கன்னியாகுமரியில் விவேகானந்தர், திருவள்ளுவர் நினைவாலயம்

19 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 7, 2022, 8:46:01 AM5/7/22
to Santhavasantham, housto...@googlegroups.com, vallamai, karanthaijayakumar
பாரதத் துணைக்கண்டத்தின் வடகோடி இமயமலை. தென்கோடி முனை குமரித் துறை. குமரிக்கடலின் பகவதியை வழிபடுவது 3000+ ஆண்டுகளாய் நிகழுகிறது. கிரேக்க நூல்களிலே கூடக் குறிப்புகள் கிடைக்கின்றன.1892-ம் ஆண்டு டிசம்பர் 24 அன்று மீன்கள், சுறா இவற்றைப் பொருட்படுத்தாமல் நீந்திச் சென்று கன்னியாகுமரியின் திருப்பாதங்கள் உள்ள பாறையில் மூன்று நாள் தங்கி, இந்தியாவின் எதிர்காலம் பற்றித் தவம் செய்திருக்கிறார். அவருக்கு ஞானோதயம் கிடைத்தது. இதைப்பற்றிச் சுருக்கமாகப் பாரத்தின் எழுச்சித் துறவியே எழுதியும் உள்ளார். 

தமிழகத்தில் இருந்து சுவாமி சித்பவானந்தரும், இலங்கையில் இருந்து சுவாமி விபுலானந்தரும் கல்கத்தா சென்று பேலூர் (வேளூர்) மடத்தில் சன்னியாசம் பெற்றுத் துறவியானார்கள். தமிழர்களில் வடமொழிப் புலவர்கள் ஆகி, தமிழ், ஆங்கில மொழிகளில் பல ஆன்மீக நூல்களை இயற்றினார்கள். ஹிந்து சமயத்தின் மேன்மையான பக்தி இயக்கத்தின் வளர்ச்சி, கடினமான தத்துவத்தை, மந்திரங்களை எல்லோருக்கும் பொதுவாக்கினார் சித்பவானந்தர், காயத்ரி மந்திரத்தை அனைத்து மாணவர்களுக்கும் போதித்தார். காயத்ரி மந்திரத்துக்கு தமிழில் விரிவான விளக்கவுரை நூல் செய்துதந்தார். தமிழில் முதல் முயற்சி அது. 1923 மார்ச் மாதத்தில் சுவாமி சித்பவானந்தர் பொள்ளாச்சியில் இருந்து கல்கத்தா சென்றார். வேதாந்த-சித்தாந்த சமரம் கண்ட தாயுமானவரை சித்பவானந்தருக்கு மிகவும் பிடிக்கும். தாயுமானவர் சமாதியை நல்ல முறையில் புனருத்தாரணம் செய்து, சிலை அமைத்துப் பரிபாலனம் ராமேசுவரத்தில் செய்துவருகிறது திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம். திருக்குறள், திருவாசகம், பகவத்கீதை, விவேகானந்தர் வரலாறு, சாரதாதேவியார் சரித்திரம், ... என சுமார் 100 புத்தகங்களைச் சித்பவானந்தர் இயற்றியுள்ளார். அவரது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்றார் அந்தர்யோக தியானம் எனலாம். அந்தரயோகப் பயிற்சி முகாங்களைத் தம் வாழ்நாளில் இறுதிவரை நடத்திவந்தார். மீனாட்சி காலேஜ் என ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார் தொடங்கிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அச்சகம் அப்போது எல்லாம் இல்லை. எனவே முதலில் அச்சானது திருப்பராய்த்துறையில் தான். சங்க காலத்தில் சேரர்களின் தலைநகர் என்ற வஞ்சி மாநகர் என்பது கரூர் என இப்போது அழைப்பது எனப் பெருநூல்கள் செய்தவர்கள் இரு கஸின்ஸ்: ரா. இராகவையங்கார் (வஞ்சி மாநகர்), மு. இராகவையங்கார் (சேரன் செங்குட்டுவன்). இதனைப் பின்னாளில் தொல்லியல் நிறுவிவிட்டது. ரா. ராகவையங்கார், அண்ணாமலைப் பல்கலையில் இருந்து எழுது “தமிழ் வரலாறு” அச்சானது ராமகிருஷ்ண தபோவனத்தில் ஆகும். 

1930-களில் இருந்து சொற்பொழிவுகளில் விவேகானந்தர் வரலாறு, அதில் குமரியில் அவர் செய்த தவம், பாரதம் பற்றி அவர் பெற்ற ஞானோதயம் பற்றிப் பலமுறை குறிப்பிட்டுள்ளார். முதன்முதலாக, கன்னியாகுமரியில் இந்தப் பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச்சின்னம் அமைத்திட வேண்டும் என அரசாங்கத்திடம் விண்ணப்பம் அளித்துச் செயல்படுத்தியவர் சித்பவானந்தரே ஆவார். அவரது குரு, சிவானந்த மகாராஜ், சுவாமி விவேகானந்தர் போன்றே ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடர் என்பது அறியத்தக்கது. வெற்றுப் பாறைகளாக இருந்த இரு பாறைகளிலும், தமிழர்க்கு அறம் போதித்த திருவள்ளுவர், பாரதத்தின் சமயப் பெருமை பற்றி உலகம் அறியச் செய்த விவேகானந்தர் இருவருக்கும் நினைவாலயங்கள் வர இந்தியாவின் தென்கோடி ஆக இருக்கும் கன்னியாகுமரி பொருத்தம் என விளக்கினார். அப்போதைய முதல்வர் மீ. பக்தவத்சலம் அவர்கள் பாறையில் கட்டினால், அது தாக்கப்பட்டு உடைக்கப்படலாம் என மிக அஞ்சினார். சிறிய நினைவிடமாக, 15 அடிக்குப்  15 அடி அளவில் கடற்கரையில் கட்டுங்கள் என அனுமதி அளித்தார். இந்தச் சிறிய இடத்தில் முதலில் விவேகானந்தருக்குத் திருக்கோயில் அமைவது இறைவன் சித்தம் எனக் கருதிக் கடற்கரையில் கோவில் கட்டித் திறந்தார்.  தான் கேட்ட குமரியின் ஸ்ரீபாதம் அமைந்த பாறையில் பின்னர் பாரத ஒற்றுமை ஓங்க அமையட்டும் என்று அப்பாறையில் தவஞ் செய்த திருக்கோலத்தில் இக்கோயிலின் மூலவரை அமைத்தார்.  அதன் குடமுழுக்கு 21.09.1964 பௌர்ணமி நாளில் நிகழ்ந்தது. 2009-ல் மீண்டும் குடமுழுக்கு ராமகிருஷ்ண தபோவனம் செய்தது. ஏற்கெனவே, தொடர்பிருந்த இராமேசுவரத்தில் திரு வை. கணபதி ஸ்தபதியைக் கொண்டு தவம் செய்யும் திருக்கோலத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவம் அமைக்கப்பெற்றுள்ளது. பின்னாளில் இதே கணபதி ஸ்தபதி வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், விவேகானந்தர் பாறையை அடுத்துள்ள மிகப் பெரிய வள்ளுவர் சிலை செய்தார்.

விவேகானந்தர், திருவள்ளுவர் நினைவு மிமோரியல்ஸ் ஏற்படுவதன் முன் இருந்த பாறையின் அரிய ஒளிப்படம். இங்குதான் விவேகானந்தருக்கு நினைவுச்சின்னம் எழுப்பவேண்டும் என முயற்சிகளைத் தொடங்கினார் சுவாமி சித்பவானந்தர். 
Vivekananda Rock.jpg

நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை - பாரதி. இவளிடம் தவஞ் செய்து ஞானோதயம் அடைந்தார் விவேகானந்தர். முதலில் பாரத எழுச்சிக்கு அறைகூவல் விடுத்த துறவிக்கு  அத் தவக்கோலத்தை வடித்தவர் சித்பவானந்தர். பின்னர், திருமிகு ரானடே பெருமுயற்சியால் நினைவாலயம் பெரிதாகச் சமைத்தார். பாரத மாதா சமைய ஸ்தலங்களில் ஒன்றாக இன்று குமரித்துறை அமைந்துவிட்டது.

பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும் http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html .

சுவாமி சித்பவானந்தர் 1932, 1933-ல் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழில் எழுதிய 12 கட்டுரைகள் ஸ்ரீ விவேகானந்தர் சரிதம் என அச்சாகியுள்ளது. அதனைப் படிக்கலாம். Swami Vivekananda's vision of Bharata Mata, personification and deification of Indian Subcontinent during his tapas and enlightenment during 24, 25, 26 December 1892 in the rock at Kanyakumari, the Southern tip of India. ஸ்ரீ விவேகாநந்த சரிதம் (சுவாமி சித்பவாநந்தர் எழுதியது, 1933).
பாரத மாதாவின் தெரிசனத்தை அடைந்தார் விவேகாநந்தர். அவரது திருவுருவம் நின்ற நிலையில் வெண்கலத்தில் வார்க்கப்பட்டுள்ளது. வார்த்த சிற்பி ஸ்ரீ. நாராயணராவ் சோனாவடேகர் என்பவர். விவேகானந்தர் சற்றே வடகிழக்காக, இந்தியா, இமயமலை, அதன் திலகமாக உள்ள கயிலை மலையை நோக்குவதாக, தேவகோட்டை ஸ்தபதி எஸ். கே. ஆசாரி செய்துள்ளார். வள்ளுவர் சிலை வடக்காகவும், அதற்கு முன்னர் ஏற்பட்ட விவேகானந்தர் சபா மண்டபம், சிலை சற்றே வடகிழக்காகவும் அமைந்துள்ளதை சுரும்பரில் (drone) திரைப்படம் காட்டுகிறது. கயிலைமலைக்கு யாத்திரை சென்று முதலில் எழுதியவர் சுவாமி சித்பவானந்தர்: https://archive.org/details/dli.rmrl.007206/mode/2up

விவேகானந்தர் பாறை, வள்ளுவர் பாறை - நினைவாலயங்கள்: சுரும்பர் படம்,
ராஷ்ட்ரபதி கோவிந்த் ~ ட்விற்றரில் ஒளிப்படம்: https://twitter.com/rashtrapatibhvn/status/1210145383675912192
EMtMyprUUAE099Y.jpg

மிகப் பெரும் போராட்டத்தை ஏற்றுக், கண் துஞ்சாது, மெய்வருத்தம் பாராது பாறையிலேயே விவேகானந்தருக்கு நினைவாலயம் கட்டினவர் ஏகநாத் ரானடே அவர்கள். வந்த எதிர்ப்புகள் கொஞ்சமல்ல. முப்பது லட்சம் இந்தியர்கள் அளித்த பண உதவி. இன்று இந்திய ஒருமைப்பாட்டின் சின்னங்களில் ஒன்றாக விவேகானந்தர் நினைவாலயம் அமைந்துவிட்டது. கோடிக்கணக்கானோர் கண்டு களிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தலமாக உருவாகிவிட்டது.

கன்னியாகுமரி விவேகானந்தர் கோயில் 21.09.1964, திங்கட்கிழமை காலை 6 மணிக்கு பௌர்ணமி நாள் அன்று திறக்கப்பட்டது.  சுவாமி சித்பவானந்தர், கணபதி ஸ்தபதியிடம் கூறி, கன்னியாகுமரியில் விவேகானந்தரின் தவக்கோலத்தில் கருவறை மூலவரை அமைத்துள்ளார். திருக்கோயிலில் கல்வெட்டு உண்டு.
31.jpg

இன்னும் சில செய்திகளை, ஒளிப்படங்களை இவ்விழையில் காண்போம்.

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages