மிஸ். தமிழ் பாடல்கள்
(பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா)
இண்டர்நெட், கேபிள் இணைப்பு களில்இடர்
உண்டாக, பொங்கிய உற்சாகம் குன்றுமுன்
சன்னற் கதவினைத் தள்ளித் திறந்திட்டுப்
பண்டைய பாவியல் பற்றியநூல் வாசித்தேன்.
முன்னடியில் சன்னல் முழுதாய்த் திறந்திட்டும்
தென்றல் வரவு தெரியவில்லை — வந்தகொசு
உண்மை; கடிமிக உண்மை! இருப்பினும்,
அண்ணாந்து விட்டத்தை ஆவென்றே பார்த்தென்றன்
எண்ணமது போனவழி யாத்திட்டேன் வெண்பாக்கள்.
என்பாக்கள் உங்களுக்காய் இத்தளத்தில் ஏற்றுகிறேன்.
கண்டு மகிழ்ந்ததையும், கண்ட குறைகளையும்
மின்னஞ்சல் செய்யலா மே.
நன்றி.