அல்லியம் - Halliisa dance of Krishna

104 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 7, 2020, 8:22:55 AM4/7/20
to Santhavasantham
உலகெங்கும் தமிழர்கள் கூடும் தமிழ்ச்சங்க விழாக்களில் பாடப்பெறும் மனோன்மணீயம்
பெ. சுந்தரனாரின் தமிழ்த்தாய்வாழ்த்துப் பாட்டில் “திராவிட” என்பது அதன் உயிர்நாடி,
அதுபோன்ற உயிர்நாடிச் சொற்களாகச் சங்கப் பாட்டுகள் நான்கு காட்டினேன்.
திராவிட என்ற சொல் சுந்தரனார் பாடலின் உயிர்நாடி. மாவிரதி, காபாலிக, காளாமுக பாசுபதங்கள் எனும் வேத வழிபாட்டின்
காரணமாக, “வரிநீறு” (திரிபுண்டரம், வெண்ணீறு) தமிழகத்தை எட்டிய செய்தி புறம் 249-ல் உள்ளது. இது புறப்பாடல் 249-ன் உயிர்நாடி.
ஏடு படித்துப் பதிப்பிப்பதில் தலைசிறந்த உவேசா அருமையாக, வகையுளி இன்றி, வரிநீறு என்று ஒரேசீராகக் கொண்டு
அச்சிட்டார்கள். இது சங்க காலத்தில் ப்ராஹ்மி வந்தவாறும், வேளிர்கள் தமிழக வருகை, கூடவே வேத சமயங்களின்
வருகையைக் காட்டும் காலக்கண்ணாடி. பாசுபதர்கள் அமைத்த கோவில் சேரநாட்டுத் தலைநகர் வஞ்சி மாநகரில்
பசுபதீசுவரர் எனப்படுகிறது. தும்பி, வண்டன் போன்ற பெயர்கள் அகல்நாட்டில் உள்ளபடியால்,
தும்பி சேரகீரனும் சேரநாட்டுப் புலவர் எனலாம். (அகல்நாடு பற்றி 2 இடங்களில் சிலப்பதிகாரம் கூறும்.
காவிரி திரியாகவும், மலைகள் அகல்விளக்கின் சுவர் போலும் சூழ்ந்ததால் கொங்குநாட்டுக்கு அகல்நாடு என்ற பெயருண்டு.
வில்கோடுவது போல உள்ள வில்கோடி தனுஷ்கோடி என மொழிபெயர்க்கப்பட்டது போல, இதுவும் நிலவியல் அமைப்பால்
ஏற்பட்ட ஒரு பெயர். தனுக்கோடி - திருப்புகழில் காணலாம். பின்னர் வந்தது தளசிங்கமாலை).

Pole reversal in Tamil religion when the Sangam era ended

ஐந்து முக்கியமான பாடல்கள் - தமிழ்த்தாய் வாழ்த்து, + நான்கு சங்கப் பாடல்கள்
பற்றியும் அவற்றின் உயிர்நாடியாக உள்ள சொற்கள் பற்றி:

தேன் அளிந்த கள்ளு/மது:

மலர்களிலே மகரந்தத்தாதும், தேனும் (nectar) உண்டு. இயற்கைத்தாய் தேனை உண்ண அளி இனங்களைப் படைத்து அவற்றால்
மகரந்தச் சேர்க்கை உண்டுபண்ணி தாவரங்களின் இனம் பெருகிச் சோலைகளாக மாற்ற கோடிக்கணக்கான ஆண்டுகளாய்
வழிவகுத்துள்ளாள். பனை, தென்னை இரண்டிலும் பாளையைச் சீவினால் வரும் இனிப்பான “தேன்” காற்றில் உள்ள
இயற்கையான யீஸ்ட் உயிரிகளால், சில நொடிகளில் கள்ளு ஆக மாறுகிறது. இதைத் தடுக்கத்தான், தெளிவு-பதநீர்
மட்கலயத்தில் சுண்ணாம்பு பூசித் தயாரிக்கின்றனர். இப்போது, பனிக்கட்டியைக் கட்டி, தென்னைப் பாளையின்
தீஞ்சாறு (மலர்ச்சாறு, பாளைச்சாறு) அளிந்து கள்ளாக மாறாமல், “நீரா” என்ற குளிர்பானமாக மாறும் தொழில்
தமிழகத்தில் வளர்கிறது. இதனைத் தென்னை விவசாயிகள் தடையின்றிச் செய்யலாம் என்று முதல்வர் பழனிச்சாமியின்
அரசு முயற்சி எடுத்துச் சட்டமாக்கியதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். பனைமரத் தேன் அளிந்து கள்ளாக
மாறும், எனவே, தாழை (தெலுங்கில் தாடி (கோழி > கோடி)) - ஆங்கிலத்தில் Toddy. பனைமரத்தின் கீழாக,
வெள்ளைக் கள்ளின் கலயம் ஏந்தி நிற்பவன் வேளாண்மையின் கடவுள் பலராமன். கலப்பையும் உண்டு,
வெள்ளை என்பதே இந்த வேளாண்மை முதல்தெய்வத்தின் பெயர். இவன் நிறம் கள்ளால் அமைந்தது.
வெள்ளைச்சாமி எனத் தமிழர் பெயர் இவனால் ஏற்பட்டதாகும்.

அளி¹-தல் aḷi- , 4 v. intr. [M. aḷi.] 1. To become mellow; அறக் கனிதல். அளிந்த தோர் கனியே (திருவாச. 37, 4). 2. To be overboiled; குழைதல். சோறளிந்துபோயிற்று. 3. To be attached; பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த
கடுவனையே நோக்கி (திவ். இயற். 3, 58). 4. To mix, mingle; கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா. ஊர்தே. 154).
அளிவழக்கம் என்று சங்கீதத்தைச் சங்க இலக்கியம் குறிப்பது, இந்தியாவில் இசைக்கலைகள் தோன்றிய வரலாற்றைக் குறிக்கும் மரபுத்தொடர்.
அண்மையில் கூட, ட்யூனிங் ஃபோர்க் என்பது இசையைத் தோற்றுவிக்காது. எனவே, இசைக்கவை துல்லியமில்லை, அது ஒரே ஃப்ரிக்குவென்சியில்
விதிரும் விதிர்ங்கோல்: https://groups.google.com/d/msg/vallamai/XwU3OYsF480/FirHZv3NAwAJ

பனை, தென்னை மரங்களில் வடியும் தேன்சாறு கள்ளாக மாறுதலை அறிந்து பயன்படுத்திய தமிழர்கள்
மலர்த் தேனையும் கள் என்றே அழைத்தனர். இது சம்ஸ்கிருதத்தில் மது என அறியப்பட்டது.
மதுவைத் தேடும் வண்டுக்கு அளி என த்ராவிடர்கள் கொடுத்த பெயரும் வடமொழியில் புழங்கலாயிற்று,
மதுபம், மதுகரம் என அளிகளுக்குப் பெயர் உண்டு. மதம் (கள்) மதயானைக்கு மும்மதமாய் ஒழுகும்.
எனவே, களிறு எனப் பெயர்வைத்தான் தமிழன். காளை, கணவன் என்ற சொற்களும் கள்- என்ற மூலங்கொண்டவை.

மேலும், உசாவ:


தேன் தேன்கூட்டில் அளிதல் (Cf. இட்டளி)  https://www.honeybeesuite.com/uncapped-honey-fermenting-in-the-comb/

It is possible to trace the evolution of boozing back to the common ancestor of humans and chimpanzees

In 2000, Robert Dudley of the University of California in Berkeley proposed the idea of a deep historical link between fruit-eating animals and alcohol intake. With his curiously-titled "Drunken Monkey Hypothesis", Dudley suggested that our early ancestors were introduced to alcohol in fermenting fruit, and that this might underlie our current taste for it.

Ripe fruits ferment and decay because of yeast that grows inside and on the fruits. Yeast breaks down sugar into alcohol, primarily ethanol – the alcohol in beer and wine. As yeast cells multiply, the fruit sugar content decreases and ethanol content increases.

In studies published in 2002 and 2004, Dudley reported the alcohol content in wild fruits of the Astrocaryum palm, which Panama's mantled howler monkeys eat. The unripe fruits contain zero ethanol, ripe hanging fruits contain 0.6%, ripe fallen fruits contain 0.9% and over-ripe fallen fruits contain 4.5% ethanol (by weight) on an average.

இந்த விஞ்ஞானக் கட்டுரை, பழைய தமிழர்கள், வண்டினங்களை அளி என்றதும், சங்கீதத்தைப் பரிபாடல் அளிவழக்கம் என்றதும், வேளாண்கடவுளைக் கள்ளொடு (டாஸ்மாக்) படைத்ததும், ”சோறு அளிந்து போச்சு” என்கிறபோது, பழைய சோறாக சொதசொத என்று யீஸ்ட் மாற்றுவதும், கனிகள் அளிவதும் (அளிந்ததோர் கனியே என்றார் மாணிக்கவாசகர்) பற்றி ஆராய ஒரு பாய்ண்ட்டர். இயற்கையான யீஸ்ட் செயலால் த்ராக்ஷைப் பழம் அளிதலைக் கண்ட சுமேரியர், கிரேக்கர் “வைன்” தயாரித்தனர். பழந்தமிழர் அளிந்த கள் கண்டனர். மட் கலசங்களை அடுக்கி, சாராயம் வடிக்கக் கலைகண்டனர். எத்தனையோ மரங்கள் இருக்க, சீ (சீந்து > ஈந்து) என்று சிந்து சமவெளிக்குப் பெயர் வைத்தனர். இது ஈச்சங் கள்ளின் பலனை உணர்ந்ததால் தானா என ஆயலாம். சிந்து இன்று பாரசீகர் மாற்றிய சொல்லான ஹிந்துஸ்தானம், ஹிந்து, ஹிந்தி என்றும், கிரேக்கர்கள் தந்த இந்தியா என்றும் இருக்கிறது. தமிழர்களின் பழைய “அளிவழக்கம்”!

NG


On Sat, Apr 4, 2020 at 10:14 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects பொதுப்பெயர்.
அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle),  நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி), ஊசித்தட்டான் (damselfly), ...

நீலாளி என https://en.wikipedia.org/wiki/Amegilla_cingulata  என இலக்கியம் அழைப்பது போல,
Carpenterbee = தும்பி, தச்சுவண்டு, தச்சளி (தச்சு+அளி) எனல் மிகப்பொருத்தம்.
தச்சு = தச்சன் ‘கார்ப்பெண்ட்டர்’. அளிந்த மாவை இட்டு நீராவியில் வேவிக்கிறோம்.
எனவே, இட்டளி. ஓர் ஈடு என்பது இட்டளி ஒருமுறை ஆவித்து எடுத்தல்.
இரண்டு ஈடு, மூன்று ஈடுஎன எத்தனைபேர் சாப்பிடுகிறார்களோ அதைப்போல்
எடுப்பது. வாய்க்கால், கால்வாய் போல, இட்டளி, அளியீடு (அளி - அளிந்த ‘fermented' மாவு)
இரண்டும் ஒரே பொருள். இட்டளி என்பது போல, இடு என்னும் வினையில்
இருந்து ஒரு முக்கிய உதாரணம்: இட்டி, இட்டிகை (சங்கம்). செங்கல்லை
இட்டு சுவர் எழுப்புவதால் இட்டிகை. இது வடமொழியில் இஷ்டி எனப்
பெயரும். உ-ம்: புத்ர காமேஷ்டி யாகம் ~ வேள்வி செய்ய, இட்டிகையால்
அமைக்கும் குண்டம். எனவே, வேள்விக்கு இஷ்டி எனப் பெயர். 
மூட்டு/முட்டி>> முஷ்டி, குட்டம் >> குஷ்டம், .... போல, இட்டி >> இஷ்டி 'brick in Sanskrit'. 

அளி என்னும் வண்டுகளுக்கான சொல் (பூங்கள்ளைத் தேடுவது என்னும் பொருள்)
சங்க இலக்கியத்தில் இருக்கிறது. ர, ற வேறுபாடு மறைந்த காலத்தில்
மரைக்காடு > மறைக்காடு ஆகியது; புராணங்கள் (உ-ம்: அப்பர்
மரைக்காடு வந்து கதவு திறத்தல், அடைத்தல்), வேதாரண்யம் என மரைக்காடு
மொழிபெயர்ப்பு. உண்மையில் ம்ருகாரண்யம் என்பது சரியாய் இருந்திருக்கும்.
மரை = க்ருஷ்ண-ம்ருகம், Indian black buck என 20+ ஆண்டாய் இணையத்தில்
எழுதிவருகிறேன். முதலில், மரைக்காடுதான் மறைக்காடு ஆயிற்று
என மொழியியல் மூலம் சொன்னவர் துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவார்.
துடிசை , இப்போது கோவையில் ஒன்றிவிட்ட துடியலூர். பேரூருக்கும், துடியலூருக்கும்
சுந்தரர் பாடிய தேவாரப் பதிகங்கள் கிடைக்கவில்லை என்பர். இப்போது,
மரைக்காடு >> மறைக்காடு ஆன வரலாறு பலராலும் பேசப்படுகிறது.
அண்மையில், வினைதீர்த்தான் இம்மாறுதலை பற்றி எழுதியிருந்தார்கள்.
அதே போன்றது தான், சில ஆண்டு முன்னர் வில்கோடி என்பது தனுஷ்கோடி என மொழிபெயர்த்தனர் எனக் குறிப்பிட்டதும், பலர் பயன்படுத்துதலைப் பார்க்கிறேன். வாழ்க.

அளி என்னும் flower honey(madhu)-seeking pollinator insects சங்க இலக்கியத்தில் உண்டு.
அளிதல் “to ferment" (cf. iTTaLi 'idli') வினைசொல்லில் இருந்து அளி என்ற இப்பெயர்
மதுபம்/மதுகரங்களுக்குப் பெயர் த்ராவிடபாஷைகளில் உற்பத்தி ஆகிறது.
”அளி விடுதூது - Pollinator Bees in Classical Tamil” என்ற தலைப்பில், இன்னும் விரிவாக, 
அவுஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலக சம்ஸ்கிருத மாநாட்டில் (2021) இதுபற்றிக் 
கட்டுரை வாசிக்கலாம். இன்றுகூட, அப்ஸ்ட்ரேக்ட் கேட்டு மடல் வந்துள்ளது. 

சங்க இலக்கியத்தில் அளி (Pollinator insect):

பரிபாடல் 10 (வரி 118)
நல்ல கமழ்தேன் அளி வழக்கம் எல்லாமும் 

புனலாடி மீண்டவாறு


மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்

வதி மாலை, மாறும் தொழிலான், புது மாலை

நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூ வேய்ந்து,
115
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்;

பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,

ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,

நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,

பண் தொடர் வண்டு பரிய எதிர் வந்து ஊத,
120
கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊத,

தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,

நளிர் மலைப் பூங்கொடித் தங்குபு உகக்கும்

பனி வளர் ஆவியும் போன்ம், மணி மாடத்து

உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
125
கால் திரிய ஆர்க்கும் புகை.

இங்கே, அளி வழக்கம் என்பது ”அளியினங்களின் அஞ்சிறை முரல்வதால்
எழும் buzzing, humming music போன்ற இசையை எழுப்பும் பெண்டிர்” என்பதாகும்.

பரிமேலழகர்:
தங்கள் மேலிருந்த பகற்காலத்துக்குரிய அணிகளைநீக்கினர். மாலைக் காலத்தில் மலரும் மலர்களையும் தோளணி தோடு முத்துவடம் முதலானஆபரணங்களையும் அணிந்தனர். பலர் பாடினர்.அவர்களுடைய பாடலும் பரவலும் புகழ்தலும் ஆடுவாருடைய ஆடலொலியும் அதற்குரிய தாளவொலியும் தேனீக்களுடைய ஒலியும் மிக்கன. அங்ஙனம் எழுந்த பண்ணொலியைக் கேட்டுத் தம் இனமென்று கருதி ஊரிலிருந்த வண்டுகள் எதிர்வந்து ஊதின;பாடுவார்களது பூவேய்ந்த கொண்டைமேல்தேனையுண்டிருக்கும் வண்டுகள் உடன்வந்து ஊதின.யாவரும் தென் திசையை நோக்கி மீண்டனர்.அப்பொழுது மாடத்தினுள்ளிருந்து மேலெழுந்த அகிற்புகையானது மலையின் மேல் தங்கி எழுந்த பனியை ஒத்தது.  

அளி பற்றி சங்க காலத்தின் பின்னர் 1000-கணக்கான பாடலுள.

NG
என்னை உடையாள் கலைமடந்தை, எவ்வுயிர்க்கும் 
அன்னை யுடைய அடித்தளிர்கள் - இன்அளிசூழ் 
மென்மலர்க்கே கன்றும் எனஉரைப்பர்; மென்மையிலா 
வன்மனத்தே தங்குமோ வந்து?  - தண்டியலங்காரம்.

(கலைஞர்களில் சிறந்தவன் கவிஞன். அவனது இதயம்
தாமரை என உருவகம். அங்கே, அளிகள் சூழ்ந்திருக்கும் -
அவனது கவிக்கு ரசிகர்கள் சூழ்ந்திருப்பர். அந்த மெல்லிய
தாமரையில் அடித்தளிரை வைத்திருப்பாள் சரஸ்வதி.
மென்மையான அக் கவியுள்ளமே அவளது திருவடிகளை
கன்றச் செய்வது. கவியும், கலையும் அறியா என்
வன்மனத்தில் வந்து தங்குவாளா கலைமகள்?
உருக்கமான துதி.)

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிமதியத்
துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்
பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற் பகராயே. 
அளியரசு = பிருங்கராஜா (bumblebee, blackbee 'bombinatrix glabra')  

நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
    நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்
    ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே - தேவாரம்
(அளிவண்டு யாழ்செய்கிறது - பம்பைக் கரையில் உள்ள ஆமாத்தூரில்).

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய் அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால்வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக்கொண்டதே!  - ஆழ்வார் பாசுரம்

             கிருஷ்ணன் தூதுச் சருக்கம், வில்லிபாரதம்
நீ தூது நடந்து அருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் 
தாது ஊதி அளி  முரலும் தண் பதியும் தாயமும் தாரானாகின் 
மீது ஊது வளைக் குலமும்  வலம்புரிம் மிக முழங்க வெய்ய காலன்
மா தூதர் மனங் களிக்கப் பொருதெனினும் பெறுவன் இனிது, வசையும் அன்றே   
 
அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் “அளி” என்பது மலர்களில் மதுவைத் தேடி
மகரந்தத்தாதுவை பரப்பும் எல்லாவகை insects-க்குப் பொதுப்பெயராகக் காண்கிறோம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.

இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது. அளிதல் = to ferment.
எனவே, அளி = spiritous liquor, பூக்களில் மதுவைத் தேடி உண்ணும் pollinating insects.
அளி = தேனீக்கள் (honeybees), தும்பி (carpenter-bee, தச்சுவண்டு), பிருங்கராஜா ( bumblebee, வரிவண்டு ), வண்டு (beetle), 
நீலவரிவண்டு (நீலாளி என்பார் பாமஹர்), கொசுத்தேனீ (கொட்டாத்தேனீ, stingless bee), தட்டான் (dragonfly, சிறுதும்பி),
ஊசித்தட்டான் (damselfly), ...

வெவ்வேறு அளி இனங்கள், அடிப்படையான அ, இ, உ என்னும் உயிரொலிகளில் இசை முரலும்/நவிலும்
என்று கண்டனர் சங்கத் தமிழர். இதன் அடிப்படையில் நரப்பிசைக் கருவிகள் (உ-ம்: கின்னரம், யாழ், வீணை, தம்புரா, ...
செய்தனர். நாரதர் வைத்திருப்பது மகதி வீணை எனும் யாழ்வகை, தும்புரு தும்பு என்னும் சுரையில் செய்யும்
தம்புரா இசைப்பார். தும்புரு, நாரதர் என்னும் இசைவாணர்கள் பெயர்கள் தமிழினின்றும் வடமொழியில்
பயனாகிறது காண்க. துமர் ‘துளை’ > தமர்; துமராணி > தமராணி (Carpenter's gimlet),
(1) அம் எனல் - ஓர் ஒலிக்குறிப்பு (பிங்கலம்). உ-ம்: அஞ்சிறைத் தும்பி   அம்முகிற சிறகு கொண்ட தச்சுவண்டு.
Listen to the humming/buzzing sound of தும்பி (Carpenterbee): https://www.youtube.com/watch?v=YW1AbPH3NLw
https://www.youtube.com/watch?v=V8pPjmvm3KM    = அம்  என்று இசைக்கும் அஞ்சிறைத் தும்பி
தமிழின் அம் சிறையின் அம்மெனும் ஒலிக்குறிப்பு, உலகின் ஏராளமான மொழிகளில் ஹம் எனக் கூறப்படும்.
 
(2) இம் எனல் - Onom. expr. of humming, rustling, pattering; ஓர் ஒலிக்குறிப்பு. இம் மெனப் பெய்ய வெழிலி 
முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392).
இமிர்-தல் imir- , 4 v. intr. < இம். 1. To sound, hum; ஒலித்தல். சுரும்பிமிர்ந் திம்மென (கலித். 119, 8). 2. To blow; ஊதுதல். கைவைத் திமிர்புகுழல் (பரிபா. 19, 41).  

(3) உம் எனல் - உங்காரம் Buzzing sound, as that made by bees in flight; வண்டின் ஒலி. உங்கார மதுகரங்கள் (பாரத. வசந்த. 3).
உம் எனல் ஹும் எனவும் ஆகும்: ஹுங்காரம் huṅkāram , n. < huṅ-kāra. See உங்காரம்,
அம் எனல் ஹம் எனப் பிறமொழிகளில் (உ-ம்: ஆங்கிலம்) ஒலிக்குறிப்பு ஆதற்போல. [A]

நா. கணேசன்
[A] அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1].  
"avar collum vArttaikaLil ovvon2Rukkum huGkAram ceytu koNTE iruppEn2. illA viTTAl, avar pEccu mElE pOkAtu."
en2 carittiram, UVS, p.15, 2nd edition 1982, Chennai
The Story of my life, part I (1990) & part II (1994), Institute of Asian Studies
Madras (Chennai), M. Shanmukam Pillai and A. Thasarathan translate this as:
"I had to counter every word of his with a soft grunt of assent; otherwise he would stop speaking".


அலியன்/அல்லியன் “மோழை எனப்படும் மக்னா ஆனை” - இவை போல மெய் இரட்டித்து, ஒரே பொருள் தரும்
சொற்கள் தமிழில் பல உண்டு. உ-ம்: நகர்/நக்கர் (Gharial, and then Shiva);அரதனம்/ரத்தினம்;  நடம்/நட்டம்; படம்/பட்டம் ‘சீலை’
சீலை நெய்வோர் பட்டம் போல தறியில் நெய்வதால். “படம் செய் பந்தர்” = புடைவைப்பந்தர் (புறப்பாட்டு); இவை போல, அலியன்/அல்லியன்.

கோவூர்கிழார் புறநானூற்றுப் பாடல் இதனை உறுதிசெய்கிறது. அணங்கு மிகுந்த காடு. அதில் தனியாய்ச் செல்ல
அஞ்சுவர். காமத்தால் வயப்பட்ட சோடி செல்ல இவ் வனப்பேய் அனுமதிக்கும். சுத்த நிருத்தமாய்
ஆடுவது அல்லியக்கூத்து. இது அலிப்பேடு என்றும் வழங்கும். தமிழிசை பற்றி நமக்குப்
பல செய்திகளை அறிவிக்கும் அடியார்க்குநல்லார் (14-ம் நூற். கொங்குநாட்டில் நிரம்பை அவர் ஊர். சமண சமயத்தார்)
அலிப்பேடு Cross-dressing என்பது அல்லியம் என்கிறார்.  அலி-/அல்லி-. இதனைப் கோவூர்க்கிழார்
அல்லிப்பாவை எனப் பாடியுள்ளார். தோல்பாவையில் கண்ணபிரான் குவலயாபீடம்
என்னும் கஞ்சனின் மாளிகை யானையை, அதன் கொம்பை ஒடித்து, அலியன் என்னும் மோழை ஆக்கிய
திருவிளையாட்டைக் காட்டும் பாடல். இதற்கு அபிநயம் இல்லை, ஓவியங்களால் காட்டி ஆடுவது என்பதால்
அல்லிப்பாவை என்றார். இதே போல, பாலைக்காடு மாவட்டங்களில் கம்ப ராமாயணத்தைத்
தோல்பாவைக்கூத்தாய் ஆடிப் பிரவசனம் பகவதி கோயில்களில் இன்றும் உண்டு.
(Ref. Stuart Blackburn, book on tOl pAvaik kUttu).
 

கண்ணபிரானின் பாலசரித நிகழ்ச்சியாக,  ஹரிவம்ச புராணம், சிலப்பதிகாரம், ஹால (மஹாராஷ்ட்ரா) என இந்த
லீலை இந்தியா முழுதும் பேசப்படுகிறது. கோலாட்டம் குஜராத்தில் தண்டியா என ஆடுகின்றனர். தண்டு தமிழ்ச்சொல்.
தாண்டவம் பற்றி சிவன் தண்டு முனிக்கு உபதேசம் என்பது பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம். மகாபலிபுரத்தில்
தண்டு முனிவர் சிவனிடம் உபதேசம் பெறும் சிற்பம் பல்லவர்கள் செதுக்கியுள்ளனர். அதேபோல,
பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில் ஹல்லீச நடனம் ஆடுகின்றனர். இது உபரூபகங்களுள்
ஒன்று, நிருத்தமே பிரதானம். குவலயாபீடத்தின் கொம்பு ஒசித்த திருவிளையாட்டை நிருத்தமாய் நடித்துக்
காட்டிக் கோபியர் வட்டமாய் நின்று ஆடுவது. நடுவில் கண்ணனாக, ஓர் இளைஞன் புள்ளாங்குழல் ஊதி
நிற்பான்.

சம்ஸ்கிருதத்திலேயே புகழ்பெற்ற, மிகச் சிறந்த பக்தி இலக்கியம்: பாகவத புராணம். இது  ஆழ்வார்கள்
காலத்தின் பின்னர் தமிழ்நாட்டில் எழுதப்பட்டது (Cf. Fred Hardy). ஸ்ரீமத் பாகவதத்தின்
ஓவியங்கள் ராஜஸ்தான், பஹாடி (Rajasthan, Pahari painthings at Royal courts)
அரண்மனைகளில் வரையப்பெற்றன. அவற்றில், சிலப்பதிகாரத்தின் அல்லியக் கூத்து பார்க்கலாம்.
ஸ்ரீ கண்ணன் (பலராமனுடன் சேர்ந்து) குவலயாபீடம் என்னும் யானையை கொம்பொசித்து மோழை ஆக்குகிறான்.
https://www.harekrsna.com/philosophy/associates/demons/mathura/kuvalayapida.htm
https://www.differenttruths.com/relationship-lifestyle/religion/tales-from-srimad-bhagavatam-kuvalayapida-and-krishna-lxxviii/
https://www.amazon.com/Krishna-Balarama-Wrestlers-Elephant-Kuvalayapida/dp/B00MPG3O3M
http://www.sothebys.com/en/auctions/ecatalogue/lot.227.html/2008/indian-southeast-asian-works-of-art-n08499
https://research.britishmuseum.org/research/collection_online/collection_object_details.aspx?objectId=266088&page=2&partId=1&peoA=139544-1-7&people=139544
http://www.brahminsnet.com/forums/showthread.php/16324-Narayaneeyam
https://www.yumpu.com/en/document/view/48257134/dances-of-indiapdf-vivekananda-kendra-prakashan

கொம்பன் யானைய மோழை ஆக்கும் திருக்கூத்து: அல்லியம். இதன் மற்றொரு பெயர் அலிப்பேடு.
அலியன்/அல்லியன் பெயர் விளங்குகிறது அல்லவா? ஸ்ரீலங்காவில் கொம்பனே கிடையாது என்றீர்கள்.
எனவே, சிங்களியர் அலியா என ஆனையை அழைப்பது பொருத்தமே. aliya is a loan word from Tamil.
அதாவது, கொம்பன் யானையை மோழை (அலியன்) ஆக்கும் நிகழ்ச்சி. தெய்வங்கள் அவுணர்களுடன்
போர்செய்து, அதன் வென்றியை மகிழ்ச்சியாக ஆடுவது தெய்வவிருத்தி. இவை 11 வகை என்று
சிலப்பதிகாரம் பாடியுள்ளது. இவற்றை மாதவி எனும் கணிகை ஆடிக்காட்டினாள்.
http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=50&auth_pub_id=54&pno=286
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும்

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக - கஞ்சனுடைய வஞ்சத்தை வெல்லுதற் பொருட்டாக, அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் - கரிய நிறத்தையுடைய மாயோன் ஆடிய கூத்துக் களுள், அல்லியத் தொகுதியும் - கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடிய அல்லியத் தொகுதி என்னும் கூத்தும் ;

அஞ்சன வண்ணன் ஆடலுள், கடத்தற்காக ஆடிய அல்லியத் தொகுதி யென்றுமாம், மாயோனாடல் பத்து என்பர். தொகுதி யென்றார், முகம், மார்பு, கை, கால்களின் வட்டணை அவிநயம் முதலியன விருந்தும் தொழில் செய்யாது நிற்றலின் ; என்னை? "ஆட லின்றி நிற்பவை யெல்லாம், மாயோ னாடும் வைணவ நிலையே" என்றாராக லின். அல்லியம் என்பதனை அலிப்பேடு என்பாரு முளர்.
http://www.shanlaxjournals.in/pdf/TS/V2N4/ts_v2_n4_037.pdf

--------

அளியும், களிறும்:
 இட்டளி = இடு + அளி. அளிதல் = to soften, to become mellow, to ferment.
fermented dough = இட்டளி மாவு.

முன்பு, இடு + அவி இட்டவி தான் இட்டலி என மாறிற்றோ என மயக்கம் உண்டு.
திருப்பதிக் கல்வெட்டில் இட்டலி இட்டவி என்ற குழப்பம் உண்டு. ஐராவதம், துரை சுந்தரம்,
புலவர் செ. ராசு போன்றோர் பார்க்கணும். பல்லாண்டு முன்னர்,
கமலாதேவி அரவிந்தன் வண்ணச்சரபம் சுவாமிகள் இட்டவி எனப் பாடிய நூல் ஒன்றை
எனக்கு அனுப்புகிறேன் என்றார். அது வந்து சேரவே இல்லை. இது பிட்டுக்கு ஒருபெயராக
இருக்கலாம். வண்ணச்சரபரின் நிபுணர் புலவர்பெருமான் ப. வெ. நாகராஜனும்,
சிரவணம்பட்டி கௌமார மடத்தில் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்கள்
https://www.vallamai.com/?p=88391

---
தும்பிகளையும் (Carpenterbees, Bumblebees) தேன் ஈக்களையும், வண்டுகளையும்
பற்றிப் படிக்கையில், புறம் 249-ன் ஆசிரியர் பெயர் தும்பி சேரகீரன்,
பாடல் வரிகளை ஆராய நேர்ந்தது, பாடலின் பொருளை எழுதியுள்ளேன்
வரிநீறு 11-ம் அடியில் ஈற்றுச்சீர். மாற்றினால், வகையுளி வரும்.
https://groups.google.com/forum/#!msg/houstontamil/0DhJtE44CBg/yAk05xbPBwAJ
 
விலங்கியல் நிபுணரும், தமிழ் நன்கு அறிந்தவரும், World Wildlife Fund அதிகாரியும்
ஆய நண்பர் டாக்டர் அஷ்ராஃப் குன்ஹுனு அவர்களுடன் நேற்று டெல்லியில்
பேசினேன். பல தெளிவு கிடைத்தது.

மிதுனம் (கலவி) வாயிலாக மைத்துனன் (கணவன், சகோதரி கணவன் (அ) மனைவி சோதரன்)
என்ற உறவுப்பெயர் வடசொல். ஆனால், மலையாளம் “அளியன்” என்ற தூயதமிழ்ப்
பெயரை வைத்துளது. குட்டளியன், வலியளியன் - வயது காரணமாக வேறுபடுத்தும்.

மஸ்த் என்னும் மதம் ஒழுகும் காலங்களில் களிறு (கணவன் என்ற சொல்லும் கள்- எனும்
தாது கொண்டது) தனியாகக் கூட்டத்தில் இருந்து பிரிந்து இயங்கும். இதற்கான
வேதிப்பொருள் சுரப்பு பற்றி விரிவாக ஆராய்ந்துவருகிறார்கள். அளியன் என்ற
சொல் இந்த Loner யானைகளுக்குப் பொருந்தும். அளி என்னும் வண்டுகள்
சூழ்ந்து/மொய்த்து இருக்கும் யானை என சம்ஸ்கிருதம் பலபடப் பேசும். சங்க இலக்கியம்
இந்த அளிகளின் ஜாதிப்பெயர் ஞிமிறு எனப் பல பாடல்களில் பதிவு செய்கிறது.
ஞிமிறு ஒருவகை moth என்று பி. எல். சாமி கூறி, அதன் விஞ்ஞானப் பேரையும்
தருகிறார்.

அல்லியம் என்ற கூத்தை கிருஷ்ணபிரான் குவலயாபீடம் என்ற யானையை
அடக்கினபோது ஆடிய கூத்தின் தொகுதி எனச் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளால்
தெரிகிறது. அலியன் என்ற சொல் அல்லியன் என்றும் வரும் எனப் பார்த்தோம்.

அல்லியன் - கூட்டத்தில் அல்லாத யானை. பிடிகளில் இருந்தோ, களிறுகளில்
இருந்தோ விலகிய யானை என்றும், சிங்களத்தில் அலியா என்று இவ்வானைகள்
வழங்குவதும் மரு. அஷ்ராஃப் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.

அளி = கள்/மது, அஃதுணும் தும்பி, தேனீ, வண்டு. இச்சொல்லை வடமொழியில் மிகுந்து காணலாம்.
அளிகள் மொய்ப்பது அளியன் = கூட்டத்தில் பிரியும் மதகளிறு (Loner, solitaire), கள் (மதம்) வடிவது.
ஒருத்தல் எனச் சங்க இலக்கியம் கூறும். ஒருத்தல் ஆண்யானையின் தலைவன் என்பார் நச்சினார்க்கினியர்.
களிறு, கணவன் சொற்களும் அதில் உள்ள நொதித்தல் வினையால் “அளிதல்”
என்ற வினைச்சொல்லும், “to soften, to become mellow, to ferment" என்ற பொருள்களால்
அளியன் = மைத்துனன், ஆண்யானை (மதகளிறு) எனச் சொற்கள் தோன்றியுள்ளன.
காலப்போக்கில், அளியன் மைதுனன் ஆதலால், பொருட்குழப்பம் நீங்க “அல்லியன்/அலியன்”
என்று மாறிற்றோ? - எனவும் எண்ணுகிறேன். அளி என்பது வடமொழியில் அலி என
தும்பிக்கு எழுதுவர். ள் இன்மையால். அளியன் அலிய- என சிங்களம் போன்ற பாஷைகளில்
மாற இது காரணம். அளியன் >> அலியன்/அல்லியன்

இடு + அளி = இட்டளி >> இட்டலி/இட்லி என்பது தெளிவு. அவித்தலை விட, அளிதல் “கள் போல,
ஃபெர்மெண்ட்டேஷன் ப்ராசெஸ்” இருப்பது தான் இட்டளியின் சிறப்பு அல்லவா?
பிட்டு, இழையப்பம் (சந்தகை) நீராவியில் அவிக்கப்படுவது. ஆனால், இட்டளியின் சிறப்பே அளிந்த மாவு தானே.
மந்தி அளிந்த கடுவனைச் சங்க இலக்கியம் பாடுகிறது.

மொய் என்னும் யானைப் பெயர். மொய் = வலிமை. அது மாத்திரமில்லை.
களிற்றுக்கு மதம் வடியும்போது, ஞிமிறு என்ற வண்டுகள் மொய்க்கும்.
இதனால் மொய் = யானை, வண்டு என தமிழ் நிகண்டுகள் பகரும்.

அளி (வண்டு), வண்டு மொய்த்தலால் யானைக்களிறு மொய்,
மோழை (மக்னா), கொம்பனை மோழை ஆக்கும் கண்ணன் திருக்கூத்து
அலிப்பேடு/அல்லியம் எனப்படுதல் பற்றி இம்மடலில் பார்த்தோம்.

பிற பின்!
நா. கணேசன்
https://archive.org/details/@dr_n_ganesan  
http://nganesan.blogspot.com

Ramamoorthy Ramachandran

unread,
Apr 11, 2020, 9:46:37 PM4/11/20
to Santhavasantham
ஓர்  ஆராய்ச்சிக் கட்டுரையே படைத்து விட்டார் கணேசன்! அவர் வாழ்க!
- திருச்சி புலவர் இராமமூர்த்தி 

செவ்., 7 ஏப்., 2020, பிற்பகல் 5:52 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUewsmcHPjNsTU%3DHpgU2-TYnpqnN5TumMF6eFzr54X4RgQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 11, 2020, 10:05:24 PM4/11/20
to Santhavasantham
On Sat, Apr 11, 2020 at 8:46 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
ஓர்  ஆராய்ச்சிக் கட்டுரையே படைத்து விட்டார் கணேசன்! அவர் வாழ்க!
- திருச்சி புலவர் இராமமூர்த்தி


நன்றி, ஐயா.

கண்ணபிரான் வேய்ங்குழல் ஊடி நடுவிலே நிற்க, பெண்கள் ஓவியப்பாவைகளுடன் ஓடும்
அல்லியம்/அலிப்பேடு என்னும் கூத்து இன்றைய சினிமா தொழிநுட்பத்தின் முன்னோடி
என எழுதியுள்ளேன். பாருங்கள்.

வடமொழியில் தமிழ்ச் சொற்கள் ஹ்- என்ற முன்னொட்டுப் பெறுவது இயற்கை. அவ்வழியில், தமிழ்/த்ராவிடச்
சொல் அலை >> ஹலதி என்றாகியுள்ளது.

சேரரின் வஞ்சி மாநகரில் ஆடிய ஊளிவிழவு ஹூளி/ஹோளி என்று ஆவதும் ஹ்- முன்னொட்டுச் சேர்வதினால் தான்.
உயிரெழுத்தில் தொடங்கும் சில வார்த்தைகளில் வகர மெய்யோ (உ-ம்: ஒக்கலிகர் > வொக்கலிகர் (Vokkaliga in Karnataka), அக்கா > வக்கா, உடையார் > வொடெயாரு (மைசூர் மன்னர்) ...), ஹகர மெய்யோ ஏறுதல் பேச்சு மொழி இயற்கை. எடுத்துக் காட்டாக, ஊளி > ஹூளி/ஹோளி, ஏலராஜா (வேளராஜா) > ஹேலராஜா, எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம், ஆரத்தி (ஆலத்தி) > ஹாரத்தி. அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம். http://nganesan.blogspot.com/2011/03/holi-uuli.html

21 ஆண்டு முன், அல்லியம்/அலியம்(=அலிப்பேடு). கொம்பன் யானையை கஞ்சன் அரண்மனையில்
அல்லியன்/அலியன் என்று கொம்பு ஒசித்துக் கண்ணன் ஆடிய திருவிளையாட்டு). ஹல்லீசம் என்னும்
ஆடல் அலங்கு-/அலை- என்ற சொல்லின் முன் ஹ்- சேருதல் என எழுதிஉள்ளேன்:

அல்லிப்பாவை = அல்லியம்/அலிப்பேடு என்னும் கூத்தில் கொள்ளபபடும் பிரதிமை.
 சிலம்பின் பழைய உரைக்காரர்கள் அல்லி-/அலி- இரண்டுக்கும் ஒற்றுமையைக் காட்டினர்.
படம்/பட்டம் ‘சீலை’, நகர்/நக்கர் ‘விடங்கர் (முதலை)’, (அ)ரதனம்/ரத்தினம் (ரதன் டாட்டா), அலி-/அல்லி-.
அல்லியக் கூத்து 6 உறுப்புக்கொண்டது, சுத்த நிருத்தம் என அடியார்க்கு நல்லார் போன்றோர்
எழுதினர். இது, இன்றைய சினிமாவின் முன்னோடியானது. கண்ணன் வேய்ங்குழல் ஊதி நடுவிலே நிற்க
6 (அல்லது) 12 (அல்லது) 18 பெண்கள் சுழன்று ஓடுவர். அவர்களில் 6 பெண்கள் கையில்தான்
அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும். ஓடும்போது, குவலாயாபீடம் எனும்
கொம்பன் ஆனை கொம்பு ஒசித்து அலிப்பேடு (அல்லியன்) ஆனை ஆகும் புராணம் கூத்தாக
ஆடியன்ஸ் பார்ப்பர். அலியன் என்று இலங்கையில் கொம்பின்மையால் தமிழர் அழைப்பர்.
சிங்களம் தமிழில் இருந்து கடனாகப் பெற்ற சொல் இஃது. உட்கார்ந்திருக்கும் ஆடியன்ஸுக்கு
6 பெண்கள் சித்திரத்தால் காட்டும் அல்லியக்கூத்து, அறிவியலால் சினிமாவாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைச் செய்த விஞ்ஞானி பிரெஞ்சு நாட்டார்  ஆவார்

கோவூர்கிழார், சிலம்பு, அதன் பழவுரைகள் கூறும் அல்லிப்பாவை (அல்லியக்கூத்து) என்னும் ஓவியத்தைக் காட்டி ஓடும்
சுத்த நிருத்தம், 19-ஆம் நூற்றாண்டு விஞ்ஞானத்தால் சினிமாவாக மலர்தல்.

அல்லியக்கூத்து/ஹல்லீச உபரூபகம் என்னும் தோற்பாவைக்கூத்து வளர்ச்சி இன்றைய சினிமா.
தமிழர்கள் வாழ்வில் தலையாய இடம்பிடித்து முதல்வர்களை
1967 முதல் கொண்டுவந்துள்ளது. இது மாறுமா என்பதை த்ராவிட கக்ஷிகளின்
எதிர்காலம் காட்டும்.

நா. கணேசன்

History of the motion picture, history of cinema from the 19th century to the present.

Early years, 1830–1910

Origins

The illusion of motion pictures is based on the optical phenomena known as persistence of vision and the phi phenomenon. The first of these causes the brain to retain images cast upon the retina of the eye for a fraction of a second beyond their disappearance from the field of sight, while the latter creates apparent movement between images when they succeed one another rapidly. Together these phenomena permit the succession of still frames on a motion-picture film strip to represent continuous movement when projected at the proper speed (traditionally 16 frames per second for silent films and 24 frames per second for sound films). Before the invention of photography, a variety of optical toys exploited this effect by mounting successive phase drawings of things in motion on the face of a twirling disk (the phenakistoscope, c. 1832) or inside a rotating drum (the zoetrope, c. 1834). Then, in 1839, Louis-Jacques-Mandé Daguerre, a French painter, perfected the positive photographic process known as daguerreotypy, and that same year the English scientist William Henry Fox Talbot successfully demonstrated a negative photographic process that theoretically allowed unlimited positive prints to be produced from each negative. As photography was innovated and refined over the next few decades, it became possible to replace the phase drawings in the early optical toys and devices with individually posed phase photographs, a practice that was widely and popularly carried out.

There would be no true motion pictures, however, until live action could be photographed spontaneously and simultaneously. This required a reduction in exposure time from the hour or so necessary for the pioneer photographic processes to the one-hundredth (and, ultimately, one-thousandth) of a second achieved in 1870. It also required the development of the technology of series photography by the British American photographer Eadweard Muybridge between 1872 and 1877. During that time, Muybridge was employed by Gov. Leland Stanford of California, a zealous racehorse breeder, to prove that at some point in its gallop a running horse lifts all four hooves off the ground at once. Conventions of 19th-century illustration suggested otherwise, and the movement itself occurred too rapidly for perception by the naked eye, so Muybridge experimented with multiple cameras to take successive photographs of horses in motion. Finally, in 1877, he set up a battery of 12 cameras along a Sacramento racecourse with wires stretched across the track to operate their shutters. As a horse strode down the track, its hooves tripped each shutter individually to expose a successive photograph of the gallop, confirming Stanford’s belief. When Muybridge later mounted these images on a rotating disk and projected them on a screen through a magic lantern, they produced a “moving picture” of the horse at full gallop as it had actually occurred in life.

The French physiologist Étienne-Jules Marey took the first series photographs with a single instrument in 1882; once again the impetus was the analysis of motion too rapid for perception by the human eye. Marey invented the chronophotographic gun, a camera shaped like a rifle that recorded 12 successive photographs per second, in order to study the movement of birds in flight. These images were imprinted on a rotating glass plate (later, paper roll film), and Marey subsequently attempted to project them. Like Muybridge, however, Marey was interested in deconstructing movement rather than synthesizing it, and he did not carry his experiments much beyond the realm of high-speed, or instantaneous, series photography. Muybridge and Marey, in fact, conducted their work in the spirit of scientific inquiry; they both extended and elaborated existing technologies in order to probe and analyze events that occurred beyond the threshold of human perception. Those who came after would return their discoveries to the realm of normal human vision and exploit them for profit.

In 1887 in Newark, New Jersey, an Episcopalian minister named Hannibal Goodwin developed the idea of using celluloid as a base for photographic emulsions. The inventor and industrialist George Eastman, who had earlier experimented with sensitized paper rolls for still photography, began manufacturing celluloid roll film in 1889 at his plant in Rochester, New York. This event was crucial to the development of cinematography: series photography such as Marey’s chronophotography could employ glass plates or paper strip film because it recorded events of short duration in a relatively small number of images, but cinematography would inevitably find its subjects in longer, more complicated events, requiring thousands of images and therefore just the kind of flexible but durable recording medium represented by celluloid. It remained for someone to combine the principles embodied in the apparatuses of Muybridge and Marey with celluloid strip film to arrive at a viable motion-picture camera.

Such a device was created by French-born inventor Louis Le Prince in the late 1880s. He shot several short films in Leeds, England, in 1888, and the following year he began using the newly invented celluloid film. He was scheduled to show his work in New York City in 1890, but he disappeared while traveling in France. The exhibition never occurred, and Le Prince’s contribution to cinema remained little known for decades. Instead it was William Kennedy Laurie Dickson, working in the West Orange, New Jersey, laboratories of the Edison Company, who created what was widely regarded as the first motion-picture camera.

Edison and the Lumière brothers

Thomas Alva Edison invented the phonograph in 1877, and it quickly became the most popular home-entertainment device of the century. Seeking to provide a visual accompaniment to the phonograph, Edison commissioned Dickson, a young laboratory assistant, to invent a motion-picture camera in 1888. Building upon the work of Muybridge and Marey, Dickson combined the two final essentials of motion-picture recording and viewing technology. These were a device, adapted from the escapement mechanism of a clock, to ensure the intermittent but regular motion of the film strip through the camera and a regularly perforated celluloid film strip to ensure precise synchronization between the film strip and the shutter. Dickson’s camera, the Kinetograph, initially imprinted up to 50 feet (15 metres) of celluloid film at the rate of about 40 frames per second.

https://groups.google.com/forum/#!topic/vallamai/yoog7ln_um8

Shanmuga ananth

unread,
Apr 12, 2020, 5:48:58 AM4/12/20
to santhav...@googlegroups.com
திரு கணேசன் ஐயா,
அருமையான பதிவு. அளி, அல்லியம், அல்லியம், அளியன், ஞிமிறு என பலவற்றை அறிந்து கொண்டேன் இன்று தங்கள் பதிவிற்கு நன்றி. 

தாங்கள் குறிப்பிட்ட "பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில்" 
பஞ்ச த்ராவிட தேசங்கள் யாவை? அறிய விரும்புகிறேன்.

அன்புடன்
சண்முகானந்தம்

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 12, 2020, 8:24:26 AM4/12/20
to Santhavasantham
On Sat, Apr 11, 2020 at 10:07 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
////கண்ணன் வேய்ங்குழல் ஊதி நடுவிலே நிற்க
6 (அல்லது) 12 (அல்லது) 18 பெண்கள் சுழன்று ஓடுவர். அவர்களில் 6 பெண்கள் கையில்தான்
அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும். ////

 > 6 பெண்கள் கையில்தான் அல்லிப்பாவை பிரதிமைகளின் ஓவியங்கள் இருக்கும் <<
இதற்கு மேற்கோள் கொடுக்க இயலுமா?

கோவூர்கிழார் புறப்பாட்டு 33-ல் அல்லியக்கூத்தில் எடுத்துச் செல்லும்
அல்லிப்பாவை பற்றிச் சொல்கிறார்:
” வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்”
கை வல்லவன் தைத்தும், வரைந்தும் எழுதுவது அல்லியம் (அல்லது) அலிப்பேடு
என்னும் கூத்தில் பெண்கள் எடுத்துச் செல்லும் பிரதிமை.
இது கண்ணன் விடுத்த யானையின் கொம்பை ஒசித்தாடிய கூத்து
என்பார் அடியார்க்குநல்லார். இதனால் தான், அலியன் என்று இலங்கையில்
வழங்கும் யானையின் பெயர் வெளிச்சமடைகிறது.

தமிழிசையின் நுட்பங்களை விளக்குவது அடியார்க்குநல்லார் எனும் கொங்குச்சமணர் உரை.
அவர், சிலப்பதிகாரம் 6,
அல்லியக் கூத்து 6 உறுப்புகளைக் கொண்டது. வட்டணையும் (Dance steps), அவிநயமும் (அபிநயம்)
இன்றி எழுதிய ஓவியம் போல் நிற்றல் என்கிறார். இதன் பெயர் சுத்த நிருத்தம்.
கூத்துப்பார்ப்போர் (ஆடியன்ஸ்) முன்னால் அல்லிப்பாவை பிடித்து நிற்போர்
இந்த நிருத்தம் கண்ணனைச் சுழன்றாடும் பெண்கள் செய்வது. இது 6 உறுப்புகள்
கொண்டது என்பதனால்,. கொம்பன் ஆனையை அலியன் ஆக்கும் திருவிளையாட்டைக்
காட்டும் 6 பாவைகளைக் கொண்டு சுழன்றாடும் ஆட்டம் எனத் தெரிகிறது.
அல்லியக் கூத்தில் ஆறு உறுப்புகள் (6 parts of the Halliisa dance) ஒவ்வொன்றாகக்
காட்டினால், கூத்தைப் பார்ப்பாருக்கு கண்ணன் கொம்பொசித்த புராணம் முழுக்க
விளங்கிவிடும். அல்லியக்கூத்தின் ஒரு வடிவம், ஹல்லீசம் (< அல்லியம்) என்று குஜராத்தில் இன்றும்
ஆடுகின்றனர். ஆனால்,  ஆறு அல்லிப்பாவைகளப் பிடிப்பது மறைந்துவிட்டது.

அடியார்க்குநல்லார் தரும் விளக்கத்தால் வட்டமான உருளியில், ஸ்லைடுகளை
வைத்து ஓட்டி, ஆடியன்ஸ் முன்னால் ஒரு ஸ்லைடுக்கு ஒளியூட்டி, அதை நகர்த்தி,
அடுத்த ஸ்லைடைக் காட்டும் சினிமாவின் முதற்கட்டக் கருவிகளின் மிக
முன்னோடி அல்லியக்கூத்து எனத் தெரிகிறது. கோவூர்கிழார் வாக்கால்
கை வல்ல ஓவியன் பலகை, தோல் போன்றவற்றில் தைத்தும், எழுதியும்
- தைஇய வரி வனப்பு - செய்த அல்லிப்பாவை. இவை ஆறு எழுதி,
கண்ணபிரான் குவலயாபீட நிகழ்ச்சி முழுதையும் ஆடியன்ஸுக்குக்
காட்டுவர் என அடியார்க்கு நல்லார் உரையால் தெளிகிறது.

அல்லியம் முதல் மல் வரை உள்ள ஆறு கூத்துகளும் “நின்றாடும் தெய்வக் கூத்து”
என்கிறார் அடியார்க்குநல்லார். வட்டமாக ஓடிவந்து நின்று, அல்லிப்பாவை
காட்டுவது அல்லியம். அல்லிப்பாவை காட்டும்போது வட்டணையோ, அவிநயமோ
ஏதும் இருக்காது.

20-ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் நாடகக்கலை வளர்த்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
அவரது நாடகத்தமிழ் நூலில், தெய்வக் கூத்துகளில் 11 ஆடலுக்கும் ஆன உறுப்புகள்
என்னென்ன என, அடியார்க்கு நல்லார் கூறியதைச் சொல்கிறார்.

“ அல்லியம் :- இது 'அஞ்சனவண்ணன் ஆடிய ஆடல் பத்துள், கஞ்சன் வஞ்சத்தின் வந்த யானையின்
கோட்டை ஒசித்தற்கு நின்றாடிய’’ ஆடலாம். அல்லியம் என்பதன அலிப்பே டென்பாருமுளர் என்று
அடியார்க்கு நல்லார் கூறியிருக்கின்றார். புறநானுாற்றில் ’அல்லிப்பாவை’ என்று கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு “அல்லியக் கூத்தில் ஆட்டும் பிரதிமை” என்று பொருள் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இக்கூத்து
பாவைகளைக் கொண்டும் ஆடப்பட்டது போலும்.

கொட்டி. இதற்குக் கொடுகொட்டி யென்றும் பெயர். கொடுங்கொட்டி, கொடுகொட்டியென விகாரமாயிற்றென்பர்
நச்சினார்க்கினியர். அடியார்க்கு நல்லார் இதைப்பற்றி உரை எழுதுங்கால், தேவர் புரமெரிய வேண்டுதலால்,
வடவையெரியைத் தலையிலே யுடைய பெரிய வம்பு ஏவல் கேட்டவளவிலே அப்புரத்தில் அவுணர் வெந்து விழுந்த
வெண்பலிக்குவையாகிய பாரதி அரங்கத்திலே உமையவள் ஒரு கூற்றினளாய் நின்று பாணி தூக்குச்சீரெனும்
தாளங்களைச் செலுத்த, தேவர் யாவரினு முயர்ந்த இறைவன், சயானந்தத்தாற் கை கொட்டி நின்று ஆடிய
கொடு கெட்டி யென்னு மாடல்' என்று வரைந்துள்ளார்.”

ஒவ்வொரு தெய்வ விருத்தி என்னும் 11 கூத்துக்கும் எத்தனை உறுப்புகள் என அடியார்க்குநல்லார்
உரையால் அறிகிறோம். பாலக்காடு திருச்சூர் மாவட்டங்களில் (பாலைக்காட்டுக் கணவாய்)
பகவதி கோவில்களில், நேர்ச்சையாய் நடக்கும் (கூத்துமாடங்களில்) தோல்பாவைக் கூத்து
இதிலும், எத்தனை Scenes என்றும் பார்க்கலாம். (Ref. Stuart Blackburn's book on Tolpavaikuuttu).

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 12, 2020, 10:51:13 PM4/12/20
to Santhavasantham
On Sun, Apr 12, 2020 at 4:48 AM Shanmuga ananth <ananth....@gmail.com> wrote:
திரு கணேசன் ஐயா,
அருமையான பதிவு. அளி, அல்லியம், அல்லியம், அளியன், ஞிமிறு என பலவற்றை அறிந்து கொண்டேன் இன்று தங்கள் பதிவிற்கு நன்றி. 

தாங்கள் குறிப்பிட்ட "பஞ்ச த்ராவிட தேசத்தில் ஒன்றாகிய குஜராத்தில்" 
பஞ்ச த்ராவிட தேசங்கள் யாவை? அறிய விரும்புகிறேன்.

அன்பின் திரு, சண்முகானந்தம்,

மஹாபாரதத்திலேயே, இந்திய துணைக்கண்டம் விந்திய மலைக்கு வடக்கே உள்ளது பஞ்ச கௌட தேசம் என்றும்,
விந்தத்துக்குத் தெற்கே இருப்பது பஞ்ச திராவிட தேசம் என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதப் பேராசிரியர்
மாதவ தேஷ்பாண்டே (மிச்சிகன் பல்கலை) முன்பு ஒரு ஆய்வுக்கட்டுரை இதுபற்றி எழுதினார்.
அதில் ஹிந்துஸ்தானம் என்னும் நாட்டில் கௌடம்-திராவிடம் என்னும் தேசங்களின் வரைபடம் கொடுத்துள்ளார்.
இந்த வரைபடம் (1864) பாருங்கள்,
இதில், பஞ்சாப் (இப்போது பாகிஸ்தான், இந்தியா இரண்டு பஞ்சாப்) தென்னெல்லை. விந்தியமலை, வங்காளம் தென்னெல்லை
மீது எல்லைக்கோடு வரைந்தால் அதன் தெற்கே இருப்பது பஞ்ச திராவிட தேசம் ஆகும்.
அதாவது (1) சிந்து-கூர்ச்சரம் (2) மஹாராஷ்ட்ரம் (3) கர்நாடகம் (4) ஆந்திரம்-ஒரிசா (5) தமிழகம் (தமிழ்நாடு-கேரளா).
இவ்வைந்து தேசங்களும் பஞ்ச திராவிட தேசங்கள் என அறியப்பட்டன. தமிழ் > தமிட > த்ரமிட/த்ரவிட என்று
வடமொழியில் திரியும்.

பஞ்ச திராவிட தேசங்களில் இரும்புக்காலத்தில் (~1000 BCE - ~200 CE) பல ஒற்றுமைகள், உறவுகள்
சமூக, சமய அளவிலே காண்கிறோம். அதற்கெல்லாம், சங்க நூல்கள் ஒரு பாய்ண்ட்டர். கூடவே,
அக் கால பிறமொழி இந்திய இலக்கியங்களை, கலைகளை ஒப்புநோக்குதல் அவசியம் [1].
குஜராத்தில் இன்றும் அல்லியக்கூத்து, ஹல்லீசம் என்ற பெயரில் ஆடப்படுகிரது. கூர்ச்சர நாட்டு
அரசின் வலைத்தளம்: https://gujaratindia.gov.in/about-gujarat/hallisaka.htm
தண்டு என்னும் கோல். கோலாட்டம் தாண்டியம் என்று பழைய தமிழிசை நூல்களில் கூறப்படும்,
அதேபெயரில் தாண்டிய (கோல்) ஆட்டம்: https://www.youtube.com/watch?v=CgTw7_9eYkY
தாகூர் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது கூறினார்:
முகங்கள் மாறித் தெரிந்தாலும், இந்தியாவை எங்கும் காண்கிறேன் என்றார்.
அதுபோல், இந்தியாவில் உடைகள் மாறினாலும் பழைய கூத்தும், கலையும் சற்று மாறி ஆடுகின்றனர்.
ஓரங்க நாடகம். ஒரே அங்கம் கொண்ட நாடகம் என்கிறோம். அங்கம் என்னும் வடசொல்லைத்
தமிழில் உறுப்பு என அழகாக மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர் தமிழர்கள்.
தெய்வ விருத்தி என்னும் 11 ஆடலுக்கும் எத்தனை உறுப்புகள் என்று தமிழ் இசைநூல்கள் சொல்கின்றன.

தமிழ்ச் சங்க இலக்கியத்தில், சதி - கணவன் இறந்தபோது அச்சிதையில் மனைவி மாய்தல் -
கூறப்படுகிறது. குரங்குகள் கூட சதியால் இறக்கின்றன. பல பாடல்கள் உண்டு. அல்லியக்கூத்து
என்னும் 6 அங்கங்கள் கொண்ட கூத்தைக் கூறும் அதே கோவூர்கிழாரும் பாடியுள்ளார்.
பஞ்ச திராவிட தேசத்தில் பழைய சான்றுகள் அதிகம். கர்நாகாவில் மாசதிக்கல்லு என்பர்.
எல்லாவற்றிலும் “கை” வரையப்பட்டிருக்கும். கைம்மை என்னும் கையறுநிலை காட்டுவது.
குஜராத்தில் இந்த சதிக்கல்லு நாட்டி, ஒரு கோழியைத் திருகி எறிந்து பளியா என்பர்
என நாகசாமி எனக்குக் கூறினார். மீன், கை, கால் போன்ற சின்னங்கள் முக்கியமான
வாழ்க்கை அமிசங்களுக்குப் பயன்படுவதை, அதன் வரலாற்றை இங்கே படிக்கலாம்:
The widow dying by immolation when her husband dies is performed even by monkeys in Sangam Tamil.
This custom is known as sati, and the memorial stones (called as "thii-p-paayntaaL kallu", "maa-sati-kal" are
found in Tamil Nadu, Karnataka, ...) See the Rajasthan sati memorials. In all these sati stones, a palm of the
lady's hand is depicted and this "kai" (hand) seems to do with "kaimmai" (widowhood), "kaimpeN" (widow).
See the Sati memorial stone photio here.

Reference [1]-ல் ரிக்வேத வருணன் “மழுவாள் நெடியோன்” என சங்க நூல்கள் வணங்குவதும்,
அதன் தொல்லியல் வடிவமும் (~ 800 BCE) - Anthropomorphic Axe என்பர் ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் -
இதன் மிகச்சிறந்த வடிவம் குடிமல்லத்தில் வேதத்தின் வருணன் இருப்பதும், சிவ லிங்கங்களில்
மூத்தது இந்த லிங்கமே - எழுதியுள்ளேன். கி. பி. 2-ம் நூற்றாண்டில் காயாரோகணம்
என்னும் கார்வான் (குஜராத்) நகரில் நகுளீசர் (> லகுளீசர்) தோன்றுகிறார். அவர் பாசுபத சமயத்தை
தாபித்துப் பரப்புகிறார். மஹாவிரதியர், காபாலிக, காளாமுக பாசுபதர்களின் சமயங்கள்
இணைகின்றன. நீறுபூசி வெள்ளாளர் என்பாரும், சமண வெள்ளாளர் என்பாரும் இருந்துள்ளனர்.
மாவிரதியர் வழிபாடுகள் சுடலை வெண்பொடி பூசுதல், இது ஓர் ஈமச்சடங்கில்
நடைபெறுவதைக் காட்டும் பாடல் புறம் 249 ஆகும். தும்பி சேரகீரனார் இயற்றியது.
ஒவ்வொரு பாடலுக்கும் உயிர்நாடியான சொல் உண்டு. இப்பாட்டில் ஆய்நுதல் மடந்தை
“வரிநீறு” பூசுதல் பற்றி வருகிறது. ஊரார், உற்றார் கூடி மறைந்த தலைவனுக்கு
நடாத்தும் அஞ்சலி விழா. இந்த நீறுபூசுதல் இன்னொரு புறப்பாட்டிலும் உண்டு.
கலித்தொகையில், திரிபுரத்தை எரித்த நீறு ஆடும் சிவனைப் பற்றிப் பாடல் உண்டு,

ஒருவழிப்பட்டன்று;மன்னே!இன்றே,
10
அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,

உயர் நிலை உலகம் அவன்புக, வரிநீறு

ஆடு,  சுளகின் சீறிடம் நீக்கி,

அழுதல் ஆனாக் கண்ணள்,

மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே.

திணையும் துறையும் அவை.
ஆராயும் அழகு கொண்ட நெற்றியை உடைய மடந்தைப் பருவத்து அந்தப் பெண் நெற்றியில் வரிவரியாகத் தெரியும் திருநீறு பூசியவளாய் தரையில் முறம் அளவு பரப்பளவை சாணத்தால் (ஆப்பி) மெழுகினாள். அவள் அழும் கண்ணீரும் மெழுகும் சாணத்தில் விழுந்து தரையை மெழுகிக்கொண்டிருந்தது. (மெழுகிய அந்தத் தரையில் இட்டுத்தான் இன்று உணவு உண்ணப்போகிறாள்).
(இப்பாட்டில் இடையிலே, வரிநீறு என்பது லரிநீறு என அச்சுப்பிழை ஒருமுறை நேர்ந்துவிட்டது. அதனை எல்லா ஏடுகளையும் பார்த்த அறிஞர்குழு சரிசெய்து “வரிநீறு” என்று மீண்டும் கொணர்ந்தது.)

பஞ்ச திராவிட தேசத்தில் வடக்கும் தெற்கும் ஒரேமாதிரி இயங்கியுள்ளன சமய, சமூக பண்பாட்டில் எனத் தெரிகிறது.
எனவே, வரிநீறு பூசும் மரபு காட்டும் பாடலும் (புறம் 249), சதி என்னும் துயர நிகழ்வும், அல்லியம்/ஹல்லிசம் பற்றியும் பாடல்களை ஆராய்தல் அவசியம்.

அன்புடன்
நா. கணேசன்
(The PDF can be downloaded)

Shanmuga ananth

unread,
Apr 13, 2020, 2:28:35 AM4/13/20
to santhav...@googlegroups.com
திரு கணேசன் ஐயா,

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

அன்புடன்
சண்முகானந்தம்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 13, 2020, 7:37:15 PM4/13/20
to சந்தவசந்தம்


On Monday, April 13, 2020 at 1:28:35 AM UTC-5, Shanmuga ananth wrote:
திரு கணேசன் ஐயா,

தங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி.

அன்புடன்
சண்முகானந்தம்

பஞ்ச திராவிட தேசங்களின் நாகரீகம்  மெகாலித்திக் காலத்தில் சிந்துவெளி நாகரீகம் முடிந்த பின்னர்,
அங்கே கண்டுபிடித்த வானியல், சமய முன்னேற்றங்கள், வேளாண்மைத் தொழில்நுட்பங்கள்
எப்படி மாறுகிறது என ஆராய வடமொழிகளின் இலக்கியங்கள், அங்கே உள்ள கலைவரலாறு
(அப்போது தமிழ்நாட்டில் கலைகள் கல்லிலோ உலோகத்திலோ பெரிதாக உருவாகவில்லை),
தமிழ்ச் சங்க இலக்கியம் ஒப்பீடு மிக அவசியம் ஆகிறது. அவ்வகையில்தான் (1) அல்லியம்
(2)  சதி என்னும் தீப்பாஞ்சாள் வழக்கம் (3) திரிபுண்டரம் என்னும் வரிநீறு (பாசுபதம்) பற்றிய 3 சங்க
உதாரணங்கள் கொடுத்தேன்.

நகர் என்ற சொல் பெயர்ச்சொல்லாகத்தான் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது.
வினைச்சொல் இருக்காது. காரணம்: வடநாட்டில் இருந்து வந்த த்ராவிடச் சொல் இஃது.
அதன் மூலச் சொல் ஞெகிழ்தல் என்னும் வினைச்சொல். நெகிழ்தல், இதிலிருந்து
நகிளீசன் >> நகுளீசன் >> லகுளீசர் என மாற்றம் ஏற்பட்டது. நகுளீசன்/லகுளீச பாசுபதர்
சிவலிங்க வழிபாட்டை சைவத்தில் தாபித்தவர். https://en.wikipedia.org/wiki/Lakulisha
அவருக்கு முன், நகர்/நக்கர் என வழங்கிய லிங்க வழிபாடு ரிக்வேதக்
கடவுள் வருணனுக்கு இருந்தது. வருணன் இப்போது மறக்கப்பட்டுவிட்டான்.
முன்பு சங்ககாலத்தில் மழுவாள் நெடியோன். மதுரைக்காஞ்சி போன்றன கூறும் செய்தி.
நகுளீசர் என்ற சொல் ஆராய்ச்சி சைவத்தில் திராவிடமொழியின் அடித்தளம் காட்டும் ஒன்று.
அதற்கு ஆதாரமாக இரண்டு புறநானூறு பாடல்கள், கலித்தொகை உள்ளன.

நா. கணேசன் 

Shanmuga ananth

unread,
Apr 14, 2020, 3:54:22 AM4/14/20
to santhav...@googlegroups.com
திரு கணேசன் ஐயா,

பாலகிருஷ்ணன் (ஒரிசா மாநில தலைமை ஆலோசகர்) சொல்வது போன்று "சிந்து வெளி விட்ட இடம் சங்க இலக்கியம் தொட்ட இடம்" என்ற வாசகம் தங்களின் கட்டுரையைப் படித்த பின்னர் நினைவுக்கு வருகிறது. தங்களின் கூற்றுப்படி சங்க இலக்கியத்தின் வரிநீறு பாசுபதத்துடன் தொடர்புடையது, ஆனால் தாங்கள் பகிர்ந்த விக்கி பக்கத்தில் "At about the beginning of the 11th century, the Lakulisha cult shifted its activities to southern India" என்று ஒரு குறிப்பு. சங்க இலக்கியம் மற்றும் மேற்குறிப்பிட்ட கால அளவின் இடைவெளி மிக அதிகம். என் மனத்தில் எழுந்த ஐயத்தை போக்கிட தாங்கள் எடுத்தாண்ட சங்க இலக்கிய பாடலின் தோராயமான காலத்தையும் நகுளீசர் தோன்றிய காலமும் அறிய விரும்புகிறேன். மேலும் ‌சிந்து  முதல் தமிழகம் வரை ஒரேவிதமான பண்பாடும் கலையும் பரவியிருந்தன என தங்கள் கட்டுரை வாயிலாக அறிகிறேன் (இந்நிலப்பரப்புகள் த்ராவிட தேசங்கள் என்பதனால்).

அன்புடன்
சண்முகானந்தம்
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 14, 2020, 7:19:16 AM4/14/20
to Santhavasantham
On Tue, Apr 14, 2020 at 2:54 AM Shanmuga ananth <ananth....@gmail.com> wrote:
திரு கணேசன் ஐயா,

பாலகிருஷ்ணன் (ஒரிசா மாநில தலைமை ஆலோசகர்) சொல்வது போன்று "சிந்து வெளி விட்ட இடம் சங்க இலக்கியம் தொட்ட இடம்" என்ற வாசகம் தங்களின் கட்டுரையைப் படித்த பின்னர் நினைவுக்கு வருகிறது. தங்களின் கூற்றுப்படி சங்க இலக்கியத்தின் வரிநீறு பாசுபதத்துடன் தொடர்புடையது, ஆனால் தாங்கள் பகிர்ந்த விக்கி பக்கத்தில் "At about the beginning of the 11th century, the Lakulisha cult shifted its activities to southern India" என்று ஒரு குறிப்பு. சங்க இலக்கியம் மற்றும் மேற்குறிப்பிட்ட கால அளவின் இடைவெளி மிக அதிகம். என் மனத்தில் எழுந்த ஐயத்தை போக்கிட தாங்கள் எடுத்தாண்ட சங்க இலக்கிய பாடலின் தோராயமான காலத்தையும் நகுளீசர் தோன்றிய காலமும் அறிய விரும்புகிறேன். மேலும் ‌சிந்து  முதல் தமிழகம் வரை ஒரேவிதமான பண்பாடும் கலையும் பரவியிருந்தன என தங்கள் கட்டுரை வாயிலாக அறிகிறேன் (இந்நிலப்பரப்புகள் த்ராவிட தேசங்கள் என்பதனால்).

தவறான செய்தி லகுலீச பாசுபதம் தமிழ்நாட்டுக்கு 11-ம் நூற்றாண்டில் வந்ததென்பது.
தேவாரத்தில் உள்ளது பாசுபத சைவம். “வரிநீறு” என சங்க இலக்கியத்தில் உள்ள திருநீறு
முக்கியமான பங்கு வகிப்பது தேவாரத்தில் காணலாம். பொக்கணம் என்ற பையில் வெண்ணீறு
வைத்திருப்பர். விக்கியில், நகுலீசர் நான்கு சீடர்களுடன் இருக்கும் 6-ம் நூற்றாண்டு
சிற்பங்கள் கர்நாடகாலில் காட்டப்பட்டுள்ளது பாருங்கள். நகுலீசர் பிறப்பிடம்
காரோணம், காராணை என்றெல்லாம் தேவார காலத்தில் ஊர்ப்பெயர்கள் ஆகிவிட்டன.
அப்பர் பாசுபத சைவத்தை பரவியவர். முழு விவரங்கள் அறிய இரா. நாகசாமியின்
அப்பர் நூலைப் படிக்கவும். காஞ்சிப் பெரியவர் எழுதச் சொல்லி எழுதிய நூல்.

நா. கணேசன்
 

Reply all
Reply to author
Forward
0 new messages