவாயில் முற்றத்திலே பலிச்சோறாக நிமிரலைப் படைக்கின்றனர் பொற்றொடி மகளிர்.

புறங்கடை என்பது தலைவாயில் முற்றம் ஆகும். புறங்கடை கடை எனக் குறுகும். இது சங்க காலத்திலேயே நிகழ்ந்துள்ளது.
வணிகர்கள் புறங்கடை, அதாவது வீட்டுத் தலைவாசலில் உள்ள முற்றம். அதன் அருகிலே வியாபாரம் நடக்கும்.
எனவே, கடை என்று இன்றும் சொல்கிறோம். கடை < புறங்கடை ‘தலைவாயில் முற்றம்’.

புறங்கடை ‘தலைவாயில்’
-----------------------------------------

புறங்கடை puṟaṅ-kaṭai , n. < id. +. 1. Outside of a house; வீட்டின் வெளிப்புறம். புறங்கடை வைத்தீவர் சோறும் (நாலடி, 293). 2. Locality other than one's own; வெளிப்பிரதேசம். புறங் கடை நல்லிசையு நாட்டும் (நீதிநெறி. 2). 3. cf. பிறங்கடை. Younger brother; பின்பிறந்தோன். முந்நீர் வண்ணன் புறங்கடை (பெரும்பாண். 30). (MTL)

மணிமேகலை:
(1)
வெயிலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
வெயில் என முனியாது புயல் என மடியாது - மிக்க வெயில் என்று வெறுப்படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து - தலைவாயிலில் நின்றுகொண்டு துன்பமிகுந்து,

(2)
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி
- மணிமேகலை

மாண் எழில் சிதைக்கும்-மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்-பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி

(3)
அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்இசையும் நாட்டும் உறும்கவல்ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்குஇல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை - நீதிநெறி விளக்கம்.

புறங்கடை நல்இசையும் நாட்டும் = தலைவாயிலிலே நல்ல புகழை நாட்டும்.

(4)
மன்னர் புறங்கடை காத்தல்

மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம்
எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள்
காத்தவை எல்லாம் கடைமுறைபோய்க் கைகொடுத்து
வேத்தவையின் மிக்குச் செய்யும்

(பொ-ள்.) யாம்- நாம், மன்னர் புறங்கடை - அரசர் தலைவாயிலை, வறிதே காத்தும்- வீணாகக் காத்துவந்தும் எந்நலம் காண்டும் - யாது பயனடைந்தோம், என்று எள்ளற்க - என்று அக் காவலைக் கைவிடுதலொழிக; பல்நெடுநாள்- பல நாட்கள் காத்தவை யெல்லாம் - (தலை வாயிலைப்பொறுமையுடன்) காத்திருந்தவை யெல்லாம்; கடைமுறை போய் - முடிவிற் சென்று, கைகொடுத்து-உதவியாகி, வேந்து அவையின் - அரசசபையில்,மிக்கு செயும் - மிகுந்த நன்மையைச் செய்யும். (உவேசா)


(5)
அறங்கடை நின்றா ருள்ளு மாற்றவுங் கடைய னாகிப்
புறங்கடை நின்றான் செய்த புலைமைதன் பதிக்குந் தேற்றாள்
மறந்தவிர் கற்பி னாடன் மனம்பொதிந் துயிர்க டோறும்
நிறைந்தநான் மாடக் கூட னிமலனை நினைந்து நொந்தாள்.

(இ - ள்.) அறங்கடை நின்றாருள்ளும் ஆற்றவும் கடையனாகி -
பாவநெறியில் நின்றாரெல்லாருள்ளும் மிகவுங் கடையனாகி, புறங்கடை
நின்றான்
செய்த புலைமை - மனையின் வாயிற் புறத்தே வந்து நின்ற அக்
கொடியோன் செய்த புலைத் தன்மையை,

கடை என்னும் வார்த்தை உற்பத்தி (கடை  < புறங்கடை)
---------------------------------------------------------------------------------------------------

எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாண ருண்டுகடை தப்பலின்
 

பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் - பசித்து வந்த
பாணர் உண்டு வெளிகேினாராகப் புறங்கடை வறிதாகலின்;

(2) பெரிய புராணம்: https://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=113
வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்
கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன்
                         கடைமுன் கேளாத்
  கடை - முன்வாயில். “புறங்கடை நல்லிசையும் நாட்டும்“  என்பது காண்க.

நக்கீரர் தம் செய்யுளில் சொல்லுகிறார்:
இல்லங்களின் தலைவாயில் முற்றத்தில் - புறங்கடையில் -, விருந்தினரைக் காக்குமாறு வழிபட்டு,
காக்கைகளுக்குப் பலிச்சோறு ஆக நிமிரல் எனும் சமைத்த சுடுசோற்றைச் சொரிந்தனர்/உகுத்தனர்.

நா. கணேசன்

Rajja Gopalan

unread,
Oct 19, 2023, 12:02:41 PM10/19/23
to santhav...@googlegroups.com
அரத்தம் என ஏன் வருகிறது? இரத்தம் அன்றோ?

நெற்றூவி ஆசிதர நின்ற நெடுமாறன் - என எனது தந்தையார் ஒரு பாடலில் எழுதியிருந்தார்.  இப்போது புரிகிறது. நெல்லுக்குப் பதிலாகவே இன்று மஞ்சளில் குளித்த அரிசி! 🙏

Sent from my iPhone

On 19 Oct 2023, at 12:57, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:



N. Ganesan

unread,
Oct 20, 2023, 4:52:00 AM10/20/23
to santhav...@googlegroups.com
ஞைவினை நணுகேல் - நைவினை நணுகேல் என வருதல் போல, ஞிமிரல் நிமிரல் என்றாகிறது. மிகப்பழைய ஒலிக்குறிப்புச் சொல் இது. அளி வர்க்கங்களுக்கு ஆகிய தொழிற்பெயர் ஞிமிறு. மிஞிறு என வஞ்சி மாநகர் அரசர் புகழ் பாடும் பதிற்றுப்பத்தில் வருகிறது.ஞிமிறு > மிஞிறு ஒரு Metathesis (இடவலமாற்றம்).

பகலிலே சமைத்த சோற்றை (நிமிரலை) காக்கைகளுக்குப் பலியாக முற்றத்தில் இடுதல்.
உகுத்தல்: சொரிதல்/இடுதல்/கொட்டுதல்/போடுதல். http://puram400.blogspot.com/2012/12/366.html

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச்
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர்கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்
திருவுடை வியனகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்குகிர் நிமிரல் மாந்தி எற்பட
அகலங் காடி அசைநிழற் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்னவிவள்
நெருங்கேர் எல்வளை ஓடுவ கண்டே.

கண் மருத்துவர், கலைவரலாற்றறிஞர் இரா. கலைக்கோவன், திருச்சி:
காக்கைகளுக்கு மகளிர் தாம் சமைத்த நிமிரல் என்னும் சுடுசோற்றை, வீட்டு முற்றத்தில் பலிச்சோறாக நிவேதித்தல் பற்றிய
நற்றிணைப் பாடலுக்கு விளக்கம் தந்துள்ளார் (2007-ல்):

காக்கையும் காதலும்!
  இரா. கலைக்கோவன், திருச்சி

'தோழா, உன் காதலி வீட்டுச் சிறையில். ஏன் தெரியுமா? உன் பிரிவிற்கு வருந்தியதால் உடல் மெலிந்தாள் அவ்வளவில் அவள் கைவளை நெகிழ்ந்தது. தாய் அஞ்சினாள். மகளின் மெலிவிற்குக் காரணம் அறியாளாய், வெளிச் செல்லல் வேண்டாம் என மகளை வீட்டில் நிறுத்தினாள். தோழா, இது நீங்கள் சந்தித்த இடம். இன்றோ, செய்தி தர, நான் மட்டும் இங்கே!'

நற்றிணைத் தோழி (258) தலைவன் கேட்கக் கூறிய தகவல் இது. இதை மட்டுமே அவள் சொல்லி நிறுத்தியிருந்தால், இது, காதல் பாட்டாகக் கரைந்திருக்கும். ஆனால், அந்தத் தோழியை உருவாக்கிய புலவர் நக்கீரரின் பார்வையில் வரலாறு இருந்தது. காதலன் பிரிவு தாங்காமல் மெலிந்த காதலியின் அழகுக்கு உவமை சொல்வது போல் அந்த வரலாற்றை ஒரு காக்கையின் வழியே காதலில் கலந்தார்.

'தோழா, உன் காதலியாம் தலைவி எப்படிப்பட்ட அழகி தெரியுமா? மருங்கூர்ப்பட்டினம் போன்றவள்! அந்த மருங்கூர்ப்பட்டினம் எத்தகையது தெரியுமா? ஊருக்கு வரும் விருந்தினரைப் பாதுகாக்கும்படி வேண்டி, வீட்டுப் பெண்கள் அன்றாடம் சமைத்த உணவின் ஒரு சிறு பகுதியைப் பலியாக வீட்டின் புறக்கடையில் வைக்கும் அளவு பண்பட்ட ஊர்.

மருங்கூர்க் காக்கைகள் பகல் போதில் அந்தப் பலியுணவை உண்ணும். மாலையிலோ, ஊரிலுள்ள அகலமான கடைத்தெருவில் குவிக்கப்பட்டிருக்கும் இறால் மீன்களைக் கொத்திக் கொண்டு பறந்து, பட்டினத்துக் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலின் பாய்மரக் கொம்பில் அமர்ந்து உணவு முடிக்கும்.' எத்தனை வளமான ஊர்! தலைவியும் அத்தனை அழகானவள்!

விருந்தினருக்கு உணவிடுவதோடு நிறுத்தாது, அவர்களைக் காப்பாற்றுமாறு இறைவனை வேண்டும் சங்கப் பண்பாடு, பலியிடும் பழக்கம், 'நிமிரல்' எனும் உணவு, மருங்கூர்க் கடைவீதி வளமை, காக்கை, அதன் உணவு, உறைவிடம், மருங்கூர்த் துறைமுகச் செழிப்பு என எத்தனை வரலாற்றுத் தரவுகள்!


Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 20, 2023, 9:43:01 PM10/20/23
to santhav...@googlegroups.com
ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு ஞிமிறு/நிமிறு என அளிகளுக்கு (Bees) ஒரு பெயரைத் தருகிறது. உலக அளி நாள் (World Bees Day) பற்றிய இழை உண்டு.
தேனீக்கள் அளிவகைகளில் ஒரு சிறு வகுப்பே. “அளி வழக்கம்” என்று அளிகள் இமிர்ந்தும், முரன்றும் உருவாக்கும் இசையைச் சங்க இலக்கியம் பேசுகிறது.
பரிபாடல் 10 (வரி 118), “நல்ல கமழ்தேன் அளி வழக்கம் எல்லாமும்”. இங்கே, அளி வழக்கம் என்பது ”அளியினங்களின் அஞ்சிறை முரல்வதால்
எழும் buzzing, humming music போன்ற இசையை எழுப்பும் பெண்டிர்” என்பதாகும்.

பரிமேலழகர் - பரிபாடல் உரை:
”தங்கள் மேலிருந்த பகற்காலத்துக்குரிய அணிகளை நீக்கினர். மாலைக் காலத்தில் மலரும் மலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலான ஆபரணங்களையும் அணிந்தனர். பலர் பாடினர். அவர்களுடைய பாடலும் பரவலும் புகழ்தலும் ஆடுவாருடைய ஆடலொலியும் அதற்குரிய தாளவொலியும் தேனீக்களுடைய ஒலியும் மிக்கன. அங்ஙனம் எழுந்த பண்ணொலியைக் கேட்டுத் தம் இனமென்று கருதி ஊரிலிருந்த வண்டுகள் எதிர்வந்து ஊதின; பாடுவார்களது பூவேய்ந்த கொண்டைமேல் தேனையுண்டிருக்கும் வண்டுகள் உடன்வந்து ஊதின. யாவரும் தென் திசையை நோக்கி மீண்டனர். அப்பொழுது மாடத்தினுள்ளிருந்து மேலெழுந்த அகிற்புகையானது மலையின் மேல் தங்கி எழுந்த பனியை ஒத்தது. ”
https://groups.google.com/g/santhavasantham/c/dabme6X8Rkk/m/_i0Nw0iOCAAJ

ஞிமிறு, நிமிர்தல், இமிர்தல்
-------------------------

தமிழில் பல சொற்கள், சொல்லில் முதலாக உள்ள மெய்யெழுத்து மறைந்து ஏற்படுவன. ஒரு நூறு வார்த்தைகளைத் தொகுத்து, க், ச், ம், ந், வ், ய் எனும் எழுத்துக்கள் சொன்முதல் இருப்பது மறைந்து ஏற்படும் சொற்களைத் தொகுக்கலாம். பொறுமையாக, உயிரெழுத்தில் தொடங்கும் எல்லாத் தமிழ்ச் சொற்களையும் ஆராய்ந்தால், சொன்முதல் மெய் (க், ச், ம், ந், வ், ய்) அழிந்து, தோன்றும் தமிழ்/த்ராவிட வார்த்தைகளைத் தொகுக்கலாம்.  பல சொற்களைக் காட்டியுள்ளேன்,
https://groups.google.com/g/santhavasantham/c/34ebzqoFK64/m/ZfjCNyGKCgAJ
ஞிமிர்தல்/நிமிர்தல் > இமிர்தல் பற்றி ஆய்வோம். ஒலியியல் (Acoustics) விஞ்ஞானத்தில் ஞிமிரோசை என்றால் என்ன எனப் பார்ப்போம்.

அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு

பறவைச் சிறகு எழுப்பும் ஒலிகளின் பெயர்கள்:
(1) ஓசனித்தல் : Very low-frequency sound (2 - 10 Hz) = Bird-wing beating
(2) அம்முதல் : Low-frequency sound (20 - 70 Hz) = Humming
          அஞ்சிறகு = அம்- +சிறகு (= humming wings of bees).
(3) ஞிமிர்தல்/இமிர்தல் : Mid-frequency sound (150 - 300 Hz) = Buzzing

(4) ஞைஞை எனல்: High-frequency sound (350 - 600 Hz) = Whining
https://groups.google.com/g/santhavasantham/c/vbE8wFzHbzg/m/iOxbUbk2BAAJ
இவ்வாறாக, ஒலிகளைக் கூர்ந்து கேட்டுப் பெயர்தந்த பண்டைத் தமிழர், சுடுசோறு ஆக்கும் போது உலை கொதிக்கும் ஓசை ஞிமிர்தல்/நிமிர்தல் எனக் கணித்தனர்.  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கரந்தைப் புலவர் கல்லூரி முதல்வர் ச. பாலசுந்தரனார் புலமையை வியந்தவர். அவருக்குப் பண உதவி செய்க எனப் பாடினார். பாவலர் ச. பா. தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணருக்குப் பின்னர் உரைகண்டவர். அவர் ஞிமிறு, நிமிறு என ஆதல் பற்றித் தொல்காப்பிய உரையில் விளக்குகிறார்:
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM3kZpy.TVA_BOK_0008470/page/255/mode/2up?view=theater
ஞைஞை எனல் என்னும் ஒலிக்குறிப்புச் சொல்லுடன் தொடர்புடையது ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு. ஞை எனல் “to whine", ஞிம் எனல் “to buzz, to hum, etc.,". ஞைவினை >> ஔவை ஆத்திசூடியில் “நைவினை நணுகேல்” என்றார். அதுபோல், ஞிமிரல் நிமிரல் என்றும் வரும்.

Characterization of Boiling Sound at Conditions Approaching Critical Heat Flux
Akshat Negi, 2019, M.S. Thesis, Mech Engg., Rochester Institute of Technology
https://scholarworks.rit.edu/cgi/viewcontent.cgi?article=11449&context=theses#:~:text=It%20is%20observed%20that%20the,%3E100%20W%2Fcm%C2%B2). See Figures, esp. 23-25. Boiling sound frequencies are dominant in 0-500 Hz range.
https://physics.stackexchange.com/questions/28069/why-is-boiling-water-loud-then-quiet

எனவே, உலையில் தண்ணீரை ஊற்றி, அரிசியிட்டு கொதிக்கும் ஒலிக்குறிப்பை வண்டுகளின் ஒலிக்கு ஒப்பிட்டு, சுடுசோற்றை *நிமிரல்* எனச் சங்க காலத் தமிழர்கள் பெயரிட்டு அழைத்ததில் வியப்பு ஏதுமில்லை. சங்க இலக்கியங்களில், வீட்டின் தலைவாசலில் அப்போது தான் சமைத்த நிமிரல் சோற்றைக் காக்கைக்குப் பலிச்சோறாக தருவதும், மேலும் இரு பாடல்களில், வறுமையில் பழைய சோறு உண்டு பழகிய உழைப்பாளர்களுக்கு தலைவர்கள், அரசர்கள் நிமிரல் என்னும் சுடுசோற்றுடன் அபாரமான விருந்து ஊட்டுவதும் விவரிக்கப்பட்டுள்ளன.

நிமிரல் (freshly boiled rice)
------------

உலை கொதிக்கையில் தளபுள, தளபுள என்ற ஓசை எழுகிறது. நிமிர்தல் (ஞிமிறு/நிமிறு - ஒலி எழுப்பும் வண்டு, தும்பி, ...) எனவே, நிமிரல் ஒலிக்குறிப்பால் சுடுசோற்றுக்கு வரும் பெயர் ஆகும். நிமிர்தல் > இமிர்தல். நிமிர்தல் எழுதல்/உயர்தல் என்ற பொருளே, வண்டுகளும், தேனீயும் மலரில் தேனுண்டு எழுதலால் ஏற்படும் சொல். நிமிர்தல்/ஞிமிர்தல் முதற்பொருள் ஒலி தான். அரிசியை இட்டு  உலை கொதிக்கையில் பார்த்தால் தெரியும். நிமிர்தல் எழுதல் என்ற பொருள் ஒலி எழுப்பும் ஞிமிறுகள் காற்றில் எழுந்து பறப்பதால் உண்டாகும் இரண்டாம் பொருள், முதன்மைப் பொருள் அல்ல.

பொம்மல் (< பொருமல், consonant assimilation) பழஞ்சோறு - பழைய சோறு. இதற்கு எதிர்ப்பதமாக, நிமிரல் = சுடுசோறு. மையூன் = செம்மறி யாட்டின் கறி, வாலூன் = வெள்யாட்டின் கறி போல வேறுபாடு காட்ட, நிமிரல் X பொம்மல் (பழஞ்சோறு) சங்க நூல்களில் பயில்கிறது.

நிமிரல் சுடுசோறு, கருனைக்கிழங்குப் பொரியல், சோற்றுடன் பிசைபடும் குழம்பு, மாம்பழம், தயிர் போன்றவற்றுடன் உள்ள அறுசுவை விருந்து:
"கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே". - சிந்தாமணி

கருனை = புலிக்கண் கருனை, பசுங்கட் கருனை, கருங்கண் கருனை என விளக்கினர் சங்கச் சான்றோர். காரணம், கண்ணில் பாவை போல நடுவே கருப்பாக உள்ள அதன் மலர். கருனை = காரணப் பெயராக Amorphophallus paeoniifolius-கு அமைந்தமை காண்க.


பழைய சோற்றுக்கும், நிமிரல் என்னும் சுடுசோற்றுக்கும் வேற்றுமையினை அழகாகக் காட்டும் பாடல்:
புறநானூறு: 395. சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.

வயலிலே உழும் உழவர்கள் காடுகளிலே பகடுகளை மேய விட்டுவிட்டுச் சூடான முயற்கறியும் வாளைமீனைப் பலவகை யாகப் பக்குவப்படுத்திய கறிகளும் பழஞ்சோற்றுடன் உண்டு, தளவப்பூச் சூடிக்கொண்டு, அரிப்பறையால் புள்கடிந்து, நெல்லிலிருந்துவடிக்கப்பட்ட கள்ளினை அருந்தி மகிழ்வர்.பழஞ்சோறே உண்டு பழக்கப்பட்ட உழக்குடிகளுக்கு,
சுடுசோறு நிமிரல் கொண்டு விருந்து படைப்பன் இந்தக் கிழான்: பெருஞ்சாத்தன் ஆவான்.

நிமிரல் - Freshly cooked rice படைத்து விருந்தாடல்:
அது வள்ளன்மையுடைய வேண்மானுக்கு உரியது. அவ்வூரில் உள்ள, அறத்தால் புகழ்பெற்ற சாத்தனுக்கு வேண்டியவர் யாங்கள்! முன்னொரு நாள், 'பெருமானே!” என மாலைப் போதில் தடாரி ஒலித்து அவன் வாயிலில் நின்றேன். என்னைக் கண்ட அவன் சிறிதும் காலம் தாழ்த்தாது, பேசவும் செய்யாது, மனைக்கண்ணுள்ள தன் மனைவியை அழைத்து, ‘என்னைப்போலக் கருதி இவனைப் பேணுக!' என்றான். அத்தகைய அன்பிற் சிறந்தானை என்றும் மறவேன். பிறரை நினைக்கவும் செய்யேன். 'உலகமெங்கும் பசியால் வாடித் துயரம் அடைந்த காலத்தினும், கொக்குநகம் போன்ற நிமிரல் என்னும் சுடுசோறும், சூடான இறைச்சியும், அளவற்றுத்தந்து உதவுகின்ற அவன் வாழ்க!' எனச் சான்றோர் வாழ்த்துவர். உள்ளதும் இல்லதும் என்று ஏதும் பாராது, வரையாது வழங்குபவன் அவனே யாவன்! அவன் திருவடிகள் வாழ்க!


Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 23, 2023, 12:11:31 PM10/23/23
to santhav...@googlegroups.com
நிமிரல் என்னும் புதுச் சோற்றுடன் கறி (sauce) என்னும் குழம்பு (curry) பிசைந்து உண்ணுவதை விளக்கும் செய்யுள் சீவக சிந்தாமணியில் உள்ளது. சமணக் காப்பியம் ஆதலான், ஆருகத உணவு. இப்போது சைவ உணவு என்கிறோம். நிமிரல் என்பது ஒலிக்குறிப்பால் தோன்றும் சொல்:
https://groups.google.com/g/santhavasantham/c/rpBNXWtfXJs/m/HVZkihKGBwAJ

இதே போல, இன்னொரு ஒலிக்குறிப்புச் சொல்லும் உண்டு. மையூன் (sheep meat), வாலூன் (goat meat) வறுத்துச் செய்வது. அவ்வகை ஊனுண்டிகள் “ஓசை” எனச் சங்க இலக்கியங்களில் பெயர்பெறுகின்றன. அழகாக, ஒலிக்குறிப்புச் சொல்லாக ஊன்வகைக்கு விளக்கும் பதிவு. நன்றி:
தோசை தின்றதுண்டு ஓசை தின்றதுண்டா?
https://mathipuu.blogspot.com/2020/11/blog-post_12.html

*தோசை தின்றதுண்டு, ஓசை தின்றதுண்டா?*

வாயிலை அடைத்துக் கொள்ளாத பேரில்லமே !(சிறிய அரண்மனை ?) இடையறாது வந்தவர்க்கெல்லாம் கலம் குறைவுபடாமல் வண்டுகள் சூழ மணக்கும் கள்ளோடு அளவின்றிச் சோற்றையும் வழங்கியதால் நீரற்ற ஆற்றின் ஓடம்போல முற்றம் செப்பமின்றிக்¹கிடக்க , மண்ணகங் காக்கும் பெருவேந்தர்தம் வளமான பெரிய அரண்மனைகளில் மதங்கொண்ட யானை பெருமூச்சு விடுவதுபோலக் கொதிக்கின்ற எண்ணெயில் போடும் ஆட்டிறைச்சியின் ஓசையுடைய பொரியலைப் புதிதாக வருவோரின் சோர்ந்த கண்கள் மாந்தும்படி உண்டாக்கிக்கொண்டிருந்தாய் முன்பு !

அது போயிற்று !

கரந்தைப் பூச்சூடி , பகைவரை வென்று ஆநிரை (பகைவர் கவர்ந்த பசுக்கூட்டத்தை ) மீட்ட காரியாதி³ நடுகல்லானான்.
தலைவனை இழந்ததால் அணிகலன் களைந்த பெண்ணைப்போலப் பேரில்லமே நீ இப்போது  பொலிவிழந்து கிடக்கிறாய் !
- என்பது ஆவூர் மூலங்கிழாரின் கையறுநிலைப் பாட்டு (புறநானூறு , 261)

இப்பாட்டின் , " நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை "(௸, அடி. 8) என்பதற்கு *" நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையுடைய பொரியல் "* என்று பொருள் கூறும் பழையவுரையாசிரியர் , *" ஓசை என்றது ஆகுபெயரான் ஓசையையுடைய கறியை ; இஃது ஒரு திசைச்சொல் "* என்று குறிப்புகள் தருகிறார்.

ஆகுபெயர் என்பது பெயரிலக்கணம் சார்ந்த இலக்கணக் குறிப்பு.
திசைச்சொல் என்பது செய்யுள் ஈட்டச் சொல்வகை சார்ந்த இலக்கணக் குறிப்பு.

புறநானூற்றுப் பழையவுரையாசிரியர் காலத்தில் ( பொதுக் காலம் 12ஆம் நூற்றாண்டு) ஓசை  என்பது ஒரு வட்டார/கிளைமொழி வழக்காக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர் அவ்வாறு எழுதமாட்டார் என்பதை அவர் உரை இயல்பறிந்தோர் உணர்வர்.

திசைச்சொல் என்பதை, வடசொல் அல்லாத பிறமொழிச் சொற்களையும் உள்ளடக்கியதாகக் கருதும் பிற்கால வழக்கப்படி , புறநானூற்று உரையாசிரியர் தமிழல்லாத மொழியொன்றின் வழக்கைச் சுட்டியதாகவும் கொள்ளலாம்.

அது , இறைச்சியையோ, இறைச்சிப் பொரியலையோ குறித்து வழங்கியிருக்கவேண்டும். இப்போது தொடர்கிறதா என்று தெரியவில்லை.

கொசுறு1.
மையல் யானை அயாவுயிர்த் தன்ன
நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை (௸, அடி. 7-8)
என்று கொதிக்கும் எண்ணையில் ஆட்டிறைச்சி தளபுள என்று பொரிவதற்கு உவமை சொல்கிறார் ஆவூரார். சாதாரணமாகவே யானை தளபுளஎன்று மூச்சுவிடும். மதம்பிடித்தால் கேட்கவே வேண்டாம்.

 சான்றோர் செய்யுள்களில் உவமை , தத்துவ இயலின் பிரமாணமோ  அலங்காரவியலின் அணியோ அன்று. அதுவே  பொருளுமாகி நிற்கும். 'உவமப்பொருள்' என்பார் தொல்காப்பியரும்
கொசுறு 2.

நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர(௸, அடி. 8 - 9)

9 ஆம் அடிக்கு, " புதுமாந்தருடைய ஒளி மழுங்கின கண்கள் நிறைய " என்று பொருள் காண்கிறார் பழையவுரையாசிரியர்.

ஆர் (தல்) - உண்(ணுதல் ) என்னும் பொருளும் உண்டு. 'கண்கள் சுவைக்க' என்று இங்குப் பொருள் காணலாம்.
கண் உண்ணுமா?உண்ணாது ; ஆனால் சுவையுணரும். உண்ணுதல் செயல். சுவைத்தல் உணர்வு. உண்டு சுவையுணரும் முன்பே , கண்டு சுவையுணரலாம் என்கிறது அண்மை ஆய்வு ஒன்று⁴.
ஆவூரார் அப்போதே ஆய்ந்து கண்டதாக நான் சொல்லவில்லை ; சொல்ல முடியாது ; கூடாது. ஆனால் உற்று நோக்கிப் பதிவு செய்வதில் சங்கச் சான்றோர் நுண்மாண் நுழைபுலத்தினர். பிற்காலத் தமிழிலக்கியங்களில் காண அரிதான துல்லியப் பதிவுகளைச் சான்றோர் செய்யுள்களில் காணலாம். அப்படியொரு பதிவு இது.
------------------------------------------------
குறிப்புகள்
1.'முரிவாய் முற்றம்' (புறம். 261: 3) என்பதற்கு 'முரிந்த குறட்டையுடைய' என்பது பழைய  உரையாசிரியர் உரை. பலரும் இடையறாது வந்து செல்வதால் தேய்ந்து சிதைந்து செப்பனிடப்படாமல் , செப்பனிட இயலாமல் கிடந்த முற்றம் என்க.
2. எண்ணை என்னும் ஒரு சொல் நீர்மைத்தாய , மருவிய வடிவத்தையே கையாளலாம். இது இக்காலத் தமிழ்.
3. சுவடியில் பாடப்பட்டோன் பெயர் சிதைந்துள்ளது. அது காரியாதி என்பது ஒளவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் ஊகம்
4.' Seeing' the flavour of foods before tasting them https://www.sciencedaily.com/releases/2013/04/130411194017.htm

N. Ganesan

unread,
Oct 23, 2023, 4:24:54 PM10/23/23
to santhav...@googlegroups.com
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்
இலையார் சூல மேந்திய கையா னெயிலெய்த
சிலையான் மேய நன்னகர் போலும் சிறுதொண்டீர் - சம்பந்தர் தேவாரம்.

மாந்துதல் = பெரும் அளவில் உண்ணுதல்

பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர். 

அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர் 
"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் 
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"
மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.

பெருஞ்செய்
நெல்லின் கொக்குகிர் நிமிரல்-பெரிய வயலிடத்து விளைந்த நெல்லினுடைய
கொக்கின் நகம் போலும் சோற்றை; பசுங்கண் கருனைச் சூட்டொடு
மாந்தி-பசிய துண்டங்களாகிய பொரிக்கறியும் சூட்டிறைச்சியுடனும் உண்டு;
விளைவு ஒன்று வெள்ளம் கொள்க என - விளைத்த ஒன்று வெள்ளமென்னும்
அளவிற்றாக விளையக்கொள்க என்று சான்றோர் வாழ்த்துமாறு

உரையாசிரியர்கள் பசுங்கட் கருனை = கரிய கண்ணை உடைய கருனைக் கிழங்கின் பொரியல்.
சூடு = இறைச்சி. மாந்துதல் - வயிறு புடைக்க உண்ணுதல்.

maandhuthal - eating solid (or, fluid) food heavily.

NG

N. Ganesan

unread,
Oct 25, 2023, 4:28:07 AM10/25/23
to subrabharathi manian, Santhavasantham
நன்றி, சுப்ரபாரதி மணியன் அவர்களே.

On Mon, Oct 23, 2023 at 8:00 PM subrabharathi manian <subrab...@gmail.com> wrote:

from my Facebook

இன்று பூஜை ஸ்பெசல் அடை தோசை சாப்பிட்ட போது அமெரிக்க கணேசன் அவர்களின் இந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. சுவையான மின்னஞ்சல் 


உணங்கல் ‘salted, dried fish'
 ------------------------------
 
 உணங்கல் - கருவாட்டின் பெயராகச் சங்க நூல்களில் பயில்கிறது.
 உணங்கல் தானியங்கள், இறைச்சி, மீன் இவற்றை வெயிலில்
 காய வைப்பதற்கு வருவதனால், “மீன் உணங்கல்” எனக் கருவாட்டுப் பெயர்
 சொல்லப்படுகிறது.
 
 உணங்கல்
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - நற் 331/4
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி - அகம் 20/2
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் - அகம் 80/6

பெரும் கடல் பரதவர் கோள்_மீன் உணங்கலின்
இரும் கழி கொண்ட இறவின் வாடலொடு - குறு 320/1,2

கருக்குதல் -  karukku-
v. tr. Caus. of கருகு-.
1. To burn, scorch, tan, darken by heat;
கருகச்செய்தல்.
2. To toast, fry, parch, boil;
காய்ச்சுதல். கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே (தைலவ. தைல. 84).
3. To burn up, consume;
எரித்தல். அவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33).

இந்த வினைச்சொல்லின் தொழிற்பெயராய் “கருனை” அமைந்துள்ளது. தீயினால் கருக்குதல் என்பதைத் தெளிவுபடுத்த, “வறைக் கருனை”, வறுக்கும் பொரிக்கறி எனச் சங்க நூல்களில் வரும். இது, உணங்கல் தானியங்கள், இறைச்சி, மீன் இவற்றை வெயிலில்
 காய வைப்பதற்கு வருவதனால், “மீன் உணங்கல்” எனக் கருவாட்டுப் பெயர் சொல்லப்படுவது போல.  “வறைக் கருனை” = அசைவ உணவு.
 
 இன்னொரு “கருனை” சங்க இலக்கியத்தில் உண்டு. கருனைக் கிழங்கு நடுவில் பெரிய கண் கொண்டதாகும். அது கரிய நிறம் உடையது. எனவே, புலியின் கருங்கண்/பசுங்கண் போல, என்பர். கருங்கண்/புலிக்கண்/பசுங்கண் கருனை என வர்ணித்துள்ளனர். இது சைவ உணவு. பாகர் என்பது இன்றைய குழம்பு ‘தீம்புளிப் பாகர்’. கருங்கண்/புலிக்கண்/பசுங்கண் கருனைக் கிழங்கின் பொரியலைப் “புலிக்கண் வெப்பர்” என ஔவையார் புகழ்ந்துள்ளார். கருங்கண் கருனை பற்றிச் சீவக சிந்தாமணியில் அழகான பாடல் உண்டு.  நிமிரல் என்னும் சுடுசோற்றில், கறி (= குழம்பு) பெய்து உண்கையில், புலிக்கண்/கருங்கண் கருனை தான் side dish.
 https://groups.google.com/g/vallamai/c/cT28phIIXHs/m/fhvZO4RKAAAJ
 
 நா. கணேசன்
 

--
You received this message because you are subscribed to the Google Groups "karanthaijayakumar" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to karanthaijayaku...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/karanthaijayakumar/CAA%2BQEUcZ%3DxxXzeJX4TUXvb_6NhG8nymsFff4wV4kQj_BJhsQOg%40mail.gmail.com.

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 26, 2023, 3:45:23 AM10/26/23
to subrabharathi manian, Santhavasantham
நன்றி, சுப்ரபாரதி மணியன் அவர்களே.

On Mon, Oct 23, 2023 at 8:00 PM subrabharathi manian <subrab...@gmail.com> wrote:

from my Facebook

இன்று பூஜை ஸ்பெசல் அடை தோசை சாப்பிட்ட போது அமெரிக்க கணேசன் அவர்களின் இந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. சுவையான மின்னஞ்சல் 


மாந்துதல் = வயிறார உண்ணுதல். காக்கைகள் விருந்தினர் வருவார்கள் என நிமித்தம் கூறும் என்பது பல ஆயிரம் ஆண்டுக்கால நம்பிக்கை. எனவே, தலைவி, நன்றி பாராட்ட, நிமிரல் என்னும் புதுச் சோற்றை ஆக்கித் தலைவாசலில் சொரிந்தாள். காக்கைகள் உண்டு மகிழ்ந்தன.  நிமிரல், என்பது அப்போதே வடித்த சோறு/சாதம் என விளக்கும் நற்றிணைப் பாடல்.

பகலிலே சமைத்த சோற்றை (நிமிரலை) காக்கைகளுக்குப் பலியாக முற்றத்தில் இடுதல்.
உகுத்தல்: சொரிதல்/இடுதல்/போடுதல். http://puram400.blogspot.com/2012/12/366.html


https://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=258

"திருவுடை வியனகர் வருவிருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் *புறங்கடை* உகுத்த
கொக்குகிர்  *நிமிரல்* மாந்தி எற்பட "


தூங்கல் வங்கம்
http://arumughompillai.blogspot.com/2018/06/18.html

இன்னொரு பாடல்: பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர். இப்படிப் பழயசோத்தையே உண்ணும் வழக்கமுடைய உழக்குடிகள், அரண்மனைக்குச் சென்று விருந்தாடினர். நிமிரல் என்னும் புதுச் சாதம் சமைக்கப்பட்டு, ஊட்டப்பட்டது.

அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர்
"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"
மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.  இதில் பெரிய வயலில்  விளையும் அமோக விளைச்சல் ஆகிய நெல்லை அரிசியாக்கி, கொக்கின் நிறம் போலவும், அதன் நகம் போல் நீட்சி உடைய புத்தம் புதிதாய் வாக்கிய நிமிரல் சோற்றை அளித்து விருந்தை மகிழச்செய்தான். நிமிரல் புதுச் சோற்றுடன், கரிய கண் உடைய கருனைக் கிழங்கின் பொரிக்கறியும், ஆட்டுக் கடாவின் இறைச்சியின் சூடும் அளித்தான். உபலட்சணமாக, கறி (குழம்பு), நெய், தயிர் இருந்தன எனலாம். விருந்தினர் வயிறு ஆரப் புசித்தனர்.

இரண்டு பாடலிலும், செல்வந்தன், தலைவன் அளிக்கும் விருந்து நிமிரல் என்னும் புதிதாய்ச் சமைத்த சாதம் என்பது வெள்ளிடைமலை. ஞிம்ஞிம் என்னும் அனுகரணவோசைச் சொல் (ideophone) நிமிரல் (< ஞிமிரல்). இச் சொல்லாய்வு இவ்விழையில் எழுதியுள்ளேன்.

