நெல்லுச் சோறு- சுடுசோறும் பழைய சோறும்

331 views
Skip to first unread message

kanmani tamil

unread,
Oct 14, 2023, 9:21:48 PM10/14/23
to vallamai
                                                                         "சோறுவாக்கிய கொழுங்கஞ்சி 
                                                                           யாறுபோலப் பரந்தொழுகி" (பட்டி.44-45)
என்ற அடிகள் காவிரிப்பூம் பட்டினத்து அட்டிற்சாலையில் நெல்லு(அரிசி)ச்சோறு ஆக்கி வடித்த வளத்தைப் பேசுகின்றன. 

நெல்லரிசியால் அன்றாடம் ஆக்கிய சுடுசோற்றைத் தொகைப்பாடல்கள் 'நாட்சோறு' என்கின்றன. 

முதல்நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் உண்ணும் போது அது 'பொம்மல்' என்று அழைக்கப்பட்டதை நற்றிணை (பா-60) மூலம் அறிகிறோம். 

"தண்புலர் விடியல் 

கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு 

புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு 

கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார். 

மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:

                                                                                                        http://ulagatamil.in/நற்றிணை-உழவன்-உண்ட-சத்து/

இங்கு பழைய சோற்றுக்குச் சொட்டானமாக வரால் மீன் குழம்பு அமைகிறது.  

(தொடரும்)

சக

kanmani tamil

unread,
Oct 16, 2023, 11:41:16 AM10/16/23
to vallamai
'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல் 
"பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர். 

பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர். 

அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர் 
"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் 
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"
மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.

பழஞ்சோற்றுப் பெரும்புகவு = பழைய சோறு என்று ஐயமின்றித் தெளியலாம். 

கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.
(தொடரும்)
சக 

N. Ganesan

unread,
Oct 16, 2023, 9:52:03 PM10/16/23
to vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com
SK> > கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.

கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
---------------------------------

சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/

இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25

--------------------

கொக்குக்கும் நெல்லம் பயிருக்கும் நீண்ட தொடர்புண்டு. விளைந்து கிடக்கும் நெல்வயல்களில் கொக்குக்கள் ஏராளமாகப் பார்க்கலாம். வயல்களின் அருகே தாழம் புதரில் கொக்குகள் அமர்ந்துள்ள காட்சி சங்க நூல்களில் மிகுதி. There is a famous poem by MaanguDi Kizaar, a kind of anti-establishment poem. Due to immigration from the North, often called as VeLir varukai, the four varNa aashrama was getting established. This poem takes 4 things in different categories, each of the 4 things are common and ordinary stuff well known to the people. The poet declares what was old Tamil religion, and talks of 4 things at the bottom that forms the basis.

அடலகுந் துப்பின்................
    [மருதம் தாழை]  குருந்தே முல்லையென்று
         இந்நான்கு அல்லது பூவும் இல்லை;
   கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
   சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு              
         இந்நான் கல்லது உணாவும் இல்லை;
   துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
        இந்நான் கல்லது குடியும் இல்லை;
  ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
  ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்          
  கல்லே பரவின் அல்லது
       *நெல்உகுத்துப்* பரவும் கடவுளும் இலவே.

நெல் எல்லா வழிபாட்டிலும் இருந்தமை தெரிகிறது. நெல் உகுத்தல், இன்று அக்‌ஷதை ஆகிவிட்டது.

வேளிர் வருகையால், ஆற்றங்கரைகளில் நெல் வேளாண்மை பெருகிற்று. பொருந்தில் என்னும் பழனிக்கு அருகே உள்ள மருதத்திணை ஊரில் நெல் உள்ள மட்சாடியால் கிடைத்த தமிழ் பிராமி முக்கியமானது. மிகப் பழையது. பயிர-/வயிர- என்னும் சொல்விளையாட்டைக் காட்டும் எழுத்து. பகு-/வகு-, பழுதி/வழுதி, பாசவல்/வாசவல், பால்/வால், ... போல பண்டுதொட்டு நிகழும் ப்-/வ்- மாறுபாடு. நெல்லைக் கார்பன் டேட்டிங் செய்ய முடிகிறது. கி.கு. 490 எனக் கிடைத்தது.

தமிழ்நாட்டில் கிடைத்த பொதுவூழிக்கு முந்தைய சிற்பங்களில் மிக முக்கியமானது, வேளிர் ஒருவன் இறந்தபோது உடைத்த கலயத்தில் உள்ள பானையோடு.  Secondary Burial என்று எலும்புகளை முதுமக்கள் தாழியில் இந்தக் கலயம், அணிகளுடன் புதைத்துள்ளனர். தமிழர் கலையின் உச்சம்: கி.மு 6 அல்லது 5-ம் நூற்றாண்டு எனலாம். மகரவிடங்கர், துடி போன்ற உடல் உடைய கொற்றவையை நோக்கி வரும் காட்சி. கொற்றி என அடையாளம் காட்ட அருகே, கலைமான் நிற்கிறது. வேளிரின் கொடையாகிய நெல் மணிகள் சிதறிக் கிடைக்கின்றன. கொக்கு ஒன்று தாழைப் புதரில் அமர்ந்துள்ளது. வேளிர் அமைத்த சிறப்பு வெள்ளாமையைக் காட்டும் அற்புதமான காட்சி:
See Figure 5. Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai inside Burial Urn, Adichanallur
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Ancient Pandya kings, such as *pal yaakam vETTa mutukuTumip paruvazuti* does Vedic yajnas on the banks of tanks, rivers to this couple:
http://nganesan.blogspot.com/2013/10/pandya-peruvazuti-coin.html
Makara Vidangar's name as Father deity (Thai) is the only Tamil name retained while all other 11 month names in Tamil are in Prakrit showing Hellenistic calender ultimately coming from Babylon. In Indian calenders, only Makara Vidangar crocodile name and symbol is retained in the month names of an year while the rest of 11 months' symbols originate from Babylon. This fact in Indian calenders shows the strength and vitality of Vidangar-KoRRavai worship from the Indus Bronze civilization to the Sangam Pandya kings including Peruvazhuthi. Evidence for the Vidangar (Crocodile) identification is given from the latest Tamil Brahmi inscription found on the bed of a Water Tank in a temple in Tirupparangunram near Madurai, and also the beautiful pottery art in Adichanallur showing KoRRavai with her husband, Vidangar crocodile. To identify as KoRRavai, her black buck (kRSNa-mRgam/kalaimaan) vaahana is also shown in Adichanallur. In it, the ripe paddy field with an egret (kokku) giving the rice for the mortuary ritual is important as also seen from excavations from 4th century BCE Porunthal has shown. Carburized  Paddy (2400 years old!) from Porunthal site has been used by Archaeology prof. K. Rajan to determine the origins and dates of Tamil writing in Tamil country.

Linga Worship transitioning from Varuṇa to Śiva:
https://nganesan.blogspot.com/2020/07/ekamukha-linga-with-tamil-brahmi.html

நா. கணேசன்

kanmani tamil

unread,
Oct 16, 2023, 10:44:22 PM10/16/23
to vallamai
என் ஐயம் வேறு. 
'பொம்மல்' பழைய சோற்றைக் குறிப்பது போல; 'நிமிரல்' பழைய சோற்றைக் குறிக்கிறதோ என....
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdxdigfdpq2O6XqhhTSob9e58Tv4EpyiQgqQLWdz8Mg8w%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 16, 2023, 11:11:29 PM10/16/23
to vall...@googlegroups.com
On Mon, Oct 16, 2023 at 9:44 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
என் ஐயம் வேறு. 
'பொம்மல்' பழைய சோற்றைக் குறிப்பது போல; 'நிமிரல்' பழைய சோற்றைக் குறிக்கிறதோ என....
சக 

பொருமல்/பொம்மல் (cf. பெருமான்/பெம்மான்; செருமான்/செம்மான் ‘leather-worker', ...) - இது பழைய சோறு. நீரை உள்வாங்கி உப்பி விடுஞ் சாதம் பழைய சாதம். சங்க நூல்களில் “பழஞ்சோறு”.

ஆனால், நிமிரல்/ஞிமிரல் அப்போது தான் ஆக்கிய சுடுசோறு. உலையில் தளபுள என ஒலி எழுப்பி ஆகும் சோறு. https://youtu.be/F-reCW5VLvM
உலை குதிக்கும் தழல் ஊறிய கானலை உன்னிச் சென்று,
கலை குதிக்கும்படி போல் இழைத்தேன் - கழிச் சேல் வெகுண்டு
வலை குதிக்கும் செம் கழுநீர் உடைந்து வழிந்த செம் தேன்
அலை குதிக்கும் தடம் சூழ் மதுராபுரி அம்பிகையே!         27.

நிமிர்தலால் ஞிமிறு (வண்டு, அளி). ஞிமிர்சிட்டு https://groups.google.com/g/santhavasantham/c/ElInO9skheU/m/nXhAhrh7b3UJ 
இந்தியாவில் இல்லாத, அமெரிக்கக் கண்டங்களில் வாழ் ஹம்மிங் பறவை.

N. Ganesan

unread,
Oct 17, 2023, 12:26:32 AM10/17/23
to vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com
On Mon, Oct 16, 2023 at 8:51 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
SK> > கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.

கொக்கின் நகம் - அரிசிச் சோற்றுக்கு உவமை
------------------------------
---

சிலவகை பழைய அரிசி சோறாகும்போது வளைந்து கொக்கின் நகம் (உகிர்) போல வளைந்திருக்கும் போலும். some subspecies of rice - curved/bent like the nails of cattle egret? உ-ம்: வாசமதி (Basmati) அரிசி நறுமணத்தால் பெயர்பெறுவது (வாசம் = மணம்). நீளமான அரிசி சமைத்தபின் வளைந்த தோற்றம் தருவது. https://www.thespicespoon.com/blog/basmati/
https://www.thespicespoon.com/blog/fresh-dill-spiced-rice-in-the-afghan-manner-chelo-shibit/

இவ்வாறு நீண்ட அரிசி வளைவதைச் சங்கப் புலவர் 3 முறை போற்றியுளர்:
(1) கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற் 258/6
(2) பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் - புறம் 395/36
(3) கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம் 398/25

வனமுல்லைப் பூப் போலவும், கொக்கின் நகம் போலவும் உள்ள நீண்ட அரிசிச் சோறு என்கிறது சீவக சிந்தாமணி:

கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி
வேட்டவர்ப் பெறாது வீதி வெறுநிலங் கிடந்த வன்றே.

   (இ - ள்.) மோட்டு இளமுல்லை முகையின் மொய்கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு - உயர்ந்த இளமை பொருந்திய முல்லையரும்பைப் போலத் திரட்சி கொண்ட, கொக்கின் நகம் போன்ற நீண்ட வெண்சோறும்;

வாசமதி போன்ற நெல்வகை சங்க காலத்தில் பயிரிட்டனர் எனத் தெரிகிறது. நீண்ட வெண்சோற்றுக்குக் கொக்குகிரும், காட்டு முல்லையும் ( Jasminum  angustifolium ) உவமை.

kanmani tamil

unread,
Oct 17, 2023, 12:43:40 AM10/17/23
to vall...@googlegroups.com
'கோட்புலிச் சுழல் கண் அன்ன' ... எனச் சொல்லப்படும் கூட்டு/ கடிச்சிக்கிட / வெஞ்சனம் எது? any idea?

பாடலில் பிற அனைத்தும் புரிகிறது.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 17, 2023, 7:46:22 AM10/17/23
to vall...@googlegroups.com
On Mon, Oct 16, 2023 at 11:43 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'கோட்புலிச் சுழல் கண் அன்ன' ... எனச் சொல்லப்படும் கூட்டு/ கடிச்சிக்கிட / வெஞ்சனம் எது? any idea?

கருனைக் கிழங்குப் பொரியல். “புலிக்கண் வெப்பர்” என்று இதனைப் புறம் 269-ம் கூறுகிறது.
கோள்புலிச் சுழல்கண் அன்ன கொழுஞ்சுவைக் கருனை - கொல்லும் புலியின் சுழல்கண் போன்ற ஒளியுடன் திகழும், நறுஞ்சுவையுடைய கருனைக்கிழங்கும்.

புறம் 269 - அவ்வையார்
புலிக்கண் வெப்பர் - புதிய அகலிடத்திற்கொண்டபுலியினது கண்போன்ற நிறத்தை யுடைய சூடான உணவு

Cat's eye gemstones:

வேந்தன் அரசு

unread,
Oct 17, 2023, 8:15:33 AM10/17/23
to vall...@googlegroups.com

திங்., 16 அக்., 2023, பிற்பகல் 9:11 அன்று, kanmani tamil <kanmani...@gmail.com> எழுதியது:
'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல் 
"பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர். 

பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர். 

அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர் 
"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் 
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"
மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.

கருனை:
ரு'கரத்தை அடுத்து ன'கரம் வரும் சொல் மிக அரிது
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Oct 17, 2023, 8:24:37 AM10/17/23
to vall...@googlegroups.com, housto...@googlegroups.com, Santhavasantham
ஞிமிர்தல்/நிமிர்தல் “ஞிமிறு” என அளிகளில் ஒருவகைக்குப் பெயர்தரும் வினைச்சொல். எனவே, ஞிமிறு ஒரு தொழிற்பெயர்.
எத்தனையோ சொன்முதல் மெய் அழிபட்டுச் சொற்கள் உருவாதலைப் பட்டியலிட்டு ஓரிழையில் கொடுத்துள்ளேன்.
அவ்வகையில், நிமிர்தல் > இமிர்தல் என்றாவதும் பார்த்தோம். இமிர்வண்டு .... நிமை-த்தல் > இமைத்தல். நிமி பற்றிய புராணக்கதையும், நிமிழம் > நிமிஷம் என வடமொழியில் வருவதும் சொல்லினேன்.

நிமிரல் என்பது தளபுள என உலையில் கொதித்து உருவாகும் சுடுசோறு. பழஞ்சோறு இரவில் நீரில் ஊறி, உப்பும் பொருமல்/பொம்மல் என்பதற்கு நேர்மாறு.

நிமிரல் ‘சுடுசோறு’ போலவே, ஒலியால் உண்டாகும் இன்னொரு உணவும் சங்க இலக்கியத்தில் அழகாகப் பாடியுள்ளனர்.

பிற பின்,
நா. கணேசன்

kanmani tamil

unread,
Oct 17, 2023, 12:47:12 PM10/17/23
to vallamai
'கருனை' பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளத் தனி இழை தொடங்கி இருக்கிறேன். அங்கே பேசலாம். 
இந்த இழை திசை திரும்ப வேண்டாம். 
சக 

seshadri sridharan

unread,
Oct 17, 2023, 10:05:03 PM10/17/23
to vall...@googlegroups.com
On Tue, 17 Oct 2023 at 17:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நிமிரல் என்பது தளபுள என உலையில் கொதித்து உருவாகும் சுடுசோறு. பழஞ்சோறு இரவில் நீரில் ஊறி, உப்பும் பொருமல்/பொம்மல் என்பதற்கு நேர்மாறு.

நிமிரல் ‘சுடுசோறு’ போலவே, ஒலியால் உண்டாகும் இன்னொரு உணவும் சங்க இலக்கியத்தில் அழகாகப் பாடியுள்ளனர்.

நிமிர் ஒலிக் கருத்து இல்லை. நிமிர் என்றால் பொங்குதல் கருத்தில் உயர்வை குறித்து வந்திருக்க வேண்டும்.

image.png

N. Ganesan

unread,
Oct 18, 2023, 6:33:42 AM10/18/23
to வல்லமை
On Tuesday, October 17, 2023 at 9:05:03 PM UTC-5 சிலம்பன் நீலன்   wrote:
On Tue, 17 Oct 2023 at 17:54, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நிமிரல் என்பது தளபுள என உலையில் கொதித்து உருவாகும் சுடுசோறு. பழஞ்சோறு இரவில் நீரில் ஊறி, உப்பும் பொருமல்/பொம்மல் என்பதற்கு நேர்மாறு.

நிமிரல் ‘சுடுசோறு’ போலவே, ஒலியால் உண்டாகும் இன்னொரு உணவும் சங்க இலக்கியத்தில் அழகாகப் பாடியுள்ளனர்.

நிமிர் ஒலிக் கருத்து இல்லை. நிமிர் என்றால் பொங்குதல் கருத்தில் உயர்வை குறித்து வந்திருக்க வேண்டும்.

 உலை கொதிக்கையில் தளபுள, தளபுள என்ற ஓசை எழுகிறது. நிமிர்தல் (ஞிமிறு/நிமிறு - ஒலி எழுப்பும் வண்டு, தும்பி, ...) எனவே, நிமிரல் ஒலிக்குறிப்பால் சுடுசோற்றுக்கு வரும் பெயர் ஆகும். நிமிர்தல் > இமிர்தல். நிமிர்தல் எழுதல்/உயர்தல் என்ற பொருளே, வண்டுகளும், தேனீயும் மலரில் தேனுண்டு எழுதலால் ஏற்படும் சொல். நிமிர்தல்/ஞிமிர்தல் முதற்பொருள் ஒலி தான். அரிசியை இட்டு  உலை கொதிக்கையில் பார்த்தால் தெரியும். நிமிர்தல் எழுதல் என்ற பொருள் ஒலி எழுப்பும் ஞிமிறுகள் காற்றில் எழுந்து பறப்பதால் உண்டாகும் இரண்டாம் பொருள், முதன்மைப் பொருள் அல்ல.

பழஞ்சோறு - பழைய சோறு. இதற்கு எதிர்ப்பதமாக, நிமிரல் = சுடுசோறு.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Oct 18, 2023, 6:39:20 AM10/18/23
to vallamai
நிமிரல் பற்றிய உங்கள் கொள்கையைச் சொல்லி விட்டீர்கள் முனைவர் கணேசன். 
இனி என் கொள்கையைத் தட்டுகிறேன். 
(வரும்)
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 18, 2023, 11:22:42 AM10/18/23
to vallamai
'கொக்குகிர் நிமிரல்' என்ற தொடர் தொகை இலக்கியத்தில் மூன்று பாடல்களில் பயின்று வருகிறது (நன்றி: tamilconcordance). அவற்றுள் நற்றிணை 258 குறிப்பிடத் தகுந்தது. நெய்தல் திணை சார்ந்த அப்பாடலைப் பாடியவர் நக்கீரர். 
பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த		5
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்		10
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே

பாடலில் பொற்றொடி அணிந்த இல்லக் கிழத்தியர் தம் செல்வம் மிகுந்த மனைகளிலே விருந்து புறந்தந்தனர். மறுநாள் காலைப் பொழுதில் கொக்குகிர் நிமிரலைத் தம் வீட்டிற்கு வெளியே... அதாவது; புறக்கடையில் உகுத்தனர். அதைக் காக்கை உண்டபின் அங்காடியில் குவித்து வைத்து இருந்த பச்சை இறாலைக் கவர்ந்து உண்டது. 

இங்கே குறிப்பிடத் தக்க செய்தி என்னவெனில் மகளிர் விருந்து புறந்தந்த மறுநாள் எஞ்சிய கொக்குகிர் நிமிரலை; வேண்டாம் என்று வெளியே வீசிவிட; அதைத் தான் காக்கை உண்கிறது. இது சுடுசோறாக இருக்க வழி இல்லை. பழஞ்சோறே.

சக 

N. Ganesan

unread,
Oct 18, 2023, 12:24:49 PM10/18/23
to vall...@googlegroups.com
The balu given to crow happens in the morning/day. Freshly cooked rice nimiral is fed. Even now the bali food given to crows is cooked fresh,
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcsv2KXTMWF-mJd-sAdgMNTENN57t3D0_c5cXJtSVP8tFQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 18, 2023, 2:32:49 PM10/18/23
to vallamai
அவர்கள் காக்கைக்குப் பலிச்சோறு கொடுப்பதாகப் பாடல் சொல்லவில்லேயே. அவர்கள் முதல்நாள் விருந்தயர்கின்றனர். மறுநாள் எஞ்சிய சோற்றைக் புறக்கடையில்... வீட்டிற்கு வெளியே கொட்டுகிறார்கள். 

பலிச்சோறு கொடுப்பதற்கும் கொட்டுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. 

சக 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdDwFDVYzayqYJCeJwMNxByjqZ%2BCkV51E_CGp8U9N1VjQ%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 18, 2023, 2:49:16 PM10/18/23
to vallamai
காக்கைக்குப் பலிச்சோறு படைப்பதானால் குறுந்தொகை 210 சொல்வது போலக் கலத்திலோ அல்லது இலையிலோ வைப்பர். புறக்கடையில் உகுக்க மாட்டார்கள். 

சக 

N. Ganesan

unread,
Oct 18, 2023, 10:46:33 PM10/18/23
to வல்லமை
On Wednesday, October 18, 2023 at 1:32:49 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
அவர்கள் காக்கைக்குப் பலிச்சோறு கொடுப்பதாகப் பாடல் சொல்லவில்லேயே. அவர்கள் முதல்நாள் விருந்தயர்கின்றனர். மறுநாள் எஞ்சிய சோற்றைக் புறக்கடையில்... வீட்டிற்கு வெளியே கொட்டுகிறார்கள். 

பலிச்சோறு கொடுப்பதற்கும் கொட்டுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. 

சக 

நெல் உகுத்துப் பரவுதல் நடுகல்லுக்கு, காக்கைக்கு பலிச்சோற்றை உகுத்துப் பரவுதல் மரபு.

உங்கள் கட்டுரையில், காக்கைக்குப் பலிச்சோறு:
2.1.7 காக்கை:

மக்கள் தம் இல்லங்களில் காக்கைக்குப் பலிச்சோறு படைத்தனர்.

”பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 

கொக்குகிர் நிமிரல்”- (நற்.- 258) மாந்திய காக்கை காண்க.” 

N. Ganesan

unread,
Oct 18, 2023, 10:47:24 PM10/18/23
to வல்லமை
On Wednesday, October 18, 2023 at 1:49:16 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
காக்கைக்குப் பலிச்சோறு படைப்பதானால் குறுந்தொகை 210 சொல்வது போலக் கலத்திலோ அல்லது இலையிலோ வைப்பர். புறக்கடையில் உகுக்க மாட்டார்கள். 

நெல் உகுத்துப் பரவும் கடவுள். அதுபோல, விருந்தினர் வருகை கூறும் காக்கைக்கு, நிமிரல் உகுத்துப் பரவினர்.
புறங்கடை = வீட்டுக்கு வெளியே உள்ள முற்றம்.
அகங்கடை = வீட்டுக்கு உள்ளே உள்ள அறைகள்.

காக்கைக்கு இடும் பலிச்சோறு வீட்டு முற்றத்தில் (புறங்கடை) நிகழுகிறது. இன்றும், காக்கைக்கு இடும் பலிச்சோறு புறங்கடையில் தான். வீட்டுக்கு உள்ளே அகங்கடைக்குக் காக்கை வந்து சோறு எடுக்காது.

சக 

kanmani tamil

unread,
Oct 19, 2023, 4:11:55 AM10/19/23
to vallamai
ஒரு ஆய்வுக் கட்டுரையின் நோக்கத்தை ஒட்டி நாம் பார்க்கும் கோணம் அமையும்; அதை ஒட்டியே பொருள் ஆழம் புலப்படும். 

On Thu, 19 Oct 2023, 8:17 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
On Wednesday, October 18, 2023 at 1:49:16 PM UTC-5 kanmani...@gmail.com wrote:
காக்கைக்குப் பலிச்சோறு படைப்பதானால் குறுந்தொகை 210 சொல்வது போலக் கலத்திலோ அல்லது இலையிலோ வைப்பர். புறக்கடையில் உகுக்க மாட்டார்கள். 

நெல் உகுத்துப் பரவும் கடவுள். அதுபோல, விருந்தினர் வருகை கூறும் காக்கைக்கு, நிமிரல் உகுத்துப் பரவினர்.
புறங்கடை = வீட்டுக்கு வெளியே உள்ள முற்றம்.

தவறு முனைவர் கணேசன். முற்றம் என்பது முன்னால் இருப்பது. சுற்றிலும் காரைக் கட்டிடத்தோடு நடுவில் இருக்கும் முற்றம் தொட்டி முற்றம் (காரைக்குடி செட்டிநாட்டு பாணி) குறுநில மன்னன் மாளிகையில் முன்னால் இருப்பது தான் முற்றம். வாயிலில் நுழைந்து உட்செல்ல; கடைசியில் இருப்பது புறக்கடை... திறந்த வெளியாக இருப்பது ... இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் இன்றைய வீடுகளில் work area. அங்கே தான் பெண்கள் வீட்டின் உள்ளே வைத்துச் செய்ய வசதிப்படாத வேலைகளை எல்லாம் செய்வார்கள். கலம் பூசுதல் (பாத்திரம் கழுவுதல்) தண்ணீர்ப் புழக்கம் எல்லாம் இருக்கும்.  

காக்கைக்கு இடும் பலிச்சோறு வீட்டு முற்றத்தில் (புறங்கடை) நிகழுகிறது.

முற்றம் × புறங்கடை 

விருந்து அயர்ந்த பின் மாலை வேளையில் வீட்டுள்ளிருந்து துரும்பைக் கூட வெளியே போட மாட்டார்கள். இது ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்தின் அனைத்துச் சமூகங்களும் பின்பற்றும் சம்பிரதாயம்/ வழக்காறு. இன்றும் மாறாமல் பின்பற்றப்படுவது. பெண்கள் காலையில் கலம்பூசும் போது மிச்சம் மீதி வேண்டாதது அத்தனையையும் புறக்கடையில் கொட்டுவது வழக்கம். அப்படிக் கொட்டுவதைக் காக்கை உண்பதும் வழக்கம். அப்படிக் கொட்டிய கொக்குகிர் நிமிரல் பழஞ்சோறு தான்.
சக 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 19, 2023, 5:06:01 AM10/19/23
to vallamai
///நெல் உகுத்துப் பரவுதல் நடுகல்லுக்கு, காக்கைக்கு பலிச்சோற்றை உகுத்துப் பரவுதல் மரபு.///

இந்தப் பாடல் நோக்கமும் செய்தியும் தமிழ் உலகம் எங்கும் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது என் தாழ்மையான கருத்து. மிக மிக ஆழமான பொருள் உடைய பாடல். இதை ஆதாரமாகக் காட்டும் அளவு மனத் தெளிவும் பக்குவமும் தமிழ் உலகம் விரைவில் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 

///உங்கள் கட்டுரையில், காக்கைக்குப் பலிச்சோறு:
2.1.7 காக்கை:

மக்கள் தம் இல்லங்களில் காக்கைக்குப் பலிச்சோறு படைத்தனர்.

”பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த 

கொக்குகிர் நிமிரல்”- (நற்.- 258) மாந்திய காக்கை காண்க.” /// Dr.Ganesan wrote at 8.16am

உரையாசிரியரை அப்படியே பின்பற்றி நான் எழுதிய கட்டுரை. இப்போது நான் கருத்தால் மாறுபடுகிறேன். 

சக 

N. Ganesan

unread,
Oct 19, 2023, 5:56:12 AM10/19/23
to vall...@googlegroups.com
நிமிரல் என்பது சுடுசோறு. காரணப்பெயர் இது. சீவக சிந்தாமணியும்,
சங்க இலக்கியங்களில் மூன்று பாடல்களும் தெளிவாக விளக்கும் கருத்து இது.

பழசை உண்ணும் உழக்குடிகள், பாணர்கள் போன்றோருக்குப் புத்துணவு
சமைத்து விருந்து படைக்கும் தலைவன், அரசன் (சேரமான்) அளிப்பது நிமிரல்.
காக்கைக்குப் பலிச்சோறு ஆக, அன்று சமைத்த சோற்றை - நிமிரலை -
அளிப்பதும் நற்றிணையில் உள்ளது. அழகான, நிமிரல் என்பது அப்போது
சமைத்த சோறு என்பதும், பிற செய்திகளும் உள்ள அழகான பாடல்.
நல்ல உரைகள் வந்துள்ளன. உ-ம்: சில ஆண்டு முன்னர் உவேசா எழுதிய
உரையும் அச்சாகியுள்ளது.

NG

சக 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 19, 2023, 2:16:04 PM10/19/23
to vall...@googlegroups.com
SK >> நெல்லரிசியால் அன்றாடம் ஆக்கிய சுடுசோற்றைத் தொகைப்பாடல்கள் 'நாட்சோறு' என்கின்றன.

நாட்சோறு என்றால் சுடுசோறு எனப் பொருள் இல்லை. 
நாட்சோறு = breakfast, breakfast at the wedding.

சுடுசோறு என்பதற்கு சங்க இலக்கியமும், பின்னர் காப்பியங்களிலும்
ஓர் ஒலிக்குறிப்புச் சொல் இருக்கிறது: நிமிரல்.
நிமிரல் என்னும் சொல்லின் தாதுவியல்:

உண்டிவகைகளில் இன்னொரு ஒலிக்குறிப்புச்சொல் இருக்கிறது. அதுபற்றிப் பின்னர் பார்ப்போம்.

NG

Virus-free.www.avg.com

kanmani tamil

unread,
Oct 20, 2023, 1:21:39 AM10/20/23
to vallamai
புறக்கடை, புறங்கடை, கடை, முற்றம் - இச்சொற்களின் பொருள், வேறுபாடு ஆகியவை தனி ஆய்விற்கு உரியவை போல் தெரிகிறது. 
நான் 'கொக்குகிர் நிமிரல்' பற்றித் தொடர்கிறேன். 

மென்_புலத்து வயல் உழவர்
வன்_புலத்து பகடு விட்டு
குறு முயலின் குழை சூட்டொடு
நெடு வாளை பல் உவியல்
பழம் சோற்று புக வருந்தி			5
புதல் தளவின் பூ சூடி
அரி_பறையால் புள் ஓப்பி
அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து
மனை கோழி பைம் பயிரின்னே
கான கோழி கவர் குரலொடு			10
நீர்க்கோழி கூய் பெயர்க்குந்து
வேய் அன்ன மென் தோளால்
மயில் அன்ன மென் சாயலார்
கிளி கடியின்னே
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து			15
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழு சிறப்பின்
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன்
செல்லா நல் இசை உறந்தை குணாது
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர்		20
அற பெயர் சாத்தன் கிளையேம் பெரும
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி
கதிர் நனி சென்ற கனை இருள் மாலை
தன் கடை தோன்றி என் உறவு இசைத்தலின்
தீம் குரல் .....அரி குரல் தடாரியொடு		25
ஆங்கு நின்ற என் கண்டு
சிறிதும் நில்லான் பெரிதும் கூறான்
அரும் கலம் வரவே அருளினன் வேண்டி
ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனை
பொன் போல் மடந்தையை காட்டி இவனை		30
என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு
அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
மிக வானுள் எரி தோன்றினும்
குள_மீனோடும் தாள் புகையினும்			35
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என
உள்ளதும் இல்லதும் அறியாது
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே		40
புறநானூறு 395 - நக்கீரர் பாடுகிறார் 

பாடலின் தலைவன் பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் 

காவிரியின் தென்கரையில் பொதுவாகச் சோழனின் தலைநகர் என்று அறியப்படும் உறையூர்; உறந்தை என்றும் அழைக்கப்படும். சோழன் உறையூரைத் தனதாக்க அதை ஆண்ட தித்தன் எனும் குறுநில மன்னனை வென்று அடிப்படுத்தினான். ஆனாலும் அவனுக்குப் பின் வந்த சோழப் பரம்பரையினர் ஆண்ட காலத்திலும் உறந்தையின் அடையாளம் தித்தனாகவே இருந்தான் என்பதற்கு இந்தப் புறப்பாடல் சான்றாகிறது. 

தித்தனது உறையூர் நாட்டிற்குக் கிழக்கே இருந்த நாட்டை ஆண்ட குறுநில மன்னன் நெடுங்கை வேள் ஆவான். உழுவித்த அவனது வயலில் இறங்கி உழுதோர் பிடவூரில் வாழ்ந்தனர். அவ்வுழவருள் தலைமைப் பண்புடன் மேலாண்மை செய்தவன் பிடவூர் கிழான் பெருஞ்சாத்தன் என்ற திணைமாந்நன்.

இவனது விருந்தைப் பாராட்டும் நக்கீரர் அவன் 'கொக்குகிர் நிமிரல்' அளித்தான் என்கிறார்.

சோறு பொங்கி வடித்த அனுபவம் மிகுந்தவர் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையைப் பதம் பார்ப்பர். சோறு வெந்தமைக்கு அடையாளமாக அது வெந்து விட்டதா என அறிய வலதுகையின் ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் பயன்படுத்தி நசுக்கிப் பார்ப்பர். அது மிருதுவாக இருந்தால் வெந்து விட்டது எனக் கருதப்படும். நசுங்கவில்லை; மென்மையாக இல்லை எனின் சோறு வேகவில்லை என அறியப்படும். வடித்த சோறு கொக்கின் நகத்தைப் போல விறைப்பாக... மென்மையின்றி இருந்தால் சோற்றுக்கு வேக்காடு போதவில்லை என்று பொருள். வேகாத சோற்றுக்குச் சுவை ஊட்டவோ கூட்டவோ இயலவே இயலாது. எனவே 'கொக்குகிர் நிமிரல்' பழஞ்சோறு தான். அதனால் தான் அச்சோற்றுக்கு மிதவை ஏதும் குறிக்கப்படவில்லை 

ஆறிய சோற்றைச் சரியான முறையில் இரவு முழுதும் நீரில் ஊற வைத்தால் அது பழஞ்சோறு. அந்தச் சரியான முறை அடுப்படிப் பழக்கம் இருப்பவருக்கு மட்டும் தான் தெரியும். 
நீரூற்றும் போது சோறு நன்கு ஆறி இருக்க வேண்டும்; சோறு நன்கு மூழ்கும் அளவு சற்று மிகுதியாக நீர் ஊற்ற வேண்டும்; இரண்டு கல் உப்பை அதில் போட்டுக்; கூடவே ஒரு சிரங்கை மோரும் ஊற்ற வேண்டும்.  விடிந்த பிறகு சோற்றைப் பதம் பார்க்கும் போது அப்பருக்கையில் மென்மையான வன்மை ஏறி இருக்கும். ஏனென்றால் அது விடிய விடிய நீருக்குள் மூழ்கி இருந்தது. வெளியில் இருக்கும் காற்றை விட நீரில் இருந்த தண்மை ஏறிய சோற்றுப் பருக்கைகளில் கொக்கின் நகம் போன்ற texture... பதம் காணப்படும்.
பழைய சோறை விரும்புவோர்க்கு அவ்விழைவின் காரணமே இந்த மென்மையான வன்மை தான். வீட்டில் பெரியோர் பழைய சோறின் பக்குவம் குறித்து வழக்கமாகக் கேட்கும் கேள்வி: 'பழையது வெதவெதையா இருக்கா?' என்பது தான். 

சுடுசோறு பதம் பார்க்கும் போது நசுங்க வேண்டும். 
பழைய சோறு பதம் பார்க்கும் போது நசுங்கக் கூடாது... நசுங்கினால் 'சோறு நொசநொசத்து விட்டது' என்று கூறி அதை 'வீணாகிவிட்டது' என முத்திரை குத்தப்படும்.

இந்தப் பழைய சோற்றுக்கு இணையாகச் சுட்ட கருவாடு கொடுக்கிறான் பிடவூர் கிழான் மகனாகிய பெருஞ் சாத்தன். 

பசுங்கட் கருனைச் சூடு = சுட்ட கருவாடு.
கருனை = சோற்றோடு கூட்டும் இணை. 

இன்றைய திருச்சியின் ஒரு பகுதியாகிய உறையூருக்கும் காவிரியின் சங்கமத் துறைக்கும் இடைப்பட்டு இருந்த பிடவூரில் பதப்படுத்திய மீன் உணங்கலைச் சுட்டுக் கொடுத்தமை அவ்விருந்தின் பெறுமதியைக் கூட்டியது. 

(இன்னும் வரும்)
சக 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 20, 2023, 2:53:32 PM10/20/23
to vallamai
கொக்குகிர் நிமிரலை விருந்தாக அளித்த மற்றொரு தலைவன் சேரன் வஞ்சன். இவன் பாயல் நாட்டுப் பகுதியின் வேந்தன் ஆகையால்; 'பழைய சோற்றை விருந்தினர்க்குக் கொடுத்தான்' என ஏற்றுக்கொள்ள இயலாமல் தயங்கும் போக்கு காணப்படுவதன் காரணம்; பழஞ்சோற்று உணவின் தரம் பற்றிய கொள்கை மாற்றம் எனலாம். தொகையிலக்கியக் காலத்தில் அது இழிவானதாகக் கருதப்படவில்லை. 

அன்றைய தமிழ்ச் சமூகத்தில் வழிப்போக்கர் அனைவரையும் விருந்தினராக ஏற்று உணவளித்த பண்பாடு நிலைபெற்று இருந்தது. அட்டில் சாலையில் சமைப்பவர் ஆயினும்; முற்றத்து வெளியில் அடுப்பு மூட்டுபவர் ஆயினும்; பெரும் பானைகளில் தான் சமைத்தனர். எப்போது வேண்டுமாயினும் உண்ணும் நோக்கத்தோடு- வயிற்றுப் பசியோடு வழிப்போக்கர் வருவர். இல்லை என்னாது கொடுக்க; வீட்டில் உணவு இருக்க வேண்டும். அப்படி ஆக்கிய சோறு அன்றே தீராமல் 'விருந்து வரா நாள்' ஆகி விட்டால்... பழைய சோறாகப் பாதுகாக்கப்படுவது இழிவாகக் கருதப்படவில்லை. 

அதற்கு உரிய கூட்டு சேரும் போது அவ்வுணவு மேன்மை பெற்றது. வஞ்சன் பரிமாறிய கூட்டு மானிறைச்சியைப் பதப்படுத்தி வறுத்த (deep fry) உப்புக் கண்டம் ஆகும். 
அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி
யான் உண அருளல் அன்றியும் தான் உண்
மண்டைய கண்ட மான் வறை கருனை
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர			25
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம்
உரை செல அருளியோனே
பறை இசை அருவி பாயல் கோவே
புறம். 398

தனது உண்கலத்தில் இருந்து மான்கறி உப்புக்கண்டத்தைப் புலவரின் உண்கலத்திற்குப் பரிமாறி உண்ண வைத்தானாம். 

வறை = உப்புக்கண்டம்.

இக்கருத்து வல்லுநர்களால் ஏற்கப்பட்டுத் தமிழ்ப் பேராய்வு பன்னாட்டு மின்ஆய்விதழில் பதிப்பிக்கப்பட்டும் உள்ளது. 
"பண்டைத்தமிழர் உணவில் புழுக்கும் சூட்டும்"

எப்படி மாம்பழம், மீனாணம், கருவாடு ஆகியவை மேன்மையான கூட்டாகக் கருதப்பட்டனவோ அதே போல் தான் மான்கறியின் உப்புக்கண்டமும்...

அதனால் தான் வேந்தனின் உண்கலத்தில் இருந்து எடுத்துப் பரிமாறியதை வெளிப்படையாகப் பெருமை பொங்கப் பாடுகிறார் புலவர். 

கொக்குகிர் நிமிரல் பழஞ்சோறு என்பதால் தான் இங்கும் அச்சோற்றுக்குரிய மிதவை (குழம்பு) பற்றிய குறிப்பே இல்லை. 

சக 

நான் 'கொக்குகிர் நிமிரல்' பற்றித் தொடர்கிறேன். 

kanmani tamil

unread,
Oct 21, 2023, 11:13:34 AM10/21/23
to vallamai
தொகை இலக்கியத்தில் 'கொக்குகிர் நிமிரல்' இடம் பெறுவது போல் சீவக சிந்தாமணியிலும் இடம் பெறுவதை எடுத்துக் காட்டிய முனைவர் கணேசனுக்கு நன்றி. 
"கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொள் தேமாங் கனி சுவைத் தயிரோடு ஏந்தி..."
இப்பாடலில் இடம்பெறும் 'கோட்புலிச் சுழல்கண் அன்ன கொழுஞ்சுவைக் கருனை' என்ற தொடர் சேனைக்கிழங்கின் பூவைக் குறிப்பதாக விளக்கிப் படத்தோடு உதவிய முனைவர் கணேசனுக்கு மீண்டும் நன்றி. 

பொருள்:
'முல்லை மோட்டு இளமுகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல்' = முல்லைக் கொடியில் பூத்த இளம் மொட்டுக்களை ஒத்த கொக்கின் உகிர் போன்ற (பழஞ்)சோறு 
பழஞ்சோற்றுக்கு இரண்டு உவமைகள் 
1. பார்ப்பதற்கு முல்லை மொட்டுப் போல் தோன்றும் பருக்கைகள் (நிறம், அளவு அடிப்படையில் அமையும் ஒப்புமை)- கட்புல உருக்காட்சி. 
2. தொடுபுல உருக்காட்சியாக அமையும் கொக்கின் நகம் போன்ற பருக்கைகள் 

'வெண்சோறு ஊட்டுறு கறிகொள் தேமாங்கனி' = வெண்ணிறப் பழைய சோற்றுக்குக் கூட்டாகும் (கறியாக/ கடிப்பானாக/ வெஞ்சனமாக) தகுதி பெற்ற இனிய மாம்பழம் 

'சுவைத் தயிரோடு ஏந்தி' = சுவை மிகுந்த தயிரோடு கொணர்ந்து...

ஆக; இந்தப் பாடலும் 'கொக்குகிர் நிமிரல்' = பழைய சோறு தான் என்று சொல்லத்தக்க வகையில் மிதவை எனப்படும் குழம்பு எதையும் காட்டாமல் கட்டித் தயிர் ஊற்றி மாம்பழமும் சேனைப்பூக் கூட்டும் வைத்து உண்ணற்குரியதாகக் காட்டுகிறது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் வழக்கம் தான். 

மிதவையோடு சுடுசோறு சாப்பிடுவதைப் பேசும் தொகைப் பாடல்... நாளை...
(வரும்)

சக 

N. Ganesan

unread,
Oct 21, 2023, 7:40:27 PM10/21/23
to vall...@googlegroups.com
> பசுங்கட் கருனைச் சூடு = சுட்ட கருவாடு.
கருனை = சோற்றோடு கூட்டும் இணை. 

கருங் கண் கருனை, பசும் கண் கருனை, புலிக் கண் கருனை 
- இந்த மூன்று சங்க இலக்கியத் தொடர்களும், கருனைக் கிழங்கைக் குறிப்பன.

Virus-free.www.avg.com

kanmani tamil

unread,
Oct 21, 2023, 10:03:16 PM10/21/23
to vallamai
உரையாசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். 
ஆனால் நான் இடம் நோக்கி இப் பொருள் தான் கொள்கிறேன். 
அதற்குக் காரணமும் விளக்கத்தோடு சொல்ல முடிகிறது. 

(பிறகு)

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 21, 2023, 10:45:18 PM10/21/23
to vall...@googlegroups.com
On Sat, Oct 21, 2023 at 10:13 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தொகை இலக்கியத்தில் 'கொக்குகிர் நிமிரல்' இடம் பெறுவது போல் சீவக சிந்தாமணியிலும் இடம் பெறுவதை எடுத்துக் காட்டிய முனைவர் கணேசனுக்கு நன்றி. 
"கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை முல்லை
மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோ
றூட்டுறு கறிகொள் தேமாங் கனி சுவைத் தயிரோடு ஏந்தி..."
இப்பாடலில் இடம்பெறும் 'கோட்புலிச் சுழல்கண் அன்ன கொழுஞ்சுவைக் கருனை' என்ற தொடர் சேனைக்கிழங்கின் பூவைக் குறிப்பதாக விளக்கிப் படத்தோடு உதவிய முனைவர் கணேசனுக்கு மீண்டும் நன்றி. 

பொருள்:
'முல்லை மோட்டு இளமுகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல்' = முல்லைக் கொடியில் பூத்த இளம் மொட்டுக்களை ஒத்த கொக்கின் உகிர் போன்ற (பழஞ்)சோறு 
பழஞ்சோற்றுக்கு இரண்டு உவமைகள் 
1. பார்ப்பதற்கு முல்லை மொட்டுப் போல் தோன்றும் பருக்கைகள் (நிறம், அளவு அடிப்படையில் அமையும் ஒப்புமை)- கட்புல உருக்காட்சி. 
2. தொடுபுல உருக்காட்சியாக அமையும் கொக்கின் நகம் போன்ற பருக்கைகள் 

'வெண்சோறு ஊட்டுறு கறிகொள் தேமாங்கனி' = வெண்ணிறப் பழைய சோற்றுக்குக் கூட்டாகும் (கறியாக/ கடிப்பானாக/ வெஞ்சனமாக) தகுதி பெற்ற இனிய மாம்பழம் 

'சுவைத் தயிரோடு ஏந்தி' = சுவை மிகுந்த தயிரோடு கொணர்ந்து...

ஆக; இந்தப் பாடலும் 'கொக்குகிர் நிமிரல்' = பழைய சோறு தான் என்று சொல்லத்தக்க வகையில் மிதவை எனப்படும் குழம்பு எதையும் காட்டாமல் கட்டித் தயிர் ஊற்றி மாம்பழமும் சேனைப்பூக் கூட்டும் வைத்து உண்ணற்குரியதாகக் காட்டுகிறது. இன்றுவரை நடைமுறையில் இருக்கும் வழக்கம் தான். 

”கறி கொதிக்குது, பொறுத்திரு” என்கிற போது, கறி = குழம்பு.
எல்லா திராவிட மொழிகளிலும் இப்பயன்பாடு உள்ளது.
நிமிரல் வெண்சோற்றுக்கு பிசையும் குழம்பு எனச் சொல்ல,
“நிமிரல் வெண்சோறு ஊட்டுறு கறி” எனப் பாடியுள்ளார்.

தேமா கொள் கனி - மாம்பழம் என விளக்குகின்றனர் உரையாசிரியர்கள்.

N. Ganesan

unread,
Oct 22, 2023, 6:10:22 AM10/22/23
to vall...@googlegroups.com
> கொக்குகிர் நிமிரல் பழஞ்சோறு என்பதால் தான் இங்கும் அச்சோற்றுக்குரிய மிதவை (குழம்பு) பற்றிய குறிப்பே இல்லை. 

சேரமான் பெருஞ்சோறு அளித்தான் எனக் காட்டும் தொடர்: பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். குழம்பும் சேர்த்துத் தான் அளித்தான் என்பது பொருள். சாந்தி காப்பி (coffee) குடித்தாள் என்கையில் கோப்பியொடு பால், சர்க்கரை, தண்ணீர் எல்லாம் சேர்ந்தே குடித்தாள். இது எல்லா மொழிகளிலும் உள்ள மரபு தான். உபலட்சணம் என்பது பெயர். இனங்குறித்தல் எனத் தமிழாக்கம் செய்தவர் பவணந்தி முனிவர் ஆவார். ஆங்கிலத்தில், https://en.wikipedia.org/wiki/Synecdoche
upalakṣaṇa (उपलक्षण).—n (S) Synecdoche (of a part for the whole, of an individual for the species, of a species for the genus, of a quality or accident for the subject); elliptical or metaphorical expression gen.
------------

திருத்தக்கதேவர் வெளிப்படையாகவே, குழம்பு பற்றிச் சொல்கிறார். கறி என்றால் மிளகு மாத்திரம் சங்க நூல்களில். ஆனால், தேவர் காலத்தில் உபலட்சணமாக, இனங்குறித்து கூட்டு, பொரியல், குழம்பு என இன்று நாம் சொல்லும் எல்லாக் கறிவகைகளையும் *கறி* என்றே கூறிவந்துள்ளனர். இன்றும் சைவர்கள், சமணர்கள் இல்லங்களில் “கறி கொதிக்கிறது” என்றால் “குழம்பு கொதிக்கிறது” எனக் காண்கிறோம். சான்று தருகிறேன். மஹாராஷ்ட்ரம் போன்ற பஞ்ச த்ராவிட தேசங்களில், கறில் என்கின்றனர். யாழ்ப்பாணத்தில் வண்டில். தமிழ்நாட்டில் வண்டி என்கிறோம். அதுபோல, குழம்புக்கு கறி/கறில் எனும் த்ராவிட வார்த்தைகள் ஐரோப்பிய மொழிகளில் புகுந்தன. இன்றும், போர்ச்சுகீசிய மொழியில் “கறில்” தான்.

தேவர் “கொக்குகிர் நிமிரல் வெண்சோறு ஊட்டுறு கறி” = அப்போது வடித்த நிமிரல் (1) வனமுல்லை போன்ற நீளமான அரிசியால் ஆனது. (2) கொக்கின் நகம் கருமை, ஆனால், அதன் வளைவு போல நிமிரல் வளைந்தது. வாசமதி (Basmati) அரிசி அவ்வாறே ஆதலைக் காண்கிறோம். நிமிரல் சுடுசோற்றில் ஊட்டுறு (= இட்டு நன்கு பிசைந்து உண்ணும்) மரக்கறிக் குழம்பு.

சிந்தாமணிப் பாடலை எவ்வாறு பிரித்தால் பொருள் புரியும் என, உவேசா குறிப்பிட்டுள்ளார்கள்:
கொக்குகிர் நிமிரல் - கொக்கின் நகம்போன்ற நீட்சியையுடைய அவிழ் ; "கொக்குகிர் நிமிர லொக்க லார" (புறநா. 398 : 25) ; "கொக்குகிர் நிமிரல் வெண்சோறூட்டுறு கறி" (சீவக. 2972) நற். 258 : 6.”

ஊட்டுறுதல் - உள்ளே உறுத்துதல் - இங்கே, குழம்பைச் சுடுசோற்றில் இட்டு நன்கு பிசைதல். ஊட்டுறு- என்ற சொல்லைச் சங்க இலக்கியத்தில் பொருள் காண்க. ஐரோப்பிய மொழிகளில் கறி என்ற சொல் 16-ம் நூற்றாண்டில் குழம்பு என்ற பொருளில் நுழைந்து நிலைத்தது (Hobson-Jobson dictionary citation). தமிழில் நல்ல சான்று, சிந்தாமணியில் கிடைக்கிறது. இன்றும், சைவ வெள்ளாளர் வீடுகளில் கறி என்பது மரக்கறிக் குழம்பு. 

நீறுபூசி வேளாளரும், நீறுபூசா வேளாளரும்

***************************************************

தமிழ்நாட்டில் வேளிர் வருகையால் வேளாண் தொழில் சிறப்பாக அமையலாற்று. வேளாண்மைக்கு மழையே மழையால் வரும் நீரே  இன்றியமையாதது. சைவமும், சமணமும் வெள்ளாளர்கள் கொணர்ந்த சமயங்கள். இரண்டுக்கும் ஊடாடல்கள் பல காலமாக நிகழ்கின்றன. சைவ ஆகமங்களில் ஜைந சமயத்தின் தாக்கத்தைக் காண்கிறோம். சைவ உணவு என்பதை ஆருகத (< அர்ஹத்) உணவு என்றே யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றனர். திருக்குறள், நாலடியார் போன்றவை வேளாண் வேதம் எனப் பெயர்பெற்றவை. கொங்குவேளிர் வானவில்லைக் கரந்துறைகோள் என்கிறார். தூளிசாலம் என்ற வானவில் பெயரால் ஜினாலயத்தின் முதலாவதாகிய வெளிமதில் அமைந்துள்ளது என்கிறது மேருமந்தர புராணம்.

இராம நாடகக் கீர்த்தனையின் ஆசிரியர், நீறுபூசி வேளாளர் என்னும் குலமரபு உடையார். அதாவது, சமணத்தினின்றும், சைவத்துள் புகுந்த வேளாளர்கள். அவ்வகையில், விவசாயத்தைக் குலத்தொழில் ஆகக் கொண்ட சீகாழி அருணாசலக் கவிராயரின் “புள்ளிவில்” என்ற சொல், தூளிசாலம் போன்ற பழைய சொற்களையும், தமிழரின் பண்டைய வானவில் கோட்பாடு பற்றி அறியவும் துணை ஆகிறது. இவரது முதல் மகன் அம்பலவாணக் கவிராயர் கொங்குநாட்டில் வாழ்ந்தவர் ஆவார். காங்கேயம் சிவமலைப்புராணத்தில் (தி. அ. முத்துசாமிக் கோனார் பதிப்பு, 1918) விரிவாகக் காணலாம். 

”இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நீறுபூசும் வேளாளர்’ என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர்ச் சைவராக மாறியவர். இவர் நீறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங் களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘மஞ்சுபுத்தூர் செட்டிகள்’ என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியேயுள்ள ‘அமணசாமி’யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.” (சமணமும் தமிழும், மயிலை சீனி வேங்கடசாமி). 

"கீர்த்தனை என்று அந்தப் பாட்டுக்களைச் சொன்னாலும் – ’ராம நாடகக் கீர்த்தனைகள்’  என்றே அந்த ‘ஒர்க்’குக்குப் பெயர் சொல்வதுண்டு; அப்படிச் சொன்னாலும் – அந்தப் பாட்டுக்கள் குறிப்பாக ‘தரு’ (daru) என்ற பாடல் வகையைச் சேர்ந்ததேயாகும். பல பாட்டுக்களைத் தொடர்ச்சியாக அமைத்து ஒரு கதையைச் சொல்லிக் கொண்டு போகிறபோது அந்தப் பாட்டுக்கு ‘தரு’ என்றே தனிப்பெயர் கொடுத்திருக்கிறது.

அருணாசலக் கவிராயர் நான் சொல்லி வந்த சைவ-வைஷ்ணவ ஸமரஸத்தைக் காட்டுபவராக இருப்பதும் ஒரு விசேஷம்! அவருடைய பெயரே, விஷ்ணு அவதாரமான ராமர் கதையைச் சொன்ன அவர் சைவர் என்று காட்டுகிறது. ‘நீறுபூசி வேளாளர்’ என்று விபூதியிட்டுக் கொள்வதை வைத்தே பெயர் ஏற்பட்ட ஸமூஹத்திலே பிறந்தவரவர். ஒரு காலத்தில் ஜைனர்களாக இருந்து அப்புறம் ஹிந்து மதத்திற்கு, அதிலே சைவ மரபுக்கு வந்தவர்களின் ஸமூஹத்துக்கு அப்படிப் பேர். தஞ்சாவூர் ஜில்லா தில்லையாடியில் இருந்த அந்தக் குடிகளில் ஒன்றிலே பிறந்தவரவர். கல்யாணமான பிறகு சீர்காழிக்கு வந்து அங்கேயே கடைசி வரை இருந்தார். அதனால் அவரைச் சீர்காழிக் கவிராயர் என்றே சொல்வதாக ஆயிற்று.

சைவக் குடும்பத்திலே பிறந்த அவர் படித்ததும் – தமிழ், ஸம்ஸ்கிருதம் இரண்டிலும் அவர் நிரம்பவே படித்திருக்கிறார்; அப்படிப் படித்ததெல்லாமும் – சைவ மடமான தர்மபுர ஆதீனத்தில்தான். ஆனாலும், சைவமா, வைஷ்ணவமா என்று பேதம் பாராட்டாத அவருக்கு ராம கதையிலேயே ஒரு தனி ருசி இருந்தது. அதனாலேயே இப்படித் தம்முடைய காவிய ஸ்ருஷ்டியை உண்டாக்கினார்.” (காஞ்சிப் பெரியவர்).

நா. கணேசன்

'கருனை' பற்றிச் சரிவரப் புரிந்து கொள்ளத் தனி இழை தொடங்கி இருக்கிறேன். அங்கே பேசலாம். 

கருங்கண் கருனை, பசுங்கண் கருனை, புலிக்கண் கருனை - ஒரே பொருளன.
கருனைக் கிழங்கின் பொரிக்கறி.

Virus-free.www.avg.com

kanmani tamil

unread,
Oct 22, 2023, 9:24:50 AM10/22/23
to vallamai
இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசி; தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதை போல 'சேரன் வஞ்சன் கொடுத்த 'கொக்குகிர் நிமிரல்' = சுடுசோறு என நிறுவ வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

நெல்லரிசிச் சோறு சமைத்து உண்ட வேந்தர், வேளாளர், திணை மாந்தர் (உழவர், கிழார், பாணர்) எல்லோரும் அன்றாடம் எஞ்சிய சோற்றைப் பழைய சோறாக்கும் பக்குவம் தெரிந்து பதமாக உண்டனர். இது தரம் தாழ்ந்த உணவுமுறையாக அன்று கருதப்படவில்லை.

பசுங்கட் கருனை, கருங்கட் கருனை இரண்டும் ஒரே பொருளன. அப்பெயர்க் காரணம் பின்வருமாறு: பண்டைத் தமிழர் உண்ட ஊன்வகைகள் பலப்பல ஆயினும் அவ்விலங்குகள்/ பறவைகளைப் பதப்படுத்தும் போதும் சமைக்கும் போதும்; கண் நீக்கப்படாது திறந்த நிலையில் நம்மை விழித்துப் பார்ப்பது போல் இருப்பது கருவாடும் மீனும் தான். 

மீனைச் சுத்தம் செய்வோர் செதில்களை நீக்குவர்; இருபுறமும் செவுள்களை நீக்குவர்; குடலை நீக்குவர்; வாயில் பல் இருக்கும் பகுதியை வெட்டி எறிவர்; மேல் அண்ணத்தை ஒட்டிய சவ்வை நீக்கி சமைப்பர். தலை திறந்தநிலைக் கண்களுடனேயே காட்சி அளிக்கும். 

எனவே சோற்றோடு கூட்டும் மீனும் கருவாடும் பசுங்கட் கருனை/ கருங்கட் கருனை எனப்பட்டது. 

ஆடு, மான் முதலிய இறைச்சி வகைகளைப் பதப்படுத்துவதினின்று இது மாறுபட்டது.

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 22, 2023, 9:28:50 AM10/22/23
to vall...@googlegroups.com
கருங்கண் கருனை - கருனைக் கிழங்கில் செய்வது என்பது உரைகாரர் வாக்கு. கருவாடு என்பது புதுசு.

N. Ganesan

unread,
Oct 22, 2023, 9:42:35 AM10/22/23
to vall...@googlegroups.com
On Sun, Oct 22, 2023 at 8:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசி; தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதை போல 'சேரன் வஞ்சன் கொடுத்த 'கொக்குகிர் நிமிரல்' = சுடுசோறு என நிறுவ வேண்டிய தேவை எனக்கு இல்லை. 

நெல்லரிசிச் சோறு சமைத்து உண்ட வேந்தர், வேளாளர், திணை மாந்தர் (உழவர், கிழார், பாணர்) எல்லோரும் அன்றாடம் எஞ்சிய சோற்றைப் பழைய சோறாக்கும் பக்குவம் தெரிந்து பதமாக உண்டனர். இது தரம் தாழ்ந்த உணவுமுறையாக அன்று கருதப்படவில்லை.

உழக்குடிகள் உண்டது பழஞ்சோறு.

அவர்கள் வளமனை, அரண்மனைகளுக்குச் சென்றபோது வள்ளல்கள், வேளிர்கள், அரசர்கள் நிமிரல் விருந்தூட்டினர்.
அது அப்ப்போது சமைத்த சுடுசோறு. குடும்பத் தலைவியர் வீட்டின் தலைவாசலில் நிமிரல் என்னும் சுடுசோற்றைக்
காக்கைகளுக்கு பலிச்சோறு கொடுத்ததும் பார்த்தோம்.

நிமிரல் என்ற சொல் உற்பத்தி, ஏன் அப்பெயர் என விளக்கம் உண்டு.

பசுங்கட் கருனை, கருங்கட் கருனை இரண்டும் ஒரே பொருளன. அப்பெயர்க் காரணம் பின்வருமாறு: பண்டைத் தமிழர் உண்ட ஊன்வகைகள் பலப்பல ஆயினும் அவ்விலங்குகள்/ பறவைகளைப் பதப்படுத்தும் போதும் சமைக்கும் போதும்; கண் நீக்கப்படாது திறந்த நிலையில் நம்மை விழித்துப் பார்ப்பது போல் இருப்பது கருவாடும் மீனும் தான். 

மீனைச் சுத்தம் செய்வோர் செதில்களை நீக்குவர்; இருபுறமும் செவுள்களை நீக்குவர்; குடலை நீக்குவர்; வாயில் பல் இருக்கும் பகுதியை வெட்டி எறிவர்; மேல் அண்ணத்தை ஒட்டிய சவ்வை நீக்கி சமைப்பர். தலை திறந்தநிலைக் கண்களுடனேயே காட்சி அளிக்கும். 

எனவே சோற்றோடு கூட்டும் மீனும் கருவாடும் பசுங்கட் கருனை/ கருங்கட் கருனை எனப்பட்டது. 

பசுங்கண் கருனை, கருங்கண் கருனை, புலிக்கண் கருனை - என்பது கருணைக்கிழங்குப் பொரியல். உரைகாரர்கள் நன்கு விளக்கி உள்ளனர்,

மீன் கண் மாத்திரம் திறந்திருக்கும் என்பது சரியல்ல. அதனால், கருவாடு என்று சொல்வது பொருந்துவதில்லை.

ஆடு பலி ஆன பின்பு, கண்ணைப் பார்க்கவும்:
எருமை பலி ஆன பின்பு, கண்ணைப் பார்க்கவும்:

உரைகாரர்கள் நிமிரல் என்ற சுடுசோறு, தலைவாசலில் பலிச்சோறு என்பதும்,
கருங்கண் கருனை = புலிக்கண் கருனை என்பதும் விளங்குகிறது.

N. Ganesan

unread,
Oct 22, 2023, 10:04:29 AM10/22/23
to vall...@googlegroups.com
ஆயிரக்கணக்கான சிலைகள், ஓவியங்கள் துருக்கை மயிடாசுரமர்த்தனிக்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியாவில் உள்ளன. வெட்டப்பட்ட எருமைத்தலை கண் திறந்திருப்பதைக் காணலாம். தமிழர் மாமன்னர்களில் சிறந்தவர் ராஜராஜ சோழன். அவனது பிரகதீசுவரத்தில் துர்க்கையைப் பார்த்தால், மீன் மட்டுமல்ல, ஆடு, எருமை பலி ஆனாலும் கண் திறந்துள்ளமை காண முடிகிறது,

carving-of-vishnu-durgai-standing-on-a-buffalo-head-base-at-the-brihadishwara-CXYDC7.jpg

மீன் கண் மாத்திரம் திறந்திருக்கும் என்பது சரியல்ல. அதனால், கருவாடு என்று சொல்வது பொருந்துவதில்லை.

ஆடு பலி ஆன பின்பு, கண்ணைப் பார்க்கவும்:
எருமை பலி ஆன பின்பு, கண்ணைப் பார்க்கவும்:

N. Ganesan

unread,
Oct 22, 2023, 10:13:22 AM10/22/23
to vall...@googlegroups.com
>

> மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை 

> உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:

                                   >                                                                     http://ulagatamil.in/நற்றிணை-உழவன்-உண்ட-சத்து/

இப்பொழுது தான் வாசித்தேன். மிக அருமையான கட்டுரை.

சொட்டானம் என்பது சொட்டாணம் என இருக்கணும். நன்றி.

நா. கணேசன்

On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல் 
"பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர். 

பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர். 

அவன் மேலாண்மையில் உழுத நாட்டின் வளம் பற்றிப் பேசும் போது; எவ்வளவு தான் மழை பொய்த்தாலும்; வறட்சி மிகுந்தாலும் விருந்தினர் 
"பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல் 
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி"
மனம் நிறைந்து வாழ்த்துமாறு புறந்தருவான் என்கிறார் நக்கீரர்.

பழஞ்சோற்றுப் பெரும்புகவு = பழைய சோறு என்று ஐயமின்றித் தெளியலாம். 

கொக்குகிர் நிமிரல் = கொக்கின் நகம்போன்ற ? என்பது ஆய்விற்கு உரியது.
(தொடரும்)
சக 

On Sun, 15 Oct 2023, 6:51 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
                                                                         "சோறுவாக்கிய கொழுங்கஞ்சி 
                                                                           யாறுபோலப் பரந்தொழுகி" (பட்டி.44-45)
என்ற அடிகள் காவிரிப்பூம் பட்டினத்து அட்டிற்சாலையில் நெல்லு(அரிசி)ச்சோறு ஆக்கி வடித்த வளத்தைப் பேசுகின்றன. 

நெல்லரிசியால் அன்றாடம் ஆக்கிய சுடுசோற்றைத் தொகைப்பாடல்கள் 'நாட்சோறு' என்கின்றன. 

முதல்நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி மறுநாள் உண்ணும் போது அது 'பொம்மல்' என்று அழைக்கப்பட்டதை நற்றிணை (பா-60) மூலம் அறிகிறோம். 

"தண்புலர் விடியல் 

கருங்கண் வரால் பெருந்தடி மிளிர்வையொடு 

புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு 

கவர்படு கையை கழும மாந்தி” என்கிறார் தூங்கலோரியார். 

மதுரையில் இருந்து வெளியாகும் உலகத்தமிழ் என்னும் காலாண்டு மின்ஆய்விதழின் 2020 ஜூலை மாத வெளியீட்டில் இடம்பெற்று இருக்கும் 'நற்றிணை உழவன் உண்ட சத்துணவு' என்ற என் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்த விரிவான விளக்கம் உள்ளது. கட்டுரையை வாசிக்க:

                                                                                                        http://ulagatamil.in/நற்றிணை-உழவன்-உண்ட-சத்து/

இங்கு பழைய சோற்றுக்குச் சொட்டானமாக வரால் மீன் குழம்பு அமைகிறது.  

(தொடரும்)

சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Virus-free.www.avg.com

N. Ganesan

unread,
Oct 24, 2023, 8:01:29 AM10/24/23
to vall...@googlegroups.com
On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர

அவித்தல், உவித்தல் - வினைச்சொற்கள் ஆராயத்தக்கன. அவியல் அவித்தல் ஆவியில் வேகவைப்பது. இட்டிலி, சந்தகை (இழையப்பம் > இடியப்பம்.) பிட்டு (புட்டு, கேரளம்)  அவித்துச் சமைப்பவை.
இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம்.  Murugan, Agananuru, piRagu, ... 

உவித்தல்  - நீரில் இட்டு   கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு -  humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்:  "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை அவித்துச் செய்யும் கறி (= குழம்பு).  

புல்லி >> பல்லி ஆவது போல, உவியல் > அவியல், ஆவியில் சமைக்கும் முறையுடன் உவியலும் தற்காலத்தில் அவியல் என்கிறோம்!! :-)  ஈழத் தீவில் உவியல் என்ற சொல் இன்றும் புழங்குகிறது.
(1)  கருனை - கருக்குவது ‘to fry' "வறைக் கருனை” என இரு சங்கச் செய்யுளிலும், “(பசும்/கரும்) கண் கருனை" எனக் கருங்கண் கொண்ட கருனைக் கிழங்கின் பொரிக்கறி இருமுறை சங்கச் செய்யுளில் உள்ளது.
(2) சால்-/சார்- சால்பு : சான்றோன் என ஒருபொருளும், தாழ் (பனை, தென்னை) மரங்களில் ஏறும் போது பயன்படும் தளைக்கயிறு, சான்று/சான்றம் (< சால்-) சாணம் என ஆகிறது. சான்றான் எனக் கள்ளிறக்குவோர் கல்வெட்டுகள் பலவற்றில் குறிப்பிடப்படுவர். வரி நீக்கி அறிவிக்கும். இன்றும் கள் இறக்குவதற்குத் தடையோ, வரியோ கூடாது என ஒரு அரசியல் இயக்கம் இருக்கிறது (Cf. Tasmac).

மேலே கொடுத்துள்ள காட்டுகள் போல, ஒரு சொல், இரு வேறுபட்ட பொருள்களைத் தரும் சொற்களைத் தொகுக்கலாம்.
(3) சுப்பு/சப்பு >> சுவை, உப்பு, உப்பளம்/உம்பளம் ... இவை ஒரு தொகுதி.
சூம்பு-/சும்பு- >> உம்- > உவி-தல் 'to boil away', உவியல், உப்பு- உப்புசம், உப்பரி, ...

அவித்தல், உவித்தல் - வேறுபாடு உண்டு. இலங்கை தவிர, வேறுபாடு மறைந்துவருகிறது.

பிற பின்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 24, 2023, 8:48:13 AM10/24/23
to Santhavasantham, palaka...@gmail.com, Arumuga Tamilan Karu, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, stalingun...@gmail.com
கோடி, தாழ் :: தாடி, ... போல, தெலுங்கால் சென்னையில் இழையப்பம் > இடியப்பம் ஆகியுள்ளது. இட்டிலி, சந்தகை (இழையப்பம்/இடியப்பம்), பிட்டு (புட்டு, கேரளம்)  அவித்துச் சமைப்பவை. இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம்.  Murugan, Agananuru, piRagu, ... தமிழ் அறிஞர், அரசியல் விமரிசகர் பழ. கருப்பையாவுக்கு எழுதின மடல்:

உவித்தல்  - நீரில் இட்டு   கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு -  humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்:  "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை உவித்துச் செய்யும் கறி (= குழம்பு).  

On Tue, Oct 24, 2023 at 7:02 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Mon, Oct 16, 2023 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> 'பொம்மல் பெருஞ்சோறு' என நற்றிணை-60 குறிப்பிடும் பழையசோற்றைப் புறம்.395ல்
> "பழஞ்சோற்றுப் பெரும் புகவு" என்கிறார் நக்கீரர்.
>
> பிடவூர் கிழான் மகன் பெருஞ் சாத்தன் உறந்தை மாநகர்க்குக் கிழக்கே நெடுங்கை வேண்மான் எனும் குறுநில மன்னனுக்காக வயலில் இறங்கி உழுத உழவர்களின் தலைவன் ஆவான். அவனது ஊரைச் சார்ந்த உழவர் தாம் உண்ட பழைய சோற்றுக்குக் குறுமுயலின் கறியைக் குழைவாகச் சுட்டும்; வாளை மீன்களை உவித்தும் (வேக வைத்தும்) சேர்த்து உண்டனர

அவித்தல், உவித்தல் - வினைச்சொற்கள் ஆராயத்தக்கன. அவியல் அவித்தல் ஆவியில் வேகவைப்பது. இட்டிலி, சந்தகை (இழையப்பம் > இடியப்பம்.) பிட்டு (புட்டு, கேரளம்)  அவித்துச் சமைப்பவை.
இன்றும் தெலுங்கின் தாக்கம் தமிழில் அதிகமாய் உள்ளது. உதாரணமாக, இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க் மெய், தமிழின் ஒலிப்பு இல்லாவிட்டாலும், -g- என எழுதுவதைக் குறிப்பிடலாம்.  Murugan, Agananuru, piRagu, ... 

உவித்தல்  - நீரில் இட்டு   கொதிக்கச் செய்து, வற்ற வைத்து ஆக்கும் உணவு. சும்புதல் :: வாடிச் சுருங்குதல்/வற்றுதல். உவித்தல் (உவியல்), உப்பு- உப்பரி - 'to boil'. இந்த அறை ஒரே உப்புசமா இருக்கு -  humidity-ஆல் வேர்த்துப் புழுங்கச் செய்யுமிடம். உவித்தல் = புழுக்குதல். புழுங்கல் அரிசி செய்முறை “உவித்தல்” தான். வாளை மீனை நீரில் இட்டுக் கறி (குழம்பு) சமைத்தனர்:  "நெடு வாளை பல் உவியல்" – புறம் 395/4.
பலவான, நெடிய வாளை மீன்களை உவித்துச் செய்யும் கறி (= குழம்பு).  

kanmani tamil

unread,
Oct 25, 2023, 12:12:19 AM10/25/23
to vall...@googlegroups.com
பசுங்கட்கருனை / கருங்கட் கருனை மீன் எனக் கருதக் காரணமாகும்... வஞ்சிர மீன் கருவாடு . இதே போல் எந்தக் கருவாடாக இருந்தாலும் இப்படித்தான் திறந்தநிலையில் கண்கள் நம்மை விழித்துப் பார்ப்பது போல் இருக்கும்.

சக 
   
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 25, 2023, 12:28:25 AM10/25/23
to vall...@googlegroups.com
ஊளிமீன் கருவாடு 

சக 
 
N. Ganesan

unread,
Oct 25, 2023, 3:04:52 AM10/25/23
to vall...@googlegroups.com
On Tue, Oct 24, 2023 at 11:12 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பசுங்கட்கருனை / கருங்கட் கருனை மீன் எனக் கருதக் காரணமாகும்... வஞ்சிர மீன் கருவாடு . இதே போல் எந்தக் கருவாடாக இருந்தாலும் இப்படித்தான் திறந்தநிலையில் கண்கள் நம்மை விழித்துப் பார்ப்பது போல் இருக்கும்.

உணங்கல் எனச் சங்க நூல்களில் கருவாடு கூறப்படுகிறது.

கருனைக் கிழங்கு கண் போன்ற பூ உடையது. கருங்கண்/புலிக்கண்/பசுங்கண் என்பது இக்கிழங்கின் வர்ணனை.
 
Virus-free.www.avg.com

kanmani tamil

unread,
Oct 25, 2023, 5:13:11 AM10/25/23
to vallamai
உணங்கல் என்பது பொதுப்பெயர் (நன்றி: tamilconcordance). 
மீன் உணங்கல், வெண்ணெய் உணங்கல், தினை உணங்கல்,  மான் உணங்கல் எனப் பல உள்ளன. வெய்யிலில் காய வைக்கும் அனைத்து ஊனும் தானியமும் உணங்கலே. 

பழைய சோற்றுக்கு இணையாகும் கூட்டாகச் சுட்ட மீன் உணங்கல் அமையும் போது அது 'பசுங்கட் கருனைச் சூடு' / கருங்கட் கருனைச் சூடு என்று குறிப்பிடப் படுகிறது. 

'புலிக்கட் கருனை' = கருனைக் கிழங்கு 

சேரன் வஞ்சன் பழைய சோற்று விருந்து வைக்க மாட்டான் என்ற கொள்கை 21ம் நூற்றாண்டைச் சேர்ந்த மக்களின் கொள்கையைக் காட்டுகிறது (குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனின்; அது முனைவர் கணேசனின் கொள்கை.). அவ்வளவு தான். தொகை இலக்கியப் பாடல்களின் உயிரோட்டமான அன்றைய மனநிலையைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

இந்த வாதத்திற்கு நான் முற்றுப்புள்ளி வைக்கிறேன். இனி தொடர்ந்து 'சுடுசோறு.

சக 

kanmani tamil

unread,
Oct 26, 2023, 4:18:11 AM10/26/23
to vallamai
சுடுசோறு எனும் பெயர் வழக்கு தொகைஇலக்கியத்தில் இல்லை. 

நெல்லுச்சோறு என்ற வழக்கு இன்றுவரை பேச்சுவழக்கில் உள்ளது. 

இன்று சோற்றை வெண்சோறு என்ற பொருளில் white rice என அழைக்கும் வழக்கம் தொகைப்பாடல்கள் தோன்றிய காலத்திலேயே உள்ளது (சிறு.194). 
"அவைப்பு மாண்அரிசி அமலை வெண்சோறு"க்கு 
நண்டுக் குழம்பு ஊற்றிச் சாப்பிடுவது பற்றி "அலவன் கலவை" (சிறு.195) எனப் பாடி இருப்பதில் 'கலவை' ஊற்றிப் பிசைந்து உண்ணும் தமிழர் உணவுப் பழக்கத்தை எடுத்துச் சொல்கிறது. 
இங்கு கலவை = குழம்பு 

வரால் மீன் குழம்பு வைக்கும் வழக்கம் நற்றிணை 60ல் காணப்படுகிறது (அப்பாடலில் அது பழைய சோற்றுக்குச் சொட்டாணம் ஆவதால் மிளிர்வை எனப்படுகிறது.).

சோற்றுக்கு ஊற்றிப் பிசைந்து உண்ண மோர்க்குழம்பு சமைக்கும் தலைவியை குறு.167ல் காண்கிறோம். 

"ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும்" (புறம்.215)
என்றும் மோர்க்குழம்பு பேசப்படுகிறது.

குழந்தைக்குப் பால் விட்டுப் பிசைந்து சோறூட்டும் வழக்கத்தை நெடுஞ்செழியன் பற்றிய பாடல் காட்டுகிறது. "பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே" என்ற புறம்.77 பாடலடியால் அறிகிறோம்.

அமலை என்ற பெயர் நெல்லரிசிச் சோற்றைக் குறிக்கப்; பழைய சோறும் சுடுசோறும் முறையே 'பழஞ்சோற்று அமலை' என்றும் (பெரு.224) அமலை வெம்சோறு' என்றும் (அகம். 196) குறிக்கப்பட்டு உள்ளன. 

"எயிற்றியர் அட்ட 'இன்புளி வெம்சோறு"ம் (சிறு.175) இங்கு குறிப்பிடத் தக்கது. இது இன்றைய புளியோதரை எனச் சொல்லத் தக்கது. 

வெம்சோறு என்ற தொடர் ஊன்சோற்றைக் குறிக்கவும் பயன்பட்டு உள்ளது. ஈயலை வறுத்துத் தயிரோடு சேர்த்து அடும் "இன்புளி வெம்சோறு" (அகம்.394) பற்றிக் கறிச்சோறு பற்றிய இழையில் கண்டோம். 

ஊன்சோறு அன்றாடம் சமைத்து உண்பது ஆகையால்; (ஊன்சோறில் பழைய சோறு கிடையாது.) அது நாட்சோறு எனப் பெயர் பெற்றது (புறம்.379). ஓய்மான் வில்லியாதன் அளித்த பன்றிக்கறிச் சோற்றைப்  புறத்திணை நன்னாகனார் நாட்சோறு என்கிறார். இதனால் சுடுசோற்றுக்கு 'நாட்சோறு' எனும் பெயரும் பொருந்துகிறது. 

அறுசுவை விருந்திற்கு ஆதாரம் ஆகும் நெல்லரிசிச் சோறு (இனி வரும்)

சக 

kanmani tamil

unread,
Oct 26, 2023, 9:17:03 PM10/26/23
to vallamai
"கருங்கட் கருனைச் செந்நெல் வெண்சோறு" (நற்.367)
"முள்அரித்து இயற்றிய வெள்அரி வெண்சோறு (மலை.465)
"மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு" (பதிற்.12)
"உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு" (அகம்.60)
"வால்நிணம் உருக்கிய வால்வெண் சோறு" (அகம்.107)
"மைப்பு அறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு" (அகம். 136)
"புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக" (புறம்.61)
"துடுப்பொடு  சிவணிய களிகொள் வெண்சோறு" (புறம்.438)
"போகுபலி வெண்சோறு போல" (புறம்.331)
எனும் பாடலடிகளில் இன்றைய white rice அழகிய தமிழில் இடம் பெற்றுள்ளது. 
(நன்றி: tamilconcordance)
சக 

N. Ganesan

unread,
Oct 27, 2023, 8:55:02 AM10/27/23
to வல்லமை
செஞ்சோறு - ஆட்டுக் குருதியை - திருமுருகு போல - பலி கொடுத்து, சோற்றில் பிசைந்து 
காக்கைகளுக்குப் பலிச்சோறு தருவதும் சங்க நூல்களில் கிடைக்கிறது.

kanmani tamil

unread,
Oct 27, 2023, 10:41:48 AM10/27/23
to vallamai
நெல்லரிசிச்சோறு பொருளாதார மேம்பாட்டின் அடையாளமாக இருந்தது.
வேந்தரும் வேளிரும்  விருந்தளித்த நெல்லுச்சோறு நீளமாக, வெண்மையாக,  முரியாது இருந்தது. கிள்ளி வளவனிடம் உண்ண விரும்பிய விருந்து பற்றிப் பேசும் ஐயூர் முடவனார் நீராகாரத்தை உலையாக ஊற்றிச் சமைத்த; பாதிரிப்  பூங்கொத்து மொட்டுகள் ஒருங்கு  இதழ் விரிந்தாற் போலத்  தோன்றும் வெண்மையான முரியாத நெல்லரிசிச்சோறுக்கு  ஆசைப்படுவதைக் காண்கிறோம்.
"அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி
காடி வெள் உலை கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி
மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை	5
செறுவின் வள்ளை சிறு கொடி பாகல்
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன
மெய் களைந்து இனனொடு விரைஇ...
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ் புழுக்கல்"புறம்.399
மாங்காய்ப்புளி கூட்டிய வரால்  மீனோடு உண்ண விரும்புவதால் அது இன்றும் பெருமை பொருந்தியதாகக் கருதப்படும் வரால் மீன் குழம்பு என்பது பெற்றோம் (புளிப்பு...).

அதைத் தொடர்ந்து பருந்துண்டுகளாக வெட்டிய  சுறாமீனைச்  சொல்வது அது மசாலோடு எண்ணெயில் பொரித்தது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது (கார்ப்பு...).

வயல் வரப்பில் கிடைத்த வள்ளைக் கீரைக் கடைசல் (உவர்ப்பு...)

சிறுகொடிப் பாகல் (பருப்போடு) கூட்டு (கசப்பு...)

பாடல் சிதைந்து இருப்பதால் எஞ்சிய துவர்ப்பு, இனிப்புச் சுவைக்கு உரிய உணவுப் பொருள்கள் எவை எனத் தெரியவில்லை (நெல்லரிசிச் சோற்றின் மாவுச்சத்து மிகுதியை...
இனிப்புப் பதிலியாக ஏற்கலாமா?).

அறுசுவை விருந்திற்கு ஆதாரமாக அமைந்தது நெல்லுச்சோறு என்பதை மறுக்க முடியாது.

சக

kanmani tamil

unread,
Oct 28, 2023, 12:02:58 PM10/28/23
to vallamai
நெல்லுச்சோற்றின் வேறுபட்ட தன்மைகளும் மேன்மையும்:
ஆரியர்  நெல்லைப் புழுக்குவதை  ஆரியர் அல்லாதாரிடம் கற்றனர் (Dayal N.Harjani aka Daduzen, Sindhi Roots& Rituals Part l, (2018), Chap. ll, p.10) என  ஆய்வாளர் சொல்வது திராவிடரைக் குறிக்கிறது.

குறுநில மன்னன் ஆகிய  தொண்டைமான் இளந்திரையன் செந்நெல் அரிசியைப் புழுக்கி விருந்து  அளித்தான். ‘பெருஞ் செந்நெல்லின் தெரிகொள் அரிசித்  திரள்நெடும் புழுக்கல்’ எனப் பெரும்பாணாற்றுப்படை அடி-474ல் அவ்வரிசியின்  நீளத்தைப்  பேசுகிறது. 

எயினர் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் சிவந்த பருத்த அரிசிச் சோற்றை விருந்தினர்க்கு அளிக்கின்றனர் (பெரு.அ.131-133).

 தவிட்டுச்சத்து நீங்காத கைக்குத்தல் அரிசியில் வெந்த சோறு எண்ணெய்ப் பசையுடன் இருக்கும். இதை 

“மைப்பறப் புழுக்கின் நெய்க்கனி வெண் சோறு” (அகம்.136) என்ற பாடலடி காட்டுகிறது. இது ஒரு மணவிருந்தின் வருணனை ஆகும். மேற்சுட்டிய பாடலடிக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டாரும் ரா.வேங்கடாசலம் பிள்ளையும் 'இறைச்சி கூட்டி ஆக்கிய வெள்ளிய சோறு' என உரை கூறியுள்ளனர். ஆனால் ஆலையில் இயந்திரத்தால் தவிடு நீக்கி வெண்மை கூட்டும் அரிசியை விடக் (polished rice);  கைக்குத்தல் அரிசியில் சோறு ஆக்கினால் அது எண்ணெய்ப் பசையுடன் (rice bran oil) இருப்பது  அனுபவத்தில் காணும் நடைமுறை உண்மை. எனவே இங்கு இடம்பெறும் புழுக்கு ஊன்புழுக்கு அன்று; அதனால் நெய் ஊனிலிருந்து உருகிய கொழுப்பும் அன்று. பாடல் தோன்றிய காலம் கைக்குத்தல் அரிசி மட்டும் புழங்கிய காலம் ஆதலால்; நெல்லரிசிப் புழுக்கு என்பதே பொருந்தும்.

இரண்டு வேளையும் வரகுச்சோறே உண்ட பாணர்க்குக் கிள்ளிவளவன் அரிசிச்  சோறாம் ‘அமலை’ உண்ணுமளவு பொருள் கொடுத்தான் என்கிறது புறம்.34. நெல்லுச் சோறு சாப்பிடுவது வாழ்க்கைத் தரம் உயர்ந்தமைக்கு உரிய அடையாளமாகக் கருதப் பட்டது. 

சக

kanmani tamil

unread,
Oct 30, 2023, 11:49:14 AM10/30/23
to vallamai
///நிமிரல் ஒலிக்குறிப்பால் சுடுசோற்றுக்கு வரும் பெயர் ஆகும்./// Dr.Ganesan wrote on 18th Oct. 
இந்தக் கொள்கை தவறு என்பதைப் பின்வரும் மேற்கோளும் விளக்கமும் உணர்த்துகிறது. 

முடத்தாமக் கண்ணியார் தன்னை ஆற்றுப்படுத்திய பொருநன் கரிகாற் பெருவளத்தானிடம் உண்டமை பற்றிப் பாடுகிறார். 
...முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பொரு.அ.112-114

முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)

முரவை போகிய = தீட்டிய 

முரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசி 

விரல்என நிமிர்ந்த... புழுக்கல்= விரல் போல நீண்டு வெந்த...

எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் போது; 'நிமிரல்' ஒலிக் குறிப்பால் உருவான பெயர் அன்று என்பதும்; அது அரிசி வேகும் போது அளவால் நீண்டு விரல் போலக் காணப்படுவதால் உருவான பெயர் என்றும் புரிகிறது. 
சக 

seshadri sridharan

unread,
Oct 31, 2023, 1:04:31 AM10/31/23
to vall...@googlegroups.com
On Mon, 30 Oct 2023 at 21:19, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///நிமிரல் ஒலிக்குறிப்பால் சுடுசோற்றுக்கு வரும் பெயர் ஆகும்./// Dr.Ganesan wrote on 18th Oct. 
இந்தக் கொள்கை தவறு என்பதைப் பின்வரும் மேற்கோளும் விளக்கமும் உணர்த்துகிறது. 

முடத்தாமக் கண்ணியார் தன்னை ஆற்றுப்படுத்திய பொருநன் கரிகாற் பெருவளத்தானிடம் உண்டமை பற்றிப் பாடுகிறார். 
...முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பொரு.அ.112-114

முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)

முரவை போகிய = தீட்டிய 

முரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசி 

விரல்என நிமிர்ந்த... புழுக்கல்= விரல் போல நீண்டு வெந்த...

எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் போது; 'நிமிரல்' ஒலிக் குறிப்பால் உருவான பெயர் அன்று என்பதும்; அது அரிசி வேகும் போது அளவால் நீண்டு விரல் போலக் காணப்படுவதால் உருவான பெயர் என்றும் புரிகிறது. 
சக 

பாசுமதி அரிசி நீண்டு இருக்கும் அதை பொங்கினால் இன்னும் நீளும்  

kanmani tamil

unread,
Oct 31, 2023, 1:18:41 AM10/31/23
to vallamai
ஆம் ஐயா 
சக

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 1, 2023, 11:25:09 AM11/1/23
to vallamai
 "கறி கொதிக்குது, பொறுத்திரு” என்கிற போது, கறி = குழம்பு.
எல்லா திராவிட மொழிகளிலும் இப்பயன்பாடு உள்ளது.
நிமிரல் வெண்சோற்றுக்கு பிசையும் குழம்பு எனச் சொல்ல,

“நிமிரல் வெண்சோறு ஊட்டுறு கறி” எனப் பாடியுள்ளார்.
தேமா கொள் கனி - மாம்பழம் என விளக்குகின்றனர் உரையாசிரியர்கள்./// Dr.Ganesan wrote on 22nd Oct.

பொருள் துல்லியமாக அமையவில்லை. 

கோட்புலிச் சுழல்கண் ணன்ன கொழுஞ்சுவைக் கருனை = புலியின் சுழல்கின்ற கண்ணை ஒத்துக் காணப்படும் சேனைக்கிழங்கின் பூவைப் பொரிக்கறி ஆக்கி...

முல்லை/மோட்டிள முகையின் மொய்கொள் கொக்குகிர் நிமிரல் வெண்சோறு = முல்லையின் வளைந்த முகைகளைப் போலத் திரளாகத தோன்றி; நீரில் அமிழ்ந்து கிடக்கும் கொக்கின் உகிர் போல நீரில் மூழ்கி ஊறி இருக்கும் நீளமான வெண்சோறு (பழையசோறு);

ஊட்டுறு கறிகொ டேமாங் கனிசுவைத் தயிரோ டேந்தி = அதை உண்பதற்கு இணையான கறியாகத் தேமாங்கனியைச் சுவைமிகுந்த தயிரோடு ஏந்தி...

இப்பவும் 'கொக்குகிர் நிமிரல்' பழைய் சோறு என்று தான் பொருள்படுகிறது. 

'நிமிரல்' என்று மட்டும் குறித்து இருந்தால்; அது சுடுசோறு. 

'மாதா ஊட்டாத சோறை மாம்பழம் ஊட்டும்'- (ஊட்டுறு கறி); எங்கள் ஊர்ப் பக்கம் இன்று வரை வழங்கும் சொலவடை.

சக

kanmani tamil

unread,
Nov 5, 2023, 7:28:32 PM11/5/23
to vallamai
///செஞ்சோறு - ஆட்டுக் குருதியை .... பலி கொடுத்து, சோற்றில் பிசைந்து காக்கைகளுக்குப் பலிச்சோறு தருவதும் சங்க நூல்களில் கிடைக்கிறது/// Dr.Ganesan wrote on 27th October 

"குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு" (பதிற்.88)
தெய்வத்திற்குப் பலியாகப் படைத்த குருதி அளைந்த சோறு 

"செஞ்சோற்ற பலி மாந்திய கருங்காக்கை" (பொரு.183)

சக 

kanmani tamil

unread,
Nov 6, 2023, 11:23:48 AM11/6/23
to vallamai

தனித்தன்மை வாய்ந்த கொக்கின் உகிர் 

Wading birds such as cranes and herons have long toes to help them walk through soft bottoms in wetlands in search of food... நீர்நிலையிலோ சேற்றிலோ கொக்கு இரைதேடும் போது அதன் நகங்கள் மட்டுமே புதைந்து இருக்கும்; பாதங்கள் புதையாத வகையில் கொக்கின் நகங்கள் வடிவம் பெற்று உள்ளன என்பது நோக்கத்தக்கது. 

இத்தகு புதைநிலையே நீரில் ஊறும் சோறுக்குக் கொக்கின் உகிர் உவமையாக உருவெடுக்கக் காரணம் ஆகி உள்ளது. 

https://www.tnwatchablewildlife.org/files/DiscoverBirds_4_beaks_and_feet.pdf

The long legs of the crane and stork help them to wade into ponds and streams to catch and eat small water animals. The feet have long toes to help the bird to walk at the bottom of water bodies when searching for food. https://www.simply.science/index.php/6932-k4/science/birds-their-feathers-beaks-claws/feet-of-the-birds/27568-feet-of-the-birds

சக 

seshadri sridharan

unread,
Nov 7, 2023, 12:11:53 AM11/7/23
to vall...@googlegroups.com
On Mon, 6 Nov 2023 at 21:53, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

தனித்தன்மை வாய்ந்த கொக்கின் உகிர் 

கொக்கின் உகிர் போல வளைந்த சோற்றுப் பருக்கை.  உல்+ கு + உக்கு > உகு > உகு + இர் = உகிர். உலவு வளை கருத்தில் அலைதல், திரிதல்.  அல் > அலகு - வளைந்த பறவை மூக்கு.

kanmani tamil

unread,
Nov 9, 2023, 3:52:59 AM11/9/23
to vallamai
ஒரே பாடலில் 'பழஞ்சோற்றுப் புகவு'ம் 'கொக்குகிர் நிமிரலு'ம் இடம் பெறுவதால் அவற்றுக்கு இடையே நுட்பமான பொருள் வேறுபாடு இருக்க வேண்டும் என்பது துணிபு. 
புறநானூறு-395ல் 

மென்_புலத்து வயல் உழவர் 
வன்_புலத்துப் பகடுவிட்டுக் 
குறு முயலின் குழைச்சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழம் சோற்றுப் புக வருந்தி.....   
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் 
பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி
என நக்கீரர் பாடி இருப்பதில் இருந்து...
இன்று நாம் பழைய சோறு என்று பொதுவாகப் பேசும் நீரில் ஊறிய சோற்றில் மூன்று படிநிலைகள் இருந்தன எனக் கருத வேண்டி உளது. 

நிமிரல் - சுடுசோறு 

கொக்குகிர் நிமிரல் - ஒரு இரவுப் பொழுது நீரில் ஊறி விறைத்த சோறு 

பொம்மல் பெருஞ்சோறு - நீரில் ஊறியதால் பொருமிப் பெரிதாகிய சோறு

பழஞ்சோற்றுப் புகவு - பழையது எனக் கருதப்பட்ட சோறு. 

இன்றைய சமூகத்தில் ஆக்கிய சோறு ஆறி நீர் ஊற்றி விட்டாலே அது பழைய சோறு. ஆனால் அன்றைய தமிழ்ச் சூழலில்...
நிமிரல் >>> கொக்குகிர் நிமிரல் >>> பொம்மல் பெருஞ்சோறு >>> பழஞ்சோறு 
என்ற படிநிலைகள் இனம் காணப்படுகின்றன.

இது எனது கருதுகோள் தான். 

இதை நிறுவ செய்முறை ஆதாரங்கள் தேவை. அடுத்த கட்டமாகச் செய்முறைப் படங்களோடு தொடரலாம். 

சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Nov 15, 2023, 7:53:21 AM11/15/23
to vallamai
பாரம்பரிய முறைப்படி சமைத்துச் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனில்; அதற்குக் கைக்குத்தல் அரிசியே ஏற்றது. ஏனெனில் இன்றைய இயந்திரத் தீட்டல் முறை (machine polished) அக் காலத்தில் இல்லை. 

அதோடு நீராவி அழுத்தச் சமையலும் (pressure cooking) அத்தகு சோதனைக்கு ஏற்றது அன்று. பொங்கி வடித்த சோறே சரியாக முடிவு செய்ய ஏற்றது. 

கைக்குத்தல் அரிசியைத் தேர்ந்து சமைப்பவர் இன்றும் உள்ளனர் (கடந்த ஏழு ஆண்டுகளாக நானும் அப்படியே...). பின்வரும் காணொலி மாதிரி சமைத்துச் சோறை முறைப்படி நீரில் ஊற வைத்துப் பார்க்கலாம். 

சக 

kanmani tamil

unread,
Nov 16, 2023, 1:47:23 AM11/16/23
to vallamai
எங்கள் ஊரில் இரண்டே இரண்டு கடைகளில் மட்டும் தான் கைக்குத்தல் அரிசி கிடைக்கிறது.  இத்துடன் இணைத்திருக்கும் படத்தில் காண்பது போல் பழுப்பு (ப்ரௌன்) வண்ணத்தில் இருக்கும். இது தீட்டப்படாதது... அதாவது உமியை மட்டும் நீக்கி விட்டுச் (unpolished) சந்தைப் படுத்துவது. அதனால் தான் இந்த நிறம். இப்போது நான் இதை ஊறப் போடுகிறேன். மணி பகல்12 ஆகி விட்டது. சோறு வடித்தவுடன் 'நிமிரல்' எனும் சுடுசோற்றுக்கு உரிய விளக்கம் பொருந்துகிறதா? எனப் பார்ப்போம். 

சக

kanmani tamil

unread,
Nov 16, 2023, 11:04:49 AM11/16/23
to vallamai
சாலப் பொருந்துகிறது. பாரம்பரிய முறைப்படி சோறு பொங்கி வடித்து இருக்கிறேன் (இணைப்பில் படம் உள்ளது.)
.
வெந்த சோற்றுப் பருக்கை ஒன்றை ஒரு அரிசியோடு சேர்த்து ஒரு தட்டில் வைத்து ஒப்பிட்டுக் காட்டி இருக்கிறேன். அரிசி நீண்டு (நிமிர்ந்து) பருக்கை ஆகி உள்ளது. பருக்கை என்ற பெயருக்கு ஏற்பப் பருத்தும் உள்ளது (இணைப்பில் படம் உள்ளது.).

அத்துடன் அப்பருக்கை வளைந்தும் உள்ளது காண்க.

பாரம்பரிய முறையில் ஒரு பருக்கையை எடுத்து விரலால் நசுக்கிப் பார்த்து தான் வேக்காட்டைச் சோதித்தேன். என் ஆட்காட்டி விரலில் மென்மையாக நசுங்கிய பருக்கை உள்ளது. சோறு நன்கு குழைந்து வெந்து உள்ளது. என் நடுவிரலில் நசுக்காத பருக்கை உள்ளது. 

சோறு நன்கு ஆறி விட்டது. எஞ்சிய சோற்றுக்கு உப்பு, மோர் விட்டு சோற்றை உதிர்த்து நன்கு மூழ்க நீர் ஊற்றி விட்டேன். ஒரு இரவு ஊறட்டும். நாளை சோற்றின் பதம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

சக  

kanmani tamil

unread,
Nov 16, 2023, 11:07:50 AM11/16/23
to vallamai

விடுபட்ட படம் இதோ....
சக 

kanmani tamil

unread,
Nov 18, 2023, 9:55:26 AM11/18/23
to vallamai
இன்று காலை எழுந்தவுடன் எடுத்த படத்தை இத்துடன் இணைக்கிறேன். 

இப்போது பருக்கைகளில் கொக்கின் நகம் போன்ற வளைவு கிட்டத்தட்ட மறைந்து விட்டது. அத்துடன் சோற்றுப் பருக்கைகள் பொருமிப் பெரிதாவதால் ஓரம் முழுதும் பிதிர்ந்து காணப்படுகிறது. இது தான் 'பொம்மல்' என்ற பெயரின் காரணம் எனலாம். 
நற்றிணை உழவன் உண்டது இந் நிலையில் இருந்த சோறு தான். 

கிட்டத்தட்ட எனது கருதுகோள் (hypothesis) சரி தான் என்று சொல்லக்கூடிய நிலைக்கு வந்து விட்டோம்.

பி.கு.:இந்த செய்முறைக்கு நான் மழைநீரையே உலையாக ஊற்றினேன் (மழைநீர் சேமிப்புக் கிடங்கில் இருந்து உயரே அதற்கெனவே உள்ள தொட்டியில் ஏற்றிப் பின்னர் சமையலுக்கு உபயோகிப்பது என் பழக்கம்.). ஏனென்றால் சோறு சமைக்கும் போது நாம் பயன்படுத்தும் நீரினால் சோற்றின் தன்மை, நிறம் எல்லாம் மாறுபடும். பாரம்பரியம் மாறக் கூடாது என விறகு அடுப்பை மூட்ட முயன்றேன்; ஆனால் தொடர் மழை காரணமாக ஒரு சுள்ளி கூடப் பற்றவில்லை. கரி அடுப்பைப் பற்ற வைக்க மண்ணெண்ணெயும் கிடைக்கவில்லை. வேறு வழி இன்றி LPG அடுப்பில் ஆக்க வேண்டியதாயிற்று. 

இனி நாளை காலை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
சக 
.

On Fri, 17 Nov 2023, 6:22 pm kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:
இன்று காலை எழுந்தவுடன் எடுத்த படமும் காணொலியும்...

பருக்கையின் அளவில் மாற்றம் இல்லை. அதைக் காட்டத் தான் ஒரு தேக்கரண்டி சோறும் ஒரு பருக்கையும் இடையில் ஒரு அரிசியும் வைத்துக் காட்டி இருக்கிறேன். நேற்றைய பருக்கையின் அளவோடு இதன் அளவை ஒப்பிட்டுப் பார்க்க... மாற்றம் ஏதும் இல்லை. சோறு இன்னும் பொருமிப் பொம்மல் ஆகவில்லை. 

 அடுத்து ஒரு பருக்கையை இரு விரல்களால் மூன்று முறை நசுக்கியும் அது மசியவில்லை... சோறு விறைப்புடன் இருக்கிறது. (காணொலி:இணைப்பில்) அதனால் தான் பண்டைத் தமிழன் 'கொக்குகிர் நிமிரல்' என்று பெயர் வைத்து இருக்கிறான். 

எனவே நிமிரல் = வெந்த சோறு.; கொக்குகிற நிமிரல் = ஓர் இரவு ஊறிய சோறு 

இந்தக் கொக்குகிர் நிமிரலைத் தான் சேரன் வஞ்சனும் கரிகால் பெருவளத்தானும் விருந்தினருடன் சேர்ந்து உண்டனர் எனலாம்.

இந்தக் கொக்குகிர் நிமிரலுக்கு இணையாகச் சேர்த்து உண்ணத் தக்கவையாகத் தொகையிலக்கியம் காட்டுவன... 

1. சுட்ட கருவாடு (ஏற்கெனவே பதிந்தது... சில மாற்றங்களுடன்...)
புலவர்க்குப் 'பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரலு'க்கு உரிய இணையாகப்  ‘பசுங்கட் கருனைச்'  சூடு அளிக்கிறான்   பிடவூர் கிழான்மகன் பெருஞ் சாத்தன் என்ற உழவர் தலைவனைப் பெரிதும் மதிக்கும் இன்னொரு கிழான்... பாடலில் அவன் பெயர் இல்லை (புறம்.395). பசிய கண்ணை உடைய மீனின் சூடு அங்கே இணை சேர்கிறது.
சூடு = சுட்டது; பசிய கண்ணை உடைய கருனை (கூட்டு)= கருவாடு. 

இந்த இணை இன்று வரை மக்கள் மத்தியில் தன் பெரும் செல்வாக்கை இழக்கவில்லை.

2. உப்புக்கண்ட வறுவல் 
முடத்தாமக் கண்ணியார் தன்னை ஆற்றுப்படுத்திய பொருநன் கரிகாற் பெருவளத்தானிடம் உப்புக்கண்ட வறுவலுடன் நீரில் ஊறிய சோறு  
உண்டமையைப் பாடுகிறார். 
"...முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப	
அயின்ற காலை" பொரு.அ.112-115
முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)

முரவை போகிய = தீட்டிய 

முரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசி 

விரல் என நிமிர்ந்த = விரல் போல் நீளமாகி வெந்து 

காடியின் மிதப்ப = 'புளிச்ச தண்ணி' எனப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நீராகாரத்தில் மிதந்து இருக்க 

நிரல் அமை = அதற்கு ஒத்த இணையாகச் சேரும் 

பரல் வறைக்கருனை = பரல்களைப் போல் தோன்றும் வறுத்த (deep fry) பொரிக்கறியுடன் 

அயின்ற காலை = உண்ட போழ்து...

நிமிர்ந்து வெந்த சோற்றை உண்கலத்தில் பரிமாறி; அத்துடன் உப்புக்கண்ட வறுவலைக் கூட்டினால் அது புளித்த நீரில் மிதக்கும். 
ஆக இம் மேற்கோள் பகுதியில் இடம் பெறும் 'விரல் போல் நீண்டு வெந்த சோறு புளித்த காடி'யோடு இருப்பதால் பழைய சோறு ஆகிறது. அதோடு இணையாகச் சேரும் கருனை பார்ப்பதற்குப் பரல் போல் தோற்றம் அளிப்பதால் அது உப்புக்கண்டம் ஆகிறது. 

எனவே சோழன் கரிகாலன் பழைய சோறுக்கு ஏற்ற துணை உணவோடு விருந்து அயர்கிறான். 
 
சேரன் வஞ்சன் பாயல் நாட்டுப் பகுதியின் வேந்தன் ஆவான். 
வஞ்சன் பரிமாறிய கூட்டு மானிறைச்சியைப் பதப்படுத்தி வறுத்த (deep fry) உப்புக் கண்டம் ஆகும். 
"...யான்உண அருளல் அன்றியும் தான்உண்
மண்டைய கண்ட மான் வறைக்கருனை 
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர...			
உரை செல அருளியோனே
பறை இசை அருவி பாயல் கோவே" புறம்.398
தனது உண்கலத்தில் இருந்த மான்கறி உப்புக்கண்டத்தை எடுத்துப் புலவரின் உண்கலத்திற்குப் பரிமாறி உண்ண வைத்தான் என்பதை வெளிப்படையாகப் பெருமை பொங்கப் பாடுகிறார் புலவர்.
சக  

kanmani tamil

unread,
Nov 19, 2023, 12:32:46 AM11/19/23
to vallamai
இன்று காலை எழுந்தவுடன் எடுத்த படம்.

ஆயிற்று... சோறு நுரைத்து இருப்பதைப் பார்க்கவும். இப்போது இது பழைய சோறு. இதைத்தான் பிடவூர் உழவர் உண்டனர். ஆக கொக்குகிர் நிமிரலைக் கரிகால் பெருவளத்தானும் சேரன் வஞ்சனும் உண்ண உழவர் பொம்மல் / பழைய சோறு உண்டனர். இன்றைய சமூகம் ஆறிய சோற்றில் நீர் ஊற்றினாலே அதைப் பழையது என்று சொல்லக் காரணம் சமைப்பது இயந்திரத் தீட்டல் அரிசி. அந்தச் சோறு இப்படி மூன்று நாள் தாங்காது.
இன்று நானும் என் கணவரும் பழைய சோறு, தயிர், நெத்திலி மீன் பொரியல் சாப்பிட்டு ஆயிற்று.
சக  

kanmani tamil

unread,
Nov 19, 2023, 10:35:10 AM11/19/23
to vallamai
இன்று இயந்திரத் தீட்டல் அரிசி (machine polished rice) ஆக்கினேன். எஞ்சிய சோற்றுக்கு நீர் ஊற்றி வைத்து உள்ளேன். கைக்குத்தல் அரிசியில் ஆக்கிய சோற்றை நீரில் ஊற வைத்ததற்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டைப் பார்த்து விடலாம். அப்போது தான் பழைய சோறு தன் மகிமையை இழந்த காரணத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். வெள்ளை வெளேர் என்று இருப்பது தான் இதன் ப்ளஸ் பாய்ண்ட். நாளை காலை பார்ப்போம். 

சக 

kanmani tamil

unread,
Nov 20, 2023, 3:28:31 AM11/20/23
to vallamai
நான் சமைத்தது கிச்சடி என்று சொல்லப்படும் அரிசி வகை; இந்த ஊரில் அது நயம் அரிசி என்னும் கருத்து நிலவுகிறது. ஆனால் ஒரு இரவுக்குள் அச்சோறு பொருமிப் பெரிதாகி விடுகிறது. இந்த அரிசியில் இலக்கியம் சொல்லும் கொக்குகிர் நிமிரலுக்கு எல்லாம் வழியே இல்லை. நேற்றைய படத்தைக் காட்டிலும் இன்றைய படத்தில் சோற்றுப்   பருக்கைகளின் வடிவம் சரியாகத் தெரியாத அளவுக்கு அவை மிகுந்த நீரை உறிஞ்சி உள்ளன;  இதனால் தான் பழைய சோறு தன் மதிப்பை இழந்து விட்டது எனலாம்.  

இந்தச் சோறு பொம்மல் என்று சொல்லத் தக்கதே. தொகை இலக்கியக் காலத்துப் பாரம்பரியத்தில் இருந்து நாம் மிகவும் விலகி விட்டோம். பொருநர் ஆற்றுப்படை கூறுவது போல உப்புக்கண்டத்தை வறுத்து அது நீராகாரத்தில் மிதப்பதைக் காட்டி கரிகாலன் வழங்கிய கொக்குகிர் நிமிரலைப் படம் பிடித்துக் காட்ட முயற்சித்தேன். ஊர் முழுதும் தேடியும் உப்புக்கண்டம் கிடைக்கவில்லை. பக்கத்து ஊர் விளாம்பட்டியில் முன்னதாகச் சொல்லி வைத்தால் மே மாதம் ஆளனுப்பிப் பெற்றுக் கொள்ளலாமாம். இயன்றால் ஐந்து மாதம் கழித்து அதைப் படம் எடுத்துப் போடுகிறேன்.

இந்தச் சோதனையில் எனக்கு முழு நிறைவு கிட்டவில்லை; ஏனெனில் பாரம்பரியமான மண்பானையில் சோறு சமைக்க இயலாமல் போய் விட்டது; என்னிடம் இருப்பது பெரிய்ய்ய சட்டி. அதனால் அம்முயற்சியை விட்டு விட்டேன். சக

N. Ganesan

unread,
Nov 26, 2023, 6:13:17 AM11/26/23
to vall...@googlegroups.com
On Thu, Nov 16, 2023 at 12:47 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
எங்கள் ஊரில் இரண்டே இரண்டு கடைகளில் மட்டும் தான் கைக்குத்தல் அரிசி கிடைக்கிறது.  இத்துடன் இணைத்திருக்கும் படத்தில் காண்பது போல் பழுப்பு (ப்ரௌன்) வண்ணத்தில் இருக்கும். இது தீட்டப்படாதது... அதாவது உமியை மட்டும் நீக்கி விட்டுச் (unpolished) சந்தைப் படுத்துவது. அதனால் தான் இந்த நிறம். இப்போது நான் இதை ஊறப் போடுகிறேன். மணி பகல்12 ஆகி விட்டது. சோறு வடித்தவுடன் 'நிமிரல்' எனும் சுடுசோற்றுக்கு உரிய விளக்கம் பொருந்துகிறதா? எனப் பார்ப்போம். 

சுவாமி சித்பவானந்தர் பாரத ரத்தினம் சிஎஸ் அவர்களின் சிற்றப்பா.  ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சிஷ்யரின் சிஷ்யர்.
சித்பவானந்தர் ராமகிருஷ்ணர் இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றி வளர்த்தவர்களில் முக்கியமானவர். அவரது கீதை, திருவாசக உரைகள்
பல லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. பல பள்ளிகள், கல்லூரிகள் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் தொடங்கி நடத்துகின்றன.
தாயுமானவர் சமாதி, ராமேசுவரம், நிர்வாகம் ...
https://groups.google.com/g/santhavasantham/c/rysdRr85izQ/m/81RG5El0AQAJ

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் = கல்வி நிறுவனங்களில் கைக்குத்தல் அரிசி தான். சத்து நிறைந்தது. தவிடு (Bran) நீக்காததால்
பழுப்பு நிறம். என் அம்மா ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை மாணவி. இப்போது மாணவர்கள் மட்டும்.

> கைக்குத்தல் அரிசியைத் தேர்ந்து சமைப்பவர் இன்றும் உள்ளனர் (கடந்த ஏழு ஆண்டுகளாக நானும் அப்படியே...).

வாழ்த்துகள்.

> ஒரே பாடலில் 'பழஞ்சோற்றுப் புகவு'ம் 'கொக்குகிர் நிமிரலு'ம் இடம் பெறுவதால் அவற்றுக்கு இடையே நுட்பமான பொருள் வேறுபாடு இருக்க வேண்டும் என்பது துணிபு. 
புறநானூறு-395ல்

ஆமாம். விரிவாக விளக்கியுள்ளேன். கொக்குகிர் நிமிரல் - நற்றிணையில் காகத்துக்குச் சோறு ஆக்கியவுடன் தலைவாயிலில் படைக்கப்படும் படையல். நிமிரல் என்பது சுடுசோறு, அதன் பெயர்க்காரணம் ஞிம்ஞிம் என்னும் ஒலிக்குறிப்பு. பழஞ்சோற்றுப் புகவு உண்ட உழவர்களுக்கு நிமிரல் சுடுசோற்று விருந்து. The contrast between daily, mundane food of working farmers versus the feast with freshly cooked food at the palace.

NG

kanmani tamil

unread,
Jul 4, 2024, 11:07:48 PM (2 days ago) Jul 4
to vallamai
ஒருவழியாக உப்புக்கண்டம் கிடைத்து விட்டது. நம் இலக்கியம் சொல்வது போல் பரல் கற்களை ஒத்துக் காணப்படுவதைப் பாருங்கள்.
முடத்தாமக் கண்ணியார் தன்னை ஆற்றுப்படுத்திய பொருநன் கரிகாற் பெருவளத்தானிடம் பழைய சோறும் உப்புக்கண்ட வறுவலும் உண்டமையைப் பற்றிப் பாடுகிறார். 
"...முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்
பரல் வறை கருனை காடியின் மிதப்ப		
அயின்ற காலை" பொரு.அ.112-115
முகிழ் தகை = மலர்ந்த பூப்போலத் (பொ.வே.சோ. முல்லை என்கிறார்.)
முரவை போகிய = தீட்டிய 
முரியா அரிசி = குறுனை இல்லாத (உடையாத) அரிசி 
விரல் என நிமிர்ந்த = விரல் போல் நீளமாகி வெந்து 
காடியின் மிதப்ப = 'புளிச்ச தண்ணி' எனப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் நீராகாரத்தில் மிதந்து இருக்க 
நிரல் அமை = அதற்கு ஒத்த இணையாகச் சேரும் 
பரல் வறைக் கருனை = பரல்களைப் போல் தோன்றும் வறுத்த (deep fry) பொரிக்கறியுடன் 
அயின்ற காலை = உண்ட போழ்து...
இப்பாடற் பகுதியைக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். எண்ணெயில் வறுத்த பொரிக்கறி காடியில் (புளிப்பும் உப்பும் சேர்ந்த நீர்மம்) மிதப்பது சோற்றுத் திரளுக்கு மேலே அது இருப்பதால் தான். 
ஆக இம் மேற்கோள் பகுதியில் இடம் பெறும் 'விரல் போல் நீண்டு வெந்த சோறு புளித்த காடியில் மிதப்ப'தால் பழைய சோறு ஆகிறது. அதோடு இணையாகச் சேரும் கருனை பார்ப்பதற்குப் பரல் போல் தோற்றம் அளிப்பதால் அது உப்புக்கண்டம் ஆகிறது.

எனவே இங்கு கருனை = எண்ணெயில் மூழ்க வறுத்த உப்புக் கண்டம் 

சேரன் வஞ்சனும் சோழன் கரிகாலனும் பழைய சோறுக்கு ஏற்ற துணை உணவோடு விருந்து அயர்ந்தனர். ஆக; பழைய சோறு எந்த விதத்திலும் தரம் தாழ்ந்ததாகக் கருதப்படவில்லை. இது எண்ணெயில் வறுத்தது. இப்படி வறுத்து உண்டமைக்கும் இலக்கியச் சான்று உளது. Oct.21-2023 அன்று நான் இதே இழையில் இட்ட பதிவு...

/// கொக்குகிர் நிமிரலை விருந்தாக அளித்த மற்றொரு தலைவன் சேரன் வஞ்சன். இவன் பாயல் நாட்டுப் பகுதியின் வேந்தன் ஆகையால்; 'பழைய சோற்றை விருந்தினர்க்குக் கொடுத்தான்' என ஏற்றுக்கொள்ள இயலாமல் தயங்கும் போக்கு காணப்படுவதன் காரணம்; பழஞ்சோற்று உணவின் தரம் பற்றிய கொள்கை மாற்றம் எனலாம். தொகையிலக்கியக் காலத்தில் அது இழிவானதாகக் கருதப்படவில்லை. அன்றைய தமிழ்ச் சமூகத்தில் வழிப்போக்கர் அனைவரையும் விருந்தினராக ஏற்று உணவளித்த பண்பாடு நிலைபெற்று இருந்தது. அட்டில் சாலையில் சமைப்பவர் ஆயினும்; முற்றத்து வெளியில் அடுப்பு மூட்டுபவர் ஆயினும்; பெரும் பானைகளில் தான் சமைத்தனர். எப்போது வேண்டுமாயினும் உண்ணும் நோக்கத்தோடு- வயிற்றுப் பசியோடு வழிப்போக்கர் வருவர். இல்லை என்னாது கொடுக்க; வீட்டில் உணவு இருக்க வேண்டும். அப்படி ஆக்கிய சோறு அன்றே தீராமல் 'விருந்து வரா நாள்' ஆகி விட்டால்... பழைய சோறாகப் பாதுகாக்கப்படுவது இழிவாகக் கருதப்படவில்லை. அதற்கு உரிய கூட்டு சேரும் போது அவ்வுணவு மேன்மை பெற்றது. வஞ்சன் பரிமாறிய கூட்டு மானிறைச்சியைப் பதப்படுத்தி வறுத்த (deep fry) உப்புக் கண்டம் ஆகும். 
"அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி
யான் உண அருளல் அன்றியும் தான் உண்
மண்டைய கண்ட மான் வறை கருனை
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர			
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு
புரையோன் மேனி பூ துகில் கலிங்கம்
உரை செல அருளியோனே 
பறை இசை அருவிபாயல் கோவே" புறம். 398
தனது உண்கலத்தில் இருந்து மான்கறி உப்புக்கண்டத்தைப் புலவரின் உண்கலத்திற்குப் பரிமாறி உண்ண வைத்தானாம். 
வறை = உப்புக்கண்டம்.
இக்கருத்து வல்லுநர்களால் ஏற்கப்பட்டுத் தமிழ்ப் பேராய்வு பன்னாட்டு மின்ஆய்விதழில் பதிப்பிக்கப்பட்டும் உள்ளது. 
"பண்டைத்தமிழர் உணவில் புழுக்கும் சூட்டும்" https://ejournal.um.edu.my/index.php/tamilperaivu/issue/current
எப்படி மாம்பழம், மீனாணம், கருவாடு ஆகியவை மேன்மையான கூட்டாகக் கருதப்பட்டனவோ அதே போல் தான் மான்கறியின் உப்புக்கண்டமும்... அதனால் தான் வேந்தனின் உண்கலத்தில் இருந்து எடுத்துப் பரிமாறியதை வெளிப்படையாகப் பெருமை பொங்கப் பாடுகிறார் புலவர். கொக்குகிர் நிமிரல் பழஞ்சோறு என்பதால் தான் இங்கும் அச்சோற்றுக்குரிய மிதவை (குழம்பு) பற்றிய குறிப்பே இல்லை. 

ஒரு சிறு வேறுபாடு. இங்கே காட்டுவது மான்கறி உப்புக் கண்டம் அன்று; வெள்ளாட்டங்கறி உப்புக் கண்டம். 
சக

Reply all
Reply to author
Forward
0 new messages