கொள்ளுவதும், தள்ளுவதும்!

61 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 30, 2021, 6:38:34 AM9/30/21
to vallamai, housto...@googlegroups.com
கொள்ளுவதும், தள்ளுவதும்!
         ( பஃறொடை வெண்பா)

துய்க்காத செல்வத்தால் தொல்லுலகில் ஏதுபயன்?
பொய்க்காதோ ஆற்றலெனும் பொன்புதைந்து மண்கிடந்தால்?
நேரம் நமக்காக நின்றிடுமோ? பொன்றாதோ?
பேரறிவும் வீணானால் பெற்ற பெருஞ்சுமையே!
பாரினில் குப்பை பயனறியா எப்பொருளும்.
நேரும் இறப்பும் நெடுந்துயரம் இல்லையென்பேன்,
உள்ள திறமை உதவாமல் போவதுதான்
மெள்ள உயிரிழந்து மேவும் துயரென்பேன்.
கொள்ளுவதும் வெல்லுவதும், கொள்ளாமல் தள்ளுவதால்
வெள்குவதும் வாழ்வின் விதியென்ற உண்மையினை
உள்ளறிந்தால் உண்டாம் உயர்வு!
   
                 -- தில்லைவேந்தன்

> துய்க்காத செல்வத்தால் தொல்லுலகில் ஏதுபயன்?
> பொய்க்காதோ ஆற்றலெனும் பொன்புதைந்து மண்கிடந்தால்?

ஔவை நல்வழி கூறியுள்ளார்:

     பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்
     கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டிங்கு
     ஆவிதான் போயின பின்பு ஆரே அனுபவிப்பார்
     பாவிகாள் அந்தப் பணம்?

https://www.youtube.com/watch?v=9SmBjg0kei8  (கேபிஎஸ்)
அடுத்தவருக்கு துன்பம் விளைவித்து, ஓடி ஓடி பணத்தை தேடும் கேடு கேட்ட மனிதர்களே கேளுங்கள், உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது, அதை யாரோ அனுபவிப்பார்கள், ஆதலால் உயிர் இருக்கும் போதே பணத்தை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யுங்கள்.

அனுபவித்தல் - முதலில் ஔவை தமிழில் பதிவு செய்கிறார். NG

kanmani tamil

unread,
Sep 30, 2021, 11:34:37 AM9/30/21
to vallamai
அனுக்கும் (1)
காம்பு அனுக்கும் மென் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் - பழ:349/3
அனுங்க (2)
அரு மணி நாகம் அனுங்க செரு மன்னர் - கார்40:20/3
முதிர் மணி நாகம் அனுங்க முழங்கி - திணை50:28/2
'அனு-' என்னும் முன்னொட்டுக்கும் இந்த மேற்கோள்களில் உள்ள "அனு-" என்னும் வினைப்பகுதிக்கும் தொடர்பு உள்ளதா?
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலேயே பயின்று வந்துள்ளது.
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUetZ23HjpHi0MRA%2BDHm80v4wj25Ddj2pNqzRmzhtFzy5Q%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 1, 2021, 2:19:19 AM10/1/21
to vallamai
///அணுக்கு/அணுங்கு- அணக்கு/அணங்கு. அணு என்ற வடசொல் இத் தமிழ்ச்சொல் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கில் அணுக்குதல் - வருத்துதல் அனுங்குதல் என வருகிறது./// Dr.Ganesan wrote in 'அல்லி'

அணு என்ற வடசொல் அனுங்கு எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியது எனும் கொள்கையை ஏற்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் தொகை நூல்களில் 'அனு-' என்ற பயன்பாடே இல்லை. 
சக 

seshadri sridharan

unread,
Oct 1, 2021, 2:51:20 AM10/1/21
to வல்லமை
On Fri, 1 Oct 2021 at 11:49, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அணுக்கு/அணுங்கு- அணக்கு/அணங்கு. அணு என்ற வடசொல் இத் தமிழ்ச்சொல் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கில் அணுக்குதல் - வருத்துதல் அனுங்குதல் என வருகிறது./// Dr.Ganesan wrote in 'அல்லி'

அணு என்ற வடசொல் அனுங்கு எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியது எனும் கொள்கையை ஏற்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் தொகை நூல்களில் 'அனு-' என்ற பயன்பாடே இல்லை. 
சக 
கல்வெட்டில் அணுக்க என்றால்  தனிச்செயலர் (PA) என பொருள். 
 
kanmani tamil

unread,
Oct 1, 2021, 4:24:48 AM10/1/21
to vallamai
ஓ! நன்றி. 
புதுச் செய்தி. 
சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 1, 2021, 4:35:04 AM10/1/21
to vallamai, housto...@googlegroups.com
On Fri, Oct 1, 2021 at 1:19 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அணுக்கு/அணுங்கு- அணக்கு/அணங்கு. அணு என்ற வடசொல் இத் தமிழ்ச்சொல் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கில் அணுக்குதல் - வருத்துதல் அனுங்குதல் என வருகிறது./// Dr.Ganesan wrote in 'அல்லி'

அணு என்ற வடசொல் அனுங்கு எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியது எனும் கொள்கையை ஏற்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் தொகை நூல்களில் 'அனு-' என்ற பயன்பாடே இல்லை. 
சக 

நான் அனு- வேரில் இருந்து அணு- தோன்றியதாய்ச் சொல்லவே இல்லையே. It is the other way around: அணு- > அனு-.
மீண்டும் நான் எழுதியதைப் படிக்கலாம்:

பொள்ளம் > பொல்லம். இதுபோல் தான், அல்- < அள்/நள்-. அணுக்கு/அணுங்கு- அணக்கு/அணங்கு. அணு என்ற வடசொல் இத் தமிழ்ச்சொல் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கில் அணுக்குதல் - வருத்துதல் அனுங்குதல் என வருகிறது. ‘பல்லவம் அனுங்க’ கம்பன். பாறு- : பருந்து. இவையெல்லாம் spontaneous loss of retroflexion.பொள்- > பொல்-; அள்- > அல்-; அணு- > அனு- ...

NG

N. Ganesan

unread,
Oct 1, 2021, 4:40:25 AM10/1/21
to vallamai
அணுக்கன் போலவே, அணுக்கி என்றும் உண்டு. இசை, நாட்டியம் போன்றவற்றில் சிறப்பாக இருந்து, அணுக்கி ஆகி
மன்னர்க்கு மனைவி, துணைவி ஆதல் எப்பொழுதும் உண்டு. தமிழ்நாட்டு முதல்வர்கள் வரலாறு 20-ஆம் நூற்றாண்டு.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 1, 2021, 2:31:52 PM10/1/21
to vallamai, housto...@googlegroups.com
அணு- > அனு- :
பொள்ளம் > பொல்லம். இதுபோல் தான், அல்- < அள்/நள்-. அணுக்கு/அணுங்கு- அணக்கு/அணங்கு. அணு என்ற வடசொல் இத் தமிழ்ச்சொல் ஆகும். பதினெண் கீழ்க்கணக்கில் அணுக்குதல் - வருத்துதல் அனுங்குதல் என வருகிறது. ‘பல்லவம் அனுங்க’ கம்பன். பாறு- : பருந்து. இவையெல்லாம் spontaneous loss of retroflexion.பொள்- > பொல்-; அள்- > அல்-; அணு- > அனு- ...

அண்- என்ற தாதுவேர் தரும் அணு- என்ற சொற்கள் சங்க இலக்கியத்தில் உண்டு. அழு-/அணு-/அடு- தொடர்புடையன. இன்றும், இலங்கையிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் Pangolin அணுங்கு எனப்படுகிறது. இருளர், மலசர் பிடித்து வருவார்கள். களத்து வாசலில் சுருண்டுகிடக்கும். இரண்டு நாள் கழித்துக் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவர். பிறபகுதிகளில் அழுங்கு எனப்படுவது. அழுங்கல் அந்தாதி என்பதன் பொருள் அணுங்கல் அந்தாதி. அழு-/அணு- தமிழில் மட்டுமல்ல, எழுத்தில்லா திராவிட மொழிகளிலும் இருப்பதால் இந்தச் சொற்கள் மிகத் தொன்மை வாய்ந்தவை. கணாதரின் அணுக் கோட்பாடு - இந்திய விஞ்ஞானத்தின் தோற்றுவாய்களில் ஒன்று: https://en.wikipedia.org/wiki/Kanada_(philosopher) .
இதில் உள்ள அணு  ஓர் த்ராவிட வார்த்தை.

தொல்காப்பியம்:
அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் - பொருள். செய்யு:210/1
பயம் கெழு துணை அணை புல்லி புல்லாது - பொருள். கற்:5/31

சங்க நூல்களில்:
அதனொடும் அமையாது அணுக வந்து நின் - புறம் 50/11

அ நிலை அணுகல் வேண்டி நின் அரை - பெரும் 467
திரு நகர் முற்றம் அணுகல் வேண்டி - மலை 548
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி - புறம் 394/10

தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி - பொரு 149

உருண்டு நீண்ட கோற்புழு, பட்டுப்புழு : உருண்டு/உலுண்டு  உலண்டு எனச் சங்க இலக்கியத்தில் வரும். அதுபோல், வருத்துகிற பேய், தெய்வம் - அணுக்கு/அணுங்கு  அணங்கு
என்றாகிறது. வேளிர் வருகை கி.மு. 1000 வாக்கில் எனத் தொல்லியல் காட்டுகிறது. வேளிர்கள் ஒரு வகையான சமயம், சமூக அமைப்பைச் சங்க காலத்தில் கட்டமைக்கிறார்கள்.
இது ஆகப் பழையது. இதனைக் காட்டும் பாய்ண்ட்டர் அணங்குக் கோட்பாடு. பின்னர் சதுர்வர்ணம் வந்துவிட்டது இந்தியாவில். வேளிர் அமைக்க முயன்ற சமையம் நிலைக்கவில்லை
இதுபற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலே, வடநாட்டு வணிகர்கள் கொங்குநாடு (சேரநாடு) வழியாக
பிராமி எழுத்து வருகிறது. எனக் கொடுமணல், பொருந்தல் காட்டுகின்றன. உள்ள எழுத்து உள்ள பானைகளில் மிக அதிகம் கிடைப்பது கொடுமணலில். மிகக் குறைவாக,
ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை. மதுரை கீழடியிலும் மிக முந்தைய கால பானையோடுகள் சிலவே. வடக்கே இருந்து தெற்கே நகரும் பிராமி எழுத்தின் ‘கிரேடியண்ட்’
நன்கு கிடைத்துவிட்டது. பிராமியின் தோற்றம், ஹரியானா உதாரணம், அதன் வளர்ச்சி கொங்குநாடு,, பாண்டிநாடு, இரண்டுக்கும் இடையே Frontier Zone: தாதப்பட்டி, புலிமான்கோம்பை.

ஏற்கெனவே, இதில் குறிப்பிட்டது போல, கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை, கீழடி, பொருந்தல் ... போன்ற இடங்களில்
தமிழ்நாடு, இந்திய தொல்லியலர்கள், மேலை நாட்டு, ஜப்பான், கொரியா தொல்லியலர்கள் அகழாய்வு செய்தால்
பானை ஓடுகளில் ப்ராமி தோன்றுங்காலம் துல்லியமாகும். After all, in each of these sites, we have 100s of acres
that can potentially excavated for pottery sherds with Brahmi. Tamil Nadu govt. should allow and invite
Western, Korean, Japanese archaeologists to excavate, determine the C14 dates of the layers in which
Tamil Brahmi shards are found. Then the credibility of the claims about Brahmi in Tamil Nadu will increase.
Often they have several letters that are in Indo-Aryan alphabet, and not in Tolkappiyam. I chaired a session
in which Prof. Ma. Bavani, Epigraphy department, Tamil University presented a paper. Interestingly she showed
photographs of pottery sherds, mostly from Kodumanal of Kongunadu, with 14 Indo-Aryan letters not needed
for Tamil at all. Clearly establishes the Northern origin of Brahmi.
https://groups.google.com/g/santhavasantham/c/shQ4KhR6Hsc

Iron Age in Tamil Nadu starts around 10th century BCE due to Northern elements reaching here, what Tamil
literature calls as vELir varukai. Remember the myth of Agastya leading "pathineN kuDi vELir" into Tamil country.
But Brahmi writing was not invented then. Brahmi comes only around 5th century BCE, as shown in Kongunad
samples. Around 90% of all Brahmi writing in Tamil Nadu is from Kongunadu.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வட நாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு எழுத்து வரத் தொடங்கியுள்ளது என
தெரிகிறது. வணிகம் இதன் முக்கியக் காரணம். வட நாட்டில் கி. மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில்
பிராமியின் தோற்றத்துக்கு முக்கியச் சான்று. ஹரியானாவின் விடங்கர் திருவுருவம்:
http://nganesan.blogspot.com/2020/09/zen-koan-by-hakuin-and-tamil-proverb.html
விடங்கர் - கொல்லி 4700 ஆண்டுக்கால பாரத நாட்டின் வானியல் பற்றிய ஆய்வு,
http://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

நா. கணேசன்

kanmani tamil

unread,
Oct 1, 2021, 9:37:42 PM10/1/21
to vallamai
///வேளிர்கள் ஒரு வகையான சமயம், சமூக அமைப்பைச் சங்க காலத்தில் கட்டமைக்கிறார்கள்.
இது ஆகப் பழையது. இதனைக் காட்டும் பாய்ண்ட்டர் அணங்குக் கோட்பாடு. பின்னர் சதுர்வர்ணம் வந்துவிட்டது இந்தியாவில். வேளிர் அமைக்க முயன்ற சமையம் நிலைக்கவில்லை/// Dr.Ganesan wrote at 12.1A.M.

நான் இலக்கியச் செய்திகளை அடியொட்டிப் புரிந்து கொண்டதனின்றும் இது வேறுபட்டு உள்ளது. 

சதுர்வர்ணத்தில் நான்காவதாக இடம்பெறுபவர் தானே வேளிர்?!
அவர்களும் சேர்ந்து தானே கடவுள் கோட்பாட்டைக் கொண்டு வந்தனர்.
அணங்குக் கோட்பாட்டைப் பின்பற்றிய திணைமாந்தர் கடவுட் கோட்பாட்டை எள்ளி நகையாடும் பாடல்கள் எல்லாம் உள்ளன.
 "கடவுள் நண்ணிய பாலோர்" என விமர்சனம் செய்யும் அகப்பாடல் உளது. 
சக 

kanmani tamil

unread,
Oct 1, 2021, 11:43:05 PM10/1/21
to vallamai
///வருத்துகிற பேய், தெய்வம் - அணுக்கு/அணுங்கு  அணங்கு என்றாகிறது. /// Dr.Ganesan wrote at 12.1A.M.

தாக்கணங்கு மட்டுமே வருத்தும்; பிற அணங்கு அச்சத்தின் அடிப்படையில் தோன்றிய தெய்வ நம்பிக்கை. 

வருத்துகிற பேய் தொகை இலக்கியத்தில் இல்லவே இல்லை. 'பேஎ-' என்னும் பெயரடையின் பொருள் 'தெய்வத் தன்மை பொருந்திய' என்பதே. எனது "பேஎய் அனையம் யாம் எனும் உவமை" என்ற  கட்டுரை இதற்கு விளக்கம் தரும். ஏற்கெனவே குழுமத்தில் பகிர்ந்துள்ளேன். 

மற்றபடி பிணம் தின்னும் பேய்மகளிர் பற்றி விரிவான கட்டுரை நான் இன்னும் எழுதவில்லை. உண்மையை ஜீரணிக்கும் சக்தி நம் மக்களுக்கு ரொம்பக் கம்மி. 

ஒரே ஒரு கருத்தைக் கோடிட்டுக் காட்டும் கட்டுரை ஒன்று வல்லுநர் குழுவின் முன் உள்ளது. ஏற்றுக் கொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 
சக 

N. Ganesan

unread,
Oct 2, 2021, 12:19:24 AM10/2/21
to vallamai, housto...@googlegroups.com
On Fri, Oct 1, 2021 at 10:43 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///வருத்துகிற பேய், தெய்வம் - அணுக்கு/அணுங்கு  அணங்கு என்றாகிறது. /// Dr.Ganesan wrote at 12.1A.M.

தாக்கணங்கு மட்டுமே வருத்தும்; பிற அணங்கு அச்சத்தின் அடிப்படையில் தோன்றிய தெய்வ நம்பிக்கை. 

வருத்துகிற பேய் தொகை இலக்கியத்தில் இல்லவே இல்லை. 'பேஎ-' என்னும் பெயரடையின் பொருள் 'தெய்வத் தன்மை பொருந்திய' என்பதே. எனது "பேஎய் அனையம் யாம் எனும் உவமை" என்ற  கட்டுரை இதற்கு விளக்கம் தரும். ஏற்கெனவே குழுமத்தில் பகிர்ந்துள்ளேன். 

பே என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்புச் சொல். பேஎ அளபெடை. பே/பேஎ/பேய்/பேஎம்.
கபிலர் பாடல்: பேஎம் - அச்சம்.
த்ராவிட மொழிகளை ஒப்பிட்டால், பே என்னும் ideograph தொல்த்ராவிடர் அமைத்த சொல்லின் அடிப்படையான பொருள் தெரியும். பேஎ = அணங்கு.

Dravidian Etymological Dictionary 4438 Ta. pēy devil, goblin, fiend; madness (as of a dog), frenzy; wildness (as of vegetation); pēyaṉ demoniac, madman; pēytti, pēycci, pēcci demoness, woman under possession of a demon. Ma. pē, pēyi demon (fem. pēcci); rage, madness, viciousness; pēna ghost, spirit; pē-nāyi mad dog. Ko. pe·n, pe·nm possession of woman by spirit of dead; pe·y demon. To. ö·n the god of the dead. Ka. pē, hē madness, rage, viciousness; growing wild (as plants), worthlessness; pētu, hēde demon; pēṅkuṇi, pēṅkuḷi, hēkuḷi demon; madness, fury (for -kuḷi, cf. 1918 Ta. kūḷi); hēga a mad, foolish man. Tu. pēyi demon. Go. (Tr.) pēn (pl. -k), (Y. D. Mu. S.) pēn, (Ph.) pen, ven, (Ma.) pēnu god; (L.) peṇ (pl. peṇḍku) idol, god; (G.) pēnvor priest (Voc. 2364). Pe. pen (pl. -ku) god. Kui pēnu (pl. pēnga), vēnu (pl. vēnga) a god, a spirit. Kuwi (F.) pēnū, (Su.) pēnu (pl. pṇēka), (Isr.) pēnu (pl. pēṇka/pṇēka) god; (S.) pēnu (pl. pēnka) devil; (S.) pēne'esi, (Isr.) pēneˀ esi deceased person. ? Malt. peypeyre to feel fervent or animated. Cf. 5530. Pa. vē̃did. DED(S, N) 3635.

வே- வேது, சே- சேது, ... பே- பேது. தமிழ் > த்ரமிள, கமுகு > க்ரமுக, ... போல, பேது > ப்ரேத

4437 Ta. pētu bewilderment, folly, ignorance, delirium, sorrow, distress; pētai simpleton, ignorant person, woman as simpleminded; girl between the ages of 5 and 7; poor person; pētaimai folly, ignorance, simplicity; pēntu (pēnti-) to be bewildered; petumpai girl between the ages of 8 and 11. Ka. pētu confusion or distraction of mind. Tu. pētů, pētu fear. Te. pēda poor, timid; poor man, servant; pēdarālu poor woman; pēdaṟikamu poverty; pēdaṟimi id., timidity; (SAN) pēdagilu to become thin, poor; pēdatanamu poverty. Ga. (S.3) pēdaṭoṇ a poor man. DED(S) 3634.

அணங்கு என்பது வருத்தும் பேஎம். அழுங்கு-/அணுங்கு அணங்கு. MTL:
அணங்கு² aṇaṅku , n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.) 2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய். (திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.) 7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10. Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13. Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).

NG

மற்றபடி பிணம் தின்னும் பேய்மகளிர் பற்றி விரிவான கட்டுரை நான் இன்னும் எழுதவில்லை. உண்மையை ஜீரணிக்கும் சக்தி நம் மக்களுக்கு ரொம்பக் கம்மி. 

ஒரே ஒரு கருத்தைக் கோடிட்டுக் காட்டும் கட்டுரை ஒன்று வல்லுநர் குழுவின் முன் உள்ளது. ஏற்றுக் கொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்க்பேக வேண்டும். 
சக 

On Sat, 2 Oct 2021, 12:01 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 2, 2021, 12:32:47 AM10/2/21
to vallamai, housto...@googlegroups.com

On Fri, Oct 1, 2021 at 10:43 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///வருத்துகிற பேய், தெய்வம் - அணுக்கு/அணுங்கு  அணங்கு என்றாகிறது. /// Dr.Ganesan wrote at 12.1A.M.

தாக்கணங்கு மட்டுமே வருத்தும்; பிற அணங்கு அச்சத்தின் அடிப்படையில் தோன்றிய தெய்வ நம்பிக்கை. 

அணங்கு - வருத்தத்துடன் தொடர்பு உடையது. அணுங்கு/அணங்கு. 

அணங்கியோன் aṇaṅḳiyōṉ , n. < அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182).

   அணங்கு¹-தல் aṇaṅku- , 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை). — v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).

kanmani tamil

unread,
Oct 2, 2021, 2:32:35 AM10/2/21
to vallamai
Dictionaryயில் என்ன சொல்லி இருந்தாலும் அது இரண்டாம்நிலைத் தரவு தான். 

பாடலில் பயின்று வரும் பொருள் தான் முதல்நிலைத் தரவு.

மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அதிசயிக்கத் தக்க இயற்கை (மரம், மணம் ஆகியன), பஞ்சபூதங்கள் உணர்வுகள் அனைத்தையும் அணங்கு என்றனர். இவை அகச்சான்றுகளால் நிறுவக்கூடியவை. 
தாக்கணங்கு தான் மோகினிப்பிசாசு என்ற பொருள்பட வழங்கியது. இவை முதல்நிலைத் தரவுகள். 

டிக்க்ஷனரிச் செய்தி இத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால்; மாற்ற வேண்டியது அகராதிப் பொருள் தான். இலக்கியச் செய்தியையும் அதன் பொருளையும் மாற்ற இயலாது; மாற்றக் கூடாது. 

சக 
 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 2, 2021, 2:34:46 AM10/2/21
to வல்லமை
On Saturday, October 2, 2021 at 1:32:35 AM UTC-5 kanmani...@gmail.com wrote:
Dictionaryயில் என்ன சொல்லி இருந்தாலும் அது இரண்டாம்நிலைத் தரவு தான். 

பாடலில் பயின்று வரும் பொருள் தான் முதல்நிலைத் தரவு.

மனிதசக்திக்கு அப்பாற்பட்ட அதிசயிக்கத் தக்க இயற்கை (மரம், மணம் ஆகியன), பஞ்சபூதங்கள் உணர்வுகள் அனைத்தையும் அணங்கு என்றனர். இவை அகச்சான்றுகளால் நிறுவக்கூடியவை. 
தாக்கணங்கு தான் மோகினிப்பிசாசு என்ற பொருள்பட வழங்கியது. இவை முதல்நிலைத் தரவுகள். 

டிக்க்ஷனரிச் செய்தி இத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால்; மாற்ற வேண்டியது அகராதிப் பொருள் தான். இலக்கியச் செய்தியையும் அதன் பொருளையும் மாற்ற இயலாது; மாற்றக் கூடாது. 

சக 

இலக்கியங்களிலும், அதில் இருந்து வரும் நிகண்டுகளிலும் சரியாக பே, அணங்கு, அணக்கு-தல் உள்ளது.

kanmani tamil

unread,
Oct 2, 2021, 2:37:08 AM10/2/21
to vallamai

///பே என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்புச் சொல். /// Dr.Ganesan wrote at 9.49A.M.

இல்லை. 
போதும். என் கட்டுரை பதிப்பிக்கப்பட்ட பின்னர் 'என் மறுப்புகள் ' இழையில் விளக்குவேன். 
சக 

N. Ganesan

unread,
Oct 2, 2021, 2:58:31 AM10/2/21
to vallamai, housto...@googlegroups.com
பே என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்புச் சொல். பேஎ அளபெடை. பே/பேஎ/பேய்/பேஎம். பே என்னும் அன்றாட வழக்குச்சொல், பேஎ என அளபெடுத்தும் வருவதைச் சங்கச் சான்றோர் செய்யுளில் காண்கிறோம்.  பே-னு பயந்துட்டேன், என்னும் அச்சத்தை விளக்கும் தொல்த்ராவிடச் சொல். எல்லா த்ராவிட பாஷைகளிலும் உள்ளமை காண்கிறோம்.
“போன வருடம் இதே போல என் பிளாக்கில் மால்வேர் வைரஸ் அட்டாக் ஆகியது, அப்ப எனக்கு ஒரு நாள் காலை பிலாக் ஓப்பன் செய்த்தும்  unreadable font டாக எல்லாம் ஆகிவிட்ட்து, பே பே பே பயந்தே போயிட்டேன், “ ... இவை போல ஆயிரக்கணகாக, அச்சு நூல்களில் தமிழர் பயன்படுத்துவதைக் காணலாகும்.

It is an idea highly endemic with Tamils that the missionary Rev. Caldwell should have named Dravidian Language family as Tamil Language family. But that would not have been correct. The Paadiri knew it well. Many features of ancient Dravidian is not in Sangam Tamil, which has veered away from ancient Dravidian, as generations of Dravidian linguists have explained.  I agree that in the future party names ruling Tamils should contain Tamil in their title (TMK, ATMK, ...)   NG
இலக்கியங்களிலும், அதில் இருந்து வரும் நிகண்டுகளிலும் சரியாக பே, அணங்கு, அணங்கு-தல் உள்ளது.
அணங்கு - வருத்தத்துடன் தொடர்பு உடையது. அணுங்கு/அணங்கு. 

அணங்கியோன் aṇaṅḳiyōṉ , n. < அணங்கு- One who persecuted; வருத்தியவன். பெருந்துறைக் கண்டிவ ளணங்கி யோனே (ஐங்குறு. 182).

   அணங்கு¹-தல் aṇaṅku- , 5 v. intr. 1. [K. aṇuṅgu.] To suffer, to be distressed; வருந் துதல். நீயணங்கிய தணங்க (சீவக. 957). 2. To die, to be slain; இறந்துபடுதல். நற்போ ரணங்கிய (பு. வெ. 7, 27). 3. To interlace in growing together, as bamboos; பின்னிவளர்தல். முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோடு (மலைபடு. 223). 4. To be joined, united; பொருந்துதல். உரையணங்குந் தமிழ் வேந்தன் (இறை. 50, உரை). — v. tr. [K. aṇuṅku.] To afflict; வருந்துதல். புறத்தோ னணங்கிய பக்க மும் (தொல். பொ. 67).

அழுங்கு/அணுங்கு விலங்கின் பெயர் த்ராவிட மொழிகளிலே அரதப் பழசானது. அழுங்குதல்/அணுங்குதல். அழுங்கல் அந்தாதி என்ற பிரபந்தங்களும் உண்டு.
அணு என்ற சொல் கணாதர் பயன்படுத்தினார். இது த்ராவிடச் சொல். 

NG

On Fri, Oct 1, 2021 at 10:43 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///வருத்துகிற பேய், தெய்வம் - அணுக்கு/அணுங்கு  அணங்கு என்றாகிறது. /// Dr.Ganesan wrote at 12.1A.M.

தாக்கணங்கு மட்டுமே வருத்தும்; பிற அணங்கு அச்சத்தின் அடிப்படையில் தோன்றிய தெய்வ நம்பிக்கை. 

வருத்துகிற பேய் தொகை இலக்கியத்தில் இல்லவே இல்லை. 'பேஎ-' என்னும் பெயரடையின் பொருள் 'தெய்வத் தன்மை பொருந்திய' என்பதே. எனது "பேஎய் அனையம் யாம் எனும் உவமை" என்ற  கட்டுரை இதற்கு விளக்கம் தரும். ஏற்கெனவே குழுமத்தில் பகிர்ந்துள்ளேன். 

பே என்பது அச்சத்தை வெளிப்படுத்தும் ஒலிக்குறிப்புச் சொல். பேஎ அளபெடை. பே/பேஎ/பேய்/பேஎம்.
கபிலர் பாடல்: பேஎம் - அச்சம்.
த்ராவிட மொழிகளை ஒப்பிட்டால், பே என்னும் ideograph தொல்த்ராவிடர் அமைத்த சொல்லின் அடிப்படையான பொருள் தெரியும். பேஎ = அணங்கு.

Dravidian Etymological Dictionary 4438 Ta. pēy devil, goblin, fiend; madness (as of a dog), frenzy; wildness (as of vegetation); pēyaṉ demoniac, madman; pēytti, pēycci, pēcci demoness, woman under possession of a demon. Ma. pē, pēyi demon (fem. pēcci); rage, madness, viciousness; pēna ghost, spirit; pē-nāyi mad dog. Ko. pe·n, pe·nm possession of woman by spirit of dead; pe·y demon. To. ö·n the god of the dead. Ka. pē, hē madness, rage, viciousness; growing wild (as plants), worthlessness; pētu, hēde demon; pēṅkuṇi, pēṅkuḷi, hēkuḷi demon; madness, fury (for -kuḷi, cf. 1918 Ta. kūḷi); hēga a mad, foolish man. Tu. pēyi demon. Go. (Tr.) pēn (pl. -k), (Y. D. Mu. S.) pēn, (Ph.) pen, ven, (Ma.) pēnu god; (L.) peṇ (pl. peṇḍku) idol, god; (G.) pēnvor priest (Voc. 2364). Pe. pen (pl. -ku) god. Kui pēnu (pl. pēnga), vēnu (pl. vēnga) a god, a spirit. Kuwi (F.) pēnū, (Su.) pēnu (pl. pṇēka), (Isr.) pēnu (pl. pēṇka/pṇēka) god; (S.) pēnu (pl. pēnka) devil; (S.) pēne'esi, (Isr.) pēneˀ esi deceased person. ? Malt. peypeyre to feel fervent or animated. Cf. 5530. Pa. vē̃did. DED(S, N) 3635.

வே- வேது, சே- சேது, ... பே- பேது. தமிழ் > த்ரமிள, கமுகு > க்ரமுக, ... போல, பேது > ப்ரேத

4437 Ta. pētu bewilderment, folly, ignorance, delirium, sorrow, distress; pētai simpleton, ignorant person, woman as simpleminded; girl between the ages of 5 and 7; poor person; pētaimai folly, ignorance, simplicity; pēntu (pēnti-) to be bewildered; petumpai girl between the ages of 8 and 11. Ka. pētu confusion or distraction of mind. Tu. pētů, pētu fear. Te. pēda poor, timid; poor man, servant; pēdarālu poor woman; pēdaṟikamu poverty; pēdaṟimi id., timidity; (SAN) pēdagilu to become thin, poor; pēdatanamu poverty. Ga. (S.3) pēdaṭoṇ a poor man. DED(S) 3634.

அணங்கு என்பது வருத்தும் பேஎம். அழுங்கு-/அணுங்கு அணங்கு. MTL:
அணங்கு² aṇaṅku , n. < id. 1. Pain, affliction, suffering; வருத்தம். (திருமுரு. 289.) 2. Disease; நோய். (பிங்.) 3. Fear; அச்சம். (சூடா.) 4. Lust; மையனோய். (திவா.) 5. Killing; கொலை. (பிங்.) 6. Deity; தெய்வம். (தொல். பொ. 256.) 7. Celestial damsel; தெய்வமகள். (திவா.) 8. Demoness that takes away one's life by awakening lust or by other means; வருத்திக் கொல்லுந் தெய்வ மகள். (குறள், 918; மணி. 6, 135.) 9. Beautiful woman, as resembling a celestial damsel; தெய்வத்திற் கொப்பான மாதர். (பிங்.) 10. Devil; பேய். துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; வெறி யாட்டு. 12. Low-caste person; சண்டாளன். (பிங்.) 13. Beauty; அழகு. (பிங்.) 14. Form; வடிவு அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86). 15. Young offspring; குட்டி. ஆளியி னணங்கு மரி யின் குருளையும் (சிலப். 25, 48).

NG

On Sat, 2 Oct 2021, 12:01 am N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 2, 2021, 3:08:25 AM10/2/21
to vallamai, housto...@googlegroups.com
பேஎ என்பது பேய்க்கும், நுரைக்குமாக சங்க நூல்களில் வருகிறது. பே என்பது நுரைக்கு ஆதல் எங்கனம்?
பாவாணர் விளக்கியுள்ளார்:

பே - பீ (bh)

     பேபே என்பது அச்சக் குறிப்பு.

     பே = அச்சம். "பேஎமுதிர் கடவுள்" (குறுந். 87).

     பே - பேம் = அச்சம்.

"பேம்நாம் உரும்என வரூஉங் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள"

(தொல். 848)

     பே - பேய் = அச்சம், அஞ்சப்படும் ஆவி.

     பே - பீ - பய = அச்சம்.

பேம் - பேன (ph)

     பே = நுரை (பிங்.). பே - பேம் = நுரை.

     "பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை" (இறை.கள.7, உரை).

     அச்சத்தினாற் பேய்கோட்பட்டவன் வாயில் நுரை தள்ளுவது
இயல்பாதலால், அச்சக் கருத்தினின்று நுரைதள்ளற் கருத்துத்
தோன்றியிருக்கலாம். பேம் = அச்சம்.

N. Ganesan

unread,
Oct 2, 2021, 4:22:48 AM10/2/21
to vallamai, housto...@googlegroups.com

தமிழில் தாதுவேரியல் இன்னும் விரிவடையாத் துறை. ஒப்பீட்டு மொழியியல், மாந்தவியல், தொல்லியல் போன்றவைகளை அணுகாமல் பலர் உள்ளனர்.
காலம் மாற்றும். உ-ம்: 10 லக்ஷம் பரிசு வாங்கியுள்ளோர் நூல்கள் அரசாங்கம் வலையேற்றுமாறு வேண்டுவோம். அப்போது, அந்த கட்டுரைகளில்
சொல்லாது விடுபட்ட பழைய இலக்கியம் காட்டும் சமூக, சமய வரலாறுகளை இளைஞர் சமுதாயம் ஆராய வழிகள் உருவாகும். இன்னும் தமிழ்
ஆசிரியர்களுக்கு பல லட்சம் பரிசுகளை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும்.

ஒரு சிறந்த நூல், இப்போது இணையத்தில் கிடைக்கிறது:
தமிழர் பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும், க. காந்தி, 1980.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0006164/mode/2up

பரிபாடலில் பேஎ விழவு வருகிறது. அதாவது, பேய் விழா.
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
 சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள்
வேல னேத்தும் வெறியு முளவே

முருகு ஓர் அணங்கு. வருத்தந் தருவது. அணங்கு முருகு என்றே பாடல்கள் உள்ளன. கலந்தொடா மகளிர் என்னும் முக்கியப் பாடலில் கூட உண்டு என ஞாபகம். முருகு என்னும் அணங்கினை வடமொழி உள்வாங்கியதல் வடமேற்கு இந்தியாவில் நீண்ட வரலாறு. பேஎ விழா என்னும் அணங்காடல் விழா பற்றி நம்மாழ்வார் ஓர் பாசுரப் பதிகமே பாடியுள்ளார். தமிழில் உள்ள முக்கியமான பாடல்களில் அப்பதிகம் இடம்பெறும். நம்மாழ்வார் காட்கரை அப்பனைப் பாடிய செய்தியும், நேர்த்தம்பழம் > ஏத்தம்பழம் இருமொழிப்பெயராஅக் நேந்த்ரம் ஆதலும் தனியிழையில் இன்று விளக்கினேன். பேஎய் விழவு எடுத்து அணங்காடும் வேலன் அணங்கு வழிபாட்டில் முக்கியமனவன். அணங்குக் கோட்பாட்டை விளக்கும் புறப்பாடலில் நான்கு பூ, நான்கு தானியம், பேஎய் விழவாடும் நான்கு பூசாரிமார் பற்றிய பாடல், சமுதாயத்தில் அடிநிலையானவை பற்றி வரும் அழகிய பாடல், மேவி வரும் வட நாட்டுச் சமயத்துக்கு எதிர்ப்பாக, அணங்குக் கோட்பாட்டின் அடிப்படையானவர்களைக் குறிக்கும் பாடல் அப் புறப்பாட்டு.

http://www.tamilvu.org/library/l1240/html/l1240a1i.htm
பேஎமன்ற, 78
பேஎய், 35

http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=3&pno=113
உதாரணம்: தபு   எனவரும்.    இது   படுத்துக்கூற   நீ  சாவெனத்
தன்வினையாம்.   எடுத்துக்கூற   நீ   ஒன்றனைச்   சாவப்  பண்ணெனப்
பிறவினையாம். உப்பு கப்பு என்றாற்  போல்வன  குற்றுகரம்.  உகரத்தோடு
கூடிய   பகரம்    ஒன்றெனவே    ஏனையுயிர்களோடு    கூடிய  பகரம்
பன்மொழிக்கு  ஈறாய்ப்    பலபொருள்    தருமென்றாராயிற்று.   மறந்தப
துப்பா   என   எச்சமாயும்,   நம்பி   செம்பூ   பே   பெதும்பை  எனப்
பெயராயும்,  போ  என  ஏவலாயும்  வரும். இவற்றைப் பிறசொற்களோடும்
ஒட்டுக. ஏனை ஈகாரபகரம் இடக்கராய் வழங்கும்.

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=99&pno=53
 கவி - கவிபாடும் புலவன். இட்டம் : இஷ்டம் என்பதன்
தற்பவம். அட்டம் என்பதும் அஷ்டம் என்பதன் தற்பவம். கறுப்பு - பேய்
(உலகவழக்குச்சொல்); ‘பேய்' என்பதும் ‘பே' என்னும்
(அச்சப்பொருளைத்தரும்) உரிச்சொல்லின் திரிபே ஆகும். துர்ச்சனர் (வட) - தீயர்.

தொல்காப்பியச் சூத்திரம்:

பேம், நாம், உரும்
http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=8&pno=137

1359. பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள                  (68)
(பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சப் பொருள)
 
ஆ. மொ. இல.

‘Pēm’.   nām’,  and  ‘urum’  these  three  words  give the sense
of fear.

ஆல்.

The  three  that  are  ‘Pēm’  ‘Nām’ and  ‘urum’ give  the  sense
of fear.

பி. இ. நூ.

இல. வி. 28118, 19.

பேநாம் உருமென வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சம் கூறலும்

இளம்.

வ-று :  1‘மன்ற மரா அத்த  பேமுதிர் கடவுள்’ (குறுந். 87) என்பது
அச்சம் முதிர் கடவுள் என்பதாம்.

2‘நாம்வருந் துறை சேர்ந்து’ என்பது  அச்சமுடைய  துறை  போந்து
என்பதாம்.

3‘உருமில் சுற்றம்’  (பெரும்பாண். 447)  என்பது  அச்சமில்  சுற்றம்
என்பதாம்.

இவையெல்லாம் குறிப்பு.

சேனா.

இ-ள் : ‘மன்ற மராஅத்த பேமுதிர்  கடவுள்’  (குறுந். 87)  எனவும்,
‘நாமநல்லார்’  எனவும்,  ‘உருமில் சுற்றம் (பெரும்பாண். 447)  எனவும்,
பே முதலாகிய மூன்றும் அச்சமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : பேஎ என்னுஞ் சொல்லும், நாம் என்னும் சொல்லும்  உரும்
என்னும்  சொல்லுமாகிய  அம்முறைமையையுடைய  மூன்று  சொல்லும்
அச்சப் பொருண்மையையுடைய, எ-று.

உ-ம்  : ‘மன்ற மரா அத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந். 87),  “நாம
நல்லராக்   கதுவியாங்கு’,   ‘உருமில்   சுற்றமோ  டிருந்தோற்  குறுகி’
(பெரும்பாண். 447).

நச்

இதுவுமது.

இ-ள் : பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆ முறை மூன்றும்
அச்சப்  பொருள  பேம்  நாம்  உரும்  என்று   சொல்ல  வருகின்ற
கிளவியாகிய  அம்முறைமையினையுடைய  மூன்றும்  அச்சம்  என்னும்
உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மையையுடைய, எ-று.

உ-ம் : ‘மன்ற மரா அத்த பேஎமுதிர்கடவுள்’    (குறுந். 87).
‘நாம நல்லராக் கதிர்பட வமிழ்ந்த.

‘உருமில் சுற்ற மொடு’ (பெரும்பாண். 447) எனவரும்.   நாம் நாமம்
எனத்திரிந்து வழங்கிற்று.

வெள்

இ-ள் : பே,  நாம்,  உரும்  என்னும்  மூன்று சொற்களும் அச்சம்
என்னும் குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மன்ற  மராஅத்த பேமுதிர்கடவுள்’ எனவும், ‘நாமநல்லரா’
எனவும், ‘உருமில் சுற்றம்’ எனவும் அச்சமாகிய குறிப்பு உணர்த்தின.

நாம் நாம எனத்திரிந்து வழங்கிற்று.

ஆதி

பொருள் : பேம்-பேய்-அச்சம்தரு
நாம்-நாம்-அச்சம்தரு
உரும்-இடி-அச்சம்தரு

குறிப்பு : அஞ்சி   விழிப்பவனைப்  பார்த்துப் பேபே  என
விழிக்கிறான், பேந்தப்பேந்தவிழிக்கிறான் என்பதும்,
அச்சப்படுத்துதலின் ‘பேஎய்’க்கு அப்பெயர் வந்தது
என்பதும் இங்கு நினைவு கூறலாம்.

seshadri sridharan

unread,
Oct 2, 2021, 6:08:51 AM10/2/21
to வல்லமை

On Sat, Oct 2, 2021 at 2:07 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
பேஎ என்பது பேய்க்கும், நுரைக்குமாக சங்க நூல்களில் வருகிறது. பே என்பது நுரைக்கு ஆதல் எங்கனம்?
பாவாணர் விளக்கியுள்ளார்:

பே - பீ (bh)

     பேபே என்பது அச்சக் குறிப்பு.

     பே = அச்சம். "பேஎமுதிர் கடவுள்" (குறுந். 87).

     பே - பேம் = அச்சம்.

அச்சக்கருத்து "அப்பே" (abbe) இன்றும் உண்டு. தெலுங்கில் அருவருப்பு கருத்தை "அப்பே" (abbe) என்பர்.
Reply all
Reply to author
Forward
0 new messages