மாந்துதல் - வயிறு புடைக்க உண்ணுதல். The food can either be solid or fluid:
(Just listing eating solid food. Like "நிமிரல் மாந்தல்”)

As in NaRRiNai poem, crows eating the freshly cooked rice, nimiral as Bali offering.
செம் சோற்ற பலி மாந்திய/கரும் காக்கை கவவு முனையின் - பொரு 183,184

இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த/கடையோர் விடு வாய் பிசிரொடு சுடு கிழங்கு நுகர - புறம் 225/2,3
செம் சுளைய கனி மாந்தி/அறை கரும்பின் அரி நெல்லின் - பொரு 192,193
கவர் படு கையை கழும மாந்தி/நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் - நற் 60/6,7
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி/தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் - நற் 195/2,3
குழவி சேதா மாந்தி அயலது - நற் 213/4
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி/சாரல் வரைய கிளை உடன் குழீஇ - நற் 304/1,2
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று - நற் 352/6
குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் - நற் 386/3
முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து - குறு 46/3
நெல்லி அம் புளி மாந்தி அயலது - குறு 201/4
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி/மான் ஏறு உகளும் கானம் பிற்பட - குறு 256/2,3
தீம் புளி நெல்லி மாந்தி அயலது - குறு 317/2
பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி/நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் - கலி  109/2,3
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று - கலி 121/4
கூம்பு விடு பன் மலர் மாந்தி கரைய - அகம் 56/5
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி/பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு - அகம் 178/5,6
வீளை அம்பின் இளையரொடு மாந்தி/ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட - அகம் 182/4,5
அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி/வெண்ணெல் அரிநர் பெயர் நிலை பின்றை - அகம் 236/3,4
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி/சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் - அகம் 277/17,18
எரி மருள் கவளம் மாந்தி களிறு தன் - அகம் 349/11
விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி/நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் - புறம் 61/6,7
குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி/வட_மலை பெயர்குவை ஆயின் இடையது - புறம் 67/6,7
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி/விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என - புறம் 395/37,38

புறங்கடை = தலைவாசல். உ-ம்: முத்தொள்ளாயிர வெண்பா:
https://groups.google.com/g/santhavasantham/c/PEulw8pWSDc/m/oMWpPQTFBwAJ
முத்தொள்ளாயிர வெண்பா:
சோழனின் யானைமறம்

கொடிமதில் பாய்ந்துஇற்ற கோடும் அரசர்
முடிஇடறித் தேய்ந்த நகமும் – பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் *புறங்கடை* நின்றதே
கல்லார்தோள் கிள்ளி களிறு

விளக்கம்:
கல், மலை போன்ற தோள்வலிமை கொண்டவன் சோழன். அவனுடைய ஆண் யானை பகைவரின் கோட்டையைப் பாய்ந்து இடித்ததால் அதன் தந்தங்களின் நுனி முறிந்து போயிற்று. பகை மன்னர்களின் தலைமுடியை (கிரீடம்) இடறியதால் அதன் கால் நகங்கள் தேய்ந்து போயின. அழகிழந்த தன் தோற்றத்தைத் தன் பெண் யானைக்குக் காட்டுவதற்கு நாணம் கொண்டு யானைக் கொட்டிலுக்குப் போகவில்லை. சோழனின் அரண்மனைத் தலைவாசலிலே நின்று விட்டது. இப்படிப்பட்ட வீரம் பொருந்திய யானைகளைத் தன் படை பலமாகக் கொண்டவன் சோழன்.

NG
 
 


N. Ganesan

unread,
Oct 26, 2023, 7:54:07 AM10/26/23
to Santhavasantham
கருனைக் கிழங்கை வர்ணிக்கும் சொல்லாக,  கருங்கண், பசுங்கண், புலிக்கண் போன்றன சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.

பசுங்கண் = கருங்கண். பச்சை - கருமை என்ற பொருளில் வரும். பச்சைமால் - கரிய திருமால்.
பல உயிரிகளின் கண்களைப் பைங்கண் என அடைகொடுத்து வர்ணிப்பர். கருங்கண் உடைய உயிரி எனப் பொருள்.

”பைங்கண் வல்லியம்” எனப் பசுங்கட் புலி அகநானூற்றில் உள்ளமை காணலாம்.
பைம் கண் வல்லியம் கல் அளை செறிய - அகம் 362/4
பசும் கால் வெண்_குருகு வா பறை வளைஇ - அகம் 273/2
பைம் கால் கொக்கின் மென் பறை தொழுதி - நெடு 15
பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன - குறு 122/1
பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப - அகம் 120/3
குடுமி கொக்கின் பைம் கால் பேடை - அகம் 290/1
பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை - புறம் 342/7
சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் - நற்றிணை 31
பசுங்கால் கொக்கு = பைங்கால் கொக்கு. கரிய கால் கொண்ட கொக்கு. அதுபோலவே, பைங்கண் வல்லியம் = பசுங்கண் புலி. எனவே, புலிக்கண்/கருங்கண்/பசுங்கண் கருனைக் கிழங்கு என்று சங்கப் புலவர்கள் வர்ணிக்கின்றனர்.

N. Ganesan

unread,
Oct 31, 2023, 8:59:42 AM10/31/23
to vall...@googlegroups.com
அன்பின் இளங்கவி தங்கவேல் அவர்கட்கு,

அளி உலவிய ஒரு மாலை - ஒருமாலை என்பது கடப்ப மாலை என உரைத்தீர். வாழ்க.
முருகனின் பூசாரி வேலன் எனப் பல சங்கப் பாடலில் வரும். மிகச் சிறப்பான ஒரு பாடலில்
வேலன் பூசாரி, “கடம்பன்” என அழைக்கப்படுகிறான்.

இயற்கையாகவே மாலை தொங்கிக் கொண்டுள்ள மரங்கள் இரண்டு. (1) (சரக்) கொன்றை மரம். கொன்றை மாலையை சிவன் விரும்பி அணிகிறான்  (2) கடம்பு மரம். இதில் இரண்டு வகை உண்டு: செங்கடம்பு, வெண்கடம்பு. இந்த இரண்டுவித மாலைகளுமே, கடம்பன் முருகனுக்கு இஷ்டமானவை. கார்த்திகைப் பெண்டிர் போல அமைந்த காந்தள் மலரும் விருப்பம். எனினும் காந்தளன் எனப் பெயர் இல்லை. ஆனால் கடம்பன் என்ற பெயர் முருகுக்கும், முருகு அணங்கின் பூசகனுக்கும் உண்டு. தொல்காப்பிய உரையில் பேராசிரியர், இயற்கையாகவே மாலைகளாகப் பூக்கும் கொன்றை, கடம்பு பற்றி விதந்துரைத்தார்.
திருமுருகில் ஒரு மாலை (கடம்புப் பூவின் மாலை):
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0012341_திருமுருகாற்றுப்படை.pdf
"தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள்பூங் தண்டார் புரளும் மார்பினன்.”

7-11. கடலை முகந்த நிறைந்த கருப்பத்தை உடைய கரிய மேகமானது, ஒளியால் போழப்படும் வானத்தில் வளப்பமான நீர்த்துளியைச் சிதறி முதல் மழையைப் பெய்த, குளிர்ந்த நறுமணம் வீசும் காட்டில், இருள் உண்டாகும்படியாகச் செறிந்த பருத்த அடிமரத்தையுடைய செங்கடம்பினது உருளுகின்ற குளிர்ந்த மாலை புரளுகின்ற திருமார்பை உடையவன்; https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0591.html
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZp7kJpy.TVA_BOK_0002453/page/n579/mode/2up?view=theater

அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ - - - - - - 255
 ஆல்கெழுகடவுள் புதல்வ மால்வரை
 மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே
 வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறு
 இழையணி சிறப்பின் பழையோள் குழவ
 வானோர் வணங்கு வில் தானைத்தலைவ - - - - - - 260
 மாலை மார்ப நூல்அறி புல
 செருவில் ஒருவ பொருவிறல் மள்ள
 அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
 மங்கையர் கணவ மைந்தர் ஏற
 வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ - - - - - - 265

மாலை மார்ப - இத்தொடரால் முருகக் கடவுளின் போகத்திற்குரிய தாரினைக் கூறுகிறார். இது கடப்பந்தார்.
 மாலை மார்ப = *இன்பத்துக்குரிய*  கடப்ப மாலையை விருப்பமுடன் எப்பொழுதும் மார்பில் அணிபவனே (திருமுருகு)
 குறிஞ்சிப்பாட்டில், கடம்ப மாலை வரும் செய்தி காண்க. ”திணிநிலைக் கடம்பின் திரள்அரை வளைஇய துணையறை மாலையின் கைபிணி விடேஎம்” காதலனும் காதலியும் கைகளைப் பிணித்திருப்பது, கடம்ப மரத்து மாலைகள் இரண்டைப் பிணித்து முருகன் கழுத்தில் அணிவது போல என்பதைக் குறிஞ்சிக் கிழவோனாகிய முருகனின் களவொழுக்கத்தைக் கூறுகிறார் குறிஞ்சிப் பாட்டில் மகாகவி கபிலர் பெருமான்.  “மகளிர் ஒழுங்கிற்கு ஒப்புச் சாற்றுதலை உடைய” கடப்ப மாலை என்கிறார் நச்சினார்க்கினியர். துணையமை மாலை என்றும் பாடம். தலைவனும் தலைவியும் களவுக் காதலில் கூடி மகிழும் ஒழுக்கத்தைக் கூறுவது குறிஞ்சித் திணை. இதனை, குறிஞ்சித் தெய்வம் முருகனின் போகமாலை ஆகிய கடப்ப மாலையை வைத்துக் குறிசிப்பாட்டைப் பாடினார் தமிழின் முதல் மகாகவி.
 
 குறிஞ்சிப் பாட்டின் கடைசியில், முருகன் வள்ளியைக் கடப்பமாலை அணிவித்து மணந்தது போல, தலைவன் களவொழுக்கத்தை நிறுத்தி, ஊரார், சுற்றம் அறியக் கலியாணம் செய்தலும் கூறினார்:
           சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
           துனைஇய மாலை துன்னுதல் காணூஉ 230
           நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
           நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்
           கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என
           ஈர நன் மொழி தீர கூறி
           துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து 235
           துஞ்சா முழவின் மூதூர் வாயில்
           உண்துறை நிறுத்து பெயர்ந்தனன்

வேலன் பூசாரி கடம்பு மாலை அணிந்து கிடாய் வெட்டிக் களத்தில் முருகு அணங்கைப் பூஜிப்பதும், தலைவி திருமணம் விரைவில் ஆவதற்குக் குடும்பத்தார் செய்யும் வழிபாடு. வேலன் (கடம்பன்) பற்றிய சங்கச் செய்யுள்கள் பல. நகைச்சுவையானவையும் உண்டு.
 
காக்கக் கடவியநீ காவாது இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்
கடம்பா முருகா கதிர்வேலா நல்ல
இடங்காண் இரங்காய் இனி.

(2) அளிகளின் ஞிமிர்தலும் (நிமிரல்)
---------------------------

அளிகள் = Bees. Anthophila என்று பெயர். ஆந்தோ = மலர்கள், பிலா = நாடுபவை. மலர்களை நாடித் தேனும், மதுவும் உண்ணும் மதுகரங்கள் அளிகள். அவற்றில் தேனீக்கள் ஒருவகை தான். அளிகளில் (Bees) தேனீ (Honeybee) ஒரு சிறு விழுக்காடே. கொங்குதேரும் மலர்நாடி இனம் அளிகள். தமிழிலே ஆயிரம் பழம்பாடல்களாவது இருக்கும்: பூக்களை நாடி அதன் கள்ளை/மதுவை/தேனை/தாதை நுகரும் அளிகள் பற்றியன.

அள்- என்பது தாதுவேர். அளிதல் = நொதித்தல். அள்- அளை எனும் சொல்லுக்கு தயிர், மோர், வெண்ணெய் என்று நொதித்தலால் பாக்டீரியா, யீஸ்ட் (Cheese) பொருள் பெறுகின்றன. புல்- ‘meat, blood, stench, menstruation' எனும் தாதுவேர் தரும் (1) புலை, (2) புலி ‘carnivore' போல, அள்- 'to ferment' எனும் தாதுவேர் தருவன: (1) அளை ‘Dairy products such as yoghurt, butter milk, butter, ghee' (or, even cheese) (2) அளி பூங் கள் நாடி உண்ணும் உயிரி = Bees. அளி = மது என்ற பொருள் உண்டு.
அளிகள்:
https://bugguide.net/node/view/8267 Anthophila (= Bees)
https://en.wikipedia.org/wiki/Bee


அளிகள் எல்லா வகையான அறுகாற் சிறுபறவைகளின் பெயர் எனத் தெரிகிறது:
    அளியே, (i) கேசரம்‌, (ii) அறுபதம்‌, (iii) கழுதொடு,
  (iv) வரியே,  (v) சுரும்பு, (vi) கீதம்‌, (iv) சூதம்‌,
  (viii) அரி, (ix) மா (x) பிரமரம்‌, (xii) ஆர்பதம்‌, (xiii) வரிக்கடை,
  (xiv) பிரசம்‌, (xv) தும்பி,  (xvi) மதுகரம்‌, (xvii) ஞிமிறு,
     விரவிய (xiii) தேனீ, (xix) வண்டு எனப்படுமே. - திவாகர நிகண்டு

அளிகள் மிகப் பழைய பெயர். இந்தியா முழுமையுமாய் விளங்குகிறது,
மலையாளத்தில் மச்சினனுக்கு அளியன் எனப் பெயர் (வலியளியன், குட்டளியன்). சகோதரியிடம் அன்பானவன். இட்டளி என்கிறோம்: இல்வாய் > வாயில் (வாசல்), கால்வாய் > வாய்க்கால், ... போல அளி + இடு > இட்டளி. அளி = நொதித்த மாவு. அதை, இட்டு ஆவியில் வேவிப்பது. இட்டளியை  ஈடு எடுத்தல் என்கிறோம்.

அளிதல் “to ferment" இதிலிருந்து தொழிற்பெயராய் அளி ‘bee' அமைந்துள்ளது. இசைவாணர் பாடல்களுக்கு “அளி வழக்கம்” என்று சங்க இலக்கியம் பரிபாடலில் காண்கிறோம். அளிகளுக்கு ஞிமிறு என்ற பேருண்டு (சங்க இலக்கியம்). ஞிமிர்தல்/நிமிர்தல் “ஞிமிறு” என அளிகளில் ஒருவகைக்குப் பெயர்தரும் வினைச்சொல். எனவே, ஞிமிறு ஒரு தொழிற்பெயர். நிமிர்தல் > இமிர்தல் என்றாகிறது. இமிர்வண்டு .... நிமை-த்தல் (நிமைத்தல் - அருணகிரிநாதர்) > இமைத்தல். நிமி பற்றிய புராணக்கதையும், நிமிழம் > நிமிஷம் என வடமொழியில் வருவதும் ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகும்.
 
ஞிமிறுகள் பூவில் மது சேகரிப்பதன் போது பாருங்கள். உயரும், தாழும், வட்டமிடும், வக்கரித்துத் திரும்பும், நுடங்கும், .... எனவே, காற்று மண்டலத்தில் ஞிமிறுகளின் இயக்கத்தை நிமிர்தல் (ஞிமிர்தல்) என வினைச்சொல் ஆக்கினர். நிமிர்தல் என்னும் வினைக்குப் பல பொருள் உண்டு.
நிமிர்தல்: == உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; மீளத் திரும்புதல்.
அளிகளின் இயக்கத்தைக் கண்ட தொல் தமிழர் நிமிர்தல் என்ற வினைச்சொல்லை அதனிடம் இருந்து பெற்றனர். அரிசியை, நிறைய நீர்விட்டுத் தளபுள என்று கொதித்துச் சுடு சோறாக்கும் போது, அரிசி செய்யும் செயல் இந்த நிமிர்தல் தான். சட்டியில் கொதிக்கும் போது அரிசி செய்வது என்ன?  உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; மீளத் திரும்புதல்.

எனவே, இவ்வாறு இயங்கும் சோறு சமைத்தலால், சுடுசோற்றை நிமிரல் என்று பெயர் கொடுத்தனர். ஞிம்ஞிம் எனும் ஞிமிறின் ஒலிக்குறிப்பு, கொதிக்கும் சோற்றுக்கு ஆகிவருகிறது. வாசமதி (பாஸ்மதி) அரிசி போல அப்போதிருந்த அரிசி, நீண்டு வண்டிச் சக்கரத்தின் வளைவு போல (Circular Arc) ஆகியுள்ளது. இன்றும் வாசமதி அரிசிச் சோற்றில் சிலவாவது கொக்கின் நகம் (Circular Arc). சங்க காலத்தில் ஒரு அரிசி வகை, கொக்கின் நகம் போல சமைத்தால் ஆகியுள்ளது எனத் தெரிகிறது. இந்தக் “கொக்குகிர் நிமிரல்” சுடுசோற்றை விருந்தினர் வந்த நாளில் முதலில் தலைவாசலில் (புறங்கடை) காக்கைகளுக்குப் படையலாக இட்டனர் என அழகான நற்றிணைப் பாடல் தெரிவிக்கிறது. தமிழ் இலக்கியத்தில் நிமிரல் வரும் இடம் எல்லாம் சுடுசோறு தான். உதாரணமாக, சீவக சிந்தாமணிப் பாடல் தந்துள்ளேன்:

இன்னொன்று. விரல் ரிக் வேத காலத்திலேயே வ்ரிஜ் என்று வடமொழிக்குக் கடன் போன பழந்தமிழ்ச் சொல். விரல் விரியும், நுடங்கும், பரக்கும், நீளும், குறுகும், மடங்கும், ... அதாவது, மனிதனின் விரல்கள் ஞிமிறுகள் மற்றும் உலையில் கொதிக்கும் அரிசியின் “நிமிர்தல்” என்னும் வினைச்சொல்லின் எல்லாச் செயலும் செய்யும். அரிசி, உலையில் கொதித்துச் சோறாகும்போது “விரல் என நிமிர்ந்த” சுடுசோறு (நிமிரல்) பாடலும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். தவிடு (Bran, முரவை) தீட்டிக், குருணை இல்லாத அரிசியை உலையில் இட்டுத் தளபுள எனக் கொதிவரச் செய்து, “விரல் என நிமிர்ந்த” சாதம் என்பது வர்ணனை.   இதில் ஒருவகை அரிசி கொக்கின் நகம் போல வளைந்து இருந்தால் “கொக்குகிர் நிமிரல்”. அரிசி வெண்சோற்றின் வடிவம் கொக்கின் உகிருக்கு ஒப்பிடுவர். அதாவது, 2000 ஆண்டு முன்னிருந்த ஓர் அரிசி, சக்கரத்தின் ‘ஆர்க்’(வில். வில்கோடி தனுஷ்கோடியின் தமிழ்ப்பெயர்) போல இருந்துள்ளது. கொக்கின் உகிர் பார்க்க:
640.jpeg

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 2, 2023, 9:08:20 AM11/2/23
to vall...@googlegroups.com
வன முல்லைப் பூ நீட்சியாகவும், வெண்மையாகவும் இருக்கும். முல்லை முகிழ்த்தகை போல உயர்ந்த ரக அரிசி இருப்பதைப் பாடியுள்ளனர். சுமார் 30 வகை தளவு/தளா/தளவம் ‘Jasmine species' இந்தியாவில் இருக்கின்றன. தளவம் metathesis-ஆல் தவளம் ‘வெண்மை’ என வடமொழியில் மாறும். இது, மரதக- மரகத ‘பச்சை’ என்றாதல் போல என விளக்கினேன். குருநாதர் ஆஸ்கோ பார்ப்போலா வாழ்த்தி விடையெழுதியிருந்தார். நெல்லம் வயல்களில் கொக்கு அறுவடைக் காலத்தில் மேய்ந்துகொண்டிருக்கும். எனவே, கொக்கின் நிறத்துக்கும், முல்லை முகிழுக்கும் உவமித்தனர். கொக்கின் நகம் வில் போல வளைந்திருக்கும். இதனை உழவர்கள் நன்கு அறிவர். அருகே உள்ள தாழம்புதையில் அமர்ந்திருக்கும். ஆதிச்ச நல்லூரில் கிடைத்த மிகப்பழைய பானையோட்டுச் சிற்பத்தில் காணலாம்.

புதிதாய்ச் சமைக்கும் சுடுசோறு சங்க நூல்களில் நிமிரல் எனப்படுகிறது. கொக்கு உகிர் நிமிரல் எனச் சொல்வர் சங்கச் சான்றோர். கொக்கு, வனமுல்லை போன்ற வெண்மையும், கொக்கின் நகம் போல, வளைந்த Circular Arc (வில்) போன்றது நிமிரல் என்பது வர்ணனை. கொக்குகளை மரங்கள், தாழைப் புதர், புழுதிக் காட்டில் ஏர்களின் பின்னாலும், கல், வரப்பில் நின்று மீனைக் கவ்வும்போதும் பார்த்தனர். கொக்கின் நகம் வில்போன்றது எனக் கண்டு உவமை ஆக்கினர். It appears ancient wild or semi-domesticated rice was curved like the claws of egrets. கொக்குகளின் நான்கு ஒளிப்படங்களைக் கொடுத்துள்ளேன்: https://twitter.com/naa_ganesan/status/1719899218054176820
படங்களைக் கிளிக்கினால் கொக்கு உகிர் நன்கு தெரியும்.

நிமிர்தல் = உயர்தல்; நீளுதல்; வளர்தல்; ஏறுதல்; பரத்தல்; நுடங்குதல்; நடத்தல்; ஓடுதல்; மிகைத்தல்; தூரமாதல்; உயர்ந்ததாதல்; நெருங்குதல்; உறுதியாதல்; இடையிடுதல்; முயலுதல்; இறுமாத்தல்; கோள் மீளத் திரும்புதல்.இவையெல்லாம் வண்டு, சுரும்பு, அளி, ... ஞிமிறுகள் இயக்கத்தில் தோன்றுதலால், நிமிர்தல் என்னும் வினைச்சொல் தோன்றியுள்ளது.


நிமி என்ற புராணக் கதாபாத்திரம், நிமிண்டு- நிமிஷம், நிமைத்தல்/இமைத்தல் போன்றனவும் அளிகளின் ஞிமிர்தல் செயலில் இருந்து தோன்றுபவை எனத் தெரிகிறது. நிமைத்தல்/இமைத்தல் தும்பி, தேனீ, சுரும்பு, வண்டு போன்ற அளிகள் மலரைத் தேய்த்து மகரந்தம் காவுவதும், தேன்/கள் கவர்வதும் ஒக்கும். நிமிண்டு- என்ற வினைச்சொல்லும் பிறக்கும். https://groups.google.com/g/vallamai/c/3r59oYXld5E/m/Jlwi_BTpAgAJ
Dazzling brilliance; விளக்கம். மின்னுறழ் இமைப்பிற் சென்னிப் பொற்ப (திருமுரு. 85). ; 1. To glitter, twinkle, shine; ஒளிவிடுதல். (திவா.)
இத்துடன் ஒப்பிடுக:  வானம் நீங்கிய நீனிற விசும்பின் மின்னு நிமிர்ந்தனையராகி  (மதுரைக்காஞ்சி). அதாவது, தும்பி நிமிர்வதுபோல, (= அங்குமிங்கும் சுழல்வதுபோல்) நீல வானில் மின்னல் நிமைக்கிறது/இமைக்கிறது, glitters, twinkles. அதைப் போன்ற மகளிர் செயல் என்கிறது மதுரைக்காஞ்சி.

இன்னொன்று. விரல் ரிக் வேத காலத்திலேயே வ்ரிஜ் என்று வடமொழிக்குக் கடன் போன பழந்தமிழ்ச் சொல். விரல் விரியும், நுடங்கும், பரக்கும், நீளும், குறுகும், மடங்கும், ... அதாவது, மனிதனின் விரல்கள் ஞிமிறுகள் மற்றும் உலையில் கொதிக்கும் அரிசியின் “நிமிர்தல்” என்னும் வினைச்சொல்லின் எல்லாச் செயலும் செய்யும். அரிசி, உலையில் கொதித்துச் சோறாகும்போது “விரல் என நிமிர்ந்த” சுடுசோறு (நிமிரல்) பாடலும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். தவிடு (Bran, முரவை) தீட்டிக், குருணை இல்லாத அரிசியை உலையில் இட்டுத் தளபுள எனக் கொதிவரச் செய்து, “விரல் என நிமிர்ந்த” சாதம் என்பது வர்ணனை.   இதில் ஒருவகை அரிசி கொக்கின் நகம் போல வளைந்து இருந்தால் “கொக்குகிர் நிமிரல்”. அரிசி வெண்சோற்றின் வடிவம் கொக்கின் உகிருக்கு ஒப்பிடுவர். அதாவது, 2000 ஆண்டு முன்னிருந்த ஓர் அரிசி, சக்கரத்தின் ‘ஆர்க்’(வில். வில்கோடி தனுஷ்கோடியின் தமிழ்ப்பெயர்) போல இருந்துள்ளது. கொக்கின் உகிர் பார்க்க: https://twitter.com/naa_ganesan/status/1719899218054176820

ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு ஞிமிறு/நிமிறு என அளிகளுக்கு (Bees) ஒரு பெயரைத் தருகிறது. இது Ideophone (அநுகரணவோசை). உலை கொதிக்கையில் தளபுள, தளபுள என்ற ஓசை எழுகிறது. நிமிர்தல் (ஞிமிறு/நிமிறு - ஒலி எழுப்பும் வண்டு, தும்பி, ...) எனவே, நிமிரல் ஒலிக்குறிப்பால் சுடுசோற்றுக்கு வரும் பெயர் ஆகும். ஞிமிர்தல்/நிமிர்தல் > இமிர்தல்: இமிர் வண்டு. நிமிரல் என்னும் புதுச் சோற்றுடன் கறி (sauce) என்னும் குழம்பு (curry) பிசைந்து உண்ணுவதை விளக்கும் செய்யுள் சீவக சிந்தாமணியில் உள்ளது. சமணக் காப்பியம் ஆதலான், ஆருகத உணவு. இப்போது சைவ உணவு என்கிறோம். நிமிரல் என்பது ஒலிக்குறிப்பால் தோன்றும் சொல்:
https://groups.google.com/g/santhavasantham/c/rpBNXWtfXJs/m/HVZkihKGBwAJ
நிமிரல் எனும் சுடுசோறு பற்றிய ஆய்வு. 2000 ஆண்டு முன் இருந்த ஒருவகை அரிசி நீண்டும், வளைந்தும் கொக்கின் உகிர் போல இருந்தது.
https://groups.google.com/g/santhavasantham/c/rpBNXWtfXJs/

ஓர் குறிப்பு: நிமிரல் எனத் தமிழில் வரும் பாடல்களில் எல்லாம் சுடுசோறு என்ற பொருளையே தருகின்றன. உ-ம்: சங்கச் செய்யுள்கள். ’கொக்கு உகிர் நிமிரல்’ என்ற தொடர் கொக்கின் வண்ணத்தையும், சோறானபின்னர், கொக்கு நகம் போல் வளைந்திருப்பதையும் பாடியுள்ளனர். வயலின் சேற்றுக்குள் கொக்கின் கால் பாதமே புதைந்திருப்பதை இச் செய்யுள்களில் பாடவில்லை. சேற்றுக்குள் பாதம் புதைந்தபோது, கொக்கின் பாதமோ, உகிரோ மனிதர் கண்களுக்குத் தெரியாது.
In the USA, in Agricultural museums and Universities, they have ancient corn (maize). If you look at their color and shape, it is vastly different from modern, industrial corn developed for high yield and fast growth by selective gene selection aross millennia. It appears similar Agricultural techniques were developed for long-grain rice varieties also. Even today, you can see several curved rice grains in cooked Basmati (< வாசமதி) rice. The original long grain rice was curved as Sangam poets and Tiruttakka Tevar described that valued rice variety, fed to honored guests( விருந்தோம்பல்).  

தூங்கல் வங்கம் என்கிற அழகான நற்றிணைச் செய்யுளை ஆராய்க. நக்கீரர் புலவர் பெம்மான் (< பெருமான்). அப்போது தான் சமைத்த நிமிரல் (= சுடுசோறு) கொக்கு நகம் போல் வளைந்த, நீண்ட, உயர்தர அரிசியால் ஆக்கினாள். காக்கை முந்தைய நாள் கரைந்தது பலித்துவிட்டது. எனவே, அக் காக்கைகளுக்கு இல்லத்தின் தலைவாசலில் நிமிரல் சுடுசோற்று விருந்து முதலில் படைத்தாள். இங்கேயும், பிற எல்லா இடங்களிலும் “கொக்கு உகிர் நிமிரல்” சுடுசோறு/புதுச்சோறு தான். இதனைச் சீவக சிந்தாமணியில் தேவர் உறுதிப்படுத்துகிறார். “கொக்கு உகிர் நிமிரல் ஊட்டுறு கறி” கொக்கு நகத்தைப் போலுள்ள சுடுசோற்றில் பிசைபடும் குழம்பு (= கறி).  ஊட்டுறு என்ற துணைவினையுடைய சொல்லை இலக்கியங்களில் பரக்கக் காணலாம். ஆங்கிலத்தில் Curry 'sauce' என்பதற்கு நல்ல சான்று ஸ்ரீ தி. தேவர் பாடிய சிந்தாமணிச் செய்யுள்.

நிமிரல் சுடுசோறு, (b) கருனைக்கிழங்குப் பொரியல் (= பொரிக்கறி), (c) நிமிரலில் பிசைபடும் குழம்பு (= ஊட்டுறு கறி), இந்தச் சிந்தாமணிப் பாடல் தான் இந்திய இலக்கியங்களிலே கறி = sauce (குழம்பு) என்பதற்கு உரிய சான்று. ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்ற சொல் இது: https://en.wikipedia.org/wiki/Curry (d) மாம்பழம், (e) தயிர் போன்றவற்றுடன் உள்ள அறுசுவை விருந்து:

            "கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை, முல்லை
            மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோறு,
            ஊட்டுறு கறி,கொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி

            வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே". - சிந்தாமணி


---------

வேளிரும், அரசரும் வரும் விருந்தாளிகளுக்குப் பழையசோத்தைப் போடமாட்டார்கள்.

பழைய சாதத்தின் பெயர்கள் சங்க நூல்களில் வேறு. உழைப்பாளி வர்க்கம் உண்ணும் சோறு இது. பழஞ்சோறு, பொம்மல் (பொருமல்), நீர் என்றெல்லாம் பெயரில் சொல்லியிருப்பர். நீரை உள்வாங்கி உப்பி விடுஞ் சாதம் பழைய சாதம். அளவில் பெருத்தலால்/உப்புதலால் பெருஞ்சோறு. 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்  "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர். நீராகாரம் நீர் என்றே அழைப்பதை நாலடியாரில் பார்க்கலாம்.  https://groups.google.com/g/vallamai/c/cr49wkbMcIY/m/YCEnx8f5AwAJ

~NG

N. Ganesan

unread,
Nov 3, 2023, 5:02:10 AM11/3/23
to vall...@googlegroups.com


On Fri, Nov 3, 2023 at 2:47 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு///

இப்படி ஒரு ஒலிக்குறிப்புச் சொல் எங்கே எப்போது வழங்கியது? வழங்குகிறது? பேச்சிலா? பாடலிலா?

பேச்சிலும், பாடலிலும், கூத்த நூல்:

(இன்னொரு ஒலிக்குறிப்பு: ஞம்ஞம் என்னும் சாப்பாட்டுச் சந்தம்.
ஞைஞை எனல் - to whine)

இந்த ஞிம்- ஒலிக்குறிப்பு ஞிமிர்தல் என்ற வினை தருகிறது. கன்னடத்தில் நிமிர்தல்.
ஞிமிர்-/நிமிர்- > இமிர்- இமிர்தல் : அளிகளின் ஒலிக்குறிப்புக்கான வினைச்சொல்.
மாந்தன் அவதானித்து, வினைச்சொல் பெயர்ச்சொல் ஆக்கிய ஒலி இது. ஞிமிறு.

தமிழ் அகராதி:
சொல்
அருஞ்சொற்பொருள்
ஞிமிர் ஒலி .
ஞிமிர்தல் வண்டு முதலியன ஒலித்தல் ; நிமிர்தல் .
ஞிமிறு தேனீ ; வண்டு .

ஞிமிறுகளின் ஞிமிர்தல்/நிமிர்தல் காற்றில் அளி வண்டுகளின் எல்லா இயக்கமும் காட்டுவது.

நிமிர்(ரு)-தல் nimir- , 4 v. intr. [K. nimir.] 1. To become erect; to be straightened; to stand upright; to raise or hold the head erect; உயர்தல். (சூடா.) 2. To be out-stretched, as the arm; நீளுதல். திரையெனு நிமிர்கையால் (கம்பரா. கங்கை. 62). 3. To grow tall, as a youth; to increase in height; to shoot up; வளர்தல். ஓங்கி யழலாய் நிமிர்ந்தாய் போற்றி (தேவா. 1160, 5). 4. To exceed the limit, as a foot in verse; ஏறுதல். அம்மை தானே யடிநிமிர் பின்றே (தொல். பொ. 547). 5. To extend, expand, spread out; பரத்தல். உரைகுறுக நிமிர் கீர்த்தி (கம்பரா. குலமுறை. 4). 6. To bend, shake; நுடங்குதல். மின்னுநிமிர்ந் தனையராகி (மதுரைக். 679). 7. To walk, proceed; நடத்தல். கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின் (பு. வெ. 7, 5). 8. To run; ஓடுதல். (சூடா.) 9. To be excessive; மிகைத் தல். நிமிர்பரிய மாதாங்கவும் (புறநா. 14). 10. To be far, distant; தூரமாதல். நணுகவு நிமிரவு நடக்கு ஞானத்து ருணர்வினின் (கம்பரா. கடிமண. 60). 11. To be of superior quality, as gold; உயர்ந்ததா தல். நிமிர்பொன் சொரியும் வரையே (சீவக. 1376). 12. To be close, thick, crowded; நெருங்குதல். (W.) 13. To be bold, firm, decided; உறுதியா தல். காரியத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (W.) 14. To be proud, affected, arrogant; இறுமாத்தல். (W.) 15. To be active, make an effort; முயலு தல். இசைச்சொ லளவைக் கென்னா நிமிராது (மணி. 11, 81). 16. To return from retrogradre motion, as a planet; கிரகம் வக்கிரித்துத் திரும்புதல். (W.)


சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdefd3v1JK6KhWeZj1M_OdinCh8BQUPn1i5Q0HYbcJ_8A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvjhFyfuXxn4XgVL_q1Xi%2BU7c85-1iMSGzxnH3am01MOQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 4, 2023, 7:27:20 AM11/4/23
to vall...@googlegroups.com, Santhavasantham


On Fri, Nov 3, 2023 at 11:08 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தகுந்த விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா. 
சக 

குறுநொய் > குறுனை ஆனதாகக் கருதுவர். வேந்தர் சொல்வது சரியே.
ஆனால், குறுணை என எழுதுதல் பெருவழக்காக உள்ளது. கருனை ==> கருணைக் கிழங்கு என்று பார்க்கிறோமே. அதுபோல்.

தண்ணீர் > தண்ணி போல, வாய்நீர் > வாணீர் > வாணி என்கிறார் பாவாணர். வாணி தமிழ்ச்சொல் என்கிறார்.

 “வாணி என்னும் சொல் வாய்நீர் என்பதினின்று பிறந்ததாகவும் கொள்ள இடமுண்டு. வாய்நீரை வாணீர் என்பது கொச்சை வழக்கு. ஒ.நோ: குறுநொய் - குறுணை. தண்ணீர் தண்ணி எனப்படுவதுபோல, வாணீர் வாணி எனப்படும். வாய்நீருக்கு மறுபெயர் சொள்ளு என்பது. சொளுசொளு என்று வடிவது சொள்ளு. பேசத் தொடங்கும் பருவத்தில் குழந்தைகட்குச் சொள்ளு வடியும். சொள்ளு மிகுதியாய் வடிந்தால் பேச்சு மிகுதியாகும் என்றொரு கொள்கையுளது. 'சொள்ளும் பெருத்தால் சொல்லுப் பெருக் கும்' என்பது பழமொழி. சொள்ளு - சொல்லு -சொல். வாய்நீர் - வாணீர் - வாணி = நீர், சொல். வாணி - பாணி.

கொச்சை வழக்கிலிருந்தும் சில சொற்கள் கொள்ளப்படும். கா. கொண்டுவா - (கொண்டா) - கொணா - கொணர், பழம் - பயம்.

வாணி என்பதற்கு வாச் என்று வடமொழி மூலங் காட்டினும், அதற்கும் வாய் என்னும் தமிழ்ச்சொல்லே மூலமாதல் காண்க.”



On Fri, 3 Nov 2023, 9:17 pm வேந்தன் அரசு, <raju.ra...@gmail.com> wrote:


திங்., 30 அக்., 2023, பிற்பகல் 6:20 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
...முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பொரு.அ.112-114

முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)

முரவை போகிய = தீட்டிய 

முரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசி 

விரல் என நிமிர்ந்த = விரல் போல் நீளமாகி வெந்து;

என வருவதால் 'நிமிரல்' சுடுசோறு என ஏற்கலாம். ஆனால் 'கொக்குகிர் நிமிரல்' பழைய சோறு தான். 

குறுனை/ குறுணை 
எது சரி? 
ஐயம் தீர்க்கவும். 

தமிழ் நெடுங்கணக்கில் ற, ன என்ற வரிசையே குறுனைதான் சரியாக இருக்கும். றகரமும் னகரமும் வாயில் பிறக்குமிடம் ஒன்றே (ஒன்ரே என  இல்லை) 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iE0Z0t56B7YBWcRKGJRpTC8RBZwueua%2BN7r8VBPj5z%3DA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctFYWBTH9HzzPjKCA7EspKN72DURTyr6%3DacW4QQmgJfZA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 4, 2023, 8:17:37 AM11/4/23
to vall...@googlegroups.com
ஊட்டுறு கறி = சுடுசோற்றில் பிசைபடும் கறி (குழம்பு)
------------------------------------------------------------------------------------------

புதிதாய்ச் சமைக்கும் சுடுசோறு சங்க நூல்களில் நிமிரல் எனப்படுகிறது. கொக்கு உகிர் நிமிரல் எனச் சொல்வர் சங்கச் சான்றோர். கொக்கு, வனமுல்லை போன்ற வெண்மையும், கொக்கின் நகம் போல, வளைந்த Circular Arc (வில்) போன்றது நிமிரல் என்பது வர்ணனை. கொக்குகளை மரங்கள், தாழைப் புதர், புழுதிக் காட்டில் ஏர்களின் பின்னாலும், கல், வரப்பில் நின்று மீனைக் கவ்வும்போதும் பார்த்தனர். கொக்கின் நகம் வில்போன்றது எனக் கண்டு உவமை ஆக்கினர். It appears ancient wild or semi-domesticated rice was curved like the claws of egrets. கொக்குகளின் நான்கு ஒளிப்படங்களைக் கொடுத்துள்ளேன்: https://twitter.com/naa_ganesan/status/1719899218054176820
படங்களைக் கிளிக்கினால் கொக்கு உகிர் நன்கு தெரியும்.

மேலும் ஒன்று. முல்லை முகிழ் போன்ற வெண்ணகையாள். தளவம் 30 சாதிகள் (species) இந்தியாவில் வனக்களில் வளர்வன. முல்லை போன்ற பல் என்னும் போது, வண்ணத்துக்கு மாத்திரம்தான் உவமை. பல் முல்லை போல மென்மை எனில் ஒரே நாளில் உடைந்துவிடும். அதுபோல, கொக்கின் நகம் என்பது வாசமதி போன்ற சாதத்து நீட்சியைக் குறித்தது. வளைவு இரண்டாம் பட்சந்தான்.


ஓர் குறிப்பு: நிமிரல் எனத் தமிழில் வரும் பாடல்களில் எல்லாம் சுடுசோறு என்ற பொருளையே தருகின்றன. உ-ம்: சங்கச் செய்யுள்கள். ’கொக்கு உகிர் நிமிரல்’ என்ற தொடர் கொக்கின் வண்ணத்தையும், சோறானபின்னர், கொக்கு நகம் போல் வளைந்திருப்பதையும் பாடியுள்ளனர். வயலின் சேற்றுக்குள் கொக்கின் கால் பாதமே புதைந்திருப்பதை இச் செய்யுள்களில் பாடவில்லை. சேற்றுக்குள் பாதம் புதைந்தபோது, கொக்கின் பாதமோ, உகிரோ மனிதர் கண்களுக்குத் தெரியாது.
In the USA, in Agricultural museums and Universities, they have ancient corn (maize). If you look at their color and shape, it is vastly different from modern, industrial corn developed for high yield and fast growth by selective gene selection aross millennia. It appears similar Agricultural techniques were developed for long-grain rice varieties also. Even today, you can see several curved rice grains in cooked Basmati (< வாசமதி) rice. The original long grain rice was curved as Sangam poets and Tiruttakka Tevar described that valued rice variety, fed to honored guests( விருந்தோம்பல்).  

தூங்கல் வங்கம் என்கிற அழகான நற்றிணைச் செய்யுளை ஆராய்க. நக்கீரர் புலவர் பெம்மான் (< பெருமான்). அப்போது தான் சமைத்த நிமிரல் (= சுடுசோறு) கொக்கு நகம் போல் வளைந்த, நீண்ட, உயர்தர அரிசியால் ஆக்கினாள். காக்கை முந்தைய நாள் கரைந்தது பலித்துவிட்டது. எனவே, அக் காக்கைகளுக்கு இல்லத்தின் தலைவாசலில் நிமிரல் சுடுசோற்று விருந்து முதலில் படைத்தாள். இங்கேயும், பிற எல்லா இடங்களிலும் “கொக்கு உகிர் நிமிரல்” சுடுசோறு/புதுச்சோறு தான். இதனைச் சீவக சிந்தாமணியில் தேவர் உறுதிப்படுத்துகிறார். “கொக்கு உகிர் நிமிரல் ஊட்டுறு கறி” கொக்கு நகத்தைப் போலுள்ள சுடுசோற்றில் பிசைபடும் குழம்பு (= கறி).  ஊட்டுறு என்ற துணைவினையுடைய சொல்லை இலக்கியங்களில் பரக்கக் காணலாம். ஆங்கிலத்தில் Curry 'sauce' என்பதற்கு நல்ல சான்று ஸ்ரீ தி. தேவர் பாடிய சிந்தாமணிச் செய்யுள்.

நிமிரல் சுடுசோறு, (b) கருனைக்கிழங்குப் பொரியல் (= பொரிக்கறி), (c) நிமிரலில் பிசைபடும் குழம்பு (= ஊட்டுறு கறி), இந்தச் சிந்தாமணிப் பாடல் தான் இந்திய இலக்கியங்களிலே கறி = sauce (குழம்பு) என்பதற்கு உரிய சான்று. ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்ற சொல் இது: https://en.wikipedia.org/wiki/Curry (d) மாம்பழம், (e) தயிர் போன்றவற்றுடன் உள்ள அறுசுவை விருந்து:

            "கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை, முல்லை
            மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோறு,
            ஊட்டுறு கறி,கொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
            வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே". - சிந்தாமணி

இந்த அரிய செய்யுள் பழைய சைவ விருந்தை விளக்குவதாகும். ஊட்டுறு கறி என்பது, நிமிரல் சுடுசோற்றில் பிசைபடும் கறி (= குழம்பு). இன்றைய தமிழில் கறியைக் குழம்பு என்கிறோம். ஆனால், சைவர் வீடுகளில் “கறி கொதிக்குது” என்றால் கறி = குழம்பு. இந்த வழக்காறே ஆங்கிலத்தில் Curry ஆனது. கறிவேப்பிலை ‘Curry leaves' - குழம்பில் மணத்துக்கு இடும் மரத்தின் இலை.

ஊட்டுறுதல் -உறு என்னும் துணைவினையைக் கொண்டுள்ளது. துணைவினை பற்றி இலக்கணிகள் தமிழில் 17-ம் நூற்றாண்டில் விளக்கத் தொடங்கினர்.

ஊட்டுறுதல் - நீரில் மூழ்கி, அடியில் கிடக்கும் பழயசோற்றுடன் செய்ய முடியாது. புதிதாய்ச் சமைத்த நிமிரல் சுடுசோற்றில் குழம்பைப் பிசைந்து உண்பது என விளக்க, “ஊட்டுறு கறி” என்கிறார் திருத்தக்க தேவர்.

1) பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை;  - பெரும்பாண்.

பாசிலை ஒழித்த – lost its green leaves, பராஅரை – thick trunk (அளபெடை),  பாதிரி – Stereospermum chelonoides, Trumpet flower, வள் இதழ் – thick petals, மா மலர் – large/dark flowers buzzed by bees, வயிற்றிடை வகுத்ததன் – inside the torn part, உள்ளகம் புரையும் – like the inner sides (புரை – உவம உருபு, a comparison word), ஊட்டுறு பச்சை – dyed leather cover, பரியரைக் கமுகின் – betel nut trees with thick trunks, பாளை – spathe, அம் பசும் பூக்கரு இருந்தன்ன  – like the new buds of the beautiful flowers, https://sangamtranslationsbyvaidehi.com/pathuppatu-perumpanattruppadai/

(2) அகநானூறு

 புல் நுகும்பு எடுத்த நல் நெடுங் கானத்து,
ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்தன்ன
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப,     15
இனிய ஆகுக தணிந்தே

வெயிலில் காய்ந்துபோயிலுக்கும் மரங்கள் தழைக்கும் கால்களில் தளிர்த்து அழகுடன் திகழும்படி, வானம் இருண்டு, வெப்பம் நீங்குவதற்காக, மழை பொழிந்திருக்கிறது. புல் தழைக்கும் நுகும்பு மொட்டுகளில் செந்நிறம் ஊட்டப்பட்ட பஞ்சு பரந்து கிடப்பது போல மூதாய்ப் பூச்சிகள் காணப்படுகின்றன. அவை உனக்கு இன்பம் ஊட்டட்டும். எனக்குத் துன்பம் தரும் பிரிவு உனக்கு இன்பம் தருவதாக அமையட்டும். http://vaiyan.blogspot.com/2016/09/agananuru-283.html

(3) நெடுநல்வாடை
கட்டிலின் ஒப்பனை
மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்துடைச் சாலேகம் நாற்றி குத்துறுத்து,   125
புலிப் பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து, 130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய் அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரிந்த சேக்கை (124-135)

பொருளுரை:   மூட்டுவாய்ச் சிறப்பாகப் பொருந்திய நுண்ணிய நூல் பொலியத் தொடுத்த சிறந்த முத்துக்களையுடைய பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைக் கட்டிலின் மேல் பகுதியைச் சுற்றித் தொங்கவிட்டு, புலியின் பொறிகளைப் பொறித்த அழகிய நிறத்தையுடைய தட்டம் போன்ற தகடுகளைக் கட்டிலின் கூரையில் இடம் மறையும்படி பொருத்தி, குற்றமற்ற, பல நிறங்கள் ஊட்டப்பட்ட பல மயிர்களை உள்ளே வைத்துப் போர்த்திய போர்வையின் மேல் சிங்கத்தை வேட்டையாடுதல் போன்ற உருவைப் பொறித்து, அகன்ற காட்டில் மலர்ந்த முல்லை மலர்களின் உருவங்களையும் பல வேறுபட்ட மலர்களின் உருவங்களையும் பொறித்து மென்மையாகப் போர்த்திய போர்வைக்கு மேல், துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிரினையுடைய அணையை மேன்மையுண்டாக விரித்து, அதன் மேல் தலையணைகளை இட்டு, கஞ்சியைக் கொண்ட துவைத்த துணியில், மலர் இதழ்களுடன் விரித்த தூய படுக்கை.

குறிப்பு:  வய மான் வேட்டம் பொறித்து (128-129) – நச்சினார்க்கினியர் உரை – சிங்கம் முதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களைப் பொறித்த தகடுகளை வைத்து.

சொற்பொருள்:  மடை – மூட்டுவாய், மாண் – மாண்பு,  நுண் இழை பொலிய – நுண்ணிய நூல் பொலிய, தொடை – தொடுத்தல், மாண்டு – சிறந்து, முத்துடை – முத்துக்களையுடைய, சாலேகம் நாற்றி – பலகணிகள் போன்ற தொடர்மாலைகளைத் தொங்கவிட்டு, குத்துறுத்து – குத்தி, புலிப்பொறி கொண்ட – புலியின் பொறிகளைக் கொண்ட, பூங்கேழ்த் தட்டத்து  – அழகிய நிறத்தையுடைய தட்டத்து, தகடு – தகடு, கண் புதைய – இடம் மறைய, கொளீஇ – கோர்த்து (கொளீஇ – அளபெடை), துகள் தீர்ந்து – குற்றமற்ற, ஊட்டுறு பன் மயிர் விரைஇ – பல நிறங்களும் ஊட்டப்பட்ட மயிரைக் கலந்து (விரைஇ – அளபெடை), வயமான் வேட்டம் பொறித்து – சிங்கம் வேட்டையாடுவதைப் பொறித்து, வியன் கண் கானத்து – அகன்ற இடத்தையுடைய காட்டில், முல்லைப் பல் போது உறழ – முல்லை முதலிய பல வேறுபட்ட பல மலர்களைக் கலந்து (உறழ – வேறுபட்ட ), பூ நிரைத்து – மலர்களை நிரம்பப் பொறித்து, மெல்லிதின் விரிந்த சேக்கை –  மெல்லிதாக விரித்த போர்வை, மேம்பட – மேலே, மேன்மையுண்டாக, துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி – துணையுடன் இணைந்த அன்னத்தின் தூய மயிர், இணை அணை – இணைந்த அணை, மேம்பட பாய் – மேன்மையுண்டாக விரித்து, அணையிட்டு – தலையணைகளை இட்டு, காடி கொண்ட – கஞ்சியைக் கொண்ட, கழுவுறு கலிங்கத்து – துவைத்த துணியில், தோடு அமை – மலர் இதழ்களுடன், தூ மடி – தூய மடி, விரித்த சேக்கை – விரித்த படுக்கை
https://sangamtamilliterature.wordpress.com/தமிழ்-உரை-நெடுநல்வாடை/

மேலே கொடுத்துள்ள சான்றாதாரங்களால், “ஊட்டுறு கறி” என்பது நிமிரல் சுடுசோற்றுடன் பிசைந்து உண்ணும் குழம்பு என்பது தெளிவு.

~NG

N. Ganesan

unread,
Nov 5, 2023, 5:20:27 AM11/5/23
to vall...@googlegroups.com
சீவக சிந்தாமணிப் பாடலில், குழம்புடன் பிசைந்துண்ணும் நிமிரல் (சுடுசோறு) பற்றிக் கூறிப் பின்னர் மாம்பழம் சாப்பிடுவதைக் கூறுகிறார். குழம்புக்குக் கறி என்று பயன்படுத்துகிறார். கடைசியாக dessert “தேமாவில் கொண்ட கனியும்” (தேமாங்கனி) என்பது நச்சினார்க்கினியர் தரும் சிந்தாமணிப் பாட்டின் உரை. மாம்பழ லஸ்ஸி தோற்றம் தெரிவிக்கும் செய்யுள். தேமாங்கனி என யாப்பிலக்கணத்தில் பயன்படும் வார்த்தை இது. விருந்தின் கடைசியில் உண்பது மாம்பழம் = தேமாங்கனி.

நிமிரல் சுடுசோறு, (b) கருனைக்கிழங்குப் பொரியல் (= பொரிக்கறி), (c) நிமிரலில் பிசைபடும் குழம்பு (= ஊட்டுறு கறி), இந்தச் சிந்தாமணிப் பாடல் தான் இந்திய இலக்கியங்களிலே கறி = sauce (குழம்பு) என்பதற்கு உரிய சான்று. ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்ற சொல் இது: https://en.wikipedia.org/wiki/Curry (d) மாம்பழம், (e) தயிர் போன்றவற்றுடன் உள்ள அறுசுவை விருந்து:

            "கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை, முல்லை
            மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோறு,
            ஊட்டுறு கறி,கொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
            வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே". - சிந்தாமணி

https://groups.google.com/g/santhavasantham/c/rpBNXWtfXJs/m/OmKJsS63BAAJ

தேமாங்கனி பற்றிய இன்னொரு சிந்தாமணிப் பாடல்:
        காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி
        பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
        தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும்
        ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே

சேலத்து மாம்பழம் - இன்றைய திரைப்படங்களில் வருகிறது.

----------------------

அருணாசலத்தில் இயற்கை:

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற
ஆமான் பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்
பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே

https://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=109&pno=343
பொ-ரை: கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக் கருதி மரநிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.

கு-ரை: கடுவன் - ஆண்குரங்கு. விடுகொம்பு - மாம்பழத்தைப் பறித்துவிட்ட மாங்கொம்பு. தூ மா மழை - தூய்மையான கரிய மேகம். துறுகல் - பாறை. ஆமா பிணை - காட்டுப் பசு; பெண்பசுவோடு, ஆமாப் பிணை என்பது எதுகைநோக்கி ஆமாம்பிணையாயிற்று, பூமாங்கழல் - அழகிய மாவிலையின் வடிவந்தோன்றப் புனையப்பட்ட காலணி. மாண் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம் ஆதலின் நினைவார் வினையிலரே என்றார்.

”ஆமாப் பிணை என்பது எதுகைநோக்கி ஆமாம்பிணையாயிற்று”. ஆமா/ஆமான்:: https://en.wikipedia.org/wiki/Gaur - ஆமான் + பிணை - ஆமாம்பிணை என ஆயது என்று உரைத்தல் சிறப்பாகும். ஆ/ஆன், மா/மான், ஈ/ஈன், ஊ/ஊன், ஆமா/ஆமான், கா/கான், தே/தேன், பே/பேன் (பேய்) .... ஒப்பிடுக.

ஆமா அல்லது ஆமான்:  
இருக்குவேதத்தில், கௌரீ என்பது இந்தக் காட்டெருமை தான். பார்வதி இதன் கொம்பை விரும்பி அணிபவள். எனவே, அவளுக்கும் கௌரி என்ற பெயர் நிலைத்தது.  எருமைக் கொம்பைக் கொற்றவை சிந்துகாலத்திலேயே அணிந்திருக்கிறாள். கவுரி என்ற பெயர் இதனால் அமைந்ததாகும். கலித்தொகை என்னும் சங்க நூலில், முல்லைக்கலிப் பாடல்களில் திருமண வர்ணனையில், எருமைப் பெடையின் கொம்பை வைத்து வழிபாடு இயற்றிக் கலியாணச் சீர்கள் நடைபெற்றதாக உள்ளது. நெய்தற் திணைப் பாடல்களில், மீனவர்கள் வருணனின் அமிசமாக, சுறா மீனின் கொம்பை வைத்து வணங்கினர் என்னும் சங்க காலச் செய்தியுடன் ஒப்பிடத்தக்கது. கவரி மா - Dravidian word for Gauṛ bison and Tibetan yak”
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html
சங்க இலக்கியத்தில், கலியாணங்களில் எருமைக்கொம்பை வழிபாடு செய்வதைப் பாடியுள்ளனர். இது கௌரி வழிபாட்டில் ஓர் அமிசமாகும்.
https://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 5, 2023, 8:03:47 AM11/5/23
to vall...@googlegroups.com
இன்னொரு சம்பந்தர் தேவாரம்: ஆமான் + பிணை = ஆமாம்பிணை.

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

அருணாசலத்தில் இயற்கை:

தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு தீண்டி
தூ மா மழை துறுகல் மிசை சிறு நுண் துளி சிதற
ஆமாம்பிணை அணையும் பொழில் அண்ணாமலை அண்ணல்

பூ மாம் கழல் புனை சேவடி நினைவார் வினை இலரே

N. Ganesan

unread,
Nov 5, 2023, 8:54:20 AM11/5/23
to vall...@googlegroups.com
On Sun, Oct 22, 2023 at 5:09 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

சேரமான் பெருஞ்சோறு அளித்தான் எனக் காட்டும் தொடர்: பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். குழம்பும் சேர்த்துத் தான் அளித்தான் என்பது பொருள். சாந்தி காப்பி (coffee) குடித்தாள் என்கையில் கோப்பியொடு பால், சர்க்கரை, தண்ணீர் எல்லாம் சேர்ந்தே குடித்தாள். இது எல்லா மொழிகளிலும் உள்ள மரபு தான். உபலட்சணம் என்பது பெயர். இனங்குறித்தல் எனத் தமிழாக்கம் செய்தவர் பவணந்தி முனிவர் ஆவார். ஆங்கிலத்தில், https://en.wikipedia.org/wiki/Synecdoche
upalakṣaṇa (उपलक्षण).—n (S) Synecdoche (of a part for the whole, of an individual for the species, of a species for the genus, of a quality or accident for the subject); elliptical or metaphorical expression gen.
------------

திருத்தக்கதேவர் வெளிப்படையாகவே, குழம்பு பற்றிச் சொல்கிறார். கறி என்றால் மிளகு மாத்திரம் சங்க நூல்களில். ஆனால், தேவர் காலத்தில் உபலட்சணமாக, இனங்குறித்து கூட்டு, பொரியல், குழம்பு என இன்று நாம் சொல்லும் எல்லாக் கறிவகைகளையும் *கறி* என்றே கூறிவந்துள்ளனர். இன்றும் சைவர்கள், சமணர்கள் இல்லங்களில் “கறி கொதிக்கிறது” என்றால் “குழம்பு கொதிக்கிறது” எனக் காண்கிறோம். சான்று தருகிறேன். மஹாராஷ்ட்ரம் போன்ற பஞ்ச த்ராவிட தேசங்களில், கறில் என்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வண்டில். தமிழ்நாட்டில் வண்டி என்கிறோம். அதுபோல, குழம்புக்கு கறி/கறில் எனும் த்ராவிட வார்த்தைகள் ஐரோப்பிய மொழிகளில் புகுந்தன. இன்றும், போர்ச்சுகீசிய மொழியில் “கறில்” தான்.

தேவர் “கொக்குகிர் நிமிரல் வெண்சோறு ஊட்டுறு கறி” = அப்போது வடித்த நிமிரல் (1) வனமுல்லை போன்ற நீளமான அரிசியால் ஆனது. (2) கொக்கின் நகம் கருமை, ஆனால், அதன் வளைவு போல நிமிரல் வளைந்தது. வாசமதி (Basmati) அரிசி அவ்வாறே ஆதலைக் காண்கிறோம். நிமிரல் சுடுசோற்றில் ஊட்டுறு (= இட்டு நன்கு பிசைந்து உண்ணும்) மரக்கறிக் குழம்பு.

சிந்தாமணிப் பாடலை எவ்வாறு பிரித்தால் பொருள் புரியும் என, உவேசா குறிப்பிட்டுள்ளார்கள்:
கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) நற். 258 : 6.”

ஊட்டுறுதல் - உள்ளே உறுத்துதல் - இங்கே, குழம்பைச் சுடுசோற்றில் இட்டு நன்கு பிசைதல். ஊட்டுறு- என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் பொருள் காண்க. ஐரோப்பிய மொழிகளில் கறி என்ற சொல் 16-ம் நூற்றாண்டில் குழம்பு என்ற பொருளில் நுழைந்து நிலைத்தது (Hobson-Jobson dictionary citation). தமிழில் நல்ல சான்று, சிந்தாமணியில் கிடைக்கிறது. இன்றும், சைவ வெள்ளாளர் வீடுகளில் கறி என்பது மரக்கறிக் குழம்பு.


கறி/கறில் எனும் த்ராவிட வார்த்தைகள் ஐரோப்பிய மொழிகளில் புகுந்தன. இன்றும், போர்ச்சுகீசிய மொழியில் “கறில்” தான்.

1) CURRY (p. 283)
CURRY, s. In the East the staple food consists of some cereal, either (as in N. India) in the form of flour baked into unleavened cakes, or boiled in the grain, as rice is. Such food having little taste, some small quantity of a much more savoury preparation is added as a relish, or 'kitchen,' to use the phrase of our forefathers. And this is in fact the proper office of curry in native diet. It consists of meat, fish, fruit, or vegetables, cooked with a quantity of bruised spices and turmeric [see MUSSALLA]; and a little of this gives a flavour to a large mess of rice. The word is Tam. kari, i.e. 'sauce'; [kari, v. 'to eat by biting']. The Canarese form karil was that adopted by the Portuguese, and is still in use at Goa. It is remarkable in how many countries a similar dish is habitual; pilāo [see PILLAU] is the analogous mess in Persia, and kuskussu in Algeria; in Egypt a dish well known as ruzz mufalfal [Lane, Mod. Egypt, ed. 1871, i. 185], or "peppered rice." In England the proportions of rice and "kitchen" are usually reversed, so that the latter is made to constitute the bulk of the dish.

  For what Artur Coke Burnell wrote about Curry in English and its origin in Tamil, here is an old reference where Curry (கறி) is used in the meaning of Kuzhambu (modern Tamil).

நிமிரல் ஊட்டுறு கறி = சுடுசோற்றுடன் பிசைந்து உண்ணப் பண்ணும் கறி (=குழம்பு). இன்றும் வழக்கில் உள்ள சொல் பயன்பாடு. சிந்தாமணிக் காப்பியத்தில் தெளிவாகக் காண்கிறோம். ஞானசூரியன் பத்திரிகை பாருங்கள்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0002510_ஞானசூரியன்%20ஆகஸ்டு%201923.pdf

11911.jpg
11912.jpg

N. Ganesan

unread,
Jul 22, 2024, 11:21:08 PM7/22/24
to vall...@googlegroups.com
On Tue, Jul 16, 2024 at 9:49 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
அப்பம் - என்பது நீராவியில் வேகவைத்த உணவுகளின் பொதுவான பெயராகும். (அப்பு - என்றால் நீரைக் குறித்த சொல்) .

அப்பம்
-----------

அப்பு - நீர் என்பதில் இருந்து அப்பம் சொற்பிறப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இட்லி மாவு, தோசை மாவு, பழயசோறு ... இவற்றில் எல்லாம் தண்ணீர் உண்டு. ஏன் அப்பம் என்பதில்லை? தோசை அப்பம், இட்லி அப்பம், புட்டு அப்பம் ... என்றெல்லாம் சொல்வது இல்லை.

அப்புதல் - ஒட்டிக் கிடத்தல்.  வடச்சட்டியில், அப்பம் சுடும்போது, மாவை நடுவில் ஊற்றி, தானியத்தை முறத்தில் நேம்புவது போல, சுற்றி மெதுவாய்ச் சுழற்றுவர். அப்போது ஆப்பத்தின் மாவு பரவி ஒட்டிக்கொள்ளும். எனவே, அப்பம். https://youtu.be/bRwxjHvh04M?t=183s

நேம்புதல் - சுழற்றுதல். சக்கரத்தில்  நேமி (Felloe of the Wheel) < நேம்பு- வினைச்சொல். நேமி வேதத்தில் உள்ள வேளாண்சொல்.
https://mymintamil.blogspot.com/2017/10/Etymology-of-the-word-NEMI-by-N-Ganesan.html

நா. கணேசன்


Kavingar Jawaharlal

unread,
Jul 26, 2024, 8:17:56 AM7/26/24
to santhav...@googlegroups.com, vall...@googlegroups.com

எப்படி இப்படி ஆய்வு செய்கிறீர்கள்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUcoK9jXYNM%3DBYKU3U%3Dm4SpzckuPquOa422RgVEA%2BT7-ag%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 26, 2024, 9:10:24 AM7/26/24
to vall...@googlegroups.com, santhav...@googlegroups.com
On Fri, Jul 26, 2024 at 7:17 AM Kavingar Jawaharlal <kavingar....@gmail.com> wrote:

எப்படி இப்படி ஆய்வு செய்கிறீர்கள்

தமிழன்னை அருள், கவிஞர் ஐயா.

அப்புதல் என்னும் வினைச்சொல் சங்க இலக்கியத்திலே ஆளப்படுவது. அப்பக்குடத்தான் 108 திருப்பதி ஒன்றின் பெருமாள் திருப்பெயர். 

-----------------------------------------------

சில புதிய அறிமுகங்களுக்காக, என் சிந்து ஆய்வுகளின் வலைக்கண் அனுப்பினேன். வசதிப்படுபோது வாசிக்கவும். நன்றி.

My profession is Rocket Science, that pays my monthly bills. My passion is Indology, i.e., to figure out Tamil's place in Indian subcontinental history and religion. Here are some of my papers, indologists like Asko Parpola, Helsinki, Finland have said these theories will stand the test of Time. A 4500 years of fascinating history! Welcome to read and discuss.

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur:
Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu, Bangkok, Thailand, 2016.
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/mode/2up?view=theater

Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu:
https://cenkantal.medium.com/indus-creation-mythology-in-the-iron-age-tamil-nadu-e4834c8ecbd7

Harappan Civilisation, The Hindu book, 2022,  Dr N. Ganesan essay
https://archive.org/details/harappan-civ-the-hindu-dr-nganesan-essay/mode/2up

Some K-initial Dravidian Loan Words in Sanskrit: Preliminary Observations on the Indus Language, IJDL, 2018
https://archive.org/details/NGanesan_IJDL_2018

கொற்றவையும், புலியும் - ஒரு 4500 ஆண்டு காலத் தொடர்பு:
http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak  
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

Hope the above articles of mine explain the meaning in:
Kurush Dalal, Metal Men of the Doab: Still Figuring it Out
https://www.peepultree.world/livehistoryindia/story/eras/anthropomorph

Enjoy!
N. Ganesan


You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAOin%2BB8KvKS%3D%3D-KaA8xz4nHZKE1g_JQ-0JovuFSgk5-gi%2Bk0LQ%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages