இதல் ( < திதல்) - Quails of south India

8 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 20, 2016, 1:24:09 AM5/20/16
to மின்தமிழ், Santhavasantham, vallamai, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, George Hart
தீ போல சிவந்து இருக்கும் பூவுடைய மரம் எறுழம். எறுழங்கோதை என்ற பெண் எழுதுவித்த வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (1) தெறுழ் > எறுழ். தெறுதல் -தீயினால் சுடுதல் (வள்ளுவர், சங்க இலக்கியம்). இதே போல, (2) தழல் > அழல், (3) திமில் > இமில். காடைப் பறவைகளுக்கு (Quails) சங்க இலக்கியத்தில் பெயர்: இதல். இதல் < திதல் (Cf. திதலை, தித்தி)

ஆடுமாடு என்ற மரபுத்தொடர் போல, காடைகவுதாரி என்கிறோம். காடை = Quails, கவுதாரி = Partridges. கதுவாலி என்னும் பழந்தமிழ்ப் பெயர் கவுதாரி என்று metathesis ஆகிவிட்டது.லாகவம் > லாவகம், புழைக்கடை > புடக்காளி (கொங்குவழக்கு) ..... தளவம் என்றால் முல்லை இனங்கள். தமிழ்நாட்டில் ஒரு 30+ வகை முல்லைச் செடிகள் உண்டு. எல்லா முல்லைப் பூவும் பூத்தபின் வெண்மை நிறம்தான். வடமொழியில் தவளம் என்றால் வெண்மை, தளவம் (தளா, தளவு என்றெல்லாம் தளவம் சங்கத் தமிழில் சொல்லப்பட்டுள்ளது) metathesis  ஆகி தவளம் என்று வடமொழியில் பயில்கிறது என்று குறிப்பிட்டேன். மெய்ர்ஹாப்ர் குறிப்பிடும் சொற்பிறப்பை விட இந்த கருதுகோள் சிறப்பு என்றார் அசோகன் பார்ப்போலா (சிந்து ஆய்வுப் பேராசிரியர், ஃபின்லாந்து).

இதல் - சங்க இலக்கியப் பாடல்கள் சில:

திதலை (26) = தித்திதித்தியாய் (பொரிபொரியா), திட்டுத்திட்டாக உடலில் விளங்குவது:
tamilconcordance.in lists 'titalai' as,
திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு - நற் 6/4
திதலை அல்குல் குறு_மகள் - நற் 77/11
திதலை அல்குலும் பல பாராட்டி - நற் 84/2
நுதலும் பசலை பாயின்று திதலை/சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் - நற் 133/3,4
திதலை அல்குல் தே மொழியாட்கே - நற் 161/12
திதலை எஃகின் சேந்தன் தந்தை - நற் 190/3
கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை/வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர் - நற் 198/6,7
திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4
திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/6
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற - நற் 380/3
திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27/5
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி - குறு 185/1
திதலை அல்குல் நின் மகள் - ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2
திதலை மாமை தேய - ஐங் 231/3
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் - கலி 29/7
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் - கலி 32/7
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை - அகம் 26/13
திதலை அல்குல் எம் காதலி - அகம் 54/21
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று - அகம் 86/11
நுதலும் தோளும் திதலை அல்குலும் - அகம் 119/1
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க - அகம் 135/1
திதலை அல்குல் அம் வரி வாடவும் - அகம் 183/2
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு - அகம் 189/9
திதலை அல்குல் வரியும் வாடின - அகம் 227/2
வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை/அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் - அகம் 245/8,9


காடைக் குருவிகள் (Quails), கதுவாலிகளும் (Partridges) பொரிபொரியாய் இறக்கைகளைக் கொண்டிருப்பவை.
எனவே, இதல் < திதல்- 
The loss of word-initial t- in Tamil and Dravidian should be studied further: (1) teRu- > eRu- (2) tazal > azal (3) timil > imil (4) tital > ital (birds like quails).
There could be intermediate stage t- > c- > 0-, consider cimil (< timil), cital (< tital), ...

திதலை கொண்ட இதல் பறவைகள்:
Perdicula argoondah -Rajasthan, India -male-8.jpg

Painted Bush-Quail (Perdicula erythrorhyncha)



எறு- < தெறு- (நெருப்பு, சிவப்பு)
குடவோட்டுக் கல்வெட்டு கோவன் விச்சாதிரன் மனைவி எறுழங்கோதை என்னும் பெண்மணி வெட்டுவித்தது. அல்லியங்கோதை, தாமரைக்கோதை, ... போல கொங்கின் மலைகளில்
வளரும் காட்டுப்பூவரச மரம் எறுழம் பூவால் அடைந்த பெயர். பவழம்/பவளம் போல எறுழம் பேச்சுத்தமிழில் எறுளம் என வழங்கியிருக்கிறது எனக் குடவோட்டுக் கல்வெட்டு அறிவிக்கிறது.
எறுழம் & தெறுழம் தொடர்புபடுத்தி எழுதுகிறார் பி. எல். சாமி. (1)  தழல் > அழல் (2) திமில் > இமில்  ... போல, தெறுழ்- > எறுழம். திமில்/ர் என்னும் கால்நடை வேளாண்சொல் திமிர (= கருமை, இருள்) என்னும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பிறப்பித்தது. எறுழ மரம் காட்டுத் தீயிலும் சாம்பிப் பொசுங்குவதில்லை, பறவை, பூச்சிகட்கு அடைக்கலம் அளிக்கிறது.  ’நீங்கின் தெறூஉம் ,குறுகுங்கால் தண்ணென்னும் - தீ யாண்டுப் பெற்றாள் இவள்?’ என்று கேட்டவர் வள்ளுவர். எறுழம் என்னும் மரம் எதுவென விளக்கிய பேரா. கு. சீனிவாசன் வள்ளலார் அன்பர், பொள்ளாச்சி சமரச சன்மார்க்க சங்க விழாக்களுக்கு 70களிலே வந்திருக்கிறார். அப்போது அண்ணாமலைப் பல்கலை. வ. ஐ.சு தமிழ்ப் பல்கலைக்கு அழைக்கச் சென்றார். இப்போது ‘எறுழங்கோதை’ கொங்குக் கல்வெட்டில் கிடைப்பது கு. சீனிவாசனின் தேற்றத்துக்கு அரணமைக்கிறது.

தெறு- > எறுழ் (Cf. திமில் > இமில், தழல் > அழல் ...


DEDR 3440 Ta. teṟu (teṟuv-, teṟṟ-)

3440 Ta. teṟu (teṟuv-, teṟṟ-) to burn, scorch, be angry, sting (as wasp), punish, destroy; teṟal anger, heat, affliction; tēṟu sting (as of a wasp). Nk. (Ch.) tirup sun's ray. Pa. ted- (tett-), (NE.) ṭeḍ- (ṭeṭṭ-) to be fierce (of sun's heat). Go. (A. Y.) ter- to be fierce (heat of the sun); (Tr.) tarītānā to be hot (of sun); tarīstānā to heat bread over a flame after it has been cooked on the iron; (Ph.) tarrānā, (Ma.) tar̥-, (Ko.) tar- to be fierce (of sun); (Mu.) tars-/taris- to heat (Voc. 1778); (Ma.) ter̥k- to warm oneself by fire, (?) recover from illness (Voc. 1783). Konḍa (BB) teṟ- to be fierce (heat of sun); teṟvel sunshine; (K.; Sova dial.) teṟveli id. / Cf. Mar. tirīp gleam of sunshine, hot blaze. DED(S, N) 2832

எறுவை (dark red) எருவை என்றாகியுள்ளது:

DEDR 817 Ta. eruvai

817 Ta. eruvai blood, (?) copper. Ka. ere a dark-red or dark-brown colour, a dark or dusky colour; (Badaga) erande sp. fruit, red in colour. Te. rēcu, rēcu-kukka a sort of ounce or lynx said to climb trees and to destroy tigers; (B.) a hound or wild dog. Kol. resn a·te wild dog (i.e. *res na·te; see 3650). Pa. iric netta id. Ga. (S.3) rēs nete hunting dog, hound. Go. (Ma.) erm ney, (D.) erom nay, (Mu.) arm/aṛm nay wild dog (Voc. 353); (M.) rac nāī, (Ko.) rasi ney id. (Voc. 3010). For 'wild dog', cf. 1931 Ta. ce- red, esp. the items for 'red dog, wild dog'. DED 417, DED(N) 700.


எறுழம் (Cf. DEDR 3440)
DEDR 865 Ta. eṟur̤

865 Ta. eṟur̤ a hill tree with red flowers; eṟur̤am a hill tree. Te. eṟupa, eṟṟa, eṟṟana, eṟṟani redness, red, scarlet, crimson; (K.) Eṟṟana n. pr. 14th cent. author (eṟṟa + anna elder brother); Eṟama n. pr. man (8th cent.; inscr., p. 355); modern names Errayya, Erramma (MBE 1978, p. 355).Kol. (SR.) erroḍī, (Kin.) eroṛi red. Go. (S. Ko.) erra red (Voc. 355; < Te.). Konḍa eṟa, eṟani red. DED(S) 700.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 20, 2016, 9:59:14 AM5/20/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tamiz...@gmail.com, glh...@berkeley.edu
Some more word-initial t- loss in Tamil words like (1) timil 'zebu hump' > imil (2) tital 'spots, spotty bird like quail' > ital (3) teRu 'fire, red' > eRu (cf. eRuzam 'hill tree with red flower' (4) tazal 'fire' > azal. தொறு=தொழு போல, தெறல் = தெழல், தெழல் > தழல் என்றானதோ? தெள்- (தேள்) > அளம் ஆதற்போல, நெண்டு/ஞெண்டு > நண்டு போல.

(5) தள்- எனும் வேர்: தண்மை தண்+நீர் = தண்ணீர். தளி > சளி > அளி - மூன்றும் ‘Cool, Coolness'

(6) து(ய்)ப்பு = துப்பு. துப்பு 'enjoyment, food' > சுப்பு (சுவை) 'taste, cuppu/cappu' > உப்பு ‘salt'

துப்பு² tuppu, n. < து-. 1. Enjoyment; நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197). 2. Object of enjoyment; நுகர்பொருள். வருபவர்க்குத் துப்பமைத்து நல்கும் (திருவாரூ. 480). 3. Food; உணவு. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள், 12). 4. [K. tuppa.] Ghee; நெய். (பிங்.) உறைகெழு துப்பும் வாக்கி (கந்தபு. வில்வல. வதை. 18).

(7) தெள்ளு/தெள்கு = flea, tick. தோலைக் கொட்டுவதால். Cf. தேள் 'scorpion' கடி, கொட்டு. கொட்டால் பெற்ற பெயர் தேள்.
தெள்-/திள்- தேளுக்கு பிற த்ராவிட பாஷைகளில்: திடொர், சிடு, எடெ
DEDR 2956 Kol. tiṭor, (P.) tiṭor, (SR.) ṭumṭer, ṭūmṭor, (Kin.) ṭunṭor scorpion. Nk. ṭiṭor, kiṭor id. Nk. (Ch.) ṭiṭṭo, ciṭu, ciṭukli id. ? Go. (Mu.) kiṛkaṛ, ēṭe kiṛkaṛ, ēṭe kikkaṛ, ēṭe kihkaṛ, ēṭokaṛ id. (ēṭe crab; Voc. 378, 692). DED(S) 2409.
தெள்-திள்- > இள்- இடுக்கி = claws or pincers of a scorpion

DEDR 444 Ta. iṭukku (iṭukki-) to take between the fingers or toes, grasp as with pincers, take under one's arm, press or squeeze as between two boards; n. prehensile claws as those of a scorpion or of a lobster; iṭukki pincers, tongs, tweezers, steel trap, prehensile chela of a crab or a scorpion; iṭṭiṭai vice in a turner's lathe. Ma. iṭukku claws of lobster; iṭukkuka to press, pinch (as a crab); iṭukki pincers, tongs, forceps. Ko. ikḷ tongs. Ka. iḍaku to pinch, tweak; ikkur̤, ikkur̤a, ikkar̤a, ikr̤a pair of tongs, pair of pincers; (PBh.) ir̤kur̤i tongs, pincers. Tu. iḍumbulu (in wrestling) the act of seizing each other tightly with both hands; ikkuḷi, ikkuḷe, (B-K.) ikkuḷu pair of pincers or tongs. Kui ḍīpa tongs, pincers. DED 356, 377.


தெள்- > எள்- /அள்-  கொட்டும்/கவ்வும் உறுப்பு. 
தெள்-/எள்- (with loss of initial t-): அளகம் = பன்றி முள் porcupine's quill. 
அலம் (அள-/எள- < தெள்-) = தேள். வடமொழியில் ள இல்லை, எனவே அள- அல- என்றாகிறது.
அலம்² alam 

n. < ala. 1. Scorpion, as having a sting; தேள். (திவா.) 2. Scorpio of the zodiac; விருச்சிக ராசி.

Reply all
Reply to author
Forward
0 new messages