மிஸ். தமிழ் பாடல்கள் - 1

83 views
Skip to first unread message

Ms. Tamil

unread,
Mar 3, 2012, 3:26:46 PM3/3/12
to santhav...@googlegroups.com
[இதுவரை இட்ட பாடல்கள்:
முகப்புச் செய்யுள்:
https://groups.google.com/d/topic/santhavasantham/FkDTmIPxZy8
இந்த நாள்:
https://groups.google.com/d/topic/santhavasantham/EAN4Ble-coY]


பொய்யா மொழி
(குறட்பா)

ஈற்றடி சுத்தப்பொய் இக்குறளில்; மற்றைய
ஈற்ற யலடிமெய் யாம்.


நாவிதர் கலகம்
(குறட்பா)

தீவில் சுயசவரம் செய்யார்க்கு மட்டுமொரே
நாவிதர்; யார்அவர்க்கு? நாட்டு.


The book "Gödel, Escher, Bach: An Eternal Golden Braid" by Douglas
Hofstadter inspired both the kurals.

பொய்யா மொழி is a variant of the liar paradox[1]: "The following
sentence is false. The preceding sentence is true."

நாவிதர் கலகம் is the barber paradox[2]: "The barber shaves only those
men in town who do not shave themselves. Who shaves the barber?"

இந்த மாதம் படமொழிக் கவியரங்க மாதம். 'பொய்யா மொழி' குறளுக்கு உரிய
படமாய், M. C. Escher-ன் "Drawing Hands"[3] படத்தைக் கொள்ளலாம்.

[1] http://en.wikipedia.org/wiki/Liar_paradox
[2] http://en.wikipedia.org/wiki/Barber_paradox
[3] http://en.wikipedia.org/wiki/Drawing_Hands

கடந்த சில மாதங்களாகத்தான் யாப்பிலக்கணம் கற்று வருகிறேன். பாடல்களில்
குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், நன்றியுடன் திருத்திக்
கொள்கிறேன்.

நன்றி.
அர்விந்த்
http://mstamil.com

Ms. Tamil

unread,
Apr 8, 2012, 5:21:31 AM4/8/12
to சந்தவசந்தம்
எலிக்கேணி வள்ளல்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
கலியுக வள்ளல்யாம் காண்.


சென்ற மாதம் இட்ட பாடல்கள் சரியாக வந்து சேர்ந்தனவா என்று தெரியாததால்
அவற்றை மீண்டும் இடுகிறேன்.


பொய்யா மொழி
(குறட்பா)

ஈற்றடி சுத்தப்பொய் இக்குறளில்; மற்றைய
ஈற்ற யலடிமெய் யாம்.


நாவிதர் கலகம்
(குறட்பா)

தீவில் சுயசவரம் செய்யார்க்கு மட்டுமொரே
நாவிதர்; யார்அவர்க்கு? நாட்டு.


குறிப்புகள்:

பொய்யா மொழி is a variant of the liar paradox[1]: "The following

sentence is false. The preceding sentence is true." பாடலுக்கான படமாக
M. C. Escher-ன் "Drawing Hands"[2] படத்தைக் கொள்ளலாம்.

நாவிதர் கலகம் is the barber paradox[3]: "The barber shaves only those


men in town who do not shave themselves. Who shaves the barber?"

The book "Gödel, Escher, Bach: An Eternal Golden Braid" by Douglas
Hofstadter inspired both பொய்யா மொழி and நாவிதர் கலகம்.

[1] http://en.wikipedia.org/wiki/Liar_paradox
[2] http://en.wikipedia.org/wiki/Drawing_Hands
[3] http://en.wikipedia.org/wiki/Barber_paradox

பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

இராம்குமார் முகவை

unread,
Apr 8, 2012, 5:38:13 AM4/8/12
to santhav...@googlegroups.com
எளிமையான விவரிப்புகளுடன் கூடிய அருமையான பாடல். படிக்கும் போதே இவ்வளவு விரைவாக பாடலும் மனதில் விரியும் காட்சியும் ஒன்றுதல் எனக்கு அரிதான செயல்.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Ms. Tamil

unread,
Apr 8, 2012, 6:25:31 AM4/8/12
to santhav...@googlegroups.com
தங்கள் வாழ்த்திற்கு நன்றி.

அன்புடன்,
அர்விந்த்

2012/4/8 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>:

Siva Siva

unread,
Apr 8, 2012, 8:17:33 AM4/8/12
to santhav...@googlegroups.com
பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' வாசித்திராவிடில், வாசியுங்கள்.

/குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று /
'குளியல் அறையிலன்று ....' என்பதுபோல் இருந்தால் வகையுளியைத் தவிர்க்கலாம். விளாங்காய்ச்சீரையும் தவிர்க்கலாம்.

/அதுசமயம் உள்ளே அடியேனும் போக, /

இப்பாடலில் 'அடியேன்' என்றதன் காரணம் என்ன?

/கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற/
?




2012/4/8 Ms. Tamil <mst...@mstamil.com>
எலிக்கேணி வள்ளல்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
கலியுக வள்ளல்யாம் காண்.


சென்ற மாதம் இட்ட பாடல்கள் சரியாக வந்து சேர்ந்தனவா என்று தெரியாததால்
அவற்றை மீண்டும் இடுகிறேன்.


..............

Ms. Tamil

unread,
Apr 9, 2012, 2:41:03 PM4/9/12
to santhav...@googlegroups.com
2012/4/8 Siva Siva <naya...@gmail.com>:

தங்கள் நேரத்திற்கு நன்றி.

> /குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று /
> 'குளியல் அறையிலன்று ....' என்பதுபோல் இருந்தால் வகையுளியைத் தவிர்க்கலாம்.
> விளாங்காய்ச்சீரையும் தவிர்க்கலாம்.

பின்இயைபும் அமைகிறது, "*ஓர்* நாள்" என்ற பிரயோகமும் தவிர்க்கப்
படுகிறது. அருமை! தங்கள் ஆலோசனைப் படியே "அறையிலன்று" என்று மாற்றிக்
கொள்கிறேன். மிக்க நன்றி.

>
> பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' வாசித்திராவிடில், வாசியுங்கள்.
>

சமீபத்தில்—இந்தப் பாடல் எழுதிய பின்—வாங்கிப் படித்து வருகிறேன்.
"எழுதிய பின்" என்பது ஒரு சாக்கு கிடையாது. இனி விளாங்காய்ச் சீர்களைக்
கவனத்தில் கொள்கிறேன்.

பாடலில் பின்வரும் விளாங்காய்ச் சீர்களையும் மாற்றி அமைத்துக் கொள்கிறேன்.
எம்பினாலும் => எம்பியும்
அலற"ஆஆ...!" => அலற"ஆ...!"

> /அதுசமயம் உள்ளே அடியேனும் போக, /
>
> இப்பாடலில் 'அடியேன்' என்றதன் காரணம் என்ன?

பாடல் முழுவதும் தன்மை இடத்தில் அமைந்திருக்க, "my humble self" என்ற
அர்த்தத்தில்—ஈற்றடியின் தொனியுடன் முரண்படும் வகையிலேயே—பயன்படுத்தி
உள்ளேன்.

>
> /கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற/
> ?
>

மௌனக் கருப்பாய் அலற: எலியின் கரிய கண்கள் பயத்தில் நடுநடுங்கி அலைந்ததை
விவரிக்கும் முயற்சி.

ஓ: மன உருக்கத்தைக் குறிக்கும் சொல்.


தங்கள் கவனத்திற்கு மீண்டும் என் நன்றிகள்.

அன்புடன்,
அர்விந்த்

>
>
>


> 2012/4/8 Ms. Tamil <mst...@mstamil.com>
>>
>> எலிக்கேணி வள்ளல்
>> (பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
>>
>> குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
>> குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
>> அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
>> கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
>> எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
>> எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
>> கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
>> சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
>> சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
>> சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
>> எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
>> கலியுக வள்ளல்யாம் காண்.
>>

Ms. Tamil

unread,
Jun 2, 2012, 4:55:44 AM6/2/12
to santhav...@googlegroups.com
2012/4/8 Siva Siva <naya...@gmail.com>:

> பசுபதியாரின் 'கவிதை இயற்றிக் கலக்கு' வாசித்திராவிடில், வாசியுங்கள்.
>
> /குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று /
> 'குளியல் அறையிலன்று ....' என்பதுபோல் இருந்தால் வகையுளியைத் தவிர்க்கலாம்.
> விளாங்காய்ச்சீரையும் தவிர்க்கலாம்.

கி.வா.ஜ. அவர்களின் "கவி பாடலாம்" நூலில், வெண்பாவின் இலக்கணத்தைப்
பேசும் பகுதிகளில் விளாங்காய்ச்சீர் பற்றிய குறிப்புகள் கண்டிலேன்.
ஆனால், அதே நூலில், "கேள்வி பதில்" பகுதியில் சமீபத்தில் கண்டது:

கேள்வி 15. வேல்பற்றும் கைக்குகேசன் மேதகைய தாமரைப்பூங்
கால்பற்றிற் காண்போம் கதி.

இந்தக் குறள் வெண்பாவில் பிழை ஏதேனும் உண்டா?

பதில்: முதலடியில் இரண்டாம் சீரில் இடையில் விளாஞ்சீர் வந்தமையால் ஓசை
நீள்கிறது. குகே என்று குறில் நெடிலாகிய நிரை வந்தது. அப்படி வருவது
தவறு.

*தவறு* என்றே சொல்லி விடுகிறார்!

அர்விந்த்

Ms. Tamil

unread,
Jun 2, 2012, 5:07:41 AM6/2/12
to santhav...@googlegroups.com
வாழ்த்த திருநாகை வாகான தேவடியாள்
பாழ்த்த குரல்எடுத்துப் பாடினாள் — நேற்றுக்
கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டேன் என்று
பழுதைஎடுத்(து) ஓடிவந்தான் பார்.

என்ற காளமேகப் புலவர் பாடலின் பாதிப்பில் எழுதியது:

வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)

கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்
சில்லெனக லைந்தர் சிறார்.

(நண்பனின் துணைவி பெயர் "திரு"; ஆனால் நானறிந்து கருவில் அல்ல
கல்லூரியில் தான் கைத்தலம் பற்றினர்.)

உடன் நண்பனுக்குச் சமாதானமாய் எழுதிய ஒரு குறட்பா:

சிகரம் ரசிப்பேன்; "சிறப்புரை" தொட்டு
விகடம்யார் மேற்சூட்டு வேன்.

பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

அன்புடன்,

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 2, 2012, 10:47:09 AM6/2/12
to santhav...@googlegroups.com
நல்ல பாடல்.

சில்லெனக் கலைந்தார் என்று ஒற்றுமிக்கு வரும். அப்போது தளை தட்டும்.
...என்றெண்ணித்
துள்ளிக் கலைந்தார் சிறார் என்னலாம்.

அனந்த்

2

வெண்கலக் குரலோன்
(நேரிசை வெண்பா)

கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்
சில்லெனக லைந்தர் சிறார்.

(நண்பனின் துணைவி பெயர் "திரு"; ஆனால் நானறிந்து கருவில் அல்ல
கல்லூரியில் தான் கைத்தலம் பற்றினர்.)

உடன் நண்பனுக்குச் சமாதானமாய் எழுதிய ஒரு குறட்பா:

சிகரம் ரசிப்பேன்; "சிறப்புரை" தொட்டு
விகடம்யார் மேற்சூட்டு வேன்.

பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

அன்புடன்,
அர்விந்த்
http://mstamil.com

--

N. Ganesan

unread,
Jun 2, 2012, 11:03:01 AM6/2/12
to சந்தவசந்தம்

அருமை!

On Apr 8, 2:21 am, "Ms. Tamil" <msta...@mstamil.com> wrote:
> எலிக்கேணி வள்ளல்
> (பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
>
> குளியல றையிலோர்நாள் குட்டிஎலி ஒன்று
> குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
> அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
> கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி
> எப்படி எம்பினாலும் ஏழடிச் சன்னல(து)
> எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்
> கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆஆ...!"
> சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது
> சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.

சட்டென ஏறியே தப்பிப் பிழைத்தது.

Ms. Tamil

unread,
Jun 3, 2012, 12:55:11 PM6/3/12
to santhav...@googlegroups.com
2012/6/2 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

> நல்ல பாடல்.
>
> சில்லெனக் கலைந்தார் என்று ஒற்றுமிக்கு வரும். அப்போது தளை தட்டும்.

மிக்க நன்றி ஐயா.

என என்னும் வினையெச்சத்தின் பின் வரும் வலி மிகும் என்று அறிந்து
கொண்டேன்.  (தளை தட்டுவதைத் தவிர்க்க வகையுளி பிரயோகிக்க
வேண்டியிருந்தது: சில்லெனக்க  லைந்தார்  சிறார்.)

> துள்ளிக் கலைந்தார் சிறார் என்னலாம்.

"துள்ளிக் கலைந்தார் சிறார்" எனும் பொழுது எதுகையும் சிறப்பாக அமைகிறது,
வகையுளியும் தவிர்க்கப்படுகிறது.  எனினும் மோனை கருதி, "சிள்ளென்(று)
அகன்றார் சிறார்" என்பதுபோல் மாற்றலாமோ?

சிள்ளெனல் — expression of rapidity, swiftness, விரைவுக் குறிப்பு; of
being noisy, boisterous, ஆரவாரக் குறிப்பு
(http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.4:1:7155.tamillex).

கருவில் திருவினைக் கைக்கொண்ட நண்பன்
குரல்வெண் கலம்(பொற் குணமே!) — ஒருமுறை
பள்ளிவிழாப் பேச்சாற்ற, பள்ளிமணி என்றெண்ணிச்

சிள்ளென்(று) அகன்றார் சிறார்.

பிழைகளைச் சுட்டி, திருத்தங்கள் தந்தமைக்கு மீண்டும் நன்றிகள் ஐயா.

Ms. Tamil

unread,
Jun 3, 2012, 1:06:58 PM6/3/12
to santhav...@googlegroups.com
2012/6/2 N. Ganesan <naa.g...@gmail.com>:

>
> அருமை!
>
> On Apr 8, 2:21 am, "Ms. Tamil" <msta...@mstamil.com> wrote:
>> எலிக்கேணி வள்ளல்
>> [...]

>> சட்டென ஏறியேத் தப்பிப் பிழைத்தது.
>
> சட்டென ஏறியே தப்பிப் பிழைத்தது.
>

மிக்க நன்றி ஐயா. திருத்திக் கொள்கிறேன்:

குளியல் அறையிலன்று குட்டிஎலி ஒன்று


குளுகுளுபேஸ்ட் சாப்பிட்டுக் கும்மாளம் போட,
அதுசமயம் உள்ளே அடியேனும் போக,
கதவுவழி இல்லாமற் கண்கள் மருள,எலி

எப்படி எம்பியும் ஏழடிச் சன்னல(து)


எட்டாமல் மூலை இடுங்கி நடுங்கியதன்

கண்கள்-ஓ! மௌனக் கருப்பாய் அலற"ஆ...!"


சன்னல்மேற் கம்பொன்றைச் சாத்தவும் குட்டியது

சட்டென ஏறியே தப்பிப் பிழைத்தது.
சக்கரவி யூகம் தகர்த்தெறிந்து மீள
எலிக்கடி யேனுயர் ஏணியும் ஈந்தேன்
கலியுக வள்ளல்யாம் காண்.

நன்றி.
அர்விந்த்

Ms. Tamil

unread,
Nov 24, 2012, 11:37:35 AM11/24/12
to santhav...@googlegroups.com
வீட்டுவாசிகள்
(இன்னிசை வெண்பா)

குருவிக் குடும்பமதன் குஞ்சுடன் தூண்மேல்
பரண்மேல் தலையணைப் பஞ்சுள் அணில்கள்
இரவுவா சிப்பில் இருக்கைக் கடியில்
சிரசற்ற முண்டம், சிரசு

ஈற்றடி "கரம்நீட்டும் முண்டக் கறுப்பு" என்றும் பாடம்.

வேறொரு இழையில் "அறுதலை" பேசப்பட, சிறுவயதில் படித்த "திகில்" மாதநாவலின்
தாக்கத்தில் எழுதியது. பிழைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

Ms. Tamil

unread,
Jan 1, 2013, 7:53:28 PM1/1/13
to santhav...@googlegroups.com
குழப்புங்குடி

(இன்னிசை வெண்பா)

ஏழுகடல் தாண்டிப்பின் ஏழுமலை தாண்டிப்பின்
பாழுங் குகைக்குள்ளே பச்சைக் கிளிக்குள்ளே
ஆருயிர் காத்த அசுரன் குடிபெயர்த்தான்
பாரியாள் வாங்கியகைப் பைக்கு.

பாடலில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

Vis Gop

unread,
Jan 2, 2013, 7:58:15 AM1/2/13
to santhav...@googlegroups.com
கடைபல ஏறிக் கரன்சியை வீசி 
அடைத்தாள் திணித்தே அதனை  - எடைகூடத் 
திக்குமுக் காடித் திணறி அசுரனுயிர் 
சிக்கியது பையடியில் செத்து!       :-) 

2013/1/2 Ms. Tamil <mst...@mstamil.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com

Ms. Tamil

unread,
Jan 2, 2013, 11:45:55 AM1/2/13
to santhav...@googlegroups.com
ஆப்பை அசைத்த அசுரன் வடித்திட்டான்
யாப்பில் வருத்தத்தை யாத்து! :-)

(வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு —ஞானக்கூத்தன்)

2013/1/2 Vis Gop <vis...@gmail.com>:

Ms. Tamil

unread,
Jan 4, 2013, 12:55:13 PM1/4/13
to santhav...@googlegroups.com
காத்திருந்த நேரம்

(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

நரமா மிசம்தின்னும் நால்வர்ஊர் சுற்றப்
பரதேசம் வந்தனர் பாத நடையாக.
வந்த உடனே வயிற்றுப் பசிகிள்ள
எந்தக் கடைதரும் இட்லிச் சுவையதிகம்
என்று வினவியறிந்(து) ஏராள மானவர்கள்
நின்ற கடைநோக்கி நேராகச் சென்றனர்.
கல்யாண வீடாய்க் கடையில் அமளியன்று.
கல்லாவில் வீற்ற கறார்ப்பார்ட்டி பேரெழுதிக்
கூவி வரிசையாய்க் கூப்பிடக் காத்திருந்தே
ஆவியா யிற்றெம் அசுரப் பசியென்று
நாவடக்கி மெல்ல நகர்ந்தனர் நம்கதையின்
மூவரும் பார்த்தபடி மூஞ்சு.

Inspired by the xkcd comic http://xkcd.com/30.

பாடலில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

Ms. Tamil

unread,
Jan 7, 2013, 2:33:01 PM1/7/13
to santhav...@googlegroups.com
ஒற்றைரோஜாவும் உடன்பிறப்பும்
(நேரிசை வெண்பா)

விடுப்புக் கழிந்தெங்கள் வீடடையக் கண்டோம்
செடியிலொற்றை ரோஜா சிகப்பாய் — உடனே
குதித்தோடித் தம்பி குதூகலமாய்த் தாவிப்
பிடித்துத்தின் றானிதழ் பிய்த்து.

பாடலில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

Vis Gop

unread,
Jan 8, 2013, 12:35:10 AM1/8/13
to santhav...@googlegroups.com
சிதைந்தாலும் ரோஜாப்பூ தின்ற சிறுவன் 
இதயத்திற்(கு) ஏற்ற மருந்து.

கோபால்.

2013/1/8 Ms. Tamil <mst...@mstamil.com>

Vis Gop

unread,
Jan 8, 2013, 12:41:22 AM1/8/13
to santhav...@googlegroups.com
அசுரன் சிதைந்தால் அவன்மனை வாடும் 
விசுவத்துக்(கு) அஃதோர் விருந்து!    :-)

2013/1/2 Ms. Tamil <mst...@mstamil.com>
ஆப்பை அசைத்த அசுரன் வடித்திட்டான்
யாப்பில் வருத்தத்தை யாத்து!        :-)



(வருத்தத்துக் காளானான் புலவன் என்றால்
யாப்பிலொரு கவிபாடச் சொன்னால்
போச்சு  —ஞானக்கூத்தன்)

2013/1/2 Vis Gop <vis...@gmail.com>:
> கடைபல ஏறிக் கரன்சியை வீசி
> அடைத்தாள் திணித்தே அதனை  - எடைகூடத்
> திக்குமுக் காடித் திணறி அசுரனுயிர்
> சிக்கியது பையடியில் செத்து!       :-)
>
> 2013/1/2 Ms. Tamil <mst...@mstamil.com>
>>
>> குழப்புங்குடி
>> (இன்னிசை வெண்பா)
>>
>> ஏழுகடல் தாண்டிப்பின் ஏழுமலை தாண்டிப்பின்
>> பாழுங் குகைக்குள்ளே பச்சைக் கிளிக்குள்ளே
>> ஆருயிர் காத்த அசுரன் குடிபெயர்த்தான்
>> பாரியாள் வாங்கியகைப் பைக்கு.

Vis Gop

unread,
Jan 8, 2013, 12:53:33 AM1/8/13
to santhav...@googlegroups.com
அட்டுநரம் தின்னும் அவர்வயிறே அன்றதிர 
இட்லி கொடுத்த இடி!   :-)

கோபால்.

2013/1/4 Ms. Tamil <mst...@mstamil.com>

Vis Gop

unread,
Jan 8, 2013, 1:07:27 AM1/8/13
to santhav...@googlegroups.com
இருக்கைக் 'கடி'யில் இரண்டாய்ப் பிளந்தே 
அருமையுயிர் நீத்த(து) அது!   :-)

2012/11/24 Ms. Tamil <mst...@mstamil.com>

Ms. Tamil

unread,
Jan 9, 2013, 11:29:39 AM1/9/13
to santhav...@googlegroups.com
அச்சம் தவிர்க்க அருமருந்தாய்க் காட்டிய
இச்சுவை சிந்தைக்(கு) இனிது!

2013/1/8 Vis Gop <vis...@gmail.com>:

Ms. Tamil

unread,
Jan 9, 2013, 11:42:29 AM1/9/13
to santhav...@googlegroups.com
2013/1/8 Vis Gop <vis...@gmail.com>:

> அட்டுநரம் தின்னும் அவர்வயிறே அன்றதிர
> இட்லி கொடுத்த இடி! :-)
>

உயர்ந்திருந்த உற்சாகம் ஓய்ந்திட இட்லி
வயிறுக்கு மட்டுமல்ல வந்த ஒருவர்
உயிருக்கும் வைத்த(து) உலை! :-)

அப்படியே ஒன்பதாம் அடியில் ஒரு காற்புள்ளி இட்டுக் கொள்கிறேன்:

காத்திருந்த நேரம்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

நரமா மிசம்தின்னும் நால்வர்ஊர் சுற்றப்
பரதேசம் வந்தனர் பாத நடையாக.
வந்த உடனே வயிற்றுப் பசிகிள்ள
எந்தக் கடைதரும் இட்லிச் சுவையதிகம்
என்று வினவியறிந்(து) ஏராள மானவர்கள்
நின்ற கடைநோக்கி நேராகச் சென்றனர்.
கல்யாண வீடாய்க் கடையில் அமளியன்று.
கல்லாவில் வீற்ற கறார்ப்பார்ட்டி பேரெழுதிக்

கூவி வரிசையாய்க் கூப்பிட, காத்திருந்தே


ஆவியா யிற்றெம் அசுரப் பசியென்று
நாவடக்கி மெல்ல நகர்ந்தனர் நம்கதையின்
மூவரும் பார்த்தபடி மூஞ்சு.

அன்புடன்,
அர்விந்த்

Ms. Tamil

unread,
Jan 9, 2013, 11:48:42 AM1/9/13
to santhav...@googlegroups.com
இதயம் வலுப்பெறும் என்ற தகவல்
உதவிடும் சாக்காய், உடனே இதம்பதத்தில்
ரோசாப்பூக் குல்குந்(து) உசார்செய்(து) ஒருபெரிய
சீசா நிறைத்துண்ண! தேங்க்ஸ். :-)

2013/1/8 Vis Gop <vis...@gmail.com>:

Vis Gop

unread,
Jan 10, 2013, 3:22:11 AM1/10/13
to santhav...@googlegroups.com
உங்கள் கவிக்கருகே துக்கடா ஒன்றுபோடும் 
எங்கேசார் குல்குந்(து) எனக்கு?  :-)

கோபால்.

2013/1/9 Ms. Tamil <mst...@mstamil.com>

Ms. Tamil

unread,
Jan 11, 2013, 1:03:56 PM1/11/13
to santhav...@googlegroups.com
காரை ஒதுக்கிட்டுக் கட்டவண்டி கட்டிட்டு
நேரிசை வெண்பா நெடுகுமிட்டு — வாரேனே
கல்பாக்கம் கொண்டுட்டுக் கண்ணாடிச் சீசா;நாம்
குல்குந்துக் கூட்டணி சார்! :-)

கட்டவண்டி: http://groups.google.com/group/santhavasantham/msg/35ba33319efca4ff

அன்புடன்,
அர்விந்த்

2013/1/10 Vis Gop <vis...@gmail.com>:

Vis Gop

unread,
Jan 13, 2013, 1:54:45 AM1/13/13
to santhav...@googlegroups.com
ரோசாகுல் குந்து ருசிபார்க்கக் கேட்டாலே 
சீசாதான் வந்திங்கே சேருமோ? - ஈசாநீ 
கூட்டணியின் தத்துவத்தைக் கோணாமல் எங்களுடைப் 
பாட்டணியும் பற்றுவதைப் பார்!

துக்கடா நான்போடத் தூரமாய் நும்கவிகள் 
அக்கடா என்றே அகன்றனவோ - பக்கமாய் 
நான்கொஞ்சம் தள்ளி நகர்ந்திருக்கேன் தாருங்கள் 
தேன்கொஞ்சும் பாடல் திரள்!

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2013/1/11 Ms. Tamil <mst...@mstamil.com>

Ms. Tamil

unread,
Jan 15, 2013, 3:35:48 AM1/15/13
to santhav...@googlegroups.com
2013/1/13 Vis Gop <vis...@gmail.com>:

> ரோசாகுல் குந்து ருசிபார்க்கக் கேட்டாலே
> சீசாதான் வந்திங்கே சேருமோ? - ஈசாநீ
> கூட்டணியின் தத்துவத்தைக் கோணாமல் எங்களுடைப்
> பாட்டணியும் பற்றுவதைப் பார்!
>
> துக்கடா நான்போடத் தூரமாய் நும்கவிகள்
> அக்கடா என்றே அகன்றனவோ - பக்கமாய்
> நான்கொஞ்சம் தள்ளி நகர்ந்திருக்கேன் தாருங்கள்
> தேன்கொஞ்சும் பாடல் திரள்!

"ஏப்பமெல்லாம் எண்ணமல்ல" என்றாலும் கூவிடுவேன்
யாப்பில் அமைந்தால் எழுத்(து;)ஏதும் — பாப்படிக்காக்
காரணம் தீர்ந்துவரும் கைச்சரக்குத் தான்ஐயா. :-)
(ஈரிடுகை இன்னும் இருக்கு.)

Ms. Tamil

unread,
Jan 15, 2013, 3:47:46 AM1/15/13
to santhav...@googlegroups.com
சில குறட்பாக்கள்:

சில்லெனச் சன்னல்சீட் சிக்க வெளிப்புறம்
அல்மோஸ்ட் நகரம் அழகு.

"விபத்து பகுதி:" விடுபடும்"ப்" எண்ண
விபத்தே நிகழ்ந்து விடும்!

பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

அன்புடன்,
அர்விந்த்

http://mstamil.com

Vis Gop

unread,
Jan 15, 2013, 6:55:23 AM1/15/13
to santhav...@googlegroups.com
பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.

'சுட்டிட' என்றால் சுடணுமா சுட்டணுமா?
சுட்டத்தான் சொல்கிறீர்; என்றாலும் - 'சுட்டுதற்கு'
என்றிட்டால் வேறோர் இடிக்கும் பொருளில்லை 
என்றெண்ணம் வந்த(து) எனக்கு.

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2013/1/15 Ms. Tamil <mst...@mstamil.com>

Ms. Tamil

unread,
Jan 17, 2013, 12:12:04 PM1/17/13
to santhav...@googlegroups.com
2013/1/15 Vis Gop <vis...@gmail.com>:

>> பாடல்களில் குறைகள் கண்டால் சுட்டிட வேண்டுகிறேன்.
>
> 'சுட்டிட' என்றால் சுடணுமா சுட்டணுமா?
> சுட்டத்தான் சொல்கிறீர்; என்றாலும் - 'சுட்டுதற்கு'
> என்றிட்டால் வேறோர் இடிக்கும் பொருளில்லை
> என்றெண்ணம் வந்த(து) எனக்கு.

"ஊக்குவிக்கும்" என்றிட்(டு) உறக்கம் தொலைத்ததுண்டு!
வாக்கில் தடுமாற்றம் வந்தஇச் சாக்கில்
சுடாமல்(!) பொறுமையாய்ச் சுட்டுதற்கு நன்றி. :-)
இடுகைசரி செய்வேன் இனி.

மீண்டும் நன்றி.
அர்விந்த்

Ms. Tamil

unread,
Jan 17, 2013, 9:42:55 PM1/17/13
to santhav...@googlegroups.com
நண்பனின் இரகசியம்
(ஐந்தடிப் பஃறொடை வெண்பா)

உளங்கசிந்த நேரம் உளறினாய் நீச்சற்
குளத்துள் சிறுநீர் குசும்பாய்க் கழித்ததை.
"யாரிடமுஞ் சொல்லாதே" என்றாய். இதைப்போய்நான்
யாரிடஞ் சொல்லுவேன்? யாப்பிலொரு பாட்டினை
யாத்து வெளியிட லாம்.

சிறுவயது விஷமத்தைச் சிறுபிள்ளைத்தனமாய்ப் புனைந்தது! பாடலில் பிழைகள்
கண்டால் சுட்ட வேண்டுகிறேன்.

நன்றி.
அர்விந்த்

http://mstamil.com

Vis Gop

unread,
Jan 19, 2013, 2:17:09 AM1/19/13
to santhav...@googlegroups.com
ஏதோ கசிந்த இதைப்போய்நீர் இப்பொழுது 
ஓதினீர் ஊருக்(கு) உடைத்து!
கோபால்.

2013/1/18 Ms. Tamil <mst...@mstamil.com>

Ms. Tamil

unread,
Jan 19, 2013, 12:28:39 PM1/19/13
to santhav...@googlegroups.com
எழுத்தில் சுஜாதா எடுத்தாண்ட உத்தி[1]
பழக விரும்பியநப் பாசை எழுதிடத்
தூண்ட, மனதைத் துழாவிக் கசிந்தகரு
கொண்ட(து) எனது குறை.

[1] ஸ்ரீரங்கத்துக் கதை "அரசு பகுத்தறிவுப் பாசறை"யின் கடைசி வரி.

நன்றி.
அர்விந்த்

2013/1/19 Vis Gop <vis...@gmail.com>:

RAJAGOPALAN APPAN

unread,
Jan 21, 2013, 2:08:16 AM1/21/13
to santhav...@googlegroups.com
தூண்டற்குக் கொண்ட தெதுகையிலை முன்பாட்டில்
வேண்டும் இடுகைக்கும் வேறு.
 
அ.ரா
2013/1/19 Ms. Tamil <mst...@mstamil.com>

Ms. Tamil

unread,
Jan 21, 2013, 2:06:37 PM1/21/13
to santhav...@googlegroups.com
இரண்டாந் தரஎதுகை, இல்லா எதுகை
இரண்டும் சரிசெய்(து) இடுவேன்; அருங்கவனம்
கொண்டு சிறப்பிலாக் கூறுகளை வெண்பாவில்
விண்டதற்கு நன்றி மிக.

அன்புடன்,
அர்விந்த்

2013/1/21 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:

Ms. Tamil

unread,
Jan 21, 2013, 2:15:11 PM1/21/13
to santhav...@googlegroups.com
2013/1/17 Ms. Tamil <mst...@mstamil.com>:

இடாதுசரி செய்வேன் இனி.

(ஈற்றடியில் இரண்டாந்தர எதுகை சரிசெய்தேன், திரு. அ.ரா. அவர்கள்
ஈற்றடியில் குறிப்பிட்ட பாடல் இதுவே என்ற புரிதலில்.)

Ms. Tamil

unread,
Jan 21, 2013, 2:20:31 PM1/21/13
to santhav...@googlegroups.com
எழுத்தில் சுஜாதா எடுத்தாண்ட உத்தி
பழக விரும்பியநப் பாசை எழுதிடத்
தூண்ட, மனதைத் துழாவிக் கசிந்தகரு
ஈண்ட குறையோ எனது.

நன்றி.
அர்விந்த்

2013/1/21 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:

Vis Gop

unread,
Jan 22, 2013, 2:08:27 AM1/22/13
to santhav...@googlegroups.com
யாப்பின் இலக்கணம் யான்கற் றிலையெனினும் 
பாப்பாவாய் பாடிடப் பற்றாசை! - மோப்பம் 
பிடித்தேனும் தேடிப் பிழைகள் அகற்றப் 
படித்தாலே பாய்ந்துவரும் பாட்டு.

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2013/1/22 Ms. Tamil <mst...@mstamil.com>
எழுத்தில் சுஜாதா எடுத்தாண்ட உத்தி
பழக விரும்பியநப் பாசை எழுதிடத்
தூண்ட, மனதைத் துழாவிக் கசிந்தகரு
ஈண்ட குறையோ எனது.

நன்றி.
அர்விந்த்

2013/1/21 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
> தூண்டற்குக் கொண்ட தெதுகையிலை முன்பாட்டில்
> வேண்டும் இடுகைக்கும் வேறு.
>
> அ.ரா
> Visit arajagopalan.blogspot.com
>
> 2013/1/19 Ms. Tamil <mst...@mstamil.com>
>>
>> எழுத்தில் சுஜாதா எடுத்தாண்ட உத்தி[1]
>> பழக விரும்பியநப் பாசை எழுதிடத்
>> தூண்ட, மனதைத் துழாவிக் கசிந்தகரு
>> கொண்ட(து) எனது குறை.
>>
>> [1] ஸ்ரீரங்கத்துக் கதை "அரசு பகுத்தறிவுப் பாசறை"யின் கடைசி வரி.

Ms. Tamil

unread,
Mar 4, 2013, 12:37:50 PM3/4/13
to santhav...@googlegroups.com
(சிலநாள்)
காய்ச்சலில் போனேனே காணாமல், சர்க்கரைப்பாக்
காய்ச்சலுக்கு மீண்டுவந்தேன் காண்.

Ms. Tamil

unread,
Mar 4, 2013, 12:40:12 PM3/4/13
to santhav...@googlegroups.com


2013/1/22 Vis Gop <vis...@gmail.com>:

> யாப்பின் இலக்கணம் யான்கற் றிலையெனினும்
> பாப்பாவாய் பாடிடப் பற்றாசை! - மோப்பம்
> பிடித்தேனும் தேடிப் பிழைகள் அகற்றப்
> படித்தாலே பாய்ந்துவரும் பாட்டு.
>
> நல்வாழ்த்துக்களுடன்,
> கோபால்.

பாய்ந்துவந்த பாட்டின் பயனாகக் கோபால்சார்,
பாய்ந்துவந்த பாட்டின் பயனாக — ஆய்ந்தெழுதும் 
கட்டுரையில் தந்த கடைசி அடிக்கொருபா 
இட்டு நிரப்பினேன் இன்று.

வல்லின, மெல்லின, இடையின எழுத்துகள் சம எண்ணிக்கையில் வருமாறு பசுபதி ஐயா தந்த ஈற்றடிக்கு (வாஞ்சையுடன் பூமாலை  வாங்கு),  ரோஜாப்பூ இதயத்திற்கு நல்லது என்று தாங்கள் சொன்ன கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறட்பா எழுதினேன்:

பூஞ்சை யிதயம் பொலியணுமா? சந்தையில்நீ
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.


நன்றி.
அர்விந்த் 

Girija Varadharajan

unread,
Mar 4, 2013, 9:35:03 PM3/4/13
to santhav...@googlegroups.com
பூஞ்சை யிதயம் பொலியணுமா? சந்தையில்நீ
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.

என்பதை 

பூஞ்சை யிதயம் பொலியணுமா? மேடையில்நீ

வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.

என்று மாற்றினால் இன்னும் சிறக்குமோ? 


வரதரசன்.அ.கி.



2013/3/5 Ms. Tamil <mst...@mstamil.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Ramamoorthy Ramachandran

unread,
Mar 4, 2013, 10:20:52 PM3/4/13
to santhav...@googlegroups.com
பூஞ்சை இதயம் பொலியணுமா பொன்மகளின் 
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு 

பூஞ்சை  இதயம் பொலியணுமா முன்குனிந்து 
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு  

பூஞ்சை இதயம் பொலியணுமா பூவிற்போள் 
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.  

பூஞ்சை இதயம் பொலியணுமா வாடுமுன் 
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
 
பூஞ்சை இதயம் பொலியணுமா போடும்முன் 
வாஞ்சையுடன் பூமாலை  வாங்கு.

வணக்கம் புலவர் இராமமூர்த்தி 

On Tue, Mar 5, 2013 at 8:05 AM, Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (girijavar...@gmail.com) Add cleanup rule | More info

பூஞ்சை யிதயம் பொலியணுமா? சந்தையில்நீ
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.

என்பதை 

பூஞ்சை யிதயம் பொலியணுமா? மேடையில்நீ

வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
என்று மாற்றினால் இன்னும் சிறக்குமோ? 


வரதரசன்.அ.கி.



2013/3/5 Ms. Tamil <mst...@mstamil.com>


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Pas Pasupathy

unread,
Mar 5, 2013, 11:20:21 AM3/5/13
to santhav...@googlegroups.com
நான் கொடுத்த சவாலில்  சிரமம் என்ன வென்றால்: வல்லினம், மெல்லினம், இடையினம் மூன்றும் சம எண்ணிக்கையில் வரவேண்டும். “வெறும்” குறளாக இருந்தால் மட்டும் போதாது!
 
அர்விந்தின் குறளில் இது நிறைவேறியதைப் பார்க்கலாம். முதல் அடியில்:
மூன்று இனங்களும் சரியாக ஒவ்வொன்றும் 6 முறை வந்துள்ளன.
 
நான் கொடுத்த ஈற்றடியில் ஏற்கனவே மூன்று இனங்களும் சம எண்ணிக்கையில்
இருக்கின்றன.  ( மூன்று இனங்களும் ஒவ்வொன்றும் நான்கு முறை)  
 
அர்விந்த் கணினியில் நிரல்கள் எழுதி , குறள், காளமேகம், ஔவை .. இவர்களின் 
குறள்/வெண்பா இவற்றை ஆய்ந்து, ஈற்றடிகள் சம எடை இனங்களைக் கொண்டுள்ளன வா, இல்லையா என்று கண்டு பிடித்துள்ளார்.
 
இதுவரை தமிழில் நடக்காத ஆய்வு இது!  அர்விந்த் இருப்பதால் தான் நான் தொடர்ந்து
என் ‘சொற்களைச் சுவைப்போம்” கட்டுரைகளை எழுதுகிறேன் என்று சொன்னால் மிகையாகாது.

2013/3/4 Girija Varadharajan <girijavar...@gmail.com>



--

Vis Gop

unread,
Mar 6, 2013, 3:07:29 AM3/6/13
to santhav...@googlegroups.com
பாய்ந்துவந்த பாட்டின் பயனாகக் கோபால்சார்,
பாய்ந்துவந்த பாட்டின் பயனாக — ஆய்ந்தெழுதும் 
கட்டுரையில் தந்த கடைசி அடிக்கொருபா 
இட்டு நிரப்பினேன் இன்று.
---

இரட்டிப்பாய்ப் பாய்ந்துவந்(து) இட்டு நிரப்பி 
அரவிந்தன் மீண்டும்  அழகாய் - அரங்கேறி 
வெண்பாச் சரமாய் வெடிக்கத் தொடங்கியதென்  
உண்மையில்  உள்ளுக்(கு) உவப்பு.

நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

2013/3/4 Ms. Tamil <mst...@mstamil.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Ms. Tamil

unread,
Mar 6, 2013, 1:35:04 PM3/6/13
to santhav...@googlegroups.com
2013/3/5 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
>
> நான் கொடுத்த சவாலில் சிரமம் என்ன வென்றால்: வல்லினம், மெல்லினம், இடையினம்
> மூன்றும் சம எண்ணிக்கையில் வரவேண்டும்.

உயிரளபெடை, ஆய்தம், தொடக்கத்தில் உயிரெழுத்து போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

> நான் கொடுத்த ஈற்றடியில் ஏற்கனவே மூன்று இனங்களும் சம எண்ணிக்கையில்
> இருக்கின்றன. ( மூன்று இனங்களும் ஒவ்வொன்றும் நான்கு முறை)

"வாஞ்சையுடன் பூமாலை வாங்கு" என்ற ஈற்றடியின் தனிச்சிறப்பு ஒவ்வொரு
*சீரும்* சம எடையுடன் அமைந்திருப்பது!

>
> அர்விந்த் கணினியில் நிரல்கள் எழுதி , குறள், காளமேகம், ஔவை .. இவர்களின்
> குறள்/வெண்பா இவற்றை ஆய்ந்து, ஈற்றடிகள் சம எடை இனங்களைக் கொண்டுள்ளன வா,
> இல்லையா என்று கண்டு பிடித்துள்ளார்.

சம எடை கொண்ட திருக்குறள், கவி காளமேகம் ஈற்றடிகள் "சொற்களைச் சுவைப்போம்
- 4" கட்டுரைக்கான பின்னூட்டங்களில் உள்ளன:
http://s-pasupathy.blogspot.in/2013/01/4_17.html

Ms. Tamil

unread,
Mar 6, 2013, 1:43:25 PM3/6/13
to santhav...@googlegroups.com
2013/3/5 Girija Varadharajan <girijavar...@gmail.com>:
> பூஞ்சை யிதயம் பொலியணுமா? சந்தையில்நீ
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> என்பதை
>
> பூஞ்சை யிதயம் பொலியணுமா? மேடையில்நீ
>
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> என்று மாற்றினால் இன்னும் சிறக்குமோ?
>

அந்த ஒரு சொல் மாற்றத்தில் பாடல் *கருத்தாழம்* பெறுகிறது, நன்றி ஐயா!

மூவின எண்ணிக்கையைச் சமப்படுத்த

பூஞ்சை யிதயம் பொலியணுமா? மேடையில்தான்
வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.

என்று அமைக்கலாமோ? பிழை இருந்தால் சுட்ட வேண்டுகிறேன்.

மீண்டும் நன்றி.
அர்விந்த்

Ms. Tamil

unread,
Mar 6, 2013, 2:00:04 PM3/6/13
to santhav...@googlegroups.com
2013/3/5 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா பொன்மகளின்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா முன்குனிந்து
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா பூவிற்போள்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா வாடுமுன்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா போடும்முன்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> வணக்கம் புலவர் இராமமூர்த்தி


குறட்பாச் சாரல் குற்றாலச் சாரலாய்க் குளிர்விக்கிறது, நன்றி ஐயா. :-)

சந்தவசந்தச் சந்திப்பின்போது தங்கள் கைகளால் "எழுத்தும் பேச்சும்"
புத்தகம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா. குறிப்பாய்த் "தன்னந்தனி ஆள்"
கட்டுரை படித்தபின் *தனிமகன்* என்ற சொல், எழுத்தாளர் க.நா.சு.
சொன்னதுபோல், ஆலயமணியின் கடைசி ஒலிபோல அகக்காதில் இன்னும்
ரீங்காரமிடுகிறது!

நன்றி!
அர்விந்த்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 6, 2013, 2:55:58 PM3/6/13
to santhav...@googlegroups.com
வணக்கம் அர்விந்த்! என் குறட்பாக்களையும் படித்து, என் நூலையும் படித்துப் பாராட்டியதற்கு நன்றி பல
.
பாக்களையும் நூல்தனையும் பாராட்டும் அன்பருக்கென்
போக்கில்தந்  தேன்வாழ்த்துப் பூ.  
புலவர் இராமமூர்த்தி.06/03/2013

On Thu, Mar 7, 2013 at 12:30 AM, Ms. Tamil <mst...@mstamil.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (mst...@mstamil.com) Add cleanup rule | More info

2013/3/5 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>

>
> பூஞ்சை இதயம் பொலியணுமா பொன்மகளின்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை  இதயம் பொலியணுமா முன்குனிந்து
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா பூவிற்போள்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு.
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா வாடுமுன்
> வாஞ்சையுடன் பூமாலை வாங்கு
>
> பூஞ்சை இதயம் பொலியணுமா போடும்முன்
> வாஞ்சையுடன் பூமாலை  வாங்கு.
>
> வணக்கம் புலவர் இராமமூர்த்தி


குறட்பாச் சாரல் குற்றாலச் சாரலாய்க் குளிர்விக்கிறது, நன்றி ஐயா. :-)

சந்தவசந்தச் சந்திப்பின்போது தங்கள் கைகளால் "எழுத்தும் பேச்சும்"
புத்தகம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.  குறிப்பாய்த் "தன்னந்தனி ஆள்"
கட்டுரை படித்தபின் *தனிமகன்* என்ற சொல், எழுத்தாளர் க.நா.சு.
சொன்னதுபோல், ஆலயமணியின் கடைசி ஒலிபோல அகக்காதில் இன்னும்
ரீங்காரமிடுகிறது!

நன்றி!
அர்விந்த்

Ms. Tamil

unread,
May 16, 2013, 1:58:13 PM5/16/13
to santhav...@googlegroups.com
In December 2012, The Hindu published an article titled "The rat trappers" by Janaki Lenin, as part of her "My Husband And Other Animals" column.  It had a passage that evoked Poe:

The Irula are more hands-on in their approach. When they find a rat burrow in a rice field, they plug all the exits, save one. They take an earthen pot with a hole, the size of a one rupee coin, punched through the bottom, fill it with green leaves, and set the leaves on fire. They place the mouth of the pot flush against the burrow entry, and blow through the pot’s hole. After smoke has filled every underground chamber, they excavate the burrow, and pull out all the asphyxiated rats. In the case of field rats, there might be a stockpile of grain inside the burrow as a bonus.
 
At sunset, the Irula pile up dry thorns in a fallow field and barbeque the rats. The fur is singed and removed along with the guts, and the rest roasted. Children vie for the crunchy tails and feet. Some of you may recoil in disgust, but these are clean, field rats grown fat on rice grain. The Irula will not eat filthy bandicoots or smelly house rats. Those are killed and discarded.

I couldn't get it off my head, so I wrote it down:

எலி வேட்டை
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)

வயலில் எலியின் வளையை அடைந்து
புயலாய் அதன்அனைத்துப் பொந்தும் அடைத்துப்
பசுந்தழை கொண்டொருமண் பானை நிறைத்துப்
பொசுங்க நெருப்புப் பொறியதில் இட்டுத்
திறந்தொரு பொந்தில் திறம்படச் சாய்த்துச்
சிறியதோர் ஓட்டையதில் சில்லுடைத்(து) இட்டுப்
புகையெழ ஊதிப் புசுபுசு என்று
புகையு(ம்)எழுந்(து) இண்(டு)இடுக்கும் போகப் பொறுத்துத்
திறக்கவும் கைக்(கு)எலி சிக்கும் உயிர்மூச்சற்(று).
அறுவடைச் சூட்டோ(டு) அதைத்தீயில் சுட்டுப்
பொறுபொறு என்று பொரிக்கும் பொழுது
மொறுமொறு வாலுக்கு முந்து.

பாடலில் பிழைகள் கண்டால் சுட்ட வேண்டுகிறேன்.


நன்றி.
அர்விந்த்
http://mstamil.com

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 4, 2013, 9:09:58 AM11/4/13
to santhav...@googlegroups.com
Awesomeness... தமிழுக்கு நீ ஆற்றியிருக்கும் தொண்டு அளப்பறியது. கவி காளமேகம் is awesomeness personified! பகிர்ந்தமைக்கு நன்றி!

கண்ணி யெதிலும் கணக்கிட் டெழுது
சமமாய் இனம்மூன்று தான். 

சமமா யிடையினம் மெல்லினம் வல்லினம் 
வந்தால் சிறக்கும் குறள்!

இன்னும் சமயெடை குறள் எழுதவில்லை. பேராவல் இருக்கு எழுத!

Balasubramanian N.

unread,
Nov 4, 2013, 9:38:23 AM11/4/13
to santhav...@googlegroups.com

அளப்பரிய தொண்டை ஆற்றியோனும் வாழ்க, போற்றினோனும் வாழ்க!



2013/11/4 Shanmuga Sundar Lakshmanan <lssu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Shanmuga Sundar Lakshmanan

unread,
Nov 4, 2013, 10:46:04 AM11/4/13
to santhav...@googlegroups.com
அளப்பரிய தொண்டைத் தொடர :) 
கனலோ தவமோ கனியோநன் யாப்பில்
நயமடி பாரதி நாவு  

முதல் அடி:
வல்லினம் - 5 
மெல்லினம் - 5
இடையினம் - 5

இரண்டாமடி: ஒவ்வொன்றிலும் 3. 

Ms. Tamil

unread,
Nov 8, 2013, 2:49:28 PM11/8/13
to santhav...@googlegroups.com
2013/11/4 Shanmuga Sundar Lakshmanan <lssu...@gmail.com>
கனலோ தவமோ கனியோநன் யாப்பில்
நயமடி பாரதி நாவு  

முதல் அடி:
வல்லினம் - 5 
மெல்லினம் - 5
இடையினம் - 5

இரண்டாமடி: ஒவ்வொன்றிலும் 3. 
 

'சம எடை மூவின' வெண்பாவின் ஈற்றடியை இரசித்தேன் parts (அதிலும் மகடூஉ முன்னிலை!)

"யாப்பில் நயமடி": சொன்னயம் (சொல்+நயம்), எண்ணெய் (எள்+நெய்) போல் "யாப்பின் னயமடி" என்று புணருமெனக் கருதுகிறேன்.  எனவே "ந*ல்* யாப்பின் னயமடி" என்றே கொள்ளலாமோ?

இக்கணிப்பில் தவறிருந்தால் சுட்ட வேண்டுகிறேன்.

Ms. Tamil

unread,
Dec 7, 2014, 8:40:07 AM12/7/14
to santhav...@googlegroups.com
பிறக்கவும் கையில் பிளேஸ்டேஷன் கொண்ட
சிறுவன் ஒருகையில்லேஸ் சிப்ஸு கொறிக்க
ஒருகையிலென் னோடாட ஒப்பின்றி ஆனேன்
இரும்படிக்கும் பட்டறையில் ஈ

பாடலில் குறைகள் கண்டால் சுட்ட வேண்டுகிறேன்.

நன்றி.
அர்விந்த்

Shanmuga Sundar Lakshmanan

unread,
Dec 8, 2014, 2:50:24 AM12/8/14
to santhav...@googlegroups.com

ஒருகை பார்ப்போம்னா இதுதானா? நன்று பார்ட்ஸ்.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/pimlFptMm4g/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages