“பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
நன்றி: தி இந்து - http://tamil.thehindu.com/general/literature/பெண்-வெறுப்பு-என்றொரு-நீண்ட-படலம்/article6136159.ece
தமிழில் தற்போது எழுதிவரும் ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாகப் பொருட்படுத்தக்கூடிய அளவில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்று சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியிருந்தார். அத்துடன், “பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பல வகை உத்திகள் மூலம் ஊடக பிம்பங்களாக ஆனவர்கள். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது. பெண்களுக்குப் பெண்களாகத் தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது” என்றும் கூறியது தமிழ் இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பெண் எழுத்தாளர்கள் சந்திக்கும் விமர்சனங்களை வரலாற்றுப்பூர்வமாக எழுத்தாளர் அம்பை இக்கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.
வெகு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் எழுத்தாளர் (ஆண் எழுத்தாளர்தான்!) ஒரு மூத்த ஆண் எழுத்தாளருக்கு எழுதிய கடிதத்தில் என் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். ‘அம்பையின் கதைகளைப் படிக்கும்போது அவர் உடல் ரீதியாகத் திருப்தியுறாதவர் என்று தெளிவாகத் தெரிகிறது’ என்ற தொனியில் அமைந்திருந்தது அவர் விமர்சனம். கருணை உள்ளம் கொண்ட அந்த மூத்த எழுத்தாளர், அந்தக் கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார் தன் கருத்தொன்றையும் கூறாமல். உடனே அந்தக் கடிதம் எழுதியவர் எழுதியிருந்த கதைத் தொகுப்பு ஒன்றைப் படித்தேன். தாங்க முடியவில்லை. ‘திருப்தியுற்றவர்கள் கதைகளின் தரம் இதுதான் என்றால், நல்லவேளை நான் திருப்தியுறவில்லை’ என்று தோன்றியது.
பெண் எழுத்து குறித்தும், பொதுவாகப் பெண்களைக் குறித்தும் இருக்கும் இந்த நோலாமை தமிழ் இலக்கிய விமர்சன மரபிலும், தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு தொடர் கண்ணியாக இருந்துவருகிறது. கல்வியை, உரிமைகளை, வெளிப்பாட்டுக்கான நியாயமான இடத்தைக் கோரும் பெண்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள், அந்தக் குறை பாடுதான் அவர்களை எல்லா வகையிலும் செயல்படத் தூண்டுகிறது என்ற எண்ணம் பல காலமாக இருந்துவருவதுதான்.
இந்தக் குறைகள்தான் என்ன? அழகின்மை, தோற்றப் பொலிவின்மை, ஓர் ஆணின் துணையின்மை, பெண்களுக்கு இருக்கக்கூடாத அதீத காம இச்சைகள் இவைதான் பெண்களை இயக்கும் அடிப்படையான குறைகள்/காரணங்கள் என்ற கருத்து தொடர்ந்து நிலவிவருகிறது. அத்தனையும் பெண் உடல் மேல் கட்டப்பட்டவை. இவை மட்டும் இல்லாதிருந்தால் பெண்ணின் செயல்பாடும் வெளிப்பாடும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்ற நோக்கு. பெண் மட்டும் ஆண்கள் உவகையுறும் “பெண் தன்மை” கொண்டவளாக இருந்திருந்தால் சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அவள் பங்கு வேறு வகைப்பட்டிருக்கும் என்ற கணிப்பு.
பாரதி எழுதிய விமர்சனம்
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஒரு முறை தி. ஜானகிராமனின் கதை ஒன்றைக் குறித்து குகப்ரியை விமர்சித்தபோது, “குகப்ரியை மாமி மடியாக எழுதுபவர்” என்று தி. ஜானகிராமன் பதிலளித்தார் என்று குகப்ரியை என்னிடம் குறிப்பிட்டதுண்டு. ஒரு பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசமான முறைகளில் எழுத்திலும் செயலிலும் என்னைக் கேவலப்படுத்திய பெரும் கவிஞர் கூறியதெல்லாம், இவள் சுதந்திரமானவள் அதனால் நடத்தை கெட்டவள் (நடத்தை கெட்டவள் எனக் குறிப்பிடும் பெண்கள் இத்தகையவர்கள் கணிப்பில் எப்படிப்பட்டவர்கள் என்ற விளக்கங்களை ஆராய்ச்சி செய்யப் பல பக்கங்களும் அசாத்தியப் பொறுமையும் வேண்டும்) என்பதுதான். சமீபகாலத்தில், திருமணம் செய்துகொள்ளாத அல்லது தனிப் பெண்ணாக வாழும் பெண் எழுத்தாளர்களை “உய்விக்க” வரும் சில ஆண் எழுத்தாளர்கள் வைக்கும் முதல் கட்டுப்பாடு இலக்கியக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது, கவிதைகள் எழுதக் கூடாது என்பதுதான். ஓர் ஆணின் மேலான துணை கிடைத்த பின் ஒரு பெண்ணுக்கு இவை எல்லாம் தேவையா என்ன? இப்படி உய்விக்கப்பட ஆதரவு தராத பெண்களுக்கு ஊடகங்களிலோ வேறு எங்காவதோ வேலை கிடைத்துவிட்டால் தொலைபேசியில் இரவு கூப்பிட்டு “யாருடன் உறவு கொண்டதால் (அவர்கள் இதற்கு உபயோகிக்கும் விரசமான மொழி வேறு) இந்த வேலை கிடைத்தது?” என்று கேட்கும் ஆண் எழுத்தாளர்களையும், தொடர்ந்து இரவில் தொலைபேசியில் கூப்பிட்டு, விரசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் பேசுவதால் இரவு வேளைகளில் தொலைபேசித் தொடர்பையே துண்டித்துவிடும், அஞ்சலட்டைகளில் அருவருக்கத்தக்க படங்களை சிலர் வரைந்து அனுப்பித் தொடர்ந்து செய்யும் இம்சைகளால் வீட்டையே மாற்றிய பெண் எழுத்தாளர்களையும் எனக்குத் தெரியும். இவற்றை எல்லாம் பார்க்கும்போதும், இது குறித்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும்போதும், சமீபத்தில் பெண் எழுத்து மற்றும் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை நோக்கும்போதும், பெண் வெறுப்பு என்பது எவ்வளவு தீவிரமான, இன்னும் பெயரிடப்படாத மனநோய் என்பது தெரிகிறது.
இலக்கிய உலகில் பெண்ணுக்கு அளிக்கப்படும் இடம் எந்த வகையிலும் ஆணின் இடத்தைக் குலைக்கக் கூடாது, அது இரண்டாம் நிலையிலேயே இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தொடர்ந்து இருக்கும் ஒன்றுதான். ராஜம் கிருஷ்ணனின் மலர்கள் நாவலுக்கும், ஜெகச்சிற்பியனின் திருச்சிற்றம்பலம் நாவலுக்கும் முதல் பரிசு ஆனந்த விகடனில் பகிர்ந்து அளிக்கப்பட்டபோது, அவை தொடர்களாக ஆனந்த விகடனில் வெளிவரத் தொடங்கின. தாயற்று, தான் வளரும் உறவுக்காரர்களின் குடும்பத்தில் சிறுமைபடுத்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையால் வாடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதையாகப் பல பக்கங்கள் கொண்ட நாவல் மலர்கள். திருச்சிற்றம்பலம் நாவலைவிட மிகப் பெரியது. மலர்கள் நாவலில் பாதிகூட முடிந்திராதபோது ராஜம் கிருஷ்ணனுக்குக் கடிதம் போயிற்று, ஜெகச்சிற்பியனின் நாவல் தொடர் இன்னும் ஓர் அத்தியாயத்துடன் முடிவதால் மலர்கள் நாவலையும் அடுத்த ஓர் அத்தியாயத்துடன் முடிக்கும்படி. ஒரே பரிசு பெற்ற ஓர் ஆண் எழுத்தாளரின் நாவல் முடியும்போது பெண் எழுத்தாளரின் நாவல் தொடர்ந்து வருவது அவரை அவமானப் படுத்துவதாகும் என்ற நோக்கில் எழுதப்பட்ட கடிதம். சென்னைக்கு வெளியே இருந்த ராஜம் கிருஷ்ணன் விரைந்து வந்து நாவலைத் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரான, கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜகந்நாதனை அணுகி, தனக்கு நியாயம் கிடைக்கும்படிச் செய்யக் கோரினார். கி.வா.ஜ. எடுத்துக் கூறிய பின்தான் மலர்கள் தொடர்ந்து தொடராக வந்தது.
பெண்களின் பொறுப்பு?
நாற்பதுகளில் குமுதினி திவான் மகள் நாவலை எழுதியபோது அதை வெளியிடப் பத்திரிகைகள் முன்வரவில்லை. காரணம் அதில் கலப்புத் திருமணம் இருந்தது. பிறகு அது தொடராக மணிக்கொடியில் வெளிவந்தது. ஒரு பிரபல பதிப்பாளர் ஒரு முறை ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது, என் பேராசிரியரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் அங்கே இருந்ததால் என்னைப் பேராசிரியர் அறிமுகப்படுத்தியபோது, சம்பிரதாயத்துக்கு என்னையும் எழுதும்படிக் கூறி, என் எழுத்துக்களை வெளியிட ஆர்வமிருப்பதாகக் கூறினார். கூறிய உடனேயே நம் பண்பாட்டைக் குலைக்காமல் எழுதும் எதையும் தான் வெளியிடத் தயார் என்று சேர்த்துக்கொண்டார். என் எழுத்து பண்பாட்டைக் குலைப்பது என்ற முடிவுக்கு அவர் முதலிலேயே வந்திருந்தார் என்பது தவிர, பண்பாட்டை நிலைநிறுத்துவது பெண்களின் பொறுப்பு என்ற கருத்தும், பண்பாட்டுக்கான விளக்கம் ஒன்றும் அவரிடம் இருந்தது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவர் வெளியிடக்கூடிய புத்தகங்களை நான் எழுதவில்லை என்பது வேறு விஷயம்.
எழுத்துக்கான மரியாதை
எழுத்தை அதன் இலக்கியத் தன்மை கொண்டு அளந்த நல்ல கணங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்திருக்கின்றன. கௌரி அம்மாள் எழுதிய கடிவாளம் நாவலுக்கு வ.ரா. முன்னுரை எழுதினார். மங்கை என்ற பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த குகப்ரியைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. குமுதினி, சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள், ராஜம் கிருஷ்ணன், குகப்ரியை, அநுத்தமா, ஆர். சூடாமணி போன்ற எழுத்தாளர்களின் நாவல்களையும் கதைகளையும் மட்டுமல்ல, அவர்கள் ஆங்கிலத்திலிருந்து செய்த பல மொழிபெயர்ப்புகளையும் வெளியிட கலைமகள் போன்ற பத்திரிகைகள் முன் வந்தன. குமுதினி போன்ற எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கியத்துடன் நல்ல பரிச்சயம் இருந்ததுடன் மொழிபெயர்ப்பின் அவசியத்தையும் நன்கு உணர்ந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆங்கில இலக்கியத் தின் பல நல்ல எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சூடாமணி. எந்த வித சமரசமும் செய்துகொள்ளாமல் எழுதியவர். அப்படி எழுத என்னைத் தூண்டியவர். பல ஆண் எழுத்தாளர்கள் தீபாவளிக் கதைகளை தீபாவளி மலர்களுக்கும், அரைப் பக்க ஒரு பக்கக் கதைகள், மோதிரக் கதைகள் என்று மற்ற பத்திரிகைகளுக்கும் எழுதிக் குவித்துக் கொண்டிருந்தபோது தனக்குப் பிடித்ததை மட்டும் எழுதியதுடன், என் கவனத்தைச் சிறப்பான இலக்கியத்தின்பால் திருப்பியவர்.
இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!
பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார்.

திரிப்பு.இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது. "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன். அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது. இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906
.jpg?part=0.1&view=1)
பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.அது அம்பை கூறியது. இந்து பத்திரிக்கையில் பதியலாம்
பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.
'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது. நன்றி.
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி...... தேமொழி
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
அடடா ... திரு. ஹரிகி ...!!!!இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...
அது உங்களுக்குச் சொன்ன பதில். தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.
நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
..... தேமொழி
2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
..... தேமொழிஎன்பதற்கான மறுமொழி அது. பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.உங்களை எதுவுமே சொல்லவில்லை. மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.
இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
விவாகமற்றவர்கள் என்பதை பாரதி சொல்லாமல் இருந்து இருக்கலாம். அதனால்தான் புரளிசெய்கிறர்கள் என்பது தொனிக்கிறதே.
இத்தனைக்கும் இது உங்கள் எழுத்து மீதான விமர்சனமும் இல்லையே. அம்பையை நோக்கியது அன்றோ.
அழகான பதில். அண்ணாகண்ணன் அவர்களின் தெளிவான கருத்தை முழுமையாக வரவேற்கிறேன்.
ஹரிகி ஐயா தலைசிறந்த பாரதியிலாளர். பாரதியின் கருத்துக்களைத் தவறாகச் சுட்டிக்காட்டினால் அவர்கள் யாராக இருந்தாலும் பொறுத்துக்கொள்ளமாட்டார் பொங்கி எழுந்துவிடுவார்.
உயர் திரு ஹரிகி அவர்க்ளுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு ஆறுதல் சொல்வோம்
1906ல் இந்தியாவில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. மன்னராட்சிதான் உலகெங்கும் நிலவி வந்தது. அன்று இருந்த சட்டசபை, பார்லிமெண்ட் எல்லாம் அதிகாரமற்ற ப்ரிட்டிஷ் அரசுக்கு கட்டுப்பட்ட அடிமை அமைப்பு. ரஷ்ய பாராளுமன்றம் இப்படி மன்னனுக்கு கட்டுபட்டிருந்த காலத்தில் தான் லெனின் "பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்" என கடிந்தார்.இந்த சூழலில் பெண்கள் அரசியலில் இறங்குவதை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சதியின் ஒரு பகுதியாக பாரதி கருதியதில் வியப்பில்லை. அதிகாரமற்ற அமைப்பில் பெண்களுக்கு பதவி கொடுக்கிறோம் என்பது குச்சிமிட்டாயை காட்டி இந்தியர்களை ஏய்க்கும் வேலையே ஆகும்.
முனைவர் தேமொழி, என்ன ஆயிற்று உங்களுக்கு?
நீங்கள் பகிர்ந்த கட்டுரையில் உள்ள பிழையை அதே இழையில் குறிப்பிடுவதில் என்ன தவறு? உறுப்பினர்களின் பார்வைக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தானே பகிர்கிறோம். தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அதற்கு நாம் நன்றியல்லவா தெரிவிக்க வேண்டும்?உம்மைக் கேட்டேனா? உம் புத்தகத்துக்கு இங்கே விளம்பரமா? அறிவைக் காட்டுகிறீர்களா? இழையின் நோக்கம் தெரியாதா? எனக் கடுஞ்சொற்களை இறைத்துவிட்டீர்களே. சான்றோர்கள் உரையாடும் விதமா, இது?இத்தனைக்கும் இது உங்கள் எழுத்து மீதான விமர்சனமும் இல்லையே. அம்பையை நோக்கியது அன்றோ.கண்முன்னே கண்ட செய்தி குறித்து ஆராய்ந்து, புத்தகத்தைத் தேடி, பக்கத்தை ஒளிவருடி, நம் பார்வைக்கு ஆதாரத்துடன் சமர்ப்பித்த ஒருவருக்கு இப்படியா எதிர்வினை ஆற்றுவது?அறிவைக் காட்டுவதற்கு ஹரிகி அவர்களுக்கு எத்தனையா இடங்கள் உண்டு. இந்த இழையில் அதை நிலைநாட்ட வேண்டிய தேவை அவருக்கு இல்லை. நல்லறிவை ஒருவர் காட்டுவதும் நன்மை பயப்பதுவே. அறிவே தெய்வம் என்பது பாரதி கூற்று.இழையின் நோக்கத்திலிருந்து திசை மாறுவதை எவ்வளவோ இழைகளில் பார்த்திருக்கிறோம். அதற்காக, அதில் உள்ள தவறுகளைச் சுட்டாமல் இருக்க முடியாது. அவ்வாறு விடுவது, அது சரி என்ற எண்ணத்தை உருவாக்குவதோடு, தேடுபொறிகளில் மீண்டும் மீண்டும் அதே தவறு முன்னிறுத்தப்படவும் கூடும்.
அங்கேயே அவருக்கு மறுமொழி இடவும் வாய்ப்புள்ளது
உங்கள் கருத்துகளை அங்கேயே பதிந்து அவர் கவனத்திற்கு இந்தப் பிழையைக் கொண்டு செல்லலாமே ....
On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
என்பதற்குதான் நான் மறுமொழி அளித்துள்ளேன் என்பதைக் கவனிக்கவும். அதே வரிசையில் நான் மீண்டும் பதிகிறேன்... என் கோணம் உங்களுக்குப் புரியும்.
ஆனால் கிர்ஷ்ணகுமார் பதிவில் நீங்களும் அமைதி காத்த காரணத்தைக் கூற விருப்பமுள்ளதா? எனக்கு பதில் தெரிந்து கொள்ள விருப்பமுள்ளது.
அவருக்கு எனது பதில் பற்றிய முறை பற்றிய விமர்சனமும் வரவேற்கப்படுகிறது.
2016-02-25 5:54 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல. சக்ரவர்த்தினி பத்திரிகையில் பாரதியார் 1906-ல் பெண்கள் அரசியல் உரிமை கோருவதைப் பற்றி எழுதும்போது, இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
திரிப்பு.
இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது. "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன். அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது. இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906
பெண் விடுதலை, பெண்ணுரிமை என்று பேசியவனை போற போக்குல நாலு சாத்தாவிட்டா அடங்குமா பின்ன? 1906 கட்டுரையெல்லாம் யாருக்கு நினைவிருக்கப் போகிறது, இல்லையா?
நன்று....இதுதான் குட்டி ரேவதியின் பதிவு இருக்கும் பக்கம் ...
அங்கேயே அவருக்கு மறுமொழி இடவும் வாய்ப்புள்ளதுஉங்கள் கருத்துகளை அங்கேயே பதிந்து அவர் கவனத்திற்கு இந்தப் பிழையைக் கொண்டு செல்லலாமே ....
உங்கள் எழுத்தை நான் "காப்பி அடித்து" அங்கு போட்டால் உங்களது "கருத்தைத் திருடும் முயற்சி" என அது அமையாதோ !!!மேலும் எனக்கு அடுத்தவர் கருத்தை வெட்டி ஒட்டி எழுதி வாழ்க்கை நடத்த வேண்டியத் தேவையும் இல்லை.
என் கோணம் உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். திரு. ஹரிகி.பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.
பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.
அது அம்பை கூறியது. இந்து பத்திரிக்கையில் பதியலாம்.
2016-02-25 9:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திரிப்பு.
இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது. "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன். அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது. இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?
பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906
இந்தப் பகுதி இன்னும் சற்று விரிவாக--சீனி விசுவநாதன் பதிப்பிலிருந்து. (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி 1)
பெண்களுக்கு சுதந்திரம் என்பது ஆண்கள் கொடுத்துப் பெறும் ஒரு விஷயமில்லை என்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.
சம்பந்தப்பட்ட பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, 'இவர்கள் திருமணமாகதவர்கள்' என்று சொல்லவில்லை; மாறாக திருமணமற்றவர்கள் என்று சொல்லியிருக்கிறான். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சுயசரிதை எனப்படும் 'கனவு' தொடர்நிலைப் பாடலில் விடுதலைக் காதல் என்றொரு கருத்தை விமரிசிக்கிறான். Free love என்ற பெயரில் நடந்த இயக்கத்தைப் பற்றியது இது. இதைப்பற்றிக் கண்டபடி விமரிசிக்கிறார்கள். இப்படித்தான் பாரதியுடைய இந்த 'திருமணமற்றவர்கள்' என்ற குறிப்பை 'திருமணம் ஆகாதவர்கள்' என்று திரித்து, அழகற்றவர்கள் என்ற வார்த்தையை நுழைத்து இது பேசப்பட்டுள்ளது. திருமணமற்றவர்கள் என்றால்? அதான் இருக்கவே இருக்கே தேடுபொறி ஆராய்ச்சி. நடத்திட்டா போவுது.
பாரதி கவிதை கட்டுரைகளைப் படித்தவர்கள் இன்னமும் செத்துப் போய்விடவில்லை.
2016-02-25 9:50 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:பிழையாகக் குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன்.அது அம்பை கூறியது. இந்து பத்திரிக்கையில் பதியலாம்
தேவையில்லை. இங்கே சொன்னது போதும்.பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது. நன்றி. நவீன பெண்ணியத்தின் தன்மை நன்றாகவே வெளிப்படுகிறது.
On Wednesday, February 24, 2016 at 9:18:40 PM UTC-8, Hari wrote:
'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது. நன்றி.
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
..... தேமொழி
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
On 25 February 2016 at 10:57, தேமொழி <jsthe...@gmail.com> wrote:புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி...... தேமொழிபொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
அடடா ... திரு. ஹரிகி ...!!!!இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...
2016-02-25 11:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:அடடா ... திரு. ஹரிகி ...!!!!இது உங்கள் பாஞ்சாலி சபதம் நூல் விற்பனைக்கான விளம்பரம் வழங்கும் இழையல்லவே!இழையின் நோக்கம் புரிய வேண்டும் என்றால் மீண்டும் படிக்கவும்.... முதலில் இருந்து...
அது உங்களுக்குச் சொன்ன பதில். தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.
On Wednesday, February 24, 2016 at 9:49:59 PM UTC-8, Hari wrote:
அது உங்களுக்குச் சொன்ன பதில். தேவையில்லாமல் என்மீது தனிமனிதத் தாக்குதல் நடத்தி கேலி பேசுவதைத் தவிர்க்கவும்.
நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!
நான் பெண் எழுத்தாளர்கள் பற்றிய சமூகவியல் கட்டுரைகளையல்லவா பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!!!!அதற்கு இடையிடையில் தென்பட்ட உங்கள் பதிவுகளைப் பார்த்த பொழுது, நீங்கள் உங்கள் பாரதி பற்றிய அறிவின் மேலாண்மையைக் காட்ட வாய்ப்பு எடுத்துக் கொள்வதாகத்தான் தோன்றுகிறது.வேண்டுமானால் திரு. காளைராசன் கைம்பெண் இழையில் பாரதி பற்றி ஏதோ தெரிய வேண்டும் என்றார். அவருக்கு உதவலாமே.எனக்கு ஏதேனும் பாரதி பற்றிய கேள்விகள் இருப்பின் உங்களைத் தொடர்பு கொள்வேன்.நன்றி.
2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
..... தேமொழி
என்பதற்கான மறுமொழி அது. பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.
உங்களை எதுவுமே சொல்லவில்லை. மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.
இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.
On Wednesday, February 24, 2016 at 10:08:58 PM UTC-8, Hari wrote:
2016-02-25 11:32 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:நான் உங்களிடம் கேள்வி எதுவும் கேட்ட நினைவில்லையே !!!!!!நான் கேட்காத கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் தனிமனிதப் பாராட்டில் அடங்குமோ!!!!
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
..... தேமொழி
என்பதற்கான மறுமொழி அது. பதில் என்றால் மறுமொழி என்றும் பொருள்.
உங்களை எதுவுமே சொல்லவில்லை. மாறாக நீங்கள் இட்ட பதிவில் உள்ள பிழையான கருத்தைச் சுட்டினால் உங்களால் தாளமுடியவில்லை என்பது விளங்குகிறது.
இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். இதற்குமேல் என்னிடமிருந்து இது சம்பந்தமாக எதுவும் வராது.
ஒத்துழைப்பிற்கு நன்றி, இம்முடிவை வரவேற்கிறேன்.
அன்புமிகு தேமொழி,
பாஞ்சாலி சபதப் பாடல், உங்களுக்கு எந்த வகையில் பொருந்துவதாகக் கருதினீர்கள்?
அம்பையும் கூட இது பொய் எனத் தெரிந்து எழுதியிருக்க மாட்டார். எங்கோ, யாரோ அரைகுறையாக எழுதியதை ஆராயாமல் வழிமொழிந்திருக்கலாம்.
உங்களைக் குறிப்பதாகக் கருதினால், ஹரிகியிடம் நேராக விளக்கம் கேட்டிருக்கலாமே. பிரச்சினை அங்கேயே முடிந்திருக்கும்.
இதற்கு முந்தைய தாள முடியவில்லை / நக்கல்தான் என்ற ஒப்புலையும் தவிர்த்து இருக்கலாம்.
ஹரிகி இது வேண்டுமென்றே சொல்லப்பட்ட பொய் எனக் கருதுவதாகத் தெரிகிறது. அந்த முடிவிற்கு வரும் முன்பு, அம்பையிடம் விளக்கம் கோருவது சரியாய் இருக்கும். அம்பை, முகநூலில் என் நண்பர். முடிந்தால், அவரது மின்னஞ்சல் முகவரியைப் பெற்று, இந்த இழையில் இணைக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் கிருஷ்ண குமார் இழையை நான் இன்னும் படிக்கவில்லை. என் மடல் பெட்டி நிரம்பி வழிகிறது. அன்றாடம் சேரும் புதிய மடல்களின் தலைப்பை மட்டும் படிக்கிறேன். எல்லா இழைகளையும் / மடல்களையும் திறந்து படிப்பதில்லை. நான் அவசியம் படிக்க வேண்டும் எனக் கருதும் இழைகளை எனக்குத் தனி மடலில் சுட்டினால் தவற விடாமல் படிக்க முயல்வேன்.
இப்போது கைப்பேசியில் இதை எழுதுவதால், பிறகு மடிக்கணினிக்குச் செல்லும்போது அந்த இழையைப் படித்துக் கருத்து எழுதுவேன்.
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. நாம் அனைவரும் எப்போதும் நண்பர்கள். அன்பே நம் வழி. பேதம் விலக்கி, நேசம் வளர்ப்போம்.

தேவையில்லாமல் என்னை நக்கலடித்தார். நக்கல்தானா என்று தெரிந்துகொள்வதற்காகக் கேட்டதற்கு,
On Wednesday, February 24, 2016 at 9:18:40 PM UTC-8, Hari wrote:
'தாளமுடியவில்லை' என்பதிலுள்ள நக்கல் புரிகிறது. நன்றி.
புரிந்ததில் மகிழ்ச்சி... வேண்டுவதும் அதுவே. நன்றி.
..... தேமொழி
என்று தான் நக்கல்தான் அடிப்பதாக உறுதி செய்தார்.
நான் சொன்ன பதில், தேமொழி பொய்யுரைக்கிறார் என்று பொருள்படவில்லை. அந்த எழுத்தாளர் பொய்யாகச் சொல்கிறார், நக்கலடிக்க வேண்டுமானால் அவரையல்லவா அடிக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு என்னை நக்கலடிப்பானேன் என்ற பொருள்படுவது. உங்களால் சரியாகப் புரிந்தகொள்ள முடியும்போது, நான் எழுதியதை அவர்கள் இப்படிப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. 'ஆமாம் நான் உன்னை நக்கல்தான் அடிக்கிறேன்' என்று வெளிப்படையாகச் சொன்னபோதுகூட நான் அவரை எதுவும் சொல்லவில்லை. அவர் ஏதோ பதற்றத்தில் இருக்கிறார் என்று விட்டுவிட்டேன்.தேமொழியை நான் பொய்யுரைப்பதாகச் சொல்லவில்லை. எனக்கது தேவையுமில்லை. எனக்குத் தெரிந்து அவர் எந்தப் பொய்யையும் சொல்லவில்லை. எனக்குத் தெரியாத ஒன்றைக் குற்றச்சாட்டாகவோ, வேறு ஏதேனுமாகவோ சொல்லும் வழக்கம் எனக்கில்லை.
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
பாரதியின் மீது ஏற்றப்படும் அவதூறைத் தாளமுடியவில்லை என்றால் குட்டி ரேவதியின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்.
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
என்று என்னை மறைமுகமாக நையாண்டி செய்யவும்...இது பாஞ்சாலி சபதம் உரை நூல் விளம்பர இழை அல்ல என்று
வலியுறுத்திவிட்டு உறங்க சென்றுவிட்டேன்.
-----
காலையில் வந்து பார்த்தால் எல்லோரும் தோசையைத் திருப்பிப் போட்டு ...
நான் யார் யாரெல்லாம் ஒருங்கிணைந்து இதில் ஈடுபடுகிறார்கள் என்று எண்ணினேனோ அத்தனை பேரும் ஒன்றாக வல்லமை இழையில் ஒருவர் மாற்றி ஒருவர் எனக்கு எதிராக குற்றங்களை அடுக்கிக் கொண்டு ...
என்னை நையாண்டி செய்பவர்களுக்கு ஆதரவும் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்..
அதையும் விடக் கொடுமை ...
நான் யாரை தாளமுடியவில்லை என்று சொன்னதை நக்கல் புரிந்தது என்று சொன்னாரோ...
"அவர் நுழைத்த" 'நக்கல்' வார்த்தையை அவரை நோக்கி நான் சொன்னதாகவும் புரட்டு ...புரட்டு...திசை திருப்பல்.
ஹரிகி எந்த நோக்குடன்
பொய்யு ரைத்து வாழ்வார் - இதழில்
புகழு ரைத்து வாழ்வார்
வைய மீதி லுள்ளார் - அவர்தம்
வழியில் வந்த துண்டோ?
என்று கிண்டல் செய்தாரோ
அதை நான் தவறாகப் புரிந்து கொண்டேனாம். அவர் அம்பையை சொன்னாராம். இப்படியும் ஒரு விளக்கம் .
https://groups.google.com/d/msg/vallamai/WTEpPv5RktI/ZPL_wH_PAwAJ
படிப்பவர்களுக்கு எளிமையாகப் புரியும்படிதான் எழுதியுள்ளாரே ... பிறகென்ன உரை வேண்டியிருக்கிறது. அதுவும் பாரதியின் பாடலுக்கு.
என் மேல் கண்டனம் எழுப்பிக் கொண்டு களை கட்டுகிறது இந்த இழை.
அடுத்த அப்டேட்... விரைவில் தொடரும்......
இதைஎல்லாம் நான் ஆவணப்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன்.
பிற்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் உதவும்...
அல்லது...
எதிர்காலத்தில் தமிழ் தெரிந்தவர் இந்த நிகழ்வுகளைப் படித்து எவ்வாறு
பிராமண எதிர்ப்பு என்ற மறுப்பு கருத்திற்காக எழுத்தாளர்கள் மீது அவதூறுகள் வீசப்பட்டன என்பதை தெரிந்து கொள்ளும் வரலாற்றுப் பதிவாகவும் அமையும்...
தொடர்வோம்... விரைவில்...
அதை நான் தவறாகப் புரிந்து கொண்டேனாம். அவர் அம்பையை சொன்னாராம். இப்படியும் ஒரு விளக்கம் .
https://groups.google.com/d/msg/vallamai/WTEpPv5RktI/ZPL_wH_PAwAJ
தயவு செய்து வார்த்தைகளை அளவுக்கு மீறி கொட்டி மிகைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஹைலைட் செய்துக் காண்பித்தால் ... அது எனக்கு உதவும்.
அதில் பேராசிரியர்சகட்டு மேனிக்கு வெட்டி ஒட்டி நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால்என்று எழுதினார் ... அதை நான் கண்டு கொள்ளவில்லை.
சக்கரவர்த்தினி கட்டுரைகள், பக்கம்: 83:”இந்த ராஜாங்க சுதந்திரங்களுக்குள்ளே எவையும் அம் மாதர்களுக்குக் கொடுக்கப்படவும் இல்லை. அதன் காரணத்தை யோசிப்போம். இந்தக் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தமல்ல. இந்தியாவிலே சில புருஷர்கள் சத்தமிடுவதுபோல வெறும் கிளிச்சத்தம் போடுகிறார்கள். அந்த மாதர்கள் அழகில்லாமையாலும் வேறு பல காரணங்களாலும் தக்கபடி விவாகப்பேறு முதலியவை அடையாதவர்களாகி, யாரோ சில புருஷர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு ”சுதந்திரம், சுதந்திரம் என்று கூறுகிறார்களே யல்லாமல் அவர்கள் மனதுடன் அவ்வாறு சொல்லவில்லை. வீட்டிலிருந்து தனது குழந்தைகள் முன்னுக்கு வரவேண்டுமென்ற ஆவலுடன், அந்தக் குழந்தைகளுக்குக் கல்விப்பயிற்சி, ஆண்மை கற்பித்துக் கிரகத் தலைவியாக மகிழ்ந்திருக்கும் ஸ்திரீ பார்லிமெண்ட் மெம்பர் வேலையின் பொருட்டு ஜாஸ்தியாகச் சிரமப்படமாட்டா ளல்லவா?எனவே, ராஜாங்க சுதந்திரங்கள் ஸ்திரீகளுக்கு வெகு முக்கியமானவை அல்ல...”
2016-02-25 9:27 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
திரிப்பு.
இங்கிலாந்தில் அந்தச் சமயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விவகாரங்களைப் பற்றிச் சொன்னது அது. அந்தச் சமயத்தில் இங்கிலாந்தில் சில பெண்கள் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் திருமணமாகதவர்கள் என்ற குறிப்பு இருக்கிறது. "இத்தகைய உரிமைகளைக் கோரும் பெண்கள் அழகற்றவர்கள்" என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? குறிப்பிட்ட பகுதியை இணைத்திருக்கிறேன். அந்தச் சமயத்தில் குழப்பத்தை விளைவித்து புரளிகளைக் கிளப்பிய பெண்களைப் பற்றிய குறிப்பு அது. இந்த உரிமைகளைக் கோரும் எல்லாப் பெண்களும் அழகற்றவர்கள் என்று எங்கே இருக்கிறது?
பாரதி கட்டுரை: மாதர்களின் சுதந்திரங்கள், சக்ரவர்த்தினி ஜூன் 1906
இந்தப் பகுதி இன்னும் சற்று விரிவாக--சீனி விசுவநாதன் பதிப்பிலிருந்து. (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் தொகுதி 1)
பெண்களுக்கு சுதந்திரம் என்பது ஆண்கள் கொடுத்துப் பெறும் ஒரு விஷயமில்லை என்று மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறான்.
சம்பந்தப்பட்ட பெண்களைப்பற்றிச் சொல்லும்போது, 'இவர்கள் திருமணமாகதவர்கள்' என்று சொல்லவில்லை; மாறாக திருமணமற்றவர்கள் என்று சொல்லியிருக்கிறான். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. சுயசரிதை எனப்படும் 'கனவு' தொடர்நிலைப் பாடலில் விடுதலைக் காதல் என்றொரு கருத்தை விமரிசிக்கிறான். Free love என்ற பெயரில் நடந்த இயக்கத்தைப் பற்றியது இது. இதைப்பற்றிக் கண்டபடி விமரிசிக்கிறார்கள். இப்படித்தான் பாரதியுடைய இந்த 'திருமணமற்றவர்கள்' என்ற குறிப்பை 'திருமணம் ஆகாதவர்கள்' என்று திரித்து, அழகற்றவர்கள் என்ற வார்த்தையை நுழைத்து இது பேசப்பட்டுள்ளது. திருமணமற்றவர்கள் என்றால்? அதான் இருக்கவே இருக்கே தேடுபொறி ஆராய்ச்சி. நடத்திட்டா போவுது.பாரதி கவிதை கட்டுரைகளைப் படித்தவர்கள் இன்னமும் செத்துப் போய்விடவில்லை.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
2016 -ல் நிகழும் சமுதாய நிகழ்வுகளுக்கு 1906 -ல் எழுதப்பட்ட கருத்தை அவுட் ஆஃப் கான்டெக்ச்டாக வெளியிடுவது பொருத்தமற்றது என்பது என் காத்துட்டுக் கருத்து.
தமிழ்நாட்டைவிட்டு வெளியே வாழ்ந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பும் முன் கல்கத்தாவில் சகோ.நிவேதிதாவைச் சந்தித்து தமிழ்நாட்டுப் பெண்களின் நலனில் அக்கறைகொள்ளவேண்டும் என்ற அவரின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்ட ஒருவரை இன்றைய பெண்களின் அவலத்துக்குத் துணைபோனவர்களில் ஒருவர் என்று மேற்கோளாகக் காட்டுவது சரியானதா? ஆங்கில உலகில் மேலைநாட்டில் உருவாகும் புதுக்கருத்துக்களை ஆங்கிலம் அறியாத தமிழில் அதிகம் கற்காத தமிழர்களுக்குக் கொண்டுசெல்ல உருவாக்கப்பட்ட சுதேசமித்திரனில் மேலைநாட்டுக் கருத்துக்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து எழுதப் பணியேற்றுக்கொண்டவர் பாரதியார். சுதேசமித்திரனில் தான் விரும்பும் வண்ணம் கருத்தை வெளியிட வாய்ப்பில்லாத நிலையில் பெண்களுக்கென்றே தொடங்கப்பட்ட பத்திரிக்கையில் ஆசிரியராகப் பொறுப்பேற்றவர் பெண்களைத் தவறான நோக்கில் எழுத என்ன முகாந்திரம் உள்ளது?தன்னுடைய தொழில் என்ன என்று கேட்டபோது தான் ஒரு இதழியலாளர் என்று கையெழுத்திட்ட ஒருவர் மேலைநாட்டுத் தகவல்களை உடனுக்குடன் பெற்று அதில் பொறுத்தமானவற்றைத் தமிழில் எழுதியவருக்கு உள்நோக்கம் கற்பிப்பது நீதியா? அன்னிபெசன்ட் அம்மையாரை அவர் எதிர்த்த அளவுக்கு யாரும் எதிர்த்திருப்பார்களா என்று ஐயுறும் அளவில் எதிர்த்தும் அவர் பெண்மையைக் குறைகூறும் எந்தத் தாக்குதலையும் பயன்படுத்தாதவர் என்ற நிலையில் அவரை மற்ற சராசரி ஆண் படைப்பாளர்களில் ஒருவர் அதே குட்டையில் ஊறிய மட்டை என்று கருதுவது பாரதிக்குச் செய்யும் அநீதி ஆகாதோ?பாரதியை முறையாக ஆய்வுசெய்து கருத்துச் சொல்லாமல் யார் எழுதினாலும் அந்த எழுத்தை யார் மேற்கோள் காட்டினாலும் அது பாரதியை இழிவுபடுத்துவதாகும். பாரதியாரின் கவிதையில் நாட்டுப்பற்றில் ஐயப்பாடுகொள்ளாத பெரியார் ஆரியத்தைப் போற்றினார் என்ற குற்றச் சாட்டைச் சுமத்தி பாரதியாரை இகழ்ந்ததுபோல் இப்போது தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிக்ளுக்கு பாரதியைப் பற்றித் தவறான கருத்துக்களை வெளியிடுவது ஒரு புரட்சிகரமான புதிய நடைமுறையாகத் தோன்றுகிறதுஇ.கூத்தாடி2016-02-26 13:21 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:--2016-02-25 1:24 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:இலக்கிய விமர்சனம் என்பது ஒருவரின் ஜனநாயக உரிமை என்பதில் யாருக்கும் மறுப்பேதும் இல்லை. பெண்-ஆண் என்ற இரு பாலாரின் எழுத்துக்களும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் அவை பெண்ணின் தோற்றத்தையும், “அளவுக்கு மீறிய” என்று சிலர் கணிக்கும் இச்சைகளையும், அவள் உடல் மற்றும் வாழ்வு குறித்த கற்பிதங்களையும் ஆதாரமாகக் கொண்ட இலக்கிய அபத்தங்களாக இருக்கக் கூடாது. குன்றுபதேசம் செய்வது தமிழ் இலக்கிய மற்றும் பதிப்பு உலகில் காலம்காலமாக இருக்கும் வியாதி. அதற்கு இலக்காகப் பெண்கள் இருந்துகொண்டே இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் பேனாவை எடுத்து எழுதியோ, மேடையில் பேசியோ, வலைதளத்தில் எழுதியோ பெண்கள் உய்வுறப்படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருணை உள்ளம் இவர்களுக்கு!
பெண்கள் என்றால் உருகும் குணம். இத்தகையவர்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான். பெண்கள் தங்கள் வெளிப்பாட்டுக்கான வழிகளையும், தரங்களையும் நிர்ணயிக்க வல்லவர்கள். ஆசான்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒதுக்கவும் தெரிந்தவர்கள். பெண்களுக்காக இத்தனை சொல்பவர்கள், அவரவர் சொந்த வெளிப்பாடு உய்யும் வழியைப் பார்த்துக்கொண்டால் இலக்கியச் சரித்திரத்தில் இருக்கும் மௌனங்களையும், ஒதுக்கல்களையும் களைய முடியும். அப்படிக் களைய வேண்டியதுதான் இப்போதைய தேவையும்கூட.
இந்த இலக்கிய நோக்கர்களைப் பொறுத்தவரை பெண்ணின் எழுத்தும் செயல்பாடும் ஒரு மனநோயின் கூறுகள். இத்தகைய சிந்தனை சமீபத்தில் ஏற்பட்டதல்ல.மிக அருமையான வரிகள்.இன்றும் கூட பேஸ்புக்கில் எழுதும் பெண்களில் சிலர் அவ்வப்போது தமக்கேற்ப்படும் விமர்சனக்களைப் பார்க்கும் போது அம்பைக் குறிப்பிடும் அனைத்து பிரச்சனைகளும் இருப்பதைக் காண முடிகின்றது.இன்னொரு விசயமும் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.பத்திரிக்கை உலகத்தைவிட இணையம் வந்த பிறகு பெண்கள் தங்கள் சிந்தனைகளைப் பதிவாக்கி வெளியிட மிக அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது. சில பெண்கள் இதனை மிக நன்கு பயன்படுத்தி தங்கள் சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். பல பெண்கள் இன்னமும் இந்த வரப்பிரசாதத்தை நல்ல முறையில் பயன்படுத்தத் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதும் உண்மை.சுபா--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
ஹரிகி அவர்கள், இந்தக் கட்டுரையை முழுமையாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் குறிப்பிட்ட, எடுத்து இட்ட பக்கங்களிலேயே அம்பையின் மேற்கோளுக்கான சான்று இருக்கிறது. இதை வல்லமை உறுப்பினர்கள் யாரும் கவனிக்காதது வியப்பே.சற்று முன், அம்பையுடன் முகநூலில் உரையாடினேன். அவர், மூலத்துடன் ஒப்புநோக்கி, இந்தப் பகுதிகளை அளித்துள்ளார்.சக்கரவர்த்தினி கட்டுரைகள், பக்கம்: 83:
1906ல் இந்தியாவில் ஜனநாயகம் என்பது துளியும் இல்லை. மன்னராட்சிதான் உலகெங்கும் நிலவி வந்தது. அன்று இருந்த சட்டசபை, பார்லிமெண்ட் எல்லாம் அதிகாரமற்ற ப்ரிட்டிஷ் அரசுக்கு கட்டுப்பட்ட அடிமை அமைப்பு. ரஷ்ய பாராளுமன்றம் இப்படி மன்னனுக்கு கட்டுபட்டிருந்த காலத்தில் தான் லெனின் "பாராளுமன்றம் என்பது பன்றித்தொழுவம்" என கடிந்தார்.இந்த சூழலில் பெண்கள் அரசியலில் இறங்குவதை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சதியின் ஒரு பகுதியாக பாரதி கருதியதில் வியப்பில்லை. அதிகாரமற்ற அமைப்பில் பெண்களுக்கு பதவி கொடுக்கிறோம் என்பது குச்சிமிட்டாயை காட்டி இந்தியர்களை ஏய்க்கும் வேலையே ஆகும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
சீனி. விசுவநாதன் நூல்கள் முழுவதும் வெள்ளுரையாக (ப்லெய்ன் - டெக்ஸ்ட்) ஆக வேண்டியதன் அவசியத்தைஅம்பை அவர்களின் சரியான மேற்கோள் - பாரதி எழுத்துக்கள் தமிழின் ஒரு கால கட்டம், பாரதிதாசன், பெரியார், ... எல்லாம்இணையத்துக்கு வரவேண்டும் என்பதையே காட்டுகிறது. காஞ்சி மகாபெரியவாளின் பெண்கள் பற்றிய கருத்துக்கள்இணையத்தில் வரவேண்டும். தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் பற்றிய எண்ணங்களின் பல்வேறு பார்வைகளும்20-ஆம் நூற்றாண்டில் அடைந்த வளர்ச்சியைக் காள உதவும்
Many reference media such as Indices, Press lists etc. are available to facilitate historical research. The retrieval of information manually from the above reference media is a time consuming and laborious process. Digitization is the ultimate solution for quick reference of records. Hence the Digitization process is being implemented in Tamil Nadu Archives, using the latest technology to achieve the main object of making the historical records more accessible. The Pallavan Transport Consultancy Services has developed a software ‘TNAEDMS’ for this purpose. This is currently under the process of final validation in association with NIC. As part of the digitisation effort, data entry of finding aids and scanning of historical documents of the Post 1857 period are underway.
Anna Kannan, I saw the letter of Hariki apologising. I have written this letter to your group but it did not go through. Please pass it on to them.அன்புள்ள வல்லமை நண்பர்களுக்கு,விவாதங்கள் செய்யும்போது தவறுகள் நேர்வது சகஜம்தான். எழுதிய நபரிடமிருந்து விளக்கம் கோருவதும் சரிதான். நம்மில் பலர் சரியாக மூல நூல்களிலிருந்து சரி பார்க்காமல் எழுதிவிடுகிறோம். அதனால் விளக்கம் கேட்பதில் தவறு ஏதும் இல்லை. நான் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. பாரதியார் சுதந்திரத்துக்குப் பின் வந்த ஆண்டுகளில் வளர்ந்த என் போன்றவர்களின் வாழ்க்கையில் மிகவும் பெரிய அங்கமானவர். ஆனால் அவரையும் விமர்சன நோக்கோடு பார்ப்பதில் தவறேதும் இல்லை. இது 1906இல் அவர் எழுதியது. அப்போது பல ஆண்கள் மனத்தில் இருந்த பெண் குறித்த பிம்பம் இது. Economic And Political Weeklyஇல் நான் பாரதி குறித்த கடுமையான விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன் பல ஆண்டுகளுக்கு முன். அதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இத்தகைய விவாதக் குழுக்கள் இல்லாததால் நேரில் சந்தித்தவர்கள் கூறினார்கள்.விவாதங்கள் நடைபெறுவது நல்லதுதான். அதன் மூலம்தான் நாம் வளர முடியும்; அடக்கம் பயிலவும் முடியும்.ஹரிகி, எனக்கும் சர்க்கரைத் தொல்லை இருக்கிறது! Take care.அன்புடன்,அம்பை
அம்பை அவர்கள், வல்லமைக் குழும உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள மடலை இங்கு பகிர்கிறேன்
விவாதங்கள் செய்யும்போது தவறுகள் நேர்வது சகஜம்தான். எழுதிய நபரிடமிருந்து விளக்கம் கோருவதும் சரிதான். நம்மில் பலர் சரியாக மூல நூல்களிலிருந்து சரி பார்க்காமல் எழுதிவிடுகிறோம். அதனால் விளக்கம் கேட்பதில் தவறு ஏதும் இல்லை. நான் அதைத் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை.